Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா : வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப ஜெனிவாவில் முடிபு எடுக்கப்படும்

Featured Replies

வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப ஜெனிவாவில் முடிபு எடுக்கப்படும்

இந்திய அரசு தற்போது பின்பற்றிவரும் வெளியுறவு கொள்கைகளுக்கு ஏற்பவே ஜெனிவா விவகாரத்தில் முடிபெடுக்கும். இதுநாள்வரை இலங்கை விவகாரத்தில் எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றி வந்தது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் திவேதி தெரிவித்தார்.

இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் செய்திப் பிரிவின் தலைவருமான திவேதி இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் மத்திய அரசு எடுக்கும் முடிபுகளில் நாட்டில் உள்ள எந்ந அரசியல் கட்சிகளும் தலையிடுவதில்லை. விடுதலைப்புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதா கக் கூறி இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள நிலையில் இது குறித்து இநதிய அரசு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது எனும் கேள்வி எழுந்துள்ளது.

இறுதிக் கட்டப் போரில் இலங்கைத் தமிழருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள் ளதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என் றும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை ஐ.நா. பேரவையில் விவாதத்திற்கு வரும்போது இந்திய அரசு நியாயமான முடிபை மேற்கொள்ளும் என்று பாரதிய ஜனதாக் கட்சி கருதுவதா கவும் அத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய அரசியல் கட்சிகள் மத்திய அரசு எடுக்கும் வெளியுறவு தொடர்பான கொள்கைகள் மற்றும் முடிபுகளில் தலையிடுவதில்லை. நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதற் கொண்டு இத்தகைய நடைமுறையைத்தான் இந்திய அரசியல் கட்சிகள் இதுவரை பின்பற்றி வந்துள்ளன.

அதேபோல இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானம் குறித்தும் மத் திய அரசு முடிபை எடுக்கும். இம் முடிபுதான் உறுதியானது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த வகையிலும் தலையிடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் சந் தித்து இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் தி.மு.க வுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜனார்த்தனன் திவேதி தெரிவித்துள்ள கருத்து தி.மு.க. வட்டாரங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. மத்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால் கடந்த ஏழு ஆண்டுகளாக பல்வேறு சூழல்களில் மத்திய அரசுக்கு அளித்து வந்துள்ள ஆதரவை தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மறுபரிசீலனை செய்யவேண்டிவரும் என் றும் டி.ஆர்.பாலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது இந்த எச்சரிக்கைக்குப் பதிலடி தரும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் திவேதி இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27446

  • தொடங்கியவர்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் இந்திய மத்திய அமைச்சர் நாராயண சாமி

ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பில் கொண்டு வரப்படும் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று இந்திய மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக மக்களும் அனைத்துக் கட்சிகளும் இதைத் தான் விரும்புகிறார்கள்.

தமிழக முதல் அமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது போல் முன்னாள் அமைச்சரும் டி.ஆர். பாலு மூலமாக அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். நானும் பிரதமரை சந்தித்து இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளேன். இலங்கை மட்டுமன்றி எந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் இருந்தாலும் அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதை இந்தியா ஆதிரிக்கும். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, இலங்கை மீது ஐ.நா.வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றார் அவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடும்பம் குட்டிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி செட்டில் ஆக்குவது தான் கொள்கை. 

பொம்மை சிங்கின் மகளே அமெரிக்காவில் தான் வாழ்கிறார். 

தந்தையின் நாடு அவ்வளவு கேவலம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.