24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
2025: உலக நிலவரம் எப்படி இருந்தது?
2025: உலக நிலவரம் எப்படி இருந்தது? ஜனவரி 1, 2026 –பயஸ் ஃபோஸன் (Pius Fozan) எந்தத் தீர்வும் எட்டப்படாமலேயே இந்த ஆண்டு (2025) முடிவுக்கு வருகிறது. உலகம் எதையெல்லாம் சகித்துக்கொள்ளத் துணிந்துவிட்டது என்பதற்கான நீண்ட பட்டியல்தான் இங்கே எஞ்சி நிற்கிறது. அந்தப் பட்டியலின் முக்கிய அம்சங்கள்: காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் 18,457க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் உள்நாட்டுப் போர் சூடானைச் சிதைத்து வருகிறது. உலகில் வெறும் 6.6% மக்கள் மட்டுமே முழுமையான ஜனநாயகச் சூழலில் வாழ்கிறார்கள். ஒட்டுமொத்த மனித குலத்தில் வெறும் 0.001% பேர் (சுமார் 60,000 பேர்) உலக மக்கள் தொகையின் சரிபாதிப் பேர் வைத்துள்ள செல்வத்தைப் போல மூன்று மடங்கு செல்வத்தைத் தங்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள். உக்ரைனில் ரஷ்யா தொடுத்த போர் நான்காவது ஆண்டிற்குள் நுழைகிறது. சில நெருக்கடிகளுக்கு இங்கே கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சூடான், ஹைட்டி, கொங்கோ போன்ற நாடுகளின் துயரங்களோ கவனிக்க ஆளின்றி அனாதையாக இருக்கின்றன. சூடான் உலகக் கவனத்திலிருந்து ஏன் நழுவியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை நம் ஸ்மார்ட்போன் திரையில் ஓடும் ‘ஸ்க்ரோலிங்’ வேகத்தில், மக்களின் வலிகள் ஏதோ ஒரு புதுமையான செய்தியுடன் போட்டி போட முடியாமல் தோற்றுப்போகின்றனவா? அல்லது ஆபிரிக்காவில் போர் நடப்பது வழக்கம்தான், அது அந்த மண்ணுக்கே உரியது என நாம் பழகிப்போன ‘இனவாத’ முன்முடிவுகள் காரணமா? அல்லது எது ‘அவசரம்’ என்பதை அதிகாரவர்க்கம் தீர்மானிக்கிறதா? சூடான் ஏன் தலைப்புச் செய்திகளில் இடம் பெறவில்லை என்பது மட்டுமல்ல; சூடானைப் பற்றிப் பேசாததால் கிடைக்கும் அமைதியால் பலன் அடைவது யார் என்பதுதான் கேள்வி. சூடானைப் பொறுத்தவரை, அந்த அமைதிக்கான விலையைத் ‘தங்கம்’ மூலம் அளவிடலாம். இந்த மோதலில் தங்கத்தைத் தோண்டி எடுக்கும் ஆசையில் இருக்கும் ஐக்கிய அரபு இராச்சியம், அங்கிருக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கு (RSF) ஆயுதங்களை வழங்கியதை ஐக்கிய நாடுகள் சபையே ஆவணப்படுத்தியுள்ளது. தாறுமாறாகிப்போன சர்வதேச ஒழுங்குமுறை வெறும் சம்பிரதாயச் சடங்காக மாறியிருந்த சர்வதேச ஒழுங்குமுறை, 2025 இல் இன்னும் மோசமாக உடைந்துபோனது. அமெரிக்கா தன் இஷ்டத்திற்கு அதிகாரத்தைச் செலுத்தியது; தான் உருவாக்கிய உலகளாவிய விதிமுறைகளைத் தனது தேவைக்கேற்ப வளைத்துக்கொண்டது. இஸ்ரேல் மீதான விசாரணையைத் தொடர்ந்ததற்காகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீதே அமெரிக்கா தடைகளை விதித்தது. காஸாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் புலனாய்வு செய்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அதிகாரி ஃபிரான்செஸ்கா அல்பனீஸுக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டது. வெறுப்புப் பேச்சுகளைக் கேள்வி கேட்டதற்காகவும், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுப்புக்கூற வைத்ததற்காகவும் ஐரோப்பியச் சமூகத் தலைவர்கள் தண்டிக்கப்பட்டனர். அமெரிக்காவிற்குள் புலம்பெயர்ந்த மக்கள் நீதிமன்றங்களிலும் தெருக்களிலும் வேட்டையாடப்பட்டனர். அவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், தாக்கப்பட்டும், கேள்விக்குரிய சூழலில் நாடுகடத்தப்பட்டும் வருகின்றனர். இங்கே தர்க்கமும் தண்டனை கொடுப்பவரும் ஒருவர்தான்; ஆனால் கூச்சல் மட்டும் சில இடங்களுக்குச் சாதகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஐரோப்பியத் தலைவர்கள், தங்கள் ஆள் ஒருவருக்கு அமெரிக்கா தடை விதித்தபோது கதறினார்கள். ஆனால், தாங்களே உருவாக்கிய சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) இஸ்ரேலைத் தண்டித்ததற்காகத் தடை விதிக்கப்பட்டபோது மௌனம் காத்தனர். இவர்களைப் பொறுத்தவரை நீதி என்பது அவர்கள் விருப்பத்திற்குத் தேர்ந்தெடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்று (Optional). பொறுப்புக்கூறல் என்பது நிபந்தனை. யாருக்கு வலி ஏற்படுகிறது, யாரால் வலி ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே இது மாறுகிறது. சர்வதேச ஒழுங்கும் சட்டத்தின் ஆட்சியும் இங்கே ஒருபோதும் சமமாகப் பயன்படுத்தப்பட்டதில்லை. 2025 இல் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒன்றும் புதிதாக எதையும் உடைத்துவிடவில்லை; இந்தத் தறிகெட்ட அமைப்பு இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார். இந்த அமைப்பு நடுநிலையானது அல்ல; இது அதிகாரத்திற்குச் சேவை செய்யவே உருவாக்கப்பட்டது. அதன் போலித்தனத்தை இனி யாராலும் மறைக்க முடியாது. பலவீனமாகிவரும் ஜனநாயகம் ஜனநாயகமும் சுதந்திரமும் தொடர்ந்து பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. பத்தில் ஒருவருக்குக்கூட இப்போது முழுமையான ஜனநாயகம் கிடைப்பதில்லை. உலக மக்கள்தொகையில் சுமார் 72% பேர் சர்வாதிகார அமைப்புகளின் கீழ் வாழ்கிறார்கள். இது 1970களுக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும். மக்கள் பங்களிப்பு சுருங்கிவிட்டது, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டது. தொழில்நுட்ப ஜாம்பவான் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம் உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ (Trillionaire) ஆகும் நிலையை நெருங்கிவிட்டார். இந்த ஓராண்டுக் காலத்தில் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. ஊடகம், பாதுகாப்புத் துறை, செயற்கைக்கோள் கட்டமைப்பு என அவரது ஆதிக்கம், தனிநபர் மூலதனத்திற்கும் பொது அதிகாரத்திற்கும் இடையிலான எல்லையை மங்கச் செய்துவிட்டது. அறிஞர்கள் இதை ஒருவகை ‘தனியார் ஆட்சி’ (Private Governance) என்றே விவரிக்கிறார்கள். அவரது பணமும் தளங்களும் உலகெங்கிலும் ஒரு புதிய நவீன சர்வாதிகாரத்தை வடிவமைத்துச் சீரமைக்கின்றன. இந்தச் சீர்குலைந்த பொருளாதார அமைப்பால் பலன் அடைந்தவர் எலான் மஸ்க் மட்டும் அல்ல. உலக சமத்துவமின்மை அறிக்கை 2026இன்படி, முதல் 10% வருமானத்தை ஈட்டுபவர்கள் மீதமுள்ள 90% பேர் பெறும் மொத்த வருமானத்தைவிட அதிகமாகப் பெறுகிறார்கள். உலகச் செல்வத்தில் 75%-ஐ அந்த முதல் 10% பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள்; அடித்தட்டு மக்களுக்கோ வெறும் 2% மட்டுமே மிஞ்சுகிறது. அதே சமயம், உலகளாவிய தொழிலாளர்களின் ஊதியமோ தேக்கமடைந்து அல்லது சரிந்துவருகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்த அளவிலான சமத்துவமின்மை மிகவும் அசாதாரணமானது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் இந்த அழுத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தியாவின் முதல் 1% பணக்காரர்கள் நாட்டின் 40% செல்வத்தைக் கொண்டுள்ளனர். இது இந்தியாவை உலகின் மிக மோசமான சமத்துவமின்மை கொண்ட சமூகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தைவிடவும் மோசமானது. ஒரு துளி நம்பிக்கை எஞ்சியிருக்கிறது… நேபாளம், வங்கதேசம் முதல் பல்கேரியா, ஜோர்ஜியா, மடகாஸ்கர்வரை போராட்டங்கள், மாணவர் இயக்கங்கள் மூலம் இளைஞர்கள் அரசியலின் தற்போதைய நிலையைத் தகர்த்துவருகின்றனர். அரசாங்கங்கள் கவிழ்ந்தன, புதிய அரசியல் கட்டமைப்புகள் வடிவம் பெறுகின்றன. ஜோர்ஜியா இந்த மாற்றத்தின் அடையாளமாக மாறியது; இளைஞர்கள் அடக்குமுறையை மீறி வீதிகளில் உறுதியாக நிற்கிறார்கள். அமெரிக்காவில், ஜோஹ்ரான் மம்தானி போன்ற சோஷலிசவாதிகள், காஸா விவகாரம், சமூக நீதி ஆகியவற்றுக்கான தங்கள் உறுதியான ஆதரவை மாற்றிக்கொள்ளாமலேயே தேர்தலில் வெற்றி பெற முடியும் எனக் காட்டினார்கள். இன்றைக்கும் கொள்கை அரசியலுக்கு இடமுண்டு என்பதற்கான சான்று இது. நியூயார்க் மேயர் தேர்தலில் வென்றபோது ஜோஹ்ரான் மம்தானி தன் மொழியையோ அல்லது வாக்குறுதிகளையோ ஒருபோதும் நீர்த்துப்போகச் செய்யவில்லை. 2025 இல் பெண்களின் உறுதியும் வெளிப்பட்டது. ஐரோப்பாவில் பெண்கள் ஒன்றுதிரண்டு பாதுகாப்பான கருக்கலைப்பு என்பது புவியியல் சார்ந்த விஷயம் அல்ல, அது தனிநபர் உரிமை என்பதை ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகரிக்கச் செய்தனர். இது விவாதத்தின் போக்கை அறநெறியிலிருந்து ‘உரிமை’ நோக்கி மாற்றியது. ஆற்றல் துறையிலும் மாற்றம் நிகழ்ந்தது. முதல் முறையாக நிலக்கரி மின்நிலையங்களை விடவும் காற்று, சூரிய ஒளி ஆகியவை மூலம் அதிக மின்சாரம் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது உலக மின்சார அமைப்பில் ஒரு பெரும் திருப்புமுனை. நெறிமுறைகள் எவ்வளவு எளிதாகச் சிதைக்கப்படும் என்பதை இந்த ஆண்டு காட்டியது. அதே சமயம், மக்கள் திரண்டு அழுத்தம் கொடுத்தால் அதிகாரம் எப்படிப் பணியும் என்பதையும் காட்டியிருக்கிறது. இந்த அழுத்தங்கள் எந்த அளவுக்கு ஒரு நிலையான கட்டமைப்பாக மாறப்போகின்றன என்பதைப் பொறுத்தே வருங்காலம் அமையும். மூலம்: 2025: A year without alibis https://chakkaram.com/2026/01/01/2025-உலக-நிலவரம்-எப்படி-இருந்/
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
டக்கிலஸை சேர்த்துக்கொண்டு போட்டியிட்டால் தான் முதலமைச்சர் ஆகிவிடலாமென சுமந்திரன் கனவு கண்டார், சுமந்திரனை இணைத்துக்கொண்டால் தான் வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாக டக்கிளஸ் எண்ணியிருப்பார், பலதடவை அந்த ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் டக்கிளஸ் சம்பந்தன் இருந்த காலத்தில். அது மக்கள் தன் மீது வைத்திருக்கும் செல்வாக்கை சரிக்குமென நன்றாகவே தெரிந்திருந்த சம்பந்தர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இப்போ, தான் தலைவனாகவேண்டும் முதலமைச்சர் ஆக வேண்டுமென்று சில புல்லுருவிகள் அவரை கட்டியணைத்து விடுதலை வீரர் என புகழாரம் சூட்டுகின்றனர். இத்தனைக்கும் தீவகத்தை தனது உடைமையில் வைத்திருப்பதற்காக தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை கொலை செய்யுமளவிற்கு தாக்கியவர். இவரை விடுதலைக்காக உழைத்தவரென வாய் கூசாமல் கூறுகிறார் சிவஞானம், இவ்வளவுதான் இந விடுதலை பற்றிய அவரறிவு. இவர்கள் என்னதான் பாடுபட்டாலும் அனுராவை ஐந்து வருடத்திற்கு யாராலும் எதுவும் செய்ய முடியாது, அப்படி முயன்றால் அது அவர்களுக்கே ஆப்பாக செருகும். டக்கிளஸ் ஒழிக்கப்படவேண்டியவன் அதையே மக்கள் கொண்டாடுகின்றனர். அதுதான் அவரோடு கூட இருந்தவரே சொல்கிறார், டக்கிளஸ் மக்கள் வாக்குகளால் வெல்லவில்லை, மக்களை பயமுறுத்தி கட்டுக்கட்டாக தானே வாக்குகளை அள்ளிப்போட்டதாக. கடந்த தேர்தலில் வாக்கு எண்ணும்போது அவரது தோல்வியை நிர்ணயித்தது, அவர் நெடுந்தீவு வாக்குகளுக்காக காத்திருந்தார் அதுவும் அவர் கை விட்டுப்போனது. தனக்கு மிஞ்சின ஆசை முதலில் வெற்றியளித்தாலும் இறுதியில் எப்போதும் ஆபத்தையே தரும். மக்களை எழுபத்தாறு வருடங்களாக ஏமாற்றிய தமிழரசுக்கட்சியும் மாற்றியமைக்கப்படவேண்டும் மக்களால்!
-
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நன்றி அண்ணா. கள உறவுகள் உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதோடு நின்றுவிடாது உங்கள் உறவினர், நட்புகளை குறைந்த வருமானம் ஈட்டும் / வருமானம் ஈட்ட முடியாதவர்களுக்கு பேருதவியாக அமையும் இவ்வடிப்படைச் சுகாதார வசதித் திட்டத்தை நிறைவுறுத்த உதவுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.
-
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் - குழந்தை உட்பட 24 பேர் பலி
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் - குழந்தை உட்பட 24 பேர் பலி 02 Jan, 2026 | 12:56 PM ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் வியாழக்கிழமை (1) புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஹோட்டல் ஒன்றை நோக்கி உக்ரைன் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடலோர கிராமமான கோர்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற இடத்தில் 3 உக்ரைன் நாட்டு ட்ரோன்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 24 பேர் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. “இது பொதுமக்களுக்கு எதிராக வேண்டுமென்றே உக்ரைன் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்” ரஷ்ய பிராந்திய ஆளுநரான விளாடிமிர் சால்டோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சு மற்றும் அந்நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/235023
-
அவனை எனக்குத் தெரியும் - ப.தெய்வீகன்
இது இந்தோனிசியாவில் போதைப்பொருள் கடத்தலிற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவரின் உண்மைக்கதை போலவே இருக்கிறது.
-
இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த படகு ஒன்றும் மீன்படி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இலங்கை-கடற்பரப்பில்-மேலு/
-
ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் திடீர் பதவி விலகல் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி (module) தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவர் தமது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்காக விநியோகிக்கப்பட்ட 6 ஆம் தரத்திற்கான பாடத் தொகுதியில் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதனை கல்வி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணையினை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப்புலனாய்வவு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/தேசிய-கல்வி-நிறுவகத்தின்/
-
தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்!
தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்! adminJanuary 2, 2026 தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் தவறான தகவல்கள் பரப்ப படுவதனால், சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள மொழியில் தென்னிலங்கை ஊடகங்களில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற போதே குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது. தையிட்டி விகாரை காணி வரைபடங்களை சிங்கள ஊடகங்களில் தெளிவாக பிரசுரித்து விளம்பரங்களை போட சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2026/225479/
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
தோழர் டக்ளஸ் தேவானந்தா இந்தக் கைது மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது! அநுர அலையில் கடந்த தேர்தலில் அவர் அடித்துச் செல்லப்பட்டாலும், ஈபிடிபியின் வாக்கு வங்கி இன்னமும் இருக்கின்றது. அதை ஆட்டம் காண NPP இந்தக் கைது விளையாட்டின் மூலம் நடத்தும் நாடகம் பூமராங் ஆகி NPP ஐ பாதிக்கும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆம். குறித்த கேள்விகளுக்கு மாத்திரம் பதில்களைத் இத் திரியில் பதியுங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எப்படி மாற்றுவது .உங்களிடம் பதில்கள தந்தால் மாற்றுவீர்களா.நன்றி.
- Today
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.🎉🥳
-
கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு
முதலில் இந்த தொல்லியல் திணைக்களம் தொலைந்தால்தான் நாடு உருப்படும் ..கடனெடுத்து புத்தகோவிலை கட்டிவிட்டு...தமிழனிடம் களவெடுத்து வாழ் நினக்கும் கூட்டம்தான் ..இந்த இனம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அந்த இடத்தில் ஹர்திக் பாண்டியா என்பவரை தெரிவுசெய்கின்றேன் ..தேர்தல் ஆணையாளரே ..நன்றீ
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
2026 ஏப்ரலில் வரும். யாழ்களத்தில் வந்த முதல் போட்டி 2006 ஏப்ரலில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல். 20 வருடங்களாக யாழ்கள போட்டிகள் நடைபெற்று வருகின்றது
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
உப்பிடி பொத்தாம் பொதுவாய் சொன்னால் எப்பிடி? கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்ல வேண்டியது. எதை சொன்னார், எது நடந்திருக்கிறது? ஆஹா..... படைத்தளபதியாக இருந்து எதை முறியடித்தார்? அவரது சாதனைகள் ஒன்று இரண்டையும் சொல்ல வேண்டியது. அலன் தம்பதிகளை உள்ளாடையுடன் கடத்தியது? பயங்கரவாதம் என்று அரசால் முத்திரையிடப்பட்ட ஒரு அமைப்பின் தளபதிக்கு எப்படி இத்தனை பதவிகள் கிடைத்தன? இனத்தை விற்று, காட்டிக்கொடுத்து, எதிரிக்கு கால் கழுவி? பிறகு எப்படி அந்த பயங்கரவாத அரசுடன் ஒட்டிக்கொண்டார் என்பதையும், அதை ஜனநாயகம் என்கிறார் என்பதையும் விலாவாரியாக சுட்டிக்காட்டலாம். அப்போ, சிறிலங்கா அரசு பயங்கரமானது என்பதை ஒத்துக்கொள்கிறார், தமிழ்விடுதலைப்போராட்டத்தை எதிர்த்து, நசுக்க சிறிலங்கா அரச பயங்கரவாதத்துடன் இணைந்து அமைச்சுப்பதவியையும் பெற்றுக்கொண்டார். அப்போ அவர் என்னதான் செய்தார் என்பதையும் சொல்லித்தொலைக்க வேண்டியது சொல்பவர். ஆமாம், அதே தான். அவருக்கு உயிரச்சுறுத்தல் இன்றுவரை இருக்கிறதாக ராகவன் சொல்கிறார், தனக்கு புலிகளால் இருந்தது என்று டக்கிளஸ் கூறியிருக்கிறார். சும்மா வள வள என்று பேசாமல், அவரது சொந்த பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி எப்படி தென்னிலங்கை பாதாள குழுவிடம் சென்றது? அதை சொல்ல வேண்டியது. அதை சொல்லாமல் இப்படி போர்த்து மூடுகிறாரே. டக்கிலஸுக்கு சுடத்தெரியவில்லை என்று மதுசிடம் கொடுத்தாரா? அப்படியென்றால் அவரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் எப்படி நடந்தன? அல்லது மதுஸ் கடனாக துப்பாக்கியை வேண்டினாரா? இவரிடம் களவெடுத்தாரா? ஏன் இத்தனை காலமாய் முறைப்பாடளிக்கவில்லை? ஒரு அமைச்சருக்கு சட்ட நடைமுறை தெரியாதா? இவருக்கு சிங்களம் தெரியாமல் ஒருவர் மொழி பெயர்ப்பு செய்ததாக கூறப்படுகிறது, எப்படி இவர் மத்திய அரசின் கீழ் அமைச்சராக இருந்து பணியாற்றினார்? மதுஸுடன் தொடர்புகளை மேற்கொண்டார்? இவரது சொந்த பாதுகாப்புக்கான துப்பாக்கி களவாடப்படுள்ளது, யாரால் அது களவாடப்பட்டது? தெரியாதவருக்கு எதற்கு துப்பாக்கி வழங்கப்பட்டது? ஏன் அவர் கைது செய்யப்படவில்லை? ஒரு அமைச்சர், ஒரு விடுதலை இயக்கத்தில் இருந்தவர், அவரது காரியாலயம் எங்கும் பாதுகாப்பு கமரா, பாதுகாப்பு உத்தியோகத்தர் இருந்தும் அவரின் துப்பாக்கிக்கு என்ன நடந்தது என்று சொல்லத்தெரியவில்லை இவரால், அவ்வளவு பொறுப்புள்ளவர்! கை ஒப்பம் இட்டு வாங்கிய துப்பாக்கியை மீள ஒப்படைக்கும் போது என்ன செய்ய வேண்டுமென்கிற நடை முறையை கடைப்பிடிக்காத, தெரியாத அமைச்சரும், பொறுப்பற்ற இராணுவமும் என்று கூறலாமா? மதுஸ் இந்த துப்பாக்கியை அமைச்சரிடமிருந்துதான் பெற்றதாக சாட்சியமளித்துள்ளார். சரி, களவாடப்பட்டது என்றால் எங்கே? எப்படி? எந்த பாதுகாப்புமில்லாத இடத்திலா ஆயுதங்களை களஞ்சியப்படுத்தியிருந்தனர்? கண்டுபிடிக்கப்பட்டது டக்கிலஸின் சொந்தப்பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி. இவரது துப்பாக்கியை கொண்டு சென்றவர் இறந்திருக்கலாம் என்றால், டக்கிலஸ்தான் இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரே? எழுதுபவருக்கு எது நடந்தது என்று தெரியாது அது நடந்திருக்கலாம், இது நடந்திருக்கலாம் என ஊகம் மட்டும் வெளிப்படுத்துகிறார். அதற்கு அவசியம் என்ன? என்ன நடந்தது என்பதை போலீசார் கண்டுபிடிப்பர், அதற்காகவே அவரை கைதும் செய்துள்ளனர். இவர் ஏன் துடிக்கிறார் எனத்தெரியவில்லையே? கூட இருந்து கூத்தடித்த குற்ற உணர்ச்சியினாலா? மக்களிடம் இவர் ஒரு புனிதர் என்று காட்டவா? மக்களுக்கு தெரியும் இவரின் புனிதத்தன்மை, அதனாலேயே வெடி கொழுத்தி ஆரவாரம் செய்கின்றனர். அவை டக்கிலஸிடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கியல்ல, டக்கிலஸின் துப்பாக்கி மதுசிடமிருந்து கைப்பற்றப்படுள்ளது, அவர் அதை டக்கிலஸிடமிருந்து பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் என்ன முன்னுக்கு பின் முரணாக உளறுகிறார்? குழம்பிபோயுள்ளார் போலுள்ளது. அது தான் கதை. இப்பதான் விசயத்திற்கே வந்திருக்கிறார், பேசாமல் இவர் ஒரு துப்பறிவாளனாக போயிருக்கலாம். அதை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டியதுதானே! மற்றவர்களை பற்றி யாரும் கேட்கவில்லை, அதை நீதித்துறை பார்த்துக்கொள்ளும். நீங்கள் செய்தவற்றை, சொல்ல வந்ததை சொல்லுங்கோ! துணைக்குழுவில் துப்பாக்கி இல்லாமலா இராணுவ குழுக்களாக இயங்கினீர்கள்? ஏன் துப்பாக்கியை மதுசுக்கு கொடுத்தார் உங்கள் தோழர்? அப்போ எதற்கு இந்தப்பதிவு? ஜனநாயகத்தில் குதித்தவர்களுக்கு எதற்கு ஆயுதம்? ஏன் இராணுவ குழுவாக இயங்கவேண்டும்? புலிகளை கூண்டோடு அழித்துவிட்டோம் என்று கூவியவர்களுக்கு, ஒத்தாசை புரிந்தவர்களுக்கு அதன் பிறகு எதற்கு ஆயுதம்? டக்கிளஸ் என்ன புலிகளுடனேயா போராடியவர்? யாருக்கு ஆயுதம் கொடுத்தோம், யார் மீள அளித்தனர் என்பது கூட தெரியாத ஜனநாயகம், அரசு. அதன் அமைச்சர். அவர்களோடுதானே நீங்களும் இன்றுவரை கடமையாற்றினீர்கள், ஊதியம் பெற்றீர்கள்? பிறகு பயங்கரவாதம், ஜனநாயகம் என்கிற போர்வை எதற்கு? இது அரச ஒட்டுக்குழுக்களின் பயங்கரவாதம், மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்பதை கடைசியில் ஏற்றுக்கொண்டுள்ளார் போங்கள். அப்பட்டமாக உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார். அதில் தாங்களும் தங்கள் தோழரும் அடக்கம். ஜனநாயகம் இல்லாத, அரச பயங்கரவாதம் உள்ள நாட்டில், பாதிக்கப்பட்டோர் தம்மை பாதுகாக்க, ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தது போலி ஜனநாயகம், அதை கொடூர கரம் கொண்டு அழித்தது ஜனநாயகம், போரில், அரசியலில் சம்பந்தப்படாதோரை கொன்றொழித்து ஜனநாயகம், தன் கோர முகத்தை ஜனநாயக போர்வையால் மறைத்தது. பிள்ளைகளை அனாதைகளாக்கியது, சாதாரண மனிதர்களை காணாமல் ஆக்கியது, விதவைகளாக்கியது, அங்கவீனர்களாக்கியது, புதைக்குழிகளுக்குள் மறைத்தது. ஆனாலும் அவர்களது கர்மா திரும்பி அவர்களை தாக்குகிறது. தம்மை பாதுகாக்க வளமாக்க எடுத்த கர்மா, தன்னை பாவித்துஅப்பாவிகளை அழித்த கர்மா, பாவித்தவர்களையே திருப்பி தாக்குகிறது. இவ்வளவு கஸ்ரப்பட்டு ஒரு கல்லறைக்கு வெள்ளை அடிக்க முயற்சித்திருக்கிறார். அனுரா எது செய்வார், செய்ய மாட்டார் என்பதை பொறுத்திருந்து பாப்போம். ஆனால் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். டக்கிலசோடு கூட இருந்து செயற்பட்டவர்களே தாங்கள் இவரோடு சேர்ந்து செய்த தவறுகளை கூறுகின்றனர். டக்கிலஸிற்கும் அவனது துப்பாக்கிக்கும் அவனது இராணுவத்திற்கும், பயந்து உயிர் பிழைப்பதற்காக இவர்களோடு சேர்ந்து இயங்கியதாக கூறுகின்றனர்.
-
கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு
காலை உணவு காறாத்தல் பான் கூட தேவையில்லை தமிழன் நிம்மதியாய் இருக்க கூடாது என்ற அடிப்படை சிங்கள இனவாதமே காலை உணவு . கிடைக்கிற வருட வருமானத்தில் 4௦ வீதத்துக்கு மேல் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே போகுது என்ற விடயமும் வரும் புதிய அரச சிங்கள தலைவர்கள் நாடு நாடாய் பறந்து இலங்கை இறையாண்மையை அடகு வைத்தே பிச்சை எடுத்துத்தான் இலங்கை அரசு இயங்குது என்ற உன்மை சாதாரண இனவாத சிங்களவனுக்கு தேவையில்லை அவர்களை பொறுத்தவரை 1௦௦௦ வருடங்களுக்கு மேல் புரையோடி வளர்ந்து போன தமிழர் எதிர்ப்பு இனவாத மிருகத்துக்கு தீனி போட்டால் சரி .
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
டக்ளஸ் விசுவாச கட்டுரையாளருக்கு இப்போ என்ன வேணும்? டக்ளஸ் எந்த தவறுமே செய்யாத யோக்கியர்னு சொல்லணும் அவ்வளவுதானே? நேரடியா கெஞ்சி கேட்டால் உங்கள் மனசை சந்தோசபடுத்தி பார்க்கவென்றாலும் சொல்லிட்டு போறோம் அதுக்கு எதுக்கு இவ்வலவு நீளமா மூச்சு வாங்க வாங்க எழுதிக்கொண்டு. ஆனா அந்த யோக்கிய சிகாமணிபற்றி சிறப்பான கட்டுரை வரைந்த விசுவாசியிடம் இரண்டே இரண்டு கேள்வி ஓடாமல் ஒளியாமல் பதில் சொன்னால் கோடி புண்ணியம் அது, பயங்கரவாதங்களை அடியோடு வெறுக்கும் பெருந்தகை டக்ளஸ் அவர்கள், அரசுகள் செய்வது பயங்கரவாதம் என்று தெரிந்தும் எப்படி அமைச்சராக பயங்கரவாத அரசுகளில் இருந்தார்? பயங்கரவாதம் செய்யும் அரசிடமிருந்து ஆயுதம் பெற்றால் டக்ளஸ் அப்போ யார்?
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.🎉🥳
- Yesterday
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
இந்த திட்டம் பற்றி கருத்தாடும் போதே ஏராளனை என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். யாழ்களம் மூலமாக தினசரி எம்முடன் இணைத்திருக்கும் நம்பிக்கைக்குரிய ஒரு முக்கிய உறவு. அவர் ஏற்றுக்கொண்டால் அவர் தலைமையில் இந்த திட்டத்தை முன்னெடுக்க எனது சம்மதமும் என்றும் உண்டு.
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
யாழ்கள போட்டிக்கு கேள்விகொத்து ரெடியோ? பிகு எனக்கு மாட்டு கொத்துக்கு அடுத்து பிடித்தது உங்கள் தமிழக தேர்தல் கேள்வி கொத்துத்தான்😂
-
திருத்தணி: மருத்துவமனையில் இருந்து ஒடிசா இளைஞர் வெளியேறியது ஏன்? - நடந்தது என்ன?
அப்பாவி பிற மொழி பேசும் அடித்தட்டு மக்களில் ஒருவர் வேடிக்கை என்ற பெயரில் கடுமையாக தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு பிரதான காரணம் தமிழ் தேசியம் என்ற பெயரில் சீமான் தரவழி நச்சு பேர்வழிகள் இனத்தூய்மைவாதம் பேசிய போது… அதை வேடிக்கை பார்த்த, பார்த்து கொண்டிருக்கிற அதிமுக, திமுக அரசுகள்தான்.
-
அவனை எனக்குத் தெரியும் - ப.தெய்வீகன்
அவனை எனக்குத் தெரியும் ப.தெய்வீகன் தண்டவாளங்களுக்கு இடையில் அமைந்த சிட்னி நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். எனக்கான அடுத்த ரயிலுக்கு 18 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்று நேரத்திரை காண்பித்தது. இரும்புகளில் வழுக்கிவரும் ரயில்களின் ஓசை, விட்டு விட்டு ஒலித்தது. அடுத்தடுத்த ரயில்களின் வருகையை அறிவிப்பவரின் குரல் சுருதி பிசகாத மந்திரமாய் கேட்டது. நான் அருகிலிருந்த நீண்ட இரும்புக் கதிரையில் சென்று அமர்ந்தேன். தன்னால் சுமந்துகொண்டு நடக்க முடியாத இரண்டு பெரிய படச்சட்டங்களுடன் ஒரு மூதாட்டி வந்தார். எனக்கும் அவருக்கும் இடையில் பொலித்தீன் மூடிய அந்தப் படச்சட்டங்களை இரும்புக் கதிரையில் சாய்த்து வைத்தார். அவை கீழே விழுந்துவிடக்கூடாத கவனத்தோடு அணைத்தபடி அருகிலிருந்தார். அவரது நடுங்கும் விரல்களில் ஒன்றில் அணிந்திருந்த மோதிரத்தில் ஒரு சிறுவனின் முகம் தெரிந்தது. நான் அதனை உற்றுப் பார்க்கும் இடைவெளியில் “ஹலோ” என்று எனக்கு வணக்கம் சொன்னார். முதுமையின் வழக்கமான சுருக்கங்கள் படர்ந்த முகத்தில் கண்கள் ஆழத்தில் தெரிந்தன. முன்னம் மிக நெருக்கமாகக் கண்ட உருவத்தை ஒத்த பார்வை. “ஹலோ” “படங்கள் வழுக்கி விழுந்து விடாமல், உங்களது பக்கத்திலும் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வீர்களா…” என்னைத் தமிழர் என்று கணித்த அவரது உரையாடல் வியப்பளித்தது. சிறு புன்னகையால் எதிர்கொண்டடேன். படச்சட்டங்களின் எனது பக்க விளிம்புகளைக் கவனம் குன்றாமல் பிடித்துக்கொண்டேன். பதினெட்டாவது நிமிடத்தில் வந்த ரயிலில் நான் ஏறுவதற்குத் தயாரானபோது, மூதாட்டியும் அதே ரயிலில் வருவதற்கு எழுந்தார். இரண்டு படச்சட்டங்களையும் நானே ரயிலுக்குள் எடுத்துச் செல்ல உதவினேன். வெளியில் இருந்ததுபோல இப்போது ரயிலின் உள்ளே ஒரே இருக்கையில் இருவரும் அமர்ந்துகொண்டோம். எமக்கு இடையில் இரண்டு படச்சட்டங்கள். ஒரு அந்தத்தை அவரும் மறு அந்தத்தை நானும் பிடித்துக்கொண்டோம். எமக்கு முன்னால் அமர்ந்து மக் டோனல்ட்ஸ் உருளைக்கிழங்குப் பொரியலை ஒரு சிறுமி ஒவ்வொன்றாய் எடுத்து வாயில் வைத்து மென்றாள். அவளை மடியில் வைத்திருந்த தாயும் சிறுமியும் கண்ணாடி வழியாக வெளிக் காட்சியைப் பார்த்து ரசித்தப்படியிருந்தனர். என்னருகிலிருந்த மூதாட்டியும் என்னைப் போலவே அவர்களைப் பார்த்துத் தனக்குள் அசைபோடும் ஏதோ ஒரு நினைவில் புன்னகைத்தார். அவர் முகத்தில் தெரியும் அத்தனை உணர்வுகளையும் அவருக்குள் இழையோடு ஆழமான துயரொன்று மறைத்தபடியிருந்தது, முதுமையின் களைப்பையும் சலிப்பையும் மீறிய நீண்ட வடு அவரது நடுங்கும் பார்வையில் தெரிந்தது. எங்கள் இருவருக்கும் இடையில் சகஜமான உரையாடல் ஆரம்பித்த சில நிமிடங்களில், தான் ஹோம்புஷ் பகுதியில் ஓவியங்கள் விற்கும் கடையொன்றை நடத்தி வருவதாக அந்த மூதாட்டி கூறினார். “அப்படியா, எனக்கு ஆஸ்திரேலியாவின் சமகால ஓவியங்களில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. பென் குவில்ட்டியின் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்” மூதாட்டி ஆச்சரியத்துடன் என்னை நோக்கினார். விழிகளில் மிதந்த நடுங்கும் பார்வை நிலையாக என்னில் பதிந்தது. “மனிதன் தனக்குள் சிக்கிக்கொண்டுள்ள அக வலிகளை ஓவியங்களில் கொண்டுவருவதில் பென் குவில்ட்டிபோல் யாருமில்லை என்று நினைக்கிறேன். மனிதனை வரையாமல் மனித உணர்வுகளை வரையும் அவரது கலை எனக்குப் பிடிக்கும். உதாரணமாக போர் குறித்த தகவல்களை நாங்கள் செய்திகளில் பார்க்கிறோம், படிக்கிறோம், கடந்து விடுகிறோம். வரலாற்றில் இடம்பெற்ற பெருங்கொடுமைகளைப் பாடங்களாகப் படிக்கிறோம். ஆனால், உண்மையில் நாங்கள் படித்தபிறகு கடந்து செல்லும் அந்தச் செய்திகளை எங்களது உள்மனம் இலகுவில் கடந்து செல்கிறதா? இலகுவில் ஜீரணித்துவிடுகிறதா? நாங்கள் பார்த்த காட்சிகளிலிருந்து உண்மையிலேயே நாங்கள் வெளியேறிவிடுகிறோமா என்ற அசௌகரியமான வினாக்களை ஓவியங்களாக வெளிப்படுத்தும் பென் குவிலிட்டி உண்மையிலேயே காட்சிகளின் நாயகன்” ஓவியம் பற்றி ஆர்வத்துடன் நான் வரைந்த சொற்களை மேலும் மேலும் ஆச்சரியத்துடனும் பெருமையோடும் அந்த மூதாட்டி பார்த்தார். “பொருளீட்டுவதற்குத் தமிழர்கள் எத்தனையோ வழிகளை நாடுகிறார்கள். ஆனால், நீங்கள் ஓவியக் கடையொன்றை நடத்துவது உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது” விழிகளை மெதுவாக மூடித் திறந்தார். சிறு புன்னகையொன்றை உதிர்த்தார். “நான் நடத்தும் ஓவியக்கடை எனது மகனது ஓவியங்களை விற்கும் கடை. அவன் வரைந்த ஓவியங்களை மட்டும் விற்கும் கடை. என் மகன் உலகின் ஒப்பற்ற ஓவியன். நீங்கள் கூறிய பென் குவில்ட்டியைவிட மனித வலிகளை ரத்தமும் சதையுமாகத் தன் தூரிகையில் துயர்சிந்த வரைந்தவன். ஒன்று இரண்டல்ல நூறுக்கும் மேற்பட்ட ஓவியங்களை ஓரிரவில் வரைந்த சாதனையாளன். ஆனால், அவன் இப்போது உயிரோடு இல்லை” தனது மகனின் ஓவியங்களைப் பற்றிய சொற்கள் அவரது பதிலில் சுவாலைகளாகச் சடைத்து கொழுந்துவிட்டெரிந்தன. குரலில் ததும்பிய அடர்த்தியும் பெருமையும் அவரது விழிகளில் புது வெளிச்சத்தை நிறைத்தது. “உங்களது மகனின் பெயர்…..” “ஓவியன் அருள்குமரன்” உருளைக்கிழங்குப்பொரியலைத் தின்றுகொண்டிருந்த குழந்தை தனது தாயின் மடியிலிருந்து திடீரென்று எங்களைத் திரும்பிப் பார்த்தது. படச்சட்டகங்களின் ஒரு அந்தத்தைப் பிடித்திருந்த கைகளில் மின்னல் இறங்கியதுபோல உதறியெழுந்தேன். (2) இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நூஸா படைமுகாமும் வாடிமுற்றமும் ஒளி வெள்ளத்தில் மிதந்தபடியிருந்தது. புல்பூண்டுகளின் நுனிகள்கூட அவ்வளவு தெளிவாக தெரியும் வகையில் பகல்போல ஜொலித்துக் கொண்டிருந்தது. மரண தண்டனையை நிறைவேற்றும் மொபி படையணியின் ஒன்பது பேரில் நானும் உள்ளேன் என்பதை அணித்தலைவர் வந்து பட்டியலைப் படித்து உறுதிச் செய்தார். அடுத்து மருத்துவர் ஒருவர் வந்து எங்கள் எல்லோரினது கைகளைப் பிடித்து நாடித்துடிப்பினைச் சோதனை செய்தார். இரத்த அழுத்தத்தைச் சோதித்தார். சரியாக நள்ளிரவு தாண்டி இருபது நிமிடங்களில் ஒன்பது பேரும் வெள்ளை கோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அமெரிக்க தயாரிப்பு ‘எம்16’ துப்பாக்கிகள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கோட்டடியை சென்றடைந்த போது, கறுப்பு முகமூடியால் மூடப்பட்ட ஆஸ்ரேலியாக்காரன் ஒருவன் கம்பத்தில் இறுக்கக் கட்டப்பட்டு எமக்காக தயாராக வைக்கப்பட்டிருந்தான். அப்போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கம்பத்தில் கட்டப்பட்டிருந்தவனுக்கு அருகில் சென்று தோத்திரத்தோடு ஏதோ பாடலொன்றைப் பாடியபடி சுற்றி வந்தார். பிறகு அங்கிருந்து அவர் வெளியேறி விட, எங்கள் அணித்தலைவரும் மருத்துவரும் எங்களுக்கு அருகருகே வந்து நின்று கொண்டார்கள். நான் காதுகளைக் கூராக்கிக் கேட்டேன். அவனிடமிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. மூன்று – இரண்டு – ஒன்று என்று சொல்லி முடிக்கும் போது லேசர் வட்டத்திற்குள் எங்கள் பணியை முடிக்க வேண்டும். எனது நாக்கில் கசப்பொன்று ஒட்டிக் கிடப்பது போலிருந்தது. தாடைகள் விறைத்தன. இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. நான் அணிந்திருந்த முகக்கவசத்துக்குள் வெப்பக்காற்றினை எனது முகம் உமிழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. “பளீர்” துவக்கின் பிடி என் நெஞ்சில் உதைத்தது. அந்தக் கணத்திலேயே உறைந்து போய் நின்று கொண்டிருந்தேன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரன் அருள்குமரனின் உயிரற்ற தலை சரிந்தது. (3) அருள்குமரனின் மரண தண்டனை தீர்ப்பு உறுதியானது. அவன் சுட்டுக்கொல்லப்படவிருந்த தினத்திற்கு முதல்நாள் அவனது இறுதி ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்குச் சிறை நிர்வாகம் அவகாசம் வழங்கியது. அருள்குமரன் சிறையதிகாரிகளிடம் ஓவியப் பலகைகளைக் கேட்டான். அவன் கேட்ட அனைத்தையும் வழங்கினார்கள் சிறை அதிகாரிகள். அருள்குமரன் காலையில் எழுந்து குளித்தான். தனது வெள்ளைச் சிறை ஆடையுடன் வந்து அதிகாரிகளை வணங்கினான். சிறை அறையிலிருந்த யேசுவின் சிறு சுருவத்தின் முன்னால் கண் மூடித் தொழுதான். அவனது விரல்களுக்கு இடையில் செபமாலை உருண்டது. தியானத்தில் ஆழ்ந்தான். தன் விரல்களில் பூமியின் இறுதி வெளிச்சம் புகுந்துகொண்டதைப்போல, ஓவியப்பலகையின் முன்னால் தூரிகையுடன் அமர்ந்தான். எலும்பொடிந்த மனிதப்பேருரு ஒன்றை மண் வண்ணத்தில் வரைந்தான். இதயமுள்ள இடத்தில் பெருங்கோறையாத் துளையிட்டான். ஒற்றை விழியோடு கோரமாக அவ்வுருவம் வானை நோக்கிப் பிராத்திக்கும் – உடைந்த விரல்களுடைய – கைகளை வரைந்தான். குருதித் துளிகள் வழியும், ஆன்மாவின் ஒலியற்ற ஒப்பாரியை வரைந்து முடித்தான். சாம்பல் பீடத்தில் சம்மணமிட்டிருக்கும் அந்த ஓவியம் இறந்த இதயத்தோடு இறைஞ்சிக் குழறியது. அடுத்த பலகையை எடுத்தான். கரிய வண்ணங்களை மாறி மாறித் தெரிவு செய்தான். தூரிகையில் ஒற்றியெடுத்தான். அறையில் விழுந்த கசங்கிய ஒளியில் அவனது முகம், ஏதோ ஒரு பெருங்களிப்பில் சிதையாய் சிலிர்த்தாடுவது போல தெரிந்தது. இரவு ஒன்பது மணி வரையில் நூற்றுப் பதினாறு ஓவியங்களை வரைந்தான். வரைந்து முடித்த ஓவியப் பலகைகள் சுவரெங்கும் சாய்ந்து கிடந்தன. அறை நிறைந்தது. ஓவியத்தின் துயர்நெடியும் உயிர்வலியும் அதிகாரிகளின் அடிவயிற்றைப் பிசைந்தன. தூரிகை சிந்திய வண்ணங்களால் தூய்மையான அருட்குமரன் அறையின் மூலையில் சாய்ந்தான். அத்தனை ஓவியங்களிலும் தன் இதய ஒலியை ஒற்றுக்கேட்டான். கீறிவிட்டதுபோல ஒரு சிறுபுன்னகையால் பிரசவித்த திருப்திக் கொண்டான். இறுதி மூச்சுக்களைச் சேகரித்தான். எழுந்து குளிக்கச் சென்றான். அதிகாரிகள் அவனைப் பின்தொடர்ந்தார்கள். (3) அருட்குமரன் கொலையுண்ட பின்னர் அவனொரு தமிழன் என்று அறிந்தேன். அவன் சிறையில் எவ்வாறு ஓவியனாக உருவாகினான் என்று அதன் பிறகு செய்திகளில் படித்தேன். நூஸா தீவு அதிகாரிகளுடன் பேசும் சந்தர்ப்பமொன்றில், அவன் சாவதற்கு முதல்நாள் வரைந்த ஓவியங்களையும் அவற்றில் கொப்பளித்த அவனது உணர்வுகளையும் கேள்வியுற்றேன். ஒரு தமிழனை நானே சுட்டுக்கொன்ற பெருந்துயரின் ஊளை எனக்குள் ஒப்பாரியாகக் கேட்டபடியிருந்தது. என் உள்ளம் பனிப்பாளங்களாக மாறிவிட்டதைப்போல சில நாட்கள் உறைந்து கிடந்தேன். எனக்காக ஏதாவது ஒரு சொல் எனக்குத் தேவைப்பட்டது. என்னை நானே ஆறுதல் சொல்ல என் மனம் ஏங்கியது. ஆனால், எனது சொற்கள் எதுவும் எனை எட்டாது என்று என் ஆன்மா குழறியது. கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுபவர்களின் உளவள நலன் கருதி, அந்நாட்டுப் படைத்துறைச் சட்டம் வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்தினேன். ‘மொபி’ சூட்டுப் படையணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அருட்குமரனின் மரணம் எனது வாழ்வை நிறுத்தி எழுப்பியது. மீண்டும் எந்தப் படையிலும் பணியாற்ற முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அவனுக்குத் தண்டனையை நிறைவேற்றிய குற்ற உணர்விலிருந்து வெளியேற முடியாத எனது நாட்கள் – மாதங்களாக – வருடங்களாக நீண்டு வதைத்தது. இந்தோனேஷியாவின் பாலியின் ‘தீர்த்தா எம்புல்’ என்ற பாவங்களைக் கழுவும் புனிதச் சுனையில் சென்று முப்பது தண்ணீரிலும் மூழ்கி எழுந்தேன். என் துயர் சுமப்பதற்கு ஓருடல் போதாது போல கனன்றுகொண்டிருந்த என் நிலையை மனைவி வைஷாலி அச்சத்தோடு கணித்தாள். முழுமையான மாற்றத்திற்காக நாங்கள் இருவரும் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தோம். எனக்குத் தொடர்ந்தும் படைசார் பணிசெய்வதற்கு விருப்பம் உண்டா என்று ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையினர் கேட்டார்கள். இலக்குத் தவறாமல் சுடுகின்ற திறனுடைய என்னால், தங்களது நாட்டுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை ஆராயும் வகையிலும் அந்தக் கேள்வி அர்த்தம் கொண்டிருந்தது. நான் துப்பாக்கியை வெறுப்பதாகக் கூறினேன். “சட்டப்பூர்வமாகச் செய்தாலும் ஒரு ஆயுதத்தின் மூலம் செய்யக்கூடியது வன்முறை மாத்திரமே. கொலை எந்த வடிவத்திலும் கொலையே. அதில் சட்டப்பூர்வமான கொலை – தண்டனைகொலை என்ற எந்த வேறுபாடும் இல்லை” என்று ஆஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்புக்குக் கூறினேன்; “தேவையில்லாமல் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு பேசாதே. அது அவர்களை வேறு வகையில் சிந்திக்க வைக்கும். நீ கடந்த காலத்தில் துப்பாக்கியை உபயோகித்த காரணத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருப்பதுபோன்ற அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்திவிடும்” என்று சந்திப்பு முடிந்து வரும்போது வைஷாலி எச்சரித்தாள். அவள் சொன்னதும் சரி. நான் சொன்னதும் சரி. வைஷாலிக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அவளது வருமானத்திலேயே நாங்களிருவரும் சிட்னியில் வசிக்கக்கூடிய சூழல் கூடியது. அருட்குமரனின் சொந்த இடம் சிட்னி என்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் அவனது குடும்பத்தை அல்லது அவனைத் தெரிந்தவர்களை நான்கு வருடங்களுக்குப் பின்னர் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அவனது செய்தியும் அவன் தொடர்பான கதைகளும் முழுமையாக அனைவரின் ஞாபகங்களிலும் அகன்றிருக்கும் என்று நம்பினேன். “ஆஸ்திரேலியா என்பது தெற்கே விக்டோரியா முதல் வடக்கே டார்வின்வரை பரந்து விரிந்த ஒரு பெரிய கண்டம். இங்குள்ள ஒவ்வொருவரும் சிந்திப்பதற்கு ஆயிரம் நல்ல காரியங்கள் உண்டு. வெளிநாட்டில் இடம்பெற்ற ஒரு தண்டனையைப் பற்றியும் அதில் சம்பந்தப்பட்ட உன்னையும் தேடிக் கொண்டிருக்கமாட்டார்கள். தேவையில்லாமல் குழப்பிக்கொள்ளாதே” எப்போதும்போல வைஷாலி சமரசம் செய்தாள். (4) வீட்டுக்கு வந்த நான் படுக்கையில் வீழ்ந்தேன். அருள்குமரனுக்கு மரண தண்டனையைத் தீர்த்த நூஸா தீவில் அன்று இரவு வீசிய பெருங் காற்றும் மங்கிய ஒளியும் நினைவில் ஓங்கி அறைந்தன. தண்டனை நிறைவேற்றிய பின்னர் தீவின் வாசலில் எங்கள் படையணி திரும்பிய வாகனத்தின் முன்னால் தவரஞ்சனி நிலத்தில் வீழ்ந்து மண் அள்ளி வீசித் தூற்றிய கணங்கள் கண்முன்னால் எரிநட்சத்திரங்களாய் வீழ்ந்தன. சிறுகச் சிறுக என்னைப் பின்தொடர்ந்த காலச் சர்ப்பம், சிட்னி ரயில் நிலையத்தில் வைத்து என்னை முழுமையாகப் பற்றிப் படர்ந்ததை எண்ணி நடுங்கினேன். தவரஞ்சனிக்கு நான் யார் என்று தெரியாது. ஆனால், அவளது கண்களின் நடுங்கிய பார்வையும், புத்திரசோகத்தின் வலியும் என்னை ஆழத்துளைத்தது. வேலை முடிந்து வந்த வைஷாலியிடம் அனைத்தையும் குரல் நடுங்கச் சொல்லி முடித்தேன். அவள் “வெளியே நடை போய் வருவோம், வா” என்று அழைத்துச் சென்றாள். “தண்டனை வழங்கியதற்காக ஒவ்வொரு மனிதனும் நடுங்கிச் செத்தால், நாட்டில் ஒரு நீதிபதியும் உயிருடன் இருக்க முடியாது. நீ ஒரு சட்டத்தின் சாரதி. அந்தத் தொழிலை நேர்மையோடு செய்தாய். நிறைந்த கனவோடு செய்தவை அனைத்தும் நீடித்த பெருமையோடு உன் வாழ்வில் தங்க வேண்டியவை. இந்த உலகம் மிக மிகச் சிறியது. எல்லோரும் எல்லோரையும் எதிர்கொள்ளத்தான் போகிறோம். அதற்காக ஒளிந்துகொண்டே வாழ முடியுமா?” வைஷாலியின் சொற்கள் எனக்குக் கரம் தந்து மீட்கப் பார்த்தன. அருட்குமரன் சாவினால் விடுதலையாகிவிட்டான். இப்போது காலம் என்னை உயிரோடிருந்து ஒரு தண்டனையை அனுபவித்து அதிலிருந்து என்னை விடுவிக்கப் பணிக்கிறது. நான் என்னை வெல்வதுதான் இங்கே எனக்கு விடுதலை என்றானது. அன்றைய நடை, மீண்டும் மனதில் ஒளியை மீளிருத்தியது. “அருட்குமரனின் ஓவியக் கண்காட்சியொன்று சிட்னி நகரசபைக் கலைக்கூடலில் அடுத்த வாரம் நடைபெறுவதாக, தவரஞ்சினி சொன்னார். அந்த நிகழ்வுக்குப் போனால் என் மனது சிறிது அமைதிகொள்ளும். நீ என்ன நினைக்கிறாய்?” “நிச்சயமாக, எதையும் பார்த்து நீ ஓடக்கூடாது. போதும் போதும் என்றளவு கேள்விகள் உன் மனதில் தோன்ற வேண்டும். அவற்றுக்கு நீயே கண்டுகொள்ளும் பதில்கள்தான், இந்தக் குழப்பத்திலிருந்து உன்னை நிரந்தரமாக வெளியே கொண்டு வரும். நம் ஒவ்வொருவர் மனதிலும் நாமே இருள். நாமே ஒளி” வைஷாலியின் பதில்கள் மேலும் உறுதியைத் தந்தன. (5) சிட்னி நகரசபைக் கலைக்கூடத்திற்கு நானும் வைஷாலியும் போய் இறங்கும்போது அங்கு ஏற்கனவே கணிசமான கூட்டம் நிறைந்திருந்தது. ஆஸ்திரேலிய அரசின் கலை – பண்பாட்டுத்துறை அமைச்சர் கதரின் மேர்பி பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் கண்காட்சியைத் திறந்து வைத்தார். தவரஞ்சினி மகளுடன் வந்திருந்தார். அமைச்சர் கதரின் அவர்களோடு அருட்குமரனின் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்தவாறு அவற்றின் முன் நடந்தார். தன் மகனின் உயிர் நிறைத்த ஓவியங்கள் அனைத்தும் பேசும் மொழி புரிந்தவளாய் தாய் தவரஞ்சினி விழி நீர் சொரிந்தாள். தவரஞ்சினியின் கைகளை இறுகப் பற்றிய அமைச்சர் கதரின் தவரஞ்சனியை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். “ஒரு தாய் இப்படியும் பெருமையடைய வேண்டும் என்று எனக்கு இறைவன் விதித்திருக்கிறான்” தவரஞ்சினி விம்மிய வார்த்தைகளை அமைச்சருக்கு அருகில் வந்துகொண்டிருந்த ‘சிட்னி மோர்னிங்க ஹெரால்ட்’ செய்தியாளர் குறிப்பெடுத்தார். தவரஞ்சினியை அமைச்சர் கதரின் ஆரத்தழுவிய காட்சியை கமராக்கள் ஒளிவீசிப் பிடித்தன. உரை நிகழ்த்துவதற்கு ஒழுங்கு அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில் அமைச்சர் கதரின் ஏறினார். “அருள்குமரனின் மரணம் துரதிஷ்டவசமானது. அவரது இறப்பு என்பது அதி திறன்வாய்ந்த ஓவியனின் இழப்பு. மரணத்தைத் தண்டனையாக வழங்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பது நாகரீகமாக வளர்ச்சியடைந்துள்ள சமூகத்தின் உள்ளுணர்வாக உருமாற வேண்டும். தண்டனை என்பது ஒரு குற்றவாளியிடமிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கும், அந்தக் குற்றவாளி திருந்துவதற்கான காலப்பகுதியாகவும் வழங்கப்படுவது. இவை இரண்டுமே நிறைவேறிய நிலையில்தான் அருட்குமரனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. இன்று நாங்கள் இங்கு கூடியிருப்பது, அருள்குமரனின் ஓவியங்களைக் கொண்டாடுவது அனைத்தும் அவரது திறமைக்கான அங்கீகாரம் மாத்திரமன்றி, இன்னொரு வகையில் பிராயச்தித்தமும்தான். அருட்குமரன் வரலாற்றில் ஒரு ஓவியனாகவே நினைவுகூரப்படுவார்” மேடையிலிருந்து இறங்கிய அமைச்சரின் கைகளைப் பற்றிய சிட்னி நகரபிதா நன்றி கூறினார். தனக்கு இன்னொரு நிகழ்வுள்ளதாக அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்ட அமைச்சர் வெளியேற, கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களின் நீண்ட வரிசை, மெது மெதுவாக ஓவியங்களின் முன் நகர்ந்தது. நானும் வைஷாலியும் அவ்வரிசையில் இருவராய் கரைந்திருந்தோம். ஓவியங்கள் எதையும் என்னால் சில நொடிகளுக்கு மேல் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. நெற்றிக்கு நடுவில் நரம்புகள் கிழிவதுபோல வலியெடுத்தது. ஒவ்வொரு ஓவியமும் நான் அருகில் சென்றவுடன், குருதி வழியும் சொற்களைக் கோர்த்துப் பேச விளைவதுபோல அச்சமூட்டின. இதயத்தின் பேரிரைச்சல் செவிகளில் எதிரொலித்தது. எல்லோரும் என்னை அடையாளம் கண்டுவிட்டதைப்போல விழிப்படலம் விறைத்தது. சுவரிலிருந்த ஓவியங்கள் குற்றுயிராய் குருதி வழிய தரையில் இறங்கின. முறிந்து கால்களை இழுத்து இழுத்து அருகில் வந்து என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தன. முகத்தில் ஒரு குழியும் ஒரு விழியுமுடைய உருவமொன்று, தன் நெஞ்சின் இடப்பக்கத்தில் ஒற்றை விரலைக் குத்தியபடி உரக்கச் சிரித்தது. என் முகத்தில் குருதித் துளிகள் தூவானமாய் வீழ்ந்தன. நான் வைஷாலியின் விரல்களிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு கண்காட்சியின் நடு மண்டபத்திற்கு ஓடினேன். தவரஞ்சினியின் கால்களில் விழுந்தேன். குழறி அழுதேன். பாதுகாப்பு அதிகாரிகள் ஓடி வந்தார்கள். தவரஞ்சினியின் பாதங்களைப் பிடித்திருந்த எனது கைகளை இழுத்தார்கள். நான் விடாது பிடித்துக் கதறினேன். ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் மிரண்டுபோய் திரும்பினார்கள். மங்கல் சிவப்பு ஒளியில், நான் மண்டியிட்டுக்கிடந்தேன். பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒருவாறு என்னை விடுவித்து கைத்தாங்கலாக மண்டபத்திற்கு வெளியே தூக்கிச் சென்றார்கள். வைஷாலி என் பின்னே ஓடி வந்தாள். பாதுகாப்பு அதிகாரிகளை உரக்க அழைத்த தவரஞ்சினி என்னை விடுதலை செய்யுமாறு கூறினார். நொடி அமைதியில் எனது அழுகை ஒலி மாத்திரம் ஈனமாய் கேட்டது. அதிகாரிகளின் பிடி என் மீது சற்றுத்தளர்ந்தது. தவரஞ்சினி அந்த அதிகாரிகளிடம் – “அவனை எனக்குத் தெரியும்” என்றார். தவரஞ்சினியின் மோதிரத்திலிருந்த அருள்குமரனின் சிரித்த முகம் இப்போது தெளிவாகத் தெரிந்தது. https://vallinam.com.my/version2/?p=10815#respond
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@alvayan , இந்தக் கேள்விக்கு வீரரின் பெயரைத் தரவேண்டும். நீங்கள் அணியின் பெயரைத் தந்துள்ளீர்கள். விரும்பிய வீரரின் பெயரைத் தாருங்கள். மேலும் உங்கள் கணிப்பின்படி அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தெரிவாகவுள்ளதால், போட்டிகள் நடைபெறும் இடங்கள் மாறுபடலாம். எப்படிப் போகின்றது என்பதைப் பொறுத்து புள்ளிகள் தரலாம்.😄 போட்டியில் கலந்து கொண்டவர்களில் கீழே உள்ளவர்களின் பதில்கள் இதுவரை தரவேற்றப்பட்டுள்ளது. 1 செம்பாட்டான் 2 ஏராளன் 3 வசீ 4 புலவர் 5 சுவைப்பிரியன் 6 அல்வாயன்