Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. சுத்துமாத்து சுமந்திரனுக்கு 99 வீதமான எதிர்ப்பு வாக்குகள்… வெளி நாட்டில்தான் உள்ளது. 🤣 சென்ற நாடுகள் எல்லாம், "செருப்படி" வாங்கிய செம்மல் அவர்.
  3. Today
  4. எல்லாமே ..சுத்துமாத்துத்தான்....நாம வாயைப்பிளந்துகொண்டு இருக்க வேண்டியதுதான் ...இந்த விபரத்தை கேட்டவுடனேயே...தமிழரசுக்கட்சி வழக்குப்போட்டு ..தடையுத்தரவு வாங்கிவிடும்..
  5. வருஷம் 40: வொயேஜரின் முடிவற்ற பயணங்கள் 1977 ஆம் ஆண்டில் கோடை காலப்பகுதியில் சில மாத இடைவெளியில் வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இவற்றின் முக்கிய செயற்திட்டம் வியாழன், சனி மற்றும் சனியின் வளையங்களை மிக அருகில் சென்று ஆய்வு செய்வது. மேலும் இந்த இரண்டு கோள்களின் பெரிய துணைக்கோள்களையும் ஆய்வுசெய்வதும் ஆகும். இந்த இரண்டு கோள்களையும் ஆய்வு செய்யப் போதுமானதாக குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது தொழிற்படக்கூடியவாறு வொயேஜர் விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டன. வியாழன், சனி ஆகிய கோள்களை ஆய்வு செய்யவென புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு அதற்கும் அப்பால் இருக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களையும் அருகே சென்று நோட்டம் விட்டு பூமியில் இருக்கும் மூளைகளுக்கு பல புதிய விருந்துகளை அனுப்பிவைத்தன. வொயேஜர் விண்கலம் பூமியில் இருந்து புறப்படும் போது அவற்றின் நோக்கம் ஐந்து வருடங்களில் வியாழன், சனி ஆகிய கோள்களையும் அவறின் துணைக் கோள்களையும் ஆய்வு செய்வதே, ஆனால் பூமியில் இருந்து அவற்றை வெற்றிகரமான ப்ரோக்ராம் செய்து ஐந்து வருட திட்டத்தை 12 வருட திட்டமாக மாற்றி மாற்றிய இரண்டு கோள்களையும் ஆய்வு செய்து இன்று நாற்பது வருடங்களாக வெற்றிகரமாக விண்வெளியில் சூரியத் தொகுதியைவிட்டு விண்மீனிடைவெளி நோக்கி இந்த இரண்டு வொயேஜர் விண்கலங்களும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. பல விஞ்ஞான புத்தகங்களை மாற்றி எழுதும் அளவிற்கு நான்கு கோள்களைப் பற்றியும், அவற்றின் 48 துணைக்கோள்களைப் பற்றியும், கோள்களின் காந்தப்புலம் பற்றியும் எண்ணிலடங்கா தகவல்களை வொயேஜர் விண்கலங்கள் திரட்டித் தந்துள்ளன. விண்ணியலிலும், கோள் விஞ்ஞானத்திலும் பல புதிய பாதைகளை வொயேஜர் விண்கலங்களின் தரவுகள் திறந்துவைத்தது எனலாம். 1970 களின் கடைசியில் அமைந்த அபூர்வமான கோள்களின் சுற்றுப்பாதை அமைப்பினால் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை குறைந்தளவு எரிபொருள் கொண்டு, குறைந்த காலப்பகுதியில் சென்றடையக்கூடிய சாத்தியக்கூறு உருவானது. இப்படியான சுற்றுப்பாதை அமைப்பு ஒவ்வொரு 175 வருடங்களுக்கு ஒருமுறை வரும். இந்த அமைப்பினால் ஒரு கோளைச்சுற்றிவிட்டு அடுத்த கோள் என கோள்களின் ஈர்புவிசையை கவன்போல பாவித்து குறைந்த எரிபொருளில் பயணித்துவிட முடியும். இப்படியாக ஈர்புவிசையை பாவித்து வேகத்தை அதிகரித்து பயணிப்பது “ஈர்ப்பு உதவி” என அழைக்கப்படுகிறது. 1973-1974 காலப்பகுதியில் நாசா வெள்ளி, மற்றும் புதனை ஆய்வு செய்ய அனுப்பிய மேரினர் 10 விண்கலம் ஈர்ப்பு உதவியைப் பயன்படுத்தி பயணம் செய்ததால் நாசாவிற்கு ஏற்கனவே இந்த முறையை எப்படி வெற்றிகரமாக பயன்படுத்துவது என்று தெரிந்திருந்தது. இந்த ஈர்ப்பு உதவி முறையை பயன்படுத்தினால் இறுதியாக இருக்கும் நெப்டியூனை சென்றடைய 30 வருடங்களுக்கு பதிலாக வெறும் 12 வருடங்களே போதும். நான்கு கோள்களையும் ஆய்வு செய்வது முடியுமான காரியம் என்று தெரிந்தாலும், நான்கு கோள்களையும் ஆய்வு செய்யக்கூடியவாறு விண்கலத்தை உருவாக்குவது மிகவும் செலவு மிக்கதாக அமையும் என்று நாசா கருதியது. அவ்வளவு தொலைவு பயணிப்பதற்கும், நீண்ட காலத்திற்கு ஆய்வுக் கருவிகளை செயலிழக்காமல் பாதுகாப்பதும் மிகவும் கடினமான காரியமாகும். இதனால் வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை மட்டுமே வொயேஜர் விண்கலங்கள் ஆய்வு செய்யுமாறு திட்டம் வடிவமைக்கப்பட்டது. 10,000 இற்கும் அதிகமான பயணப்பாதைகள் கருத்தில் எடுக்கப்பட்டு இறுதியாக இரண்டு பாதைகள் தெரிவு செய்யப்பட்டன. இந்தப் பாதைகள் வியாழன் மற்றும் அதன் துணைக்கோள் Io, சனி மற்றும் அதன் பெரிய துணைக்கோள் டைட்டன் ஆகியவற்றை அருகில் சென்று ஆய்வு செய்யவும், பின்னர் வொயேஜர் 2 முடியுமானால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை சென்றடையுமாறும் தெரிவுசெய்யப்பட்டன. நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து வொயேஜர் 2 ஆகஸ்ட் 20, 1977 இல் முதலில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வொயேஜர் 1, செப்டெம்பர் 5, 1977 இல் வேகமானதும் குறைந்த தூரம் கொண்ட பாதையில் செல்லுமாறு விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த இரண்டு வொயேஜர் விண்கலங்களும் Titan-Centaur ராக்கெட் மூலம் விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டது. வேகமாக பயணித்த வொயேஜர் 1, வியாழனை மார்ச் 5, 1979 இல் அடைந்தது. அதன் பின்னர் சனியை நவம்பர் 12, 1980 இல் அடைந்தது. வோயஜெர் 2 விண்கலம் வியாழனை ஜூலை 9, 1979 இலும், சனியை ஆகஸ்ட் 25, 1981 இலும் அடைந்தது. வோஜெயர் 1 இன் பயணப்பாதை விண்கலத்தை சனியின் துணைக்கோள் டைட்டன் இற்கு மிக அருகிலும், சனியின் வளையங்களுக்கு பின்னாலும் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. வோஜெயர் 2 இன் பயணப்பாதை சனிக்கு அருகில் சென்றால் அதன் ஈர்ப்புவிசையால் வொயேஜர் 2 யுரேனஸை நோக்கி பயனப்ப்படுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. சனிக்கு அருகில் வொயேஜர் 2 செல்லும் போது, அதனது ஆய்வுக்கருவிகள் எல்லாம் நல்ல நிலையில் இருந்ததால் யுரேனஸை நோக்கி முழு செயற்பாட்டுடன் பயணிக்கக்கூடியவாறு இருந்தது. பூமியில் நாசா வொயேஜர் 2 ஐ யுரேனசிற்கு செலுத்தும் திட்டத்தை தொடங்கியது. மேலும் அதனை நெப்டியுனுக்கு செல்லும் திட்டமாகவும் மாற்றியமைத்தது. வொயேஜர் மற்றும் பயனியர் விண்கலங்களின் பயணப்பாதைகள் வொயேஜர் 2 ஜனவரி 24, 1986 இல் யுரேனஸை சென்றடைந்தது. முதன்முதலாக பூமிக்கு யுரேனஸ், அதன் துணைக்கோள்கள், அதன் காந்தப்புலம் மற்றும் யுரேனஸை சுற்றிய கருப்பு வளையும் ஆகியவற்றின் படங்கள் மற்றும் தரவுகளை அனுப்பிவைத்தது. இதே காலப்பகுதியில் வொயேஜர் 1 சூரியத் தொகுதியை விட்டு வடக்கு நோக்கி வெளியே செல்லும் பாதையில் பயணத்தை தொடர்ந்தது. மனிதன் உருவாக்கிய கருவிகளில் இதனது கருவிகள் தான் முதன் முதலாக heliopause பிரதேசத்தை உணரும். Heliopause எனப்படுவது சூரியனது காந்தப்புலத்தின் எல்லை முடிவடைந்து விண்மீனிடைவெளி (interstellar space) தொடங்கும் பிரதேசமாகும். ஆகஸ்ட் 25, 1989 இல் நெப்டியுனை நெருங்கிய வொயேஜர் 2, அதன் பின்னர் தெற்கு நோக்கி விண்மீனிடைவெளி பிரதேசத்திற்கு பயணத்தை தொடங்கியது. இரண்டு வொயேஜர் விண்கலங்களும் விண்மீனிடைவெளியை நோக்கி பயணிப்பதால், இன்று வோஜெயர் திட்டம் – வோஜெயர் விண்மீனிடைவெளித் திட்டம் என அழைக்கப்படுகிறது. இன்று வொயேஜர் 1 பூமியில் இருந்து 20 பில்லியன் கிமீ தொலைவில் ஏற்கனவே விண்மீனிடைவெளியில் பயணித்துக்கொண்டிருகிறது. ஆகஸ்ட் 2012 இல் வொயேஜர் 1 விண்மீனிடைவெளியை அடைந்துவிட்டது. இதனது தற்போதைய வேகம் (சூரியனுக்கு சார்பாக) செக்கனுக்கு 16.9 கிமீ. வொயேஜர் 2 தற்போது Heliosheath எனப்படும் பிரதேசத்தில், பூமியில் இருந்து 17 பில்லியன் கிமீ தொலைவில் பயணிக்கிறது. Heliosheath எனப்படும் பிரதேசம் heliosphere பிரதேசத்தின் வெளி எல்லையாகும். இந்தப் பிரதேசத்தின் சூரியக்காற்றின் (solar wind) விண்மீனிடைவெளி வாயுக்களின் அழுத்தத்தால் குறைவடையும். இதன் தற்போதைய வேகம் செக்கனுக்கு 15.3 கிமீ (சூரியனுக்கு சார்பாக). வோஜெயர் விண்கலங்கள் அதனது சக்தி முதலில் இருந்து சக்தி கிடைக்கும் வரை தொடர்ந்து எமக்கு அது சேகரிக்கும் தரவுகளை அனுப்பிக்கொண்டே இருக்கும். அணுச் சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உருவாகும் இந்த வோஜெயர் விண்கலங்களில் வொயேஜர் 1 இன் சக்திமுதல் 2025 வரை தொழிற்படும் எனவும் வோஜெயர் 2 இன் சக்திமுதல் 2020-2025 வரை தொழிற்படும் எனவும் கணக்கிட்டுள்ளனர். எனவே குறைந்தது அந்தக் காலம் வரை தொடர்ந்து எமக்கு தரவுகளை இந்த விண்கலங்கள் அனுப்பிக்கொண்டே இருக்கும். அதன் பின்னர் எமக்கு இவை தகவல்களை அனுப்பாவிட்டாலும் தொடர்ந்து அதனது வேகத்தில் பயணித்துக்கொண்டே இருக்கும். இன்னும் 300 வருடங்களில் வொயேஜர் 1 ஊர்ட்மேகம் எனப்படும் பிரதேசத்தை அடையும். ஊர்ட்மேகம் எனப்படும் பிரதேசம் சூரியனைச் சுற்றிக் காணப்படும் ட்ரில்லியன் கணக்கான சிறிய பனிப்பாறைகளால் ஆன பிரதேசமாகும். அண்ணளவாக 50,000 AU தொடக்கம் 200,000 AU (0.8 ஒளியாண்டுகள் தொடக்கம் 3.2 ஒளியாண்டுகள் வரை) வரை இந்தப் பிரதேசம் அகண்டு காணப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பிரதேசத்தைக் கடக்க வோஜெயர் 1 இற்கு அண்ணளவாக 30,000 வருடங்கள் எடுக்கும். வோஜெயர் 1 எந்தவொரு விண்மீனையும் நோக்கி பயணிக்கவில்லை, எனவே ஊர்ட்மேகப் பிரதேசத்தை கடந்தவுடன், ஏதாவது விண்பொருளுடனும் முட்டிமோதாவிட்டால் பால்வீதியில் தன்னந்தனியாக பயணித்துக்கொண்டே இருக்கும். வோஜெயர் 2 விண்கலம் 2016 இல் விண்மீனிடைவெளியை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது 2019 அல்லது 2020 இல் இது விண்மீனிடைவெளியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வொயேஜர் 2 விண்கலமும் எந்தவொரு விண்மீனையும் நோக்கி பயணிக்கவில்லை எனவே இதுவும் வொயேஜர் 1 ஐ போல பால்வீதியில் உலாவரும். வொயேஜர் விண்கலங்களைப் பற்றி மேலும் சுவாரஸ்யமான விடையம் ஒன்று உண்டு. இந்த இரண்டு விண்கலங்களும் தங்கத்தாலான தரவுத் தட்டுக்களை கொண்டு செல்கின்றன. வேறு ஏதாவது அறிவுள்ள ஏலியன்ஸ் உயிரினம் வொயேஜர் விண்கலங்களை கண்டறிந்தால், அவற்றில் உள்ள தரவுத் தகட்டில் இருந்து பூமியைப் பற்றியும் அதன் அமைவிடம் பற்றியும் அறிந்துகொள்ளமுடியும். வொயேஜர் விண்கலங்கள் கொண்டு செல்லும் தங்கத்தரவுத் தகடு. பூமியின் படங்களும், பூமியில் உள்ள உயிரினங்களின் படங்களும், உலகின் 55 மொழிகளில் வணக்கம் தெரிவித்து செய்திகளும், பூமியின் இயற்கை ஒலிகள், குழந்தை அழும் சப்தம், அலைகளின் சப்தம், மற்றும் மொஸார்ட் போன்ற மேதைகளின் இசையமைப்புகளும் என்று பல விடையங்களை இந்த தங்கத் தகடு கொண்டுள்ளது. மனித இனமே அழிந்தாலும் மனிதன் என்கிற அறிவுள்ள உயிரினம் வாழ்ந்ததற்கு சாட்சியாக வொயேஜர் விண்கலங்கள் பால்வீதியை சுற்றிவரலாம். தகவல்கள்: நாசா, விக்கிபீடியா, இணையம் மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam https://parimaanam.wordpress.com/2017/09/06/voyager-spacecrafts-40-years/
  6. ஒரு செய்தியை இப்படியெல்லாம் புரட்டலாமா 🤣 6 ஆயிரம் பேர் உயிரிழந்தது தவிர கைது செய்யப்பட்ட பல்லாயிரம் மக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட ஒரு லட்சம் பேரை மேற்கு நாடுகள் பயிற்சியளித்து உள்ளே அனுப்பியிருக்குமா ? இந்த ஒரு லட்சம் பேர் நாட்டிற்குள் ஊடுருவியதைக் கூட ஈரானால் அறிய முடியவில்லை என்கிறீர்கள். 😎
  7. மனித உரிமை ஆர்வலர் ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி! 27 Jan, 2026 | 04:37 PM எங்களால் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்றவர் மனித உரிமை போராளி ரி.குமார் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆர்வலர் ரி.குமார் என்று அழைக்கப்படும் த.முத்துக்குமாரசாமி அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்…. 146,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், 30,000க்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் நீதி வேண்டி நாங்கள் இன்றும் அமெரிக்காவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த நீண்ட போராட்டப் பயணத்தில், ரி. குமார், என்றழைக்கப்படும் தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களை ஆழ்ந்த நன்றியுடனும், மரியாதையுடனும், துயரத்துடனும் நினைவுகூருகிறோம். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் அரசியல் முயற்சிகளின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில் அவர் தமிழ் அரசியல் தலைமைத்துவத்தின் இரண்டாம் தலைமுறையில் ஒரு முக்கிய ஆளுமையாக உருவெடுத்தார். முறிந்துபோன வாக்குறுதிகளுக்கும், பாராளுமன்ற அரசியலின் மாயைகளுக்கும் அப்பால், அவர் மனித உரிமைகள், சர்வதேச சட்டம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை தமிழ் மக்களின் போராட்டத்தின் மையத்தில் வைத்தார். அம்னெஸ்டி இன்டர்நேஷனலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கைதியாகவும், 'மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட கைதியாகவும்', குமார் துன்பத்தை ஒரு கோட்பாடாக அல்லாமல், ஒரு நேரடி யதார்த்தமாக அனுபவித்தார். அவரது கல்விஅறிவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதிக்காக முழுமையாக அர்ப்பணித்தார். வாஷிங்டன் டி.சி. மற்றும் ஜெனீவாவில், T. குமார் தமிழர்களுக்காகப் பேசிய மிகவும் செல்வாக்கு மிக்க மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவராக இருந்தார். அந்த வேதனையை அவர் அமெரிக்க காங்கிரஸ், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை மன்றங்கள் வரை எடுத்துச் சென்று, தமிழர்கள் அனுபவித்த துயரங்களை உலகிற்கு வெளிப்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரங்களின் போது, கொழும்பில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழர்களை, லங்கா ராணி என்ற பயணக் கப்பல் மூலம் தமிழ் தாயகமான வடகிழக்கிற்குச் செல்ல T. குமார் அவர்கள் முக்கியப் பங்காற்றினார். 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரங்களின் போது, அவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் இருந்தபோதும், அகதி முகாம்களில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு வழிகாட்டி, பல தமிழர்கள் பாதுகாப்பாகத் தங்கள் தாயகத்தை அடைய உதவினார். உள்நாட்டு விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது; ஒரு சர்வதேச விசாரணை அவசியம் என்றார்.இன்றைய வரலாறு அவரது எச்சரிக்கையை உண்மையென நிரூபித்துள்ளது. சர்வதேச மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் ஒரு சுயநிர்ணய வாக்கெடுப்பு மட்டுமே தமிழ் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான ஜனநாயக வழி என்று ஆழமாக நம்பினார், மேலும் அதற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடினார்.குரலற்ற மக்களுடன் அவர் உறுதியாக நின்றார்.நாங்கள் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்ற ஒரு மனிதர் என்றனர். https://www.virakesari.lk/article/237163
  8. பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்றவர் கைது! Jan 27, 2026 - 08:59 PM வட்டுக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்தபோதே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச். புத்திக்க சிறிவர்தனவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சான்றுப் பொருட்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmkwr4rs704i7o29neuwegeco
  9. வொயேஜர்- 1, 1977 செப்டெம்பர் மாதம் செலுத்தினார்கள். வோயேஜர் 2 என்ற இன்னொரு கலத்தை '77 ஆகஸ்ட் மாதம் செலுத்தினார்கள். இரண்டுமே, பூமியில் இருந்தும், சூரியனில் இருந்தும் மிகத் தொலைவிற்குப் போய், யுரேனஸ், நெப்ரியூன் ஆகிய இரு கிரகங்களையும் கடந்து பறந்து படங்களைப் பூமிக்கு அனுப்பிய பின்னர், தற்போது அகிலப் பெருவெளியில் இன்னும் தகவல்களை அனுப்பியவாறு பறந்து கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே சாதனை தான். இரண்டு கலங்களினதும் செயல்பாடுகளை நாசா தளத்தில் பின் தொடர முடியும். NASA ScienceWhere Are Voyager 1 and 2 Now? - NASA ScienceBoth Voyager 1 and Voyager 2 have reached "interstellar space" and each continue their unique journey deeper into the cosmos.
  10. அமைச்சரவைத் தீர்மானம். வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்! --- --- --- *வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்கள் தெளிவில்லை... *ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா? *மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் மாத்திரமா? *முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பிய கடிதம்... -- -- --- வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, தேர்தல் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்வது தொடர்பாக. 23 /09 /2025 இல் இடம்பெற்ற அமைச்சவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. நடவடிக்கை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் -- 26/1 என்று மாத்திரம் குறிப்பிட்டு திகதியிடப்படாமல், ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதத்தை குறித்த குழு அனுப்பியுள்ளது. அதாவது -- தங்கள் பிரதேசங்களில் இருந்து, வெளிநாடுகளில் வாழ்வோர் பற்றிய விபரங்களை வழங்கமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. முடிவுத் திகதி ஜனவரி 31 ஆனால் -- இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை கூட்டம் முடிவடைந்து, இரண்டரை மாதங்களின் பின்னர் அதுவும், முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தான், கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் கடிதங்களை குறித்த குழு அனுப்பியிருக்கிறது. கோரப்பட்டுள்ள நான்கு அம்சங்களும் வருமாறு --- 1) வெளிநாடுகளில் இருக்கிற தேருநர்களை தேர்தல் இடாப்பில் பதிவு செய்தல். 2) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள். 3) வாக்களித்தல் 4) வாக்கெண்ணுதல். என்ற நான்கு அம்சங்கள் பற்றியும் கட்சிகளின் கருத்துகள் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளன. ஆனால், கடிதத்தில் கோராப்பட்டுள்ள முதலாவது அம்சம் தொடர்பாக கேள்விகள் எழுகின்றன. A) “வெளிநாடுகளில் வாழ்வோர்” என்றால், ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச் சீட்டுடன் வாழ்வோரும் உள்ளடக்கமா? B) அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பொறியியலாளர்கள், போன்ற உத்தியோகஸ்த்தர்களாக பணிபுரியும் இலங்கையர்கள் மாத்திரம் வெளிநாடுகளில் வாழ்வோர் என்று அர்த்தப்படுத்தப்படுகிறதா? ஆகவே -- இந்த விடயங்கள் செயலாளர்களுககு அனுப்பியுள்ள கடிதத்தில் விபரமாக இல்லை. அதாவது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க முடியும் என்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானம் விளக்கமாக கடிதத்தில் இல்லை. இவை பற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு சிங்களக் கட்சியும் இதுவரை விளக்கம் கோரவுமில்லை. குறிப்பாக -- வடக்கு கிழக்கு தமிழர்கள் அதுவும் யாழ்ப்பாண தமிழர்கள் பலர், ஐரோப்பிய, ஸ்கண்டிநேவிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச்சீட்டுடன் வாழ்கின்றனர். வேறு சிலருக்கு இரட்டைப் பிரஜாவுரிமையும் உண்டு... ஆகவே, வாக்களிக்கத் தகுதியான வெளிநாட்டவர்கள் யார் என்பது பற்றி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சு அல்லது வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தெளிவுபடுத்த வேண்டும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0sy9i7wSuEkL3QrrHoM3vE75bMhAMhLtm8YvAKXu4e8zTumtqAe3YfC3PQ33c9b2cl/?
  11. வரலாறு அப்படி சொல்லவில்லையே உங்களுக்கு தெரியாத ஒன்றல்ல .... .
  12. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம் Jan 27, 2026 - 04:32 PM பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் விடயப்பரப்பிற்கு அமைவாக, இவ்வருடத்திற்குள் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் தற்போதுள்ள சில சட்டங்களைத் திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்துவதற்குமாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவ்விடயங்கள் பின்வருமாறு: 01.சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை (Cyber crimes) கையாள்வதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துதல். 02.ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய, 'சிறுவர் உரிமைகள் சட்டம்' எனும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல். 03.2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல். 04.வளர்ப்புப் பெற்றோர் பராமரிப்புக்காக புதிய சட்டத்தை உருவாக்குதல். 05.1939 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல். 06.1941 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சிறுவர் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல். 07.1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தைத் திருத்துதல். https://adaderanatamil.lk/news/cmkwhl9r204hro29nlda7zu5k
  13. மிககுறைந்த உறைநிலைக்கு தொடர்ந்தும் இருப்பதால் பொழிந்த பனியெல்லாம் கொங்கிறீற் போல இறுகிப் போயுள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை உறைநிலையாகவே காலநிலை காட்டுகிறது.
  14. 'காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி ரத்தத்தை செலுத்திய பெண்' - உண்மையில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் துளசி பிரசாத் ரெட்டி பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடம் ஏற்படுத்தலாம்) ஆந்திராவில், தான் காதலித்த நபர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அந்த நபரின் மனைவிக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒரு மருத்துவர். அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நூல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜனவரி 9-ம் தேதி நடந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கர்நூல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர், பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். கே.சி. கால்வாய் கரை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கீழே விழுந்த மருத்துவருக்கு உதவுவது போல நடித்த இருவர், அவருக்கு தொற்றுள்ள ரத்தத்தைச் செலுத்தியுள்ளனர். கர்நூல் டிஎஸ்பி பாபு பிரசாத் இந்த வழக்கு பற்றி பிபிசிக்கு விளக்கம் அளித்தார். பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் கைகளில் ஊசியுடன் இருக்கும் புகைப்படம். வழக்கு விவரம் குறித்து கர்னூல் டிஎஸ்பி பாபு பிரசாத் கூறுகையில், "கே.சி. கால்வாய் சாலையில் ஒரு பெண் மருத்துவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு வாகனம் மோதியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனே அங்கிருந்த இரு பெண்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு ஆட்டோவில் ஏற்றினர். அந்த சமயத்தில், அவர்கள் தனக்கு ஏதோ ஒரு ஊசியைச் செலுத்துவதை அந்த மருத்துவர் உணர்ந்தார். இது குறித்து அவரது கணவர் புகார் அளித்தார்" என்று கூறினார். "குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் செவிலியர். தான் காதலித்த நபர் , தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அந்தச் செவிலியர், அவருக்கு இந்த ஊசியைச் செலுத்தத் திட்டமிட்டிருந்தார்." Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஜனநாயகன் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரம் பாம்புகள் எந்த நேரத்தில் வீடுகளுக்குள் அதிகம் வருகின்றன? கோவையில் நடத்திய ஆய்வில் புதிய தகவல் இந்திய தங்கத்தை விட துபை தங்கம் அதிக மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக தோன்றுவது ஏன்? இரண்டில் எது சிறந்தது? அபிஷேக் சர்மாவின் ஆட்டம் பார்த்து வியந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச்ஐவி நோயாளிகளிடமிருந்து, மற்றொரு செவிலியரின் உதவியுடன் அவர் ஹெச்ஐவி வைரஸ் கலந்த ரத்தத்தைச் சேகரித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். "தனது தோழி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளின் உதவியுடன் இந்த ஊசியைச் செலுத்திவிட்டு அவர் தப்பி ஓடினார். காவல்துறை விசாரணையில் அதுகுறித்துத் தெரியவந்த பிறகு, நாங்கள் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தோம். அவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அந்த ஊசியில் இருந்தது என்ன வகையான வைரஸ் என்பது குறித்தும் நாங்கள் விசாரணை நடத்துவோம். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து அவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். இந்த வழக்கில் தொழில்நுட்ப ஆதாரங்கள் முக்கியப் பங்கு வகித்தன. சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை நாங்கள் கவனமாகச் சேகரித்துள்ளோம்" என்று டிஎஸ்பி தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபருக்கு ஒரு நண்பர் மற்றும் அவரது குழந்தைகள் உதவி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 'காதலர் ஏமாற்றிய கோபத்தில் பெண் போட்ட திட்டம்' தனது முன்னாள் காதலர் மீதான கோபத்தில் அந்தப் பெண் இந்தச் செயலைச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். "படிக்கும் போது, அந்த மருத்துவர் தனது வகுப்புத் தோழியுடன் நட்பு கொண்டிருந்தார். இருவரும் காதலித்தனர். பின்னர், அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர் வேறொரு மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார். செவிலியராக இருந்த அந்தப் பெண் திருமணமாகாமல் இருந்தார்". "திருமணமான அந்த மருத்துவரின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்ட பெண் பொறாமை கொண்டிருந்தார். அவரைத் தன் காதலரிடமிருந்து பிரிக்கும் நோக்கில், அவருக்குத் தெரியாமலேயே ஊசி போட விரும்பினார். மருத்துவமனையில் தனக்கு இருந்த தொடர்புகள் மூலம் அவர் எச்.ஐ.வி வைரஸைச் சேகரித்தார். அன்றைய தினம் அவர் அந்த ரத்தத்தை மருத்துவரின் உடலில் ஊசி மூலம் செலுத்தியுள்ளார். தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்து, குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது தோழி மற்றும் அவரது பிள்ளைகளின் உதவியைப் பெற்றுள்ளார். அவர்களும் இந்த குற்றத்திற்கு துணை போயுள்ளனர்" என்று டிஎஸ்பி தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த வழக்கை விசாரிப்பதில் தொழில்நுட்ப சான்றுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்? குற்றம் சாட்டப்பட்டவர் தனது தோழி மற்றும் அதோனியில் வசித்து வந்த அவர்களது பிள்ளைகள் மூலம் இதைத் திட்டமிட்டதாக கர்நூல் காவல்துறை அதிகாரி சேஷையா பிபிசியிடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பரும் அவரது மகனும் அதோனியிலிருந்து வந்திருந்தனர். முதலில் பைக்கில் சென்று ஸ்கூட்டியில் மோதியதால், பெண் மருத்துவர் கீழே விழுந்ததாகவும், பின்னர் நண்பரின் மகளும் குற்றம் சாட்டப்பட்டவரும் பின்னால் வந்து ஊசி போட்டதாகவும் காவல்துறை அதிகாரி சேஷையா கூறினார். "அவர்கள் ஊசி போட்டது குறித்து மருத்துவர் சந்தேகித்தபோது, தன் செல்போனில் அவர்களின் முகங்கள் தெரியும் வகையில் புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினோம். வாகன எண்ணை கண்டறிந்து, அது யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதையும் தெரிந்துகொண்டோம். அது குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரில் இருந்தது. ஆனால் எவ்வளவு விசாரித்தாலும் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை," என சேஷையா கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் தனது குற்றத்தை எவ்வாறு ஒப்புக்கொண்டார் என்பதையும் சேஷையா விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர், "அவரின் செல்போனில் அழைப்புப் பட்டியலை நாங்கள் சரிபார்த்தோம். அவர் பேசிய 17 பேரில் 15 பேர் எங்களின் தொடர்பில் வந்தனர். இருவர் மட்டும் தொடர்பில் வரவில்லை. தொடர்பில் வந்தவர்களில் அனைவரும் இயல்பாகப் பேசினர். ஆனால் ஒருவர் மட்டும் பொய் சொன்னார். நாங்கள் அவரை விசாரித்தோம். தொடர்பில் வராத மற்ற இருவரையும் பிடித்தோம்" என்றார் சேஷையா. குற்றம் சாட்டப்பட்டவர் தனது பைக்கை வேறு ஒருவரிடம் கொடுத்திருந்தார். அந்த பைக் யாரிடம் கொடுக்கப்பட்டது என்று விசாரித்தபோது, இன்னொரு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்தோம். அந்த எண்ணும் அவரின் அழைப்புப் பட்டியலில் இருந்தது. தொடர்பில் வராதவர்களின் எண்களுடன் அவரது எண்ணும் இருந்தது. அவர்கள் அனைவரும் குற்றம் நடந்த இடத்தில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். "அவர்களை அழைத்து வந்து குற்றம் சாட்டப்பட்டவரின் முன் நிற்க வைத்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,வழக்கின் விவரங்களை ஊடகங்களுக்கு கர்நூல் காவல்துறையினர் விளக்கினர். எச்.ஐ.வி மாதிரி எப்படி வெளியே வந்தது? குற்றம் சாட்டப்பட்ட செவிலியர், கர்நூல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு செவிலியரின் உதவியுடன் எச்.ஐ.வி மாதிரியைச் சேகரித்ததாக கர்நூல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ்வர்லு பிபிசியிடம் தெரிவித்தார். "அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் மூலம் அந்த எச்.ஐ.வி மாதிரி சேகரிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த காலத்தில் பயிற்சியின் போது சந்தித்துள்ளனர். அந்தச் செவிலியர் இரவுப் பணியில் இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவரிடம் இந்த எச்.ஐ.வி மாதிரியைக் கொடுத்துள்ளார். அவருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அந்தச் செவிலியரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரும் எங்கள் மருத்துவமனையில் தான் பணிபுரிகிறார். அவர் தற்போது விடுப்பில் உள்ளார்," என்று கர்நூல் அரசு மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு மற்றொரு செவிலியர் (அவரது தோழி) எந்த அடிப்படையில் எச்.ஐ.வி மாதிரியை வழங்கினார் என்பது விசாரணைக்குப் பிறகு உறுதியாகும் என்றும், அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேஷய்யா தெரிவித்தார். "குற்றம் சாட்டப்பட்ட பெண் அந்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார். அவர் தன்னைத் திருமணம் செய்யாமல் பெண் மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டதால் அவர் பொறாமைப்பட்டுளார். இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அந்தப் பெண் நர்சிங்கில் முதுகலை முடித்துள்ளார். முன்பு செவிலியராகப் பணியாற்றிய அவர், தற்போது பணியில் இல்லை"என்று கூறிய அவர், "அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் இவருக்கு ஏன் ஹெச்ஐவி ரத்த மாதிரிகளைக் கொடுத்தார் என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும்," என்றும் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் தொலைபேசி மூலம் பேச, பிபிசி பலமுறை முயற்சித்தது. ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதேபோல், குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்களிடம் பேச முயன்றபோது, அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. (தனிப்பட்ட ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அவர்களின் பதவி குறித்த கூடுதல் விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp80pkjgl8po
  15. காசாவிலிருந்து இறுதி பணயக் கைதியின் உடலும் மீட்பு - இஸ்ரேல் அறிவிப்பு Published By: Digital Desk 3 27 Jan, 2026 | 11:14 AM 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 251 பேரில் எஞ்சியிருந்த இறுதி பணயக் கைதியான ரான் கிவிலி (Ran Gvili) என்பவரது உடலை இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசாவில் உள்ள ஒரு மயானத்திலிருந்து மீட்டுள்ளன. 24 வயதான ரான் கிவிலி விசேட அதிரடிப்படை வீரர் (Yamam) ஆவார். ஒக்டோபர் மாதம் 07 தாக்குதலின் போது போரிட்டு உயிரிழந்த இவரது உடலை ஹமாஸ் அமைப்பினர் காசாவிற்கு எடுத்துச் சென்றிருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட விசேட இராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் இவரது உடல் மீட்கப்பட்டது. "நாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம்; இறுதி பணயக் கைதி வரை அனைவரையும் மீட்டுவிட்டோம்," என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள அமைதித் திட்டத்தின் மிக முக்கியமான இரண்டாம் கட்டம் அமுலுக்கு வரவுள்ளது. காசாவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச பாதுகாப்புப் படை (International Stabilization Force) நிலைநிறுத்தப்படும். இந்தப் படைக்கு அமெரிக்க ஜெனரல் ஜஸ்பர் ஜெஃபர்ஸ் (Jasper Jeffers) தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், இஸ்ரேலிய இராணுவம் படிப்படியாக காசாவிலிருந்து வெளியேறும். இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான பிரதான எல்லையான ரஃபா (Rafah) எல்லைக் கடவை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது மனிதாபிமான உதவிகள் மற்றும் மக்களின் நடமாட்டத்திற்குப் பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237123
  16. அமெரிக்காவில் பனிப்புயல் : 30 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 27 Jan, 2026 | 10:42 AM அமெரிக்காவின் தென் மாகாணங்கள் முதல் வடகிழக்கு மாகாணங்கள் வரை நீண்டுள்ள பாரிய பனிப்புயல் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நியூயோர்க் நகரில் மட்டும் குளிரில் உறைந்து 08 பேர் உயிரிழந்துள்ளனர். மாசசூசெட்ஸ் மற்றும் ஓஹியோவில் பனி அகற்றும் வாகனங்கள் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ் மற்றும் ஆர்கன்சாஸில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்துகளில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், மிசிசிப்பி மற்றும் டென்னசி உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 5,60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. பனிப்புயல் காரணமாக இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வீதிகளில் பனி மலைபோல் குவிந்துள்ளதால் பல மாநிலங்களில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் போன்ற நகரங்களில் பாடசாலைகள் மூடப்பட்டு ஒன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மிசிசிப்பி பல்கலைக்கழகம் இந்த வாரம் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெப்பநிலை -31°C (மைனஸ் 31 டிகிரி செல்சியஸ்) வரை குறைந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். https://www.virakesari.lk/article/237118
  17. தானாக உருவாகியது, ஒவ்வொன்றாக பிரிந்து
  18. இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 பேருக்கு தொற்று உறுதி - இலங்கையில் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு Published By: Digital Desk 3 27 Jan, 2026 | 05:05 PM இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் வைத்தியசாலைப் பணியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பழம் தின்னும் வௌவால்கள் (Fruit Bats) மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களிடையே பரவுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொற்றின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை காணப்படுகின்றன. நோய்த்தொற்று தீவிரமடைந்தால் மூளை அழற்சி (Encephalitis) ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடக்கூடும். நிபா வைரஸிற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை. இதனால், இந்த வைரஸ் உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னுரிமை நோய்த்தொற்று பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முன்னைய நிபா வைரஸ் பரவல்களின் போது, இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை இருந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிபா வைரஸ் தொற்றை தொடர்ந்து, இலங்கையில் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது குறித்து சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “தற்போதைக்கு இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இருப்பினும், பிராந்திய நிலைமைகளை கவனமாக கண்காணித்து வருகிறோம். சர்வதேச சுகாதார அமைப்புகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டார். இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து, மலேசியா, நேபாளம், தைவான் உள்ளிட்ட பல நாடுகளின் விமான நிலையங்களில் சுகாதார பரிசோதனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பிராந்திய நாடுகள் அனைத்தும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/237167
  19. அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில் Jan 27, 2026 - 03:17 PM அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு 11,234,713,750.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. அத்துடன், அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 618,440 பயனாளிகளுக்கு 3,092,200,000.00 ரூபா நிதி விநியோகிக்கப்படவுள்ளது. அதேபோல், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக 248,454 பயனாளி குடும்பங்களுக்கு 2,235,137,500.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. மேலும், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 68,183 பயனாளிகளுக்கு 340,915,000.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmkwex3r604hjo29nu7p1uu8a
  20. அத தெரண கருத்துப்படங்கள்.
  21. கிவுல் ஓயா திட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்மையாக எதிர்த்து பாரிய போராட்டத்தை நடத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்குள் நுளைந்திருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை வெளியேற்றும் பாரிய போராட்டத்தை அக்கட்சி எப்போது நடத்தும்.?????🤔
  22. என்ன நடந்தது என்பதை மறைத்து. மேற்கு ஊதுகுழல்கள் சொல்லுவதை ஒப்புவிப்பது (வீரகேசரி) செய்தி அல்ல. எல்லா மேட்ற்கு நானும் ஆதரவு அளிக்க, us, uk, பிரான்ஸ், இஸ்ரேல் இரானுக்குள் உளார்களுக்கு நாசகார சம்பங்களை செய்வதத்திற்கு பயிற்சியும் அளித்து, பணமும் கொடுத்து வைத்து இருந்தது. ஜூன் தாக்குதல் வெற்றி அடையவில்லை என்பதால். 2ம் கடா திட்டமான ஆர்ப்பாட்டத்தை தூண்டி, அந்த போர்வையில், அரச கட்டடங்கள், வசதிகள் போன்றவை தீயிட்டு கொளுத்தப்பட்டதை, மேட்ற்கு இரசித்து கொண்டு, உண்மையான ஆர்ப்பாட்டம் நடப்பதாக பிரச்சாரம் செய்தது. முதலில் இரான் என்ன நடக்கிறது என்பதை அரிவதத்திற்கு, அவனிப்பதத்திற்கு நேரம் எடுத்தது, அத்தத்துடன் இரும்பு கரஅதிகாரத்தை பாவிக்கவில்லை. இணையவழி வெளிதொடர்பாடல் நாசம்செஐயப்பாடும் இடங்களுக்கு வருவதை அவதானித்து, வெளிஇணையதொடர்பை துண்டித்தது, ஆனாலும், நாசம் செய்வது மேலும் கூடியது. அதன் பின்பு ஈரான் விளித்து கொண்டது ஸ்டார் லிங் தொடர்பாடல் பற்றி, அதுவே நாசம் செய்பவர்களுக்கு ஆப்பாகியது. starlink தொடர்பாடலை உளவறிந்து, எந்த இடத்தில், புள்ளியில் இருந்து தொடர்பு இருக்கிறது என்பதை நேரம் விட்டு, படம்போட்டு, நாசம் செய்பவர்களை குறிப்பாக பிடித்தது. (இரான் அறிவித்தும் உள்ளது 732 நாசக்காரர்கள் என்று , டிரம்ப் இதை மழுப்பலாக, பட்டும் படாமலும் சொல்லி இருந்தார் அவர்களை தூக்கில் இடக்கூடாது என்று. இரான் நீதி / சட்ட த்துறை மறுத்து விட்டது) (இதில் ஈரானுக்கு ருசியா உதையும் இருந்ததாக செய்திகள் உள்ளன) அதன் பின்பே இரும்புகர அதிகாரத்தை பாவித்து. நிசயாமாக அப்பாவிகள் இறந்து இருப்பார்கள். ஆனால் பெரும்பான்மை நாசகர்களின் தூண்டுதுதலுக்கு எ டுபட்டவர்கள். மறுவலமாக அரச சேவைகள், கட்டிடங்கள் போன்றவற்றை எரித்தால், எந்த மேட்ற்கு அரசு பார்த்து கொண்டு இருக்கும் ஈரானின் மேட்ற்கு, இஸ்ரேல் ஆட்சி கவிழ்ப்பு கனவு சுக்குநூறாகிவிட்டது. அதன் பின்பே இப்பொது பெரும் கடல் சார்ந்த படையை கொண்டு மிரட்டல் தொடங்கப்பட்டு உள்ளது.
  23. மூஞ்சுத்துக்கு போக வழியில்லையாம் அடுப்புக்குள்ள விழுந்த கதையா போயிட்டுது . அங்கை இருக்கிற சனத்துக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்க இந்த கோடாலி காம்பால் முடியலை ஆய்வு செய்கிரராம் விட்டால் செவ்வாய் கிரகத்தையும் ஆய்வு செய்வார் .
  24. "சட்டச் சிக்கல்கள் உருவானால் அதற்கு யாழ் பொறுப்பேற்க முடியாது" உண்மை. அண்ணை, தகவல்களை வெளிப்படையாக பகிர்வதற்காகவும் வாசகர்களை சென்றடைவதற்காகவும், யாழ் இணையத்தை எம்மை ஒன்றுபடுத்தும் ஊடகமாக பாவிக்கிறோம். ஏனைய உறவுகளின் கருத்துகளையும் பெற்றபின் தீர்மானிப்போம். @Kavi arunasalam ஐயா நீங்கள் இலச்சினை ஒன்றை எமக்காக உருவாக்கி தாங்கோ. பனர் விரைவாக செய்தால் நல்லது, வேலைத்திட்டங்கள் முடிய அங்கு கொண்டுபோய் வைத்து சிறு காணொளி, படங்கள் எடுக்கலாம்.
  25. தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு செவ்வாய், 27 ஜனவரி 2026 09:10 AM தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி மீண்டும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியானது கடந்த 2021ஆம் ஆண்டளவில் , புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் , தொடர்ந்து நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் போன்ற காரணங்களால் புனரமைப்பு பணிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில் மீண்டும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்திக்கு நிதியுதவி அளித்துள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அந்நிகழ்வில் , நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , பருத்தித்துறை பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://jaffnazone.com/news/54588
  26. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா.! Vhg ஜனவரி 26, 2026 கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழாவானது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பட்டிப்பளை பிரதேச அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (25.01.2026) ஆம் திகதி திகதி நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவருமான நாகலிங்கம் திரவியம் ( ஜெயம்) பிரதேச சபை உறுப்பினரும் முற்போக்கு தமிழர் கழக இணைப்பாளருமான சந்திரமோகன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பில் அங்கம் பெறும் கட்சிகளின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெருமளவான ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.battinatham.com/2026/01/blog-post_791.html
  27. இலச்சினையில் யாழை உள்ளடக்குவது அவசியமற்றது. இங்கு சிலர் குறிப்பிடதுபோல் யாழ் என்பது வேறான அர்த்தத்தைக் கொடுக்கலாம். அத்துடன் பணப் பரிமாற்றம் செய்யப்படுவதால் சட்டச் சிக்கல்கள் உருவானால் அதற்கு யாழ் பொறுப்பேற்க முடியாது. முன்பு யாழில் உருவாக்கப்பட்டு பின்னர் தனியாகச் செயற்பட்ட நேசக்கரம் அமைப்பு போலவே தாயக உதவித் திட்டத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்களின் தகவல் பரிமாற்றங்களுக்கான களமாக யாழ் உள்ளது. முன்னோடியும் எதிர்காலத்தில் வளர்ந்து தனியாகச் செயற்படலாம். தனிப்பட்ட முறையில் இலச்சினை தொடர்பான எனது கருத்து: இலங்கையைக் கை ஒன்று தாங்குவது போல் உள்ளது இலங்கை முழுவதுக்குமான உதவி செய்யும் அமைப்பு போல் காட்டியிருந்தாலும் இது வட கிழக்குக்கு மட்டுமானது. இலங்கை அவசியமானதா ? மலையகம் ஏன் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது ? செஞ்சிலுவையின் இலச்சினையை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியுமா (நிறம் மாற்றப்பட்டிருந்தாலும்) ? புறா அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கிறது. இது அவசியமா ? செஞ்சிலுவை சின்னத்தை எடுத்துவிட்டால் இலச்சினை சுகாதார உதவியைப் பிரதிபலிப்பதாக இல்லை என்று தோன்றுகிறது. மக்கள் - சுகாதாரம் - உதவி ஆகிய மூன்றையும் பிரதிபலிப்பதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.