24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
காத்தான்குடியில் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் ; கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி 3ம் திகதி வரை விளக்கமறியல்
காத்தான்குடியில் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் ; கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி 3ம் திகதி வரை விளக்கமறியல் 01 Feb, 2026 | 03:38 PM காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து, மூன்று மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (30) உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவரும், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சட்டத்தரணியாக கடமையாற்றி வருபவருமான ஒருவர், தனது பிரதேசத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த, நான்கு பெண் பிள்ளைகளை கொண்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரியான 24 வயதுடைய யுவதி ஒருவரை 2023 ஆம் ஆண்டு முதல் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த யுவதி காலை முதல் இரவு 8.30 மணி வரை, 2025 ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு வருடங்களாக கடமையாற்றி வந்துள்ளார். அவருக்கு வாரத்திற்கு 3,000 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், அலுவலகத்தில் தனியாக பணியாற்றிக் கொண்டிருந்த யுவதிக்கு, குறித்த சட்டத்தரணி மதிய உணவு பொட்டலமொன்றை வழங்கி உணவுகொள்ளுமாறு கூறியுள்ளார். அதை உணவாக எடுத்த சில நிமிடங்களில் யுவதி மயக்க நிலைக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யுவதியின் சம்மதம் இன்றி, சட்டத்தரணி அலுவலகத்திற்குள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின்னர், யுவதி இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கும் எவருக்கும் தெரிவிக்காமல் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குறித்த சட்டத்தரணி 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி யுவதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் பேசிச் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் ஒரு வாரத்திற்குள் யுவதி வாந்தி மற்றும் மயக்க நிலை காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் 12 வாரங்கள் கொண்ட, மூன்று மாத கர்ப்பிணி என உறுதிப்படுத்தியுள்ளனர். திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து, கணவர் யுவதியுடன் முரண்பட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து, யுவதி மீது பாலியல் வன்கொடுமை இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் மற்றும் பெண்கள் அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், பிரதேச செயலக சேவையில் இயங்கும் மகளிர் பிரிவினர் யுவதியை பாதுகாப்பான இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்கவைத்துள்ளனர். இதுகுறித்து அமைச்சு பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, யுவதியிடமிருந்து வாக்குமூலம் பெற பொலிசார் பாதுகாப்பு இல்லத்திற்கு சென்றபோது, ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்படாமல் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை (28) யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பொலிசார் வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சட்டத்தரணிக்கு எதிராக பலாத்கார பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டு, அடுத்த வழக்கை 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், குறித்த சட்டத்தரணி வெள்ளிக்கிழமை (30) கைது செய்யப்பட்டு, மாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். எதிராளி சார்பில் சட்டத்தரணி எம்.ஐ. இயாஸ்டீன் தலைமையில் நான்கு சட்டத்தரணிகளும், வழக்காளி சார்பில் சட்டத்தரணி றிஸ்வி தலைமையில் யோகேஸ்வரன், கமலதாசன், வேணுதாசன், நஜீபா, ரம்சீயா உள்ளிட்ட சட்டத்தரணிகளும் ஆஜராகினர். இரவு 7.30 மணி வரை நீண்ட விசாரணையின் பின்னர், நீதவான் குறித்த சட்டத்தரணியை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே, எதிராளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஐ. இயாஸ்டீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், இலங்கை சட்டத்தின் படி சம்மதம் இருந்தால் குற்றமாகாது எனவும் தெரிவித்தார். எனினும், முறைப்பாட்டாளர் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதாக கூறினார். 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் கட்டாய விளக்கமறியல் மற்றும் சிறைத்தண்டனை அவசியம் என்றும், இவ்வழக்கில் 16 வயதுக்கு மேற்பட்டவர் மூன்று மாதங்கள் கழித்து முறைப்பாடு செய்துள்ளதால் மேலதிக விசாரணைகள் அவசியம் என்பதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதால், நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/237555
-
நல்லூர் முதல் நூலகம் வரை - யாழ் மண்ணை அலங்கரிக்கும் உலகக் கிண்ணம்
நல்லூர் முதல் நூலகம் வரை - யாழ் மண்ணை அலங்கரிக்கும் உலகக் கிண்ணம் 01 February 2026 ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, இன்று (1)உலகக் கிண்ணம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுசெல்லப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் இடம்பெறும் இந்த கிண்ண சுற்றுப்பயணத்தில் இலங்கையின் பல இடங்களுக்கும் கிண்ணம் கொண்டு செல்லப்படும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உத்தியோகபூர்வ பயணத் திட்டத்தின்படி, இன்று அதிகாலை தம்புள்ளையிலிருந்து புறப்பட்ட கிண்ணம் தாங்கிய ஊர்தி, மிஹிந்தலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய நகரங்களைக் கடந்து இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். இதனையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு (கச்சேரி) முன்பாக உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம், துரையப்பா விளையாட்டு அரங்கம், யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகிய இடங்களுக்குக் கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளது. வடபகுதியின் முக்கிய விளையாட்டு மையமாகத் திகழும் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கான விஜயம், அப்பகுதி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் உலகக் கிண்ணத் தொடரினை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், இலங்கை முழுவதும் கிரிக்கெட் உணர்வை மேம்படுத்தவும் இந்த கிண்ணச் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய விஜயம் இரவு யாழ்ப்பாணப் பொது நூலகத்துடன் நிறைவடையும். முற்பகல் 07:30 - தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் ஆரம்பம் முற்பகல் 08:30 - மிஹிந்தலை முற்பகல் 10:30 - வவுனியா நண்பகல் 12:00 - கிளிநொச்சி பிற்பகல் 03:30 - யாழ்ப்பாணத்தில் வரவேற்பு பிற்பகல் 04:25 - நல்லூர் பிற்பகல் 06:20 -துரையப்பா விளையாட்டு அரங்கம் பிற்பகல் 06:40 -யாழ்ப்பாணக் கோட்டை பிற்பகல் 07:10 -யாழ்ப்பாணம் பொது நூலகம் https://hirunews.lk/tm/sports/443905/from-nallur-to-the-library-the-world-cup-adorns-the-land-of-jaffna
-
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்! ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இதுதொடர்பான சந்திப்புகளை அவர்கள் தமிழர் தாயகம் எங்கிலும் முன்னெடுத்து வருகிறார்கள். கட்சிகள்,செயற்பாட்டாளர்கள்,காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், என்று பல்வேறு தரப்புக்களையும் மாணவ பிரதிநிதிகள் சந்தித்து வருகிறார்கள். “மாணவர்களே போராட்டத்தின் கூர்முனைகள்” என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறினார். கம்யூனிசத்தின் எழுச்சிக்குப் பின் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளி வர்க்கம்தான் போராட்டத்தின் கூர்முனை என்று கருதப்பட்டு வந்த ஒரு பின்னணியில், கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, ஹெர்பர்ட் மார்க்யூஸ் மாணவர்களே போராட்டத்தின் கூர் முனை என்று கூறினார். ஆனால், தமிழர் தாயகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கும் மாணவ அமைப்பு கிடையாது. மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றி போராட்டத்தை முன்னெடுக்க தேவையான அரசியல் இயக்கங்களும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இப்படிப்பட்டதோர் வெற்றிடத்தில்தான், கடந்த 16 ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வப்போது உணர்ச்சிகரமாக எழுச்சி கொண்டு போராடியிருக்கிறார்கள். கடந்த 16ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் வீரமாகப் போராயிருக்கிறார்கள். அரசியல் கைதிகளுக்காக,நினைவு கூரும் உரிமைக்காக, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக…. என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடியிருக்கிறார்கள். “எழுக தமிழ்கள்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டம்” போன்றவற்றின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் அவ்வாறு போராட்டத்தை ஒருங்கிணைக்கும்போது கட்சிகளும் உற்சாகமாக களத்தில் இறங்குகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான பேரெழுச்சிகளைக் காண முடியவில்லை. ஒரு மக்கள் இயக்கம் இல்லாத அரசியற் சூழலில்,பல்கலைக்கழக மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாகச் செதுக்கியெடுக்கும் சக்தி எந்தத் தமிழ்த் தேசியக் கட்சியிடமாவது உண்டா ? இக்கட்டுரை எழுதப்படுகையில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் ஆகிய மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவை என்று கூறி யாருடையதோ ஒரு முகத்தைச் செதுக்கி, சிலையாக்கி, திறந்து வைத்திருக்கிறார்கள்.அதைத் தனியே எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக இங்கே எழுத வேண்டியது என்னவென்றால், அந்தத் திறப்பு விழாவில் கட்சியின் பதில் தலைவரோ பதில் செயலரோ அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான். கட்சியின் பதில் தலைவராகிய சிவஞானமும் பதில் செயலர் ஆகிய சுமந்திரனும் கட்சியின் விவகாரங்களை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் பின்னணியில், அவர்கள் இருவரையும் புறக்கணித்துவிட்டு சிலை திறக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாவை சேனாதிராஜாவின் நினைவுக் கூட்டத்தில், நினைவுப் பேருரை ஆற்றியது யார் என்றால் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகும். அண்மையில் அவர் சிவஞானத்தையும் சுமந்திரனையும் கடுமையான வார்த்தைகளால் குற்றம் சுமத்தி விமர்சித்திருந்தார். அவர் சிவஞானத்துக்கு எதிராக முன் வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியும் என்று சுமந்திரனுக்கு ஆதரவாக எழுதும் “காலை முரசு” பத்திரிகை எழுதியிருக்கிறது. அவ்வாறு சுமந்திரனையும் சிவஞானத்தையும் விமர்சித்த ஒருவரை அழைத்து மாவையின் நினைவு நாளை அனுஷ்டித்ததன் மூலம் கட்சிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் உட்பூசல் நினைவு நாட்களையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. மாவை இறந்தபோது அவருடைய இறுதி நிகழ்விலும் அந்த உட்கட்சிப் பூசல் அசிங்கமாக வெளிப்பட்டது. இப்பொழுது அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் வெளிப்படுகிறது. அதாவது மாவை இறந்து ஓராண்டு கழிந்து விட்டது. ஆனால் கட்சிக்குள் உட்பகை தொடர்ந்து புகைந்து கொண்டேயிருக்கிறது. அந்த உட்பகையை தீர்த்துக் கொள்ள கட்சியால் முடியவில்லை. இரண்டு அணிகளுக்கும் இடையே கட்சி கிழிபடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சுமந்திரன் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார். அவருடைய அணி அணி சிறீதரனை பெருமளவுக்குச் சுத்திவளைத்து விட்டது. ஆனாலும் கட்சியின் தலைமைத்துவத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர இன்றுவரை சுமந்திரனால முடியவில்லை. உள்ளதில் பெரிய கட்சி இவ்வாறு உட்பகைக்குள் சிக்கி தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறது. நினைவு நாட்களை அனுஷ்டிப்பதில் மட்டும் அல்ல, அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும்,இந்தியாவைக் கையாளும் விடையத்திலும் இந்த உட்கட்சி பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்டதோர் பின்னணியில்,சுமந்திரன் அணி கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையிலும் உட்கட்சிப் பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துமா தெரியவில்லை. இவ்வாறு உள்ளதில் பெரிய கட்சி,தானே தனக்குள் மோதி, தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கட்சிகளை தமது கோரிக்கைகளை நோக்கித் திரட்டுவார்களா? தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது சாராம்சத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல. அது தமிழ்த் தேசிய வியூகத்தின் ஒரு பகுதி மட்டும்தான். இதயமான பகுதி எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான். தமிழ் மக்களை கட்சி பேதம் கடந்து ஒரு திரளாகத் திரட்டினாலே போதும்.அதுவே பலம். அவ்வாறு திரட்டப்பட்ட மக்கள் தென்னிலங்கைக் கட்சிகள் நோக்கிப் போக மாட்டார்கள். தேசமாகத் திரட்டப்படாத மக்களே தென்னிலங்கைக் கட்சிகளால் கவரப்படுகிறார்கள். ஆனால் தமிழரசுக் கட்சி தன்னிடம் உள்ள பலமான கீழ்மட்டக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு,தானே பெரிய கட்சி, தானே தலைமை தாங்கும் கட்சி என்று கூறிக் கொண்டாலும்,தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தோல்வி அடைந்து விட்டது. அக்கட்சி மட்டுமல்ல எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் தோல்வியடைந்து விட்டன; தங்களை கட்சிகளாகப் பலப்படுத்திக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டன. இவ்வாறு தங்களைப் பலமான கட்சிகளாகத் திரட்டிக் கொள்ள முடியாதவர்கள் எப்படித் தமிழ் மக்களைத் திரட்டுவார்கள்? இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியைப் போன்ற ஒரு பேரெழுச்சியைக் காட்ட தமிழ் மக்களால் கடந்த சில ஆண்டுகளாக முடியவில்லை என்பதுதான் துர்ப்பாக்கியமான ஒர் அரசியல் யதார்த்தமாகும். தையிட்டியில் நடக்கும் கவன ஈர்ப்பு போராட்டங்களைத்தவிர பேரெழுச்சிகள் என்று சொல்லத்தக்க எழுச்சிகளை தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகக் காண முடியவில்லை. இந்நிலையில்,சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, அதுபோன்ற அரச எதிர்ப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாவற்றின் விடயத்திலும், தமிழ்த் தேசிய அரசியலானது கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக ரியாக்ரிவ் ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத்தான் காணப்படுகிறது. ப்ரோ ஆக்ட்டிவாக-செயல் முனைப்புடையதாக இல்லை. அரசாங்கத்தின் நிலப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது ஐநா கூட்டத் தொடர்களை முன்னிட்டு தமிழ் மக்கள் அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுவதில்லை. இது முதலாவது பலவீனம்.அவை தொடர்ச்சியானவை அல்ல என்பது இரண்டாவது பலவீனம்.மூன்றாவது பலவீனம், இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது அவை பதில் வினையாற்றும் அரசியல் நடவடிக்கைகள்தான்.அதாவது தமிழ்த் தேசிய அரசியலை செயல் முனைப்போடு முன்னெடுக்கின்ற புரோஆக்டிவ் ஆன நடவடிக்கைகள் அல்ல. இப்பொழுது கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டமும் அத்தகையது தான்.சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதும் அத்தகையதுதான். இவை போன்ற ரியாக்ட்டிவ் நடவடிக்கைகளின்மூலம் தமிழ் மக்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றுவதில் எவ்வளவு தூரம் வெற்றிபெற முடிந்திருக்கிறது என்ற கேள்விக்கு விடை முக்கியம். தமிழ்த் தேசிய அரசியலானது தொடர்ந்தும் கட்சி அரசியலாக, ரியாக்ரிவ் ஆனதாக காணப்படுகிறது.உள்ளதில் பெரிய கட்சி தானே தன்னைத் தோற்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில், அதை ப்ரோஆக்டிவ் ஆக முன்னெடுக்கும் அரசியல் இயக்கம் எதுவும் அரங்கில் இல்லாத வெற்றிடத்தில்,பல்கலைக்கழக மாணவர்களின் தலையில் அதிகம் பொறுப்பு சுமத்தப்படும் ஓர் அரசியற் சூழலில்,2009க்குப் பின்னரான 16 ஆவது சுதந்திர தினம் வருகிறது. https://athavannews.com/2026/1462539
-
தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்
தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம் adminFebruary 1, 2026 யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் முன்னெடுக்கப்பட்டது. போராட்ட களத்தில் பெருமளவான காவல்துறையினா் குவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/228132/
-
யாழில். மாவைக்கு சிலை திறப்பு
வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை adminFebruary 1, 2026 மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட அன்னாரது திருவுருவச் சிலை வடமாகாண ஆளுநரால் நேற்றைய தினம் சனிக்கிழமை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நினைவுப் பேருரை மற்றும் மேடை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்: மாவை.சேனாதிராசாவை எனக்கு எனது 10 வயதிலிருந்தே தெரியும். எனது தந்தையாரைச் சந்திப்பதற்காக அடிக்கடி எமது வீட்டுக்கு வருவார். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எங்களைப் போன்ற இளையோருக்கு அரசியல் வகுப்புகளை நடாத்திய ஆசானாகவும் திகழ்ந்தார். நான் பிரதேச செயலாளராகவும், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றிய காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். அதிகாரத்தில் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்தார். அவரை எந்த நேரத்திலும், எவரும் இலகுவாகச் சந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது. பதவி ஆசை இல்லாதவர். சலுகைகளுக்கு ஒருபோதும் விலைபோகாதவர். தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ எந்தவொரு சலுகையையும் எதிர்பார்த்ததில்லை. இன்றைய அரசியல் சூழலில் மிக வித்தியாசமான ஒரு மனிதராகவே வாழ்ந்து மறைந்துள்ளார். ஒரு அப்பாவியான மனிதர். அவரிடம் உதவி கேட்டு வரும் யாருக்கும் ‘மாட்டேன்’ என்று சொல்லும் துணிவு அவருக்கு இருந்ததில்லை. அவரிடமிருந்து எப்போதும் எதிர்மறையான பதில்கள் வராது. அந்தளவுக்கு மென்மையான உள்ளம் கொண்டவர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தனது இளமைக் காலத்தைத் தியாகம் செய்து, பல வருடங்கள் சிறையில் வாடியவர். இத்தகையதொரு சிறந்த தலைவரை இழந்தமை எமது சமூகத்துக்குப் பேரிழப்பாகும், என தனது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாவை.சோ.சேனாதிராவின் முதலாமாண்டு நினைவு மலரும், பேராசிரியர் பஞ்.இராமலிங்கம் எழுதிய ஈழ அண்ணல் மாவை.சோ.சேனாதிராசா என்னும் நூலுமாக இரண்டு நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழக முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/228116/
-
தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு
தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு adminFebruary 1, 2026 இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், உள்ளூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அடையாளங்களை மறைத்து தொழிலில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு நயினாதீவு – நெடுந்தீவு இடையிலான பகுதியில் இந்திய இழுவைப்படகு ஒன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது. எல்லை தாண்டி வர வேண்டாம் என நயினாதீவு மீனவர்கள் எச்சரித்தபோது, இந்திய மீனவர்கள் அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர், உடனடியாக இந்திய துணைத்தூதரக அதிகாரியை “வீடியோ கோல்” (Video Call) ஊடாகத் தொடர்பு கொண்டு, கடலில் நடக்கும் அத்துமீறல்களை நேரலையாகக் காண்பித்துள்ளார். தூதரக அதிகாரி படகின் இலக்கத்தைக் கேட்டபோது, இந்திய மீனவர்கள் தமது படகின் இலக்கத்தை வேண்டுமென்றே அழித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தாக்குதல் மற்றும் அத்துமீறல் தொடர்பான காணொளி ஆதாரங்கள் முறைப்பாடாக இந்திய துணைத்தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக அரங்கேறும் இவ்வாறான அத்துமீறல்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வடபகுதி மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.”வீடியோ கோல்” மூலம் பெறப்பட்ட நேரடி ஆதாரங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில், இந்திய துணைத்தூதரகம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. படகின் இலக்கம் அழிக்கப்பட்டிருந்தாலும், அந்த நேரத்தில் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளின் பட்டியலை தமிழக கடலோர அதிகாரிகளிடமிருந்து பெற்று, சம்பந்தப்பட்ட படகை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்திய எல்லைகளைத் தாண்டி அத்துமீறிச் செல்லும் மீனவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துணைத்தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நயினாதீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் அத்துமீறும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த கடற்படையினர் அதிவேகப் படகுகள் மூலம் ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர். அத்துமீறி நுழையும் படகுகளைக் கண்டறியும்போது அவற்றை விரட்டியடிக்க அல்லது கைது செய்யத் தேவையான உத்தரவுகள் கடற்படைத் தலைமையகத்தால் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் மீனவர்கள் இரவு நேரங்களில் தொழிலில் ஈடுபடும்போது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவும், அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அறிவிக்குமாறும் கடற்படை அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் ஒன்றிணைந்து விரைவில் மாபெரும் கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன. https://globaltamilnews.net/2026/228114/
-
உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு!
உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு! adminFebruary 1, 2026 தங்கம் மற்றும் ஆபரண வணிகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ‘Gold Street’-ஐ டுபாய் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய தங்க வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் துபாய், இந்த புதிய முயற்சியின் மூலம் தங்கம்–ஆபரணத் துறையில் தனது முன்னணித் தன்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ‘Gold Street’-இல் தங்கம், வைரம் மற்றும் உயர்தர ஆபரணங்களுக்கான சிறப்பு வணிக வளாகங்கள், பாரம்பரியமும் நவீனமும் இணையும் வடிவமைப்புகள், சர்வதேச வணிகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வசதிகள், தங்க வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் தரநிலைகளை வலுப்படுத்தும் அமைப்புகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உலக தங்க சந்தையில் டுபாயின் பங்கை மேலும் விரிவுபடுத்தும் இந்த முயற்சி, தங்கம்–ஆபரணத் துறையில் புதிய முதலீடுகள், சர்வதேச வர்த்தக வாய்ப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/228133/
-
திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
முல்லைத்தீவில் பதிவான நிலநடுக்கத்தின் நேரடிக் காட்சி. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1430498755323451 👈
- Today
-
கருத்து படங்கள்
- திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்! திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1462483- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியும் நாங்கள், பேரம்பேசும் சக்தியும் நாங்களே என்று தெனாவெட்டாக எழுபத்தாறு ஆண்டுகள் வீணானதே. அதுதான் தென்னிலங்கை கட்சிகள் தமிழரிடம் காட்சிகள் அரங்கேற்ற காரணம். மக்களை பொன்சேகாவிற்கு வாக்களியுங்கள், மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்று வழி காட்டியவர்களும் இவர்களே. அதன்மூலம் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முடிந்ததா இவர்களால்? சும்மா மக்களை குற்றம் சொல்வது இவர்களின் வழமை. இவர்களும் தவறானவர்களை தெரிந்தெடுக்க மக்களை தூண்டியிருக்கிறார்களல்லவா? இந்த முறை மட்டுமே மக்கள் இவர்களின் தெரிவுக்கு செவிசாய்க்கவில்லை, மற்றைய தெரிவுகளுக்கு இவர்களும் பொறுப்பே. இவற்றின்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னை தெரிந்தெடுத்த மக்களுக்கு இவர் சாதித்தது என்ன? ஒன்றாக இருந்த கட்சியை சிதைத்ததை தவிர. இருந்த இடத்திலிருந்து, இன்று தையிட்டிவரை முன்னேறியிருக்கிறது இவரின் சட்டத்துறை நிபுணத்துவம் சாதித்தது என்ன?- சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள்
செரெண்டிபை அதிரவைத்தது சென் மேரிஸ்; மீண்டும் நியூ ஸ்டார் ஹீரோவானார் பஸால் 01 Feb, 2026 | 07:51 AM (நெவில் அன்தனி) கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற மாவனெல்லை செரெண்டிப் கழகத்திற்கு எதிரான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுப்பர் 8 போட்டியில் யாழ். நாவாந்துறை சென் மேரிஸ் கழகம் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது. இரண்டு அணிகளும் எதிர்த்தாடுவதிலும் தடுத்தாடுவதிலும் மிகத் திறமையாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக சென். மேரிஸ் கழக வீரர்கள் முந்தைய போட்டிகளிலும் பார்க்க இந்தப் போட்டியில் சிறந்த வியூகங்களுடன் விளையாடினர். அதுவே அவர்களது வெற்றியில் பிரதான பங்காற்றியது. இடைவேளைவரை இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இடைவேளைக்குப் பின்னர் 50ஆவது நிமிடத்தில் சென். மேரிஸ் பின்களத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி ஃப்ரிம்ப்பொங் யாவ் கோல் ஒன்றைப் போட்டு செரெண்டிபை முன்னிலையில் இட்டார். ஆனால், சென் மேரிஸ் வீரர்கள் திறமையாக விளையாடி அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ஜோன் லவானி மூலம் கோல் நிலையை சமப்படுத்தினர். அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. போட்டியின் 72ஆவது நிமிடத்தில் வலதுபுற முன்கள மாற்று வீரர் எம். மேரிசன் மிகவும் சாமர்த்தியமாக பந்தை நகர்த்திச் சென்று எம். பிரேம்குமாருக்கு பரிமாறினார். எம். பிரேம்குமார் மிகவும் பலமாக உதைத்து கோலாக்கி சென். மேரிஸ் கழகத்தை வெற்றிபெறச் செய்தார். பஸால் மீண்டும் ஹீரோவானார், மஞ்சள் அட்டைக்கும் இலக்கானார் நியூ ஸ்டார் கழகத்திற்கும் சொலிட் கழகத்திற்கும் இடையில் இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுப்பர் 8 போட்டியில் சொலிட் கழகத்தின் கடும் சவாலுக்கு மத்தியில் எம்.என்.எம். பஸால் உபாதையீடு நேரத்தில் கோல் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை வெற்றி அடையச் செய்து ஹீரோவானார். ஆனால், வெற்றிக்களிப்பில் ஜேர்சியைக் கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் முதலாவது பகுதியில் கோல் எதுவும் போடப்படவில்லை. இடைவேளை முடிந்த பின்னர் 48ஆவது நிமிடத்தில் மொஹமத் ஷஹிர் கோல் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை முன்னிலையில் இட்டார். 15 நிமிடங்கள் கழித்து சொலிட் கழகம் சார்பாக ஹென்றி சிபுயேஸ் கோல் நிலையை சமப்படுத்தினார். அதன் பின்னர் போட்டியில் சூடு பிடிக்க இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. உபாதையீடு நேரத்தின்போது பஸால் அருமையான கோல் ஒன்றைப் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை வெற்றி அடையச் செய்தார். https://www.virakesari.lk/article/237503- ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி!
ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி! Feb 1, 2026 - 09:26 AM நாட்டின் முன்னணி பொருளாதார மத்திய நிலையங்கள் ஐந்தினை நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து நீக்கி, தனியானதொரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகப் பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கு அறிவித்துள்ளனர். நேற்று (31) பிற்பகல் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, 7 பணிப்பாளர்களை நியமித்து, தற்போது முகாமைத்துவ நிதியத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் நாட்டின் ஐந்து பொருளாதார மத்திய நிலையங்களை இந்த நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து வர்த்தகர்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விடயத்திற்குப் பொறுப்பான பிரதி அமைச்சர் சுனில் பியன்வில, அரச அதிகாரிகள், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவ நிதியத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர். இதன்போது, அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வர்த்தகச் சமூகத்தினர் அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கையில், இந்த வர்த்தக நடவடிக்கைகள் 35 வருடங்களுக்கும் மேலாக வர்த்தகர்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்பட்ட ஒரு நிறுவனம் என்று கூறினர். அதேபோன்று, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென அமைச்சருக்குத் தேவையான குழுக்களை நியமித்துத் தமது வர்த்தக நிலையங்களை நிர்வகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். வர்த்தகச் சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, புதிய நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகித்து, மக்களுக்கு மிக நியாயமான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே என்று குறிப்பிட்டார். அதற்கமைய தம்புள்ளை, நுவரெலியா, தம்புத்தேகம, கெப்பெட்டிபொல, நாரஹேன்பிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை இந்தப் புதிய நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்து, அவற்றின் மூலம் கிடைக்கும் மாதாந்த வாடகை மற்றும் நிர்வாகப் பணம் அனைத்தும் அடுத்த மாதம் முதல் இந்த நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பறிக்கப்படாது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அமைச்சரின் இந்தக் கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த வர்த்தகச் சமூகம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எவ்வித ஆராய்வும் இன்றி புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, தாம் நடத்தி வந்த வர்த்தகத்தை ஒப்படைக்க முடியாது என்றும், தற்போது மிகவும் பலமான முகாமைத்துவ நிதியத்தின் ஊடாக 30 வருடங்களுக்கும் மேலாகப் பொருளாதார மத்திய நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக வர்த்தக சங்கங்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய வர்த்தகச் சமூகத்தினர், அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயரை மிகவும் சூட்சுமமான முறையில் மாற்றி, புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தினர். இதற்காக எவ்வித அமைச்சரவை அனுமதியும் பெறப்படவில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் குற்றம் சாட்டினர். அதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் 29 வருட காலப்பகுதியில் அரசாங்கத்திடம் இருந்து எவ்வித பணத்தையும் பெற்றுக்கொள்ளாமல் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டு, தற்போதும் முகாமைத்துவ நிதியத்தில் 25 கோடி ரூபா பணத்தைச் சேமித்துள்ளதாகவும் அவர்கள் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினர். வர்த்தகச் சமூகம் விவசாய மக்களுக்கு வட்டியில்லாக் கடன், விதை உள்ளிட்ட மரக்கறிச் செய்கைக்கான செலவுகளை மேற்கொண்டு இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தைப் பராமரித்து வருவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்விதத்திலும் தெரியாத நிறுவனமொன்றுக்குத் தமது உரிமையை வழங்கத் தயாரில்லை என்றும் வர்த்தகச் சமூகம் அமைச்சரிடம் தெரிவித்தது. இதற்கு அமைச்சரும் பதில் வழங்க முற்பட்டபோது, வர்த்தகர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்புள்ளைக்கு வந்து, தேர்தல் வாக்குறுதியாக 30 வருட குத்தகை ஒப்பந்தத்தைப் பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்களுக்கு வழங்குவதாகக் கூறியதையும் வர்த்தகர்கள் அமைச்சரிடம் நினைவுகூர்ந்தனர். எனினும், அதற்கு எவ்வித பதிலையும் வழங்க அமைச்சர் இதன்போது முற்படவில்லை. எவ்வாறாயினும், அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனம் மற்றும் வர்த்தகர்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ள வர்த்தகப் பெயர் ஆகியவற்றுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிறுவனத்தின் பெயர் பின்னர் மாற்றப்பட்டதாகவும், அதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். எப்படியிருப்பினும், வர்த்தகச் சமூகத்திடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக, இது குறித்துத் தொடர்ந்தும் பரிசீலித்து, நிறுவனம் மற்றும் வர்த்தகச் சமூகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்துக் கலந்துரையாடத் தான் எதிர்காலத்தில் திகதி ஒன்றை வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cml37lycs04owo29nbuyyy2m5- கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு 01 Feb, 2026 | 09:36 AM ஆர்.ராம் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காலை பத்து மணிக்கு நெடுங்கே பஸ்நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் ஒன்றுகூடவுள்ளதோடு அங்கிருந்து பேரணியாக வருகை தந்து வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவுள்ளதோடு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது. இந்தப்போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீ ரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்களும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2011ஆம் ஆண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அப்போது வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களை அடுத்து கிடைப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது குறித்த திட்டம் மீள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 23,500மில்லியன் ரூபா செலவில் மீண்டும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் மணலாறு பிரதேசம் வெலிஓயாவாக மாற்றப்பட்டிருக்கின்றநிலையி;ல், அங்குள்ள குடியேற்ற பெரும்பான்மை மக்களின் நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் தமிழ் மக்களின் எல்லைக்கிராமங்கள் கையகப்படுத்தப்படும் ஆபத்துக்கள் காணப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்வாதரத்தினை பூர்த்தி செய்யும் வயல்நிலைங்களும் பறிபோகும் ஆபத்துக்கள் காணப்படுவதாக கரிசனைகள் வெளிப்டடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த விடயத்தினை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதை மக்கள் பிரதிநிதிகளும், சிலில் அமைப்புக்களும் ஆணித்தனமாக வலியுறுத்தும் முகமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237510- இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி!
இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி! Jan 31, 2026 - 06:57 PM டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் இரண்டு கொள்கலன் நிவாரணப் பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கியுள்ளனர். இலங்கை மக்களுடன் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள், தித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, இரண்டு 20 அடி கொள்கலன் அளவிற்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், கணிசமான நிதி உதவியையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நிவாரண உதவிகள், மீள்குடியேற்றப்பட்ட இலங்கை சமூகத்தின் பிரதிநிதிகளால் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாக கையளிக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் யாவும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படஉள்ளன. பொருள் உதவிகளுக்கு மேலதிகமாக, மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்களாக முன்வந்து, ஒருங்கிணைந்த முயற்சிகள் வாயிலாக இந்திய ரூபாய் 12,33,604 (பன்னிரண்டு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து அறுநூற்று நான்கு) நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இது இலங்கை ரூபாய் ஏறத்தாழ 42,50,000க்கு (நாற்பத்து இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்) சமமானதாகும். நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டபோது, துணைத் தூதரகத்தில் பெருமளவிலான இலங்கை சமூகப் பிரதிநிதிகள் உடனிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில், தங்களின் நிவாரண உதவிகளை இலங்கைக்கு ஒருங்கிணைத்து அனுப்புவதற்கு எடுத்த முயற்சிகளுக்காக துணைத் தூதரகத்திற்கு அவர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்த கடினமான காலகட்டத்தில் வெள்ளச் சூழ்நிலையைச் சமாளிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகளுக்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்த உதவிகள், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் சென்றடையும் என்பதில் இலங்கை அரசாங்கத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர். மேலும் 40,000 மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள் முகாம்களுக்கு வெளியே பொலிஸில் பதிவு செய்துகொண்டு வாழ்கின்றனர். இடம் பெயர்வதால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், இந்த சமூகங்கள் இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூட்டாக நிவாரண உதவிகளைத் திரட்டிய செயலானது, அனைவரின் மனதினை நெகிழச் செய்துள்ளது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cml2cjlrq04ojo29nj8dugjyv- துடுப்பாடும் ஆனந்தி -இளங்கோ
இது உண்மைக்கதையா?- நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை!
நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை! Published By: Digital Desk 1 01 Feb, 2026 | 08:58 AM (நமது நிருபர்) வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பிலான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை இரண்டு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படுவதுடன், அதன் பின்னர் உரிய தகவல்களை உள்ளடக்கிய பெயர் பட்டியல் காட்சிப்படுத்தல், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அந்த அறிவித்தல் வெளியாகி 28 நாட்களுக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு திருத்தத்தின் போது தகைமைகளைப் பூர்த்தி செய்திருந்தும் ஈ.ஆர்.படிவத்தில் பெயரை உள்ளடக்க முடியாமல் போன நபர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் உரிமைகோரல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு பெயர் பட்டியலுக்குத் தகுதியற்ற ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அது குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு இந்தக் காலப்பகுதியில் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237504- 'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும்
'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய பிரதமர் மோதி 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'எப்ஸ்டீன் கோப்புகள்' (Epstein Files) தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் பிரதமர் மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என்று வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார். அமெரிக்க பாலியல் குற்றவாளியும் மனித கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் பிரதமர் மோதியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் சனிக்கிழமை (ஜனவரி 31) குற்றம் சாட்டியது. காங்கிரஸ் தலைவர் பவன் கேரா சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல், "இதுவொரு தேசிய அவமானம். பிரதமர் மோதி தாமாக முன்வந்து எங்களது மூன்று கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்" என்று பதிவிட்டார். இருப்பினும், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது, ஜூலை 2017-இல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்ரேல் பயணத்தைத் தவிர, "மின்னஞ்சலின் மீதமுள்ள தகவல்கள் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் வெற்றுப் பிதற்றல்களைத் தவிர வேறொன்றுமில்லை" என்று கூறியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுபவற்றில் இருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி பற்றிய அறிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். அதில் பிரதமர் மற்றும் அவரது இஸ்ரேல் பயணம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஜூலை 2017-இல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்ரேல் பயணத்தைத் தவிர, மின்னஞ்சலின் பிற தகவல்கள் தண்டனை பெற்ற குற்றவாளியின் பிதற்றல்களைத் தவிர வேறொன்றுமில்லை, அவற்றை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய கோப்புகள் வெளியிடப்பட்டதை அடுத்து, பிரதமர் மோதியிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. சனிக்கிழமை, காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "நரேந்திர மோதியின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தொடர் பாலியல் வன்கொடுமை குற்றவாளி, சிறார் பாலியல் வன்கொடுமையாளர் மற்றும் மனிதக் கடத்தல்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், ஜூலை 9, 2017 அன்று ஒரு மின்னஞ்சலில் அதை எழுதியுள்ளார்..." என்று கூறியது. "இந்தியப் பிரதமர் மோதி ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, சில வாரங்களுக்கு முன்பு அவர் சந்தித்த அமெரிக்க அதிபரின் நலனுக்காக இஸ்ரேலில் ஆடிப் பாடினார். அதற்கு பலன் அளித்தது." Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது "ஏழு நாட்களுக்குள் வெளியேறுங்கள்" - மாஞ்சோலையில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து மக்கள் கூறுவது என்ன? பிறப்புறுப்பை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணியால் "நத்தைக் காய்ச்சல்" - மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? 'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும் ஐக்கிய அரபு அமீரகம், சௌதியின் இந்த முடிவு இரானை அமெரிக்கா தாக்காமல் தடுக்குமா? End of அதிகம் படிக்கப்பட்டது "'மோதி என்னிடம் ஆலோசனை பெற்று இஸ்ரேலுக்குச் சென்று அமெரிக்க அதிபரின் நலனுக்காக ஆடிப் பாடினார். அது பலன் அளித்தது என்றும் எப்ஸ்டீன் தெளிவாகக் கூறியுள்ளார்'." என காங்கிரஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளது. "நினைவில் கொள்ளுங்கள். இந்திய பிரதமர் மோதி ஜூலை 4 முதல் 6, 2017 வரை இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு எப்ஸ்டீன் இந்த மின்னஞ்சலை எழுதியுள்ளார். இஸ்ரேல் பயணத்திற்கு முன்னதாகவே, ஜூன் 25-26, 2017-இல் மோதி அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்தார். ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மின்னஞ்சலில் உள்ள தொடர்புகளை நாம் இணைத்தால், மோதி ஜூன் 2017-இல் அமெரிக்கா சென்று அங்கு எப்ஸ்டீனிடம் ஆலோசனை கேட்டார் என்பது தெளிவாகிறது." "ஒரு வாரம் கழித்து (ஜூலை 4-6, 2017), மோதி இஸ்ரேலுக்கு வந்து, அறிவுறுத்தப்பட்டபடி அங்கு ஆடிப் பாடினார், காரியமும் முடிந்தது. பிரதமர் மோதிக்கு ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ஆழமான மற்றும் நீண்டகால உறவு இருப்பது இப்போது தெளிவாகிறது, இது இந்தியாவிற்கு அவமானகரமானது. இது நாட்டின் கண்ணியம் மற்றும் சர்வதேச அளவிலான நற்பெயர் தொடர்பான விஷயம், இதற்கு பிரதமர் மோதி பதிலளிக்க வேண்டும்." மூன்று கேள்விகளை பட்டியலிட்டுள்ள காங்கிரஸ், "நரேந்திர மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன வகையான ஆலோசனைகளைப் பெற்றார்? அமெரிக்க அதிபர் டிரம்ப் எவ்வாறு பயன் பெற மோதி இஸ்ரேலில் ஆடினார்? 'இது பலன் அளித்தது' என்று எப்ஸ்டீன் எழுதியுள்ளார்... இதன் பொருள் என்ன?" "நரேந்திர மோதி ஜி, நாடு பதில்களைக் கோருகிறது. தொடர் பாலியல் வன்கொடுமை குற்றவாளி எப்ஸ்டீனுடன் உங்களுக்கு என்ன உறவு?" என பதிவில் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான புதிய கோப்புகள் வெளியீடு பட மூலாதாரம்,US Department of Justice படக்குறிப்பு,பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2019 இல் சிறையில் இறந்தார். தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான புதிய கோப்புகளை அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ளது.30 லட்சம் பக்கங்கள், 1,80,000 புகைப்படங்கள் மற்றும் 2,000 வீடியோக்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) பகிரங்கமாக வெளியிடப்பட்டன. எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து பதிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற சட்டப்பூர்வ காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தவறவிட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு, கணிசமான எண்ணிக்கையிலான கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கோப்புகளில் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சிறைவாசம் பற்றிய தகவல்கள், உளவியல் அறிக்கை மற்றும் அவர் சிறையில் இருந்த போது ஏற்பட்ட மரணம் குறித்த விவரங்கள் உள்ளன. இது தவிர, எப்ஸ்டீனுக்கும் உயர்மட்ட பிரமுகர்களுக்கும் இடையிலான மின்னஞ்சல்களும் இதில் அடங்கும். பல மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலானவை மற்றும் எப்ஸ்டீனின் சட்டச் சிக்கல்களுக்கு மத்தியில் அவர்களுக்கு இடையே இருந்த உறவை அவை வெளிப்படுத்துகின்றன. புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளில் அமெரிக்க அதிபர் பற்றி நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப் எப்ஸ்டீனுக்கு நண்பராக இருந்தார். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த உறவு கசந்துவிட்டதாக டிரம்ப் கூறுகிறார். எப்ஸ்டீனின் பாலியல் குற்றங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் மறுத்துள்ளார். இந்த ஆவணங்களில் எப்ஸ்டீனுக்கும் உலகின் முதன்மையான செல்வந்தர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க்கிற்கும் இடையிலான மின்னஞ்சல் உரையாடல்களும் அடங்கும். இந்த வழக்கில் மஸ்க் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. எப்ஸ்டீன் தன்னை அவரது தீவிற்கு அழைத்ததாகவும், ஆனால் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் அவர் முன்னதாகவே கூறியிருந்தார். இருப்பினும், எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியாவது இத்துடன் முடிவடையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. "இது மிகவும் விரிவான ஆவண அடையாளம் காணல் மற்றும் மறுஆய்வு செயல்முறையின் முடிவு, அமெரிக்க நீதித் துறையைப் பொறுத்தவரை அவர்களது பணி முடிந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது" என்று துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் கூறினார். இருப்பினும், சரியான காரணமின்றி சுமார் 25 லட்சம் வரையிலான ஏராளமான ஆவணங்களை நீதித் துறை தடுத்து வைத்துள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd0yx102mg8o- அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"!
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"! Jan 31, 2026 - 10:29 PM 1996 தொடக்கம் 2009 வரையான காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்றையதினம் யாழ். சிவகுரு ஆதீனத்தில் "நீதிக்கான சாட்சி" என்ற நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதே போன்ற ஒரு நாளில் (1996.01.31) கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதியின் 31வது ஆண்டை நினைவுகூரும் முகமாக இந்த நூதன போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது, அவர்களது சிறைவாச ஆண்டுகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சி சித்தரிக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கை மெழுகுவர்த்தி போல தேய்வடைந்து செய்கின்றது என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டது. இதில் அரசியல் கைதிகளின் உறவுகள் வேலன் சுவாமிகள், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், சட்டத்தரணிகள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், தமிழ் தேசியவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cml2k445m04ooo29ng9ox5cpd- பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்
- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அறிவுபசியில் கேட்கிறேன். ஆதாரத்தை தந்துவிடுங்கள்.- Yesterday
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிருபனின் கணக்கெடுப்பு முடிஞ்சுதா. இன்னும் ஒரு கிழமைதான் இருக்கு. இன்னும் எத்தினைபேர் இணைவினம்.- பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்
தமிழ் பகுதிகளில் அமோக அறுவடை.- பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்
நீங்கள் இருவரும் சொன்னது போல இன்னொரு தேர்தல் நடந்தால் சிங்கள பகுதிகளில் தான் ஜேவிபி இதே மாதிரி வெற்றி அடைய முடியாது.- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யதார்த்ததிற்கும் எதிர்பார்ப்பிற்குமிடையே இடைவெளி இருக்கும் போது, யதார்த்தத்திற்கு புறம்பான மாய மந்திரத்தால் மாங்காய் விழுத்துவோம் என வாக்குகள் வாங்கி அரசியல்வாதிகளாகி அனுகூலம் பெறமக்களை ஏமாற்றி வருடக்கணக்கில் அரசியல்வாதிகளாக வலம் வரலாம், ஆனால் உண்மையினை கூறினால் அதற்கான எதிர்வினை? கடந்தகால போரும், வெற்றியும் பேசப்படும் அளவிற்கு கூட எதிர்காலம் பற்றிய சிந்தனை தேடல் இல்லாமல் இருக்கின்றோம். இந்த இரண்டுக்கும் இடையே உள்ள யதார்த்த இடைவெளியினை கடக்க முடியாமல் இருக்கின்றோம். - திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.