24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது? வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரம் பட மூலாதாரம்,ANI 15 மார்ச் 2026, 05:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார். இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி வெளியாகிறது. அசாமில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளாவிலும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படுகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் : 30-03-2026 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் : 06-04-2026 வேட்புமனு பரிசீலனை : 07-04-2026 வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் : 09-04-2026 வாக்குப் பதிவு நாள் : 23-04-2026 வாக்கு எண்ணிக்கை : 04-05-2026 தமிழ்நாட்டில் 2021ல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன் ஐந்தாண்டு கால ஆட்சிக் காலம் மே மாதம் முடிவுக்கு வருகிறது. அதேபோன்று, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக ஆட்சி கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. செய்தியாளர் சந்திப்பில் கூறியது என்ன? தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: "இந்தியாவின் கலாசார செறிவையும் பன்முகத்தன்மையையும் தேர்தல்கள் பிரதிபலிக்கின்றன. இதை நோக்கமாகக் கொண்டே எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தகுதிவாய்ந்த ஒரு நபர் கூட விடுபடக் கூடாது என்ற நோக்கில் இந்த பணிகள் நடத்தப்பட்டன. பிஎல்ஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்." என்றார். மேலும், முதன்முறை வாக்காளர்கள் இது மிக முக்கியமான உரிமை. வாக்களிக்கும் உரிமை. அதில் ஆர்வமாக ஈடுபட வேண்டும். அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமாக 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 8.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர். தேனி மாவட்டம் வருஷநாடு பகுதிக்கு பயணிக்க மூன்று மணிநேரமாகும். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் வாக்கு சதவிகிதம் தெரிவிக்கபடும். அனைத்து பிஎல்ஓக்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அனைத்துக் கட்சிகளுடனும் ஏற்கெனவே பலமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 75032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். வாக்குச்சாவடிகளில் கழிவறை, குடிநீர், சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நிலவரம்? 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பிரதானமாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகளுடன் புதிதாக சில கட்சிகளும் இணைந்துள்ளன. தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் சமீபத்தில் இணைந்தார். இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் (மூன்றில் திமுக சின்னத்தில் போட்டியிடும்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், அதிமுக கூட்டணியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2021 தேர்தலில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக-அதிமுக இரு கட்சிகளும் பிரிந்து இருவேறு கூட்டணிகளாக களம்கண்டன. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்கின்றன. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் அதே கூட்டணியில் நீடிக்கிறது. கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து களம்கண்ட அமமுக இம்முறை அதிமுக கூட்டணியிலேயே இணைந்துள்ளது. இதுதவிர, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம் போலவே தனித்து போட்டியிடுகிறது. புதிதாக உருவாகியுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது. 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொண்டர் உருவாக்கிய கட்சியில் தான் இணைந்துள்ளதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியுள்ளார். புதுச்சேரியில் நிலவரம் என்ன? புதுச்சேரியைப் பொறுத்தவரையிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து போட்டியிட்டு ஆட்சியை அமைத்தன. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. என்ஆர் காங்கிரசின் ரங்கசாமி முதலமைச்சரானார். இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகின்றன. 2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மீண்டும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலைப் போன்றே தற்போதும் பாஜக , என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்பதாக அறிவித்துள்ளன. தொகுதிப்பங்கீடு குறித்த இறுதியான முடிவு வெளியாகவில்லை. மறுபுறம், காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4z7qrgeppo
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி
அமெரிக்காவுக்கு இராணுவ விமானப் பயண அனுமதியை நிராகரித்தது சுவிட்சர்லாந்து! Published By: Digital Desk 3 15 Mar, 2026 | 12:21 PM மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் ஈரான் - அமெரிக்கப் போர் நடவடிக்கைகளுக்காகத் தனது வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க இராணுவ விமானங்கள் விடுத்த கோரிக்கைகளைச் சுவிட்சர்லாந்து அரசாங்கம் நிராகரித்துள்ளது. தனது நாட்டின் பாரம்பரிய 'நடுநிலைமைச் சட்டத்தை' சுட்டிக்காட்டி சுவிஸ் அரசாங்கம் சனிக்கிழமை இந்த அதிரடி தீர்மானத்தை அறிவித்தது. அமெரிக்க இராணுவ மற்றும் உத்தியோகபூர்வ விமானங்கள் சுவிஸ் வான்பரப்பைக் கடக்க விடுத்த 05 கோரிக்கைகளை ஆராய்ந்த அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளது. போருடன் நேரடியாகத் தொடர்புடைய இராணுவ நோக்கங்களுக்காகச் செல்லவிருந்த இரண்டு விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகவும், போருடன் தொடர்பில்லாத பராமரிப்புப் பணிகளுக்காகவும் செல்லவிருந்த மூன்று விமானங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241019- இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை அழகன் கனகராஜ் இலங்கைத் தீவின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலிக்கும் ஒரே உணர்வு 'கிரிக்கெட்'. 1996-ஆம் ஆண்டு லாகூர் மைதானத்தில் அர்ஜுன ரணதுங்கவின் படை உலகக் கிண்ணத்தை ஏந்திய அந்தத் தருணம், ஒரு சிறிய தீவை உலக வரைபடத்தில் ஜொலிக்க வைத்தது. அன்று முதல் இன்று வரை, இலங்கை கிரிக்கெட் பல உச்சங்களையும் சரிவுகளையும் கண்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் அத்திவாரம் மிக வலிமையானது. சனத் ஜயசூரியவின் அதிரடி, அரவிந்த டி சில்வாவின் நேர்த்தி, முத்தையா முரளிதரனின் மாயாஜால சுழல் என ஒவ்வொரு ஜாம்பவான்களும் உலக கிரிக்கெட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தனர். பின்னரான காலத்தில் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோரின் அபாரமான துடுப்பாட்டமும், லசித் மாலிங்கவின் துல்லியமான 'யார்க்கர்' பந்துகளும் இலங்கையை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றின. 2014-ஆம் ஆண்டு நாம் வென்ற டி20 உலகக் கிண்ணம், அந்தப் பொற்காலத்தின் இறுதி மகுடமாக அமைந்தது. தற்போதைய சவால்கள்: தடுமாற்றம் எங்கே? கடந்த சில வருடங்களாக இலங்கை அணி ஒருவித இடைமாற்றக் காலத்தைக் (Transition Period) கடந்து வருகிறது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடங்களை நிரப்பக் கூடிய நிலையான வீரர்கள் கிடைக்காதது ஒரு பெரும் பின்னடைவு. ஸ்திரமற்ற துடுப்பாட்டம்: பல போட்டிகளில் வெற்றியின் விளிம்பு வரை சென்று, கடைசி நேரத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுக்கும் நிலை தொடர்கிறது. நிர்வாகச் சிக்கல்கள்: கிரிக்கெட் சபையின் நிர்வாக மாற்றங்கள் மற்றும் பயிற்சிக் கட்டமைப்பில் நிலவும் சில குறைபாடுகள் வீரர்களின் மனநிலையைப் பாதிப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. ஒழுக்கக் கட்டுப்பாடுகள்: மைதானத்திற்கு வெளியேயான சில வீரர்களின் ஒழுக்கமின்மைச் சம்பவங்களும் அணியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தன. எதிர்காலம்: நம்பிக்கையளிக்கும் இளம் குருத்துக்கள் இருப்பினும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை. சமீபத்திய போட்டிகளில் இளம் வீரர்களின் எழுச்சி புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. பந்துவீச்சு பலம்: மதீஷ பத்திரண போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், வனிந்து ஹஸரங்க போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் உலகத்தரம் வாய்ந்த லீக் போட்டிகளில் முத்திரை பதித்து வருகின்றனர். ஆசியக் கிண்ண வெற்றி: 2022-இல் இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தை வென்றது, எத்தகைய சவாலையும் முறியடித்து எம்மால் மீண்டெழ முடியும் என்பதற்கான சான்றாகும். வெற்றிக்கான பாதை என்ன? எதிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை ஏந்த வேண்டுமானால், நாம் சில அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டும்: உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு: பாடசாலை மட்டத்திலிருந்தே திறமையான வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளை வழங்க வேண்டும். மனவலிமை (Mental Toughness): இக்கட்டான சூழலில் பதற்றமின்றி விளையாடும் மனப்பக்குவத்தை இளம் வீரர்களுக்குப் பயிற்சியாளர்கள் வழங்க வேண்டும். நிலையான தலைமைத்துவம்: அடிக்கடி அணித்தலைவர்களை மாற்றாது, ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் அணியைக் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கை கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல; அது எமது மக்களின் அடையாளம். கடந்த காலத்தின் புகழையும், தற்போதைய திறமைகளையும் சரியாக ஒருங்கிணைத்தால், 'சிங்கச் சொப்பனமாக' இலங்கை அணி மீண்டும் உலக அரங்கில் கர்ஜிக்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
கேஸ் இதை விட பாரம் போல இருக்கிறது. அரபு நாட்டில் கணவர் இருக்கும் பெண் ஒருவர் இவருடன் அண்ணா என பழக - இவர் அவருக்கு பிரெஞ் கிஸ் பற்றி எழுதிய மெசேஜ் என பல ஸ்க்ரீன்ஷாட்டுகள் பறக்கிறன. விகடன் பெயர் போட்டே ஒரு கட்டுரையை எழுதி உள்ளது. தலைமைக்கு யார் நெருக்கம் என்பதில் செந்தில் பாலாஜிக்கும் இவருக்கும் நடந்த போட்டியில் இப்படி ஆகி உள்ளதாம். பாலியல் விடயத்தில் கூட சீமானிடம் தகுந்த பயிற்சி பெற்றே வெளியேறி இருக்கிறார்😂.- Today
- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை (காளியம்மாள் -சீமான் ஓப்பீடு). பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது இந்த சமூகத்தின் கண்ணாடி. அங்கே ஊத்தை வருகிறது எண்டால் இங்கேயும் வரும். அதை நாம் விவாதிக்க வேண்டும். அசூசை என ஒதுக்கி தள்ளுவதால் எந்த பலனும் இல்லை என்பது என் நிலைப்பாடு. ஆனால் நிர்வாக முடிவுக்கு கட்டுப்பட்டேன். உங்களை போல் விதிமீறல் செய்து - ரீச்சர் கண்காணிப்பில் இருக்கும் அரிவரி பிள்ளைகள் நிலைக்கு நான் என்றும் இறங்கியதில்லை. பெண் குழந்தைகளை அரைகுறை ஆடையில் ரிக்கார்ட்டு டான்ஸ் ஆடவிடும் இன்ஸ்டாவில் எனக்கு ஒரு வேலையும் இல்லை. அதே போல் முகபுத்தகம் ஒரு பூமர் கூடாரம். தவிர இவை யாழை போல டீசண்டான தளங்கள் அல்ல. யாழில் சபை நாகரீகம் தெரிந்து என்னவும் எழுதலாம். சபை நாகரீகம் தெரியாதவர்களை கூட நிர்வாக மேற்பார்வையில் எழுத விடுவார்கள். ஆனால் புலிகளின் பாடலை, படத்தை போட்டாலே கணக்கை மூடும் முகபுத்தகமும், இன்ஸ்ண்டாவும். இப்படியான தளங்களில் மேற்கின் அடிவருடிகள் கும்மி அடிக்கலாம், என்னால் முடியாது. சிறுவயதில் இருந்து மத நம்பிக்கை அதிகம் இல்லை என்றாலும் நண்பர்கள் கூப்பிட்டா கோவில், சேர்ச், மசூதி எங்கும் போவேன். ஆனால் யார் கூப்பிட்டாலும் கள்ளுதவறணைக்கு போவதில்லை. எனவே உங்கள் அழைப்பை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன். கீழே ஒரு சிச்சுவேஷன் காமெடி இணைத்துள்ளேன். பார்த்து மகிழவும்.- போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?
நீங்கள் ரஸ்யாவுக்கு காவடி தூக்குவது போல் அமெரிக்காவுக்கு நான் தூக்குவதில்லை. அமெரிக்கா வடை சுட தெரியாமல் முழிப்பதில் எனக்கும் சந்தோசமே.- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள். உங்கள் மீதி கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்கிறேன். ஐ நா சபை அங்கீகரித்த எல்லைகளின் படி, 2026 இல் இஸ்ரேல் என்ற ஒரு தேசம் வரைபடத்திலும், நிஜத்திலும் இருக்க வேண்டுமா? இல்லையா? இல்லை எனில் ஏன்?- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
எல்லைதாண்டி இஸ்ரேல் செய்யும் பயங்கரவாதத்தை நிறுத்தாதவரை, பலஸ்தீனர்களது நிலங்களை ஆக்கிரமமிப்பதை நிறுத்தாதவரை, பச்சைக்குழந்தைகளைக் கொல்வதை நிறுத்தாதவரை எதிர்தரப்பு செய்வதை தடுக்கமுடியுமா?. இன்று வளைகுடா நாடுகளைப் பாதுகாப்பது என்ற போர்வையில் இஸ்ரேலைப் பாதுகாக்கவே இவளவு அமெரிக்கப்படைகள் இருந்தனவா என்ற வினா எழுந்துள்ளமை உற்று நோக்க வேண்டிய வினா. எனவே எதிர்காலத்தில் தமது நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களால் தம்மையோ தமது நாட்டையோ பாதுகாக்க முடியாதநிலையில் அவை தேவையா என்ற கேள்வியும் சேர்ந்து எழுந்துள்ளமையானது சிறந்த மாற்றமே.- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
மேற்குத் தனது ஆயுதங்களை ரஸ்யாவில் பரீட்சிக்கலாமென்றால் சீனா இஸ்ரேலில் பரீட்சகக்கூடாதென்று இல்லைத்தானே.(இஸ்ரேலிய நேசர்கள் கோவிக்கப்போகிறார்கள்) போர் முடிவில் எந்தத் தரப்பிற்கும் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதை நிகழ்நிலை நேரநகர்வு உணர்த்துகிறது. ஒருவேளை இறங்கவுள்ள ஈரூடகப்படையணி எண்ணைப்போக்குவரத்துப் பாதையைக் கைப்பற்றினாலும் பாதுகாக்க முடியுமா(?) என்பது வினாவாகவே நிற்பதை ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். இரண்டுவாரத்தைக் கடந்தும் இரண்டு நாடுகள் கூட்டுச் சேர்ந்து ஒருநாட்டை அடிஅடியென்று அடித்தும் ஒருபயனையும் காணமுடியவில்லை. அமெரிக்கத்தலைமை ஆயுத உற்பத்தியாளர்களோடு உரையடியுள்ளதைப் பார்க்கும்போது போர் நீண்டு செல்லப்போகிறதா அல்லது ஆயுதப்பற்றாக்குறையேற்பட்டள்ளதா என்ற வினாவும் உள்ளது. முத்தரப்பும் மக்களை அழித்து உலக பொருண்மியத்தை சிதைக்கும் வேலையைச் சிறப்பாகச் செய்கிறார்கள். இதில் எந்தத் தலைமையும் வெளியே சென்று மக்களது அவலங்களைப் பார்போரல்லவே. ஐ.நாவும் 2008இலேயே தோல்வியுற்ற அமைப்பாகிவிட்டது. உலகம் இப்படியே மாறிமாறி அடிபட்டு அழிந்துபோகும்போலவே தோன்றகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- வீதியோரம்.
வீதியோரம் . மலர் . ......... 10. — சரி மேகலை இனி நாங்கள் இவற்றை மறந்து விட்டு எங்கட அலுவலைப் பார்க்கலாம் ….என்று சொல்லிப் போகிறான். --- நில் விநோ, கொஞ்சம் நில் ஒரு விடயம்……நேற்று காலை இவ்வழியால் பிக்குமார் சென்ற பொழுது நான் கொஞ்சம் புஸ்பங்களை அவர்கள் பாதங்களில் சமர்ப்பித்து விட்டு, அவர்களை வணங்கி பெரிய பிக்குவானவரிடம் நாங்கள் இருவரும் திருமணம் செய்யலாம் என்றிருக்கிறோம். எங்களுக்கு நீங்கள் திருமணம் செய்து வைப்பீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் ஏன் நீங்கள் ஒரு கோவிலில் போய் தாலிகட்டி திருமணம் செய்யலாமே என்று சொன்னார். நான்தான் அவரிடம் உங்களுக்குத் தெரியும்தானே சாமி எனக்கு ஏற்கனவே மணமாகி பிள்ளைகளும் இருக்கின்றனர். துரதிஷ்ட்டவசமாக என் நிலைமை இப்படியாகி விட்டது. பல வருடங்கள் கடந்தும் விட்டன, இதுநாள் வரை அவர்கள் எங்கே இருக்கிறார்கள்,என்ன ஆனார்கள் என்றே தெரியாது. நானும் இவ்வளவு துன்பங்களை அனுபவித்தபின் மீண்டும் அங்கு சென்று வாழ மனம் ஒப்பவில்லை சாமி . மேலும் இப்போது இங்கே என்னையும் விநோதனையும் சேர்த்து கதைகட்டிக் கதைக்கிறார்கள். அதை அப்படியே வளரவிடவும் நாங்கள் விரும்பவில்லை.அதனால் இருவரும் சேர்ந்தே இந்த முடிவெடுத்திருக்கிறோம்…… — அவரும் , உங்களுக்கு வயது வித்தியாசம் இருக்கே, நீ மூத்தவள் இல்லையா…அது உங்களுக்கு சௌகரியப் படுமா என்றுகேட்கிறார். — அது எனக்கு சங்கடமாய் இருந்தாலும் நான் அவரிடம் அதெல்லாம் பார்க்கிற நிலைமையிலா சாமி நாங்கள் இருக்கிறம் …..இங்கு நாமிருவரும் பாலியலை முன்னிலைப் படுத்தி மணமுடிக்க வில்லை , இந்த சமுதாயத்திலும் எமது பிள்ளைகள் மத்தியிலும் மரியாதையாக வாழ விரும்புகிறோம். அன்று நாங்கள் வீதியில் வீசப்பட்டுக் கிடந்தபோது நீங்கள் மட்டும் இல்லையென்றால் இன்று நாங்கள் செத்த இடத்தில் புல்லு முளைத்திருக்கும். எங்களைக் காப்பாற்றி மறுவாழ்வு தந்த தெய்வங்கள் நீங்கள். மேலும் இரண்டு பிள்ளைகள் எங்களுடன் இருக்கிறார்கள். இன்றும் எங்களை அம்மா,அப்பா என்றுதான் கூப்பிடுகிறார்கள். இன்று அவர்கள் வளர்ந்தும் விட்டார்கள் சாமி. அவர்களது எதிர்காலம் பற்றியும் கவலையாய் இருக்கு சாமி என்று சொல்ல ….. —- அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்…..அதிலும் அந்தப் பிள்ளை சுஜிதா நன்றாகப் படிக்கிறாள்….பாடசாலையில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதால் விரைவில் அவவை தலைநகரில் மேற்கொண்டு நல்ல பாடசாலையில் சேர்ந்து படிப்பதற்கு எமது சங்கம் மூலமாக நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று சொன்னவர்…… — அப்ப யுகேந்திரன் பற்றி என்று கேட்க ….. — அவருக்கு படிப்பு கொஞ்சம் கம்மி என்றாலும் விளையாட்டுகளில் நிறைய ஆர்வம் கொண்டவர்….. அதனால் அதற்கேற்றவாறு அவரை நாங்கள் வளர்த்து விடுவோம் என்று சொன்னவர்…. — அப்படியா கேட்க சந்தோசமாய் இருக்கு சாமி…. அவர்களும் கடந்த காலத்துன்பங்கள் எல்லாவற்றையும் மறந்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்…..எனக்கு இன்னொரு தாலி காட்டும் எண்ணமில்லை சாமி ….இங்கு இருப்பவர்கள் எங்களைக் கேவலமாய் பேசுவதை தவிர்க்கத்தான் நாங்கள் விரும்புகிறோம். திருமணத்தை மிகவும் எளிமையாய் செய்தால் போதும் சாமி….என்று சொல்ல அவரும் கொஞ்ச நேரம் மற்ற பிக்குமாரோடும் கலந்து கதைத்து விட்டு வந்து என்னிடம் அடுத்து வரும் போயா தினத்தன்று பகவான் புத்தரின் முன்னிலையில் அவரின் ஆசிகளுடன் உங்களின் திருமணத்தை நடத்தி வைப்பதாகச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்…..என்கிறாள்……! — மிக நல்ல வேலை செய்தாய் மேகலை….சரி நீபோய் வேலையைப் பார்…..நான் இந்த முயலை வெட்டி சுத்தமாக்கிக் கொண்டு வருகிறேன். இதை நாங்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு முயலின் காதைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போகிறான்……! மலர் . .......... 🐭 10.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். - விகடன்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மேற்கு வங்களாம் ஏப்பிரல் 23, 29 திகதிகளில் நடைபெறுகிறது. KKR அணியின் சொந்த மைதானம் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கிறது அசாமில் ராஜஸ்தான் அணி விளையாடும் 2 வது மைதானம் (குவாஹாட்டி)இருக்கிறது- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்- ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு
தம்பர் வாயால் வடை சுடுவதில் வல்லவர் என்பது உலகறிந்ததே, ஆனால் நிஜத்தில் அவர் ஒரு ஆப்பிழந்த குரங்காகவே இருக்கின்றார். அவருடைய கதைகளை அவருடைய விசில் அடிச்சான் குஞ்சுகளே (MAGA supporters ) தற்போது நம்புவதில்லை.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
என்னை சந்தை விலை கூடினால், அமெரிக்க / மேற்கு பொருளாதாரம் படுத்து விடும். ஏனெனில். அமெரிக்கா பெற்றோ டாலர் கடனில் (சுருக்கமாக) இயங்குவது இந்த மாடல் இல்லை என்றால் அமெரிக்கா எப்போதோ இரானின் என்னை வளத்தை தாக்கி இருக்கும். ஹோர்மோஸ் நீரிணையில் இரானின் என்னை கப்பல்களை மட்டும் தாக்கி இருக்கும் அதாவது petro டாலர் என்பது - அமெரிக்காவின் கடனை நிதிவடிவத்துக்கு க்கொண்டு வருவது. இதுவே அமெரிக்கா பொருளாதாரத்தின் அடிப்படை. அது உலகப்பொருளாதாரத்தின் பெரும்பகுதி. pax americana இன் அடிப்படை. இதில் உள்ள சிறப்பு - அமெரிக்கா கடன் பெற்றோ டாலர் ஆல் நிதிவடிவம் ஆக்கப்பட்டு, மீண்டும் அமெரிக்காவுக்கு முதலீடாக வருவது. அதாவது அமெரிக்கா கடன் முதலீடாக வருகிறது. இந்த வட்டத்தை முறித்தால் அமெரிக்கா படுக்கும். (இதுவும் ஒரு காரணம் அமெரிக்கா பசுமை சக்தி, மற்றும் காலநிலை மற்றம் போன்றவற்றை புறக்கணிப்பது, எதிர்ப்பது) அந்த பெரும் முதலீட்டை செய்வது அரபு நாடுகளே, அமெரிக்கா பங்கு மாற்றம் இதர சந்தைகளில் அந்த பெரும் முதலீட்டை செய்வது அரபு நாடுகளே, அமெரிக்கா பங்கு மாற்றம் இதர சந்தைகளில் இப்போதைய (போர் , மற்றும் அமெரிக்கா கடன் நிலையில்) நிலையில் இன்னும் கூர்மையானதை இந்த பிரச்சனை . இது petro dollar உம் ஆக குறைந்தது பகுதியாக படுத்தால்,குறிப்பாக pax americana பகுதியாகவேனும் படுத்துவிடும் படுத்துவிடும். பின் அமெரிக்கா / மேற்கு முன்பு இருந்த நிலைக்கு வரமுடியாது. அமெரிக்கா (எவரின்) எண்ணை வளத்துக்கு அழிவை ஏற்படுத்தினால், இரானின் வலைக்குள் அதுவாக போய் விழுவது. இதில் இரானும் அரபு நாடுகளின் எண்ணெய் வளம், உற்பத்தி கட்டுமானங்களை தாக்கும் இங்கு ஈரான் தான் சொல்கிறது யுவானில் விலை குறிக்கப்படும் எண்ணெய்க்கு வழிவிடுவதை பற்றி, அனல் சீனா அதை சொல்லவில்லை. அதாவது அது இரானின் தெரிவு -அமெரிக்கா / மேட்ற்கு பொறுளாதாரத்தை முறிப்பதத்திற்கு, இரானின் பொருளாதாரத்தை அமெரிக்கா / மேட்ற்கு முறித்தது போல. இதூவும் முக்கிய ஈரான் அமெரிக்கா தளங்களை தாக்குவது - அந்த தளங்கள் பெற்றோ டாலர் அமைப்புக்கு, அரபி நாடுகளுக்கு பாதுகாப்பு - அதனால் அரபுக்கு நாடுகள் பெற்றோ டாலர் அமைப்பை ஏற்பது. அத்துடன் இந்த அரபு நாடுகளும் அமெரிக்கா இரான் தாக்குதலுக்கு பலலவழிகளில் உதவுகின்ன்றன இதை தான் முன்ப வேறு திரியில் சொல்லி இருந்தேன் - ஈரான் அரபு நாடுகளிடம் அறிவுறுத்தியது, இரான் மீது அமெரிக்க தாக்குதலுக்கு வழிகொலு;வத்துக்கு துணைபோவதை கைவிடல் என்பது. அமெரிக்கா எப்போது மற்றவரை பார்த்து நடந்தது? அனால், இபோதையா நிலையில், அமெரிக்கா / மேற்கு ஆப்பிழுத்த குரங்கு என்பதிலும் பாதக நிலை என்பதே பொதுவாக.- தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது : சட்டத்தரணிகளால் முடியுமா? - நிலாந்தன்
தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது : சட்டத்தரணிகளால் முடியுமா? - நிலாந்தன் கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை என்ற அமைப்பு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒரு மேசையில் அமர்த்தியிருக்கிறது. அந்தச் சந்திப்பின் விளைவாக வெளிவந்த செய்திகளின்படியும், உத்தியோகபூர்வ அறிக்கையின்படியும், அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்குமாக இருந்தால் அதைத் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக எதிர்கொள்வது என்று முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த முடிவின்படி சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நோக்கி உழைப்பது என்றும், அதற்காக இலங்கையில் வாழும் சமூகங்களுக்கு இடையிலான சமூக ஒப்பந்தம் ஒன்றை முதலில் எழுதிக்கொள்ளவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. நல்ல விஷயம். சட்டத்தரணிகளே பெரும்பாலும் தமிழ் அரசியலைக் கையாளும் ஒரு மிதவாதப் பாரம்பரியத்தில், சட்டத்தரணிகளின் அமைப்பு ஒன்று இவ்வாறு கட்சிகளை ஒருங்கிணைக்க முன்வந்திருப்பது சில சமயம் பயன்பொருத்தமாக அமையலாம். கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் சிவில் சமூகங்கள்,மதத் தலைவர்கள்,மறைமுகமாக தூதரகங்கள் போன்ற பல்வேறு தரப்புகள் முயற்சித்திருக்கின்றன.ஆனால் இந்த முயற்சிகள் எவையும் முழுவெற்றி பெறவில்லை மட்டுமல்ல,அண்மையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு ஏற்பாடாகியிருந்த ஒரு சந்திப்பு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகால ஈழத்தமிழ் அனுபவத்தைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்க் கட்சிகளை ஒன்றாக்கவேண்டும் என்ற முயற்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைபோல தன் முயற்சியில் மனம்தளராத குடிமக்கள் சமூகங்கள் தொடர்ந்து தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். இதில் ஒரு தொடர்ச்சியைக் காணலாம்.அதேசமயம் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை குடிமக்கள் சமூகங்கள் எப்பொழுதும் உணர்ந்துள்ளன என்பதையும் இது காட்டுகிறது. இது முதலாவது தொகுக்கப்பட்ட அனுபவம். இரண்டாவது தொகுக்கப்பட்ட அனுபவம்,இந்த முயற்சிகள் எல்லாவற்றையும் ஏதோ ஒரு கட்டத்தில் குழப்பியது பெரும்பாலும் தமிழரசுக் கட்சிதான். அதற்கு பிரதான காரணம் என்னவென்றால், அதுதான் உள்ளதில் பெரிய கட்சி.எனவே தானே முதன்மை வகிக்கவேண்டும் என்று அது எப்பொழுதும் எதிர்பார்க்கின்றது. தானே தலைமை தாங்கும் கட்சி என்றும் அது மார் தட்டிக் கொள்கிறது. அதனால் ஒருங்கிணைப்பு முயற்சிகள் தன்னைப் பலவீனப்படுத்தக்கூடாது என்ற முன்எச்சரிக்கை எப்பொழுதும் அந்தக் கட்சியிடம் உண்டு. அதைவிட முக்கியமாக, இந்தச் சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் சிவில் சமூகங்கள் பெரும்பாலும் கஜேந்திரக்குமாருக்கு நெருக்கமானவை என்றும் தமிழரசுக் கட்சியிடம் ஒரு முற்கற்பிதம் உண்டு. இதில் ஒருபகுதி உண்மையுண்டு. எனவே தேர்தல்கள்மூலம் தனது முதன்மையை நிரூபிக்க முடியாத தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியியானது,சிவில் சமூகங்களுக்கு ஊடாக தன்னை முன்னுக்கு கொண்டுவர முயற்சிக்கிறது என்று தமிழரசுக்கட்சி நம்புகின்றது. அதனால் கட்சிகளை ஒருங்கிணைக்க முற்படும் சிவில் அமைப்புகளை தமிழரசுக் கட்சி சந்தேகத்தோடு பார்க்கின்றது அல்லது ஒரு வித ஒவ்வாமையோடு பார்க்கின்றது. அதன் விளைவாக அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் ஏதோ ஒரு கட்டத்தில் குழப்பப்படுகின்றன. கடைசியாக சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணை முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டதையும் இந்தப் பின்னணிக்குள் வைத்துத்தான் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாமல் போனதற்கும் தமிழ் ஐக்கியத்தை பாதுகாக்க முடியாமல் போனதற்கு அடிப்படைக் காரணம் தமிழரசுக் கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான். அவர்கள் தங்களை முதன்மைக் கட்சி என்று கூறிக் கொண்டால் அவர்கள்தானே அதற்குப் பொறுப்பு? எனவே கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால்,தமிழரசுக் கட்சிக்குள் தீர்மானிக்கும் அதிகாரத்தோடு இருப்பவர்களை தமது வழிக்குக் கொண்டு வருவதுதான். இப்படிப்பட்ட தொகுக்கப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் சிந்தித்தால், இப்பொழுது சட்டத்தரணிகள் அமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளில் இரண்டு விடையங்கள் தீர்மானகரமானவைகளாகத் தெரிகின்றன. முதலாவது,இந்த முயற்சியை முன்னெடுக்கும் சட்டத்தரணிகளில் பிரதானிகளாகக் காணப்படுபவர்களுக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்களாகக் காணப்படும் சட்டத்தரணிகளுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது என்பது. அதிலும் குறிப்பாக சுமந்திரனுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையில் பிரதானிகளாகக் காணப்படுபவர்களுக்கும் இடையிலான உறவு சுமுகமானதா என்பது. ஏனென்றால் அவர்கள் ஒரே துறைக்குரியவர்கள். இரண்டாவது விடயம்,இதற்குமுன் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகள் தோற்றுப் போனதற்கு ஒரு காரணம், சிவில் சமூகங்களிடம் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பலம் இருக்கவில்லை என்பதுதான். தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கு அவ்வாறான சக்தி உண்டா?ஏனென்றால் தனியாக அனுசரணை மட்டும் செய்வதனால் அதாவது சம்பந்தப்பட்ட தரப்புகளை ஓரிடத்தில் உட்காரவைத்து அவர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய முரண்பாடுகளைத் தீர்க்கும் விடயத்தில் ஒர் இடை நடுவராகச் செயல்படுவது என்பது அனுசரணை மட்டும்தான். இதற்குமப்பால் சிலவேளை அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிவரலாம்.அதற்கு ஒரு பலம் வேண்டும்.கடந்த 16 ஆண்டுகளிலும் தமிழ்ப் பரப்பில் எந்த ஒரு சிவில் சமூகத்துக்கும் அப்படிப்பட்ட பலம் இருக்கவில்லை. இப்பொழுதும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கு அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் சக்தி இருக்கிறதா? ஒரே துறைக்கு உரியவர்கள் என்பதனால் கட்சித் தலைவர்கள் அவர்கள் சொல்வதை சிலசமயம் செவிமடுக்கலாம். அல்லது தொழில்சார் போட்டி பொறாமை, ஈகோக்கள் இதில் செல்வாக்குச் செகுத்தலாம்.”ஒரே உறைக்குள் இரண்டு வாள்கள் இருப்பதில்லை”. எனவே,மேற்சொன்ன இரண்டு அடிப்படைகளிலும் சிந்தித்தால் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சி வெற்றி பெறுமா? கடந்த 74 ஆண்டு கால தமிழ்த் தேசிய அரசியலை “அப்புக்காத்து அரசியல்” அல்லது “கறுப்புக் கோட்டு அரசியல்” என்று அழைப்பதுண்டு.ஏனென்றால் சட்டத்தரணிகள்தான் அங்கே பெரும்பாலும் பிரதானிகளாகக் காணப்பட்டார்கள்.வாதாடும் திறமையுள்ளவர்கள்தான் நாடாளுமன்றத்தில் வாதாடி தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பார்கள் என்று தமிழ்மக்கள் அப்பாவித்தனமாக நம்பிய காலம் அது.ஆனால் சட்டத்தரணிகளின் அரசியல் கடந்த 75 ஆண்டுகளாக தமிழ் மக்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? கட்சிக்குள்ளேயே ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்கு போடுவது; தங்களுக்கு எதிராக விமர்சிப்பவர்களை வழக்கு போடுவோம் என்று விரட்டுவது; அல்லது வழக்கு போடுவது… போன்ற விடயங்களில்தானே ஒரு பகுதி தமிழ் சட்டத்தரணி அரசியல்வாதிகள் தமது திறமைகளைக் காட்டுகிறார்கள்? ஆனால் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் உள்நாட்டு நீதியின் விரிவைப் பரிசோதிக்கும் விடயங்களில் இவர்கள் வெற்றிகள் எத்தனை? ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான அப்புக்காத்து அரசியலில், “தமிழர் விடுதலை கூட்டணி” ஒரு முக்கிய அடைவு. தேர்தல் தோல்விகளின் விளைவாக ஏற்பட்ட ஓர் ஐக்கியம் என்று அதுதொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்க் கட்சித் தலைவர்கள் தங்களுக்கு இடையில் ஓர் உடன்பாட்டுக்கு வந்து அவ்வாறு ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான கடந்த 16 ஆண்டுகளிலும் ஏற்கனவே இருந்த பலமான கூட்டு ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைக்கப்பட்டு விட்டது.தமிழரசுக் கட்சியும் இரண்டாக நிற்கிறது. கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதேயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. அது வெற்றி அல்ல.தோல்வி. அதை வெற்றியாகக் கொண்டாடுவது அதைவிடப் பெரிய தோல்வி.இப்படிப்பட்ட ஒரு தோல்விகரமான பின்னணியில்,தாங்களாக இணைய முடியாத தமிழ்க் கட்சிகளை சட்டத்தரணிகளே ஒருங்கிணைக்க முன்வந்திருப்பது வெற்றியளிக்குமா? https://www.nillanthan.com/8200/- அரசியல் தூஷணம் - நிலாந்தன்
அரசியல் தூஷணம் - நிலாந்தன் அண்மையில் சுமந்திரனின் பிறந்த நாள் அன்று ஒரு பெண் அரசியல் செயற்பாட்டாளர், சுமந்திரனுக்கு விசுவாசமானவர், முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதில் அவர ” உன்னுடைய எதிரி யாரைக் கண்டு பயப்படுகிறானோ, அவன்தான் உனக்குத் தலைவர்” என்ற பொருள்பட எழுதி வாழ்த்தியிருந்தார். அவர் அவ்வாறு எழுதியதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவ்வாறு வாழ்த்த அவருக்கு உரிமை உண்டு. அதேசமயம் அதற்கு எதிராக எழுத மற்றவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கு ஒரு பண்பாட்டு எல்லைக்கோடு உண்டு. தனது தாய்க்கு எதிராக, சகோதரிக்கு எதிராக, மனைவி அல்லது காதலிக்கு எதிராக மற்றவர்கள் எதை எழுதக்கூடாது என்று ஒருவர் எதிர்பார்க்கிறாரோ, அதை அவரும் இன்னொரு பெண்ணுக்கு எதிராக எழுதக் கூடாது. இதுதான் பண்பாட்டு எல்லைக்கோடு. ஆனால் அந்தப் பெண் மீது கொட்டப்பட்ட தூஷணத்தை, விஷத்தை தொகுத்து பார்த்தால் அவை தமிழ்த் தேசிய பண்பாட்டு இதயத்தின் செழிப்பைக் காட்டவில்லை. சீரழிவைத்தான் காட்டின. அவர் ஒரு குடும்பப் பெண். பொது வாழ்வுக்கு வந்துவிட்டார் என்பதற்காக அவரைக் கண்டபடி தாக்கினார்கள். ஆனால் தேசியவாத அரசியல் என்பது பாலியல் சமத்துவத்தின் மீதுதான் கட்டி எழுப்பப்படுவது. சகபாலரை மதிக்கத் தெரியாத ஒருவர்; சகபாலரை அந்த தேசிய ஆன்மாவின் பண்பாட்டு எல்லைகளைத் தாண்டி விமர்சிக்கும் ஒருவர், தன்னைத் தேசியவாதி என்று கூறிக்கொள்ள முடியாது. அப்படியானால் அந்தப் பெண் தனக்கு எதிராக தூஷணத்தைக் கக்கிய நபர்களுக்கு எதிராக நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாமா?அதுபோன்ற அவதூறுகளுக்கு எதிராகத்தான் சாணக்கியன் நிகழ் நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தவரா? தமிழரசுக் கட்சி நிகழ் நிலைப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சுமந்திரன் அதற்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார். ஏன் சாணக்கியனே நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் இப்பொழுது தன்னை அவதூறு செய்தவர்களுக்கு எதிராக அந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார். இதில் ஓர் அக முரண்பாடு உண்டு. இதுதொடர்பாக தமிழரசுக் கட்சி தன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். மேலும், சாணக்கியன் நாடாளுமன்றத்தை உட்கட்சி முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் மேடையாகப் பயன்படுத்துகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த வாரம் நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளை ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தி அவர் தெரிவித்த கருத்துக்கள் எந்த வகை அரசியல் கலாச்சாரத்தைச் சேர்ந்தவை? இடதுசாரிகள் முரண்பாடுகளைக் கையாளும்போது “நேச முரண்பாடு; பகை முரண்பாடு” என்று பிரிப்பார்கள். தாய்ப் பூனை இரையைக் கவ்வுவதற்கும் குட்டியை கவ்வுவதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்று அதை விளங்கப்படுத்துவார்கள். ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாடாளுமன்றத்தில் உட்கட்சிச் சண்டைகளைப் பேசுகிறார்கள். உட்கட்சி முரண்பாடுகளை வழக்குகளின் மூலம் கையாளப் பாக்கிறார்கள். சட்ட நடவடிக்கை என்ற விடயத்தை தமது அரசியல் எதிரிகளுக்கும் தம்மை விமர்சிப்பவர்களுக்கும் எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அரசியல்வாதி ஒருவருக்கு எதிரான அவதூறு எனப்படுவது இப்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல. அதை விட ஆழமான பொருளில் அது ஒர் அரசியல் பண்பாட்டு பிரச்சினை. தமிழ் தேசிய அரசியல் விமர்சன பாரம்பரியத்தின் சீரழிவை இது காட்டுகின்றது. இதை இன்னும் ஆழமான வார்த்தைகளில் சொன்னால், தமிழ் தேசிய அரசியலின் ஜனநாயக இதயம் நோய்க்கூறானதாக மாறி வருகிறது என்பதனை அது காட்டுகிறது. பெண்கள் அல்லது தனிப்பட்ட முறையில் அவமானப்படத் தயாராக இல்லாதவர்கள் தமது பொதுவாழ்வுக்காக தமது நிம்மதியைத் தொலைக்கத் தயாராக இல்லாதவர்கள் போன்ற பலரும் அரசியலில் ஈடுபடத் தயங்குவதற்கு இது ஒரு பிரதான காரணம். தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டிக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளிலும் இந்தப் போக்கு மேலும் அதிகரித்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகால தமிழ்த் தேசியக் கூட்டு உளவியல் என்பது கொந்தளிப்பானது. அவமானகரமான ஒரு கூட்டுத் தோல்விக்கும் கூட்டு இழப்புக்கும் கூட்டுக் காயங்களுக்கும் பின்னரான கூட்டு உளவியலானது கொந்தளிப்பானதாகத்தான் இருக்கும். அது யாரையும் நம்பாது. யாராவது சமூகத்தில் மினுங்கிக் கொண்டு வந்தால் அவரை எச்சரிக்கை உணர்வோடு அல்லது எரிச்சலோடு பார்க்கும். யாரையாவது தாக்க நினைத்தால் அவரை எங்கே தாக்கினால் வலிக்குமோ அங்கே தாக்கும். சமூக வலைத்தளங்களின் சுதந்திரச் சூழல் அதற்கு இடம் கொடுக்கின்றது. சமூக வலைத்தளங்களின் எழுச்சியோடு ஒருபுறம் குரலற்ற மக்களுக்கு குரல் கொடுக்க இடம் கிடைத்திருக்கிறது. அதேசமயம் வெறுப்பவர்களை,விஷம் கக்கிகளை, தூஷணம் கொட்டிகளை, பொது வெளியில் கழியும் வெறுப்பர்களை அது பரவலாகியுள்ளது. குழுக்கள் ஆக்கியுள்ளது. இந்தப் போக்கு கடந்த 16 ஆண்டுகளாகதான் இருந்து வருகிறது என்பதல்ல. ஆயுதப் போராட்டத்திலும் இருந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் அதிகமாக சூழ்ச்சி கோட்பாடுகள் உற்பத்தி செய்யப்பட்ட காலகட்டம் அதுதான். விமர்சனங்கள் துப்பாக்கி முனையில் அல்லது பச்சை மட்டைகளால் தீர்க்கப்பட்டதுண்டு. ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான மிதவாத அரசியலிலும் அது இருந்தது. கொள்கை எதிரிகளை துரோகிகள் ஆக்குவது ; அல்லது காசுக் கள்ளர்கள் ஆக்குவது; பாலியல் குற்றவாளிகளாகச் சித்தரிப்பது; அவர்களுடைய அந்தரங்கத்தை மறைமுகமாகப் பேசுவது; அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அருவருப்பான உவமைகளுக்கு ஊடாகக் கூறுவது… போன்றன அங்கேயும் இருந்தன. அதிலும் குறிப்பாக அங்கே மல முட்டிப் பாரம்பரியம் இருந்தது. தனது கட்சி எதிரியின் வீட்டு முற்றத்தில் மலம் நிரம்பிய மண் முட்டியைக் கொண்டு போய் உடைத்து விடுவது. அதே மல முட்டிகளோடு, மொட்டை கடிதங்களோடு, முகமூடிகளோடு ஒரு பகுதியினர் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வெறுப்பை, விஷத்தைக் கக்கியபடி திரிகிறார்கள். இவர்கள் மத்தியில் படித்தவர்கள் உண்டு; லோயர்கள் உண்டு;மருத்துவர்கள் உண்டு; ஆசிரியர்கள் உண்டு; அரசியல் செயற்பாட்டாளர்கள் உண்டு; கட்சிகளில் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்கள் உண்டு;தலை முழுக்க நரைத்த வயது போனவர்கள் உண்டு. ஆனால் ஒரு நல்ல விடயம் பெண்கள் இதில் குறைவு. இது அரசியல்வாதிகள் அல்லது அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் உண்டு. படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள்,அறிவு ஜீவிகள் மத்தியிலும் உண்டு. இலக்கியவாதிகள் தங்களுக்கு இடையே மோதும்போது எதிர்த் தரப்பின் இடுப்புக்கு கீழே அடிப்பது என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. யாருக்கு எங்கே அடித்தால் அதிகம் வலிக்குமோ அந்த உயிர் நிலையில் அடிப்பது. அதாவது பிறப்பு உறுப்பில் அடிப்பது. அல்லது பிறப்பு உறுப்போடு சம்பந்தப்பட்ட விடையங்களை, உறவுகளைத் தாக்குவது. தமிழ் மக்கள், அரசாங்கத்தை பொறுப்புக் கூற வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் பொதுவெளியில் துருத்திக் கொண்டு தெரியும் பலரும் எதிர்த் தரப்பை விமர்சிக்கும்போது தமது மூப்பை,படிப்பை,சமூகப் பொறுப்பை, தமது மதத்தின் வழியாக தாங்கள் கற்றுக்கொண்ட அறத்தை ஒழுக்கத்தைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளை ஏன் பயன்படுத்துவதில்லை? தாங்கள் சமூக வலைத்தளங்களில் எழுதுகின்ற அல்லது தங்களுடைய குருட்டு விசுவாசிகளை ஏவி எழுதுகின்ற விடியங்களை தங்களுடைய பெற்றோர் தங்களுக்கு ஏடு தொடங்கியவர், ஞானஸ்தானம் கொடுத்தவர், தங்களுடைய மனைவி பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் பார்த்தால் தங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பண்பாட்டுக் கூச்சம்,பொறுப்பு இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? இது ஒரு கூட்டு உளவியல் நோயாக பெருகி வருகிறது. இதை மருத்துவர்கள் மட்டும் குணப்படுத்த முடியாது. சட்ட நடவடிக்கைகளால் மட்டும் தீர்த்து விட முடியாது. பதிலாக இது ஒரு பண்பாட்டுப் பிரச்சினை.ஒரு கூட்டுப் பிரச்சினையை கூட்டாகத்தான் தீர்க்க வேண்டும்.ஆனால் துயரம் என்னவென்றால் அதைத் தீர்க்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே அதாவது அரசியல்வாதிகளே இந்தப் பண்பாட்டுச் சீரழிவுக்கு முக்கிய பொறுப்பு என்பதுதான். ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் மட்டுமல்ல,உலகப்பரப்பில்,உலகப் பேரரசு அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் எப்படித் தோன்றுகிறார்? என்ன பேசுகிறார்? அண்மை ஆண்டுகளில் உலகில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் அவர்தான். உலகம் பூராகவும் அவருக்கு எதிராக மீம்ஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு கிழமைகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கும் போரில் அவர் ஒரு கொடிய “கொமெடி பீஸ்” ஆக உருவகிக்கப்படுகிறார். மீம்ஸ் உருவாக்கிகள் அவருடைய மகனுக்கும் வட கொரியத் தலைவரின் மகளுக்கும் திருமணம் செய்து வைத்துப் பிள்ளையும் பெற்றுக் கொடுத்து விட்டார்கள். இவ்வாறு உலகப் பரப்பில் தன்னையும் தனது குடும்பத்தையும் அவதூறு செய்யும் சமூக வலைத்தளப் பாவனையாளர்களுக்கு எதிராக அவர் என்ன செய்யலாம் என்று நமது அரசியல்வாதிகளிடம் ஆலோசனை கேட்டால் என்ன? https://www.nillanthan.com/8193/- வளமான நாடு - அழகான வாழ்க்கை திட்டத்தில் காரைநகர் பாதை புனரமைப்பு
வளமான நாடு - அழகான வாழ்க்கை திட்டத்தில் காரைநகர் பாதை புனரமைப்பு ஞாயிறு, 15 மார்ச் 2026 09:38 AM வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், காரைநகர் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர். https://jaffnazone.com/news/55586- வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படும்
வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படும் ஞாயிறு, 15 மார்ச் 2026 09:46 AM வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அன்றைய சூழலில் அதனை நிறைவேற்ற முடியவில்லை. சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இந்த அரசாங்கத்தால் இவ்வீதிக்கு விடிவு கிடைத்து, மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகியுள்ளமை பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. காரைநகர் பிரதேசம் சுற்றுலாத்துறைக்குப் பிரபல்யமானதொரு இடமாகும். இதுவரை காலமும் இந்த மோசமான வீதியூடாகவே சுற்றுலாவிகள் கசூரினா கடற்கரைக்கு வந்து சென்றனர். இதனால் சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வீதி புனரமைக்கப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சுற்றுலாவிகளின் வருகை பலமடங்கு அதிகரிக்கும். அமைச்சர் பிமல் ரத்நாயக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயே எமது மாவட்டத்துக்குப் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்கியவர். நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது அந்த நிதியின் ஊடான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன். அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' பேரிடரால் எமது மாகாண வீதிக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனினும், அரசாங்கத்தின் புத்திசாதுரியமான நடவடிக்கையால் வீதிகளைத் தற்காலிகமாகச் சீர்செய்வதற்கு உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டது. தற்போது அவற்றை நிரந்தரமாகப் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழேயே நடைபெறுகின்றன. எனவே, அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கின் வீதிப் புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என நம்புகின்றேன், என்றார். https://jaffnazone.com/news/55587- ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது; ஆனால் உடன்படிக்கைக்கு நான் தயாரில்லை – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 15 Mar, 2026 | 02:28 PM ஈரான் அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லாததால் இப்போதைக்கு அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். NBC செய்திச் சேவைக்கு சனிக்கிழமை வழங்கிய 30 நிமிட தொலைபேசி நேர்காணலின் போது அவர் இதனைத் திட்டவட்டமாக அறிவித்தார். ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், "நாங்கள் அத்தீவை முற்றாக அழித்துவிட்டோம், விளையாட்டிற்காக இன்னும் சிலமுறை அங்கு தாக்குதல் நடத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்கள் இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாகத் துடைத்தெறியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா காமினி உயிருடன் இருக்கிறாரா என்பது தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவது குறித்து கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவித்த ட்ரம்ப், ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் 3.66 டொலராக உயர்ந்துள்ள போதிலும், போர் முடிந்தவுடன் அது முன்னெப்போதையும் விடக் குறையும் என அவர் உறுதியளித்துள்ளார். உக்ரேன் போர் தொடர்பில் பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை விட உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உடன்படிக்கை செய்துகொள்வதற்கு மிகவும் கடினமானவராக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியுள்ளதை அவர் நியாயப்படுத்தியுள்ளார். ட்ரோன்களை வீழ்த்துவதற்கு உக்ரேன் வழங்க முன்வந்துள்ள உதவியை நிராகரித்த அவர், "எமக்கு ஜெலென்ஸ்கியின் உதவி தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் தேவையற்ற முறையில் ஈரானால் தாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241031- அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை?
அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை? மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலின் போது எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிஜிட்டல் குறியீட்டு (QR) முறையை விரைவாக முறைப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmrlcwe9001i356ppgca3jj3- பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
பிணவறையில் யுவதியின் சடலத்தை வன்புணர்ந்த விவகாரம்: அதிரடி திருப்பம் டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய யுவதியொருவரின் சடலத்திற்கு அந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியான இழிவுபடுத்தல்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹட்டன் நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய, வைத்தியசாலையின் பாதுகாப்பு கேமரா (CCTV) தொகுதி பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று ஊழியர்களும் ஏற்கனவே இருமுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நோர்வூட் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் பொறுப்பிலுள்ள CCTV தரவுகள் அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைக் குழுவினர் பரிசோதித்த காட்சிகளைத் தவிர மேலதிக ஆதாரங்கள் ஏதும் பதிவாகியுள்ளதா என்பதைக் கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் 2026.05.18 அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் சந்தேகநபர்கள் மூவரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த அவமதிப்புச் சம்பவம் கடந்த மாதம் (23) ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் வைத்தியசாலை நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இம்மாதம் (03) ஆம் திகதி பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து, முறையான விசாரணையைக் கோரிய பின்னரே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. போராட்டத்தின் விளைவாக, வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் நிபுணத்துவ வைத்தியர்கள் உள்ளிட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று ஊழியர்களும் தற்காலிகமாக வைத்தியசாலையிலிருந்து நீக்கப்பட்டு, நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/மலையகம்/பிணவறையில்-யுவதியின்-சடலத்தை-வன்புணர்ந்த-விவகாரம்-அதிரடி-திருப்பம்/76-373917- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு adminMarch 14, 2026 written by admin March 14, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் கலைப் பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பத்மநாதன் கதிர்காமநாதன், மற்றும் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆகியோருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைவாக பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, திறமை அடிப்படையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230472/- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
ராஜீவ்காந்தி அண்ணி விஜயலட்சுமி மாதிரியோ விஜய் பற்றி மனைவி சங்கீதா மாதிரியோ யாரும் வந்து குற்றம் சாட்டவில்லை ராஜீவ் காந்தி கூடாத மாதிரி பெண்களுடன் வாட்ஸ்அப்பில் பேசினார் என்று AI ல் உருவாக்கபட்ட ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியிட்டிருக்கின்றார்கள். - அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி
Important Information
By using this site, you agree to our Terms of Use.