Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. தீவிரமடையும் தாழமுக்கம், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை! 05 Jan, 2026 | 05:36 PM தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை மிக அண்மித்து தமிழ்நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். மேலும் அவர், இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய, தென் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். இது மக்களைப் பதற்றத்துக்குள்ளாக்கும் எதிர்வுகூறல் அல்ல என்பதுடன் மக்களை விழிப்பூட்டித் தயார்ப்படுத்தும் எதிர்வுகூறல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் கூறிய அவர், இந்த தாழமுக்கத்தினால் இன்று முதல் எதிர்வரும் 11.01.2026 வரை கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் பரவலாக கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. அத்தோடு இத்தாழமுக்கம் கிழக்கு பகுதியை அண்மித்தே (நிலப்பகுதியோடு இணைந்ததாக) வடக்கு நோக்கி நகரும் என்பதனால் வேகமான காற்றோடு இணைந்த கனமழையும் இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும். வடக்கு மாகாணத்திற்கான மிகக் கனமழையும் வெள்ள அனர்த்தத்துக்கான எச்சரிக்கையும். இந்த தாழமுக்கம் கிழக்கு கரையூடாக வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கு கரையூடாக தமிழ்நாட்டை அடையும் என்பதனால், இன்று முதல் வடக்கு மாகாணம் மிதமான மழையைப் பெறும். ஆனால் எதிர்வரும் 07.01.2026 முதல் வடக்கு மாகாணம் பரவலாக மிகக் கனமழையைப் பெறும். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அதிகனமழையும் வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட முன்னெச்சரிக்கையுடன் செயற்படவேண்டும். உருவாகியுள்ள தாழமுக்கத்தினால் எதிர்வரும் 07.01.2026 முதல் யாழ்ப்பாண மாவட்டமும் கிளிநொச்சி மாவட்டமும் அதிகனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக ஊவா மாகாணம் இன்று முதல் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அத்துடன் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்த தாழமுக்கத்தின் காரணமாக மழை தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதனாலும், சில நாட்களில் மிகக்கனமழை பெய்யும் என்பதனாலும் யாழ்ப்பாணம் (மாவட்டத்தின் பல பகுதிகள்), கிளிநொச்சி (மாவட்டத்தின் பல பகுதிகள்), முல்லைத்தீவு (மாவட்டத்தின் பல பகுதிகள்), வவுனியா (மாவட்டத்தின் பல பகுதிகள்), மன்னார் (மாவட்டத்தின் சில பகுதிகள்) திருகோணமலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), மட்டக்களப்பு (மாவட்டத்தின் பல பகுதிகள்), அம்பாறை (மாவட்டத்தின் பல பகுதிகள்), பதுளை (மாவட்டத்தின் பல பகுதிகள்), மொனராகலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), அனுராதபுரம் (மாவட்டத்தின் பல பகுதிகள்), பொலன்னறுவை (மாவட்டத்தின் பல பகுதிகள்), புத்தளம் (மாவட்டத்தின் சில பகுதிகள்), குருநாகல் (மாவட்டத்தின் பல பகுதிகள்) அம்பாந்தோட்டை (மாவட்டத்தின் சில பகுதிகள்) வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன. வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் குளங்களின் நீரை தற்போதே சற்று குறைந்த மட்டத்தில் பேணுவது சிறந்தது. இந்நாட்களில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் அதனோடு இணைந்த நிலச்சரிவு அனர்த்தங்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நாளை முதல் (06.01.2026) இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தயவு செய்து இந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்களைத் தாயார்ப்படுத்தும் திணைக்களங்களின் அதிகாரிகள் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுவது அவசியம். தயவு செய்து மேற்குறிப்பிட்ட மாகாணங்களிலுள்ள மக்கள் இந்த தாழமுக்கம், கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் கடற்கொந்தளிப்பு தொடர்பில் அவதானமாக இருப்பது மிக மிக அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/235293
  3. அத தெரண கருத்துப்படம்.
  4. அமெரிக்காவால் மதுரோ சிறைப்பிடிப்பு : “உலகின் நீதிபதியாக எந்த நாடும் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” – சீனா Published By: Digital Desk 3 05 Jan, 2026 | 03:19 PM வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து, “உலகின் நீதிபதியாக எந்தவொரு நாடும் செயல்படுவதை பீஜிங் ஏற்றுக்கொள்ளாது ” என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தாரிடம் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “உலகின் காவலராக எந்த நாடும் செயல்பட முடியாது என்பதையும், உலகின் நீதிபதியாக தன்னை அறிவிக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்பதையும் நாம் ஒருபோதும் நம்பியதில்லை,” என்று அவர் கூறினார். அமெரிக்காவை நேரடியாக குறிப்பிடாமல், “வெனிசுவேலாவில் ஏற்பட்ட திடீர் திருப்பங்கள் ” குறித்து அவர் சுட்டிக்காட்டினார். “சர்வதேச சட்டத்தின் கீழ் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பும் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் சீனாவின் தலைமைத் தூதுவர் வலியுறுத்தினார். அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 63 வயதான மதுரோ கண்கட்டி, கைகட்டப்பட்ட நிலையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சனிக்கிழமை வெளியாகி வெனிசுவேலா மக்களை அதிர்ச்சியடையச் செய்ததைத் தொடர்ந்து, வாங் யி வெளியிட்ட முதல் கருத்து இதுவாகும். நிக்கோலாஸ் மதுரோ தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நியூயோர்க்கில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். உலகளாவிய தூதரக சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தை பீஜிங் கொண்டுள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடையிலான எதிர்பாராத நல்லுறவை ஏற்படுத்தியதன் மூலம் அந்த நோக்கத்தை சீனா தெளிவாக வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்போது, “உலகளாவிய முக்கிய பிரச்சினைகளில் பங்காற்றுவோம்” என சீனா உறுதியளித்திருந்தது. அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நேரடியாக மோதித் தன்னை நிலைநாட்டிய அனுபவம், சீனாவின் தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். “இது சீனாவுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வெனிசுவேலாவுக்கு நம்பகமான நண்பராக தங்களை காட்ட விரும்பினோம்,” என்று மதுரோ கைது செய்யப்படும் சில மணி நேரங்களுக்கு முன்பு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி கியூ சியாவ்சியுடன் (Qiu Xiaoqi) அவர் நடத்திய சந்திப்பு குறித்து தகவல் அறிந்திருந்த சீன அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், மதுரோவின் மகன் 2016ஆம் ஆண்டில் சேர்ந்து கல்வி கற்ற சீனாவின் முன்னணி பெக்கிங் பல்கலைக்கழகத்தை ((Peking University) 2024ஆம் ஆண்டில் பார்வையிட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பல ஆண்டுகளாக கல்வி மற்றும் சீனாவுடனான உறவுகள் தொடர்பாக தூதரக ஈடுபாடுகள் இருந்தபோதும், அவர் மீண்டும் சீனாவுக்கு திரும்புவாரா என்பது குறித்து உறுதி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2017ஆம் ஆண்டு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தடைகளை கடுமையாக்கியதிலிருந்து வெனிசுவேலாவுக்கு பொருளாதார ஆதரவாக இருந்து வருகிறது. கிடைக்கப்பெறும் சமீபத்திய முழு ஆண்டுத் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் சீனா சுமார் 1.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை வெனிசுவேலாவிலிருந்து கொள்முதல் செய்துள்ளது. சீனாவின் மொத்த கொள்முதல்களில் கிட்டத்தட்ட பாதி மசகு எண்ணெயாகும். மேலும், அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் (American Enterprise Institute) என்ற சிந்தனைக் குழு வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் அரசு கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டுக்குள் வெனிசுவேலாவில் சுமார் 4.6 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளன. https://www.virakesari.lk/article/235255
  5. மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும் Jan 5, 2026 - 06:17 PM பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் நிதியில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு வழங்கும் சமூக பொறுப்பு நிதி 19.9 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் பிரதேச சபை வளாகத்தில் பாரம்பரிய உணவகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றிருந்தார். புலம்பெயர்ந்து வாழ்கின்றவர் இங்கு மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும் தென்னிலங்கையிலிருந்து இங்கு இருக்கின்ற வளங்களை எவ்வாறு பயன்படுத்தி இலாபம் அடையலாம் என யோசித்து இங்கு வந்து தொழில் நிறுவனங்களை அமைக்கின்றனர். ஆனால் எமது புலம்பெயர்ந்த உறவுகள் கோடிக்கணக்கில் காணிகளை வாங்கி விட்டு அதில் மேல்மாடிகளை கட்டிவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள் இவ்வாறான முதலீடுகள் செய்வதன் மூலம் எமது பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு தொழிலை வழங்கி எமது பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என தெரிவித்தார். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmk15op2b03jmo29nhbphh488
  6. 400 கி.மீற்றர் பயணித்து செரெண்டிப் கழகத்தை வெற்றிபெறச் செய்து யாழ். திரும்பிய அபிஷான் 05 Jan, 2026 | 01:09 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்திலிருந்து 400 கிலோ மீற்றர் பயணித்து கொழும்பு வருகை தந்து சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் ஏ குழுப் போட்டியில் பங்குபற்றி கடைசிக் கட்டத்தில் கோல் போட்டு மாவனெல்லை செரெண்டிப் கழகத்துக்கு இறுக்கமான வெற்றியை (1 - 0) ஈட்டிக்கொடுத்த விஜயகுமார் அபிஷான், வெற்றிக்களிப்புடன் போட்டி முடிவடைந்த சிறிது நேரத்தில் மீண்டும் யாழ். திரும்பினார். அபிஷானுடன் அவரது மூத்த சகோதரர், அணித் தலைவர் விஜயகுமார் விக்னேஷும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்து போட்டி முடிந்தவுடன் யாழ். திரும்பினார். இந்த சகோதரர்கள் இருவரும் அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி விளையாடி ரசிகர்களைப் பரபரப்பில் ஆழ்த்தினர். செரெண்டிப் கழகத்துக்கும் நிகம்போ யூத் கழகத்துக்கும் இடையில் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற இந்தப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை வேகமும் விறுவிறுப்பும் கலந்ததாக அமைந்தது. போட்டியின் முதல் 18 நிமிடங்கள் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதுடன் அவ்வப்போது கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் வீண் போயின. அதன் பின்னர் இரண்டு அணியினரதும் பந்துபரிமாற்றங்கள் மோசமாக இருந்ததால் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் கோல் போடப்படவில்லை. இடைவேளைக்குப் பின்னர் எதிர்த்தாடல், தடுத்தாடல் ஆகிய இரண்டிலும் திறமையை வெள்ளிப்படுத்திய செரெண்டிப் கழகம அவ்வப்போது கோல் போட எடுத்த முயற்சிகள் கோல் குறுக்குக் கம்பத்தை உராய்ந்தவாறு வெளியே சென்றன. இவ்வாறு பல கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட செரெண்டிப் கழகம் போட்டியின் கடைசிக் கட்டத்தில் நிகம்போ யூத் கழகத்தின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் விளையாடியது. இதன் பலனாக உபாதையீடு நேரத்தின் 2ஆவது நிமிடத்தில் டாக்கோ ஜோர்ஜ் பரிமாறிய பந்தை ஆறு யார் கட்டத்துக்கு அருகிலிருந்தவாறு அபிஷான் பலமாக உதைத்து கோலாக்கி, செரெண்டிப் கழகத்திற்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். போட்டி முடிவில் கருத்து வெளியிட்ட அபிஷான், 'இயற்கை அனர்த்தத்திற்கு பின்னர் ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்ததால் நானும் எனது மூத்த சகோதரனும் யாழ்ப்பாணத்திலேயே பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறோம். ஏனைய செரெண்டிப் வீரர்களுடன் எங்களுக்கு பயிற்சிபெறக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆனால், செரெண்டிப் கழக முகாமைத்துவம் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, முழு நேரமும் விளையாடவைத்து எங்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதற்காக அணி முகாமைத்துவத்திற்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன். ஏனைய வீரர்களுடன் நாங்கள் சிறந்த புரிந்துணர்வுடன் விளையாடி வருகிறோம். இந்தப் போட்டியில் செரெண்டிப் கழகத்தை நான் வெற்றிபெறச் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என தூய தமிழ் மொயில் தெரிவித்தார். பெலிக்கன்ஸ் கழகத்திடமும் பொலிஸ் கழகம் தோல்வி இதே மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பி குழு போட்டியில் பொலிஸ் கழத்தை எதிர்த்தாடிய குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பொலிஸ் கழகம் தொடர்ச்சியான இரண்டாவது வாரமாக தோல்வியைத் தழுவியது. பெலிக்கன்ஸ் கழகம் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டியின் 26ஆவது நிமிடத்தில் கோஜோ அனோக்யே 25 யார் தூரத்திலிருந்து தாழ்வாக உதைத்த பந்தை நோக்கி இடதுபுறமாகத் தாவிய பொலிஸ் கோல் காப்பாளர் தினேஷ் மகேந்திரனினால் தடுக்க முடியாமல் போனது. போட்டியின் கடைசிக் கட்டத்தில் கோல் நிலையை சமப்படுத்த பொலிஸ் கழக வீரர்கள் எடுத்த முயற்சிகள் வீண்போயின. ஒரு சந்தர்ப்பத்தில் பொலிஸ் கழக வீரர் கயான் ரிவால்டோ பலமாக உதைத்த பந்தை பெலிக்கன்ஸ் கோல்காப்பாளர் ரங்கன ஜயசேகர வேகமாக செயல்பட்டு திசை திருப்பினார். அவரது திறமையான கோல் தடுப்பும் பெலிக்கன்ஸ் கழகத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. https://www.virakesari.lk/article/235242
  7. Today
  8. எதிர்கால வானிலை குறித்த விசேட அறிவிப்பு Jan 5, 2026 - 04:46 PM எதிர்கால வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 8 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (05) மாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmk12eqyd03jeo29nqci0xzap 9, 10 ஆம் திகதிகளில் கடும் மழைக்கான வாய்ப்புள்ளதாக தரவுகள் எச்சரிக்கின்றன.
  9. ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்! 05 Jan, 2026 | 03:31 PM பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத அதேவேளை நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவர தீர்மானித்துள்ளது. இம் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் பேரவைக்கான இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்களால் டிசம்பர் 30ம் திகதி நீதி அமைச்சின் அலுவலகத்தில் நீதியமைச்சரிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் அல்லது வேறு பெயரில் கொண்டுவரப்படும் எந்த சட்டமும் அடிப்படையில் ஜனநாயக விரோத, மனித உரிமைகுக்கு எதிரான அபாயங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்புக்காவல் உத்தரவுகலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அதேவேளை , தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகலின் கீழ் நீதிமன்ற நடைமுறை மூலம் விசாரணைகளை நடத்தி சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் இயலுமாநதாக இருக்குப் போதே, தற்போதைய அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே ‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற பெயரில் புதிய சட்டங்களை கொண்டு வர முனைகிறது எனபதும் வலியுறுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/235262
  10. நானும் அதையே சரியாக இருக்கும் என நினைக்கின்றேன் ஒரு வங்கி இலக்கம் புதிதாக உருவாக்கி அதை முன்னோடி அமைப்பின் பெயரில் பாவிக்கலாம் . அந்த வங்கி கணக்கு ஏராளன் பெயரில் இருக்கும். உதவி செய்ய விரும்புபவர்கள் அந்த இலக்கத்திற்கு தங்கள் பங்களிப்பினைச் செலுத்தலாம். . புலர் நிறுவனம் ஏற்கனவே ஒரு ஒரு கட்டமைப்பாக இயங்குவதால் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை வேறு ஒரு கட்டமைப்பிற்காக பயன்படுத்துவது ஒரு சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்🙏
  11. ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை Jan 5, 2026 - 12:30 PM முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க இன்று (05) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கக் காலத்தில், விவசாய அமைச்சின் செயல்பாடுகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. அந்தச் சம்பவம் தொடர்பில், அப்போதைய அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, அவர் இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmk0t9x0h03iso29njj76o0uk
  12. முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டு செயற்பாடு என்று எமது புலர் அறக்கட்டளையின் வருடாந்த செயற்பாட்டறிக்கையிலும் குறிப்பிடலாம் அல்லது தனியாகவே முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 என செயற்பாட்டறிக்கை வரவு செலவு விபரம் தயாரிக்கலாம். எல்லோருடைய கருத்தையும் பெற்று செயற்படுவோம். @குமாரசாமி அண்ணையும் யாழில் இருந்து புலர் அறக்கட்டளைக்கு உதவும் நல்லுள்ளம். அவரையும் எமது மூடப்பட்ட(எல்லோரும் தகவல் பரிமாற முடியாது, அட்மின் மட்டும் விபரங்களை போடுவார்) whatsapp குழுவில் ஏற்கனவே நான் இணைத்துள்ளேன். அது போல Telegram ல் ஒரு குழுவை(Mobile number தெரியாமல் பெயர் மட்டும் இருக்கும்) உருவாக்கி தகவல்களை பரிமாறலாம். whatsapp business இலும் நம்பர் தெரியாது குழு உருவாக்கலாம் என நினைக்கிறேன். தொழிநுட்பம் தெரிந்த யாழ் உறவுகள் விளங்கப்படுத்துங்கோ.
  13. இல்லத் தாத்தா..ஏராளன் புலரில் தற்போது எப்படி இயங்குகிறாரோ அப்படியே விடுவது தான் சிறந்தது..பாவம் தன் முயற்சியால் ஏற்படுத்திக் கொண்ட விடையத்திற்கு எந்த வித இடையூறும் இல்லாமல் இருக்க வேணும்.ஏராளனுக்கு புதியவற்றை இணைக்க விருப்பம் இருந்தாலும் போக, போக அது ஒரு தலையிடியாக மாறக் கூடாது.அவர்களது மற்ற உறுப்பினர்களும் எல்லாவற்றுக்கும் ஒத்துளைப்பார்கள் என்று இல்லை.
  14. எழுத்துப்பிழை நடந்து விட்டது. ஈழப்பிரியன் கூறியது போல ஊதியம் என மாற்றி வாசிக்கவும்.😄
  15. இன்று வெனிசுலாவில் அரங்கேறி வரும் அமெரிக்காவின் அதே "கடத்தல்" தந்திரம், முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் ஒரு மண்ணில் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. அந்த வரலாற்றுப் பாடத்தின் பெயர்: 'Mogadishu War' (1993). 1993-ல் சோமாலியாவின் உள்நாட்டுப் போரில் தலையிட்ட அமெரிக்கா, அங்கிருந்த முக்கியத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டது. இதற்காக உலகின் மிகச்சிறந்த படைப்பிரிவாகக் கருதப்படும் Delta Force மற்றும் Rangers களமிறக்கப்பட்டனர். நவீன ஆயுதங்கள், அதிநவீன ஹெலிகாப்டர்கள் என ஒரு சினிமா பாணியில் அந்தத் தாக்குதல் தொடங்கியது. அமெரிக்காவின் கர்வத்தை உடைக்கும் விதமாக, சோமாலிய வீரர்கள் எளிய ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவின் பெருமைமிகு இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தினர். வானில் பறந்த அந்த இரும்புப் பறவைகள் மண்ணில் சரிந்தபோது, அமெரிக்காவின் திட்டமும் சுக்குநூறானது. ஒரு சில மணிநேரங்களில் முடியும் என்று நினைத்த அந்த நடவடிக்கை, 15 மணிநேரக் கொடூரப் போராக மாறியது. அடி என்றால் அப்படி ஒரு அடி…கனவிலும் கூட அப்படி ஒரு அடிவிழும் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்… அந்த எதிர்த்தாக்குதலில் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 73-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிக முக்கியமாக, உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் மொக்டிஷோ நகரின் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டன. உலகமே தொலைக்காட்சியில் பார்த்த அந்த காட்சிகள், அமெரிக்காவின் முகத்தில் பூசப்பட்ட அழிக்க முடியாத கரியானது. ஒரு வல்லரசின் அராஜகம், வீரமும் விசுவாசமும் நிறைந்த ஒரு எளிய தேசத்தின் முன்னால் எப்படிப் பாழாகிப் போகும் என்பதற்கு இதுவே சாட்சி. இந்த வரலாற்று அவமானத்திற்குப் பிறகு, சோமாலியா பக்கம் எட்டிப் பார்க்கவே அமெரிக்கா நீண்ட காலம் அஞ்சியது. இன்று வெனிசுலாவில் நடக்கும் அதிகார ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால் அதே போன்ற ஒரு 'வெற்றி' கிடைக்கும் என அமெரிக்கா கணக்குப் போடலாம். ஆனால், வரலாறு எப்போதும் ஒரு பாடத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது: "மண்ணின் மைந்தர்களின் வீரம், எந்த நவீன ஆயுதத்தையும் விட வலிமையானது." (குறிப்பு: இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் புகழ்பெற்ற 'Black Hawk Down' திரைப்படம் எடுக்கப்பட்டது) email
  16. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  17. எனது கருத்தும் இதுவே. கடந்தகால உதவித்திட்ட அனுபவங்களிலிருந்து, ஏராளன் வெற்றிகரமாக நடத்தி வரும் அமைப்புக்கு இடையூறு ஏற்படுத்தாமல் விடுவது நல்லது என்று தோன்றுகிறது.
  18. முல்லைத்தீவு சிறுமி மரணம் - நிபுணர் குழுவின் அதிரடி அறிக்கை வெளியானது 05 January 2026 முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். அதன்படி, சம்பவத்தின் போது, மருத்துவமனை அறிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கலாம் என கருதும் பட்சத்தில் அது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யுமாறு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவில் குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதி உத்தியோகத்தரை, சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவரை, தனியாக செயற்பட விடாது, மற்றுமொருவரின் கண்காணிப்பின் கீழ் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எமது செய்தி சேவைக்குக் குறிப்பிட்டார். முழுமையான அறிக்கை கிடைத்ததன் பின்னரே முறைமைசார் விசாரணைக்கான பணிப்புரைகளை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். சிறுமிக்கு உரிய முறையில் மருத்துவம் வழங்கப்படவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்தநிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/439109/mullaitivu-girls-death-expert-committees-action-report-released
  19. கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர் 05 January 2026 "கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள்" என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். மேலும் "அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றும் , டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை" என்றும் டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் அதன் முக்கியமான புவியியல் இருப்பிடம் காரணமாக அமெரிக்கா அதன் மீது ஆர்வம் காட்டினாலும், அங்குள்ள மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை. அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை பாதிக்கும் என டென்மார்க் எச்சரித்துள்ளது. அதேசமயம், வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அதன் ஆதிக்க மனப்பான்மை சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/439137/us-has-no-right-to-annex-greenland-danish-prime-minister
  20. சுமந்திரன் எடுத்துத் தந்தால் தமிழிழமே வேண்டாம் என்று சொன்ன தமிழ்சிறி அவர்களுடய கவனத்துக்கு இதைக் கொண்டு வருகின்றேன்.
  21. தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை adminJanuary 5, 2026 யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டுமானத்திற்கு எதிராகப் போராடிய வேலன் சுவாமிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான வழக்கில் இன்று (ஜனவரி 5, 2026) முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக காவல்துறையினா் இன்று புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் இருந்த ஐவர் மற்றும் புதிதாகக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் உள்ளிட்ட அனைவரையும் சொந்தப் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணிகளான நல்லதம்பி சிறிகாந்தா, குமாரவடிவேல் குருபரன் தலைமையில் 13 சட்டத்தரணிகள் கொண்ட குழு முன்னிலையானது. போராட்டக்காரர்கள் நீதிமன்றக் கட்டளையை மீறினர் என்றும், இன நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்தனர் என்றும் கூறி காவல்துறைத் தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அமைதியாகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. காவல்துறையினரே அங்கு சட்டத்தை மீறி வன்முறையைத் தூண்டியுள்ளனா் எனத் தொிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தவிசாளர் நிரோஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டதற்கான மருத்துவ அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இத்தகைய தற்காலிக கட்டளைகள் 14 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகாது என்பதைச் சுட்டிக்காட்டி வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வாதிட்டார். “பொதுத் தொல்லை” (Public Nuisance) தொடர்பான சட்டம். இதனை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கப் பயன்படுத்த முடியாது என்றும், காவல்துறையினா் மேலிடத்து உத்தரவின் பேரில் இவ்வாறு செயற்படுகின்றனர் என்றும் சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா சாடினார். 🔍 பின்னணி: தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாக விகாரை கட்டப்படுவதாகக் கூறி தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதில் வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/225683/
  22. ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் முன்னிலை : adminJanuary 5, 2026 நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) இன்று (ஜனவரி 5, 2026, திங்கட்கிழமை) காலை இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளாா். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்தின் (Ministry of Agriculture) அலுவலகத்தை அமைப்பதற்காக ஒரு தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் போது அரசாங்கத்தின் விதிகளுக்குப் புறம்பாக அதிகப்படியான வாடகைத் தொகை செலுத்தப்பட்டமை மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களுடன் அவர் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். விவசாய அமைச்சகத்திற்காக ராஜகிரியவில் உள்ள குறித்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் நடைபெற்று வந்தன. இதில் அமைச்சரவையின் அனுமதி மற்றும் கேள்விப்பத்திர நடைமுறைகள் (Tender Procedures) சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து ஆணைக்குழு தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. https://globaltamilnews.net/2026/225679/
  23. நான் மேலே கூறியவை யாவும் எடுகோள்களே. செய்திக்கு அப்பால் சென்று, என்ன நடக்கிறது என்பதை உய்துணர முயலும் முயற்சி மட்டுமே. இப்படித்தான் நடக்கிறது என்றால்… இந்த சங்கியிலின் ஓரங்கமாகவே நான் டிரம்பின் முதலாவது தேர்தல், பிரெக்சிற், கொவிட் உருவாக்கம், டிரம்பின் 2ம் தேர்வு ஆகியவற்றை காண்கிறேன். பிகு இவை 100% சதிகோட்பாட்டு என புறம்தள்ள தக்க கருத்துக்கள் என்பதை முழுதாக ஏற்கிறேன்.
  24. குமாரசாமி, இந்த எண்ணத்தைத் தவிர்க்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஏராளன் ஏற்கனவே ஒரு அமைப்பை உருவாக்கி, அதனூடாக பல்வேறு செயற்திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார். அவரது அமைப்பிற்கும் செயற்பாடுகளுக்கும் தனித்துவமான சில கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளன. எனவே, எந்தவித இடையூறும் இல்லாமல் அவர் தனது புலம் அமைப்பில் தொடர்ந்து செயற்படுவதுதான் உகந்ததாக இருக்கும். அதே நேரத்தில், அவரது முயற்சிகளுக்கு உதவுவதை யாழ்கள உறுப்பினர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். “எலி வளையானாலும் தனி வளை வேண்டும்” என்பதுபோல, ஒவ்வொரு முயற்சியும் தனது தனித்தளத்தில் வளர்வதே சிறந்தது. நாம் முன்னெடுக்க உள்ள அடிப்படை சுகாதார வசதி திட்டம் தனித்துவமானது. அதைச் செயற்படுத்துவதற்காக ‘முன்னோடி’ என்ற உதவி நிறுவனத்தை ஆரம்பிப்பது குறித்து ஏற்கனவே ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் அதற்கு எதிரான கருத்தை முன்வைக்காததும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஏராளனும் இதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். தற்சமயம், அவர் இந்தத் திட்டத்திற்கு தன்னாலான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது. ‘முன்னோடி’ தற்போது ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆகவே, அதை உறுதியுடன் செயற்படுத்துவோம். ‘முன்னோடி’க்கு தனியான கணக்கு இருப்பது பங்களிப்பாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையையும் நமக்குச் செயற்பாட்டு இலகுவையும் அளிக்கும். துளித் துளியாகச் சேர்ப்போம். எதிர்காலத்தில் அது நிறைந்த குடமாக மாறலாம்.
  25. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 05 Jan, 2026 | 08:35 AM தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார். விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார். அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்புத் திட்டம் குறித்து வினவியபோது, அது பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சுமை என அவர் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது பற்றித் தான் எவ்விதக் கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்து அந்தப் பதிலைத் தவிர்த்துக்கொண்டார். நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவுவதாகவும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/235232

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.