Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவீந்திர சில்வாவை தொடர்ந்து எட்டி உதைக்கும் அனைத்துலக சமூகம்

Featured Replies

ஜெனிவாவில் தீவிரம் பெற்றுள்ள சிறிலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுகள், கடந்தவாரம் நியுயோர்க்கிலும் எதிரொலித்துள்ளது.

கொமன்வெல்த் நாளை முன்னிட்டு நியுயோர்க்கில் உள்ள பிரித்தானிய வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தில் கடந்தவாரம் வரவேற்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த வரவேற்புக்கு நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான - மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.

இந்த ஆண்டு அவுஸ்ரேலியாவுடன் இணைந்து கொமன்வெல்த் கூட்டத்துக்கு சிறிலங்காவே இணைத்தலைமை வகிக்கிறது.

இந்தநிலையில், சவீந்திர சில்வா புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பொலித கொஹன்ன கொழும்புடன் ஆலோசித்தே வரவேற்பைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுடன் கலந்தாலோசிக்காமலேயே, போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுப்பதில்லை என்ற முடிவை பிரித்தானிய நிரந்தர வதிவிடப் பிரதிநதி சேர் மார்க் லயல் கிரான்ட் எடுத்துள்ளார்.

இந்தநிலையில், கொமன்வெல்த்திலுள்ள வெள்ளைக்காரர்கள் சவீந்திர சில்வாவைக் குறிவைத்து செயற்படுவதாக உணரமுடிகிறது என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே ஐ.நா பொதுச்செயலருக்கு அமைதிகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சவீந்திர சில்வாவை, அந்தக் குழுவில் இருந்து வெளியேற்ற அதன் தலைவரான கனடாவைச் சேர்ந்த லூயிஸ் பிரெசெற் முயன்றதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த வரவேற்பு நிகழ்வில் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20120318105802

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவுடன் கலந்தாலோசிக்காமலேயே, போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுப்பதில்லை என்ற முடிவை பிரித்தானிய நிரந்தர வதிவிடப் பிரதிநதி சேர் மார்க் லயல் கிரான்ட் எடுத்துள்ளார்

இப்படியான விடயங்களில் மட்டும் எங்கன்ட ஆட்கள் கறுப்பன்,ஆசியன் என்று புலம்பத் தொடங்கிவிடிவினம்......

இது (பொதுநலவாய அமைப்புக்களால்) ஒருவித சர்வதேசத்தின் புறக்கணிப்பே. இப்படியான புறக்கணிப்புக்கள் நாளை பொருளாதார தடையில் கூட முடியலாம். அவை ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கு வழிசமைக்கும்.

எனக்கு இந்த முடிச்சு விளங்கவில்லை. யார் இந்த பிரித்தானிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சேர் மார்க் லயல் கிரான்ட்? பொதுநலவாய கூட்டத்திற்கு அவர் ஏன் அழைப்பு விடுத்தார்?

இதில் தானே 50-55 நாடுகள் இருக்கு. எத்தனை பேர் ஒருநாட்டின் ஐ.நா பிரதிநிதிகள் இதற்கு போகலாம்?

இதற்கு சவேந்திர சில்வா ஏன் போகவேண்டும்?

பாலித மீதும் குற்றச்சாட்டுக்கள் இருக்கு. ஆனால் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவுக்கு அழைப்பு விடப்பட்டுத்தானே இருக்கு.

எல்லாம் இலகையின் நாடகமா அல்லது ஏதாவது பாரதூரமான புறக்கணிப்பு இருக்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.