Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய நாடுகளில் இலங்கைத் தூதரகங்களை மூடுகிறது அரசாங்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

newsaaaa-100x100.jpg

ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் சில இலங்கைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரபல வாராந்த பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரினை அடுத்து வெளிநாட்டு சேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை உரிய முறையில் முன்னெடுக்காத நாடுகளிலுள்ள தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் சிறிய தேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கும் வண்ணம் எதிர்காலத்தில் ஓர் தூதரகத்தை அமைக்கவுள்ளதாக உயர்மட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் மூடப்படும் தூதரகங்களுக்கு பதிலாக தென்னாபிரிக்க, இலத்தீன் அமெரிக்க மற்றும் ஆசியாவின் நட்புறவு நாடுகளில் புதிய தூதுவராலயங்களை நிறுவவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உகண்டா மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் வெகுவிரைவில் இலங்கை தூதரகங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.saritham.com/?p=55058

மகிந்தாவின் தலைமையில் சிங்களம் அழிவை நோக்கி மேள்ளமேள்ளபோய்க்கொண்டு இருக்கின்றது. வளரும் நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி புதிய உலகத்தை அமைக்க வெளிக்கிட்டு இருந்த இடம் இல்லாமல் போன தலைவர்கள் பலர். கடாபி அந்த வரிசையில் கடைசி இல்லை.

எவ்வாறாயினும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணக்கடினம் போலுள்ளது. இந்த மூன்று நாடுகளையும் துறந்தால் இன்னும் பணத்தை சேமிக்கலாம் :D.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாநாடுகளில் இருந்தும் சிறிலங்கா சிங்களதேசம் தனிமைபடுத்தபடவேண்டும் இதுவே எனது விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

உடன் அமுல்படுத்துக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.