Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. வளமான நாடு - அழகான வாழ்க்கை திட்டத்தில் காரைநகர் பாதை புனரமைப்பு ஞாயிறு, 15 மார்ச் 2026 09:38 AM வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், காரைநகர் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர். https://jaffnazone.com/news/55586
  3. வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படும் ஞாயிறு, 15 மார்ச் 2026 09:46 AM வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அன்றைய சூழலில் அதனை நிறைவேற்ற முடியவில்லை. சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இந்த அரசாங்கத்தால் இவ்வீதிக்கு விடிவு கிடைத்து, மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகியுள்ளமை பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. காரைநகர் பிரதேசம் சுற்றுலாத்துறைக்குப் பிரபல்யமானதொரு இடமாகும். இதுவரை காலமும் இந்த மோசமான வீதியூடாகவே சுற்றுலாவிகள் கசூரினா கடற்கரைக்கு வந்து சென்றனர். இதனால் சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வீதி புனரமைக்கப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சுற்றுலாவிகளின் வருகை பலமடங்கு அதிகரிக்கும். அமைச்சர் பிமல் ரத்நாயக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயே எமது மாவட்டத்துக்குப் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்கியவர். நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது அந்த நிதியின் ஊடான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன். அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' பேரிடரால் எமது மாகாண வீதிக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனினும், அரசாங்கத்தின் புத்திசாதுரியமான நடவடிக்கையால் வீதிகளைத் தற்காலிகமாகச் சீர்செய்வதற்கு உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டது. தற்போது அவற்றை நிரந்தரமாகப் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழேயே நடைபெறுகின்றன. எனவே, அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கின் வீதிப் புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என நம்புகின்றேன், என்றார். https://jaffnazone.com/news/55587
  4. ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது; ஆனால் உடன்படிக்கைக்கு நான் தயாரில்லை – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 15 Mar, 2026 | 02:28 PM ஈரான் அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லாததால் இப்போதைக்கு அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். NBC செய்திச் சேவைக்கு சனிக்கிழமை வழங்கிய 30 நிமிட தொலைபேசி நேர்காணலின் போது அவர் இதனைத் திட்டவட்டமாக அறிவித்தார். ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், "நாங்கள் அத்தீவை முற்றாக அழித்துவிட்டோம், விளையாட்டிற்காக இன்னும் சிலமுறை அங்கு தாக்குதல் நடத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்கள் இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாகத் துடைத்தெறியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா காமினி உயிருடன் இருக்கிறாரா என்பது தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவது குறித்து கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவித்த ட்ரம்ப், ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் 3.66 டொலராக உயர்ந்துள்ள போதிலும், போர் முடிந்தவுடன் அது முன்னெப்போதையும் விடக் குறையும் என அவர் உறுதியளித்துள்ளார். உக்ரேன் போர் தொடர்பில் பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை விட உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உடன்படிக்கை செய்துகொள்வதற்கு மிகவும் கடினமானவராக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியுள்ளதை அவர் நியாயப்படுத்தியுள்ளார். ட்ரோன்களை வீழ்த்துவதற்கு உக்ரேன் வழங்க முன்வந்துள்ள உதவியை நிராகரித்த அவர், "எமக்கு ஜெலென்ஸ்கியின் உதவி தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் தேவையற்ற முறையில் ஈரானால் தாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241031
  5. அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை? மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலின் போது எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிஜிட்டல் குறியீட்டு (QR) முறையை விரைவாக முறைப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmrlcwe9001i356ppgca3jj3
  6. பிணவறையில் யுவதியின் சடலத்தை வன்புணர்ந்த விவகாரம்: அதிரடி திருப்பம் டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய யுவதியொருவரின் சடலத்திற்கு அந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியான இழிவுபடுத்தல்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹட்டன் நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய, வைத்தியசாலையின் பாதுகாப்பு கேமரா (CCTV) தொகுதி பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று ஊழியர்களும் ஏற்கனவே இருமுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நோர்வூட் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் பொறுப்பிலுள்ள CCTV தரவுகள் அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைக் குழுவினர் பரிசோதித்த காட்சிகளைத் தவிர மேலதிக ஆதாரங்கள் ஏதும் பதிவாகியுள்ளதா என்பதைக் கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் 2026.05.18 அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் சந்தேகநபர்கள் மூவரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த அவமதிப்புச் சம்பவம் கடந்த மாதம் (23) ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் வைத்தியசாலை நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இம்மாதம் (03) ஆம் திகதி பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து, முறையான விசாரணையைக் கோரிய பின்னரே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. போராட்டத்தின் விளைவாக, வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் நிபுணத்துவ வைத்தியர்கள் உள்ளிட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று ஊழியர்களும் தற்காலிகமாக வைத்தியசாலையிலிருந்து நீக்கப்பட்டு, நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/மலையகம்/பிணவறையில்-யுவதியின்-சடலத்தை-வன்புணர்ந்த-விவகாரம்-அதிரடி-திருப்பம்/76-373917
  7. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு adminMarch 14, 2026 written by admin March 14, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் கலைப் பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பத்மநாதன் கதிர்காமநாதன், மற்றும் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆகியோருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைவாக பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, திறமை அடிப்படையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230472/
  8. Today
  9. ராஜீவ்காந்தி அண்ணி விஜயலட்சுமி மாதிரியோ விஜய் பற்றி மனைவி சங்கீதா மாதிரியோ யாரும் வந்து குற்றம் சாட்டவில்லை ராஜீவ் காந்தி கூடாத மாதிரி பெண்களுடன் வாட்ஸ்அப்பில் பேசினார் என்று AI ல் உருவாக்கபட்ட ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியிட்டிருக்கின்றார்கள்.
  10. pdstonSore1a60hc7h895tmu6g5hfcl1h7ua7gh4gl 36iuti012a952a2m1 · “உலகத்தை தீயிட்டு கொளுத்தி விட்டு புகையைப் பற்றி புலம்ப முடியாது ஸ்பெயின்" ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். “உலகத்தையே தீயிட்டு கொளுத்திவிட்டு, பின்னர் அதில் எழும் புகையைப் பற்றி புகார் செய்ய முடியாது” என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் தெரிவித்துள்ளார். இந்த கருத்து, உலக அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு நிலைமை குறித்து அவர் வெளியிட்ட கடுமையான விமர்சனமாகக் கருதப்படுகிறது. #spinenews | #BreakingNews | #WorldNews | #worldtamilnews | #tranding | #News | #AmericavsIran | #iranvsisreal | #iranAttack | #AmericaAttack | #isrealAttack | #UAE | 🇶🇦" #Qatar | >#Kuwait | 🇧🇭 #Bahrain | #SaudiArabia | 🇮🇷" #Iran #isreal | #America | #China | #Russia | #todaynews
  11. முகமது சாலே,அல்லது முத்தலீப் போன்ற தமிழ் தெரிந்த கடற்படை அதிகாரிகளை நியமித்து தமிழக மீனவர்களை எல்லை தாண்டாமல் தடுக்கலாம்
  12. ராஜீவ்காந்திக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.ஊழல்குற்றச்சாட்டுகளும் பெண்நிரவாகிகளுடனுடான இன்ஸ்டா உரையாடல்களும் அதுவும் தேர்தல் நேரத்தில் வெளியாகியதால் அவருக்குப் பதவிப்பறிப்புச் செய்யப்பட்டு டம்மி பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.இது நீங்கள் நம்பும் ஜீனினர் விகடனில் வந்த செய்தி இன்ஸ்டா உரையாடல்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.திமுக வேட்பாளர் கனவில் இருந்தவுருக்கு ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் துரோகத்தின் பரிசு இப்படித்தான் இருக்கும்.இளைஞரணித்தலைவர் பதவியிலிருந்து கொள்கை பரப்பு இணைச்செயராளர் பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
  13. Pandeeyan Madurai ·pSsondoetr3970Lu21lgu67m21u0rccmm0:92gasm 2117aà062 8e4cha · கேள்விகளும் கவியரசர்கண்ணதாசன் பதில்களும்... 1. உடல்நிலை சரியில்லாமல் தாங்கள் சமீபத்தில் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக கிடந்த போது இந்த கலை உலகைப் பற்றியும் கவி உலகை பற்றியும் ஏதாவது நினைத்தீர்களா? 'செய்ய வேண்டிய காரியங்களை காலத்தால் செய்யாமற் போனோமே' என்று வருந்தினேன். 'என்னை எழுத விடாமல் தடுத்த சூழ்நிலைகளை எண்ணிப் பொருமினேன்' 'கடந்து போன காலங்களை வீணாக்கி விட்டோமே என்று கண்ணீர் வடித்தேன்' அடுத்த பிறவியிலும் கவிதை கலையில் இதே திறமையை வழங்கும்படி ஆண்டவனை வேண்டினேன். அடடா.. சிந்திப்பதற்க்கு ஆஸ்பத்திரி எவ்வளவு அற்புதமான இடம்? 2. காதலில் தோல்வியுற்ற தாங்கள், தங்கள் மகன் காதல் திருமணம் செய்து கொள்ள மனப்பூர்வமாக உத்தரவு அளிப்பீர்கள் என்று என் தோழி பந்தயம் கட்டுகிறாள். "அன்புள்ள அத்தானில்" ஹீரோவை பார்த்ததன் விளைவு? இது, அவரவர் ஜாதகத்தை அவரவரே கணித்துக் கொள்ளும் யுகம். அவன் தலையெழுத்து அப்படி இருந்தால் சிவன் கூட மறுக்க முடியாது. 3. அரசன் அன்றே கொல்வான், அதனால் பிரச்சனை முடிந்துவிடும். ஆனால் தெய்வம் நின்றுக் கொல்லும். இதனால் பிரச்சனை பெரிதாக உருவாகி விடும் அல்லவா? பிரச்சனை எவ்வளவு பெரிதாகிறதோ, அவ்வளவுக்கு அழிவும் பெரிதாக இருக்கும் சந்தேகமே இல்லை. நோயை முற்றவிட்டு அறுப்பதும், மருத்துவத்தில் ஒரு சரியான பகுதியாகும். பிறகு 'அந்த நோய்' வரவே வராது. 4. தாங்கள் எப்போதும் 'காமத்தை' மையமாக வைத்தே எழுதிகிறீர்களே ஏன்? காமம் எப்போதும் "மைய"மாகத் தான் இருக்கும். 5. "காமதாசன்" என்ற பட்ட பெயரை உங்களுக்கு வழங்கலாம் என்று இருக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்களா? நல்லது.. இடையிலே "ராஜ" என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள் "காமம்" என்றால் "அன்பு " என்றொரு பொருளும் உண்டு. 6. இவ்வளவு காலம் அரசியலில் மாட்டித் தவித்தீர்கள். இரண்டு வரிகளில் அந்த அனுபவத்தை படம் பிடியுங்களேன்? அரசியல் எனது உருவத்தைச் சிதைத்து காட்டி இருக்கிறது. ஆனால், என் சுயசரிதத்தின் பக்கங்களை அதிகரித்திருக்கிறது. 7. இலக்கியம் ஏற்றம் பெறுவது கருத்தாலா? கற்பனையாலா? வெறும் கருத்தும் இலக்கியம் அல்ல, வெறும் கற்பனையும் இலக்கியம் இல்ல… மஞ்சள் கருவும் வெள்ளைக்கருவம் சேர்ந்துதான் கோழி பிறக்கிறது. 'ஏற்றம்' என்பதும் இரண்டும் சேர்த்து தான் பெற முடியும். 8. கவிஞன் வாக்கு பொய்க்காது என்னும் கூற்று பற்றித் தங்கள் கருத்து யாது? தங்கள் வாக்கு எத்தகையது? மனப்பூர்வமாக, லாபம் கருதாது, தோன்றுகின்ற உணர்ச்சியை அப்படியே வடித்து வைக்கும் யாருடைய நேர்மையான வாக்கும் பொய்க்கவே பொய்க்காது. 9. நான் பெண்களுக்கு வாக்குரிமையே கொடுக்கக் கூடாது என்கிறேன். இதுப் பற்றி தாங்கள் கூறுவதென்ன? வாக்குரிமை கொடுப்பதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் அவர்கள் கணவன்மார்களுக்கு மட்டும் தான் ஓட்டுப் போட வேண்டும் என்று விதி வைக்க வேண்டும். அப்போதுதான் இனம் தெரிந்து போட்டதாக அர்த்தம். 10. "சந்தைக் கடை இரைச்சலில் நானும் சேர்ந்து கூவிடத் தயார் இல்லை" என்று கூறி சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை தங்கள் கைவிட்டீர்களே!' தாங்கள் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் ஒரு எம்.எல்.ஏ. ஆகியிருக்கலாம் என்பது என் ஹேஷ்யம் ....தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உண்மைதான். நான் போட்டியிட்டிருந்தால் எம்.எல்.ஏ. ஆகி இருப்பேன். ஆனால், சிஷ்யர்கள் மந்திரிகளாகவும், குரு எம்.எல்.ஏ.வாகவும் அசெம்பிளியில் இருக்கலாமா? நல்லவேளை நான் தேர்தலில் நிற்காதது. 11. கம்பராமாயணம் பரவிய அளவுக்குச் சிலப்பதிகாரம் பரவ வில்லையே ஏன்? கற்பனையிலும், கருத்தோட்டத்திலும் கம்பன் வியப்புக்குரியவனாக் காட்சியளிக்கிறான். இளங்கோ மதிப்புக்குரியவனாக காட்சியளிக்கிறான். 12. தங்களின் குரு யார்? நான் செய்த முட்டாள் தனமே... நன்றி... கண்ணதாசன் பதிப்பகம்... வலைபகிர்வு.....!
  14. தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. - விகடன் @கிருபன் - IPL மிகுதி 64 போட்டிகளும் விரைவில் அறிவிப்பார்கள். நீங்கள் போட்டியினை விரைவில் தயாரிக்கலாம்.
  15. வீதியோரம் . மலர் ....... 9. அப்போது விநோதன் தனக்குள் பேசுவதுபோல் சொல்கிறான் அவன் போதையில் இருந்த இடத்தில் இருந்து முதலைகள் அவ்வளவு தூரம் இழுத்து வந்திருக்காது, யாரோ அவனை இழுத்து வந்து குளக்கரைக்கு அருகில் விட்டிருக்க வேண்டும். சட்டென மணிமேகலை நிக்கிறாள்.அவள் கையிலிருந்த முயல் பொத்தென்று கீழே விழுகிறது….. நீ ….நீ என்ன சொல்கிறாய் விநோ …. — நீ ஏன் பதறுகிறாய் மேகலை ….நான் எனது ஊகத்தைத்தான் சொன்னேன் வேறொன்றுமில்லை…. இதுவே இன்றோ நாளையோ போலீஸ் வந்து இந்த இடத்தை ஆராய்ந்தால் அவர்களும் இப்படி ஊகிக்கலாம் இல்லையா ….. — எட்டிவந்து அவன் கையைப் பிடித்தவள், விநோ நான் உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா ….. — ம் …..சொல்லு …. — ம் ….. வந்து நான்தான் அவனை அங்கு இழுத்து வந்து போட்டது. அவனைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. அவன் வாழ்நாள் முழுதும் வேதனையால் துடிக்க வேண்டும். கொல்ல நினைத்திருந்தால் குளத்துக்குள்ளேயே தள்ளி விட்டிருப்பேன்……. ஆனால் நீ எப்படிக் கண்டு பிடித்தனி…… — அதுவா ….முதலைகள் இழுத்து வந்திருந்தால் காலோடு சேர்ந்து முழுஉடலும் தரையில் தேய்ந்து வந்த அடையாளம் இருந்திருக்கும்…..கூடவே அதை இழுத்துவந்த முதலைகளின் காலடையாளமும் இருந்திருக்கும்….. ஆனால் அவையொன்றும் அங்கில்லை. யாரோ அவன் காலைத் தூக்கிப் பிடித்து இழுத்ததால் ஜட்டியோடு அவனது பிருஷ்டங்களும் முதுகும் தேய்ந்த அடையாளங்கள்தான் அங்கிருக்கு. அத்துடன் சிறிய அளவுடைய பெண்ணின் கால்தடம்தான் அங்கிருந்தது. — அது இன்னும் அங்கிருக்கா, பொறு நான் சென்று அதை அழித்து விட்டு வருகிறேன் என்று அவள் திரும்ப ……. — அவசியமில்லை மேகலை அவற்றை நான் அகற்றி விட்டேன் நீ பயப்பிடத் தேவையில்லை….. — அது நான் என்று எப்படி நினைத்தாய் ……. — இங்கு தொழில் செய்யும் இரு பெண்களும் மற்றும் நீயும் சுஜிதாவும்தான் இருக்கிறீர்கள்….. அதில் அவர்களுக்கு அவனைக் கொள்ள வேண்டிய தேவை இல்லை….. சுஜிதாவும் யுகேந்திரனும் கடையிலே சப்ளை பண்ணிக் கொண்டிருந்தவர்கள்.நான் யோசித்துப் பார்த்த பொழுது நீதான் அவர்கள் மோட்டார் சயிக்கிளில் வந்து இறங்கியதும் அதைப் பார்த்த நீ பதட்டப் பட்டதைக் கவனித்தேன்…. உடனே நீ கடையில் இருந்து வீட்டுக்கு போனதையும் பார்த்தேன். அவர்கள் நேராக கடைக்கு வராமல் அவர்களுடன் போய் விட்டார்கள். அப்புறம்தான் நீ கடைக்கு வந்தாய். உனக்கு தொடர்ந்து வேர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கு, அடிக்கடி சேலைத்தலைப்பால் முகத்தை துடைத்துக் கொண்டிருந்தாய். இரவு எல்லோரும் குளத்தடிக்கு ஓடுகையில் சுஜிதா உட்பட நீ மட்டும் சும்மாவேனும் எட்டியும் பார்க்கவில்லை. அதனால் நீயாக இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். எனினும் இது பற்றி உன்னிடம் நான் எதுவும் கேட்கப்போவதில்லை….. —- ஏன் ….. — ஏன் என்றால் எங்கள் நால்வருக்கும் தத்தமக்கு வலி தந்தவர்களை தங்களால் முடிந்தளவு தண்டிக்கும் உரிமை அவரவர் புத்திக்கு ஏற்றவாறு உண்டு என்று நான் நினைக்கிறேன்…… —- நீ சொல்வதும் ஒருவகையில் பார்த்தால் சரியாகத்தான் இருக்கு…..ஆனாலும் என் மனப்பாரம் குறையவாவது நான் உனக்கு சொல்கிறேன் கேள். உன்னைவிட வேறு யாரிடம் நான் சொல்ல முடியும்…… அன்று நாங்கள் சேர்ந்திருந்தபொழுது என்னுடலில் நூற்றுக்கணக்கான தழும்புகள், காயங்கள் நீ பார்த்திருப்பாய். அப்பொழுது உன்னாலையே அவற்றைப் பார்த்து ஜீரணிக்க முடியவில்லை……ஆனால் நாள்தோறும் அந்த நரகங்களை அனுபவித்த எனக்கு எப்படி இருந்திருக்கும். அவற்றில் ஏராளமான துன்புறுத்தல்கள் இந்தப் படுபாவியால் ஏற்பட்டதுதான். உண்மையில் இவன் ஒரு ஆண்மையற்றவன். அதை மறைக்க தன்னிடம் கிடைப்பவர்களுக்கு மிகக் கேவலமான அருவருப்பான தண்டனைகள் குடுப்பான். அவனுக்கு குழந்தைகள், பெரியவர், ஆண்கள், பெண்கள் என்ற பேதமெல்லாம் கிடையாது.சதா எந்நேரமும் போதையில்தான் இருப்பான். கூட்டாளிகளுக்கு உணவு தேடிவருவதும் சமைத்து வைப்பதுவும்தான் இவனது வேலை. எந்நேரமும் பெண்ணோ பையனோ அவன்கூட இருக்க வேணும். குளிக்கப்போனாலும் சரி, தூங்கப்போனாலும் சரி….போதையில் கையில் கிடைக்கிறதால் எடுத்து அடிப்பான். உடலில் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் சுருட்டால் சூடு வைப்பான்….. கொஞ்சம் கண்களை மூடி தன்னை நிதானித்துக் கொண்டு சொல்கிறாள்…… கடவுள் இருக்கிறான் விநோ, நேற்று எதிர்பாராது இந்த மிருகத்தைக் கண்டதும் எனக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது. அவன் மட்டும் கடைக்குள் வந்திருந்தால் என்னை மட்டுமல்ல இந்த சின்னஞ் சிறுசுகளையும் விட்டிருக்க மாட்டான்….உன்னாலையும் அவனை ஒன்றும் செய்ய முடியாது……அவனுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கு…..அதுதான் அவனுக்கு முடிவு கட்ட சந்தர்ப்பம் பார்த்திருந்தேன்.அவன் சாகக்கூடாது சாகும்வரை நடைப்பிணமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் அவன் அங்கு காட்டில் நிறைவெறியில் மரக்குற்றியில் சாய்ந்து கிடப்பதைப் பார்த்தேன்.அருகில் யாருமில்லை. அந்தப் பெண்களும் இவனது கூட்டாளியுடன் லொறிக்குள் இருந்தார்கள். எனக்கு எப்படி அவ்வளவு பலம் வந்ததென்று தெரியாது. உடனேயே நான் அவன் கால்களைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து குளக்கரையில் கிடத்தி விட்டு அங்கே கிடந்த கறிகளை எடுத்து வந்து கரையிலும் குளத்துக்குள்ளும் போட்டு விட்டு சற்று தள்ளிப்போய் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது முதலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. முதல் வந்த முதலை அவன் கையைக் கடித்து இழுக்க மற்றது இவன் தொடையை கடித்து சதையைப் பிய்த்தெடுக்கும் வரை பார்த்து விட்டு கடைக்குள் வந்து நிம்மதியாய் வேலை செய்து கொண்டிருந்தேன். என்று கூறினாள்......! மலர் . ........ 🐇 9.
  16. புதிய QR முறை - சிக்கல்களுக்கு இன்று பிற்பகல் தீர்வு! Mar 15, 2026 - 10:10 AM தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள், எவ்வித சிக்கலுமின்றி தமது புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமது வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட விடயங்கள் தொடர்பில் இன்று (15) பிற்பகல் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இன்றைய தினத்திற்குள்ளேயே அவற்றுக்கான உரிய தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்தி, பதுக்கல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmr9g01y0013356pit1k9bjw
  17. புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவில் ஸ்தாபிக்க அமைச்சர் கே.டி. லால்காந்த உறுதி 15 Mar, 2026 | 09:51 AM வவுனியாவில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையமொன்றினை ஸ்தாபிப்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் விடுத்த கோரிக்கையினை விரைவில் நடைமுறைப்படுத்துவதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த உறுதியளித்துள்ளார். விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் விசேட வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை 12 அன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் பின்வருமாறு தெரிவித்தார், வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை கமநல சேவைகள் நிலையம், கோவில்குளம் கமநல சேவைகள் நிலையம், பம்பைமடு கமநல சேவைகள் நிலையம் ஆகியவை அதிக சுமையுடன் இயங்கிவருகின்றன. இந்த மூன்று கமநல சேவைகள் நிலையங்களிலிருந்தும் குறிப்பிட்ட பகுதிகளை ஒன்றினைத்து புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையம் உருவாக்கப்பட வேண்டும் எனும் முன்மொழிவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். இதன்மூலம் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு கமநல சேவைகள் நிலையங்களினூடாக சிறந்த, விரைவான சேவையினை வழங்க முடியும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் , இது ஒரு சிறந்த முன்மொழிவு. இந்த விடயத்தை கையாள்வதற்காக ஏற்கனவே ஒரு குழுவொன்று அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த முன்மொழிவை வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து அனுமதியினை பெற்று அதனை குறித்த குழுவிற்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவாக உருவாக்கித்தர முடியும் என தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/240987
  18. ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தியக் கொடியை ஏந்திய இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடிந்தது (சித்தரிப்புப் படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை தொடர்ந்து, மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் இரண்டு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன. இந்திய வெளியுறவு அமைசகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெர்ஸ்வால் சனிக்கிழமை இத்தகவலை அளித்தார். ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தியாவுக்கு வரக்கூடிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன. ஷிவாலிக், நந்தா தேவி எனும் இரண்டு இந்திய கப்பல்கள், ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன, அவை தற்போது இந்திய துறைமுகங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன." என்றார். இரு கப்பல்களிலும் தலா 46,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான எல்பிஜி எரிவாயு என, மொத்தமாக சுமார் 93,000 மெட்ரிக் டன்கள் எரிவாயு உள்ளது என அவர் தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பாக வெளியுறவு துறை, பெட்ரோலிய துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த தகவலை தெரிவித்தார். வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா), அசீம் மஹாஜன் கூறுகையில், மேற்கு ஆசியாவில் நீடிக்கும் மோதலால் இந்தியர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காயமடைந்துள்ளார் என்றார். தற்போதைய சூழலில், அப்பகுதியில் இருக்கும் இந்திய அதிகாரிகள் முழு நேரமும் அதுகுறித்து பணியாற்றி வருகின்றனர், சூழல் குறித்து கண்கானித்து வருகின்றனர். அவர் கூறுகையில், "முந்தைய சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார். ஓமன், இராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் சென்றடைவதற்கும் காணாமல் போனவரை தேடுவதையும் உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்." என்றார். வளைகுடா பிராந்தியத்தில் எத்தனை இந்திய கப்பல்கள் சிக்கியுள்ளன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ரந்தீர் ஜெய்ஸ்வால் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பல இந்திய கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்தில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும், இந்தியா அதன் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். அவரை பொறுத்தவரை, இந்த கப்பல்கள் பாதுகாப்பாகவும் தங்குதடையுமின்றி கடக்க சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் ஒருங்கிணைத்துவருவதாகவும் தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்த மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் விமான இடையூறுகள் காரணமாக, இந்தியாவில் இரானிய குடிமக்கள் பலர் சிக்கியுள்ளனர். இந்த குடிமக்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துவர இரானிய அதிகாரிகள் விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலாவாக வந்தவர்கள் அல்லது ராஜ்ஜீய அதிகாரிகளாக வந்தவர்களும் இதில் அடங்கும்." என்றார். "இந்த விமானம் கொச்சியை வந்தடைந்துள்ளது. ஐஆர்ஐஎஸ் லாவன் விமானத்தின் விமான குழுவினர் உட்பட பயணிகள் கப்பலில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த விமானம் கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது." என்று அவர் மேலும் கூறினார். மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில், பாரசீக வளைகுடாவில் இந்திய கொடிகளை ஏந்திய 22 கப்பல்கள் உள்ளன. இதுதொடர்பாக, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா கூறுகையில், இதில் 6 எல்பிஜி டேங்கர்கள், ஒரு எல்என்ஜி டேங்கர், நான்கு கச்சா எண்ணெய் டேங்கர்கள், ரசாயன பொருட்கள் ஏந்திய ஒரு டேங்கர், மூன்று கொள்கலன் கப்பல்கள், இரண்டு பெரிய தாங்கு கப்பல்கள், நீருக்கு அடியில் தோண்டுவதற்கு பயன்படும் டிரெட்ஜர் கப்பல் ஆகியன அடங்கும். "மேலும், ஒரு கப்பல் 'எம்ப்டி பாலஸ்ட்' நிலையில் உள்ளது; மூன்று கப்பல்கள் 'டிரை டாக்' நிலையில் உள்ளன. 'எம்ப்டி பாலஸ்ட்' என்பது அந்த கப்பல் எந்த சரக்கையும் எடுத்துச் செல்லாமல் இருப்பதை குறிக்கும். 'டிரை டாக்' என்பது அந்த கப்பல்கள் வழக்கமான பழுது பார்க்கும் பணிகளில் இருப்பதை குறிக்கும்." என அவர் தெரிவித்தார். புதிய உத்தரவுகளை வெளியிட்ட அரசு உள்நாட்டு எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கிறது. சனிக்கிழமை, அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955 இன் விதிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், குழாய் மற்றும் எல்பிஜி இணைப்புகள் இரண்டையும் வைத்திருக்கும் நுகர்வோர் எல்பிஜி இணைப்பை தொடர்ந்து வைத்திருக்க முடியாது. அத்தகைய நபர்கள் எந்த அரசு நிறுவன விநியோகஸ்தர் மூலமாகவும் தங்கள் வீட்டு எல்பிஜி சிலிண்டர்களை மீண்டும் நிரப்ப முடியாது. அத்தகையவர்கள் உடனடியாக தங்கள் எல்பிஜி இணைப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் தனது உத்தரவில் கூறியுள்ளது. குழாய் எரிவாயு இணைப்பு உள்ள நுகர்வோருக்கு எல்பிஜி இணைப்பு வழங்கப்படாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் தொடர்பான அறிவிப்பு சனிக்கிழமையே வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வெளிப்படையாக, இந்த உத்தரவு குழாய் எரிவாயு கிடைக்கும் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும். எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பின் நிலை என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சுஜாதா சர்மா மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடந்து வரும் போர், உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ளது மற்றும் அதன் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில், உள்நாட்டு எரிவாயு விநியோகத்தில் இதன் தாக்கம் குறிப்பாகத் தெரிகிறது. பல நகரங்களில் எல்பிஜி எரிவாயுக்கான நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன, மேலும் வணிக நுகர்வோர் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை நடைபெற்ற ஒரு மாநாட்டில், பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, "எங்களிடம் (இந்தியா) போதுமான அளவு கச்சா எண்ணெய் விநியோகம் உள்ளது, மேலும் எங்கள் சுத்திகரிப்பு நிலையங்களும் முழு திறனுடன் செயல்படுகின்றன. சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு இல்லை என எந்த தகவலும் இல்லை" என்றார். "இந்தியாவிடம் போதுமான அளவு டீசல் மற்றும் பெட்ரோல் கிடைக்கிறது. தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான டீசல் மற்றும் பெட்ரோலை நாங்கள் உற்பத்தி செய்கிறோம், எனவே, இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை." எனவும் அவர் உறுதி கூறினார். மேலும் பேசிய சுஜாதா ஷர்மா கீழ்க்காணும் கருத்துக்களை தெரிவித்தார். "இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, எல்பிஜி விநியோகம் தடைபடும் இடங்களில் வணிக நுகர்வோரை பிஎன்ஜி இணைப்புகளுக்கு மாற்ற அரசாங்கம் விரும்புகிறது. இதற்காக, இந்திய எரிவாயு ஆணையம் லிமிடெட் பல ஆபரேட்டர்களுடன் சந்திப்புகளை நடத்தி, அவர்கள் வழங்கக்கூடிய வணிக நுகர்வோருக்கு உடனடியாக பிஎன்ஜி இணைப்புகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. "எல்பிஜி விநியோகத்தைப் பொறுத்தவரை, புவிசார் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு இன்னும் கவலையளிக்கும் விஷயம் என்று நான் கூறுவேன். மக்கள் பீதியில் எரிவாயுவை முன்பதிவு செய்கிறார்கள். நேற்று முன்தினம் 75 லட்சம் முன்பதிவுகள் இருந்தன, அவை இன்று 88 லட்சமாக அதிகரித்துள்ளன. இது மக்கள் பீதி காரணமாக முன்பதிவு செய்கிறார்களே தவிர வேறில்லை." "நாட்டு மக்கள் பீதி அடைவதைத் தவிர்த்து, தேவைப்படும்போது மட்டுமே முன்பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது அனைவருக்கும் நல்லது." உரங்களும் பாதிக்கப்படுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போர் இந்தியாவில் எரிவாயு நுகர்வோர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய கிழக்கு மோதல் காரணமாக இந்தியாவில் எழுப்பப்படும் மற்றொரு கவலை உர விநியோகம். இந்தியாவின் தற்போதைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருப்பதாக அரசாங்கம் கூறினாலும் இந்த கவலை உள்ளது. "இந்தியாவின் யூரியா கையிருப்பு கடந்த ஆண்டில் இதே சமயத்தில் இருந்ததை மிக அதிகமாக உள்ளது. DAP (டை அமோனியம் பாஸ்பேட்) கையிருப்பு கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். அதேபோல், எங்கள் NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) கையிருப்பும் கடந்த ஆண்டை விட மிக அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார். "இந்தியாவின் உள்நாட்டு யூரியா உற்பத்தியைப் பொறுத்தவரை, தற்போதைய உற்பத்தி வழக்கமான நுகர்வை விட அதிகமாக இருக்கும், குறிப்பாக ராபி பருவம் முடிவடையவிருப்பதால். மேலும், சில ஆலைகளின் திட்டமிடப்பட்ட வருடாந்திர பராமரிப்பை நாங்கள் ஏற்கெனவே முடித்துவிட்டோம், அதாவது கிடைக்கக்கூடிய எரிவாயுவைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும்." "தற்போதைய சூழ்நிலையை எதிர்பார்த்து, உரத் துறை ஏற்கெனவே உலகளாவிய டெண்டர்களை முன்கூட்டியே வெளியிட்டிருந்தது. போட்டி அடிப்படையில் 'உடனடி எரிவாயுவை' (spot gas) வாங்க உரத் துறை முடிவு செய்துள்ளது, மேலும் கொள்முதல் முதல் கட்டம் செவ்வாய்க்கிழமைக்குள் நிறைவடையும்." "இந்தியாவின் அனைத்து சர்வதேச கூட்டாளிகளும் எந்த இடையூறும் இல்லாமல் விநியோகம் செய்து வருகின்றனர், மேலும் காரீஃப் பருவத்தில் உரங்களுக்கான தேவை உச்சத்தை எட்டும் மே 15 ஆம் தேதிக்குள் போதுமான மற்றும் பாதுகாப்பான உரங்கள் இருப்பில் இருக்கும் என்று நம்புகிறோம்." இந்த விஷயத்தில் கருத்து தெரிவிப்பவர்கள் உண்மைகளின் அடிப்படையில் பேச வேண்டும் என்றும், முழுமையான தகவல்கள் இல்லாமல் ஊகங்கள் மூலம் மக்களிடையே பீதியை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24873441mo
  19. மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்த தீர்மானம்! Published By: Digital Desk 1 15 Mar, 2026 | 07:40 AM • ஜூனில் தேர்தல் முறைமை அறிவிக்கப்படும் • புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்க வாய்ப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் எந்த முறைமையில் தேர்தலை நடத்துவது மற்றும் தேர்தலுக்கான திகதி என்பவற்றை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது. உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. மேலும் எந்த முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாரம் கூட உள்ளது. இதன் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. இது குறித்து மேலும் தெளிவுப்படுத்துகையில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக உள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது மாகாணசபை தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்புகளை அரச தரப்பு வெளியிட உள்ளது. மறுபுறம் மாகாணசபை தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் குறித்த குழுவுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த பரிந்துரைகளில் தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு தீர்வுகள் முன்வைக்கப்பட உள்ளது. அத்துடன் புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு இராஜதந்திர மையங்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடி இருந்தார். இந்த கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட விடயங்கள் மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை குறித்து பரிந்துரைகள் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. பொருளாதார இலக்குகளை நோக்கி செல்லும் போது அநாவசியமான அழுத்தங்களை தவிர்க்கும் வகையிலேயே மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வருடத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறைவுப்பெறுகின்றது. அந்த வரிச்சலுகையினை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஜனவரியில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என நான்கு துறைகளில் 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும். இலங்கையை பொறுத்த வரையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்தல் என்பன முக்கிய விடயங்களாக உள்ளன. மறுபுறம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நடைப்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தல் விடயத்தில் அநாவசியமான அழுத்தங்கள் வரக்கூடும் என்பதால் அதற்கு முன்னரே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240979
  20. அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி Mar 15, 2026 - 08:52 AM அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டின் நடுநிலைமை தொடர்பான சட்டங்களை மேற்கோள் காட்டி இந்த அனுமதி மறுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு விமானங்களுக்கு சுவிட்சர்லாந்து தனது வான்பரப்பைத் திறக்காத அதேவேளை, மேலும் மூன்று விமானங்களுக்கு வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து சுவிட்சர்லாந்து அரசு விடுத்துள்ள அறிக்கையில், பராமரிப்பு விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களுக்கு மாத்திரம் தமது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmr6ln9e0010356pmdk7xekm
  21. QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது : இன்று முதல் அமுல் - எவ்வாறு QR குறியீட்டை பெறுவது ! 15 Mar, 2026 | 06:35 AM நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறைமை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய புவியியல் - அரசியல் சூழ்நிலையால் பெற்றோலியப் பொருட்களின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் நாட்டில் எரிபொருள் தேவையும் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாட்டில் உள்ள தற்போதைய எரிபொருள் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதால், கிடைக்கும் எரிபொருளை சீராக நிர்வகிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில தரப்பினர் சட்டவிரோதமாக அதிகளவு எரிபொருளை வாங்கி குவித்து வருகின்றனர் என்பது அண்மையில் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்காகவே QR குறியீட்டு முறைமை மீண்டும் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் செல்லுபடியாகும் QR குறியீடு இல்லாமல் எந்த எரிபொருள் நிரப்பு நிலையமும் எரிபொருள் வழங்காது என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. QR குறியீட்டை பெறும் முறை ஏற்கனவே QR குறியீட்டிற்கு பதிவு செய்துள்ள வாகன உரிமையாளர்கள், தங்களது வாகன உரிமையும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணும் மாற்றமில்லையெனில், 2026 மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் “Vehicle Login” பகுதியின் மூலம் தங்களது QR குறியீட்டை பதிவிறக்கம் செய்யலாம். வாகன உரிமை அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மாற்றமடைந்திருந்தால், அவர்கள் 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் மீண்டும் இணையதளத்தின் “Vehicle Registration” பகுதியின் மூலம் புதிதாக பதிவு செய்ய வேண்டும். அதேபோல், இதுவரை QR குறியீட்டிற்கு பதிவு செய்யாதவர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் 2026 மார்ச் 15 காலை 6.00 மணி முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் மூலம் பதிவு செய்து QR குறியீட்டை பெற முடியும். வாகனங்களுக்கு வாராந்தம் ஒதுக்கப்பட்ட எரிபொருள் அளவு வாகன வகைகளுக்கான எரிபொருள் அளவுகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: * பேருந்துகள் – 60 லீற்றர் * மோட்டார் சைக்கிள் – 5 லீற்றர் * வேன் – 40 லீற்றர் * மோட்டார் கார் – 15 லீற்றர் * லொறி – 200 லீற்றர் * வாகனங்கள் (Land Vehicles) – 25 லீற்றர் * முச்சக்கர வண்டி – 15 லீற்றர் * விசேட பயன்பாட்டு வாகனம் – 40 லீற்றர் * குவாட்ரிசைக்கிள் (Land Vehicles) – 5 லீற்றர் தேசிய உற்பத்தி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான வாகனங்களுக்கு தனிப்பட்ட எரிபொருள் விநியோக முறைமையும் அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/240978
  22. அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் மழை வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பு 15 Mar, 2026 | 08:42 AM மத்திய,சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா, மன்னார், அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். https://www.virakesari.lk/article/240977
  23. ஈரானின் இஸ்பஹான் நகர் மீது தாக்குதல்: தொழிற்சாலை ஊழியர்கள் 15 பேர் பலி Mar 15, 2026 - 08:26 AM ஈரானின் இஸ்பஹான் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழிற்சாலை ஊழியர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வெப்பமூட்டிகளைத் தயாரிக்கும் சிவில் தொழிற்சாலை ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இஸ்பஹான் நகரம் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளின் முக்கிய மையமாக மாறியுள்ளது. நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான நகரமான இஸ்பஹானில், இராணுவ மற்றும் சிவில் ஆகிய இரு துறைகளுக்கும் சொந்தமான தொழிற்சாலைகளும், ஈரானின் மிக முக்கியமான பல அணுசக்தி நிலையங்களும் அமைந்துள்ளன. இஸ்பஹான் தவிர, தெஹ்ரான், தப்ரீஸ், பண்டார் அப்பாஸ் மற்றும் கர்மான் மாகாணத்தின் சிர்ஜான் ஆகிய நகரங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmmr5vigc000z356p0wq7ltik
  24. போதைப்பொருள் கடத்தல்காரரின் சொத்துக்கள் முடக்கம் Mar 15, 2026 - 07:44 AM போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தித் தனது மனைவியின் பெயரில் வாங்கிய 155 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது. பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அந்த உத்தரவு நீடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான அந்தப் பெண் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் அந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்ட சுமார் 400 இலட்சம் (4 கோடி) ரூபாய் பெறுமதியான மூன்று மாடி வீட்டையும் காணியையும் இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmmr4d7i1000w356pou7cte5z
  25. ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு Mar 15, 2026 - 06:50 AM ஈரானுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஈரானுக்கு உடன்படிக்கை செய்துகொள்ளும் தேவை உள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால் தாம் தற்போது அதனைச் செய்ய விரும்பவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அந்நிபந்தனைகள் எவை என்பதைக் கூற மறுத்துவிட்ட அமெரிக்க ஜனாதிபதி, ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளை முற்றாகக் கைவிடும் அர்ப்பணிப்பு அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று மட்டும் குறிப்பிட்டார். அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய மையமான 'கார்க்' (Kharg) தீவை அமெரிக்கா முழுமையாக அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், வேடிக்கைக்காக அமெரிக்கா இன்னும் சில தடவைகள் அந்த இடத்தைத் தாக்கக்கூடும் என்றும் இதன்போது கூறியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmr2goy5000u356p2jffdg8t

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.