Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. திருகோணமலை சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் Jan 14, 2026 - 04:06 PM திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது. எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த குழுவினரை ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkdvy4ch03xdo29nqe9mtqro
  3. ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை பதறச் செய்யும் இந்த 6 காளைகள் பற்றி தெரியுமா? பட மூலாதாரம்,shyam படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் இரா.சிவா பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளும் நெருங்கிவிட்டன. ஜல்லிக்கட்டு என்பதென்ன? வீரர்களுக்கும் மாடுகளுக்கும் இடையே களத்தில் நடக்கும் 'நீயா… நானா என்ற போட்டி தானே. அந்த மாடுபிடி வீரர்கள் காளையை பற்றி மனம் திறந்து பேசினால் எப்படி இருக்கும்? ஜல்லிக்கட்டு களத்தில் தாங்கள் வியந்து பார்த்த காளைகளை பற்றி சில வீரர்கள் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். தோட்டா பட மூலாதாரம்,Selvakumar படக்குறிப்பு,'தோட்டா' வந்தால் களமே சற்று நேரம் பதறும் என்கிறார் முன்னாள் ஜல்லிக்கட்டு வீரர் முடக்கத்தான் மணி. இது திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த சீனிவேல் என்பவரது காளை. இந்தக் காளை வந்தால் களமே சற்று நேரம் பதறும் என்கிறார் முன்னாள் ஜல்லிக்கட்டு வீரரும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் என்ற அமைப்பின் மாநில நிறுவனத் தலைவருமான முடக்கத்தான் மணி. ''தோட்டா களத்தில் நின்று விளையாடும். இந்த மாட்டை அணைவதே சிரமம். களத்தில் நிற்பவர்களை நேருக்கு நேர் வாடா… என அழைப்பது போல நிற்கும். தோட்டா இறங்கினால் களமே சற்று நேரம் பதறும், காலியாகும்,'' என்கிறார் முடக்கத்தான் மணி. இதுவரை 40-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் இந்த மாடு களமிறங்கி உள்ளதாக சீனிவேலுவின் மகன் செல்வகுமார் கூறுகிறார். ஒரு லட்ச ரூபாய் பரிசு, பிடித்தால் மாட்டையே தருகிறோம் என அறிவித்தும் கூட இந்த மாடு பிடிபட்டதில்லை' என்கிறார் செல்வகுமார். சௌமி பட மூலாதாரம்,sathish படக்குறிப்பு,ஜல்லிக்கட்டு களத்தில் இது ஒரு ஸ்டார் மாடு என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் பாரதி. இது புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி தமிழ்ச்செல்வன் என்பவரது காளை. ஜல்லிக்கட்டு களத்தில் இது ஒரு ஸ்டார் மாடு என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் பாரதி. ''மாடு வெளியே வந்ததும் வீரர்கள் பாதுகாப்புக்காக உள்ள கம்பிகளில் ஏறி தொங்குவார்கள். மாடு அப்படியே ஒரு தோரணையாக நிமிர்ந்து பார்க்கும். கீழே இறங்கவே யோசிப்பார்கள். பல பேர் பிடிக்க நினைத்தும் இதுவரை இந்த மாட்டை பிடிக்க முடியவில்லை,'' என்கிறார் பாரதி. ''சௌமி 30-க்கும் மேற்பட்ட வாடிகளில் களமிறங்கி இருக்கிறது. இதுவரை எங்கும் பிடிபட்டதில்லை. பாய்ச்சல் தான் சௌமியின் சிறப்பே. வாடியை விட்டு வெளியே வந்ததும் எந்தப் பக்கம் ஆள் இருந்தாலும் பாய்ந்துவிடும்,'' என்கிறார் காளை உரிமையாளரின் உறவினர் சதீஸ். பில்லா பட மூலாதாரம்,shyam படக்குறிப்பு,'பில்லா' வாடிக்குள் இருந்து வருவதே பறந்து வருவது போல இருக்கும் என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் பொதும்பு பிரபா. இது மதுரை மாவட்டம் கே.புதூரைச் சேர்ந்த கே.ஆர். ஆனந்தின் காளை. இந்த மாடு வரும் தோரணையே நன்றாக இருக்கும் என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் பொதும்பு பிரபா. ''இந்த மாட்டைப் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், கடந்த முறை பாலமேட்டில் முயற்சித்த போது என்னை தூக்கி எறிந்துவிட்டது. வாடிக்குள் இருந்து வருவதே பறந்து வருவது போல இருக்கும். குதிரை மாதிரி கால்களை தூக்கிக் கொண்டு வரும். வெளியே வந்து ஒரு சுற்று சுற்றி விட்டுதான் போகும்.'' என்கிறார் பொதும்பு பிரபா. ''இதுவரை 150-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களமிறங்கி உள்ளது. ஒரே ஒருமுறை மட்டும்தான் இந்த மாடு பிடிபட்டிருக்கிறது. வாடியை விட்டு வரும் போதே ஸ்டைலாக வெளியே வரும். களத்தில் ஆக்ரோஷமாக இருந்தாலும் வீட்டில் அமைதியாக இருக்கும்'' என்கிறார் மாட்டின் உரிமையாளரின் சகோதரர் ஷ்யாம். ஆண்டிச்சாமி கோவில் காளை பட மூலாதாரம்,Karuppasamy படக்குறிப்பு,இந்த காளை எத்தனை பேர் பிடித்தாலும் தூக்கி எறிந்துவிடும் என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் திருப்பரங்குன்றம் கார்த்தி. இது மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரது காளை. இது ஒரு தரமான காளை என்கிறார் முடக்கத்தான் மணி. ''பிடித்த உடனே ஆளையை பறக்க விட்டுவிடும். போடும் பந்துகள் அனைத்தையும் அடிப்பவர்தான் டாப் பேட்ஸ்மேன், அது போல அணைய வரும் அத்தனை பேரையும் பறக்கவிடும் டாப் காளைதான் இந்தக் காளை. பிடிக்க வருபவர்களை கீழே தள்ளுவது வேறு, உதைத்து தள்ளுவது வேறு, ஆனால், ஆண்டிச்சாமி கோவில் காளை ஆளையே காற்றில் பறக்கவிட்டுவிடும்'' என்கிறார் முடக்கத்தான் மணி. மற்றொரு ஜல்லிக்கட்டு வீரரான திருப்பரங்குன்றம் கார்த்தியும் இதே காளையை தானும் வியந்து பார்த்ததாக கூறுகிறார். ''திமிலில் ஒரு நொடிக்கு மேல் ஆளை வைத்திருக்காது. எத்தனை பேர் பிடித்தாலும் தூக்கி எறிந்துவிடும். இன்றைக்கு அனைத்து ஜல்லிக்கட்டிலும் இந்த மாடு களமிறங்குகிறது. ஓய்வு இல்லாமல் விளையாடினாலும் அசராமல் விளையாடுகிறது.'' என்கிறார் திருப்பரங்குன்றம் கார்த்தி. 9 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மாடு ஜல்லிக்கட்டில் களமிறங்குவதாக உரிமையாளர் கருப்பசாமி கூறுகிறார். ஆரம்ப காலத்தில் ஒரு முறை மட்டும் பிடிபட்டதாகவும், அதன் பிறகு இதுவரை பிடிபடவில்லை என்கிறார் கருப்பசாமி. கைதி 2 பட மூலாதாரம்,PCN Kannan படக்குறிப்பு,'கைதி 2' களத்தில் வீரர்கள் நெருங்க முடியாத காளை என்கிறார் பாரதி. இது புதுக்கோட்டை மாவட்டம் தாயினிப்பட்டியை சேர்ந்த பிசிஎன் கண்ணன் என்பவரது காளை. கைதி 2 களத்தில் வீரர்கள் நெருங்க முடியாத காளை என்கிறார் பாரதி. ''களத்துக்குள் ஆட்களையே இறங்கவிடாது. நீண்ட தூரம் கூட வராது. கட்டை அருகிலேயேயே இருக்கும். ஒருத்தர் உள்ளே வந்தால் கூட அவர்களை விரட்டிச் சென்று அமுக்கிவிடும். களத்துக்கு அந்த மாடு வருகிறது என்றாலே அதன் பெயரில் ஒரு பரிசை எழுதி வைத்துவிடலாம்'' என்கிறார் பாரதி. ''களத்தில் வீரர்கள் யாராவது தொட்டுவிட்டால் ஆவேசமாகிவிடும். ஆனால், களத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் அமைதியாகிவிடும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால்கூட கழுத்தில் கட்டி இருக்கும் கயிறு எவ்வளவு தூரம் நீளுமோ அவ்வளவு தூரம் சென்றுதான் சிறுநீர் கழிக்கும். அந்தளவுக்கு புத்திக் கூர்மையான மாடு.'' என்கிறார் உரிமையாளர் கண்ணன். பவி பட மூலாதாரம்,Parthasarathy படக்குறிப்பு,ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி இந்தக் காளை விளையாடும் என்கிறார் பாரதி. இது தேனி மாவட்டம் எருமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவரது காளை. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இந்தக் காளை விளையாடும் என்கிறார் பாரதி. ''விறுவிறுப்பே இல்லாமல் இருக்கும் போது இந்த மாடு வந்தால் களமே மாறிவிடும். அதனுடைய கொம்பும் உடம்பும் அழகாக இருக்கும். களத்துக்கு உள்ளே இருக்கும் வீரர்களை கலங்க வைக்க கூடிய, வெளியே இருக்கும் ரசிகர்களை கவரக்கூடிய காளையாக இது உள்ளது'' என்கிறார் பாரதி. ரசிகர்களை மட்டுமின்றி வீரர்களையும் கவர்ந்த இந்த 6 காளைகளும் இந்தாண்டும் ஜல்லிக்கட்டில் களமாட காத்திருக்கின்றன. அந்த காளைகளை அணைந்து ரசிகர்களின் புகழ் மாலைகளை சூட வேண்டும் என்று வீரர்கள் விரும்புகின்றனர். இந்தக் காளைகளைத் தாண்டியும் எண்ணற்ற சிறந்த ஜல்லிக்கட்டு காளைகள் தமிழ்நாட்டில் உள்ளதாக கூறிய வீரர்கள், ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு வகையில் தனித்துவமானது என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62vn3p1k8ko
  4. முன்னோடி - அ.சு.வ.திட்டம் 1 :- திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் மலசலகூடக்குழி வெட்டி கட்டி பூரணப்படுத்தாமல் உள்ள மலசலகூடம் கட்டி முடிப்பதற்காக தேவைப்படும் 150000 ரூபா நிதியில் முதலாவது கட்டமாக 50000 ரூபா திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துவிட்டேன். இருப்பு 430,445.67-50025=ரூ 380,420.67 சதம் இன்று 14/01/2026 50000 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா மக்கள் வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள்.
  5. யாழ்களத்தில் அருச்சுனாவிற்கு கள உறவுகளின் ஆதரவு அதிகமா? எதிர்ப்பு அதிகமா?? அவரால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? தீமைகள் என்ன??
  6. ஈழப்பிரியரே! கவலை வேண்டாம், உங்கள் நாட்டுத் தலைவரிடமே நீங்கள் கற்றுத் தேறலாம். திருடிவிட்டு நெஞ்சை நிமிர்த்தி அறிக்கையும் விடலாம்.🤪
  7. இதை விட மோசமான கருத்தை நம்மட "பைத்தியன்" அர்ச்சுனா பாராளு மன்றத்தில் வைத்து அறுத்து உறுத்து பேசினான். அதுவும் ஹரிணியின் ஒருபால் இன சேர்க்கை சம்பந்தமான நக்கல், நையாண்டி...
  8. Today
  9. ஆம் முயல்வோம் -முன்னோடுவோம்-முன்னேறுவோம்
  10. இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் வீதி விபத்துகளில் 82 பேர் உயிரிழப்பு! 2026 ஆம் ஆண்டின் முதல் 13 நாட்களில் நாடு முழுவதும் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் மொத்தம் 82 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகன் செலுத்தியதால் இடம்பெற்றதாக வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர குறிப்பிட்டார். இலங்கையில் ஒரு நாளைக்கு குறைந்தது 500 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். மது போதையில் வாகனம் செலுத்துவர்களை கண்டறிவதற்கான மூச்சுப் பரிசோதனை கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறிவதற்காக கொழும்பில் ஒரு முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மது அல்லது பிற போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காண நடமாடும் போதைப்பொருள் சோதனை அலகுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1459939
  11. அனுப்புங்கள் அவருடைய தேவை விரைவில் பூர்த்தியடைய வாழ்த்துக்கள் உதவிய மற்றும் இன்னும் உதவக் காத்திருக்கும் உறவுகளுக்கும் நன்றிகள்🙏
  12. பொன்னாலை மூன்று சகோதரர்களின் புனரமைப்பு வேலையை வியாழன் செய்யத் தொடங்குவோம்.
  13. வியாபார நடவடிக்கைகளை கண்காணிக்க பதிவு செய்ய என internal control என‌ ஒன்றிருகின்றடல்லவா. delivery, note, receiver's signature, surprise inventory counting, GRN, invoices, purchases order/prices, payment process என்பவை அடிக்கடி செய்யப்பட்டதா audit தொழிற்சாலையில் industry bench mark இல் என்ன நடக்கின்றது என்றாவது தெரிகின்றதா? finance dept என்ன செய்கின்றது? ஒன்றரை வருடமாக தூங்கிவிட்டு இப்பொழுது பிடிக்கின்றீர்கள்.
  14. திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கிற்கு முதலாவது கட்டமாக 50000 ரூபாவை வைப்புச் செய்யட்டுமா?
  15. அடுத்த கட்டத்தை நோக்கிய முன்னோட்டத்திற்கு இந்த இரு திட்டங்களின் சரியான முறையிலான நடைமுறை அவசியம் 🙏
  16. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN WI WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN ITA BAN 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA AFG 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI WI 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI NEP 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND IND IND PAK PAK PAK USA USA NED NED NAM NAM 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS AUS AUS SL SL SL IRE IRE ZIM ZIM OMA OMA 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ENG ENG WI WI WI BAN BAN Select NEP NEP ITA ITA 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ NZ NZ SA SA SA AFG AFG CAN CAN UAE UAE 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக Sa 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UAE சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK NZ 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL SL 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND Sa IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS WI AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK ENG 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 WI Sa Sa 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS AUS 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ NZ 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL SL 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS Sa AUS 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND WI IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS AUS AUS AUS IND IND IND #NAME? #NAME? 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ NZ NZ SL SL SL #NAME? #NAME? 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), AUS SL AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, NZ IND IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS IND IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ITA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Sanju Samson 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Bumra 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Phil Salt 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rashit Kahn 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Suryakumar Yadav 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
  17. பொங்கல் நாளான இன்று ஆம் என ஏராளன் சொல்வார் எனில் எமது deadline ஐயும் பூர்த்தி செய்துள்ளோம்.
  18. தகவலுக்கு நன்றி ஏராளன் இந்தத் தொகை நிதியைக் கொண்டு நாங்கள் முன்கூட்டியே எடுத்த முடிவின்படி அராலியிலும் பொன்னாலையிலும் வேலைகளை ஆரம்பிக்கலாம் அல்லவா இந்த உதவி அவர்களுக்கு மிகவும் வேண்டியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன் அனுப்பிவைத்த உறவிற்கு கோடி நன்றிகள்
  19. Newbalance, விராட் கோலி இந்திய அணியில் இல்லை. 76, 84 வினாக்களுக்கான உங்கள் தெரிவுகளை மாற்றவும்!
  20. சாத்தான் அவர்களே! இப்படியெல்லாம் தலைவர்களை விமர்ச்சிக்கக் கூடாது!!. அதுவும் கருனாநிதியோடு ஒப்பிடக்கூடாது. பாவம் விமல்.😩 கருனாநிதிக்கு தலைமாட்டில் ஒன்று, கால்மாட்டில் ஒன்று.🥰
  21. கனடாவில் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் கனடாவில் 2026ஆம் ஆண்டு மட்டும் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமகாலத்தில் பல உணவகங்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. ஊழியர்களுக்கான சம்பளம், காப்புறுதி மற்றும் வாடகை ஆகியவற்றுக்காக உணவக உரிமையாளர்கள் செலவழிக்கும் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில், உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் காரணமாக உணவகங்கள் அதன் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறி வருவதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை, மதுபான விற்பனை குறைந்து வருவதும் மற்றுமொரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. முன்பு மதுபான விற்பனை உணவகங்களுக்கு அதிக இலாபத்தை ஈட்டி தந்ததால் செலவுகளை ஈடுகட்ட முடியுமாக இருந்தது. ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காகவும் வீண் செலவுகளை தவிர்ப்பதற்காகவும் மக்கள் இப்போது குறைவாகவே மதுபானம் அருந்துகின்றனர். இதனால், உணவகங்கள் ஒரு முக்கியமான வருமான ஆதாரத்தை இழக்கின்றன. இந்நிலையில், உள்ளூர் சமூகங்களுக்கு தனித்துவமான உணவுகளை வழங்கும் சிறு உணவகங்கள் இவற்றால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக பெருந்தொகையான உணவகங்கள் மூடப்படவுள்ளதால், பலர் வேலைவாய்ப்பினை இழக்கவுள்ளனர். கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகளவான தமிழர்கள் உணவகங்களில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கனடாவில்-தமிழர்கள்-வேலைவாய்ப்பை-இழக்கும்-அபாயம்/50-371011
  22. 🌾 திருநெல்வேலிச் சந்தையில் களைகட்டிய பொங்கல் வியாபாரம் adminJanuary 14, 2026 தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், வியாபார நடவடிக்கைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் வைப்பதற்குத் தேவையான விதவிதமான அளவுகளில் மண்பானைகள் மற்றும் அடுப்புகள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மற்றும் பொங்கல் பண்டிகையின் அடையாளமான கரும்புகள் மற்றும் மஞ்சள், இஞ்சிக் கொத்துக்கள் சந்தையின் ஓரங்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு விற்பனையாகின்றன. வீடுகளை அலங்கரிக்கத் தேவையான மாவிலை, தோரணங்கள் மற்றும் கதம்பப் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் வகையில் விற்பனை நடைபெறுகிறது. பொங்கல் படையலுக்கான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்து காணப்பட்டாலும், பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். https://globaltamilnews.net/2026/226481/
  23. தைப்பொங்கலும் காணி விடுவிப்பின் எதிர்பார்ப்பும் – யாழில் ஜனாதிபதி அறிவிப்பாரா? adminJanuary 14, 2026 தைப்பொங்கல் தினமான நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் காணிகள் தொடர்பில் சாதகமான அறிவிப்புகளை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்புடன், வடக்கு மாகாணம் முழுவதும் காணி உரிமையாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். “மக்களின் காணிகள் மக்களுக்கே” என ஜனாதிபதி தொடர்ச்சியாக கூறி வரும் நிலையில், அந்த வார்த்தைகள் நடைமுறையில் எப்போது பிரதிபலிக்கும் என்ற கேள்வியே இன்றைய யாழின் மையப் பிரச்சினையாகியுள்ளது. வலி. வடக்கு பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 2,500 ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, மயிலிட்டி துறை தெற்கு போன்ற கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாகவே இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றன. இக்காணிகளில் பெரும்பாலானவை பாதுகாப்புத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படாமல், பற்றைக்காடுகளாகவே காட்சியளிக்கின்றன. பயன்பாடற்ற இக்காணிகளை விடுவிப்பதில் பாதுகாப்புத் தரப்பினருக்கு தடைகள் இல்லை எனத் தெரிந்தும், அவை தொடர்ச்சியாக கையகப்படுத்தி வைக்கப்படுவது காணி உரிமையாளர்களின் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. பலாலி கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் காணியும் இதேபோன்று எந்தவிதமான பயன்பாடும் இன்றி பாதுகாப்பு வலயத்துக்குள் முடக்கப்பட்டு உள்ளது. அதேவேளை, வசாவிளான் சந்திக்கு அருகிலுள்ள மானம்பிராய் ஆலயம் உள்ளிட்ட மூன்று ஆலயங்களை விடுவிக்க ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவை இன்னமும் உரிமையாளர்களுக்கும் பக்தர்களுக்கும் கையளிக்கப்படவில்லை என்பது அரசின் வாக்குறுதிகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. குரும்பசிட்டி, கட்டுவான் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தனியார் காணிகள் கைப்பற்றப்பட்டு, அவற்றில் இராணுவ விவசாய பண்ணைகள் நடாத்தப்படுவது, “பாதுகாப்பு” என்ற சொல்லின் உண்மையான பொருளை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதேபோன்று தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக 16 பேரின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை விடுவிப்பது தொடர்பில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதாக ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் கூறிவந்த போதிலும், நடைமுறை ரீதியான எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை. அண்மையில் தையிட்டி காணி பிரச்சினை தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில், விகாராதிபதி உள்ளிட்ட தரப்பினரை அழைத்த அதிகாரிகள், காணி உரிமையாளர்களை அழைக்காதமை, ஒரு தலைப்பட்டசமான தீர்மானங்களை நோக்கிய அரசின் அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது. விகாரைக்காக கைப்பற்றப்பட்ட காணியில் முதல் கட்டமாக இரண்டு ஏக்கரை விடுவிக்க இணக்கம் எட்டப்பட்டதாக முன்னர் வெளியான செய்திகளும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இவ்வாறான நிலைமைகளுக்கிடையில், பலாலி வீதி காலை முதல் மாலை வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே திறந்து விடப்பட்டிருப்பதும், வல்லை–அராலி வீதி இன்னமும் மூடப்பட்டிருப்பதும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையையும், குறிப்பாக வடமராட்சி மக்களின் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கான அணுகலையும் கடுமையாக பாதித்து வருகிறது. இந்த வீதிகள் முழுமையாகவும், 24 மணி நேரமும் கட்டுப்பாடுகள் இன்றி திறந்து விடப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். கடந்த காலங்களில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காணி விடுவிப்பு தொடர்பான சாதகமான அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தாலும், எந்தவிதமான அறிவிப்புகளும் இன்றி அவர் திரும்பிச் செல்வதே வழமையாகியுள்ளது. இந்நிலையில், இம்முறை தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி, வடக்கு மக்களின் நீண்டநாள் வேதனைக்கு தீர்வு காணும் வகையில் உறுதியான அறிவிப்புகளை வெளியிடுவாரா என்பதே அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கிடையே, எழுவை தீவில் கடற்படையினருக்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்க, எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை, காணி விடுவிப்புக்கான நம்பிக்கைகளுக்கு எதிர்மறையான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. தைப்பொங்கல் நாளில் ஜனாதிபதி வெளியிடவுள்ள அறிவிப்புகளே, “மக்களின் காணிகள் மக்களுக்கே” என்ற வாக்கியம் உண்மையா, அல்லது வெறும் அரசியல் முழக்கமா என்பதை தீர்மானிக்கும் தருணமாக அமையவுள்ளது. Global Tamil Newsதைப்பொங்கலும் காணி விடுவிப்பின் எதிர்பார்ப்பும் – யாழில்...தைப்பொங்கல் தினமான நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ள…
  24. இலங்கையில்தான் வேறெங்கு போக முடியும்.🤣 பொதுவாக போட்டிகளினிடையே பயணம் பாதகமானது, அந்த வகையில் பங்களாதேசமும் பாகிஸ்தானுக்கும் சாதகம் எதிரணிகளுக்கேதிராக இருக்கும்.
  25. புலிகள் இருந்த போது அரசியல் ரீதியான ஏக பிரநிதிகள், இராணுவ பாதுகாப்பு, பேரம் பேசும் ஆற்றல், புலம் பெயர்ந்தோரை ஒரு குடையின் கீழ் ஒழுங்குபடுத்தும் பொறுப்பு என ஒரு மைய அதிகாரபுள்ளி ஒரே திசையில் பயணிக்கும் நிலை இருந்தது. அது ஒரு பலமான நிலையாக காணப்பட்டது, புலிகளுக்கு பின்னர் புலம்பெயர் தரப்பு ஒரு கோணத்தில் பயணிக்க (அங்கும் பல திசையில் பயணிக்கின்ற நிலையே காணப்படுகிறது) இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் அரசியல் பிரதிநித்துவம் நிலையில் இருந்து பல கட்சிகளாக பிரிந்து பலவீனமான நிலையில் உள்ளார்கள் இந்திய வெளியுறவு அமைச்சர் கூட அனைவரும் ஒன்றாக வாருங்கள் என அரசியல் பாலபாடம் போதிக்கும் நிலையில் இலங்கையில் அரசியல் நிலை உள்ளது, பேரம் பேசும் ஆற்றல் எனும் பேச்சிற்கே தற்போது இடமில்லை என்றாகிவிட்டது. இயற்கை நியதியான வெறுமையே எம்மை பொறுத்தவரை பொறுமையாக காத்திருக்கிறது. இந்த நிலை யாரால் உருவாக்கப்பட்டது என ஒரு தரப்பினை மட்டுமே கைகாட்டும் நிலை உள்ளது, இலங்கை நேரடியாக போரில் இருந்தாலும் பிராந்திய வல்லரசான இந்தியா ஆயுத மற்றும் தார்மீக ஆதரவினை வழங்கியது, அமெரிக்கா ஆயுத, உளவு, பயிற்சி, ஆலோசனைகளுடன் தார்மீக ஆதரவினை வழங்கியது, காசாவில் மக்கள் படுகொலைகளை கண்துடைப்பு கண்டிப்பினை கூறியவாறே போரை முடிக்க ஆதரவுகளை வெளிநாடுகள் வழங்கியது. இந்த அழிவிற்கு காரணமானவர்களிடம் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன் இன்னமும் புலம்பெயர்ந்தோர் இயங்குகின்றனர். 100 வருடங்கள் போராடிய குர்திஸ்களுக்கு நியாயம் கிடைத்ததிற்கான காரணம் அவர்கள் நலனை அதிகாரங்களின் நலனிற்கு ஏற்ப மாறியமை ஆனால் பலஸ்தீனியர்களுக்கு வெறும் அனுதாபம் கிடைத்தது. இந்த அழிவிற்கு காரணமான இலங்கை மற்றும் மேற்குடன் இணைந்த் பயணிக்க தயாராகவே உள்ள நிலை காணப்படுகிறது, இலங்கையில் இன்னமும் இனவாதத்திற்கு முகம் கொடுக்கும் நிலையில் கூட இலங்கையுடன் இணைந்து பயணிக்கின்ற நிலை காணப்படுகிறது. இந்தியாவுடன் இணைந்து பயணிப்பதன் மூலம் எமக்கான நலனை பெறமுடியுமாயின் ஏன் அதனை தவிர்க்க வேண்டும்? தற்போதய நிலையில் இந்தியாதான் எமது பேரம் பேசும் வாய்ப்பு, மேற்கு அதனுடனான மேலதிக பலம். இந்தியாவினை கடந்து ஒரு தீர்வு எட்டப்பட முடியாத ஒன்று புலிகள் கூட உணர்ந்த நிலையே காணப்பட்டது என கருதுகிறேன். தார்மீக உண்மை ஒரு நீதியினை கொடுக்காது என்பதற்கு அண்மைய மற்றய உதாரணம் பலஸ்தீனம், பலஸ்தீனத்தினை அனைவரும் அங்கீகரிக்க போட்டி போட்டாலும் அவர்களை துடைத்தழிப்பதற்கு எதிராக எந்த காத்திரமான முயற்சியினை எந்த நாடும் எடுக்கவில்லை, தமிழர்களுக்கி இழைக்கப்பட்ட அநிதீகளுக்கு நீதி முக்கியமா? அல்லது அதிகார முக்கியமா? இரண்டும் முக்கியம், ஆனால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிகளை யாரிடம் கோருகிறோம்? வெளியே கண்டனத்தினை தெரிவித்துக்கொண்டு அதே நேரம் அழிப்பிற்கு உதவிய தரப்பிடமிருந்தே! அவ்வாறாயின் அந்த நீதி கிடைப்பதற்கான சாத்திய கூறு எவ்வாறிருக்கும்? அதற்காக முயற்சிக்க கூடாது என கூறவில்லை, ஆனால் இலங்கையி அடக்குமுறைக்குள் இன்னமும் இருக்கும் மக்களுக்கு ஒரு சாதகமான சூழலினை தோற்றுவிப்பதற்கு இடையூறாக எமது செயற்பாடு தற்செயலாக கூட ஏற்பட்டுவிடக்கூடாது.
  26. உங்கப்பரும், சித்தப்பருமா இந்தச் சட்டத்தைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தேக்க என்ன கோமாவிலா இவர் இருந்தவர். உங்கடை கையாளான சவீந்திர சில்வா தையிட்டியிலை விகாரை கட்டேக்கை, குருந்தூர்மலை... கிண்ணியா... சிவபுரமென உங்களாட்சிக்காலத்தில் அடாவடிகள் செய்து இனஅழிப்பையும் இனவெறுப்பையும் அதியுச்சமாகச் செய்தபோது எங்கே போனது எங்கபோனது அந்த சட்டம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.