Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றும் இலங்கை அரசின் நடவடிக்கை, எதிர்காலத்தில் வன்முறைக்கு வழிவகுக்குமென இன்ரர்நாஷனல் கிறைசிஸ் குறூப் தெரிவித்தது

Featured Replies

வடபகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றும் இலங்கை அரசின் நடவடிக்கை, எதிர்காலத்தில் வன்முறைக்கு வழிவகுக்குமென இன்ரர்நாஷனல் கிறைசிஸ் குறூப் தெரிவித்தது

இலங்கையின் வட பகுதி இராணுவ மயமாக்கப்படுவதும், தமிழர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதும், இலங்கையில் மீளவும் வன்முறை ஏற்படுவதற்கு வழிவகுக்குமென இன்ரர்நாஷனல் கிறைசிஸ் குறூப் தெரிவித்தது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றி, அங்குள்ள சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதென இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அந்த அமைப்புக் குறிப்பிட்டுள்ளது.

வட பகுதியின் கலாச்சாரம், குடிப்பரம்பல், மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையை மாற்றும் வகையிலான கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம், எதிர்காலத்தில் வன்முறைகள் ஏற்படுவதற்கான விதைகளை இலங்கை அரசு விதைக்கிறதென அது தெரிவித்தது.

வட பகுதியின் நிர்வாகம் குறித்த முடிவுகளை சிங்கள இராணுவ அதிகாரிகளும், சிங்கள அரசியல்வாதிகளும் எடுப்பதாகவும், தமிழ் மக்களும், அவர்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களும் புறக்கணிக்கப்படுவதாகவும் அந்த அமைப்புக் குறிப்பிட்டது.

தமிழர் பகுதிகளில் வீதிகளுக்கும், கிராமங்களுக்கும் சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாகவும், பௌத்த விகாரைகளும், போர் நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் அனேகமானவை இடபெயர்க்கப்பட்ட தமிழர்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்புக் குறிப்பிட்டது.

எதிர்காலத்தில் வன்முறை ஏற்படுவதற்கு வழிவகுக்கும் வகையிலான அரசின் கொள்கைகளுக்கு உதவி புரியவேண்டாமென இலங்கையில் போரின் பின்னரான மீள் கட்டுமானத்திற்கு உதவும் அமைப்புக்களிடம் இன்ரநாஷனல் கிறைசிஸ் குறூப் கேட்டுள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11406

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்...கடைசி எழுபது வருசமா எங்க போயிருந்தீன்கள்? 

நெற்றி கண் திறந்திட்டுது! 

ம்ம்ம்...கடைசி எழுபது வருசமா எங்க போயிருந்தீன்கள்?

நெற்றி கண் திறந்திட்டுது!

  • தொடங்கியவர்

to: akeenan@crisisgroup.org

Subject: War Crimes and Accountability in Sri Lanka

Dear Mr. Kennan of ICG,

I would like to thank ICG for its continued quest for peace and justice in Sri Lanka. In your latest report which comes after days of credible war crimes allegation by UK's Channel 4, you have warned about potential conflict in the years to come. That is because Sri Lanka continues to fail to fulfil promises it made to the international community.

Sri Lanka continues to marginalize Tamil minority which was the root cause of 30 years armed conflict. We all have an obligation to find peace and justice with dignity to avoid any further bloodshed. For that all options should be considered, including that of separation.

Once again I sincerely thank ICG!

Truly,

Edited by akootha

நன்றி அகூதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ சாமிகளா விடுங்க இப்பவாவது உங்களிற்காக குரல் கொடுக்கிறாங்களே அதையும் தடுக்க வேண்டுமா??

இதுவரை மனிதவுரிமை அமைப்புக்கள், போர் குற்றம், கடத்தல் காணாமல் போதல் போன்றவற்றிற்காகவே குரல் கொடுத்து வருகின்றன.

எமது இருப்பையே கேள்விக் குறியாக்கிற ஒரு பிரச்சினைக்காக இந்த அமைப்பு குரல் கொடுக்கிறது. அதனை ஊக்குவியுங்கள்.

ஓகே.  நான் ஒரு நன்றி கடிதம் அனுப்புகிறேன். (அகூதா அண்ணையிண்ட மடலை சுட்டு தான்) 

ஓகே. நான் ஒரு நன்றி கடிதம் அனுப்புகிறேன். (அகூதா அண்ணையிண்ட மடலை சுட்டு தான்)

அதுக்குத்தானே அவர் எழுதியிருக்கிறார்.

இதை மாத்திரமல்ல, அவர் எழுதும் அனைத்து மடல்களையும் சம்பந்தப்பட்டவர்களிற்கு அனுப்புங்கள்.

கொப்பி & பேஸ்ட் செய்து மின்னஞ்சல் அனுப்ப ஒரு அரை நிமிடம் கூடத் தேவையில்லை.

தொடருங்கள். மற்றவர்களையும் ஊக்குவியுங்கள்.

நானும் அனுப்பி விட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.