Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிப் போர் வலயத்தில் 2009ம் ஆண்டில் தங்கியிருக்க அனுமதிக்கவில்லை

Featured Replies

வன்னிப் போர் வலயத்தில் 2009ம் ஆண்டில் தங்கியிருக்க அனுமதிக்கவில்லை – மருத்துவ அமைப்பு தெரிவிப்பு.

பிரான்சை தளமாகக் கொண்ட ‘எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பானது’ [Médecins Sans Frontières - MSF] 2009ம் ஆண்டுக் காலப்பகுதியில், சிறிலங்காவின் யுத்த வலயப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படும் ஒரு நேர்காணல் தொடர்பாக தனது மறுப்பைத் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் வடபகுதியில் யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் பணிபுரிவதற்கான அனுமதி தருமாறு MSF பல தடவைகள் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், தொடர்ச்சியாக இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

images.jpg

MSF ஆனது சிறிலங்காவின் யுத்த வலயத்துக்குள் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு தனது சேவையை வழங்குவதற்கான அனுமதியைக் கோரிய போதிலும் அதற்கான அனுமதி வழங்கப்படாதது குறித்து தனது ஆழ்ந்த அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இந்திய ஊடகமொன்றில் பெப்ரவரி 06 அன்று வெளியிடப்பட்டு பின்னர் சிறிலங்கா ஊடகங்களில் மீள்பிரசுரிக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில், MSF சிறிலங்காவில் யுத்த இடம்பெற்ற வலயங்களில் போர் உக்கிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் பணிபுரிந்ததாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் எம். கோத்தாபய ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்தை MSF ஏற்க மறுத்துள்ளது.

“பிரான்சின் MSF, இந்திய மருத்துவக் குழு உள்ளடங்கலான பல அனைத்துலக அமைப்புக்கள் யுத்த வலயத்தில் சரணடைந்த ஆயுதக் குழுவினருக்கும், யுத்தத்திலிருந்து உயிர்தப்பிய பொதுமக்களுக்கும் சேவையை வழங்குவதற்காக யுத்த வலயத்தில் தங்கியிருந்தனர் என கோத்தபாய தெரிவித்துள்ளார்” என ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

சிறிலங்காவின் வடபகுதியில் யுத்தமானது தீவிரம் பெற்றிருந்த செப்ரெம்பர் 2008 ல், கிளிநொச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த அனைத்து அனைத்துலக அமைப்புக்களுடன் MSF ம் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்டிருந்தது.

அதன்பின்னர், யுத்த வலயத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு மருத்துவப் பணி ஆற்றுவதற்கான அனுமதியை வழங்குமாறு MSF மீண்டும் சிறிலங்கா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதாவது சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு உள்ளடங்கலாக பல்வேறு தொடர்புபட்ட அமைச்சுக்களிடம் MSF இதற்கான அனுமதியைக் கோரி நின்ற போதிலும், 2008 ன் பிற்பகுதி தொடக்கம் 2009 ல் யுத்தம் நிறைவடையும் வரை யுத்தவலயத்துக்குள் செல்வதற்கான அனுமதி MSF நிறுவனத்துக்கு வழங்கப்பட்டவில்லை.

மே 2009 ல் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னரே, யுத்தத்திலிருந்து உயிர் தப்பிய பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை வவுனியா வடக்கில் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. யுத்த வலயத்திற்கு வெளியே அமைந்திருந்த ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்தே MSF தனது சேவையை வழங்கியது.

யுத்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு சத்திரசிகிச்சை சேவையை MSF வழங்கியது. அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த மெனிக்பாம் முகாங்களிலும் MSF தனது சேவையை ஆற்றியது. இவை எல்லாம் யுத்த வலயத்திற்கு வெளியே அமைந்துள்ள இடங்களாகும்.

2012 ல், MSF –பிரான்ஸ் அமைப்பானது சிறிலங்கா சுகாதார அமைச்சுடன் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிவருகின்றது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில், உள மேம்பாட்டு அபிவிருத்தியிலும் தனது சேவையை வழங்கிவருகின்றது.

செய்தி வழிமூலம்: Doctors Without Borders/Médecins Sans Frontières – MSF இணையத்தளம்.

செய்தி மொழியாக்கம்: நித்தியபாரதி.

http://thaaitamil.com/?p=11288

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.