24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
கிரீன்லாந்தை டென்மார்க் நேரடியாக தனது காலனி ஆதிக்கத்துக்குள் வலிந்து கொண்டுவரவில்லை. நோர்வேயிலிருந்து புறப்பட்டு ஐஸ்லாந்து வழியாக சென்ற எரிக் ரௌட என்ற வீக்கிங் கொள்ளைக்காரத் தலைவன் 980-ஆண்டளவில் வேறும் பல நோர்வே குடியேறிகளுடன் கிரின்லாந்து நாட்டை முதன்முதலாக சென்றடைந்து ஆக்கிரமிப்பு செய்தான். அதற்கு முன்னர் அந்த நாட்டில் பூர்வீககுடிமக்களாக எஸ்கிமோவர்கள் என்று இன்று அழைக்கப்படும் இனுட் இனத்தை சேர்ந்த ஆதிவாசிகளே காணப்பட்டார்கள். சில நுற்றாண்டளவில் இஸ்கண்டிநேவியன் நாடுகள் தமக்குள் ஒப்பந்தங்கள் செய்து ஒரு டேனிஷ் நாட்டு அரசனின் தலைமையில் இணைந்தன. அந்த காலகட்டத்தில் நோர்வே நாட்டின் வீக்கிங் கொள்ளைகாரர்கள் Greenland, Iceland, Faroe island, Hebrides, Isle of Man, Orkney, Shetland ஆகிய பிரதேசங்களை படிப்படியாக கையகப்படுத்திவர அவற்றை நோர்வே நாடும் பல்வேறு காலங்களில் காலனிகளாக வைத்திருந்தது. ஐக்கிய நாடாக மாறிய டென்மார்க், நோர்வே மற்றும் சுவிடன் சில நூற்றாண்டுகள் (1536-1814) அதை நீடித்து பின் முரண்பட்டு சுவீடனும் நோர்வேயும் கூட்டாக பிரிந்தன. அப்போது டென்மார்க் நோர்வேக்கு சொந்தமான காலனிகள் சிலவற்றை பிரிந்து செல்லும் நோர்வே நாட்டுக்கே திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்தும் தனது கைவசமே வைத்துக்கொண்டது. டென்மார்க்குக்கு அப்படி கிடைத்ததுதான் கிரீன்லாந்து. இப்படி காலனியாக உள்வாங்கப்பட்ட கிரீன்லாந்து படிப்படியாக டென்மார்க்கின் முடியரசுக்கு கீழ் உள்ள ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய ஒரு சுயாதீன பிரதேசமாகவும் பின்னர் படிப்படியாக மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட்ட சுயாட்சியுள்ள டேனிஷ் முடியுரிமை கொண்ட நாடாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.
-
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
https://www.youtube.com/watch?v=X_Bzp4_hJ78
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இவருக்கும் அப்படியா ...பலருக்கு சாதாரணமாக நடப்பது தான். தெரியாத தகவலை அறிய தந்ததிற்கு நன்றி
- Today
-
'செவ்வருக்கை' நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம்
'செவ்வருக்கை' நூல் அறிமுக உரை - சுப.சோமசுந்தரம் எழுத்தாளர் எம்.எம்.தீன் அவர்களின் சமீபத்தியப் படைப்பான 'செவ்வருக்கை' எனும் சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் பேறு பெற்றேன். தொகுப்பிலுள்ள முதற்கதையின் தலைப்பே நூலுக்கான தலைப்பானது. செவ்வருக்கை என்பது ஒரு வகை பலா மரத்தைக் குறிப்பதாகும் - வாழையில் செவ்வாழை போல. இதன் பழத்தில் சுளைகள் மிக அடர்த்தியாகவும் செவ்வண்ணத்திலும் அமைவன. கனியின் மணமும் சுவையும் தன்னிகரற்றவை. இத்தொகுப்பின் கதைகள் அனைத்தும் சாதி ஆணவம் பற்றிப் பேசுபவை. தீன் அவர்கள் தக்கோரிடம் கேட்ட உண்மை நிகழ்வுகளைக் கதைக்களத்திற்கு ஏற்றவாறு அமைத்தளித்த படைப்பு இது. நூலில் உள்ள அனைத்துக் கதைகளையும் நாம் இங்கு பேச வரவில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு நான்கு சோறு (!) பதமாய் நான்கு கதைகளைச் சொல்லி முழுச்சோற்றையும் நீங்களே உண்டு பாருங்கள் என அழைப்பு விடுவதே இவ்வெழுத்தின் நோக்கம். முதலில் செவ்வருக்கை. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் இருந்த ஒரு ஆதிக்க சாதியினரின் காட்டில் (தோட்டத்தில்) ஆத்தி புலையனும் அவன் மனைவி வெயிலாளும் மற்றும் சில குடியானவர்களும் உழைத்து வந்தனர். அதனைப் பொறுப்பாக வழிநடத்தியவன் ஆத்திபுலயன். வெயிலா நிறைமாத சூலியான நேரம் இரண்டு செவ்வருக்கைப் பழங்கள் ஒரு மரத்தில் காய்த்துக் கனிவாகின. அதனை உண்ண ஆசைப்பட்ட வெயிலா தனது அண்ணன் மாடப்புலையன் மூலமாக வெட்டிக் கொணர்ந்து ஆசை தீர உண்டாள். அதனை அந்த நில உரிமையாளர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதையுணர்ந்த ஆத்திபுலயன் குடும்பத்துடன் அங்கிருந்து தப்ப முயல, ஆதிக்க வெறி பிடித்தவர்களால் கொலையுண்டு முடிந்து போயினர். கொலையாவதற்கு முன் வெயிலா ஈன்ற ஆண் மகவினைக் காப்பாற்றிய மாடப்புலயன் அவனுக்கு செங்காடன் எனப் பெயரிட்டு வளர்த்து ஆளாக்கினான். செங்காடன் வளர்ந்து ஆளாகித் தன் அப்பன் - ஆத்தாளைக் கொன்றவர்களைக் கொன்று அந்தச் சண்டையில் தானும் உயிர் நீத்தான். இதன் பின்னர் பல இன்னல்களுக்கு ஆளான பண்ணையார் குடும்பத்துக்குப் பரிகாரம் சொன்ன மலையாள மாந்திரீகர்கள் ஆத்திபுலயன், வேலாயி, செங்காடன் ஆகியோருக்குப் பூடம் போட்டு வருடா வருடம் செய்முறைகள் செய்து வழிபடச் செய்தார்கள். இது நடந்து முந்நூறு வருடங்களுக்குப் பிறகு பழைய கதையெல்லாம் திரிந்து இப்போது பண்ணையார் குடும்பத்து வகையறாக்கள் அந்தத் தெய்வங்கள் தங்கள் குலத்தைச் சார்ந்த, தங்கள் குலத்தை ஆசீர்வதிக்கும் குலசாமி என்றே நம்புகின்றனர். தங்களுக்குக் கீழான பகைச்சாதியினர் மீது தாக்குதல் நடத்தப் போகும்போதெல்லாம் அக்குல தெய்வங்களை வணங்கி உத்தரவு பெற்றே செல்கின்றனர். "செங்காடனும் மற்ற குல தெய்வங்களும் பழியை மறந்து சமாதானம் ஆகியோ அல்லது அவர்களது அதிகாரம் கண்டு பயந்தோ சிரித்தபடியே உத்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்" என்று எழுத்தாளர் தம் கூற்றாக அங்கதத்துடன் கதையை நிறைவு செய்கிறார். எம்.எம்.தீன் அவர்களின் கதை சொல்லும் நேர்த்தியைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. எழுத்து அவருக்குப் புதிதல்ல. சமூக அவலங்களை எடுத்தியம்புவதில் நேரிடையாகச் சொல்ல வேண்டிய இடத்தில் நேரிடையாகவும், குறிப்பாகச் சொல்ல வேண்டிய இடத்தில் குறிப்பாகவும் சொல்வதில் அவருக்கு நிகர் வெகு சிலரே. ஒவ்வொரு கதையிலும் அவர் போடும் நிறைவுத் திரை பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்வது நிறைவாய் அமையும். எடுத்துக்காட்டாக, செவ்வருக்கையை இப்போது கையிலெடுப்போம். தாங்கள் முன்னர் அநீதி இழைத்தவர்களிடமே வந்து ஆதிக்க வர்க்கத்தினர் மீண்டும் அந்த அநீதியைத் தொடர்ந்திட உத்தரவு கேட்பதும், அதற்கு அவர்கள் இசைவதுமான வெளிப்பாடு நகைமுரண் மட்டுமல்ல; இன்றைய சமூக அவலத்தின் அபாரமான குறியீடும் கூட. நமக்குத் தெரிந்து தலித் சமூகத்தினர் சிலரும், ஒரு காலத்தில் மேலாடை அணிய மறுக்கப்பட்ட சமூகத்தில் பலரும் அதே பாசிச சக்திகளிடம் சரணடைந்து நிற்பது என் போன்றோர் நினைவில் நிழலாடுவது தவிர்க்க இயலாத ஒன்று. எழுத்தாளர் இக்குறிப்பைத்தான் பெரும்பாலும் கொண்டிருப்பார்; உறுதியாகத் தெரியாது. எழுத்தாளர் சிந்தித்ததை வாசகரும் சிந்திக்க வைப்பதும், அவர் சிந்திக்காதையும் சிந்திக்க வைப்பதும்தானே சிறந்த எழுத்தாக அமைய முடியும் ! போகிற போக்கில் இக்கதை தொடர்பான வேறு ஒன்றைச் சொல்வது என் கடமை என எண்ணுகிறேன். இது செவ்வருக்கை. அறிஞர் அண்ணா எழுதிய சிறுகதை செவ்வாழை. முக்கனிகளில் இரண்டு வந்து விட்டனவே ! இரண்டு கதைகளின் பொதுவான அடிநாதம் மேட்டிமைத்தனம் சாடல். செவ்வருக்கை சாடுவது சாதிய மேட்டிமையை; செவ்வாழை சாடுவது வர்க்க மேட்டிமையை. செங்கோடன் என்னும் ஏழைக் குடியானவன் தன் குழந்தைகளிடம் ஆசையை வளர்த்து, தன் வீட்டுக் கொல்லையில் செவ்வாழை ஒன்றை வளர்த்து வருகிறான். அந்த ஏழையின் கனவு செழித்து வளர்ந்தது. இரண்டொரு நாட்களில் வாழைக்குலையினை வெட்ட எண்ணுகிறான். பிள்ளைகள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் வேலை செய்யும் பண்ணையின் உரிமையாளர் தம் வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சியொன்றுக்கு அந்த செவ்வாழைக் குலையைக் கேட்டு ஆள் அனுப்புகிறார். மறுப்பது எங்ஙனம் ? தனது மற்றும் தன் குழந்தைகளின் கனவெல்லாம் நொறுங்க, அக்குலையை வெட்டிக் கொடுத்து விடுகிறான். குழந்தைகளின் அழுகை நாட்கணக்கில் ஓயவில்லை. ஓரளவு விவரம் தெரிந்த பெரிய பையனின் விரக்தி நிலையைக் கதையின் முத்தாய்ப்பாக அறிஞர் அண்ணா இவ்வாறு வைக்கிறார் - "பாவம் சிறுவன்தானே ! அவன் என்ன கண்டான் - செங்கோடனின் செவ்வாழை தொழிலாளர் உலகில் சர்வ சாதாரண சம்பவம் என்பதை !". உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் பொதுவுடமைக் கருத்தை அண்ணா முன்னெடுக்கும் கதை செவ்வாழை. தோழர் தீன் சமூக நீதியைக் கையிலெடுத்ததும், சமூக நீதியை அதிகம் பேசும் அறிஞர் அண்ணா பொதுவுடமை பேசியதும் ஒரு இனிமையான ஒப்பீடு ! வர்க்க விடுதலையும் சமூக நீதியும் பின்னிப் பிணைந்த வை என்னும் பொதுவுடைமைவாதிகளின் கருத்திற்கு உரமிடுவது. சாதியம் என்னும் இழிவு, மத எல்லைகளைக் கடந்தது என்பதை சுட்டிக்காட்ட எம்.எம்.தீன் ஒருபோதும் தவறவில்லை. இந்திய இஸ்லாமியரிடையே சாதியம் விரவிக் கிடப்பதை 'நாசுவம்' எனும் கதையிலும், கிறித்துவத்தில் சாதியப் போக்கினை 'ஊரு ஒப்பாது' எனும் கதையிலும் ஆணித்தரமாய் உரைப்பதில் அவர் பின்வாங்கவில்லை. இஸ்லாமிய சமூகம் பெருமளவில் வாழும் ஊருக்கு முடி திருத்தும் தொழிலுக்காகவே கொண்டுவரப்பட்ட குடும்பத்தின் வாரிசு ஒருவர் பிற்காலத்தில் சென்னை சென்று கட்டுமானத் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறார். தம் மகனின் திருமணத்தை இந்த ஊரில் அவர் கட்டித் தந்த 'நிலா மஹால்'இல் நடத்த முடிவு செய்து ஊரடைக்க மதிய விருந்துக்கும் மாலை வரவேற்புக்கும் தடபுடலாக ஏற்பாடு செய்து அழைக்கிறார். மதிய விருந்துக்கு அந்த ஊர்க்காரர் ஒருவர் கூட வரவில்லை. அவரும் இஸ்லாமியராயினும் அவரது சாதி கருதி ஊர் மக்களான இஸ்லாமியர்கள் (!) திருமணத்தைப் புறக்கணித்த விவரம் அவருக்குத் தெரிய வருகிறது. நியாயமான அறச்சீற்றத்துடன் மாலை வரவேற்பை ரத்து செய்துவிட்டுக் குடும்பத்துடன் சென்னைக்குக் கிளம்பிச் சென்று விடுகிறார். திருமணத்திற்கு போன மாதிரியும் இருக்கட்டும், போகாத மாதிரியும் இருக்கட்டும் என்று மாலை வரவேற்புக்கு வந்த ஊர்க்காரர்கள் சிலரை பூட்டிய கதவு வரவேற்கிறது. வந்தவர்களில் தொப்பியும் பெரிய தாடியும் வைத்திருந்த பெரிய மனுசர் ஒருவர், "என்ன இருந்தாலும் நாசுவப் பயலுக்கு இம்புட்டு பவிசும் வீம்பும் ஆவாது" என்று சொல்ல, கதை முடிகிறது. இந்திய இஸ்லாத்திலும் சாதிய மனநிலை மாறவில்லை; மாறுவதாகவும் இல்லை என்பதை 'நாசுவ'த்தின் அந்த இறுதி நொடி உணர்த்துகிறது. இக்கதை அன்வர் பாலசிங்கம் எழுதிய 'கருப்பாயி என்ற நூர்ஜஹான்' எனும் குறுநாவலை நினைவுறுத்துகிறது. சாதியக் கொடுமையால் மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்தைத் தழுவிய தலித் சமூகத்தினர் பின்னர் தம் சமூகத்தாராலும், இஸ்லாமியராலும் ஒதுக்கி வைக்கப்பட்டு அல்லலுற்ற கதையைத் தத்ரூபமாகப் படம் பிடித்த நாவல் அது. அந்த நாவலை எழுதிய பின் அன்வர் பாலசிங்கம் பட்ட பாட்டை நண்பர்களிடம் கேள்விப்பட்ட நினைவு. நெஞ்சில் உரம் கொண்டு நேர்மைத் திறம் கொண்டு 'நாசுவம்' எழுதிய தோழர் தீன் அவர்களுக்குப் பாராட்டு. தேவாலயத்தில் இரு குடும்பங்கள் சந்தித்து மனமொத்து (தலைவனையும் தலைவியையும் சேர்த்துதான் !) ஒருவருக்கொருவர் விவரங்களைப் பகிர்ந்த பின், "நீங்க வேற நாங்க வேற; ஊரு ஒப்பாது" என்ற நூலிழையில் திருமணப் பேச்சு முறிந்து போகிறது. பின்வாங்கிய குடும்பம் தாங்கள் அவர்களை விட மேலோராக்கும் எனும் கற்பனையில் மிதக்கும் இடைநிலைச் சாதியினர் என்பதும், சிறிய அல்லது பெரிய ஏமாற்றத்துக்குள்ளான பிறிதொரு குடும்பம் வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் பட்டியல் இனத்தோர் என்பதும் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன ? அவர்களுக்குள் திருமணப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்த பாஸ்டரும் சாதிய மனநிலையில் இருந்து விலகியவர் அல்லர் என்பது சூசகமாக வெளிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அங்கேயும் உள்ள அநாகரிகத்தை 'ஊரு ஒப்பாது' கதையில் குறிப்பாக வெளிப்படுத்தியது எழுத்தாளரின் நாகரிகம். பன்னிரெண்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கடைசிக் கதையான 'சாதி நாற்காலி', பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த ஒரு படித்த அருந்ததியர் பெண் ஆதிக்க இடைநிலைச் சாதியினரால் எதிர்கொள்ளும் அவமானங்களைத் தோலுரித்துக் காட்டுவது. அவள் கற்ற கல்வி அவளைக் கொள்கைப் பிடிப்புடன் நிற்க வைக்கிறது. அவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று திரும்பும் அப்பெண் வீறு கொண்டு நிற்பதைப் பேசும் கதை இது. சமநிலையை ஏற்க மறுக்கும் சமூகத்திற்கு எதிரான போராட்டத்தில் அறிவாயுதம் கொண்டு நேர்மையாக சமூகப் பணியாற்றும் உறுதியேற்று உயிரையும் பணயம் வைக்கத் தயாரான புதுமைப் பெண்ணின் கதை இது. ஏனைய கதைகள் நிதர்சனத்தை சமூகத்தின் முகத்திலறைந்து சொல்லுகையில் இக்கதை ஒரு படி மேற்சென்று நம்பிக்கை ஒளியூட்டுவதாய் அமைகிறது. சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் போல அறவழி நின்று எதிர்வினை ஆற்றுகிறது. தோழர் தீன் அவர்கள் தமது எழுத்துப் பணியான சமூகப் பணியினைப் பன்னெடுங்காலம் முன்னெடுத்துச் செல்வார்; செல்ல வேண்டும். https://www.facebook.com/share/p/1E5ofEE61x/
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
காண்டாமிருகத்தை கலங்கடித்த மான்குட்டி!!! ஒன்றரை வயது குழந்தை மீட்கப்பட்ட காட்சி.
-
இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் கோரிக்கை
இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் கோரிக்கை 10 Jan, 2026 | 05:55 PM (எம்.நியூட்டன்) இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். யாழ் ஊடக அமையத்தில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாயக செலணி அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள். 04.02.1948 அன்று பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்நாளில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே வருகின்ற 04.02.2026 அன்றைய நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தலைமை ஏற்று இணைந்து நடாத்தும் பேரணியில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகின்றோம். வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தமிழ் மக்களின் தேசிய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். தமிழ் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும். இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் புத்த விகாரைகளை நிறுவியும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம்" என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்கு முறைகளை நிறுத்தி, நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கடந்த 77 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் இனவழிப்பை நிறுத்தி ஓர் சர்வதேச நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யப்பட வேண்டும் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி "கரிநாள்" போராட்டம் 04.02.2026 புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழர் தாயகத்தின் கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெறும். இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புக்களும், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புக்கள், வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், பட்டதாரிகள் சங்கம், சிவில் அமைப்புக்கள், மத அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், கடல்த் தொழிலாளர் சங்கங்கள், விவசாயக் கழகங்கள், போக்குவரத்துக் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச் சங்கங்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பேராதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம் - என்றனர். https://www.virakesari.lk/article/235698
-
அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்பும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது - ஜனாதிபதி
அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்பும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது - ஜனாதிபதி 10 Jan, 2026 | 04:03 PM அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன் இருப்பதாகவும், அதற்காக இந்த ஆண்டு 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம, மாவதகம, மல்லவபிட்டிய, இப்பாகமுவ மற்றும் கணேவத்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்ட அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் ரிதீகம, தொடம்கஸ்லந்த இளைஞர் படையணி நிலையத்தில் நடைபெற்றது. இன்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் பிரதான திட்டமாக, இந்த வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டத்தில், அனர்த்தம் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக அதே இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்க அனுமதி பெற்றவர்களுக்காக வீடுகளை நிர்மாணிக்க இந்த இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. அனர்த்தத்திற்குப் பிறகு நாடும் மக்களும் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாது என்று சிலர் கூறினாலும், தற்போது சேதமடைந்த அனைத்து வீதிகளையும் பொதுமக்களுக்கு மீண்டும் திறந்து, தொடர்பாடல், மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுத்து மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக இரவும் பகலும் உழைத்த அரச அதிகாரிகளின் பங்களிப்பை பாராட்டுவதாகவும், அந்த அனர்த்ததை எதிர்கொள்வதில் அரச பொறிமுறை நாட்டிற்கும் மக்களுக்கும் அதன் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வண, இகுருவத்தே தர்மகீர்த்தி ஸ்ரீ சோபித விமலஜோதிதான தேரர் மற்றும் ரிதீகமவைச் சேர்ந்த திரு. திருமதி. டி.பி. அபேரத்ன ஆகியோரால் வழங்கப்பட்ட காணி மற்றும் நிதி நன்கொடைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அண்மைய காலங்களில் ஏற்பட்ட மிகப் பாரிய பேரழிவுகளில் ஒன்றை நாங்கள் சந்தித்தோம். நாடு விரைவாக மீள முடியாது என்று பலர் கூறினர். ஆனால் இப்போது அனர்த்தத்தால் சேதமடைந்த அனைத்து வீதிகளையும் மீண்டும் திறந்துள்ளோம். தொடர்பாடல், மின்சாரம், நீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அதற்காக நமது அரசியல்வாதிகள், குறிப்பாக அரச அதிகாரிகள், கடுமையாக உழைத்தனர். இந்த நாட்டு மக்களுக்கு நமது அரச பொறிமுறை பற்றி நல்ல புரிதல் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த அனர்த்தத்தின் போது, நமது அரச அதிகாரிகள் நாட்டிற்கும் மக்களுக்கும் எவ்வளவு அரப்பணிபபுடன் செயற்படுகிறார்கள் என்பதை நிரூபித்தனர். பல அதிகாரிகள் இரவும் பகலும் உழைத்தனர். மக்களும் அதற்காக முன்வந்தனர். அந்த அர்ப்பணிப்பின் விளைவாக, நாங்கள் கணிசமான அளவிற்கு மீண்டு வந்துள்ளோம். ஆனால் இந்தப் பேரழிவு நமது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நமது நாட்டின் பொருளாதாரம் இதற்கு முன்பு ஒரு பாரிய நெருக்கடியைச் சந்தித்தது என்பதை இங்குள்ள நாம் அனைவரும் அறிவோம். அந்த நெருக்கடியின் விளைவுகளை நாம் அனைவரும் எதிர்கொண்டோம். மின்சாரம், எரிபொருள், எரிவாயு, பால் மா போன்றவை கிடைக்கவில்லை. முழு நாடும் வீழ்ச்சியடைந்தது. அத்தகைய பொருளாதார நெருக்கடி இயற்கை பேரழிவால் உருவாகவில்லை. மேலும் இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சி கிராமங்களில் வசிக்கும் நமது தாய்மார்கள் மற்றும் தந்தையர்களின் தவறுகளினால் ஏற்பட்டது அல்ல. ஆட்சியில் இருந்த அரசியல் வாதிகளிடம் பரவலாக காணப்பட்ட ஊழல், இலஞ்சம், முறைகேடு மற்றும் தவறான முடிவெடுகளை எடுத்தல் போன்றவற்றால் நமது நாட்டு மக்கள் பெரும் துன்பத்தை எதிர்கொண்டனர். அதைத் தொடர்ந்து நடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில், நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எங்களை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்தனர். மக்களுக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன. மோசடி மற்றும் ஊழலற்ற அரசாங்கம், ஊழல்வாதிகளையும் மோசடிக்காரர்களையும் தண்டித்தல், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல் மற்றும் இளைஞர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுதல் அந்த இலக்குகளில் முக்கியமானவை ஆகும். அனைவரும் வாழ்வதற்கு போதுமான வருமான ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முக்கிய காரணியாக அமையும். அந்த இலக்கை நோக்கி நாம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு பணிகளைச் செய்து முடித்துள்ளோம். அப்படிப்பட்ட ஒரு நேரத்தில்தான் நாம் இப்படி ஒரு பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பேரழிவை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்ப நமக்கு வலிமை இருக்கிறது. அதற்காக இந்த ஆண்டு 50,000 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தினால் மட்டுமே அந்த வலிமை வரும். நமது கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை இதை விட சிறப்பாக இருக்க வேண்டும். சரியாக உணவு உண்ணாதவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தலைமுறை தலைமுறையாக நல்ல வீடு இல்லாதவர்கள் இருக்கிறார்கள். நம் நாட்டு மக்கள் இப்படி வாழக்கூடாது. 70-80 ஆண்டுகால வாழ்க்கையில் எல்லோரும் மனிதனாக வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். எனவே, இந்தப் பொருளாதாரத்தையும் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் மிகவும் திட்டமிட்ட முறையிலும் முறையாகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். நாம் அதைச் செய்ய வேண்டும். நாம் அதைச் செய்யாவிட்டால், யாரும் அதைச் செய்ய மாட்டார்கள். கடந்த 76 ஆண்டுகளில் அதைச் செய்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. இந்த நாட்டில் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு அரசாங்கம் இருந்தால், அது இந்த அரசாங்கம்தான். அதனால்தான் பேரழிவை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டன. இவ்வளவு பாரிய தொகை இதற்கு முன்பு ஒதுக்கப்பட்டதில்லை. நம் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த, முதலில் அனைவருக்கும் நல்ல வருமான ஆதாரத்தை வழங்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு தரமான கல்வியையும் வழங்க வேண்டும். நம் கிராமங்களின் பிள்ளைகள் எதிர்காலத்தை வெல்வதற்கான ஒரே வழி கல்விதான் என்பதை நாம் அறிவோம். நம் தாய்மார்கள் மற்றும் தந்தையர் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் நமது கல்வி முறை நல்ல பலனைத் தருவதில்லை. இந்தக் கல்வி முறை நம் பெற்றோருக்கு ஒரு சுமையாக உள்ளது. இது பிள்ளைகளுக்கு துயரமாகவும் உள்ளது. இலங்கையில் 50க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட சுமார் 1150 பாடசாலைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை பாடசாலைகள் ஆக இருக்காது. பிள்ளைகள் இலக்கிய விழாவையோ அல்லது விளையாட்டு விழாவையோ நடத்த முடியாது. அந்தப் பாடசாலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, நல்ல, அதிக பிள்ளைகளைக் கொண்ட, பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து கல்வி கற்கும் ஒரு புதிய பாடசாலை கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். கிராமப் பாடசாலையைப் பழைய பாடசாலையாகப் பாதுகாப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பறித்த இந்தக் கல்வி முறை மாற வேண்டும். அப்படியானால், நாம் ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, பொருத்தமற்ற அல்லது நோக்கமற்ற விடயங்கள் ஊடகங்கள் மூலம் பரப்பத் தொடங்கியுள்ளன. இலவசக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அதை எதிர்த்துப் போராடினார்கள். இந்த முறையும் அவ்வாறுதான். இது ஒரு சிறந்த கல்வி சீர்திருத்தம், நம் பிள்ளைகளைப் பராமரிக்கும் கல்வி. நம் பிள்ளைகளை உலகத்துடன் ஒருங்கிணைக்கக்கூடிய கல்வி முறை. மேலும், நம் பிள்ளைகள் ஆளுமை மற்றும் தலைமைத்துவத்துடன் முன்னேற வழிவகுக்கும் ஒரு கல்வி முறை. இயந்திரங்களை உருவாக்கும் அல்லது கருணை, ஆன்மீகம் அற்ற பெற்றோர்களையோ, ஆசிரியர்களையோ, மதத் தலைவர்களை அறியாத பிள்ளைகளை உருவாக்கும் கல்வி அல்ல. அத்தகைய கல்வியினால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. இந்தக் கல்வி முறை கருணை, மனப்பாங்கு மற்றும் இரக்க குணம் கொண்ட எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஒரு கல்வி முறையாகும். யார் என்ன சொன்னாலும், அந்தக் கல்வி சீர்திருத்தங்கள் நமது கிராமங்களில் உள்ள அப்பாவி பெற்றோரின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு கல்வி முறையை உருவாக்கும். அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதைப் பற்றி கலந்துரையாடடுவோம். நாங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்பதை உங்களுக்கு கூறுகிறோம். நாம் கல்வியை அழிக்கிறோம் என்று இங்கே உள்ள யாராவது நம்புகிறீர்களா? நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. நாம் தூரப்பிரதேச கிராமங்களில் பிறந்தோம். கல்வியின் மூலம் குறிப்பிட்ட இடம் நமக்குத் கிடைத்ததால் இன்று இந்தப் பொறுப்புகளை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இல்லையெனில், எங்கள் குடும்பப் பின்னணி, எங்கள் கிராமப் பின்னணி எங்களை இங்கு கொண்டு வந்திருக்காது. கல்விதான் எங்களுக்கு வழி வகுத்தது. எனவே, தொலைதூர கிராமங்களில் பிறந்த நாம் முன்னேறுவதற்கு கல்வி வழி வகுத்தால், அந்தக் கல்விக்கு அழிவுகரமான பாதையை நாம் அமைக்க மாட்டோம். எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வி முறையை உருவாக்க விரும்புகிறோம். கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க ஆகியோருடன் மாகாண மக்கள் பிரதிநிதிகள், குருநாகல் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/235687
-
புதிய காலனியாதிக்கமும் புதிய உத்தியிலான ஏகாதிபத்தியமும்-பா.உதயன்
நடு இரவில் வந்து நாலு பேருக்கு தெரியாமல் வெனிசுலாவை வெருட்டி விட்டு அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்து கொண்டு போய் இருக்கிறது ஏகாதிபத்தியம்( Imperialism) . அமெரிக்காவின் இந்தச் செயல் பெரும் சர்வாதிகார நிலையை சொல்லி இருக்கிறது. அமெரிக்காவின் எதிரியான வெனிசுவேலா ஜனாதிபதி Maduro வின் அரசியல் கொள்கைக்கு எதிராக செயல்ப்பட்ட வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு சமாதான பரிசை கொடுத்ததன் மூலம் வெனிசுவேலாவுக்குள் அமெரிக்க நலன்சார் நகர்வுகளுக்கு இது உதவியிருக்கிறதா என்றும் எண்ணத் தோண்றுகிறது. இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதாக மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேசரீதியிலான ஒரு பொறுப்பற்ற ஒரு நாட்டின் இறைமையை மீறும் குற்ற நடவடிக்கையாகும் Violation of sovereignty and international law ஜனநாயக விரோத ஒரு நாட்டின் இறைமையை, சர்வதேச சட்டங்களை, ஐ.நா. பிரகடன்களை மீறிய ஒரு சட்டம் அறம் அற்ற ஒரு அத்துமீறிய செயல். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தென் அமெரிக்க நாடுகள் வரை இன்னும் பல ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும் அமெரிக்க தொடர்ந்து தனது நலன் மட்டும் சார்ந்து ஆகிரமிப்பு செய்வதும் அன் நாடுகளின் தலைவர்களை சிறை பிடிப்பதும் இதன் பின் இந்த நாடுகளின் அனைத்து கட்மைப்புக்களையும் அழித்து அந்த நாடுகளை மீண்டும் வளர விடாமல் தொடர்ந்து அங்கு ஸ்திரம் Instability இல்லாத தன்மையை உண்டாக்கி விட்டு ஜனநாயகம் என்று பேசிக்கொண்டு இன்னும் ஒரு நாட்டடில் அத்து மீறி நுழைந்து தனக்குத் தேவையான வழங்ககளை சூறை ஆடுவதே அமெரிக்காவின் தந்திரமாக இருக்கின்றது. பலம் மிக்கவர்களினால் செய்யப்படும் ஆட்சி மாற்றங்கள் இறுதியில் பெரும்பாலும் பெரும் ஆபத்தான நீண்டகால வன்முறை மோதல்களாக அந்த நாடுகளில் உருவாக்கி விடுவதை நடை முறையில் பார்த்திருக்கிறோம். ஜனநாயகம் மனித உரிமை என்ற பெயரில் இங்கு ஆக்கிரமிப்பே நடைபெற்றன அரசியல் பொருளாதார மற்றும் புவிசார் சர்வதேச உறவுகளை தீர்மானிக்கும் உரிமை அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் மட்டுமே உண்டு. இதை விடுத்து பலம் மிக்க நாடு பலம் இல்லாத நாடுகளை அதிகாரத்தின் மூலம் பணிய வைப்பதும் அதை தமது நலனுக்ககாக பாவிப்பதும் ஒரு புதிய காலனியாதிக்கமும் புதிய உத்தியிலான ஏகாதிபத்தியமும் Neo colonialism and Neo imperialism புதிய காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய கொள்கைக்கு ஒப்பானது. ஜனநாயகத்தின் பெயரால் மறைமுகமாக செய்யப்படும் ஒரு ஆதிக்க சுரண்டலாகும். அமெரிக்காவால் இன்னும் ஒரு இறைமையுள்ள நாடுகளில் மேற்கொள்ளப்படும் இந்த அத்துமீறிய இராணுவ தலையீடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை மற்றும் சர்வதேச பாதுகாப்பு அதன் விதி முறைகளையும் மீறுகின்றது இதனால் ஒவ்வொரு பலம் குன்றிய நாடுகள் இன்னும் பாதுகாப்பற்றதாகிறது. சக்திவாய்ந்தவர்கள் எதையும் செய்யலாம் என்ற ஒரு செய்தியை இது சொல்லி நிற்கின்றது. இனி வரக்கூடிய எந்தப் போரையும் தடுக்க நமக்கு உள்ள ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகளையும் இது வலுவிழக்கச் செய்கிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. அமெரிக்காவின் இன்றைய செயல்பாடுகள் ஏகாதிபதியத்தின் ஒரு தொடர்ச்சியே இதை சரியாக விளங்க வேண்டுமானால் காலனித்துவ ஏகாதிபத்தியம் சம்மந்தமாக அரசியல் பொருளாதார கேட்ப்பாடுகளை சரியாக விளங்கிக் கொள்வதன் மூலம் அறிய முடியும். புதிய காலனியா திக்கம் புதிய ஏகாதிபத்யம் உலக அமைப்பு கோடப்பாடுகள் போன்ற கருத்துக்களை பல அரசியல் பொருளாதார நிபுணர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். இதில் முக்கியமான சமூகவியலாளர் இமானுவேல் வால்ரஸ்டீன் (Immanuel Wallerstein) ஆவார். உலகப் பொருளாதார அமைப்பில் பலம் மிக்க நாடுகள் எப்படி சுரண்டுகின்றனர் இந்த உலகு எப்படி சமத்துவமற்று இருக்கிறது என்பதை யதார்த்தமாக உலக அமைப்பு கேட்பாடு (World system theory) மூலம் விளக்குகிறார் காலனித்துவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டாலும் அரசியல் பொருளாதார ரீதியாக ஆதிக்க பலம் வாய்ந்த சக்கித்தியினால் அவர்கள் நலன் சார்ந்து தொடர்ந்து சுறண்டப் படுவதை பார்க்கிறோம். ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக், பனாமா, வெனிசுலா, நையீரியா இப்படி பல நாடுகளை பலம் வாய்ந்த அமெரிக்க அதன் நலன் சார்ந்து இந்த பலம் இல்லாத நாடுகளின் அதன் மூலவளங்களை ஜனநாயகம் மனித உரிமை என்ற பெயரில் அங்கு ஆதிக்கம் செலுத்தி பின் அதன் வளங்களை பெரும் தனியார் கம்பெனிகள் ஊடாக சுரண்டலை மேற்கொள்ளுகின்றனர். இன்னும் ஒரு பிரபலமான இலக்கிய பேராசிரியரான எட்வர்ட் சயீத் (Edward Said) பாலைதீனத்தை பிறப்பிடமாக்க கொண்ட அமெரிக்காவின் பிரபல கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியராக இருந்த அவர், காலனித்துவம் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டவர் Orientalism என்ற இவர் எழுதிய நூல் மிகவும் பிரபலமானது பல பல்கலைக்கழகங்களில் பாடத் திட்ட நூலாக கற்பிக்கப்படுகின்றது. இந்த நூல் ஏகாதிபத்தியம் என்பது (Imperialism) வெறும் இராணுவ அல்லது பொருளாதார ஆக்கிரமிப்பு மட்டுமல்ல, கலாச்சாரம், மொழி, கல்வி, அடையாளம் என்பன ஊடகம் வழியாக மேற்கு உலக எல்லா மேற்கத்திய அறிஞர்களும் வரலாறுகளை மாற்றி தமக்கு சாதகமாக்கி கிழக்கு சமூகங்களின் உள் வேறுபாடுகளை குறைத்துக் காட்டி புவிசார் அரசியல் பொருளாதார நலனுக்காக தமக்கு வேண்டியபடி கோட்ப்பாடுகளை விபரித்தனர் சித்தனித்தனர் எழுதினர் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியது. சர்வதேச சட்டங்களை மதிக்காத எல்லா அத்துமீறல்கழும் சட்டங்களை மீறி நடக்கும் செயல்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் ஆகும் எனவே இன்று அமெரிக்க தான் குற்றம் இழைத்தவர்களாக இருக்கிறார்கள். பலத்தை வைத்துக்கொண்டு இன்று அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் பல ஆகிரமிப்புக்கள் எதிர் காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என நாடுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். வன்முறை மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை அகற்றுவது சிறை பிடிப்பது என்பது உலக அமைதிக்கும் சமாதானத்துக்கும் சர்வதேச நீதி மன்ற சட்டங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையலாம். மனித குற்றங்கள் இழைத்த எந்தத் தலைவர்களையும் சர்வதேச நீதி மன்ற சட்டங்களின் அடிப்படையிலேயே கைது செய்ய முடியும். பலத்தை வைத்துக்கொண்டு இன்று அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் பல ஆக்கிரமிப்புக்கள் எதிர் காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என நாடுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இனி வரும் காலங்களில் பல நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களையும் அமைதியின்மையையும் தோற்றுவிக்க எதிர் காலத்தில் வழி சமைக்கலாம். இது உலக ஒழுங்கில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் மாற்றம் இல்லை. பா.உதயன்✍️
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
இரான் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுவது ஏன்? உண்மையில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,மஷாத்தில் ஒரு குழுவாகத் திரண்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினரைத் தடுக்கும் வகையில் தரையில் மண்டியிட்டு அமர்ந்தனர் 10 ஜனவரி 2026, 09:26 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனவரி 7ஆம் தேதி நிலவரப்படி 24 மாகாணங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவிலும், ஆங்காங்கே சிதறியவையாகவும் காணப்பட்டன. தெஹ்ரானில் அதிகப்படியான போராட்டங்கள் பதிவாகி இருந்தாலும், கடந்த சில நாட்களாக சிறிய நகரங்களில் அரிதாக பெரிய அளவிலான கூட்டங்கள் கூடத் தொடங்கியுள்ளன. இது கவனத்தை தலைநகரில் இருந்து பிற இடங்களுக்கு திருப்பியுள்ளது. இந்த அமைதியற்ற சூழல் குறித்து தெளிவான ஒற்றை விளக்கம் என ஏதுமில்லை. சிலர் இது பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டதாகக் கருதுகின்றனர், மற்றவர்களோ இது நீண்டகால அரசியல் மற்றும் சமூகக் குறைகளின் சமீபத்திய வெளிப்பாடு என்று விவரிக்கின்றனர். தற்போதைய அமைதியற்ற சூழல், 2022-ஆம் ஆண்டு நடந்த மாசா அமினி போராட்டங்களின் எண்ணிக்கையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் அதிகாரிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். போராட்டங்கள் எவ்வளவு பரவலாக நடத்தப்படுகின்றன? சமீபத்திய போராட்ட அலை இரானின் பெரும் பகுதிகளில் விரிவடைந்துள்ள போதிலும், அதில் மக்கள் பங்கேற்கும் விதம், இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப பெருமளவில் மாறுபட்டுள்ளது. ஆரம்பத்தில் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்று டிசம்பர் 28 அன்று, அதாவது போராட்டத்தின் முதல் நாளன்று தெஹ்ரானில் நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான கடைக்காரர்களும் வணிகர்களும் வீதிகளில் இறங்கிப் போராடினர். அடுத்தடுத்த நாட்களில், போராட்டங்கள் பொதுவாகச் சிறிய அளவிலும், சிதறியும், குறுகிய காலமே நீடிப்பதாகவும் இருந்தன. பெரும்பாலும் இவை இரவில் நடைபெற்றதோடு, சில நபர்களைக் கொண்ட குழுக்களாகவே இருந்தன. இந்த முறையில் சுமார் 10 நாட்களுக்கு போராட்டங்கள் தொடர்ந்தன. ஜனவரி 6 முதல், போராட்டத்தின் நிலவியல் ரீதியான போக்கு மாறத் தொடங்கியது. பல சிறிய மற்றும் முக்கியத்துவம் குறைவான நகரங்களில் அரிதான பெரிய அளவிலான கூட்டங்கள் காணப்பட்டன. இதுவொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்று சில உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன. முக்கிய போராட்ட மையங்களில் ஒன்றான மேற்கு மாகாணமான இலாமில் உள்ள அப்தானனில் பெருந்திரளான மக்கள் கூடினர். பட மூலாதாரம்,Middle East Images / AFP via Getty Images ஒரு நாள் கழித்து, சமீபத்திய ஆண்டுகளில் மக்கள் எழுச்சியையே பார்த்திராத வடக்கு கொராசான் மாகாணத்தின் தலைநகரான போஜ்னூர்டில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆர்ப்பாட்டங்கள் பதிவாகின. ஜனவரி 7 மாலை வரை பிபிசி மானிட்டரிங் தொகுத்த தரவுகள், ஒட்டுமொத்தமாக தெஹ்ரானில்தான் அதிக எண்ணிக்கையிலான போராட்டங்கள் நடந்துள்ளதைக் காட்டுகின்றன. இருப்பினும், முதல் நாள் தவிர, தலைநகரில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் ஆங்காங்கும், அளவில் குறைவாகவுமே இருந்தன. இது சில மாகாண நகரங்களில் காணப்பட்ட செறிவான கூட்டங்களுக்கு மாறாக இருந்தது. தெஹ்ரானை தாண்டி, ஃபார்ஸ் மாகாணம், குர்திஷ் மக்கள் வசிக்கும் இலாம் மற்றும் கெர்மான்ஷா மாகாணங்கள், தென்மேற்கில் உள்ள சஹார்மஹால்-பக்தியாரி ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடந்ததைத் தெளிவாகக் காண முடிகிறது. இந்தப் பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் நீண்டகாலப் பொருளாதார வீழ்ச்சி, அதிக வேலையின்மை மற்றும் குறைந்த முதலீடு போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. மொத்தத்தில், இரானின் 31 மாகாணங்களில் 24 மாகாணங்களுக்கு உட்பட்ட 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளன. இரானில் 480-க்கும் மேற்பட்ட மாவட்டங்களும் சுமார் 1,400 நகரங்களும் உள்ளன. இந்தப் போராட்டங்கள் நிலவியல் ரீதியாக விரிவடைந்து இருந்தாலும், அதன் அளவிலும் தீவிரத்திலும் சீரற்றதாகவே உள்ளதை இது குறிக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்தப் போராட்டங்கள் முந்தைய நாடு தழுவிய போராட்டங்களைவிட, குறிப்பாக 2022-இல் மாசா அமினியின் மரணத்திற்குப் பிறகு நடந்த போராட்டங்களைவிட மிகச் சிறிய அளவிலேயே உள்ளன. பட மூலாதாரம்,X படக்குறிப்பு,மஷாத்தின் காணொளிகளில், போராட்டக்காரர்கள் "ஷா நீடூழி வாழ்க" என்று கோஷமிடுவதைக் காண முடியும். போராட்டங்களை எவ்வாறு புரிந்து கொள்வது? தற்போதைய போராட்டங்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. சில ஆய்வாளர்கள் இதைப் பணவீக்கம், நாணயத்தின் உறுதியற்ற தன்மை, குறைவான வாங்கும் திறன் ஆகியவற்றால் தூண்டப்பட்ட பொருளாதார ரீதியான போராட்டமாகப் பார்க்கிறார்கள். போராட்டத்தின் தொடக்க காலத்தில் வணிகர்கள் இதில் பங்கேற்றது இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. மற்றவர்களோ, இந்தப் போராட்டங்கள் ஆழமான, நீண்டகால அதிருப்தியைப் பிரதிபலிப்பதாகவும், இது அரசியல் ஆட்சிக்கு எதிரான பரந்த, ஆனால் ஒருங்கிணைக்கப்படாத எதிர்ப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். தெளிவான தலைமையோ அல்லது கோரிக்கைகளோ இல்லாதது இந்தப் போராட்டங்களை வரையறுப்பதைக் கடினமாக்குகிறது. இது பொருளாதாரக் குறைபாடுகள், அரசியல் ஒடுக்குமுறை, ஒன்று திரட்டப்பட்ட வெறுப்பு ஆகியவற்றின் கலவையாகத் திகழ்கிறது. பெண்ணுரிமை மற்றும் சமூக சுதந்திரத்தை மையமாகக் கொண்டு நடந்த 2022-ஆம் ஆண்டு போராட்டங்களைப் போலன்றி, தற்போதைய போராட்டத்தில் ஒரு தெளிவான ஒருங்கிணைந்த கருப்பொருள் இல்லை. பல இடங்களில், போராட்டக்காரர்கள் மதகுருமார்களின் அமைப்பு மற்றும் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனேயியை இலக்கு வைத்து முழக்கங்களை எழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளனர். முந்தைய போராட்ட அலைகளுடன் ஒப்பிடுகையில், இரானின் கடைசி ஷாவின் மகனும், தற்போது நாடு கடத்தப்பட்டு வசிப்பவருமான ரெசா பஹ்லவிக்கு ஆதரவான முழக்கங்கள் அதிகரித்துள்ளன. இது தற்போதைய அரசியல் அமைப்பின் மீதான ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images படக்குறிப்பு,ரெஸா பஹ்லவி 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தமது தந்தையின் முடிசூட்டின் போது (வலது ஓரம் இருக்கையில் இருப்பவர்) போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் யார்? கடைக்காரர்கள் இந்தப் போராட்டங்களைத் தொடங்கி வைத்தாலும், பல இடங்களில் இதில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை விரிவடைந்துள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் 67 இடங்களில் இருந்து வந்த காணொளிகளை பிபிசி வெரிஃபை உறுதி செய்துள்ளது. பல நகரங்களில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் முக்கியமாகப் போராட்டங்களில் இணைந்துள்ளனர், இது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட குழுவைத் தாண்டிப் போராட்டத்தின் வீச்சை விரிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், பல்வேறு குழுக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறைவாகவே உள்ளது மற்றும் நகரங்களுக்கு இடையிலான தொடர்ச்சியான, அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்புக்குரிய சான்றுகளும் குறைவாகவே உள்ளன. போராட்டத்தின் ஆரம்ப நாட்களில், தப்ரிஸ், இஸ்ஃபஹான், மஷாத், அஹ்வாஸ் உள்ளிட்ட பல வர்த்தக சபைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டன. பொருளாதார அழுத்தங்களை ஒப்புக்கொண்ட போதிலும், "எதிரிக் குழுக்கள்" தங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதாகக் கவலை தெரிவித்து, போராட்டங்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று அவை கூறின. ஜனவரி 7 அன்று தப்ரிஸில் கடைக்காரர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக வந்த செய்திகளை அரசு ஊடகங்கள் உடனடியாக மறுத்தன. தனியாக, குர்திஷ் மக்கள் வாழும் சில பகுதிகளில் ஜனவரி 8 அன்று கடைக்காரர்கள் வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. போராட்டங்களில் மக்கள் பங்கேற்கும் முறைகளும் 2022-இல் இருந்து வேறுபடுவதாகத் தெரிகிறது. சீர்திருத்த ஆதரவு ஆய்வாளர் அப்பாஸ் அப்தி கூறுகையில், மாசா அமினி போராட்டங்களின்போது இருந்ததைவிட இதில் பெண்கள் மிகக் குறைவாகவே பங்கேற்கின்றனர். இந்த மாற்றமே சில சம்பவங்கள் அதிக வன்முறையாக மாறியதற்குக் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். இளைஞர்களின் முக்கியப் பங்கை முன்னிலைப்படுத்திய அவர், சமூகப் பிளவு ஆழமடைவதை அது சுட்டிக்காட்டுவதாகவும் கூறினார். பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,இரானின் இலாம் மாகாணத்தில் உள்ள முக்கிய போராட்ட மையங்களில் ஒன்றான அப்தானனில் பெருந்திரளான மக்கள் கூடினர் அரசு ஊடகங்களும் பாதுகாப்புப் படைகளும் எவ்வளவு விரைவாக பதிலளித்தன? இரானிய ஊடகங்கள் முதல் நாளில் இருந்தே இந்தப் போராட்டங்கள் குறித்த செய்திகளை விரைவாக வெளியிடத் தொடங்கின. அரசு ஒளிபரப்பு நிறுவனம் போராட்டங்கள் குறித்து சுருக்கமாகச் செய்தி வெளியிட்டதோடு, பொது மக்களின் குறைகளை ஒப்புக்கொள்ளும் நேர்காணல்களையும் ஒளிபரப்பியது. இதுபோன்ற போராட்டங்களின்போது இதுவொரு வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை. அதே நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் அதிருப்தியாளர்களின் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்க அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டனர். மூத்த அதிகாரிகள் "நியாயமான" கோரிக்கைகளுக்கும் "கலவரங்களுக்கும்" இடையே வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிட்டனர். உதாரணமாக, தெஹ்ரானில் ஒரு தனிநபர் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை உடனடியாக எதிர் வீடியோ ஒன்றை வெளியிட்டதுடன், அந்தச் செயல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்றும் கூறியது. பாதுகாப்புப் படையினர் தொடக்கத்தில் நிதானமாகச் செயல்படுவது போலத் தோன்றினாலும், ஜனவரி 3-க்குப் பிறகு தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். இது அயதுல்லா காமனேயியின் முதல் பொதுக் கருத்துடன் ஒத்துப் போகிறது. அதில் அவர் "கலவரக்காரர்கள் அவர்களுக்குரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும்" என்று எச்சரித்திருந்தார். அதைத் தொடர்ந்து நீதித்துறையும் விரைவான தண்டனை வழங்கப்படும் என மிரட்டல் விடுத்தது. "பாதுகாப்பு காரணங்களுக்காக" இடையூறுகள் இருப்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இணைய போக்குவரத்து சாதாரண நிலையைவிட சுமார் 35% குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவொரு முழுமையான முடக்கம் என்பதைவிட, ஆங்காங்கே மற்றும் உள்ளூர் ரீதியிலான இடையூறுகள் என்றே அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. படக்குறிப்பு,இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் இணையத்தடை இரானில் பல இடங்களில் வியாழக்கிழமை மாலை முதல் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்காங்கே இணைய சேவை செயல்பாட்டில் இருப்பதாக க்ளௌட் ஃபேர், நெட்ப்ளாக்ஸ் போன்ற இணையதள கண்காணிப்புக் குழுக்கள் தெரிவிக்கின்றன. "போராடுபவர்கள் மீது அரசு படைகளைப் பயன்படுத்தும் விகிதம் அதிகரித்து வருகிறது. இணைய சேவை தடை செய்யப்பட்ட பிறகு அதிகரித்த வன்முறை மற்றும் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளது" என இரான் மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் மஹ்மூத் அமிரை-மோஹத்தாம் அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளார். இணைய சேவை முடக்கத்தின்போது படுகொலைகள் நடப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாதி எச்சரித்துள்ளார். இதுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்? கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன மற்றும் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இருப்பினும் வன்முறையின் அளவு முந்தைய பெரிய அளவிலான போராட்டங்களைவிடக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. 2019 நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போராட்டங்களின்போது குறைந்தது 323 பேர் உயிரிழந்தது குறித்து ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆவணப்படுத்தியது. அதே நேரத்தில் 2022 மாசா அமினி போராட்டங்களின்போது 550க்கும் மேற்பட்ட இறப்புகளை மனித உரிமை அமைப்புகள் பதிவு செய்துள்ளன. இதற்கு நேர்மாறாக, தற்போதைய போராட்டங்களில், பாதுகாப்புப் படையினரின் 14 உறுப்பினர்கள் உள்படக் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. நார்வேவில் செயல்படும் இரான் மனித உரிமைகள் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் 9 குழந்தைகள் உள்பட 51 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது. அத்துடன் 2,277க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் (Human rights activist) என்ற செய்தி முகமை தெரிவித்துள்ளது. சர்வதேச சூழல் ஏன் முக்கியமானது? இஸ்ரேலுடனான ஜூன் மாத போரைத் தொடர்ந்து, பதற்றமான சர்வதேச சூழலில் இந்தப் போராட்டங்கள் விரிவடைந்து வருகின்றன. அந்தப் போரின்போது அமெரிக்கா இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்கியிருந்தது. ஜனவரி 2-ஆம் தேதியன்று, அமைதியாகப் போராடும் போராட்டக்காரர்களை இரானிய பாதுகாப்புப் படையினர் கொன்றால் அமெரிக்கா தலையிடக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார். மேலும் அமெரிக்கா "ஆயத்த நிலையில்" இருப்பதாகவும் கூறினார். ஜனவரி 4 அன்று டிரம்ப் தனது எச்சரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதற்குப் பதிலளித்த இரானிய அதிகாரிகள், அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டியதுடன், இரானின் ஆயுதப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் எச்சரித்தனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய பிரமுகர்கள் இந்தப் போராட்டங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, "வீதியில் இறங்கியுள்ள" இரானியர்களுக்கும், அவர்களுடன் "நடந்து செல்லும் ஒவ்வொரு மொசாட் முகவருக்கும்" தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பாரசீக மொழியில் இயங்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசின் சமூக ஊடகக் கணக்குகள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகள் சில போராட்டக்காரர்களுக்கு தைரியத்தை அளிக்கக்கூடும். ஆனால் அதேநேரம் இது 'வெளிநாட்டுச் சதி' என்ற அதிகாரிகளின் வாதத்தை வலுப்படுத்துவதோடு, இன்னும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்பதைத் தடுக்கும் காரணியாகவும் அமையக்கூடும். அடுத்து என்ன நடக்கும்? அரசாங்கத்தின் கவனம் தற்போது பொருளாதாரத் தீர்வுகளை நோக்கித் திரும்புவது போலத் தோன்றுகிறது. ஜனவரி 3-ஆம் தேதி, அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிர்வாகம், நாடு தழுவிய அளவில் மின்னணு கூப்பன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. விலைவாசி உயர்வில் இருந்து குடும்பங்களைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இருப்பினும், இணையதளங்களில் இத்திட்டத்திற்குப் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர் இதை "அவமானகரமானது" என்று வர்ணித்துள்ளனர். மத்திய வங்கியின் தலைமையில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், நாணயத்தின் நிலையற்ற தன்மை தொடர்ந்து நீடிக்கிறது. ஒருவேளை பொருளாதாரச் சூழல் மேலும் மோசமடைந்து, மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், இந்தப் போராட்டங்கள் ஒரு பெரிய தேசிய இயக்கமாக உருவெடுக்காவிட்டாலும்கூட, தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqj2dp9vkl8o
-
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்
எனது அம்மப்பாவும் கூட்டத்திற்கு போய் மதிலேறிப் பாய்ந்து தப்பி வந்த கதைகள் அம்மாவும் அம்மப்பாவும் சிறுவயதில் கூறுவார்கள்.
-
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள். நானும் இந்த மாநாட்டுக்கு போய் சைக்கிளையும் விட்டுட்டு ஓட்டமும் நடையுமாக வீடு வந்து வீட்டில் அடியும் வாங்கி அடுத்த நாள் போய் பத்திரமாக இருந்த சைக்கிளை எடுத்து வந்தேன். இது பெரியதொரு அனுபவமாக இருந்தது.
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
US will take Greenland the ‘hard way’ if it can’t do it the ‘easy way,’ Trump says. President Donald Trump continued his threats towards Greenland on Friday, as he insisted that if the United States did not act Russia or China could occupy it in the future. Trump said that if he is unable to make a deal to acquire the territory “the easy way,” then he will have to “do it the hard way.” “We are going to do something in Greenland, whether they like it or not, because if we don’t do it, Russia or China will take over Greenland, and we’re not going to have Russia or China as a neighbor,” Trump told reporters at the White House. Greenland’s party leaders, including the opposition, issued a joint statement saying: “We do not want to be Americans, we do not want to be Danes, we want to be Greenlanders. The future of Greenland must be decided by the Greenlandic people.” The US president and his White House officials have been discussing a range of options on how to bring Greenland under US control amid renewed interest in the strategically significant Danish-controlled territory, and has not ruling out a military intervention. The governments of Greenland and Denmark continue to publicly and privately insist it is not for sale. It remains unclear how other NATO members would respond if the US decided to take Greenland by force. European leaders have warned that such a move would have serious consequences for the military alliance. In a joint statement the leaders of France, Germany, the UK, Italy, Poland and Spain said Greenland belongs to its own people. https://www.cnn.com/2026/01/10/politics/us-will-take-greenland-the-hard-way-if-it-cant-do-it-the-easy-way-trump-says
-
பராசக்தி விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது?
பராசக்தி விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? பட மூலாதாரம்,Dawn Pictures ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பராசக்தி திரைப்படத்திற்கு நேற்றுதான் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் யு/ஏ சான்று வழங்கப்பட்டது. அதனுடன் படத்தில் 25 மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதும் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் வசனம் நீக்கப்பட்டிருப்பதும் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதை என்ன? புறநானூறு என்கிற மாணவர் சங்கத்தின் தலைவரான செழியன் (சிவகார்த்திகேயன்) தீவிரமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது காவல்துறை அதிகாரியாக இருக்கும் திரு (ஜெயம் ரவி) போராடும் மாணவர் குழுவை எதிர்கொள்கிறார். அப்போது பெரிய இழப்பைச் சந்திக்கும் சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் இருந்து விலகுகிறார். சில ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தற்போது சிவகார்த்திகேயன் மத்திய அரசு பணியில் உள்ளார். அவரது சகோதரர் சின்னா (அதர்வா) தற்போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் சகோதரர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படுகிறது. கதாநாயகியான ஶ்ரீலீலா, ரத்னமாலா என்கிற வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பராசக்தி திரைப்படம் அரசியல் வரலாறு, நாடகத்தன்மை ஆகிய இரண்டும் கலந்த கலவையாக அமைந்துள்ளதாக தி இந்து விமர்சனம் தெரிவிக்கிறது. "பராசக்தி திரைப்படம், பிழைகள் இல்லாமல் இல்லை. ஆனால் வரலாற்றில் முக்கியமான ஓர் அத்தியாயத்தை காட்சிப்படுத்துவதற்கான சக்திவாய்ந்த முயற்சி. படத்தின் அரசியல் வெளிப்படையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை, நடிகர்களின் நடிப்பு என்பதையும் தாண்டி இசை மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களும் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளன. "பராசக்தி திரைப்படம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக அமைவதற்குத் தேவைப்படும் சரியான அம்சங்களையும் கொண்டுள்ளது," என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Red Giant Movies/X 'கவனிக்க வைக்கும் சிவகார்த்திகேயன்' சிவகார்த்திகேயனின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ள தினத்தந்தி விமர்சனம், "புரட்சி ஒரு பக்கம், எதார்த்தம் மறுபக்கம் என இருவேறு பரிமாணங்களில் சிவகார்த்திகேயன் கலக்கியுள்ளார். இதுவரை காதல், காமெடியில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக புரட்சி, போராட்டம் என்ற பாதையில் பயணித்திருக்கிறார். சாட்டையடி வசனங்களைப் பேசி கவனிக்க வைக்கிறார்" எனத் தெரிவிக்கிறது. "நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல திரைப்படம். முதல்முறையாக அரசியல் பின்னணி கொண்ட திரைப்படத்தில், மொழிப்பற்றுமிக்க கதாபாத்திரத்தில் ஏமாற்றமில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நடிகர் ரவி மோகன் முழுமையான வில்லனாகவே தெரிகிறார்" என்று தினமணி தனது விமர்சனத்தில் குறிப்பட்டுள்ளது. 'சுதா கொங்கரா வீணடிக்கவில்லை' தனது பிற படங்களுடன் ஒப்பிடும்போது கருத்தியல் ரீதியாக அழுத்தமான விஷயத்தை சுதா கொங்கரா பராசக்தியில் தொட்டிருப்பதாகக் கூறும் தினமணி விமர்சனம், "இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் கையிலெடுத்தவர் அதை வீணடிக்கவில்லை. 1965இல் பொள்ளாச்சியில் மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடியவர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆவணமாக்கியது முக்கியமானது" எனத் தெரிவிக்கிறது. சுதா கொங்கராவின் இயக்கத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனமும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறது. "பல்லாண்டுக்கால போராட்டங்களை மூன்று மணிநேரத்திற்கு உள்ளாகச் சொல்வதோடு வலுவான கதாபாத்திரங்களைக் கொண்ட சுவாரஸ்யமான படம் ஒன்றைத் தயாரிப்பது எளிதல்ல. ஆனால் சுதா கொங்கரா அதை வெற்றிகரமாகச் செய்துள்ளார். பட மூலாதாரம்,Dawn Pictures பாராட்டப்படும் ரவி மோகனின் நடிப்பு இந்தப் போராட்டங்கள் மற்றும் அதற்கான காரணங்களைப் பற்றி அறியாதவர்களுக்கும் புரியும்படியாக கதையைச் சொல்வதோடு அதன் தீவிரத்தன்மையை உறுதி செய்வதிலும் சுதா கொங்கரா வெற்றி பெற்றிருக்கிறார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி மோகனின் நடிப்பு பாராட்டப்படும் அதே சூழலில் அவரது கதாபாத்திர அமைப்பு மீது சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. "காவல்துறை அதிகாரியான திருவின் வழிமுறைகள் பற்றி அதிகம் கூறப்பட்டு இருந்தாலும் அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்பது பற்றிய தெளிவில்லை" என தி இந்து விமர்சித்துள்ளது. "தமிழுக்கு ஆதரவான மாணவர்கள் மீது அவருக்கு அவ்வளவு வெறுப்பு ஏன் வந்தது, ஒரு பின்கதை அல்லது ஃப்ளாஷ்பேக் இருந்தால் உதவியாக இருந்திருக்கும். ஆனால் இந்தக் குறையும் சுதா மற்றும் அர்ஜுன் நடேசனின் வலுவான எழுத்தால் சரி செய்யப்படுகிறது. திரு கதாபாத்திரம் பேசும் வசனங்களும் தரமாக இருக்கின்றன" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் தயார் என ரவி மோகனின் நடிப்பைக் குறிப்பிட்டு தினத்தந்தியும் பாராட்டியுள்ளது. "ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட ரவி மோகன், முதல் முறையாக வில்லனாக வெளுத்துக் கட்டியுள்ளார். பார்வையிலேயே கொலை வெறியைக் காட்டுகிறார். தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் தயார். புரட்சிப் புயலாக அதர்வா கலக்குகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பு சேர்க்கிறார்." பட மூலாதாரம்,Red Giant Movies/X காதல் காட்சிகள் கதையைச் சிதைக்கின்றனவா? செழியன், ரத்னமாலா இடையிலான காதல் காட்சிகள் சூரரைப் போற்று படத்தில் வரும் சூர்யா-அபர்ணா பாலமுரளியை நினைவூட்டுவதாகக் கூறும் தி இந்து விமர்சனம், "ஆனால் அதைக் கடந்தும் ஶ்ரீலீலாவுக்கு தன்னை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு கதாநாயகி மற்றும் மூன்று கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் இருப்பது இயக்குநருக்கு மிகப்பெரிய வெற்றி" எனத் தெரிவிக்கிறது. மறுபுறம், முதல் பாகத்தில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா காதல் காட்சிகள் கதையைச் சிதைப்பது போல் இருப்பதாக தினமணி விமர்சித்துள்ளது. அதுகுறித்துத் தனது விமர்சனத்தில், "அங்கு சில நிமிடங்களை நீக்கியிருக்கலாம். மேலும், தமிழ் மொழிக்கான கதையில் கூடுதலாக தெலுங்கும் இணைந்துகொண்டது கொஞ்சம் நெருடல். மதுரை போன்ற காந்தியவாதிகள் சூழ்ந்த ஊரில், அகிம்சை வழிப் போராட்டத்தையும் காட்சிப்படுத்தி இருக்கலாம். இந்தி பிரசார சபா காட்டப்பட்ட அளவுக்கு ஏன் மதுரை தமிழ்ச் சங்கம் காட்டப்படவில்லை? திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருந்தால் கூடுதல் பரபரப்பைக் கொடுத்திருக்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, படத்தின் நீளம் சற்று குறைவாக இருந்திருந்தால் அது மேலும் பலன் அளித்திருக்கும் என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது. "கடினமான ஒரு கதைக் களத்தில், சகோதரர்கள் இடையே பந்தம், கதாநாயகன் - கதாநாயகி இடையிலான உறவு போன்ற மனிதர்கள் இடையிலான பிணைப்பு படத்தை உணர்வுபூர்வமானதாக ஆக்குகிறது. ஆனால் சில இடங்களில் அவை மையக்கருவில் இருந்து விலகியும் செல்கின்றன," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது. படத்தின் இசை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றிக் குறிப்பிடும் தினத்தந்தி விமர்சனம், "ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு 1960 காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது. பரபரப்பான காட்சிகள் படத்திற்கு பலம். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே இருந்தாலும், வலுவான திரைக்கதை அதை மறக்கடிக்கச் செய்கிறது" என்கிறது. துணை கதாபாத்திரங்கள் அழுத்தமாக இல்லை என தினமணி விமர்சித்துள்ளது. "முதல்வராக நடித்தவருக்குப் பதில் வேறு நல்ல நடிகரைப் பயன்படுத்தி இருக்கலாம். பிரபல நடிகர்களான ராணா டக்குபதி, ஃபாசில் ஜோசஃப் கதாபாத்திரங்களும் அழுத்தமாக இல்லை. கேமியோ அளவில் நின்றுவிட்டன." நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து எழுதியுள்ள தினமணி விமர்சனத்தில், "பல இடங்களில் தணிக்கை வாரியம் மியூட் செய்யச் சொன்னதற்கு இணங்க தயாரிப்பு நிறுவனம் தடையும் செய்திருக்கிறது. ஆனாலும், என்ன சொல்ல வந்தார்கள் என்பது புரியும் வகையிலேயே இருப்பதால் அவை பெரிதாக பாதிப்பைத் தரவில்லை. நீக்கச் சொன்ன காட்சிகள் இடம்பெற்றிருந்தால் இந்தப் படம் இன்னும் அழுத்தமானதாக இருந்திருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1m7epxn4ejo
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
அமெரிக்கா மட்டுமல்ல நோட்டோ நாடுகள் அனைத்துமே ஏனைய நாடுகளை சீர்குழைத்து அதன் மூலம் தம் வளங்களை பெருக்கி லாபமடையும் நாடுகள். இந்த நேட்டோ அமைப்பே உடைந்து போகட்டும். அதுவும் தம் அமைப்பில் உள்ள நாட்டால் உடையுமெனில் மகிழ்ச்சி.
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு செலான் வங்கி 50 மில்லியன் ரூபா நன்கொடை 10 Jan, 2026 | 04:51 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு செலான் வங்கி 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது. இதற்கான காசோலையை செலான் வங்கியின் பணிப்பாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர, நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். செலான் வங்கியின் பிரதான செயல்பாட்டு அதிகாரி ரணில் திசாநாயக்க மற்றும் பிரதான நிதி அதிகாரி ஷானுக ஜயரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/235693
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
தம்பி உம்மள பாலிமேர்ண்ட் அனுப்பினது தமிழ் மக்களின் உரிமையை பேச. ஹரினிக்கு வால் பிடிக்க இல்லை. ராஜபக்சகள் தோற்கடிப்பதே முதல் இலக்காம், என் பி பி இல்லையாம்? ஏன் என் பி பி எங்களு எல்லாம் தந்துட்டினமோ? இவர் ஒரு மறைமுக அனுரகாவடி என நினைக்கிறேன். இலங்கைக்குள் சமஸ்டியே வேண்டாம் இரு தேசம் என அழுங்கு பிடியா நிண்டு அத்தனை ராஜதந்தரிகளையும் புறக்கணித்த தம்பி, இப்ப ஒரு மூண்டு மாசமா, இலங்கை சம்பந்தபட்ட அரசியலை முன்னெடுக்கிறார்? இந்த நிலைப்பாடு மாற்றத்துகு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஏன் இந்த மாற்றம்? குடுமி ஏதும் அனுர கையில் மாட்டி கொண்டதோ?
-
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் 10 Jan, 2026 | 05:55 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் சனிக்கிழமை (10) இடம்பெற்றது. சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. https://www.virakesari.lk/article/235700
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அரச ஈட்டு முதலீட்டு வங்கியினால் நிதி நன்கொடை 10 Jan, 2026 | 04:32 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அரச ஈட்டு முதலீட்டு வங்கி 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது. இதற்கான காசோலையை அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவர் மஹீல் கூரகம, வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி இந்திக துஷார அசுரமான்ன மற்றும் ஏ.டபிள்யூ. பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/235690
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக்!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக்! 10 Jan, 2026 | 02:37 PM மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் வெள்ளிக்கிழமை (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை நரம்பியல் சத்திர சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். இதனால் அவர்கள் பெரும் பிரயாண மற்றும் பொருளாதார சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர். இந்த நிலைக்கு தீர்வாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம். எச். எம். ஆஸாத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரின் சேவையில் இந்த கிளினிக் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட கிளினிக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி வெள்ளிக்கிழமை (09) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம். எச். எம். அஸாத் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எம். பிரியதர்ஷன் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எஸ். தர்ஷன், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விசேட கிளினிக் சேவையை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு வைத்தியசாலை பணிப்பாளர் எம்.எச்.எம்.ஆஸாத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/235680
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
- 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
நாடு முழுவதும் அதிரடி வேட்டை: ஒரே நாளில் 861 பேர் கைது; பெருமளவு போதைப்பொருட்கள் மீட்பு! Published By: Digital Desk 1 10 Jan, 2026 | 12:29 PM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (09) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 813 கிராம் ஹெரோயின், 459 கிராம் ஐஸ், 01 கிராம் கொக்கெய்ன், 02 கிலோகிராம் 548 கிராம் கஞ்சா, 6,238 கஞ்சா செடிகள், 35 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 110 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 682 போதை மாத்திரைகள், 751 கிராம் 630 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 01 கிலோகிராம் 235 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 861 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 876 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235671- சிரிக்கலாம் வாங்க
- கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம்.
அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகளே அகற்றப்பட்டுள்ளது Jan 9, 2026 - 11:25 AM கந்தரோடை விகாரை, கதுருகொட விகாரை என பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் நாட்டப்பட்ட பெயர்ப் பலகைகள் நேற்று (08) அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 30 ஆம் திகதி வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக குறித்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில், சுன்னாகம் சந்தைக்கு அருகில், மற்றும் வேறு இரண்டு இடங்களில் 'கந்தரோடை விகாரை' என திசை காட்டும் பெயர் பலகை நாட்டப்பட்டிருந்தது. அத்தோடு சுன்னாகம் சந்தைக்கு அருகில் 'கந்தரோடை விகாரை' என பெயர் பலகை நாட்டப்பட்டிருந்த இடத்தில் தற்போது, சுன்னாகம் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும் எனவும் அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmk6gp7gx03ppo29nrozm8p06- ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
பகிர்வுக்கு நன்றி. நல்லதொரு ஆக்கம்.- எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா
சிறீலங்காவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகார கும்பலின் தலைவனோடு (ராஜபக்ச குடும்பத்தின் அடியாள்) இணைந்து அட்டூழியங்களை செய்த இந்த நபரை சிறையில் அடைத்தமைக்காக மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் . ஆனால் பாரிய குற்றச்செயலில் ஈடுபட்ட இந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆகவே அநுரகுமார அரசும் தமிழ் மக்களை நன்றாகவே ஏமாற்றுகின்றது என்பதற்கு இது நல்ல உதாரணம். இதே குற்றத்தை வேறு ஒரு சாதாரண தமிழ் பொதுமகன் செய்திருந்தால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறைந்தது 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து என்னவெல்லாம் செய்து விசாரணை செய்திருப்பார்கள். Kunalan Karunagaran is with தமிழ் அரசுக் கட்சி தீவகம் - 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.