Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Yesterday
  2. தரலாம். நீங்கள் பிழை என நிறுவி விட்டேன் என்றால் என்ன செய்வீர்கள்.
  3. வேலையிடத்து பெண் ஒருவர் தனது நாய் குட்டி போட்ட இரு குட்டிகளுக்கு பெயர் வைக்க சொல்லி ஒரே அலுப்பு. எனக்கு நாய் எண்டால் கண்ணில காட்டேலாது. பிரளயகிருமி, விபிலிய கிருமி எனும் பெயர்களை பரிந்துரைக்கவுள்ளேன். பிகு சொற்களை ஆக்கவில்லை. எகிப்தில் எழுதிய சிகை கொற்றன் காலத்து சொற்கள் இவை. கால இயந்திரத்தில் அங்கே இருந்து இங்கே வந்து எழுதுவதால் சில சமயம் அந்த சொற்கள் வந்து விழுகிறன.
  4. ஈரானியர்களை கொன்று குவித்த கொடுங்கோல் தலைவன் கொல்லபட்டதை ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல்களை உலகம் முழுவதும் வசிக்கின்ற ஈரானியர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள் ஆனால்இலங்கையில் இப்படி நடைபெறுவது அவமானம்
  5. நான் இந்த படத்தை பார்த்துவிட்டு இது ஏதோ பழைய படம் என்று நினைத்து விட்டேன் இப்போ தான் நண்பர்கள் சொன்னார்கள்சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஒரே நிறத்தில் பொருத்தமான உடை அணிந்து ஜோடியாக கலந்து கொண்ட படம் தான் அது என்று சங்கீதாவுக்கு நீதி வேண்டும் 😟
  6. குர்திஷ் இனம் எங்கும் எப்போதும் நடுத்தெருவில் விடப்பட்டதகாவே வரலாறு சொல்கின்றது. நேட்டோவில் இருக்கும் துருக்கி குர்திஷ் இனத்திற்கு விடுதலை கொடுக்க இடையூறு செய்து கொண்டே இருக்கும்.ஏனெனில் துருக்கி வன்மம் கொண்ட நாடு. வன்மம் பொல்லாதது.
  7. தாம் நாகரீகமானவர்கள் என கூறும் மேற்கத்தையவர்கள் தான் நாடு விட்டு பிற நாடுகளுக்கு சென்று போர் செய்கின்றார்கள். கொரோனா பரவலுடன் எல்லா நாடுகளும் மக்களும் வலுவிழந்து விட்டார்கள். போதாக்குறைக்கு உக்ரேன் போரும் வர அனைத்து மனித வாழ்க்கையும் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. கொடுமைக்கு மேல் கொடுமையாக தற்போது ஈரான் மீதான போர். அதை விட கொடுமை என்னவென்றால் ஈரான் போர் நடக்க ஆரம்பிக்க ஜேர்மனியில் கையிருப்பில் இருக்கும் எரிபொருட்களின் விலையையே கூட்டி விட்டார்கள்.😋 இனிவரும் காலங்களில் என்னென்ன கொடுமைகளை சந்திக்கப்போகின்றமோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். போர்களும் அதற்க்குரிய காரணங்களும் மூட நம்பிக்கைகைகளை விட கொடியது.
  8. இந்தியணியில் மாற்றம் இருக்காது எனவே நினைக்கிறேன்.
  9. தெக்ரான் ஆராய்ச்சி கல்லூரி மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்காக என IAEA இடம் கூறியதாக வாசித்த நினைவுள்ளது. அணுசக்தி நிர்முழ்கி எத்தனை ஈரான் வைத்துள்ளது என தெரியாது. சர்வதேச அணுசக்தி ஆணையகம் ஈரான் அணுகுண்டு தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது, இது வரை எந்த வித ஆதாரமும் அணுவாயுதம் செய்வதற்கானதாக கூறப்படவில்லை எனும் நிலையில் அணுவாயுதத்திற்காகவே 60% செறிவாக்கப்பட்ட யுரேனியம் ஈரான் கொண்டுள்ளது என கூறமுடியாதல்லவா அதற்காகக்கூறினேன். அது எனது நொண்டிச்சாட்டு இல்லை, அது ஈரானின் நொண்டிச்சாட்டாகும் (நானும் மறுதலிக்கவில்லை ஈரானால் அணுகுண்டு தயாரிக்க முடியும் என்பதனை). ஈரான் அணுகுண்டை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று IAEA கூறுகிறது. 3 கருத்துகள் மார்ச் 4, 2026 காலை 9:37 மணிக்கு மார்ச் 02, 2026 அன்று ஆஸ்திரியாவின் வியன்னாவில் ஈரானை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்த ஆளுநர்கள் குழு கூட்டத்திற்குப் பிறகு, சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோசி ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு அறிக்கையை வழங்குகிறார். [சாலிஹ் ஒகுரோக்லு - அனடோலு ஏஜென்சி] சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி, ஈரான் தற்போது அணுகுண்டை உருவாக்கி வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ள அதே வேளையில், தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தைச் சுற்றியுள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஒரு தீவிரமான கவலையாகவே உள்ளன என்றும் எச்சரித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலையில் வெளியிடப்பட்ட கருத்துக்களில் பேசிய க்ரோஸி, ஈரானிடம் ஏராளமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு உள்ளது என்றும், அது ஆயுத தரத்திற்கு நெருக்கமான அளவை எட்டியுள்ளது என்றும் கூறினார். இருப்பினும், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கி வருவதற்கான ஆதாரத்தை அந்த நிறுவனம் கண்டுபிடிக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார். சர்வதேச ஆய்வாளர்களுக்கு முழு அணுகலை வழங்க ஈரான் மறுப்பது நிறுவனத்திற்குள் கவலைகளை அதிகரித்துள்ளது என்று க்ரோஸி குறிப்பிட்டார். நிலுவையில் உள்ள கேள்விகளுக்கு தீர்வு காண்பதில் தெஹ்ரானின் ஒத்துழைப்பு இல்லாமல், ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது என்பதற்கான உத்தரவாதங்களை IAEA வழங்க முடியாது என்று அவர் எச்சரித்தார். படிக்க: டிரம்ப் வர்த்தக உறவுகளை துண்டிப்பதாக அச்சுறுத்தியதை அடுத்து, அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்று ஸ்பெயின் கூறுகிறது கடந்த சனிக்கிழமை ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே பகைமை வெடித்ததைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதைத் தொடர்ந்து இது தூண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோதல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, ஓமானின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைடி, ஈரான் கொள்கையளவில், தொடர்ச்சியான இராஜதந்திர விவாதங்களின் ஒரு பகுதியாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தக்கவைத்துக் கொள்ள மாட்டோம் என்று ஒப்புக்கொண்டதாகக் கூறினார். அல்-புசைடியின் கூற்றுப்படி, இந்த திட்டத்தில் செறிவூட்டப்பட்ட பொருட்களைக் கைவிடுவதும், எந்த அணு எரிபொருளும் சேமித்து வைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும், சரிபார்ப்பு வழிமுறைகள் நடைமுறையில் இருப்பதும் அடங்கும். இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் யுரேனியத்தை வளப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினார், ஆயுத தரத்திற்குக் குறைவான அளவுகள் உட்பட, தெஹ்ரான் செறிவூட்டல் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்ற வாஷிங்டனின் நீண்டகால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். https://www.middleeastmonitor.com/20260304-iaea-says-no-evidence-iran-is-building-a-nuclear-bomb/
  10. இந்திய அணியில் மாற்றம் இருக்குமா. அபிஸேக்கும் வருணும் சிறப்பாகச் செய்யாத படியால், ஏதாவது மாற்றம் இருக்குமா. நியுசிலாந்து அணியில் மாற்றம் இருக்காது
  11. பா ரவீந்திரனுடன் ஒப்பிடும் போது கடஞ்சா புதிய சொற்கள் ஆக்கி தமிழுக்கு வளம் சேர்க்கிறார் என ஒப்புக் கொள்கிறேன். ரவீந்திரன் போன்ற மேற்கு எதிர்ப்பு சம்பெயின் செஞ்சட்டைக் காரர்கள், "காலனியம், நவ காலனியம், சுரண்டல், பிறாண்டல்" என்று ஒரே சொற்களை வைத்தே பக்கங்களை நிரப்பி விடுவர்! creativity இல்லாத ஆட்கள்!
  12. மருத்துவத்திற்குத் தேவையான கதிரியக்கப் பொருட்களைத் (radioisotopes) தயாரிக்க 60% செறிவாக்கிய யுரேனியம் தேவை என்று ஈரான் சொல்லியிருக்கிறதா? அல்லது தான் அப்படிப் பயன்படுத்துவதாக ஆதாரம் காட்டியிருக்கிறதா? இல்லை. ஏனெனில், NPT விதிகளுக்கேற்ப மருத்துவத் தேவைகளுக்குரிய யுரேனியம் செறிவாக்கல் 20% இற்கும் குறைவாகத் தான் இருக்க வேண்டும். உலகம் முழுவதும் NPT இல் கையெழுத்திட்ட நாடுகள் ~3% செறிவாக்கலைத் தான் இதற்கெனப் பயன்படுத்துகிறார்கள். இது நீங்கள் ஈரானுக்கு எடுத்துக் கொடுக்கும் ஒரு நொண்டிச் சாட்டு என நினைக்கிறேன்😂. ஆனால், விஞ்ஞான ரீதியான சாட்டு அல்ல. அணுசக்தி நீர் மூழ்கிக்குள் பொருத்தப் படும் அணுசக்திப் பிறப்பாக்கி சிறியது என்பதால், 60% செறிவாக்கிய யுரேனியம் தேவைப் படும். ஈரானிடம் எத்தனை அணுசக்தி நீர்மூழ்கிகள் அல்லது கப்பல்கள் இருக்கின்றன? ஒரு தடவை தேடிப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!
  13. மருத்துவ, அணுசக்தியில் இயங்கும் இயந்திரம் போன்ற பயன்பாட்டிற்கும் 60% செறிவாக்கல் உதவுகிறது.
  14. யாரோ இருவரின் சண்டைக்குள் எங்களை இழுத்துவிடாமல் இருப்பது நல்லது!
  15. எங்களில் ஒராள் இப்படி முன்னுக்கு வந்து விடக்கூடாதே!🤣
  16. இறுதிப்போட்டியில் நியுசிலாந்தினை ஒருவரும் தெரிவு செய்யாத நிலையில், இந்தியா தவிர வேறு அணியினை தெரிவு செய்தவர்களை நியுசிலாந்து வகுப்பிற்கு அனுப்பிவிடலாமே!, இந்தியா வென்றால் இந்தியாவினை தெரிவு செய்தவர்களுக்கு புள்ளி, இந்தியா தோற்றால் மற்ற அணியினை தெரிவு செய்தவர்களுக்கு புள்ளி🤣. இதனை அமுல்படுத்த வாக்கெடுப்பு நடாத்தலாம். எனது வாக்கு ஆம்!🤣 இந்தியா வெற்றி வாய்ப்பு 70% உள்ளதாக கூறுகிறார்கள்.
  17. சர்வதேச கடல் சட்டங்கள், நாடுகள் இடையான அணுகுமுறை பற்றி அறியாமல் பலர் இந்தியாவை காட்டி கொடுத்துட்டான் பாவி ரேஞ்சில் எழுத, வீடியோ போட்ட படி உள்ளார்கள். ஆனால் IRIS Lavan என்ற இன்னொரு ஈரானிய கப்பல் இலங்கையில் 2ம் கப்பல் சரணடைந்தது போல் இந்தியாவிடம் சரண் அடைந்து கொச்சியில் நிற்கிறது.
  18. அண்ணை வர வர நீங்களும் தமிழ் ஆய்வாளர்கள் போல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். இந்தியா போ என்று சொன்னதாய் எந்த தகவலும் இல்லை. விசாகபட்டினத்தில் இருந்து கொச்சிக்கு மாறும் போதே அடி விழுந்ததாக சிலர் சொல்கிறனர். இப்போ இரெண்டாம் கப்பல் இலங்கையிடம் சரண் அடைந்தது போல் இந்த கப்பலும் இந்தியாவிடம் சரண் அடைந்திருந்தால், இந்தியா சர்வதேச சட்டத்துக்கு அமைய கப்பலையும், மாலுமிகளையும் intern பண்ணி இருக்கும். போர்காலத்தில் நடுநிலை நாடுகள் கப்பல்கள் விடயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என சட்டம் நன்றாக விபரிக்கிறது. இந்தியாவுக்கும் எண்ணை கப்பல் போகலாம் என ஈரான் கூறியுள்ளதாம்.
  19. 🤣............... பிரளயக் கிருமி, விவிலியக் கிருமி போன்ற சொற்பதங்களை இனி வாழ்நாளில் மறக்க முடியாது............... கடஞ்சா சொந்தமாக எழுதுவது மட்டும் இல்லாமல், சொந்தமாக சொற்களையே உருவாக்குகின்றாரே, அதற்காகவாவது அவருடன் யாராவது இடையிடையேயாவது உரையாட வேண்டும் என்று நினைத்தேன்................. அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு பா.ரவீந்திரனின் கட்டுரைகளின் தலைப்புகள் என்னவாக இருக்கும், கடஞ்சா என்ன கதைகள் சொல்வார் என்று ஒரு புதிய எதிர்பார்ப்பு இப்பொழுது என்னிடம் வந்திருக்கின்றது..................🤣............. இருவரின் எழுத்துநடைகளில் தான் வித்தியாசம், மற்றபடி பொருள் ஒன்றே தான்....................
  20. ஒரு விசயம் தெரியாட்டில் சும்மா இருக்க வேணும் அண்ணை. இவை மூட நம்பிக்கை திருமணம் அல்ல. Customary marriage இவற்றுக்கு ரிஜிஸ்தர் மரேஜுக்கு உரிய அதே அந்தஸ்து உள்ளது. ஆதாரம் வேணும் எண்டால் சொல்லவும். தரலாம். சீமான் செய்த அநீதியை கண்டபின்னும் இதை ஏற்காமல் இருக்க முடியுமா? பெரியாரிஸ்டுக்கும் ஏத்திவிட அடுத்தவர் முனைந்திருப்பர் இல்லையா? இது நீதி விசாரணையில் விஜி அண்ணியிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்வி. அதே போல் ஏலவே நிச்சயமான பெண்ணுடன் ஏன் மாலை மாற்றி, கணவன்-மனைவி போல் வாழ்ந்தார் என உங்கள் அண்ணனிடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீதி விசாரணையைதான் அண்ணன் அடித்து நூத்து விட்டாரே.
  21. உங்களுக்கு "சீரியசாக" பதில் எழுதிய ரசோவை எதனால் அடிக்கலாம் என்று யோசிக்கிறேன்😂! எல்லைக்குள் நின்று ஈரான் போராடக் காரணம், ஈரானிய ஆட்சியாளர்களின் காசுக்கும், மதவாத ஆதரவிற்கும் நன்றியாக வெளியே buffer ஆக நிற்கும் ஹிஸ்புல்லாக்களும் ஹூத்திகளும் இருப்பது தான்! இப்படி "70 கன்னியர்களுக்காக சாகத் துணிந்த" பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு தராமல் இருந்திருந்தால், தற்போதைய நிலையில் ஈரானுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் மேற்கிலேயே நடந்திருக்கும். பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நிகழ்ந்தது போல!
  22. அது ஏனைய வலைத்தளங்களுக்கு மட்டுமே... யாழ் ஒரு கருத்துக்களம் (forum) ... செய்தி வலைத்தளங்களிலிருந்து இது வேறுபட்டது. மேலும் இணையவன் கூறுவதும் சரியே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.