Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ. நாவில் முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றிய முக நூல் விவாதம்

Featured Replies

முக நூல் விவாதம்

{ஐ. நாவில் முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றிய உங்கள் ஆய்வுகளை முன்வையுங்கள்...@ திரு முருகன் காந்தி }

@Ananda பெருமாள் வலுவற்ற தீர்மானம் தோழரே .ஒருங்கிணைந்த இலங்கையை வலியுறுத்துவது போல் உள்ளது

@Rajkumar palaniswamy இந்த தீர்மானத்தை தான் இலங்கை முன்மொழிந்தது. ஒரே ஒரு கருத்தை தவிர.ஐ நா வின் பேற்பார்வையில் LLRC நடைமுறை படுத்த வேண்டும் என்பது தான். அதற்கு தான் இப்பொது இலங்கை சம்மதிக்கவில்லை . அதற்கு தான் இலங்கை எதிர்கிறது . உலக நாடுகளிடம் ஆதரவு கேட்கிறது. இதில், இந்த தீர்மானம் நிறைவேறினாலும் , நிறைவேறாவிட்டாலும் , ஈழத் தமிழர்களுக்கு பயன் இல்லை

@Prakashbabu Baskaradoss ஒரு வேளை நாம் இதை எதிர்போமானால் நமக்ககான அல்லது ஈழ தமிழர்களுக்கான அடுத்த வேலைத்திட்டம் என்ன? எதைப் பிடிப்பாக கொண்டு நாம் முன் நகர்வது தோழர்?

@Anu Varathan நாம் எதிபார்த்த வகையில் இல்லை தான்..... ஆனால் இதை ஐக்கிய

நாடுகள் சபையில் எமது விவகாரத்தை உள்வாங்கும் ஒரு முதல் படியாகவே பார்க்க வேண்டும். இத்தீர்மானம் நிறைவேற்று படுவதற்கு சகல நாடுகளாலும் ஏற்று கொள்ளப்பட கூடிய பிரேரணையாக ஒரு மென்போக்கை கையாளவேண்டிய நிலை அமெரிக்காவிற்கு உண்டு. இதை கூட நடைமுறைபடுத்த இலங்கையால் முடியாது என்பதும் அமெரிக்காவிற்கு தெரியும். இலங்கையை தானாகவே சர்வதேச போர்குற்ற விசாரணைக்குள் விழ வைக்க வேண்டும் என்றே அமெரிக்காவின் வியூகம் வகுக்க பட்டுள்ளது. எமது தொடர்ச்சியான போராட்டங்கள் , மற்றைய நாடுகளுக்கு கொடுக்கும் அழுத்தங்கள் தான் எமது இலக்கையும், அமெரிக்காவின் அடுத்தடுத்த முன்னெடுப்புகளையும் விரைவுபடுத்த முடியும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அத்தோடு இப் பிரேரணையின் படி ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைகளை ஏற்கவும் வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு உள்ளது. அங்குதான் சர்வதேச தலையீடு உள்வாங்க படுகிறது. இதை ஒருபோதும் இலங்கையோ இந்தியாவோ ஏற்று கொள்ள போவதில்லை. நிச்சயம் சர்வதேசத்துடன் முரண்பட போகின்றன. அப்போதுதான் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கான பாதை திறக்க படும்.

@Sethu Swaminathan Kandasamy Friends, please note that

1) This draft does not spell a single word as 'Tamil/s ' which means it is deliberately denying the fact that this is the conflict between ethnic Tamils and Sinhalese state.... Which is very basic factor in recognizing the right for self detemination

2) There is no single word as 'Genocide' which is again a fundamental factor for a claim for cessation

3) There is no single word at-least as 'civil war' which can be a factor used for Intentional Intervention....

I think, there should be very strong voice from Tamil community, to consider the Duplin Tribunal as the basis of Draft, as it covered all these factors...

Because, US and others will try to project that this draft is the outcome of Tamil's voice

Again....Standing in one voice to act on the basis of Duplin Tribunal will not hurt any way in gaining more support to our cause.....This is the least bargaining power we have..............Please let us stand by Dublin's Tribunal

@Thirumurugan Gandhi அமெரிக்கா ஏன் இந்த முன்னெடுப்பை எடுக்க வேண்டும்.?....

@Vivekanandan ramadoss வடக்கிலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒன்று மட்டுமே இந்த தீர்மானத்தில் கொஞ்சம் உருப்படியான விடயமாக எனக்கு தெரிகிறது..

@Anu Varathan இந்த பிரேரணை தான் தீர்வு அல்ல.... படி படியாக எமது இலக்குகளை உள்ளடக்குவது எமது கையில் தான் உள்ளது. Thirumurugan Gandhi -அமெரிக்கா தன் சொந்த நலனுக்காக இப் பிரேரணையை முன்னெடுத்தால் தமிழ் மக்களின் நலன் கூடவே எடுக்க படுகிறது என்றால் அதை பயன் படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை

@ kamban tamil ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் சர்வதேச தலையீடு எப்படியாவது இலங்கைக்குள் கொண்டு செல்வதற்கு ஒரு திறவுகோலாக இப்போது அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் தீர்மானம் இலங்கைக்கு சாதகமானதாக இருக்கலாம்....உலகநாடுகள் எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி முதலில் இலங்கைக்கு சாதகமாக இலங்கையே ஏற்றுகொள்ளும்படியாக செயல்படலாம்.....ஆக அமெரிக்கா இப்படி சரியான பாதையில் இலங்கையை போற்குற்றதில் சிக்கவைக்க திட்டமிட்டு பயணிக்க செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது......

ஆனால் இந்த அமெரிக்காவின் தீர்மானத்தை ஹிந்திய-இலங்கை அரசுகள் உளவுத்துறை மூலம் தமிழர்களிடத்தில், வேறுமாதிரியாக இதை பயன்படுத்துகிறது அதாவது இந்த தீர்மானத்தில் ஒன்றுமில்லை இலங்கைக்கு சாதகமாக உள்ளது என்று சொல்லி தமிழரின் போராட்டத்தில் தொய்வை ஏற்படுத்துவதற்கும், நமக்காக முன்னெடுத்துசெல்லும் அமெரிக்காவை தமிழர்கள் வெறுத்து அமெரிக்காவை நம் பிரச்சனைக்கு ஆதரவாக இழுக்காமல் ஒதுக்குவதற்கும் திட்டமிட்டு செயல்படுவதாகவும் தோன்றுகிறது....

அத்தோடு இந்தியாவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் நாம் இந்தியாவின் மீது அதிகம் வெறுப்பு கொள்ளமாட்டோம் ஏனெனில் இந்த தீர்மானத்தில்தான் ஒன்றுமில்லையே இலங்கைக்கு சாதகமாக உள்ளதே என்று நாம் நம்பு ஒதுங்கி விடுவோம் என்ற எண்ணத்திலும் ஹிந்திய உளவுத்துறை இந்த தீர்மானத்தை வேறுவிதமாக பயன்படுத்திகொள்ளலாம்....

@Thirumurugan Gandhi இது தமிழக தமிழரின் போராட்டத்தினை கணக்கில் எடுத்துக்

கொள்ளப்போவதில்லை. அதாவது தற்சமயத்தில் கணக்கில் எடுக்கப் போவதில்லை.. ஏனெனில் இந்திய அரசு இதனால் பாதிக்கபட போவதில்லை என இந்தியா கருதும் போது அமெரிக்கா அதுபற்றி கவலை கொள்வது கிடையாது... நாம் அனைவரும் இதை ஆதரிக்கிறோம் என்று சொல்லி தீர்மானம் நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் உலக அரசுகளின் விருப்பத்திற்கேற்ப நகரலாம்.... ஆக இந்திய உளவு நிறுவனம் வெளி நாடுகளில் தனது வேலையை ஆரம்பித்து இருக்கும். இந்த தீர்மானம் நமக்கு தமிழீழ விடுதலையை நோக்கி நகர்வதில் எத்தனை தூரம் உதவும் என்பதை குறித்தும் தோழர்கள் பேசலாம்

@Anu Varathan முதலில் எமது விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையில் உள்வாங்கப்பட இந்த தீர்மானம் உதவும். இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டவுடன் நாம் ஓய்ந்து விட கூடாது. மனித உரிமை மீறல், சுயாதீன விசாரணை இவற்றையே எல்லா நாடுகளிடமும் வலியுறுத்தி ஈழத்தில் நடந்த இன அழிப்பை ஏற்று கொள்ள வைக்க வேண்டும். அதுவே தனி ஈழத்திற்கு வழி வகுக்கும்.

@Sasi Kumar அமெரிக்காவுக்கு தேவை இலங்கையில் ஆட்சி மாற்றமே. தமிழர்களுக்கு நிதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இத் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என்று நான் கருதுகிறேன்.

@பாரதி கார்த்திக் தோழரே இது வரை உலகமன்றம் காதுகளை,கண்களயும்

முடிகொன்டுதான் இருந்தது , எத்தனையோ தடவை நம் கதரிபார்தோம் நமது மேனியில் தீ வைத்து கொண்ட போதுகூட சொந்த தேசமே திரும்பிக்கொண்டு தான் இருந்தது .நமது அரசியல் தலைவர்கள் அறிக்கைகளை விட்டுக்கொண்டுதான் இருந்தனர் , உலக அரங்கமும் கவலை தெரிவித்து கொண்டு தான் இருந்தது ,ஐயா வைகோ அவர்களிடம் நார்வே தலைவர் இந்தியாவை தாண்டியாரும் ஈழ பிரச்சனையில் உங்களுக்கு உதவி செய்திட முடியும் என்று நினை காதிர்கள் என்று தெளிவாக கூறிவிட்டார்கள் , இப்படி யாருமே காது கொடுத்து கேக்காத என் மரண ஓலத்தை அமெரிக்க முன் எடுப்பது ரன் இனத்திற்கு ஆறுதல் இல்லை என்றலும் நீதி யாவது கிடைக்குமா என்ற ஏக்கம் ,

மேலும் அமெரிக்கா ஏன் திடீர் கரிசனம் காட்டுகிறது என்று ஆராயாமல் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் ,தமிழர்களின் விடியலுக்கு இந்த தீர்மானம் ஒரு ஆரம்பமாய் அமையட்டும் ...................

@Kamban Tamil இலங்கை முதலில் உலக அழுத்தைதை ஏற்ற்றுகொள்ளும்படியாக இந்த தீர்மானம் இப்போது இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்படி திட்டமிட்டு அமெரிக்காவால் கொண்டுசெல்லபடலாம்....இப்போதே அதை நாம் சந்தேகிக்க கூடாது....

(ஆனால் அமெரிக்காவுக்கும் எப்படியாவது தன்னை தெற்காசியாவில் தன்னை நிலைநிறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு நமக்கு ஆதரவாக செயல்படலாம். எனவே அவர்களால் நமக்கு நன்மை என்றால் நாம் இப்போது அதை கண்டுகொள்ளகூடாது)

இலங்கை இப்போதே அமெரிக்காவின் காலில் விழ தொடங்கிவிட்டது முன்பு சவால் விட்டதுபோல் இப்போது அமெரிக்காவை எதிர்த்து சவால் விடுவதில்லை...

எனவே அமெரிக்க எதிர்பார்ப்பதை விட்டுகொடுத்து அமெரிக்காவை இப்பிரச்சனயிளிருந்து விலக செய்யவும் முயற்சிக்கும்... ஆனால் அமெரிககா இலங்கையின் வலையில் சிக்காமல் நமக்கு ஆதரவாக கடைசிவரை செயல்படவேண்டும் என்றால் நாம் உலகம் முழுவதும் தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை மீது போற்குற்ற விசாரணையை நடத்த வலியுறுத்தி முழு மூச்சுடன் போராடவேண்டும்...அதுதான் நமக்காக கொண்டுசெல்லப்படும் நாடுகளுக்கு ஊக்கமாகவும் , வலுவான காரணியாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் பேச அமையும்.....அப்படி இல்லை என்றால் இது அரசியலாக அடுத்த நாட்டு விவகாரங்களில் அமெரிக்க தலையிட்டு ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக சொல்லி இலங்கைக்கு ஆதரவான நாடுகளால் ஒதுக்கப்டும்...

அத்தோடு இந்த தீர்மானத்தை பயன்படுத்தி தமிழ்மக்களிடத்தில் தொய்வை ஏற்படுத்த இங்கு(தமிழ்நாட்டில் ) இந்திய உளவுதுறையால் மீடியாக்களால் பரப்பப்பட்டு போராட்டத்தில் ஒரு தொய்வை ஏற்படுத்துகிறது.....இங்கு (தமிழ்நாட்டில் ) இப்போதே அதன் உள்நோக்கம் புரியாமல் இதை நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்....இப்போது அனைவர் மத்தியிலும் ஒரு நம்பிக்கையற்ற தன்மை உருவாகிவிட்டது.....

எது எப்படியோ முதலில் நமது விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையில் உள்வாங்கப்பட இந்த தீர்மானம் உதவும்....

இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டவுடன் நாம் ஓய்ந்து விட கூடாது. மனித உரிமை மீறல், சுயாதீன விசாரணை இவற்றையே எல்லா நாடுகளிடமும் வலியுறுத்தி ஈழத்தில் நடந்த இன அழிப்பை ஏற்று கொள்ள வைக்க வேண்டும். அதுவே தனி ஈழத்திற்கு வழி வகுக்கும்....

@Thirumurugan Gandhi ஆராயமல் எதையும் ஆதரிக்க முடியாது தோழர்.... அது இன்றைய நிலையை விட மோசமான இடத்திற்கு நம்மை தள்ளும்... அதன் பிறகு மேலும் பல எதிரிகளை நாம் உருவாக்கி இருப்போம்... எப்பொழுதும் குறைந்தபட்சம் என்பது நம்மை மேலும் மேலும் பலவீனப்படுத்தவே உதவும்

@பாரதி கார்த்திக் வேறு யாரும் நமக்காக சுயநலமாய் கூட உதவவில்லையே தோழா ?.

@Thirumurugan Gandhi நாம் சர்வதேசத்தை நெருக்ககூடிய வலிமையை இன்னும் பெறவில்லை என்பது உண்மைதான்.. ஆனால் சர்வதேசத்திடம் நாம் சோர்ந்து நின்று பேசவேண்டும் என்கிர அவசியமில்லை... ஒருமுறை நமக்கு தவறான- குறைபாடுடன் கூடிய நீதி வழங்கப்படுமானால் அதன் பிறகு நமக்கான நேர்மையான நீதி வழங்கும் குறைந்தபட்ச வாய்ப்பும் இல்லாமல் போகலாம்

@Muthu Raja ஐ. நாவில் முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க முன் எடுக்க காரணம் அமெரிக்காவிற்கு ஆசிய பகுதிகளில் போர் தொடுத்தால் அவர்கள் படைக்கு ஒரு நாடு வேண்டும் அதற்கும் சீனாவின் கால் பதிதல் அது அமெரிக்காவின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதால் இலங்கையை தனது கை பாவையாக இந்த தீர்மானத்தை முன் வைக்கிறது

@Seelan Ithayachandran

அமெரிக்காவின் நகர்வு என்ன என்பது தெளிவாகத்தெரியும். இருப்பினும் இந்த நகல் பிரேரணையில் ஒரு விடயம் மட்டுமே சிங்களத்திற்கு ஆபத்தானது. பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை அவதானித்து, வருகிற 22 வது கூட்டத்தொடரில் ஐ.நா.ஆணையாளரின் அலுவலகம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். இதனை சிங்களம் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதே முக்கியமானது. தீர்மானம் நிறைவேற்றப்படும் போது இந்த வரிகள் நீக்கப்பட்டால், அமெரிக்காவின் நோக்கம் பிழைத்துப் போகும். மற்றும்படி சிங்களத்தை தனது வழிக்குக் கொண்டு வருவதே அமெரிக்காவின் நோக்கமே தவிர வேறொன்றுமில்லை

@நாங்கள் தமிழர்கள் தமிழ்தேவன் தமிழக தமிழரின் அரசியல் போராட்டங்கள்

சுயநலம் சார்ந்தது .அதை இந்தியா என்றுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாது .இந்த தீர்மானத்தை பொறுத்த வரை இந்தியா இலங்கையை ஆதரிக்க வேண்டும் என்பதே அதன் விருப்பம் .

அதே நேரத்தில் தான் ஆதரித்து இலங்கை தோற்று விட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருக்கிறது .அதனால் மதில் மேல் பூனை போல இறுதில் சூழலை பார்த்து இலங்கை வெற்றி பெரும் வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக இந்தியா இலங்கையை ஆதரிக்கும்.

இந்த தீர்மானம் நிறைவேறினாலும் ஈழத் தமிழர் வாழ்வில் எந்த வித முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை . ஆட்சி மாற்றம் நிகழும் .இலங்கை சீனாவிடமிருந்து பிரிந்து அமெரிக்காவின் அடிமை ஆகும் .அப்போதும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவே நடந்து கொள்ளும் .

இந்தியாவை பொறுத்த வரை நாட்டு நலனை விட தமிழர்களுக்கு எதிர்ப்பாக செயல் படுவதை குறிகோளாக கொண்டுள்ளது

@Sethu Swaminathan Kandasamy

Excuse me for typing in English, as I do not have the Tamil fonts .... Friends, Again....I think every one agrees to a point that US is moving this draft for it's personal agenda.... Now let us analyze what are those hidden agenda for US....From my thought.... 1) To escape from it's accountability on the role it played on Genocide, by depicting this conflict as war on Terror (see the words 'Terrorism' used in the draft )

‎2) To move the Accountability of violations to a very limited group of people or a particular Leader, by which this conflict will be depicted like an accident of a particular Regime...And not based on a cause ..So the world community will be automatically brought to a judgement of a Regime change as a final solution.....

  • Friends, please think....the outcome of this process at the end will result in a Regime change and nothing else...And there would be no country in the world that would take up this cause , when US achieves a Regime change in Srilanka
  • The need for the hour is a urgent meet of all Tamil Consortium to address in one voice of these concerns and that we need UN to acknowledge DUPLIN Tribunal as the base line....If we do so, even the countries that opposes US (like Cuba, some of NAM) will consider supporting DUPLIN Tribunal ...
  • Also, we have one advantage with current UNHR , since UNHR council members have deliberately stated that the draft version is in-sufficient...So our tamil Community should echo and support that voice of UNHR council members as the draft is not helping the cause of solution as mentioned by UNHR and thus have DUPLIN Tribunal as the baseline

தொடரலாம்

via fb ....

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

@Gopi Ratnam அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல எனபதில் ஐயமில்லை. அதேசமயம் மற்றய குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரி்க்க நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக இத்தீரமான ஐதாக்கப்பட்டதாக கூறுவதனையும் ஏற்றுக் கொள்வதற்கில்லை. LLRC விசாரணை கூட அமெரிக்க இராசங்கத் திணைக்களத்தின் ஆலோசனையின்படி உருவாக்கப்பட்டதாக ஒரு கருத்து நிவலவுகிறது. இப்பொழுது அதன் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அமெரிக்கா காலக்கெடு விதிப்பதும், அதனை சிறிலங்கா மறுதலிப்பதும் நன்கு ஒததிகை பார்க்கப்பட்ட நாடகக் காட்சிபோலத் தோன்றுகிறது.


  • @Gopi Ratnam இந்த அரைகுறைத் தீர்மானத்தை அது நிறைவேற்றபட முன்னரே ஆதரித்த நிற்பதன் மூலம் தமது அடிவருடித்தனத்மை BTF, TYO -UK, CTC போன்று புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நிருபித்துள்ளன. இவர்கள் எந்த அறத்தின்பால் செயற்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.

  • @சண் துஷ்யந்தன் காத்திரமான சர்வதேச தலையீடு ஒன்று இலங்கையில் ஏற்பட இது ஆரம்ப புள்ளியாக இருக்க முடியும் . தவிர நான் பார்த்தவரையில் எந்த தீர்மானமும் பயனுள்ள தீர்மானமாக தெரியவில்லை .வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் தீர்மானம் அவசியமானது ஏனெனில் இன கலப்பு அதிகமாக இருக்கிறது .வெளியில் இருந்து பார்கையில் சரியானது போல தெரியும் இராணுவ வெளியேற்றம் ஆனால் சிங்கள அரசு அதை செய்யாது .(தீர்மானம் நிறைவேற்ற பட்டாலும் கூட ).மிக பெரிய சிங்கள இராணுவ குடி இருப்புக்கள் புதிதாக நிறுவ பட்டு இராணுவத்தின் குடும்பங்களும் நிலை நிறுத்த படுவர் .அல்லது கிரீஸ் மனிதன் ,பரவலான ஆயுத கொள்ளை போன்றவற்றின் மூலமாகவோ அல்லது முன்னாள் போராளிகளை சுட்டு கொன்றுவிட்டு பக்கத்தில் ஆயுதத்தை வைத்து புதிய புரட்சி முயற்சி என்று சொல்லி இராணுவ வெளியேற்றத்தை அரசு தாமத படுத்தும் .புலிகள் பலமாக இருந்த சமயத்தில் யுத்த நிறுத்த தீர்மானகளில் ஒன்றான படையை படி படியாக மூன்று மாத காலபகுதியில் வெளியேற்றல் என்ற தீர்மானத்தை செயல் படுத்த ஆரம்பிக்கவே இல்லை .அவர்கள் செய்தது தனியார் இடங்களுக்கு அதாவது சில பெரிய ஹோட்டல் களுக்கு வாடகை கொடுத்தார்கள் அவ்வளவுதான் .



  • @சண் துஷ்யந்தன் ரணில் என்பவர் அமெரிக்காவின் மிக பெரிய ஆதரவாளர் இந்து சமுத்திரத்தில் காலூன்ற ரணிலின் வெற்றியை எதிர்பார்த்து இருந்த அமெரிக்காவிற்கு புலிகள் தேர்தலை புறக்கணித்து அதை முடியாமல் செய்தது பெரும் ஏமாற்றம் .தேர்தல் புறக்கணிப்பிலும் பெரிய ஏமாற்றங்கள் வாக்குறுதிகள் திரன் அலச மூலமாக கொடுக்க பட்டது அவை இப்போ அவசியம் இல்லை .சரத் பொன்சேகாவை தேர்தல் களத்தில் இறக்கி அவரிற்கு உதவிகளை செய்தது அமெரிக்கா .ரணில் போட்டி இட்டால் பயன் இல்லை என்பதை அறிந்து அவரை பொன்சேகாவை ஆதரிக்கவும் வைத்தது (சாதாரணமாக அரசியலில் இது சாத்தியம் இல்லாத ஒன்று ,பிரதமர் பதவி அதிகார எல்லையை கூட்டி நிறைவேற்று அதிகார அதிபர் பதவி நீக்கி ரணிலை பிரதமர் ஆக்கும் திட்டம் இருந்தது )பொன்சேகாவையும் அமெரிக்க ஆதரவாளராக மாற்றியது அதுவும் சொதப்பியது தேர்தல் மோசடியினால் .இந்த தீர்மானத்தால் எந்த வழியில் அரசியல் மாற்றம் நடக்கும் என்று கணிப்பது கடினம் .நேரடியாக தேர்தலில் ராஜபக்க்ஷவை தோற்கடிக்க இந்த தீர்மானம் பயன் படாது என்றே எனக்கு தோன்று கிறது .காரணம் தேச பற்று என்று தனது இனவாத பிரசாரத்தை முன் வைத்து அவர் வென்று விடுவார் .ஆனால் தீர்மானம் நடைமுறை படுத்துவதை ராஜபக்க்ஷ அனுமதிக்க மாட்டார் ....எனவே அதை நடைமுறை படுத்த மேற்கு நாடுகளும் அமெரிக்காவும் முயலும் (பொருளாதார தடைகள் மூலமாக ).ஏற்கனவே குடும்ப ஆதிக்கம் மற்றும் சில முறைகேடுகளால் பாதிக்க ஆரம்பித்து இருக்கும் சிங்கள மக்கள் பொருளாதார பின் அடைவால் பெரிய எதிர்ப்பு போராட்டத்திற்கு நிச்சயமாக முனைவர் அதை அமெரிக்கா பயன் படுத்த பார்க்கலாம் .ஏனெனில் இலங்கை புவியியல் அமைப்பில் முக்கியமான பிரதேசம் இலங்கையை தமது ஆதிக்கத்தில் வைத்து இருக்கும் நாட்டால் பல வழிகளில் செல்வாக்கை செலுத்த முடியும் ஆனால் இந்த இலங்கை முழுவதுமாக சீனா பக்கம் செல்கிறது எனவே என்ன விலை கொடுத்தாலும் அதை தடுக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு உண்டு .சிங்கள பேரின மக்கள் புரட்சியை ஆரம்பிக்கும் சமயத்தில் தமிழர் தரப்பில் ஆயுத பயிற்சி பெற்ற படை இருக்குமாயின் மட்டுமே இனி தமிழ் ஈழம்



  • @Prabhuram Sankula ‎Thirumurugan Gandhi Sir pls excuse me for writing in English...i don't have tamil fonts....அமெரிக்கா ஏன் இந்த முன்னெடுப்பை எடுக்க வேண்டும்.?....


  • @Prabhuram Sankula CHINA

  • sir..US now realize the importants of south Asian supermacy...Pakistan has become very volatile like Afghan & Iraq ....and it has considerable military power than the later two countries and also nuclear power....And pakistan started to ignore US words with support of China....US wants to stop the growth of China...in the region.....so indirectly distrub its allies...now srilanka has become pet of China....bcoz srilanka allowed military base for china.....India wants to avoid China in Srilanka ,so supporting srilanka in all motions against it in internationally...srilanka is taking advantage of the suituation and getting money to develop their country especially south and colombo surroundings....But purely Srilanka is taking India's help as it comes and not concerned more.....bcoz Srilanka has hidden venges against India.1..initially India gave Weapons,Training,and support to all tamil grps in Srilanka.....2...Rajiv's supermacy in srilanka by sending Indian army....created all the problems for srilanka...and had to face many problems....so Srilanka was happy to get military support from India in the last stage of the war ...India also stopped many ships of weapons to LTTE in Indian ocean and International waters ...which ended against Ltte ....reason for all the debacle is the Malayali Lobby of Rajiv to till date has worked against eelam...saying if elam is Possible...the tamil population in India will also ask for a separate state and ofcourse the revenge of the gandhi's for assination of rajiv......So what ever Motion against Srilanka ...will not be supported by India.....just to say...Nanum un friendu....Friendu ...but Srilanka will will never favor India....India has to face sever damage....and that damage will also be from tamil nadu only...incase of a war with them.....Tamil nadu will be the first target......which has very few military base....arms depot....considering the northern border states......எப்படியோ ......உலகமே ....தமிழர்களுக்கு எதிரியா தான் இருக்கு ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.