Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவில் மீண்டும் இனக்கலவரம் ஏற்படக் கூடிய சாத்தியம்-சம்பிக்க ரணவக்க

Featured Replies

சிறீலங்காவில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப்போன்ற இனக்கலவரம் உள்நாட்டிலும் இடம்பெறும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரு மான சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் மேற்குலக சமூகம் செயற்படக்கூடாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுடனும் ஏனைய தீய சக்திகளுடனும் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்படுவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையாக செயற்பட்டு வருகின்றது. இதில் மேற்குலக நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டு நாட்டை மீண்டும் சீரழிக்கும் பிரேரணையை ஆதரித்து பேசி வருகின்றது. விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் இனகங்ளுக்கு இடையில் ஒற்றுமையும் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ளது.

இதனை சீர்குலைக்கும் வகையிலேயே அமெரிக்காவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றன. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணையை சமர்ப்பித்துள்ள அமெரிக்கா அதன் ஊடாக இராணுவத்தை சர்வதேச விசாரணைகள் பொறிக்குள் சிக்க வைத்து தண்டனைகளை வழங்கவே முயற்சிக்கின்றது. புலிகளை அழித்திருக்காவிட்டால் இன்று இலங்கை இவ்வாறான சவால்களை ஒரு போதும் எதிர்கொண்டிருக்காது.

எவ்வாறாயினும் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவர சூழலை நாட்டில் ஏற்படுத்த அமெரிக்காவோ கூட்டமைப்போ முயற்சிக்கக்கூடாது. தேசிய பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று உள்ளது. அதே போன்று நீதிமன்ற கட்டமைப்பு ஒன்றும் உள்ளது.

எனவே ஜெனீவாவில் பிரேரணையைக் கொண்டு வந்து உள்நாட்டு சம்பவங்களை விசாரணை செய்யவேண்டியதில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

http://www.paristami...Tc3MzUzMjA4.htm

Edited by காதல்

நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட விடயந்தான். தமிழர்களுக்கான தீர்வுகள் என்ற விடயத்துக்குள்ளே இவைகளெல்லாம் சிங்களவரால் நிரல்படுத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப்போன்ற இனக்கலவரம் உள்நாட்டிலும் இடம்பெறும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரு மான சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். - செய்தி

மேற்படி செய்தி அறிக்கை ஜெனீவா தீர்மானத்தை அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் கைவிடாவிட்டால் இலங்கையில் மீண்டும் இனக்கொலையில் ஈடுபடுவோம் என்று அரசு சார்பாக உலக நாடுகளை மிரட்டும் BLACK MAIL பாணியில் அமைந்துள்ளது.

தனது அரசின் அமைச்சர் ஒருவர் விடுத்த அமரிக்காவையும் ஐநா சபையையும் மிரட்டும் BLACK MAIL செய்யும் அறிக்கைக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராசபக்க பொறுப்பெடுப்பதுடன் பதிலும் சொல்லியாக வேண்டும் .

இலங்கை ஜனாதிபதி திரு ராஜபக்ச அவர்களே நீங்கள் மீண்டும் ஒரு இனக்கொலைக்குத் தயாராகின்றீர்களா? அதுதான் அமைச்சர் சம்பிக்க ஊடாக வெளியிடப்பட்ட மிரட்டல் அறிக்கையின் அர்த்தமா?

உங்கள் படையினரின் தூண்டுதலில் தேசிய மாணவர் படையணி பயிற்சிக்காக ரந்தம்பை என்னும் இடத்துக்கு கடந்த 7 ம் திகதி அழைத்துச்செல்லப்பட்ட யாழ் மாணவர்கள்,மீது நடத்தப் பட்ட தாக்குதல் இனக் கலவரத்தை ஏற்படுத்தும் உங்கள் அரசின் திட்டமொன்றின் ஆரம்பமா? தயவு செய்து பதில் அளியுங்கள்.

Edited by poet

இலங்கை ஜனாதிபதி திரு ராஜபக்ச அவர்களே நீங்கள் மீண்டும் ஒரு இனக்கொலைக்குத் தயாராகின்றீர்களா? அதுதான் அமைச்சர் சம்பிக்க ஊடாக வெளியிடப்பட்ட மிரட்டல் அறிக்கையின் அர்த்தமா?

இதனை சிங்கள இனப்படுகொலையாளர்கள் சார்பில் முதலில் தெரிவித்தவர் சம்பந்தர் ஐயா அவர்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.