Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் மகனின் கொலை: புதுடெல்லியைக் கலக்கிய சூடான விவாதம்!

Featured Replies

பிரபாகரன் மகனின் கொலை: புதுடெல்லியைக் கலக்கிய சூடான விவாதம்! [ Tuesday, 13 March 2012, 06:03.45 PM. ]

NDTV.jpgஇறுதியுத்ததின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகனை இலங்கை இராணுவம் சுட்டது தொடர்பாக NDTV யில் சூடான விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.ஜனதா கட்சித் தலைவரும் புலிகள் எதிர்ப்புவாதியுமான சுப்ரமணியசுவாமி, ஜீ.பார்த்தசாரதி, கம்மியூனிஸ் கட்சி ராஜா, மனித உரிமை ஆர்வலர் கங்கூலி, ஊடகவியலாளர் மீனா குமார், உலகத் தமிழர் பேரவை(GTF) பேச்சாளர் சுரேன், சனல் 4 கொலைக்களத் தயாரிப்பாளர் காலம் மக்ரே மற்றும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் நாராயன சாமி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். புதுடெல்லியில் மிகவும் பிரபல்யமான NDTV தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பாக மிக நீண்டநேரம் நடைபெற்ற முதல் விவாதம் இதுவேயாகும்.

முதலில் பேசிய ஆலோசகர் நாராயனசாமி அவர்கள், இலங்கையின் போர்குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்துபேசிய சுபிரமணியசுவாமி, புலிகளை மிகவும் சாடினார். பாலச்சந்திரன் புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். அங்கே பேசிய பார்த்தசாரதியும் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார். ஆனால் கம்மிபூனிஸ் கட்சியின் டீ.ராஜா அவர்கள் பேசும்போது, இலங்கை மேல் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா ஆதரிக்கவேண்டும் என வாதிட்டார். இதில் லண்டனில் இருந்து காலம் மக்ரே அவர்கள் கலந்துகொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்தார். உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் அவர்களும் இலங்கை போர்குற்றம் தொடர்பாக காத்திரமான விடையங்களைக் கூறியிருந்தார்.

இந்தியாவின் பல மூத்த அரசியல்வாதிகள் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றில், இலங்கை தொடர்பான விவாதம் குறித்த நேரத்தில் NDTVல் இடம்பெற்றது இந்திய அரசை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(தமிழில் மனிதன்)

Edited by BLUE BIRD

இந்திய மைய அரசியலில் மையங்கொண்டுள்ள சிறிலங்கா விவகாரம்

NDTV.jpg[ செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012, 03:57.38 PM GMT ]

அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்ற குரல், தமிழகமெங்கும் ஒங்கி ஒலித்து வந்த நிலையில், தற்போது இந்திய மைய அரசியல் வட்டத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்திய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மட்டுமல்ல, இந்திய மைய ஊடகங்களிலும் சிறிலங்கா விவகாரம் முக்கிய விவகாரமாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியான யில்ஐ.நா மனித உரிமைச் சபையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதனை மையமாக கொண்டு காரசாரமான விவாதமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தியப் பிரதமர் அலுவலகத்தினைச் சேர்ந்த துணை அமைச்சர் நாராயணசாமி, ஜனதாக்கட்சி தலைவர் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி, இந்திய கொம்யூனிஸற் கட்சித் தலைவர் டி.ராஜா, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்திய விவகாரங்களுக்கான பிரதிநிதி மீனாட்சி கங்குலி, தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர் மீனா கந்தசாமி, மூத்த இந்திய இராஜதந்திரி பார்த்தசாரதி மற்றும் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்பட தயாரிப்பாளர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்து கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இந்திய மையத்தின் பிரதான ஊடகங்களில் சிறிலங்கா விவகாரம் விவாதப் பொருளாக தோன்றியுள்ளமை, சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம் எந்‌தவொரு நாட்டுக்கும் எதிரான தனிப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்காது என்றும், சிறிலங்கா விவகாரத்தில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நடாளுமன்ற கீழவையில் தெரிவித்துள்ள கூற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனீவாப் பிரேரணையை ஆதரி எனும் முழக்கம் நேற்றைய இரு அவைகளுக்குமான இந்திய நாடாளுமன்ற அமர்வில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று செவ்வாய்கிழமை (13-02-12) இரு அவைகளும் பரபரப்புடன் தொடங்கியது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில், இந்திய அரசின் நிலை என்ன என்று விளக்கமளிக்க வேண்டும் என்றும், சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் திமுக., அதிமுக பாஜக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்பியுள்ளன.

திமுக தரப்பில் திருச்சி சிவா, அதிமுக எம்.பி. மைத்ரேயன், கொங்கிரஸ் தரப்பில் ஞானசேகரன், இடதுசாரிகள் தரப்பில் டி.ராஜா, பாஜக தரப்பில் வெங்கைய்யா நாயுடு ஆகியோர் சிறிலங்காவின் போர் குற்றங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு தொடர்சியான குரலை அவையில் எழுப்பினர்.

கொங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஞானதேசிகன், ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர்சியான ழுழக்கங்களால் பதிலுரைத்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன்குமார் பன்சிலால், இது குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் விபரங்களை கேட்டுள்ளேன்.

அறிக்கை வந்ததும் அரசு முழு விவரம் அளிக்கும். மேலும் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் எத்தகையது என்ற விபரம் இன்னும் அறியப்படவில்லை என்றார்.

இந்தப் பதிலினால் திருப்தியடையாத தமிழக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியதால், இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.

மதியம் சபை கூடியபோது, மேல்சபையில் தொடர்ந்து அமளி நீடித்து.

இதையடுத்து சிறிலங்கா விவகாரம் தொடர்பாக நாளை வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அறிக்கை சமர்ப்பிப்பார் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன்குமார் பன்சிலால் அறிவித்தார்.

எனினும் தொடர்ந்து குழுப்பம் நிலவியதால் மாலை வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

நாடுகடந்த தமிழீழ அரசங்கம்

http://news.lankasri.com/show-RUmqyDSXPdlu2.html

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

India's parliament erupted in uproar today when opposition MPs challenged the government's reluctance to confront Sri Lanka over allegations of war crimes, brought to light by a Channel 4 film.

Channel 4 News

CATCH UP Programme at 1900 weekdays, weekend timings see listings

Search Channel 4 News

Sri Lanka film sparks Indian parliament debate

Tuesday 13 March 2012

India's parliament erupted in uproar today when opposition MPs challenged the government's reluctance to confront Sri Lanka over allegations of war crimes, brought to light by a Channel 4 film.

New evidence of war crimes will be aired on a Channel 4 documentary tomorrow night, which includes chilling video evidence of five men and a child who have been executed.

A UN resolution is currently being debated which calls on Sri Lanka to further investigate allegations and report back to the UN.

Callum Macrae, director of the documentary, Sri Lanka's Killing Fields - War Crimes Unpunished, told Channel 4 News: "India has avoided taking a decision on the UN resolution.

"The uproar today came mostly from opposition MPs in the huge Tamil south of India, and they are demanding that India take a clear stand in support of the UN resolution."

Sri Lanka's Killing Fields - War Crimes Unpunished, will be aired on Channel 4 tomorrow night at 10.55pm.

http://www.channel4.com/news/channel-4-film-sparks-sri-lankan-parliament-debate

தொலைக்காட்சி 4ல் வந்த காணொளியைப் பார்வையிட மேலே இருக்கும் இணைப்பினைப் பார்க்கவும்

தமிழினப் படுகொலைகளை கூடவிருந்து செய்த காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகள் சிதறி, அழிந்து, நாசமாகப் போகவேண்டும் என்பது தான் சூடு, சொரணை, மானம், ரோஷம், மனச்சாட்சி கொண்ட ஒவ்வொரு தமிழனதும், நீதி, நியாயங்களில் நம்பிக்கையுள்ள மனிதாபிமானம் உடைய ஒவ்வொரு மனிதனதும் விருப்பம், தினசரிப் பிரார்த்தனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.