24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
அமெரிக்காவை இன்னும் முழுசா ஈரானில் இறக்கி விட்டு, தாய்வானை பொருளாதார முற்றுகைக்கு கொண்டு வரும், வேறு வழியில்லாமல் கொங்ஹொங் போல ஒரு ஒப்பந்ததுக்கு தாய்வான் போக வேண்டி வரலாம் என்கிறனர் சிலர்.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
லப்டுப சத்யப்பிராமாணம், லவடி இடவெளிக்குள் இட்டு நிர்ப்ப ஒத்குழைப்பு ஒப்பிவிக்கு முறை அருவமும் உருவமாகி, சிறிமாவுக்கு மீசை முளைத்தால் என் சித்தப்பு , அது உங்களுக்கு பிரியாதூ என் ஏன்ராலுமு உங்கள் அரிவு ஆறை கூரை ஆனால் நான் கிண்டுவதுதான் கிரிபத், ஏன் எறால் பொட்டு அம்மான் சுறா பிடிக்க முடியாது, விஜை படம், திர்ஷா மாமி சுடுவது அப்பளம். அமச்சரவையில் என் மாமா கூஜா ஆனால் நான் பட்டியல் போடமுடியாது, பூஜா பட் சொல்லுவார் பூனம் பாஜ்வா என்று, அது பஜாஜ் சொல்ல விரும்பாத இராணுவ ரகசியம்.
-
அப்பிள்போன் வேணும் தம்பி….
இதாலதான் ஊரும் வெறுத்து போச்சு... உறவும் வெறுத்து போச்சு..உங்கள் பணி தொடரட்டும் அய்யா.🤭
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
நான் புரிவதற்கு இலகுவாக எழுதியிருக்கின்றேன் என்றல்லவா நினைத்தேன்🤣 உண்மையில் பாடல் வரிகளையும், பாடலையும் உருவாக்குவது இலகு. ஆனால் சொற்களில் சமரசம் வேண்டும். அதனை Gemini Pro போன்ற AI tools களிடமே கேட்டால் மாற்றித் தரும். பொருத்தமானதா இல்லையா என்பதை நாங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.😇
-
அப்பிள்போன் வேணும் தம்பி….
மிக அருமையாக இருக்கு அல்வாயான்
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
முதலாவது வீடியோவும் திருத்திய கவிதையும் ஓகே. ஒரே காட்சி மீண்டும் மீண்டும் காட்டப்படுவதும் சலிப்பாக இருக்கு. எனக்கும் AI மூலம் என் கதைகளுக்குப் படங்கள் கீறவேண்டும் என்று எண்ணினாலும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனாலும் நீங்கள் விளக்கமாக எழுதியுள்ளமைக்குப் பாராட்டு. ஆனாலும் காமமும் காதலும் இல்லாமல் யாழில் பல ஆண் ஆளுமைகளுக்கு எழுத முடியவில்லையே என்றுதான் தெரிகிறது.
-
மாயப் போரும் ரெண்டுகால் பூச்சிகளும் - நிலாந்தன்
மேற்காசியப் போர்: தமிழ்மக்களின் நிலைப்பாடு ? - நிலாந்தன் 1991ஆம் ஆண்டு,”ஓபரேஷன் டிசேர்ட் ஸ்ட்ரோம்”- “பாலைவனப் புயல்” என்ற பெயரில் ஒரு படை நடவடிக்கையை, அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஈராக்குக்கு எதிராக முன்னெடுத்தன. 42 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படை நடவடிக்கையின் ராணுவ இலக்கு குவைத் நாட்டுக்குள் புகுந்த ஈராக்கியப் படைகளை அங்கிருந்து அகற்றுவது. இதுதொடர்பாக அப்பொழுது யாழ். பல்கலைக்கழகத்தில், புவியியல் துறையில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்தரங்கில் ஆய்வுரை நிகழ்த்திய புவியியல் துறையைச் சேர்ந்த புலமையாளர் தனது ஆய்வுரையில் “மத்திய கிழக்கு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அப்பொழுது அங்கே பார்வையாளராக வந்திருந்த பௌதீகவியல் துறையைச் சேர்ந்த ஒரு புலமையாளர் உரை நிகழ்த்தியவரிடம் கேட்டார், “ஏன் மத்திய கிழக்கு என்று அழைக்கிறீர்கள்? அது எங்களுக்கு மத்தியகிழக்கு இல்லைத்தானே? அப்படியென்றால் நீங்கள் எங்க நின்று கதைக்கிறீர்கள்? இங்க இருந்தா ? அல்லது ஐரோப்பாவிலிருந்தா ? என்று. அந்தக் கேள்வி ஆழமானது. மத்தியகிழக்கு என்பது பிரித்தானிய குடியேற்றவாத காலத்தில் குடியேற்றவாத நோக்குநிலையில் இருந்து பிரித்தானிய குடியேற்றவாத அதிகாரி ஒருவரால் 1850ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை. பிரித்தானியாவின் நோக்குநிலையில் இருந்து கிழக்கை அவர்கள் தூர கிழக்கு(far East) அண்மை கிழக்கு(near east) மத்திய கிழக்கு (Middle East) என்று பிரித்தார்கள். பின்னர் அந்த வார்த்தை அமெரிக்கரும் கடல்சார் மூலோபாய ஆராய்ச்சியாளருமாகிய அல்பிரட் தாயர் மாகன் என்பவரால் ஆய்வு நோக்கு நிலையில் இருந்து(1902இல்) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதிலிருந்து இந்த வார்த்தை பரவலாக உபயோகிக்கப்படுகிறது. ஆனால் அது பிரித்தானிய “கொலோனியல் நோக்கு நிலையில்”-குடியேற்றவாத நோக்கு நிலையில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை என்பதனால் அதை நிராகரித்து இந்தியாவின் முதலாவது பிரதமர் ஆகிய ஜவஹர்லால் நேரு மேற்காசியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ஆசிய நோக்கு நிலையிலிருந்து அது ஆசியாவின் மேற்கே காணப்படுவதனால் அவ்வாறு அவர் அழைத்தார். எனவே அதை மத்திய கிழக்கு என்று அழைப்பதா அல்லது மேற்காசியா என்று அழைப்பதா என்பது அரசறிவியல் ஒழுக்கத்தின்படி எந்த மையத்திலிருந்து அந்தப் பிராந்தியத்தை நாங்கள் நோக்குகிறோம் என்பதைக் குறிக்கும். ஆனால் அதற்காக இப்பொழுது மேற்கு ஆசியாவை மத்திய கிழக்கு என்று அழைக்கும் ஆசியர்கள் இப்பொழுதும் “கொலோனியல் நீக்கம்” செய்யப்படவில்லை என்று மிகைப்படுத்திக் கூறத்தேவையில்லை. இப்பொழுது ஈரானை ஆதரிப்பவர்களும் மத்திய கிழக்கு என்கிறார்கள். அமெரிக்காவை ஆதரிப்பவர்களும் மத்திய கிழக்கு என்கிறார்கள். இங்கே வார்த்தைகள் அவற்றின் பெறுமதியுணர்ந்து பயன்படுத்தப்படுவது குறைவு. அமெரிக்க எழுத்தாளர் ஏர்ணஸ்ற் ஹெமிங்வே கூறியதுபோல புனிதமிழந்த வார்த்தைகள். ஹெமிங்வே எழுதிய உலகப் புகழ் பெற்ற நாவலாகிய போரே நீ போ(“A farewell to Arms” (1929) என்ற நாவலின் இறுதிப் பகுதியில் கதாநாயகன் சலிப்போடு பின்வரும் பொருள்படக் கூறுவான்… ”போர் நிறுத்தம், சமாதானம், பேச்சுவார்த்தை போன்ற வார்த்தைகளுக்கு இப்பொழுது பொருள் இல்லை. புனிதமும் இல்லை. புனிதம் கெடாமல் இருக்கும் வார்த்தைகள் எவையென்றால், படைப்பிரிவின் பெயர்கள், படை அணிகளின் பெயர்கள், வீதிகளின் பெயர்கள், நகரங்களின் பெயர்கள் மட்டும்தான்”… என்று. எனவே கடந்த மூன்று கிழமைகளுக்கு மேலாக நடந்து வரும் போர்க் களத்தை மத்திய கிழக்கு என்று அழைப்பவர்கள் அநேகமானவர்கள் அதன் சரியான பொருள் உணர்ந்து அழைக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அது நூற்றாண்டு காலமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்,நன்கு பழகிய வார்த்தை என்பதனால் பழக்கதோஷத்தில் அவர்கள் அதை அவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அதை அவர்களுடைய அரசியல் சாய்வாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?. ஆனால் நிகழும் போரில் ஈழத்தமிழர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் இதில் எடுக்கக்கூடிய நிலைப்பாடு யுத்தத்தின் போக்கை மாற்றப் போவதில்லை என்பதனால் தமிழர்கள் நிலைப்பாடு ஒன்றை எடுக்கவேண்டிய தேவை என்ன? என்று ஒரு பகுதியினர் கேட்கின்றார்கள். ஆனால், அரசு இல்லாத, நீதிக்காகப் போராடுகின்ற ஒரு மக்கள் கூட்டம் உலகில் நடக்கும் மோதல்கள் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டை அறத்தின் அடிப்படையில் எடுப்பதா? அல்லது ஒர் அரசுபோல சிந்தித்து முடிவெடுப்பதா? மேற்காசிய யுத்தம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவடையுமாக இருந்தால் அது இப்போதுள்ள உலக அரசியலில் துருவ நிலைப் போக்குகளை மாற்றக்கூடும். எனவே கேந்திர முக்கியத்துவம்மிக்க ஓர் அமைவிடத்தைக் கொண்ட மக்களாகிய ஈழத்தமிழர்கள் இந்தவிடயத்தில் தெளிவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். போர் நிகழ்வது ஆசியக் களம். நேரடியாக மோதுவது இரண்டு ஆசிய நாடுகளும் அமெரிக்காவும். தவிர ஈரானைச் சுற்றியிருக்கும் நாடுகளில் அமெரிக்காவின் தளங்கள் உண்டு. எனவே போர்க்களம் அங்கேயும் விரிவடைந்திருக்கிறது. இதுவரையிலுமான உயிர்ச் சேதத்தைக் கணக்கிட்டால் அதிகமாகக் கொல்லப்பட்டிருப்பது ஆசியர்கள்தான். மிகச்சொற்பமான தொகை அமெரிக்கர்கள்தான் இறந்திருக்கிறார்கள். ஆசியாவுக்கே சேதம் அதிகம். ஆசியாவுக்கே உயிரிழப்புகள் அதிகம். ஆசியர்கள் ஒருவர் மற்றவரோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டதோர் பிராந்திய அரசியல் பின்னணிக்குள் ஆசியர்களாகிய ஈழத் தமிழர்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்? ஆசிய சகோதரத்துவம் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாமா? ஈழத் தமிழர்களின் விவகாரத்தில், இறுதிக்கட்டப் போரில் ஆசிய நாடுகள் ஈழத் தமிழர்களோடு நிற்கவில்லை. ஈரானும் உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகள் அரசாங்கத்தோடுதான் நின்றன. அங்கே ஆசியர்கள் என்பதற்காக அவர்கள் ஈழத் தமிழர்களோடு தமது சகோதரத்துவத்தை நிரூபிக்கவில்லை. மேலும் பொறுப்புக்கூறலுக்கான ஐநா நடவடிக்கைகளிலும் ஆசிய நாடுகள் பெருமளவுக்கு ஈழத் தமிழர்களோடு நிற்கவில்லை. அமெரிக்காவின் மேலாண்மையை அனுசரித்துப்போகும் மேற்கத்திய நாடுகள்தான் பெருமளவுக்கு ஐநா தீர்மானங்களைக் கொண்டு வருகின்றன. அப்படிப் பார்த்தால் கடந்த 16 ஆண்டுகால ஐநாமைய அரசியலின் அடிப்படையில் ஈழத் தமிழர்கள் மேற்கு நாடுகளின் பக்கம் நிற்கவேண்டுமா? ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுதும் பலஸ்தீனத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால் பலஸ்தீன தன்னாட்சி அதிகார அமைப்பானது இலங்கை அரசாங்கத்தோடுதான் நிற்கின்றது. போராடி வென்ற நாடுகளான வியட்நாம்,கியூபா, எரித்திரியா போன்ற நாடுகளும் ஈழத்தமிழர்களோடு இல்லை. அந்த நாடுகள் அறநெறி, நீதிநெறி என்பவற்றின் அடிப்படையிலோ அல்லது நீதிக்கான போராட்டம் என்ற அடிப்படையிலோ ஈழத்தமிழர்களோடு தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தவில்லை. அதேசமயம் ஐநாவில் தீர்மானங்களைக் கொண்டுவரும் மேற்கு நாடுகள் தமிழர்கள் மீது கொண்ட காதலால், அன்பினால் அல்லது அறத்தின் அடிப்படையில் அந்த முடிவை எடுக்கின்றன என்பதல்ல. பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கத்தை தடுப்பதற்கான ஒரு கருவியாக இலங்கை அரசாங்கத்தின் மீது எப்பொழுதும் ஒரு பிடியைப் பேணுவதற்கு அவர்கள் ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையாண்டு வருகிறார்கள் என்பதுதான் ராஜதந்திர யதார்த்தம். இதுதான் அரசுகளின் உலகம். எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டுடன் அல்லது அரசு இல்லாத சிறிய மக்கள் கூட்டத்துடன் வைத்துக்கொள்ளும் உறவு என்பது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார்ந்த நலன்களின் அடிப்படையில்தான் பேணப்படும். அங்கே அறநெறி, நீதிநெறி, பிராந்திய சகோதரத்துவம் போன்றவை கிடையாது. அவையெல்லாம் “அம்புலிமாமா” கதைகளில் வருபவை. ஈழப்போரின் போதும் போருக்கு முன்னரும் பின்னரும் இலங்கை இனப் பிரச்சினையில் பெரும்பாலான நாடுகள் இலங்கை அரசாங்கத்தைத்தான் கையாள முயற்சித்தன. அரசாங்கத்தைக் கையாள முடியாத நிலை வரும்பொழுது அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்காக தமிழ்மக்களை, தமிழ் மக்களின் போராட்டத்தை,தமிழ் மக்களின் அரசியலை ஓர் அழுத்தப் பிரயோக கருவியாக அவை கையாண்டன. இப்பொழுதும் கையாண்டு வருகின்றன. இதுதான் கடந்த சுமார் அரை நூற்றாண்டு கால அனுபவம். இப்படிப்பட்டதோர் குரூர உலகில், அரசு இல்லாத சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத் தமிழர்கள் எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம்? எனது கட்டுரைகளில் நான் திரும்பத்திரும்பக் கூறும் ஓர் ஆபிரிக்கப் பழமொழி உண்டு. “நீ நீதியாக இருக்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்காதே. அவ்வாறு எதிர்பார்ப்பது, நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாது என்று நம்புவதற்கு நிகரானது.” இதுதான் உலக அரசியல்.ஈழத் தமிழர்கள் ஒரு தேசமாகத் திரளும்போது ஜோன் லொகே கூறுவது போல “ஒரு சமூகத்தின் பலமானது அந்தச் சமூகத்தின் தார்மீக ஒருமைப்பாட்டில் தங்கியிருக்கிறது” என்ற அடிப்படையில் திரளவும் வேண்டும். அதேசமயம் அரசுகளின் அரங்கில் ஓர் அரசைப்போலவும் சிந்திக்க வேண்டும். செயற்பட வேண்டும். “புலிகள் சண்டையிடும்போது மலை உச்சியில் அமர்ந்திருந்து அதைப் பார்க்கவேண்டும்” என்ற சீனப் பழமொழி இங்கே பொருத்தமாக இருக்குமா? https://www.nillanthan.com/8211/
-
வீதியோரம்.
இம்முறை நீங்கள் எழுதவே இல்லையா ?
- Today
-
மாயப் போரும் ரெண்டுகால் பூச்சிகளும் - நிலாந்தன்
மாயப் போரும் ரெண்டுகால் பூச்சிகளும் - நிலாந்தன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸ் சொன்னார் “மதம் ஓர் அபின்” என்று. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஹெபர்ட் மார்க்யூஸ் சொன்னார் “நுகர்வுப்பண்டங்களே அபின்” என்று. இந்த நூற்றாண்டில் தகவல் ஓர் அபினா? சமூக வலைத்தள “அல்கோரிதம்” எனப்படுவது ஒருவகை போதை ஊக்குவிப்புத்தான். நீங்கள் எதை தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடி வரும். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்று கண்டு அதை நோக்கி உங்களை ஊக்குவிப்பது. ஒரு போதைப்பொருள் பாவனையாளர் எந்தப் போதைக்குப் பழக்கப்படுகிறாரோ, அதே போதையை அவருக்குத் தொடர்ந்து ஊட்டுவதன் மூலம் அவரை அதற்கு அடிமையாக்கிவிடுவது. அதாவது இலத்திரனியல் அடிமைகள். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் உலகளாவிய பரந்த மாய வலைப் பின்னலுக்குள் சிக்கிய ரெண்டு கால் பூச்சிகள். தகவல் ஒரு போதை மட்டும் அல்ல. கவிஞரும் திசை வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவருமாகிய மு.பொன்னம்பலம் கூறுவார் “தகவல் ஒரு மாயை” என்று. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியோடு அது இப்பொழுது மகா மாயையாக உருவெடுத்துவிட்டது. தகவல் புரட்சியின் ரெண்டுகால் பூச்சிகள் ஒரே சமயத்தில் மாயப் போரின் பலியாடுகளாகவும் இருக்கிறார்கள்; பரிசோதனைக்கூட எலிகளாகவும் இருக்கிறார்கள்; தம்வசமிழந்த பார்வையாளர்களாகவும் இருக்கிறார்கள். இஸ்ரேல் அண்மை ஆண்டுகளாக ஈரானிய தலைவர்கள் தளபதிகள் விஞ்ஞானிகளுக்கு எதிராக முன்னெடுத்து வரும் தாக்குதல்கள் பெருமளவுக்கு மாயத் தொழில்நுட்ப வகைப்பட்டவைதான். இப்பொழுதும் மேற்காசியாவில் திறக்கப்பட்டிருக்கும் போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெரியது. அந்த மாயப் போர்க்களத்தில் அதிகம் பலியாவது ஆசியர்கள்தான். மேற்கு நாடுகள் தங்களுடைய நவீன தொழில்நுட்பத் திறன்களையும் புதிய போர்த் தளபாடங்களையும் கண்டுபிடிப்புகளையும் பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடங்கள் பெருமளவுக்கு ஆசிய, ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க, கிழக்கு ஐரோப்பியப் போர்க் களங்கள்தான். மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் அனேகமாகப் பாதுகாப்பாக இருக்கும். ஏனைய பகுதிகள்தான் புதிய யுத்தத் தளபாடங்களின் பரிசோதனைக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும். குறிப்பாக உலகப் பேரரசு அமேரிக்கா எல்லா யுத்த அரங்குகளுக்கும் வெளியே ,தொலைவில் பத்திரமாக இருக்கிறது. ஒசாமா பின் லேடன்தான் அமெரிக்காவை அதன் வாசற்படிவரை சென்று தாக்கினார். அணுகுண்டை தூய விஞ்ஞானத்தின் வார்த்தைகளில் சொன்னால் அது ஒரு யூதக் குண்டு. அதற்குரிய சமன்பாட்டை கண்டுபிடித்தது யூதரான ஐன்ஸ்டீன். அதனை ஒரு செய்முறையாக மாற்றியவர் யூதராகிய ஓபன் ஹெய்மர். அதனால் பிரயோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் கூறினால் அது முதலில் அமெரிக்க யூதக் குண்டு. ஆனால் அதை அவர்கள் பரிசோதித்த இடம் ஆசிய ஜப்பானில்தான். அணுகுண்டின் முதலாவது பரிசோதனைக் கூட எலிகள் ஆசியர்கள்தான். இப்பொழுது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு முன்னெடுக்கப்படும் மாயப் போரிலும் முதல் பலிகளும் பரிசோதனை கூட எலிகளும் பெருமளவுக்கு ஆசிரியர்களும் ஆபிரிக்கர்களும் உக்ரேனியர்களும்தான். ஆளில்லா விமானங்களின் மாயத் தாக்குதல்கள் அதிகம் நடந்த இடங்கள் ஆசிய, ஆப்பிரிக்க, கிழக்கு ஐரோப்பியப் பிராந்தியங்கள்தான். மூன்றாவது உலகப்போர் என்று ஒன்று இதுவரை நடக்கவில்லை. ஆனால் பனிப் போர் நடந்தது.அந்தப் பனிப் போரானது மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு நிழல் போராக இருந்தது. ஆனால் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் நிஜப் போராக இருந்தது. பேரரசுகளின் நிழல் போரை ஏனைய நாடுகள் நிஜப் போராக முன்னெடுத்தன. ஈழப்போரும் அப்படித்தான். ஜெயவர்த்தனா அமெரிக்காவின் நண்பனாக இருந்தார்.இந்தியா, ரஸ்சியாவின் கூட்டாளியாக இருந்தது. 1983க்குப் பின் ஈழப் போர் எனப்படுவது பனிப்போரின் ஒரு பகுதியாக மாறியது. அதனாலேயே வளர்ந்தது. ஆசிரியர்களாகிய சிங்களவர்களும் ஆசிரியர்களாகிய தமிழர்களும் ஐரோப்பியர்களின் நிழல்போரை நிஜப்போராக முன்னெடுத்தார்கள். ஆசியர்களாகிய, அரசில்லாத, சிறிய ஈழத் தமிழர்கள் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் உசார் மனோ நிலையிலிருந்தும் தற்காப்பு உணர்விலிருந்து விடுபடவில்லை. அதனால்தான் மேற்காசியாவில் போர் வெடித்தபோது யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக வரிசைகள் நின்றன. அதைப் பலரும் நக்கல் அடித்தார்கள். ஆனால் அது யாழ்ப்பாணத்து நோக்கு நிலையில் தவிர்க்க முடியாதது. ஒரு குடா நாட்டு மனோநிலை அப்படித்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தவர்களின் தற்காப்பு உணர்வின் விளைவுதான் சேமிப்பு பண்பாடு. அது குடா நாட்டு மனோநிலையின் பிரதான அம்சம். போர் இந்த சேமிப்பு பண்பாட்டை மேலும் பலப்படுத்தியது. ஒருவகையில் போருக்குள் நின்று நிலைத்தமைக்கு அதுவும் காரணம். போருக்குப் பின்னரும் அந்த மனோநிலை அப்படியே மாறாமல் இருக்கிறது. ஏனென்றால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அதனால் யாழ்ப்பாணத்தவர்களின் மனோநிலை மட்டுமல்ல முழு ஈழத் தமிழர்களின் மனோநிலையும் ஒருவிதத்தில் அமைதியுறாத, கொந்தளித்த, ”அண்செற்றில்ட்” மனோநிலையாகத்தான் காணப்படுகிறது. சதா உஷாராகவும், அளவுக்கு மிஞ்சிய தற்காப்பு உணர்வோடும் காணப்படுகிறது. எனினும் மேற்காசியாவில் யுத்தம் வெடித்த உடனே வரிசையில் நின்ற பலரும் இப்பொழுது தாங்கள் செய்தது சரிதான் என்று திருப்திப்படுகிறார்கள். ஒரு சிறிய மக்கள் கூட்டம் தற்காப்பு உணர்வோடு இருப்பதில், முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதில் தவறில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ராஜதந்திரி என்னிடம் கேட்டார் யாழ்ப்பாணத்தை “ஒரு தூங்கா நகரமாக மாற்ற முடியுமா?” என்று. யாழ்ப்பாணம் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் பல நகரங்கள் இரவு கிட்டத்தட்ட எட்டு மணிக்கு பின் தூங்கும் நகரங்கள்தான். விசேஷமாக வடக்கு கிழக்கில் உள்ள நகரங்கள் அதிகாலையில் சூரியனோடு சேர்ந்து விழித்தெழுவதில்லை. இரவானதும் ஒன்பது மணிக்கு முன்னரே பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுவிடும். அதற்குக் காரணம் தமிழ்மக்களின் கூட்டு உளவியலில் ஒருவித “உளவியல் ஊரடங்குச் சட்டம்”தொடர்ந்தும் அமுலில் இருப்பதுதான் என்று எனது நண்பன் ஒருவர் கூறுவார். இந்த “உளவியல் ஊரடங்குச் சட்டம்” என்பது முன்சொன்னதுபோல அண்செற்றில்ட்டான ஒரு கூட்டு உளவிகளின் விளைவு. இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதவரை அது தொடர்ந்தும் இருக்கும்.2009க்குப் பின்னரான தொடர்ச்சியான புலப்பெயர்ச்சிக்கு அதுவும் ஒரு பிரதான காரணம். அரசில்லாத சிறிய,ஆசிய மக்கள் கூட்டம் ஆகிய ஈழத் தமிழர்கள் மேற்காசியப் போரில் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. ஆனால் அமெரிக்கா போரை இலங்கை கடற்கரையில் இருந்து 19 கடல் மைல்வரை கொண்டு வந்துவிட்டது. ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர் மூழ்கியால் தாக்கப்பட்டது. எனவே இலங்கை போர்க்களத்துக்கு வெளியே இருக்கிறது என்று கூறமுடியாது. மேலும் எரிவாயுவுக்கும் எரிபொருளுக்குமாக வரிசையில் நிற்கும் ஒரு நிலை வந்திருக்கிறது. புதன் கிழமை விடுமுறையாக்கப்பட்டிருக்கிறது. அதாவது போர் நமது குசினி, அலுவலகம் ,பாடசாலை வரை வந்துவிட்டது. அமெரிக்கா எதிர்பார்த்ததுபோல ஈரான் துவண்டு விடவில்லை. தலையை நசக்கினால் பாம்பு செத்துவிடும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நம்பியிருக்கலாம். ஆனால் ஈரான் நின்று பிடிக்கின்றது. இந்தப் போரில் சீனாவும் ரஷ்யாவும் நேரடியாக போர்க்களத்தில் இறங்கவில்லை. ஆனால் ஈரானின் பின்னணிப்பலம் அந்த நாடுகள்தான். நிகழும் போரில் சீனா ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளினதும் பங்களிப்பின் அளவும் பங்களிப்பின் தன்மையும்தான் புதிய உலக வலுச் சமநிலையைத் தீர்மானிக்கும். அவ்வாறு உலக வலுச்சமநிலையில் ஏற்படும் தளம்பல்கள் சிறிய ஈழத் தமிழர்களின் அரசியலிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். பனிப்போர் எப்படி ஈழப் போரில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியதோ அப்படி. கடந்த 16 ஆண்டு காலமாக சீனாவுக்கு எதிரான மேற்கத்திய வியூகத்தின் ஒரு பகுதியாக ஈழத் தமிழர்கள் ஐநாவில் கையாளப்படுவதையும் அவ்வாறுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே பிராந்தியத்தில்,கண்டத்தில், பூகோள அளவில் ஏற்படும் திருப்பகரமான மாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கக்கூடும். சில சமயம் இருக்கின்ற வாய்ப்புகளை மூடவும்கூடும். ஆனால் அவ்வாறு ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஈழத் தமிழ் அரசியலில்,இலங்கை அரசியலில் என்னதான் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தினாலும், அவற்றைக் கையாள்வதற்கு ஈழத் தமிழர்கள் தயாராக இருக்கிறார்களா ? https://www.nillanthan.com/8207/
-
யாழில் விரிவுரையாளரின் படுகொலையும் ; அதன் பின்னணிகளும்
யாழில் விரிவுரையாளரின் படுகொலையும் ; அதன் பின்னணிகளும் ஞாயிறு, 22 மார்ச் 2026 10:27 AM எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனான பிரதான சந்தேகநபரான பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருவதாவது, மூன்று மாதங்களில் முறிந்த திருமண வாழ்க்கை. கொலையின் பிரதான சந்தேகநபரான அரியாலை பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 20) எனும் இளைஞன் விரிவுரையாளரின் மகளான சுவித்தியா (வயது 19) என்பவரை காதலித்து வந்த நிலையில் , கடந்த வருடம் (18 வயது திருமண வயதை எட்டியதும்) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்துள்ளனர். பதிவு திருமணம் செய்து சுமார் 3 மாத காலம் வாழ்ந்த நிலையில் , சுவித்தியா , கணவருடன் வாழ முடியாது. கொடுமைகளுக்கு தான் உள்ளாவதாக கூறி தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதனை அடுத்து ஓரிரு மாதங்களில் தனக்கு விவாகரத்து கோரி யாழ். மாவட்ட நீதிமன்றில் தாயரின் அறிவுறுத்தலில் பிரபல மூத்த சட்டத்தரணி ஊடாக வழக்கு தொடர்ந்துள்ளார். குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை பெண்ணின் கணவன் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது இருந்துள்ளார். இரு தவணைகளுக்கு மேல் சமூகமளிக்காத நிலையில் , வழக்கினை ஒரு முக விளக்கத்திற்கு எடுக்குமாறு சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்த நிலையில் வழக்கு அடுத்த தவணைக்கு திகதியிடப்பட்டது. நள்ளிரவு ஓடு பிரித்து வீட்டிற்குள் இறங்கிய கணவன். வழக்கு தவணைக்கு தான் செல்லாததும் , வழக்கு ஒரு முக விளக்கத்திற்கு சென்று தமக்கு விவாகரத்து கிடைத்து விடும் என அறிந்த கணவனான திவாகர் கடந்த 17ஆம் திகதி பாண்டியன் தாழ்வு பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திய பின்னர் , வீட்டின் ஓட்டை கழட்டி கயிறு மூலம் மனைவியின் அறைக்குள் இறங்கியுள்ளார். அங்கு நித்திரையாக இருந்த மனைவியை எழுப்பி , தனது செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோரி , சமாதானமாகி மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என கோரியுள்ளார். தாயை கொலை செய்த கணவனுடன் கைகோர்த்த மனைவி அதற்கு மனைவி தாம் இருவரும் சேர்ந்து வாழ அம்மா அனுமதிக்க மாட்டார் என கூறியதை அடுத்து , அவர் உயிருடன் இருந்தால் தானே அனுமதிக்க மாட்டார். அவரை கொலை செய்வோம் என கூறி , தாயாரின் அறைக்குள் சென்றுள்ளனர். அங்கு தூக்கத்தில் இருந்த தாயின் கால்களை மகள் அழுத்தி பிடிக்க , மகளின் கணவன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார் உயிரிழந்த தாயின் சடலத்தை படுக்கை விரிப்பினால் (பெட் சீட்) சுற்றி கட்டி , தாயின் காரின் பின் பகுதியில் சடலத்தை மறைத்து வைத்த பின்னர் , கணவன் மனைவியான இருவரும் வீட்டை விட்டு வெளியேறி , கணவனின் மோட்டார் சைக்கிளில் கணவனின் வீட்டிற்கு சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு , வாடகை வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி மீண்டும் தனது வீட்டிற்கு கணவனுடன் வந்துள்ளார். காரில் சடலத்துடன் தப்பியோட்டம் பின்னர் விரிவுரையாளரான தனது தாயின் வங்கி அட்டையையும் நகைகள் சிலவற்றையும் எடுத்து கொண்டு தாயின் காரில் தாயின் சடலத்துடன் பயணித்து , தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றை காட்டில் சடலத்தை வீசி விட்டு காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர். பரந்தன் பகுதியில் தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பணத்தினை பெற்று காரில் தொடர்ந்து பயணித்துள்ளனர். பின்னர் திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் காருக்கு QR பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து தாயின் ஒரு ஜோடி காப்பை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் திருகோணமலையில் வாடகைக்கு வீடொன்றினை பெற்று வாழ்ந்துள்ளார். தாயை காணவில்லை என மகன் முறைப்பாடு அதேவேளை கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை என விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் , சகோதரியின் கணவன் மீது சந்தேகம் நிலவுவதாகவும் குறிப்பிட்டு இருந்துள்ளார். ஆனாலும் பொலிஸார் ஆரம்பத்தில் இதனை ஒரு குடும்ப பிரச்சனையாக கருத்தி விசாரணைகளில் தீவிரம் காட்டாத நிலைமை காணப்பட்டதாகவும் , அதனை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் வடமாகாண மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை தீவிர படுத்தினர் மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்கள் அதேவேளை , தாயின் வங்கி அட்டையை பயன்படுத்தி பரந்தனில் பணம் பெறப்பட்டமை , தாயின் காருக்கு QR மூலம் திருகோணமலையில் எரிபொருள் நிரப்பியமை உள்ளிட்ட தகவல்களை மகன் பொலிஸாருக்கு வழங்கி இருந்தார். அவற்றின் அடிப்படையில் திருகோணமலைக்கு சென்ற விசேட பொலிஸ் குழு , காருக்கு எரிபொருள் நிரப்பிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விசாரணைகளை முன்னெடுத்து , கணவன் - மனைவி இருவரும் திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததனை அறிந்து , அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் மீட்டு ,யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். திருகோணமலையில் மீட்கப்பட்ட கணவன் - மனைவி வெள்ளிக்கிழமை இருவரையும் மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வரும் போது இருவரிடமும் விரிவுரையாளர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இருவரும் அது தொடர்பில் முன்னுக்கு பின் முரணான தகவல்களையே வழங்கி வந்துள்ளனர். யாழ்ப்பாணம் அழைத்து வந்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , நேற்றைய தினம் சனிக்கிழமையும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளையே விரிவுரையாளரை கொலை செய்த சம்பவத்தை கூறி தனது வாக்கு மூலத்தை பொலிஸாரு க்கு மருமகன் கூறியுள்ளார். தாயின் கொலைக்கு நான் உடந்தை இல்லை - மகள் வாக்குமூலம் அதேவேளை , தான் கொலைக்கு எந்தவகையிலும் உடந்தையாக இருக்கவில்லை எனவும் , கணவன் மீதான பயத்தின் காரணமாக அவரது செயற்பாடு குறித்து வெளியில் கூறவில்லை என விரிவுரையாளரின் மகள் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு. மருமகனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூன்று நாட்களின் பின் சடலத்தை மீட்டமையால் , சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். கழுத்து நெரித்தே கொலை. போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் உடலில் காயங்கள் எதுவும் இன்றிய நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. இறுதி கிரியைகள் அதனை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. https://jaffnazone.com/news/55760
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
அது திட்டும் தமிழ் மொழி இல்லை என்பது தெரியாவிட்டால், உங்களுக்கு தமிழ்மொழியும் அரைகுறையிலும் என்பது என்பதை வெளிச்சம் 1) ஒப்புவிப்பதில் - விற்பன்னர். 2) பரீட்சிய சட்டத்துறை - அரை குறை (ஆனால் அதை பாவித்து சிந்திக்க எப்போதும் பின்னிற்பது 2-3 திரிகளில் நீங்களாகவே காட்டியது , இந்த திரியிலும்) 3) தமிழ் - அரைகுறையிலும் குறைவு 4) ஆங்கிலத்தில் அரைகுறை - இந்த திரியில் கூட.. ஆக குறைந்தது அறிந்ததை முன்னுக்கு பின் முரணாக ஒப்புவிப்பு பிரயோகம். 5) அதை கால,நேர, சந்தர்ப்பத்தில் பொருந்தி வருகிறதா என்பது (சிந்தனை) - முற்றாக இல்லை. (இது தனிபட்டது தான், அனல் உங்களை பொறுத்தவரை ஆக குறைந்தது இருக்கவேண்டும்) 6) நீங்களால ஒப்பபுக் கொண்ட தென்னிலங்கை வாழ்க்கையில் சிங்களவரை பற்றி அறிந்ததும் - அரைகுறை (அறிந்து இருந்தால் கிரிபத்தை வழமையான உணவுக்கு ஒப்பாக்கி கருத்து வந்து இருக்காது. சிங்களவர்கள் கிரிபத் உணவை அடிக்கடி உணவாக எடுத்தாலும்.) ஆனால்,இதில் உங்களில் முற்றாக பொறுப்பு சொல்ல முடியாது. ஏனெனில். தமிழர் அப்படி வேறு கலாசாரத்தை அறிவதில் இப்போது கூ ட அக்கறை இல்லை. 7) அமைச்சரவை (கூட்ட) தன்மை / விபரங்கள் - இதை நான் பட்டியலில் எடுக்கவில்லை. ஏனெனில், பொதுவாக எல்லோர்க்கும் அந்த வாய்ப்பு இல்லை.
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
Kjy; கலக்கட்டும். கலக்கட்டும்.சிறிலங்கா சீனாவின்பக்கம்தான் நிற்கும். பிராந்திய வல்லரசுக்கு தமிழர்தாயகத்தின் அருமை புரியட்டும். காலம் கடந்த ஞானம் எதற்கும் உதவாது.
-
ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ!
ராஜபக்ஷ!
-
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
இப்ப இஸ்ரேலுக்கு பலஸ்தீன மக்களின் வலியின் கனம் புரிந்திருக்கும்
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
உலகம் முழுவதும் இதே ஏக்கம் தான். தாய்வான் தானே விழுமோ?
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
டிரம்ப் வருகுன முன்பே, பைடன் மேலாண்மை கப்பிலே எடுத்தெகென் கிழிலுடேனென்று எழுதி வைத்த யுகக் கதை… அரசியல் அலைகள் அடங்காதே ஓட, அறிவின் அலை மட்டும் கரை சேர மறுத்ததோ என எண்ணினேன். “புலிட ல் வேண்டாம்” எனும் புலவர் சொல் காற்றில் பறந்தாலும், உறவினர் சொன்ன டகு டகி டகி டகு டங்கு டிங்கு முந்து முந்து மயிலோன் முந்து எனும் மந்திரம் மட்டும் மனதில் முளைத்தது வியப்பே! குந்தவைப் பிராட்டியார் குந்தவைத்த இடத்தில் சத்யா நாடெல்லா நின்றாராம், பார்தீபன் நாயுடு வாசிங்டன் சுந்தர் பிச்சை “நன்றே கற்கை புகினும்” என நூலோடு நெஞ்சோடு நின்றாராம். ஆனால்… அரசியல் புரியாதோர் உளறல் மட்டும் புராணம் போல வளர, உண்மை மட்டும் களமேகன் எழுதிய குறள் போல மறைமறை நின்றது. கதை சொல்லும் குரல் பெரிது, அறிவு சொல்லும் குரல் சிறிது — அதனால்தான் இவ்வுலகில் உளறல் தான் முதன்மை, உண்மை தான் துணை!
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
நேற்று புளோரிடாவில் ரசியாவுடன் நடத்திய பேச்சும் தோல்வியாம். செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
-
தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி?
தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கோட்டையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரதத்திற்கு, இப்போது 'பெட்ரோல்' போடக் கூடப் பணமில்லாமல் என்ஜின் முனகிக் கொண்டிருக்கிறது. “தளபதி வருவார்... மாற்றத்தைக் தருவார்" என்று காத்திருந்த நிர்வாகிகளுக்கோ, இப்போது "கடன் காரன் வருவான்... கழுத்தைப் பிடிப்பான்" என்ற பயமே மேலோங்கி நிற்கிறது. தவெக-வின் தற்போதைய நிலைமையை 'ஆக்ஷன்' படம் என்று நினைத்து உள்ளே வந்தவர்களுக்கு, இப்போது அது 'சோகப் படமாக' நீண்டு கொண்டிருக்கிறது. கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்தியதோடு சரி, அடுத்தகட்ட நகர்வுகளில் தலைமை காட்டும் மந்தகதி அடிமட்டத் தொண்டர்களை அதிர வைத்திருக்கிறது. குறிப்பாக, தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டிய மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், இப்போது கையை விரித்து நிற்கிறார்கள். "கட்சிப் பணிக்காக ஏற்கெனவே கையில் இருந்ததைச் செலவு செய்துவிட்டு, இப்போது வட்டிக்குக் கடன் வாங்கி திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தலைமையோ எட்டிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை" என்பதுதான் மாவட்டச் செயலாளர்களின் குமுறலாக இருக்கிறது. நிதிய நெருக்கடி என்ற புயல், தவெக-வின் அடிமட்டக் கட்டுமானத்தையே ஆட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் களம் என்பது வெறும் ஆக்ரோஷமான பேச்சால் மட்டும் அமைவது அல்ல; அதற்கு 'பணபலம்' என்ற எரிபொருள் மிக அவசியம். ஆனால், தவெக-வின் கஜானாவோ 'ஈ' ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், கட்சியின் உச்சகட்டத் தலைமை (விஜய்) எடுக்கும் முடிவுகள் நிர்வாகிகளை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளன. "கட்சியைக் கொண்டு சேர்க்க நாங்கள் ரத்தம் சிந்துகிறோம், ஆனால் விஜய் அண்ணனோ வசதி படைத்தவர்களை (Rich background) மட்டுமே அருகில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்" என்ற பேச்சு அறிவாலயத்தின் சுவர்களைத் தாண்டி வெளியே ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உள்ளூர் அளவில் செல்வாக்கு இருந்தும், கையில் காசில்லாத காரணத்தால் பல விசுவாசமான நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாகத் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, "தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்ய விஜய் தயாராக இல்லை, மாறாக நிர்வாகிகளையே நிதியைத் திரட்டச் சொல்கிறார்" என்ற தகவலும் தீயாய்ப் பரவுகிறது. பல நிர்வாகிகள் மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கட்சியே வேண்டாம் என்ற விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளதாக 'சோர்ஸ்கள்' தெரிவிக்கின்றன. தேர்தல் பணிகள் குறித்து எந்தவொரு தெளிவான திட்டமிடலோ அல்லது நிதி ஒதுக்கீடோ தலைமையிடமிருந்து வராதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்குத் தாவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில கடனோடு கட்சி பணிகளை நிறுத்திவிட்டு.. போதும்டா சாமி என்று கிளம்பும் சூழல் உள்ளது. 'வெற்றி நிச்சயம்' என்று முழங்கிய தவெக, இப்போது 'நிதி நெருக்கடி' என்ற சுழலில் சிக்கித் தவிக்கிறது. விஜய் தன் 'பர்ஸ்' கயிற்றைத் தளர்த்துவாரா அல்லது தொண்டர்களே தங்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். https://www.tamilmirror.lk/cinema/தமிழகத்தில்-தத்தளிக்கும்-த-வெ-க-அப்போ-விஜய்யின்-கதி/54-374319
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அவர் மட்டுமா, அவரை நம்பிய யாழ் கள ஆய்வளர்கள் 😁😁
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
நிச்சயமாக இதில் சீனாவின் மறை கரம் உள்ளது. நீங்கள் சொன்னது போல் இன்னும் கொஞ்சம் புளிக்க விட்டு தைவானை அணைப்பார்களோ? எங்கள் பிராந்திய வாலரசுக்கு இப்ப வைத்த கலக்கி இருக்கும்.
-
ஹோர்முஸ் நீரிணை: ஜப்பானிய கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி?
ஹோர்முஸ் நீரிணை: ஜப்பானிய கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி? adminMarch 22, 2026 மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக ஜப்பானிய எண்ணெய் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்க ஈரான் முன்வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்த நீரிணையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும், ஜப்பானை ஈரான் ஒரு “எதிரி நாடாக” கருதவில்லை என்பதால், அந்நாட்டு கப்பல்களுக்கு மட்டும் சில விதிவிலக்குகளை அளிக்க முன்வந்துள்ளது. புதிய வரி விதிப்புத் திட்டம்: ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் சோமையே ரஃபி (Somayeh Rafiei) உள்ளிட்டோர், இந்த நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு ‘பாதுகாப்பு வரி’ மற்றும் ‘சுங்கக் கட்டணம்’ விதிக்கும் மசோதாவைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். https://globaltamilnews.net/2026/230837/
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
ஈரான் கதை முடிஞ்சாச்சு அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு யுத்தத்தால் கனவு கண்ட யாழ் கள ஆய்வளர்கள், இப்போ மறை களட்டு திரிவதைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன், அதுக்குமேல் ரம்மை திட்டுறது? அடடா… அதுதான் இன்னும் நகைப்புக்குரிய காட்சி! கதை புரியல, நிலைமை புரியல, ஆனா திட்டுறதுக்கு மட்டும் full confidence!
-
மன்னாரில் காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளான பருவகாலப் பறவைகள்.
மன்னாரில் காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளான பருவகாலப் பறவைகள். adminMarch 22, 2026 மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள் மூன்று(3) வங்காலை பறவைகள் சரணாலய பகுதி ஊடாக அதி வலு கொண்ட காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளாகிய பறவைகளில் இரண்டு உயிரிழந்த நிலையிலும், ஒன்று பலத்த காயமடைந்த நிலையிலும் மன்னார் மாவட்ட வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பறவைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் உரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வெளிநாட்டு பறவைகள் மன்னார் தீவு பகுதிக்கு வருகை தரும் காலமாக உள்ளது.இந்த நிலையில் வருகை தந்த பறவைகளில் மூன்று பறவைகள் மன்னாரில் காற்றாலை மின் சாரத்தை கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டுப் பறவைகளான பிளமிங்கோ (Flamingo) போன்றவற்றை நேரில் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இந்தப் பறவைகளைப் பாதுகாப்பதற்காக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த விபத்து காரணமாக 2 வெளிநாட்டு பறவைகள் உயிரிழந்துள்ளதுடன்,ஒரு பறவை காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/230806/
-
படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக
படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக adminMarch 22, 2026 யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளா் தயாளினி திலீபனின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த மூத்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் இணைந்து அவரை கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்து சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் வீசிய நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/230812/
-
60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி - வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்
60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி - வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும் adminMarch 22, 2026 பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக பயிற்சியை நிறைவு செய்ய முடிகின்றது. அத்துடன் பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது எனவே வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியில் தாதியர்களுக்கான பயிற்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். சுகாதார அமைச்சு கடந்த ஆண்டு ஆவணி மாதத்தில் சுமார் 3000 தாதியர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகளை ஆரம்பித்திருந்தது. அதன் விளைவாக, இவ்வாரம் அவர்கள் பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கை முழுவதும் உள்ள 16 தாதியர் பயிற்சி கல்லூரிகளில் இப்பயிற்சிகள் ஆரம்பமாகின்றன. வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியும் வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பயிற்சிகளை வழங்குகின்றன. யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக்காக 100 பயிற்சியாளர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பயிற்சியை 2029 ஆம் ஆண்டில் நிறைவு செய்தவுடன், உடனடி நியமனம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தற்போது பணிபுரியும் தாதியர்களில் சுமார் 50% பேர் இலங்கையின் பிற மாகாணங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் தங்கள் முதல் நியமனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி பின்னர் மாற்றம் பெறுகின்றனர். இதனால், பல வைத்தியசாலைகளில் அனுபவமிக்க (சிரேஷ்ட) தாதியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வடக்கில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தாதியர் பயிற்சியைத் தேர்வு செய்து தொழிலில் நுழைவது மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமான ஒரு வாய்ப்பாகும். பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. தேவையானவர்களுக்கு இலவச இருப்பிட வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதனால், பல்கலைக்கழகப் படிப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்த மூன்று ஆண்டுகளை பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக நிறைவு செய்ய முடிகின்றது.மேலும், பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது. இதேவேளை, பல பல்கலைக்கழகங்கள் BSc Nursing பட்டப்படிப்பையும் வழங்குகின்றன. அவற்றை முடித்தவர்கள் ஆறு மாத உள்ளகப் பயிற்சிக்குப் பிறகு வைத்தியசாலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். தாதியர்கள் தங்கள் தொழிலில் ஈடுபட்ட பின்னரும் பல்வேறு கட்டங்களில் மேலதிக பயிற்சிகளைப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆதார வைத்தியசாலைகள், பொது வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், தேசிய வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் நிபுண மருத்துவர்கள் பணியாற்றுவதால், விஷேட சேவைக்கு ஏற்ப தாதியர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் திறமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. தாதியர் பயிற்சி கல்லூரிகளில் மூன்று ஆண்டுகள் பயின்ற பின் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படுகிறது. பலர் பின்னர் பணியில் இருக்கும் போது BSc Nursing பட்டப்படிப்பையும் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றனர். அதன் பின்னர் MSc மற்றும் PhD போன்ற உயர் பட்டப்படிப்புகளையும் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் தாதியர்கள் பேராசிரியர்களாக உயர்ந்து விளங்குகின்றனர். அதேபோன்று, இலங்கையிலும் இத்தகைய உயர்வுகளை அடையும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, தாதியர் தொழில் என்பது சேவை உணர்வுடன் கூடியதோடு, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளும் கொண்ட ஒரு சிறந்த துறையாகும். ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவர் தாதியராக இருந்தால், அந்தக் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் சுகாதார சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது. அவர்களால் பிறரை சரியான சிகிச்சை சேவைகளுக்கு வழிநடத்தவும் முடிகிறது. பயிற்சி காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளன. பயிற்சி பெறும் காலத்தில், வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று அனுபவம் பெறுவதன் மூலம், பின்னாளில் எளிதாக கடமையாற்றும் திறனை அவர்கள் வளர்த்துக் கொள்கின்றனர். தற்போது இலங்கையின் அரசாங்க வைத்தியசாலைகளில் சுமார் 42,000 தாதியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் 6000 பேர் பயிற்சியில் உள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தற்போது 725 தாதியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சிக்காக 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை எழுதியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த சில மாதங்களில் 2500 புதிய தாதியர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 2022, 2023, 2024 ஆண்டுகளில் பரீட்சை எழுதியவர்கள் சேர்க்கப்படுவார்கள். தாதியர் பயிற்சிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால், இப்பயிற்சியில் சேரும் மாணவர்கள் எதிர்காலத்தில் மும்மொழித் திறன் பெற்றவர்களாக உருவாகின்றனர்.சில தாதியர்கள் மேல்படிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். இலங்கையில் வழங்கப்படும் தரமான பயிற்சி காரணமாக, வெளிநாடுகளில் தொழில் பெறுவதும் எளிதாக உள்ளது. எனவே, வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230821/