Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்: மன்மோகன் சிங்கிடம் ஜெயலலிதா அவசர கோரிக்கை

Featured Replies

ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா தமக்கு ஆதரவளிக்கும் என இலங்கைத் தரப்பினர் தெரிவித்திருக்கும் பின்னணியிலேயே முதலமைச்சர் ஜெயலலிதா விஷேட கடிதம் ஒன்றின் மூலம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக சென்னைத் தகவல்கள் தெரிவித்தன.

இதற்கு முன்னதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, மறுமலர்ச்சி தி.மு.க. தலைவர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பஇநெடுமாறன் ஆகியோரும் இதே கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

http://www.pooraayam.com/mukiaya/2634-2012-02-29-17-52-41.html

Edited by ஊர்பூராயம்

தலைவர் வை.கோவோ இல்லை கருணாநிதியோ கோருவதை விட முதலமைச்சர் கோருவது அதிகம் பலம் சேர்ப்பதும் எமது ஒற்றுமையை வெளிப்படுத்துவதுமாக அமைகின்றது.

முதலமைச்சர் முதலிலேயே இதனைக் கேட்டிருந்தால் உண்மையிலேயே பாராட்டி இருந்திருக்கலாம்.

ஆனால் திரு.வைகோ.நெடுமாறன் ஜயா, சீமான், விஜயகாந்த் உட்பட​ எல்லாரும் கேட்டு வெகு நாட்களாகி விட்டன.​.

இப்போ,கருணாநிதி கேட்டு விட்டார், தான் கேட்காது விட்டால் எப்படி என்று கேட்கிறார்கள்.தமிழ் மக்களை எல்லாரும் சேர்ந்து அடித் துப் போட்டு விட்டார்கள்.

இப்போதும் கூட​ அவர்களின் அரசியல் விளையாட்டுக்கு குற்றுயிரும்,குறையுயிருமாக​ இருக்கும் எம் மக்கள் தான் துருப்பு சீட்டு ....!

என் செய்வோம் ஈழ தமிழன் விதி அப்படி.....................! என்றாலும் எப்பவும் எமக்குள் குன்றாது இருக்கும் பெரும் தன்மை கொண்டு அவர்களைப் பாராட்டலாம்...

nirubhaa

Edited by nirubhaa

எதிர் வரும் 14ம் திகதி சனல்4 புதிய ஆதரமாக வீடியோ வெளிவருகிறது அதை ஏன் எதிர்வரும் 14வரை காத்து இருந்து விடுகிறார்கள்?

காங்கிரஸ் பயங்கரவாதிகள் தவிர கொலைஞர் கருணாநிதி உட்பட ஒரே குரலில் கேட்பது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.