Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் மீது பழிசுமத்தாதீர்கள் – மன்னாரில் மாவை இறைஞ்சல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sumanthiran-mavai.jpg

ஜெனீவா விவகாரத்தினை கையிலெடுத்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமையினை இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் இணையத்தளங்களும், உள்ளுர் ஊடகங்களும் செயற்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெற்ற “கூட்டமைப்பு ஏன் ஜெனீவா செல்லவில்லை” என்ற தொனிப்பொருளிலான கருத்தூட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில மணி நேரமாக தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராசா பிரதேச சபை உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்காது நீண்ட உரையாற்றியிருக்கின்றார்.

அவர் தனது உரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா செல்லாமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் நூறு இணையத்தளங்கள் செயற்படுகின்றன. அவை தமக்கு தெரிந்த வகையில் செய்திகளை வெளியிடுகின்றன. அவற்றினை நம்பி உள்ளுர் ஊடகங்களும் செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதி வருகின்றன.

உண்மையில் ஒரு கட்சியின் தலைவருக்கு முடிவெடுக்கின்ற அதிகாரம் இருக்கின்றது. அந்த வகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜெனீவா தொடர்பிலான முடிவினை எடுத்தார். ஏனையவர்கள் தெரிவிப்பது போன்று சுமந்திரன் இந்த முடிவினை எடுக்கவில்லை. கூட்டமைப்பின் தலைவர் எடுத்த முடிவினையே சுமந்திரன் வெளியே அறிவித்தார்.

உண்மையில் சுமந்திரன் மிகத் திறமை வாய்ந்த சட்டத்தரணி. அவர் அரசியலுக்கு புதிது என்று சிலர் சொல்லலாம். ஆனால் அவர் திறமை வாய்ந்தவர். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருப்பது கூட்டமைப்பிற்கு பெரும் வரப்பிரசாதம் ஆகும் என்று தெரிவித்த மாவை சேனாதிராசா, ஜெனீவாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வதனால் ஒன்றையும் சாதித்துவிடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இராஜதந்திர அடிப்படையிலேயே கூட்டமைப்பின் தலைவர் ஜெனீவா தொடர்பிலான தீர்மானத்தை எடுத்தார். ஒரு கட்சியின் தலைவருக்கு முடிவெடுக்கின்ற அதிகாரம் இருக்கும். அதனையே அவர் செய்தார். கிரிக்கட் அணி ஒன்றை எடுத்துக் கொண்டால் அதன் தலைவரே போட்டி தொடர்பிலான முடிவுகளை எடுப்பார். அதே போன்று தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முடிவினை எடுத்தார்.

ஊடகங்கள் ஜெனீவா விவகாரத்தினை கையிலெடுத்துக்கொண்டு கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக எழுதுகின்றன. தலைமையை இல்லாமல் செய்தவன் மூலம் எதனையும் சாதித்து விடமுடியாது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தமக்குத் தெரியும் என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர மற்றும் பிரதேச சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் 25ற்கும் மேற்பட்டோர் உள்ள போதிலும் 15 பேர் மட்டுமே இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்ததாக தெரியவருகின்றது.

மாவை சேனாதிராசா உரையாற்றத் தொடங்கியதில் இருந்து நிகழ்வு முடியும் வரையில் உரையாற்றியதாகவும் எவரும் கேள்வி கேட்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றும் உறுப்பினர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

http://www.saritham.com/?p=54469

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருப்பது கூட்டமைப்பிற்கு பெரும் வரப்பிரசாதம் ஆகும் என்று தெரிவித்த மாவை சேனாதிராச

இங்க எல்லாம் கோயிலில் பிரசாதம் ஒரு கரண்டியில் சுண்டலை அள்ளி கொடுப்பார்கள்.. இது பெரிய பிரசாதம் போல கிடக்கு.. எவ்வளவு பிரசாதம் ..? என்ன பிரசாதம் சுமந்திரன் .. சமந்தன் ஆகியோர் கொடுத்தார்கள் என மாவை தெளிவு படுத்த பட வேண்டும் :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.