Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்! பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் இதில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை முறையாக வானில் பறக்கவிடப்படுவதற்கான ஒழுங்குவிதிகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டிலிருந்து அவற்றை அமுல்படுத்தத் தீர்மானித்துளளதாகவும் 250 கிராமிற்கும் குறைவான எடையுடைய ‘விளையாட்டுப் பொருள்’ (Toy) வகையைச் சேர்ந்த ட்ரோன்களை நாம் ஒழுங்குபடுத்தப் போவதில்லை எனவும் ஆனால், 250 கிராமிற்கு மேற்பட்ட அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை நாம் கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அவற்றை இறக்குமதி செய்வதற்கும் தனியான ஒழுங்குவிதிகள் காணப்படுகின்ற நிலையில் அதற்கமையச் ட்ரான் பயன்பாட்டாளர்கள் செயற்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1459342
  3. சீனாவுக்கு போட்டியாக புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியில் இந்தியா! பங்களாதேஷ் துறைமுகங்களில் சீனா முதலீடு செய்து இராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் நிலையில், இந்திய கடற்படை கொல்கத்தா அருகே புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை துவங்கி உள்ளது. இந்தியாவை சுற்றி சீனா இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இதற்காக பாகிஸ்தானின் குவாதர், இலங்கையின் அம்பாந்தோட்டை , மியான்மரின் கியாக்பியூ, பங்களாதேஷின் சிட்டகாங் என, பல நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் இராணுவ தளங்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவை சுற்றி, இது ஒரு மாலை போல் அமைந்துள்ளதால், இதை, ‘ஸ்ட்ரிங் ஆப் பேர்ல்ஸ்’ (String of Pearls) எனப்படும், முத்துமாலை உத்தி என அழைக்கின்றனர். இதற்கு பதிலடியாக இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளுடன் இணைந்து, ‘குவாட்’ (‘Quad) அமைப்பை இந்தியா துவக்கி உள்ளது. சீனாவை எதிர்கொள்ளும் மற்றொரு முயற்சியாக, மேற்கு பங்களாதேஷ் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹால்டியா துறைமுகம் அருகே, வங்க கடலில் புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை இந்திய கடற்படை துவங்கியுள்ளது. https://athavannews.com/2026/1459360
  4. ISIS பயங்கரவாதி குழு இலக்குகளை குறிவைத்து சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்! சிரியாவில் உள்ள ISIS பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து நடத்தியுள்ளன. ‘ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்’ (Operation Hawkeye Strike) எனும் பெயரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், சிரியா முழுவதும் உள்ள 35-க்கும் மேற்பட்ட ISIS மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டன. குறித்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் பயிற்சித் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதலில் 90-க்கும் மேற்பட்ட துல்லியமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதேவேளை, கடந்த மாதம் 13 ஆம் திகதி சிரியாவின் பால்மைரா பகுதியில் ISIS பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் சிரியாவில் நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில் தற்போது அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான புதிய சிரிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. இந்தப் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459368
  5. 2026இல் நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகள் - உத்தியோகபூர்வ அறிவிப்பு! Published By: Digital Desk 1 11 Jan, 2026 | 10:03 AM இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேசிய பரீட்சைகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்த வருடம் ஏழு முக்கிய பரீட்சைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின்படி, இந்த ஆண்டின் முதல் பரீட்சையானது 2025ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையாகும். இது 2026 ஜனவரி 11ஆம் திகதி நடைபெறுமென திட்டமிடப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தர பரீட்சையின் (General Certificate Of Education Advanced Level)மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி 12ஆம் திகதி முதல் ஜனவரி 20ஆம் திகதி வரை நடைபெறும். 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை, பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும். 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையானது ஒகஸ்ட் 9ஆம் திகதியும், அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும். 2027ஆம் ஆண்டு, முதல் முறையாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் பங்கேற்கும் மாணவர்களுக்கான மற்றொரு பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை(GIT) 2026 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும். இந்த வருடத்தின் இறுதி தேசிய பரீட்சையான 2026 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டு உயர்தரப் பாடங்களை ஜனவரியில் முடிப்பதும், 2026ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையை வருட இறுதிக்குள் நடத்துவதும் தேசிய பரீட்சைகள் நாட்காட்டியை அதன் வழக்கமான அட்டவணைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235715
  6. நோபல் பரிசை யாருக்கும் மாற்ற முடியாது! ; மச்சாடோ கருத்துக்கு நோபல் நிறுவனம் அதிரடி பதில் Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 10:37 AM வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மாற்றவோ அல்லது பகிரவோ முடியாது என நோர்வே நோபல் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவர்து மனைவியையும் அமெரிக்கப் படைகள் அண்மையில் கைது செய்தன. இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனக்குக் கிடைத்த நோபல் பரிசை ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு வழங்க விரும்புவதாக மரியா கொரினா மச்சாடோ ஒரு நேர்காணலில் சூட்சுமமாக தெரிவித்தார். இது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நோர்வே நோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒருமுறை அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிர்ந்துகொள்ளவோ அல்லது இரத்து செய்யவோ சட்டப்படி இடமில்லை. நோபல் அறக்கட்டளையின் விதிகளின்படி, விருது குறித்த தீர்மானம் இறுதியானது மற்றும் நிலையானது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. விருது பெற்றவர்கள் அதன் பின்னர் செய்யும் செயல்கள் அல்லது அவர்கள் வெளியிடும் கருத்துகள் குறித்து நோபல் குழு எந்தவித விமர்சனமும் செய்யாது. மச்சாடோவிடமிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பரிசைப் பெறுவது தனக்குப் பெருமை அளிக்கும் எனத் தெரிவித்திருந்தார். அடுத்த வாரம் வொஷிங்டனில் இவர்கள் இருவரும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், நோபல் நிறுவனத்தின் இந்தத் தெளிவுபடுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடியதற்காக மச்சாடோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நோபல் குழுவின் விதிகளின்படி அந்த கௌரவம் அவருக்கு மட்டுமே உரியது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235724
  7. இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! Jan 10, 2026 - 11:30 PM இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று (10) பிற்பகல் 02.58 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 77 கிலோமீற்றர் (47.85 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmk8m1qit03rio29nf6wwpyil
  8. தாழமுக்கம் வலுவிழக்கிறது; மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! Jan 11, 2026 - 06:30 AM மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும் தாக்கம் மேலும் குறைவடைந்து வருவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் மீனவர் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடல் பரப்பகளில் காற்றானது கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும். எனினும், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmk911iym03rjo29nfe7yw7xe
  9. "பல் துலக்கும்போது வெடித்த கழுத்து ரத்தக்குழாய்" - அரிதான நிகழ்வுக்கு என்ன காரணம்? பட மூலாதாரம், Lakshmi Jangde படக்குறிப்பு, ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த் திவாரி பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் "அன்று காலை நான் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது எனக்கு விக்கல் எடுத்தது. அதன் பிறகு, எனது தொண்டையின் வலது பக்கத்திற்குள் ஒரு பலூன் வேகமாக வீங்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே எனது தொண்டை முழுவதுமாக வீங்கிவிட்டது, கண்கள் இருட்டும் அளவுக்குக் கடுமையான வலி ஏற்பட்டது." சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார். அப்போது அவர் தனது மனைவியிடம், "ஏதோ சரியில்லை, நாம் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்று மட்டும் கூறியுள்ளார். அதன் பிறகு அவருக்கு நினைவு திரும்பியபோது, ராய்ப்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவருக்கு ஏற்பட்ட அந்த பாதிப்பு எந்த காயத்தினாலோ அல்லது நோயினாலோ ஏற்படவில்லை, மாறாக அது ஒரு அரிய நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் கழுத்தில் உள்ள ஒரு தமனி தானாகவே வெடித்துவிட்டது. இது மருத்துவ மொழியில் 'ஸ்பாண்டேனியஸ் கரோடிட் ஆர்டரி ரப்சர்' என்று அழைக்கப்படுகிறது. மாநிலத்தில் பதிவான இது போன்ற முதல் நிகழ்வு இதுவாகும். பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் இதயம், மார்பு மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 6 மணி நேர சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராகுலின் உயிரைக் காப்பாற்றினர். இந்த நிலை ஏன் ஆபத்தானது? பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu படக்குறிப்பு,இந்த ஸ்கேன் ராகுலின் நிலையை தெளிவுபடுத்துகிறது, அவரது வலது கரோடிட் தமனி, அதன் சிதைவு ஆகியவற்றைக் காட்டுகிறது. அதே துறையின் தலைவரான மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு பிபிசி இந்தியிடம் கூறுகையில், "கழுத்தில் உள்ள ரத்த நாளம் வெடிப்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நிகழ்வு. இதற்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படலாம். ஆனால், இது பெரும்பாலும் கடுமையான விபத்துக்கள் அல்லது தொண்டை புற்றுநோய் போன்ற நோய்களின் போதுதான் நடக்கும். ஒரு சாதாரண மனிதருக்குக் கழுத்து ரத்தக்குழாய் தானாகவே வெடிப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவ இதழ்களின் படி, இதுவரை உலகம் முழுவதும் இது போன்று 10 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. அந்த அளவுக்கு இது அரிதானது," என்றார். 40 வயதான ராகுல், ராய்ப்பூர் அருகிலுள்ள பன்புரி பகுதியில் வசிக்கிறார். அவர் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்கள் விற்கும் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உள்ளனர். தமக்கு இதற்கு முன்பு இது போன்ற எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்று ராகுல் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், அந்த டிசம்பர் காலை நடந்தது ராகுலுக்கு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கும் ஒரு சவாலான விஷயமாக அமைந்தது. மருத்துவப் பரிசோதனையில் ராகுலின் வலது பக்க கழுத்து நாளம் வெடித்திருப்பது தெரியவந்தது. பொதுவாக, கழுத்தில் உள்ள வலது மற்றும் இடது நாளங்கள் இதயத்திலிருந்து மூளைக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் தமனிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாளங்களின் வலைப்பின்னல் மனித உடல் முழுவதும் மிகவும் பாதுகாப்பாகப் பரவியுள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் ஒரு இடத்தில் காயமோ அல்லது கிழிவு ஏற்பட்டால், அது இதயத்திலிருந்து ரத்தத்தை வழங்கும் நாளங்களைப் பாதித்து ரத்தப்போக்கை ஏற்படுத்தினால் மட்டுமே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதயத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இந்த நாளங்கள் மிக அதிக அழுத்தத்தில் பாய்வதால், அதிக அளவு இரத்தம் மிக விரைவாக இழக்கப்படும். இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு தலைமையிலான குழு மேற்கொண்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "எந்தவித காயம், தொற்று, புற்றுநோய் அல்லது முன்கூட்டிய நோய் ஏதுமின்றி கழுத்தில் உள்ள நாளம் தானாகவே வெடிப்பது ஒரு அரிய நிகழ்வு," என்றார். ராகுலின் கழுத்தில் வலது நாளம் வெடித்ததால், கழுத்துப் பகுதியில் ரத்தம் வேகமாக நிரம்பியது. தமனியைச் சுற்றி ரத்தம் தேங்கியதால் ஒரு பலூன் போன்ற அமைப்பு உருவானது. இதனை மருத்துவ மொழியில் 'சூடோஅன்யூரிசம்' என்று அழைக்கிறார்கள். மருத்துவர் சாஹு இதுகுறித்து கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள மருத்துவ இதழ்களில் இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது பணிக்காலத்தில் இது போன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை," என்றார். உயிரைக் காப்பாற்றுவது எவ்வளவு கடினம்? பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu படக்குறிப்பு,மருத்துவமனையில் மருத்துவர்களும் ஊழியர்களும் தன்னை கையாண்ட விதம் தனக்கு தைரியத்தை அளித்ததாக ராகுல் கூறுகிறார். இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பகிர்ந்த மருத்துவர் சாஹு, "எளிமையாகச் சொன்னால், ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு பக்கவாதத்தை உண்டாக்கும். ஆனால் ராகுலின் விஷயத்தில், பிரச்னை இன்னும் ஆபத்தானது. நாளமே வெடித்துவிட்டது. அங்கு உருவான ஒரு சிறிய ரத்தக் கட்டி கூட மூளையை அடைந்திருந்தால், முடக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தன," என்றார். பெரிய ரத்தக் கட்டிகளோ அல்லது அதிக எண்ணிக்கையிலான கட்டிகளோ மூளையை அடைந்தால், முழு மூளையும் சேதமடையக்கூடும் அல்லது நோயாளி 'மூளைச்சாவு' அடையும் நிலை கூட ஏற்படலாம். அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோதும், நாளம் மீண்டும் வெடிக்கும் அபாயம் இருந்ததாக அவர் விளக்கினார். அப்படி நடந்திருந்தால், கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கினால் சில நிமிடங்களிலேயே நோயாளி இறந்திருக்கக்கூடும். ராகுல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவரது நிலைமை சீராக இல்லை. அவரது கழுத்திற்குள் அதிக ரத்தம் சேர்ந்திருந்ததால், அறுவை சிகிச்சையின் போது நாளத்தை துல்லியமாகக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது. "கழுத்தின் இந்தப் பகுதியில் பேச்சு, கை கால்களின் அசைவு மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பல முக்கியமான நரம்புகள் உள்ளன. நாங்கள் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், அது நோயாளிக்கு வாழ்நாள் முழுவதும் குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்தியிருக்கும்," என்று மருத்துவர் சாஹு குறிப்பிட்டார். நாளத்தைக் கண்டறிந்து அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கே மருத்துவர்களுக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது. முழு அறுவை சிகிச்சையும் 5 முதல் 6 மணி நேரம் நீடித்தது. வெடித்த நாளத்தைச் சரிசெய்ய 'பொவைன் பெரிகார்டியம் பேட்ச்', அதாவது மாட்டின் இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வு பயன்படுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ராகுலுக்கு 12 மணி நேரம் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது. "ராகுலுக்கு சுயநினைவு திரும்பிய பிறகு, முதலில் அவருடன் பேசி அவரது குரலைச் சரிபார்த்தோம். பின்னர் அவரது கைகால்களின் அசைவுகளையும், பின்னர் அவரது முக அசைவுகளையும் சரிபார்த்து, ரத்தக் கட்டிகள் ஏதும் மூளையை அடையவில்லை என்பதையும், அறுவை சிகிச்சையின் போது எந்த முக்கிய நரம்புகளும் காயமடையவில்லை என்பதையும் உறுதி செய்தோம்," என்று மருத்துவர் சாஹு கூறினார். ராகுலின் மனைவி லட்சுமி ஜங்டே பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், ஆரம்ப நாட்கள் மிகவும் பயமாக இருந்ததாகவும், நிலைமை மிகவும் தீவிரமாக இருந்தது என்று மருத்துவர்கள் தெளிவாகக் கூறியிருந்ததாகவும் தெரிவித்தார். "இப்போது அவர் குணமடைவதைப் பார்க்கும்போது, அவரது கழுத்து ரத்தக்குழாய் வெடித்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை," என்கிறார் அவர். சதீஷ்கரில் இது போன்று நிகழ்வது முதல் முறை என மருத்துவர்கள் கூறியபோது தான் மிகவும் பயந்ததாக ராகுல் கூறுகிறார். ஆனால் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அளித்த தைரியம் அவரை மீட்டெடுத்தது. தற்போது அவர் ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்காத தனது குழந்தைகளை, குறிப்பாகத் தனது மகளைச் சந்திக்க வீட்டிற்குச் செல்லத் தயாராகி வருகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp82vde6506o
  10. Today
  11. வெளியில் இப்பொது வரும் கதை. ரசூசிய இதுவரை சொல்லி வந்ததை அமெரிக்கா சரி, யதார்த்தத்துக்கு இடம் இருக்கிறது என்பதை நிரூபித்து உள்ளது. டிரம்ப் இதில் வகிபாத்திரம் மாத்திரம்,
  12. ஓம் அது உண்மை தான் கிரீன்லாந்து டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாகும் ஆனால் விரிவான சுதந்திரத்தை சுயாட்சியை அனுபவிக்கிறது. ஈழதமிழ் ரஷ்ய விசுவாசிகளை மேற்குலநாடுகள் வலிந்து கடத்தி வரவில்லை அவர்களாகவே வலிந்து விரும்பி வந்து சுதந்திர வாழ்வை அனுபவிப்பதுடன் ஒப்பிடலாம்
  13. வெனிசுலா அதிபரை கைது செய்தது போல், புடினை கைது செய்ய உத்தரவிடும் சாத்தியம் குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். Tetyana Oliynyk - 9 ஜனவரி, 23:41 டொனால்ட் டிரம்ப். ஸ்கிரீன்ஷாட் 61952 - अनुकाला (ஆங்கிலம்) ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை கடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்புகிறார். மூலம்: எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன நிர்வாகிகளிடம் டிரம்ப் பேசுகிறார் . விவரங்கள்: வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கைக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் எதிர்வினையை ஒரு பத்திரிகையாளர் டிரம்பிற்கு நினைவூட்டினார், அப்போது ஜெலென்ஸ்கி கூறினார்: "சர்வாதிகாரிகளுடன் அது இப்படித்தான் செயல்படுகிறது என்றால், அடுத்து என்ன செய்வது என்று அமெரிக்காவிற்குத் தெரியும்." பின்னர் பத்திரிகையாளர் டிரம்பிடம் புடினை பிடிக்க உத்தரவிடுவாரா என்று கேட்டார். மேற்கோள்: "அது அவசியமில்லை என்று நினைக்கிறேன். நான் எப்போதும் அவருடன் ஒரு சிறந்த உறவைக் கொண்டிருந்தேன். நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எட்டு போர்களை நான் தீர்த்துவிட்டேன்..." "பீட்டரை உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை, கடந்த மாதம் அவர்கள் 31,000 பேரை இழந்தனர், அவர்களில் பலர் ரஷ்ய வீரர்கள், மேலும் ரஷ்ய பொருளாதாரம் மோசமாக உள்ளது. நாங்கள் அதை சரிசெய்யப் போகிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் அதை விரைவாகச் செய்திருக்க முடியும் என்று நான் விரும்புகிறேன்." பின்னணி: ஜனவரி 3 ஆம் தேதி, அமெரிக்க இராணுவத்தின் ஒரு உயரடுக்கு சிறப்புப் படைப் பிரிவான டெல்டா படை, வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றி நாட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றது. பின்னர் அவர்கள் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வெனிசுலாவில் தெளிவான மற்றும் பாதுகாப்பான அதிகாரப் பரிமாற்றம் நடைபெறும் வரை அமெரிக்கா அங்கு ஆட்சி செய்யும் என்று டிரம்ப் கூறினார் . ஜனவரி 5 ஆம் தேதி, வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவிற்கு நாட்டின் வளங்களை முழுமையாக அணுக அனுமதிக்க வேண்டும் என்று டிரம்ப் கோரினார், மறுப்பது மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார். https://www.pravda.com.ua/eng/news/2026/01/09/8015438/
  14. மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார். ஜூலியா மான்செஸ்டர் - 01/09/26 காலை 9:19 ET ஒலியை இயக்கு தலைப்புகள் முழுத்திரைஇடைநிறுத்துபகிர் அடுத்த வாரம் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவைச் சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறிய ஜனாதிபதி டிரம்ப் , அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவது ஒரு "பெரிய மரியாதை" என்று கூறினார். இந்த வார தொடக்கத்தில் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் சீன் ஹானிட்டியின் நிகழ்ச்சியில், இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் வென்ற அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிற்கு வழங்க விரும்புவதாக மச்சாடோ கூறினார். மச்சாடோவுக்கு பரிசு வழங்கப்படுவதற்கு முன்பு தானே பரிசை வெல்ல முயற்சி செய்து கொண்டிருந்த டிரம்ப், வியாழக்கிழமை ஹன்னிட்டியிடம் அதை அவரிடமிருந்து ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். "நான் எட்டு போர்களை நிறுத்திவிட்டேன்," என்று டிரம்ப் கூறினார். "இது நோர்வேக்கு ஒரு பெரிய அவமானமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். இப்போது, நோர்வேக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் [நோபல் பரிசு] குழு அங்குதான் அமைந்துள்ளது, நிறைய நார்வே மக்கள்." "சரி, அவள் அடுத்த வாரம் எப்போதாவது வருவாள் என்பது எனக்குப் புரிகிறது, அவளுக்கு வணக்கம் சொல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று டிரம்ப் ஹன்னிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறினார். இந்த வார தொடக்கத்தில் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், மச்சாடோ தனது சொந்த நாட்டை வழிநடத்த வெனிசுலாவில் போதுமான ஆதரவோ மரியாதையோ இல்லை. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றி போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு அழைத்து வந்த ஒரு இராணுவ நடவடிக்கைக்கு டிரம்ப் உத்தரவிட்டதை அடுத்து, வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை அமெரிக்கா ஆதரித்தது. மச்சாடோவுக்கு பரிசு வழங்க முடிவு செய்ததில் நோர்வேக்கு ஏதோ தொடர்பு இருப்பதாக தான் நம்புவதாக டிரம்ப் கூறினார், ஆனால் நோர்வே இதை மறுக்கிறது என்று குறிப்பிட்டார். "கோட்பாட்டில், நீங்கள் எட்டு போர்களை நடத்தும்போது, ஒவ்வொரு போருக்கும் ஒன்றைப் பெற வேண்டும்," என்று அவர் கூறினார். https://thehill.com/homenews/administration/5681120-trump-machado-nobel-peace-prize/
  15. டிரம்ப் புடினை அமைதிக்கு ஒரு தடையாகக் கூறுகிறார், அவரது விளையாட்டுகளால் அவர் சோர்வடைந்துவிட்டார் என்று கூறுகிறார் - தி டெலிகிராஃப் Krystyna Bondarieva , ரோமன் பெட்ரென்கோ — 10 ஜனவரி, 09:04 டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 88199 பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புதின் மீது பெருகிய முறையில் விரக்தியடைந்து வருகிறார் , இப்போது உக்ரைனில் அமைதிக்கு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்க்கை விட அவரை ஒரு பெரிய தடையாகக் காண்கிறார் . மூலம்: ஐரோப்பிய பிராவ்தா செய்தி வெளியிட்டுள்ளபடி, ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி டெலிகிராஃப் விவரங்கள்: ரஷ்ய கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றி புதிய தடை மசோதாவை ஆதரிக்கும் டிரம்ப்பின் முடிவு, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது நேரம் முடிந்துவிட்டது என்ற செய்தியை புடினுக்கு அனுப்பும் நோக்கத்திற்காகவே என்று தி டெலிகிராஃபிடம் வட்டாரங்கள் தெரிவித்தன. "அவர் கேரட் மற்றும் குச்சி அணுகுமுறையைச் சுற்றி வேலை செய்கிறார். மேலும் அவர் கேரட்டை முழுவதுமாக விட்டுவிட்டார் என்று நான் நினைக்கிறேன்" என்று ஜனாதிபதியின் உள் வட்டத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறினார். பேச்சுவார்த்தைகளில் "இரண்டு படிகள் முன்னோக்கி, ஒரு படி பின்னோக்கி" என்ற ரஷ்ய உத்தியை டிரம்ப் பெருகிய முறையில் சோர்வடையச் செய்வதாக மற்றொரு வட்டாரம் மேலும் கூறியது . முன்னதாக, டிரம்ப் புடினுக்கு சாதகமாகப் பேசியிருந்தார், மேலும் போருக்கு உக்ரைன் தான் காரணம் என்று கூறியிருந்தார். இருப்பினும், தற்போதைய மற்றும் முன்னாள் வாஷிங்டன் அதிகாரிகள் பலரின் கூற்றுப்படி, டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடு, புடின் முடிவில்லாத ஒரு விளையாட்டை விளையாடுகிறார் என்ற ஐரோப்பிய பார்வையுடன் இப்போது மிகவும் நெருக்கமாக ஒத்துப்போகிறது . கடந்த ஆண்டு இறுதியில் மார்-எ-லாகோவில் ஜெலென்ஸ்கி டிரம்பை சந்திப்பதற்கு முந்தைய நாள் ரஷ்யா கியேவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது. இது டிரம்பின் நிர்வாகத்தை முன்பை விட போர் குறித்த ஐரோப்பிய கண்ணோட்டத்திற்கு நெருக்கமான நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியதாக ஒரு இங்கிலாந்து அதிகாரி கூறினார். புடினின் தொடர்ச்சியான மிருகத்தனம், ஏமாற்றும் நடத்தை மற்றும் விளையாட்டுத்தனம் ஆகியவை நிர்வாகத்தால் கவனிக்கப்படாமல் போகவில்லை என்று அந்த அதிகாரி கூறினார். பின்னணி: சமீபத்தில் மார்-எ-லாகோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், டிரம்ப் புதின் மீதான தனது தனிப்பட்ட எரிச்சலை வெளிப்படுத்தினார்: "புதினைப் பார்த்து நான் மகிழ்ச்சியடையவில்லை; அவர் அதிகமான மக்களைக் கொல்கிறார்" என்று கூறினார். ஜனவரி 7 ஆம் தேதி, அமெரிக்க சிறப்புப் படைகள் தடைகளுக்கு உட்பட்டு ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட டேங்கரில் ஏறியபோது மாஸ்கோவுடன் மோதலை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது . சில மணிநேரங்களுக்குப் பிறகு, செனட்டர் லிண்ட்சே கிரஹாமுடனான சந்திப்பின் போது டிரம்ப் தடைகள் மசோதாவிற்கு "பச்சைக்கொடி" காட்டியதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது . https://www.pravda.com.ua/eng/news/2026/01/10/8015459/
  16. Yesterday
  17. எல்லோருக்கும் வாழ்வில் நோய், மரணம் உறுதி, அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. எல்லோரின் வாழ்வில் ஏற்படும் நோயைப்பற்றி, மரணத்தைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை. இருந்தபோதிலும் சிலரின் வாழ்வில் இந்த நிலைகள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் தம்மை இழந்து வருத்தி, தம் இன்ப துன்பம், களைப்பு பாக்காமல் அடுத்தவரின் விடிவுக்காக, மகிழ்ச்சிக்காக இடைவிடாமல் உழைப்பார்கள், தங்களால் இயன்றதை செய்வார்கள். அவர்களுக்கு நோயோ, மரணமோ நேரிட்டால் அவரால் பாதுகாக்கப்பட்டவர்கள், பயனடைந்தவர்கள் சொல்வது. "இப்படிப்பட்ட நல்ல மனிதனுக்கான இப்படி நேர்ந்தது? அவர் ஒரு தியாகி, அவருக்கு இப்படி வந்திருக்கவே கூடாது,இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாமென வருந்துவார்கள். அப்படிப்பட்டவர்கள் இறந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள் தியாகியாக. அதேநேரம் தமது அதிகார திமிரினால், வரட்டுகவுரவத்தினால், பழிவாங்கலினால்,மற்றவர்களை வருத்தி, தாம் இன்பம் பெறுவதற்காக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து வாழ்பவர்களுக்கு இப்படியான நிலை ஏற்படும்பொழுது, பாவி! எத்தனை பேரின் வாழ்வை கெடுத்தார்கள், இப்போ வந்த இந்த நோய், மரணம் பல ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கக்கூடாதா இவருக்கு? எத்தனை பேரின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டிருக்கும் என நினைக்கத்தோன்றும். அவர்கள் வாழ்ந்தாலும் இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள். அவரவர் வாழ்வு எப்படியானதென்பதை அவர்கள் நோயின், மரணத்தின் போது கூடியிருப்போர் கூறும் கருத்துக்களில் இருந்து வெளிப்படும். நாகாசுரனை கொன்றது தெய்வம். அவன் கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக. அதற்காக தெய்வத்தை குறை கூறுவோமா? அல்லது நாகாசுரனால் வதைக்கப்பட்டவர்களை குறை கூறுவோமா?
  18. மாதுளை மரம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட T.தம்பிமுத்து எழுதி ‘நியூ யோர்க்கர்’ சஞ்சிகையில், 05 நவம்பர் 1954-இல் வெளியாகிய சிறுகதை : The pomegranate tree. தமிழில்: எழுத்துக்கினியவன் சில மனிதர்களுக்கு ஒரு விசேடமான பலவீனம் இருக்கும்; அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார்கள், தங்களுக்கு உயிரானவர்களின் மனமகிழ்ச்சியைக் கூட அர்ப்பணித்து விடத் தயங்க மாட்டார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் திரௌபதியைப் பணயமாக வைத்து இழந்த தர்மன். எனது இரத்தின மாமாவின் பலவீனம் வட இலங்கையின் அச்சு வேலிக் கிராமத்தில், அவருடைய வீட்டுக் கிணற்றடிக்கு அருகில் வளரும் மாதுளை மரத்தின் பழங்களுக்குத்தான். விறாந்தைக்குக் கீழே கல்லாசனத்தின் மேல் விரித்திருந்த புலித்தோலில் உட்கார்ந்து மாதுளம் பழக் கொட்டைகளைச் சுவைத்தபடி இரத்தின மாமா எனக்கும் என் சகோதரர்களுக்கும் சேர் வால்டர் ஸ்காட்டின் கதைகளுக்குத் தானும் கொஞ்சம் கண்ணும் மூக்கும் வைத்து ஆலாபிப்பார்: “அப்போ அந்தக் கறுப்பு மறவன் கடிவாளத்தைப் பற்களால் கடித்துப் பிடித்தபடி குதிரையை ஓட்டிவந்து, ‘ஹோ ஐவன்ஹோ! ஹோ ஐவன்ஹோ!’ என்று கூவினான். ரெபெக்கா வெகு உயரத்திலிருந்து, தன் கூந்தல் ஒரு கார்மேகம் மாதிரிக் கவிழ்ந்து விழக் கீழே பார்த்தாள்…இந்த மாதுளம்பழம் அருமை. அச்சுவேலிக் கிணற்றடி மாதுளைக்குப் போட்டியாக எதுவுமே கிடையாது!” ஆங்கிலேயர் மாதுளம்பழக் கொட்டைகளைக் கரண்டியால் கோதி அள்ளி உண்ணும் முறை முழுப்பிழை என்று இரத்தின மாமா சொல்வார். கரண்டியால் கோதி எடுத்தால் ஏதோ கற்பூரத் தைலம் சாப்பிட்டது போல மாதுளம்பழத்தின் உருசியையே கெடுத்துவிடும். அது மட்டுமல்ல, மாதுளங் கொட்டைகளை விழுங்கக் கூடாது. ஒரு கொஞ்சத்தை வாயில் போட்டு ஒன்றிரண்டு முறை மென்று மாதுளம்பழச் சாற்றை, சிப்பிமீன் சாப்பிடுகிற மாதிரி உறிஞ்சி எடுத்தபிறகு கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும். மரத்திலேயே பழுத்த புத்தம்புது மாதுளம்பழம் கொஞ்சம் எலுமிச்சை கலந்த ஷாம்பேன் மாதிரி இருக்கும். அச்சுவேலிக்கு வெளியே இவ்வளவு உருசியான மாதுளம்பழத்தைக் கண்ட ஞாபகமே எனக்கு இல்லை. மாரிகாலத்தில் நானும் எனது ஐந்து சகோதரர்களும் எங்கள் பெற்றோருடன் கொழும்பு நகரத்தில் வசித்தோம். அங்கேதான் பள்ளிக்கூடம் போனோம். கோடை விடுமுறைகளுக்கு அச்சுவேலிக்குப் போய்விடுவோம். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை அவருடன் தங்கியிருந்தோம். அவருக்குப் பிறகு இரத்தின மாமாவுடன் அல்லது ஆறு மாமாவுடன். இரத்தின மாமா எனது அப்பாவின் ஒன்றுவிட்ட மைத்துனர். ஆறு மாமா அம்மாவின் மைத்துனர். இலங்கை உறவுமுறைகளின் படி இவர்கள் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாமாக்கள்தான். இலங்கையில் மாமாக்கள் மருமக்களுக்கு அளவுமீறிய செல்லம் கொடுப்பது வழக்கம். ஆகவே அச்சுவேலிக்குப் போவதென்றால் எங்களுக்குக் கொள்ளைப் பிரியம். ஆறு மாமா ஒரு சன்னியாசி மாதிரியான மெலிந்த சிறிய உருவம் கொண்டவர். செம்மையாகச் செதுக்கிய கழுகு போன்ற தலையில் நரைத்துப்போன வெள்ளைத் தலைமுடி. ஒரு பறவை மாதிரி கொஞ்சம் பதற்றமான அசைவுகள் கொண்டவர். எந்த விஷயத்தையும் கவனித்துச் செய்கிற கறார்ப் பேர்வழி. கீரிமலைக் கேணியில் குளித்துப் பிறகு பிராமணக் கடையில் மதிய உணவு அருந்த எங்களைக் காரிலோ குதிரை வண்டியிலோ அனுப்பும் போது எல்லோருக்கும் தனித்தனியாகத் துவாய்களும், சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடப் பாய்களும் கவனமாக எடுத்து வைப்பார். பிறகு அந்தப் பயணத்துக்குத் தேவையான சரியான அளவு பணத்தை எடுத்துத் தன் மகன் – எங்கள் மைத்துனன் – ராஜா கையில் வைப்பார். ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படாத மாலைகளில் எங்களை உள்ளான் குருவியோ புறாவோ வேட்டையாட அழைத்துச் செல்லும்படி ராஜாவைப் பணிப்பார். ராஜா உயரமாக அழகாக இருப்பான். கவிதைகளை, முக்கியமாக ஔவையாரின் நாலடிச் செய்யுள்களை, மேற்கோள் காட்டுவதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். இப்போது அவன் ஒரு அரசாங்க அதிபராகக் கடமையாற்றுவதால் நடைமுறைகளையும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்வதையும் சீராக நடத்துவதிலேயே கவனமாக இருக்கிறான். ஆனால் என் நினைவில் அவன் ஒரு கவிஞன்தான். வேட்டை என்பது திறந்த வெளிகளிலும், பனங்காணிகளிலும், வயல்வெளிகளிலும், பறவைகளிலும் காணக்கூடிய கவிதைகளின் ஒரு அம்சம்தான். சிலவேளைகளில் சிறுமிகளைப் பற்றிக் கேட்டு ராஜா எங்களைக் கேலி செய்வான். “வளர்ந்த பிறகு ஆரைக் கட்டுவாய்? நளினியா சகுந்தலாவா சாவித்திரியா?” நான் “சாவித்திரி!” என்று சிலவேளைகளில் கத்துவேன். அல்லது “சகுந்தலா!” ஒரே கும்மாளம்தான். திரும்பி வரும்போது பென்னாம்பெரிய பனையோலைகள் சரசரக்க, சில்வண்டுகள் இருண்ட பனங்காணிகளில் களேபரம் செய்ய, ஒற்றைக் காபைட் விளக்கெரியும் தெருவோரக் கடையில் நிறுத்தி ஒரு கோர்வை வடையும் எலுமிச்சம்பழச் சாறும் வாங்கித் தருவான். ஆறு மாமா வீட்டுக்குப் போகும் போது பெட்டிபெட்டியாக வாணங்களும் பட்டாசுகளும் இருக்கும் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். கோப்பாய்க்கு அருகிலுள்ள முடிவில்லாத ‘நிலாவரை’ கிணற்றைப் பார்க்கப் போகும்போதும் அல்லது விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போதும் ஆறு மாமா எங்களுக்கு ஆளுக்கொரு வெள்ளி ரூபாய் நாணயம் தருவார். இரத்தின மாமா வீட்டில் நாங்கள் இருந்தபோதும்கூட வேட்டை, நீச்சல் பயணங்கள் போயிருக்கிறோம் என்றாலும் அங்கே எங்களை மிகவும் கவர்ந்தது மாதுளம்பழங்களும் நாட்கணக்கில் தொடரும் இரத்தின மாமாவின் நெடுங்கதைகளும்தான். கிராமத்தினருக்கு இரத்தின மாமாவின் மேல் பயங்கலந்த மரியாதை இருந்தது. அவர் ஒரு ராங்கிபிடித்த, பிடிவாதக்கார, இலகுவாகத் திருப்தி செய்ய முடியாத, ஆனால் நல்ல மனமுள்ள சர்வாதிகாரி. அவர்தான் ஊர்ப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்தின் தலைவர். அப்பப்பா காலமான போது, அவருடைய பிள்ளைகள் யாரும் அந்தக் கிராமத்தில் வசிக்கவில்லை. இரத்தின மாமா, அப்பப்பாவின் மைத்துனர் என்கிற முறையில், அப்பப்பாவின் முறையான வாரிசாக, அச்சுவேலியின் முதற்குடிமகனாகத் தன்னைத்தானே வரிந்து கொண்டார். அத்தோடு கிடைக்கும் எல்லா விதமான விசேட உரிமைகளும் தனக்குத்தான் என எதிர்பார்த்தார். ஆறு மாமா இதற்கு முற்றிலும் பலத்த எதிர்ப்பு. கிராமத்தின் ‘உடையார்’ என்ற முறையில் சட்டத்துக்கும் நீதிக்கும் பொறுப்பான தான்தான் அச்சுவேலியின் நியாயமான முதற்குடிமகன் என்று நினைத்தார். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை கிராமத் தலைவர் யார் என்பதில் ஐயம் எதுவுமே இருக்கவில்லை. அவர் தெருவில் நடந்து வந்தால் ஊர் மக்கள் மரியாதை காட்டி தத்தம் வீடுகளுக்குள் ஓடிப்போய்ப் பதுங்கிக்கொள்வார்கள். நாங்கள் சிறுபிள்ளைகள் ஊர்த் தெருக்களிலும் ஒழுங்கைகளிலும் ஓடித்திரியும் போது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மண்டியிட்டு மரியாதை தந்தமை நகரத்துப் பிள்ளைகளான எங்கள் கண்களுக்கு வியப்பாகத் தெரிந்தது. எங்களோடு பேச முதல் அவர்கள் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையையோ தோளில் போட்டிருந்த துண்டையோ கழற்றி இடையில் சுற்றிக்கொள்வார்கள். ஏனென்றால் அவரது பேரப்பிள்ளைகளுக்கு முன்னால் பகட்டாக அணிந்துகொள்வது மரியாதையின்மை என்று கருதப்பட்டது. ஊருக்கு வருகை தரும் வெளியூர்ப் பிரமுகர்களுக்கு ஊரார்களை அறிமுகப்படுத்தும் பணியை அப்பப்பாவும், அவருக்கு முதல் அவரது தகப்பனும்தான் எப்போதுமே செய்வார்கள். ஆறு மாமா, இரத்தின மாமா இரண்டு பேருக்குமே அந்த உரிமை தங்களுக்குத்தான் வரவேண்டும் என்ற ஆசை. ஊரில் நடக்கும் எல்லாத் திருமண அல்லது மரண வீட்டு ஊர்வலங்கள் தன் வீட்டுக்கு நூறு யார்ட் அண்மைக்கு வந்ததும் தத்தம் வாத்தியக் கச்சேரிகளை நிறுத்திவிட வேண்டும் என்ற கட்டளையை இரத்தின மாமா அறிவித்த கையோடேயே ஆறு மாமாவும் அதே கட்டளையைப் பிறப்பித்தார். அப்பப்பாவுக்கு இன்னுமொரு சலுகையும் இருந்தது. வருடப்பிறப்பு நாளில் ஊரிலுள்ள எல்லா நாதஸ்வரக் கோஷ்டிகளும் அவரது வீட்டுக்குப் போய்த்தான் முதலாவது கச்சேரி வைக்க வேண்டும். ஆறு மாமா இந்தச் சலுகையைத் தனக்கென்று எடுத்துக்கொண்டதும் இரத்தின மாமா கோபம் கொந்தளிக்க ஆறு மாமாவோடும் அவரது குடும்பத்தோடும் பல வாரங்கள் பேசாமலேயே விட்டுவிட்டார். ஆறு மாமா சாதுரியமாகப் பெருமனதுடன் வேட்டைக்குப் பிறகு வழமையாகச் செய்வது போல ஒரு காட்டுப்பன்றித் தொடையை அனுப்பி வைத்த பிறகுதான் இரத்தின மாமாவின் கோபம் தணிந்தது. இப்படி உரிமைகளைத் தம் வயமாக்குவதற்கு இரண்டு மாமாக்களும் சமர் செய்யும்போது, அதன் விளைவுகள் அச்சுவேலியின் ஒவ்வொரு கல் வீட்டிலும் ஓலைக் குடிசையிலும் எதிரொலித்தன. மரபுவழிகளை மிகக் கவனமாகப் பேணும் ஒரு கிராமம்தான் அச்சுவேலி. கிராமத்து ஆண்கள் தங்கள் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். திருமண, மரண வீட்டு ஊர்வலங்கள் போகும் போது புழுதி பறக்கும் ஊர் வீதிகளில் விரிக்கும் வெள்ளைத் துணிகளை வழங்குவது ஊரிலுள்ள வண்ணாரின் உரிமை. அதை ஊர்த் துணிக் கடைக்காரர் செய்ய முனைந்தால் ஊர் பொங்கியெழுந்து தர்ம அடியிலோ கொலையிலோதான் முடிந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்குத்தான் திருமண ஊர்வலங்களில் மண் கலயங்களைக் காவிக்கொண்டு செல்லும் உரிமை இருந்தது. அவர்கள் மண்பானைகளுக்குள் ஊதி ஒரு ஆழமான ஒத்ததிரும் தொனியைக் கிளப்புவார்கள். ஒவ்வொரு சில அடிகளுக்குப் பிறகும் நகர்வதை நிறுத்திச் சில வெள்ளி நாணயங்கள் பானைக்குள் போடப்படும் வரை பொறுத்திருப்பார்கள். நகை வேலை செய்யும் உரிமை ஒரு விசேடமான தட்டார் சாதியினருக்கே. பனந்தென்னைகளில் ஏறிக் கள் இறக்கும் உரிமை இன்னொரு சாதியினருக்கு மட்டும்தான். அனேகமாக எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான முன்னுரிமை வரிசை பேணப்பட்டது. உதாரணமாக, இரண்டு கிராமக் குடும்பங்கள் கொண்டாட்டங்களில் முதலில் பாடும் உரிமையைப் பாரம்பரியமாக வைத்திருந்தன. வேறு யார் பாடகர்கள் இருந்தாலும் பரவாயில்லை, முதலில் ஒரு குடும்பம் பாடிய பிறகு அடுத்த குடும்பம் தொடரும். மிகவும் தாழ்த்தப்பட்ட ஒரு சாதியினருக்குத்தான் திருமண, மரண வீட்டு விருந்துகளில் எஞ்சியிருக்கும் உணவுகளைச் சேகரிக்கும் உரிமை இருந்தது. செத்துப் போன மாடுகளைக் கொண்டு செல்லும் உரிமை நளவர்களுக்கு மட்டும்தான். சில உயர்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டும்தான் காலணிகளை அணியும் உரிமை. இத்தகைய எழுதப்படாத விதிகளெல்லாம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்கப்பட்டன. இப்படியான ஒரு பாரம்பரியம் எங்கெங்கும் படர்ந்திருந்த ஒரு பின்னணியில்தான் மற்றப்படி நல்ல மனதுகொண்ட இரத்தின மாமாவும் ஆறு மாமாவும் தங்களுடைய உரிமைகளுக்காக மல்லுக்கட்டினார்கள். பண்பாடு, பாரம்பரியம் என்ற உணர்ச்சிகள் அவர்களிடம் மேலோங்கி நின்றன. வருங்காலத்தில் எந்தக் குடும்பம் ஊரில் முன்னின்று தழைத்தோங்கி வளரும் என்பது அப்போதே தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருந்தது. அதேநேரத்தில், போட்டிக்கு நின்ற இரண்டு குடும்பங்களுக்குமிடையில் ஒரு நிரந்தரமான பிணைப்பு வரப் போகிறது என்ற ஒரு கதை ஊரில் பரவலாகப் பேசப்பட்டது. இந்தக் கதை பரவிய கோடைகால விடுமுறையில் எனக்கு எட்டு வயதுதான் என்றாலும், குடும்பங்கள் இரண்டுக்கும் இடையில் நிலவிய இறுக்கமான பதற்றம் எல்லோருக்கும் போல எனக்கும் புரிந்திருந்தது. ஒருநாள் இரத்தின மாமா வீட்டு முற்றத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு மீன்காரி தன் பனையோலைக் கடகத்தைக் காவிக்கொண்டு வந்தாள். நிலத்தில் கடகத்தை இறக்கி வைத்துக் கவிழ்த்தாள். வழக்கம் போலப் பெரிதும் சிறிதுமாகப் பலவகை மீன்கள் அதிலிருந்து கொட்டுண்டன. சூறை, வாள்மீன், இறால், நண்டு, கணவாய், சிங்கி இறால், நெய்த்தோலி என்று பலவகை. வல்லையோ பருத்தித்துறையோ ஏதோ பக்கத்தூர்க் கடற்கரை மணல் வைரத்துகள்கள் போல இன்னும் அந்த மீன்களில் ஒட்டிக்கொண்டிருந்தன. மாமிக்கும் அவரது இரண்டு சமையற்காரருக்கும் துணையாக வேடிக்கை பார்க்க அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லோரும் ஓடிவந்தார்கள். சமையற்காரர்தான் இறுதி முடிவு எடுப்பவர் என்றாலும், மாமிக்கு முன்னால் வைத்தே பேரம் பேசினார்கள். சமையற்காரர் திருப்தியடைந்து சம்மதம் கொடுத்ததும் மாமியும் சம்மதம் தெரிவித்துத் தலை ஆட்டுவார். அந்தக் காலை வெளிச்சத்தில் மீன்கள் கைமாறக் கூட்டத்தின் கலகலப்பு ஏறிப் பிறகு இறங்கித் தணிந்தது. கொஞ்சம் கலகலப்பு அடங்கிய நேரம் மீன்காரி சட்டென்று மாமியைப் பார்த்து “ஆறு ஐயாவின்ர மகனைச் சுந்தரி அம்மாவுக்குப் பேசுறீங்கள் எண்டு பத்தர் சொன்னார்” என்றாள். எங்களது மைத்துனன் ராஜாவைப் பற்றித்தான் அவள் சொல்கிறாள் என்று அறிந்ததும் எனது காதுகளைத் தீட்டிக்கொண்டேன். இரத்தின மாமாவுக்கு மகன்கள் கிடையாது. சுந்தரி ஒரே மகள். பக்கத்தில் விருந்தினரை உபசரிக்கும் ‘சாலை’ என்ற கொட்டகையில் நின்றிருந்த சுந்தரி நாணத்துடன் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அவளுக்குப் பதினாறு வயது. இதுவரை அவளுக்கு நூறு தடவைகளாவது கல்யாண வரன் பேசி வந்த கதை கேட்டிருப்பாள். முதலாவது வரன் பேச்சு வந்த போது அவளுக்கு மூன்று வயது இருந்திருக்கலாம். அல்லது ஒரு வயதாகக் கூட இருந்திருக்கலாம். மாமி பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார். “பெடியன் நல்ல வடிவு” மீன்காரி, சுந்தரியைத் திரும்பிப் பார்த்தபடி இளம் பெண்களைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைப்பதற்குப் பேசும் தெவிட்டுகின்ற குரலில் தொடர்ந்தாள், “படிப்பிலும் கெட்டிக்காரனாம்.” சுந்தரி வெட்கத்துடன் கலகலவென்று சிரித்தபடி, கையில் போட்டிருந்த காப்புகள் கிணுகிணுக்கத் தன் சேலையைச் சரி செய்துகொண்டாள். “சாத்திரியார் பொருத்தம் பாக்கிறார்” மாமி ஒப்புக் கொண்டார். “பொருத்தம் எண்டால்தான் மிச்சம் எல்லாம் நடக்கும்.” “நீங்கள் ஒரு லட்சம் சீதனம் குடுக்கிறியளாம்! மாப்பிளைக்கு அது சரிதான். எப்பவோ ஒருநாள் அரசாங்க அதிபரா வந்திடுவார்” மீன்காரி, சுந்தரியைக் கடைக்கண்ணால் பார்த்தபடி தொடர்ந்தாள். மாமி பதிலேதும் சொல்லவில்லை. மீன்காரி கடகத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நழுவிப் போனாள். நகை செய்யும் ‘பத்தர்’தான் அச்சுவேலியின் செல்வந்தக் குடும்பங்களின் பாரம்பரியக் கல்யாணத் தரகர். ராஜாவுக்கும் சுந்தரிக்கும் திருமணப் பேச்சைக் கொண்டு நடத்துகிற இந்தத் தரகர் கொஞ்சம் அளவுக்கு மிஞ்சிப் புளுகிற, செருக்கு மிகுந்த, எப்போதும் குங்குமப் பொட்டு வைத்த, சிறிய, மாநிற மனிதர். அவரது தரகு வேலைத் திறமையும் எதையும் பேசி நிறைவேற்றி வைக்கக் கூடிய ஆற்றலும் அச்சுவேலிக்கு வெளியே கூடப் பேர் போனவை. தொலைவிலுள்ள திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற நகரங்களில் கூடக் கூலிக்குத் தரகு வேலை செய்து வெற்றி கண்டவர். மெல்லிய திசுக் காகிதத்தில் பென்சிலால் வரைந்த தனது நகை வடிவமைப்புகளைக் காவிக் கொண்டு நாடு முழுவதும் பயணம் செய்யும்போது, அவர் வயதுவந்த வாலிபர்களினதும் யுவதிகளினதும் படங்களையும் ஒரு கட்டாகக் கொண்டு செல்வார். தனது தரகுத் தொழிலைத் திறந்த மனப்பான்மையுடன் அணுகுபவர். ஒரு சாதாரண பெண்ணுக்குப் பெரிய சீதனத்தோடு -ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் – பேசுவதும், ஒரு அழகான பெண்ணுக்குச் சில ஆயிரங்களோடு பேசி முடிப்பதும் அவருக்கு ஒன்றுதான். தனது இரண்டு கலைகளையும் -தரகு வேலையையும் நகை செய்யும் பத்தர் வேலையையும் -ஒன்றிணைத்ததால் மிகப் பெரிய செல்வந்தராகி விட்டார். தரகு வேலைக்குச் சீதனத்தின் பத்து வீதத்தை அறவிடுவார். திருகோணமலைக்கோ கொழும்புக்கோ பயணம் செய்யும்போது, கையில் போட்ட தங்க வளைகாப்பும், விரலில் போட்ட வைர மோதிரமும், வேட்டிக்கு மேல் அணிந்திருக்கும் வெள்ளை ஐரோப்பிய மேலங்கியும் அவரது செல்வந்தத்தை உலகத்துக்குப் பறைசாற்றின. இரத்தின மாமா தன் மகளை ஆறு மாமாவின் மகனுக்குக் கைபிடித்துக் கொடுக்கப் பண்ணினால் அது இந்தப் பத்தரின் தரகு வேலையின் சிகரமாகி விடும். அன்று மாலை, காகங்கள் எல்லாம் முருங்கை, வேப்ப மரங்களில் சென்றடைய, வௌவால்கள் இலுப்பம் பழங்களை வேட்டையாடப் படையெடுக்கத் தொடங்கிய நேரத்தில், அச்சுவேலியின் எல்லா வீடுகளிலும் ஒரே செய்தியைப் பற்றித்தான் கதை நடந்தது. இரத்தின மாமா கிணற்றடி மாதுளை மரத்திலிருந்து ஆறு பழங்களை ஆறு மாமா வீட்டுக்கு அனுப்பிவைத்தாராம் (இதற்கும் பிறகு நடந்ததற்கும் தொடர்பு ஏதாவது இருந்ததா என்று நான் பிறகு யோசித்ததுண்டு). பத்தரின் தரகு வேலையால் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. திருமண நாளுக்கு முதல் நாள் மாலை சீதனப் பேச்சு முடிவுற்றுச் சீதனம் மாப்பிள்ளையிடம் கையளிக்கப்படும். திருமண நாள் அருகே வர, இரத்தின மாமாவின் வீட்டில் வேலைகள் மும்முரமாக நடந்தன. பச்சையும் மஞ்சளுமான தென்னோலைகளால் வேயப்பட்ட கிடுகுகளால் பந்தல்கள் கட்டப்பட்டுக் கொன்றை, சம்பங்கி, வெள்ளையும் இளஞ்சிவப்புமான செவ்வரளி, செம்மஞ்சள் நிறத் தென்னம்பூ போன்ற பலவகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டன. கூரைக்குக் கீழே வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டன. தரையில் இந்தியக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. ஒரு பந்தலில் மிகையாக அலங்கரிக்கப்பட்ட கூரைக்குக் கீழே உயர்த்தி வைக்கப்பட்ட திண்ணைதான் மணவறை. அதிலே நண்பர்களோடு மணமகன் அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னால் ஒரு பித்தளைக் குடத்தின் மேல் வெற்றிலைகளும், மஞ்சள் எலுமிச்சம் பழமும், பூக்களும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அவை மகப்பேற்றுக்கான சின்னங்கள். இரத்தின மாமா காசியிலிருந்து கையால் நெய்யப்பட்ட சரிகை வேலைப்பாடுள்ள கூறைப்புடவை ஒன்றைக் கொண்டுவர ஒழுங்குபடுத்தியிருந்தார். குங்கும நிறத்தில் மின்னிய அந்தப் புடவையின் விலை அந்தக் காலத்திலேயே மூவாயிரம் ரூபாய். வளவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து உள்ளூர்த் தவில் வாத்தியக்காரரைத் தவிர, தஞ்சாவூரிலிருந்து இரண்டு சங்கீதக் கோஷ்டிகளை வீட்டுக்குள் கச்சேரி வைக்கக் கொண்டுவந்திருந்தார். ஒவ்வொரு விருந்தினரின் வருகையையும் வாசற் தவில்காரர் அறிவிக்க, சிறுவர் குழாம் சீனப்பட்டாசு வெடிப்பதற்கு ஓடிப் போக, உள்ளேயிருக்கும் ஒரு சங்கீதக் கோஷ்டி கச்சேரியை ஆரம்பிக்க, மக்கள் கையிலிருக்கும் எல்லா விதமான ஆயுதங்களாலும் வெடிவைத்துக் கோலாகலமாக விருந்தினர்களை வரவேற்பார்கள். ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் திருமணப் பரிசுகள் ஊர்வலமாக வந்தபடி இருந்தன. இரண்டு பேர் சுமக்கும் ஒரு தடியின் இரண்டு பக்கமும் தொங்கும் வாழைக் குலைகள், இலுப்பெண்ணை, நல்லெண்ணைச் சாடிகள், கால்நடைகள், கோழிகள், அரிசி மூட்டைகள், சாராயப் போத்தல்கள், சுருட்டுப் பெட்டிகள், கத்தரி, பலா, முருங்கை போன்ற காய்கறிகள், மாம்பழம், பப்பாசிப்பழம், ஜம்பு போன்ற பழவகைகள். கொஞ்சம் வறிய மக்கள் திருமண விருந்துக்குச் செய்யப்படும் கறிகளுக்குக் கூட்டுச் சேர்ப்பதற்காகத் தேங்காய்களை அனுப்பி வைத்தார்கள். திருமணத்துக்கு முதல் நாள் ஒருவர் மாமரத்துக்குக் கீழே உட்கார்ந்தபடி மணித்தியாலக் கணக்காக நெற்றியில் பொட்டாக அணிவதற்காகச் சந்தனம் அரைத்துக்கொண்டிருந்தார். அரைத்த சந்தனம் வெள்ளிப் பேழைகளில் போடப்பட்டு விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்குப் பன்னீர் தெளித்த பிறகு, சந்தனப் பொட்டு போடுவதற்காக நீட்டப்படும். வெளியே மாந்தோப்பில் மூன்று கல் வைத்த அடுப்புகளில் பென்னாம்பெரிய கிடாரங்கள் சோறு கறி சமைப்பதற்காக வைக்கப்பட்டன. திருமணத்துக்கு முந்நூறு விருந்தினராவது வருவார்கள். அதைத் தவிர, தாழ்த்தப்பட்ட சமூக வேலையாட்களுக்கும் மிஞ்சிய உணவு வழங்கப்படும். அது எல்லா விருந்துகளின் பின்னரும் நடக்கும் பாரம்பரிய வழக்குமுறை. முதலில் பெண்கள் ஆண்களுக்கு உணவு பரிமாறுவார்கள். அதற்குப் பிறகு பெண்களும் வேலையாட்களும் சாப்பிடுவார்கள். அதற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்து வேலையாட்களுக்குப் புளியந்தோப்பிலோ மாந்தோப்பிலோ உணவு வழங்கப்படும். ஏனென்றால் அவர்களுக்கு வீடுகளுக்குள் வர அனுமதி கொடுப்பதில்லை. ஒரு தேர்ந்த பரிசுக் கிடாய் ஆடு வெட்டப்பட்டது. பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டன. சலவைக்கார வண்ணார் ஊர்வலம் செல்வதற்கு விரிப்பதற்காகக் கட்டுக் கட்டாக வெள்ளைத் துணி கொண்டுவந்தார். இரண்டு யானைகள் பாகர்களோடு வந்தன. மாப்பிள்ளையும் பெண்ணும் அவற்றில்தான் கோவிலுக்குப் போய் வருவார்கள். பக்கத்து ஊர் சங்கீதக் கோஷ்டிகளெல்லாம் அருகில் கூடாரம் போட்டிருந்தார்கள். சாத்திரியார், வழக்கறிஞர், பத்தர் அவர்களோடு ஆறு மாமா பிற்பகல் நேரம் வருவார். அப்போதுதான் சீதனம் பேசி நிர்ணயிக்கப்படும். இரத்தின மாமா முற்றத்தில் ஒரு மேசைக்கருகே உட்கார்ந்திருந்தார். மேசையில் ஒரு கிண்ணத்தில் மாதுளங்கொட்டைகளும் அதற்கருகே ஒரு போத்தல் சாராயமும் வைக்கப்பட்டிருந்தன. நானும் என் ஐந்து சகோதரர்களும் இரத்தின மாமாவைச் சுற்றி முண்டியடித்துக்கொண்டு நின்றோம். அவர் சிவப்பும் தங்கமுமாகச் சரிகை வைத்த தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடைய மேலங்கி முழங்கால் வரைக்கும் தொங்கியது. மேலே கழுத்துவரைப் பொத்தான் போடப்பட்டிருந்தது. அடிக்கடி கொஞ்சம் மாதுளங்கொட்டைகளை வாய்க்குள் போட்டு, ஒரு மிடறு சாராயமும் குடித்தார். பத்தர் சாத்திரியாருடன் வந்து சேர்ந்தார். “இருங்கோ” என்று சொன்ன இரத்தின மாமா “எங்கே இந்த ஆறு? தாமதமாப் போச்சு…” என்று கேட்டார். “கெதியா வந்திடுவார்” என்று பத்தர் தேற்றினார். இரத்தின மாமா பொறுமையில்லாமல் மேசையில் விரல்களால் தாளம் போட்டார். இன்னும் கொஞ்சம் சாராயம் குடித்தார். தட்டாருக்கோ சாத்திரியாருக்கோ சாராயம் கொடுத்து உபசரிக்கவில்லை. சாதி ஒழுங்குமுறையில் அவர்களுக்கு உட்காரும் தகுதி வழங்கப்பட்டிருந்தாலும் சேர்ந்து உண்பதற்கோ குடிப்பதற்கோ தகுதி வழங்கப்படவில்லை. இரத்தின மாமா சிந்தனையில் மூழ்கியிருந்தார். இன்றைய தினம் அவரது செல்வத்தின் பெரும்பகுதியைக் கொடுத்து விடப் போகிறார். தனக்கென்று இருந்த வீட்டையும் கொஞ்சம் வருமானத்துக்காக ஒருசில வயற்காணிகளையும் மட்டும்தான் வைத்துக்கொள்ளப் போகிறார். சீதனம் கொண்டு வருவதற்கு யாராவது மகன் இருந்திருந்தால் அவரை இது இவ்வளவாகப் பாதித்திருக்காது. கடைசியில் ஆறு மாமா ஒரு வழியாக வந்து சேர்ந்தார். வெள்ளைத் தலைமுடி குடுமியாகப் போடப்பட்டு, உருக்கி வார்த்தது போல இருந்த அவரது காதுகளில் கடுக்கன் தோடுகள் தொங்க, மிகவும் ஒல்லியாக மிடுக்காக இருந்தார். அவரும் முழங்கால் வரைக்கும் கறுப்பு நிற மேலங்கி அணிந்திருந்தார். “இதைக் கெதியா முடிப்பம்” என்றார் இரத்தின மாமா. “சரி, சரி” என்றபடி உட்கார்ந்த ஆறு மாமா, ஒரு சின்ன வெள்ளி உரலையும் உலக்கையையும் பையிலிருந்து எடுத்து அதற்குள் கொஞ்சம் வெற்றிலை பாக்கைப் போட்டு இடிக்க ஆரம்பித்தார். இரத்தின மாமா தாழ்த்திய குரலில் பேச ஆரம்பித்தார். “சகுனங்கள் எல்லாம் சரியாம். சாதகமும் நல்ல பொருத்தம் எண்டு சாத்திரியார் சொல்லுறார்.” எனது இருதயம் அடிக்கும் சத்தம் எனக்குக் கேட்டது. ‘சகுனம்’ என்ற சொல் ஏதோ பயங்கர மர்மங்களின் ஆட்டங்களை நினைவுக்குக் கொண்டுவந்தது. “அப்பிடித்தான் கேள்விப்பட்டன்” வெற்றிலை பாக்கை இடித்தபடி ஆறு மாமா சொன்னார். விருந்தினர் பந்தலில் பெண்கள் பரிவாரம் சூழ நின்ற சுந்தரியைக் கண்டேன். எல்லோரையும் போல அவளுக்கும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிறைந்திருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி நாணமும் தன்னடக்கமும் கொண்டவளாய் நின்றாள். வழக்கறிஞர் கை நிறைய வீடு – காணி உறுதிகளைத் தூக்கிக் கொண்டு முற்றத்துக்கு வர, இரத்தின மாமா அவற்றைக் கையில் வாங்கிக்கொண்டார். “சுன்னாகத்து வயல் காணி எல்லாவற்றையும் எனது மகளுக்கு எழுதிவிடப் போகிறேன்” என்று இரத்தின மாமா ஆறு மாமாவைப் பார்த்துச் சொன்னார். “தவறணைக்குப் பின்னாலே உள்ள போயிலைக் காணி எப்பிடி?” ஆறு மாமா கேட்டார். “அதுவும் அவளுக்குத்தான்” என்றார் இரத்தின மாமா. ஆறு மாமா தொடர்ந்து வெற்றிலை பாக்கை இடித்துக்கொண்டிருந்தார். “அது இரண்டுக்கும் இருபத்தையாயிரம் பெறுமதி” இரத்தின மாமா தொடர்ந்தார் “ஐம்பதாயிரம் காசாக. மிச்சத்துக்கு இந்தக் காணியில் ஒரு பங்கையும் பக்கத்து வீட்டையும் குடுக்கிறன். வா, எல்லைக் கோட்டைக் காட்டுறன்.” அத்துடன் அவர்கள் எழுந்து கிணற்றடி நோக்கிப் போனார்கள். நானும் எனது சகோதரர்களும் பின் தொடர்ந்தோம், மற்ற வீட்டுக்காரர்களும் கூட்டமாகத் தொடர்ந்தார்கள். இரத்தின மாமா கிணற்றடியில் நின்று, மாதுளந்தோப்பின் நடுவே வளர்ந்திருந்த ஒரு மாமரத்துக்கு அப்பால் சுட்டிக் காட்டி “இதுதான் எல்லை” என்றார். “ஓ” என்றார் ஆறு மாமா. “பக்கத்துக் காணிக்குக் கிணறில்லாட்டி என்ன பிரியோசனம்? இரத்தின மச்சான், எல்லைக் கோட்டைக் கிணத்துக்கு நடுவால போடு. அப்பிடியெண்டா பக்கத்துக்கு வீட்டுக்குத் தண்ணி உரிமை இல்லாமல் போகாது.” இரத்தின மாமாவின் முகம் கறுத்தது. தனக்குப் பிரியமான மாதுளை மரத்தை ஏறிட்டுப் பார்த்தார். சீதனக் காணிக்குக் கிணற்றுக்கு நடுவில் எல்லைக் கோடு போட்டால், அந்த மரம் இனி அவருக்குச் சொந்தமில்லை. “கிணறு பாவிக்கிற உரிமையை எழுதித் தாறன்” இரத்தின மாமா சொன்னார், “ஆனால் எல்லைக் கோடு மாமரத்தடியோட போகட்டும்.” “நியாயமில்லாமல் கதையாத” ஆறு மாமா பதில் சொன்னார், “கிணத்துக்குள்ளால எல்லை போகட்டும். அதுதான் இலகுவான தீர்வு.” “இல்லையில்லையில்லை!” இரத்தின மாமா பிடிவாதத்துடன் முகத்தைக் கோணினார். பத்தர், இரத்தின மாமாவின் காதுக்குள் ஏதோ குசுகுசுத்தார். அது இரத்தின மாமாவை மிகவும் குழப்பிவிட்டது. பத்தர் பிறகு ஆறு மாமாவின் பக்கம் திரும்பி ஏதோ சொன்னார். “நான் சொல்லுறதைக் குறை நினைக்காத இரத்தி… கிணறு அல்லது கிணத்தின் பாதி என்ர மகனுக்கு வாற காணியில கட்டாயம் இருக்க வேணும்” ஆறு மாமா சொன்னார். பத்தர் மீண்டும் இரத்தின மாமாவின் காதில் ஏதோ குசுகுசுத்தார். இரத்தின மாமா “இல்லை!” என்று அடித்துச் சொல்லிவிட்டார். பத்தர், ஆறு மாமாவின் பக்கம் திரும்பி சலாம் போட்டுவிட்டு “கிணத்தில என்ன இருக்கு? நீங்கள் எப்ப வேணுமெண்டாலும் இன்னுமொரு கிணத்தைக் கிண்டிப் போட்டுப் போகலாம்” என்றார். “நான் கேட்ட மாதிரி எல்லைக் கோடு போடாட்டில்…” ஆறு மாமா தனது உரிமைகளைப் பாதுகாக்கும் கறாரான தொனியில் சொன்னார், “இந்தக் கலியாணம் நடக்காது!” “ஐயா! ஐயா!” பத்தர் கைகளைப் பிசைந்தபடி கெஞ்சினார். “மடையன்!” என்று இரத்தின மாமா முணுமுணுக்க, ஆறு மாமா திகைத்துப் போனார். இலங்கையில் ‘மடையன்’ என்று சொல்வது பெரிய அவமரியாதை. “சுத்த மடையன்” என்று திரும்பவும் சொன்ன இரத்தின மாமா, “பாழாப்போன கலியாணம்!” என்று சொல்லிவிட்டுத் தோப்புக்கூடாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சீதனப் பேச்சுவார்த்தை குழம்பியதால் திருமணம் நிறுத்தப்பட்டது. பந்தல்களும் தோரணங்களும் அவிழ்க்கப்பட்டன. அன்றிரவு சாப்பிடும்போது “அந்தப் பிசாசு! அவன் என்ர கிணத்தடி மாதுளையைத்தான் கண் வச்சான்!” என்று இரத்தின மாமா கத்தினார். அடுத்த நாள், மலாயாவில் பெரிய தோட்டம் வைத்திருந்த தன் மைத்துனருக்கு அவரின் மகனுக்கும் சுந்தரிக்கும் கல்யாணம் பேசிக் கடிதம் அனுப்பினார். இரண்டு வாரத்துக்குள் மாப்பிள்ளை வந்து சேர்ந்தான். திருமணம் கோலாகலமாக நடந்தது. யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒரு மின்னியற்றி இயந்திரம் வாடகைக்கு எடுத்து வீட்டைச் சுற்றியும் மரங்களுக்கு மேலும் வண்ண மின்சார விளக்குகளெல்லாம் போட்டு அமர்க்களம் பண்ணிவிட்டார். இந்த விளையாட்டெல்லாம் ஆறு மாமாவைப் பிரமிக்க வைக்கத்தான். ஆறு மாமா திருமணத்துக்கு வருகை தரவில்லை. ஆனால், கொஞ்ச நாள் போனதும் இரத்தின மாமாவுக்குக் காட்டுக் கோழியும், காட்டுப் பன்றித் தொடைகளும், மான் இறைச்சியும் வழக்கம் போல வேட்டைக்குப் பின்னர் அனுப்பி வைக்கத் தொடங்கினார். ராஜாவுக்குக் கல்யாணப் பேச்சு நேரம் சுந்தரிமேல் காதல் பிறந்து விட்டதால், பல வருடங்கள் கல்யாணம் வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்றான். பிறகு ஒருநாள் ஒரு கொழும்புப் பெண்ணைச் சந்தித்ததும் மனம் மாறிவிட்டான். அவளுக்குப் புத்தளத்தில் பெரிய தென்னந்தோப்புகள் இருந்தன. அவள் டென்னிஸ் விளையாடுவாள். கார் கூட ஓட்டத் தெரியும். அவள் உதட்டுச் சாயம் பூசி, கையில்லாத ரவிக்கையும் அணிந்ததைப் பார்த்து ஊரார் திகைப்பில் ஆடிப் போய்விட்டார்கள். ஆனால் அவள் ஆறு மாமாவின் வயதான காலத்தில் நல்ல மருமகளாக அவரைச் சந்தோஷமாக வைத்திருந்தாள். அவளுக்காக வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு டென்னிஸ் மைதானத்தையே ஆறு மாமா கட்டிக் கொடுத்தார். ஆனால் அவளுக்கு மூத்த மகன் பிறந்த கையோடு அவளது டென்னிஸ் ஆர்வம் விட்டுப் போயிற்று! இரத்தின மாமா இறந்தபோது, எனக்குப் பத்து வயதுகூட இல்லை. ஆனால் வேலைக்காரி ஒரு கிண்ணத்தில் கிணற்றடி மாதுளைமரத்தின் பழக் கொட்டைகளைக் கொண்டு வரும்போது அவரது வட்டமான, சுருக்கமில்லாத முகத்தில் மலரும் மகிழ்வு எனக்கு இப்போதும் கண் முன்னால் தெரிகிறது. அந்த மரம் அச்சுவேலி முழுக்கப் பிரபலமான மரமாக இருந்தது. இன்னும் இருக்கிறது. Artist : Arpitha Reddy எழுத்துக்கினியவன் என்ற புனைபெயரில் மொழியாக்கங்கள் செய்துவரும் ந.அசோகன் தமிழ் – ஆங்கிலம் என இருவழிகளிலும் மொழியாக்கங்களைச் செய்து வருகிறார். இவரது ஆங்கில மொழியாக்கங்கள் Copper Nickel, Lunch Ticket, Jaffna Monitor ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ் மொழியாக்கங்கள் காலச்சுவடு, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது ஆங்கில மொழியாக்கமொன்று Gabo Prize-க்கான இறுதிப் பட்டியலில் தேர்வானது. https://thadari.com/the-pomegranate-tree-t-tambimuttu-short-story/?fbclid=IwdGRleAPHMyRleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeCFdVxcuG8DMvh6BM5WiRfhB9f2VThtnfL0rsSEfZH3RPMi9z_Vw_uwQTi2Y_aem_tH25YO_Qwhrh963g_Z5J3w
  19. தனித்துவம் மிக்க ஓவியக் கலைஞர் ஓவியங்கள் - கதைகளுக்கு உயிர்த் துடிப்பை ஊட்டுவதோடு கதை சித்திரிக்கும் பாத்திரம், பகைப்புலம், காட்சிகளை வாசகர் மனதில் பதியவும் செய்கிறது என்பதில் தவறிருக்க முடியாது. சிலவேளை எனது கதைகளுக்கு வரையப்பட்டுள்ள படங்களைப் பார்த்துக் கொண்டு அதில் நான் ஒன்றிப்போய் விடுகின்றேனென்றால் அது ரமணியின் படங்களில் தான். இப்படிச் சொல்லும் போது ஒரு ஓவியன் எவ்வளவு தூரம் வெற்றியடைகின்றானென்பதை, அப்படைப்பாளியால் தான் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும் என்ற உண்மையை யாரும் மறுக்க மாட்டார்களென்றே நினைக்கிறேன். அப்போதெல்லாம் யார் இந்த ஓவியர் ரமணி? பெரிய பத்திரிகை நிறுவனங்களில் கொழுத்த சம்பளத்துடன் கடமையாற்றுகின்றவரோ! என்ற எண்ணம் தவிர்க்க முடியாது ஏற்பட்டதுதான்! அன்று......... பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் முதல் வருட மாணவனாகப் பிரவேசித்த முதலாம் நாள் - முன்பே தெரிந்த சில நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போதுதான், புன்னகை சிந்திய படி சாந்தம் ததும்பும் அந்த உருவம் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. 'இவர்தான் ரமணி இவரது சொந்தப் பெயர் வி. சிவசுப்பிரமணியம்' அறிமுகப் படலம் நடக்கிறது. திறமையில் மாத்திரமல்ல வயதிலும் முதிர்ந்தவர் தானென்று எனது எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. மகிழ்ச்சித் துடிப்பில் அந்த ஆற்றல் மிக்க கரத்தை என்னால் விட்டு விட முடியவில்லை. அவருடைய அனுபவங்களையிட்டுக் கதைக்க வேண்டும் போலவும் இருந்தது. ஆயினும் இனித் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பு முழுமையாக இருக்கிறது தானே என்பதால் கூடவே ஒரு நிம்மதி. 'காலையில் இருந்தே எதிர் பார்த்திருந்தனான்' இதுதான் முதன் முதலில் என் செவிகள் சந்தித்த ரமணியின் குரல். முதல் வருட மாணவர்களை, பழைய மாணவர்கள் - ஆசிரிய கலாசாலை. பல்கலைக் கழகம் முதலிய இடங்களில் எதிர்பார்ப்பது எதற்காகவென்று தெரியும்தானே..........? அத்தகைய முதன்மைத் திமிர்களைத் தாண்டிய அக்குரலில் ஒரு புலமை நெஞ்சின் துணை முதல் நாளிலேயே கிடைத்துவிட்ட பூரிப்பு எனது மெய்யெல்லாம் பரவியது. அதைத் தொடர்ந்து எந்த வேளையிலென்றாலும் எத்தனை முறையென்றாலும் தனக்கேயுரித்தான புன்னகையை உதிர்த்த படிதான் செல்வார். நானும் கூட எப்பொழுது கலாசாலை நேரத்தில் ஓய்வு கிடைக்கிறதோ, அப்பொழுது நுண்கலைப் பகுதியை ஒருமுறை நோட்டம் விட்டு, அங்கும் பாடவேளையில்லாமலிருந்தால் ரமணியை நெருங்கி விடுவேன். நண்பர் அன்பு ஜவஹர்ஷாவும் கூடவே வந்து விடுவார். பிறகென்ன? பரஸ்பரம் கருத்துப் பரிமாறல்களும் அனுபவ வெளிப்பாடுகளும் தான். கொழும்பிலிருந்த காலத்தில் சில பத்திரிகாசிரியர்கள் நாலைந்து கதைகளைத் தூக்கித் தந்து, விருப்பமானதொன்றுக்குப் படம் கீறித் தருமாறு தந்துவிடுவதாகவும் இதனால் மிகுந்த ஆர்வத்துடன் அனுப்பும் குறிப்பாக இளம் எழுத்தாளர்களின் நிலையை எண்ணிப் பார்க்கத் தவறுகிறார்களென்றும் அவர் சொல்லும் போது, ஒரு பத்திரிகாசிரியன் எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற கருத்தை ரமணி அனுபவ வாயிலாகச் சொன்னது இன்று கூட பத்திரிகாசிரியர்களுக்குப் பொருத்தமானதுதான். இன்று நேற்றல்ல, கடந்த பத்தாண்டுக்காக ஓவியத் திறமையை, பத்திரிகைத் துறையோடு பிணைத்துப் பணிபுரிந்து வரும் இவர் இதுவரை சுமார் நூறு புத்தகம், சஞ்சிகைகளுக்கு அட்டைப்படம் வரைந்துள்ளார். அநேகமாக எல்லா ஈழத் தமிழ் தேசியப் பத்திரிகைகளிலும், 'தவச', வீரகேசரி வெளியீடுகளிலும் படம்வரைந்து வருகின்றார். குறிப்பாக நவீன பாணித் தமிழ் எழுத்துக்களையும் பத்திரிகை, சஞ்சிகைகளில் அறிமுகப்படுத்தியதும் ரமணி என்றே சொல்ல வேண்டும். இதை எழுதும் போது, அண்மையில் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட 'பூ' ஞாபகம் வருகின்றது. அதன் உள்ளடக்கத்தைப் பாராட்டியவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமானோர் நேரிலும் கடிதமூலமும் அதன் அட்டையைத்தான் பாராட்டினார்கள் என்ற செய்தி இதைப் படித்த பின்புதான் ரமணிக்குக் கூடத் தெரியவரலாம். 'பஞ்சமர்' வெளிவந்த புதிதில், அதன் அட்டையைப் பார்த்தவுடனே ஒருவர்... 'ஏன் இந்த முகங்கள் இவ்வளவு ஆவேசமாக இருக்கின்றன?' என்று கேட்டதாக மன்னார் நண்பரொருவர் சொன்னார். 'போராட்ட உணர்வு கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களை டானியல் சித்திரித்துள்ளார். அதைத் தானே ரமணி அட்டையில் தீட்டியுள்ளார்' என்று அவரிடம் கேட்டேன் நான். அதிகமேன் கடந்த பல வருடங்களாக 'மல்லிகை' அட்டையை அலங்கரித்து வருவது இவரது நவீன படங்கள்தானே. 'மல்லிகை அட்டையா? அது ரமணிதான் வரைய வேண்டும்' என்று திரு. டொமினிக் ஜீவா வாய்விட்டுச் சொல்வார். 'ஈழத்தின் முதல் தரமான ஓவியர்' என்று ஓவியக் கலைஞரான 'சிரித்திரன் - சுந்தர்' கூடப் பலதடவை மனந் திறந்து கூறியுள்ளார். இத்தனைக்கும் இவர் ஒரு சிற்பக் கலைஞரும் கூட என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம். என்ன இருந்தாலும் இங்கு கலைஞர்களுக்கு ஏற்ற சன்மானங்களும் கௌரவங்களும் அளிக்கப்படுவதில்லையென்ற உண்மையை 'சில வேளை நான் அட்டை வரைந்த புத்தகங்களை நானே வாங்கிப் பாதுகாக்க வேண்டியுள்ளது' என்று கூறும் பொழுது அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலைமை எப்போதுதான் மாறுமோ? ஒருநாள் கையில் 'கணையாழி' யுடன் நடந்து கொண்டிருந்தேன் நான். எதிர்ப்பக்கமாக சைக்கிளில் வந்தவர், நிறுத்தி இறங்கி என் கையிலிருந்த சஞ்சிகையை வாங்கி அட்டைப் படத்தைப் பார்த்தவர் 'இத்தகைய நவீன ஓவியங்களை ஈழத்துச் சஞ்சிகைகளும் வெளியிட வேண்டும். இத்தகைய படங்களை வாசகர்கள் இரசிக்கச் செய்ய வேண்டுமல்லவா?' என்று கேட்டவாறே பக்கங்களைப் புரட்டத் தொடங்கினார். இடையிடையே அவரது கவனம் புதுக்கவிதைகளில் படிவதை நான் அவதானிக்கத் தவறவில்லை. 'ஆழமான விடயங்களைக் கூட மிக அழகாகப் புதுக்கவிதைகளில் எழுதுகிறார்கள். ஈழத்தில் கூட நிறைய வெளிவருகின்றன' என்று தனது கருத்தைக் கூட அப்போது கூறி வைத்தார். இயற்கையான கலைத்துவம் கொண்ட ரமணி அத்தோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. நுண்கலைகளைக் கல்லூரியில் பயின்று, தனது ஆற்றலை நெறிப்படுத்தி 'டிப்ளோமா இன் ஆர்ட்' இல் முதற்தரத்தில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து, தேசிய நூதன சாலையில் தயாரிப்பு உதவியாளராக மூன்று வருடம் கடமையாற்றியுள்ளார். மல்லாகத்தில் வசிக்கும் இவர் தற்பொழுது ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்தில் விசேட ஆசிரியராகப் பணிபுரிகிறார். ரமணியிடமிருந்து கலையுலகம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பு நிச்சயம் வீண் போகாது என்றே நம்புகிறேன். - திக்குவல்லை கமால் (மல்லிகை அட்டைப்பட ஓவியங்கள் - மார்ச் 1974)
  20. ஏராளனின் அத்தனை பகிர்வுகளும் அருமை .ரசித்தோம் . நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக
  21. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 86 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 86 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மகாவம்சத்தின் 22 ஆம் அத்தியாயத்தின் [காமனி ஜனனம்] 13 முதல் 22 வரையிலான வசனங்களில் விஹாரா தேவியை சுற்றி ஒரு அபத்தமான கதை சுழல்கிறது. கோதாபயனின் மகன், காகவண்ண தீசன் என்று அழைக்கப்பட்ட இளவரசன், தந்தையின் மரணத்திற்குப் பிறகு அங்கு ஆட்சி செய்தான். நம்பிக்கையுள்ள இந்த அரசனுடைய மனைவியின் பெயர் விகார தேவி ஆகும். கல்யாணி மன்னன் தீசனின் மகளான அவள், உறுதியான நம்பிக்கையுடையவள் ஆகும். தீசனின் தம்பி ஐய உதிகன் என்பவன் ராணியைக் காதலித்ததால் தீசனுடைய கோபத்துக்குள்ளாகி, பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டான். அவன் ஒளிந்து கொண்டிருந்த பிரதேசத்துக்கு, பின்னாளில் அவன் பெயரே இடப்பட்டது. ராணிக்கு இரகசிய மடல் ஒன்றைப் பிக்கு வேடம் அணிந்த ஒருவனிடம் அவன் கொடுத்து அனுப்பினான். அவன் அரண்மனை வாயிலில் நின்று கொண்டு, வழக்கமாக அரண்மனையில் உணவு கொள்ளும் தேரர் ஒருவருடன், அவர் அறியாமலே, உள்ளே நுழைந்து விட்டான். தேரருடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தியதும், அரசனுக்குப் பின்னே தன்னைக் கடந்து செல்லும் ராணியின் கண்ணில் படும்படியாக அந்த மடலைத் தரையில் போட்டான். சத்தம் கேட்டுத் திரும்பிய அரசன் கண்ணில் இது பட்டுவிட்டது. மடலை எடுத்துப் படித்த அவன் கோபத்தால் சீறினான். கோபத்தில் சிந்தித்துப் பாராமல் தேரரையும், அவருடன் இருந்த வேடதாரியையும் கொன்று கடலில் எறியச் செய்து விட்டான். இதனால் கோபமடைந்த கடலரசன் பொங்கினான். அதனால், நாட்டுக்குள் கடல் புகுந்தது. உடனே அரசன் தன்னுடைய அழகிய பெண்ணான, இளவரசி தேவி என்பவளை ஒரு பொற்கலத்தில் வைத்தான். கலத்தின்மீது அரசகுமாரி என்று பொறிக்கப் பட்டிருந்தது. அதை அப்படியே அதே கடலில் விடச் செய்தான். அந்தக் கப்பல் இலங்கை விகாரத்துக்கருகே கரையில் ஒதுங்கியது. அரசன் காகவனதீசன் அவளைக் கண்டு தன் ராணியாக்கினான். இதனால் இவளுடைய பெயருக்கு முன் விகார என்ற அடைமொழி வந்தது. ஆகவே மேற்கண்ட மகாவம்ச கதையில் மன்னர் ஒரு துறவியைக் கொல்கிறார், இது கடல் கடவுளின் கோபத்தை எழுப்புகிறது, அது நாட்டை மூழ்கடிக்க வெள்ளத்தை ஏற்படுத்தியது என்றாகிறது. இராசாவலிய, அந்த கடல் கடவுளை மணிமேகலை [Mannimehala] என்ற தமிழ்ப் பெயரால் அடையாளம் காட்டுகிறது. ஆனால், மகாவம்ச, மகாநாமா அந்த தமிழ்ப் பெயரையோ அல்லது கடல் கடவுளின் பெயரையோ குறிப்பிடவில்லை. இரண்டு பழம் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவற்றில், கடலின் தெய்வம் மணிமேகலை ஆகும். இந்த இரு தமிழ் காவியங்களும் தீபவம்சத்துக்கும் முன்னையது ஆகும். தமிழ் இலக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ள இதே போன்ற கடல் பிரளயம் [sea deluge] உள்ளது. விகாரா தேவி ஒரு தங்கப் பாத்திரத்தில் வைக்கப்பட்டு கடலில் மிதக்க விடப்பட்டார். தமிழ் வீரனைக் கொன்ற வாளில் இருந்து இரத்தக்கறை படிந்த தண்ணீரைக், ஒரு தமிழ் வீரனின் துண்டிக்கப்பட்ட தலையில் தனது ஒரு காலை வைத்துக் கொண்டு குடிக்க வேண்டும் என்று ஒரு கொடூரமான ஆசையை விகாரா தேவி கொண்டிருந்தார். போர் இல்லாத நேரத்தில் அவள் தனது இந்த கொடூரமான தாகத்தைத் தணித்தாள்; அத்தியாயம் 22 இன் 55 முதல் 58 வரையிலான வசனங்களைக் காண்க. ' ........ அரசன் இதையறிந்ததும், அவனைப் பிடிப்பதற்காகத் தன்னுடைய முதல் வீரனை அனுப்பினான். குதிரையில் ஏறிக் கொண்டு இவ் வீரன் அவனைத் தொடர்ந்தான். குதிரை மேலிருந்தவாறே வேலு சுமணன் காட்டில் மறைந்து கொண்டு, துரத்தி வந்தவன் அருகில் நெருங்கிய போது வாளை நீட்டினன். குதிரைமீது வேகமாக வந்த அவனுடைய தலை துண்டுபட்டுக் கீழே விழுந்தது. குதிரையையும் வீரனுடைய தலையையும் எடுத்துக் கொண்டு, வேலு சுமணன் அன்று மாலையே மகாகாமத்தை [Mahagama] அடைந்தான். ராணி விரும்பிய வண்ணம் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டாள். அரசன் வேலு சுமணனுக்கு (அவன் செய்த சேவைக்கு) ஏற்ற பரிசுகளை அளித்துக் கெளரவித்தான்.' - இவள் தான் தன் இரண்டு மகன்களையும் வடிவமைத்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது? Part: 86 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 A ridiculous tale is spun around Vihara Devi in the verses 13 to 22 of Chapter 22 of the Mahavamsa. The king kills a monk in the above tale which arosed wrath of the sea-god and deluge took place to inundate the country. Rajavaliya identifies the sea-god as Mannimehala, a Tamil name, and Mahanama did not want to keep the Tamil name and did not name the god. In the two Tamil epics, the Silapathikaram and the Mannimegalai, the goddess of sea is Mannimegalai. There is a similar sea deluge described in Tamil literature. Vihara Devi was put on a golden vessel and let to drift in sea. Vihara Devi is also a Naga princess. Vihara Devi had a cruel desire to drink the blood stained water from the sword, which was used to slain Damila soldier while putting one of her legs on the severed head of the Damila soldier. She did quench her cruel thirst during the time of no war; see verse 55 to 58 of Chapter 22. This is the woman who moulded her two sons. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 87 தொடரும் / Will follow துளி/DROP: 1985 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 86] https://www.facebook.com/groups/978753388866632/posts/33225259250455961/?
  22. இந்த போர்மூலாவின்படி பார்த்தால் உலக ஒழுங்கு பிழைத்துவிடும்.
  23. கிறீன்லாந்துக்கு அண்மையாக டென்மார்க்கைவிட அமெரிக்காவே உள்ளது. எனவே இது அமெரிக்காவுக்கே சொந்தம் என்கிறார்கள்.
  24. அப்படியானால் தமிழர் போராட்டத்தை நடத்தியவர்களில் பலர் அப்படிச் செய்திருக்க வேண்டும். அப்படித் தேடினார்களா? அதற்கான மனம் அவர்களுக்கு இருந ததா?
  25. கிரீன்லாந்தை டென்மார்க் நேரடியாக தனது காலனி ஆதிக்கத்துக்குள் வலிந்து கொண்டுவரவில்லை. நோர்வேயிலிருந்து புறப்பட்டு ஐஸ்லாந்து வழியாக சென்ற எரிக் ரௌட என்ற வீக்கிங் கொள்ளைக்காரத் தலைவன் 980-ஆண்டளவில் வேறும் பல நோர்வே குடியேறிகளுடன் கிரின்லாந்து நாட்டை முதன்முதலாக சென்றடைந்து ஆக்கிரமிப்பு செய்தான். அதற்கு முன்னர் அந்த நாட்டில் பூர்வீககுடிமக்களாக எஸ்கிமோவர்கள் என்று இன்று அழைக்கப்படும் இனுட் இனத்தை சேர்ந்த ஆதிவாசிகளே காணப்பட்டார்கள். சில நுற்றாண்டளவில் இஸ்கண்டிநேவியன் நாடுகள் தமக்குள் ஒப்பந்தங்கள் செய்து ஒரு டேனிஷ் நாட்டு அரசனின் தலைமையில் இணைந்தன. அந்த காலகட்டத்தில் நோர்வே நாட்டின் வீக்கிங் கொள்ளைகாரர்கள் Greenland, Iceland, Faroe island, Hebrides, Isle of Man, Orkney, Shetland ஆகிய பிரதேசங்களை படிப்படியாக கையகப்படுத்திவர அவற்றை நோர்வே நாடும் பல்வேறு காலங்களில் காலனிகளாக வைத்திருந்தது. ஐக்கிய நாடாக மாறிய டென்மார்க், நோர்வே மற்றும் சுவிடன் சில நூற்றாண்டுகள் (1536-1814) அதை நீடித்து பின் முரண்பட்டு சுவீடனும் நோர்வேயும் கூட்டாக பிரிந்தன. அப்போது டென்மார்க் நோர்வேக்கு சொந்தமான காலனிகள் சிலவற்றை பிரிந்து செல்லும் நோர்வே நாட்டுக்கே திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்தும் தனது கைவசமே வைத்துக்கொண்டது. டென்மார்க்குக்கு அப்படி கிடைத்ததுதான் கிரீன்லாந்து. இப்படி காலனியாக உள்வாங்கப்பட்ட கிரீன்லாந்து படிப்படியாக டென்மார்க்கின் முடியரசுக்கு கீழ் உள்ள ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய ஒரு சுயாதீன பிரதேசமாகவும் பின்னர் படிப்படியாக மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட்ட சுயாட்சியுள்ள டேனிஷ் முடியுரிமை கொண்ட நாடாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று நோர்வே நாட்டு மன்னரின் முடியாட்சிக்கு உட்பட்டு வடதுருவம் தொடக்கம் தென்துருவம் வரை அமைந்துள்ள Svalbard, Jan Mayen, Bouvet Island, Bouvet Island, Peter I Island, Queen Maud Land(South pole) ஆகிய பிரதேசங்கள் உள்ளன.
  26. இவருக்கும் அப்படியா ...பலருக்கு சாதாரணமாக நடப்பது தான். தெரியாத தகவலை அறிய தந்ததிற்கு நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.