Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! written by admin January 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். 🔪" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> நீதிபதி பிரையன் கம்மிங்ஸ் கே.சி (Justice Brian Cummings KC) முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், நிலானியின் உடலில் 14 கத்திக்குத்து காயங்களும், 4 வெட்டுக் காயங்களும் இருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. “கொலை செய்யும் நோக்கத்துடன் மட்டுமே” மதியபரணம் அங்கு சென்றதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். 💢" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> ஒரு குடும்ப நிகழ்வுக்குத் தன்னை அழைக்காததால் ஏற்பட்ட கடும் கோபமே இந்த கொலைக்குத் தூண்டுதலாக இருந்துள்ளது. தாக்குதலுக்கு முன்பே மதியபரணம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, ஆக்ரோஷமாக நடந்துகொண்டவர் என்பதும், தனது மனைவி மற்றும் மகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற நீதிமன்றத் தடையை அவர் மீறியிருந்ததும் விசாரணையில் உறுதியானது. 💔" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இந்தத் தாக்குதலின் போது 18 வயதான மூத்த மகள் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்தையே உலுக்கியது: “அம்மாதான் எனக்கு எல்லாமே. இந்தச் சம்பவத்தால் நான் என் அம்மா, அப்பா, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். தந்தையர் குடும்பத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும், அதை அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. என் தந்தை எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.” ⚖️" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிமலராஜா மதியபரணத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதுவரை அவர் விடுதலைக்காக விண்ணப்பிக்க முடியாது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட நிலானி, ஒரு கனிவான மற்றும் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்தவர் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்தார். #UnitedKingdom #Liverpool #CrimeNews #JusticeForNilani #TamilNews #UKCourt #DomesticViolence #BreakingNews #LiverpoolCrime #SrilankanTamilNews https://globaltamilnews.net/2026/226663/
  3. நான் படம் பார்ப்பது மிகவும் குறைவு. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் முற்காலத்தில் பெரிய அளவில் நடைபெற்றது அதன் பின்பு அண்ணா தலைமையில் திராவிட கட்சி ஆட்சிக்கு வந்தது என்பதை பலர் சொல்லவும் வாசிப்பு மூலமும் அறிந்ததால் பராசக்தி படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து. தியோட்டரில் பார்த்தேன் தோற்கடிக்கபட்ட காங்கிரஸ் மீண்டு எழ முடியாத நிலையில் தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கின்றனர் 👍
  4. யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ அநுர ஆரம்பித்து வைத்தார்! written by admin January 16, 2026 யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ அநுர ஆரம்பித்து வைத்தார்! ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த பயனாளியின் குடும்பத்தாரால் நடுகை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் மாண்புமிகு ஜனாதிபதி முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. நீண்டகாலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களுக்குப் பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலும் இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிகழ்வில், மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வீடமைப்பு அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுசில் ரணசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, வடமாகாண ஆளுநர் ந. வேதநாயகன் , யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2026/226630/
  5. பெண் நிர்வாணபடத்தை ஆண் பகிர்ந்தாலோ, அல்லது ஆண் நிர்வாணபடத்தை பெண் பகிர்ந்தாலோ பெயர் அடிவாங்க போவது பெண்ணோடதுதான். ஒன்று இவவின் அந்த படத்தைதான் அவன் வாட்சப்பில் போட்டவனாம் என்று பேசும், அல்லது இவவுக்குத்தான் அந்த படத்தை அவன் அனுப்பினவனாம் என்று பேசும். கத்திமீது அப்பிள் விழுந்தாலும் அப்பிள்மீது கத்தி விழுந்தாலும் சேதம் என்னவோ அப்பிளுக்குத்தான் என்ற நிலையில் இன்றுவரை இருக்கிறது யாழ் மண்ணின் பெண் உரிமை.
  6. Today
  7. நோபல் பரிசு சமாதனத்திற்கு கொடுப்பது என்பது ஓர் பூச்சாண்டி....தங்களுக்கு விருப்பமில்லாத ஆட்சி நடைபெறும் நாடுகளின் எதிர் கட்சியினருக்கு பரிசை கொடுத்து ஆட்சியை கவிழ்ப்பது இவர்களின் செயல் ..
  8. பொதுவாக ஜனாதிபதி ஒருவர் யாழ்ப்பாணம் வந்தால்; கறுப்பு கொடி எதிர்ப்பு காட்டுவது, போராட்டம் நடத்துவது, பகிஷ்கரிப்பு கடையடைப்பு செய்வது, டக்கியார் மக்களை ஏமாற்றி கூட்டம் சேர்த்துகொண்டுபோய் வரவேற்பது, அவர்களும் இராணுவ, போலீஸ் பாதுகாப்போடு வந்து மேடையில் ஏமாற்று வார்த்தைகளை கூறிவிட்டு தென்பகுதிக்குப்போய் வேறொரு விளக்கம் கொடுப்பார்கள். இவர் என்னடாவெண்டால்; சாதாரண உடையில் வாறார், மக்கள் அவரை பாக்க முண்டியடிக்கிறார்கள், அரசியல் வாதிகளை காணேல, மக்களோட கைகுலுக்குகிறார், நடைப்பயிற்சி செய்கிறார், அவர்களோடு கூட இருந்து பொங்கி சாப்பிடுகிறார். தமிழரை அழித்துவிட்டு பாற்சோறு சாப்பிட்ட நினைவு யாருக்கும் வந்திருக்காது. தமிழ், சிங்கள உறவை பிரிக்க புத்தர் சிலையை கொண்டு ஒரு கூட்டம் அலையுது, இவர் என்னடா என்றால் தமிழரோடு பொங்கல் கொண்டாட வடக்கிற்கு வருகிறார், வழமையாக தேர்தல்காலத்திற்தான் பொய்யான வாக்குறுதிகளோடு வருவார்கள். இந்த உறவு நிலைக்க வேண்டும், தமிழரின் அபிலாசைகள் நிறைவேற்றி வைக்கப்படவேண்டும். அதுசரி.... நான்தான் அனுரா காவடி என்று களத்தில் முத்திரை குற்றினார்கள், இப்போ யாரையும் காணல கருத்துப்பரிமாற. நான்தான் மக்களை திரட்டி வரவேற்பளித்தேன் என்று கூறாதவரை சந்தோசம். பாவம் தமிழர்! அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளே. அடுத்த தேர்தலின் முடிவுகளை மக்களே சொல்லிவிட்டார்கள். இனி வருங்காலத்தில் சவால் விடும்போது இதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
  9. ஹாஹா..... காலம் மாறிவிட்டது. பெண்களுக்கு மட்டுந்தான் கற்பு, அதுபோனால் வாழமுடியாது என்கிற வாதம் மலையேறிவிட்டது. காலம் எப்படியெல்லாம் மாறுகிறது. இனி இவர் அந்தபெண்ணைதான் கைப்பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட புகைப்படங்களாக இருக்கும், அதுதான் பெடியன் முறைப்பாடு அளித்திருக்கிறான். அதென்ன அசிங்க பழக்கம் நிர்வாண புகைப்படங்களை ஒருவருக்கொருவர் அனுப்புவது? அப்படியே தெருவிலும் போவது, வீட்டிலுள்ளவர்களுக்கும் கொஞ்சம் காட்டி அதன் விளைவு என்னவென்று பார்ப்பது. பெண் முந்திக்கொண்டு விட்டார்!
  10. ட்ரம்பின் இந்தச் செயல் சின்னப்புள்ளத் தனமா இல்ல மூளை சீரழிந்த தனமா ? லூசிக்குப் பொறந்த, லூசிட புருசன்.
  11. இலண்டனில் இந்திய தணிக்கை குழுவின் கத்தரி இல்லாமல் திரையில் பார்த்தேன். இந்தி திணிப்புக்கு எதிரான கதை எனினும் பல சமசரங்களுடன்தான் திரைக்கதை அமைந்துள்ளது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் கட்சிகளால்தான் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டது என்பது புரிதல். ஆனால் படத்தில் இந்திய நாடு முழுவதும் பரவிய இரகசிய மாணவர் அமைப்பினால் (அதுவும் தமிழ்ப் பெயராகிய புறநானூற்றுப் படை) முன்னெடுக்கப்பட்டதாகக் காட்டப்பட்டது புனைவு. திராவிடக் கட்சிகள், இடது சித்தாந்தக் கட்சிகளின் பங்களிப்பு காட்டப்படவில்லை. இப்போதைய "ஜென் Z" தலைமுறைக்கு இப்படி ஒரு வரலாறு இருந்தது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். ஆனால் இன்னும் உணர்வோடு சொல்லியிருக்கலாம்.
  12. இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 10 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்! 1 செம்பாட்டான் 2 ஏராளன் 3 வசீ 4 புலவர் 5 சுவைப்பிரியன் 6 அல்வாயன் 7 ஈழப்பிரியன் 8 நியூ பலன்ஸ் 9 வாத்தியார் 10 கறுப்பி பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, சிறிலங்கா, இத்தாலி, மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இன்னமும் தங்கள் வீரர்களின் பட்டியலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
  13. அவமானம் என்பது மரணத்தை விட மோசமானது. மகாபாரதத்தில் துரியோதனனின் நண்பன் அஸ்வத்தாமனுக்கு சாகாவரம் அவனின் நல்ல செயலுக்காக வழங்கப்பட்டதல்ல. இந்த வரமே அவனுக்கு அளிக்கப்பட்ட சாபம்தான். இந்த சாபம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அஸ்வத்தாமனுக்கு வழங்கப்பட்டது. பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களையும் கொன்று வெறி அடங்காத அசுவத்தாமன் உத்திரையின் கருவில் இருந்த அபிமன்யுவின் குழந்தை மீது பிரம்மாஸ்திரத்தை எய்தான். மன்னிக்க முடியாத இந்த குற்றத்திற்காக கிருஷ்ணர் அவனிடம் இருந்த மரணத்தை பறித்து கொண்டார். வாழும் காலம் முழுவதும் வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் வாழ வேண்டுமென்று அவர் இவ்வாறு செய்தார்..
  14. @Newbalance , உங்கள் தெரிவுகளின்படி இந்தக் கேள்விக்கான பதில் SA அல்லது WI. உங்கள் தெரிவைத் தாருங்கள்.
  15. இந்த மான் உந்த சொந்தமான் எங்கப்பா அந்த தொண்டைமான் காளை ?
  16. மரியா மரியாதையா கொண்டு வந்து குடுத்திரு இல்லாட்டி மற்றவருக்கு நடந்தது தெரியும் தானே என மரியாதையா சொல்லியிருப்பாரு நைனா
  17. நோபல் பரிசை… தம் இஷ்டத்துக்கு மாற்றிக் கொண்டதன் மூலம், ட்ரம்பும், அந்த வெனிசூலா பெண்மணியும்…. உலக அரங்கில்… தம்மைத் தாமே தரம் தாழ்த்திக் கொண்டார்கள். மிக அருவருப்பான ஒரு செயலை… அந்த இரண்டு பன்றிகளும் செய்துள்ளது.
  18. அமெரிக்கா இரானை தாக்கினால் ரஷ்யா, சீனா பதிலடி கொடுக்குமா? அரபு நாடுகளின் பதற்றம் என்ன? பட மூலாதாரம்,Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரானில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பேச்சு நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை இது குறித்துப் பேசியுள்ளார். இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது அமெரிக்காவிற்குள் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு கருத்தாக உள்ளது. அமெரிக்கா ஏற்கனவே 1953-ஆம் ஆண்டில் இரானில் அரசாங்கத்தை மாற்றியிருந்தது. ஆனால் 1979-இல் நடந்த இஸ்லாமியப் புரட்சி, அமெரிக்காவுக்கு ஆதரவான அந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றியது. 1953-இல் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து, இரானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முகமது மொசாடெக்கை பதவியிலிருந்து அகற்றி, அதிகாரத்தை பஹ்லவியிடம் ஒப்படைத்தன. முகமது மொசாடெக் இரானின் எண்ணெய் துறையைத் தேசியமயமாக்கியவர். மேலும் மன்னரின் (ஷா) அதிகாரத்தைக் குறைக்க விரும்பினார். போர் நடக்காத காலத்தில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவரைப் பதவியிலிருந்து இறக்க அமெரிக்கா மேற்கொண்ட முதல் முயற்சி இதுவாகும். ஆனால் இதுவே கடைசியாக இருக்கவில்லை. அதன் பிறகு, இது அமெரிக்க வெளியுறவுத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே மாறியது. 1953-இல் அமெரிக்கா நடத்திய இந்த ஆட்சி கவிழ்ப்பு, 1979-ஆம் ஆண்டின் இரான் புரட்சிக்கு வழிவகுத்தது. இத்தனை ஆண்டுகாலம் கடந்த பின்னரும், இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான கசப்பான உணர்வுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யா நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1979 இஸ்லாமியப் புரட்சியின் போது தற்போது இரானில் ஆயதுல்லா அலி காமனெயியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி அமெரிக்கா பேசி வருகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்தினால், யார் அதனுடன் நிற்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. இரானின் முக்கிய கூட்டாளிகளான ரஷ்யாவும் சீனாவும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை வெளிப்படையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இரு நாடுகளும் வாய்மொழியாக மட்டுமே தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் என கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது கூட, ரஷ்யாவும் சீனாவும் வாய்மொழி கண்டனங்களை மட்டுமே தெரிவித்திருந்தன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. இரான் டிரோன்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியுள்ளது. பதிலுக்கு ரஷ்யா பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளை விரிவுபடுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர சார்புநிலையை அதிகரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ரஷ்யாவிற்கு இரான் ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்தாலும், அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபடும் அளவுக்கு ரஷ்யா அதற்கு நட்பு நாடு அல்ல. கடந்த ஆண்டு தாக்குதலின் போது கூட ரஷ்யா அவ்வாறு செய்யவில்லை. ஜனவரி 13 அன்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "மேற்கத்திய நாடுகள் இரான் மீது விதித்துள்ள சட்டவிரோதத் தடைகள், அங்கு பொருளாதார மற்றும் சமூக சவால்களை உருவாக்கியுள்ளன. இதனால் சாதாரண இரான் குடிமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.'' என்றார் ''மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி, இரானிய அரசை நிலைகுலையச் செய்யவும் பலவீனப்படுத்தவும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. இரானின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகளை நாங்கள் கண்டிக்கிறோம்" என்றார். மேலும், "2025 ஜூன் மாதத்தில் நடந்தது போன்ற மற்றொரு தாக்குதலை இரான் மீது நடத்த காரணங்களைத் தேடுபவர்கள், இத்தகைய நடவடிக்கைகள் மத்திய கிழக்கு மற்றும் உலகளாவிய சர்வதேச பாதுகாப்பில் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்," என குறிப்பிட்டார். சீனா அமெரிக்காவை எதிர்த்துப் போரிடுமா? பட மூலாதாரம்,Getty Images உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியான சீனா, இரான் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தல்களைக் கண்டித்து வருகிறது. ஆனால், அது அமெரிக்காவை நேரடியாக எதிர்த்துப் போரிடுமா? சீனாவிற்கும் இரானுக்கும் இடையே "விரிவான உத்தி சார்ந்த கூட்டாண்மை" உள்ளது. இருப்பினும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதைப் போல, சீனா தனது கூட்டாளிகளுக்குப் போர்க்களத்தில் நேரடியாக ஆதரவு அளிப்பதில்லை. பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க (எண்ணெய் விற்பனை) மற்றும் ராணுவத் தொழில்நுட்பத்திற்காக சீனாவைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இரான் சிக்கியுள்ளது. அதே நேரத்தில், இரானுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதங்களையும் வழங்கத் தான் தயாராக இல்லை என்பதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது. "இரான் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். இரானிய அரசாங்கமும் மக்களும் தற்போதைய சிரமங்களை முறியடித்து, நாட்டில் நிலைத்தன்மையைப் பேணுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.'' என சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியது. ''சர்வதேச உறவுகளில் பலத்தைப் பயன்படுத்துவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ நாங்கள் எதிர்க்கிறோம். மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு உகந்த நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பினரும் எடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என கூறியுள்ளது. இரான் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு அமெரிக்காவிற்கு எதிராக ஆக்ரோஷமாக இல்லை. ஏனெனில், அமெரிக்காதான் சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி. இரு நாடுகளுக்கும் இடையே விரோதப் போக்கு இருந்தபோதிலும், சீனா அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளைத் தொடர்ந்து பராமரிக்கவே விரும்புகிறது. ஜி-7 நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,Getty Images இரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அங்குள்ள அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஜி-7 நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. "கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர்களுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளாகிய நாங்கள், இரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. "மக்களுக்கு எதிராக இரான் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இரானிய அதிகாரிகள் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும், இரானிய குடிமக்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்'' என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images துருக்கி கூறுவது என்ன? துருக்கி இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசினாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை மாறுகிறது. ஜனவரி 13 அன்று, துருக்கிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஓமர் செலிக், ''இரானின் உள்நாட்டு விவகாரங்களில் உலகம் தலையிடக்கூடாது. அந்தப் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது என்பதை இரான் மக்களே தீர்மானிக்க வேண்டும்.'' என்றார். குறிப்பாக இஸ்ரேலை விமர்சித்த அவர், போராட்டங்களை இஸ்ரேல் தனது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் எந்தவொரு வெளிநாட்டு தலையீடும் "இன்னும் மோசமான விளைவுகளுக்கு" வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். "எங்கள் அண்டை நாடான இரானில் எந்த குழப்பத்தையும் நாங்கள் காண விரும்பவில்லை. இந்தப் பிரச்னைகள் இரானின் சொந்த உள்நாட்டுச் செயல்முறைகள் மற்றும் தேசிய விருப்பத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். இஸ்ரேலிய அதிகாரிகள் பொறுப்பற்ற நிலைப்பாட்டை எடுக்க முயற்சிக்கின்றனர். இது பிராந்தியம் முழுவதும் இன்னும் பெரிய பிரச்னைகளை உருவாக்கும்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images கடந்த ஆண்டு இரான் 12 நாட்கள் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க குண்டுவீச்சை எதிர்கொண்டது. இந்த நிகழ்வுகள் பிராந்தியத்தில் இரானின் பலவீனத்தை தெளிவாக படமிட்டுக் காட்டின. இரான் அதிகாரிகள் தங்களின் வளைகுடா அண்டை நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் தாங்கள் தாக்கப்பட்டால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என கூறியுள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் இரான் நடத்தும் எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவிடமிருந்து மிகக் கடுமையான எதிர்வினையைத் தூண்டும். அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பைத் தொடர்ந்து இராக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நீண்ட உள்நாட்டுப் போரின் போது சிரியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அண்டை நாடான ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் மற்றும் செங்கடலுக்கு அப்பால் சூடானில் நடக்கும் மோதல்கள் குறித்தும் செளதி அரேபியா கவலை கொண்டுள்ளது. அரபு ஆட்சியாளர்களுக்கும் இரானுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் சுமுகமானவை அல்ல. இரானின் அணுத் திட்டத்தையும் அந்த நாடு அரபு ஆயுதக்குழுவுக்கும் வழங்கும் ஆதரவையும் கட்டுப்படுத்தும் புதிய இரானிய ஆட்சி அமைந்தால், அதனை அரபு நாடுகள் வரவேற்கும் என கூறப்படுகிறது. ஆனால் இரண்டு ஆண்டாக பிராந்தியத்தில் நடந்த போருக்கு பிறகு மத்திய கிழக்கில் உள்ள பல அரசாங்கங்கள் இப்போது இரானில் ஏற்படும் அமைதியின்மை நிலைத்தன்மையை விட அதிக குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், அதன் தாக்கம் தங்கள் சொந்த நாடுகளை அடையக்கூடும் என்றும் அஞ்சுகின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அரபு நாடுகளின் அச்சம் இரான் மீதான எந்தவொரு தாக்குதலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் டாங்கர்களின் போக்குவரத்தைப் பாதிக்கும் என்று அரபு நாடுகள் அஞ்சுவதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது. பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்த குறுகிய கடல் பகுதி, இரானை அதன் அரபு அண்டை நாடுகளிடமிருந்து பிரிக்கிறது. உலகின் மொத்த எண்ணெய் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுகிறது. எந்தவொரு சாத்தியமான தாக்குதலிலும் தாங்கள் ஈடுபடமாட்டோம் என்றும், இரானை தாக்க அமெரிக்கா தங்களின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் இரானுக்கு செளதி உறுதி அளித்துள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி செவ்வாயன்று செய்தியாளர்களிடம், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க உதவுவதற்காக தனது நாடு அமெரிக்கா மற்றும் இரானுடன் தொடர்பில் உள்ளது என்றார். இரானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கை குறித்தும் டிரம்ப் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை, மேலும் அவரது ஆலோசகர்களுடன் இந்த உத்தி குறித்து விவாதித்து வருகிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். "செளதி அரேபியா இரானின் போட்டியாளராகக் கருதப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால், செளதி அரேபியா, ஓமன் மற்றும் கத்தார் ஆகியவை இரானிய ஆட்சியைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் உலகளாவிய எண்ணெய் சந்தைகளுக்கு பெரிய இடையூறுகளை ஏற்படுத்தி இறுதியில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அமெரிக்காவை நம்ப வைக்க முயற்சிக்கின்றன" என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இந்த நாடுகள் தங்கள் சொந்த நாடுகளில் ஏற்படக்கூடிய எதிர்வினை மற்றும் உறுதியற்ற தன்மை குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyjxv23kjo
  19. பணப்பரிமாற்ற ரசீது. வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசல கூடத்தை பூரணப்படுத்த குழிவெட்டும் படங்கள்.
  20. நேர்மறையான மாற்றங்களைச் செய்யும்போது எதிர்ப்புகள் வருவது இயல்பு - பிரதமர் 16 Jan, 2026 | 05:36 PM நேர்மறையான மாற்றங்களைச் செய்யும்போது எதிர்ப்புகள் வருவது இயல்பு. நாட்டிற்குத் தேவையான சிறந்த குடிமகனை உருவாக்கும் நோக்கில் நாம் ஆரம்பித்துள்ள நவீன கல்வி முறையை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பு குறித்துத் தெளிவுபடுத்துவதற்காகச் சிலாபம் கல்வி வலயத்தின் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் இன்று வெள்ளிக்கிழமை (16) மாதம்பை செடெக் (SEDEC) நிறுவன மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றபோது, ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பிரதான துறையாகக் கல்வித்துறை இனங்காணப்பட்டிருந்தது எனவும், இவ்வாறான சமூக மாற்றங்களை முன்னெடுக்கும்போது ஒரு சிறிய தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். எவ்வாறாயினும், சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் புதிய கல்வி மறுசீரமைப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வின்போது, 176 பாடசாலைகளையும் சுமார் 76,000 மாணவர்களையும் கொண்ட சிலாபம் கல்வி வலயம் குறித்த சுருக்கமான அறிமுகத்தைச் சிலாபம் வலயக் கல்விப் பணிப்பாளர் முன்வைத்தார். கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்காக வடமேல் மாகாணக் கல்வி அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் பிரதமருக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. அத்தோடு, கலந்துகொண்ட கல்வி அதிகாரிகள் தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டதோடு, கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தயார்நிலை குறித்துப் பிரதமரின் கவனம் ஈர்க்கப்பட்டது. அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், தவறுகளை இனங்கண்டு அவற்றைச் சரிசெய்து முன்னெடுக்கப்படுகின்ற புதிய கல்வி முறையின் கீழ், பிள்ளைகளுக்குத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகள் பேணப்படும் வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தக் கல்வி மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதில் புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பானது, கல்வி மறுசீரமைப்பைக் குழப்ப முயற்சிக்கும் தரப்பினரின் நோக்கங்களை முறியடிக்கும் அளவிற்குப் பலமானதாக இருக்கின்றது என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். தொழிற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட ஆகக்கூடிய வரவுசெலவுத் திட்ட நிதி, இக்கல்வி மறுசீரமைப்பின் ஊடாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கிடையிலான டிஜிட்டல் வளங்களின் சமத்துவமின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிப் பிரச்சினைகளை நீக்குவதற்காகத் தற்போது உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 6ஆம் தரக் கல்வி மறுசீரமைப்பைத் தற்காலிகமாக நிறுத்தியதன் மூலம் அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். கல்வியை ஒரு பாரிய மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணத்தில் மக்களின் அங்கீகாரம் மிகவும் முக்கியமானதாகும்" எனப் பிரதமர் தெரிவித்தார். இந்நிகழ்வில் வடமேல் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பி.எம்.சி.கே. வன்னிநாயக்க, உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி, பாடசாலை அதிபர்கள், மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க மதகுருமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236214
  21. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக பூமிக்குத் திரும்பிய வீரர்கள்! - காரணம் இதுதான் 16 Jan, 2026 | 02:32 PM சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 4 விண்வெளி வீரர்களும் நேற்று வியாழக்கிழமை (15) அதிகாலை அவசர அழைப்பின் பேரில் பூமிக்குத் திரும்பியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வுகளை மேற்கொண்ட விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கவேண்டிய தேவை காணப்படுவதால் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. க்ரூ -11 (Crew-11) என்ற விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ் ஜெனா கார்ட்மேன் (Zena Cardman), மைக் பின்கே (Mike Fincke) ஆகிய இரண்டு அமெரிக்க வீரர்கள், ஜப்பான் வீரர் கிமியா யூயி (Kimiya Yui), ரஷ்ய வீரர் ஒலெக் ப்ளாட்டோனோவ் (Oleg Platonov) ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் 1ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பூமியிலிருந்து அனுப்பப்பட்டனர். இந்த வீரர்கள் “ஸ்பேஸ் எக்ஸ்” (SpaceX) நிறுவனத்தின் “ட்ராகன்” (Dragon) விண்கலத்தில் சென்றுள்ளனர். இவர்களது விண்வெளி ஆய்வுப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை மேற்கொள்ளப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆய்வில் ஈடுபட்டிருந்த குறித்த நான்கு வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால் வீரர்கள் குழுவை அவசரமாக பூமிக்கு திரும்ப அழைக்க நாசா தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதனையடுத்து, கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை மாலை ட்ராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு 10 மணிநேர பயணத்தை மேற்கொண்டு படிப்படியாக உயரத்தை குறைத்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையத் தொடங்கியது. பின்னர், விண்வெளி வீரர்கள் சான் டியாகோ அருகே பசுபிக் கடற்பரப்பில் நேற்று அதிகாலை பாதுகாப்பாக தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வேளை, கடலில் நீந்திய டொல்பின்களை கண்டு ரசித்ததாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், அவர்கள் கடற்படை கப்பலின் மூலம் மீட்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் 25 ஆண்டுகால வரலாற்றில், விண்வெளியிலிருந்து இதுபோன்று அவசர தேவை கருதி வீரர்களை பூமிக்கு திருப்பி அழைத்த முதல் நிகழ்வு இதுவே என தெரிவிக்கப்படும் அதேவேளை தனியுரிமை கருதி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட வீரர் யார் என நாசா வெளியிட மறுத்து வருகிறது. https://www.virakesari.lk/article/236181
  22. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு - 37 பேர் காயம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயற்சி செய்யும் மாடுபிடி வீரர்கள் 16 ஜனவரி 2026, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 37 பேர் காயமடைந்தனர். இதில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 16) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் பங்கேற்பதற்காக 600-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 489 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் உடல் தகுதியின்மை மற்றும் மது அருந்தி வந்தது என 24 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 465 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டைப் பார்க்க நடிகர் சூரி வந்திருந்தார். ஜல்லிக்கட்டில் பங்கேற்றிருந்த அவருடைய காளை வெற்றி பெற்றது. இறுதிச்சுற்று உட்பட மொத்தம் 10 சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இன்று நடைபெற்ற போட்டியில் மொத்தம் 37 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார், டிராக்டர், பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. ஒன்பதாவது சுற்று நிலவரம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒன்பது சுற்றுகள் முடிவுற்ற நிலையில், இதுவரை மாடுபிடி வீரர்கள் 8 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 11 பேர், பார்வையாளர்கள் 11 பேர், அரசு ஆரம்ப சுகாதார ஊழியர் ஒருவர் என மொத்தம் 31 பேர் காயமடைந்துள்ளனர். ஒன்பதாவது சுற்றில், களம் கண்ட 817 மாடுகளில், 135 மாடுகள் பிடிபட்டுள்ளன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அஜித், பொந்துகம்பட்டி - 12 பிரபாகரன், பொதும்பு - 11 கார்த்தி, நாமக்கல் - 11 பார்த்திபன், திருமணப்பதி - 8 பார்த்திபன், நத்தம் - 8 ஏழாவது சுற்று நிலவரம் ஏழாவது சுற்றில், களம் கண்ட 678 மாடுகளில், 122 மாடுகள் பிடிபட்டுள்ளன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அஜித், பொந்துகம்பட்டி - 12 பிரபாகரன், பொதும்பு - 11 கார்த்தி, நாமக்கல் - 11 ஏழாவது சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: நவீன்குமார், ஆண்டார்கொட்டாரம் - 2 ஆறாம் சுற்று நிலவரம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், ஆறாம் சுற்றில் களம் கண்ட 601 மாடுகளில் 112 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அஜித், பொந்துகம்பட்டி - 12 பிரபாகரன், பொதும்பு - 11 கார்த்தி, நாமக்கல் - 11 ஆறாம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, நாமக்கல் - 11 பார்த்திபன், திருமணப்பதி - 8 கௌதம், ராஜக்காள்பட்டி - 4 மணிகண்டராஜா, சின்னாளபட்டி - 2 மூன்றாவது சுற்று நிலவரம் பாலமேடு ஜல்லிக்கட்டு மூன்றாம் சுற்றில் களம் கண்ட 295 காளைகளில் 45 காளைகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பிரபாகரன், பொதும்பு - 11 தமிழரசன், சின்னப்பட்டி - 6 துளசிராம், மஞ்சம்பட்டி - 4 மூன்றாம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பிரபாகரன், பொதும்பு - 11 ஶ்ரீநாத், விக்கிரமங்கலம் - 2 இரண்டாவது சுற்றின் முடிவில் காலை 12.00 மணி நிலவரப்படி பரிசோதனைக்கு வந்த 239 காளைகளில், 238 காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன. ஒரு காளை மட்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இரண்டாவது சுற்று முடிவில், 3 மாடுபிடி வீரர்கள், 2 உரிமையாளர்கள் மற்றும் ஒரு பார்வையாளர் என மொத்தம் 6 பேர் காயமடைந்தனர். வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நிசான் கார், டிராக்டர், மோட்டார் பைக் மற்றும் தங்க நாணயம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. அதேபோன்று ஒவ்வொரு சுற்றிலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மெத்தை, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில் சுமார் ஆயிரம் காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை ஆகியவை சார்பாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 ஆம்புலன்ஸ்கள் , 2 பைக் ஆம்புலன்ஸ்கள் , ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mklgz32j2o
  23. ஐசிசி 19இன் கீழ் உலகக் கிண்ணம்: ஐக்கிய அமெரிக்காவை DLS முறைமையில் வென்றது இந்தியா 15 Jan, 2026 | 09:38 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக புலாவாயோ குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (15) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை (DLS) பிரகாரம் இந்தியா 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. ஐக்கிய அமெரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. பிற்பகல் 5.10 மணியளவில் தடைப்பட்ட இப் போட்டி 2 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தொடர்ந்தபோது இந்தியாவுக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் வெற்றி இலக்கு 34 ஓவர்களில் 96 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது. இந்தியா 17.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றி இலக்கை அடைவதற்கு முன்னர் இந்தியா தனது இளம் அதிரடி வீரர் வைபவ் சூரியவன்ஷி உட்பட நால்வரை 70 ஓட்டங்களுக்கு இழந்தது. அபிக்யான் குண்டு அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவை வெற்றி பெறச்செய்தார். அவரை விட அணித் தலைவர் அயுஷ் மஹாத்ரே 19 ஓட்டங்களையும் விஹான் மல்ஹோத்ரா 18 ஓட்டங்களையும் கனிஷ்க் சௌஹான் ஆட்டம் இழக்காமல் 10 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிட்விக் அப்பிடி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 35.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஹெனில் பட்டேலின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் 9 அறிமுக வீரர்களைக் கொண்ட ஐக்கிய அமெரிக்க இளையோர் அணி பெரும் சிரமம் அடைந்தது. அறிமுக வீரர்களில் ஒருவரான நிட்டிஷ் சுதினி திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4 பவுண்டறிகளுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் அத்னித் ஜாம்ப் (18), சஹில் கார்க் (16), அர்ஜுன் மஹேஷ் (16) ஆகிய மூவர் 15 ஓட்டங்களுக்கு மெல் பெற்றனர். பந்துவீச்சில் ஹெனில் பட்டேல் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 7 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: ஹெனில் பட்டேல். https://www.virakesari.lk/article/236131
  24. அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Jan 16, 2026 - 04:14 PM அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkgr42z403zvo29n76m2khx4
  25. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் - ஜனாதிபதி Published By: Vishnu 16 Jan, 2026 | 08:49 PM பு.கஜிந்தன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (16) வீட்டுத் திட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையாற்றுகையில் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து பல காலங்கள் கடந்தாலும் இன்னும் பூர்த்தியடையாத வீட்டு திட்டங்களை பூர்த்தி செய்யும் முகமாக இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனவும், வட மாகாண மக்கள் யுத்த காலத்திலும் மற்றும் யுத்த காலத்திற்குப் பிறகும் பல இடப் பெயர்களை சந்தித்துள்ளனர் எனவும், நீண்ட காலமாக சொந்த வீடு இல்லாமல் வாழ்வது இலகுவான விடயம் அல்ல எனவும் தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டும் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், நாட்டில் முதல் முறையாக வட மாகாண மக்கள் நம்பிக்கை செலுத்தக்கூடிய வகையில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், முதலாவதாக மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எமது அரசாங்கம் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எனவும் தெரிவித்தார். மேலும், வரவு செலவு திட்டத்தின் ஊடாக கல்விக்காக அதிக நிதியை இம்முறை ஒதுக்கியுள்ளதாகவும், மக்களுக்கு ஒரு சிறந்த வருமான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும், விசேடமாக யாழ்ப்பாணத்தில் விவசாயத்துறை, சுற்றுலாத்துறை , கடற்றொழிற்துறை மற்றும் சிறு கைத்தொழில் துறை போன்றன இப் பகுதி மக்களுடைய வாழ்வாதாரமாக இருக்கின்றன எனவும், இவ் அனைத்து துறையையும் மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், யுத்த காலத்தில் முரண்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் இனவாதத்துடன் வாழ்ந்தனர் எனவும், இந்த முரண்பாட்டின் ஊடாக எவருமே நன்மை அடையவில்லை எனவும், மாறாக பாதிப்புக்கள் மட்டுமே மிஞ்சின எனவும் குறிப்பிட்டார். மேலும் அதிமேதகு சனாதிபதி தெரிவிக்கையில், மீண்டும் எமது நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், நாம் அனைவரும் அமைதியாக ஒற்றுமையாக சகோதரத்துடன் வாழும் ஒரு நாடு எமக்கு தேவை எனவும், இத்தோடு சிறப்பான பொருளாதாரத்துடனும் சிறந்த பொழுதுபோக்குடனும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை எமக்கு தேவை என்றும் குறிப்பிட்டதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பான உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அது தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது என தெரித்த அதிமேதகு சனாதிபதி அவர்கள், மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து, இத் திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதாகவும் இத் திட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும், எமது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நன்மை அளிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் இத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் எமது இளம் சமுதாயத்திற்கு மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார். இதே போன்று சுற்றுலாத்துறையை எடுத்துக் கொண்டால் எமது நாட்டிற்கு பெரிய பங்களிப்பை இந்த சுற்றுலாத்துறை வழங்குகின்றது எனவும், வடக்கில் அழகிய கடற்கரைகள் மக்களை கவரக்கூடிய பல இடங்கள் இருந்தாலும் சக்தி வாய்ந்த சுற்றுலாத்தலம் ஒன்று இங்கு இல்லை எனவும், இதன் குறைபாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், இங்குள்ள விமான நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எம்மால் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மிக வேகமாக காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், வட மாகாணத்தில் சிறந்த சுற்றுலாத் தலம் ஒன்றை அமைப்பது எமது தேவையாக உள்ளது எனவும், இளைஞர் யுவதிகளுக்குசிறப்பான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், நல்ல ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறான பொருளாதாரத்தை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பாக எமது அரசாங்கம் செயற்பட உள்ளதாகவும்தெரிவித்ததுடன், மேலும், இதற்கு மேலாக எனது நோக்கம் சிதறடிக்கப்பட்ட மனங்கள் மற்றும் உள்ளங்களை ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், நான் ஒருபோதும் மக்களை கைவிடமாட்டேன் என்று குறிப்பிட்ட சனாதிபதி அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/236228

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.