Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. இந்தோனேசியாவில் உலகின் மிகப்பழைமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 09:48 AM இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கண்டறியப்பட்டுள்ள குகை ஓவியங்கள், மனித நாகரிகத்தின் கலை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. இந்த கைரேகை ஓவியங்கள் குறைந்தது 67,800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட குகைச்சுவர் ஓவியங்களிலேயே இதுதான் மிகவும் பழைமையானது. இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 73,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் கற்களில் செதுக்கப்பட்டவை, ஆனால் குகைச் சுவர்களில் வரையப்பட்ட சிக்கலான கலை வடிவம் இதுவே முதன்மையானது. குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மேல் நிறமிகளை (Pigment) ஊதி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில விரல் நுனிகள் கூர்மையாகத் தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் (கிரிஃபித் பல்கலைக்கழகம்) இணைந்து சுலவேசி தீவின் தென்கிழக்குப் பகுதியில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஓவியங்களின் மேல் படிந்திருந்த தாதுப் படிமங்களை ஆய்வு செய்ததன் மூலம் இவற்றின் காலம் கணிக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் 'நேச்சர்' (Nature) இதழில் புதன்கிழமை (ஜன 21) அன்று வெளியிடப்பட்டது. இந்த ஓவியங்களை வரைந்தது யார் என்பதில் இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் இரண்டு முக்கியக் கருத்துகளை முன்வைக்கின்றனர்: 01.டெனிசோவன்கள் (Denisovans): அந்தப் பகுதியில் வாழ்ந்து அழிந்துபோன ஒரு பண்டைய மனித இனம். 02.ஹோமோ சேபியன்கள் (Homo sapiens): ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற நவீன மனிதர்கள். மனிதர்கள் எப்போது கோடுகளையும் புள்ளிகளையும் தாண்டி, தங்களைப் பற்றியும் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் அர்த்தமுள்ள கலைகளை உருவாக்கத் தொடங்கினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது. சுலவேசி தீவு ஒரு செழிப்பான கலை கலாச்சாரத்தைக் கொண்டிருந்ததை இது உறுதிப்படுத்துகிறது. https://www.virakesari.lk/article/236664
  3. மேஜர் லீக் கிரிக்கெட் முதல் சுற்று நிறைவு; துடுப்பாட்டத்தில் ஷாருஜன் முதல் நிலை (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் பிரதான கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதல் சுற்று நிறைவில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கிளப் வீரர் சண்முகநாதன் ஷாருஜன் அதிக ஓட்டங்களைக் குவித்து முன்னிலையில் உள்ளார். மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் சுற்றில் 500 ஓட்டங்களை மொத்தமாக குவித்த ஒரே ஒரு வீரர் என்ற பெருமையையும் ஷாருஜன் பெற்றுக்கொண்டுள்ளார். தமிழ் யூனியன் கழகம் இக்கட்டான நிலையை எதிர்கொண்ட போதெல்லாம் அனுபவசாலி போன்று ஷாருஜன் பொறுப்புணர்வுடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டதை பல சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக இருந்தது. நடப்பு பருவகால கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 6 போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன் 3 சதங்கள், ஒரு அரைச் சதம் உட்பட 69.87 என்ற சராசரியுடன் 559 ஓட்டங்களைக் குவித்து அதிகூடிய மொத்த ஒட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதல் நிலையில் இருக்கிறார். பதுரெலியா கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் ஷாருஜன் சதம் குவித்து அசத்தி இருந்தார். இதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் குவித்தவர் என்ற பெருமையை 19 வயதான ஷாருஜன் பெற்றுக்கொண்டார். சிறு பராயத்தில் இருந்து கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியில் கல்வி பயின்ற சண்முகநாதன் ஷாருஜன், 13, 15, 17, 19 வயதுக்குட்பட்ட அணிகளில் விளையாடியதுடன் 2023, 2024ஆம் ஆண்டுகளில் அணித் தலைவராக விளையாடி இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் ஷாருஜன் 118 ஓட்டங்களைப் பெற்றார். விக்கெட் காப்பாளராக 5 பிடிகளை எடுத்ததுடன் 2 ஸ்டம்ப்களையும் செய்திருந்தார். மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஷாருஜன் பெற்ற ஓட்டங்கள் 123 மற்றும் 3 எதிர் பதுரெலியா கிரிக்கெட் கிளப் 60 எதிர் முவர்ஸ் கிரிக்கெட் கிளப் 24 மற்றும் 23 ஆ.இ. எதிர் பேர்கர் ரெக்ரியேஷன் கிளப் 0 மற்றும் 122 ஆ.இ. எதிர் குருநாகல் யூத் கிரிக்கெட் கிளப் 87 மற்றும் 2 எதிர் நொண்டஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் 103 ஆ.இ., மற்றும் 12 எதிர் ஏஸ் கெப்பிட்டல் கிரிக்கெட் கிளப் https://www.virakesari.lk/article/236530
  4. இந்தியாவுக்கு வெளியே டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த வங்கதேசம் கோரிக்கை – ஐசிசி பதில் என்ன? பட மூலாதாரம்,Getty Images டி20 உலகக் கோப்பையில் தாங்கள் பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்த வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) கோரிக்கை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போட்டிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மைதானங்களிலேயே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசியிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்திருந்தது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இந்த மேல்முறையீட்டிற்குப் பிறகு, அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆய்வு செய்ததாகவும், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய மாற்றங்களைச் செய்வது சாத்தியமில்லை என்று முடிவு செய்யப்பட்டதாகவும் ஐசிசி தற்போது கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/live/c5y34pvmg43t?post=asset%3Adcd7eb0c-8836-41a7-a9ab-f95644057b3b#asset:dcd7eb0c-8836-41a7-a9ab-f95644057b3b ஐசிசி ரி20 ஆடவர் உலகக் கிண்ணத்திற்காக வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையை தொடர சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தீர்மானம் Published By: Vishnu 21 Jan, 2026 | 09:19 PM (ஐசிசி ஊடக அறிக்கை) ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் எனவும் பங்ளாதேஷ் அணியின் போட்டிகள் திட்டமிட்டவாறு இந்தியாவில் நடைபெறும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை புதன்கிழமை (21) மாலை உறுதிப்படுத்தியது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியதைத் தொடர்ந்து, எதிர்கால வழிமுறை குறித்து கலந்தாலோசிக்க கூட்டப்பட்ட ஐசிசி பணிப்பாளர்கள் சபை கூட்டத்திற்குப் பிறகு வீடியோ-கலந்துரையாடல் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதென ஐசிசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போட்டி நடைபெறும் எந்த இடங்களிலும் பங்களாதேஷ் வீரர்கள், ஊடகவியலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை குறித்த சுயாதீன மதிப்பாய்வுகள் உட்பட நடத்தப்பட்ட அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. உலகக் கிண்ணம் நெருங்கிவரும் காலப்பகுதியில் மாற்றங்களைச் செய்வது சாத்தியமில்லை என்றும், நம்பக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத சூழ்நிலையில் அட்டவணையை மாற்றுவது எதிர்கால ஐசிசி நிகழ்வுகளின் மகத்துவத்தை பாதிப்பதுடன் உலகளாவிய நிர்வாக அமைப்பாக அதன் நடுநிலைமையைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடும் என்ற ஒரு நிலையை ஏற்படுதக்கூடும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த முட்டுக்கட்டையைத் தீர்க்கும் முயற்சியில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஐ.சி.சி நிர்வாகம் தொடர்ச்சியான கடிதத் தொடர்புகளில் மற்றும் சந்திப்புகளில் ஈடுபட்டது. அத்துடன் போட்டிகளுக்கான பாதுகாப்புத் திட்டம் குறித்த விரிவான தகவல்களையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஐசிசி பகிர்ந்து கொண்டது. இதில் கூட்டாட்சி மற்றும் மாநில சட்ட அமுலாக்கல் ஆதரவு ஆகியவை அடங்கும். இது தொடர்பாக ஐ.சி.சி. பேச்சாளர் தெரிவிக்கையில், 'கடந்த பல வாரங்களாக, போட்டியில் பங்களாதேஷின் பங்கேற்பை தெளிவான நோக்கத்துடன் உறுதிப்படுத்துவதற்காக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் நிலையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஐசிசி ஈடுபட்டது. இந்த காலகட்டத்தில், ஐ.சி.சி சுயாதீன பாதுகாப்பு மதிப்பீடுகள், விரிவான திறந்தவெளி பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் வரவேற்பு நாட்டின் (Host country) அதிகாரிகளிடமிருந்து முறையான உத்தரவாதங்கள் உள்ளிட்ட விரிவான உள்ளீடுகளைப் பகிர்ந்து கொண்டது. இவை அனைத்தும் இந்தியாவில் பங்களாதேஷ் அணியினரின் பாதுகாப்பு அல்லது உயிர்களுக்கு நம்பக்கூடிய அல்லது உறுதிப்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தொடர்ந்து முடிவு செய்தன. 'இந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது நிலைப்டில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தது. போட்டியில் பங்கேற்பதை அதன் வீரர்களில் ஒருவரின் உள்நாட்டு லீக்கில் ஈடுபடுவது தொடர்பான ஒற்றை, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தொடர்பில்லாத சம்பவத்துடன் மீண்டும் மீண்டும் தொடர்பு படுத்தியது. இது போட்டியின் பாதுகாப்பு கட்டமைப்பிலோ அல்லது ஐ.சி.சி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதை நிர்வகிக்கும் நிபந்தனைகளிலோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 'ஐ.சி.சி.யின் இடம் மற்றும் திட்டமிடல் முடிவுகள் புறநிலை அச்சுறுத்தல் மதிப்பீடுகள், வரவேற்பு நாட்டு அதிகாரிகளின் உத்தரவாதங்கள் மற்றும் போட்டியின் ஒப்புக்கொள்ளப்பட்ட பங்கேற்பு விதிமுறைகள் ஆகியவற்றால் வழிநடத்தப்படுகின்றன, அவை உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் 20 அணிகளுக்கும் ஒரே விதமாகப் பொருந்தும். பங்களாதேஷ் அணியின் பாதுகாப்பைப் பாதிக்கும் எந்தவொரு சுயாதீனமான பாதுகாப்பு கண்டுபிடிப்புகளும் இல்லாத நிலையில், ஐ.சி.சி. போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. அவ்வாறு செய்வது உலகெங்கிலும் உள்ள மற்ற அணிகள் மற்றும் ரசிகர்களுக்கு குறிப்பிடத்தக்க தளவாட மற்றும் திட்டமிடல் விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் ஐ.சி.சி நிர்வாகத்தின் நடுநிலைமை, நியாயத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆபத்துடன் கூடிய நீண்டகால சவால்களையும் உருவாக்கும். 'ஐ.சி.சி நல்லெண்ணத்துடன் செயல்படுவதற்கும், நிலையான தரநிலைகளை நிலைநிறுத்துவதற்கும், உலகளாவிய விளையாட்டின் கூட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது' என்றார். -- (என்.வீ.ஏ.) https://www.virakesari.lk/article/236634
  5. நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு 22 Jan, 2026 | 10:29 AM நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே டி போர் (Wiebe de Boer) அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வச் சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (21) மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் கடந்த காலத்தில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டைக்கு, தற்போது வருகை தரும் சுற்றுலாவிகளை விடவும் அதிகளவானவர்களை ஈர்க்க வேண்டும் எனத் தூதுவர் விருப்பம் வெளியிட்டார். இதற்குப் பதிலளித்த ஆளுநர், "உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணக் கோட்டையை மையப்படுத்திய சுற்றுலா மேம்பாட்டுக்கான விசேட அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்பதைச் சுட்டிக்காட்டினார். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் (கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம், பருத்தித்துறை ஆகிய இடங்களில்) அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவமனைகளில், கிளிநொச்சி மருத்துவமனைக்குத் தான் நேரில் சென்று பார்வையிட்டதாகத் தூதுவர் குறிப்பிட்டார். அம்மருத்துவமனைகளை முழு அளவில் இயங்கச் செய்வதற்குத் தடையாக உள்ள சவால்கள் குறித்தும் அவர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். 'வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில்' தான் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த தூதுவர், கொழும்பிலிருந்து வடக்கை நோக்கி முதலீட்டாளர்கள் நகர்ந்துள்ளமை ஒரு சிறப்பான மாற்றம் எனக் குறிப்பிட்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், "தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது. எமது மாகாணத்திலிருந்து விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுகின்ற. இவற்றை இங்கேயே பெறுமதிசேர் பொருட்களாக (Value Added Products) மாற்றுவதற்கான தொழிற்சாலைகளே எமக்கு அவசியமாகின்றன" என வலியுறுத்தினார். மேலும், பனைசார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாகப் பனையிலிருந்து புத்தாக்க முயற்சியாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் வைன் (Wine) உற்பத்தி குறித்தும் ஆளுநர் எடுத்துரைத்தார். இம்முயற்சிகள் எதிர்காலத்தில் மாகாணப் பொருளாதாரத்தில் நேரான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். அண்மையில் வீசிய 'டித்வா' (Ditwa) புயலால் வடக்கில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். அத்துடன், மாகாண நிர்வாகச் செயற்பாடுகள், மாகாண சபைத் தேர்தல், போதைப்பொருள் பாவனை விவகாரம் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பில், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் உறுதியளித்துள்ளமை வடக்கின் அபிவிருத்திக்குச் சாதகமான சமிக்ஞை எனவும் தூதுவர் சுட்டிக்காட்டினார். இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் நெதர்லாந்துத் தூதரகத்தின் சிரேஷ்ட அரசியல் ஆலோசகர், கலாசார ஆலோசகர் ஆகியோர் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/236667
  6. Today
  7. இப்பதானே Free டெலிவரி இருக்கு. பனிக்குள் போய் ஏன் விழுந்து முறிவான். இது குளிர்காலம் வழமையான குளிர்.
  8. பன்னாடைக்கு உரிய வரவேற்புக் கிடைத்திருக்கிறது👍. பேச்சின் போது கிறீன்லாந்தையும், ஸ்கன்டினேவிய நாடான "ஐஸ்லாந்தையும்" 4 தடவைகள் போட்டுக் குழப்பிப் பேசி அமெரிக்காவில் தனக்கு வாக்குப் போட்ட முட்டாப் பீசுகளுக்கு தான் உரிய தலைவர் தான் என நிரூபித்து விட்டு வந்திருக்கிறது பன்னாடை😂! நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல, "பல் துருவ உலகம்" உருவாக வேண்டும். ஆனால், ஐரோப்பியம், கனடா, அவுஸ்திரேலியா- நியூசிலாந்து ஆகிய துருவங்கள் தான் எதிர் துருவங்களாக வளர வேண்டும்.
  9. “பனியன்…. ட்ரம்ப்”, ஆட்சி செய்யும் நாட்டில்… “பனி”.. கொட்டாமல், வேறு என்ன கொட்டும். 😂 🤣 இதுவும் கடந்து போகும் என்று, கவனமாக இருக்க வேண்டுகின்றேன். 🙂
  10. பனி குவியலை அகற்றுவதில் இருந்து கடைக்கு போவது வரை வீட்டில் இருந்தே செய்ய முடியாதே.
  11. 🤣 ஓம் யேர்மன் பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தண்டனை வரிவிதிப்பு பயமுறுத்தலை ரம்ப் வாபஸ் பெற்றுள்ளார். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் மூலம் பணிய வைத்துள்ளார்கள் 👋
  12. Yesterday
  13. One of the most extreme winter storms in years is set to deliver damaging ice and heavy snow to nearly half the US. https://www.cnn.com/2026/01/20/weather/winter-storm-snow-ice-central-eastern-us-climate நீங்க work from home தானே.
  14. இங்கும் இடைவெளி விடாது பனி கொட்டித் தள்ளுகின்றது. முடியல...
  15. கிரின்லாந்து விடயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பின்வாங்கியுள்ளதாக தெரிகிறது. கிரீன்லாந்தை அமெரிக்கா வசமாக்கியே தீருவோம் என அடம்பிடித்த டிரம்ப் சுவிஸ்லாந்தில் டவோசில் நேட்டோ பிரதானியுடன் நடந்த பேச்சின் பின் - நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் ஒப்பந்தம் செய்வோம், பாதுகாப்பு வளையத்தை அமைப்போம் என நிலையை மாற்றியுள்ளார். டிரம்ப் ஏலவே இருந்த டென்மார்க்-அமரிக்கா ஒப்பந்தபடியே நடக்க ஒப்புகொண்டிருப்பதாக தெரிகிறது. கிரீன்லாந்தை அமெரிக்கா வசமாக்குவது பற்றி முன்னர் கூறினீர்களே என பத்திரிகைகள் கேட்க, மழுப்ப்பல் பதில் சொன்ன டிரம்ப்👇 டிஸ்கி மார்க் கார்னியும், ஐரோப்பிய தலைவர்களும் போட்ட போட்டில், தம்பர் கிரின்லாந்து வேண்டாம் என்ற நிலைக்கு வந்துள்ளார். டவோசில் ஆளை வரவேற்க எவரும் போகவில்லை. ஆளை எந்த தலைவரும் சந்திக்கவில்லை. நேட்டோ தலைமை அதிகாரி மூலம் பேசி பணிய வைத்துள்ளார்கள். சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் கோமணத்தை கனடா+ஈயூ உருவிய நாள் இன்று😂.
  16. நான் கார்னிக்கு வேறு வழியின்றியே வாக்களித்து இருந்தேன். ஆனால் இப்போது அதற்காக பெருமைப்படுகின்றேன்.
  17. என்னே அருமையான உரை! கார்னிதான் இப்போ மேற்கின் தலைவர். கார்னி அடி எடுத்து கொடுக்க ஏனைய ஐரோப்பிய தலைவர்கள் போட்டு வெளுக்க… தம்பர் கிரீன்லாந்து ஐடியாவையே கை விட்டு விட்டார்😂
  18. வாழ்த்து. வழமை போலவே இதுவும் நம்மவர்களால் ஊதி பெருப்பிக்கப்படுவதாக எனக்கு படுகிறது. நான் அறிந்த வகையில்.… மாநிலம் என நாம் இந்திய, அமெரிக்க, கனடா வில் காண்பது போல் அல்ல சுவிசில். அங்கே கண்டோன் என்பது ஒரு நகரம் அளவிலான சமஸ்டி அலகு. உதாரணமாக சூரிக் ஒரு கண்டோன். St. Gallen உம் இப்படி ஒரு நகர-சமஸ்டி அலகு. அதேபோல் முதல்வர் என்பதும் தமிழில், சீப்மினிஸ்டர், மேயர் இரு பதவிக்கும் பயன்படுகிறது. ஆனால் இவர் தவிசாளராகத்தான் தேர்வாகியுள்ளார் என நினைக்கிறேன். அதாவது சிவிகே சிவனாஞானம் வடமாகாண சபையில் வகித்த சேர்மன், பதவி போன்றது. இந்த சென் கலான் சமஸ்டி அலகின் பாராளுமன்றின் (ஏனைய நாடுகளில் இதை மா நகரசபை என்பார்கள், ஆனால் சுவிசில் இவற்றின் அதிகாரம் கூட) தவிசாளராக/சேர்மனாக இவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். எய் சபாநாயகர் போல அவை நடவைக்கையை கட்டுப்படுத்தும் வேலை. சீப்மினிஸ்டரோ, மேயரோ இல்லை என நினைக்கிறேன். பிழையாயின் திருத்தவும்.
  19. பெருமைப்படும்படி என்ன கூறினார் என சற்று விரிவாக கூறுங்கள் பார்போம்.
  20. இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் களவாக தகுதி சான்றிதழ் பணத்தை கொடுத்தால் இலகுவாக எடுக்கலாம் அதன் பின் .கீல் உள்ளவாறு நிறைய செய்திகள் உலகிற்கு வரலாம் . "அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் மார்ச் 2024-ல், டாலி என்ற சரக்குக் கப்பல் சக்தி இழந்து பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் தூணில் மோதியதால், பாலம் இடிந்து விழுந்தது" அந்த டாலி சரக்கு கப்பலில் வேலை பார்த்த வட இந்தியர்களே .
  21. டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 18 கோடிக்கும் மேற்பட்ட மக்களை இலக்காகக் கொண்டு, சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பனி மற்றும் கனமழையுடன் கூடிய ஒரு பெரும் குளிர்காலப் புயல் தாக்கவுள்ளது. தெற்குப் பகுதி முதல் வடகிழக்கு வரை பரவலான பனிப்பொழிவு மற்றும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பனிக்கட்டிப் புயல் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின் நேரம் மற்றும் யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பது பற்றிய விவரங்கள் இங்கே உள்ளன. தெற்கு, மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை பெரிய, பரவலான குளிர்கால புயல் தாக்கும். நியூ மெக்ஸிகோ மற்றும் டெக்சாஸிலிருந்து நியூ இங்கிலாந்தின் சில பகுதிகள் வரை மில்லியன் கணக்கான மக்களுக்கு பனிக்கட்டி மற்றும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு தி வெதர் சேனல் குளிர்கால புயல் ஃபெர்ன் என்று பெயரிட்டுள்ளது. தி வெதர் கம்பெனி முன்னறிவிப்பாளர்களின் கூற்றுப்படி, ஃபெர்ன் அமெரிக்காவில் 180 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பனிப்பொழிவால் பாதிக்கக்கூடும். https://weather.com/storms/winter/news/2026-01-21-winter-storm-fern-ice-snow-forecast-south-northeast-midwest வெள்ளிக்கிழமை மேற்குக் கரையிலிருந்து கிழம்பி நியூயோர்க் வந்துசேர சனி இரவு ஆகலாம். பென்சில்வேனியா நியூயேர்சி சில இடங்கள் 2-3 அடி என்கிறார்கள். இன்னும் நாட்கள் இருக்கிறபடியால் காற்றோடு இழுபட்டு பாதை மாறலாம். @Justin ஆயத்தமாக இருங்கள்.
  22. மோகன் அண்ணையின் துணைவி சுமதி (பூமா) அக்காவின் இறுதி நிகழ்வு இன்று ஒஸ்லோவில் நடைபெற்றது. வாழ்வின் மீது பிடிமானம் கொண்டு அதனை நேசிக்கின்ற எல்லோருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடுவதில்லை. இத்துயர உண்மையை மனிதவாழ்வு அவ்வப்போது நினைவூட்டிவிடுகிறது. பூமா அக்கா வாழ்வின் தருணங்களை நேசித்து ரசித்து மகிழ்ந்து வாழ்ந்தவர். சுற்றியிருப்பவர்களையும் மகிழ்வித்து வாழ்ந்த ஒருவர். நம்பிக்கையும் Positive energy உம் கொண்ட ஒருவர். மோகன் அண்ணை, வைதேகி, ஆதிரை, மற்றும் குடும்பத்தாருக்கு பெரும் இழப்பு.ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. மோகன் அண்ணை நீண்ட காலமாக நோர்வேயில் சமூகப் பணிகளிலும் தாயகம் நோக்கிய செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவந்த ஒருவர். கணினித் தொழில்நுட்பம், நூல் வடிவமைப்புகள், இணைய ஊடகம் என அவருடைய பணிகள் பன்முகப்பட்டவை. அவருடைய பொதுப்பணிகள் பூமா அக்காவினுடைய ஒத்துழைப்பும் புரிதலும் இன்றி சாத்தியமாகியிருக்காது. மோகன் அண்ணையின் பொதுப் பணிகளில் முதன்மையானது Yarl.com இணையத்தளத்தினை நிறுவி இயக்கியமை. புலம்பெயர் தமிழ்ச் சூழலின் இணையத் தளங்களில் முன்னோடியானது அது. இன்றைய சமூக ஊடகங்களின் வருகைக்கு முந்தைய நிலையென இணையத் தளங்களின் ஊடான chatting எனப்படுகின்ற நிகழ்நேர உரையாடல், தகவற்பகிர்வுகளையும் கருத்தாடல்களையும் குறிப்பிடலாம். இணையவெளியில் புலம்பெயர்/உலகத் தமிழர்களுக்கான கருத்துப்பகிர்வுத் தளமாகவும் யாழ் இணையம் 1998களின் ஆரம்பத்திலிருந்து இருந்துள்ளது. ஆர்வமுள்ள எவரும் எழுதலாம், கருத்துகளைப் பகிரலாம் என்ற நிலைக்கு வித்திட்ட தளங்களில் யாழ் இணையத்தின் இடம் தனித்துவமானது. செய்திகள், தகவல்கள், கட்டுரைகள் ஆய்வுகள், கதைகள், கவிதைகள், பகிர்வுகள், ஓவியங்கள் எனப் பல்வகையான ஆக்கங்களுக்கான தளமாக விளங்குகின்றது. புலம்பெயர் சூழலில் எழுத்தாளர்களாக உள்ள பலரின் ஆரம்பக் களமும் தளமுமாகவும் யாழ் இணையம் திகழ்ந்திருக்கின்றது. பூமா அக்கா மனிதர்களோடு இயல்பாகப் பழகக்கூடியவர். துணிந்து தன் உணர்வுகள், கருத்துகள், எண்ணக்களைச் சொல்லக்கூடியவர். ஒரு அம்மாவாகப் பிள்ளைகளின் நலன்களில் மட்டுமல்லாமல் அவர்கள் சுயதெரிவுகளுடனும் தமக்கான சுதந்திரங்களுடனும் வாழ்வில் உயர வேண்டுமென்ற எண்ணங்களைக் கொண்டவர். நோய்க் காலத்திலும் மனோபலத்தோடு அதனை எதிர்கொண்டிருக்கின்றார் என்று அறியும் போது அவரது அவர் மீது மதிப்புக் கூடுகிறது. மோகன் அண்ணையும் பிள்ளைகளும் அவரைத் தாங்கியிருந்திருக்கிறர்கள். பெரும் காதலோடும் கரிசனையோடும் நோய்க்காலத்தில் அவரைப் பராமரித்திருக்கிறார்கள். ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. https://www.facebook.com/share/p/1BgkDMANcf/?mibextid=wwXIfr
  23. விடை கொடுக்கிறோம், சோதரியே! நண்பர் மோகனின் மனைவி சுமதியின் (பூமா) இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று (21.01.26) ஒஸ்லோவில் நடைபெறுகிறது. நான் நோர்வேயில் இல்லாத காரணத்தினால் இந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத மிகுந்த கவலையுடன் இப்பதிவை எழுதுகிறேன். பிரியமானவர்கள் பலரின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை; எனது அம்மா அப்பாவின் இறுதி வணக்க நிகழ்வுகள் உட்பட. சுமதி, நண்பர் மோகனின் மனைவியாகத்தான் எனக்கு அறிமுகமானார். காலப்போக்கில் நாம் குடும்ப நண்பர்கள் ஆகி விட்டோம். அவருடன் பழகிய காலங்களில் அவர் துணிச்சலானதொரு பெண்ணாகவும், குழந்தை உள்ளம் கொண்டவராகவும், நகைச்சுவை உணர்வு மிகுந்தவராகவும், வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் விருப்பம் கொண்டவராகவும், எவரோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் நற்பண்புமிகுந்தவராகவும் இவரை நாம் உணர்ந்து கொண்டோம். சுமதி இளகிய மனம் படைத்தவர். கலையுள்ளம் கொண்டவர். கலைகளை நன்கு ரசிப்பார். இயற்கையை நேசிப்பவர். பயணங்கள் செல்வதிலும், சுற்றுலா போவதிலும் விருப்பம் கொண்டவர். கணவனையும் பிள்ளகளையும் நன்கு நேசித்தவர். நண்பர்களையும் அன்பால் அரவணைத்தவர். வயதின் மூப்பில், வாழும் கால எல்லையெல்லாம் வாழந்து இயற்கையாய் கண் மூடும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இரசித்தபடியே வாழ்ந்திருக்க வேண்டியவர். 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நம் எல்லோரையும் அதிர வைத்த அந்தச் சேதி கிடைத்தது. சுமதியை கொடிய புற்றுநாய் தாக்கியுள்ளது என்பதே அந்தச் சேதி. இந்தச் செய்தியினை அவரேதான் சொன்னார். பலரும் புற்றுநோயை மறைப்பதுபோல அவர் அதனை மறைக்க முயலவில்லை. இவரை இக் கொடும் நோய் தாக்கும் என்று எவர் தான் கற்பனை பண்ணினோம் ! புற்றுநோய் என்றாலே உயர் ஆபத்து என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் உண்மைநிலை அவ்வாறு இல்லை. புற்றுநோய் எந்த இடத்தில் வருகிறது, எப்போது கண்டு பிடிக்கப்படுகிறது, எவ்வளவு தீவிரத்தன்மை கொண்டுள்ளது என்பதைப் பொறுத்து நோயின் பாதிப்பு வருகிறது. சிகிச்சை முறையிலும் பாரிய முன்னேற்றங்கள் வந்துள்ளன. நோயால் பாதிக்கப்பட்ட பலர் பூரண குணமாகியுள்ளனர். சுமதிக்கு வந்தது பித்தக் குழாய் புற்றுநோய்( ஆங்கிலத்தில் Bile duct cancer, நோர்வேஜிய மொழியில் Gallegangskreft). இது ஒப்பிட்டளவில் அரிதாக வருகின்ற, ஆனால் ஒரு ஆபத்தான புற்றுநோய் நோய் என்றும் கூறுவார்கள். பித்தக் குழாய் மிக மிக சிறிய உறுப்பாக இருப்பதன் காரணமாகவும், அது அமைந்திருக்கின்ற இடம் பல உறுப்புகளுடன் தொடர்புபட்டிருப்பதன் காரணமாகவும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு கடினமான ஒரு புற்று நோயாகவும் இதனைக் கூறுவார்கள். இந்த நோய் வரும்போது அதனை எதிர்த்துப் போராடுகின்ற போராட்டம் வாழ்வா சாவா என்கின்ற ஒரு போராட்டம் தான். இந்த நோயிலிருந்து போராடி மீண்டும் வருவது மிகவும் கடினமான ஒரு விடயமாக இருக்கப் போகின்றது என்பதனை ஏதோ ஒரு வகையில் சுமந்து உணர்ந்து கொள்கிறார். எனக்கு இந்த இடத்தில் ஏன் இந்த நோய் வந்தது என்கின்ற கவலை ஒரு புறமும், இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்ற தேடல் மறுபுறமாகவும்அந்த நோயை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறார். இந்நோய் தொடர்பாக ஒரு வெளிப்படையான அணுகுமுறையை அவர் மேற்கொள்கிறார் தனது நோயின் தன்மை பற்றி தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் ஏறத்தாழ பதினைந்து - பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிப் போராடி, ஒவ்வொரு காலடியை முன்னோக்கி வைப்பதற்கு முயன்று முயன்று தோற்றுப் போக போக இறுதிக் கணம் வரை மனந் தளராமல் அவர் போராடினார். எமது கண் முன்னால் நாம் நேசித்த ஒரு சோதரி ஒவ்வொரு மருத்துவ முயற்சிகளிலும் முன்னேற்றத்தை காணாமல் போராடிக் கொண்டிருப்பது நம்ம எல்லோருக்கும் மிகுந்த மிகுந்த மனவருத்தத்தை தந்து கொண்டிருந்தது. இறுதியில் இயற்கையின் விதிப்படி 14.01.26 அன்று அவர் இயற்கை எய்தி விடுகிறார். ஏது தான் செய்ய முடியும் எம்மால். சாவை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான நோயுடன் போராடி மருத்துவமனையில் இருக்கின்ற போது அதற்கு மிகுந்த ஒரு மன உறுதி தேவை. அந்நேரத்தில் குடும்ப உறவுகளதும், நண்பர்களதும் அரவணைப்பு ஒரு நோயாளிக்கு மிகுந்த மனபலத்தை தரும். அதனை அனுபவரீதியாக உணர்ந்தவன் நான். நண்பர் மோகனும் பிள்ளைகள் வைதேகி, ஆதிரையும் சுமதியைக் காப்பாற்ற தம்மால் முடிந்ந அனைத்தையும் செய்தார்கள். சிகிச்சை தொடர்பாக நோர்வேயில் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எல்லா வாய்ப்பைக்களையும் தேடினர். எதனையும் விட்டு விடாமல் எல்லாக் கற்களையும்ப புரட்டினார்கள். எதுவும் நோர்வேயினை விட மேம்பட்டதாக இருக்கவில்லை. தனது மனைவி பதினைந்து -பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிக் கொண்டிருக்கின்ற போது கண்ணை இமை பாதுகாத்தது போல கிடைக்கக் கூடிய ஒவ்வொரு கணமும் தன் மனைவியின் அருகிலேயே நின்றார் நண்பர் மோகன். பிள்ளைகளும் தமது அம்மாவை நோயில் இருந்து மீட்டெடுத்து விட வேண்டும் என்று துடி துடிப்புடன் தாயுடன் தமிக நெருங்கி நின்றார்கள். தான் அருகாமையில் இருக்கின்ற போது சுமதி பாதுகாப்பாக உணர்கிறார் என்பதை புரிந்து கொண்டு மோகன் தனது மனைவியை பராமரித்த விதம் எல்லோருக்கும் மிக மிக உன்னதமான முன்னுதாரணம். சுமதி எம்மை விட்டு பிரிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனது மனைவியும் (அவர் சுமதியின் ஒரு நல்ல நண்பர்) சுமதியின் ஏனைய இரு நண்பர்களும் வைத்தியசாலையில் சுமதியியைப் பார்க்கச் சென்றோம். அவர் இருந்த அறையின் உள்ளே சென்று அவரோடு சிறிது நேரம் கதைத்து விட்டு நான் நண்பர் மோகனுடன் அறையின் வெளியிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தேன். உள்ளே சுமதியும் எனது மனைவியும் நண்பர்களும் பேசி சிரித்து உற்சாகமாக கதைக்கின்ற சத்தம் எமக்குக் கேட்கிறது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் போயிருக்கும். நாங்கள் மீண்டும் அறைக்குள் போகும்போது ‘ நல்ல energy உடன் சுமதி இருந்தால் பல விடயங்களையும் கதைத்தோம்’ என என் மனைவியும் நண்பர்களும் சொன்னார்கள். நான் அப்போது சுமதியிடம் ‘நீங்கள் energy யான ஆள் தானே, energy யா இருங்கோ’ என்று சொன்னேன். உடன் அவர் விம்மி அழத் தொடங்கி விட்டார. ‘நானும் எல்லாத்தையும் positive ஆகத்தான் பாக்கிறன், அண்ணா. ஆனால் நினைக்கிற மாதிரி ஒண்டும் நடக்குதில்லை’ என்று கவலையுடன் சொன்னார் . அவர் இதனைச் செல்லும் போது இவர் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற மருத்தவர்களின் தகவல் எமக்குத் தெரிந்திருந்தது. பாசத்துடன் அவரது இரண்டு கன்னங்களையும் எனது இரு கைகளாலும் தடவி விட்டதனைத் தவிர எந்தப் பதிலையும் கூற என்னால் முடியவில்லை. சுமதியின் பிரிவுத்துயரைக் காலம்தான் ஆற்ற வேண்டும். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்பார்கள். அதனை நம்புவோம். நணபர் மோகனதும் பிள்ளகளதும் தோழணைத்து நாம் நிற்போம். விடை கொடுக்கிறோம், சோதரியே. https://www.facebook.com/share/p/1DbBE4ME6h/?mibextid=wwXIfr
  24. இதில் உள்ள அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர். இருந்தும்... தமது தோல்விக்கு காரணத்தை தேடாமல், மற்றவரை தாக்கும் கூட்டை அடிக்கடி மாற்றி வருகின்றனர். இவர்களின் கூட்டுக்கு தோல்வியடைந்தோர் கூட்டமைப்பு என பெயரிட்டால் நல்லாக இருக்கும். Inthunathan SivaNathan
  25. நடந்துவிட்டது. வங்காளதேசத்துக்கு ஒருநாள் அவகாசம் குடுத்திருக்கினம். ஒத்து வராவிட்டால், ஸ்கொட்லாந்து அணியை உள்ளே கொண்டுவருவார்கள். எல்லா அங்கத்தவர்களும் இதுக்கு ஆதரவு தெரிவுத்துள்ளார்கள், பாகிஸ்தானைத் தவிர.
  26. இன்றைய Tages Blatt கட்டுரையின் தமிழாக்கம். ஜெயகுமார் துரைராஜா – செங்காலனின் புதிய உயரிய தலைவர் «20 முறை இறந்திருக்கலாம்» புதிய ஆண்டின் முதல் அமர்வில் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பல பதவிகள் புதிதாக நிரப்பப்பட்டன. இதில், பசுமைக் கட்சி (Grüne) சார்ந்த ஜெயகுமார் துரைராஜா, நகர பாராளுமன்றத்தின் புதிய தலைவராக – அதாவது செங்காலனின் உயரிய பதவியாக – தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அகதியாக வந்த, ஒருகாலத்தில் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இல்லாத ஒரு தமிழர், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் செங்காலன் நகர பாராளுமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தான் ஜெயகுமார் துரைராஜா. தேர்வுக்குப் பிறகு அவர் கூறியதாவது: «என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை இதுவே.» ஜெயகுமார் துரைராஜா 2011ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமை பெற்றார். 2016ஆம் ஆண்டு முதல் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் சார்பில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மூன்று உறுப்பினர்கள் விலகியதைத் தவிர, எந்த எதிர்ப்பு வாக்குகளும் இன்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன், பசுமைக் கட்சி மற்றும் இளைய பசுமைக் கட்சியின் பிரிவு தலைவர் கிறிஸ்டியான் ஹூபர், தேர்தல் பரிந்துரையை வழங்கினார். அவர் கூறியதாவது: «செங்காலன் நகரில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் மூன்றில் ஒருபங்கிற்கும் அதிகமானோர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். 15 வயதுக்கு மேற்பட்ட மக்களுள் பாதிக்கும் மேற்பட்டோருக்கு குடியேற்றப் பின்னணி உள்ளது. எனவே இன்று ஒரு ‘கெல்லர்’ அல்லது ‘முல்லர்’ அல்லாமல், ஒரு ‘துரைராஜா’ செங்காலனின் உயரிய பதவிக்குத் தேர்வாகுவது விசேஷமான ஒன்றல்ல. இது இந்த நகரத்தின் மற்றும் இந்த நாட்டின் உண்மையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.» இந்த யதார்த்தம் எளிதாக உருவானதல்ல; அது முன்பும் இன்றும் போராட்டங்களுக்கு உள்ளாகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெயகுமார் துரைராஜாவின் அனுபவங்கள் தனிப்பட்டவை அல்ல; அவை சுவிட்சர்லாந்தின் குடியேற்ற வரலாற்றின் ஒரு பகுதியாகும். 1960களில் வந்த இத்தாலிய காலாண்டுத் தொழிலாளர்கள் முதல், 1980களின் அகதி கொள்கைகள், பால்கன் நாடுகளிலிருந்து வந்த அகதிகள், இன்றைய போர் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் வரை—குடியேற்றம் பெரும்பாலும் ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டதே தவிர, ஒரு செல்வமாக அரிதாகவே கருதப்பட்டது. இருந்தாலும், குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது; அது இன்றைய சமூகத்தின் இயல்பான ஓர் அங்கமாக உள்ளது. «என் இலக்கு வாழ்க்கைத் தப்பிப்பதே» பதவியேற்பு உரையில், பயிற்சி பெற்ற செவிலியராக இருந்து தற்போது சமூக ஆலோசகராக புதிய பாதையில் தன்னை அமைத்துக்கொண்டு வரும் ஜெயகுமார் துரைராஜா, உள்நாட்டுப் போர் நிலவிய தனது தாயகத்திலிருந்து தப்பியோடிய ஒரு இளைஞனின் கதையை கூறினார். அது உண்மையில், அவர் இளமையில் அனுபவித்த தனது சொந்தக் கதையே. «நான் என் குடும்பத்தை, நண்பர்களை, எனக்குத் தெரிந்த அனைத்தையும் விட்டுவிட்டு புறப்பட்டேன். பெற்றோர்களும் இல்லை, உடன் பயணிக்க யாருமில்லை. என் இலக்கு ஒரு பதவி அல்லது தொழில்முறை வாழ்க்கை அல்ல; உயிர் தப்பிப்பதே என் ஒரே நோக்கம்.» அவர் தொடர்ந்து கூறினார்: «போரின் நடுவிலும், தப்பியோடும் பயணத்திலும், அறியாத எதிர்காலத்தை நோக்கிச் சென்ற வழியிலும், நான் 20 முறை இறந்திருக்கலாம். இருந்தும் உயிர் தப்பினேன்.» அவரது வார்த்தைகள் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தின. அவை பாராளுமன்ற உறுப்பினர்களின் மனங்களை ஆழமாகத் தொட்டன. செங்காலனில் அவர் தன்னை வளர்த்துக்கொள்ளவும், ஒரு குடும்பத்தை அமைக்கவும் முடிந்தது. அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. தன்னை நம்பிய மனிதர்களை அவர் சந்தித்தார்; அந்த நம்பிக்கையே அவரை இன்று செங்காலனின் உயரிய பதவிக்கு கொண்டு வந்தது. «இந்த நாட்டிலும், இந்த நகரமான செங்காலனிலும் வாழ முடிவது ஒரு பெரும் பாக்கியம். நன்றி, செங்காலன்» என்று அவர் கூறினார். அவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் இலக்கிய வரியை (திருக்குறளை) மேற்கோள் காட்டி, அதன் பொருளை விளக்கினார்: «நன்றி உணர்வு கொண்டவர்களே முன்னேற முடியும்; மற்றவர்கள் முன்னேற முடியாது.» பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக நோக்கி அவர் கூறினார்: «உங்கள் இந்தத் தேர்வின் மூலம், நீங்கள் எனக்கு ஒரு பெரிய மரியாதையை மட்டுமல்ல, ஒரு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளீர்கள்.» பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதோடு, செங்காலன் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடமையும் தன்னிடம் இருப்பதாக அவர் நினைவூட்டினார். செங்காலன் ஒரு குடும்பநேய நகரம் என்றும், சமூக உணர்வும், விளையாட்டு-பண்பாட்டு சங்கங்களும், புதுமை, பசுமை, நிலைத்தன்மை மற்றும் பல்வகைத் தன்மையும் கொண்ட நகரம் என்றும் அவர் பாராட்டினார். «இந்த பல்வகைச் செங்காலனையும், செங்காலனுக்குள் உள்ள பல்வகைத் தன்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்» என்று அவர் கூறினார். மரியாதை, நம்பிக்கை, மதிப்பு மற்றும் நன்றி – இவைதான் நம்மை முன்னேற்றும் என்று அவர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஜெயகுமார் துரைராஜாவுக்கு நீண்ட நேரம் கரகோஷம் எழுந்தது. நன்றி: Tages Blatt தமிழில்: AI உதவியுடன் இணுவையூர் மயூரன். Inuvaijur Mayuran

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.