Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. எடப்பாடி மீது எனக்கு இந்த நம்பிக்கை இல்லை. எலக்சனில் கொஞ்சம் பிஜேபி கை ஓங்கினாலும் அடுத்த நித்தீஸ்குமார், உத்தவ் தாக்ரே இவர்தான். எனக்கு இப்போ தமிழ் நாட்டில் வோட் இருந்தால் மூக்கை பிடித்து கொண்டு திமுகவுக்கே போடுவேன். ரிஸ்க் எடுப்பதாயின் விஜை. விஜையை விட எடப்பாடி அதிக ரிஸ்க். கூடவே அவர் ஆட்சியில் ஆட்கள்தான் மாறுவார்கள். ஆட்சி முறை திமுக 2.0 தான். எனவே விஜை சொல்வது போல் போட்டி திமுக vs தவெக என்பதே options. ஆனால் மக்கள் இப்படி சிந்திகிறார்களா? தெரியவில்லை.
  3. 😂 வல்லரசு னு பீதிகிட்டு இருந்த அமெரிக்கா வெ அளறிட்டு இருக்கான் 🤣 உகாண்டா போண்டா ஆகா போகிறது😂🤣
  4. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  5. Today
  6. சீமான் தனது தேர்தல் வியாபாரத்துக்கு தேர்ந்தெடுத்தது ஈழப்போராட்டத்தை. அதனால்தான் நீங்கள் சொல்லும் ‘வக்கிரம்’ என்னுள் இருக்கிறதோ தெரியவில்லை. 😌
  7. கோசான்ஜியின் கருத்துதான் எனதும். அவர் நான் பேச நினைத்ததெல்லாம் தான் பேசிவிட்டார். நன்றி கோசான்ஜி! ரசோதரன், “ஒரு நல்லவர் ஆட்சிக்கு வர வேண்டும்” இதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? ஆனால் கேள்வி என்னவென்றால், அந்த நல்லவர் யார்? எங்கே இருக்கிறார்? நல்லவர், இல்லாவிட்டால் ஓரளவாவது நல்லவர் என்று தேடினாலும் கிடைக்குமா? நல்லவர்களைத்தான் 67இல் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களே. அன்றிலிருந்து அண்ணனின் தம்பிகள் காட்டில்தானே மழை. நீங்கள், “நல்லவர்கள்” என்று சொல்லும் போது எம்ஜிஆரின் படப் பாடல்வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது, “ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம் மனிதன் எங்கே காணவில்லை தேடுகிறேன் என்றாராம்….” என்று அந்தப் பாடல் இருக்கும். இப்பொழுதெல்லாம் நல்லவர்கள் அரசியலுக்குள் வருவதில்லை. அரசியலை ‘சாக்கடை’ என்று குறிப்பிட்டு பல வருடங்களாயிற்று. எம்ஜிஆர் படங்களில் நல்லவனாக நடித்து நல்லவன் வாழ்வான் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டு, வல்லவன் வாழ்வான் என்று அரசியலில் காட்டியவர். விஜய், சினிமாவில் ஈட்டாத பணம்? புகழா? ஆனால் ஏன் சினிமாவை விட்டு அவர் அரசியலுக்கு வருகிறார்? சினிமாவை விட அரசியலில் அவை இரண்டும் அதிகமாக இருக்கும். திருமா, விஜயோடு ஆரம்பத்திலேயே இணைவதாக இருந்தது. தவெக மேடையிலேயே அவர் பேசுவதாகவும் இருந்தது. ஆனால் அவருக்கு என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டதோ அவர் மேடையிலும் தோன்றவில்லை, விஜயுடன் தேர்தல் கூட்டணியிலும் இல்லை. ஆக, இங்கே ஒரு நல்லவன் என்ன பாடு படுகிறார் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். நாட்டுக்காக உழைப்பதற்கென்றே பிறந்தவர்களல் ஒருவர் படத்தை இணைக்கிறேன். அரச வைத்தியசாலையில், உடுப்பதற்கே உடையின்றி இருப்பதைப் பாருங்கள். கக்கன் போன்ற நேர்மையான தலைவர்களின் நிலையை நினைத்தால் இன்னும் வருத்தமாக தான் இருக்கும். அதிகாரத்தில் இருந்தவர், பிறகு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளின்றி இருந்தார். அவர் யாருக்காக உழைத்தாரோ அந்த மக்களே அவரை மறந்துவிட்டார்கள். ரசோதரன், ‘நல்லவர்களது ஆட்சி’என்பதை உங்களைப் போல் நானும் வரவேற்பேன். அதற்கான சந்தர்ப்பம் எனது காலத்தில் இல்லை. உங்கள் காலத்திலும் வருமா தெரியவில்லை.இங்கே, இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பந்தயத்தில் எந்தக் குதிரை மீது காசைக் கட்டலாம்? எது முதலாவதாக வரும்? எந்தக் குதிரை இனி ஓட்டத்துக்கு லாயக்கில்லை? என்பதையே கவனிக்கிறேன். சண்டிக் குதிரை, வண்டிக் குதிரை, நொண்டிக் குதிரை,சவாரிக் குதிரை, என்றெல்லாம் நான் பார்க்கவில்லை.
  8. பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சால், இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட, 2016 ஏப்ரல் 29 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களுக்குக் மேலதிகமாக, இந்தச் ளசுற்றறிக்கையில் உள்ள விதிமுறைகள் இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படிஇ கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தண்டனையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது என்றும்இ எந்த நிலையிலும் எந்தவிதமான உடல்ரீதியான தண்டனையும் விதிக்கப்படக்கூடாது என்றும், தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான விஷயங்களைக் கையாளும்போது, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1470694
  9. ட்ரம்ப்பின் ஈரான் தொடர்பான பேச்சால் கச்சா எண்ணெய் விலை உயர்வு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும். ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. கடந்தபெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை. ஆட்சி மாற்றம் அல்லது ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்பது குறித்து ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள், விநியோகச் சங்கிலிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://athavannews.com/2026/1470726
  10. யாழில் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்! யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிலானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27 ஆவது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாத குழந்தையாக இருக்கும்போது உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் குறித்த மாணவியின் தாயாரே கூலி தொழில் செய்து அந்த மாணவியை கற்பித்து வந்த நிலையில் இவ்வாறு சாதனை புரிந்துள்ளார். நிம்மதியாக இருந்து கல்வி கற்பதற்கே ஒரு சீரான வீடு இல்லாத நிலையிலும் குறித்த மாணவி சாதித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnfvqn920000356pwrdjudu4
  11. 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து கின்னஸில் இடம் பிடித்த பெண்! 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி ஈழத்து பெண் உலக சாதனை மேற்கொண்டார். குறித்த காட்சிப்படுத்தும் நிகழ்வு நேற்று (02) இரவு 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் வாழும் ஈழத்து பெண்ணான ஆயுள்வேத வைத்தியர் குமுதினி கோபாலகிருஸ்ணன் குறித்த கின்னஸ் சாதனைக்காக குறித்த நிகழ்வை நடத்தினார். இதற்கு முன்னர் அமெரிக்கர் ஒருவர் 527 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சி படுத்தி கின்னஸில் இடம் பிடித்திருந்தார். குறித்த சாதனையை தாண்டி 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து குறித்த சாதனையை இன்று பதிவு செய்தார். கனடாவில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஸ்ணன் ஆயுள்வேத வைத்தியராக சேவை செய்து வருகின்றார். தனது வாழ்நாளில் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்ற கனவுடன் கடந்த 30 வருடமாக மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து வந்தார். குறித்த கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருந்த அவர், தனது சாதனையை ஈழத்தில் நிகழ்த்தும் நோக்குடன் நேற்று தனது சாதனை பதிவினை மேற்கொண்டார். முறிகண்டி பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் குறித்த காட்சிப்படுத்தலும், உறுதிப்படுத்தும் நிகழ்வும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnh0azbl0001356p7v76gqav
  12. டிரம்பின் உரையைத் தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும். ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. கடந்தபெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை. ஆட்சி மாற்றம் அல்லது ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்பது குறித்து ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள், விநியோகச் சங்கிலிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://adaderanatamil.lk/news/cmngxywp00000356pohbpbtd6
  13. ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம் 2 ஏப்ரல் 2026, 00:49 GMT Reuters நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை நிலவின் அருகே அனுப்பும் 10 நாள் விண்வெளி பயணமாக புறப்பட்டது. இந்திய நேரப்படி, வியாழன் அதிகாலை 4 மணியளவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியான் விண்கலம் புறப்பட்டது. இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதை விட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும். நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இந்த திட்டம், மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தைத் தொடங்குகிறது. ஆர்டெமிஸ் 2 திட்டக் குழுவின் தலைவர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், மிஷன் சிறப்புப் பணியாளர் கிறிஸ்டினா கோக், மற்றொரு சிறப்புப் பணியாளர் ஜெரமி ஹான்சன் ஆகியோர் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். NASA நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் பத்திரிகையாளர் சந்திப்பை தொடங்கி, திட்டத்தின் செயல்பாட்டு நிலை குறித்து தகவல் வழங்கினார். முன்னதாக ஏற்பட்ட தொடர்பு சிக்கலை அவர் சுருக்கமாக குறிப்பிட்டார். தரையில் இருந்த குழுவினர் விண்கலத்தில் உள்ள குழுவினரை கேட்க முடியவில்லை. இந்த பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது என்றும், குழுவினர் "பாதுகாப்பாகவும், நிலையாகவும், உற்சாகமாகவும் உள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி அவர் பேசினார். "54 ஆண்டுகளாக இருந்த சிறிய இடைவெளிக்குப் பிறகு, நாசா மீண்டும் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது," என்று அவர் கூறினார். "இந்த திட்டம் குழுவினருக்கு மட்டும் அல்ல, உங்களுக்கும் சொந்தமானது," என்று அவர் நாசா பணியாளர்களிடம் தெரிவித்தார். குழு முன்நிலையில் உள்ள சவால்களை அறிந்துள்ளது என்றும், திட்டம் முடிந்து விண்வெளி வீரர்கள் திரும்பிய பின்னரே கொண்டாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். Reuters அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்படும் தருணம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததாக, பிபிசியின் அறிவியல் ஆசிரியர் ரெபெக்கா மொரெல்லே குறிப்பிட்டார். ராக்கெட்டின் கீழ் தீப்பொறிகள் பீறிட்டு, பெரும் முழக்கத்துடன் அது நீல வானில் உயர்ந்தது. அதன் பின்னால் புகை தடம் தென்பட்டது. இந்த காட்சியை நேரில் கண்ட மக்கள் உற்சாகக் குரலில் ஆரவாரம் செய்தனர். அறிவியல் ஆசிரியர் ரெபெக்கா மொரெல்லே, "இது பார்க்கவும் கேட்கவும் மட்டுமல்ல, அதன் சக்தியை உடலிலேயே உணர முடிகிறது" என்று கூறினார். நாசா இதுவரை உருவாக்கியதிலேயே மிக சக்திவாய்ந்த ராக்கெட் இதுவாகும்; விண்வெளி வீரர்களை சுமார் 400,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சந்திரனை நோக்கி அனுப்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது. Getty Images புறப்பட்ட சில நிமிடங்களில், மொத்த உந்து விசையில் சுமார் 80 சதவிகிதத்தை வழங்கும் இரு துணை ராக்கெட்டுகள் தங்களது பணியை நிறைவேற்றி பிரிந்தன. அவை அட்லாண்டிக் பெருங்கடலில் விழும் என எதிர்பார்க்கப்பட்டது. புறப்படுவதற்கு முன் லாஞ்ச் அபார்ட் சிஸ்டம் (Launch Abort System) தொடர்பான சிக்கல் ஒன்று எழுந்தது. அவசரநிலையில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவும் இந்த அமைப்பு முக்கியமானதாகும். எனினும், பொறியாளர்கள் அந்த பிரச்னையை விரைவாக சரிசெய்தனர். இறுதியாக, "ஆர்டெமிஸ் II, நீங்கள் ஏவுதலுக்குத் தயாராக உள்ளீர்கள்" என்று குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கு கட்டுப்பாட்டாளர் ரீட் வைஸ்மேன், "நாங்கள் முழு மனிதகுலத்துக்காகவும் செல்கிறோம்" என்று பதிலளித்தார். Reuters 80 சதவிகித உந்துவிசையை வழங்கும் அந்த இரண்டு திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்களும், விண்கலனை மணிக்கு 10,000 மைல்களுக்கும் அதிகமான வேகத்துக்கு எடுத்துச் செல்லும் தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தன. கென்னடி மையத்திலிருந்து தகவல்களைத் தரும் அறிவியல் செய்தியாளர் பல்லப் கோஷ், "கென்னடி விண்வெளி மையத்தில் பெரும் உற்சாகம் நிலவியது. பல ஆண்டுகளாக காத்திருந்த இந்த தருணத்தை பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்" என்று தெரிவித்தார். இருந்தாலும், பயணம் முழுமையாக நிறைவடையும் வரை இன்னும் பணிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் பூமியின் மேல் வளிமண்டலத்தை கடந்து செல்லும்போது அரிய காட்சிகளை கண்டனர். அறிவியல் செய்தியாளர் எஸ்மே ஸ்டல்லார்ட், கட்டுப்பாட்டாளர் ரீட் வைஸ்மேன் "அருமையான காட்சி... நமக்கு ஒரு அற்புதமான நிலவு உதயத்தை பார்க்க முடிந்தது." என்று கூறியதாக தெரிவித்தார். விண்கலத்திலிருந்து பூமியின் நீல நிறம் தொலைவில் தென்பட்டது. இந்த பயணம், மனிதர்களுக்கு மிகக் குறைவானோர் மட்டுமே அனுபவித்துள்ள விண்வெளி காட்சிகளை காணும் வாய்ப்பை வழங்குகிறது. அதே நேரத்தில், சந்திரனை நோக்கிய மனித பயணங்களை மீண்டும் தொடங்கும் நாசாவின் முக்கியமான முன்னேற்றமாகவும் இது பார்க்கப்படுகிறது. NASA ஆர்டெமிஸ் 2 விண்கலனிலிருந்து பூமியின் காட்சி ஏவுதலுக்கு முன் நடைபெற்ற சோதனைகளில் termination system எனப்படும் அவசர அழிப்பு அமைப்பு தொடர்பாக ஒரு சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இது ராக்கெட், பாதையிலிருந்து விலகினால், அது பூமியில் யாருக்கும் சேதம் ஏற்படாமல் இருக்க, வானில் இருந்தபடியே அதை அழிக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். சிறிது நேரத்திலேயே மற்றொரு பிரச்னை கண்டறியப்பட்டது. விண்வெளி வீரர்களை அவசரநிலையில் பாதுகாப்பாக ராக்கெட்டிலிருந்து பிரித்தெடுக்கும் Launch Abort System-இல் உள்ள ஒரு பேட்டரியில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கவுண்டவுனுக்குப் பிறகு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வை கண்டு ரசித்தனர். Reuters ஆர்டெமிஸின் அடுத்தடுத்த திட்டங்கள் என்ன? ரெபெக்கா மோரெல், அறிவியில் ஆசிரியர் ஆர்டெமிஸ் 1 திட்டம் 2022-இல் நிகழ்ந்தது. அதில் நாசாவின் பிரமாண்ட ராக்கெட்டும் ஓரியன் விண்கலமும் முதல்முறையான நிலவுக்கு அருகே 25 நாள் பயணத்தில் சென்றது. ஆனால் அதில் மனிதர்கள் இடம்பெறவில்லை. ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றனர். நாசாவின் ஸ்பேஸ் லான்ச் திட்டம் ஓரியன் விண்கலத்தில் பயணிக்கும் முதல் குழுவாக இவர்கள் உள்ளனர். இவர்களின் பயணம் 10 நாட்கள் நீடிக்கும். இந்தச் சூழலில் ஆர்டெமிஸ் 3 திட்டத்தை நாசா முழுவதும் மாற்றியமைத்துள்ளது. 2028-இல் திட்டமிடப்பட்டிருந்த ஆர்டெமிஸ் 3 திட்டத்தின்படி நிலவின் நிலப்பரப்பில் விண்வெளி வீரர்கள் தரை இறங்குவதாக இருந்தது. தற்போது அந்தக் குழு 2027-இல் தாழ் விண்வெளி பாதைக்குச் சென்று நிலவில் தரையிறங்குவது பரிசோதிக்கப்பட உள்ளது. Getty Images அதனைத் தொடர்ந்து, ஆர்டெமிஸ் 4 மற்றும் 5 நிலவில் தரையிறங்கும் திட்டமாக உள்ளது. இந்த இரண்டு திட்டங்களையும் 2028-இல் நிகழ்த்த நாசா திட்டமிட்டுள்ளது. ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனங்களில் நிலவில் தரையிறங்க உதவும் லேண்டர்களை உருவாக்கி வருகின்றன. இதில் ஆர்டெமிஸ் 3 திட்டத்தில் தரையிறங்கும் பரிசோதனைக்கும் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவதற்கும் எந்த லேண்டர்கள் பயன்படுத்தப்படும் என்பதில் தெளிவில்லை. நிலவில் ஒரு நிலையம் கட்டுவது நாசாவின் தொலைநோக்கு திட்டமாக உள்ளது. ஆனால் நிலவைச் சுற்றி வரும் கேட் வே என்கிற விண்வெளி நிலையத்தை கட்டும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலவுக்குத் திரும்ப 50 ஆண்டுகளுக்கும் மேலானது ஏன்? Getty Images நிலவில் தரையிறங்கும் நாசாவின் அபோல்லோ திட்டம் 1972-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. செலவினங்கள் அதிகரித்து, முக்கியத்துவம் மாறிவிட்டது. எனவே தான் செலவு குறைவான தாழ் விண்வெளி பாதையின்மீது கவனம் திரும்பியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ஸ்கை லாப் தொடங்கி சர்வதேச விண்வெளி நிலைய திட்டம் வரை இதன் மீது தான் நாசாவின் கவனம் உள்ளது. 2005-ஆம் ஆண்டு கான்ஸ்டலேஷன் என்கிற திட்டத்தின் மூலம் நிலவு பற்றிய ஆராய்ச்சியை நாசா மீண்டும் தொடங்கியது. ஆனால், காலதாமதம் மற்றும் அதிகரித்த செலவு போன்ற காரணங்களால் 201-இல் இந்த திட்டமும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், கான்ஸ்டலேஷன் திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமான ஓரியன் விண்கலம் அந்த ராக்கெட்டின் பாகங்கள் ஆர்டெமிஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டன. இந்த திட்டம் 2017-இல் தொடங்கியது. 2024-இல் நிலவில் தரையிறங்குவது திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்த தாமதங்களால் 2028-இல் நிலவில் தரையிறங்க திட்டமிடுவதாக நாசா தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c9wqg2wx489o
  14. இரானை "கற்காலத்திற்கே" தள்ளுவோம் என எச்சரித்த டிரம்ப் - போர் குறித்த நிலைப்பாடு குழப்பம் தருகிறதா? Reuters தனது 19 நிமிட உரையில், இரானுக்கு எதிரான போரின் நோக்கம் நிறைவேறுவதற்கு மிக அருகில் இருப்பதாக டிரம்ப் கூறினார். வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்கா இரான் மீது குண்டுவீசித் தாக்கி, அந்நாட்டை மீண்டும் 'கற்காலத்திற்கே' தள்ளிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வாரத்தின் தொடக்கத்திலும் டிரம்ப் இரான் மீது இதேபோன்றதொரு மிரட்டலை விடுத்திருந்தார். இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலையில் வெள்ளை மாளிகையில் இரான் போர் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இரானின் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் விமானப்படை பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்" என்று கூறினார். இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மிக நெருக்கமான நிலைக்கு வந்திருந்ததால், அதன் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் அவசியமானது என்றும் டிரம்ப் கூறினார். தனது 19 நிமிட உரையில், இரானுக்கு எதிரான போரின் நோக்கம் நிறைவேறுவதற்கு மிக அருகில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும், "அவர்கள் (இரான்) மீது அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நாங்கள் ஒரு பெரும் தாக்குதலைத் தொடுக்கவுள்ளோம். அவர்களை மீண்டும் கற்காலத்திற்கே தள்ளிவிடுவோம்; அதுதான் அவர்களுக்குரிய இடமும் கூட," என்று கூறினார். டிரம்பின் உரைக்குப் பிறகு உடனடியாக எண்ணெய் விலைகள் உயர்ந்தன மற்றும் ஆசியச் சந்தைகளும் வீழ்ச்சியைப் பதிவு செய்தன. "இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற எங்களது பிற மத்திய கிழக்கு நட்பு நாடுகளின் ஆதரவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார். டிரம்பின் கூற்றுப்படி, எந்தத் தூண்டுதலும் இன்றி இரான் இந்த நாடுகளைத் தாக்கியது, இது அந்தப் பிராந்தியத்துக்கு இரான் எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்கா மற்றும் உலகின் பாதுகாப்புக்கு "எபிக் ஃபியூரி" (அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை) ஏன் அவசியம் என்பதை விளக்குவதற்காக இந்த உரையை வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் கூறினார். இரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா "எபிக் ஃபியூரி" என்று பெயரிட்டுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில், இரான் அல்லது அதன் ஆதரவு குழுக்கள் ஏராளமான பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறினார். இரானிய ஆட்சியை "கொலைகார ஆட்சி" என்று டிரம்ப் விவரித்தார். இரானில் சமீபத்தில் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதையும், அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய தலைவர்கள் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்க முடியாது என்று கூறிய டிரம்ப், "அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்றார். இந்தப் போர் ஒரு முதலீடு அமெரிக்கா ஒரு தோற்கடிக்க முடியாத ராணுவ சக்தி என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்தப் போரை அமெரிக்காவின் எதிர்கால சந்ததியினருக்கான ஒரு "முதலீடு" என்று அவர் குறிப்பிட்டார். பின்னர் 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் போர்களின் கால அளவைக் குறிப்பிட்ட அவர், அவை பல ஆண்டுகள் நீடித்தன என்றும், ஆனால் இந்த மோதல் இதுவரை 32 நாட்களாக மட்டுமே நடந்து வருவதாகவும் கூறினார். இரானிய ஆக்கிரமிப்பு மற்றும் "அணுசக்தி மிரட்டல்" ஆகியவற்றால் அமெரிக்க குடிமக்களுக்கு இனி ஆபத்து இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை, அமெரிக்கா இப்போது முன்னெப்போதையும் விட பாதுகாப்பாகவும், வலிமையாகவும், செழிப்பாகவும் இருக்கும். எண்ணெய் விலை உயர்வு பிபிசி வணிகச் செய்தியாளர் பீட்டர் ஹோஸ்கின்ஸின் கூற்றுப்படி, ஹோர்மூஸ் நீரிணை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து டிரம்பின் உரை சர்வதேச எண்ணெய் சந்தைக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. அதிபர் பேசத் தொடங்குவதற்கு முன்பு, ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் சுமார் 100 டாலராக இருந்தது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன, ஆனால் இப்போது விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 4% உயர்ந்து 105.38 டாலரை எட்டியுள்ளது. உலகின் எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20% பொதுவாக இந்த குறுகிய கடல் பாதை வழியாகச் செல்வதால், ஹோர்மூஸ் நீரிணை உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து இந்த வழித்தடம் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்த நீர்வழியைப் பயன்படுத்தும் கப்பல்களைத் தாக்குவோம் என்று இரான் அச்சுறுத்தியிருந்தது. டிரம்பின் உரைக்குப் பிறகு, முன்னதாக ஏற்றம் கண்டிருந்த ஆசியாவின் முக்கிய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. ஜப்பானின் நிக்கி சுமார் 1.5% சரிந்துள்ளது, அதே சமயம் தென் கொரியாவின் கோஸ்பி 2.6% சரிந்துள்ளது மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 1% சரிவுடன் வர்த்தகம் செய்யப்படுகிறது. இரான் போர் முடிவுக்கு வருவதற்கான எந்தவொரு தெளிவான அறிகுறியையும் டிரம்பின் உரை வழங்காததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். பிப்ரவரி மாத இறுதியில் இரான் போர் தொடங்கியதிலிருந்து ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு சில நேரங்களில் கடும் உயர்வுக்கு வழிவகுத்தது, அதே சமயம் போர் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் பங்குகளை பெரும் விற்பனை சரிவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளன. இந்த மோதலின் தாக்கத்தால் ஆசியா குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. ஏனெனில் இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற இப்பிராந்தியத்தின் பல முக்கிய நாடுகள் எரிசக்தி விநியோகத்துக்காக மத்திய கிழக்கை பெரிதும் நம்பியுள்ளன. எனவே, போர் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அல்லது எண்ணெய் விநியோகத் தடைகள் சந்தைகளில் நேரடியாக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. 'டிரம்பின் திட்டத்தில் எதுவும் தெளிவாக இல்லை' முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் மூத்த ஆலோசகராக இருந்த மெலிசா டூஃபெனியன் பிபிசியிடம் கூறுகையில், டிரம்பின் உரைக்குப் பிறகு அமெரிக்க மக்கள் இரான் போர் குறித்து இன்னும் அதிக குழப்பமடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். "இன்று அந்த உரையைப் பார்க்கும் எந்தவொரு அமெரிக்கரும் ஒரு தெளிவான திட்டம் இருக்கிறது என்றோ, ஒரு தெளிவான காலக்கெடு இருக்கிறது என்றோ அல்லது நாம் முன்பை விட பாதுகாப்பாக இருக்கிறோம் என்றோ உணர்வார்கள் என நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார். இதற்கிடையில், நேட்டோவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஐவோ டால்டர் கூறுகையில், டிரம்பின் உரை பல முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். அவற்றில் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், இரானின் அணுசக்தி திறன், கடற்படை மற்றும் ஏவுகணை அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் உரிமை கோரினால், அமெரிக்கா ஏன் இன்னும் இரானில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதுதான். "இது நம்மை எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக ஆக்கியுள்ளது என்று நான் நினைக்கவில்லை... அமெரிக்க பொதுமக்களுக்கும் இதே போன்ற சந்தேகங்கள் இருக்கும் என்று நான் கருதுகிறேன்," என்று அவர் பிபிசி செய்தியாளர் சுமி சோமஸ்கந்தாவிடம் கூறினார். இந்த உரையில் டிரம்ப் நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை அல்லது கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்த அச்சுறுத்தல்களை மீண்டும் கூறவில்லை, ஆனால் பின்னர் சமூக ஊடகங்களில் அவர் மீண்டும் அத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது என்று டால்டர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgmewggw3d0o
  15. முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார் Lenin Raj / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 11:46 முன்னாள் அமைச்சரான மஹிந்த விஜேசேகர தனது 81 ஆவது வயதில் காலமானார். கடற்றொழில் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ள இவர், முன்னாள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தந்தையாவார். கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி, அக்குரஸ்ஸ - கொடபிட்டிய பகுதியில் இடம்பெற்ற எல்.ரி.ரி.ஈ (LTTE) தற்கொலை குண்டுத் தாக்குதலில் மஹிந்த விஜேசேகர அவர்கள் கடுமையாக காயமடைந்தார். அவர் உயிரிழக்கும் வரை அந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகத் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-அமைச்சர்-மஹிந்த-விஜேசேகர-காலமானார்/175-374966
  16. சீமான் மிளகாயும் இல்லை மிளகும் இல்லை மிளகாயாக தன்னை காட்டி சிறப்பாக நடிப்பவர் சில வருடங்களுக்கு முன்பு தான் இவரை பற்றி தெரிந்து கொண்டேன் ரஜினி காந்த் நடிகர் இலங்கைக்கு போக கூடது என்று இவர் கேட்டபோதே விளங்கிவிட்டது ஆனால் கடந்த வருடம் இவர் இலங்கை போனார்
  17. 🔴LIVE :Iran | Donald Trump | Mojtaba Khamenei | ``ஈரான் போர் நெருங்கியது கிளைமாக்ஸ்''">LIVE :Iran | Donald Trump | Mojtaba Khamenei | ``ஈரான் போர் நெருங்கியது கிளைமாக்ஸ்'' உலக முழுக்க நாறிப்போச்சு அமெ கிளி😂
  18. Amazon மீது ஈரான் அதிரடி தாக்குதல்..US நிறுவனம் மீது முதல் நேரடி அட்டாக்..|
  19. அட, இதுவா செய்தி? நான் ஏதோ அவசரத்தில், போலீசாரை துரத்தி துரத்தி வெட்டிய கிழவிகள் என்று வாசித்துப்போட்டேன். கசிப்பு உற்பத்தியாளர்களின் பாதுகாப்பு படைபோலுள்ளது.
  20. சு. வெங்கடேசனை ஒரு இலக்கியவாதியாகவே நான் முதலில் அறிந்திருந்தேன். அவருக்கு 'காவல் கோட்டம்' என்னும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பின்னர் அந்த நாவலின் சில பகுதிகளே வசந்தபாலனின் இயக்கத்தில் 'அரவான்' என்ற திரைப்படமாக வந்தது. அந்த நாவலில், திரைப்படத்தில் வரும் சில நிகழ்வுகளும், மனிதர்களும் ஏதோ சில வகைகளில் இலங்கையிலும் சில ஊர்களில் நடந்ததாகவும், இருந்ததாகவும் எனக்கு அன்று தெரிந்தது. பின்னர் தான் அவர் ஒரு மார்க்சிஸ்ட் என்று தெரியவந்தது. நீங்கள் சொன்னது போலவே இரண்டாவது உதாரணம் அவர்.................. என்னுடைய சில மதுரைக்கார நண்பர்களுக்கே அவரைத் தெரியாது. மற்ற மாவட்டக்காரர்களுக்கு சுத்தம்............... பல வருடங்களின் முன் பாஜக அரசு மொழிவாரி ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கும் போது தமிழுக்கு மிகக் குறைவாகவும், சமஸ்கிருதத்துக்கு மிக அதிகமாகவும் ஒதுக்கியிருந்தது. அதை எதிர்த்தும் இந்திய பாராளுமன்றில் பேசியிருந்தார். அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் ஓரளவு ஓடித் திரிந்தது. இப்போதைக்கு எடப்பாடியார் சாத்தியங்கள் உள்ள ஒரு மாற்றாகத் தெரிகின்றார். அவருக்கு தனிப்பட்ட ஆளுமையோ அல்லது பிரபலமான பின்புலமோ அல்லது பெரும் கவர்ச்சியோ கிடையாது. ஆதலால் ஓரளவுக்கேனும் ஒரு கூட்டு முயற்சியாக அவரது நிர்வாகம் அமையக்கூடும். ஆனால் அவர் சேர்ந்திருக்கும் இடமும், அதிமுகவின் பிளவுகளும் பயத்தை உண்டாக்குக்கின்றன. சசிகலாவுக்கு தங்கள் ஊரிலேயே ஒரு இரண்டாயிரம் வாக்குகள் இருப்பதாக திண்டுக்கல் நண்பன் ஒருவன் சொன்னான். இந்தக் கொடுமை வேறு இருக்கின்றது.......... ஜி கே வாசனின் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஐந்து இடங்களையும் பார்த்தீர்களா................. இதுக்கு அவருக்கு ஒரு இடமும் கொடுக்காமலேயே விட்டிருக்கலாம்............. இதில் வேற அவர் தாமரைச் சின்னத்தில் நிற்கின்றார்.................🫣.
  21. Yesterday
  22. இந்த கேள்வி எனக்கும் இருந்தது அண்ணா.பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு மாற்று உடை வாங்கிக் கொண்டு போய் குடுக்க முடியாமலா இருந்தவர்கள்..இந்த இசாராவின்ட கொண்டாட்டத்தாலா..யாழில் அனைவருமே ஒராளின்ட பிறந்த நாளை மறந்துட்டீனம்.ஒண்டும் பிரச்சனை இல்லை.🤭
  23. 1970 க்கு பின் இப்படி இருவரைத்தான் காட்ட முடிகிறது இல்லையா அண்ணா? உண்மையை சொல்கிறேன். தமிழக அரசியலை ஒரு obsession போல் அணுகுபவன் நான், எனக்கே சு வெங்கடேசன் பற்றி அதிகம் பரிச்சயம் இல்லை. இப்படியானவர்கள் இருந்தாலும் அவர்களை ஒற்றை விதிவிலக்குகளாக, போற்ற படகூடியவர்களாக ஒரு வணக்கத்துக்குரிய இடத்தில் வைத்து போற்றி விட்டு, அடுத்து எவனுக்கு எதை கொடுத்து எதை அடையலாம் என தீர்மானிக்கும் இடத்தில்தான் அறுதி பெரும்பான்மையான தமிழக வாக்காளர் உளர். ஐயா நல்லகண்ணு, ஒரு தனி இயக்கம் கண்டிருந்தால், அல்லது கம்யூனிச பேனரிலேயே அத்தனை தொகுதியிலும் போட்டி போட்டிருந்தால், நோட்டா, சீமான் எல்லோருக்கும் பின்னால் வந்திருப்பார். இதுதான் வாக்கரசியலின் யதார்த்தம். ஆகவே இதற்குள்தான் உள்ள சொத்தையில் ஒரு நல்ல சொத்தையை தேர்ந்தாக வேண்டும். திருமா இந்தளவு புனிதர் என நான் நம்பவில்லை. பட்டியலின மக்களின் விடுதலை - சுயமரியாதையில் தங்கி உள்ளது என்பதுதான் தலித் அரசியலின் அடிப்படை….ஆனால் எத்தனை அவமானங்களை தாங்கி கொண்டு திருமா இந்த கூட்டணியில் தொங்குகிறார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஏன் இப்படி தொங்குகிறார்? திமுகவை விட்டால் இப்போ சாதிப்பதை கூட செய்ய முடியாது. விஜையோடு போயிருக்கலாம், திருமாவும் அதை யோசித்த்தார் ஆனால் ரிஸ்க் எடுக்க பயம். முடிவாக: மாற்று என்பது நல்லகண்ணு போல் வரும் என எதிர் பார்திருந்தால் காலம் பூராவும் அப்படியே இருக்க வேண்டியதே. சீமான் போல் மிளகுக்கு மிளகாயை மாற்றுவதிலும் அர்த்தம் இல்லை. ஆனால் திமுக போன்ற மிளகாய்க்கு மாற்றாக வெங்கயமே ஆனாலும் விஜை அல்லது எடப்பாடி போன்ற ஒருவர் வருவதே சாத்தியம். Politics is the art of the possible -Otto von Bismarck-
  24. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான் எண்டதுக்கு ஈரான் நல்ல சம்பவம் செய்திருக்கு.😎 பழமைவாதம் என்று பார்த்தால் இஸ்ரேலிடம் அதிகம் இருக்கின்றது. அந்த வகையில் ஈரானிலும் இருக்கின்றது போல் தெரிகின்றது. என்றாலும் முல்லாக்கள் அகற்றப்பட வேண்டும் என்பது ஈரான் மக்களுக்கு உகந்த விடயம் என இங்குள்ள ஈரானியர்கள் சொல்கின்றார்கள்.
  25. ஐயோ, நோபல் பரிசு கனவு போய்ச்சா? "ஆடாதடா ஆடாதடா மனிதா, ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவாய் முழுசா."

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.