Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. நான் அறிந்தது, இரு விமானங்கள் தரை இறங்கியதாக. ஓன்று தாக்குதல் ஏவுகணையில் இருந்து விலத்த, மற்ற்றத்தை எகனை தாக்கியது என்று. அதை விட , இன்னோர் நாட்டின் அமெரிக்கா விமான தளத்தில் நின்று இருந்த இப்படியான சில விமானங்களும் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக. என்றாலும், எந்த உறுத்திப்படுத்தலும் இல்லை.
  3. இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்! தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போது, இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் ஊற்று ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நீர் ஆதாரம் மடு பகுதியில் அமைந்திருந்தது. அதன் நீர்வரத்து ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றராகக் காணப்பட்டது. பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அந்த அடுக்குகளுக்கு இடையிலான இடைவெளிகள் ஊடாக நிலத்தடி நீர் இருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் இனங்கண்ட பின்னரே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர்த்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்காலத்தில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1468315
  4. Today
  5. புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உதவியலாளரான வி.கே. சசிகலா இன்று (13) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி புதிதாக கட்சியை தொடங்கி உள்ளதாக சசிகலா அறிவித்தார். இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, கட்சியின் பெயரை அறிவித்தார். அதன்படி, தனது கட்சியின் பெயர் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (All India Puratchi Thalaivar Makkal Munetra Kazhagam) என்று தெரிவித்ததுடன், தனது கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்றும் அறிவித்தார். தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் போது அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்தார். மக்களுக்கு சேவை செய்வதற்கும், திமுகவை எதிர்த்து நிற்பதற்கும் எம்.ஜி.ஆர். கட்சியை நிறுவினார் என்றும், ஏழைகளின் நலனுக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் நிறுவப்பட்ட கட்சி அது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராகவும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1468304
  6. சும் "லவ்வர்ஸ்" மனக்குரல்: "இப்ப நாங்க பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா, அல்லது மௌனமாக மொள்ளக் கடந்து போவதா🤔?
  7. மிக அண்மையில் மகளின் குழு ஆளில்லாத எரிபொருள் நிரப்பும் விமானத்தை வெற்றிகரமாக இயக்கினார்கள். அதன் காணொளியைத் தேடினேன் காணவில்லை.
  8. சீமானால் பிசிறு என்று அழைக்க பட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சாமானிய தமிழரும் தலைவராகும் ஜனநாயகம் திராவிட கட்சியான அதிமுகவில் தான் உள்ளது என்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
  9. ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு விமானம் விபத்து : தாக்குதல் காரணமல்ல என அறிவிப்பு Published By: Priyatharshan 13 Mar, 2026 | 09:58 AM அமெரிக்காவின் United States Central Command (USCENTCOM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவின் Boeing KC-135 Stratotanker எரிபொருள் நிரப்பு விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. USCENTCOM வெளியிட்ட செய்திக்குறிப்பில், “Operation Epic Fury” என்ற நடவடிக்கையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றான KC-135 விமானம் மேற்கு ஈராக் பகுதியில் விழுந்ததாகவும், மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் எதிரி தாக்குதல் அல்லது நட்பு படையினரின் தவறான தாக்குதல் காரணமாக ஏற்பட்டதல்ல எனவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் தெளிவுபடுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தைச் சேர்ந்த பணியாளர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், சம்பவத்தின் முழுமையான விவரங்களைத் திரட்டுவதற்கு அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்குமாறு USCENTCOM பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து சேவையாற்றும் இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தெளிவான தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/240856
  10. யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை! 13 Mar, 2026 | 10:32 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்து வந்த பல வணிக நிலையங்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன், பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று வியாழக்கிழமை (12) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் அனுமதியின்றி இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் யாழ்ப்பாண பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இலங்கைக்குள் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளைப் பார்ப்பதோ அல்லது அதற்காகப் பணம் செலுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, சன் டைரக்ட்,வீடியோகான்,டாடா பிளே,டிஷ் டிவி போன்ற சேவைகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோதச் சேவைகள் ஊடாக, இலங்கையிலிருந்து மில்லியன் கணக்கான ரூபா பணம் உத்தியோகபூர்வமற்ற வழிகளில் இந்தியாவிற்குப் பரிமாறப்படுவதாகவும், இதனால் நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தச் சேவைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை மாத்திரமன்றி, அவற்றை வீடுகளில் பயன்படுத்தும் நபர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு பொலிஸாருக்குப் பணித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/240858
  11. மாமியார் படுகொலை வழக்கு: மகனுக்கு உதவியதாக தந்தையும் கைது – இருவரும் விளக்கமறியலில் adminMarch 13, 2026 மாமியாரை படுகொலை செய்து, மாமனாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய தனது மகனுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தந்தையும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த புதன்கிழமை தனது மனைவியின் தாயாரை வாளால் வெட்டி படுகொலை செய்ததுடன், மனைவியின் தந்தையையும் படுகொலை செய்யும் நோக்கில் தாக்கி கடும் காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தராக பணியாற்றும் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாளை மறைத்து வைக்க உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அந்த நபரின் தந்தையாரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், அவர்களை நேற்று (வியாழக்கிழமை) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். விசாரணையைத் தொடர்ந்து, இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230414/
  12. யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம் adminMarch 13, 2026 யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிக்க மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த உத்தரவை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் முதலில் இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்தது. ஆனால், அந்த இரண்டு வார காலம் நிறைவடைந்த பின்னர், இடைக்காலத் தடை உத்தரவை நீடிக்காமல் நீதிமன்றம் கட்டளை வழங்கியது. இதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடும் மீளாய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்து வாதாடியிருந்தார். இந்த நிலையில், மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானத்திற்கு எதிரான இடைக்காலத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மீளாய்வு மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு, வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேன்முறையீட்டு மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. https://globaltamilnews.net/2026/230417/
  13. வீதியோரம். மலர் . ........ 5. அப்போது ஒரு ஜீப் வண்டி வேகமாய் வந்து பிரேக் அடித்து நிக்கிறது. அதை கண்டு இவர்கள் அவளை விட்டுட்டு வெளியே ஓடி வருகிறார்கள். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இவன் தன் காலடியில் கிடந்த தண்ணிபோத்தலை கால்களால் அவளருகில் தள்ளிவிட அவளும் அதை எடுத்து மட மடவென்று குடிக்கிறாள். ஜீப்பில் இருந்து இறங்கியவன் இவர்களிடம் சத்தம் போட்டு எதோ சொல்லி தூசணங்களால் பேசுகிறான். உடனே இவர்கள் அறைக்குள் வேகமாய் ஓடிவந்து இவனது கட்டுகளையும் அறுத்து விட்டு இவனோடு அவளையும் தூக்கிவந்து ஜீப்புக்குள் எறிந்து விட்டு அவர்களும் ஏறிக்கொள்ள ஜீப்பும் வீதியில் ஏறி வேகமாய் செல்கிறது. அப்பொழுதுதான் அவனும் அவளும் ஜீப்பினுள் பார்த்த பொழுது அதற்குள் ஏற்கனவே இரு சிறுவர்கள் குற்றுயிராய் அங்கே கிடக்கிறார்கள். மேகலை : என்னடா அப்படிப் பார்க்கிறாய், அவளது கேள்வியில் அவன் சுயநினைவுக்கு வருகிறான். — ஒன்றுமில்லை மேகலை. — இல்லை இன்று உன் பார்வை ஒரு மாதிரியாய் எனக்குத் தெரிகிறது. ஆனால் அதில் தப்பாக ஏதும் இல்லை என்றும் புரிகிறது. என்ன சொல்லு. — ஏன் மேகலை நீ உன் குடும்பத்தை எங்கு என்று தேடிப்பார்த்து சேர்ந்து கொள்ளக் கூடாது. — இதுவா இவ்வளவு நேரமாய் யோசிச்சனி. அன்று என்னை அந்த நிலைமையில் நீ பாத்தனிதானே. அதற்கு முன் எத்தனை மிருகங்கள். ம் …. குடும்பமாய் வாழ்ந்த அந்த வாழ்க்கை இனி எங்கையடா கிடைக்கப் போகுது. இனி அங்கு போவதற்கும் நான் தயாரில்லை. அதெல்லாம் கனவாகிப் போய் நெடுங்காலமாச்சுது. இனி இப்படியே மிச்ச காலத்தைப் போக்க வேண்டியதுதான். — உன்னைப் போன்ற நிலைமையில்தான் நானும் அவங்களிடம் பிடிபட்டு இருந்தேன் மேகலை. என்னையும் எத்தனை மிருகங்கள் அசிங்கப்படுத்தினதுகள் என்று கணக்கே இல்லை. அது கிடக்கட்டும் விடு….. இனிமேலும் நாங்கள் இப்படியே இருந்திடுவோமா….. — நீ இப்ப என்ன சொல்ல வருகிறாய்…… — ம்…. வந்து …. தயங்குகிறான் — எதுவென்றாலும் பயப்படாமல் சொல்லு….நானும் எதிர்காலம் பற்றி நிறைய யோசிக்கிறதுண்டு. இந்தப் பிள்ளைகளும் இப்ப வளர்ந்து விட்டார்கள்…… — ஏன் மேகலை நாங்கள் சேர்ந்து வாழக் கூடாது. இனி நாங்கள் யாருக்காக எங்களுடைய மிச்ச வாழ்க்கையை வீணாக்க வேண்டும்…….. பின்னடிக் காலத்தில் ஒரு பேச்சுத்துணைக்காகவாவது உரிமையுள்ள ஒரு துணை வேண்டாமா…… — ம்….. எதோ ஒரு காரணத்தோடுதான் நாங்கள் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் விநோ….இல்லையென்றால் அன்றே அவங்கள் எங்கள் நாலுபேரையும் சுட்டு காட்டுக்குள் வீசிவிட்டுப் போயிருக்கலாம். அல்லது நாங்கள் கூட தற்கொலை செய்திருக்கலாம். இல்லையே இப்ப நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதுதானே நிஜம். பொதுவாய் பார்த்தால் இனி நாங்கள் குடும்பத்துடன் போய் சேர்ந்து வாழப் போவதில்லை. இந்தப் பிள்ளைகளுக்காவது நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். — மேகலை, நீ சொல்வதையும் நான் யோசிப்பதுண்டு. — அதுமட்டுமில்லை விநோ இப்பவே இங்கிருக்கும் தொழில் செய்யும் பெண்களும் சரி வேறு சிலரும் சரி எங்களைப் பற்றி தப்பாகத்தான் நினைக்கிறார்கள்…..முகத்துக்கு முன் சிரிப்பதும் அங்காலை போய் கேலி செய்வதையும் நான் கவனித்துக் கொண்டுதான் வாறன். “உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூடேலாது தானே” — விநோ கோபத்துடன் யார் யாரெல்லாம் அப்படி தப்பு தப்பாய் பேசுவது…..சொல்லு இப்பவே போய் அவர்களை இங்கிருந்து விரட்டி விட்டு வருகிறேன். என்று வேகமாக எழும்புகின்றான் . அப்படி எழுந்தவனை கொஞ்சம் பொறு விநோ அவசரப்படாதை என்று அவள் இழுக்க அவனும் எதிர்பாராமல் அப்படியே அவள்மீது சரிகிறான். “எதிர்பாராது வந்த துணையே வந்து என்னை அணையே” என்று அவள் உடலும் அவனை அலுங்காமல் ஏற்றுக் கொள்கிறது “ஆலங்கட்டி மழை அல்லிப்பூவில் விழும்போது அதன் மகரந்தம் சிலிர்த்து சிதறுகின்றது போல்” அந்த அணைப்பினில் அன்பும் பரிவும் மேலோங்க இதுவரை அவர்கள் மனதினில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி இனி ஒரு புது வாழ்வு துவங்க இன்பம் மலர்கின்றது. அன்று கயவர்களால் ஏற்பட்ட காயங்களும் தழும்புகளும் கூட இன்று இந்த இஷ்டப்பட்ட இவன் தொடும் ஸ்பரிசத்தில் வீணையின் தந்திகளாகி நாடிநரம்புகளுக்குள் ஊடுருவி ஹிந்தோளராகத்தில் “ஆனந்த தேன் காற்றாய்” தாலாட்டுகின்றது. நவதுவாரங்களையும் விரல்கள் மீட்டி வருகையில் முகத்தில் நவரசங்களும் கொப்பளிக்கின்றன. சந்தத்தின் மீது தவழ்ந்து செல்லும் சங்கீதம் போல் சந்தமாய் அவன் இருக்க சங்கீதமாய் தாவித் தழுவிக்கொள்கிறாள் . “முழுதாய் ஒரு நுங்கு எடுத்து மூழ் விலக்கி முன்னால் அரிந்து முக்கண்ணை மோந்து ஒரு விரலால் அழுத்தி அடுத்தொரு விரலால் அள்ளியெடுத்து அருந்தியபடி மூச்சுவாங்க ……..”இருவரும் பரவச நிலையினின்றும் மீள்கின்றனர். அவர்களின் கைகள் அனிச்சையாக ஆங்காங்கே கிடக்கும் ஆடைகளை துழாவி எடுத்து அணிந்து கொள்கின்றன. சற்று நேரம் அமைதி ……… அவள் இனம் புரியாத மகிழ்ச்சியில் அவனிடம் சொல்கிறாள் , வாழ்நாள் எல்லாம் விரக்தியிலேயே போய்விடும் என்றுதான் எண்ணியிருந்தேன் இதுவரை, இந்நாள் முதல் உன்னால்தான் இனியெல்லாம் திருநாளாய் ஆகும் என்னும் நம்பிக்கையைத் தருகின்றது . ....... அப்புறம் அவன் சொல்கிறான் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவாவது நாம் திருமணம் செய்தாக வேண்டும் மேகலை. — ஓம் …… ஆனால் எனக்கு இன்னொரு தாலி கட்டுவதில் இஷ்டமில்லை விநோ . — சரி, அப்படியென்றால் இங்கொரு பாதிரியார் வருவாரே அவர் முன்னிலையில் மோதிரம் மாற்றலாமா ….. — மணிமேகலை கொஞ்சம் யோசித்து விட்டு சொல்கிறாள்….தற்போது எங்களுக்கு மறுவாழ்வும் வாழ்க்கைக்கு வழி காட்டியதும் இந்த சாதுக்கள்தான் அதனால் அவர்களின் முன்னிலையில் இங்கிருக்கும் நண்பர்களுடன் மாலை மாற்றினால் போதும். ஆடம்பரம் எல்லாம் அவசியமில்லை. அவனுக்கும் அதுவே சரியென்று படுகின்றது. அவளிடம் அப்படியே செய்யலாம் , நீயும் நேரமிருக்கும்போது தலைமை பிக்குவானவரிடம் கேட்டுப்பார் என்கிறான். ம்…..என்று மெதுவாக எழுந்தவள் மென்மையாய் அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டு கடைக்குப் பின்னால் இருந்த வீட்டுக்குப் போகிறாள். நிலவின் ஒளியில் தேவதைபோல் நடந்து செல்லும் அவளழகை இவள் என்னவள் என்னும் நினைப்பில் எதுவித லஜ்ஜையுமின்றி ரசிக்கிறான்……..! மலர் . ........... 🌺 5.
  14. செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்! செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று (12) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன்போது, புதைகுழியை சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டுள்ளது. அத்துடன் புதைகுழி பகுதியில் அகழ்வு பணிகளில் ஈடுபடுவர்களுக்காக மற்றும் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் டித்வா புயல், அதனை தொடர்ந்து யாழில் பெய்த பருவ மழை காரணமாக சேதமடைந்துள்ளன. அவற்றினை அங்கிருந்து அகற்றி, புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வு பணிகளுக்கான தளபாடங்களை கடந்த அகழ்வு பணிகளுக்கு ஏற்பாடு செய்தது போன்று நல்லூர் பிரதேச சபை இம்முறையும் தளபாட வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய மன்று கட்டளையிட்டது. புதைக்குழி பகுதிக்கு நேரில் சென்று கள தரிசிப்பை மேற்கொள்வது என்றும் மன்றில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய நீதவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ரணித்தா, நல்லூர் பிரதே சபை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று புதைகுழியை பார்வையிட்டனர். அதன்போது புதைகுழிக்குள் தற்போதும் நீர் தேங்கி நிற்பதனால் எதிர்வரும் 28 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும், ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றில் எடுக்கப்படும் எனவும், ஏப்ரல் 20 ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது எனவும் திகதிகள் இடப்பட்டன. https://athavannews.com/2026/1468255
  15. “Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு! மத்திய கிழக்கு மோதல்களால் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டாலும், தற்போது நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்வது (Working from home) அவசியமில்லை என்று வர்த்தக, வணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (12) தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை மோசமடைந்தால், பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த மோதல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, கப்பல் செலவுகளை அதிகரித்து, சர்வதேச சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. குறிப்பாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் இதனால் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எரிபொருள் விலைகள் ஏற்கனவே உள்ளூரில் சரிசெய்யப்பட்டிருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்குள் புதிய ஏற்றுமதிகள் அதிக விலையில் வரும்போது மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். சில தனியார் எரிவாயு விநியோகஸ்தர்கள் விலைகளை அதிகரிக்க முயற்சித்ததாகவும், ஆனால் அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து விலை நிலைத்தன்மையைப் பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். உலகளாவிய மோதல்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தவுடன் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் பெரும்பாலும் உருவாகின்றன என்பதைக் குறிப்பிட்டு, பீதியடைந்து வாங்குவதைத் தவிர்க்கவும், வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தவும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். https://athavannews.com/2026/1468239
  16. இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்! இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 478 கிலோ கிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் 176 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட மொத்தம் 654 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகள் நேற்று (12) டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு இழுவைப் படகுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி ரூ. 10 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நேற்று உறுதிப்படுத்தினார். இதற்கிடையில், இரண்டு படகுகளிலும் இருந்த மொத்தம் 10 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் நீண்ட தூர கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இழுவைப் படகுகள் அடையாளம் காணப்பட்டன. ஒரு இழுவைப் படகைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 600 கிலோ கிராம்களுக்கு மேல் எடையுள்ள போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஏராளமான சாக்குப்பைகளை கடற்படை வீரர்கள் கண்டுபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதே கப்பலில் இருந்து எட்டு கைத்துப்பாக்கிகள், மெகசின்கள், இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி ஆகியவற்றை கடற்படை மீட்டது. M16 துப்பாக்கி என்பது பொதுவாக பாதுகாப்புப் படைகளின் சிறப்பு உறுப்பினர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இரண்டாவது பல நாள் மீன்பிடி இழுவைப் படகு, ஏனைய படகிற்கு கண்காணிப்பு மற்றும் உதவியை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு மீன்பிடி படகுகளும் சந்தேக நபர்களும் நேற்று டிக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இதுவென்று இலங்கை கடற்படை கூறியுள்ளது. https://athavannews.com/2026/1468249
  17. ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான ட்ரம்பின் அனுமதியுடன் எண்ணெய் விலை சரிவு! ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாக, கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்கா நாடுகளுக்கு 30 நாள் உரிமத்தை வழங்கியது. இது ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாகும் என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார். ஈரான் மோதலினால் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதைத் தடுக்கும் முயற்சியாக, மூலோபாய பெற்றோலிய இருப்பில் இருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை அமெரிக்கா வெளியிடும் என்று அமெரிக்க எரிசக்தித் துறை கூறிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. அந்த வெளியீடு 32 நாடுகளைக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வெளியிடுவதற்கான பரந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். 2026 மார்ச் 12 ஆம் திகதி நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அங்கீகாரம் அளிக்கும் இந்த உரிமம் 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி நள்ளிரவு வொஷிங்டன் நேரம் வரை செல்லுபடியாகும் என்று திறைசேரித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட உரிமத்தின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை (13) காலை எண்ணெய் விலைகள் குறைந்ததுடன், இது விநியோக கவலைகளையும் தணித்தது. GMT நேரப்படி 01.23 மணியளவில் பிரெண்ட் ஃபியூச்சர்ஸ் மசகு எண்ணெய் 71 சென்ட்கள் அல்லது 0.71% குறைந்து ஒரு பீப்பாய்க்கு $99.75 ஆகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் 88 சென்ட்கள் அல்லது 0.92% குறைந்து $94.85 ஆகவும் இருந்தது. முன்னதாக மார்ச் 5 அன்று அமெரிக்க திறைசேரி இந்தியாவிற்கு 30 நாள் விலக்கு அளித்தது, இதன் மூலம் கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெயை புது டெல்லி வாங்க அனுமதித்தது. எரிசக்தி விலைகளைக் கட்டுப்படுத்தும் ஏனைய நடவடிக்கைகளுடன், வளைகுடாவில் கடல்சார் வர்த்தகத்திற்கான அரசியல் ஆபத்து காப்பீடு மற்றும் நிதி உத்தரவாதங்களை வழங்குமாறு ட்ரம்ப் ஏற்கனவே அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அமெரிக்க கடற்படை அப்பகுதியில் கப்பல்களைப் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார். விலைகளைக் கட்டுப்படுத்தும் மற்றொரு முயற்சியாக, எரிசக்தி மற்றும் விவசாயப் பொருட்கள் அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையில் சுதந்திரமாகச் செல்வதை உறுதி செய்வதற்காக, ஜோன்ஸ் சட்டம் எனப்படும் கப்பல் விதியை தற்காலிகமாகத் தள்ளுபடி செய்வது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த விதியை விலக்குவது வெளிநாட்டு கப்பல்கள் அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையில் எரிபொருளை எடுத்துச் செல்ல அனுமதிக்கும், இது செலவுகளைக் குறைக்கும் மற்றும் விநியோகங்களை விரைவுபடுத்தும். வியாழக்கிழமை (12) நிலவரப்படி உலகளவில் 30 வெவ்வேறு இடங்களில் சுமார் 124 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் கடலில் இருப்பதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1468242
  18. இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அதனை வழங்குங்கள்; நாடு திரும்புவோர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அரசுக்கு அழுத்தம் வழங்குங்கள் - இந்திய அரசிடம் சுமந்திரன் வலியுறுத்தல் Published By: Vishnu 13 Mar, 2026 | 05:50 AM (நா.தனுஜா) இந்தியாவிலேயே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து, அங்கேயே குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின்பேரில் கடந்த வார இறுதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் இந்தியா சென்ற குழுவில் அங்கம் வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அங்கு வேறு பல சந்திப்புக்களிலும் பங்கேற்றார். அதன்படி புதுடில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நிறுவனத்தின் நாளந்தா மண்டபத்தில் புதன்கிழமை (11) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென ஆர்.கே.ராதாகிருஷ்ணனால் இயக்கப்பட்ட 'முகமில்லா மனிதர்கள்: இந்தியாவில் தமிழ் அகதிகளின் பயணம்' எனும் தலைப்பில் ஆவணத்திரைப்படமொன்று திரையிடப்பட்டது. அத்திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த எமது ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பதும், தாயகத்தை வலுப்படுத்தவேண்டும் என்பதுமே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இந்தியாவில் வாழும் எமது உறவுகளும், இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் அடுத்த தலைமுறையினரும் அந்த மண்ணிலேயே குடியுரிமை பெற்று கௌரவமாக வாழவேண்டும் என்று விரும்பினால், அதனை எம்மால் மறுதலிக்கமுடியாது. மாறாக அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதுதான் முறையானதாகும். ஆகவே அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப இந்த விடயத்தில் தாயகம் திரும்பவும் அல்லது இந்திய மண்ணிலேயே குடியுரிமை பெறுவதற்கும் அவர்களுக்கு அவசியமான வசதிகளைச் செய்துகொடுப்பது தான் நியாயமானதாகும். அதேவேளை பலர் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு நாட்டம் கொண்டிருக்கின்றனர். எனினும் அவர்கள் தாயகம் திரும்பும்போது, முன்னர் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறினர் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, அவர்கள் தாயகம் திரும்புகையில் அவ்வப்போது கைதுசெய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அவ்வாறு மீண்டும் நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். இருப்பினும் அதனைச் செய்யாமல் இலங்கை அரசாங்கம் இழுத்தடிப்பதனால், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகமும் ஈழத்தமிழ் அகதிகளைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைத்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/240839
  19. உயிர்த்த ஞாயிறு தின விசாரணைகள்: தவறு செய்யாதவர்கள் அஞ்சத் தேவையில்லை - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல Published By: Vishnu 13 Mar, 2026 | 05:44 AM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்யாத எவரும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டமை அரசியல் வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளை குழப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் அரசாங்கம் சட்டத்தை முறையாக அமுல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 12ஆம் திகதி வியாழக்கிழமை மொனராகலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டமை பெரும்பாலான அரசியல்வாதிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கான காரணம் என்ன என எமக்குத் தெரியாது. நாம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதை விடுத்து, வெளியில் அவற்றை குழப்பும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தம்மீது எவ்வித தவறும் இல்லை என்றால், எவரும் பதற்றமடையத் தேவையில்லை. இந்த விசாரணைகளை முடிந்தளவு துரிதமாக நிறைவு செய்வதற்கு அரசாங்கமும் நீதி அமைச்சும் தீர்மானித்திருக்கிறது. எனவே தான் தினந்தோரும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மறுபுறம் வங்குரோத்தடைந்த எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் எவ்வித பாகுபாடும் இன்றி கட்சி பேதமின்றி அரசியலமைப்பின் 12 (01) உறுப்புரையை சரியாகப் பயன்படுத்தும் முறையான அரசாங்கமாக செயற்படுகின்றோம். இது ஜனாதிபதி தலைமைத்துவம் வகிக்கும் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமாகும். இந்நாட்களில் எமது கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் பாரியளவிலான பெருந்தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்கப்படும். அந்த வகையில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டால், விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை கிடையாது என்றவாறு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் முறையாக அழிக்கப்படுவதில்லை என்றும், எனவே அவை சமூக மயப்படுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டு, அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட நீதி அமைச்சின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவின் ஊடாக ஆராயப்பட்டு வருகிறது. அதற்கமைய மாதிரிக்காக மாத்திரம் சிறிய தொகையை வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கை குறித்து அந்த குழு அவதானம் செலுத்தி வருகின்றது. அதேபோன்று ஆழ் கடலில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் குறித்து வழக்கு தொடர முடியுமா என்ற பிரச்சினையும் காணப்பட்டது. எனவே தான் அது குறித்த சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஆழ் கடலில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் குறித்தும் வழக்கு தொடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/240838
  20. கிவுல் ஓயா திட்டம்: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கலந்துரையாட தீர்மானம் Published By: Vishnu 13 Mar, 2026 | 05:28 AM (இராஜதுரை ஹஷான்) கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்ற குழுக்கள் ஊடாக கலந்துரையாடி இணக்கப்பாடொன்றை எட்டியதன் பின்னர் அவ்விடயம் குறித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் சார்ந்த நீரியல் வளங்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து ஆராயும் கூட்டம் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி.லால் காந்த தலைமையில் வியாழக்கிழமை (12) வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம், கடந்த அரசாங்கம் மடு சரணாலயத்தை, மடு தேசிய பூங்காவாக மாற்றியமைத்ததால் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். மடு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மக்கள் வசிக்கின்ற நிலையில் அங்கு காட்டு யானைகளின் தொல்லை காணப்படுகிறது.காட்டு பாதை வழியாக பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதால் அவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சநிலை காணப்படுகிறது. மாந்தை மேற்கு பிரதேச சபையின் அனுமதியுடன் இந்த பாதையை துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது வனவளத்துறை திணைக்களம் அதற்கு இடையூறாக செயற்படுகிறது. அரச நிறுவனத்தின் ஒரு தீர்மானத்துக்கு, பிறிதொரு திணைக்களம் தடையேற்படுத்துகிறது. இதனால் மக்கள் தான் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பி. சத்தியலிங்கம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் வவுனியா –மடு வரையான பாதையில் 22 கிலோமீற்றர் பாதையை செப்பனிடுவதற்கான பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை புதன்கிழமை (11) முன்னெடுத்த போது வனவளத்துறை திணைக்களம் அதற்கு இடையூறு விளைவித்துள்ளது. இதனால் அந்த பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. சரணாலயமாக இருந்த ஒருபகுதியை தேசிய பூங்காவாக அறிவித்ததால் நடைமுறையில் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. மக்கள் வாழும் பகுதிகளில் கூட எவ்வித அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. அனைத்துக்கும் வனவளத்துறை திணைக்களத்திடம் அனுமதி கோர வேண்டிய நிலை காணப்படுகிறது என்றும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த விவசாயம், காணி மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, இந்த விடயங்கள் ஏற்றுக்கொள்ள கூடியதே, மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் . ஆகவே நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வையேனும் முன்வையுங்கள் என்று வனவளத்துறை திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு வனவளத்துறை திணைக்கள அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பி. சத்தியலிங்கம், இவ்வாறான தற்காலிக தீர்வுகள் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக எப்போதும் அமையாது. கொள்கை ரீதியில் தீர்மானங்களை எடுங்கள் அதுவே நிலையானதாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் கிவுல் ஓயா திட்டம் மற்றும் அதனுடனான சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை. நேரம் போதாத காரணத்தால் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. பாராளுமன்ற குழுக்கள் ஊடாக கிவுல்ஓயா திட்டம் குறித்து ஒரு இணக்கப்பாட்டை எட்டி அதனை அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/240836
  21. வெப்பமண்டல சரும நோய்கள் குறித்த சர்வதேச மாநாடு இலங்கையின் சுகாதார சேவைக்கு உலகலாவிய பாராட்டு Published By: Vishnu 13 Mar, 2026 | 05:40 AM (செ.சுபதர்ஷனி) உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள வெப்பமண்டல நாடுகளின் சரும நோய்கள் குறித்த 2ஆவது சர்வதேச விசேட நிபுணர்கள் மாநாடு புதன்கிழமை (11) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமானது. "வெப்பமண்டல வலயங்களிலிருந்து முக்கிய விடயங்கள்" எனும் கருப்பொருளில் நடைபெற்றுவரும் இம்மாநாடு மார்ச் 14ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது. இலங்கை சரும நோய்கள் மற்றும் அழகியல் மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கம் மற்றும் ஜேர்மனிய விசேட நிபுணர்கள் சங்கம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. இதில் ஜேர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த 342 வெளிநாட்டுப் பிரதிநிதிகளும், இலங்கையிலிருந்து 150 நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய சர்வதேச சரும நோய்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிளயேர் புல்லர், குறைந்த வளங்களைக் கொண்டு இலங்கை சுகாதாரத் துறையில் காட்டும் அதீத வினைத்திறனையும் முன்னேற்றத்தையும் வெகுவாகப் பாராட்டினார். உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ள கவனிக்கப்பட வேண்டிய 10 முக்கிய நோய்களில் 7 நோய்கள் வெப்பமண்டல சரும நோய்களுடன் தொடர்புடையவை என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. சுமார் 4 பில்லியன் மக்கள் சரும நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டில் முன்வைக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்மானங்கள் உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் இலங்கை சரும வியாதிகள் சங்கத்தின் தலைவி விசேட வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/240837
  22. இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க விமானப்படையின் போயிங் KC-135 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் (பிப்ரவரி) இராக்கில் ஒரு அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானதை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இது இரண்டு விமானங்கள் தொடர்புடைய ஒரு சம்பவம் என்றும், அதே சமயம், ‘எதிரி நாடு அல்லது நட்பு நாட்டின் தாக்குதலால்’ இது நடக்கவில்லை என்றும் அமெரிக்கா கூறுகிறது. இந்தச் சம்பவத்தில் ராணுவத்தின் KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. மேற்கு இராக்கில் ‘மீட்பு முயற்சிகள் நடந்து வருகின்றன’ என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் கூறுகிறது. சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர், ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா? விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்ன? சம்பவம் எப்போது நடந்தது - மீட்பு நடவடிக்கைகள் சரியாக எங்கு நடைபெறுகின்றன?, ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. KC-135 போன்ற எரிபொருள் நிரப்பும் விமானங்கள் போர்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன, போர் விமானங்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் இலக்கை அடைய நீண்ட தூரம் பறக்க வேண்டியிருக்கும் போது அவற்றுக்கு தேவையான எரிபொருளை நடுவானில் இவை வழங்குகின்றன. எரிபொருள் நிரப்பும் பணிகளின் போது, எதிரிகளால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக விமானங்களின் விளக்குகள் முற்றிலுமாக அணைக்கப்படலாம். இது இராக் வான்வெளியில் நடந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது, ஆனால் அந்தப் பகுதி அண்டை நாடான இரானிலிருந்து எவ்வளவு தூரம் என்பது இதுவரை தெரியவில்லை. KC-135 விமானம் பொதுவாக மூன்று பேர் கொண்ட குழுவைக் கொண்டிருக்கும்- ஒரு விமானி, ஒரு துணை விமானி மற்றும் ஒரு பூம் ஆபரேட்டர். இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.