Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது – நவனீதம்பிள்ளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Navanethem_pillay_CI.jpg

இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து ஜெனீவா சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதிக்கு அநாமேதய மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொலைக்காட்சிகள், இலத்திரனியல் ஊடகங்கள், செய்தித் தாள்கள் உள்ளிட்ட பலவற்றில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தன்னார்வ தொண்டு நிறுவனக் குழுக்கள் எனவும், நாட்டுக்கு எதிரானவர்கள் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான தகவல்கள் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

சில அரசாங்க ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச விவாதங்களில் தடையின்றி பங்கேற்கும் உரிமையை இலங்கை மக்கக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

நவநீதம்பிள்ளையின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் !

இந்த அரச பயங்கரவாதிகளின் தொல்லை இன்று ஜெனிவா வரை சென்றுள்ளது. முன்பு இந்த சிறு தீவுக்குள் இருந்த இவர்களின் செயல்கள் எல்லா இடமும் தனது 'வீரச்செயல்களை' காட்டிவருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை பயங்கரவாதிகள் என்று ல்லோரும் சேர்ந்து முள்ளிவாய்காலுக்குள் கொண்டு போய் அழித்தற்கு பதிலாக இவர்களை வெளியில் எடுத்து இவர்களின் அடாவடித்தனம் மற்றும் பயங்கரவாத மிரட்டல்களை உலகறியச்செய்து பகிரங்கமான இடத்தில் தண்டிக்கணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.