stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
- நேசமணி புகழ்ந்த துபாய் துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்..
-
மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!
முதலாளியாய் இருந்தும் அடிமையை ப்ரோ என அழைக்கும் நல்லுள்ளம்தான் எங்கள் தானை தலைவன் புட்லர் 😂
-
மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!
புட்டின் பேய்க்காய். இன்னும் 10 வருசத்துக்கு உக்ரேன் போரை இழுக்கிற பிளான் போல கிடக்கு. அப்பிடி எண்டால் தான் ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய வியாபாரங்களும் காலி. இப்பவே ஜேர்மனி கார் கொம்பனியள் வெளிப்படையாக தங்கள் நட்டங்களை வெளிப்படையாக தெரிவித்து ஏராளமான தொழிலாளர்களையும் வேலையிலிருந்து நீக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
உடையார்ரை திருவிழாவில ஆரோ ஒருத்தன் வெடி கொழுத்தி வாணம் விட்டானாம் எண்ட மாதிரி.....அமெரிக்க-ஈரான் திருவிழாவில சீனா புகுந்து விளையாடுது போல கிடக்கு.....சீனாவும் தன்ர விளையாட்டு சாமான் எல்லாத்தையும் ரெஸ்ற் பண்ணி பாக்குது போல.....🤣
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்த லொட்டு லொசுக்கு கப்பலை வச்சு என்ன பேரிச்சம் பழமா வாங்க முடியும்😂. ஈரானிய மாலுமிகளை அமெரிக்க நேவியில் சேர்க்க முடியாதா என்ற தம்பரின் கேள்வி - ஒரு கூர்ப்பில் பிந்தங்கிய மனிதனால் மட்டுமே கேட்கப்பட கூடிய கேள்வி😂. பிகு அமெரிக்க நீர்மூழ்கி 2 எச்சரிக்கை கொடுத்ததாம், கப்பலை கைவிட்டு கடலில் குதிக்கும் படி. ஆனால் அந்த ஓடரை ஈரானிய கேப்டன் கொடுக்க மறுத்தாராம். 38 பேர் கேப்டனின் அறிவிறுத்தலை புறம்தள்ளி கடலில் குதித்தனராம். உயிர் தப்பியவர்கள் அவர்களே. இவர்கள் இலங்கை அனுப்பினாலும் ஈரானுக்கு போக சம்மதிப்பார்களா என்பது சந்தேகமே.
- நேசமணி புகழ்ந்த துபாய் துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இனிய காலை வணக்கம்.🙏 புட்டின் அருமை தெரியாதவர்களுக்கு சம்பலின் அருமையும் தெரியாது. 😎
-
குட்டிக் கதைகள்.
tdenrSoopst51 2aLfm0h:6615f6e1m351àg2635flmf 14s1al 195r0g6 · "தங்கக்காப்பு" தங்கப்பன் என்பவன் ஒரு வட்டிக்கடைக்காரன். அவனிடம் அவன் வசிக்கும் நல்லூர் வாசிகள் மட்டுமல்லாமல், சுற்றுப்புற ஊர்களிலும் உள்ளவர்கள் தங்கள் தேவைக்காக ஏதாவது பொருளை அடகு வைத்துப் பணம் வாங்கிப் போவார்கள். அவனது வட்டி விகிதமும் குறைவே. ஆனால், பணத்தை வசூல் செய்வதில் அவன் கறாராக இருப்பான். கடன் கொடுத்தால் அதைத் திருப்பித் தரக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே கடனைக் கொடுப்பான். அவனை யாராலும் ஏமாற்றிவிட முடியாது. தங்கப்பனிடம் அடிக்கடி கடன் வாங்கிப் போகிறவன் செல்லப்பன் என்ற குடியானவன். அவன் ஒவ்வொரு முறையும் தன்னிடமுள்ள தங்கக் கட்டைக் காப்பை அடகு வைத்துப் பணம் வாங்கிப் போவான். அந்தக் கடனை அடைத்து அந்தக் காப்பை மீட்ட பிறகே, மறுபடியும் கடன் கேட்டு அதே காப்பை அடகு வைப்பான். ஏழை விவசாயி என்பதால் அவனுக்குப் பயிர் செய்ய அடிக்கடி பணம் தேவைப்பட்டது. ஒருமுறை செல்லப்பன் தன் காப்பைத் தங்கப்பனிடம் அடகு வைத்துப் பணம் கேட்டபோது, அவ்வூர் பொற்கொல்லன் பொன்னுசாமி அங்கே இருந்தான். தங்கப்பன் காப்பை வாங்கிக் கொண்டு அதற்கு ஐம்பது வராகன்கள் (பணம்) கொடுத்து அனுப்பியதை அவன் பார்த்தான். செல்லப்பன் போனதும், அந்த காப்பை வாங்கிப் பார்த்த பொன்னுசாமிக்கு ஒரு உண்மை தெரிந்தது. அது சுத்த தங்கத்தால் ஆனது அல்ல; அதில் சரிபாதி பித்தளை சேர்க்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு வெறும் பத்து வராகன்கள் மட்டுமே என அவன் மதிப்பிட்டான். "எல்லோரிடமும் கறாராகப் பேசும் தங்கப்பன், செல்லப்பனிடம் ஏமாந்து விட்டானே! இவனுக்குத் தங்கம் பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கிறது" என்று பொன்னுசாமி நினைத்துக் கொண்டான். ஒரு மாதத்திற்குப் பின், பொன்னுசாமி சில பித்தளை நகைகளைச் செய்து அவற்றிற்குத் தங்க முலாம் பூசினான். பிறகு அந்த நகைகளைத் தங்கப்பனிடம் எடுத்துப் போய், "ஐயா! என் மகளுக்குக் கல்யாணம் திடீரென நிச்சயமாகிவிட்டது. எனக்கு உடனடியாக ஆயிரம் வராகன்கள் தேவைப்படுகிறது. ஐயாயிரம் வராகன்கள் பெறுமானமுள்ள இந்த நகைகளை ஈடாக வைத்துக் கொண்டு எனக்குப் பணம் கொடுத்து உதவுங்கள்" என்றான். தங்கப்பன் அந்த நகைகளை வாங்கிப் பார்த்து விட்டு, "பொன்னுசாமி! நீயோ பொற்கொல்லன். உனக்கே அசல் தங்க நகைகளுக்கும் போலி நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதா? இவை எல்லாம் தங்க முலாம் பூசிய நகைகள். இவற்றின் மதிப்பு பத்து வராகன் கூடத் தேறாது. என்னை ஏமாற்ற முடியாது" என்றான். அதைக்கேட்டு பொன்னுசாமி ஆச்சரியப்பட்டான். "ஐயா! நான் உங்களை ஏமாற்றவில்லை. ஆனால் நீங்கள் மகா மட்டமான தங்கத்தால் செய்யப்பட்ட செல்லப்பனின் தங்கக் காப்பிற்கு மட்டும் ஐம்பது வராகன்கள் கொடுத்தீர்களே? அது பத்து வராகன் தானே பெறும்?" என்று கேட்டான். அப்போது தங்கப்பன் பலமாகச் சிரித்து, "ஓஹோ! நீ அன்று அந்தக் காப்பைப் பார்த்ததை நினைத்து என்னைத் தங்கம் பற்றி தெரியாதவன் என்று முடிவு கட்டி விட்டாயா? செல்லப்பன் நேர்மையானவன். அவன் அந்தக் காப்பு அசல் தங்கத்தால் ஆனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அதில் பாதி பித்தளை கலந்திருப்பது எனக்குத் தெரியும். அந்தக் காப்பைச் செய்து கொடுத்தவனும் நீதான் என்பது எனக்குத் தெரியும்!" என்றான். தொடர்ந்து தங்கப்பன் சொன்னான்: "அவனிடம் அது நல்ல தங்கக் காப்பு அல்ல என்று நான் கூறிவிட்டால், அவன் தன் தேவைக்குக் கடன் வாங்க என்னிடம் வரமாட்டான். வேறு யாரும் அவனுக்கு அதன் பேரில் கடன் கொடுக்க மாட்டார்கள். அவனிடம் உள்ள ஒரே விலையுயர்ந்த பொருள் அந்தத் தங்கக் காப்புதான். அவன் அதைச் சுத்த தங்கம் என்றே நம்பிக் கொண்டிருக்கிறான். அவன் நம்பிக்கையைத் தகர்க்க வேண்டாம் என்றும், நேர்மையுடன் நடந்து வரும் அவனுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலும்தான், பத்து வராகன் கூடப் பெறாத அந்தக் காப்பிற்கு நான் ஐம்பது வராகன்கள் கொடுக்கிறேன்." அதைக் கேட்ட பொன்னுசாமி திகைத்துப் போனான். இதுவரை தங்கப்பனை ஈவு இரக்கமில்லாத வட்டிக்கடைக்காரன் என்று நினைத்திருந்தான். பண விஷயத்தில் கறாராக இருந்தாலும், ஒரு நேர்மையான மனிதனின் நம்பிக்கையைக் காப்பாற்றத் தங்கப்பன் காட்டிய அந்த நல்ல குணத்தை எண்ணி வியந்தவாறே, தன் போலி நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான். ~மகிழா. 💃" -பகிர்வு பதிவு. 🌹" நன்றி - பட்டாம்பூச்சி சிறுகதை பூங்கா......!
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
தம்பருக்கு மூக்கை உடைக்கத்தான் வேண்டும்… ஆனால் தம்பரும் அமெரிக்க சண்டித்தனமும், தடிமன் மாதிரி…கொஞ்ச நாளில மாறிடும். பிறகு வரும் போகும் ஆனால் உயிரை எடுக்காது. ஆனால் அடிப்படைவாத முல்லாக்கள் கான்சர் மாதிரி…வெட்டா விட்டால் உயிராபத்து. கூடவே இவர்கள் பிடியில் இருந்து விடுபட அடிக்கடி போராடி, மிருகதனமாக நசுக்கப்படும் ஈரானியர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆகவே இதில் முல்லாக்கள் தோற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கருத்து படங்கள்
- தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!
தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்! தெற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல், பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களையும், ஆயுதங்களையும் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர தெரிவித்தார். அந்தக் கப்பல் சுமார் 600 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) ஆகியவற்றைக் கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் பெறுமதி 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது கடற்படை வீரர்கள் எட்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு T-56 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் மெகசின்களை மீட்டுள்ளனர். படகில் இருந்த மொத்தம் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொட்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைதான சந்தேக நபர்கள் டிகக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். https://athavannews.com/2026/1468144- Today
- மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!
புட்டின் மைண்ட் வாய்ஸ்:.... நன்றி புறோ ட்ரம்பு.- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
அதை ஈரான்காரன் தான் சொல்ல வேண்டும். 😂 போரை தொடங்கியது... அமெரிக்காவாக இருக்கலாம்... அதை முடித்து வைப்பதை ஈரான்தான் முடிவு செய்யும் என்று முன்பு குறிப்பிட்டு இருந்தார்கள். சந்தடி சாக்கில்... "ட்றம்பு", நைசாக நழுவ பார்க்கிறான். 🤣 பாவம்... இஸ்ரேல், ஈரானிடம் சணல் அடி வாங்கிக் கொண்டு இருக்குது. அமெரிக்கன் தரைப் படையை அனுப்புறது என்று, "பீலா" விட்டுட்டு, "எஸ்கேப்" ஆகிறான். அவனை விடாதீங்க.- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே
சம்பவம் நடந்தபோது சலே இந்தியாவில் இருந்ததாக அரசியல்வாதி கூறுகிறார், சலேயின் சட்டத்தரணி, அவர் மலேசியாவில் இருந்ததாக கூறுகிறார். ஏன் ஒரே சம்பவத்தில் இரு வேறுபட்ட கருத்துக்கள்? சலேக்கு இருந்த பதவி நிமித்தம் அவர் கடவுச்சீட்டு இல்லாமலே பணி நிமித்தம் பயணம் செய்யும் வசதியிருந்ததாக சொல்லப்பட்டது, அது நிஜமாக இருக்கும் பட்ஷத்தில் சலே இலங்கையிலேயே இருந்திருக்க வாய்ப்பிருக்கலாம் அல்லது அவர் வேண்டுமென்றே மலேசியாவிற்கோ இந்தியாவிற்கோ அனுப்பப்படிருக்கலாம். இருந்தாலும் தொழில் நுட்ப மூலம் எந்த நாட்டிலிருந்தும் தாக்குதலை நடத்துவிக்க வாய்ப்புள்ளது. தாக்குதலுடன் இவர் நேரடியாக சம்பந்தப்படவில்லையானாலும் அதன் மூளையாக செயற்பட்டிருக்கிறார். அதற்கு அவர் சம்பவ இடத்தில் இருக்க வேண்டுமென்பதில்லை, தற்போது வெளிநாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு இலங்கையில் கொலைகள், கடத்தல்கள் நடத்தப்படுகின்றன, அங்கே என்ன நடக்கின்றது என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்புக்கூட உள்ளது என்பதை சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அறிந்திருக்கவில்லைப்போலும். கொலையாளி அணிந்திருந்த மேலங்கி, முன்னாள் போராளி வீட்டுக்கருகில் திட்டமிட்டே போடப்பட்டது ஏன்? தன் இனத்தையே பலி கொடுத்துள்ளான் இந்த சலே என்னும் சாத்தான்! கம்மன் பில என்பவர் சொல்கிறார், சலேவின் சிறைக்கூடத்தில் எலிகள் இருக்கின்றனவாம், அவருக்கு வேறு வசதியான அறை அளிக்கப்பட வேண்டுமாம், வீட்டிலிருந்து உணவு கொடுக்கப்படவேண்டுமாம். ஏன் இதுவரை இந்த அறையில் கைதிகள் இருக்கவில்லையா? அப்போ ஏன் இந்தகவனம் செலுத்தப்படவில்லை? அவர்கள் மனிதர்கள் இல்லையா? அல்லது அவருக்கு உணவில் விஷம் அல்லது வேறு வகையில் கொலை செய்து பிரதான சூத்திரதாரியை காப்பாற்ற முயற்சிக்கின்றனரா? பிக்குகளை போலீசார் காவி உடை கலைய தாக்கினர் என்று சொன்னதுபோல் பல கற்பனைகதைகளை உருவாக்கிவிட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர் பின்னால் உள்ள திருடர். இவர்களுக்கே தமது போலீசார் மீதும் நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கையில்லை, இதில போர்க்குற்ற உள்நாட்டு விசாரணை செய்யபோகினமாம்.- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
தம்பரின் உலகு தனி உலகு… அங்கே கச்சா எண்ணை பரலுக்கு 40 டொலர் போகிறது😂 தெஹ்ரானில் சிங்க கொடி பறக்கிறது…😂 தம்பருக்கு நோபல் பரிசை கமிட்டி அறிவிக்கிறது😂 ஏதோ இஸ்ரேல் காரன் கூட போயிருக்கிறான் எண்டது மட்டும்தான் ஒரே நம்பிக்கை. இல்லாட்டில் தம்பரும், வான்சும், ஹெக்செத்தும், ரூபியோவும் சேர்ந்து…அமெரிக்காவின் கோவணத்தையே முல்லாக்கள் கையில் கொடுத்து விடுவார்கள் 😂- நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!
பல சிங்கள அமைச்சர்களை விட தமிழ் அரசாங்க அதிபர்களின், அமைச்சு செயல்லாளர்களின் சொத்து பலமடங்கு. வீடுகள் எல்லாம் மினிமம் 3 மாடி, மாட மாளிகைகள். யார் அமைச்சரா வந்தாலும்…சேர்…சேர்… எண்டு குழையடித்து சேத்து விடுவார்கள், சொத்தை. பதவியை விட்டு போகும் போது கூட அமைச்சருக்கு தெரியவராது தான் அடித்ததை விட இவர்கள் அடித்தது அதிகம் என்பது.- போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்! மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் மற்றும் போக்குவரத்து வசதிகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய ஈரான், ஈராக் கடலில் இரண்டு டேங்கர்களை தீ வைத்து எரித்தது. அமெரிக்கா ஏற்கனவே போரில் வெற்றி பெற்றுவிட்டது என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றை மீறி, பீப்பாய்க்கு $200க்கு எண்ணெய் வாங்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெஹ்ரான் எச்சரித்தது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதல்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தப் போர், இதுவரை சுமார் 2,000 பேரைக் கொன்றுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தைகளையும் போக்குவரத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளதுடன், 1970 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான எரிபொருள் அதிர்ச்சிகளில் ஒன்றைத் தணிக்க மூலோபாய எண்ணெய் இருப்புக்களை சாதனை அளவில் வெளியிடுவதற்கான திட்டங்களைத் தூண்டியுள்ளது. இதனிடைடேய அண்மைய மோதலினால் 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள்/குழந்தைகள் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் நிதியம் (UNICEF), தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நவம்பர் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக கென்டக்கியில் புதன்கிழமை (12) நடந்த பிரச்சார பாணி பேரணியில் டொனால் ட்ரம்ப், அமெரிக்கா போரில் வெற்றி பெற்றதாக கூறினார். வாரத்தின் தொடக்கத்தில் பீப்பாய்க்கு சுமார் $120 ஆக உயர்ந்து பின்னர் $90 ஆக நிலைபெற்ற எண்ணெய் விலை, புதன்கிழமை கிட்டத்தட்ட 5% உயர்ந்தது. வால் ஸ்ட்ரீட்டின் முக்கிய பங்கு குறியீடுகள் சரிந்தன, ஆசியாவில் பங்குகளும் வீழ்ச்சி கண்டன. இவ்வாறான நிலையில் ஈரான் நீண்டகால பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்த விரும்புவதாக தெளிவுபடுத்தியுள்ளது. ஈரானின் இராணுவ கட்டளையின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை அமெரிக்காவை நோக்கி, பீப்பாய்க்கு $200க்கு எண்ணெய் வாங்க உலகம் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் எண்ணெய் விலை எமது பிராந்திய பாதுகாப்பைப் பொறுத்தது, அதை நீங்கள் நிலைகுலைத்துவிட்டீர்கள் என்று கூறினார். ஈரானிய வெடிபொருட்கள் நிறைந்த படகுகள் ஈராக்கிய நீரில் இரண்டு எரிபொருள் டேங்கர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது. வளைகுடா நீரில் மூன்று வணிகக் கப்பல்களைத் தாக்கிய பின்னர் அவை தீப்பிடித்து எரிந்தன. இதில், ஒரு பணியாளர் கொல்லப்பட்டதாக துறைமுக அதிகாரிகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஆபத்து நிறுவனங்கள் வியாழக்கிழமை (12) தெரிவித்தன. இது தவிர ஈரான் பஹ்ரைனின் முஹாரக்கில் உள்ள ஒரு நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகளையும் குறிவைத்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம், முக்கிய எண்ணெய் நுகர் நாடுகளைக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனம், புதன்கிழமை, 1970 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான எண்ணெய் அதிர்ச்சிகளில் ஒன்றைத் தணிக்க, உலகளாவிய மூலோபாய இருப்புக்களில் இருந்து 400 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க பரிந்துரைத்தது – இது வரலாற்றில் மிகப்பெரிய தலையீடு ஆகும். இவ்வாறான பின்னணியில் அமெரிக்கா தனது மூலோபாய பெட்ரோலிய இருப்பிலிருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை விடுவிப்பதாகக் கூறியுள்ளது. திட்டமிடப்பட்ட வெளியேற்ற விகிதங்களின் அடிப்படையில் இது வழங்க சுமார் 120 நாட்கள் ஆகும் என்று அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். https://athavannews.com/2026/1468065- மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!
மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு! மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் போரின் தற்போதைய நிலை கு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது எண்ணெய் துறைமுக செயல்பாடுகளை முற்றாக நிறுத்தியுள்ளது. இதேவேளை, மத்திய கிழக்கு போரினால் உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள் ரஷ்யாவிற்கு பெரும் நிதி நன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் (Chris Weafer) கிறிஸ் வீஃபர் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாய் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் தடைகளால் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட ரஷ்ய எண்ணெய், தற்போது உலகச் சந்தையில் நிலவும் அதிக விலைக்கு ஆசிய நாடுகளால் போட்டி போட்டுக்கொண்டு வாங்கப்படுகிறது. ரஷ்யா மட்டுமல்லாது அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியாளர்களும் இந்த விலை உயர்வால் லாபமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களைப் பாதுகாப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ள நிலையில், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 200 அமெரிக்க டொலரை எட்டும் என ஈரான் உலக நாடுகளை எச்சரித்துள்ளது. இதற்கிடையில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இடைமறித்து அழித்துள்ளன. இதேவேளை, போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் , ஈரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும், எதிர்காலத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புகள் நடக்காது என்பதற்கான சர்வதேச உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என மூன்று முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒருங்கிணைந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதற்குப் பதிலடியாக, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேலிய இராணுவம் பாரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. https://athavannews.com/2026/1468173- நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!
இப்போதைய யாழ் அரச அதிபர் பிரதீபனின் மகன் 20 -25 வயதுகளை நெருங்கியவர். அண்மையில் பல கோடி ரூபா பெறுமதியான நவீன உணவகம் ஒன்றினை திறந்துள்ளாராம். இந்த இளம் வயது உள்ளவருக்கு... இவ்வளவு பணம் எங்கிருந்து வந்துள்ளது. நான் இந்த வயதில்... 200 ரூபாவை கூட கண்டத்தில்லை. சில காலத்துக்கு முன் இந்த மகன், தனது நண்பருடன்... தகப்பனின் அரச வாகனத்தை எடுத்துக் கொண்டு மிக வேகமாக ஓடி...கந்தர்மட சந்திக்கு அண்மையில் மிகப் பெரிய விபத்தை சந்தித்து இருந்தார்கள். விலை உயர்ந்த வாகனம் பெருமளவு சேதத்துக்கு உள்ளாகி இருந்தது. அந்த விடயத்தை... காதும்,காதும் வைத்த மாதிரி அமுக்கி விட்டார்கள். பொதுவாக இலங்கையில்... உத்தியோகங்களை பார்த்துத்தான், வழக்குப் போடுவார்கள் போலுள்ளது. அப்பாவி மக்கள்தான்... பாவம்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வாழ்வு சதமென .......... நாகேஸ்வரராவ் & ஸ்ரீ ரஞ்சனி ........! 😂- இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
ஈரான் மகளிர் கால்பந்தாட்ட அணியே எதிர்ப்பை காட்டுகிறது…. முல்லாக்கள் வந்து லத்தியை தொண்டையில் விட்டு அடிக்கும் வரை இந்த அரை லூசுகளுக்கு யார் நவ நாஜிகள் என்பது உறைக்காது😂.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா எங்கே நீ சொல்லு என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா எங்கே நீ சொல்லு நான் வயாகரா பெண் : யுத்தம் செய்யாத நேரம் நீ மோகம் கொண்டு போராடு முத்தம் என்றாலே யாகம் வாய் நீரில் நீயும் நீராடு எந்தப் பூவில் என்ன வாசம் மன்னன் போலே நீ தேடு கையில் கோப்பை பெண்ணை ஏந்து கண்ணதாசன் போல் பாடு கோயில் சிற்பங்கள் சொன்ன கலை வீடு நீயும் என்னோடு தேடுவது நூறு வாவா வாவா வாரேவா பெண் : செவ்வாய் மீதேறி நாமே அதை காதல் தேசம் செய்வோமே பூமி உள்ளே போய் நாமே ஒரு ஆசை தீயாய் ஆவோமே மேகம் ஆகி வானம் போவோம் மீண்டும் நீராய் நாம் மாற மண்ணின் மீது தூரல் ஆவோம் மீண்டும் ஆறாய் நாம் ஓட காமன் சந்தோஷம் காண வேண்டும் ராஜா காற்றே தீயோடு மோதிக் கொள்ள வாவா வாவா வாரேவா ......! --- என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா ---- அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
தம்பர் யுத்தத்தை விரும்பாதவர்… யேசு…புத்தர்….தம்பர் தான்… எண்டு பைடன் காலத்தில் ஒரு அண்ணை யாழில் சலங்கை கட்டி ஆடினவர்😂 மானஸ்தன் எங்க எண்டு தேடிப்பார்த்தால்….. ஐயோ அமெரிக்கா ஈரானை அடிக்குது எண்டு ஒரு திரில நிண்டு கொண்டு மூக்கால அழுகிறார்😂…. தோசையை திருப்பி போடுவதில் யாழ்கள அண்ணைமார் தமிழக அரசியல்வாதிகளுக்கே டஃப் கொடுப்பார்கள்.- நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!
அனுரவின் ஆளுனர் செய்த களவுக்கு கவர் எடுக்கும் அந்தரிப்பில் அவர் முன்னர் யாழ்பாண ஜி ஏ என்பது கூட மறந்து போச்சு 😂. ஜெயக்கொடி, வேதநாயகன் என கள்ளர்கள் என குற்றம் சாட்டபட்டவர்கலால் நிரம்பி வழிகிறது ஜேவிபி. இந்த வேதநாயகன் பற்றி ஆரம்பம் முதலே நான் யாழில் எச்சரித்துள்ளேன். - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.