stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அண்ணை, நேரடியாக இணையத்தளத்தில் வாங்குவதற்கும் முகவர்களிடம் வாங்குவதற்கும் இடையில் விலை வித்தியாசம் உண்டா? மறுபடியுமா?!
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
ட்ரம்ப்பின் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச சந்தையில் சரிந்த கச்சா எண்ணெய் விலை! Mar 23, 2026 - 06:20 PM ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 15% சரிந்து, ஒரு பீப்பாய் 96 டொலராகக் குறைந்தது. அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 13.5% சரிந்து, ஒரு பீப்பாய் 85.28 டொலராக வீழ்ச்சியடைந்தது. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா முன்னதாக எச்சரித்திருந்தது. இதனால் போர் பதற்றம் அதிகரித்து எண்ணெய் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில், ஈரானுடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் "ஆக்கபூர்வமாக" இருந்ததாகத் தெரிவித்த ட்ரம்ப், அடுத்த 5 நாட்களுக்கு ஈரான் மீதான எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் நடத்த வேண்டாம் எனத் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn36ojxf0008356p1ebftg8g
-
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 இலட்சம் அமெரிக்க டொலர் அறவிடப்படும் - ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்
ஹோர்முஸ் நீரிணையை சர்வதேசக் கப்பல்கள் பயன்படுத்துவது தொடர்பில் ஈரானின் பாதுகாப்பு சபையின் நிபந்தனை Published By: Digital Desk 3 23 Mar, 2026 | 03:51 PM ஹோர்முஸ் நீரிணையை சர்வதேசக் கப்பல்கள் பயன்படுத்துவது தொடர்பிர் ஈரானின் பாதுகாப்பு சபை நிபந்தனைகளை விதித்துள்ளது. ஈரானுடன் குரோதமற்ற நாடுகள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல ஈரானுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதுதான் ஒரே வழி என ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான பாதுகாப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ஈரானின் கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடாவிலுள்ள அனைத்துப் போக்குவரத்துப் பாதைகளும் பல்வேறு வகையான கடற்படை கண்ணிவெடிகள் மூலம் முடக்கப்படும். கடற்கரையிலிருந்து ஏவப்படக்கூடிய மற்றும் கடலில் மிதந்து செல்லக்கூடிய கண்ணிவெடிகள் இதற்காகப் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய தாக்குதல் நிகழ்ந்தால், ஹோர்முஸ் நீரிணை மட்டுமல்லாமல் முழு பாரசீக வளைகுடாவும் நடைமுறையில் முடக்கப்படும் எனவும், அதன் பொறுப்பு தாக்குதல் நடத்திய தரப்பினருக்கே சேரும் எனவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது. https://www.virakesari.lk/article/241735
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படம்.
-
யாழ்.ஒட்டகப்புலத்தில் 02 ஏக்கர் காணி விடுவிப்பு
யாழ்.ஒட்டகப்புலத்தில் 02 ஏக்கர் காணி விடுவிப்பு Published By: Digital Desk 3 23 Mar, 2026 | 04:33 PM யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி இன்று திங்கட்கிழமை (23) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியிலுள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவ பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டள்ள காணிகளில் 02 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் 234.8 ஏக்கர் காணி கடந்த 2024ஆம் ஆண்டு மே மாத கால பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், விடுவிக்கப்பட்டது. ஏனைய காணிகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என அப்போது உறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், சுமார் 22 மாதங்களின் பின்னர் 02 ஏக்கர் காணி தற்போது விடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணிகள் சில இராணுவ கட்டுப்பாட்டினுள் காணப்படுகின்றன. அவற்றினையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/241741
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
தற்காலத்திலும் ஏஜென்சி வழியாகத் தான் விமானச் சீட்டு வாங்குகிறார்களா மக்கள்? எல்லா விமான நிறுவனங்களிலும் இணையத் தளத்தில் நேரடியாக விற்பனை செய்கிறார்களே?
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
இரான் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக டிரம்ப் அறிவிப்பு - இரான் கூறுவது என்ன? பட மூலாதாரம்,Getty Images 23 மார்ச் 2026, 11:52 GMT புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு "முழுமையான தீர்வு" காண்பது குறித்து இரானுடன் "பயனுள்ள பேச்சுவார்த்தை" நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில், வெளியிட்ட ஒரு பதிவில், "அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு முழுமையான தீர்வு காண்பது குறித்து, மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடைபெற்றுள்ளன" என்று கூறியுள்ளார் டிரம்ப் . மேலும் "இந்த வாரம் முழுவதும் தொடரவுள்ள, ஆழமான, விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான இந்த உரையாடல்களின் போக்கு மற்றும் தொனியின் அடிப்படையில், இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படக்கூடிய எந்தவொரு ராணுவத் தாக்குதலையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் போர் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த உத்தரவு, தற்போது நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களின் வெற்றியின் அடிப்படையில் அமையும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார். பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி இரான் வெளியுறவு அமைச்சகம், ''அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கூற்றை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. ''போர் தொடர்பான இரானின் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னரே எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறும் என்ற எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்'' எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 'டிரம்புடன் தொடர்பு இல்லை' முன்னதாக டிரம்புடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் பெயர் குறிப்பிடாத ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. ''மத்திய கிழக்கில் உள்ள அனைத்து மின்நிலையங்களையும் எங்கள் இலக்காக எடுத்துக்கொள்வோம் என்று எச்சரிக்கை கொடுத்தபின் டிரம்ப் பின்வாங்கினார்'' என அந்த வட்டாரம் கூறியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் தாக்குதல் நடத்தப்படும் காட்சி 'முக்கிய விஷயங்கள் தெளிவாக இல்லை' பெர்ண்ட் டெபுஸ்மேன் ஜூனியர். பிபிசி ''டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட இந்த செய்தி அமெரிக்காவின் போர் நடவடிக்கை தொடங்கியதிலிருந்து அவர் அளித்த மிக சமரச கருத்தாக இருக்கலாம். ஆனால் அதிலும் பல முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காமல் உள்ளன. இரானுடன் "மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள" பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அவர் கூறியிருந்தாலும், அதனை இரான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. மேலும் இந்த செய்தி, வார இறுதியில் இரு தரப்பும் எடுத்த கடுமையான நிலைப்பாட்டுடன் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் எதை பற்றியது என்பது தெளிவாக இல்லை. அது இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் அல்லது அணு செறிவூட்டல் பற்றியதாக இருக்கலாம். அல்லது போர்நிறுத்தம் பற்றியதாக இருக்கலாம் . ஆனால் வெள்ளிக்கிழமை டிரம்ப் போர் நிறுத்தத்தை குறைத்து மதிப்பிட்டிருந்தார். இது ஹோர்மூஸ் நீரிணை பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால் இரான் இதுவரை வெளிப்படையாக எந்த உறுதியும் அளிக்கவில்லை. பல நிபுணர்கள் இதை சாத்தியமற்றதாகவே கருதுகின்றனர், ஏனெனில் ஹோர்மூஸ் மீது இரானின் கட்டுப்பாடு இந்த போரில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆதிக்கமாக உள்ளது. ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகள், இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வரும் புதிய தகவல்களை மற்றும் அதன் எதிர்கால தாக்கங்களை ஆவலுடன் கவனித்து வருகின்றன.'' பட மூலாதாரம்,Reuters 3 முக்கிய விஷயங்கள் பால் ஆடம்ஸ், பிபிசி ராஜீய செய்தியாளர் ''டிரம்பின் அறிவிப்பு பார்ப்பதற்குப் பல விஷயங்களை உள்ளடக்கியது போலத் தோன்றினாலும், நாம் தற்போது இருக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ள பல சிக்கல்களுக்கு இது தீர்வுகாண வேண்டியிருக்கும். மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து எழுந்துள்ள கேள்விகளைத் தவிர (முக்கியமாக ஹோர்மூஸ் நீரிணையை இரான் திறம்பட மூடியது மற்றும் உலகப் பொருளாதாரத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள பிற நடவடிக்கைகள்) இன்னும் பல முக்கியப் பகுதிகள் உள்ளன. அவற்றில் சில, போருக்குச் சற்று முன்னதாக ஜெனீவாவில் அமெரிக்க மற்றும் இரானிய பேச்சுவார்த்தையாளர்கள் கடைசியாகச் சந்தித்துப் பேசியபோது ஆலோசனையில் இருந்தவை. இரானின் யுரேனியம் செறிவூட்டல்: யுரேனியம் செறிவூட்டலில் கடுமையான வரம்புகளுக்குத் இரான் ஒப்புக்கொள்ளுமா மற்றும் இன்னும் தன் வசம் வைத்திருக்கும் 440 கிலோ அதிகச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்குமா? ஏவுகணைகள்: இரானின் ஏவுகணைத் திறன்களைப் பற்றி கடந்த மூன்று வாரங்கள் நமக்கு நிறையத் தெரிவித்துள்ளன. இதிலும் வரம்புகளுக்கு இரான் ஒப்புக்கொள்ளுமா? பிராந்திய நடவடிக்கைகள்: மத்திய கிழக்கில் உள்ள ஆயுத குழுக்களுக்கு இரான் வழங்கும் ஆதரவு இப்பிராந்தியத்தின் நிலையற்ற தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எந்தவொரு விரிவான ஒப்பந்தமும் ஹெஸ்பொலா, ஹமாஸ், ஹூத்தி மற்றும் இராக்கில் உள்ள ஷியா குழுக்களுக்கு இரான் வழங்கும் ஆதரவு குறித்துப் பேச வேண்டியிருக்கும். இவை அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னேற்றத்தைக் காண விரும்பும் விஷயங்களாக இருந்தால், இரானும் பதிலுக்கு சில சலுகைகளை கோரலாம். அவற்றைக் கோரும் அளவுக்கு தான் இன்னும் வலுவாக இருப்பதாக இரான் உணரலாம். தன் தடைகள் நீக்கம் என்பது இரானின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும், அதே போல் ஆட்சி மாற்றத்தைப் பற்றிய அனைத்துப் பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதையும் அது விரும்பும்.'' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் '48 மணி நேர கெடு' கடந்த சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு கெடு ஒன்றை விதித்தார். 48 மணி நேரத்திற்குள் ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் இரானின் மின் நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார். டிரம்ப் தனது மிரட்டலை செயல்படுத்தினால், இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்குவோம் என இரானும் பகிரங்கமாக எச்சரித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானுடன் நடத்தி வரும் போர் நான்காவது வாரத்தை எட்டியிருக்கிறது. தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மட்டுமன்றி மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் மீதும் இரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கிருக்கும் அமெரிக்க தளங்களை குறிவைப்பதாக இரான் கூறுகிறது. ஆனால், பொதுமக்கள் இலக்குகளும் குறிவைக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட நாடுகள் கூறுகின்றன. பிரச்னையின் மையமான ஹோர்மூஸ் நீரிணை உலகின் கடல்வழிப்போக்குவரத்தின் முக்கிய வழித்தடமாக உள்ள ஹோர்மூஸ் நீரிணையையும் இரான் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் கப்பல் போக்குவரத்து தடைபட்டு கச்சா எண்ணெய் முதல் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த நிலையில், ஹோர்மூஸ் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு இந்த கெடுவை விதித்திருக்கிறார். ஆனால், இரானோ தங்கள் எதிரிகளுக்கு மட்டுமே ஹோர்மூஸ் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறது. ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பில் (IMO) உள்ள இரானின் பிரதிநிதி, இரான் எதிரிகளுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது என கூறியதாக இரான் அரசுடன் தொடர்புடைய செய்தி முகமை கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலில் இரான் தாக்கிய இடத்தின் படம் டிரம்புக்கு இரான் அளித்த பதில் என்ன? இரானிய ஊடக செய்திகளின்படி, அமெரிக்கா இரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்றும், அழிக்கப்பட்ட மின் நிலையங்கள் மீண்டும் கட்டி முடிக்கப்படும் வரை ஹோர்மூஸ் திறக்கப்படாது என்றும் இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை எச்சரித்திருக்கிறது. ''எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் இரானுடன் ஒருங்கிணைந்தால், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான பயணம் கிடைக்கும்'' என்றும் இரான் கூறியுள்ளது. இந்த கருத்தை இரான் தொடர்ந்து கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. முக்கிய கடல் வழித்தடமான ஹோர்மூஸை பொருத்தவரை, இயல்பான சமயங்களில் ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் செல்லும். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. மார்ச் 18 அன்று ஏ.எஃப்.பி. செய்தி முகமை வெளியிட்ட கணக்கீட்டின்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 21 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன, தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டுள்ளன அல்லது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj37mr8mp3xo
-
உலகெங்கும் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை
ஒரு காலம் இருந்தது, நீல வர்ண அமெரிக்க கடவுச் சீட்டை வைத்திருந்தால் பல நாடுகளில் பாதுகாப்பு சற்று அதிகம்! இனி ஊரில் அப்பியாசக் கொப்பிக்குப் போடுவது போல, அமெரிக்க பாஸ்போட்டுக்கு "மாட்டுத் தாள்" பேப்பரில் உறை போட்டுக் கொண்டு தான் வெளியிலே இறங்க வேண்டும்😂!
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
இப்படி ஆனால், அதில் ஒரு silver line இருப்பதாகவே எனக்குப் படுகிறது. சகல வழிகளிலும் பலம் கொண்ட ஒரு தரப்பு, தன் பலத்தை ஒட்டு மொத்த நன்மைக்குப் பாவிக்காமல் (பிபி டரம்பிற்குச் செய்தது போல) " தன் பின் பக்கத்தை முத்தமிடும் ஒருவருக்காக மட்டும்" பாவித்தால் இப்படியான நிலை வரும் என்பது நிரூபிக்கப் பட வேண்டும்! அடுத்த 3 ஆண்டுகளுக்கு மட்டுமாவது பல்லைப் பிடுங்கி விட்டால், அடுத்து வரும் நிர்வாகம் கொஞ்சம் நிவர்த்திக்க இடம் கிடைக்கும். இது நடந்தால், பிபி யும் இத்தோடு அரங்கில் இருந்து அகன்று விட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. தீய சக்திகளுக்கு பலம் நிலைத்திருக்கக் கூடாது, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி!
-
கிழக்கில் ஒரு இலட்சம் ஏக்கர் நிலம் அபகரிப்பு: நில மீட்பு வலையமைப்பு திடுக்கிடும் தகவல்!
கிழக்கில் ஒரு இலட்சம் ஏக்கர் நிலம் அபகரிப்பு: நில மீட்பு வலையமைப்பு திடுக்கிடும் தகவல்! 23 Mar, 2026 | 03:32 PM (துரைநாயகம் சஞ்சீவன்) கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அரசின் ஏழு வகையான பொறிமுறையின் ஊடாக அபகரிக்கப்பட்டு சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண நில மீட்பிற்கான வலையமைப்பினர் தெரிவிக்கின்றனர். 2026ஆம் ஆண்டிற்கான காணி வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை விடுதி ஒன்றில் இன்றையதினம் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கிழக்கு மாகாண நில மீட்பிற்கான திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர்கள் இதனை தெரிவித்தனர். யுத்தம் நிறைவுக்கு வந்த சூழ்நிலையிலும் இன்று வரை குறிப்பிட்டளவு மக்கள் தங்களது நிலங்களுக்கான முறையான காணி ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருப்பதுடன் அரசு வேற்று இனத்தினர் மற்றும் முதலாளிகளால் திட்டமிட்ட வகையில் மக்களின் குடியிருப்பு மற்றும் ஜீவனோபாயத்திற்குரிய தொழில் இடங்கள் மற்றும் மத கலாச்சார இடங்கள் சட்ட ரீதியாகவும் சட்ட முறையற்றும் அபகரிக்கப்படுவதுடன் சுபீகரிக்கப்பட்டும் வருகின்றது. குறிப்பாக எமது கிழக்கு மாகாணத்தில் சுமாராக ஒரு லட்சத்து இருபதாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அரசின் 07 வகையான பொறிமுறைகள் ஊடாக அபகரிக்கப்பட்டும் சுபீகரிக்கப்பட்டும் வருகிறது. குறிப்பாக தொல்லியல் இடம் எனவும் பாதுகாப்பு பகுதி எனவும் வன வளப்பகுதி என்றும் பூஜா பூமி இடம் எனவும் வன விலங்கு பகுதி எனவும் அபிவிருத்தி இடம் எனவும் சுற்றுலா பிரதேசம் எனவும் அடையாளப்படுத்தி பல தேவைகளுக்கு பயன்படுத்தி வருதாகவும் குறிப்பிட்டனர். அந்தவகையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1958 சிங்கள குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் அங்கு 32 விகாரைகளும் அதனுடன் இணைந்த இடங்களுமாக பிரகடனப்படுத்தப்பட்டு தமிழ் முஸ்லீம் மக்களுடைய பூர்வீக இடங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த வழிபாட்டு இடங்கள் அபகரிக்கப்பட்டு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளதோடு எங்களுடைய ஆலயங்களை வழிபடுவதற்கு அங்கு இருக்கின்ற பௌத்த மதகுருமாரின் அனுமதியைப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதாகவும் திரியாய் பகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் டனுசன் குறிப்பிட்டார். அதேபோன்று முத்துநகர் பகுதி விவசாயிகள் 53 வருடங்களுக்கு மேலாக விவசாயம் மேற்கொண்டு வந்த 1200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் சோலார் மின் திட்டத்திற்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தையும், ஜீவனோபாயத்தையும் இழந்துள்ளனர். இதனால் 352 விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் இதற்கான நீதியைக் கோரி 70 நாட்களுக்கு மேலாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும் இதுவரை எவ்வித தீர்வும் ஆரசால் வழங்கப்படவில்லை எனவும் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த சகிலா சபருல்லா என்ற செயற்பாட்டாரள் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241731
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
நல்லதொரு முயற்சி, கிருபன்.................❤️. செயற்கை நுண்ணறிவு பரவலாக அறியப்படாத காலத்திலேயே மதன் கார்க்கி தான் பாட்டுகளை எப்படி கணனி மூலம் எழுதுகின்றேன் என்று சொல்லியிருந்தார். அந்த வீட்டில் இருந்து அவராவது உண்மையைச் சொல்லுகின்றார்..............🤣. இரண்டு வருடங்களின் முன் ஒரு நிகழ்வில் என்று நினைக்கின்றேன், யுவன் சங்கர் ராஜா இனிமேல் தங்களுக்கு வேலை கிடையாது என்றும் சொல்லியிருந்தார். பதிப்புரிமை, காப்புரிமை போன்றன இருந்துமே பெரும்பாலான படைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கு, வாழ்வுக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. அடுத்த கட்டம் இப்பொழுது ஆரம்பித்துள்ளது............. கிட்டத்தட்ட எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் என்னும் செயற்கை நுண்ணறிவுக் காலம்.............
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ம்ம்ம்…உங்களால் புலிகளின் பின்னால் ஒழிந்து கொள்ளாமல் ஒரு கருத்து கூட எழுத முடியாதா? யார் தூசண துரை, தலைவர் படத்தின் முன் வைத்து வல்லுறவில் ஈடுபட்ட தம்பி, ஹிம்லர் என பெயரை சூட்டி கொள்ளும் தம்பி, பெண் ஒருவர் வீடியோவில் புகார் சொல்லும் இடும்பாவனம் இவர்களின் க.க.க வையா சொல்கிறீர்கள்😂. இலண்டனில் புத்தக கடையில் கண்டோமே இவர்களின் கண்ணியத்தை😂. நாதகவில் கண்ணியமானவர் இருந்த காலம் உண்டு. கிட்டதட்ட அனைவரும் விலகி விட்டனர். டெலோ, புளொட்டிலும், நல்லவர்கள் சேர்ந்தார்கள் ஆனால் தலைமை கேடு கெட்டது என்பதால் ஒட்டுமொத்த இயகமுமே நாசமாய் போனது. நாதகவும் அப்படியே. சீமான், பாக்கியராசன், இடும்பா, தூசணதுரை என இப்போ அங்கே இருப்போர் அனைவரும் அயோக்கியர்கள்.
-
பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் பாண் விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு Published By: Digital Desk 1 23 Mar, 2026 | 03:10 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் புதிய விற்பனை விலை 130 ரூபாவாக அமையும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது. பாண் மாத்திரமன்றி, ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/241730
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இயக்கம் சைக்கிள் ஓடுது கார் ஓடுது வீடு மிக்சர் சாப்பிடுது இதெல்லாம் எண்பதுகளிலேயே நான் கண்டது கடந்தது. இதில் குறை பிடிப்பது தப்பிக்கவே அன்றி நல்ல நோக்கத்திலன்று என்பது அனுபவ படிப்பு. அவருடன் சேரும் கூட்டம் எப்படி ஒழுங்கமைக்கப்படுகிறது? நாட்டின் மீதும் மக்கள் மீதும் எவ்வளவு பற்று வைக்கிறது? கடமை கண்ணியம் கட்டுப்பாடு எவ்வாறு பேணப்படுகிறது என்பதை பார்க்கும்போது இருப்பதில் தேறுவதே தற்போதைக்கு அவர்கள் தான். இதை தமிழகத்தில் உள்ள அவர்களின் அரசியல் எதிரிகளே ஒத்துக் கொள்கிறார்கள்.
-
தந்தை-மகன் கொலை: காவல் நிலைய சித்ரவதைக்கு பிறகு சிறையில் 3 நாட்களை கழித்தது எப்படி?
'அனைவரும் குற்றவாளிகள்' - சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன? படக்குறிப்பு,ஜெயராஜ், பென்னிக்ஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் தந்தையும் மகனும் காவல்துறையால் தாக்கப்பட்டு பிறகு உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில், இந்த சம்பவம் "கொலை" என தீர்மானிக்கப்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு நகல் இன்னும் வெளியிடப்படாத சூழலில், நீதிபதி முத்துக்குமரன் தமது தீர்ப்பை வாசிக்கும் போது, தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் கொலை என தீர்மானிக்கப்படுவதாகக் கூறினார். உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறிய நீதிபதி, வழக்கினுடைய அனைத்து தரப்பு விசாரணைகளின் அடிப்படையில், "குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்" என தீர்ப்பளிப்பதாக கூறினார். "குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது" என்று நீதிபதி கூறினார். மார்ச் 30-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார். படக்குறிப்பு,ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ் வழக்கின் பின்னணி தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் 58 வயதான ஜெயராஜும் 31 வயதான அவரது மகன் பென்னிக்சும் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தனர். பொது முடக்கத்தின் காரணமாக கடைகள் திறப்பதற்கு நேர வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடுவது தொடர்பாக பென்னிக்சுக்கும் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர். இதற்குப் பிறகு, ஜெயராஜை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரைத் தேடி அவரது மகன் பென்னிக்சும் அங்கே சென்றார். அவரும் அங்கே அடைக்கப்பட்டார். இதற்குப் பிறகு இவர்கள் இருவரையும் ஜூன் 21ஆம் தேதி கோவில்பட்டி துணைச் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், திங்கட்கிழமை இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர். "ஜூன் 22ஆம் தேதி, திங்கள்கிழமை மாலை நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பென்னிக்சை பணியில் இருந்த வார்டன்கள் மீட்டு துணைச் சிறையின் கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், இரவு 9 மணியளவில் அவர் இறந்துவிட்டார். அதற்கு சிறிது நேரத்திலேயே பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார்" என சிறை அதிகாரிகள் அந்தத் தருணத்தில் தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாத்தான்குளத்தில் போராட்டத்தில் இறங்கினர். இவர்களுக்கு ஆதரவாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இருவர் உயிரிழப்புக்கு காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெயராஸ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பாதிரியார் ஆறுதல் கூறிய போது எடுக்கப்பட்ட படம் (ஜூன் 20, 2020) இந்த விவகாரம் மாநிலம் தழுவிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு துணை ஆய்வாளர்களும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டார். காவல்நிலையத்தில் பணியாற்றிய அனைவருமே முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தானாகக் கையில் எடுத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது. காவல்துறையினரால் தாக்கப்படுவது கொரோனா பெருந்தொற்றைப் போல பரவியிருக்கிறது என்றும் இந்த விவகாரத்தை தாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்கச் சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசனுக்கு அங்கிருந்த காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்பதோடு, ஒரு காவலர் அவரிடம் மிக மோசமாகப் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. நீதித் துறை நடுவர் பாரதிதாசன் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார். பிறகு சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஆதாரங்களை பாதுகாக்கவும், போலீஸ் தலையீட்டைத் தடுக்கவும், வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். பிறகு இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் இடம்பெற்றார். உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் இரு கட்டங்களாக 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்தது. மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgx7ng4587o
- Today
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் நேர்காணலில் கலந்துகொண்டேன். இதுவரை உங்கள் தொகுதிக்கு என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். செய்தவற்றை கூறினேன். ‘யோசித்து சொல்லுகிறோம், போய்வாருங்கள்’ என்று அனுப்பி வைத்தார்கள்." - உதயநிதி ஸ்டாலின்.-
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
பாடல்கள் சிறப்பாக உள்ளன.
-
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை [ஒன்பது பகுதிகள்]
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 1 [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த நூலின் இதயம்.] திருவள்ளுவர், இயேசு, முகம்மது நபி ஆகியோர் இன்னும் பிறக்காத காலம் அது. அன்று சிங்களம் என்ற சொற்கள் இல்லை. பௌத்தம் என்றும் சைவம் என்றும் சுவர்கள் இல்லை. வடக்கே சிவந்த மண்ணும், மேற்கே உப்புக்காற்றும், நடுவே கருங்கற்களும் மட்டுமே இருந்தன. மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபோது, "நீ யார்?" என்று கேட்கவில்லை. "எந்த நிலத்திலிருந்து வருகிறாய்?" என்று மட்டுமே கேட்டார்கள். யாழ்ப்பாணத்தின் கந்தரோடையில் அந்த முதியவர் ஒரு உடைந்த மண்பாண்டத்தின் விளிம்பைத் தடவிக் கொண்டிருந்தார். "தம்பி, கப்பல்கள் வருவதற்கு முன்பே நாம் இங்கே இருந்தோம்," என்றார். சிறுவன் கேட்டான், "எந்தக் கப்பல்கள் தாத்தா?" பெரியவர் சிரித்தார். "எல்லாக் கப்பல்களும் தான்." அங்கே நாகரிகம் என்பது ஒரு மொழியாக இருக்கவில்லை; அது ஒரு பகிர்வாக இருந்தது. தெற்கிலிருந்து வந்த வணிகன் ஒருவன் பேசிய மொழி புதியதாக இருந்தாலும், அதில் இருந்த ஈரப்பதம் அவர்களுக்குப் புரிந்தது. அவர்கள் தங்களைத் 'தமிழர்' என்றோ 'நாகர்' என்றோ அழைத்துக்கொள்ளவில்லை. 'நிலத்தின் மக்கள்' என்று மட்டுமே உணர்ந்தார்கள். அவர்களின் இறந்தவர்கள் நடுகற்களுக்குக் கீழே உறங்கினார்கள்; அவர்கள் மீது எந்தப் புனித நூல்களும் பாரமாக ஏற்றப்படவில்லை. மன்னார் கடலில் முத்து குளிக்கும்போது, மூச்சைப் பிடித்துக்கொண்டு கடலுக்குள் இறங்கிய மனிதர்களுக்கு மதம் தெரியவில்லை. அரபு தேசத்திலிருந்தும், தமிழகக் கரையிலிருந்தும் வந்த வணிகர்களிடம் அருவதி என்ற பெண் கணக்கு வழக்குகளைப் பேசினாள். அவளுக்கு மூன்று மொழிகள் தெரியும், ஆனால் அவை எதற்கும் அப்போது பெயர் சூட்டப்படவில்லை. இந்த காலகட்டத்தில் தான், இலங்கையின் வடபகுதியில் உள்ள கந்தரோடை மண்ணில் மாலை நேரம் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது. வானத்தில் மேகம் திரண்டது. தொலைவில் இடி முழக்கம் கேட்டது. அங்கே வட்டமாக அடுக்கப்பட்ட பெரிய கற்கள் இருந்தன. அவை பழமையான கல்லறைகள். அந்தக் கற்கள் பல தலைமுறைகளை பார்த்திருந்தன. ஒரு கல்லருகில் சிவா அமர்ந்திருந்தான். அவன் தனது இரும்புக் கத்தியை மெதுவாக தீட்டிக் கொண்டிருந்தான். உப்பு காற்றும் கடின உழைப்பும் அவன் கைகளை கருப்பாக மாற்றியிருந்தது. அவனருகில் கலினி நின்றாள். அவள் நாகர் குலத்தைச் சேர்ந்த திசையனின் மகள். கடலோர வர்த்தகக் குடும்பத்தில் பிறந்தவள். அவளின் காலணியில் இருந்த மணிகள் மெதுவாக ஒலித்தன. “மாலை நேரத்தில் இங்கே இருக்கக்கூடாது,” என்றாள் கலினி. “இங்கே ஆவிகள் நடமாடும் என்று சொல்வார்கள்.” சிவா சிரித்தான். “ ஆவிகளுக்கு நான் பயப்பட மாட்டேன். உயிரோடு இருப்பவர்கள்தான் எம்மை பயமுறுத்துவார்கள்,” என்றான். அவர்கள் இன்னும் காதலர்கள் இல்லை. ஆனால் ஊரார் ஏற்கனவே அவர்களைப் பற்றி பேசத் தொடங்கியிருந்தனர். அந்தக் காலத்தில் நாகர்கள் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் ஏற்றுக்கொண்டு மற்ற மக்களுடன் கலந்திருந்தனர். எனவே சிவா மற்றும் கலினி இடையில் பெரிய மொழி வேறுபாடு இல்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை வேறுபட்டது. கலினியின் குடும்பம் கடலோர வர்த்தகத்தில் ஈடுபட்டது. சிவாவின் மக்கள் நிலத்தோடும் கடலோடும் வாழ்ந்தவர்கள். “உன் அப்பாவுக்கு இது பிடிக்காது,” என்றாள் கலினி. “அவர் கணக்கிட முடியாத விஷயங்களை விரும்பமாட்டார்,” என்றான் சிவா. “தானியம், கால்நடை, உறவுகள் — அவையே அவருக்கு முக்கியம்.” கலினி மண்டியிட்டு கல் வட்டத்தைத் தொட்டாள். “இவை மன்னர்களை விடப் பழமையானவை என்று என் பாட்டி சொல்வார்,” என்றாள். “அது உண்மை,” என்றான் சிவா. “இவை நம் முன்னோர்கள் தங்கள் இறந்தவர்களை புதைத்த இடங்கள். அவர்கள் இரும்பும் சிப்பிகளும் வைத்து அடக்கம் செய்தார்கள்.” (இவற்றை இன்று ‘மெகாலிதிக் கல்லறைகள்’ என்று அழைக்கிறோம். இவை கிமு 500 முதல் கிமு 200 வரை இருந்தவை என்று ஆய்வுகள் கூறுகின்றன.) அந்த நேரத்தில் வயலருகே சண்டைச் சத்தம் கேட்டது. ஒரு கடலோர இளைஞன், ஒரு உள்நாட்டு இளைஞனுடன் வாக்குவாதம் செய்தான். “உங்கள் மக்கள் வர்த்தகம் செய்கிறார்கள், திருமணம் செய்கிறார்கள். ஆனால் எங்களை பழமையானவர்கள் என்று அழைக்கிறார்கள்!” என்றான் உள்நாட்டு இளைஞன். “நீங்கள் கற்களோடு பேசுகிறீர்கள். உலகம் மாறிக் கொண்டிருக்கிறது,” என்றான் மற்றவன். சிவா எழுந்து நின்றான். அவன் அமைதியாகச் சொன்னான்: “மாற்றம் நல்லது. ஆனால் மாற்றம் என்றால் அழிப்பது அல்ல. நம் பழமையை காப்பாற்றிக் கொண்டே முன்னேறலாம்.” என்றான் அன்று இரவு கலினியின் தாய் அவளிடம் கூறினாள்: “உன் வாழ்க்கைத் துணையை கவனமாகத் தேர்ந்தெடு. புதிய கடவுள்களும் புதிய சட்டங்களும் வரும் காலம் இது.” கலினி எதுவும் பேசவில்லை. அவள் ஏற்கனவே காதலித்திருந்தாள் — ஒரு மனிதனை மட்டும் அல்ல, தன் நினைவுகளை மறக்காத இந்த நிலத்தையும். தொலைவில் கப்பல்கள் கடலைக் கடந்து சென்றன. ஆனால் கந்தரோடை கற்கள் அமைதியாக இருந்தன. அவை ஏற்கனவே பல கப்பல்களை பார்த்திருந்தன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 2 தொடரும் துளி/DROP: 2109 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 1 https://www.facebook.com/groups/978753388866632/posts/34464768263171714/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 141 மேலும், 'புத்தரும் அவருடைய போதனைகளும்' என்ற தலைப்பை தமிழிலும் ஆங்கிலத்திலும் நான் சேர்த்துள்ளேன். / Additionally, I am including the topic 'The Buddha and His Teachings' in both Tamil and English. பகுதி: 141 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" சமூக மாற்றம் [Transformation of Society]: புத்தரின் போதனைகள் தனிநபர்களை மட்டுமல்ல, சமூகங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமூக சமத்துவம், நீதி மற்றும் அகிம்சை [social equality, justice, and non-violence] மீதான அவரது முக்கியத்துவம், 20 ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் [Martin Luther King Jr.] தலைமையிலான வன்முறையற்ற சிவில் உரிமைகள் இயக்கம் உட்பட சமூக மாற்றத்திற்கான இயக்கங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நீடித்த செல்வாக்கு [Enduring Influence]: கௌதம புத்தரின் போதனைகள் 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து இன்றும் பொருந்தக் கூடியதாகவே இருக்கின்றன. பௌத்த மரபுகள் மற்றும் நடைமுறைகள் தலைமுறைகளாகக் கடத்தப்பட்டுள்ளதுடன் அவரது போதனைகள் திரிபிடகம் [Tripitaka] போன்ற புனித நூல்களில் பாதுகாக்கப்பட்டும் இன்றுவரை உள்ளன. பலர் அவரது போதனைகளில் உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் காண்கிறார்கள், அவை தனிப்பட்ட வளர்ச்சி, நெறிமுறை நடத்தை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான கட்டமைப்பை [provide a framework for personal growth, ethical conduct, and spiritual development] எல்லோருக்கும் வழங்குகின்றன. கௌதம புத்தர் என்பது புத்த மத வரலாற்றில் மிக முக்கியமான, தாக்கம் கொண்ட ஒரு ஆளுமையாக இருந்தாலும், அவரைப் பிற உலகப் பெரும் நபர்களுடன் ஒப்பிடுவது என்பது ஒரே மாதிரியான விடயம் அல்ல; இது ஒவ்வொருவரின் சாதனைகள், சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவரவர் கால சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்தது. இருப்பினும், அவரைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள இங்கே, கௌதம புத்தருக்கும் சில குறிப்பிடத்தக்க நபர்களுக்கும் இடையிலான சுருக்கமான ஒப்பீடுகளை கீழே பார்ப்போம். [1] கௌதம புத்தர் மற்றும் இயேசு கிறிஸ்து இருவரும் முக்கிய உலக மதங்களை நிறுவிய மரியாதைக்குரிய மதத் தலைவர்கள் ஆகும். புத்த மதத்தில் புத்தர் மைய நபராக இருப்பது போல, கிறிஸ்தவத்தில் இயேசு கிறிஸ்து மைய நபராக உள்ளார். அவர்கள் இருவரும் இரக்கம், அன்பு மற்றும் ஆன்மீக ஞானம் [compassion, love, and spiritual enlightenment] பற்றிய செய்திகளைப் போதித்தார்கள். இருப்பினும், அவர்களின் போதனைகள் மற்றும் நம்பிக்கைகள் கணிசமாக வேறுபடுகின்றன, மேலும் அவர்களின் வரலாற்று சூழல்களும் வேறுபட்டவை. [2] கான்பூசியஸ் அல்லது கன்பூசியஸ் [Confucius] ஒரு சீன தத்துவஞானி, அவர் கௌதம புத்தரின் அதே காலத்தில் வாழ்ந்தார். இரு நபர்களும் நெறிமுறைகள், தார்மீக மதிப்புகள் மற்றும் நல்லொழுக்க வாழ்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டும் கொள்கைகளை [ethics, moral values, and guiding principles for leading a virtuous life] வலியுறுத்தினர். புத்தர் தனிப்பட்ட ஆன்மீக வளர்ச்சி மற்றும் ஞானம் பெறுவதில் கவனம் செலுத்திய அதே வேளையில், கன்பூசியஸ் சமூக நல்லிணக்கம், பிள்ளைப் பாசமும், பெற்றோரை மதிக்கும் பண்பும் மற்றும் சமூக கட்டமைப்புகளுக்குள் சரியான நடத்தை [social harmony, filial piety, and proper conduct within societal structures] ஆகியவற்றை வலியுறுத்தினார். [3] சாக்கிரட்டீசு [Socrates] பண்டைக் கிரேக்கத்தின், ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீசு என்பது இவருடைய சிறப்பாகும். அவரது விசாரணை முறைக்கும், உண்மை மற்றும் அறிவைத் தேடும் திறனுக்கும், இவர் பெயர் பெற்றவர். சாக்ரடீஸ் மற்றும் கௌதம புத்தர் வெவ்வேறு காலகட்டங்களிலும் கலாச்சார சூழல்களிலும் வாழ்ந்தாலும், அவர்கள் கேள்வி கேட்பது, சுய பரிசோதனை மற்றும் ஞானத்தைத் தேடுவதில் [questioning, self-examination, and the search for wisdom.] பொதுவான முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்டனர். இருப்பினும், புத்தரின் போதனைகள் அறிவுசார் விசாரணையைத் தாண்டி மனித துன்பங்களைத் தணிப்பதை உள்ளடக்கியது. சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். இது தான் அவரின் முறையாகும். Part: 141 / APPENDIX – "The Buddha and His teachings" Transformation of Society: Buddha's teachings have not only influenced individuals but also had a significant impact on societies. His emphasis on social equality, justice, and non-violence has inspired movements for social change, including the nonviolent civil rights movement led by Martin Luther King Jr. in the 20th century. Enduring Influence: Gautama Buddha's teachings have endured for over 2,500 years and continue to be relevant today. Buddhist traditions and practices have been passed down through generations, and his teachings have been preserved in sacred texts such as the Tripitaka. Many people find inspiration and guidance in his teachings, which provide a framework for personal growth, ethical conduct, and spiritual development. Gautama Buddha, also was an influential figure in the history of Buddhism and Comparing him to other great figures in the world is subjective and depends on various factors such as their achievements, impact, and historical context. However, Here, I will provide brief comparisons between Gautama Buddha and a few other notable figures, Just to understand more about him. Jesus Christ: Both Gautama Buddha and Jesus Christ are revered religious leaders who founded major world religions. While Buddha is the central figure in Buddhism, Jesus Christ is the central figure in Christianity. They both preached messages of compassion, love, and spiritual enlightenment. However, their teachings and beliefs differ significantly, and their historical contexts are distinct. Confucius: Confucius was a Chinese philosopher who lived around the same time as Gautama Buddha. Both figures emphasized ethics, moral values, and guiding principles for leading a virtuous life. While Buddha focused on personal spiritual development and attaining enlightenment, Confucius emphasized social harmony, filial piety, and proper conduct within societal structures. Socrates: Socrates was an ancient Greek philosopher known for his Socratic method of inquiry and his pursuit of truth and knowledge. Although Socrates and Gautama Buddha lived in different time periods and cultural contexts, they shared a common emphasis on questioning, self-examination, and the search for wisdom. However, Buddha's teachings extended beyond intellectual inquiry to encompass the alleviation of human suffering. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 142 தொடரும் / Will follow துளி/DROP: 2110 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 141 https://www.facebook.com/groups/978753388866632/posts/34464971656484708/?
-
சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள்தான்!"- நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. தமிழகத்தையே உலுக்கிய தந்தை - மகன் கொலை குறிப்பிட்ட அனுமதி நேரத்திற்குப் பிறகு கடையை திறந்து வைத்ததாகக்கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீஸார், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அங்கு போலீஸார் நடத்திய தாக்குதலில் அடுத்தடுத்த நாட்களில் இருவரும் உயிரிழந்தனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் , ரகுகணேஷ் உள்பட 10 போலீஸார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்த நிலையில் வழக்கின் தீவிரம் காரணமாக சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் முதல் கட்டமாக 2,207 பக்கங்கள், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் உறவினர்கள் தந்தை-மகன் கொலை வழக்கில் தீர்ப்பு சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த காவலர்கள் ரேவதி, பியூலா ஆகியோரின் சாட்சியங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பரபரப்பான இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததால் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறப்பட்ட நிலையில், மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தீர்ப்பு வழக்கில் நீதிபதி குறிப்பிட்டவை.... * போலீஸார் அடித்ததால்தான் தந்தை, மகன் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது. * கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் இருவரும் அடைக்கப்பட்ட போதே அவர்களின் உடல்களில் காயங்கள் இருந்தன. * உயிரிழந்த ஜெயராஜிற்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்தது. ஆனால் நோய் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை. * கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே அவர்களது இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் கூறியுள்ளனர். உயர்நீதிமன்றம் மதுரை கிளை * மரணங்களை விளைவிக்கக்கூடிய வகையில் அந்த காயங்கள் இருந்தது. * கைகளை கயிற்றால் கட்டி தொங்க விட்டு தாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. மேசையில் படுக்க வைத்தும் தாக்கியுள்ளனர். * ஆய்வாளர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால்தான் காவலர்கள் அடித்துள்ளனர். * நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா- மகன் கிடைத்துள்ளனர் என, போலீஸார் பேசிக் கொண்டனர். " என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். மேலும தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள்தான் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 9 பேருக்கும் வரும் மார்ச் 30-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 9 காவலாளிகளும் குற்றவாளிகள்தான்!"- நீதிமன்றம் தீர்ப்பு| Sathankulam father–son murder case; court delivers verdict.
-
காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு..!
23 Mar, 2026 | 10:55 AM (இணையத்தள செய்திப் பிரிவு) காத்தான்குடி நகரின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் தீர்க்கதரிசனமான சிந்தனை மற்றும் வழிகாட்டலின் பேரில் உருவாக்கப்பட்ட "வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை" ஞாயிற்றுக்கிழமை (22) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இவ்விழாவில் நகர சபை உபதவிசாளர், சபை உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்து சிறப்பித்தனர். காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு..! | Virakesari.lk
-
தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்: வடகிழக்கு மக்கள் அதிருப்தி!
23 Mar, 2026 | 03:33 PM வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன இழிவுபடுத்தல்,வெறுப்பு பேச்சுகளை தமிழ் அரசியல்வாதிகளே உடன் நிறுத்து என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் தேவைகளுக்கு குரல்கொடுப்பதை விடுத்து இனங்களிடையே இழிவுபடுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்போது பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர், பெண்கள் விவகார அமைச்சர்,மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றிற்கான அனுப்பவதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன. இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள். ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும். மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும். இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் இனவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பான்மை ஆழப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர். எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன, பிரதேச, மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். அத்துடன், இனம், பிரதேசம், மொழி, சாதியம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய தெளிவான மற்றும் வலுவான பாராளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் தங்களது உள்கட்டமைப்பு கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை உருவாக்கும் போது, ,வ்வாறான வெறுப்பு பேச்சுக்களைத் தடுக்கும் உறுதியான வழிகாட்டுதல்களை ,ணைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய கொள்கை மாற்றங்கள், நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமையும். “நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். அதனை சீர்குலைக்கும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் எங்களது உறுதியான எதிர்ப்பு தொடரும்.” தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்: வடகிழக்கு மக்கள் அதிருப்தி! | Virakesari.lk
-
இஸ்ரேலுக்கு எதிரான பதிவுக்காக 09 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்ட இளைஞர் ; மன்னிப்பு கோரினார் பொலிஸ் அதிகாரி
23 Mar, 2026 | 04:35 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இஸ்ரேலியக் கொடியை அவமதித்ததாகக் கூறப்படும் போலித் தகவலின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 09 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 21 வயதுடைய இளைஞரிடம் பொலிஸ் அதிகாரி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். அத்துடன், அவருக்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த முஹமட் ரிபாய் முஹமட் சுஹேல் என்ற இளைஞர், கடந்த 2024 அக்டோபர் மாதம் சமூக ஊடகத்தில் இஸ்ரேலியக் கொடியைச் சேதப்படுத்தும் வகையிலான பதிவை இட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தெஹிவளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த இளைஞர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று திங்கட்கிழமை (23) தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தெஹிவளை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.பி. ஹேரத், நீதிமன்றத்தில் முன்னிலையாகி, நீதவான் நீதிமன்றத்திற்குத் தான் தவறான தகவல்களை வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். தனது செயலால் அந்த இளைஞரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதை ஏற்றுக்கொண்ட அவர், அதற்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்ததுடன், 20 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையைத் திறந்த நீதிமன்றத்தில் கையளித்துள்ளார். மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், குறித்த இளைஞருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எவ்வித ஆதாரமும் இல்லை எனச் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றினால் அவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தார். இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வந்ததை அடுத்து, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராகத் தான் தாக்கல் செய்திருந்த முறைப்பாட்டைத் திரும்பப் பெறவும் அந்த இளைஞர் சம்மதித்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான பதிவுக்காக 09 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்ட இளைஞர் ; மன்னிப்பு கோரினார் பொலிஸ் அதிகாரி | Virakesari.lk
-
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை! வடக்கு லண்டனில் உள்ள ஒரு யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் இரவோடு இரவாகத் தீக்கிரையாக்கப்பட்டமை மிகவும் அதிர்ச்சியளிக்கும் யூத எதிர்ப்புத் தீவைப்புத் தாக்குதல் என்று பிரதமர் இங்கிலாந்து கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டார். தீ விபத்தினை அடுத்து சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்களையும் 40 தீயணைப்பு வீரர்களையும் அனுப்பிய லண்டன் தீயணைப்புப் படை, வாகனங்களில் இருந்த பல சிலிண்டர்கள் வெடித்ததால் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னல்கள் நொறுங்கியதாகக் கூறியது. எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது. கோல்டர்ஸ் கிரீனில் உள்ள ஒரு யூத ஜெப ஆலயத்திற்கு அருகே நடந்த தாக்குதலுக்கு ஈரானுடன் இணைந்த பன்னாட்டுப் போராளிகள் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாத செயல்பாடுகளை கண்காணிக்கும் நிறுவனமான ‘The SITE Intelligence’ இணையதளம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம், கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடந்த இதேபோன்ற தீவிபத்துகளுக்குப் பின்னணியில் இந்தக் குழு இருந்ததாகவும் அது கூறியது. https://athavannews.com/2026/1469640
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப். சாதகமாகவும் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஈரானின் மின் விநியோகக் கட்டமைப்பை அமெரிக்கா இலக்கு வைத்தால், இஸ்ரேலின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்தே ட்ரம்பின் இந்தத் தீர்மானம் வெளியாகியுள்ளது. ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடரும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்: “ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் பாதுகாப்புத் துறைக்கு (Department of War) உத்தரவிட்டுள்ளேன். தற்போது நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் வெற்றியைப் பொறுத்தே இந்த இடைநிறுத்தம் நீடிக்கும்.” https://athavannews.com/2026/1469731