Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது நம்பிக்கையில்லா பிரேரணையே

Featured Replies

அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது நம்பிக்கையில்லா பிரேரணையே

அமெரிக்கா இறுதியில் இலங்கை விடயத்திலான பிரேரணையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிதித்துவிட்டது. அமெரிக்கா அதனை சமர்ப்பிக்கு முன் ஏதோ வானம் சரிந்து விழப் போவதைப் போல் பெரும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் செய்த ஆளுங்கட்சி, அது சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னனர் ஒன்றுமே நடக்காததைப் போல் இருக்கிறது.

இந்தப் பிரேரணையில் மூன்று விடயங்கள் தான் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஆக்கப்பூர்வமான சிபார்சுகளை நிறைவேற்றல்தான் இதில் முக்கியமான விடயமாக இருக்கிறது.

அடுத்த மனித உரிமை பேரவைக் கூட்டம் நடைபெறும் போது அரசாங்கம் ஆணைக் குழுவின் சிபார்சுகளில் எந்தளவு நிறை வேற்றியிருக்கிறது, மேலும் என்னென்ன செய்ய திடடமிடப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய அறிக்கையொன்று அக்கூட்டத்தின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்பது மற்றொறு விடயமாகும். இந்த விடயத்தில் அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கௌள வேண்டும் என்பது முண்றாவது விடயமாகும்.

அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கூறியதைப் போல் அமெரிக்கா நாட்டை ஆக்கிரமிக்கும் நிலைமையோ அல்லது ஜனாதிபதியை மின்சார கதிரையில் வைத்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்றோ, குறைந்தபட்சம் இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களைப் பற்றி விசாரணை செய்வதற்காக சர்வதேச விசாரணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றோ அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை.

பிரேரணையின் முதலாவதும் முக்கியமானதுமான விடயம், அதாவது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஆக்கப்பூர்வமான சிபார்சுகளை நிறைவேற்றல் என்பது அரசாங்கத்திற்கு எவ்வகையிலும் பிரச்சினையாக இருக்க முடியாது. ஏனெனில் தாம் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை நிறைவேற்றுவற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவே அரசாங்கமும் தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால் தாம் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளில் எந்தளவு நிறை வேற்றியிருக்கிறோம், மேலும் என்னென்ன செய்ய போகிறோம் என்பதைப் பற்றிய அறிக்கையொன்றை அடுத்த மனித உரிமை பேரவைக்; கூட்டத்தின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் இந்த விடயத்தில் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் தான் அரசாங்கத்திற்கு தலையிடியாக தெரிகிறது.

ஏனெனில் எமது நாட்டில் எமது பிரச்சினையொன்றை தீர்த்துக் கொள்ள நாம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றி நாம் எங்கோ உள்ள சர்வதேச நிறுவனம் உன்றுக்கு என் வகைச் சொல்ல வேண்டும் என்பதே அரசாங்கத்தின் ஒரு கேள்வியாக இருக்கிறது. மறுபுறத்தில் இந்த விடயத்தில் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முற்பட்டால் அது இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்திற்கு வழங்கும் அனுமதிப் பத்திரமனக அமையும் என்றும் அரசாங்கம் கருதுகிறது.

உண்மையிலேயே அரசாங்கத்தின் இந்த வாதம் தவறானது அல்ல. மேற்கண்டவாறு அடுத்த மனித உரிமை பேரவைக்; கூட்டத்தின் போது அறிக்கை சமர்ப்பிப்பதன் மூலமும் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதன் மூலமும் ஐ.நா. அதிகாரிகளுக்கு இலங்கை விடயத்தில் தலையிட கூடுதலான சந்தர்ப்பம் கிடைத்து விடும்.

அமெரிக்கா அதனை மிக சூசகமாகவும் பண்பான முறையிலும் இராஜத்நதிர ரீதியாகவும் வசனமாக்கி பிரேரணையில் உள்ளடக்கியுள்ளது. இது இலங்கையர்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்ற விடயங்களில் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகிறது. அதனால் தான் அரசாங்கத்தின் ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்குவதனையும் சர்வதேச நிறுவனம் ஒன்று மேற்பார்வை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா அந்தப் பிரேரணை மூலம் கூறுகிறது.

இதற்கு சர்வதேச ரீதியில் பலர் காரணம் கூறியிருக்கிறார்கள். பிரஜைகள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான அமெரிக்க துணைச் செயளாலர் மரியோ ஒட்டேரோ கடந்த 3ஆம் திகதி மனித உரிமை பேரவைக்; கூட்டத்தில் பேசும் போது மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சர்வதேச சமூகம் மூன்று வருடங்கள் காத்திருந்தது என்று கூறினார்.

பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேச நெருக்குதல் அதிகரிக்கவே இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த மாதம் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களைப் பற்றி விசாரிப்பதற்கென விசாரணை நீதி மன்றமொன்றை நியமித்தார். அப்போது இலங்கை நெருக்குதல் வரும் போதெல்லாம் தமக்கு ஆதரவான ஆணையாளர்களை உள்ளடக்கிய ஆணைக் குழுக்களை நியமிக்கும் நீன்ட வரலாற்றைக் கொண்ட நாடாகும் என ஹியூமன் ரைட்ஸ் வொச் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறியிருந்தார்

பொறுப்புக் கூறல் சம்பந்தமாக சர்வதேச சமூகம் பிரச்சினை எழுப்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசாங்கம் ஆணைக் குழுவொன்றை நியமிக்கும். அந்த ஆணைக் குழு நீன்ட காலத்தை செலவளித்து விட்டு வெறுமையில் முடிந்து விடும் என்று அவரே அரசாங்கம் நல்லிணக்க ஆணைக் குழுவை நியமித்த போது கூறியிருந்தார். ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் நிறுவனமானது சர்வதேச அபிப்பிராயங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் அமைப்பாகும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இது தான் அரசாங்கம் இன்று எதிர் நோக்கியிருக்கும் பிரச்சினையாகும். சர்வதேச சமூகம் என தம்மை அழைத்துக் கொள்ளும் மேற்கத்திய நாடுகள் மனித உரிமை விடயத்தில் சில நாடுகளுக்கு வேற்றுமை காட்டுவதாக அரசாங்கம் கூறுவது உண்மையே. அதே போல் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போரின் இறுதி கட்டத்தின் போது போரை நிறுத்துமாறு மேற்கத்திய நாடுகள் கூறியதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாததன் காரணமாகவே தற்போது அந் நாடுகள் இலங்கைக்கு நெருக்குதலை கொடுத்து வருகின்றன என்றும் அரசாங்கம் கூறி வருகிறது.

அதுவும் உண்மையாக இருக்கலாம். ஏனெனில் மனித உரிமைகள் தான் பிரச்சினை எனறால் இஸ்ரேலிய படையினரும் அமெரிக்க படையினரும் முள்ளிவாய்க்காலில் இடம் பெற்றதாகக் கூறப் படும் சம்பவங்களைவிட படு பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் மேற்கு நாடுகளில் எவரும் அந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசுவதில்லை.

இவை எவ்வளவு தான் உண்மையாக இருப்பினும் இப்போது அரசாங்கம் நம்பிக்கைப் பற்றிய பிரச்சினையையே எதிர்நோக்கியிருக்கிறது. எனவே அப் பிரச்சினை தற்போதைய ஜெனீவா மாநாட்டுக்கு அப்பாலும் நீன்ட காலத்திற்கு அரசாங்கத்தை மிரட்டிக் கொண்டே இருக்கும் போல் தான் தெரிகிறது. அதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி தான் அரசாங்கத்திற்கு இருக்கிறது. தாமே தயாரித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்குவதே அந்த வழியாகும்.

ஆனால் தேசப்பற்றை முன்நிறுத்தி செயற்பட்டுக் கொண்டு இருக்கும் அரசாங்கத்திற்கு இது இலேசான விடயம் அல்ல. மேலும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டி வரும். யோகி, எழிலன் ஆகியோர் காணாமற் போனதையிட்டு இராணுவ வீரர்கள் சிலரை விசாரணை செய்ய வேண்டி வரும்.

புலிகளும் நம்பிக்கையைப் பற்றிய இந்தப் பிரச்சினையையே எதிர் நோக்கியிருந்தார்கள். அது அவர்களது வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. அவர்கள் கிராமங்களில் சாதாரண மக்களை நுற்றுக் கணக்கில் கொன்றார்கள், சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களை வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றினார்கள், போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களையும் கடத்தினார்கள். பின்னர் குற்றச்சாட்டுக்கள் வரும் போது ஒன்றில் அவற்றை மறுத்தார்கள், அல்லது நியாயப் படுத்தினார்கள்.

அது அவ்வப்போது குற்றஞ்சாட்டுவோரை வாயடைக்கச் செய்த போதிலும் அக்குற்றச்சாட்டுக்கள் புலிகளின் பிரத்தியேகக் கோவையில் சேர்க்கப்பட்டுக் கொண்டே வந்தன. அவற்றின் கூட்டு மொத்தம் புலிகளை 32 நாடுகளில் தடை செய்யக் காரணமாக அமைந்தது. இறுதியில் அது உலக நாடுகளின் ஆதரவை குறைத்து அவர்களின் தோல்விக்கும் ஒரு காரணமாகியது. சிறிய நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் உலக அரசியலில் நம்பகத் தன்மை அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது.

http://www.tamilmirr...1-19-22-40.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையின்சுருக்க வடிவம

; 1.

யுத்தத்தினால்கடுமையான பாதிப்பிற்குள்ளான மக்களின் பிரதிநிதிகளென்றவகையில்தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது பாதிக்கப்பட்ட மக்களுடைய உண்மை நீதி மற்றும் இழப்பீடு என்பவற்றிற்கான உரிமைகளைஉத்தரவாதம்செய்வதான ஒரு நம்பிக்கையான கணக்கொப்புவித்தல் முறையினை மையமாகக்கொண்ட நேர்மையான நல்லிணக்கத்தைஎப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளது. 2010 ஆம்ஆண்டு மே மாதம்15; ஆம்திகதியன்று ஐனாதிபதி கற்றுக்கொண்ட பாடங்கள்மற்றும் நல்லிணக்கக் ஆணைக்குழுவை அமைத்து அக்குழுவானதுகணக்கொப்புவித்தல்தொடர்பான விடயங்களை ஆராயுமென உலகிற்குக் கூறினார்.

2.

கற்றுக்கொண்ட பாடங்கள்மற்றும்நல்லிணக்க ஆணைக்குழுவினதுபடிமுறைகளும்நடைமுறைகளும்தமிழ்மக்களின் நம்பிக்கையை வெல்லத் தவறியது. அதுமட்டுமன்றிää இவ்ஆணைக்குழுவானது கணக்கொப்புவித்தல்நடைமுறைகள்தொடர்பான சர்வதேச நியமங்களை முழுமையாகப்பின்பற்றிஅமையவில்லை.

3.

அங்கத்துவத்தில்காணப்படும்இன மற்றும்பாலியல் ரீதியிலான சமமின்மை அங்கத்தவர்களிடையே காணப்படும் நலன்ரீதியிலான முரண்பாடும் காப்புரிமையற்ற சுதந்திரம் சர்வதேச மனிதநேய மற்றும்மனித உரிமைகள் சட்டங்களில் அங்கத்தவர்களுக்குப் பொதுவாகக்காணப்படும் பாண்டித்தியமின்மை மற்றும்ஆணைக்குழுவின் பணிப்பாணை படிமுறை நடைமுறை ஆகியவை தொடர்பில்பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளுடனோ அல்லது பரந்துபட்ட தமிழ்சமுகத்துடனோ எந்தவிதமான கலந்தாலோசனையிலும் ஈடுபடாமை ஆகியவை இவ்வாணைக்குழுவின் சுதந்திரத்தன்மை மற்றும்நிபுணத்துவம்சார்சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

4.

மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள்மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது முறைமையானது ஒப்பீ ட்டளவில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களுக்கு குறைந்தளவு முக்கியத்துவத்தையே வழங்கியது. இவ்வாணைக்குழுவானது யுத்த கடைசிக்கட்டங்களில் நிகழ்ந்த வன்முறைகளுக்கான உண்மையான கணக்கொப்புவித்தலைத்தொடர்ந்து செய்வதற்கான வளங்களையும் அலுவலகர்களையும்குறைவாகவே கொண்டிருந்தது. உதாரணமாக இவ் ஆணைக்குழுவானது வடக்குக்கிழக்கில்சாட்சியங்களை திரட்டுவதற்குசெலவழித்த நேரமானது கொழும்பிலே செலவழித்த நேரத்துடன் ஒப்பிடுகையில்மிக மிகக்குறுகியதாகும். கொழும்பில்இடம்பெற்றவிசாரணைகளுக்காக 56 நாட்களை செலவிட்ட ஆணைக்குழு வடக்கிலும் கிழக்கிலும்மொத்தமாக 22 நாட்களை மாத்திரமே செலவிட்டது.அதுமட்டுமன்றிää நேரம் பற்றாக்குறையினைக்காரணம்காட்டி ஆணைக்குழுசாட்சியங்களிற்கு குறைவான கால அவகாசமே வழங்கப்பட்டது.பலசந்தர்ப்பங்களிலே எதிர்காலத்தில்உருவாகக்கூடிய சாட்சிகளுக்குசாட்சியமளிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படாததோடு அவர்கள்தமதுபிரச்சினையினை எழுத்துவடிவில்ஆணைக்குழுவிற்கு அனுப்புவதற்கு மட்டுமேவேண்டப்பட்டனர்.

5.

கற்றுக்கொண்ட பாடங்கள்மற்றும்நல்லிணக்க ஆணைக்குழுவானதுசாட்சிகளின்பாதுகாப்பு தொடர்பில்எந்தவொரு சரியானநிகழ்ச்சித்திட்டத்தையும்கொண்டிருக்கவில்லை. விடயங்களை மேலும் பாராதூரமாக்கும்வகையில்ää ஆணைக்குழுவின்செயற்பாடுகள் நிறைவுற்றபின்னரான காலப்பகுதியில்சாட்சிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட பயமுறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள்மற்றும்மூடிய பாதுகாப்பான இரகசியஅறையில்வழங்கப்பட்ட சாட்சியங்களின்இரகசியத்தன்மையைஉறுதிப்படுத்துவதில்தோல்வி ஆகியவற்றினூடாக பிரதிபலித்தஅங்கத்தவர்களின்மனப்பாங்கானது சாட்சிகளின்பாதுகாப்பிற்கு உறுதியானவழிகளில்மேலும்தீ ங்கை விளைவித்தது. உதாரணமாகää சித்திரவதைமற்றும்பாலியல்துன்புறுத்தல் பற்றி முறைப்பாடு செய்த கல்முனையைச் சேர்ந்த சாட்சியொருவர் பின்னர்குற்றவியல்விசாரணைத்திணைக்களத்தின் நாலாம்மாடியிற்கு அழைக்கப்பட்டார். இது அரசாங்கம்கற்றறிந்தபாடங்களும்நல்லிணக்கமும்ஆணைக்குழுவின்செயல்முறைகளில் கண்காணித்ததையும்சாட்சிகளின்விபரங்கள் வெளியிடப்படுதல்தொடர்பில் ஏற்பட்ட மிக எளிதான இணக்கப்பாட்டையும்உறுதிசெய்கின்றது.அரசாங்கத்திற்கெதிராக போர்க்குற்றச் ;சாட்டுகளை எழுப்புபவர்களுக்கெதிராகஇலங்கையில்காணப்படுகின்ற எதிர்ப்புத்தன்மையானதுää குற்றங்களில் தொடர்புடைய மூத்த அரசதரப்பு அலுவலகர்களைச் சிக்கவைக்கும் தன்மைகொண்ட சாட்சியங்களை முன்வைக்கும்சாட்சிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும்எதிரான பழிவாங்கல்கள்காணப்படமாட்டாதுஎன்பது உறுதிசெய்யப்படும் வரை அரசாங்கத்திற்கெதிராக உள்ள போர்க் குற்றங்களை அணுகும்எந்தவொரு கணக்கொப்புவித்தல்முறையும் பிரயோஜனமற்றதாகவே அமையும். மேலும்தற்போது வெளிநாடுகளில் வசிக்கும்சாட்சிகளின்வீ டியோ சாட்சியங்களைப் பதிவு செய்யாமையானது பழிவாங்கப்படுவோம்என்ற பயமற்ற சாட்சிகளின் சாட்சியங்களை இவ்வாணைக்குழு இழக்கச் செய்துள்ளது.

6.

இவ்வாணைக்குழுவினால்ஒரு வருடத்திற்கு முன்னர்வெளியிடப்பட்டஇடைக்காலப்பரிந்துரைகள்பயனுள்ள வகையில் அமுலாக்கப்படவில்லை.அமுலாக்கத்தின்பொருட்டு உருவாக்கப்பட்ட முகமையகங்களிடையேயானஆலோசனைக் குழுவின் அமுலாக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம்பற்றியஅறிக்கையானது உண்மையான முன்னேற்றமின்மையை மட்டுமேஎடுத்துக்காட்டியுள்ளது. உறுதிப்படுத்தாவிடினும் எளிமையானஇவ்விடைக்காலப் பரிந்துரைகளை அமுலாக்குவதில்அரசாங்கத்தின் தோல்வியானது ஆணைக்குழுவின்இறுதிப்பரிந்துரைகளை அமுலாக்குவதில்அரசாங்கத்தின்பொறுப்பின்மையை சமிக்கை செய்கின்றது

.7.

2011 ஆம்ஆண்டு மார்கழி மாதம்16ம்திகதியன்று பாராளுமன்றத்திற்கூடாகவெளியிடப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள்மற்றும்நல்லிணக்கஆணைக்குழுவினது இறுதி அறிக்கையானது மனிதாபிமான சட்டம்உள்ளிட்டபல்வேறு பிரச்சனைகளுக்கு தீ ர்வு காணவேண்டியதாக காணப்படுகிறது.எனினும்இவ்வாணைக்குழுவானது அரசாங்கத்திற்கெதிரான போர்க்குற்றங்கள் மற்றும்மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள்என்பவற்றைஉள்ளடக்கியதான சர்வதேச மனிதநேயச்சட்டமீ றல்கள்தொடர்பானநம்பகமான குற்றச்சாட்டுக்களை புறக்கணிக்கின்றது. இக்குற்றச்சாட்டானது உணவு மற்றும்மருந்து போன்றவற்றை இழக்கச்செய்வதற்காகவேண்டுமென்றே வன்னியிலிருந்த மக்களின்எண்ணிக்கையை குறைத்துகாட்டியமை யுத்த சூனிய பிரதேசங்களிலே வேண்டுமென்றே மனிதாபிமானமற்ற முறையிலும்கவனமற்றமுறையிலும்தாக்குதல் நடத்தியமைவைத்தியசாலைகள்உட்பட பொது மக்கள்நிலைகளின்மீ துதாக்குதல்நடத்தியமைசரணடைந்தவர்களைக்காணாமற் போகச்செய்தமையும்அவர்கள்காணாமற்போவதற்கு காரணமாகஇருந்தமையும் போன்றவற்றை உள்ளடக்கும்.

8.

கற்றுக்கொண்ட பாடங்கள்மற்றும்நல்லிணக்க ஆணைக்குழுவினது அணுகுமுறையும்படிமுறையும்பின்வரும்இரு விடயங்கள்காரணமாககுறைபாடுடையதாக அமைந்தன: (1) தெரிந்தெடுக்கப்பட்ட சாட்சிப்பத்திரங்கள்(2) வழங்கப்பட்ட தகவல்களுக்கேற்ற சட்டங்களைப் பிரயோகிக்கத்தவறியமை.

9.

இக்குழுவானதுää வடக்கு கிழக்கில்பணியாற்றிய வைத்தியர்களின் சாட்சியங்களை முக்கியத்துவப் ;படுத்தியிருந்த போதும்அவர்கள் சாட்சியங்களை வழங்கியபோது என்ன பின்னணியிலிருந்தார்கள்என்பதைகுறிப்பிடத்தவறிவிட்டது. அதாவது அவர்கள்கைது செய்யப்பட்டதும்யுத்தத்தின்இறுதி கட்டத்திலே அவர்கள்விடுத்திருந்த அறிக்கையை பின்னர்பொதுமக்கள்முன்னிலையில்பகிரங்கமாக வாபஸ்பெற்றமை என்பவற்றைக் குறிப்பிடலாம். ஆகவேää இவ்வைத்தியர்களால்இவ்வாறாக ஆணைக்குழுவிற்குவழங்கப்பட்ட சாட்சியங்களின்நம்பகத்தன்மை பெரிதும் சமரசம்செய்யப்பட்டன. குறிப்பாகää ஒவ்வொரு தாக்குதலும்வீடியோப்படம் பிடிக்கப்பட்டு மேலதிகாரிகளின்முறையான ஒப்புதலுடனேயேநிகழ்த்தப்பட்டன என இராணுவ சாட்சியங்கள்ஒப்புக்கொண்டபோதுää கீ ழேதன்னியங்கி வானூர்தி வீ டியோப்படங்கள்ää வான்வழித்தாக்குதல்களின் வீடியோப்படங்கள்மற்றும் இராணுவ ஆவணக்காப்பகம்போன்ற மிகமுக்கியமான சாட்சியங்களைப்பெறுவதற்கு ஆணைக்குழு தவறிவிட்டது.மேலும்இந்த ஆணைக்குழுவானது முல்லைத்தீ வின்அரசாங்க அதிபராககடமையாற்றிய எமில்டா சுகுமார்வழங்கியிருந்த சனத்தொகை மதிப்பீ ட்டுஅறிக்கையையோ அல்லது வன்னியிலிருந்த அரசாங்க அதிபர்களுக்குஅத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்சர்வதேச நிறுவனங்களிடம்உணவுவேண்டி விண்ணப்பிக்க வேண்டாமென அனுப்பிய கடிதத்தையோ கருத்தில் கொள்ளவும்முக்கியத்துவம்கொடுக்கவும்தவறியுள்ளது. பிரதானமாகääவன்னி சனத்தொகையைக்குறைத்து மதிப்பிட்டு 2009 ஆம்ஆண்டு மாசிமாத நடுப்பகுதியில்பாதுகாப்பு அமைச்சினால்வெளியிடப்பட்டஅறிக்கையையும்கவனத்திற்கொள்ளவில்லை. இத்தகைய முக்கியசாட்சியங்கள் உணவின்றித்தவித்த வன்னி மக்களை உணவுசென்றடைவதைத்தடுப்பதற்காக அரசாங்கத்தினால்மேற்கொள்ளப்பட்டதிட்டமிட்ட முயற்சியினைச்சுட்டிக்காட்டுவதாக அமைவதுடன்அவைஇவ்வாணைக்குழுவினால்நுணுக்கமாக பரிசீ லிக்கப்படவேண்டியவையாகவும் உள்ளன.10.

அத்துடன்ää கற்றுக்கொண்ட பாடங்கள்மற்றும் நல்லிணக்கஆணைக்குழுவானது வழங்கப்பட்ட உண்மையான தகவல்களுக்கு ஏற்பசட்டத்தை பிரயோகிக்க தவறியுள்ளது. இழைக்கப்பட்டதாக நம்பப்படும் குற்றங்கள்தொடர்பிலான சர்வதேச மனிதநேய சட்டமீ றல்கள்மற்றும் உள்நாட்டு சட்டமீ றல்கள் போன்றவற்றை ஆராய்வதை இக்குழுபுறக்கணித்துள்ளது.

11.

சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்கீ ழ்

பொது மக்கள்

மற்றும்

பொதுமக்கள்சனத்தொகை

என்பவற்றிற்குத்தெளிவற்ற வரைவிலக்கணங்களேகாணப்படுவதாக இவ்வாணைக்குழு தவறாக முடிவுறுத்துகின்றது. முதலில்ääகற்றுக்கொண்ட பாடங்கள்மற்றும்நல்லிணக்க ஆணைக்குழுவானது பொதுமக்கள்என்ற பதத்தின்வரைவிலக்கணத்தைத்தீ ர்மானிப்பதற்குää சர்வதேசமனிதநேயச்சட்டத்திற்கமைய போரில்நேரடியான அல்லது தொடர்ச்சியாகப் பங்குபற்றுதல்மற்றும்வேறுபடுத்தல்கோட்பாட்டில்அவற்றின்விளைவுகள் போன்றவற்றை இன்னும்விரிவாக விபரித்திருக்க வேண்டும். ஏனெனில் போரில்நேரடியாகப்பங்குபற்றாத அனைவரும் பொதுமக்கள்எனவும் அவர்களை இலக்குவைக்கமுடியாது எனவும்சட்டம்தெளிவாக கூறுகிறது.சட்டத்தினைக்கவனத்தில்கொள்ளாது இக்குழுவானது முன்னர்எப்போதுநிகழாத இலங்கையின்அனுபவத்தின்பக்கம்கவனத்தைத்திசைதிருப்புவதற்கு முயற்சிக்கின்றது. ஆயினும்ää போரில்நேரடியாகப் பங்குபற்றுதல்என்பதனை தீ ர்மானிக்கின்ற விடயங்கள்ஏன்இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களில்பிரயோகிக்கப்படக்கூடாது என்பதற்கு சரியானகாரணங்கள் எவற்றையும்ஆணைக்குழு வழங்கவில்லை. மேலும்ääபொதுமக்கள்மீ தான தாக்குதலுக்கெதிரான முழுமையான தடையானது ஒருசனத்தொகையில்பெரும்பாலானவர்கள்பொதுமக்களாக இருக்கும் சந்தர்ப்பங்களைக்கும்ஏற்புடையதாக இருப்பதுடன்அச்சனத்தொகையானதுபொதுமக்கள்என்ற வரைவிலக்கணத்திற்குள்வராத தனிநபர்களைக் கொண்ட ஒரு குழுவினைக்(போராளிகளைக்) கொண்டிருப்பினும்அதுஇச்சனத்தொகையின்பொதுமக்கள்சனத்தொகை என்ற இயல்பினை நீ க்காதுஎன்ற தீ ர்மானத்தை ஏற்படுத்திய முன்னாள்யுகோஸ்லாவியாவிற்கானசர்வதேச குற்றவியல்நீ திமன்றத்தின்சட்டவியலைப்பின்பற்றுவதற்கான எந்தமுயற்சியையும்மேற்கொள்ளவில்லை.12.

கற்றுக்கொண்ட பாடங்கள்மற்றும்நல்லிணக்க ஆணைக்குழுவானதுஇராணுவத்தினர்யுத்த சூனிய பிதேசங்களிலே வேண்டுமென்று தாக்குதல் நடத்தவில்லையெனவும்முடிவுறுக்கின்றது. ஆனால்யுத்த சூனியபிதேசங்களிலேயிருந்து மக்களிடையே விடுதலைப்புலி உறுப்பினர்களும் காணப்பட்டார்கள்என்பதும்அவர்கள் வெளியேறிச்செல்ல விரும்பியமக்களை அனுமதிக்கவில்லை என்பதற்கும்நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தபோதும்ää யுத்த சூனிய பிதேசங்களிலே இருந்த விடுதலைப்புலிஉறுப்பினர்கள்அங்கிருந்து நடத்திய தாக்குதல்களுக்கு பதில்தாக்குதலைநடாத்துவதைத்தவிர படையினருக்கு வேறெந்த வழியும்இருக்கவில்லைஎன்ற உரைவடிவத்தை மட்டுமே ஆணைக்குழு ஏற்றுக்கொள்கின்றது.பல்வேறு காரணங்களினால்இப்பகுப்பாய்வானது பிழையானதாகும்.

13.

முதலாவதாக இது நியாயமான இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றபோது நியாயமற்ற முறையில்பொது மக்கள் குறிவைக்கப்பட்டால்அத்தாக்குதலானது நியாயமற்றது எனக்கூறும் சர்வதேச மனிதநேயச்சட்டத்தை புறக்கணிக்கின்றது.

14.

இரண்டாவதாகää விடுதலைப்புலிகளின்தாக்குதல்களுக்கு பதில்தாக்குதலைநடத்தியதாக கூறுகின்ற இவ்வாணைக்குழுவினால்தெரிவுசெய்யப்பட்டகதைவடிவமானது போரினால்பாதிக்கப்பட்ட பலரது குறிப்புக்கள் குறிப்பாகமுதலாவது யுத்த சூனிய பிதேசத்தினுள்ளே சுதந்திரபுரம்சந்தியிலமைந்தஐக்கிய நாடுகள்சபையின்மையத்தின்

மீதான தாக்குதல்ஆகிய வடிவங்களுக்கு ஏற்றவாறு அமையாத நியாயமற்ற பொதுப்படுத்தலாகும்.

15.

அத்துடன் மூன்றாவதாக இவ்வாணைக்குழுவானது பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள்விகிதாசாரக்கோட்பாட்டிற்கிணங்கவே காணப்படுகின்றதுஎன்ற முடிவிற்கு வந்துள்ளது. எதிர்பார்க்கின்ற இராணுவரீ தியிலானஅனுகூலத்திற்கும்மக்கள் இழப்பிற்குமிடையிலான சமநிலையினைப் பரீட்சிக்காது தாக்குதல்கள் விகிதாசாரமானவை என்ற முடிவினைஆணைக்குழு அடைகின்றது. ஒவ்வொரு தாக்குதலின்போதும்ஏற்பட்ட மக்கள் இழப்புக்களின்சரியான எண்ணிக்கை இல்லாமல் இந்தச்சோதனையைபோதுமான அளவிற்கு செய்திருக்கமுடியாது. மேலும்குறிப்பாக இரண்டாவதுமற்றும்மூன்றாவது யுத்த சூனிய பிதேசங்களிலே பொதுமக்களின் இழப்புகளைக்குறைக்கும்பொருட்டு இராணுவம்கனரக ஆயுதங்களுக்குபதிலாக வேறு ஆயுதங்களைப்பயன்படுத்தியிருக்க முடியுமா என்பது பற்றிவிபரமான எந்தவொரு விசாரணையையும்ஆணைக்குழு நடத்தவில்லை.ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த பகுதிகளில் எல்லாவிதமான நிபந்தனைகளின் மீ ள்கட்டுமானமும் சாத்தியமற்றது என்று முதலடடு

பிணக்குகளைதீர்ப்பதற்கான சர்வதேச நிலையத்தினால்1990ம்ஆண்டு முன்மொழியப்பட்டதெளிவற்ற பொருத்தமற்ற மாதிரியை இக்குழு மேற்கோள்காட்டியுள்ளது.ஆனால்ஓரு இலக்கை நோக்கி தாக்குதல்நடத்துகின்ற போது எதிர்பார்த்தநிச்சயமானதும்நேரடியானதுமான இராணுவ அனுகூலத்தைக்காட்டிலு ம்மிகஅதிகளவில்பொதுமக்களிற்கு உயிரிழப்பீடோ அல்லது காயங்களோஏற்படுமென்றோ அல்லது அவர்களின்உடைமைகளுக்கு சேதம் ஏற்படுமென்றோ அல்லது இவ்விருவிதமான பாதிப்புக்களும்ஏற்படுமெனஅறிந்தால்கட்டளை தளபதிகள்அவற்றைக் கருத்தில்கொள்ளவேண்டும் என்ற முன்னாள்யுகோஸ்லாவியாவிற்கான சர்வதேசக்குற்றவியல்

நீதிமன்றத்தின் சட்டவியலை மேற்கோள்காட்டுவதற்கு இவ்வாணைக்குழு

இலங்கை சுதந்திரக்கட்சி ( SLFP) ஆகியவற்றுடன்கொண்டிருந்ததாகக் குற்றம்சாட்டப்படும்அவரது தொடர்புகள்பற்றி எதையும் கோடிட்டுக் காட்டவில்லை.

22.

இத்தகைய சூழ்நிலைகளில் இவ்வாணைக்குழுவானது தனதுநடுவுநிலைமையையும்நம்பகத்தன்மையையும்இழந்துள்ளதுடன் குற்றமிழைத்தவர்கள்தண்டனைகளிலிருந்து தப்பிப்பதனையும் மீ ள்வலியுறுத்தியுள்ளது.23.

காணமல்போதல்ää தடுப்புக்காவல்ää காணி அபகரிப்புக்கள் வன்முறைääதுன்புறுத்தல்கள் அச்சுறுத்திப்பணம்பறித்தல்மற்றும்கொலை ஆகியதனிநபர்குற்றச்சாட்டுக்கள்தொடர்பில்தாம்ஏதோ ஒருவகையில் தலையிடுவதாகவும்அதனூடாக இக்குற்றச்சாட்டுகள்பற்றிய தொடர்ச்சியானநடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்இவ்வாணைக்குழு எண்ணற்றசந்தர்ப்பங்களில்உறுதியளித்துள்ளது. ஆயினும் ஆணைக்குழுஅறிக்கையானது மேலே குறிப்பிடப்பட்ட தொடரப்படுகின்ற வேலைப்பாடுதொடர்பில்மிகக்குறுகிய ஒரு தரவுப்பகுப்பாய்வை மட்டுமே கொண்டுள்ளது.இது சாட்சிகளுக்கு எந்தவிதமான பயனையும்வழங்கப்போவதில்லை.எவ்வாறு குறிப்பிட்ட முடிவு பற்றி குறிப்பிட்ட ஒரு சாட்சிக்கு அறிவிப்பதுஎன்பது பற்றி ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது என்பது பற்றி அறிக்கையில்தெளிவின்மையுள்ளது. இச்சாட்சிகளை அணுகக்கூடியதாக ஆணைக்குழுஇருக்கும்என்று கருதினால்கூட பொது அமர்வுகளின்போது வழங்கப்பட்டஉறுதிகளுக்கு எந்தவிதமான பதிலும்அறிக்கையில் வழங்கப்படவில்லைஎன்பது வெளிப்படையாகும்.

24.

அத்தோடு பால்நிலைசார் பிரச்சனைகளை கையாள்வதில் கொண்டிருந்தகுறைபாடுகளை மீ ளாய்வு செய்யவும்ஆணைக்குழு தவறியிருக்கின்றது.ஆணைக்குழுவின்கட்டமைப்பு மற்றும்அணுகுமுறை என்பவை பெண்கள் உண்மையைக்கூறுவதற்கு எதிராகப்பலமான முட்டுக்கட்டைகளைஉருவாக்கின. அதுமட்டுமன்றிää பெண்சாட்சியங்களைச்சுருக்கமாகவிசாரணை செய்ததுடன் அவர்களுடன்இவ்வாணைக்குழு நுனிப்புல்மேயும் தன்மையையும்நிராகரிப்புத்தன்மையையும்கொண்டிருந்தது எனதெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றிää பெண்கள்அழுவது தொடர்பில் கடுமையான ஒழுக்கப்போக்கினை வலியுறுத்துவதாக அமைந்ததுடன் வாய்மொழி சாட்சியங்களுக்குப் பதிலாக அவர்களிடம்எழுத்துமொழிசாட்சியங்களை சமர்ப்பிக்குமாறும்கோரியது. பொதுவாக பெண்கள்தமது

அனுபவங்களை ஆணைக்குழுவின்முன்விபரிக்கின்றபோது தெளிவான ஒருஅனுதாபமின்மையை அவர்களால்ஆணைக்குழுவிடமிருந்து உணரமுடிந்தது.

25.

ஆணைக்குழுவின்மனித உரிமை மீறல்கள்குறித்த பல பரிந்துரைகள் நீதித்துறை சட்டமா அதிபர்திணைக்களம் தேசிய பொலிஸ்ஆணைக்குழுமற்றும்பொது சேவைகள்ஆணைக்குழு ஆகிய முக்கிய நிறுவனங்களின் சுயாதீ னத்தன்மையினை தொடர்பில்அனுமானங்களைமேற்கொள்வதாகவுள்ளது. ஆகவே 18 ஆம் திருத்தச்சட்டத்தின் தொடரும் பயன்பாடானது சுருக்கமாக அமைவதுடன்இவ்வாணைக்குழுவின்இறுதிப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில்பெரும்பாலாக சவால்களையும்தோற்றுவிக்கின்றன.

26.

கணக்கொப்புவித்தலுடன்நேரடியாகத்தொடர்புபடாத சில விடயங்கள் தொடர்பிலும்ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.இப்பரிந்துரைகள்சில சாதகமான விடயங்களைக்கொண்டுள்ளன. ஆகவேääஅவை அமுலாக்கப்படுமாயின்ää தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அவற்றைவரவேற்பதுடன்அவற்றிற்கு ஆதரவும்வழங்கும். இப்பரிந்துரைகளின் அமுலாக்கத்தினை கூர்ந்து கண்காணிப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்புஎண்ணியிருக்கின்றது. ஆயினும்இப்பரிந்துரைகள்கணக்கொப்புவிப்புடன்தொடர்புடைய விடயங்கள்எனக்குழப்பமடையக்கூடாது.

27.

கணக்கொப்புவித்தலுடன்தொடர்பற்ற பரிந்துரைகள்நல்லிணக்கம்மற்றும் அதிகாரப்பரவலாக்கம் சார்ந்த பரிந்துரைகளாகும். இனப்பிரச்சினை மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்ற ஏனையபிரச்சினைகளுக்குத்

தீ ர்வுகாணுகின்றதும்அதிகாரப்பரவலாக்கத்தைஅடிப்படையாகக் கொண்டதுமான அரசியல்

தீர்வொன்றினைக்காணவேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்துகின்றது. மக்களின்அடிமட்ட பங்குபற்றுதலைஉறுதிசெய்யும்முகமாக உள்

ர்மட்ட அரச நிறுவனங்களுக்குஅதிகாரங்களைப்பரவலாக்குவதனையும்பரிந்துரைக்கின்றது. அதுமட்டுமன்றிääமாகாணசபை முறைமையின்செயற்பாடுகளில் காணப்படும்குறைபாடுகளைஅரசாங்கம்கவனத்தில்கொள்ளவேண்டும்எனவும் ஆணைக்குழுபரிந்துரைக்கின்றது. மாகாண மட்டத்திலுள்ள அரசியல்தலைமைத்துவங்கள் மற்றும்மக்களிடையே நம்பிக்கைத்தன்மையினை ஏற்படுத்துவதங்காகமாகாணமட்டப்பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக பாராளுமன்றத்தில் இரண்டாவது சபையொன்றினை உருவாக்குதல்போன்ற ஒரு யதார்த்தமானமாதிரியே இவ்வாணைக்குழுவினால்முன்வைக்கப்பட்ட ஒரேயொருஆணித்தரமான ஆலோசனையாகும். அதிகாரப்பரவலாக்கம்பற்றிய

இவ்வாறான உணர்ச்சிகரமான கருத்துக்கள்பெரும்பாலாகசொற்கவர்ச்சியுடையவை மட்டுமே. அவை 2006 ஆம்ஆண்டில்ஜனாதிபதிஅவர்களால்நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள்குழுவின்பெரும்பான்மைஅறிக்கை உள்ளடங்கலான முன்னைய பரிந்துரைகளுடைய அளவிற்குக்கூடஅமையாதவை.

13

ஆம்திருத்தச்சட்டத்தின்அமுலாக்கம்தொடர்பில் ஜனாதிபதி அவர்களின்சமீபத்தைய கருத்துக்களைப்பார்க்கும்போது கற்றறிந்த பாடங்களும்நல்லிணக்கமும்ஆணைக்குழுவின்பணிவானபரிந்துரைகள்அமுலாக்கப்படுவதும்சந்தேகமே. இவ்வாறான கருத்துக்கள்ääஅர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கம்ஒன்றினை அடிப்படையாகக்கொண்டஅரசியல்

தீ ர்வொன்றினை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் உண்மையில்தயாரில்லை என்ற தமிழ்மக்களிடையே காணப்படும்வலுவானஅச்சத்தினை உறுதிசெய்கின்றன.

28.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் பல சந்தர்ப்பங்களில்முன்வைக்கப்பட்ட வடக்கில்இராணுவத்தினரின்தலையீ டு என்ற விடயத்தையும் ஆணைக்குழுஒருவாறாக ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால்ää அனைத்து சிவில்நிர்வாகநடவடிக்கைகளிலிருந்தும்இராணுவத்தினர்தம்மை விலக்கிக் கொள்ளவேண்டியதன்தேவையை அங்கீ கரிக்கின்றது. இப்பரிந்துரையைத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வரவேற்பதுடன் அடுத்து வரும் மாதங்களில் இப்பரிந்துரை எவ்வாறு அமுலாக்கப்படுகின்றது என்பதனை நுணுக்கமாகக் கண்காணிக்கவும்அவற்றில் ஏற்படும்முன்னேற்றங்களை வெளியிடவும் எண்ணியுள்ளது.

29.

இவ்வாறான சாதகமான பரிந்துரைகளைக் காட்டிலும் உண்மை நீ தி மற்றும்இழப்பீ டு போன்ற பாதிக்கப்பட்டவர்களின்உரிமைகளை வழங்குகின்றசர்வதேச தரங்களுக்கு இயைவான கணக்கொப்புவிப்பு செய்முறையானதுääதேவையானது மிக முக்கியமானதும்உடனடியானதுமான தேவையாகும்.இத்தகைய தரமுடைய ஒரு செய்முறையினை அரசாங்கம்நிறுவுவதற்குத் தவறுகின்ற பட்சத்தில்ஐ.நா செயலரினால்நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையில்வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கேற்பää கணக்கொப்புவிப்புவிடயங்களை மேம்படுத்தக்கூடியவையும்இலங்கையில்நல்லிணக்கத்தினைஊக்குவிக்கக்கூடியவையுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சர்வதேச சமுகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.