Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. முன்னர் கும்பலாக இருந்த பலரையும் காணவில்லை. இன்னும் ஏழு இலக்கங்களே இருந்ததனால் நான் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகராமல் அங்கேயே நிற்க, ஆண்டனி மட்டும் அப்பப்ப காணாமல் போய் வந்துகொண்டிருந்தான். இப்ப எம்மோடு வருவதாகக் கூறிய அந்த மூன்றாவது நபரைக் காணாதது எனக்கு நிம்மதியாக இருக்க, அந்த ஆள் வீட்டை போட்டாராக்கும் என்று எண்ணிக்கொள்கிறேன். 48 ம் இலக்கத் தாயும் மகளும் கூட இப்ப எனக்கு அண்மையில் வந்து நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு அந்தப் பெடியுடன் போவது பற்றிக் கூறவில்லையே என்ற குற்ற உணர்வும் எழுகிறது. 36 ம் இலக்கம் கூப்பிட நான் திரும்பிப் பார்க்கிறேன் ஆண்டனியைக் காணவில்லை. எனக்கு மனம் திக் திக் என்று அடித்தாலும் யாரிடமும் சொல்ல முடியாமல் நிற்கிறேன். 37 கூப்பிட்டு முடிந்து ஐந்து நிமிடம் ஆன பின் 38 என்று கூப்பிட, பதட்டத்துடன் திரும்பிப் பார்க்க ஆண்டனி வருவது தெரிகிறது. நான் பலமாக “ஆண்டனி விரைவாக வா, எமது இலக்கம் கூப்பிடுகிறார்கள்” என்றபடி வாயில் காப்பாளரைத் தாண்டி உள்ளே செல்ல அவனும் என்பின்னால் வருகிறான். இருவரும் சென்று கதிரைகளில் அமர, கவுண்டரில் உள்ள பெண் இலக்கச் சீட்டைக் கேட்கிறாள். ஆண்டனி கொடுத்தபடியே நாம் ஒன்றாக வந்திருக்கிறோம். ஆனால் வேறுவேறு விமான டிக்கற் என்றதும் அந்தப் பெண் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு “யாரின் டிக்கற்றை முதலில் செய்ய என்று கேட்க, எதையாவது செய் என்கிறார் ஆண்டனி. ஆண்டனியின் டிக்கற்றையே முதலில் செய்யுங்கள் என்கிறேன் நான். ஆண்டனிக்கு 18 ம் திகதி கொடுத்துவிட்டு என் விபரத்தைககேட்க எடுத்துக் கொடுத்தபின்னும் ஆண்டனி போகாமல் இருக்க, மிக்க நன்றி ஆண்டனி, நீ கிளம்பு என்றதும் “சீ யு நிவேதா” என்றுவிட்டு அவன் கிளம்ப, என் பெயரை நினைவில் வைத்திருக்கிறான் என்று ஆச்சரியம் எழுகிறது. எனக்கு 18 ம் திகதி போக ஓகே யா என்று பயண முகவர் கேட்க, நான் பதட்டப்படுமாப்போல் அய்யய்யோ என் மகளுக்கு 18 ம் திகதி நிச்சயதார்த்தம் இருக்கு. ஏற்கனவே பிந்திவிட்டது. தயவுசெய்து எத்தனை விரைவாக எனக்கு டிக்கட் போட்டுத் தர முடியுமோ தா என்கிறேன், இரண்டு நாட்களின் பின் எனக்கு விமானச் சீட்டுக் கிடைக்க நன்றி என்று கூறி அவள் தந்த விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டு வெளியே வர அந்தத் தாயும் மகளும் வெளியே நிற்க, உங்களுக்கு முதலே கூறாமல் விட்டதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்றுகூறிவிட்டு வெளியே வருகிறேன். நேரம் மாலை நான்கு மணி. முன்னால் பல ஓட்டோக்கள் நிற்க, நான் பிக்மீ ஓட்டோவுக்குப் பதிந்துவிட்டு நிற்க, ஓட்டோக்காரர் ஒருவர் எங்கு போகவேண்டும் என்கிறார். நான் ஏற்கனவே பிக்மீக்காக காத்திருக்கறேன் என்றதும் ஓகே என்றுவிட்டு அப்பால் நகர என் ஓட்டோ வருகிறதா என்று பார்க்கிறேன். முன்னர் நான்கு நிமிடம் என்று காட்டிய ஓட்டோ இப்ப 16 நிமிடம் என்று காட்ட மப்பைப் பார்க்கிறேன் அவர் வேறு பக்கமாகச் சென்றுகொண்டிருக்க, உடனேயே அதை இரத்துச் செய்துவிட்டு என்னிடம் வந்து கேட்டவரை வெள்ளவத்தைக்குப் போகவேண்டும் வருக்கிறாயா என்று கேட்டு ஏறி அமர்கிறேன். அப்போதுதான் நான் நின்ற கோட்டலின் பெயரோ முகவரியோ தெரியாது என்பது நினைவுக்கு வர, அந்த சசிக்கு போன் செய்ய அவர் கதைக்கிறார். அவரிடம் முகவரியை எனது போனுக்கு அனுப்பச் சொல்லிவிட்டு அக்கம் பக்கம் பார்த்தபடி வர எந்த வீதிக்குப் போகவேண்டும் என்கிறார் ஓட்டுனர். எனது போனில் பார்த்து இடத்தைக் கூறிவிட்டு எனது போனிலும் இடத்தைப் போட்டுச் சரியாகச் செல்கிறாரா என்று பார்க்கிறேன். எனது கொட்டேலுக்கு இன்னும் மூன்று நிமிடம் இருக்கும் நிலையில் சுமங்கலி ரெஸ்ட் என்னும் ஒன்று கண்னில் பட, ஓட்டுநாரை அங்கே போகும்படி கூற அவர் எதிரில் கொண்டுசென்று நிறுத்துகிறார். அங்கு தமிழ்ப் பெண்மணி ஒருவர் இருக்க, தங்குவதற்கு அறைகள் இருக்கா எனகிறேன். ஏசி அறைகள் இன்று இல்லை. மற்ற அறைகள் தான் இருக்கு. எத்தனை பேர் என்கிறா. நான் மட்டும் தான் என்று கூற தனி ஒருவருக்கு ஐந்தாயிரம் என்று கூற, பணத்தைக் கட்டி ரிசீற்ரைப் பெற்றதும் நான் இருக்கும் இடம் சென்று எனது பொதிகளை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு ஓட்டோவில் ஏறுகிறேன். சசி வாசலிலே நிற்கிறார். ஒரு நாளுக்குரிய பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு என் பொருட்களுடன் சுமங்கலிக்குச் செல்கிறேன். அங்கு செல்லும்போது மாலை ஐந்துமணி. அறை நன்கு சுத்தமாக இருக்கிறது. மின்விசிறியைச் சுழல விட்டுவிட்டு தேனீருக்கு ஓடர் செய்ய அரைமணிநேரம் செல்லும் என்கிறார். சரி சிறிது நேரம் படுப்போம் என்று கண்ணயர மணி ஒலிக்கிறது. எழுந்து சென்று கதவைத் திறக்க தேனீர்க் கோப்பையுடன் நிற்பவரிடம் தேனீரை வாங்கி வைத்துவிட்டு 100 ரூபாய்களைக் கொடுக்க அவர் செல்கிறார். அந்தக் களைப்புக்கு தேநீர் சுவையாக இருக்க சுடச் சுட அதைக் குடித்துவிட்டு போனில் சின்னத்திரை நாடகங்கள் பார்த்துக்கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை. வெளியே போய் உண்டுவிட்டு வருவோம் என எண்ணி ஜன்னல் சீலையை விலக்கினால் ஒரே இருட்டு. பெரிதாகப் பசி இல்லை. நாளை காலை சாப்பிட்டுக்கொள்வோம் என எண்ணியபடி கட்டிலில் சரிய கணவர் போன் செய்கிறார். அவர் கதைத்து முடிய பிள்ளைகள் சித்தி மச்சாள் என பத்து மணிவரை போன் கதைத்து ஓய தூக்கம் கண்களைச் சுழற்ற, இனி யாருடனும் கதைக்காமல் படுப்போம் என எண்ணி எழுந்து மின்விசிறியை நிறுத்திவிட்டு கட்டிலுக்கு வர என் கால் பக்கமாக இரண்டு இடங்களில் சிவப்பாகத் தெரிகிறது. இவர்கள் கட்டில் விரிப்பைத் துவைக்காமல் போட்டுள்ளார்களோ என்னும் ஐயம் எழுகிறது. குனிந்து பார்க்க இரத்தத் திட்டுக்கள் புதிதாகத் தெரிகின்றன, என் கால்களைத் தடவிப் பார்க்க எதுவும் தெரியவில்லை. நுளம்பும் வரவில்லையே. போன் கதைக்கும் போது நுளம்பு கடித்து நான் கவனிக்காமல் சொறிந்திருப்பேனோ என்னும் எண்ணம் ஓட, சரி தூங்குவோம் என்று எண்ணியபடி படுக்கிறேன். கண்ணயரும் நேரம் முதுகுப் பக்கம் ஏதோ ஊர்வதுபோல் இருக்க இடதுபக்கமாகத் திரும்பிக்கொள்கிறேன். மீண்டும் கண்ணயர்ந்தபின் ஒரு மணிநேரம் தூங்கியிருப்பேன் மணிக்கட்டில் ஏதோ கடிக்க திடுக்கிட்டு எழுந்து போனின் வெளிச்சத்தில் பார்க்க சிறிய பூச்சி ஒன்று குடு குடு என்று ஓட விரலால் அழுத்தினால் இரத்தம் தான் தெரிகிறது. அதைப் பார்த்தால் மூட்டைப்பூச்சி போல் இருக்காததால் என்னவாக இருக்கும் என்று யோசனை ஓடுகிறது. சரி மற்றப்பக்கம் திரும்பிப் படுத்துப் பார்ப்பம் என்று எண்ணிப் படுத்தால் இரண்டு மூன்று இடங்களில் கடிக்க இரண்டை நசுக்கியும் விட்டேன். மெத்தை விரிப்பைத் தூக்கிப் பாக்க மெத்தை புதிதாக இருக்கிறது. இனியும் இங்கு படுக்க முடியாது என எண்ணி கோட்டலுக்கு போன் செய்ய மானேஜர் வருகிறார். எங்கள் கோட்டலில் மூட்டைகள் இல்லையே என்கிறார். நான் கால்பகுதி விரிப்பு மற்றும் நான் நசித்த மூட்டைகளைக் காட்டுகிறேன். சரி உங்களுக்குக் கீழே உள்ள AC அறை தருகிறோம் என்று கூறி அழைத்துச் செல்கின்றார். கீழே சென்றவுடன் AC மற்றும் மின்விசிறியைப் போட்டுவிட்டுச் செல்ல எனக்கோ குளிர் தாங்க முடியாமல் இருக்கு. AC ஐ நிறுத்திவிட்டு மின் விசிறியையும் நன்றாகக் குறைத்துவிட்டுப் படுக்க தூக்கம் நன்றாக வர மீண்டும் தூங்கவாரம்பிக்கிறேன். ஒரு அரைமணி நேரம் தூங்கியிருக்கமாட்டேன் மீண்டும் கடி. மகளுக்கு போன் செய்து விபரத்தைக் கூற நீங்கள் முதன் முதலில் இருந்த ஹோட்டலில் இருந்து உங்கள் ஆடைகளோடு வந்திருக்குமோ? ஏனென்றால் அந்த ஹோட்டலின் றிவியூ பார்த்தேன் நல்லாத்தான் எழுதியிருக்கு. எதுக்கும் நீங்கள் அணிந்திருந்த ஆடைகளை உதறிப் பாருங்கள் என்கிறா. நான் ஆடைகளை உதறிப் பார்த்துவிட்டு மெத்தையின் விரிப்பைத் தூக்கி ஏதும் தெரிகிறதா என்று பார்க்க அதுவும் புத்தம் புதிதாக இருக்கிறது. இரண்டு அறைகளிலும் புதிதாக மெத்தை போட்டுள்ளார்கள் என்றால் ஏதோ இருக்கு என்று எண்ணி விட்டு மீண்டும் படுக்க, ஐந்து நிமிடங்களுக்குள்ளாக மீண்டும் கடிக்க ஏற்கனவே முன்னேற்பாடாக ஒன் செய்து வைத்திருந்த போனை எடுத்துப் பிடிக்க இரண்டு குஞ்சுகள் ஓடுகின்றன. விரல்களால் அழுத்திவிட இரத்தத்துடன் சமாதியாகின்றன. அதை உடனே போனில் வீடியோவும் படமும் எடுத்துவிட்டு ஆடைமாற்றிவிட்டு போனில் நாம் வழமையாகத் தங்கும் யூரோ லங்கா கோட்டலுக்குப் போன் செய்து இன்றாவது அறைகள் இருக்கின்றனவா என்று கேட்க அவரும் எத்தனைபேர் என்கிறார். நான் மட்டும்தான் என்றுகூற, எத்தனை மணிக்கு வருவீர்கள் என்கிறார். இப்பவே கிளம்புகிறேன். எப்படியும் அரை மணிநேரத்தில் வந்துவிடுறேன் என்று கூறிவிட்டு நேரத்தைப் பார்த்தால் இரவு 11.45 என்று நேரம் காட்டுகிறது. அதன்பின் சுமங்கலி வரவேற்புக்குப் போன் செய்ய உடனே வருகிறோம் என்று இருவர் வருகின்றனர். நான் போகப்போகிறேன் என்று முடிவு எடுத்தபின் மின் விசிறியையும் நிறுத்திவிட்டிருந்தேன். அவர்கள் வந்து பார்த்துவிட்டு என்ன நீங்கள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள். அதுதான் உங்களுக்குக் கடிக்கிது என்கின்றனர். அப்ப உங்கள் அறைகளில் மூட்டை இருக்கிறதுதானா என்று கேட்க பதட்டத்துடன் இல்லை என்கிறனர். நீங்கள் AC போட்டுவிட்டு மின்விசிறியையும் போட்டுவிட்டுப் படுத்தால் எதுவும் வராது என்கிறார் மனேஜர். போட்டோ எடுத்தீர்களா என்றதற்கு ஓம் என்கிறேன். நான் போர்வை ஒன்று கொண்டுவந்து தருகிறேன். வடிவாப் போர்த்துக்கொண்டு படுங்கோ ஒண்டும் கடிக்காது என்றவுடன் எனக்கு கோபம் தலைக்கேற “நான் எப்படிப் படுக்கவேணும் என்று நீங்கள் முடிவெடுக்கத் தேவை இல்லை. நான் ஏற்கனவே வேறு இடம் பார்த்துவிட்டேன். என் பணத்தைத் திரும்பத் தாருங்கள் என்று கேட்க, கீழே வாங்கோ என்றபடி என் இரு பயணப்பொதிகளையும் எடுத்துக்கொண்டு செல்ல நான் சிறியதை எடுத்துக்கொண்டு செல்கிறேன். கீழே சென்றதும் பணத்தை எடுத்துத் தந்தபடி இதுவரை எமக்கு எந்தவித குற்றச்சாட்டும் யாரிடமிருந்தும் வரவில்லை என்று அவர் கூற, நான் எடுத்த படத்தைக் காட்ட பின்னர் அவர் எதுவும் கூறவில்லை. நான் பிக்மீக்கு பதிந்துவிட்டு ஓட்டுநரின் பெயரையும் ஓட்டோ இலக்கத்தையும் மகளுக்கு வற்சப் செய்கிறேன். உடனேயே ஓட்டோ வந்துவிட அதில் ஏறி அமர்ந்தபடி மகளுடன் போனில் கதைத்தபடியே போய் ஹோட்டலின் முன்னால் இறங்குகிறேன். ஒரு இரவுக்கு 7500 ரூபாய்கள். பணத்தைச் செலுத்திவிட்டு பற்றுச் சீட்டைக் கேட்கிறேன். நாளை தருவதாகக் கூற, பணம் இன்றுதானே தந்தேன். இப்பவே பற்றுச்சீட்டைத் தாருங்கள் என்கிறேன் சிரித்தபடி. நாங்கள் தராமல் விடப்போகிறோமா அக்கா என்கிறார் மற்றவர். நான் ஒருதடவை பற்றுச்சீட்டு வாங்காது மீண்டும் பணம் கட்டிய அனுபவத்தில் தான் கேட்கிறேன் என்றதும் பற்றுச்சீட்டைத் தருகிறார். வாங்கிக்கொண்டு போக அறைக்கு எல்லாப் பொதிகளும் வந்துசேர மணி இரவு 12.30. எனக்கே என்னை நினைத்து ஆச்சரியமாக இருக்க, என்னை நானே மெச்சியபடி படுக்கையில் சாய்கிறேன்.
  3. அமெரிக்க - இஸ்ரேலின் இந்த வலிந்த தாக்குதல் மூலம், ஈரான்முன்னரை விட வலிமை பெற்றுள்ளது. இத்த தாக்குதல் மூலம் அதிக நட்டம் அடந்தவர்கள் அரபுஷேக்குகளே ஆகும்.
  4. மணியோசை ஒலிக்குமுன் ஆனை வரும் என அறிவாளன் கணக்கிடுவான்; ஆனால் நம் நாட்டின் மேடையில் மணி உடைந்த பின்னும் "ஆனை வருதா? நரி வருதா?" என அரசர் குழம்பி நிற்பது சிரிப்பை வரவைக்கும். காற்று வீசும் முன்பே மேகம் கருமை தரும்; ஆனால் இங்கோர் சிலர் புயல் வீசி வீடு பறந்த பின்னும் "மழை பெய்யுமோ?" என அருளுரை வழங்குவர். ஆனை வருவதைக் கேட்டு கிராமம் தயார் ஆகும்; ஆனால் அரசியல் மேடையில் ஆனை வந்த பிறகும் "இது ஆனை அல்ல, பெரிய எலி!" என பேச்சால் மட்டும் போராடுவோர் உண்டு. ஓருவரை பின் தொடர விளங்க வேண்டுமல்வா😀
  5. அப்பவே யோசிச்சனான் நீங்க சாமியிடம் கேட்டுதான் பதில் போடுவீர்களென😂
  6. ஐக்கிய நாடும், ஈரான் நாடும், கடந்த இரண்டு நாட்களாக மத்திய கிழக்கில் எங்களின் பகைமைகளுக்கு முழுமையான மற்றும் மொத்தமான தீர்வு குறித்து மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள உரையாடல்களை நடத்தி வருவதாகத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆழமான, விரிவான, ஆக்கபூர்வமான உரையாடல்களின் போக்கையும் நெருக்கடியையும் அடிப்படையாகக் கொண்டு, இவை வாரம் முழுவதும் தொடரும். நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களின் வெற்றிக்கு உட்பட்டு, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாள் காலத்திற்கு ஒத்திவைக்குமாறு போர் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்திற்கு நீங்கள் அளித்த கவனத்திற்கு நன்றி! ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் -பிபிசி.com
  7. தாளம் என்பது எல்லா துறைகளிலும் ஊடுருவி நிற்கும் ஒரு பொதுவான ஒத்திசைவு. அதைப் பற்றி பேசுறவர்கள் சொல்வது போல, உண்மையான புரிதல் காகிதத்தில் எழுதுற ஆய்வில் மட்டும் கிடைக்காது; நேரடியாக களத்தில் நின்று அனுபவித்தால்தான் அதன் நுணுக்கம் தெரியும். அதேபோல, விஜியின் ‘அரிசி’ பற்றிய விளக்கமும் வெறும் கருத்து அல்லது கற்பனை அடிப்படையில் சொல்ல முடியாத ஒன்று. கள ஆய்வாளர்கள் செய்வது போல நேரடியாக அந்த சூழலில் நின்று, அது எப்படி உருவாகிறது, எப்படி செயல்படுகிறது, எந்த சூழலில் என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பதைப் பார்த்தால்தான் அதன் உண்மையான சாரத்தை விளக்க முடியும். சுருக்கமாக சொன்னால், தாளம் எல்லாவற்றிலும் இருப்பது போல, விஜியின் ‘அரிசி’யையும் நேரடி அனுபவத்தோடு பார்த்தால்தான் அதன் முழு பொருளையும் வெளிப்படுத்த முடியும்.😁
  8. Today
  9. உலக அரசியல்னா சதுரங்கம் மாதிரி, யாரை நம்புறது, யாரை விட்டுடுறது, யாரு பின்னால நிக்குறது, யாரு முன்னால விழுறத எல்லாமே சூழ்நிலையோட மாறுறது தான். நம்பகத்தன்மைன்னு ஒரு வார்த்தை இருக்குது, ஆனா அதுக்கு எல்லா நாடுகளும் ஒரே அர்த்தம் குடுக்காது. இன்று தோழன் போல நடக்குறவன், நாளை தன் லாபத்துக்காகவே பாதை மாற்றிக்கலாம், அதுதான் வரலாறு காட்டுற பெரிய பாடம். சில நாடுகள் தங்கள் சக்தியை சத்தமில்லாம நிரூபிக்குறது, சில நாடுகள் சத்தமா பேசுறது, சில நாடுகள் யாரோட சேர்ந்து தான் நிற்குறது, சில நாடுகள் தனியா நிக்குற தைரியம் காட்டுறது. அதுல யாரு பெரியவர், யாரு பலவீனம்னு ஒரு வரியில சொல்ல முடியாத விஷயம். அரசியல் உலகத்துல “நேற்று எதிரி, இன்று கூட்டணி” “நேற்று கூட்டணி, இன்று எதிரி”ன்னு பக்கத்துல பக்கத்துலே எழுதுற மாதிரி தான் நடக்குது. அதனால யாரை நம்பினாலும், யாரை எதிர்த்தாலும், ஒரு நாட்டுக்கு முக்கியம் தன் நிலை, தன் நலன், தன் பாதுகாப்பு. அதை யாரும் அட்சய பாத்திரமா கொடுக்க மாட்டாங்க. மொத்தத்தில் சொல்லப்போனா, உலக அரசியல்னா ஒரு பெரிய காமெடி மேடை, ஆனா அதுல நடக்குற நாடகம் சிரிப்புக்காக இல்ல; ஒவ்வொரு நாட்டுக்கும் உயிர் நிலைக்கு சம்பந்தப்பட்ட விஷயம். தம்பர் என்ன சமாதான புறவா?
  10. இந்தத் தாக்குதல் ரஷ்யாவினாலேயே சோடிக்கப்பட்டது என்று ரஷ்யா வெளியிட்ட படத்தை வைத்து அப்போதே செய்திகளில் கேலி செய்யப்பட்டது. முதலில் ரம்பும் இத் தாக்குதலைக் கண்டித்தார் பின்னர் அதனை வாபஸ் பெற்றுக் கொண்டார் என்று ஞாபகம். ரஷ்யாவும் மேற்கொண்டு தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் எதையும் வெளியிடாமல் அதனை மறந்து விட்டது. புதின் போரையே விரும்புகிறார் என்பதற்கு இது இன்னொரு சாட்சி.
  11. ஓருவனை அழிக நினைத்தால் அது திருப்பி தாக்கும், அதுவும் விரைவில், நாட்டாமைக்கு கால சரியில்லை
  12. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  13. லெபனானில் பாலங்களை குறிவைத்து தகர்த்து வரும் இஸ்ரேல்! - என்ன காரணம்? Published By: Nanthini 23 Mar, 2026 | 02:59 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) லெபனானில் உள்ள குறிப்பிட்ட சில பாலங்களை இஸ்ரேல் இலக்குவைத்து அழித்து வருவதாக சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. தெற்கு லெபனானை மத்திய லெபனானுடன் இணைக்கும் டைர் கடற்கரை நகரத்துக்கு அருகில் உள்ள காஸ்மியே பாலம் Qasmiyeh bridge ஞாயிற்றுக்கிழமை (22) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, லிட்டானி ஆற்றின் (Litani river) குறுக்கே உள்ள பாலங்களையும் அழித்து தகர்க்குமாறு இஸ்ரேல் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைக்கு எதிராக தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்த இஸ்ரேல் இராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது. லெபனான் மீது ஒரு பெரிய அளவிலான தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இனி வரும் காலங்களில் பாரிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லெபனானில் முக்கிய பாலங்களை இஸ்ரேல் இராணுவம் இலக்குவைக்க என்ன காரணம்? லெபனானில் உள்ள பாலங்களை, குறிப்பாக தெற்கில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களை இஸ்ரேல் குறிவைத்து தகர்ப்பதற்கான பின்னணிக் காரணம் குறித்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில், லெபனானில் உள்ள இந்தப் பாலங்கள் பொது மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. லெபனானின் தெற்குப் பகுதியானது ஷியா சமூகத்தினர் மற்றும் ஹிஸ்புல்லா படையினரின் கோட்டையாக கருதப்படுகிறது. அப்பகுதியை அந்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பிரித்து, தனிமைப்படுத்தி, அங்கு இஸ்ரேலிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி, தெற்கை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் இஸ்ரேல் செயற்பட்டு வருவதாக லெபனான் அஞ்சுகிறது. இது தொடர்பாக லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் கூறுகையில், “பாலங்கள் மீதான இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள் தரைவழி ஊடுருவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளது. இது பொதுமக்கள் மீதான கூட்டுத் தண்டனை மற்றும் லெபனானில் உள்ள பிரதேசங்களில் இஸ்ரேலின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களில் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்” என்கிறார். லெபனானில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களால் அங்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு தெற்கு லெபனானில் இருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அப்பகுதிக்கு திரும்பாத வகையில், மக்கள் பயன்படுத்தும் பாலங்களை தகர்த்து அழித்து, அவர்களது குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் தீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் தெரிவிக்கையில், இஸ்ரேல் எல்லைக் கிராமங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நீக்க, அங்கிருக்கும் வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். அத்துடன் அவர், காசா போரில் ஹமாஸுக்கு எதிராக கையாண்ட முறையையே, அதாவது கட்டடங்களை இடித்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பு வலயங்களை உருவாக்கிக்கொள்ளும் முறையையே இம்முறை பின்பற்றப்போவதாகவும் கூறினார். லெபனான் சுகாதார அமைச்சின் தகவலின்படி, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குறைந்தது 118 குழந்தைகள், 40 சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியான சூழல் குறித்த பகுதிகளில் உருவாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241728
  14. திராவிட தொப்புள் கொடி பந்தம் இல்லாமலா அனுரா அம்மான் யாழ்பாணத்தில் றோட்டால் சும்மா வாங்கிங் போனாலே ராஐ நடை வீர நடை கம்பீர நடை என்கின்றார்கள்.
  15. பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு Mar 23, 2026 - 03:01 PM இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 130 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmn2zkaor0002356p2io3ha2b
  16. அல்லாகு அக்பர் சொல்லி தாக்குபவர்களை அவர்களின் ஆதரவாளர்களை கட்டிபிடிப்பவர் இடதுசாரி ஓம் நமச்சிவாய சொல்பவர் வலதுசாரி நடிகர் விஜய் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் போன்று அந்தோனி அல்பானீஸ் அய்யாவும் ரம்ஜான் விழாவிற்கு சென்று தான் ஒரு இடதுசாரி என்பதை நிருபித்துள்ளார். அவர் முகம் மகிழ்ச்சியில் காணபட்டது
  17. முதல் ஆட்டம் எங்கே, எப்போது? ஐபிஎல் போட்டி அட்டவணை, அணி வீரர்கள் விவரம் பட மூலாதாரம்,ARUN SANKAR/AFP via Getty Images படக்குறிப்பு,நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2026 சீசனின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது 22 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28-ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. ஆர்சிபி அணி நடப்பு சாம்பியன் என்பதால் அவர்களின் சொந்த மைதானத்தில் இந்த சீசனின் முதல் போட்டி நடக்கிறது. முதல் போட்டியில் அந்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த புதிய சீசன் பற்றிய சில முக்கியமான கேள்விகளும் அதற்கான பதில்களும் இந்தப் பதிவில்... ஐபிஎல் 2026 எந்தெந்த நகரங்களில் நடைபெறுகிறது? 10 அணிகள் விளையாடும் இந்த ஐபிஎல் தொடர் மொத்தம் 13 நகரங்களில் நடக்கிறது. டெல்லி (டெல்லி கேபிட்டல்ஸ்), கொல்கத்தா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), லக்னௌ (லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்), சென்னை (சென்னை சூப்பர் கிங்ஸ்), ஆமதாபாத் (குஜராத் டைட்டன்ஸ்), ஹைதராபாத் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), மும்பை (மும்பை இந்தியன்ஸ்) ஆகிய 7 நகரங்களில் அந்தந்த அணிகளின் 7 ஹோம் ஆட்டங்களும் (லீக் சுற்று) நடைபெகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ப்பூர் (4 போட்டிகள்) மற்றும் கௌஹாத்தி (3 போட்டிகள்) என இரு இடங்களில் தங்கள் ஹோம் ஆட்டங்களை விளையாடுகிறது. நியூ சண்டிகர் (4 போட்டிகள்) மற்றும் தரம்சாலா (3 போட்டிகள்) ஆகிய ஊர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹோம் ஆட்டங்கள் நடைபெறும். தங்களின் 5 ஹோம் ஆட்டங்களை பெங்களூருவில் விளையாடும் ஆர்சிபி, 2 ஹோம் ஆட்டங்களை ராய்ப்பூரில் விளையாடுகிறது. மொத்தம் எத்தனை போட்டிகள் நடைபெறும்? இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும். லீக் சுற்றில் மொத்தம் 70 போட்டிகள் நடக்கும். அதன்பிறகு பிளே ஆஃப் சுற்றில், குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். அதில் 7 போட்டிகளில் தங்கள் ஹோம் கிரவுண்டிலும், மற்ற 7 போட்டிகளை எதிரணிகளின் ஹோம் கிரவுண்டிலும் ஆடுவார்கள். ஐபிஎல் 2026 சீசன் அட்டவணை 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல்கள் நடப்பதால் இந்த ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் வெளியிடப்படவில்லை. தேர்தல் நடக்கும் தமிழ்நாடு (சென்னை சூப்பர் கிங்ஸ்), மேற்கு வங்கம் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), அசாம் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகிய மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்பதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் வெளியான அட்டவணை முதல் 20 போட்டிகளுக்கு மட்டுமானதாகவே இருந்தது. முழு அட்டவணையை பிசிசிஐ இனிமேல் தான் வெளியிடும். முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை: போட்டி எண் - தேதி - நேரம் - அணிகள் - இடம் மார்ச் 28 - இரவு 7.30 மணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூரு மார்ச் 29 - இரவு 7.30 மணி - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை மார்ச் 30 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கவுஹாத்தி மார்ச் 31 - இரவு 7.30 மணி - பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - நியூ சண்டிகர் ஏப்ரல் 1 - இரவு 7.30 மணி - லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் - லக்னௌ ஏப்ரல் 2 - இரவு 7.30 மணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா ஏப்ரல் 3 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை ஏப்ரல் 4 - மாலை 3.30 மணி - டெல்லி கேபிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி ஏப்ரல் 4 - இரவு 7.30 மணி - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆமதாபாத் ஏப்ரல் 5 - மாலை 3.30 மணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் - ஹைதராபாத் ஏப்ரல் 5 - இரவு 7.30 மணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ஏப்ரல் 6 - இரவு 7.30 மணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா ஏப்ரல் 7 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கவுஹாத்தி ஏப்ரல் 8 - இரவு 7.30 மணி - டெல்லி கேபிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி ஏப்ரல் 9 - இரவு 7.30 மணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் - கொல்கத்தா ஏப்ரல் 10 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கவுஹாத்தி ஏப்ரல் 11 - மாலை 3.30 மணி - பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - நியூ சண்டிகர் ஏப்ரல் 11 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை ஏப்ரல் 12 - இரவு 3.30 மணி - லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - லக்னௌ ஏப்ரல் 12 - இரவு 7.30 மணி - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை பட மூலாதாரம்,Getty Images சென்னையில் நடக்கும் போட்டிகள் எவை? இந்த முதல் கட்ட அட்டவணையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2 ஹோம் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன அவை ஏப்ரல் 3 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. ஏப்ரல் 3 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை ஏப்ரல் 11 - இரவு 7.30 மணி - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியூரில் ஆடும் போட்டிகள் எவை? மார்ச் 30 - இரவு 7.30 மணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கௌஹாத்தி ஏப்ரல் 5 - இரவு 7.30 மணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் யார்? (இது மார்ச் 18 வரையிலான அதிகாரப்பூர்வ நிலவரப்படியான அணிகளின் விவரம்) சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), மஹேந்திர சிங் தோனி, சஞ்சு சாம்சன், டெவால் பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே, கார்திக் ஷர்மா, சர்ஃபராஸ் கான், உர்வில் பட்டேல், அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ணா கோஷ், பிரஷாந்த் வீர், மேத்யூ ஷார்ட், அமன் கான், ஜேக் ஃபோக்ஸ், ஷிவம் துபே, கலீல் அஹமது, நூர் அஹமது, முகேஷ் சௌத்ரி, நேதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், குர்ஜப்னீத் சிங், அகீல் ஹொசைன், மேட் ஹென்றி, ராகுல் சஹர். டெல்லி கேபிட்டல்ஸ்: கேஎல் ராகுல், கருண் நாயர், டேவிட் மில்லர், பென் டக்கெட், பதும் நிசன்கா, சஹில் பராக், பிரித்வி ஷா, அபிஷேக் பொரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் பட்டேல் (கேப்டன்), சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், திரிபுரணா விஜய், மாதவ் திவாரி, ஆகிப் தார், நித்திஷ் ராணா, மிட்செல் ஸ்டார், தங்கராசு நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா, லுங்கிசானி எங்கிடி, கைல் ஜேமீசன், குல்தீப் யாதவ். குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், டாம் பேன்டன், கிளென் ஃபிலிப்ஸ், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், அர்ஷர் கான், ஆர் சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், ஜேசன் ஹோல்டன், சாய் சுதர்ஷன், ஷாரூக் கான், ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சூதர், குர்னூர் சிங் பிரார், இஷாந்த் ஷர்மா, அஷோக் ஷர்மா, பிரித்வி ராஜ் யார்ரா, லூக் வுட், ராகுல் தெவேதியா, ரஷீத் கான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரிங்கு சிங், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, மனீஷ் பாண்டே, கேமரூன் கிரீன், ஃபின் ஆலன், தேஜஸ்வி சிங், ராகுல் திரிபாதி, டிம் செய்ஃபர்ட், ரோவ்மன் பவெல், அனுகுல் ராய், சர்தக் ரஞ்சன், தக்‌ஷ் கம்ரா, ரச்சின் ரவீந்திரா, ரமன்தீப் சிங், பிளெஸிங் முசர்பானி, வைபவ் அரோரா, மதீஷா பதிரானா, கார்த்திக் தியாகி, பிரஷாந்த் சோலன்கி, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, உம்ரான் மாலிக், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி. லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்: ரிஷப் பன்ட் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கி, முகுல் சௌத்ரி, அக்‌ஷர் ரகுவன்ஷி, ஜாஷ் இங்லிஸ், நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், அப்துல் சமத், ஷபாஸ் அஹமது, அர்ஷின் குல்கர்னி, வனிந்து ஹசரங்கா, ஆயுஷ் பதோனி, மொஹம்மது ஷமி, ஆவேஷ் கான், சித்தார்த் மணிமாறன், திக்வேஷ் சிங், ஆகாஷ் சிங், பிரின்ஸ் யாதவ், அர்ஜுன் டெண்டுல்கர், ஆன்ரிக் நார்கியா, நமன் திவாரி, மயங்க் யாதவ், மோசின் கான். பட மூலாதாரம்,Debarchan Chatterjee/NurPhoto via Getty Images) படக்குறிப்பு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விளையாடுகிறது மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ரயன் ரிக்கில்டன், குவின்டன் டி காக், டேனிஷ் மலேவார், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சேன்ட்னர், ராஜ் அங்கத் பவா, அதர்வா அன்கொலேகர், மயாங் ராவத், கார்பின் பாஷ், வில் ஜேக்ஸ், ஷார்துல் தாக்கூர், டிரென்ட் போல்ட், மயாங்க் மார்கண்டே, தீபக் சஹர், அஷ்வனி குமார், ராகுல் ஷர்மா, மொஹம்மது இஸார், அல்லா கசன்ஃபார், ஜஸ்ப்ரித் பும்ரா. பஞ்சாப் கிங்ஸ்: ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, விஷ்ணு வினோத், ஹர்னூர் பன்னு, பைலா அவினாஷ், பிரப்சிம்ரன் சிங், சஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ யான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், பிரியான்ஷ் ஆர்யா, முஷீர் கான், சூர்யான்ஷ் செட்கே, மிட்ச் ஓவன், கூப்பர் கானலி, பென் துவார்ஷுய்ஸ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல், வைஷாக் விஜயகுமார், யஷ் தாக்கூர், ஜேவியர் பார்ட்லெட், பிரவின் துபே, விஷால் நிஷாத், லாக்கி ஃபெர்குசன். ராஜஸ்தான் ராயல்ஸ்: ரியான் பராக் (கேப்டன்), ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, டானவன் ஃபெரீரா, லுவான்-ட்ரே பிரிடோரியஸ், ரவி சிங், அமன் ராவ் பெராலா, ஷிம்ரன் ஹிட்மெயர், யஷஷ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், யுத்விர் சிங் சராக், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டீ, க்வேனா மஃபாகா, ரவி பிஷ்னாய், சுஷாந்த் மிஷ்ரா, யஷ் ராஜ் புஞ்ஜா, விக்னேஷ் புத்தூர், பிரிஜேஷ் ஷர்மா, ஆடம் மில்ன், குல்தீப் சென், சந்தீப் ஷர்மா, நாந்த்ரே பர்கர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரஜத் பட்டிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஃபில் சால்ட், ஜித்தேஷ் ஷர்மா, ஜோர்டன் காக்ஸ், குருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட், ஜேக்கப் பெதெல், வெங்கடேஷ் ஐயர், சர்விக் தேஸ்வால், மங்கேஷ் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், விஹான் மல்ஹோத்ரா, கனிஷ் சௌஹான், ஜாஷ் ஹேசில்வுட், ராசிக் தார், சுயாஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார், நுவான் துசாரா, அபினந்தன் சிங், ஜேக்கப் டஃபி, யஷ் தயால். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: இஷான் கிஷன், அனிகேஷ் வெர்மா, ஸ்மரன் ரவிச்சந்திரன், சலில் அரோரா, ஹெய்ன்ரிக் கிளாசன், டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் பட்டேல், கமிந்து மெண்டிஸ், ஹர்ஷ் துபே, பிரைடன் கார்ஸ், ஷிவாங் குமார், கிரெய்ன்ஸ் ஃபுலேட்ரா, லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ், அபிஷேக் ஷர்மா, நித்திஷ் குமார் ரெட்டி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், இஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன், ஓன்கர் டார்மலே, அமித் குமார், பிரஃபுல் ஹிங், ஷிவம் மாவி. * காயம் காரணமாக ஒருசில போட்டிகளில் பேட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக அணியை இஷான் கிஷன் வழிநடத்துவார் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிவித்திருக்கிறது. அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டாப் 5 வீரர்கள் யார்? கேமரூன் கிரீன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 25.2 கோடி மதீஷா பதிரனா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 18 கோடி கார்த்திக் சர்மா - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 14.2 கோடி பிரஷாந்த் வீர் - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 14.2 கோடி லியாம் லிவிங்ஸ்டன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 13 கோடி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள் எவை? பட மூலாதாரம்,INDRANIL MUKHERJEE/AFP via Getty Image படக்குறிப்பு,இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்: 2010, 2011, 2018, 2021, 2023 2008 - ராஜஸ்தான் ராயல்ஸ் 2009 - டெக்கான் சார்ஜர்ஸ் 2010 - சென்னை சூப்பர் கிங்ஸ் 2011 - சென்னை சூப்பர் கிங்ஸ் 2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2013 - மும்பை இந்தியன்ஸ் 2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2015 - மும்பை இந்தியன்ஸ் 2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2017 - மும்பை இந்தியன்ஸ் 2018 - சென்னை சூப்பர் கிங்ஸ் 2019 - மும்பை இந்தியன்ஸ் 2020 - மும்பை இந்தியன்ஸ் 2021 - சென்னை சூப்பர் கிங்ஸ் 2022 - குஜராத் டைட்டன்ஸ் 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் 2024 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7071glrn1o
  18. சலே கைதுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு: செப்டம்பர் 25 இல் பரிசீலனை! Mar 23, 2026 - 01:01 PM அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. https://adaderanatamil.lk/news/cmn2v87h2000k356pe5a761p4
  19. லண்டன் வரை இரான் ஏவுகணைகள் தாக்குமா? டியாகோ கார்சியா 'தாக்குதல்' எழுப்பும் கேள்விகள் பட மூலாதாரம்,Photo by Eyad Baba / AFP via Getty Images படக்குறிப்பு,மத்திய காஸா பகுதியில் உள்ள பாலத்தீன அகதிகளுக்கான புரைஜ் முகாமில் இருந்து பார்க்கும்போது, இரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று வானில் தென்படுகிறது. கட்டுரை தகவல் நிக் எரிக்சன் பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் உள்ள பிரிட்டன் -அமெரிக்கக் கூட்டு ராணுவத் தளத்தை நோக்கி இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியிருப்பது, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலின் வெளிப்படையான தீவிரத்தைக் காட்டுகிறது. குறிவைக்கப்பட்ட இலக்கு தாக்கப்படவில்லை, ஆனால் போர் தொடங்கிய பிறகு இவ்வளவு நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று இஸ்ரேல் ராணுவம் (ஐடிஎப்ஃ) தெரிவித்துள்ளது. ஏவுகணைகளை ஏவியதை இரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை, இரானிய ஊடகங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டியே இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தோல்வியுற்ற தாக்குதலின் விளைவுகள் மற்றும் இது எதிர்காலத்தில் மற்ற சாத்தியமான இலக்குகளுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து நிபுணர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர். உதாரணமாக, பெர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பியத் தலைநகரங்கள் எதிர்காலத்தில் குறிவைக்கப்படலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், லண்டனை அடையும் திறன் கொண்ட நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் இரானிடம் இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ள கூற்றை "உறுதிப்படுத்துவதற்கான எந்த மதிப்பீடும் இல்லை" என்று பிரிட்டன் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இரான் தனது ஏவுகணைகள் பாயும் தூரத்திற்கு தானாகவே ஒரு வரம்பை நிர்ணயித்திருந்தது, ஆனால் அது இப்போது மாறிவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர். "இரானின் ஏவுகணைத் திட்டம் நீண்ட காலமாகச் சர்வதேசக் கண்காணிப்பின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது" என்று கூறும் பிபிசி நியூஸ் பெர்ஷியனின் கோன்சே ஹபிபியாசாத்,"தனது ஏவுகணை மேம்பாடு முற்றிலும் தற்காப்பு சார்ந்தது மற்றும் தேசியத் தடுப்பு உத்தியை அடிப்படையாகக் கொண்டது என்று இரான் கூறினாலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் பிராந்தியப் பாதுகாப்புச் சூழலை மாற்றக்கூடும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்"என்றும் குறிப்பிட்டார். இரானின் அணுசக்தி லட்சியங்கள் குறித்த கவலைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் தாக்குதலைத் தொடங்கிய போது மேலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. டியாகோ கார்சியா அமைந்துள்ள சாகோஸ் தீவுகள், இரானில் இருந்து சுமார் 3,800 கி.மீ தொலைவில் உள்ளன. பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் சிஎன்என் போன்ற நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன, ஆனால் எந்த ஆயுதமும் அதன் இலக்கை அடையவில்லை என்று அவை தெரிவித்தன. ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று நடுவானில் தோல்வியடைந்ததாகவும், மற்றொன்று அமெரிக்கப் போர்க்கப்பலால் இடைமறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் துல்லியமானவை என்று பிபிசி கருதுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல நகரங்கள் இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும், இரான் இத்தகைய திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கத் திட்டமிட்டிருந்ததைக் கடந்த ஆண்டே வெளிப்படுத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர், சாகோஸ் தீவுகளை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்ட பிறகு, ஒரு சமூக ஊடக வீடியோவில் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "இரான் 4,000 கி.மீ தூரம் செல்லக்கூடிய இரண்டு நிலைகளைக் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது. இந்த ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்குவதற்காக ஏவப்படவில்லை" என்று அவர் கூறினார். மேலும், "அவற்றின் தாக்குதல் வரம்பு ஐரோப்பாவின் தலைநகரங்களை அடையும். பெர்லின், பாரிஸ் மற்றும் ரோம் ஆகிய அனைத்தும் நேரடி அச்சுறுத்தல் எல்லைக்குள் உள்ளன"என்றும் குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்பு நிபுணரும், பிரிட்டன் கூட்டுப் படைக் கட்டளையகத்தின் முன்னாள் தலைவருமான ஜெனரல் சர் ரிச்சர்ட் பரோன்ஸ் உட்பட மற்றவர்கள் பிபிசியிடம் கூறுகையில், இவை அனைத்தும் இரானின் ஏவுகணை இருப்பு மற்றும் அவை எட்டும் தூரம் குறித்து மறு மதிப்பீடு செய்ய நிர்ப்பந்தித்துள்ளன என்று தெரிவித்தார். "இதற்கு முன்பு இரானின் ஏவுகணைகள் 2,000 கி.மீ தூரம் பாயும் திறன் கொண்டவை என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் டியாகோ கார்சியா 3,800 கி.மீ தொலைவில் உள்ளது." பட மூலாதாரம்,US National Archives இரான் இதுவரை தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்குத் தானே ஒரு வரம்பை விதித்துக்கொண்டதாகவும், அவற்றின் வரம்பை 1,240 மைல்களாக (2,000 கி.மீ.) மட்டுப்படுத்தியதாகவும் கூறிவந்தது. இதன் பொருள், இஸ்ரேல் இரானுடைய ஏவுகணைகளின் தாக்குதல் எல்லைக்குள் இருந்தது, ஆனால் ஐரோப்பா இல்லை என்பதாகும். இது ஒரு அரசியல் ரீதியான தேர்வு என்றும், ஏவுகணைகளைத் தயாரிப்பதில் உள்ள தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளால் அல்ல என்றும் ராணுவத் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் எடுக்கப்பட்ட முடிவு என்றும் மறைந்த ஆயதுல்லா அலி காமெனயி 2021-ஆம் ஆண்டில் கூறியிருந்தார். அவர் இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தலைத் தொடர விரும்பினார். ஆனால் இரானின் இலக்கில் இல்லாத ஐரோப்பாவை அச்சமடையச் செய்ய விரும்பவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பரில், இரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசுத் தொலைக்காட்சியில் கூறுகையில், ஐ.ஆர்.ஜி.சி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அந்த ஏவுகணையின் தூரம் குறித்த விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை. ஏவுகணை வரம்பு திறன்கள் பட மூலாதாரம்,Shomos Uddin via Getty Images படக்குறிப்பு,லண்டன் போன்ற நகரங்களை இரானிய ஏவுகணைகள் சென்றடைய முடியுமா என்பது குறித்து நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 'டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தியின்படி, இரானின் விண்வெளித் திட்டம் என்பது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை அது ஏற்கனவே உருவாக்கியிருக்கலாம் என்பதையே குறிக்கிறது என்று அமெரிக்க அதிகாரிகள் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் தேவைப்படும் போது இந்தத் தொழில்நுட்பத்தை இரான் பயன்படுத்தக் கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். சில ஆய்வாளர்களும் இதனை ஒப்புக்கொள்கிறார்கள். லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் முனைவர் கரின் வான் ஹிப்பல் பிபிசி செய்தியிடம் கூறுகையில், "ஏவுகணைகள் டியாகோ கார்சியாவை அடைந்தன என்று வைத்துக்கொண்டால்... இரானியர்கள் 10,000 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உருவாக்கி வருகின்றனர், இருப்பினும் அவற்றை நாம் இன்னும் செயல்பாட்டில் காணவில்லை," என்றார். இதன் பொருள் இரானில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியைச் சென்றடையும் சாத்தியம் உள்ளது என்பதாகும். இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சி, இரானின் ஏவுகணை வரம்பு மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,Atta Kenare / AFP via Getty Images படக்குறிப்பு,இரான் தனது நோக்கங்கள் குறித்த ஒரு செய்தியை அனுப்பவே முயற்சிப்பதாகவும், அதன் தற்போதைய ஏவுகணை வரம்பிற்கு அப்பாற்பட்ட இலக்குகளைத் தாக்குவதை இப்போதைக்கு அது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த ஏவுகணைகள் இடையில் தடுத்து நிறுத்தப்படாமல் இருந்திருந்தாலும் கூட, அவை தங்களது இலக்கை அடைந்திருக்குமா என்பது சந்தேகமே என்று சிலர் கூறுகின்றனர். பிரிட்டனின் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஸ்டீவ் ரீட் பிபிசியிடம் கூறுகையில், "இரானியர்கள் பிரிட்டனைக் குறிவைக்கிறார்கள் என்றோ அல்லது அவர்கள் நினைத்தாலும் அவ்வாறு செய்ய முடியும் என்பதற்கோ எந்தவொரு குறிப்பிட்ட மதிப்பீடும் இல்லை," என்றார். இவ்வளவு நீண்ட தூரத் தாக்குதல்களை நடத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பம், அதாவது ஏவுகணைகளை அவ்வளவு தூரத்தில் கட்டுப்படுத்தும் மற்றும் வழிநடத்தும் திறன் இரானிடம் கைவசம் உள்ளதா என்பதே இப்போதைய முக்கியக் கேள்வியாகும். மேலும் இதில் ஒரு வெளிப்படையான உளவியல் அம்சமும் உள்ளது. இரான் இந்த இலக்குகளைத் தாக்குவதை ஒருபோதும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாகத் தனது நோக்கம் மற்றும் தடுப்பு ஆற்றல் குறித்த தெளிவான எச்சரிக்கைச் செய்தியை அனுப்பவே இரான் இவ்வாறு செய்ததாகவும் சிலர் கருதுகிறார்கள். முன்னாள் இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறை அதிகாரியும், தற்போது டெல் அவிவ் நகரைத் தளமாகக் கொண்ட தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் பணியாற்றுபவருமான டேனி சிட்ரினோவிச் லண்டனின் 'தி இன்டிபென்டன்ட்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "நாளை அவர்கள் லண்டன் அல்லது பாரிஸைத் தாக்குவார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை, ஆனால் என்னைப் பொறுத்தவரை இது அவர்களின் தற்காப்பைக் கட்டமைக்க உதவும் மற்றொரு அம்சம் என நான் நினைக்கிறேன்" என்றார். இந்த வாரம் இந்தியப் பெருங்கடலில் நடந்த நிகழ்வுகளுக்கு இஸ்ரேலின் எதிர்வினை ஒரு ஆதரவு திரட்டும் முழக்கமாகவும் கருதப்படலாம். ஐரோப்பாவிற்கான முன்னாள் நேட்டோ துணைத் தளபதி ஜெனரல் சர் ரிச்சர்ட் ஷெரிஃப், பிபிசியிடம் கூறுகையில், "நிச்சயமாக இஸ்ரேல் இதைத்தான் சொல்லப்போகிறது, ஏனெனில் போரை விரிவுபடுத்துவதும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து மற்ற நாடுகளை உள்ளே கொண்டு வருவதும் அவர்களின் விருப்பமாகும்" என்றார். அவர் மேலும் கூறுகையில், "நாம் அதை எதிர்க்க வேண்டும். இது தெளிவான முடிவு அல்லது உத்தி இல்லாத டிரம்பின் போர், இது ஒரு சிக்கலான புதைகுழியாக மாறுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே அணுசக்தித் திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக எங்களிடம் கூறப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வரும் எதையும் நாம் நம்ப முடியாது"என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gdx3jzvlyo
  20. இஸ்தான்புல்லில் விபத்து : சுவிஸ் வாழ் 3 இலங்கையர்கள் பலி Published By: Digital Desk 3 23 Mar, 2026 | 04:08 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில், சுவிற்சர்லாந்து நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28) மற்றும் சிவாஸ்கரன் சுகந்தி (47) ஆகியோர் அடங்குகின்றனர். தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கி நாட்டில் கொண்டாடிய பின்னர், மீண்டும் சுவிற்சர்லாந்திற்கு திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் டாக்ஸி வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான காரணம் குறித்து துருக்கி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241739
  21. சரியான முடிவாகவே படுகிறது. பிரித்தானிய பணமுறிகளில் முதலீடு அதிகரிக்க காரணம் அமெரிக்க முறிகளில் இருந்து பல முதலீட்டாளர் வெளியேறுவது என ஒருவர் சொன்னார். டுபாயை மையமாக கொண்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்க பணமுறிகளில் இருந்து வெளியே வருமாறு இல்லை என்றால் உங்கள் நிறுவனங்களும் எமது இலக்கே என ஈரான் மிரட்டல் அனுப்பியதாக சொல்கிறார் ஒருவர். உண்மையா தெரியவில்லை. வழமைக்கு மாறாக யுத்தம், ரிசெர்சன் ஆபத்து இருந்தும் தங்கம் விலை விழுகிறது. அரபுநாடுகள் செலவுக்காக தங்கத்தை விற்பதாலாம். மத்தள போன்ற இடத்துக்கு செயல்பாட்டை மாற்றினாலே ஒழிய அரபு நாட்டு விமானசேவைகள் பல வங்குரோத்தாகும் நிலை வரக்கூடும். மத்தளவுக்கு மாற்றினாலும், எரிபொருள் கிடைப்பது சுலபம் அல்ல. விமான எரிபொருட் செலவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிமிடம் சண்டை நின்றாலும் கூட உலக எண்ணை, எரிவாயு விலையும், உஅலகன்பொருளாதாரமும் மீள 6 மாதமாவது செல்லும். உலக நாடுகள் அனைத்திலும் recession உறுதி என எண்ணுகிறேன். இப்போதை நிலை இன்னும் 1 மாதம் நீடித்தால் - depression கூட வரலாம்.
  22. இதுதான் கடைசிப் பயனாக கதை.😀 இது டூ மச் .... வருகைக்கு நன்றி கமராவில பார்துப் பார்த்து தொட்டதுக்கும் போன் செய்தபடிதான் 😂 பின்ன இருக்காதா என்ன. நானும்தான் HAPPY.😃
  23. இருவரும் அரச பயங்கரவாதிகள் , இருவரும் அடிப்படைவாதிகள் இருவரும் கட்டிப்பிடித்து உறவு கொள்வீர்கள் என்பது தெரிந்த விடயம்... அமெரிக்காவுக்கும் உதவுவார்கள்.பின்கதவால்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.