Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. சர்வதேச முக்கியம் பெற்ற போதும்.. இந்தப் படுகொலைகளுக்கு இன்று வரை தீர்வில்லை. இதில உக்ரைனில ரஷ்சியாவுக்கு வகுப்பெடுக்கினம்.
  3. மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் கூறியது போல 50 வீதம் என்பது பிழையான தகவல் . இந்த வருடத்தில் கட்டணம் குறைவு என்பது ஒரு வருடம் ஒரு குடும்பத்தினருக்கு அதிக பட்சமாக 100 யுரோ விற்குள் தான் இருக்கும். அதை விட இங்கே மின்சார விநியோகம் பல நிறுவனங்களினால் கையாளப்படுகின்றது. வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்களின் மிசார விநியோக நிறுவனத்தை மாற்றும் முறையைக் கையில் வைத்துக் கொண்டால் அதாவது ஒப்பந்தம் வருட ரீதியில் செய்தால் ஒவ்வொரு வருடமும் குறைந்த விலையில் விநியோகிக்கும் நிறுவனங்களால் அதிக லாபம் பெற்றுக் கொள்ளலாம். இதில் விழிப்பாக இருக்க வேண்டும் வருடம் முடிவதற்குள் அடுத்தநிறுவனத்தை தெரிவு செய்து பழைய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களின் ஒப்பந்தப்படி இரண்டாவது வருடத்திற்கான அதிகப்படியான விலையைக் கொடுக்க வேண்டி வரும்
  4. சாதாரண சில சிங்களவர்களுக்கு புரிதல் வந்தாலும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸுக்கும்.. சிங்கள பெளத்த மேலாதிக்க சிந்தனை நிறைந்த சிங்கள பெளத்த பயங்கரவாதப் பிக்குகளுக்கும் இந்த விளம்பரங்களால் அறிவூட்ட விளைவது வீண் முயற்சியாக்கும். புலிகள் சிங்கள மக்களுக்கு புரிய வைக்க தமிழீழ வானொலியில் சிங்கள மொழி நிகழ்ச்சி நடத்தியது தான்.. நினைவுக்கு வந்து போகுது..! பலன்...??????!
  5. தமிழனக் கொலையாளிகளை பாதுகாக்க முனையும் தமிழினவழிப்பாளர்கள். இதில் வியப்பில்லை தானே. ஏவியவர்கள் விசுவாச அம்புகளை பாதுகாக்கவே செய்வர். இல்ல எல்லாரும் மாட்டுப்பட வேண்டி ஏற்படும்.. சங்கிலித் தொடராக.
  6. இவருக்கு எப்படி இங்க நிலம் கிடைத்தது... எம்மவர்கள் விற்றார்களா..???! இல்ல இவர் இடையில் புகுந்து விளையாடுறரோ.. ??! இவர் நயினாதீவில் அடாத்தாப் பிடிச்சதை எப்ப விடப்போறார்..????! இவர் இனக்கொலைஞன் மகிந்தவின் விசுவாசி...! இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவதும் தனித் தமிழீழத்துக்கான ஐநா மேற்பார்வையின் கீழ் நீதியான தேர்தலை வடக்குக் கிழக்கில் நடத்துவதுமாகும். இல்ல இந்தப் பிரச்சனை தொடரும். புங்குடுதீவில் விகாரை,.. நாவற்குழியில் விகாரை... கிளிநொச்சியில் விகாரை.. யாழில் விகாரைகள் என்று.. தமிழர் தாயகம் எங்கும் விகாரைகள் தீர்வின்றி எதிர்ப்புகளையும் தாண்டி முளைத்தே வருகின்றன. இதற்கு முடிவு... சர்வதேச தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்ட தமிழர் தேசத்தை சர்வதேசத்தின் தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி நீதி நிர்வாக பொருண்மிய அதிகாரங்களை தமிழர்களிடம் வழங்குவது மட்டுமே ஆகும். மற்றும்படி.. இதற்கு நிரத்தர தீர்வை எவரும் பெற முடியாது என்பதே கள நிஜமாகும். இந்தப் பிரச்சனை சர்வதேச மயப்படாமல்... தமிழர்களுக்கு விடிவில்லை...!!
  7. Today
  8. ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன. ராய்ட்டர்ஸ் மூலம் அக்டோபர் 1, 2025 7:52 PM GMT+10 அக்டோபர் 1, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 31, 2025 அன்று ஜெர்மனியின் லுயெட்டோ-வல்லுன் அருகே A24 மோட்டார் பாதைக்கு அருகில் உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் மற்றும் மின்சார தூண்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. REUTERS/Annegret Hilse/கோப்பு புகைப்படம் உரிமம் வாங்கும் உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது நிறுவனங்கள் 50ஹெர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன் GmbH ஆம்ப்ரியன் ஜிஎம்பிஹெச் டென்னெட் ஹோல்டிங் பிவி பெர்லின், அக்டோபர் 1 (ராய்ட்டர்ஸ்) - ஜெர்மனியின் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் ஆபரேட்டர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மின்சார கட்டக் கட்டணங்களை அறிவித்தனர், இது அரசாங்க மானியங்களைப் பொறுத்து 57% குறைப்பைக் கணித்துள்ளது. இந்தக் குறைப்பு, ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மின்சாரச் செலவுகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. ராய்ட்டர்ஸ் பவர் அப் செய்திமடல் உலகளாவிய எரிசக்தி துறையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வழங்குகிறது. இங்கே பதிவு செய்யவும் . நாட்டின் தேசிய காலநிலை நிதியிலிருந்து 6.5 பில்லியன் யூரோக்கள் ($7.6 பில்லியன்) மானியம் மூலம், ஒரு கிலோவாட் மணிக்கு (kWh) 6.65 சென்ட்கள் / kWh ஆக கட்டணம் குறைக்கப்படும் என்று கிரிட் ஆபரேட்டர்கள் 50Hertz, Amprion, TenneT மற்றும் TransnetBW ஆகியவை புதன்கிழமை ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தன. டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் நாடாளுமன்றம் சட்டத்தை அங்கீகரிப்பதைப் பொறுத்து இந்தக் குறைப்பு சாத்தியமாகும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். ஜெர்மனியின் மின்சார விலைகள் பரிமாற்றக் கட்டணங்கள், வரிகள் மற்றும் வரிகளால் உயர்த்தப்படுகின்றன, இது ஆற்றல் மிகுந்த தொழில்கள் மற்றும் பரந்த பொருளாதாரத்தின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. சராசரியாக, தனியார் நுகர்வோர் தற்போது ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு சுமார் 40 காசுகள் செலுத்துகிறார்கள் என்று எரிசக்தி தொழில் சங்கமான BDEW கூறுகிறது, இது ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் தூண்டப்பட்ட எரிசக்தி நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட 20% அதிகமாகும். மின்சார பரிமாற்றக் கட்டணங்களில் திட்டமிடப்பட்ட குறைப்புக்கு கூடுதலாக, சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸின் கூட்டணி அரசாங்கம், தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகள் உள்ளிட்டவற்றிற்கான மின்சார வரியை ஐரோப்பிய குறைந்தபட்சத்திற்குக் குறைக்க திட்டமிட்டுள்ளது. ($1 = 0.8509 யூரோக்கள்) தாமஸ் சேத்தல் அறிக்கை செய்தல் https://www.reuters.com/business/energy/german-power-grid-fees-set-drop-by-more-than-half-2026-2025-10-01/#:~:text=BERLIN%2C%20Oct%201%20(Reuters),and%20agricultural%20sectors%20among%20others. இது ஒக்டோபரில் வெளியான செய்தி, இந்த செய்தி பிரகாரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மின்சார கட்டணம் பாதியாக குறையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது, இன்னொரு செய்தி ஒரு கிலோவாட்டிற்கு 5 சதத்திற்கு மின் கட்டணம் அறவிடப்படும் என கூறப்படுகிறது, இது சீனாவின் மின் கட்டணத்தினை விட குறைவானது, அண்மையில் சில நிறுவனங்கள் எரிபொருள் விலையேற்றத்தினை குற்றம் கூறி வெளியேறியுள்ளன அதில் ஒரு நிறுவனம் (BASF) சீனாவிற்கு இடமாறவுள்ளதாக கூறப்படுகிறது. ஜேர்மன் கள உறவுகளே! இந்த மின்சார கட்டண குறைப்பு அமுலுக்கு வந்து விட்டதா? அது எவ்வாறான தாக்கத்தினை பொதுச்செலவில் ஏற்படுத்துகிறது?
  9. 2009 இல் மகப்பேற்று மருத்துவ நிபுணர் சபாரட்ணம் அருள்குமரன் இதே வகையான நைற் கௌரவம் பெற்று விட்டார். அவர் தான் நிபுணர்கள் பட்டியலில் நைற் கௌரவம் பெற்ற முதல் ஈழத்தமிழராக இருப்பார் என நம்புகிறேன். https://en.wikipedia.org/wiki/Sabaratnam_Arulkumaran சேர் அருள்குமரன் யாழ் மத்திய கல்லூரிப் பழைய மாணவர். எப்பவாவது "once in a blue moon" யாழ் மத்திய கல்லூரி ஓரிருவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பும்😎. அப்படி மருத்துவராக வருபவர் ஏனைய பிரபல கல்லூரிகளில் இருந்து சென்றோரை விட உச்சமான தர நிலைக்கு வருவார்! மத்திய கல்லூரியின் கிணற்றுத் தண்ணீரில் தான் ஏதோ இருக்கிறது என நினைக்கிறேன் (அதனால் தான் Upper school இல் இருக்கும் அந்த ஒற்றைக் கிணற்றை நாம் இறைப்பதில்லை😂!)
  10. இராமநாதன், முத்துகுமாரசாமி, வைத்திலிங்கம் துரைசாமி, ஓலிவர் குணதிலக, ஜோன் கொத்தலாவல என பல இலங்கையர் முன்பும் இந்த மரியாதையை பெற்றுள்ளனர். ஆனால் புலம்பெயர் தமிழரில் நிஷான் முதலாவது என நினைக்கிறேன். ஆனால் இது நிஷான் போல பலருக்கு சரியான தகமைக்கு கிடைத்தாலும், இன்னும் சிலருக்கு கொன்சேவேடிவ் கட்சிக்கு டொனேசன் கொடுத்தமைக்காக கூட வழங்கபட்டுள்ளது. நல்ல காலம் சுபாஸ்கரன் இல்லாமல் நிஷான் இந்த விருதை முதலாவதாக பெற்று கொண்டார்😂. King/Queen, Duke, Earl, Prince/Princes, Marquess, Viscount, Baron, Lord/Lady, Sir/Dame, இதற்கு கீழே - Commander of the British Empire (CBE), Officer of the British Empire (OBE), Member of the BE (MBE), மற்றும் British Empire Medal (BEM) என்பன வரும். இதுதான் மேலோட்டமாக பிரிதானியாவில் சமூக தரவரிசை. இதில் சாதாரணமானவர்கள் (commoners ) சேர், லோர்ட் வரைக்கும்தான் போக முடியும். மிகுதி பட்டங்கள், நிலவுடமை+பரம்பரையாக வருவன. ஒவ்வொரு பிரதமந்திரி விலகும் போது அவர் ஆட்களை இப்பதவிகளுக்கு நியமிக்கலாம். கள்ளன் பொரிஸ் தனக்கு காரியதரிசியாக வேலை செய்த எதையும் சாதிக்காத 30 வயதும் ஆகாத ஒரு இளம்பெண்ணை Lady யாக நியமித்தார். அதே போல் புத்தாண்டில் அரசும், அரச குடும்பமும் ஒரு தொகை பேரை நியமிப்பார்கள். இதில் சமூகத்தில் பல நல்லது செய்தோர், வேலையில், விளையாட்டில் சாதித்தோர் நியமிக்கபடுவார்கள். என்னுடைய ஒரு நெருங்கிய வெள்ள இன நண்பிக்கு, பெண்கள் கிரிகெட்டை ஊக்குவித்தமைக்காக MBE கிடைத்தது. ஆனால் அரசு விரும்பினால் எப்போதும் எவரையும் நியமிக்கலாம். சரி…நான் என்ன எண்டு நினைகிறியள்? VPBE - வெட்டி பயல் ஒவ் த பிரிடிஷ் எம்பயர்😂. இந்த knights க்குள்ளும் பல ஓடர் இருக்கு. Order of the Garter இல் அரசர், முன்னாள் பிரதமர்கள் அந்த ரேஞ்சில் உள்ளவர்கள் மட்டுமே.
  11. முன்பு வாடகை கார்கள், பீட்சா டெலிவரி, உணவு விடுதிகளில் காசு கொடுக்காமல் விட பாலியல் சீண்டல்கள் குற்றச்சாட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள், குறிப்பாக லத்தீன் மற்றும் கறுப்பின ஒருசில பெண்கள்தான் இதில் ஈடுபடுவது அதிகம், தாங்களாகவே கையை பிடித்துவிட்டு காசு வேணுமா இல்லை ஏற்கனவே நமக்கிடையே வாய்க்கால் தகராறு இருக்கும்போது நீ கையை பிடிச்சு இழுத்தாய் என்று பொலிசுக்கு அடிக்கவா என்று கேக்க, மானம் மருவாதை பயம் கருதி ஆத்தா காசு வேணாம் ஆளைவிடுனு ஓடிதப்பிய குறித்த துறையில் பணியாற்றிய தமிழர்கள் அதிகம். அதேநேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட/ஈடுபடும் பொறுப்பான பதவிகள், தொழில்களில் உள்ள நம்மவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
  12. வைத்தியரின் அலுவலகம் மற்றும் சில பரிசோதனைகளின் பின் குறிப்பிட்ட பல் வைத்தியரில் தவறில்லை என்று தீர்ப்பு வழக்கபட்டுள்ளதாகவும், இது ஒரு பணம் பறிக்கும் செயல்பாடு என்றும் அறிந்து கொண்டேன்.
  13. அமெரிக்காவில் புதிதாக மாநிலம் ஏதையாவது சேர்த்துள்ளார்களா? இது என்ன சொல்? பிகு கட்டையில போக, அது Ferries State University யாம் 😂. ஃபெறீஸ் என்றாவது எழுதி இருக்கலாம்😂.
  14. யாருடைய காணியிலும் நாம பிளான் போடலாம் தானே இலங்கையில் அரைவாசி மேற்ப்பட்ட புத்த விகாரைகளுக்கு உறுதிகள் இருக்காது.
  15. வந்தால் மலை. போனால் Hair என்ற கொள்கை உடையவர் போல் தெரிகின்றது. 😂
  16. பேர்மிங்கம் ,லேச்ட்டேர், ஈஸ்ட்காம் இந்த இடங்களில் நடக்கும் கூத்துக்களை வீடியோ எடுத்து சமூக வலைதளம்களில் பகிர்ந்து அதை பற்றிய விவாதங்கள் பெரிதாக பரவியதன் பின்பே உண்மையான புலம்பெயருக்கு ஆப்பு விழுந்தது . அத்துடன் ஐரோப்பாவில் அங்கும் இங்கும் தொங்கிகொண்டு இருந்த கள்ளர் காடையர் கூட்டமும் இவ்வளவு சுதந்திரம் இருக்குதா என எண்ணுமளவுக்கு வெறி பிடித்து பிரான்ஸ் கடற்கரையில் இங்கிலாந்துக்குள் அகதிகள் எனும் போர்வையில் ஊடுருவ தவமாய் தவம் இருக்க தொடங்கினார்கள் . இவற்றுக்கு எல்லாம் காரணம் தேடினால் விடை இலகுவானது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .
  17. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79B பகவான் புத்தர் மிகவும் நல்ல மனிதர். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவருக்கு மட்டும் அல்ல, எந்த மனிதனுக்கும் மனத் திறனை முன்னறிவிக்கும் தெய்வீக சக்தி கட்டாயம் இருக்காது. அதுமட்டும் அல்ல, புத்தரே இப்படியான தெய்வீக சக்திகளை, தன்னால் முடிந்தாலும் முடியாவிட்டாலும், அவ்வற்றை கையாள மாட்டேன் / கையாளக்கூடாது என்கிறார். இருப்பினும், கதையின்படி, இலங்கைக்கு பறந்து வந்த மகிந்த தேரர் மிஸ்ஸகா மலையில் [mount Missaka] இறங்கினார் என்று கூறப்பட்டுள்ளது. மகாவம்சம், அத்தியாயம் 13 - 20, அத்தியாயம் 14 - 2, & அத்தியாயம் 17 - 23, இல், மிஸ்ஸகா மலை குறிக்கப்பட்டுள்ளது. இதை இன்று மிகிந்தலை என்று கருதுகிறார்கள். இது இலங்கையில் அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு மலை சிகரம் ஆகும். இலங்கையில் புத்த மதத்தின் இருப்பைத் தொடங்கிய புத்த துறவி மகிந்தருக்கும் மன்னர் தேவநம்பிய தீசனுக்கும் இடையிலான சந்திப்பு நடந்த இடமாக இது [மிகிந்தலை] இலங்கையர்களால் நம்பப்படுகிறது. இது இப்போது ஒரு புனித யாத்திரைத் தளமாகவும், பல மத நினைவுச் சின்னங்கள் மற்றும் கைவிடப்பட்ட கட்டமைப்புகளின் தளமாகவும் உள்ளது. பழங்கால உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஒருவர் தனது போதனைகளை முதலில் தான் பிறந்து வளர்ந்த நாட்டிலேயே நிறுவ முனைகிறார். அதன் பிறகு மற்ற நாடுகளுக்கு பரவலாம் அல்லது பரவாமல் போகலாம். ஏனென்றால் அவர்கள் குறிப்பாக தங்கள் நாடு, அவர்களின் மொழி, அவர்களின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தை நன்றாக அறிந்து இருப்பதுடன் போக்குவரத்து, குறிப்பாக வெளிநாடுகளுக்கு, அந்தக் காலத்தில் கடினமாகவும் இருந்தது. இரண்டாவதாக, விஜயன் வருவதற்கு முன்பு புத்தர் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்தார், மேலும் அவரது முதல் வருகையின் போது, தேவர்கள் கூடினர், அவர்களின் கூட்டத்தில் புத்தர் தன் கோட்பாட்டைப் போதித்தார். இதன் விளைவாக, ஏராளமான உயிரினங்கள் [many kotis of living beings] பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டன. அவ்வாறே, அவர் தனது இரண்டாவது வருகையின் போதும், புத்தம், தர்மம், சங்கம் என்ற மும்மணிகள் அல்லது திரிசரணங்களில் [three jewels, மூன்று இரத்தினங்கள்] அடைக்கலம் புகுந்து, அறநெறிகள் ஒழுக்கத்தைப் பின்பற்றும்படி வழிநடத்தி கடலிலும் நிலத்திலும் வாழ்ந்த ஏராளமான நாகர்களுக்கு கோட்பாட்டைக் கற்பித்தார். அவர்களில் எண்பது கோடி [eighty kotis] பேர் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டனர். தனது மூன்றாவது வருகையின் போது, புத்தர் மீண்டும் போதித்தார். புறப்படுவதற்கு முன், அவர் தனது கால்தடங்களை சுமனகுடாவில் (Sumanakuta / A mountain peak in Ceylon / இப்போது ஸ்ரீ பாத அல்லது ஆதாமின் சிகரம் என்று அழைக்கப்படுகிறது) விட்டுச் சென்றார். அப்படியானால், விஜயன் வந்த நேரத்தில் புத்தரின் போதனைகள் அங்கு இருந்திருக்க வேண்டும், ஆனால் தேவநம்பிய தீசனின் காலம் வரை சிவ வழிபாடும் மற்றும் நாக வழிபாடும் தான் அங்கு தொடர்ந்தன. உதாரணமாக, பதின்மூன்றாம் அத்தியாயத்தில், இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறார். அதேபோல, பதினான்காம் அத்தியாயத்தில், தர்மத்தை (பிரசங்கிக்கும்) நேரத்தை அவர் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் இலங்கை முழுவதும் கேட்கும் படியாக அவன் தர்மப் பிரசார நேரத்தை அறிவித்தான். இந்த அழைப்பின் காரணமாக ஒரு பெரிய தேவர்கள் கூட்டம் ஒன்று கூடியதாகக் கூறப்படுகிறது; இந்தக் கூட்டத்திற்கு முன்பு தேரர் சமசித்த சுத்தத்தைப் [Samacitta-sutta] உபதேசம் செய்தார். எண்ணற்ற தேவர்கள் கோட்பாட்டிற்கு மாற்றப்பட்டனர் மற்றும் பல நாகர்களும், சுபானர்களும் திரிசரணத்தை மேற்கொண்டனர். [The supanna (a kind of fairy bird / Skt. suparna) or garula (Skt. கருடன், ஒருவகைப் புராணப் பறவை / garuda) are mythical creatures who are imagined as winged and are always considered as the sworn foes of the nagas.] இதனால் அவர்கள் மும்மணிகளில் அடைக்கலம் புகுந்தனர் [came unto the (three) refuges]. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 80 தொடரும் / Will follow துளி/DROP: 1969 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79B] https://www.facebook.com/groups/978753388866632/posts/33103434085971812/?
  18. விகாராதிபதி ...தன்னிடம் காணிக்கான பேப்பர் உறுதிகள் இல்லையாம் ...தனிய பிளான் பேப்பர் மட்டும்தான் இருக்காம் ....இது யாருடைய காதில் பூ சுத்தலோ..
  19. முப்படைக்கும் ஒரு நாள் சம்பளம்...372 ம்மில்லியன் ரூபா ....இதர் செலவுகளையும் ..கூட்டினால் 1000 மிலியனை கடக்கும் ...நாட்டுக்கு வருமானம் இன்றி கடனில்தான் ஓடுது ...இதில் ஒரு ..அரைவாசியை குறைத்தாலுமே ... 2 வருடத்தில் கடன் இருக்காது....முடியுமா ....முடியாது...இதுக்கிள்ளை நம்ம யூடியுப்பு குஞ்சு ஒன்று ...அனுர ..2 நாளிலை ..கொழும்பை சிங்கப்பூராக்கி விட்டாராம் ...
  20. திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை : 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு கடற்கரையில் நடைபெற்றது Published By: Vishnu 02 Jan, 2026 | 07:24 PM திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) மாலை 6.00 மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நிழற்படங்களுக்கு மலர்தூவி, வளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருகோணமலை பிரதான கடற்கரைச் சந்தியிலுள்ள காந்தி சிலைக்கு அருகாமையாக மாலைப் பொழுதில் தினமும் இளைஞர்கள் நின்று கதைப்பது வழக்கம். 02.01.2006 அன்றைய மாலைப் பொழுதும் மாணவர்கள் பலர் அவ்விடத்தில் கூடிநின்று கதைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்றில் வந்த இனம் தெரியாத நபர்கள் அந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டுக் கோட்டைப் பக்கமாகச் சென்றனர். கைக்குண்டு வெடித்ததில் திருமலை புனிதஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவர் காயமடைந்தார். இவரை ஏனைய மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் கடற்கரையில் நின்ற மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத்தொடங்கினர். இதற்கிடையில் காயமடைந்த மாணவர்களுக்கு அருகில் விரைந்த கடற்படையினர் அவர்களை நிலத்தில் விழுத்தி கண்மூடித்தனமாகத் தாக்கினர். மாணவர்கள் இச்சம்பவம் பற்றி தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறியபோதும் மாணவர்களைச் சப்பாத்துக் கால்களால் மிதித்து முழங்காலில் நிக்க வைத்து சுட்டுக் கொன்றதாக அக்காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் லோகிதராசா ரொகான், சண்முகராஜா சஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன் குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் செய்தி செளியிட்டிருந்த சுகிர்தராஜன் என்ற ஊடகவியலாளரும் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/235073
  21. ஜோஹ்ரான் மம்தானி உமர் காலித்துக்கு அனுப்பிய குறிப்பில் கூறியுள்ளது என்ன? பட மூலாதாரம்,Getty Images 5 மணி நேரங்களுக்கு முன்னர் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் 2020-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் மாணவர் தலைவர் உமர் காலித்துக்கு, நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். உமர் காலித்துக்கு கைப்பட ஒரு குறிப்பை எழுதியுள்ள மம்தானி, "நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்," என்று அதில் குறிப்பிட்டுள்ளார். நியூயார்க் நகர மேயராக மம்தானி பதவியேற்ற பிறகு, உமர் காலித்தின் துணைவர் பனோஜோத்ஸ்னா லஹிரி இந்த குறிப்பை வியாழக்கிழமை அன்று சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இருப்பினும், டிசம்பர் மாதம் அவரது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜோஹ்ரான் மம்தானி என்ன எழுதியுள்ளார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜனவரி 1 ஆம் தேதி நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி பதவியேற்றார். உமர் காலித்தின் துணைவர் பனோஜோத்ஸ்னா லஹிரி, மேயர் மம்தானியின் குறிப்பை எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துள்ளார். மம்தானி எழுதியுள்ள அந்தக் குறிப்பில், "அன்புள்ள உமர், கசப்புணர்வு குறித்தும், அது நம்மை ஆக்கிரமிக்க விடாமல் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய பனோஜோத்ஸ்னா லஹிரி, ''11,700 கிலோமீட்டர் தூரம் இருந்தபோதிலும், இந்த கைப்பட எழுதப்பட்ட குறிப்பு சிறையிலுள்ள உமர் காலித்துக்கும், நியூயார்க் நகரத்தின் இந்திய வம்சாவளி மேயர் ஜோஹ்ரான் மம்தானிக்கும் இடையே ஒரு உணர்ச்சிகரமான பிணைப்பை உருவாக்கியுள்ளது'' என்று கூறினார். மேலும், "உமரின் பெற்றோர் மம்தானியையும் வேறு சிலரையும் அமெரிக்காவில் சந்தித்தனர். அவர்கள் அவர்களுடன் நீண்ட நேரம் செலவிட்டனர். அந்தச் சமயத்தில்தான் மம்தானி இந்தக் குறிப்பை எழுதினார்," என்றும் தெரிவித்துள்ளார். உமர் காலித் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மூன்று வாரங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்திருந்தார். ஜாமீன் நிபந்தனைகள் காரணமாக, உமர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்றும், அவர் தனது முழு நேரத்தையும் வீட்டிலேயே கழித்ததாகவும் லஹிரி கூறினார். அவரது கூற்றுப்படி, உமரின் பெற்றோர் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவிற்குச் சென்று மம்தானி உட்பட பலரைச் சந்தித்தனர். உமரின் பெற்றோரான சஹிபா கானம் மற்றும் சையத் காசிம் ரசூல் இலியாஸ் ஆகியோர், அமெரிக்காவில் வசிக்கும் தங்களது மூத்த மகளைச் சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தனர். அவர்களது மூத்த மகள் தனது தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருந்ததால், திருமணத்திற்கு முன்பாக அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர் என்கிறார் அவர். உமர் காலித் எப்போது கவனம் பெற்றார்? பட மூலாதாரம்,Getty Images ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் முனைவர் பட்ட மாணவரான உமர் காலித், டெல்லி கலவரம் தொடர்பான சதி குற்றச்சாட்டில் 2020 செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முதல் தகவல் அறிக்கையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்திருந்தாலும், UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்) கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் அவர் இன்னும் நீதிமன்றக் காவலில் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 2025-இல், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பைத் ஒத்திவைத்தது. மம்தானி இதற்கு முன்பும் வெளிப்படையாக உமர் காலிதுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். ஜூன் 2023-இல், பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக நியூயார்க்கில் நடைபெற்ற 'ஹவ்டி டெமாக்ரஸி' நிகழ்வில், உமர் காலித் சிறையிலிருந்து எழுதிய குறிப்புகளின் பகுதிகளை மம்தானி வாசித்தார். "வெறுப்பு மற்றும் கும்பல் கொலைகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்த டெல்லி ஜே.என்.யு ஆராய்ச்சி மாணவர் உமர் காலித்தின் கடிதத்தை நான் வாசிக்கப் போகிறேன். அவர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டத்தின் கீழ் 1,000 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரது வழக்கு விசாரணை இன்னும் தொடங்கவில்லை," என்று மம்தானி அப்போது மக்களிடையே பேசினார். உமர் காலித்தின் பெயர் முதன்முதலில் பிப்ரவரி 2016-இல் மாணவர் தலைவர் கன்ஹையா குமாருடன் இணைந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது. அதற்குப் பிறகு, பல்வேறு விவகாரங்கள் மற்றும் அவர் வெளியிட்ட சில கருத்துகளால், உமர் காலித் தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்றுவருகிறார். மேலும், ஊடகங்கள் தன்னைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை உருவாக்கியுள்ளன, அதன் காரணமாக சிலரின் வெறுப்புக்குப் பலியாகி வருகிறேன் என்று உமர் காலித் பலமுறை கூறியுள்ளார். 2020 ஜனவரியில், உமர் காலித் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சவால் விடுத்து, '''டுக்டே-டுக்டே' கும்பலை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்மையாக இருந்தால், மேலும் அவர் சொல்வதில் நேர்மையானவராக இருந்தால், 'டுக்டே-டுக்டே' உரை தொடர்பாக என்னை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு, யார் வெறுப்பு பேச்சு பேசினார், யார் துரோகி என்பதும் தெளிவாகி விடும்." என்றார் ஜூலை 2016-இல் ஹிஸ்புல் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரவலான வன்முறையும் போராட்டங்களும் வெடித்தன. புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலத்தில் பெரும் கூட்டம் கூடியது. அதனைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் புர்ஹான் வானியைப் புகழ்ந்து உமர் காலித் ஒரு பதிவை எழுதியிருந்தார். அது பரவலாக விவாதிக்கப்பட்டது. விமர்சனங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே அந்தப் பதிவை உமர் காலித் நீக்கிவிட்டார். இருப்பினும், அதற்குள் சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அதே சமயம், பலரும் அவருக்கு ஆதரவாக நின்றனர். ஆகஸ்ட் 2018-இல், டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப் வெளியே அடையாளம் தெரியாத சிலரால் உமர் காலித் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 'அச்சமில்லாத சுதந்திரத்தை நோக்கி' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். வெள்ளை சட்டை அணிந்த ஒருவர் உமர் காலித்தை அணுகி, அவரைத் தள்ளிவிட்டு துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், உமர் காலித் கீழே விழுந்ததால் அவர் மீது குண்டு படவில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு உமர் காலித் கூறுகையில், "அவர் என் மீது துப்பாக்கியை நீட்டியபோது நான் பயந்தேன், ஆனால் கௌரி லங்கேஷுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு நினைவுக்கு வந்தது," என்றார். காலித்துக்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் பட மூலாதாரம்,@RepMcGovern மம்தானியைத் தவிர, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் பலர் உமர் காலிதுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜிம் மெக்கவர்ன் மற்றும் ஜேமி ராஸ்கின் தலைமையில் உமர் காலித்துக்கு ஆதரவாக ஒரு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ராவுக்கு எழுதிய கடிதத்தில், உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்குமாறு இந்திய அதிகாரிகளுக்கு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காலித்தின் வழக்கு விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மெக்கவர்ன் மற்றும் ராஸ்கின் ஆகியோருடன் இணைந்து கிரிஸ் வான் ஹோலன், பீட்டர் வெல்ச், பிரமிளா ஜெயபால், ஜான் ஷாகோவ்ஸ்கி, ரஷிதா த்லைப் மற்றும் லாயிட் டோகெட் ஆகிய ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், விசாரணை ஏதுமின்றி காலித் தொடர்ந்து காவலில் வைக்கப்படுவது சர்வதேச சட்ட நெறிமுறைகளை மீறும் செயல் என்று அவர்கள் கூறியுள்ளனர். மெக்கவர்ன் இந்தக் கடிதத்தை எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துள்ளார். இம்மாத தொடக்கத்தில் உமர் காலித்தின் பெற்றோரைச் அமெரிக்காவில் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளின் இந்தக் கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் என்று கூறியுள்ளார். இதுகுறித்து கன்வல் சிபல் எக்ஸ் தளத்தில் கூறுகையில், "இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் இத்தகைய தலையீடுகள், ஏற்கனவே டிரம்பின் கொள்கைகளால் கடும் அழுத்தத்தில் இருக்கும் இந்தியா-அமெரிக்க உறவுகளை மேலும் மோசமாக்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் இந்தியாவில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் செய்தித் தொடர்பாளர்களாக மாறுவதற்குப் பதிலாக, அமெரிக்காவின் சொந்தப் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகள் இந்தியாவில் உள்ள தேசவிரோத சக்திகளுக்கு எதிராகவே அமையும், ஏனெனில் தேசவிரோத சக்திகள் இந்தியாவின் பாதுகாப்பைக் குறிவைக்கும் ஒரு பெரிய அமைப்பின் அங்கமாகக் கருதப்படுகிறார்கள்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3wzpl3v5l6o
  22. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம் 02 Jan, 2026 | 05:26 PM (நமது நிருபர்) விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்களென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2026 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு சிறந்ததாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள். விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். நல்லதை செய்யாமல் இந்த ஆண்டு எவ்வாறு நல்லதாக அமையும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு தமிழர்களை இவ்வாறு கைது செய்து சிங்கள இனம் நன்றி மறந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/235061
  23. Australia [provisional squad]: Mitchell Marsh (C), Xavier Bartlett, Cooper Connolly, Pat Cummins, Tim David, Cameron Green, Nathan Ellis, Josh Hazlewood, Travis Head, Josh Inglis, Matthew Kuhnemann, Glenn Maxwell, Matthew Short, Marcus Stoinis, Adam Zampa
  24. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு முப்படைகளின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களின் ஒரு நாள் சம்பளம் 372 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு 02 Jan, 2026 | 04:31 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களும் தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். அதன்படி, முப்படைகளால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொகை 372,776,918.28 ரூபாவாகும். இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவினால் 250 மில்லியன் ரூபாவும், கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனகொடவினால் 73,963,879.71 ரூபாவும், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்கவினால் 48,813,038.97 ரூபாவும் கையளிக்கப்பட்டதோடு இதற்கான காசோலைகள் நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/235049
  25. நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம் 02 Jan, 2026 | 01:15 PM நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் (2) தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் (3) ஒரு போராட்டம் நடத்தப்படவுள்ளது. கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் குறித்த குழுவானது இன்றைய தினம் அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235025

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.