stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
வாழ்த்து. வழமை போலவே இதுவும் நம்மவர்களால் ஊதி பெருப்பிக்கப்படுவதாக எனக்கு படுகிறது. நான் அறிந்த வகையில்.… மாநிலம் என நாம் இந்திய, அமெரிக்க, கனடா வில் காண்பது போல் அல்ல சுவிசில். அங்கே கண்டோன் என்பது ஒரு நகரம் அளவிலான சமஸ்டி அலகு. உதாரணமாக சூரிக் ஒரு கண்டோன். St. Gallen உம் இப்படி ஒரு நகர-சமஸ்டி அலகு. அதேபோல் முதல்வர் என்பதும் தமிழில், சீப்மினிஸ்டர், மேயர் இரு பதவிக்கும் பயன்படுகிறது. ஆனால் இவர் தவிசாளராகத்தான் தேர்வாகியுள்ளார் என நினைக்கிறேன். அதாவது சிவிகே சிவனாஞானம் வடமாகாண சபையில் வகித்த சேர்மன், பதவி போன்றது. இந்த சென் கலான் சமஸ்டி அலகின் பாராளுமன்றின் (ஏனைய நாடுகளில் இதை மா நகரசபை என்பார்கள், ஆனால் சுவிசில் இவற்றின் அதிகாரம் கூட) தவிசாளராக/சேர்மனாக இவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். எய் சபாநாயகர் போல அவை நடவைக்கையை கட்டுப்படுத்தும் வேலை. சீப்மினிஸ்டரோ, மேயரோ இல்லை என நினைக்கிறேன். பிழையாயின் திருத்தவும்.
-
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
பெருமைப்படும்படி என்ன கூறினார் என சற்று விரிவாக கூறுங்கள் பார்போம்.
-
'நல்ல சம்பளம், போட்டி குறைவு' - கப்பல் வேலையில் சேர்வது எப்படி?
இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் களவாக தகுதி சான்றிதழ் பணத்தை கொடுத்தால் இலகுவாக எடுக்கலாம் அதன் பின் .கீல் உள்ளவாறு நிறைய செய்திகள் உலகிற்கு வரலாம் . "அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் மார்ச் 2024-ல், டாலி என்ற சரக்குக் கப்பல் சக்தி இழந்து பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் தூணில் மோதியதால், பாலம் இடிந்து விழுந்தது" அந்த டாலி சரக்கு கப்பலில் வேலை பார்த்த வட இந்தியர்களே .
-
அமெரிக்காவின் அரைவாசி இடத்தில் கொட்டப்போகும் பனி.
டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 18 கோடிக்கும் மேற்பட்ட மக்களை இலக்காகக் கொண்டு, சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பனி மற்றும் கனமழையுடன் கூடிய ஒரு பெரும் குளிர்காலப் புயல் தாக்கவுள்ளது. தெற்குப் பகுதி முதல் வடகிழக்கு வரை பரவலான பனிப்பொழிவு மற்றும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பனிக்கட்டிப் புயல் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின் நேரம் மற்றும் யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பது பற்றிய விவரங்கள் இங்கே உள்ளன. தெற்கு, மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை பெரிய, பரவலான குளிர்கால புயல் தாக்கும். நியூ மெக்ஸிகோ மற்றும் டெக்சாஸிலிருந்து நியூ இங்கிலாந்தின் சில பகுதிகள் வரை மில்லியன் கணக்கான மக்களுக்கு பனிக்கட்டி மற்றும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு தி வெதர் சேனல் குளிர்கால புயல் ஃபெர்ன் என்று பெயரிட்டுள்ளது. தி வெதர் கம்பெனி முன்னறிவிப்பாளர்களின் கூற்றுப்படி, ஃபெர்ன் அமெரிக்காவில் 180 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பனிப்பொழிவால் பாதிக்கக்கூடும். https://weather.com/storms/winter/news/2026-01-21-winter-storm-fern-ice-snow-forecast-south-northeast-midwest வெள்ளிக்கிழமை மேற்குக் கரையிலிருந்து கிழம்பி நியூயோர்க் வந்துசேர சனி இரவு ஆகலாம். பென்சில்வேனியா நியூயேர்சி சில இடங்கள் 2-3 அடி என்கிறார்கள். இன்னும் நாட்கள் இருக்கிறபடியால் காற்றோடு இழுபட்டு பாதை மாறலாம். @Justin ஆயத்தமாக இருங்கள்.
- Today
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அண்ணையின் துணைவி சுமதி (பூமா) அக்காவின் இறுதி நிகழ்வு இன்று ஒஸ்லோவில் நடைபெற்றது. வாழ்வின் மீது பிடிமானம் கொண்டு அதனை நேசிக்கின்ற எல்லோருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடுவதில்லை. இத்துயர உண்மையை மனிதவாழ்வு அவ்வப்போது நினைவூட்டிவிடுகிறது. பூமா அக்கா வாழ்வின் தருணங்களை நேசித்து ரசித்து மகிழ்ந்து வாழ்ந்தவர். சுற்றியிருப்பவர்களையும் மகிழ்வித்து வாழ்ந்த ஒருவர். நம்பிக்கையும் Positive energy உம் கொண்ட ஒருவர். மோகன் அண்ணை, வைதேகி, ஆதிரை, மற்றும் குடும்பத்தாருக்கு பெரும் இழப்பு.ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. மோகன் அண்ணை நீண்ட காலமாக நோர்வேயில் சமூகப் பணிகளிலும் தாயகம் நோக்கிய செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவந்த ஒருவர். கணினித் தொழில்நுட்பம், நூல் வடிவமைப்புகள், இணைய ஊடகம் என அவருடைய பணிகள் பன்முகப்பட்டவை. அவருடைய பொதுப்பணிகள் பூமா அக்காவினுடைய ஒத்துழைப்பும் புரிதலும் இன்றி சாத்தியமாகியிருக்காது. மோகன் அண்ணையின் பொதுப் பணிகளில் முதன்மையானது Yarl.com இணையத்தளத்தினை நிறுவி இயக்கியமை. புலம்பெயர் தமிழ்ச் சூழலின் இணையத் தளங்களில் முன்னோடியானது அது. இன்றைய சமூக ஊடகங்களின் வருகைக்கு முந்தைய நிலையென இணையத் தளங்களின் ஊடான chatting எனப்படுகின்ற நிகழ்நேர உரையாடல், தகவற்பகிர்வுகளையும் கருத்தாடல்களையும் குறிப்பிடலாம். இணையவெளியில் புலம்பெயர்/உலகத் தமிழர்களுக்கான கருத்துப்பகிர்வுத் தளமாகவும் யாழ் இணையம் 1998களின் ஆரம்பத்திலிருந்து இருந்துள்ளது. ஆர்வமுள்ள எவரும் எழுதலாம், கருத்துகளைப் பகிரலாம் என்ற நிலைக்கு வித்திட்ட தளங்களில் யாழ் இணையத்தின் இடம் தனித்துவமானது. செய்திகள், தகவல்கள், கட்டுரைகள் ஆய்வுகள், கதைகள், கவிதைகள், பகிர்வுகள், ஓவியங்கள் எனப் பல்வகையான ஆக்கங்களுக்கான தளமாக விளங்குகின்றது. புலம்பெயர் சூழலில் எழுத்தாளர்களாக உள்ள பலரின் ஆரம்பக் களமும் தளமுமாகவும் யாழ் இணையம் திகழ்ந்திருக்கின்றது. பூமா அக்கா மனிதர்களோடு இயல்பாகப் பழகக்கூடியவர். துணிந்து தன் உணர்வுகள், கருத்துகள், எண்ணக்களைச் சொல்லக்கூடியவர். ஒரு அம்மாவாகப் பிள்ளைகளின் நலன்களில் மட்டுமல்லாமல் அவர்கள் சுயதெரிவுகளுடனும் தமக்கான சுதந்திரங்களுடனும் வாழ்வில் உயர வேண்டுமென்ற எண்ணங்களைக் கொண்டவர். நோய்க் காலத்திலும் மனோபலத்தோடு அதனை எதிர்கொண்டிருக்கின்றார் என்று அறியும் போது அவரது அவர் மீது மதிப்புக் கூடுகிறது. மோகன் அண்ணையும் பிள்ளைகளும் அவரைத் தாங்கியிருந்திருக்கிறர்கள். பெரும் காதலோடும் கரிசனையோடும் நோய்க்காலத்தில் அவரைப் பராமரித்திருக்கிறார்கள். ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. https://www.facebook.com/share/p/1BgkDMANcf/?mibextid=wwXIfr
- IMG_5048.jpeg
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
விடை கொடுக்கிறோம், சோதரியே! நண்பர் மோகனின் மனைவி சுமதியின் (பூமா) இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று (21.01.26) ஒஸ்லோவில் நடைபெறுகிறது. நான் நோர்வேயில் இல்லாத காரணத்தினால் இந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத மிகுந்த கவலையுடன் இப்பதிவை எழுதுகிறேன். பிரியமானவர்கள் பலரின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை; எனது அம்மா அப்பாவின் இறுதி வணக்க நிகழ்வுகள் உட்பட. சுமதி, நண்பர் மோகனின் மனைவியாகத்தான் எனக்கு அறிமுகமானார். காலப்போக்கில் நாம் குடும்ப நண்பர்கள் ஆகி விட்டோம். அவருடன் பழகிய காலங்களில் அவர் துணிச்சலானதொரு பெண்ணாகவும், குழந்தை உள்ளம் கொண்டவராகவும், நகைச்சுவை உணர்வு மிகுந்தவராகவும், வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் விருப்பம் கொண்டவராகவும், எவரோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் நற்பண்புமிகுந்தவராகவும் இவரை நாம் உணர்ந்து கொண்டோம். சுமதி இளகிய மனம் படைத்தவர். கலையுள்ளம் கொண்டவர். கலைகளை நன்கு ரசிப்பார். இயற்கையை நேசிப்பவர். பயணங்கள் செல்வதிலும், சுற்றுலா போவதிலும் விருப்பம் கொண்டவர். கணவனையும் பிள்ளகளையும் நன்கு நேசித்தவர். நண்பர்களையும் அன்பால் அரவணைத்தவர். வயதின் மூப்பில், வாழும் கால எல்லையெல்லாம் வாழந்து இயற்கையாய் கண் மூடும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இரசித்தபடியே வாழ்ந்திருக்க வேண்டியவர். 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நம் எல்லோரையும் அதிர வைத்த அந்தச் சேதி கிடைத்தது. சுமதியை கொடிய புற்றுநாய் தாக்கியுள்ளது என்பதே அந்தச் சேதி. இந்தச் செய்தியினை அவரேதான் சொன்னார். பலரும் புற்றுநோயை மறைப்பதுபோல அவர் அதனை மறைக்க முயலவில்லை. இவரை இக் கொடும் நோய் தாக்கும் என்று எவர் தான் கற்பனை பண்ணினோம் ! புற்றுநோய் என்றாலே உயர் ஆபத்து என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் உண்மைநிலை அவ்வாறு இல்லை. புற்றுநோய் எந்த இடத்தில் வருகிறது, எப்போது கண்டு பிடிக்கப்படுகிறது, எவ்வளவு தீவிரத்தன்மை கொண்டுள்ளது என்பதைப் பொறுத்து நோயின் பாதிப்பு வருகிறது. சிகிச்சை முறையிலும் பாரிய முன்னேற்றங்கள் வந்துள்ளன. நோயால் பாதிக்கப்பட்ட பலர் பூரண குணமாகியுள்ளனர். சுமதிக்கு வந்தது பித்தக் குழாய் புற்றுநோய்( ஆங்கிலத்தில் Bile duct cancer, நோர்வேஜிய மொழியில் Gallegangskreft). இது ஒப்பிட்டளவில் அரிதாக வருகின்ற, ஆனால் ஒரு ஆபத்தான புற்றுநோய் நோய் என்றும் கூறுவார்கள். பித்தக் குழாய் மிக மிக சிறிய உறுப்பாக இருப்பதன் காரணமாகவும், அது அமைந்திருக்கின்ற இடம் பல உறுப்புகளுடன் தொடர்புபட்டிருப்பதன் காரணமாகவும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு கடினமான ஒரு புற்று நோயாகவும் இதனைக் கூறுவார்கள். இந்த நோய் வரும்போது அதனை எதிர்த்துப் போராடுகின்ற போராட்டம் வாழ்வா சாவா என்கின்ற ஒரு போராட்டம் தான். இந்த நோயிலிருந்து போராடி மீண்டும் வருவது மிகவும் கடினமான ஒரு விடயமாக இருக்கப் போகின்றது என்பதனை ஏதோ ஒரு வகையில் சுமந்து உணர்ந்து கொள்கிறார். எனக்கு இந்த இடத்தில் ஏன் இந்த நோய் வந்தது என்கின்ற கவலை ஒரு புறமும், இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்ற தேடல் மறுபுறமாகவும்அந்த நோயை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறார். இந்நோய் தொடர்பாக ஒரு வெளிப்படையான அணுகுமுறையை அவர் மேற்கொள்கிறார் தனது நோயின் தன்மை பற்றி தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் ஏறத்தாழ பதினைந்து - பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிப் போராடி, ஒவ்வொரு காலடியை முன்னோக்கி வைப்பதற்கு முயன்று முயன்று தோற்றுப் போக போக இறுதிக் கணம் வரை மனந் தளராமல் அவர் போராடினார். எமது கண் முன்னால் நாம் நேசித்த ஒரு சோதரி ஒவ்வொரு மருத்துவ முயற்சிகளிலும் முன்னேற்றத்தை காணாமல் போராடிக் கொண்டிருப்பது நம்ம எல்லோருக்கும் மிகுந்த மிகுந்த மனவருத்தத்தை தந்து கொண்டிருந்தது. இறுதியில் இயற்கையின் விதிப்படி 14.01.26 அன்று அவர் இயற்கை எய்தி விடுகிறார். ஏது தான் செய்ய முடியும் எம்மால். சாவை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான நோயுடன் போராடி மருத்துவமனையில் இருக்கின்ற போது அதற்கு மிகுந்த ஒரு மன உறுதி தேவை. அந்நேரத்தில் குடும்ப உறவுகளதும், நண்பர்களதும் அரவணைப்பு ஒரு நோயாளிக்கு மிகுந்த மனபலத்தை தரும். அதனை அனுபவரீதியாக உணர்ந்தவன் நான். நண்பர் மோகனும் பிள்ளைகள் வைதேகி, ஆதிரையும் சுமதியைக் காப்பாற்ற தம்மால் முடிந்ந அனைத்தையும் செய்தார்கள். சிகிச்சை தொடர்பாக நோர்வேயில் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எல்லா வாய்ப்பைக்களையும் தேடினர். எதனையும் விட்டு விடாமல் எல்லாக் கற்களையும்ப புரட்டினார்கள். எதுவும் நோர்வேயினை விட மேம்பட்டதாக இருக்கவில்லை. தனது மனைவி பதினைந்து -பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிக் கொண்டிருக்கின்ற போது கண்ணை இமை பாதுகாத்தது போல கிடைக்கக் கூடிய ஒவ்வொரு கணமும் தன் மனைவியின் அருகிலேயே நின்றார் நண்பர் மோகன். பிள்ளைகளும் தமது அம்மாவை நோயில் இருந்து மீட்டெடுத்து விட வேண்டும் என்று துடி துடிப்புடன் தாயுடன் தமிக நெருங்கி நின்றார்கள். தான் அருகாமையில் இருக்கின்ற போது சுமதி பாதுகாப்பாக உணர்கிறார் என்பதை புரிந்து கொண்டு மோகன் தனது மனைவியை பராமரித்த விதம் எல்லோருக்கும் மிக மிக உன்னதமான முன்னுதாரணம். சுமதி எம்மை விட்டு பிரிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனது மனைவியும் (அவர் சுமதியின் ஒரு நல்ல நண்பர்) சுமதியின் ஏனைய இரு நண்பர்களும் வைத்தியசாலையில் சுமதியியைப் பார்க்கச் சென்றோம். அவர் இருந்த அறையின் உள்ளே சென்று அவரோடு சிறிது நேரம் கதைத்து விட்டு நான் நண்பர் மோகனுடன் அறையின் வெளியிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தேன். உள்ளே சுமதியும் எனது மனைவியும் நண்பர்களும் பேசி சிரித்து உற்சாகமாக கதைக்கின்ற சத்தம் எமக்குக் கேட்கிறது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் போயிருக்கும். நாங்கள் மீண்டும் அறைக்குள் போகும்போது ‘ நல்ல energy உடன் சுமதி இருந்தால் பல விடயங்களையும் கதைத்தோம்’ என என் மனைவியும் நண்பர்களும் சொன்னார்கள். நான் அப்போது சுமதியிடம் ‘நீங்கள் energy யான ஆள் தானே, energy யா இருங்கோ’ என்று சொன்னேன். உடன் அவர் விம்மி அழத் தொடங்கி விட்டார. ‘நானும் எல்லாத்தையும் positive ஆகத்தான் பாக்கிறன், அண்ணா. ஆனால் நினைக்கிற மாதிரி ஒண்டும் நடக்குதில்லை’ என்று கவலையுடன் சொன்னார் . அவர் இதனைச் செல்லும் போது இவர் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற மருத்தவர்களின் தகவல் எமக்குத் தெரிந்திருந்தது. பாசத்துடன் அவரது இரண்டு கன்னங்களையும் எனது இரு கைகளாலும் தடவி விட்டதனைத் தவிர எந்தப் பதிலையும் கூற என்னால் முடியவில்லை. சுமதியின் பிரிவுத்துயரைக் காலம்தான் ஆற்ற வேண்டும். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்பார்கள். அதனை நம்புவோம். நணபர் மோகனதும் பிள்ளகளதும் தோழணைத்து நாம் நிற்போம். விடை கொடுக்கிறோம், சோதரியே. https://www.facebook.com/share/p/1DbBE4ME6h/?mibextid=wwXIfr
- IMG_5047.jpeg
-
📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
இதில் உள்ள அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர். இருந்தும்... தமது தோல்விக்கு காரணத்தை தேடாமல், மற்றவரை தாக்கும் கூட்டை அடிக்கடி மாற்றி வருகின்றனர். இவர்களின் கூட்டுக்கு தோல்வியடைந்தோர் கூட்டமைப்பு என பெயரிட்டால் நல்லாக இருக்கும். Inthunathan SivaNathan
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நடந்துவிட்டது. வங்காளதேசத்துக்கு ஒருநாள் அவகாசம் குடுத்திருக்கினம். ஒத்து வராவிட்டால், ஸ்கொட்லாந்து அணியை உள்ளே கொண்டுவருவார்கள். எல்லா அங்கத்தவர்களும் இதுக்கு ஆதரவு தெரிவுத்துள்ளார்கள், பாகிஸ்தானைத் தவிர.
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
இன்றைய Tages Blatt கட்டுரையின் தமிழாக்கம். ஜெயகுமார் துரைராஜா – செங்காலனின் புதிய உயரிய தலைவர் «20 முறை இறந்திருக்கலாம்» புதிய ஆண்டின் முதல் அமர்வில் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பல பதவிகள் புதிதாக நிரப்பப்பட்டன. இதில், பசுமைக் கட்சி (Grüne) சார்ந்த ஜெயகுமார் துரைராஜா, நகர பாராளுமன்றத்தின் புதிய தலைவராக – அதாவது செங்காலனின் உயரிய பதவியாக – தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அகதியாக வந்த, ஒருகாலத்தில் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இல்லாத ஒரு தமிழர், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் செங்காலன் நகர பாராளுமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தான் ஜெயகுமார் துரைராஜா. தேர்வுக்குப் பிறகு அவர் கூறியதாவது: «என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை இதுவே.» ஜெயகுமார் துரைராஜா 2011ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமை பெற்றார். 2016ஆம் ஆண்டு முதல் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் சார்பில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மூன்று உறுப்பினர்கள் விலகியதைத் தவிர, எந்த எதிர்ப்பு வாக்குகளும் இன்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன், பசுமைக் கட்சி மற்றும் இளைய பசுமைக் கட்சியின் பிரிவு தலைவர் கிறிஸ்டியான் ஹூபர், தேர்தல் பரிந்துரையை வழங்கினார். அவர் கூறியதாவது: «செங்காலன் நகரில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் மூன்றில் ஒருபங்கிற்கும் அதிகமானோர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். 15 வயதுக்கு மேற்பட்ட மக்களுள் பாதிக்கும் மேற்பட்டோருக்கு குடியேற்றப் பின்னணி உள்ளது. எனவே இன்று ஒரு ‘கெல்லர்’ அல்லது ‘முல்லர்’ அல்லாமல், ஒரு ‘துரைராஜா’ செங்காலனின் உயரிய பதவிக்குத் தேர்வாகுவது விசேஷமான ஒன்றல்ல. இது இந்த நகரத்தின் மற்றும் இந்த நாட்டின் உண்மையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.» இந்த யதார்த்தம் எளிதாக உருவானதல்ல; அது முன்பும் இன்றும் போராட்டங்களுக்கு உள்ளாகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெயகுமார் துரைராஜாவின் அனுபவங்கள் தனிப்பட்டவை அல்ல; அவை சுவிட்சர்லாந்தின் குடியேற்ற வரலாற்றின் ஒரு பகுதியாகும். 1960களில் வந்த இத்தாலிய காலாண்டுத் தொழிலாளர்கள் முதல், 1980களின் அகதி கொள்கைகள், பால்கன் நாடுகளிலிருந்து வந்த அகதிகள், இன்றைய போர் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் வரை—குடியேற்றம் பெரும்பாலும் ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டதே தவிர, ஒரு செல்வமாக அரிதாகவே கருதப்பட்டது. இருந்தாலும், குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது; அது இன்றைய சமூகத்தின் இயல்பான ஓர் அங்கமாக உள்ளது. «என் இலக்கு வாழ்க்கைத் தப்பிப்பதே» பதவியேற்பு உரையில், பயிற்சி பெற்ற செவிலியராக இருந்து தற்போது சமூக ஆலோசகராக புதிய பாதையில் தன்னை அமைத்துக்கொண்டு வரும் ஜெயகுமார் துரைராஜா, உள்நாட்டுப் போர் நிலவிய தனது தாயகத்திலிருந்து தப்பியோடிய ஒரு இளைஞனின் கதையை கூறினார். அது உண்மையில், அவர் இளமையில் அனுபவித்த தனது சொந்தக் கதையே. «நான் என் குடும்பத்தை, நண்பர்களை, எனக்குத் தெரிந்த அனைத்தையும் விட்டுவிட்டு புறப்பட்டேன். பெற்றோர்களும் இல்லை, உடன் பயணிக்க யாருமில்லை. என் இலக்கு ஒரு பதவி அல்லது தொழில்முறை வாழ்க்கை அல்ல; உயிர் தப்பிப்பதே என் ஒரே நோக்கம்.» அவர் தொடர்ந்து கூறினார்: «போரின் நடுவிலும், தப்பியோடும் பயணத்திலும், அறியாத எதிர்காலத்தை நோக்கிச் சென்ற வழியிலும், நான் 20 முறை இறந்திருக்கலாம். இருந்தும் உயிர் தப்பினேன்.» அவரது வார்த்தைகள் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தின. அவை பாராளுமன்ற உறுப்பினர்களின் மனங்களை ஆழமாகத் தொட்டன. செங்காலனில் அவர் தன்னை வளர்த்துக்கொள்ளவும், ஒரு குடும்பத்தை அமைக்கவும் முடிந்தது. அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. தன்னை நம்பிய மனிதர்களை அவர் சந்தித்தார்; அந்த நம்பிக்கையே அவரை இன்று செங்காலனின் உயரிய பதவிக்கு கொண்டு வந்தது. «இந்த நாட்டிலும், இந்த நகரமான செங்காலனிலும் வாழ முடிவது ஒரு பெரும் பாக்கியம். நன்றி, செங்காலன்» என்று அவர் கூறினார். அவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் இலக்கிய வரியை (திருக்குறளை) மேற்கோள் காட்டி, அதன் பொருளை விளக்கினார்: «நன்றி உணர்வு கொண்டவர்களே முன்னேற முடியும்; மற்றவர்கள் முன்னேற முடியாது.» பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக நோக்கி அவர் கூறினார்: «உங்கள் இந்தத் தேர்வின் மூலம், நீங்கள் எனக்கு ஒரு பெரிய மரியாதையை மட்டுமல்ல, ஒரு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளீர்கள்.» பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதோடு, செங்காலன் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடமையும் தன்னிடம் இருப்பதாக அவர் நினைவூட்டினார். செங்காலன் ஒரு குடும்பநேய நகரம் என்றும், சமூக உணர்வும், விளையாட்டு-பண்பாட்டு சங்கங்களும், புதுமை, பசுமை, நிலைத்தன்மை மற்றும் பல்வகைத் தன்மையும் கொண்ட நகரம் என்றும் அவர் பாராட்டினார். «இந்த பல்வகைச் செங்காலனையும், செங்காலனுக்குள் உள்ள பல்வகைத் தன்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்» என்று அவர் கூறினார். மரியாதை, நம்பிக்கை, மதிப்பு மற்றும் நன்றி – இவைதான் நம்மை முன்னேற்றும் என்று அவர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஜெயகுமார் துரைராஜாவுக்கு நீண்ட நேரம் கரகோஷம் எழுந்தது. நன்றி: Tages Blatt தமிழில்: AI உதவியுடன் இணுவையூர் மயூரன். Inuvaijur Mayuran
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
அன்றைய பரமேசுவரா கல்லூரிதான் இன்றைய பல்கலைக்கழகம். அது சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் கட்டப்பட்ட கட்டிடம். அந்தக் கட்டிடக் கல்லூரியில்தான் நானும் படித்தேன். அக்கட்டிடத்தில் ஏதோ புரியாத அதிசயம் இருப்பதுபோல் இந்த மாணவியின் சம்பவமும் என்னைச் சிந்திக்க வைக்கிறது. நான் எட்டாவது வகுப்பு படிக்கும்போது வடமாகாண ஆசிரியர் சங்கத்தால் நடாத்தப்பட்ட ஒரு பரீட்சையில் பங்குபற்றுவதற்கான மாணவர்கள் தகுதி பார்க்கப்பட்டது. அதுசமயம் அங்கு நடைபெற்ற உள்ளகப் பரீட்சையின் பெறுபேறுகளைக் கொண்டு மாணவர்கள் தெரிவுசெய்யப் பட்டனர். அப்பரீட்சையில் கணக்கும், தமிழும் பிரதான பாடங்களாக இருந்தன. அவை இரண்டும் மிகவும் கடினமாக இருந்ததால் பலமாணவர்கள் அவற்றில் சித்திபெறவில்லை. ஏனைய பாடங்கள் மிகவும் சுலபமானது. ஆகவே மாணவர் தெரிவில் கணக்கும், தமிழும் சித்தியடைந்தோரை ஆசிரியர் சங்கத்தால் நடாத்தப்படும் பரீட்சைக்கு அனுமதிப்பதாக ஆசிரியர்கள் கூடி முடிவெடுத்தனர். நானும் தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் நான் கணக்கிலும், தமிழிலும் மட்டுமே சித்திபெற்றிருந்தேன், மற்றும் அனைத்திலும் சித்திபெறாது கோட்டை விட்டிருந்தேன். எங்கள் வகுப்பு ஆசிரியர் இதைப் பின்னர் கவனத்தில் கொண்டு “இவன் அந்த இரண்டு பாடங்களைத் தவிர மற்ற அனைத்திலுமே சித்தி பெறவில்லை இவனை எப்படி அனுப்பலாம்?” என்று ஆட்சேபனை எழுப்பினார். அச்சமயம் எங்கள் கல்லூரி அதிபர் அந்த ஆட்சேபனையை ஏற்க மறுத்து இது உங்கள்தவறு இதனை நீங்கள் முன்பே கவனித்திருக்க வேண்டும். அறிவித்தபின்பு மாற்றக் கூடாது எனக் கூறிவிட்டார். நான் வடமாகாண ஆசிரியர் சங்கம் வைத்த பரீட்சையில் பங்குபற்றி 2ம் தரத்தில் சித்தி பெற்றேன். எங்கள் வகுப்பு ஆசிரியர் முதற்கொண்டு அனைவரும் என்னைப் பாராட்டினார்கள். இந்த மாணவியும் தடைக்கு உட்படாது எதிர் காலத்தில் சிறந்த வைத்தியராக வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
சுவிட்ஸர்லாந்தில் இலங்கைத் தமிழருக்குக் கிடைத்த கௌரவம் - குவியும் வாழ்த்துக்கள் சுவிட்ஸர்லாந்தின் செயின்ட் கேலன் (St. Gallen) மாநிலத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார். செயின்ட் கேலன் மாநிலத்தின் துணை முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார் நியமிக்கப்பட்டிருந்தார். இவர், செயின்ட் கேலன் நகரசபை தேர்தலில் நான்கு தடவைகள் போட்டியிட்டு தொடராக வெற்றி வாகை சூடி 09 வருடங்கள் நகரசபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார். துரைராஜா ஜெயக்குமார் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் உள்ள பசுமைக் கட்சியில் அங்கம் வகித்து வருகிறார். குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற அவையில் ஏனைய கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவருடன் இணைந்து பயணிக்கும் நண்பர்கள் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்திருந்தனர். நாடாளுமன்ற அவையில் திருக்குறளை மூன்று தடவைகள் முன்மொழிந்து டொச் மொழியிலும் விளக்கியுரைத்துடன் தமிழர் பண்பாட்டுடன் கூடிய இசையும் அவையரங்கில் வழங்கப்பட்டது. HR Tamil News
-
மனிதன் வாழத் தக்கதாக, பூமி போலவே பரிணமிக்கிறதா இந்த புறக்கோள்? கோவை விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு
மனிதன் வாழத் தக்கதாக, பூமி போலவே பரிணமிக்கிறதா இந்த புறக்கோள்? கோவை விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு பட மூலாதாரம்,University of Geneva/NCCR PlanetS/Thibaut Roger படக்குறிப்பு,WASP-107 நட்சத்திரம் மற்றும் WASP-107b புறக்கோளின் சித்தரிப்பு ஓவியம் கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் உள்ள பல கோடி நட்சத்திரங்களில் ஒன்று WASP-107. அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையில் கட்டுண்டு, அதைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் கோள்களில் ஒன்றுதான் WASP-107b. இந்தப் புறக்கோளில் தமிழக விஞ்ஞானி ஒருவர், பூமியின் இயற்கை வரலாற்றில் நிகழ்ந்ததை ஒத்த ஓர் அதிசய நிகழ்வு நடப்பதைச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்தவரும் கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக வானியற்பியல் விஞ்ஞானியுமான முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குழுவினர், பூமியில் இருந்து 210 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இந்த பிரமாண்டமான புறக்கோளை ஜேம்ஸ்வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து இதைக் கண்டறிந்துள்ளனர். அளவில் மிகப் பெரிதான இந்தப் புறக்கோள் தான் சுற்றி வரும் நட்சத்திரத்திற்கு வெகு அருகில் இருப்பதால் வெப்பம் மிகுந்ததாகவும் உள்ளது. இந்த அதீத வெப்பம் காரணமாக, அதன் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் ஆவியாகிக் கொண்டிருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய முனைவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார். அதுகுறித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக அவதானித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பிரமாண்டமான ஹீலியம் வாயு மேகம் அதிலிருந்து வெளியேறுவதைத் தாங்கள் கண்டதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை நேச்சர் அஸ்ட்ரானமி ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இந்த வாயு மேகம், கோளின் மொத்த அளவைவிட சுமார் 10 மடங்கு பெரிதாகப் பரவியிருந்ததாக இதுகுறித்து மெக்கில் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. "பிற கோள்களிலும் இதுபோன்ற வாயு மேகத்தை விஞ்ஞானிகள் கண்டிருந்தாலும், இவ்வளவு பிரமாண்டமான வாயு சூழ்ந்த வளிமண்டலத்தை அவதானிப்பது இதுவே முதல்முறை" என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது ஏன், இந்தப் புறக்கோளில் நடக்கும் மாற்றங்களுக்கும் பூமிக்கும் உள்ள தொடர்பு என்ன ஆகியவை குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் முனைவர் விக்னேஷ்வரனிடம் பேசியது. படக்குறிப்பு,முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் விஞ்ஞானியாக உள்ளார் புறக்கோள் என்றால் என்ன? பூமி சூரியனை சுற்றி வருவதை நாம் அனைவருமே அறிவோம். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசைத் தளையில் கட்டுண்டுதான், பூமி, புதன், செவ்வாய் என்று எட்டு கோள்களும் அதைச் சுற்றி வருகின்றன. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன? பாகிஸ்தான் - சௌதி பாதுகாப்பு கூட்டுக்கு பதிலடியாக இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒன்று சேர்கிறதா? எல்ஐசி அலுவலகத்தில் 'தீ வைத்து கொல்லப்பட்ட' மேலாளர் - கடைசி ஃபோன் கால் மூலம் சிக்கிய ஊழியர் அமெரிக்க டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கிக் குவிக்கும் சீனா, ரஷ்யா - இந்தியா என்ன செய்கிறது? End of அதிகம் படிக்கப்பட்டது நம்முடைய சூரியனை போலவே, விண்வெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களைச் சுற்றியும் சூரிய மண்டலத்தில் இருப்பதைப் போன்று பல கோடிக்கணக்கான கோள்கள் உள்ளன என்பதைக் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விண்வெளி ஆய்வுகளின் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அதோடு, சூரியன் தவிர வேறு நட்சத்திரங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் அத்தகைய 6,000க்கும் மேற்பட்ட கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்து அடையாளப்படுத்தியுள்ளனர். அவற்றில் ஒன்பது புறக்கோள்கள் தங்களது குழுவினர் கண்டுபிடித்தவை என்று கூறுகிறார் முனைவர் விக்னேஷ்வரன். இப்படியாக, சூரிய மண்டலத்திற்கு வெளியே பிற நட்சத்திரங்களைச் சுற்றி அமைந்திருக்கும் கோள்கள், புறக்கோள்கள் (Exoplanet) என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் புறக்கோள்களில் மனிதர்கள் உயிர் வாழ ஏதுவான கோள் ஏதேனும் உள்ளதா, நாம் உயிர் பிழைக்கத் தேவையான காற்று, தண்ணீர் போன்ற கூறுகள் உள்ளனவா என்பனவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். இந்தப் புறக்கோள் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்தவரான விக்னேஷ்வரன், WASP-107b என்ற புறக்கோளில் மேற்கொண்ட ஆய்வில் சில முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். பட மூலாதாரம்,Angel P. Geego படக்குறிப்பு,தன்னுள் இருந்து வெளியேறும் வாயு மேகத்தால் சூழப்பட்ட WASP-107b புறக்கோளை சித்தரிக்கும் ஓவியம். 'பூமியைவிட 11 மடங்கு பெரியது' "சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் வரிசையில் சூரியனுக்கு நெருக்கமாக சிறிய கோள்களும் அதைத் தொடர்ந்து அளவில் பெரிய கோள்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு காலமாக இதுதான் எதார்த்தம் என்று நாம் கருதிக் கொண்டிருந்தோம். ஆனால், வியாழன் அளவுக்கு, அதாவது பூமியைவிட பத்து, பதினைந்து மடங்கு பெரிதாக இருக்கும் நிறைய புறக்கோள்கள் அவை சுற்றும் நட்சத்திரத்திற்கு மிகவும் பக்கத்திலேயே இடம்பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது," என்கிறார் விக்னேஷ்வரன். இருப்பினும், இப்படிப்பட்ட பிரமாண்ட கோள்கள் ஒரு நட்சத்திரத்திற்கு அவ்வளவு நெருக்கமாகத் தோற்றம் பெற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு என்று கூறும் அவர், அவை எப்படி அந்த இடத்திற்கு வந்தன என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் பலவும் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அப்படிப்பட்ட ஒரு புறக்கோள்தான் WASP-107b. "WASP-107 என்ற நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் இது, பூமியைவிட அளவில் 11 மடங்கு பெரியது. எடையில் சுமார் 30 மடங்கே அதிகம். ஒப்பீட்டளவில் WASP-107b கோளின் அளவை கணக்கிடுகையில் அதன் எடை மிகவும் குறைவு. இதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள, அதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்தோம்" என்றார் விக்னேஷ்வரன். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,Wasp-107 நட்சத்திரம் பூமியில் இருந்து சுமார் 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது 'பூமியைவிட 15-20 மடங்கு அதிக தண்ணீர்' முனைவர் விக்னேஷ்வரன் மற்றும் அவரது குழுவினர் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக, WASP-107b புறக்கோள் அதன் நட்சத்திரத்திற்கு நேராக வரும்போது அதைக் கண்காணித்தனர். WASP-107 நட்சத்திரத்திற்கு நேராக இந்தப் புறக்கோள் வந்து, நட்சத்திரத்தின் ஒளியை இடைமறிக்கும்போது அதைத் தாங்கள் அவதானித்ததாக அவர் விளக்கினார். அதுகுறித்து விரிவாக விளக்கிய அவர், "புறக்கோள் நட்சத்திரத்தை இடைமறிக்கும்போது, இங்கு நாம் பார்க்கும் கிரகணத்தைப் போலவே அங்கும் நட்சத்திரத்தின் ஒளி மங்கலாகும். அந்த நேரத்தில், புறக்கோளின் வளிமண்டலத்தில் என்னென்ன மூலக்கூறுகள் உள்ளனவோ அவற்றைப் பொறுத்து, அதற்கேற்ற அலைநீளங்களைக் கொண்ட ஒளிகள் நமக்குத் தென்படும். உதாரணமாக, சிவப்பு நிற ஒளியை ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இடைமறிக்கும். இப்படியாக ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தைக் கொண்ட ஒளி இடைமறிக்கப்பட்டால், அதைத் தடுக்கும் திறன்கொண்ட மூலக்கூறு அந்தப் புறக்கோளில் உள்ளது என்பதை உறுதி செய்யலாம். இந்த ஆய்வு முறைக்கு டிரான்ஸ்மிஷன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி என்று பெயர்" என்றார். இதன் மூலம் ஒரு புறக்கோளின் வளிமண்டலத்தில் என்னென்ன வாயுக்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும் என்கிறார் விக்னேஷ்வரன். இதே முறையில் WASP-107bஐ ஆய்வு செய்தபோது அதில், பூமியைவிட 15-20 மடங்கு அதிக தண்ணீர் இருப்பதும், கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், சோடியம், பொட்டாசியம் போன்றவை அதிகளவில் இருப்பதும் அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,WASP-107b புறக்கோள் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதற்கு 5.7 நாட்களே எடுத்துக் கொள்கிறது 'ஓராண்டு என்பது 5.7 நாட்கள் மட்டுமே' பூமி சூரியனை சுற்றி வருவதற்குத் தோராயமாக 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால், WASP-107b புறக்கோள் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பூமியின் நேர கணக்கீடு அடிப்படையில் பார்த்தால் வெறும் ஐந்தரை நாட்கள்தான் என்கிறார் விக்னேஷ்வரன். அதாவது, அங்கு ஓர் ஆண்டு என்பது வெறும் 5.7 நாட்கள் மட்டுமே. அதேபோல, "பூமியில் சராசரியாக 15 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. ஆனால், அந்தப் புறக்கோளின் வெப்பநிலை 700 டிகிரி. அந்த வெப்பத்திலும்கூட காற்றில் தண்ணீர், கரிம வாயு, மீத்தேன் போன்றவை இருக்கின்றன" என்கிறார் விக்னேஷ்வரன். இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, அதில் ஹீலியம் வாயு அதிகளவில் இருப்பதையும் இந்த ஆய்வுக் குழு கண்டறிந்தது. ஆரம்பக் காலத்தில், பூமியிலும் இதேபோல அதிகளவில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் இருந்திருக்கலாம் என்றும் சூரியனின் வெப்பத்தால் அவை ஆவியாகி வெளியேறி இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். "இந்த ஆவியாதல் செயல்முறை ஒரு கோள் உருவாகி சில நூறு மில்லியன் ஆண்டுகளிலேயே நடக்க வேண்டியவை. WASP-107b புறக்கோளை பொறுத்தவரை, அது கிட்டத்தட்ட பூமியை போலவே, சுமார் 300 முதல் 400 கோடி ஆண்டுகள் பழமையானது. அப்படி இருந்தும்கூட அவற்றில், புறக்கோளின் அளவைவிட பத்து மடங்கு அதிகமான ஹீலியம் இன்னமும் இருக்கிறது." அது எப்படி வந்தது, தான் சுற்றி வரும் நட்சத்திரத்திற்கு இவ்வளவு நெருக்கமாக, அதீத வெப்பநிலையில் அது இருந்தும்கூட இன்னமும் இந்த வாயுக்கள் ஆவியாகி கோளைவிட்டு வெளியேறாமல் அப்படியே இருப்பது ஏன் என்பன போன்ற கேள்விகள் தங்களுக்கு எழுந்ததாகக் கூறுகிறார் விக்னேஷ்வரன். இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள முயலும்போது தங்களுக்கு மேலும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் தெரிய வந்ததாகத் தெரிவித்தார் அவர். பட மூலாதாரம்,NASA, ESA, CSA, Northrop Grumman படக்குறிப்பு,ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (சித்தரிப்புப் படம்) 'தொலைதூரத்தில் இருந்து நட்சத்திரம் அருகே நகர்ந்த WASP-107b' WASP-107b போலவே, அதற்கு அடுத்ததாக WASP-107c என்ற மற்றொரு கோளும் அந்த நட்சத்திரத்தைச் சுற்றிக்கொண்டு இருப்பதாகக் கூறிய அவர், "அது நட்சத்திரத்தை முழுதாகச் சுற்றி முடிக்க ஆயிரம் நாட்கள் எடுத்துக் கொள்வதாக" குறிப்பிட்டார். அப்போதுதான், "முன்பு எங்கோ தொலைதூரத்தில் WASP-107b உருவாகியிருக்கலாம் என்பதையும், WASP-107c கோளின் ஈர்ப்புவிசையால் இழுக்கப்பட்டு, தற்போது இருக்கும் இடத்தை அடைந்திருக்கலாம் என்பதையும்" தங்களது ஆய்வுக் குழுவினர் கண்டறிந்ததாக அவர் கூறினார். "நட்சத்திரத்தில் இருந்து தொலைதூரத்தில் இருந்த காரணத்தால் நிலவிய மிகவும் குளிரான வெப்பநிலை, பல கோடி ஆண்டுகளுக்கு WASP-107bஇல் தண்ணீர், கரிம வாயு, ஹீலியம் உள்பட அனைத்து வாயுக்களையும் உறைநிலையில் வைத்திருக்கலாம். அதன் பின்னர், WASP-107c கோளின் ஈர்ப்புவிசையால் நட்சத்திரத்திற்குப் பக்கத்தில் நகர்ந்து வந்த பிறகு அங்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால், உறைநிலையில் இருந்த வாயுக்கள் அனைத்தும் ஆவியாகத் தொடங்கியுள்ளன. அதைத்தான் நாங்கள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பார்த்தோம். இந்த வாயுக்கள் அனைத்தும் அடுத்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் முற்றிலுமாக ஆவியாகி கோளைவிட்டு வெளியேறியிருக்கும் என்று கணித்துள்ளோம்," என்று விக்னேஷ்வரன் விளக்கினார். அதைத் துல்லியமாகக் கணிப்பதற்காக, இந்தப் புறக்கோளை மீண்டும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்யத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறுகிறார் அவர். பூமி போலவே பரிணமிக்கிறதா இந்த புறக்கோள்? "பூமியிலும் ஆரம்பத்தில் அதிகளவிலான ஹீலியம், ஹைட்ரஜன் வாயுக்கள் வளிமண்டலத்தில் இருந்திருக்கலாம். அவை சூரியனில் இருந்து வெளிப்பட்ட அதீத வெப்பத்தின் காரணமாகச் சிறிது சிறிதாக ஆவியாகி, அதன் பின்னர் பூமியில் தண்ணீர் உள்பட உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடிய மூலக்கூறுகள் உருவாகி நிலைபெற்று இருக்கலாம்" என்ற கருதுகோளை மேற்கோள் காட்டுகிறார் முனைவர் விக்னேஷ்வரன். அவரது கூற்றுப்படி, "அதே போன்றதொரு செயல்முறையே இப்போது WASP-107b புறக்கோளில் நடந்து கொண்டிருக்கலாம். அதன்மூலம், வளிமண்டலத்தில், புறக்கோளின் மொத்த அளவில் பத்து மடங்கு பெரிதாக இருக்கக்கூடிய வாயு மேகங்கள் முற்றிலுமாக விலகினால், தண்ணீர் உள்பட உயிர் வாழ ஏதுவான சூழலை உண்டாக்கும் மூலக்கூறுகள் கோள் முழுக்கப் பரவ வாய்ப்புள்ளது." ஆனால், அது நிச்சயமாக நடக்குமா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது என்றும் கூறுகிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0jven4j0ngo
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
வகுப்பிற்குப் பதிவு செய்த மாணவர்களே வந்திருந்து குறட்டை விட்டுத் தூங்கும் விரிவுரைகளில் பதிவு செய்யாத வெளியார் ஏன் தான் வந்திருக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் தான் இந்த நெகிழ்வுப் போக்கிற்குக் காரணம்😂. இது திறந்த வகுப்பறை - Open classroom என்ற கொள்கையினால் வந்த நடைமுறையல்ல. இப்படி விரிவுரை மண்டபங்களைத் திறந்து வைத்திருந்த சில இடங்களில் பாதுகாப்பு பிரச்சினையும் ஏற்பட்டிருக்கிறது. அண்மையில், பிறவுண் பல்கலையினுள் சனிக்கிழமை நடந்து கொண்டிருந்த ஒரு வகுப்பிற்குள் நுழைந்த மாணவரல்லாத ஒரு லூசுப் பயல் சுட்டதில் இருவர் உயிரிழந்தார்கள். இப்படி பட்ட சவால்கள் இந்த திறந்த வகுப்பறைகளில் இருக்கின்றன.
-
நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது - செ. நிலாந்தன்
நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது - செ. நிலாந்தன் 21 Jan, 2026 | 03:54 PM வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார். ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான முதலாவது சபை அமர்வில் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் நடப்பட்ட தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளை அகற்றுவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது. 1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றியவர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர். முன்னர் இருந்த எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது. இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகிறது, அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டு பிரதேச சபையின் அனுமதி பெற்று, தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி மீளவும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/236617
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தின் முதல்வராக... (City Parliament President) ஈழத்தமிழரான துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். வாழ்த்துகள் ஜெயக்குமார். Inuvaijur Mayuran
-
பெண்கள் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வில் புதிய தகவல்
பெண்கள் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வில் புதிய தகவல் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஃபிலிப்பா ராக்ஸ்பி & ஜிம் ரீட் சுகாதார செய்தியாளர்கள் 21 ஜனவரி 2026, 01:49 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது பாதுகாப்பானது என்றும், அது குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஒரு புதிய பெரிய ஆய்வின் பின்னணியில் உள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாராசிட்டமால் மாத்திரை "நல்லதல்ல" என்றும், கர்ப்பிணிகள் அதைத் தவிர்க்க "கடுமையாகப் போராட வேண்டும்" என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். அதற்கு மாறாக அமைந்துள்ள இந்த ஆய்வின் முடிவுகள், கர்ப்பிணிகளுக்கு "நிம்மதி மற்றும் நம்பிக்கையை அளிக்கக்கூடும்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். டிரம்பின் கருத்துகள் அந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள மருத்துவ அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டன. 'தி லான்செட்' மருத்துவ ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த சமீபத்திய ஆய்வு மிகவும் துல்லியமானது என்றும், பாராசிட்டமாலின் பாதுகாப்பு குறித்த விவாதங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது குறித்து "பல நிபுணர்கள்" கவலை தெரிவித்துள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் இன்னும் கூறி வருகின்றனர். கர்ப்பிணிகள் அதிகமாக எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணி மருந்தான பாராசிட்டமாலை (அமெரிக்காவில் 'அசிட்டமினோஃபென்' என்று அழைக்கப்படுகிறது), கர்ப்ப காலத்தில் உட்கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படக்கூடும் என்று டிரம்பும் அவரது நிர்வாகமும் கூறியபோது உலகெங்கிலும் உள்ள பல மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வாதங்கள் பெண்களிடையே குழப்பத்தையும், சுகாதார நிபுணர்களிடையே கவலையையும் ஏற்படுத்தின. இதுவே இந்தப் புதிய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தது. 'லான்செட் மகப்பேறியல், பெண் நோயியல் மற்றும் பெண்கள் ஆரோக்கியம்' (The Lancet Obstetrics, Gynaecology & Women's Health) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, லட்சக்கணக்கான பெண்கள் சம்பந்தப்பட்ட 43 வலுவான ஆய்வுகளை ஆராய்ந்தது. குறிப்பாக, பாராசிட்டமால் உட்கொண்ட தாய்மார்களின் கர்ப்ப காலத்தையும், உட்கொள்ளாதவர்களின் கர்ப்ப காலத்தையும் ஒப்பிட்ட ஆய்வுகளை அது ஆராய்ந்தது. பட மூலாதாரம்,Getty Images உடன் பிறந்தவர்களைக் கொண்டு செய்யப்பட்ட உயர்தர ஆய்வுகளைப் பயன்படுத்தியதன் மூலம், மரபணுக்கள் மற்றும் குடும்ப சூழல் போன்ற பிற காரணிகளைத் தங்களால் நிராகரிக்க முடிந்ததாகவும், இதனால் இந்த ஆய்வு 'மிகவும் உயர்தரமானது' என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி பாரபட்சமற்ற ஆய்வுகளையும், ஏதேனும் பாதிப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைகளைக் கண்காணித்த ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டது. "நாங்கள் இந்த ஆய்வைச் செய்தபோது, பாராசிட்டமால் ஆட்டிசம் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறப்படும் கூற்றுடன் எந்தத் தொடர்போ அல்லது ஆதாரமோ கிடைக்கவில்லை," என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், மகப்பேறு மருத்துவருமான பேராசிரியர் அஸ்மா கலீல் பிபிசியிடம் தெரிவித்தார். மேலும் அவர், "வழிகாட்டுதல்படி உட்கொள்ளும்போது, கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் ஒரு பாதுகாப்பான தேர்வாகவே நீடிக்கிறது என்ற செய்தி தெளிவாக உள்ளது," என்று கூறினார். இது பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முக்கிய மருத்துவ அமைப்புகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உறுதிப்படுத்துகிறது. பாராசிட்டமால் மருந்துக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்ட தொடர்புகள், மருந்தின் நேரடி விளைவைவிட பிற காரணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது. "கர்ப்பிணிகளுக்கு வலி அல்லது காய்ச்சல் ஏற்படும்போது முதலில் பரிந்துரைக்கப்படும் மருந்து பாராசிட்டமால் என்பதால் இது மிகவும் முக்கியமானது," என்று லண்டன் சிட்டி செயின்ட் ஜார்ஜ் பல்கலைக் கழகத்தின் தாய்-சேய் மருத்துவப் பேராசிரியர் அஸ்மா கலீல் கூறினார். பட மூலாதாரம்,Getty Images கர்ப்ப காலத்தில் அதிக வெப்பநிலையைக் குறைக்கவோ அல்லது வலியைப் போக்கவோ பாராசிட்டமால் எடுக்காவிட்டால், அது குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார ஆலோசனைகள் எச்சரிக்கின்றன. இது கருச்சிதைவு, முன்கூட்டிய பிரசவம் அல்லது குழந்தைகளின் வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளை அதிகரிக்கக்கூடும். இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத மருத்துவ நிபுணர்களும் இதன் முடிவுகளை வரவேற்றுள்ளனர். இது பெண்களிடையே உள்ள கவலையைக் குறைக்க உதவும் என்று அவர்கள் கூறுகின்றனர். லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் கிரெய்ன் மெக்கலோனன் இதுகுறித்துப் பேசியபோது, "தலை வலிக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து குழந்தையின் ஆரோக்கியத்தில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியால் எழும் மன அழுத்தத்திற்கு கர்ப்பிணிகள் ஆளாக வேண்டிய அவசியமில்லை. இந்த ஆய்வின் முடிவுகள் இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்," என்றார். லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் பேராசிரியர் இயன் டக்ளஸ், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தாத தாய்மார்களுக்கு இடையே இருக்கும் அடிப்படை நோய்கள் போன்ற முக்கிய வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாத தரம் குறைந்த ஆய்வுகளைத் தவிர்த்துள்ள காரணத்தால் இந்த ஆய்வு "சிறப்பாக நடத்தப்பட்டது எனக் கூறலாம்" என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,செப்டம்பர் 2025இல் ஓர் உரையில், கர்ப்பிணி பெண்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை தவிர்க்க வேண்டுமென்று அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியது சர்ச்சையானது பெர்கன் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு நரம்பியல் விஞ்ஞானியும் மனநல மருத்துவருமான பேராசிரியர் ஜான் ஹாவிக், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது ஆட்டிசம், ஏடிஹெச்டி அல்லது அறிவுசார் குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்காது என்பதற்கு இந்த ஆய்வு "வலுவான ஆதாரங்களை" வழங்குவதாகவும், "இந்தக் கேள்விக்கு இது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" எனவும் கூறினார். ஆட்டிசம் என்பது மரபணு, சுற்றுச்சூழல் காரணிகள் உள்படப் பல சிக்கலான காரணிகளின் கலவையால் ஏற்படுகிறது என்பது இந்தத் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் பொதுவான கருத்தாகும். அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் (பாராசிட்டமாலுக்கான அமெரிக்க பெயர்) பயன்படுத்துவது குறித்து "பல நிபுணர்கள்" கவலை தெரிவித்துள்ளனர்" என்றார். உதாரணமாக, ஆகஸ்ட் 2025இல் ஹார்வர்ட் டி.ஹெச். சான் பொது சுகாதாரப் பள்ளியின் தலைவர் மருத்துவர் ஆண்ட்ரூ பாக்கரெல்லி தலைமையிலான ஆய்வு ஒன்றில், கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் பயன்படுத்துவது குழந்தைகளின் ஆட்டிசம் மற்றும் ஏடிஹெச்டி அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டது. குறிப்பாக "அதிகமான அல்லது நீண்ட காலப் பயன்பாடு" குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பு, சுகாதார செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், ஆட்டிசம் பாதிப்புகள் திடீரென அதிகரிப்பதற்கான காரணத்தைக் கண்டறியப் போவதாக உறுதியளித்திருந்தார். செப்டம்பர் மாதம் ஓவல் அலுவலகத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையில், கர்ப்பிணிகளுக்கு இந்த வலி நிவாரணியைப் பரிந்துரைக்க வேண்டாம் என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் கூறினார். அதைத் தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எஃப்டிஏ) கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்களுக்குக் கடிதம் எழுதியது. அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே மருந்து இதுதான் என்றும் குறிப்பிட்டது. தனது இணையதளத்தில், இந்த மருந்துக்கும் நரம்பியல் குறைபாடுகளுக்கும் இடையே "நேரடித் தொடர்பு" இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் எஃப்டிஏ கூறுகிறது. பாராசிட்டமால் இன்னும் கர்ப்பிணிகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பான வலி நிவாரணியாகவே உள்ளது என்பதை பிரிட்டனின் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp82zq0v1y4o
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சிவஞானமும், டக்ளஸ் தேவானந்தாவும். "ஹனிமூன்". ❤️ ❤️ ❤️
-
‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது!
‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது! 21 Jan, 2026 | 11:34 AM இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பங்கேற்புடன், ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவில் நடைபெற்ற ‘EX – DOSTI - XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படை உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை வளர்த்து நட்பை மேலும் வலுப்படுத்துதல், பரஸ்பர செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இயங்குநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ‘EX – DOSTI – XVII ’ இந்த முத்தரப்பு கடற்படைப் பயிற்சி ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவின் மாலேவில் மற்றும் மாலைத்தீவின் கடற்கரையை மையமாகக் கொணடு நடைபெற்றதுடன், இலங்கை கடற்படை கப்பல் சுரனிமல, இலங்கை கடலோர காவல்படைத் துறையின் குழுவுடன் இணைந்து இந்தப் பயிற்சியில் பங்கேற்றது. மேலும், இந்திய கடலோர காவல்படைத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய கடலோர காவல்படை கப்பல்களான ‘Varaha’, ‘Atulya’ மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் மாலைத்தீவு கடலோர காவல்படை கப்பல்களான ‘Huravee’ மற்றும் ‘Ghazee’ ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்றதுடன், இந்தப் பயிற்சியின் துறைமுக கட்டம் மாலேயில் உள்ள வணிகத் துறைமுக வளாகத்திலும், ஃபனாதூ (Funadhoo) தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் நிலப் பகுதிகளிலும் நடைபெற்று. இந்தப் பயிற்சியின் போது, பங்கேற்பாளர்கள் எண்ணெய் கசிவு மேலாண்மையில் ஈடுபட்டு, கப்பல் ரோந்துப் பணிகளில் பங்கேற்று, ஏறுதல், ஆய்வு மற்றும் பறிமுதல் நடைமுறைகளின் தத்துவார்த்த அம்சங்களைப் பற்றி விவாதித்தனர், மேலும் கடல்சார் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களை சோதித்தனர். அதன்படி, இந்த முத்தரப்பு கடற்படைப் பயிற்சியின் போது, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வெளியேற்றுதல் (Medical Evacuation), படகுகளுக்கான அணுகல், தேடுதல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு பயிற்சிகள் (Visit Board Search & Seizure & Piracy), தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகள் (Search and Rescue Drill) மற்றும் போர்க்கப்பல்களுக்கு இடையே வணக்கம் செலுத்துதல் உட்பட (Steam Past) பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பயிற்சியில் இலங்கை கடலோரக் காவல்படையின் இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப், இலங்கை கடலோரக் காவல்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் மற்றும் சுரனிமில கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் சேனக வாஹல ஆகியோரும் பயிற்சியுடன் இணைந்து நடைபெற்ற இருதரப்பு சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர். மேலும், பிராந்திய கடல்சார் தரப்பினரின் பங்கேற்புடன் இதுபோன்ற பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம் மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் புதிய அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை ஆகியவை எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு கூட்டாக பதிலளிக்கவும் தீர்வுகளைக் கண்டறியவும் முடியும். https://www.virakesari.lk/article/236581
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
ஓம். இங்கே இணைப்புத் தர முடியாத செய்தியென்பதால் வட்சப் செய்தியாக இருக்கலாம்!
-
📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
தேர்தலுக்கு முன் 10 கட்சிகள்! தேர்தல் நடக்கும் காலத்தில்... மக்களை ஏமாற்ற, ஒன்று சேரும் கட்சிகள்! தேர்தலின் பின், பதவி போட்டியில்.. மீண்டும் 10 தனிக் கட்சிகள்! மக்களை... முட்டாள் என நினைத்துக் கொண்டு இருக்கின்றது சுத்துமாத்து கூட்டம். Magen Anu ################ ############## ################# இந்த நிலையை உருவாக்கியவர்கள் நீங்கள் அனைவரும்... சாதாரண மனிதர்கள் எங்களுக்கு தெரிந்த விடயங்கள் கூட உங்களுக்கு தெரியவில்லை என்றால்.. தமிழர்கள் பாவம். Niroshan Srt
-
நுவரெலியாவில் கடும் குளிர் : 7.4°C ஆகப் பதிவு
நுவரெலியாவில் கடும் குளிர் : 7.4°C ஆகப் பதிவு Published By: Digital Desk 3 21 Jan, 2026 | 11:15 AM நாட்டில் நிலவி வரும் வரட்சியுடனான காலநிலையால் பல பகுதிகளில் வெப்பநிலைக் கணிசமாகக் குறைந்துள்ளது. நாட்டில் இன்று புதன்கிழமை (21) பதிவான மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.4°C நுவரெலியா வளிமண்டலவியல் திணைக்களத்தில் அதிகாலை வேளையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. பிராந்திய ரீதியான வெப்பநிலை விபரங்கள் இன்றைய தினம் அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை விபரங்கள் பின்வருமாறு: நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனி (Ground Frost) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மூடுபனி: மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் மூடுபனி நிலவக்கூடும். தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) முதல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களால் சேகரிக்கப்பட்ட இந்தத் தரவுகள், நாட்டின் தற்போதைய வெப்பநிலை விநியோக வரைபடத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/236580
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
வடக்கு கடலில் 7 இந்திய மீனவர்கள் கைது; 2 படகுகள் பறிமுதல் Jan 21, 2026 - 01:36 PM சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று (20) இரவு வேளையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmknqo916047xo29ny98j2hez
-
டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம்
டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம் Jan 21, 2026 - 07:03 PM தமது மூத்த சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கக் காரணமான அதே டிப்பர் வாகனத்தில், இளைய சகோதரரும் விபத்துக்குள்ளான சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கிய நபர் என சந்தேகிக்கப்படும் நபர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிப்பர் வாகனத்தால் மோதி கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பொலிஸ் பொறுப்பிலிருந்த அந்த டிப்பர் வாகனம் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு வாகனத்தின் உதவியுடன் அந்த டிப்பர் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, உயிரிழந்த நபரின் இளைய சகோதரர் அதே வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். எவ்வாறாயினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. எனினும், இந்த விபத்தானது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட வேண்டும் என்றும், விபத்துக்கு நீதிக் கோரியும் பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. https://adaderanatamil.lk/news/cmko2cenw048ao29ndnhqypk9