Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. காலங்கள் ஓடிவிட்டது காட்சிகளும் மாறிவிட்டது. இறுதி யுத்தம் நடந்த வருடத்தில் 5 வயசு குழந்தையாக இருந்ததுக்கு இப்போ 22 வயசு வாலிப பருவம், அதற்கு இலங்கையில் என்ன நடந்தது என்றே தெரியாது எடுத்து சொல்லவும் சிங்கள படைகளுக்கும் நாலாம் மாடிக்கும் அஞ்சி எந்த உறவுகளுக்கும் துணிச்சல் இல்லை இன்றைய தலைமுறை ஓடி ஓடி இன்று பண்ணைக்கடலில் நடந்த சிங்க கொடிகளுடன் நடந்த படகுகளின் காணொலியை தரவேற்றி காசு பார்க்கிறார்கள். தமிழர் பிரதிநிதிகள் எனப்படுவோர் தமது வேலைகளில் பிஸி, இலங்கை பிரச்சனையில் பொறுப்புக்கூறல் என்று ஓரளவு நம்பிக்கை தந்த சர்வதேசமும் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை கவனிக்கவே நேரமில்லாமல் நமது பிரச்சனையை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலமை. தாயகம் பற்றி பொங்கியெழுந்த புலம்பெயர் உறவுகளின் எண்ணிக்கையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனமாதிரி 95% பேர் எப்போவாச்சும் நேரம் கிடைச்சால் மட்டுமே இலங்கை பிரச்சனைபற்றி பேசும் நிலமை எவரும் இனப்பிரச்சனைபற்றி பேசுவதாய் காணோம் இன்றைய பிரச்சனை பற்றியே பெரும்பாலானோரின் கவலை. எந்த ஆட்சி மாறினாலும் சிங்களவன் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதிலும் மத அடையாளங்களை நிறுவுவதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் நிலை. கொழும்பிலிருந்து யாழுக்கும் யாழில் இருந்து கொழும்புக்குமென தமிழரும் சிங்களவரும் மாறி மாறி களியாட்டம். இனி, இலங்கை தமிழருக்கு இங்கே என்ன பிரச்சனை எதுக்கு குட்டையை குழப்புகிறீர்கள் என்று சிங்களவர்கள் அல்ல இன்றைய இளைய தமிழ் சமுதாயமே கேட்கபோகும் ஜீரணித்தே ஆகவேண்டிய கசப்பு உண்மையை காலம் வாயில் திணிக்கும் நிலை, மிக அருகில் உள்ளது , கண்டிப்பாக விழுங்கியே ஆகவேண்டிய பரிதாபம்தான் என் வசம்.
  3. இந்தியா அணி கோப்பையை வென்று விடும் இந்த‌ முறை இங்லாந்தும் ந‌ல்லா விளையாடுகின‌ம் இந்தியா அணியில் நிறைய‌ திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள் ஜ‌பிஎல்ல‌ சென்னை அணிக்கு விளையாடின‌ வீர‌ர் தான் இந்தியா அணியின் க‌ப்ட‌ன் ராஜ‌ஸ்தான் அணியில் விளையாடும் சிறுவ‌னின் ஆட்ட‌ம் விய‌க்க‌ வைக்குது............................. அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளுக்கு வ‌ய‌து கூட‌ ஆனால் குறைச்சு கொடுக்கின‌ம்............ ர‌சித் ஹான் 1998 பிற‌ந்த‌வ‌ர் என்றால் யாரும் நம்புவின‌மா...........கிட்ட‌ த‌ட்ட‌ எல்லா அப்கான் வீர‌ர்க‌ளும் வ‌ய‌து விடைய‌த்தில் கிள‌றுப‌டி செய்ப‌வ‌ர்க‌ள்......................
  4. அந்தப் பையனுக்கு யார்தான் விசிறியில்லை. இந்த சின்ன வயசிலேயே, எவ்வளவு பக்குவம். அதுவும், இந்தியாவில் இருக்கின்ற அழுத்தம். எல்லாவற்றையும் தாண்டி, விளையாட்டைக் காட்டவேணும் .
  5. நீங்களும் என்னைப்போல ..வைபவின் ரசிகர் போல...பெரிய ரி20 ரீம்போல ..கடைசிவரை வெளுத்து வாங்கக் கூடியவர்கள் ...எப்ப எவர் அடிப்பார்கள் தெரியாது ...பட்டாசு முதலில் வெடித்துவிட்டால் ...செம கொண்டாட்டம் ...பட்டாசு பீச்சிக்கிட்டாலும் ...5ம் 6ம் ஆளே வெளுத்து வாங்குவார்கள் .... அது பிச்சின் தன்மை போல இருக்கு...இரண்டுபக்கத்துக்கும் பொதுவாக இருந்தது ..என்றாலும் இந்தியாவின் வேகம் மிக அதிகம் ..ஆப்கானில் கள்ள சர்ட்டிபிக்கட் இலகுவாக எடுக்கலாம் போல கிடக்கு
  6. Today
  7. எம்.பி.கமல்ஹாசன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் ஆற்றும் முதல் உரை இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் பேசிய அவர், ``இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள். கமல்ஹாசன் இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது. 'ஸ்பெல்' என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. பீகார் ஏற்கனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது. இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் (தீதி) இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனது தேசம் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த அவைக்குள் வந்து தங்கள் மக்களுக்காகப் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. எனக்கு அந்தத் திரைத்துறையின் வாயிலாக இந்தக் கதவு திறந்தது. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு குழந்தையைச் சினிமா புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தச் சினிமாதான் எனக்குத் தமிழ் வரலாற்றை அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வாக்குறுதிக்கும், யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நான் உணர்ந்தேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என். அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969, பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். ஸ்டாலின், கமல்ஹாசன் இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். எனது அன்பு நண்பர் மு.க ஸ்டாலினுக்கு எனது நன்றி. பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான், பொருளாதாரம் பற்றிப் பேசத் தகுதியற்றவன் என்று நீங்கள் சொல்லலாம். இருந்தாலும், ஒரு மாணவனாக எனக்கு ஒரு கருத்து உண்டு. கோபமில்லாமல் இந்தப் பேச்சை எழுத காந்தி உதவினார், தர்க்கத்தை (Logic) சேர்க்க பெரியார் உதவினார், இந்த அவையைப் புரிந்துகொள்ள அண்ணா உதவினார். கடைசியாக ஒன்று, மொழிப்போர் என்ற காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு (AI) வந்துவிட்டது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உள்ளது. பாரதப் பிரதமர் காசி தமிழ்ச் சங்கமத்தில் பேசியபோது, அவரது பேச்சு ஐந்து நிமிடங்களில் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களது சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்." என்றார். கமல்ஹாசன் தமிழில் உரையைத் தொடர்ந்தவர், ``நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிரீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன் (கமல் பேசியது அப்படியே). தமிழ் என்றும் வாழும் நலமுடன்." என்றார். ``வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ" - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் | "Will 'living corpses' be created, at least on paper?" - Kamal Haasan in Parliament - Vikatan
  8. askar Jayraman Mookkammal est à Bhavani Homeo Pharmacy. · Suivre troSeospndi0: jm9a8i30g19u95mg20g,52716n5a0l9508g1hur 4e5vff · வீடு_வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான். அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை. “கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள். பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?” “கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள். “ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான். ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான். அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள். அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது. “இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!” அவளுக்கு கண்கள் பனித்தன. அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான். நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226) பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம்.......!
  9. (INTERESTING STORIES) படித்ததில் பிடித்தது · Balaji Srinivasan ·rspdoonetS 27405i9125a46famuih256i9164ahc0ac1ff786mi1a7g9502 · 1960-ல வாஷிங்டன்ல இருக்குற அந்த மருந்து கட்டுப்பாட்டு ஆபீஸ்க்குள்ள ஒரு சிங்க பெண்மணி கால எடுத்து வைக்குறாங்க, அவங்க பேருதான் டாக்டர் பிரான்சிஸ் கெல்சி. வேலைக்குச் சேர்ந்து முதல் நாளே அவங்க டேபிள்ல ஒரு ஃபைல் வந்து விழுது, அந்த ஃபைல்ல இருந்தது 'தாலிடோமைடு' அப்படிங்கிற ஒரு மருந்து. அவரோட கையெழுத்து அந்த ஃபைலக்கு தேவை அந்த நேரத்துல ஐரோப்பா முழுக்க அந்த மாத்திரை ஒரு 'மேஜிக் மருந்து' மாதிரி பேசப்பட்டுச்சு, குறிப்பா கர்ப்பமா இருக்குற பொம்பளைங்களுக்கு வர்ற அந்த வாந்தி, மயக்கம், அப்புறம் தூக்கம் வராம தவிக்கிற கஷ்டத்துக்கு இதுதான் பெஸ்ட்னு எல்லாரும் அடிச்சுக்கிறாங்க. அந்த மருந்து கம்பெனிக்காரங்க "ஏற்கனவே ஊர் முழுக்க வித்துக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துமஸ் குள்ள அமெரிக்காவுல கல்லா கட்டணும், சீக்கிரம் கையெழுத்தப் போடுங்கம்மா"ன்னு அவசரப்படுத்துறாங்க. ஆனா அந்த அம்மா சாதாரண ஆள் இல்ல, அவங்க கண்ணு அந்த ஃபைல்ல இருக்குற ஓட்டையக் கண்டுபிடிச்சிருச்சு. "எல்லாரும் விக்கிறாங்க சரி, ஆனா இந்த மருந்தால வயித்துல இருக்குற அந்தப் பச்சை மண்ணுக்கு என்ன ஆகும்னு நீங்க சரியா சொல்லலையே?"ன்னு கேட்டு அந்த ஃபைலை தூக்கி எறிஞ்சாங்க. அவ்வளவுதான், அந்த மருந்து கம்பெனிக்காரங்களுக்கு உச்சந்தலையில கோவம் ஏறிடுச்சு, "எங்ககிட்டயே வேலையைக் காட்டுறியா?"ன்னு இறங்குறாங்க. அவங்க மேலதிகாரிகளுக்குப் போன் போடுறது, அந்த அம்மாவை "உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ ஒரு லூசு, நீ ஏதோ பவர்ல இருக்கோம்னு ஆட்டம் போடுற"ன்னு அசிங்கப்படுத்துறதுன்னு இறங்குனாங்க. இன்னைக்கு இருந்தா கூட ஒரு பொண்ணு ஒரு பெரிய கம்பெனியை எதிர்த்து நிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு யோசிச்சுப் பாருங்க, அன்னைக்கு 1960-ல அந்த சிங்க பெண்மணி சுத்தி இருந்ததெல்லாம் ஆம்பளைங்க அதிகாரம், அவங்க கொடுத்த டார்ச்சர்ல அந்த அம்மா நினைச்சிருந்தா "போனா போகுது, எல்லாரும் கையெழுத்து போடுறாங்க நாமளும் போட்டுருவோம்"னு ஒதுங்கியிருக்கலாம். ஆனா அந்த அம்மாவுக்குத் தன்னோட படிப்பு மேலயும், அந்த நேர்மை மேலயும் இருந்த நம்பிக்கை பெருசு. "நீ என்ன வேணா பண்ணு, எனக்குச் சரியான பதில் கிடைக்கிற வரைக்கும் பேனா முனையைக் கூட அசைக்க மாட்டேன்"னு ஒத்தக் கால்ல நின்னாங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷம் அந்த கம்பெனியோட மிரட்டலைத் தாங்கிக்கிட்டு அந்த ஃபைலை லாக் பண்ணி வச்சாங்க. 1961-ல ஜெர்மனியில இருந்து வந்த அந்த நியூஸ் உலகத்தையே நடுங்க வச்சிருச்சு. அந்த மருந்தைச் சாப்பிட்ட தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் கை, கால் இல்லாம, வெறும் முட்டி மட்டுமோ இல்ல சின்னதா மீன் துடுப்பு மாதிரி வளர்ந்த உறுப்புகளோட பிறக்க ஆரம்பிச்சது. பத்தாயிரம் குடும்பம் உருக்குலைஞ்சு போச்சு, பாதி குழந்தைங்க பிறந்த சில நாளுலயே செத்துப் போச்சு. அந்த நேரத்துலதான் அமெரிக்காவுக்கு உறைச்சது, அந்தப் பெண் சிங்கம் மட்டும் அன்னைக்கு மிரட்டலுக்குப் பயந்து கையெழுத்துப் போட்டிருந்தா, இன்னைக்கு அமெரிக்காவுல எத்தனையோ குடும்பம் கண்ணீர்ல மிதந்திருக்கும். அன்னைக்கு அவங்க தடுத்தது ஒரு பேப்பர் இல்ல, ஒரு தலைமுறையோட அழிவை. இதைக் கேள்விப்பட்ட உடனே அதிபர் கென்னடி அந்த பெண்மணி கூப்பிட்டு மெடல் கொடுத்து கௌரவிச்சாரு. பிரான்சிஸ் கெல்சி 90 வயது வரை அதே துறையில் பணியாற்றி, லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றினார், இது நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடம், அதாவது ஊரே ஒரு பக்கம் போனாலும், நாம் செய்வது சரி என்று நமக்குத் தெரிந்தால், அந்த நேர்மைக்காகப் போராடத் தயங்கக்கூடாது. இன்று அமெரிக்காவில் ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டிருக்கும் எத்தனையோ தலைமுறையினர், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தப் போராட்ட குணமிக்கப் பெண்ணுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள், நிஜமான வீரம் என்பது சண்டை போடுவது மட்டுமல்ல, தர்மத்திற்காகத் தனித்து நின்று 'வேண்டாம்' என்று சொல்லும் அந்தத் துணிச்சல்தான் என்பதை அவர் நிரூபித்துவிட்டார். இவ்வளவு பெரிய அநியாயத்துக்கு அப்புறம்தான், உலகத்துல ஒரு மருந்து மார்க்கெட்டுக்கு வரணும்னா அது எவ்ளோ கடுமையான டெஸ்ட்டுகளைத் தாண்டணும்ங்கிற அந்த 'எஃப்.டி.ஏ' (FDA) சட்டமே இன்னும் ஸ்ட்ராங் ஆச்சு. ஒரு தனி மனுஷியோட பிடிவாதம், இன்னைக்கு நாம சாப்பிடுற ஒவ்வொரு மாத்திரையோட பாதுகாப்புக்கும் அஸ்திவாரமா இருக்கு. அந்த அம்மா 101 வயசு வரைக்கும் வாழ்ந்துட்டு 2015-ல தான் இயற்கை எய்தினாங்க, நிஜமாவே அவங்க ஒரு நடமாடும் தெய்வம் தான். வணக்கம் பாலாஜி ஸ்ரீனிவாசன்.....!
  10. நல்ல காலம் பல்துலக்கும் பொருள் ஒன்று தொண்டையை அறுக்கும் வாளாக மாற இருந்தது ........! 😚
  11. அதிகூடிய வெற்றி இலக்கைக் கடந்த அணி என்ற சாதனையுடன் 19இன் கீழ் உலகக் கிண்ண அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா Published By: Vishnu 04 Feb, 2026 | 09:13 PM (நெவில் இந்தியா) ஹராரே, குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்றைய தினம் (04) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்களால் மிக இலகுவாக இந்தியா வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்த்தாடவுள்ளது. ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 311 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 41.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 311 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய வெற்றி இலக்கை விரட்டிக்கடந்த அணி என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியது. இலங்கையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 305 ஓட்டங்களை நியூஸிலாந்து விரட்டிக்கடந்து ஈட்டிய வெற்றியே முந்தைய விரட்டிக்கடக்கப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. இன்றைய போட்டியில் ஆரம்ப வீரர்களான ஆரோன் ஜோர்ஜ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் மூன்று பெறுமதி வாய்ந்த இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கினார். ஆரம்ப விக்கெட்டில் வைபவ் சூரியவன்ஷியுடன் 57 பந்துகளில் 90 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் அணித் தலைவர் அயூஷ் மஹாத்ராவுடன் 101 பந்துகளில் 114 ஓட்டங்களையும் மூன்றாவது விக்கெட்டில் விஹான் மல்ஹோத்ராவுடன் 79 பந்துகளில் 96 ஓட்டங்களையும் ஆரோன் ஜோர்ஜ் பகிர்ந்தார். மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஆரோன் ஜோர்ஜ் 104 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 115 ஓட்டங்களைக் குவித்தார். வைபவ் சூரியவன்ஷி எப்போதும் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களையும் அயூஸ் மஹாத்ரா 59 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களையும் பெற்றனர். விஹான் மல்ஹோத்ரா 38 ஓட்டங்களுடனும் வேதாந்த் திரிவேதி 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 310 ஓட்டங்களைக் குவித்தது. ஆப்கான் சார்பாக இருவர் சதங்கள் குவித்தனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண நொக் அவுட் வரலாற்றில் ஒரே அணியைச் சேர்ந்த இருவர் சதங்கள் குவித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் பைசால் ஷினோஸதா 110 ஓட்டங்களையும் உஸைரூல்லா நியாஸாய் ஆட்டம் இழக்காமல் 101 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 148 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களை விட ஆரம்ப வீரர்களான ஒஸ்மான் சதாத் 39 ஓட்டங்களையும் காலித் அஹ்மத்ஸாய் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கனிஷ்க் சௌஹான் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பேஷ் தேவேந்திரன் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஆரோன் ஜோர்ஜ் https://www.virakesari.lk/article/237838
  12. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர 04 Feb, 2026 | 06:13 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார். கொழும்பில் புதன்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களை சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டை பாதுகாத்தார்கள். 1948 ஆம் ஆண்டு காலணித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாக சுதந்திரமடைந்தது. நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்தி போராடினார்கள். 30 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உரிமை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்தனர். 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு இரண்டாவது தடவையாக சுதந்திரமடைந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகிறார். 78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. அதேபோல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237826
  13. மக்கள் மிகவும் "பயத்துடன்" பங்கு பற்றிய மாதிரித் தான் தெரிகிறது😂!
  14. குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்? படக்குறிப்பு,பிரேமலால் மற்றும் அவரின் எக்ஸ்ரே படம் கட்டுரை தகவல் தாரகா சம்மனா பிபிசி சிங்கள சேவை 9 மணி நேரங்களுக்கு முன்னர் பல் துலக்குவது எளிதான ஒன்றாக இருந்தாலும் அதுவே ஆபத்தானதாக மாறியது என சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒன்றை தான் இலங்கையில் உள்ள பிரேமலால் எதிர்கொண்டார். சவாலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பாகத்தை (bristle) மருத்துவர்கள் அகற்றி பிரேமலால் உயிரை காப்பாற்றினர். சிகிச்சை முடிந்த பிறகு ஓய்வில் இருந்த பிரேமலாலுடன் பிபிசி சிங்கள சேவை உரையாடியது. "ஜனவரி 23-ஆம் தேதி காலை குளியலறை சென்று பல் துலக்கிய போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் வாயில் இருந்த பிரஷ் இரண்டாக உடைந்து ஒரு பகுதி தொண்டைக்குள் சிக்கியது. அதை பலமுறை இழுத்துப் பார்த்தும் அது என் தொண்டையில் இருந்து வராததால் ஆபத்தின் தீவிரத்தை உணர்ந்தேன்" என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் இது மிகவும் ஆபத்தானதாக உள்ளது எங்களால் சிகிச்சை அளிக்க இயலாது என மருத்துவர்கள் மறுத்தனர்" என பிரேமலால் தெரிவித்தார். "உடனடியாக மாத்தறையில் உள்ள பொது மருத்துவமனைக்கு சென்று நிலைமையை விவரித்தேன். அவர்கள் என்னை உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சையளிக்க தொடங்கினர்" என்றார். முதலில் தன்னுடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் மருத்துவர்கள் பரிசோதித்ததாகவும் ஆனால் பிரஷ்ஷின் பாகம் இருப்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. பின்னர் சிகிச்சை முடிந்து விரும்பினால் கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்கு செல்லலாம் என மருத்துவர்கள் சொன்னதால், தான் வீட்டுக்கு சென்றதாக பிரேமலால் பிபிசியிடம் தெரிவித்தார். இறுக்கமான தொண்டை வீட்டுக்கு சென்று ஒரு மணி நேரமான பிறகு தன்னுடைய தொண்டை இறுக்கமாவதை பிரேமலால் உணர்ந்தார். இதையடுத்து, அவர் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சென்று, தன்னுடைய தொண்டை இறுக்கமாவதையும், இருமல் அதிகரிப்பதையும், சளியுடன் சேர்ந்து ரத்தம் வருவதையும் மருத்துவரிடம் தெரிவித்தார். அங்கிருந்த மருத்துவர் லக்மல் பிரேமலாலுக்கு உடனடியாக எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளார். அதன்படி, அவருக்கு எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்பட்டது. பல் துலக்கு பிரஷின் தலைப்பகுதி அவரது உடலுக்குள் இருப்பதை பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது. "இது கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்ப்பது போன்றது, எக்ஸ்-ரேயில் பிரஷின் தலைப் பகுதி தொண்டைக்குள் இருப்பது தெரிகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் எக்ஸ்-ரேயில் தெரிவதில்லை என்று மாத்தறை மருத்துவமனையில் என்னிடம் கூறப்பட்டது" என்று அவர் கூறினார். மாத்தறை முதல் கல்லே வரை… படக்குறிப்பு,பிரேமலாலின் கழுத்தில் பல் துலக்கும் பிரஷின் முன்பகுதி எவ்வாறு சிக்கிக்கொண்டது என்பதை எக்ஸ்-ரே பரிசோதனை காட்டியது.. மருத்துவரின் ஆலோசனைப்படி காலி நகரில் உள்ள காது மூக்கு தொண்டை நிபுணரான மருத்துவர் அனுருத்தா விக்ரமசிங்கேவை சந்திக்க பிரேமலால் மாத்தறையில் இருந்து தன்னுடைய மகனுடன் அந்த நகருக்கு பயணம் மேற்கொண்டார். காலி நகரில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுருத்தாவை சந்திக்க சென்ற பிரேமலாலுக்கு ஏமாற்றம், அங்கு மருத்துவர் இல்லை. இருப்பினும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவ பணியாளர்கள் அவரது எக்ஸ்ரே மற்றும் மருத்துவ அறிக்கையை உடனடியாக மருத்துவர் அனிருத்தாவுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி விவரித்ததாகவும் மருத்துவ அறிக்கையை பார்த்த மருத்துவர் அனிருத்தா தன்னை அங்கேயே இருக்கும்படி அறிவுறுத்தி, சில மணிநேரத்தில் தன்னை காலி நகர தேசிய மருத்துவமனையில் அனுமதித்தாகவும் பிபிசியிடம் தெரிவித்தார் பிரேமலால். வெற்றிகரமான சிகிச்சை படக்குறிப்பு,பிரேமலாலின் தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பகுதி காலி நகர தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேமலாலுக்கு மருத்துவர் அனிருத்தா மேற்பார்வையில் காலை 9 மணிக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உடைந்த பிரஷின் முன்பகுதியை அவர்களால் கண்டறிய முடியவில்லை. சில மணித்துளிகள் தனக்கு தொண்டை பகுதியில் ஏற்பட்டிருந்த வலி குறைந்ததையும் தன்னால் இயல்பாக பேச முடிந்ததையும் உணர்ந்த பிரேமலால் சிறிதி நேரத்திலேயே மீண்டும் பழைய அறிகுறிகள் தென்பட்டதையும் அதனால் தொண்டை பகுதியில் மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டதையும் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். மருத்துவர் அனிருத்தா ஆலோசனைப்படி மீண்டும் பிரேமலாலுக்கு எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைக்கப்பட்டு அந்த முடிவுகளின்படி பிரஷின் உடைந்த பாகம் தொண்டைக்குள்ளேயே இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர், இதனால் அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிரேமலால் நன்றாக சாப்பிட்டு பேசிக் கொண்டிருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஜனவரி 25-ஆம் தேதி பிரேமலாலுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. "இந்தச் சம்பவம் நம்மை எப்படிப் பாதிக்கும் என்று தம்மால் துல்லியமாகக் கூற முடியாது என்று மருத்துவர் கூறினார். இலங்கையில் எங்கும் இது போன்ற ஒரு சம்பவம் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளில்கூட இது பதிவாகியிருப்பதாகச் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு செய்தால் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறினார்." என்று சிகிச்சைக்கு முன்பு மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக பிரேமலால் நினைவு கூர்ந்தார். "சரியாக காலை 11.45 மணிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, நான் அறுவை சிகிச்சை அறையிலிருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டேன், இன்றும் உடைந்த பிரஷ்ஷின் பாகத்தை நான் என்னுடன் வைத்துள்ளேன்" என்றார் பிரேமலால். 'பாடமாக இருக்கட்டும்' படக்குறிப்பு,குணமடைந்த பின் பிரேமலால் வீடு திரும்பியுள்ளார். ஒரு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரேமலால் தற்போது வீடு திரும்பியுள்ளார். பிபிசியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்கு எந்த வித அசெளகரியமும் ஏற்படவில்லை என புத்துணர்ச்சியுடன் தெரிவித்தார் பிரேமலால். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் எளிய பணிகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று கூறி பிபிசியுடனான உரையாடலை முடித்தார் பிரேமலால். "இலங்கை மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனக்கு நடந்தது ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" "ஒரு சிறிய தவறு பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதை இதுபோன்ற சம்பவம் நமக்கு கற்பிக்கும் பாடமாக இருக்கட்டும்" என்றார் பிரேமலால். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgvl32vnpjo
  15. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வெளியேற்றி 19இன் கீழ் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து Published By: Vishnu 03 Feb, 2026 | 10:32 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வே புலாவாயோ, குவீன்ஸ் கழக விளையாட்டரங்கில் று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை 27 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இங்கிலாந்து, ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றது. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் முன்னாள் சம்பியன் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இது மூன்றாவது தடவையாகும். 1998இல் நடைபெற்ற இரண்டாவது அத்தியாயத்தில் உலக சம்பியனான இங்கிலாந்து, 2022இல் உப சம்பியனாகி இருந்தது. அணித் தலைவர் தோமஸ் ரியூ மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி குவித்த சதம், கட்டுப்பாடான பந்துவீச்சகள் என்பன இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்தன. அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஒலிவர் பீக் தனித்து போராடி சதம் குவித்த போதிலும் அது பயனற்று போனது. இந்த வருடம் முதுல் தடவையாக தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் பென் டோக்கின்ஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்த போதிலும் ஜோசப் முவர்ஸ் (25), பென் மேயஸ் (24) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சரி செய்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் தோமஸ் ரியூ, காலெப் ஃபோக்னர் (40) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 135 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து இளையோர் அணியை பலப்படுத்தினர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தோமஸ் ரியூ 107 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 110 ஓட்டங்களைப் பெற்று 6ஆவதாக ஆட்டம் இழந்தார். (236 - 6 விக்.) ரெல்பி அல்பர்ட் (15), பர்ஹான் அஹ்மத் (28 ஆ.இ.), செபஸ்டியன் மோர்கன் (15 ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் ஹேடன் ஷில்லர் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இலங்கை வம்சாவளி வீரர் நேடன் குறே 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 278 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 47.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதல் சுற்று, சுப்பர் சிக்ஸஸ் ஆகிய சுற்றுகளில் திறமையை வெளிப்படுத்திய வில் மலாசுக் இப் போட்டியில் வெறும் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஸ்டீவன் ஹோகன் (3) ஆட்டம் இழந்தார். இந் நிலையில் இலங்கை வம்சாவளி வீரர் நிட்டேஷ் செமுவல், அணித் தலைவர் ஒலிவர் பீக் ஆகிய இருவரும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கடெ;டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். நிட்டேஷ் செமுவல் வழமைபோல் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அலெக்ஸ் லீ யங் (3), ஜேடன் ட்ரேப்பர் (12) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (134 - 5 விக.) இதனைத் தொடர்ந்து ஒலிவர் பீக், ஆரியன் ஷர்மா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஆரியன் ஷர்மா (34) ஆட்டம் இழந்தார். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஹேடன் ஷில்லர் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது களம் விட்டகன்றார். ஒரு பக்கத்தில் ஒலிவர் பீக் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். லம்ஸ்டென் வீசிய 16ஆவது ஓவரில் 6, 4, 4, 4, 4 என 22 ஓட்டங்களைக் குவித்த ஒலிவர் பீக்கினால் கடைசிப் பந்தில் ஒற்றையை எடுக்க முடியாமல் போனது. அடுத்த ஓவரின் முதலாவது பந்தில் சார்ள்ஸ் லெச்மண்ட் (2) ஆட்டம் இழந்தார். ஒலிவர் பீக்குடன் 9ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களை லெச்மண்ட் பகிர்ந்தார். ஒலிவர் பீக் தனித்து போராடி 88 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் ஜேம்ஸ் மின்டோ 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் செபஸ்டியன் மோர்கன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரெல்ஃபீ அல்பர்ட் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மானி லம்ஸ்டென் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: தோமஸ் ரியூ https://www.virakesari.lk/article/237747
  16. நீங்கள் மற்றப் போட்டிகளைப் பார்க்கேல போல. 19 வயசுப் பெடியள் பட்டாசு. வைபவைத் தெரியும். ஆனா, முதல் ஆறு பேருமே, எப்போதும் அடி வெளுக்கிற ஆக்கள். தேவைக்கு ஏற்ற மாதிரி விளையாடுவாங்கள். தோற்பாங்கள் என்ற நினைவே வரவில்லை. அவங்கள் இன்னும் தோற்கவே இல்லை.
  17. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப் 04 Feb, 2026 | 04:22 PM நாங்கள் ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விடயத்தில் அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க கப்பலை வேகமாக நெருங்கிய ஈரான் நாட்டின் ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், அவர், சிறிது காலத்துக்கு முன்பு அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதனால் நாங்க் “மிட்நைட் ஹேமர்” என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி தாக்குதல் நடத்தினோம். அவர்கள் தற்போது மீண்டும் “மிட்நைட் ஹேமர்” போன்ற ஒரு தாக்குதலை விரும்பவில்லை என நான் நினைக்கிறேன். பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறிய டிரம்ப், எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று கூறவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை (3) அமெரிக்காவின் “யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்” விமானம் தாங்கிக் கப்பலை, அச்சுறுத்தும் விதத்தில் வேகமாக நெருங்கிச் சென்ற ஈரானின் ஷாஹித்-139 ட்ரோனையே அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். கப்பலிலிருந்து ஏவப்பட்ட அதிநவீன எப்-35சி போர் விமானமே அந்த ட்ரோனை நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளது. இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என அமெரிக்கப் படையினர் தெரிவித்திருந்தனர். ஈரான் எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் அமெரிக்க கப்பல் இருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ட்ரோன் மீதான தாக்குதலின்போது அமெரிக்க படையினர் எவருக்கும் காயமோ அல்லது உபகரண சேதமோ ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237825
  18. அதுதான் பாயிண்டு பிரியன்சார் ....இந்த இடத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பது தவிர்க்கப்பட்டால் நல்லது
  19. இதே மைதானத்தில்தான் பைனல் ...6 ம் திகதி ...பார்ப்போம்..
  20. ஆம் பார்த்தேன் நான் அப்கானிஸ்தான் வெல்லும் என‌ நினைத்தேன்....... இந்திய‌ இள‌ம் வீர‌ர்க‌ள் மின்ன‌ல் வேக‌த்தில் அடிச்சு ஆடி சீக்கிர‌மே வென்று விட்டின‌ம்............. அப்கானிஸ்தான் அடிச்ச‌ ஸ்கோர் ந‌ல்ல‌ ஸ்கோர் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் சுத‌ப்பி விட்டின‌ம்.................... இங்லாந் எதிர் இந்தியா பின‌லில்................
  21. கடாபியின் மகன் சயிப் அல்-இஸ்லாம் சுட்டுக் கொலை; லிபியாவில் பரபரப்பு Published By: Digital Desk 3 04 Feb, 2026 | 10:32 AM லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சயிப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 53 வயதான அவரின் மரணத்தை அவரது அரசியல் குழு உறுதிப்படுத்தியுள்ளதாக லிபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லிபியாவின் தலைநகர் திரிப்போலியிலிருந்து சுமார் 136 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஜின்டான் (Zintan) நகரிலுள்ள அவரது இல்லத்தில், முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கமாண்டோ குழுவினர் தாக்குதல் நடத்தியதாக அவரது அரசியல் அணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் “கோழைத்தனமான மற்றும் துரோகமான படுகொலை” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சயிப் அல்-இஸ்லாமின் வழக்கறிஞர் கலேத் அல்-சாயிதி மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் அப்துல்லா ஒத்மான் ஆகியோர், செவ்வாய்க்கிழமை சமூக வலைத்தளங்களில் அவரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையில், சயிப் அல்-இஸ்லாமின் சகோதரி ஒருவர் லிபிய தொலைக்காட்சியிடம், அவர் அல்ஜீரிய எல்லைக்கு அருகிலான பகுதியில் உயிரிழந்ததாக கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 1969 முதல் 2011 வரை லிபியாவை ஆட்சி செய்த முஅம்மர் கடாபியின் மகன்களில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக சயிப் அல்-இஸ்லாம் கருதப்பட்டார். 1972ஆம் ஆண்டு பிறந்த அவர், 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவின் உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, அணு ஆயுதத் திட்டத்தை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் முன்னணியில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. 2011ஆம் ஆண்டு கடாபி ஆட்சி வீழ்ச்சியடைந்தபோது, அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியதாக சயிப் அல்-இஸ்லாம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து, அவர் ஜின்டான் நகரில் உள்ள ஒரு ஆயுதக் குழுவினரால் கைது செய்யப்பட்டு, சுமார் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2011 போராட்டங்களின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அவரை விசாரிக்க முயன்றது. 2015ஆம் ஆண்டு, ஐநா ஆதரவு பெற்ற திரிப்போலி நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டு பொதுமன்னிப்பு சட்டத்தின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னர், சயிப் அல்-இஸ்லாம் ஜின்டான் நகரிலேயே வசித்து வந்தார். 2021ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தாலும், அந்தத் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கடாபி ஆட்சி வீழ்ச்சியடைந்ததிலிருந்து லிபியா பல்வேறு ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது நாடு இரண்டு போட்டி அரசாங்கங்களுக்கு இடையே பிளவுபட்டுள்ளது. இந்த சூழலில், சயிப் அல்-இஸ்லாமின் படுகொலை லிபிய அரசியல் நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனிடையே, திரிப்போலியைத் தளமாகக் கொண்ட உயர் அரசியல் பேரவையின் முன்னாள் தலைவர் கலேத் அல்-மிஷ்ரி, இந்த படுகொலை தொடர்பில் அவசரமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். சயிப் அல்-இஸ்லாம் கடாபியின் மரணம், லிபிய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுவதுடன், நாட்டின் எதிர்கால அரசியல் சமநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. https://www.virakesari.lk/article/237781
  22. அரச பணியாளர்கள் அரசு சொல்வதைத் தானே செய்ய வேண்டும்.
  23. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 97 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 97 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை வசபனின் மரணத்திற்குப் பிறகு, வங்கனாசிக தீசன் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் மகா மங்கள என்ற பெயரில் ஒரு விகாரை [Mangla Maha Viharaya] கட்டினான். அவனது மனைவி மகா மாதா முன்பு உணவளித்த தேரரின் நினைவாக ஒரு விகாரை கட்ட பணம் சேகரித்தார். வங்கனாசிக தீசன் இறந்த பிறகு அவரது மகன் முதலாம் கஜபாகு [Gajabahu I] ஆட்சிக்கு வந்து இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். முதலாம் கஜபாகு [அல்லது Gajabahugamani] அதிகமாக தமிழ் பெற்றோரையும் மற்றும் தமிழ் தாத்தா பாட்டியையும் கொண்டு இருப்பதால், இவனும் தமிழனாக கருத வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் கட்டியபோது, அந்த இந்திர விழாவில் கலந்து கொள்ளச் சென்ற மன்னனே இவனாகும். கஜபாகுவின் மரணத்திற்குப் பிறகு, இவனது மாமனார் மகாலக நாகர் [Mahalaka Naga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவர் தீவில் ஏழு விகாரைகளைக் கட்டினான். வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் விகாரைகளைக் கட்டிய ஒரே மன்னனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் பல ஆரம்பகால ஆட்சியாளர்கள் தமிழ் அல்லது திராவிட கூறுகளைக் கொண்ட பெயர்களைக் கொண்டிருந்ததுடன் தீவின் ஆரம்பகால மக்களில் ஒருவரான நாக மக்கள், தென்னிந்திய தமிழ்ப் பகுதிகளுடன் வலுவான கலாச்சார மற்றும் மொழியியல் உறவுகளைக் கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகிறது. நாக என்ற சொல் தமிழ் மற்றும் பாலி இலக்கியங்களில் காணப்படுகிறது. இது நாகதீபம் (நயினாதீவு) போன்ற இடங்களில் வாழ்ந்த பாம்பு வழிபாட்டு மக்களைக் குறிக்கிறது. சிங்களம் ஒரு தனித்துவமான மொழியாக உருவாவதற்கு முன்பு, தீவின் மக்கள் பிராகிருதம் மற்றும் [அல்லது] ஆரம்பகால திராவிட மொழியைப் பேசினர். தொல்பொருள் ஆய்வில், ஆரம்பகால பிராமி கல்வெட்டுகளில் (கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது) கூட, பல தனிப்பட்ட பெயர்கள், குலப் பெயர்கள் மற்றும் பட்டப்பெயர்கள் தமிழ் சொற்களை ஒத்திருக்கின்றன. சிங்களம் ஒரு கட்டமைக்கப்பட்ட மொழியாக கி.பி 5-6 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் உருவாகத் தொடங்கியது. இது பாலி (பௌத்த நூல்கள் காரணமாக), சமஸ்கிருதம் மற்றும் உள்ளூர் [பிராகிருத / திராவிட அல்லது தமிழ் மொழிகளால்] பேச்சுவழக்குகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டது. அதாவது மகாவம்சம் எழுதும் பொழுது, உண்மையில் சிங்களம் என்ற மொழி உருவாகவில்லை, அது மிக மிக ஆரம்ப நிலையில் தான் இருந்துள்ளது, ஆனால், தமிழ் மிகவும் வளர்ந்த உச்ச நிலையில் இருந்துள்ளது. அதனால்த் தான் மகாவம்சத்தில் தமிழர் என்ற சொல்லே காணப்படுகிறது, ஆனால் சிங்களம் அல்லது சிங்களவர் என்ற சொல் அங்கு இல்லை. ஆக சிஹல ["Sihala" (Sīhaḷa, සිහළ, சீஹள] என்ற சொல் ஒருக்காவோ இரண்டுதரமோ மட்டுமே அங்கு கூறப்படுகிறது, ஆனால் அது மகாவம்சத்தின் (5 ஆம் நூற்றாண்டு பாலி நாளேடு) படி, சிஹல (சிஹால) என்ற பெயர் சமஸ்கிருத / பாலி வார்த்தையான "சிஹா" ("Sīha" lion/ சிங்கம்) மற்றும் "லா" ("La" நிலம்/இடம்) ஆகியவற்றிலிருந்து உருவானது, அதாவது "சிங்கத்தின் நிலம்" அல்லது "சிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்" என்ற அர்த்தத்தில் மட்டுமே காணப்படுகிறது. மற்றும் படி மொழி ஒன்றையோ அல்லது அப்படியான மொழி ஒன்றை பேசுபவர்கள் பற்றியோ குறிக்கவே இல்லை. வட இந்தியாவிலிருந்து குடியேறியவர்களால் கொண்டுவரப்பட்ட இந்தோ-ஆரிய பேச்சுவழக்கில் இருந்து சிங்களம் தோன்றியது என்றாலும், தமிழ் மற்றும் பிற தென்னிந்திய சமூகங்களுடனான தொடர்பு காரணமாக திராவிட மொழிகளால் பெரிதும் செல்வாக்குக்கு உள்ளானது என்பது வரலாறு. இலங்கை தென்னிந்தியாவுடன், குறிப்பாக தமிழ்நாட்டுடன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியான தொடர்புகளைக் கொண்டிருந்ததுடன், அனுராதபுர காலம் (கிமு 377 முதல்) பல தமிழ் ஆட்சியாளர்கள் அல்லது தமிழ் தொடர்புகளைக் கொண்ட ஆட்சியாளர்களைக் கொண்டு இருந்ததும் தெரியவருகிறது. அத்துடன் இலங்கையின் பல இடப்பெயர்கள் தமிழ் மற்றும் நாக பூர்வீகம் கொண்டவையாகவும் உள்ளன. உதாரணமாக, நாகதீபா (நயினாதீவு). மேலும் அனுராதபுரம் - சில கோட்பாடுகள் "அனுராத" திராவிட இணைப்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன ["Anu" and "Ratha" resemble Tamil words rather than purely Sanskrit. "Anu" could come from Tamil "Anu" (அணு) meaning small or a prefix denoting something related. "Ratha" (ரத) means chariot in Sanskrit, but in Tamil, "Rathapuram" (ரதபுரம்) is a common place-name structure. It suggests a settlement or city related to a chariot or a ruling class.]. திருகோணமலை ஒரு தமிழ் வம்சாவளி பெயர் மற்றும் கதிர்காமம் ஒரு தமிழ்-சைவ யாத்திரைத் தலம். மற்றும் ஆரம்பகால ஆட்சியாளர்கள் இன்று புரிந்து கொள்ளப்படுவது போல் பிரத்தியேகமாக "சிங்களவர்" அல்லது "தமிழர் " அல்ல, மாறாக வெவ்வேறு இனக்குழுக்களின் கலவையாக இருந்திருக்கலாம்? மற்றது அப்பொழுது தமிழ் மொழி முழுமை பெற்று இருந்தாலும் சிங்கள மொழி என்ற ஒன்று ஆரம்பிக்கவே இல்லை. சுருக்கமாக, ஆரம்பகால இலங்கையில், குறிப்பாக தனித்துவமான சிங்கள அடையாளம் தோன்றுவதற்கு முன்பு, ஆழமான தமிழ் மற்றும் திராவிட செல்வாக்குகள் இருந்தன என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. நவீன தேசியவாதம் தமிழ் மற்றும் சிங்கள வரலாறுகளைப் பிரிக்கும் முயற்சிக்கு வழிவகுத்தாலும், உண்மை என்னவென்றால், இரண்டு கலாச்சாரங்களும் பல நூற்றாண்டுகளாகப் பின்னிப் பிணைந்திருந்தன. சிங்கள மொழியே உண்மையில், காலப்போக்கில் குறிப்பிடத்தக்க தமிழ் மற்றும் திராவிட செல்வாக்குகளுடன் வளர்ந்தது என்பது வெள்ளிடைமலை. இதற்கு சிறந்த உதாரணம் தொலெமி அல்லது தாலமியின் [Ptolemy] வரைபடம் (கி.பி. 2 ஆம் நூற்றாண்டு) தமிழ் ஒலிப்பு முறையை ஒத்த பெயர்களைக் கொண்ட இலங்கை நகரங்களைக் குறிக்கிறதுடன் [Ptolemy’s map (2nd century AD) refers to Sri Lankan cities with names resembling Tamil phonetics.] அனுராதபுரத்திலேயே உள்ள ஆரம்பகால பிராமி கல்வெட்டுகள் (கிமு 3-2 ஆம் நூற்றாண்டு வரை) தமிழ்-பிராக்ருத செல்வாக்குகளைக் காட்டுகின்றதும் [Early Brahmi inscriptions in Anuradhapura (dating to the 3rd-2nd century BCE) show Tamil-Prakrit influences.] ஒரு எடுத்துக்காட்டு ஆகும். Part: 97 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 After the death of Vasabha, Vannakatissa ruled for three years. He built a Vihara with the name Mahamangala. His consort Mahamatta collected money to build a Vihara in memory of the Thera whom she fed previously. On the death of Vannakatissa his son, Gajabahugamani came to power and ruled for twenty-two years. Gajabahugamani is Tamil being born to Tamil parents and Tamil grandparents. He is the king Kajavahu who went to attend the Indravilla in Tamilnadu. This helped fix the date of the great king Cheran Sengutuvan. After the death of Gajabahugamani, his father in law, Mahalaka Naga ruled for six years. He built seven Viharas in the island He was the only one on record to have built Viharas in north, south, west and east. Mahalaka Naga was also a Tamil. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 98 தொடரும் / Will follow துளி/DROP: 2016 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 97 https://www.facebook.com/groups/978753388866632/posts/33634819606166588/?
  24. என்.பி.பி அடியாட்களின் மிரட்டலுக்குப் பயந்து என்பதை சேர்த்துவிடவும்..
  25. பார்க்க பார்க்க மனசுக்குள் வேதனை தான் மிஞ்சுகின்றது. ஈற்றில் இதற்குத்தானா இத்தனை ஆயிரம் போராளிகளின் தியாகங்களும், பொது மக்களின் இழப்புகளும் ??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.