Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தை வருண், நரேனுக்கு சாதகமாக மாற்றவேண்டும்: டு பிளெஸ்ஸிஸ் மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா வரும் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 29-ம் தேதி 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஜியோஸ்டார் சார்பில் நடைபெற்ற ‘கேம் பிளான்’ நிகழ்ச்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்பாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான பாஃப் டு பிளெஸ்ஸிஸ் கூறியதாவது: கேமரூன் கிரீன் மிகவும் திற மையானவர், அவரிடம் வெற்றி பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பல திறமைகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய வீரராகவும், ஆந்த்ரே ரஸ்ஸலுக்கு இணையான மாற்று வீரராகவும் அவர் இருப்பார். கேமரூன் கிரீன் ஆறு அடி உயரம் கொண்ட வலுவான வீரர். அவர், பவுன்ஸர் மற்றும் யார்க்கர் பந்துகளை வீசக்கூடியவர். பேட்டிங்கில் பந்தை மைதானத்துக்கு வெளியே அவரால் மிக எளிதாக அடிக்க முடியும், அதே சமயம் அவர், ஒரு முறையான பேட்டரும் கூட. ஒட்டுமொத்தத்தில் கேமரூன் கிரீன் கொல்கத்தா அணியை சமநிலையை அடையச் செய்கிறார். ஆனால், சமீபகாலமாக அவர் சிறந்த ஃபார்மில் இல்லை. இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் தொடரில் அவர், ரூ.25.2 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதால், அந்த ‘ப்ரைஸ் டேக்’ அழுத்தமும் இருக்கும். அவரது, தோள்களில் பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. அணி அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கும். அவர் இதனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். கொல்கத்தா அணி நிர்வாகம் ஃபின் ஆலன், டிம்ஷெய்ஃபெர்ட் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக விளையாடும் லெவனில் சேர்க்கும் வழியைக் கண்டறிந்தால், அது அந்த அணிக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இது அவர்களின் பேட்டிங்கை மிகவும் வலிமையாக்கும். தற்போதைய டி20 கிரிக்கெட் விளையாடப்படும் முறைக்கு, இவர்கள் இருவரும் இன்னிங்ஸைத் தொடங்குவது கச்சிதமாக இருக்கும். இவர்கள் இருவரும் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடக்கூடியவர்கள். பேட்டிங் வலுவாக உள்ள நிலையில் வேகப்பந்து வீச்சுத்துறை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சில முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் ஏலப்பட்டியலில் விற்கப்படாத வீரர்களில் இருந்து அனுபவம் வாய்ந்தவரை தேர்வு செய்து, பந்துவீச்சு துறையை பலப்படுத்துவது அவசியம். நான் கொல்கத்தா அணி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தால், ஈடன் கார்டன் மைதான பராமரிப்பாளரிடம் ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக தயாரிக்குமாறு கேட்டுக்கொள்வேன். ஏனெனில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் போன்ற வீரர்கள் கிடைத்தது கொல்கத்தா அணி செய்த பாக்கியம். தற்போதைய டி20 கிரிக்கெட்டில் இருக்கும் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இவர்களும் அடங்குவர். வருண் மற்றும் நரைன் ஆகிய இருவருமே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் சூழல் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சாதகம் இல்லாத ஆடுகளங்களில் விளையாடினால், உங்கள் அணியின் அந்த இரண்டு பீரங்கிகளையும், உங்களின் ‘சூப்பர் பவர்’ திறனையும் நீங்கள் இழக்க நேரிடும். அவர்கள் எந்த வகையான ஆடுகளத்திலும் சிறப்பாகப் பந்துவீசி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடியவர்கள் தான். ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா வெற்றி பெற வேண்டுமானால், வருண் மற்றும் நரைன் இருவரும் அதிரடியாக செயல்பட வேண்டும். இந்த இரு வீரர்களையும் மனதில் வைத்தே ஆடுகளம் தயார் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தை வருண், நரேனுக்கு சாதகமாக மாற்றவேண்டும்: டு பிளெஸ்ஸிஸ்
  3. ஈரான்–இஸ்ரேல் போரால் அமெரிக்காவிற்கு பெரும் பொருளாதாரச் சுமை – ஈரான் வெளிவிவகார அமைச்சர் Published By: Digital Desk 3 19 Mar, 2026 | 03:52 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஈரான் மீதான போரின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள கடும் பொருளாதாரச் சுமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க பாராளுமன்றத்தில் உள்ள அவரது ஆதரவாளர்களே காரணம் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பதிவில், வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி இந்த கருத்துகளை முன்வைத்துள்ளார். அரக்ச்சி குறிப்பிட்டதாவது, ஈரானுக்கு எதிரான போருக்காக அமெரிக்க பாதுகாப்புத் துறை சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போரின் ஆரம்பக் கட்ட செலவாக மட்டுமே இருக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். “இந்த விருப்பத் தேர்வு போர் தொடங்கி மூன்று வாரங்களே ஆகின்றன. இந்த 200 பில்லியன் டொலர் என்பது பனிப்பாறையின் நுனி மட்டுமே” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க பொதுமக்கள் இந்த பெரும் செலவுக்காக “பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காங்கிரஸில் உள்ள அவரது விசுவாசிகளுக்கு நன்றி சொல்லலாம்” எனவும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்க தரப்பில் போர்ச் செலவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான முழுமையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால், போரின் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 11.3 பில்லியன் டொலர் செலவானதாக இராணுவ அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், போர் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தற்போதைய நிலையில் மொத்த செலவைக் கணக்கிட முடியாது என தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவுகள் மற்றும் உள்நாட்டு பொருளாதார தாக்கங்கள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. நிலைமை மேலும் விரிவடையும் பட்சத்தில், சர்வதேச பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/241378
  4. '98 சிசிடிவி, 2574 செல்போன் எண்கள்' - தூத்துக்குடி மாணவி கொலையில் கைது நடந்தது எப்படி? படக்குறிப்பு,கைது செய்யப்பட்ட நபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்) தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகள் உள்பட அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவி கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெற்றோர், கடந்த 10-ஆம் தேதியன்று, 'பிளஸ் 2 படிக்கும் தங்கள் மகளைக் காணவில்லை' எனக் கூறி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகச் சென்ற அவர் திரும்பி வரவில்லை என காவலர்களிடம் தெரிவித்தனர். பட மூலாதாரம்,Facebook/Madhan படக்குறிப்பு,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆனால், புகாரைப் பதிவு செய்யாமல் காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஊரில் உள்ள மக்களையெல்லாம் திரட்டிக் கொண்டு தனது மகளைத் தேடியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்பிறகும் மாணவியை அவர்களால் கண்டறிய முடியவில்லை. மறுநாள் (மார்ச் 11) அதே காட்டுப் பகுதியில் மாணவியை அவரது குடும்ப உறவினர் ஒருவர் சடலமாக கண்டுள்ளார். இதன்பிறகே சம்பவ இடத்துக்கு காவல்துறை வந்ததாக கிராம மக்கள் குற்றம் சுமத்தினர். வழக்கில் தொடர்புடைய நபரைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டதால் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பத்து தனிப்படை இந்த நிலையில், மாணவி கொலை வழக்கில் தர்மமுனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரைக் கண்டறிந்தது குறித்து, தூத்துக்குடி எஸ்.பி மதன் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார். "வழக்கில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில், நான்கு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆறு காவல் ஆய்வாளர்கள் உள்பட 150 பேர் இடம்பெற்றிருந்தனர்," எனக் கூறினார். படக்குறிப்பு,மாணவியின் மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் "அறிவியல்பூர்வமாக புலன் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்களும் தடயவியல் நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்து தனித்தனியாக அறிக்கை கொடுத்தனர்." எனக் கூறினார் மதன். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறிய மதன், "சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி இல்லையென்றாலும் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்." என்கிறார். "அந்தவகையில், 98 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். சம்பவம் நடந்த நாளில் பதிவான 2574 செல்போன் எண்களை ஆராய்ந்தோம். சிறையில் இருந்து வெளியே வந்த நபர்கள் உள்பட குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் பட்டியலைச் சேகரித்து விசாரிப்பதற்கு குழுக்களை அமைத்தோம்." எனவும் மாவட்ட எஸ்.பி தெரிவித்தார். 'உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும்' தொடர்ந்து பேசும்போது, "வழக்கின் விசாரணையில் குற்றப் பின்னணி கொண்ட 461 பேரை நேரடியாக விசாரித்தோம். அவர்கள் கூறும் தகவல்களை டிஜிட்டல் ஆதாரம் மூலமாக ஆய்வு செய்தோம். இவ்வளவு நாட்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் ஒருவரைக் கைது செய்தோம்." எனக் கூறினார் மதன். "சூழ்நிலை சாட்சிகள், செல்போன் அழைப்புகள், சிசிடிவி கேமரா காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நபரை நெருங்கினோம். எந்தவித அழுத்தத்துக்கும் ஆளாகாமல் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து கைது செய்துள்ளோம்," என்கிறார் அவர். கைதான நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறிய எஸ்.பி, "விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவருக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும். குற்றத்தில் கூடுதல் நபர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," எனத் தெரிவித்தார். "மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டரா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "பாலியல் துன்புறுத்தலைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஆதாரங்களைச் சேகரித்து அனுப்பியுள்ளோம். வழக்கு விசாரணையில் உள்ளதால் இதற்கு மேல் கூறுவது சரியாக இருக்காது." எனக் குறிப்பிட்டார். "ஒருவரைக் கைது செய்வதற்கு ஒன்பது நாட்கள் தேவைப்பட்டது ஏன்?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "கிராமத்தில் உள்ளவர்கள் கூறுவது உண்மையா.. கிராமத்துக்கு அருகில் வசிப்பவர்கள் கூறுவது உண்மையா என தனித்தனியாக ஆய்வு செய்தோம்." என்றார். வரும் நாட்களில் கிராமங்களில் அதிகளவில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உள்ளதாகவும் காவல்துறை ரோந்து பாதுகாப்பை தீவிரப்படுத்த உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தெரிவித்தார். மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடலைப் பெற்றுக் கொள்வதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77ml416pg3o
  5. வளைகுடா நாடுகள் அஞ்சிய 'விஷயம்' நடந்துவிட்டது - அடுத்து என்ன? பட மூலாதாரம்,Reuters கட்டுரை தகவல் ஃப்ரான்க் கார்ட்னர், பாதுகாப்பு செய்தியாளர், நிக் மார்ஷ், ஆசிய வணிக செய்தியாளர் அஸாதே மோஷிரி, தெற்கு ஆசிய செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் புதன்கிழமை அன்று இரானின் முக்கியமான தெற்கு பார்ஸ் எரிவாயு உற்பத்தி நிலை மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதைப்பற்றி அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து கத்தாரின் முக்கிய எரிவாயு தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இரான் "கடுமையான சேதங்களை" ஏற்படுத்தியுள்ளது. கத்தாருக்கு எதிராக இரான் மேலும் பதில் நடவடிக்கைகளை எடுக்க கூடாது என டிரம்ப் எச்சரித்துள்ளார் இரானின் எரிவாயு உற்பத்தி நிலை மீதான தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்யாத நிலையில், தனது கூட்டாளி "மத்திய கிழக்கில் நிகழ்ந்த விஷயங்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக" இரான் மீது "கடுமையாக தாக்குதல் நடத்தியதாக" டிரம்ப் கூறியுள்ளார். கத்தாரின் வடக்கு எரிவாயு நிலையின் நீட்சியாக உள்ள இரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு நிலையுடன் தொடர்புடைய தளங்களை ''இஸ்ரேல் இலக்கு வைப்பது மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நகர்வு" என கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் கண்டித்துள்ளது. தனது ராஸ் லஃபான் ஆற்றல் உற்பத்தி தொழிற்பேட்டை மீதான இரானின் தாக்குதல் "வெட்கக்கேடானது" என்றும் "தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மை மீதான நேரடி அச்சுறுத்தல்" என கத்தார் அரசு குறிப்பிட்டிருந்தது. பட மூலாதாரம்,Getty Images வளைகுடா நாடுகள் 'அச்சப்பட்ட' விஷயம் இந்த அதிகரித்த பதற்றத்தை வளைகுடா அரபு நாடுகள் அச்சத்துடன் எதிர்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிலைகளை குறிவைத்து நிகழ்ந்த இரானிய ஏவுகணை தாக்குதல்கள் தற்போது எரிசக்தி துறை மீதான தாக்குதலாக உருவெடுத்துள்ளன. இதுதான் வளைகுடா பொருளாதாரங்களின் இதய துடிப்பாக உள்ளது. எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோரசாயனங்கள்தான் வளைகுடா அரபு நாடுகளை சில பத்தாண்டுகளில் பணக்கார நாடுகளாக மாற்றின. பிப்ரவரி மாதம் இரானை தாக்க வேண்டாம் என வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் தெரிவித்த பிறகும் அமெரிக்கா இரானைத் தாக்கியது கத்தாரை சீற்றமடையச் செய்தது. இப்போது கத்தார் எரிவாயு துறையின் மணிமகுடமான ராஸ் லஃபான் ஒரே இரவில் இரு முறை தாக்குதலுக்கு உள்ளானது. வளைகுடா அரபு நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் திறம்பட உள்ளன. 12 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைச்சர்களின் கூட்டம் நடைபெறும் நிலையில் ரியாத்தில் இரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன. ஆனால் இரானின் ஆயுதம் தற்போது வரை தீர்ந்துவிடவில்லை. அதன் ஆயுதங்களில் சில பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து செல்ல முடிந்தது. பட மூலாதாரம்,Getty Images டிரம்பின் உத்தரவாதம் இரான் மற்றும் கத்தார் மீதான இந்த தாக்குதல்கள் இந்த மோதலின் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. கத்தார் மீதான இரானின் தாக்குதல்கள் தொடர்ந்தால் தெற்கு பார்ஸ் எரிவாயு உற்பத்தி நிலை மொத்தமாக அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். அதே வேளையில் கத்தாரை இரான் தாக்கவில்லை என்றால் தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்கிற டிரம்பின் உத்தரவாதம் உலகளாவிய எரிபொருள் சந்தைக்கு இந்த நிலைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உணர்த்துகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைகளில் ஒன்று இரான் எதிர்வினைக்கு விலை கொடுக்கும் வளைகுடா நாடுகள் கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் ஆற்றல் உற்பத்தி தொழிற்பேட்டை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளானலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஹப்ஷான் எரிவாயு உற்பத்தி நிலை மற்றும் பாப் நிலைகள் மூடப்பட்டுள்ளன. இடைமறிக்கப்பட்ட தாக்குதல்களில் இருந்து வந்த சிதறல்களால் அவை சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சௌதி அரேபியாவும் இலக்கு வைக்கப்பட்டது, மேற்குப் பகுதியிலும் தலைநகர் ரியாத்திலும் தாக்குதல்களை தடுத்ததாக அந்நாடு தெரிவிக்கிறது. ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் தனது உரிமையை நிறுத்தி வைத்திருப்பதாக சௌதி அரேபியா எச்சரித்துள்ளது. இரான் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அதன் சார்பாக மத்தியஸ்தம் செய்ய தயாராக இருந்த அதன் அண்டை நாடுகளுடான உறவுகளையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images இரான், இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்த அரபு நாடுகள் இந்த நிலையில் ரியாத்தில் நடைபெற்ற அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு அரபு நாடுகள் கூட்டு அறிக்கை மூலம் இரானின் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இவர்களில் பஹ்ரைன், குவைத், லெபனான், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இதர நாடுகள் அடங்கும். குடியிருப்பு பகுதிகள், பொது உள்கட்டமைப்புகள் மற்றும் தூதரக கட்டடங்களை இலக்கு வைத்ததாக அவர்கள் கூறும் இரானின் "திட்டமிட்ட தாக்குதல்களை" அறிக்கையின் மூலம் கண்டித்திருந்தனர். எந்தச் சூழலிலும் இவற்றை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஐ.நா பிரிவு 51-இன்படி தங்களின் தற்காப்புக்கான உரிமையையும் அவர்கள் வலியுறுத்தினர். இரான் தனது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச சட்டம் மற்றும் சிறந்த அண்டைநாடுகள் கொள்கையை மதிக்க வேண்டும் எனக் கோரிய அந்த அறிக்கை, ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதை நோக்கமாகக் கொண்ட "நடவடிக்கைகள் அல்லது அச்சுறுத்தல்களை" தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது. லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்த அரபு நாடுகள் அதனை "பிராந்தியத்தில் நிகழும் விரிவாக்க கொள்கை" என்றும் குறிப்பிட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyvjjxjxw3o ஈரானை கண்டிப்பவர்கள் இந்த யுத்தத்தை ஆரம்பித்தவர்களை கண்டிப்பதில்லையே?!
  6. ஈரான் ஆட்சி “இன்னும் நிலைத்துள்ளது” ஆனால் இராணுவ திறன்கள் பெரிதும் சிதைந்துள்ளன – அமெரிக்க தேசிய உளவுத்துறை 19 Mar, 2026 | 04:10 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஈரானின் ஆட்சி தற்போது “உறுதியாக” தொடர்ந்தாலும், அதன் தலைமை மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களால் அது பெருமளவில் சிதைந்துள்ளதாக அமெரிக்க தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் குழுவில் நடைபெற்ற விசாரணையில் சாட்சியமளித்த அவர், ஈரான் தொடர்பான உளவுத்துறை மதிப்பீடுகள், தற்போதைய மத்திய கிழக்கு நிலைமை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் ஈரானின் இராணுவ கட்டமைப்பு மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகள் “பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன” என உளவுத்துறை மதிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஈரான் தற்போது அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் மீட்டெடுக்க முயற்சிப்பதாகவும், முன்னைய சேதத்திலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலா (Imminent Threat) என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க துளசி கப்பார்ட் மறுத்தார். “எது அச்சுறுத்தல் என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியின் அதிகாரம்” என அவர் தெரிவித்துள்ளார். முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து உளவுத்துறை முன்னதாகவே கணித்திருந்ததாகவும், அதற்காக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், ஈரான் அந்த நீரிணையை தன் கட்டுப்பாட்டில் எடுக்கக்கூடும் என்ற அபாயமும் முன்கூட்டியே மதிப்பிடப்பட்டதாக கூறப்பட்டது. காங்கிரஸ் விசாரணையின் போது, சிஐஏ பணிப்பாளர் ஜோன்ன் ரொட்க்ளிஃப் (John Ratcliffe) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னாள் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி ஒருவர் ஈரான் “உடனடி அச்சுறுத்தல் இல்லை” எனக் கூறி பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில், ரொட்க்ளிஃப் அதற்கு மாறாக, ஈரான் நீண்டகாலமாக அமெரிக்காவிற்கு நேரடி அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாக வாதிட்டுள்ளார். விசாரணையின் போது, ஈரானின் அணுசக்தி திட்டம் “முற்றிலும் அழிக்கப்பட்டது” என்ற எழுத்துபூர்வ அறிக்கையின் சில பகுதிகளை துளசி கப்பார்ட் வாசிக்கவில்லை எனக் கூறப்பட்டதால் அரசியல் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய செனட்டர் ஒருவர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிலைப்பாட்டுக்கு முரணான பகுதிகள் தவிர்க்கப்பட்டதா என சந்தேகம் வெளியிட்டார். இதற்கு பதிலளித்த கப்பார்ட், அறிக்கை நீளமாக இருந்ததால் சில பகுதிகள் சுருக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 2025 ஜூனில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுசக்தி திறனை குறிவைத்து நடத்திய 12 நாள் இராணுவ நடவடிக்கைகளின் பின்னணியில் இந்த தற்போதைய அரசியல் மற்றும் உளவுத்துறை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/241381
  7. சிலாபத்தில் 240 அடி நீள பெய்லி பாலம் திறப்பு: டித்வா புயலுக்குப் பிறகு இந்தியாவின் மீள்நிர்மாண உதவி 19 Mar, 2026 | 05:35 PM (இணையத்தள செய்திப் பிரிவு) டித்வா புயலுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து தொடர்புகளை மீளமைக்கும் நோக்கில், சிலாபம் – தொடுவாவை வீதியில் அமைக்கப்பட்ட 240 அடி நீளமான பெய்லி பாலம் புதன்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது. கரையோரக் கிராமங்களான இரணைவில மற்றும் தொடுவாவை ஆகியவற்றை இணைக்கும் இந்த முக்கிய பாலம், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ஜிஹான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த புதிய பாலம் சிலாபம் வழியாக புத்தளம் மற்றும் கொழும்புக்கு இடையிலான கரையோரப் போக்குவரத்து இணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற துறைகளின் வாழ்வாதாரத்திற்கும் இது முக்கிய ஆதரவாக அமைகிறது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் மற்றும் பிராந்திய பொருளாதாரச் செயல்பாடுகள் மீளச் செயல்படத் தொடங்கியுள்ளன. இது டித்வா புயலுக்குப் பிந்தைய இந்தியாவின் மீள்நிர்மாண உதவியின் கீழ் இலங்கையில் அமைக்கப்பட்ட பெய்லி பாலங்களில் அதிக நீளமும் அகலமும் கொண்டதாகும். 240 அடி நீளமும் 13 அடி அகலமும் கொண்ட இந்த பாலம், இடைத்தூண் ஆதரவுடன் இரட்டை வலுவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர் அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு உதவி பொதியின் ஒரு பகுதியாகும். குறிப்பாக, 30 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவியின் கீழ் பெய்லி மற்றும் நிரந்தர பாலங்களை அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை மீள உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பாலம், இந்திய இராணுவ பொறியியல் அணியின் தொழில்நுட்ப உதவியுடன், இலங்கை இராணுவம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது. டித்வா புயலால் புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான உட்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டிருந்தன. கடந்த மாதங்களில், இந்திய இராணுவ பொறியியல் பிரிவு 40க்கும் மேற்பட்ட பாலங்களின் சேதங்களை மதிப்பீடு செய்ததுடன், வீதிகள், கால்வாய்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மீளமைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் இந்தியா இலங்கைக்கு வழங்கிய நான்கு பெய்லி பாலங்களில் இரண்டு கிளிநொச்சி மாவட்டத்திலும், மற்ற இரண்டு கண்டி – இராகலை வீதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடினமான நிலப்பரப்புகளில் போக்குவரத்தை மீளமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன. இந்நிலையில், வரும் வாரங்களில் மேலும் சுமார் 15 பெய்லி பாலங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களின் போக்குவரத்து தொடர்புகள் முழுமையாக மீளமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241395
  8. தேசிய அல்லது சர்வதேச மதிப்புள்ள விருதுகளை எப்படித் தோற்றுவிக்கிறார்கள்? By ஆர். அபிலாஷ் March 16, 2026 முதலில் தேசிய விருதுகள். இவை தொடர்ந்து அரசியல் சாய்வாலோ செல்வாக்காலோ மதிப்பிழந்து வந்தாலும் சாகித்ய அகாடெமி போன்றவற்றின் மதிப்பு அடிப்படையில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக சில நல்ல படைப்பாளிகளுக்கு அது விருதளித்துள்ளது, அதை நமது தேசியம் அங்கீகரிக்கிறது என்பதாலே உருவாகிறது. ஒவ்வொருமுறை மோசமான படைப்பாளிகள் தேர்வு செய்யப்படும்போதும் அது மதிப்புக் குறைவதைக் காண்கிறோம். தேர்வு சரியானதும் மதிப்பும் கூடுகிறது. அகாடெமியின் தேர்வுகள் மீதுள்ள புகார்கள், பரிந்துரைகள் நியாயமானவை. அதையெல்லாம் நடைமுறைப்படுத்த நாம் சரியான நபர்களை அரசியலில் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான நபர்கள் அகாடெமிக்குள் சென்று நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும். இந்தியர்களின் முக்கியமான பிரச்சினை நாம் நேர்வழியை ஏனோ நம்புவதில்லை. தொடர்ந்து நாம் புறக்கணிப்பட்டதாக, நாம் அதிக மதிப்புக்குத் தகுதியானவர்கள் என நம்புகிறோம். நமது வாசகச் சூழலும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். இயல்பாகவே வாய்ப்புக் கிடைத்து உள்ளே போகும் சிலர் குறுக்குவழியில் தமக்கும் தமக்குச் சார்பானவர்களுக்கு விருது வாங்கிக் கொடுக்க விழைகிறார்கள். சிலநேரங்களில் கட்சிக் குறுக்கீடுகளும் சாதியச் சாய்வுகளும் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். இப்படி, இது ஒரு பண்பாட்டுப் பிரச்சினையும்தான். இவ்வளவு போதாமைகளுக்கு மத்தியிலும் கூட, ஒட்டுமொத்தமாக பல்வேறு மொழிகளிலுள்ள தேர்வுகளைக் காண்கையில் அகாடெமியின் செயல்பாடுகள் நியாயமாகவே உள்ளது எனச் முடியும். ஒப்பீட்டுக்கு நாம் உள்ளூர் தனியார் விருதுகளைப் பார்ப்போம் - அவற்றில் தேர்வுக்குழு, தேர்வு முறைமை என ஒன்றுமே கிடையாது. யாராவது பரிந்துரைக்கிறார்கள், யாரோ முடிவெடுக்கிறார்கள், அறிவிக்கிறார்கள், கொடுக்கிறார்கள். இதனாலே இத்தகைய தனியார் விருதுகள் வாசகர்கள் மத்தியில் பொருட்படுத்தப்படுவதில்லை. விளைவாக நன்கு அறியப்பட்டவர்களுக்குக் கொடுப்பதன் வழியாக அம்மதிப்பைப் பெருக்க விருது அமைப்புகள் முயல்கின்றன. இந்த சுழற்சி மாறுவதில்லை. பரிந்துரைப்பவர்களுக்கு எந்த எழுத்தாளர்களிடத்து நட்பும் நன்மதிப்பும் உள்ளதோ அவர்களுக்கு நிதியுதவி கிடைக்கிறது. இதை ஒரு மறைமுக சமூக நீதித் திட்டம் எனலாம். ஜெயமோகனின் "விஷ்ணுபுரம்" விருதுதான் இருப்பதிலேயே விஷமத்தனமானது - அவர் எந்த முறைமையையும் பின்பற்றுவதில்லை என்பதுடன் எதையும் நம்புவதோ பொருட்படுத்துவதோ இல்லை. அவர் தன் சக-எழுத்தாளர்களின் மதிப்பீடுகளையும் ஏற்பதில்லை. அவர் மனத்தில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு விருதாளர்களின் வயதைப் பொறுத்து அறிவிப்பதாகச் சொல்கிறார். அவரது விருப்பவெறுப்புகளோ விருதைத் தீர்மானிக்கின்றன. இதையொட்டி அவர் எழுதும் விசயங்கள் இந்தப் படைப்பாளிகளைச் சமமாக மதித்துப் பாராட்டுவதாக இருக்காது. இந்த விருதோ அவர் தன் சக-எழுத்தாளர்களுக்குத் தரும் பரிசிலாகச் சித்தரிக்கப்படுகிறது. ரமேஷ் தான் சீக்கிரம் இறந்து விடுவதாகவும் தனக்கு அதற்கு முன் விருது தர வேண்டும் எனக் கோரியதாக ஜெயமோகன் எழுதியதை சான்றாகக் குறிப்பிடலாம். தனிப்பட்ட முறையில் ஒருவர் வேடிக்கையாகவோ அல்லது உணர்வுரீதியான வெளிப்பாடாகவோ கொள்ளாமல் அதை ஒரு கட்டுரையில் பதிவு செய்யக் கூடாது, அது அவரை அவமதிப்பதாகும் என்பதுகூட இவருக்குப் புரிவதில்ல. ஜெயமோகனின் குறுக்கீடும் விஷமத்தனமும் காரணமாகவே இவ்விருது மதிக்கத்தக்கதாக இல்லை. என்னதான் ஊடகங்களில் விளம்பரம் செய்தாலும், பிரபலங்களைப் பேச வைத்தாலும் இது ஒரு குழு விருதாக மாறிவிட்டது. அவர்களுக்குள்ளாகக் கொடுத்துக் கொண்டு பாராட்டிக் கொண்டு முடித்து விடுகிறார்கள். விருதாளர்கள் மற்றும் விருதுக் குழுவினர் விவகாரமும் இங்கு சுவாரஸ்யமானது - சாகித்ய அகாடெமியோ தனியார் விருதுகளோ ஒரு சரியான விருதாளரைத் தேர்வு செய்வது கடினமல்ல. தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் பெயர்களைத் திரட்டுவது சுலபம். சிக்கல் சரியான புத்தகங்களைத் தேர்வு பண்ணுவது - அதற்கு நிறைய மெனெக்கெட்டு பரவலான விருதுக்குழு ஒன்றின் கருத்துக்களைப் பரிசீலிக்க வேண்டும். மாறாக, அறியப்பட்ட படைப்பாளிகளின் பங்களிப்புக்கு ஒட்டுமொத்தமாக விருதளிப்பது சுலபம். இதனால் இதுவே இன்று அதிகமாக நடக்கிறது. இதுவும் விருதுகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. சிறந்த படைப்பாளிகளின் பெயர்களை என்னால் இணையத்தில் தேடியே பெற முடியும் எனும்போது விருதின் பயன்தான் என்ன? விருதுக் குழுவினரும் தமக்குள் பேசி வைத்து award fixing செய்யும் அவலத்தை சிலர் என்னிடம் குறிப்பிட்டுள்ளார்கள். இதைச் சரிசெய்யவே இரண்டு மூன்று நிலைகளில் பரிசீலிக்க விருதுக்குழுவினரை உருவாக்கிப் பார்க்கலாம். சரியான நபர்களை இக்குழுக்களில் தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு சன்மானமும் கொடுக்கலாம். விருதளிப்பின் போது இறுதிக் குழுவினரைத் தம் விளக்கங்களைத் தரக் கோரலாம். அடுத்து, நாம் தேசிய விருதுகள், உள்ளூர் விருதுகளைத் தாண்டிச் சென்று ஒருசில சர்வதேச விருதுகளை எடுத்துக் கொள்வோம். முதலில் நோபல் பரிசு இதைக் குறித்து wired.in இல் ஒரு நல்ல கட்டுரை வந்துள்ளது (https://www.wired.com/2014/10/whats-nobel-prize-become-biggest-award-planet/). நோபல் பரிசு 1888இல் நடந்த ஒரு பெயர்க் குழப்பத்தாலே தோன்றுகிறது. ஆல்பிரட் நோபல் டயனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்த பெரும் தொழிலதிபர். இவரது சகோதரர் இறந்துவிட அதை இவரது மரணம் என நினைத்து ஒரு பிரஞ்சுப் பத்திரிகையில் "மரண வியாபாரி ஆல்பிரெட் நோபல் மரணம்" என அஞ்சலிக் குறிப்பு எழுதுகிறார்கள். நோபல் நம்மாட்களைப் போல் அல்லாது சொரணை மிக்கவர். ஆகையால் அவர் இதைப் படித்து நொந்து போகிறார். தன் காலத்திற்குப் பிறகு தான் மரண வியாபாரி என அறியப்படக் கூடாது என்று அவர் தன் மொத்தச் சொத்தில் கணிசமான பகுதியை ஒரு சர்வதேச விருதை உருவாக்கி தன் பெயரில் அளிக்கச் செலவிட வேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டுப் போகிறார். இதற்காக ஒரு விருது நிர்வாகக் குழு உருவாக்கப்படுகிறது. 1897இல் இருந்தே அவர்கள் உலகில் சிறந்த விஞ்ஞானிகளைக் கண்டறிய உலகம் முழுவதிலும் இருந்து பரிந்துரைகளைப் பெற்று ஆய்வு செய்கிறார்கள். தம் ஆய்வு முடிவை, தேர்வை அவர்கள் Swedish Royal Society of Sciences (வேதியலுக்கும் இயல்பியலுக்கும்) மற்றும் the Karolinska Institute (மருத்துவத்துக்கு) ஆகிய நிறுவனங்களிடம் கொடுத்து அவர்களை இறுதி முடிவை எடுக்கக் கேட்கிறார்கள். தம் தேர்வு குறித்து தேர்வுக் குழுவினர் எழுதும் பரிந்துரைகளை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் விருதுப் பணமே உலகம் முழுக்க கவனத்தைப் பெற்றுத் தந்தாலும் போகப் போகம் பணம் அல்ல நோபல் விருதுக் குழுவின் தேர்வு முறைமையும் அவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்து ஒருவரது பங்களிப்பின் தாக்கத்தை அவதானித்து அங்கீகரிக்கும் பாங்குமே அவ்விருதை உலக முக்கியத்துவம் கொண்டதாக்குகிறது. சில நேரங்களில் அவர்கள் அதிகமாக அறியப்படாத விஞ்ஞானிகளை, எழுத்தாளர்களைக் கண்டறிந்து அங்கீகரிக்கிறார்கள். இதுவும் அவர்கள் மீதான மதிப்பைப் பெருக்குகிறது. இந்த பாரம்பரியம்தான் நோபல் பரிசின் மதிப்பு, அதன் பணம் அல்ல என்று ஸக்கர்மேனும் கார்ல்ஸ்டெராண்டும் வைர்ட் கட்டுரையில் சொல்வது கவனிக்கத்தக்கது. (இந்த இடத்தில்தான் நம்மவர்கள் சொதப்புகிறார்கள் - நம்மிடம் நடுநிலையான, புறவயமான நடைமுறைகள், முறைமைகள் இல்லை. நாம் அனைவருக்குமானவர்களாக இருப்பதும் இல்லை. அதாவது தேசிய அளவிலோ சர்வதேச அளவிலோ யாரையும் மதிப்பிட்டு அங்கீகரிப்பதில்லை.) அடுத்து புக்கர் பரிசு 1969இல் இவ்விருது புக்கர்-மெக்கோனெல் எனும் கயானாவில் உள்ள தொழிலதிபரின் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரித்தானிய காமென்வெல்த் எனப்படும் காலனிகளில் உள்ள படைப்புகளைப் பிரதானப்படுத்தினாலும் அண்மையில் இது இங்கிலாந்திலும் ஐயர்லாந்திலும் பிரசுரிக்கப்பட்ட ஆங்கிலத்தில் கிடைக்கிற எல்லா நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் எடுத்துக் கொள்கிறது. சர்வதேச புக்கர் பரிசு எனும் பெயரில் மொழிபெயர்ப்புகளுக்கும் விருதளிக்கிறார்கள். இவ்விருதின் சிறப்பும் இதன் சர்வதேசியத்தன்மையும் விருதைத் தேர்வு செய்யும் கறாரான முறைமையும்தான். அடுத்து, இவ்விருதுக்குச் செய்யப்படும் விளம்பரம் இதற்கு ஒருவித தனி கவனத்தைப் பெற்றுத் தருகிறது. இவ்விருதின் முக்கியத்துவம் அடுத்து தேர்வாகும் படைப்புகள் அடுத்த சில பத்தாண்டுகளாவது கல்வித்துறையிலும் வாசகர்கள், விமர்சகர்கள் இடத்தும் பரவலான தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதே. ஒரு கூடுதல் தகவல்: இவ்விருது பெற்ற நாவல்களை ஆய்வு செய்த ஆடம் நவோமி பொதுவாக அரசியல் பகடி எழுதுகிற, 400 பக்கங்களுக்கு மேலாக உள்ள நாவல்களுக்கே இவ்விருது அதிகமாக அளிக்கப்படுகிறது என்கிறார் (Adam, Naomi. “How to win the Booker prize: is there a formula for ‘the finest in fiction?’” The Conversation, October 14, 2022.). பெண்களை விட ஆண்களே இவ்விருதை அதிகமாக வெல்கிறார்கள் என்பதும் இவரது அவதானிப்பு. இந்த சர்வதேச விருதுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்வது இவற்றைத்தாம் - 1) புத்தகங்களுக்கு விருதளிக்க வேண்டும். எழுத்தாளர்களுக்கு அல்ல. 2) புறவயமான நடைமுறைகளை உருவாக்கி, எந்த சார்புநிலையுமற்றுச் செயல்பட வேண்டும். ஒரு நிதியாளரின் பெயரை விருதுடன் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அவர் விருதாளரைத் தேர்வு செய்யக் கூடாது. செல்வாக்கு என ஒன்று வந்தாலே விருது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்குகிறது. 3) விருதுக்குத் தேர்வாகும் ஒரு புத்தகத்தின் நீண்டகாலத் தாக்கம் என்னவென்று பரிசீலிக்க வேண்டும். 4) தேசிய அளவிலோ சர்வதேச அளவிலோ பலரையும் இதே நடைமுறையைக் கொண்டு விருளித்து அங்கீகரித்தாலே அவர்களும் அவ்விருதைப் பொருட்படுத்துவார்கள். இதையெல்லாம் செய்யாத பட்சத்தில் விருதுகள் கெடாவெட்டு, காதுகுத்து, பூப்பெய்தல் விழா எனும் கணக்கில்தான் மதிக்கப்படும். அவற்றைப் பெறுவதில் எழுத்தாளர்களுக்கு தற்காலிக சந்தோஷம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதை இருக்காது. https://www.writerabilash.in/2026/03/blog-post_16.html
  9. Today
  10. கலை விருதுகள் மட்டும் இல்லை, கோஷான், விஞ்ஞானம், பொருளாதாரம் போன்ற துறைகளில் வழங்கப்படுபவையும் நீங்கள் சொல்லும் வகையானவையே. எடிசன், டெஸ்லா, ஐன்ஸ்டைன் இடையேயான போட்டிகள் பற்றிய கதைகளை வாசித்திருக்கின்றீர்களா என்று தெரியவில்லை. எடிசன் நோபல் விருதை வாங்குவதற்கு தலைகீழாக நின்றார். அவரால் ஒரு அவக்கொலை கூட நடந்தது. ஆனாலும் எடிசனுக்கும் டெஸ்லாவிற்கும் அது எப்போதும் வழங்கப்படவில்லை. தனிநபர் தெரிவு, பார்வை என்பதையும் தாண்டி, அடிப்படையான சில அளவு கோல்கள் எல்லா விருதுகளுக்கும் உண்டு. அந்த அளவு கோல்களையே நான் கேள்விக்கு உட்படுத்துகின்றேன். 'To Kill a Mockingbird' இங்கு மிடில் ஸ்கூலில் ஒரு பாடநூலாக இருக்கின்றது. Victor Hugo அவர்களின் 'Les Misérables' இங்கு ஹை ஸ்கூலில் ஒரு பாட நூலாக இருக்கின்றது. ஒன்று ஒரு புது முயற்சி, நவீனமானது. இன்னொன்று செவ்விலக்கியம், உலகத்திற்கு பிரான்சு தேசம் அளித்த கொடை. இரண்டுமே பாட நூல்களாகவும், விருதுகளுக்கும் மிகத் தகுதியானவை. தமிழில், செங்கை ஆழியான் போலவே, இன்று எழுதும் இரா.முருகன் மற்றும் எங்களின் அ. முத்துலிங்கம் இருவரின் கதைகளையும் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நீங்கள் சொல்லும் அதே வகையானவை. இவர்களின் ஒரு கதைகளையாவது வாசித்தவர்கள் என்று எத்தனை தமிழர்கள் இருப்பார்கள்................. இவர்களுக்காகவே இந்த விடயத்தில் நான் விட்டுக்கொடுப்பில்லாமல் எழுதிக் கொண்டிருக்கின்றேன்........... இது தமிழ் மொழிக்கு நான் செய்ய வேண்டிய ஒரு கடமையும் கூட.....................
  11. சீ இந்த உழைப்பு உழைக்கும் உங்களையே நான் ஒருபோதும் இப்படி சொன்னதில்லையே. அப்புறம் எப்படி???🤣 இதை முழுமையாக வாசித்து தான் இணைத்தீர்களா??
  12. இவர் மீது கடுமையான விசாரணை நடந்து இவரது வீடு கணனி என்று தேடுதல் படலம் நடத்து எவ்பிஐக்கு சொல்லுவார். வழமை போல போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்.
  13. தமிழ்பகுதிகளிலும் புகையிரத நிலையங்கள் உள்ளன. Tooooo late. இதை முதலே சொல்லியிருந்தால் கவனத்தில் எடுத்திருப்பார்கள்.
  14. அடபாவிகளா உங்களால தான் தமிழருக்கே பிரச்சனை. உங்களுக்கு நாட்டிலே என்ன பிரச்சனை? அதுவும் யாழ்ப்பாணத்தில். எழுதி வைத்திருக்கிறதை தமிழிலும் எழுதியிருக்கலாமே? வடக்கில் எந்தப் பகுதில் குடியேற விருப்பம் என்று அரசிடம் சொன்னால் பல குடியேற்றத் திட்டங்களுக்கு சிங்கள மக்களைத் திரட்டுபவர்களுக்கு வேலை சுலபமாக இருக்குமே. சிங்கிந்தியா என்று பெயரை வேறு வைத்து இது இந்தியாவின் வேலையோ என்று தமிழர்களின் மண்டையைக் காயவிடுகிறீர்களே.
  15. யுத்தம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்திருத்தால் தமிழ்ப் பிரதேசங்களில் மக்கள் குறைவாகவும் இப்படியான நினைவு சின்னங்கள் அதிகமாகவும் இருந்திருக்கும். நல்ல வேளை யுத்தம் முடிந்ததால் தமிழ் மக்கள் தொகை வளர்சசியை அடைகிறது
  16. ஈரானை.... நொட்டிப் பார்த்ததில் இருந்து, நிம்மதி இழந்து... முத்தீட்டுது.
  17. செம்பவள வழித்தோன்றல் என் தலைவன். ஒரு தமிழன். எனவே அவர் பிழை விட மட்டார். வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், தமிழன் தப்பு செய்யமாட்டான் என்பதை செவ்வாய் கிரக அறிஞர் கூட ஏற்கிறார்கள்.
  18. தான் போக வழியைக் காணேல்லையாம் மூஞ்சூறு விளக்குமாத்தையும் காவிக்கொண்டு வெளிக்கிடிச்சுதாம்!🤣
  19. ஓம், இதை நானும் கேள்விப் பட்டேன். சுவிசில் வாழ்ந்த எம் தலைவன் கிம் அந்த நாட்டுச் சொக்கலேற்றினால் அதிகம் கவரப் பட்டு, வட கொரியா வந்த பின்னரும் கூட விசேட வழிகளில் சுவிஸ் சொக்கலேற்றை வரவழைத்து அனுபவிப்பதாக அறிந்தேன்! கோவிட் காலத்தில் நாட்டை முற்றாகப் பூட்டிய வேளையில் கொரிய மக்கள் பட்டினியை எதிர் கொண்டதாக அறிந்த தலைவன் கிம் "No bread? why can't they eat chocolate?" என்று வினவியதாகவும் அறிந்தேன்😎!
  20. Ssonprtode7if7àeL2a 11ul4m1a:6ctfm59 g6u u905ii8999 8771sr50 · இந்த left ல இருக்க மனுஷன நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்ல ஒரு சின்ன கதை சொல்றேன் இவர பத்தி 💯" இவரு newzeland ஓப்பனர் ஒரு காலத்துல, அப்பறம் நம்ம MI க்கு talent scout பண்ண இவர appoint பண்ணாங்க. 2012-13 ல ஏதோ ஒரு உள்ளூர் மேட்ச்ல ஒரு பையன் வித்தியாசமான action ஓட பௌலிங் போட்டுட்டு இருந்தான். அந்த பையன் ரஞ்சி ஆடல எந்த வித ஸ்டேட் level matches உம் விளையாடல அப்போ. இவரு கண்ணுக்கு அவன்கிட்ட ஏதோ ஒன்னு இருக்குனு தெரிஞ்சுச்சு ⌛" MI squad ல 10 lakhs க்கு தூக்கி போட்டாரு, ஒரு மேட்ச் வாய்ப்பும் கிடைச்சது. ஏப்ரல் 4 RCB கூட மேட்ச் வந்தான் பையன் போட்றான் எல்லாரும் கிண்டல் பண்ணாங்க. அவனோட career ல முதல் விக்கெட் அப்போ உச்சத்துல இருந்த விராட் கோஹ்லி 🥵" அன்னைக்கு ஆரம்பிச்ச ஆட்டம் MI க்கு மட்டும் இல்லாம நம்ம நாட்டுக்கும் எத்தனையோ கஷ்டமான மேட்ச்கள அவனோட skill அ வச்சு முடிச்சு குடுத்தான் 💯" இப்போ உலகத்துலயே தவிர்க்க முடியாத ஒரு தலைசிறந்த பௌலரா வந்து நிக்கிற நம்ம பும்ரா தான் அந்த பையன் 💥" நமக்கு பும்ராவ குடுத்த தங்கமான மனுஷன் தான் இந்த John wright ❤️" #ipl #bumrah #JohnWright ✍️" Voir la traduction.....!
  21. optrsenSdoi06fmgmi0461lc7l8 mu619lum6g19016mm83t8aa2a1h5m528 · "நாங்க கிரவுண்டுலயே அழுதோம் , Hotel போயும் அழுதோம்.." 😭" 2016 உலகக்கோப்பை போட்டீல இந்தியா 146 அடிச்சாங்க. ஆனா Bangladesh ஜெயிக்கறமாரி இருந்தாங்க. முன்னாடி ஒவ்வொரு பாலும் ஜெயிச்சுட்டமேன்னு celebrate பண்ணவும் செஞ்சாங்க. 6 பாலுக்கு 11 வேணும். அப்றம் 4 பாலுக்கு 6. 3 பாலுக்கு 2. அங்கதான் விதி விளையாண்டது. 2 பால்ல 2 விக்கெட் காலி. கடைசி ball தலைவன் Gloveஐ கழட்டீட்டு அவங்க planஐ தெரிஞ்சுட்டு நின்னான்‌. Ball byes ஆனாலும் ஓடலாம்னு ரெடியா இருந்தாங்க அவங்க. ஏத்தமாரியே Non striker வேகமா ஓடிவந்தான். தோணி அவனைவிட வேகமா ஓடி ஸ்டம்பை அடிச்சு செதறவிட்டுட்டார்.‌ அப்றம் நைட்டு பூரா ஒரே அழுகை. 😑" இதைத்தான் முதல் பத்தீல அழுதோம்னு சொல்லீருந்தார் அந்த டீம் Muhmadulla. விடுங்கடா.. விடுங்கடா.. விளையாட்டுல தோக்கறவன் ஜெயிக்கறதும், நீங்க எப்பவுமே தோக்கறதும் சகஜம்தானே. இதுக்கெல்லாம் கண்ண கசக்கீட்டு. 🥹" Voir la traduction.......!
  22. 10ம் வகுப்பு படிக்கும் பிரவீன் (கென் கருணாஸ்) பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஜெஸ்ட் பாஸ் மட்டுமே பெறுகிறார். பிரவீனுக்கு மிகவும் செல்லம் தந்து வளர்க்கும் தாயார் சரோஜாவுக்கு (தேவதர்ஷினி) மகன் பாஸ் ஆகிவிட்ட விஷயம் மகிழ்ச்சியைத் தந்தாலும், பேக்கரி வைத்திருக்கும் தந்தை உன்னிகிருஷ்ணனுக்கு (சுராஜ் வெஞ்சாரமூடு) கோபத்தையே உண்டாக்குகிறது. Youth Rewiew | யூத் விமர்சனம் மேல்நிலைப் படிப்புக்குச் செல்லும் பிரவீனுக்கு அங்கு அடுத்தடுத்து மூன்று காதல்கள் அரங்கேறுகின்றன. படிப்பில் கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க 'லவ் லவ் லவ்' என மூழ்கிக்கிடக்கிறார் பிரவீன். இந்தக் காதல்கள் அவருக்குள் எப்படியான தாக்கங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகின்றன என்பதுதான் அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கியிருக்கும் 'யூத்' திரைப்படத்தின் கதை. பதின்வயது இளைஞனுக்குரிய உடல்மொழி, சேட்டை, நடனம், '3' காதல் ஆட்டங்கள், அவருக்குள் ஏற்படும் குற்றவுணர்வு மற்றும் மனமாற்றம் என அனைத்தையும் கச்சிதமாக நடிப்பில் புகுத்தி 'யூத்' நாயகனாகத் தடம் பதிக்கிறார் கென் கருணாஸ். படிப்போடு நடிப்பும் சூப்பர் செதம்பரம்! பள்ளி மாணவிகளாக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நல்லதொரு பங்களிப்பை நல்கி, விரலில் ஹார்ட்டின் காண்பிக்க வைத்திருக்கிறார்கள்! மூன்றாவது கதாநாயகியாக வரும் ப்ரியான்ஷி யாதவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை. மகனுக்கும், மகனின் கல்விக்கும் எந்தக் குறையும், தடையும் வந்துவிடக் கூடாது என அரும்பாடுபடும் அப்பாவித் தாயாக தேவதர்ஷினி, நடிப்பின் மூலம் நம் மனதைக் கனமாக்குகிறார். மழித்த தாடி மற்றும் பருமனான மீசையுடன் ஸ்ட்ரிக்ட் தந்தையாக வருகிறார் சுராஜ் வெஞ்சராமூடு. வழக்கமான அம்சங்கள் நிறைந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவருடைய ஸ்டைல் கொண்டு இனிப்பு, காரம் என அதன் சுவையை ஏற்றியிருக்கிறார். சின்ன தமிழா, ஈஸ்வர் உள்ளிட்ட கென் & கேங், மீனாட்சி தினேஷின் தோழிகளாக வருபவர்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மணிகண்டன் & குழு ஆகியோர் படத்தின் சிரிப்பொலி எபிசோடுகளை ஷார்ப்னர் கொண்டு சீவியிருக்கிறார்கள். Youth Rewiew | யூத் விமர்சனம் சிறிய வீடு, கென்னின் அறை, பரபரப்பாக இருக்கும் பள்ளி வளாகம், ஜாலியான வகுப்பறை போன்றவற்றை கலர்ஃபுல் ரங்கோலியாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. முதல் பாதி காமெடிக்கு, இரண்டாம் பாதி எமோஷனுக்கு எனக் கணக்குப் போட்டு காட்சிகளை அடுக்கி செண்டம் வாங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ். 2014-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பட்டன் மொபைல்கள், டி.வி, பழைய ரூபாய் நோட்டுகள், பழைய கோலா பாட்டில், நெட் சென்டர்கள் என அக்காலக்கட்டத்தை நினைவூட்டி, கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது கலை இயக்குநர் ராமு தங்கராஜின் கச்சிதமான கைவண்ணம். 'முட்ட கலக்கி', 'ஜில்பான்ஸோ', 'லவ்வ சொல்லிட்டாளே' ஆகிய பாடல்களில் காதலைக் கொண்டாட்டத்துடன் பரிமாறியிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார். அதேபோல, பின்னணி இசையிலும் காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்துப் பாடங்களிலும் ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்குகிறார் ஜி.வி. படிப்பில் கவனம் செலுத்தாமல் ஜாலியாக இருக்க நினைக்கும் ஒருவனுக்குக் காதல்களாலும், குடும்பத்தாலும் கிடைக்கும் அனுபவங்கள் என்னென்ன என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ். பதின்வயதில் துளிர்விடும் காதல் ஆசைகள், அந்த வயது இளைஞர்களின் எண்ணவோட்டம், அப்போது முதிர்ச்சியற்ற தன்மையுடன் காதலை அணுகுவது எனப் பதின்வயது இளைஞனின் 360 டிகிரி வாழ்க்கையையும் படத்தின் முதல் பாதி திரைக்கதையில் சொல்லிவிடுகிறார்கள். Youth Rewiew | யூத் விமர்சனம் இரண்டு காதல்கள், அது ஏற்படுத்தும் குழப்பங்கள், நண்பர்களுடனான ஜாலி அரட்டைகள், அப்பாவி அம்மாவுடனான செல்லம் கொஞ்சல்கள், கறார் அப்பாவைக் கண்டால் ஏற்படும் ஜாலியான கோபம் என்பன போன்ற 'கலகல' பதில்களை எழுதி ரேங்க் ஹோல்டராக மேடை ஏறுகிறது திரைக்கதை. ஆனால், இடையிடையே உருவக்கேலிகள், பெண்களின் குரலை வைத்து கேலிகள் போன்றவை வகுப்பறையில் மாணவர்கள் செய்திருக்கும் க்ரைம் வேலைகள். அது அந்த வயதுக்குரிய இயல்பு என்றாலும், அதைத் தவறு என்று சுட்டிக்காட்டும் காட்சிகளோ, வசனங்களோ மிஸ்ஸிங்! இரண்டாம் பாதியில் காதலுடன் சேர்த்து எமோஷனல் க்ளாஸையும் சேர்த்து சொல்கிறது திரைக்கதை. அம்மா மீதான அளப்பரிய பாசம், காதலை விட குடும்பமே முக்கியம் என உணரும் கிளைமேக்ஸ் நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால் நம்மை உருக்க வைத்தாலும், அவற்றை வழக்கமான திருப்பத்தைக் கொண்டு திரைக்கதையில் எழுதியிருப்பது குறைவான மதிப்பெண்களையே பெற வைத்திருக்கிறது. தெளிவாகச் சொல்லப்படாத காதல் கதைகள், முதல் பாதிக்குப் பிறகு காணாமல் போன காதலிகள் ஆகியவை இரண்டாம் பாதி திரைக்கதையில் லாங் ஆப்சென்ட் ஆகியிருக்கின்றன. பெண்களின் பார்வையில் காதல்களை அணுகாமல், அவர்களை வேண்டுமென்றே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கதாநாயகன் கதாபாத்திரம் பெரும் குழப்பம். Youth Rewiew | யூத் விமர்சனம் பள்ளிகளில் இதெல்லாம் செய்ய முடியுமா, அங்கு இப்படியான சுதந்திரங்கள் கொடுக்கப்படுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளுக்குப் பதில்களை எழுதாமல் விட்டிருப்பது ஏனோ?! சில குறைகள் இருப்பினும், பதின்வயது இளைஞனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்த 'யூத்', காமெடி மற்றும் செண்டிமெண்ட் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தி டீசண்ட் மார்க் வாங்குகிறது. யூத் விமர்சனம்: கென் கருணாஸ் நடிப்பில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் வெளியான யூத் படம் எப்படி இருக்கு? | Youth Review: How is Youth movie starring Ken Karunas and featuring music by G.V. Prakash Kumar?
  23. முன்னாள் ஜனாதிபதி பைடனுக்கு உடல் நிலை பாதிக்கப் பட்ட மாதிரி, தம்பருக்கும்... மனநிலை பாதிப்பு சம்பந்தமாக ஏதாவது வியாதி இருக்குமோ. ஏனென்றால்... அண்மையில், பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பல இடங்களில் பேசுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.