Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஊர் நடப்பை நகைச்ச்வையாக சொன்ன உங்கள் ஆக்கத்துக்கு நன்றி😅
  3. உண்மை பொய் தேவையில்லை உன் செய்தியில்… உண்மையை உரக்கச் சொல்ல தேவையில்லை பொய் செய்திதானென்று பயம் தேவையில்லை கண்ணசைவும் கையசைவும் இருந்திட்டால் உலகம்பூராவும் உன்காலடியில் எடுத்த விடையம் என்னவானாலும்…. எதுகை மோனை உனக்குத் தேவையுமில்லை.. உண்மையோ எள்ளளவும் வேண்டாம் எடுத்தை தூக்கிப் போட்டாலே காணும் கைப்பேசி உன்னை படமெடுக்கும் கண்டதை கதைத்தாலும் கண்டிக்காது சொன்னதை அப்படியே சொல்லும் சொரணை கெட்டசனம் சொக்கிப்போய் திரும்ப திரும்ப பார்க்கும் பார்வைக்கு ஒரு விருப்பும் ஒரு ஏற்பும் இருந்தாலே நீ ஒரு செய்தியாளன் சொந்தமாக சொத்து சேர்த்து விட்டால் மகா செய்தியாளன் செய்திக்கு .ஒரு தாற்பரியம் இருக்கு ஒரு தார்மீகமும் இருக்கு சொல்வதில் ஒரு செம்மையும் இருக்கு சொல்வடிவமும் இருக்கு… இவை இல்லையெனின்… அது செய்தியல்லடா… செய்தியை…சொல்லுங்கடா..உண்மை செய்தியாய் சொல்லுங்கடா…
  4. போன தடவை கேட்க மறந்திட்டன்… இப்ப இது அவசியமாய் இருக்கு.. இது இல்லாமல் இங்கு வாழுறதே கஸ்டம் இல்லையென்று சொல்லிவிடாதே.. மாடு .வளர்த்து ..பால் வித்த காலம் போயிட்டுது பாலுக்கு இப்ப சனம் பூட் சிற்றிக்கு போகுது பகுதிநேர உழைப்பொன்று தேடப் போறன் பார்த்து நல்ல போனா அனுப்பிவிடு… ஆடு வளர்த்து கிடாய் வித்த காலம் போயிட்டுது ஆரிப்ப ஆடடித்து பங்கு போடுகினம் ஆட்களெல்லாம் இப்ப மட்டன் திருவிழாவுக்கு போகினம் ஆரெட்டையென்றாலும் ஒரு போன் கொடுத்துவிடு.. தோட்டத்திலை கத்தரி வெண்டி போட்டாலும் போயிலையை நட்டாலும் விலை போகாதாம் கஞ்சாவும் ..குடுவும் அடிக்கிற வாய்க்கு இவை ஏன் அப்பிள் நல்லதாம் அதைத்தான் அனுப்பிவிடு மானாண்டிச் சந்தையில்..மாலை நேரத்தில் பாய் பெட்டி இழைத்து வித்த காலமும் போச்சு பாயையும் பெட்டியையும் இப்ப ஆர் தேடிகினம் பார்சலில் என்றாலும் போனை அனுப்பிவிடு அவசரம் ஆச்சிக்கு ஏன் இப்ப அப்பிள் போனென்று கேட்கிறாய் ஆச்சி டிக் –ரொக் போடப்போறன் ஆரெட்டை பழகப் போறன் என்று நினைப்பாய் அயலட்டையெல்லாம் உதுதான் தொழில் ஆயிரக்கணக்கில் காசுவருதாம்.. ஆச்சியின் அறிவுக்கும் ..இந்த குரலுக்கும் ஆயிரம் வியூஸ் வரும் … வயதுதான் போட்டுது அதுக்கும் வழியிருக்கு…மேக்கப் படிப்பது.. அப்பன் உன்னை நம்பி அயலட்டையெல்லாம் சொல்லிப்போட்டன் அவையும் ஆச்சியின் ரிக்-ரொக் பார்க்க ரெடி அப்பிள் போன்தான்..வேணும்தம்பி அதை மறக்காமல் அனுப்பிவிடு…
  5. என்ன நீங்க அப்படிச் சொல்லுறியள் இலங்கையில் இருந்து..அல்லாகு அக்பர் கோசமல்லவா ஒலிக்குது ..இது உண்மையா
  6. Today
  7. பாராட்டுக்கள் ...தொடரட்டும் கவிதையில் வரும் வரிகள் யாவும் காட்சியாக வரும் என நினைத்து ஏமாந்து போனேன்🤣...ஈரான்காரனின் ஏவுகணைகள் எத்தனை இலக்க்கை தாக்காமல் வீணாக வானில் வெடிக்குது தானே என நினைத்து சமாதானம் அடைந்தேன்...🤣
  8. இதற்கும் என்.பி.பி அடியாட்களை நியமித்துவிட்டால் ...வியாபாரம் களைகட்டும்
  9. பூக்குழியில் இறங்குதல் =தீமிதிப்பு கொசுறுச் செய்தியும் ஒன்றிருக்கு....என்னுடைய கடந்தகால வாழ்க்கையில் ...எமது ஆலயத்தில் மூன்று வருடம் தொடர்ச்சியாக இந்த தீ மிதிப்பை செய்திருக்கின்றேன்....இப்போது நினைத்தாலும் பெரும் அதிசயமாகவே தெரியும் இந்த பூக்குழி இறக்கம்... புகழ் பெற்றது ...உடப்பும் ...பாண்டிருப்பு திரொபதை அம்மன் கோவிலும் ... ஆர்வ பக்தி...மிகுதியிலும் ...இந்த இரண்டு கோவில் தரிசனமும் செய்திருக்கின்றேன்....
  10. உண்மை தான்,மதங்கள் தான் இனி தாயகத்தை காப்பாற்ற வேண்டும்...பெளத்தமும் ,இஸ்லாமும் அதை செய்யப்போவதில்லை... சைவமும் கிறிஸ்தவமும் தமிழ்மொழி ஊடாக தாக்கு பிடிக்கும் சந்தர்ப்பம் உண்டு...காலம் பதில் சொல்லும் 50 வருடங்களின் பின் சிங்களவர்களே இந்தியாவிடம் தங்கள் நிலப்பரப்பை இழந்து விடுவார்கள் , சிறிலங்காட‌ ஜெயவேவா என்று சொல்வதற்கு பதிலாக ,ஜெய்ஹிந்த் சொல்லவேண்டிய நிலை வருமோ தெரியாது
  11. அமெரிக்க கடன் 39 ரில்லியன்!!! --- --- --- *சீன யுவான் சர்வதேச சந்தையில் 30 சதவீதமாகும் வாய்ப்பு *சீன யுவானில் எரிசக்தியை கொள்வனவு செய்த இந்தியா! *ஈழத்தமிழர்கள் சீன அபிவிருத்தி திட்டங்களை ஏன் எதிர்த்தனர்? --- --- --- ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் போர், அமெரிக்க டொலரை (Us Dollar) காப்பாற்றும் நோக்கில் சீன யுவானுக்கு (Chinese Yuan) எதிராக நடத்தப்படுகிறது என்பதை பகிரங்கப்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் காலம் காலமாக அமெரிக்க டொலர் ஒற்றை நாணயமாக செல்வாக்குச் செலுத்தி வந்தது. எண்ணெய் வர்த்தகத்தில் கூட அமெரிக்காவே முன்னணியில் உள்ளது. தற்போதும் சர்வதேசச் சந்தையில் சுமார் 80 வீதம் அமெரிக்க டொலர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில், சீனாவின் யுவான் நாணயம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதன் காரண - காரியமாக ரசியாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து, மோடிக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார். 2026 ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்தியா, ரசியாவிடம் இருந்து சீன யுவானில் 10.2 வீதமான கச்சா எண்ணெய்யை கொள்வனவு செய்ததாக ரொய்டர்ஸ் (reuters) செய்தி நிறுவனம் சென்ற 19 ஆம் திகதி தெரிவித்திருந்தது. ஆனால் இது பிரத்தியேகமான கட்டண முறை அல்ல, ஏனெனில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நெகிழ்வான கட்டண விதிமுறைகளை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ரசிய எரிசக்தி துணை அமைச்சர் பாவெல் சொரோகின் (Pavel Sorokin) தெரிவித்துள்ளார். சென்ற மார்ச் மாதம் 14 ஆம் திகதி ஈரான் வெளியிட்ட அறிவிப்பின் பிரகாரம், இந்தியா வளைகுடா நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை யுவானில் கொள்வனவு செய்தால், அமெரிக்காவுக்கு மிகப் பெரும் தலையிடியாக அது இருக்கும் என்று எக்கனாமிக் ரைமஸ் (economictimes) என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா கடந்த ஆண்டு 120 பில்லியனுக்கு அமெரிக்காவிடம் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்திருக்கிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகிய உள்ளடக்கிய வளைகுடா நாடுகள், சீன- ரசிய மற்றும் இந்தியாவை மையப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பில் இணைந்த பின்னர், உலக எரிசக்தி விற்பனை 80 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக குறைவடைந்துள்ளது. சீன யுவான் சர்வதேச வர்த்தகத்தில் நுழைவது பற்றி அல்ஜசீரா ஊடகம், அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி என வர்ணித்துள்ளது. ரசியா - ஈரான் ஆகிய நாடுகள் தமது சர்வதேச வர்த்தக செயற்பாடுகளை யுவானுக்கு மாற்றியுள்ளதாக அல்ஜசீரா சுட்டிக்காட்டியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சீன யுவான் சர்வதேச வர்த்தகத்தில் ஆகக் குறைந்தது 30 சதவீதத்தை எட்டிப் பிடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு உள்ளான ஈரான் போன்ற நாடுகள் சீன யுவானில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டு. தற்போது ஆயுத உற்பத்திக்குத் தேவையான அனைத்து மூலப் பொருட்களையும் சீனா, ஈரானுக்கு வழங்குகிறது. ஆகவே, இப்பின்னணியில் ”பிறிக்ஸ்” (BRICS) பொருளாதார கட்டமைப்பின் வளர்ச்சியும் வளைகுடாவை மையப்படுத்திய மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் எல்லாமே பிறிக்ஸில் இணைந்துள்ள பின்னணியில், தற்போது அமெரிக்காவின் தேசியக் கடன் $38.5 ட்ரில்லியனாக உயர்ந்து, வட்டிச் செலவுகளை அதிகப்படுத்தியுள்ளதாக எக்கனமிக் ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 2025 இன் பிற்பகுதியில், மாதாந்த வட்டி செலுத்துதல்கள் மட்டும் $276 பில்லியனைத் தொட்டன, இது இப்போது சில கூட்டாட்சி நிறுவனங்களின் முழு ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கும் போட்டியாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கடன் விகிதம், ஏறத்தாள 126% இருப்பதால், "நிதி ஆபத்து மண்டலம்" (Financial risk zone) என்று அழைக்கும் பகுதிக்குள் அமெரிக்கா நுழைவதாக எக்கனமிக் ரைம்ஸின் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொருளாதாரச் சரிவுகளின் போது அது ஒரு நாட்டின் முன்னோடித் திறனை வரலாற்று ரீதியாக வரம்புக்கு உட்படுத்துகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் சுமார் $8 பில்லியன் கடன் அதிகரித்து வருவதால், அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைமையை அடைகிறது. $38.5 ட்ரில்லியன் கடன் என்பது உடனடிக் கணிப்பீடு. ஆனால், இத் தொகை அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பாக 2025 ஆம் ஆண்டு மிக நீண்ட வட்டி விகிதத்தை அமெரிக்கா செலுத்தியுள்ளதை ஆதாரமாகக் கொண்டு எக்கனமிக் ரைம்ஸ் விளக்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க மொத்த தேசிய உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்புகள் 1.5% இற்கு கீழ்நோக்கி அமைந்துள்ளன. இது அமெரிக்கா சேர்த்து வைத்த உறுதியான நிதிக் கட்டமைப்பை அடித்துச் செல்லும் சுனாமி போன்றது என எக்கனமிக் ரைம்ஸ் வர்ணிக்கிறது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா தவிர்ந்த மேற்கு நாடுகளும் சர்வதேச சந்தையில், பல்வகை நாணய பயன்பாட்டுக்கு ((Multi currency) இணங்கி வரும் சூழலில், ஒற்றை நாணயச் செயற்பாடு (Single currency) என பிடிவாதமாக நின்ற அமெரிக்காவும் அதன் டொலரும் வீழ்ச்சியடையும் ஆபத்து உள்ளது. ஆனால், இந்த விடயங்கள் தொடர்பாக ட்ரம்ப் ஆராய்வதாக இல்லை. ட்ரம்பினுடைய உடனடிக் கவனம் என்பது ஈரான் அரசின் கட்டிப்பாட்டில் உள்ள ஹார்மூஸ் நீரிணையை கைப்பற்றி அதன் ஊடாக எண்ணெய் வருவாய்களை அதிகரிப்பது மாத்திரமே. சர்வதேச சந்தையில் ஒற்றை நாணய பயன்பாட்டை தொடர முடியும் என ட்ரம்ப் நம்புகிறார். ஆனால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர், குறிப்பாக ஈரானின் மூளையாக செயற்படும் சீனாவினால் ட்ரம்பின் இந்தக் கனவுக்கு இடமளிக்கும் வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், அமெரிக்க கூட்டாளி நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம் கூட ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஒத்துழைப்பதாக இல்லை. இந்தியாவும் ரசிய - சீன கூட்டு என்ற நிலைமக்குள் தற்போது வந்துள்ளது போல் தெரிகிறது. ஆகவே, ட்ரம்ப் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது பட்டவர்த்தனம். ஆனாலும், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள்- அமெரிக்க தீர்மானம் எடுப்போர் அது பற்றி தீவிரமாக ஆராய்கின்றனர். இருந்தாலும் சர்வதேச சந்தையில் 2030 ஆம் ஆண்டுக்குள் சீன யுவான் தாக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்த முடியாது என விஞ்ஞானியும் பசிபிக் இன்ஸ்டிட்யூட்டின் இணை நிறுவனருமான பீட்டர் க்ளீக் (Pacific Institute co-founder Peter Gleik) குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், அமெரிக்காவின் கடன் (loan) என்பது நேரடியானது அல்ல. அமெரிக்க மக்கள் (individual investors) வங்கிகள், பரஸ்பர நிதிகள், ஓய்வூதிய நிதிகள் (mutual funds - pension funds) அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) அரசு அமைப்புகள் (Social Security fund) ஆகியவற்றிடம் இருந்து கடன்களை பெறுகின்றன. அமெரிக்க அரசின் அரச பத்திரங்கள் எனப்படும் பிணைமுறி (Treasury bonds / bills / notes) ஆகியவற்றை அமெரிக்கா விற்பனை செய்தும் நிதியை பெறுகிறது. அமெரிக்க மக்கள் மற்றும் ஏனைய நாடுகள் அந்த பிணை முறிகளை கொள்வனவு செய்கின்றன. இதுவே அமெரிக்க கடனாகவும் மாறுவதாக எக்கனமிக் ரைம்ஸ் சுட்டிக்காட்டுகிறது. சுமார் 70%–75% கடன் அமெரிக்க உள்ளக முதலீட்டாளர்களிடம் இருந்தும் பெறப்படுகின்றன. சர்வதேச சந்தையில் சுமார் 80 சதவீதம் டொலரின் ஆதிக்கம் உண்டு என்ற நம்பிக்கையில் வழங்கப்பட்ட இக் கடன்கள், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்ற தொனியை அல்ஜசீரா ஊடகம் வெளிப்படுத்துகிறது. ஆகவே, 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அதாவது 2025 ஆம் ஆண்டு மையப் பகுதியில் அமெரிக்காவுக்கு குறிப்பாக ட்ரம்புக்கு இவை தெளிவாக தெரிந்த பின்னணியில் தான், இறக்குமதி ஏற்றுமதிகளில் அதிக வரியை (tariff tax) ஏனைய நாடுகள் மீது சுமத்தியுள்ளார் என்பது கண்கூடு. இந்தப் பின்புலத்தில் இந்தியா, ஏற்கனவே அமெரிக்காவுடன் இருந்த பொருளாதார உறவை மாற்றி ரசிய - சீன உறவு முறைமை ஒன்றுக்குள் வரக்கூடிய சாத்தியங்கள் இருந்தன. இதனை இலங்கையும் சாதகமாக பயன்படுத்தி வந்தது. ஏனெனில், இலங்கை ஏற்கனவே சீன உறவை வைத்திருந்தாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க - இந்திய தயவை நாடியிருந்தது. ஆனால் ஈரான் போர் மற்றும் அமெரிக்க நிதி நெருக்கடிகள் காரணமாகவும் சீன யுவானில், இந்திய எரிசக்தியை கொள்வனவு செய்ய ஆரம்பித்தமையும் இலங்கைக்கு மேலும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆகவே, புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலுக்குள் எந்த ஒரு வல்லரசு நாடுகளையும் நேரடியாக ஆதரிப்பதை விட, தமது நாடு என்ற கொள்கையோடு செயற்பட்டால், நிலைமையை சமாளிக்க முடியும். குறிப்பாக அரசு அற்ற தேசிய இனங்கள் இக்கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குர்திஸ் இன போராளிகள் காலத்துக்கு காலம் அமெரிக்காவை ஆதரித்து பின்னர் அமெரிக்காவினால் தூக்கி எறியப்படுவது போன்ற காரணத்தால் இன்று வரை அவர்கள் தமது அரசியல் விடுதலையை அடைய முடியாத சிக்கல் நிலவுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஜனநாயக சூழலில் தமிழ்த் தேசியக் கட்சிகள், அமெரிக்க - இந்திய அரசுகள் என்ற இரண்டு அரசுகளைத் தவிர வேறெந்த அரசுகளுடனும் உறவை பேணவில்லை. ஏனைய நாடுகளுடன் ஈழத்தமிழர் விவகாரம் பற்றிய விடயங்கள் பற்றிப் பேசியதும் இல்லை. குறிப்பாக சீனா, வடக்கு கிழக்கில் ஏதேனும் அபிவிருத்தித் திட்டங்களை செய்ய முற்பட்டால் உடனடியாக எதிர்த்து, இந்திய விசுவாசத்தை காண்பிப்பது போன்ற உத்திகளை மாத்திரமே கையாண்டனர். ஆனால் அந்த உத்திகள் மிகத் தவறானது என ஏலவே, இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. ஈரான் போருக்குப் பின்னர் மாறவுள்ள உலக அரசியல் ஒழுங்கில் இந்திய - சீன உறவு, இந்திய - ரசிய உறவு வலுவடையக் கூடிய சாத்தியங்கள் அதிகம். குறிப்பாக பொருளாதார முறைமைகளில் இந்திய - சீன உறவு மேலோங்கவுள்ள பின்னணியில், சீனாவுக்கு எதிரான இந்தோ - பசுபிக் பிராந்திய இராணுவ செயற்பாடுகளிலும் அமெரிக்காவுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே. பாதுகாப்பு விடயத்தில் இந்தியா, ஏற்கனவே அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கவில்லை. இப்பின்னணியில், ஈழத்தமிழர் தரப்பு இனிமேலாவது தமக்குரிய வெளியுறவுக் கொள்கையை வகுத்து சார்புத் தன்மை அற்ற உத்திகளை கையாள வேண்டும். ஏற்கனவே சிங்கள அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட கட்சி அரசியலுக்கு அப்பால், ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று செயற்படுகின்றனர். அதேபோன்று அமெரிக்கா - இந்தியா - சீனா ஆகிய மூன்று நாடுகளையும், ஒரு புள்ளியில் நின்று கட்சி அரசியலுக்கு அப்பால் கையாளுகின்றனர். இந்திய வெளியுறவுக் கொள்கையோடு ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பு அனுசரித்துச் செல்கிறது. ஆகவே, ஈழத்தமிழர் ”அரசியல் விடுதலை” என்பதை இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குள் முற்றாக மாற்றக் கூடிய ஏற்பாடுகளை அநுர அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள பின்னணியில். ஈரான் போரின் பின்னரான உலக அரசியல் ஒழுங்கில் கூட, ஈழத்தமிழர் பக்கம் நியாயம் வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அதற்கான வழிமுறைகளை தேட வேண்டியது தமிழ்த் தேசியக் கட்சிகள் மாத்திரமல்ல, சிவில் சமூக அமைப்புகளுக்கும் அந்த பொறுப்பு உண்டு. இன்னமும் காலம் சென்றுவிடவில்லை. ஆனால், எந்த வகையான தயாரிப்புகளும் ஈழத்தமிழர் தரப்பில் இருப்பதாக அல்லது அதற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0AenR8ViQdroSpnMHwMygXRdHfGGHBV82LF1u9JzQ2DFNn3ktrDVcsPov1qztvp92l/?mibextid=wwXIfr
  12. இருக்கலாம்.. சைபிரஸ் மீது ஏவப்பட்ட ஏவுகணை கூட ஈரானில் இருந்து வரவில்லை என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு முன்னர் அறிவித்தது. முதலில் இதை ஈரான் உரிமை கோரியதாக சொன்னார்கள் 4000 கிமி போக கூடிய ஏவுகணை ஈரானிடம் உள்ளது என இதுவரை அறியப்படவில்லை ஒன்று வரும் வழியில் வெடித்தது, இன்னொன்று சுட்டு வீழ்தப்பட்டது என்றார்கள். ஆனால் சுட்டோர் யார் என்ற உரிமை கோரல் இல்லை. பிரித்தானியா அதீத மெளனம்
  13. அடபாவிகளா எரிபொருள் விலையை உயர்த்திவிட்டு வாங்கோ வாங்கோ என்றால் யார் வருவான்? பழைய அளவுக்கே எவரும் எரிபொருளை வாங்க மாட்டார்கள்.
  14. ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்லி அவிக்கின்றார்கள். உண்மை, பொய்யை பிரித்தறிய முடியாத நிலை. எதுவரை செல்கின்றது என பார்ப்போம்.
  15. 😂 நல்ல கதை சொல்லவா, நல்லா இழுத்து சொருகவா.. கருணைகொலை கத்தரி இலை கத்தாரில் போட்டது ஈரான் வலை முன்பே எசுலிளுளேன்… சிறிமா வீட்டில் சித்தப்பு சிப்பந்தி மாமா மகிந்த வீட்டில் மருமகனோ மைத்திரி யோடு, எல்லாம் ஓரல் வழிதான், மீழவ ம்ன்னகுல கசட்ச் கவற எழுத்தில் எழுதுவது அமைச்சரவை வழக்கம் இல்லை, டுமீல் குப்பம் வெளவாலு…நலன்கு புகுபுடு தெரியாதவன் மொக்கு, தக்காளி தொக்கு. மேற்கு அவுஸ்ரேலியாவிலும் கிழக்கேதான் சூரியன் உதிக்கும், இது ராஜதந்திர ரகசியம் வெளிப்படையாக சொல்லமாட்டர்கள். முன்பே லொள்ச மரந்து டுட்பேன்.. சீனா தாய்லாந்து ஈரான் மேற்கு பெற்றொல் டாலர் யுவான் யங் சிகி உஆன் சுசிகி கவஆச்கி கர்தர் பெயரில் விபிலிய கிருமி.
  16. எனக்கு இஸ்ரேல் மீதே சந்தேகம். பிரித்தானியாவை இழுத்துவிடும் நோக்கமோ?
  17. பால் குடிச்ச நன்றி தெரியாம பசு தோல் போர்த்திய புலி மாதிரி கஞ்சா குடிச்ச கதை சொல்லுறீங்க😁 ஆனா சாமி, கடை வாயில் பல்லுக்கு நீலம் பச்சை இருந்தா அதை ‘அமுதம்’ன்னு நம்புறவங்க இங்க யாரும் இல்ல😇. உளறுறது உளறட்டும். பூனை எட்டிப் பார்த்தா புலி ஆகுற காலம் போச்சு. இப்போ யாரு என்னன்னு தெரிச்சிடுச்சு😃
  18. உண்மையில் தமிழ்கூறு நல்லுலகில் எந்த துறையை எடுத்து கொண்டாலும், தமிழியலில் கருணாநிதிக்கு கிடைத்த தகுதிக்கு மேலான அங்கீகாரம் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை என்பதே என் நிலைப்பாடு. நடிப்புக்கு பவர் ஸ்டார் எப்படியோ அப்படித்தான் தமிழுக்கு கருணாநிதி. பவர்ஸ்டாரின் கோமாளிதனம் சில படங்களில் சிரிப்பை வரவழைத்தது. அதேபோல் மு.க சில படங்களுக்கு நல்ல வசனம் எழுதியுள்ளார். சில நல்ல திரைகதைகள் எழுதியுள்ளார். ஆனால் இவர் எழுதிதள்ளிய பெரும்பாலானவை அறுவை ரகம். மேடை பேச்சு கூட, வை கோ வுக்கு எல்லாம் கிட்ட கூட நிற்கமுடியாது. ஆனால் சமயோசித பதில் (witty) சொல்லும் பாங்கில், அரசியலில், நரிக்குணத்தில் கருணாநிதி ஒரு பல்கலைகழகம். தமிழில் ரொம்ப சாதாரணம் கலைஞர் என்பதை கூட மன்னிக்கலாம்… முத்தமிழ் அறிஞர் எல்லாம்… வே டு மச் யா😂
  19. 2050 இல் நடக்கும் என்ற காட்சிகள் 2026 இலேயே நடக்கப் போகிறதோ? உலக ஒழுங்கு மாற்றத்தை கண்ணால் பார்த்துவிட்டுப் போகும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறேன்.
  20. நீங்கள் களவு எடுத்தவன் என நான் எவரையோ சொன்னால் அதற்குள் வீணாக தலையை போட்டு… உங்கள் காசையா களவு எடுத்தார்? பொது பணத்தை தானே எடுத்தார் என எரிந்து கொண்டிருக்கும் தீச்சட்டியை நீங்களாகவே எடுத்து உங்கள் தலையில் கொட்டாதவரை எந்த தீக்குளிப்பும் தேவைபடுவதில்லை அண்ணா? எத்தனை தரம்தான் சொல்வது? பொது பணத்தை கையாடியவகளுக்கு முட்டு கொடுக்காதீர்கள் என? போலிக்கா குரூப், கனடா கள்ளர், சீமான் என திருட்டு கூட்டத்தையே தொடர்ந்து முட்டு கொடுத்து எழுதினால் - அடி முட்டு கொடுப்பவர் மீதும் விழுவது தவிர்க்கவியலாதது. இந்த திரியில் நீங்கள் இதுவரை ஜேர்மன் அரசியல் பற்றிய ல அண்ணை விவாதித்தீர்கள்? ஜேர்மனியிலும் விஜை என்று ஒரு நடிகர் உள்ளாரா?
  21. சத்தியமாக சொல்கிறேன் நீங்கள் மேலே கூறி உள்ளதை என்னால் என்ன என அறிய முடியவில்லை. ஏதோ டென்சன் ஆகி திட்டுகிறீர்கள் என்பது மட்டும் புரிந்தத்து. ஆனால் அதிகாரிகள் சிறிமா சொன்னதை உங்களிடம் சொன்னார்கள் என்பது சுத்தமான ஆனைக்கோட்டை உருட்டுத்தான். பால் கொடுத்த பசு தோல் போர்த்திய புலியினால் ஏற்பட்ட்ச் குடைச்சல் அமுதசுரபி ஆனானப்பட்ட கஞ்சா குடிக்கியையே, பலே பலே, என்ன சொன்னாலும், கடைவாய் பல்லில் ஒரே நீலம் பச்சை, உளறி கொட்டி, புனை எட்டிப்பார்த்தது.
  22. என்ன. பலன். ? ஏதுவுமில்லை. நான். ஜேர்மனி. பற்றி. கேள்வி. கேட்பதில்லை. அது. எனது. விருப்பம். இல்லையா. ? மற்றும். பொழுதுபோக்கு என்னுடைய. கருத்துகள். மட்டுமல்ல. இங்கே. எழுதும். எவராது. கருத்துகளும். நடைமுறையில். வரப்போவதில்லை. குறிப்பாக. உங்களுடைய. கருத்தும். தான். உங்கள். கருத்துகள். நீங்கள். எழுதும். கருத்துகள். நடைமுறையில். உள்ளதா. ? ,
  23. Yesterday
  24. 😂அடுத்த "ஞானபீட" விருது யாருக்கு? ஜெமினி, சுனோ??
  25. அன்று தொடக்கம் தேன் கூடுகளில் கை வைக்காத்தால் என்ன நடக்கும் என கூறி வந்தோம்.😎 அதன் ஒட்டுமொத்த பலனும் இன்று கண்ணெதிரிலேயே தெரிகின்றது.🌟 முதல் படியாக அந்த தேன் கூடுகளை கலைத்ததின் விளைவாக ஐரோப்பா அகதிகளால் நிரம்பி வழிகிறது. இரண்டாம் படியாக தேவையில்லாமல் எரிசக்தி விண்ணைத்தொடும் அளவிற்கு எகிறிவிட்டது. இயற்கை அழிவுகளை விட மனித அழிப்புகள் மிக கொடுமையாக இருக்கின்றது. அதிலும் மேற்கத்தையவர்களின் போர் மூர்க்க குணம் நியாயமற்றது. செய்தியின் பிரகாரம் ஐரோப்பிய நாடுகளும் அச்சத்தில் உள்ளன. ரஷ்ய அதிபர் திருவாளர் புட்டின் அவர்கள் கொடுப்புக்குள் சிரிக்கிறார். 😋 ரஷ்யாவை உடைத்த பின்னர் அதனுடன் நட்புடன் இருந்திருந்தால்.....இந்த உலகும் ஐரோப்பிய ஒன்றியமும் அவல நிலைக்கு வந்திருக்காது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.