Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் போராட்டம் சரியானதே ஆனால் சகோதர சண்டைதான் ஈழம் அமைவதைக் கெடுத்தது - கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23-karuna-prabhakaran3-300.jpg

சென்னை: தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டைதான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, தமிழ் ஈழம் பற்றியதுதான். அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:

ஈழத்தில் நடந்த சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என் கருத்து என்றார் கருணாநிதி.

அப்போது, புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள். தந்தை செல்வா போன்றோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்தன. அதனால்தான் நாங்கள் போராடத் தொடங்கினோம்' என்று பிரபாகரன் சொல்லியிருந்தாரே?அது தவறா? என்று ஒரு நிருபர் கேட்டார்.

உடனே பதிலளித்த கருணாநிதி: "பிரபாகரன் போராட்டத்தைக் குறை கூறும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. அவர் முன்னெடுத்த போராட்டம் சரியானதே. அதை திமுகவும் ஆதரிக்காமலில்லை. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் என்று நான் சொன்னது அவர்களைப் பற்றி மட்டுமே அல்ல.

ஆனால் பிரபாகரனும் முகுந்தனும், பத்நாபாவும், ஸ்ரீசபாரத்தினமும் மோதிக் கொண்டு அதில் ரத்த ஆறு ஓடியதைத்தான் நான் மிகுந்த வேதனையோடு அப்போதும் தடுத்தேன். இப்போதும் அந்த நிலை வரக்கூடாது," என்று வேண்டுகிறேன்.

நன்றி: தட்ஸ்ரமிழ்.

தமிழ் ஈழம் பிறக்க வேண்டும், அதுதான் எனது வாழ்நாள் லட்சியம்- கருணாநிதி

23-karunanidhi300-1.jpg

சென்னை: தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் நிறைவேறிய செய்தியைத் தொடர்ந்து செய்தியாளர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்...

கேள்வி: ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியதால், இலங்கையில் உடனடியாக எந்தமாதிரியான நெருக்கடி ஏற்படும்?

கருணாநிதி: இப்போதே மிரட்டல், பயமுறுத்தல்கள் எல்லாம் இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு அங்கேயுள்ள சிங்களவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தி பத்திரிகைகளிலே வந்திருக்கின்றன. இதன்மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று நம்முடைய பிரதமருக்கு "பேக்ஸ்'' மூலமாக கேட்டுக் கொண்டு செய்தி அனுப்பியிருக்கிறேன்.

கேள்வி: ஜெனீவாவில் இந்தத் தீர்மானத்தில் இருந்த கடுமையான வார்த்தைகளை எடுத்துவிட்டு மென்மையான வார்த்தைகளை தீர்மானத்தில் சேர்த்ததாகவும் சொல்கிறார்களே? குறிப்பாக முதலில் "போர்க்குற்றங்கள்'' என்ற வார்த்தைகள் இருந்ததாகவும், பின்னர் அதை எடுத்து விட்டதாகவும் சொல்கிறார்களே?

கருணாநிதி: அது உண்மையாக இருந்தால் அதைப் பற்றிய திருத்தங்கள் வருவதற்கும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

கேள்வி: மத்திய அரசு தற்போது இந்த முடிவினை எடுக்க தி.மு.கழகம் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதே மாதிரியான அழுத்தத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் கொடுத்திருக்கலாமே?

கருணாநிதி: கொடுத்தோம். ஆனால் அந்தக் கருத்துகள் யார் யாரால் பாழ்படுத்தப்பட்டன என்பது கூட நாடறிந்த உண்மை.

கேள்வி: உலகத்தின் பார்வை ஒட்டுமொத்தமாக இதிலே திரும்பியிருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ் ஈழம் அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

கருணாநிதி: என்னைப் பொறுத்தவரையில் அது தான் குறிக்கோள். நான் அண்மையிலே என்று மாத்திரமல்ல, கடந்த காலத்திலே பெரிய பத்திரிகைகளின் நிருபர்கள் சில பேர் "உங்களுடைய நிறைவேறாத கனவு என்ன'' என்று என்னிடம் கேட்ட போது, "தமிழ் ஈழம் தான்'' என்று குறிப்பிட்டிருக்கிறேன். எனவே அந்த கனவு நிறைவேறுகிற வரை, அது உருவாகிற அளவுக்கு என்னுடைய போராட்டமும் இருக்கும்.

கேள்வி: தற்போது ஐ.நா. வில் அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிய காரணத்தால் இந்திய, இலங்கை உறவுகள் பாதிக்காதா?

கருணாநிதி: இப்போது அதைப்பற்றியெல்லாம் சொல்ல முடியாது.

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு இனி மத்திய அரசு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய வேண்டும்?

கருணாநிதி: இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு என்னென்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் யோசித்து, முடிந்தால் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுடைய துணையோடு இப்போது எப்படி இந்தத் தீர்மானத்தில் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தோமோ அதைப் போல ஒருமித்த குரலைக் கொடுத்து ஆவன செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: அமெரிக்கா கொண்டு வந்ததால் தான் இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதா?

கருணாநிதி: இந்தத் தீர்மானம் வந்ததால் வெற்றி பெற்றது.

கேள்வி: தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், இலங்கை அரசுக்கு என்னென்ன நெருக்கடிகள் ஏற்படும்? இலங்கைத் தமிழர்களுக்கு என்னென்ன பயன்கள் ஏற்படும்?

கருணாநிதி: அவர்கள் இதுவரை இலங்கைத் தமிழர்களுக்குப் புரிந்த கொடுமைகளுக்கு பரிகாரம் தேடுகின்ற நெருக்கடி ஏற்படும். ஏனென்றால் சிசுக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்களும், தமிழர்களும் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள். சவக்குழிக்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படவும், உலக நாடுகள் முன்னால் தலை குனிந்து நின்று காரண காரிய விளக்கங்கள் சொல்லவும் இலங்கை அரசு கடமைப்பட்டிருக்கிறது.

கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே தான் கொடுமைகளுக்கெல்லாம் காரணம், அவர் சர்வ தேச குற்றவாளி என்று தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே?

கருணாநிதி: இப்போது தான் பெரும்பாலான நாடுகளுடைய தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த நாடுகள் தான் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

நன்றி:தட்ஸ்ரமிழ்.

தமிழர்கள் மீது சிங்களர்கள் தாக்கப்படலாம்..பிரதமர், சோனியாவுக்கு கருணாநிதி 'பேக்ஸ்'

23-karuna-new55--300.jpg

சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளதாலும், அந்தத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளதாலும், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இதனால் இலங்கையில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.

இந்த நிலையில் இந்தியா ஆதரவு தெரிவித்ததற்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில்,

ராஜபக்சே அரசால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா ஆதரவு அளித்தமைக்கு நான் மிக மகிழ்ச்சி அடைவதுடன் தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக இந்திய அரசுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லாம் நன்றி கூறுவார்கள்.

ஐ.நா. கவுன்சில் தீர்மானத்தை அடுத்து தங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று இலங்கைத் தமிழர்களிடையே பரவலான அச்சம் நிலவுவதை இங்கு வரும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. தங்களது தூதரக வழிகள் மூலமாக இத்தகைய விரும்பத்தகாத போக்குகள் அனைத்தையும் தயவு செய்து தடுத்து நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி: தட்ஸ்ரமிழ்.

Edited by nedukkalapoovan

ஈழத்திற்காக முயற்சி செய்யுங்கள். ஒறு சிறு சிலையாவது அங்கே வைக்கப்படும்.

இப்படி சொல்லி சொல்லியெ தமிழரை பேய்க்காட்டி போட்டாய். இன்னும் மிச்சம் இருக்கிற தமிழரையும் கொன்று உனது அரசியலை நடாத்த நினக்கிறார். இனி ஈழத்தமிழன் தொப்புள் கொடி உறவை நம்பி தமிழுக்க்காக போராட மாட்டான்,

நீங்க இந்தியாவில் தனிதமிழ்நாடு காண தொடங்குங்கோ நாங்க ஆதரவு தாரம். எங்கையென்டாலும் தமிழனுக்கு ஒரு நாடு அமைத்தா சரிதானே. அது ஏன் ஈழத்தில தான் நடக்கனும் என்டு எதிர் பார்க்கிறீங்க. 30 வருசம் முயற்சித்தம் முடியள்ள. நீங்க எல்லாம் தூர இருந்து கூத்து பாத்தீங்க. நந்திக்கடலோட நடுத்தெருவில் விட்டீர்கள்.

பிறகும் நாங்களா?

நீங்க சினிமாக்காரனுக்கு பால் ஊத்தி ,மானாட மயிலாட பாருங்கோ.

நம்பி கெட்டது போதும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.