Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. தமிழுக்கு அவமானம் - ஜெயமோகன் jeyamohanMarch 15, 2026 சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று. ஆனால் விசாரித்தபோதெல்லாம் அப்படியில்லை என அவர்களில் சிலர் ஆக்ரோஷமாக மறுக்கவும் செய்தனர். வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானபீடத்தை அணுகிவிட்டார் என்பதை உள்வட்டம் வழியாகவே அறிந்தேன். கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தேன். நண்பர்களும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது அந்த விருதை வைரமுத்துவுக்காகப் பரிந்துரைத்தவர் வெங்கையா நாயுடு. ஞானபீட நிறுவனம் அப்போது மறுத்தது. வைரமுத்துவுக்கு பின்னடைவு உருவானது.பிறகு அவர்மேல் வந்த பாலியல்குற்றச்சாட்டுக்களால் மேலும் பின்னடைவு. ஆனால் கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள்(பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார். இந்திய துணைஜனாதிபதிக்கு ஞானபீடப்பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்திருக்கலாம். இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அவமதிப்புக்கு தமிழர்களாகிய நாம் பொறுப்பேற்கவேண்டும். எந்த பேரிலக்கியவாதியையும் நாம் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியதில்லை. அவர்களை அவமதிக்கும் தருணங்களை தவறவிட்டதுமில்லை. ஞானபீடப்பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டிரள்ளது. இந்த விருதை ஏன் இப்படிக் கண்டிக்கிறோம்? அகிலனுக்கு அளிக்கப்பட்ட் ஞானபீடம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் நவீன இலக்கியத்தையே இந்திய இலக்கியச் சூழலில் இருட்டடிப்பு செய்தது. அகிலனே இந்த தரம் என்றால் தமிழில் என்ன நவீன இலக்கியம் இருக்கப்போகிறது என்று சொல்லப்படுவதை ஏறத்தாழ இருபது மேடையிலாவது நானே என் காதால் கேட்டிருப்பேன். தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்றுதான் இன்றும் இந்தியச்சூழலில் பிற மொழியினரில் கணிசமானவர்கள் எண்ணுகிறார்கள். ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக மெல்ல மெல்ல அந்தச் சித்திரம் ஒரு சிறு வட்டத்தில் மாறுகிறது. ஆனால் இந்திய மொழிகளுக்கு செல்லும் மொழியாக்கங்களே இந்திய இலக்கியங்கள் பற்றிய சித்திரங்களை இந்தியச் சூழலில் உருவாக்குகின்றன. இங்கிருந்து செல்பவை நாம் பரிசளிக்கும் படைப்புகளே. வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம். இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும். நாம் மனம்தளராமலிருக்கவேண்டிய சூழல் இது. வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவார்கள் போவார்கள், சூழ்ச்சிகள் வழியாக அற்பவிருதுகளை ஈட்டுவார்கள், இலக்கியம் என்றும் வெல்லும். தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன்.அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார். https://www.jeyamohan.in/230180/
  3. தற்போதய அதிகார அரசியலுக்கு முன்னதான ஐரோப்பிய நாடுகளினிடையே அதிகார சமநிலை நிலவியதாக கூறுகிறார்கள், ஒவ்வொரு பெரிய அதிகார சக்திகளுக்கெதிராக வரலாற்றில் மற்றய நாடுகள் ஒருங்கிணைந்து அந்த பலசமனிலையினை உருவாக்கியுள்ளது இரண்ட்டாம் உலக யுத்தத்தின் பின்னர், பலச்சமனிலை அதிகார அரசியலுடன் இணைந்து காணப்பட்டாலும் பனிப்போரிற்கு பின்னரான காலகட்டத்தில் பலச்சமனிலைக்கு பதிலாக அதிகார அரசியல் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில் உக்கிரேன் இரஸ்சிய போரில் மீண்டும் இரஸ்சியாவிற்கெதிராக பலச்சமனிலை உருவாகியிருந்தது. ஆனால் தற்போதய ஈரான் யுத்தம் அதனை முற்றாக குழப்பியுள்ளது, ஜேர்மன் அதிபர் அமெரிக்க அதிபரின் இரஸ்சியாவிற்கெதிரான பொருளாதார தடை தொடர்பில் தனது அதிருப்தியினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரானிற்கெதிராக மற்ற ஐரோப்பிய நாடுகள் அணிதிரளவில்லை, ஆனால் மத்திய கிழக்கில் நிலவி வந்திருந்த அதிகார அரசியலில் ஒரு பெரிய அதிர்ச்சிகரமான தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தன்னிச்சையாக இந்தனை எதிர்கொள்ளும் நிலை ஒரு புதிய பலச்சமனிலையினை மத்திய கிழக்கில் உருவாகியுள்ளது, அது எதிர்காலத்தில் மத்திய கிழக்கில் ஒரு பனிப்போராக உருவாகலாம் அல்லது இஸ்ரேல் ஈரானிற்கெதிராக அணுவாயுதத்தினை பாவித்தாலும் ஆச்சரியப்பட தேவை இருக்காது என கருதுகிறேன்.
  4. வணக்கம் வாத்தியார் . ........! இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா ஆண் : ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு புட்டு புட்டு சொரா புட்டு தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா பெண் : ஹோ கட்டு கட்டு ஒரம் கட்டு முத்தமிட்டு மல்லு கட்டு ஜல்லி கட்டு போல முட்டு ஓ பாப்பையா ஆண் : கட்டு கட்டு புல்லு கட்டு கன்னுக்குட்டி கன்ன கட்டு அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு ஓ பாப்பம்மா பெண் : வரவா தரவா என் வெக்கத்த விட்டு புட்டு ஆண் : ஹேய் வாடி வாடி வாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் ஒத்த ராக்கெட்டு ஹே பெண் : ஹேய் வாடா வாடா வாடா வாடா சூப்பர் மார்கெட்டு வாங்கிகிறேன் வாங்கிகிறேன் பம்பர் டிக்கெட்டு ஆண் : ஹே பல்லு மொளைச்சா அட புட்டி பாலு புள்ளைக்கு அந்த வகையில் நான் யோகக்காரண்டி பெண் : ஹே பல்ல உடைப்பேன் அட சொல்லும் படி நீ கேளு அத்து மீறினா நான் ஏடாகுடம்டா ஆண் : ஹே மிசையில மண்ணு பட்டா கோழையின்னு பேரு வரும் மிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி பெண் : பொட்டபுள்ள வெக்கபட்டா பூமி மேல கண்ணு படும் கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா கண்ணே முடும்டா ஆண் : ஹேய் வாடி வாடி வாடி வாடி சைனா சிக்லெட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் ஜப்பான் ஜாக்கெட்டு பெண் : ஹேய் வாடா வாடா வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு காத்திருக்கு காத்திருக்கு காலி பக்கெட்டு பெண் : தன்னம் தனியா அட கொல்லையில தென்னமரம் கள்ளு எறக்கு அட போத வரும்டா ஆண் : ஹேய் ஒத்தையிலதான் அட காய்ச்சிருக்கு நெல்லிமரம் கில்லி பறிச்சா அடி கண்ணீர் விடுமா பெண் : வாழமரம் பழுத்திருக்கு பாரத்தில சரிஞ்சிருக்கு சாஞ்சாலும் சாஞ்சுபுடும் தாங்கிக்கொள்ளடா ஆண் : ஆலமர விழுதிருக்கு ஆடிக்கால பொழுதிருக்கு ஆசையில காத்திருக்கு உன்ன தொடத்தான் ஆண் : வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி பிஞ்சு கேரட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் லண்டன் லாக்கெட்டு பெண் : ஐ ஐயைய வாடா வாடா வாடா வாடா ஒண்டே கிரிக்கெட்டு ஆடிபுட்டா காலி ஆகும் ரெண்டு விக்கெட்டு ஹோய்.......! --- ஹே கட்டு கட்டு கீர கட்டு ---
  5. தென்றலே வாராயோ இன்பசுகம் தாராயோ ........ படம் : வாழ்விலே ஓர் நாள் ........சிவாஜி & ஜி . வரலட்சுமி .......! 😍
  6. நகைசுவைக்காணொளியாக போட்டிருக்கிறார்கள், ஆனால் நிலமை மோசமாக போகிறதோ என தெரியவில்லை!
  7. Today
  8. வீதியோரம் . மலர் . ......... 11. புத்தமதத்தவர்களுக்கு புனிதமான போயாதினம். இல்லறத்தைத் துறந்த கௌதமன் சொல்லறமாகிய ஞானத்தை பெற்றதாக கொண்டாடும் தினம். இன்று மாலையிலேயே சந்திரன் பூரண சந்திரனாய் முழுப் பிரகாசத்துடன் வானில் வலம் வரும் பௌர்ணமி தினம். அதிகாலையிலேயே அயல் கிராமத்தவர் வந்து விநோதனையும் மணிமேகலையையும் அலங்கரிக்கும் பொருட்டு அழைத்துச் சென்றுவிட்டனர். அந்த புத்தவிகாரையும் காகிதப்பூக்களாலும் வெளிச்சக்கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கு. அன்று கடையில் வருபவர்க்கெல்லாம் இலவசமாக சைவ, அசைவ உணவுகள்,குளிர்பானங்கள் மற்றும் மிதமான மதுவகைகள் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தபடியால் அந்தப் பொறுப்பு முழுவதையும் அந்தப் பெண்கள் இருவரும் மற்றும் இளைஞனும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அண்ணாச்சியும் தகவல் தெரிந்து தனது குடும்பத்துடன் வந்து கலந்து கொள்கிறார். யுகேந்திரன், சுஜிதா, அயலவர்கள் மற்றும் விகாரையைச் சேர்ந்த மாணவர்கள் என எல்லோரும் கூடி தங்கள் தங்களுக்கென ஒவ்வொரு வேலைகளையும் பொறுப்பெடுத்து மிக நேர்த்தியாக செய்துகொண்டிருக்கின்றனர்.அங்கிருந்து கடைவரை வீதியோரங்களில் எல்லாம் வண்ண வண்ண ரிசு பேப்பர்கள் முக்கோணமாய் கத்தரித்து கயிறுகளில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.கூடவே வெளிச்சக்கூடுகளும். கம்பங்களில் குலையுள்ள வாழைகளாலும் தென்னம் பாலைகளாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன.ஒலிபெருக்கியில் இரைச்சலின்றி மென்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ், சிங்களப்பாடல்கள் ஒலிக்கின்றன.வண்ணங்களாலான டியூப் லைட்டுகளும் ஒளிவீசுகின்றன. அதிகாலையிலேயே மணமக்களை அழைத்துச் சென்றபடியால் இந்த ஆரவாரமெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. காலை 10:00 மணியளவில் விகாரையினுள் அந்தப் பிரமாண்டமான பொன்னிறப் பகவான் புத்தரின் முன் தண்ணீர் தாம்பாளத்தில் தாமரைப்பூக்கள் நிறைந்திருக்க , தீபங்கள் ஒளிவீசிக்கொண்டிருக்க விஷேசமாக வருகை தந்திருந்த வணக்கத்துக்குரிய பிக்குமார்கள் எல்லோரும் கையில் விசிறிகளுடன் வரிசையாய் வெண்துகில் விரித்த ஆசனங்களில் கம்பீரமாய் வீற்றிருக்கின்றார்கள். வெளியே வெடிச்சத்தங்கள் அதிர, தாரை தப்பட்டைகள் முழங்க பட்டுத் துணிப் பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு பென்னம் பெரிய யானைகள் வருகின்றன. அவற்றின் மேலிருக்கும் அம்பாரியில் விநோதனும் மணிமேகலையும் சர்வ அலங்காரங்களுடன் அமர்ந்திருக்கின்றனர்.கடந்த சில வருடங்களாக அந்த விகாரையிலோ, அயல் கிராமங்களிலோ இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறவில்லையாதலால் அனைவரும் திரண்டு வந்து தங்கள் வீட்டு விஷேசமாக இதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த யானைகள் தங்கள் துதிக்கையைத் தூக்கி ஒருமுறை பிளிறிவிட்டு முன்னங்கால்களை மடித்து மணமக்கள் இறங்குவதற்கு வாகாய் அமருகின்றன. அவர்களும் அம்பாரியை விட்டிறங்கி செங்கம்பளத்தின் மீது நடந்து வர இருமருங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூமாரி பொழிய அவர்கள் மடாலயத்துக்குள் நுழைகின்றனர். அங்கு சென்று பகவான் புத்தரை வணங்கி விட்டு அங்கு வீற்றிருந்த கௌரவ பிக்குமார்களை சேவித்து நிற்க அவர்களும் கைகளை உயர்த்தி ஆசீர்வதிக்கின்றனர். விநோதன் பொன் சரிகைகளுடன் கூடிய சாம்பல்நிற பட்டுவேட்டியை பஞ்சகச்சமாய் முன்னால் பல சுருக்குகள் வைத்தபடி இருக்க உடுத்தியிருக்கிறான். கால்களில் வெள்ளை சாக்ஸ்கள், இடுப்பில் அகலமான தோல்பெல்ட் அதில் பொன்னாலான பொத்தான்கள்.நடுவில் பெரிய சதுரமான நவரத்தினங்கள் பதித்த கொழுக்கி மின்னுகிறது. பக்கத்தில் அலங்கரித்த உறையுடன் போர்வாள் ஒன்று. உடலில் கருப்பு நிறத்தில் பொன் பூக்களுடன் அரை கோட் போன்ற அன்றைய அரசர்காலத்து உடை, அதனுடாக மார்பின் உரோமங்கள் தெரிய தலையில் சிறிய வில்லை படுக்க வைத்ததுபோல் அலங்காரமான பட்டுக் கிரீடம். கை மணிக்கட்டில் அகலமான கங்கணம். விரல்களில் இரத்தினக்கற்கள் பதித்த கணையாளிகள், கழுத்தில் இரு பெரிய பதக்கம் சங்கிலிகள்.அதில் ஒன்று இடுப்புக்கும் கீழே இறங்கி அடிவயிறு வரை தொங்குகிறது. மணிமேகலையும் பொன்னிறப் பூக்கள் பொறித்த வெள்ளை நைலான் சேலை அணிந்திருக்கிறாள். அது கண்ணாடிபோல் உடலின் வனப்பை காட்டுகின்றது. வெள்ளை ப்ளவுஸிலும் பொன் பூக்கள் அவைகள் தெரியும்படி மெல்லிய துணியில் அணிந்த கவர் முழங்கையில் இருந்து இறங்கி சிறிது கீழே நீண்டிருக்கு. கழுத்துக்கு கீழே ப்ளவுஸ் நீள்வட்டமாய் இறங்கி இருப்பதாலும், விலாப்பக்கங்கள் நெருக்கமாய் இறுக்கி இருப்பதாலும் மார்பகங்கள் மேற்பக்கமாய் விம்மி புடைத்திருக்கின்றன. பார்ப்பவர் கண்களைக் கவரும் பொருட்டு மார்புகளின் செழுமையான மேற்பகுதிகளில் பொன்னாலான பூ ஸ்டிக்கர்கள் மின்னுகின்றன. முழுநிலவின் பாதியை முகில் மறைத்திருப்பதைப் போல் மார்பெழிலின் பாதியில் துகில் படர்ந்திருக்கு. பவுனாலான கொண்டைப்பூக்களில் இருந்து பிரியும் சிறு சங்கிலிகள் காதுகளின் இரு பக்கத்தாலும் வழிந்து வந்து தலையின் நேர் வகிட்டில் ஏறி ஊர்ந்து முன் நெற்றியில் தங்க அதில் இருந்து சிறு பதக்கம் ஒன்று முன் நெற்றியில் தொங்கிகின்றது. மூன்று சங்கிலிகளுடன் கூடிய கழுத்தில் ஒட்டியபடி இருக்கும் ஒரு நெக்லெஸ். மற்றது சரிந்து மார்பில் விழுந்து அங்கே வசதியாய் தங்குகின்றது. அடுத்தது இடைத் தாவணியையும் தாண்டி கீழிறங்கி அவளது ஆவணியுடன் லாவணி பாட இன்னொன்று நூலிடையின் கீழே இறங்கி வர அதன் நவரத்தினங்கள் பதித்த பெரிய பதக்கம் அடிவயிற்றின் கீழ் வந்து மேகலையாய் அசைகின்றது. அந்த ப்ளவுசுக்கும் சேலைக்கும் இடையில் உள்ள செழுமையான இடையை மறைக்க மனமின்றி முந்தானையும் இடதுபக்கமாய் ஒதுங்கி அங்கவஸ்திரம்போல் மேலேறி தோள்வழியாக பின்னால் மறைகின்றது. இரு கைகளின் வளையல்களில் இருந்து சிறு சங்கிலிகள் புறங்கை வழியாக இறங்கி “தவழ்ந்தோடும் மழலைகளைப் பிடித்திழுக்கும் தாய்போல்” மோதிரங்களைப் பற்றியிருக்கின்றன. அவளது கைகளில் வெண்ணிற மலர்களினாலான பெரிய மலர்க்கொத்து இருக்கின்றது...... மலர் . ......... 💫 11.
  9. அண்டத்தில் பல சூரிய குடும்பங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள் நம்ம வான் ஆராய்சியாளர்கள் அங்கு ஒரு சூரிய குடும்பத்தில் எங்கள் பூமியைப் போன்று ஒரு கோளும் உள்ளதையும் கண்டுள்ளார்கள். அக்கோளில் 40 மாதங்கள் ஒரு வருடம்போல் தெரிகிறது. அங்கு இந்தியர்களே முதலில் குடியேறுவார்கள் என ஏராளன் அவர்களும் தற்போது கண்டுபிடித்ததுள்ளார்.😂
  10. சீமானை விடுங்கோ…ஒரு தோல்வி பட இயக்குனர்…சீசனுக்கு சீசன் வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் நாலம்தர அரசியல்வாதி…. தமிழ் திரை உலகின் முடி சூடா மன்னன், 41 பேர் நெரிசலில் சாகும் அளவுக்கு சனம் கூடும் ஒரு நபர்…. அவரையே டெல்லிக்கு கொள்கை எதிரி வரை ஓட விட்டிருக்கிறார்கள்… அது மட்டும் அல்லாமல், தூசண துரைக்கும், சீமானுக்கும் சபரீசன் மூலம் சில பெட்டிகளை கொடுத்து அவர்களை கொண்டே விஜையை வெளுக்கிறார்கள். திருட்டு திமுக எண்டால் சும்மாவா😂
  11. சொந்தக்கட்சிக்காரனுக்கே இப்படிச் செய்யும் திமுக மாற்றுக்கட்சிக்காரனுக்கு அதுவும் திமுகவை கடுமையாக எதிர்க்கும் சீமானுக்கு எதிராக என்ன செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆட்சியில் இருக்கும் போது வழக்குகளைப் போட்டு அடக்கப் பார்க்கும் ஊழல்வழக்குககைளப் போட முடியாதவர்கள் மேல் பாலியல் வழக்கைச் சோடித்து அவதூறைப் பரப்பி அடக்கப்பார்க்கும் . சவுக்கு சங்கரைக் கூப்பில்வைத்த தீமுக தேர்தல் தேpதி அறிவித்தவுடன் சவுக்கு மீண்டும் வருகிறார் என்பதிலிருந்து புரிகிறது.
  12. வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து! 14 Mar 2026, 6:43 PM கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஞானபீட அமைப்பு வைரமுத்துவுக்கு ஞான பீட விருதை இன்று அறிவித்துள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு தமிழில் 1975-ல் அகிலனுக்கும், 2002-ல் ஜெயகாந்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து வைரமுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு ஞானபீட விருது கிடைத்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த விருதைவிட, தமிழ் மொழிக்குக் கிடைத்த மகுடமாகவே கருதுகிறேன்” என்றார். கடந்த காலங்களில் ஞானபீட விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது குறித்துத் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து, “தகுதியுள்ள படைப்புகள் இருந்தும் காலதாமதம் ஆனது வருத்தமளித்தாலும், இப்போது வழங்கப்பட்டிருப்பது நீதி நிலைநாட்டப்பட்டதாக உணர்கிறேன். இந்த விருது என் பேனாவுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே என் எழுத்துக்கள் இயங்கும்” என்றார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். ” தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது! காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது! தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துகிறேன்!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வைரமுத்து 7 முறை தேசிய விருதுகளையும், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதையும், மற்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/jnanpith-award-for-vairamuthu/
  13. https://web.facebook.com/photo/?fbid=26386733690956285&set=pcb.26386735687622752 காலில் மண்படாமல் சமயகிரியை செய்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்.
  14. சண்டை தொடங்கிய நேரம் எங்கேயும் எப்போதும் பறப்போம் அடிப்போம் என்று அமெரிக்கா கூறியதே பொய்யா கோப்பாலு.
  15. கடந்த வருடம் சீனா சோளம் எதையும் வாங்கவில்லை என்றும் இதனால் பல பில்லியன் நஸ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.
  16. கட்சிகள், வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் என்ன? வாக்காளர் அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள் பட மூலாதாரம்,Getty Images 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (2021-ஆண்டு கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடனேயே தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதுபற்றி அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் எந்த அளவுக்கு அறிந்து கொள்வது முக்கியமோ, அதை விட முக்கியம், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக வாக்காளர்கள் அறிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதாக நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள். இந்த விதிகள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட வேட்பாளர்களுக்கும் பொருந்தும். இந்திய தேர்தல் ஆணையத்தால் அவ்வாறு வகுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன என்பதை இங்கே பட்டியலிடுகிறோம். தேர்தல் நடத்தை விதிகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வது, உங்கள் தொகுதியில் அல்லது மாநிலத்தில் கட்சிகளோ, வேட்பாளர்களோ விதி மீறலில் ஈடுபட்டால் அவற்றைக் கண்டறிய உதவலாம். பொது நடத்தை விதிகள் 1. சாதி, மத, சமூக அல்லது மொழி ரீதியான பிரச்னைகளை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை அதிகப்படுத்தவோ காரணமாகும் செயல்களில் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது. 2. பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களது கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால நடவடிக்கைகள் ஆகியவற்றையே விமர்சிக்க வேண்டும். வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கக் கூடாது. 3. தங்களுக்கு எதிரான நிலைப்பாடு உடைய கட்சிகள் அல்லது அந்த கட்சியை சார்ந்தவர்கள் மீதான சரி பார்க்கப்படாத, உறுதிசெய்யப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; புகார்களைத் திரித்து கூறுவதையும் தவிர்க்க வேண்டும். 4. சாதி அல்லது மத அடிப்படையில் வாக்குகளை கோரக்கூடாது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தக்கூடாது. 5. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற 'ஊழல் நடவடிக்கைகளை' கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும். 6. தேர்தல் காலங்களில் ஒவ்வொரு தனி மனிதரின், அமைதியான மற்றும் தொந்தரவுக்கு உட்படுத்தப்படாத வீட்டு வாழ்க்கை மதிக்கப்பட வேண்டும். அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு தனிநபரின் வீடு முன்பாக போராட்டம் நடத்துவது, முற்றுகை இடுவது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது. 7. ஓர் இடத்திலோ கட்டடத்திலோ சுற்றுச்சுவரிலோ அறிக்கை ஓட்டுவது, பதாகைகளைத் தொங்க விடுவது, அரசியல் கட்சி வாசகங்களை எழுதுவது, கட்சிக் கொடியைப் பறக்க விடுவது ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டால், அந்த சொத்தின் உரிமையாளரிடம் அதற்கான முறையான அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும். 8. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் வேறு கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களில் பேச்சு, எழுத்து மூலமாக கேள்வி எழுப்பியோ, தங்கள் கட்சியின் துண்டறிக்கை விநியோகம் செய்தோ, தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. 9. ஒரு கட்சி பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை ஒட்டியுள்ள இடங்களில் இன்னொரு கட்சி பேரணி செல்வதை தவிர்க்க வேண்டும். 10. ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது. பட மூலாதாரம்,Getty Images பொதுக்கூட்டங்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் 1. கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும். இது முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் காவல்துறைக்கு உதவும். 2. பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் அதற்கான தடை ஏதும் உள்ளதா என்பதை கட்சி அல்லது வேட்பாளர்கள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். 3. அந்தத் தடையில் இருந்து விதிவிலக்கு வேண்டும் என்றால், போதுமான நேரம் இருக்கும் போதே அதிகாரிகளிடம் அதற்கான விண்ணப்பத்தை வழங்கி, அவர்கள் அனுமதித்தால் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். 4. பொதுக் கூட்டம் நடத்தும் இடத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிறவற்றுக்கும் ஏதேனும் அனுமதி அல்லது உரிமம் தேவைப்படுமானால் தொடர்புடைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அதற்கான அனுமதி அல்லது உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 5. பொதுக்கூட்டம் ஒழுங்காக நடை பெறுவதற்கு தடையாக அந்த கூட்டத்தில் இருக்கும் யாரேனும் செயல்பட்டால் அந்த கூட்டத்தை நடத்துபவர்கள் அந்த தனிநபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; அவர்கள் காவல்துறையைத்தான் நாட வேண்டும். பேரணிகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் 1. பேரணி தொடங்கும் மற்றும் முடியும் இடங்கள், கடந்து செல்லும் பாதை, நேரம் ஆகியவை முன்கூட்டியே முடிவு செய்யப்பட வேண்டும். பேரணி நடக்கும் நேரத்தில் மேற்கண்டவற்றில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. 2. போதிய ஏற்பாடுகள் செய்யப்படுவதற்காக பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உள்ளூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 3. பேரணி கடந்து செல்லும் பாதையில் தடை ஏதும் அமலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும். 4. பேரணி செல்லும் பாதையில் போக்குவரத்து இடையூறு அல்லது தடை ஏதும் ஏற்படாமல் இருப்பதை பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். 5. மிக நீளமான பாதையில் பேரணி செல்லுமானால் பேரணி செல்லும் பாதை, பகுக்கப்பட்டு போக்குவரத்து இடையூறு ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். 6. காவல்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதுடன் மட்டுமல்லாமல் இயன்றளவு பேரணி சாலையின் வலது பக்கமாகவே இருக்க வேண்டும். 7. ஒரே பாதையில் அல்லது ஒரே சாலையின் பகுதியில், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் பேரணி நடத்த திட்டமிட்டால், பேரணி செல்பவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வதை தவிர்க்கும் நோக்கில் அதை ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும். 8. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பேரணி செல்லும் இருவேறு தரப்பினர் இடையே சுமூகமான முடிவு எடுப்பதற்காக உள்ளூர் காவல்துறையின் உதவியையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் இயன்ற அளவில் விரைவாக நாடலாம். 9. விரும்பத்தகாத சக்திகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ள பொருட்களை பேரணியில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். பேரணியிபோது கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். 10. பேரணியின்போது பிற அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் தலைவர்களை உருவகிக்கும் உருவ பொம்மைகளைக் கொண்டுசெல்வது அவற்றை எரிப்பது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr45y1qz3xzo
  17. “22 மனைவிகளுக்கும் அப்படியே செய்தேன்” சுமார் 22 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண மன்னன் பொலிஸாடம் வசமாக சிக்கியிருக்கிறார். கணவனை இழந்த பெண்களை குறிவைத்து கல்யாண மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த நபர் மீது பொலிஸ் எடுத்த நடவடிக்கை என்ன? அவர் ஊருக்கு ஒரு மனைவி, மாவட்டத்திற்கு ஒரு மனைவி, வருடத்திற்கு ஒரு கல்யாணம் என ஹனிமூனிலேயே காலம் கடத்தியிருக்கிறார் இந்த 56 வயதான கேரளத்து கல்யாண ராமன். பொண்டாட்டிகளுக்கு போண்டா டீ வாங்கிக் கொடுக்கவே வருமானம் பத்தாது என்ற சூழலிலும், திருட்டு நகைகளைப் போட்டு அழகு பார்க்க நினைத்தவர் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் வசமாக சிக்கியது எப்படி? திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து 7 பவுன் தங்க சங்கிலியை பாகுலேயன் பறித்துச் சென்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் ஆற்றிங்கல் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். விசாரணையில், திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்த 56 வயதான பாகுலேயன்தான் திருடியது என்பதை கண்டுபிடித்தனர். அவரை மடக்கிப்பிடித்த பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது மனைவிக்காக நகைப் பறிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். அப்படியானால் உனது மனைவியையும் விசாரிக்க வேண்டும் என பொலிஸார் கூறியுள்ளனர். அதற்கு எந்த மனைவியை விசாரிக்கப் போகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்படியானால், உனக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்களா? என பொலிஸார் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதிலைக் கேட்டு பொலிஸாருக்கு பொறி ஏறியிருக்கிறது. மாவட்டத்திற்கு ஒரு மனைவி என 22 மனைவிகள் தனக்கு இருப்பதாக அவர் கூற அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போயுள்ளனர். அதாவது பாகுலேயன் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்த பெண்கள் என கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்திருக்கிறார். ஒரு ஊரில் சுந்தரம் என்றால், மற்றொரு ஊரில் விஜயன், வேறொரு ஊரில் பாபு என ஊருக்கு ஒரு பெயரை வைத்துக்கொண்டு தனது உருட்டு வேலையை அரங்கேற்றியிருக்கிறார். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார். “22 மனைவிகளுக்கும் அப்படியே செய்தேன்”
  18. QR சிக்கலா? 1919க்கு அழைக்கவும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் (National Fuel Pass) ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR குறியீடு நடைமுறை, தற்போது முழுமையாக மீளமைக்கப்பட்டு தடையின்றி இயங்கி வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்கால எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக, வாகன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. அதற்கமைய, வாகன உரிமையாளர்கள் தமக்குரிய பிரிவைத் தெரிவு செய்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பின்பற்ற வேண்டிய 3 முக்கிய படிநிலைகள்: மாற்றங்கள் இல்லாதவர்கள்: ஏற்கனவே QR குறியீடு வைத்திருப்பவர்கள் மற்றும் வாகன உரிமையிலோ அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திலோ எவ்வித மாற்றமும் இல்லாதவர்கள், தங்களின் பழைய QR குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும். QR குறியீட்டைத் தொலைத்தவர்கள்: முன்னர் பதிவு செய்து, தற்போது அந்த QR குறியீட்டைத் தொலைத்தவர்கள் அல்லது தொலைபேசியிலிருந்து நீக்கியவர்கள் (தகவல்கள் மாறாத பட்சத்தில்) மீண்டும் புதிதாகப் பதிவு செய்யத் தேவையில்லை. இணையத்தளத்தில் உள்நுழைந்து (Login), தொலைபேசிக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் பழைய QR குறியீட்டை மீண்டும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். புதிய பதிவுகள் மற்றும் மாற்றங்கள்: இதுவரை பதிவு செய்யாதவர்கள், புதிதாக வாகனம் வாங்கியவர்கள் (உரிமை மாற்றம் செய்தவர்கள்) அல்லது முன்னர் பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தைத் தற்போது பயன்படுத்தாதவர்கள், இணையத்தளத்தில் புதிதாகப் பதிவு செய்தல் அவசியமாகும். எரிபொருள் நிலையங்களில் நெரிசலைக் குறைக்கவும், வினைத்திறனான சேவையை உறுதிப்படுத்தவும் இந்த அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறு வாகன உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக விபரங்கள் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு, அரச தகவல் மையத்தின் 1919 என்ற விசேட இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும். QR சிக்கலா? 1919க்கு அழைக்கவும்
  19. மற்றுமொன்றுக்கும் QR முறைமை வருகிறது உர விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக QR குறியீடு (QR Code) நடைமுறையை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான முன்னோடித் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்தார். உரங்களை விநியோகிக்கும்போது இத்தகைய QR முறைமையைப் பின்பற்றுவது அவசியமானது என்று குறிப்பிட்ட அமைச்சர், இதற்கான முன்மொழிவுகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டில் தற்போது போதுமான அளவு உரக் கையிருப்பு உள்ளதால், உரத் தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை என அமைச்சர் உறுதியளித்தார். இருப்பினும், சில தனியார் நிறுவனங்களும் கறுப்புச் சந்தை வியாபாரிகளும் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட உரங்களின் விலையை அநியாயமாக உயர்த்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது ஒரு மூட்டை உரம் 12,000 முதல் 13,000 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இது குறித்து மேலும் கூறியதாவது: "அநியாயமான முறையில் விலையை உயர்த்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். நுகர்வோர் விவகார அதிகார சபையும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்." இந்தச் சிறுபோகத்தில் உரப் பிரச்சினை பெரிய அளவில் ஏற்படாது என்றும், எதிர்வரும் மே மாதம் சீனாவிலிருந்து ஒரு தொகுதி உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் மற்றுமொன்றுக்கும் QR முறைமை வருகிறது
  20. தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்று (15.03.2026) முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியத் தேர்தல் ஆணையம், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களுக்கான கீழ்க்காணும் கால அட்டவணையை அறிவித்துள்ளது: தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் (மற்றும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள்) - 30 .03.2026 (திங்கட்கிழமை). வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் - 06.04.2026 (திங்கட்கிழமை) பெறப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாள் - 07.04.2026 (செவ்வாய்க்கிழமை) வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் - 09.04.2026 (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நாள் - 23.04.2026 (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நாள் - 04.05.2026 (திங்கட்கிழமை) தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறும் நாள் - 06.05.2026 (புதன்கிழமை) மேற்கண்ட தேர்தலுக்கான தேர்தல் நன்னடத்தை விதி (Model Code of Conduct) 15.03.2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நன்னடத்தை விதி அனைத்து வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் மத்திய / மாநில அரசுகளுக்கும் பொருந்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
  21. மேலோட்டமாக வேகமாக பதிவுகளை நோட்டமிட்ட போது அகதி முகாமில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஒருவர் இணைந்தார் என விளங்க பார்த்தேன்.
  22. ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு ; பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - இந்தியா டுடே மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை! Published By: Digital Desk 1 15 Mar, 2026 | 02:50 PM இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் 2026' (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், இலங்கையின் காலி மற்றும் கொழும்பு கடற்பரப்புக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான IRIS Dena என்ற கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட ஈரானிய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிர் தப்பியவர்கள் காலி மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எப்போதும் சர்வதேச வர்த்தகத்திற்கான பாதுகாப்பான வலயமாகவே கருதப்பட்டது. ஆனால், ஒரு வெளிநாட்டு போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், இதில் இந்தியா ஒரு முக்கிய தலைமைத்துவப் பாத்திரத்தை வகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமது கடற்பரப்புக்கு மிக அருகில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் முறையான விளக்கத்தைக் கோர வேண்டும் என்று அவர் கூறினார். நமது கடல் எல்லையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளும் இறையாண்மை அதிகாரம் இலங்கைக்கு உள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். எரிபொருள் இறக்குமதி மற்றும் தொழிலாளர் பணம் அனுப்புதல் பாதிக்கப்படலாம். இலங்கைத் தேயிலையின் முக்கிய வாங்குநராக ஈரான் இருப்பதால், வர்த்தக ரீதியான பாதிப்புகள் ஏற்படும். சுற்றுலாத்துறையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஈரானிய வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படும் செய்திகளுக்குப் பதிலளித்த அவர், இலங்கை தனது மனிதாபிமானக் கொள்கைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்களை எடுக்கும் என்றும், நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார். அத்துடன், கூடுதலாக, கச்சத்தீவு விவகாரத்தில் 1974 ஒப்பந்தத்தின்படி அது இலங்கைக்குச் சொந்தமானது என்றும், தமிழக மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தமிழக அரசுடன் சிறந்த பேச்சுவார்த்தைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கை தனது மண்ணில் வெளிநாட்டு இராணுவ முகாம்களை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், அனைத்து நாடுகளுடனும் சமநிலையான உறவையே பேணுவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241028
  23. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கேன் மற்றும் போத்தல்களுக்கு தடை Published By: Digital Desk 3 15 Mar, 2026 | 12:08 PM நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.Geographic Reference இன்றையதினம் காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் அனைத்து நிலையங்களும் இந்தத் தொழில்நுட்ப முறைமையுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செல்லுபடியாகும் கியூ.ஆர் குறியீடு இருந்தாலும், போத்தல்கள், கேன்களில் எந்த காரணம் கொண்டும் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளார். முறையாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாத்திரமே நேரடியாக எரிபொருள் விநியோகிக்கப்படும். கியூ.ஆர் குறியீட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்துடன் நுகர்வோர் வருகை தர வேண்டும். வேறொருவரின் குறியீட்டைப் பயன்படுத்தியோ அல்லது மாற்று வாகனத்தில் வந்தோ எரிபொருள் பெற முயற்சித்தால், எரிபொருள் வழங்கப்போவதில்லை என உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்பத்தில் சில நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், தற்போது முறைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த குமார ராஜபக்ஷ , புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் இன்னும் கியூ.ஆர் குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கு அரசாங்கம் விரைவில் தீர்வை வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "இந்த முறையைச் சரியாக அமுல்படுத்துவதில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. பொதுமக்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள எமது ஊழியர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/241017
  24. பாரிஸில் அமெரிக்கா - சீனா உயர்மட்டப் பேச்சுவார்த்தை Published By: Digital Desk 3 15 Mar, 2026 | 02:15 PM அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளைச் சீர்செய்வதற்கும், எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் பீஜிங்கில் நடைபெறவுள்ள ட்ரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பிற்குப் பாதை அமைப்பதற்கும் ஏதுவாக, இரு நாடுகளின் உயர்மட்டப் பொருளாதார அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பாரிஸில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளனர். அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் மற்றும் சீன உப பிரதமர் ஹி லிபெங் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளது. அமெரிக்காவின் சோயாபீன்ஸ் உட்பட விவசாயப் பொருட்களைச் சீனா கொள்வனவு செய்வது தொடர்பான இணக்கப்பாடுகள் மீளாய்வு செய்யப்படும். ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் மற்றும் அதன் விளைவாக ஹோமுஸ் நீரிணை முடக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள மசகு எண்ணெய் விலை உயர்வு குறித்து இரு தரப்பும் அவதானம் செலுத்தவுள்ளன. சீனா தனது மசகு எண்ணெய் தேவையில் 45 சதவீதத்தை இந்த நீரிணை ஊடாகவே பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அக்டோபரில் தென் கொரியாவின் பூசான் நகரில் எட்டப்பட்ட தற்காலிக வர்த்தக உடன்படிக்கையின் முன்னேற்றங்கள் தொடர்பில் இரு நாடுகளும் ஆராயவுள்ளன. சீனா இதுவரை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள போதிலும், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி துறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக உள்ளது. https://www.virakesari.lk/article/241029
  25. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது? வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரம் பட மூலாதாரம்,ANI 15 மார்ச் 2026, 05:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார். இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி வெளியாகிறது. அசாமில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளாவிலும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படுகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் : 30-03-2026 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் : 06-04-2026 வேட்புமனு பரிசீலனை : 07-04-2026 வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் : 09-04-2026 வாக்குப் பதிவு நாள் : 23-04-2026 வாக்கு எண்ணிக்கை : 04-05-2026 தமிழ்நாட்டில் 2021ல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன் ஐந்தாண்டு கால ஆட்சிக் காலம் மே மாதம் முடிவுக்கு வருகிறது. அதேபோன்று, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக ஆட்சி கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. செய்தியாளர் சந்திப்பில் கூறியது என்ன? தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: "இந்தியாவின் கலாசார செறிவையும் பன்முகத்தன்மையையும் தேர்தல்கள் பிரதிபலிக்கின்றன. இதை நோக்கமாகக் கொண்டே எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தகுதிவாய்ந்த ஒரு நபர் கூட விடுபடக் கூடாது என்ற நோக்கில் இந்த பணிகள் நடத்தப்பட்டன. பிஎல்ஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்." என்றார். மேலும், முதன்முறை வாக்காளர்கள் இது மிக முக்கியமான உரிமை. வாக்களிக்கும் உரிமை. அதில் ஆர்வமாக ஈடுபட வேண்டும். அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமாக 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 8.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர். தேனி மாவட்டம் வருஷநாடு பகுதிக்கு பயணிக்க மூன்று மணிநேரமாகும். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் வாக்கு சதவிகிதம் தெரிவிக்கபடும். அனைத்து பிஎல்ஓக்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அனைத்துக் கட்சிகளுடனும் ஏற்கெனவே பலமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 75032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். வாக்குச்சாவடிகளில் கழிவறை, குடிநீர், சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நிலவரம்? 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பிரதானமாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகளுடன் புதிதாக சில கட்சிகளும் இணைந்துள்ளன. தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் சமீபத்தில் இணைந்தார். இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் (மூன்றில் திமுக சின்னத்தில் போட்டியிடும்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், அதிமுக கூட்டணியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2021 தேர்தலில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக-அதிமுக இரு கட்சிகளும் பிரிந்து இருவேறு கூட்டணிகளாக களம்கண்டன. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்கின்றன. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் அதே கூட்டணியில் நீடிக்கிறது. கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து களம்கண்ட அமமுக இம்முறை அதிமுக கூட்டணியிலேயே இணைந்துள்ளது. இதுதவிர, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம் போலவே தனித்து போட்டியிடுகிறது. புதிதாக உருவாகியுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது. 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொண்டர் உருவாக்கிய கட்சியில் தான் இணைந்துள்ளதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியுள்ளார். புதுச்சேரியில் நிலவரம் என்ன? புதுச்சேரியைப் பொறுத்தவரையிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து போட்டியிட்டு ஆட்சியை அமைத்தன. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. என்ஆர் காங்கிரசின் ரங்கசாமி முதலமைச்சரானார். இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகின்றன. 2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மீண்டும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலைப் போன்றே தற்போதும் பாஜக , என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்பதாக அறிவித்துள்ளன. தொகுதிப்பங்கீடு குறித்த இறுதியான முடிவு வெளியாகவில்லை. மறுபுறம், காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4z7qrgeppo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.