stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ஆனால் இவை எல்லாமுமே அவர் அரசியலுக்கு வர முன்பே உழைத்து வரியும் கட்டிய வருமானம். ஆகவே இது வருமான வரித்துறைக்கு தெரிந்தே வைத்திருக்கும் சொத்து. ஒரு தனி நபராக இதை பொதுவெளியில் போட வேண்டிய தேவை இதுவரை இல்லை. இப்போ உள்ளது எனவே வெளியிடுகிறார். ஆகவே… விஜை இதை வேறு வழியில்லாமல் வெளியிடவில்லை. ஏற்கனவே வரி கட்டி சேர்த்த சொத்தை - இப்போ அனைவருக்கும் தெரியபடுத்துகிறார். இதில் அரசியலுக்கு வர முன்பே பானவிடயத்தில் ஒரு தூய்மை, சட்டத்துக்கு கட்டுபட்டு நடந்த விதம் என்பன தெரிகிறன. விஜைக்கு சம்பளம் கொடுக்கும் ரெட்ஜயண்டின் 21 வயது ஓனரின் பாட்டனும், தகப்பனும்… சோத்துக்கு வழியில்லை என கணக்கு காட்டுவதும் இதுவும் ஒன்றல்ல: 😂 ஆனால் உலக ஜனநாயகத்தின் தலைமகன் தம்பர் இன்னும் வருமான வரி கணக்கைன்காட்டவில்லைனென நினைக்கிறேன். குடும்ப சொத்து விபரமும் அப்படியே.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அதுதான் புலிகள் விடயத்தில் இந்தியா நடந்து கொண்டது சரி என எழுதிய போதே உங்கள் தற்போதைய பாதை என்ன என்பதை காட்டி விட்டீர்களே. அனுர மீதும் கொள்ளை பாசம் இருப்பதை உணர முடிகிறது… ஆனால் குணா கமல் போல் அதை வார்த்தையில் எழுத முடியாமல் தவிக்கிறீர்கள் என்பதும் புரிகிறது. கேட்டும் கொடார்…சிறியர் கேட்டதும் கொடுப்பார்…மனிதர் கேட்காமலே கொடுப்பார்…பெரியர் வேண்டாம், வேண்டாம் என கதற, கதற கொடுப்பார்…...
-
நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
யார் சுழியோடிகள் கைப்பற்றினரா? நீருக்கடியில் உற்பத்தி நிலையமாம், போலீசார் கைப்பற்றினராம், கதை நன்றாகத்தான் இருக்கிறது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அது குண்டர்கள் கேள்வி கேட்பவரை சூழ்ந்து கொண்டு இழுத்து போக ஆரம்பித்த பின் சொல்கிறார். ஆனால் அந்த நபர் கேள்வி கேட்க எழுந்தத்தும், சீமான் முதலில் சொல்வது, நீ இப்படி திமுகவை கேட்பாயா ? என்பதே. இதுதான் “ஆளை அப்புறப் படுத்துங்கள்” என சீமான் குண்டர்களுக்கு கொடுத்த சமிக்ஞை. அதன் படி குண்டர்கள் ஆளை அப்புறப்படுத்த ஆரம்பித்த பின், அட விடுங்க அவர் கேள்வி கேட்கட்டும் என டிராமா போடுகிறார். குண்டர்களுக்கும், பார்வையாளருக்கும் கூட அண்ணன் விளையாடும் விளையாட்டு புரிகிறது. நீங்கள்தான் பாவம் எப்படியாவது முட்டு கொடுத்தாக வேச்ண்டுமே😂 தமிழ்நாட்டில் யாரை ஆதரிக்கிறேன் என்பதில் நான் தலைவர் பிரபாகரன் வழியில்தான் என்றுமே. அவர் மதில் மேல் புலி, நான் ம.மே. பூனை. ஆனால் இருவருமே மதில் மேல்தான். ஆனால் நான் யாரை எதிர்கிறேன் என்பதில் மிக வெளிப்படையாக, உறுதியாக உள்ளேன்.
- Today
-
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
அதே நேரம் ஆளில்லாத விமானங்களை வீழ்த்த அமெரிக்க இஸ்ரேலிய படைகளுக்கு வகுப்பெடுக்க உக்ரேனிய வீரர்கள் போனதாகவும் செய்தி வந்ததே. இது எப்படி?வாத்தியாருக்கே வகுப்பு. நம்ம பாசையில் திருப்பதிக்கே லட்டு.
-
நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
கா.குடி பெயரை....பாவிப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் ....அவ்வூரவர் ஈரானுக்கு இந்த பங்கர் அமைப்பு முறையை பரீட்ட்சித்துப் பார்க்க செய்த இடத்தில்...யாரோ விசமிகள் இதில் புகுந்து கசிப்பை செய்திருக்கிறார்கள்...என்று புல்லாவோ ..கக்கிமோ அறிக்கை விடலாம் ...எனவே மற்ற இனம் அடக்கி வாசிக்கவும் இதை வைத்து ஒரு சினிமாவே எடுக்கலாம்.
-
உங்களால் முடியாது - சோம.அழகு
உங்களால் முடியாது! - சோம.அழகு தொண்ணூறுகள் வரை பிறந்த பெண்கள் எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட்டனர்(!) என்பதைப் பற்றித்தான் இக்கட்டுரை. இதை அநீதியாகப் பார்த்த சில விவரமறியாதவர்கள், ‘ஏன்?’ ‘எங்ஙனம்?’, ‘எவ்வாறு?’ என்றெல்லாம் மண்டையைப் போட்டுப் பிசைந்த போதுதான் மண்டைக்காடு அருகில் உள்ள எழுத்திட்டான் பாறையில் சில முக்கிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகள் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஆண் இனத்திற்கு மட்டுமே புரியும் Menglish மொழியில் எழுதப்பட்ட கட்டளைகள் அடங்கிய குறிப்புகள். காலப்போக்கில் அக்குறிப்புகள் ஆடவர்களின் மரபணுவில் நிரந்தரமாகவும் இயல்பாகவும் ஏறிவிட்டதாம். அக்கட்டளைகளை ‘Immediate family members who happen to be the supposedly the weaker sex too’ – இவர்களிடம் செவ்வனே சிரமேற்கொண்டு நிறைவேற்றி ‘வந்த’ (அடுத்த தலைமுறையில் மாற்றம் துவங்கியிருக்கிறது என நம்ப விழைகிறேன்!) Rhada’man’thine வகையறாவுக்கு முதற்கண் நம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் …. ஆமா, உங்களை யாரு இப்ப ரொம்பச் சரியா இதை வஞ்சப் புகழ்ச்சி தொனியில் வாசிக்கச் சொன்னது? இனி கூகுள் மொழியாக்கத்துடன் ‘பெரும்பாலான’ ஆண்களுக்காக அருளப்பட்ட அக்குறிப்புகளின் தொகுப்பு தமிழில்: [‘பெரும்பாலான’ – என்ன ஒரு அற்புதமான வார்த்தை! நான் கூற வரும் விஷயத்தில், இந்த அருமையான சொல்லை விட்டு விடலாம்தான். ஆனால் ‘எல்லா ஆண்களும் ஒன்றும் அப்படி அல்ல” என்று அரிதிலும் அரிதான எடுத்துக்காட்டுகள் (‘அவ்வாறு இருக்கிறார்களா?’ என்பதே அலசி அலுப்படைய வேண்டிய விஷயம்!) மட்டுமே பூதக்கண்ணாடி வழியாகப் பேசப்படும். எனவே இவ்வார்த்தையைச் சும்மானாங்காட்டி போட்டு வைப்போம். அனைவரும் தாம் ‘மிச்சச்சொச்ச’ பிரிவில் நிற்பதாகத் தம்மைத் தாமே நம்ப வைத்து ஆசுவாசமடைந்து கொள்ளட்டுமே!] பலதரப்பட்ட பெண்களுடன் உரையாடியதில் கீழுள்ளவை அனைத்தும் உண்மை என உறுதிபடுத்தப்பட்டுள்ளன. Driving liberates a woman – எவ்வளவு பெரிய தான்தோன்றித்தனமும் மூடத்தனமும் நிறைந்த வாசகம்! இதை முக்காலத்திலும் மடவரல் எவரும் உணர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். (circa கி.பி 1980) இளங்கன்று பயமறியாது. எனவே அப்பிராயத்தில் வண்டி ஓட்டிப் படிக்கும் ஆசை அரிவைகளுக்குத் துளிர் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறித் துளிர் விட்டால் வேரோடு பிடுங்கிப் பிய்த்துக் களையெடுப்பு செய்தல் வேண்டும். ‘ஒழுங்கா காலேஜ் படிச்சு முடிக்குற வழிய பாரு’, ‘கல்யாணத்துக்கு அப்புறம் வண்டி ஓட்ட படிச்சுக்கோ’, ‘பச்சப்புள்ளைய கைல வச்சுக்கிட்டு இந்த ஆச என்னத்துக்கு இப்ப?’ என இருக்கவே இருக்கின்றன பல ஆயுதங்கள். வாழ்க்கையில் எது முதன்மையானது என்ற குழப்பத்தில் இருக்கும் அவர்களுக்கு நல்வழி காட்டுவது நம் தலையாய கடமையன்றோ? குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு வண்டி ஓட்டுவதைப் பற்றி நினைக்கக் கூட தைரியம் வராது. அபூர்வமாக முப்பதுகளுக்குப் பிறகு அந்தத் தைரியம் பேரிளம் பெண்களிடம் எட்டிப் பார்ப்பதாக தெரிந்தால் ‘நேரம் எங்க இருக்கு?’, ‘கண்ணு தெரியாத வயசுல…’, ‘இன்னும் கொஞ்ச வருசத்துல பல்லு போன கெழவியாகப் போற…’, ‘இப்ப என்ன? கார் ஓட்டப் படிச்சு flightஆ ஓட்டப் போற?’ என அப்போதும் கை கொடுக்கும் அஸ்திரங்கள் உண்டு. எதற்கும் மசியாத பிடிவாதக்காரியாக(!) (உலக வழக்கில் - அடங்காப்பிடாரியாக) இருந்தால் கற்றுக் கொடுக்கும் பணியை வீட்டின் ஆண்களே ஏற்றெடுப்பது உசிதம். கண்டிப்பாக ஓட்டுநர் பள்ளிக்கு இசைவு தெரிவிக்கக் கூடாது. அங்கு யாரேனும் ஒரு பெண் சொல்லிக் கொடுக்க வந்தால் அவர் சொல்வதைக் கேட்டு “வண்டி ஓட்டுறது ரொம்ப சுலபமாமே! எளிதா கத்துக்கிடலாம்னு சொல்றாங்க” என நம்மிடமே தன்னம்பிக்கையோடு வந்து சொல்வாள். பின் நாம் “அது…. அவங்க நல்லா ஓட்டத் தெரிஞ்சவங்களா இருப்பாங்க… அவங்க சொல்றதையெல்லாம் நம்பாத… ரொம்ப கஷ்டம்” என்று மீண்டும் மடவோளின் மண்டையைக் கழுவும் கடினமான பணியை ஏற்றெடுக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் மீறி ஓட்டுநர் பள்ளிக்குச் சென்றால் நான்கைந்து பேருடன் ஒருவராக ஒரு நாளைக்கு சுமார் கால் மணி நேரப் பயிற்சி கிட்டினாலே பெரிய விஷயம். அதிலும் accelerator, brake, clutch என எல்லா கட்டுப்பாடுகளும் பயிற்சியாளரின் கையில்… இல்லை! காலில் இருக்கும். இவ்வளவையும் தாண்டி எகிறி குதித்துக் கற்றுக் கொண்டுவிட்டால் கூட, பிறகு எப்படியும் நம் முன் ஓட்டாமலேயா போய்விடுவார்கள். அப்போது “இந்த லட்சணத்துல ஓட்டத்தான் டிரைவிங் ஸ்கூல் போனியாக்கும்? என்னை விடவா அங்க சொல்லித் தந்துருக்க போறாங்க?” என்று கடித்து வைக்கலாம். வசதி வாய்ப்பு, அனுமதி, நெருக்கமானவர்களிடம் கற்றுக் கொள்ளக் கூடாது என்ற சமயோசிதம் - ஓட்டுநர் பள்ளிக்குச் செல்ல இவற்றில் ஏதேனும் ஒன்று வாய்க்கப்பெறாத தம் வீட்டு வனிதைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய காலக் கொடுமை அரங்கேறப் போகிறதெனில் ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இன்னொரு கல்வெட்டில் கிடைக்கப் பெற்றன : “I yell at you and stress you out, because I care for you” – நமது இந்த அன்பு, பாசம், நேசம், அக்கறையெல்லாம் பேதைகளின் பெரு மூளைக்கு உரைக்காது எனினும் இதனை விடாமல் கடைபிடிக்க வேண்டும். முதன்முதலாக வண்டியைக்(car) கிளப்பிச் சக்கரங்களைச் சுழல வைக்கும் rocket science காரிகைகளுக்குக் கை வராமல் பார்த்துக் கொண்டாலே போதும். பாதி வேலை முடிந்து விட்டது. இங்கு எவ்விதமான குற்றவுணர்வும் தேவையில்லை. இதன் மூலம் அவர்களையும் இன்ன பிற சக உயிர்களையும் பெரும் விபத்திலிருந்து காக்கிறோம் என்ற உயரிய(!) எண்ணத்தை நமது ஆழ்மனதில் நட்டு வைக்க வேண்டும். இயந்திரம்(engine) முட்டி முட்டி வண்டி முன்னும் பின்னும் வெடுக் வெடுக்கென இழுத்து நின்று போகும் ஒவ்வொரு முறையும் அருகில் அமர்ந்திருந்து ஏளனம் கலந்த எரிச்சலைக் காற்றில் பரவ விடுதல் (ராகு கேது சனி பெயர்ச்சிகளைக் காட்டிலும்) நல்ல பலன் தரும். ஒருவேளை இவ்வளவு முட்டுக் கட்டைகளையும் கடந்து ‘வண்டியைச் செலுத்துதல்’ என்னும் அடுத்த கட்டத்திற்கு நாரி நகர்ந்து விட்டாள் என்று கொள்க. ‘ப்ச்…’, ‘உஸ்ஸ்ஸ்…’, ‘ufffff...’, ‘அய்யோ..’, ‘கண்ணு என்ன பொடணிலயா இருக்கு?’ – நடுநடுவே இவ்வாறெல்லாம் வினையாற்றி அவளைக் கொலையாய்க் கொல்க. [கொள்க – கொல்க , அட! அட! அட! நிச்சயம் இக்குறிப்புகளை இயற்றியவன் கவிஞனாகத்தான் இருக்க வேண்டும்] ‘எத்தன தடவ சொல்லிக் குடுத்தாலும் மண்டைலயே ஏறாதா? உள்ள மூளைதான் இருக்கா இல்ல களிமண் இருக்கா?’ – வாய்ச்சொற்கள் என்னப் பலனும் இல! எனவே தேவையற்ற சூழலில் அடிக்கடி இவ்வார்த்தைகள் மொத்தத்தையும் பரிகாசம் பரிமளிக்கும் பெருமூச்சாக பாவைகளிடம் வெளிப்படுத்தினால் பாற்கடலில் படுத்திருக்கும் பெருமாளே பாயாசம் கடைந்து பாசமாகத் தருவார்! இடையிடையே ஆத்திரத்தை மிகவும் கடினப்பட்டு அடக்குவதைப் போன்ற பாவனைகளில் ஈடுபடுதல் நங்கையின் நாடித்துடிப்பை அதிகரித்து Cortisol, Adrenaline ஆகியவற்றின் உடனடி சுரப்பிற்குக் கண்டமேனிக்கு உதவும். அப்புறம் எவ்வளவு குட்டிக்கரணம் அடித்தாலும் அவர்கள் மனதால் நிதானத்திற்கு வரவே இயலாது. அப்படியே ஜென் மனநிலையைக் கடைபிடிக்க முயன்றாலும்தான் நாம் இருக்கிறோமே! உலையில் கொதிக்கும் அரிசியைக் கிண்டியவாறே, குழம்புக்குப் புளியைக் கரைத்து விட்டு, கூட்டு பொரியலுக்கான தேங்காயையும் அரைத்து….. மதிய வேளைக்கான சமையலை முடித்து காலை உணவு தயாராகும் போது நடுவில் குழந்தையைப் பள்ளிக்குக் கிளப்பி அனைவருக்கும் உணவை டப்பாவில் அடைத்து…. இப்படி அநாயசமாகச் சுழல்பவர்களிடம் “Clutchஅ அழுத்தி gearஅ மாத்தி அப்புறம் clutchல இருந்து மெதுவா கால எடுக்கும் அதே நேரத்துல மெல்ல accelerator குடுக்கணும். Steering controlயையும் விட்டுற கூடாது. உனக்கு multi taskingலாம் வராது” என மனசாட்சியே இல்லாமல் மூஞ்சியில் அடித்தவாறு சொல்லிட வேண்டும். நாம் கொடுக்கும் இவ்வளவு குடைச்சலையும் இம்சையையும் தூக்கிப் போட்டுத் தப்பித் தவறி ஓரளவு நன்றாக ஓட்டுகிறார்கள் எனில் “வண்டி ஏன் வளைஞ்சு வளைஞ்சு போகுது? steeringஅ நேரா புடி” என ஒழுங்காகச் செல்லும் வண்டியில் நேராகப் பிடித்திருக்கும் steeringஐ இன்னும் நேராகப் பிடிக்கச் சொல்வது; “அந்தா பாரு… லாரி நிக்குது (‘நிற்கத்தானே செய்கிறது!’ என்றெல்லாம் அவர்களை யோசிக்கவே விடக்கூடாது)… பாத்து பாத்து… கவனமா…” எனத் திடுக்கிடும் தொனியில் திணறடிப்பது; “அங்க ஒருத்தர் ஓரமா நடந்து வராரு பாரு… தள்ளிப் போ… அங்க ஏன் பாக்குற?(‘நீதான மேன் பாக்கச் சொன்ன?’ என்று அவர்கள் கேட்பதற்கான நேர இடைவெளியே இருக்கப்பிடாது!) ரோட்ட பாத்து ஓட்டு” - புதிய பீதிகளைப் புழுதியாய்க் கிளப்பி எந்நேரமும் அவர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும். வீட்டில் சும்மா இருக்கும் போது கூட வண்டி ஓட்டும் சூட்சமங்களைப் புளி, எலுமிச்சை, சபீனா பொடி போட்டு விளக்கு விளக்குன்னு விளக்கி அவர்களுக்கு வண்டி ஓட்டும் ஆசையே போய்விடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது வேலை செய்யவில்லையெனில் கோர விபத்துகள் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள், நிகழ்தகவுகள் (possibilities and probabilities) எல்லாவற்றையும் கற்பனைச் சூழல்களாக்கிக் கொடூரமாக விளக்கிப் பயத்தைப் பத்து கிலோ வகுறு புடைக்க ஊட்டி விட வேண்டும். “கொஞ்சம் தயக்கமா இருக்கு’ என்னும் பெண்ணிடம் ‘வண்டி ஓட்ட வரும் போது தைரியமா வரணும். Confidence ரொம்ப முக்கியம். இப்படி பயந்துட்டே இருந்தா ஒரு மண்ணும் படிக்க முடியாது” என்று ஆகக் கழிசடையான தன்னம்பிக்கை வகுப்பின் போர்வையில் - இப்படி ஒரு உருட்டு. “Yes. I am confident” என்று அணங்கு போல் வந்து நின்றால் “நீ நினைக்குற மாதிரி அது ஒண்ணும் சாதாரண காரியம் இல்லை. தன்னம்பிக்கை மட்டும் போதாது. யார் மேலயும் மோதிடாம கவனமா ஓட்டணும். ஓட்டிருவியா? ரோட்டுல ரோடு ரோலர் போகும்; தலைக்கு மேல விமானம் பறக்கும்; கடல்ல கப்பல் போகும்…. எங்கயும் இடிச்சுட மாட்டேல்ல? அப்புறம் பெரிய பிரச்சனை ஆகிரும்” என்று அச்சுறுத்தும் வகையில் - அப்படி ஒரு உருட்டு. அம்புட்டுதேன்! ஆக மொத்தம் ‘உனக்கு வண்டி ஓட்ட வராது’ – இதுவே தாரக மந்திரம். அவ்வப்போது இதை வெவ்வேறு வடிவங்களில் அள்ளித் தெரிவைகளின் மீது தெளித்துத் கொண்டே இருத்தல் நலம். இறுதியாக எல்லாவற்றையும் ஊதித் தள்ளி நன்றாக ஓட்டி ஓட்டுநர் உரிமம் பெற்றுவிட்டார்கள் எனில் சற்றும் கூச்சம், நாணம், வெட்கம் (அழுத்திக் கூறவே ஒருபொருட் பன்மொழி!) எதுவுமின்றி நமது கற்றுக் கொடுக்கும் திறனை எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் வியந்தே ஆக வேண்டும். ஒருபடி மேலே சென்று, “நானா கண்டு பொறுமையா சொல்லிக் கொடுத்தேன். வேற யாராவதா இருந்தா பாதிலயே ஓடிருப்பாங்க. இன்னும் சாவிய தடவிட்டு உக்காந்துருக்க வேண்டியதுதான்… ஹி ஹி ஹி” என்று வெற்றிக் களிப்பில், வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றலாம். உரிமத்தோடு அவர்கள் ஓட்டுகையில் “உனக்கெல்லாம் யாருதான் உரிமம் குடுத்தாங்களோ? மானே தேனே….” என்று அவ்வப்போது மட்டம் தட்டி உரிமத்தை அவர்களே கிழித்துப் போட வேண்டி ஊக்குவிக்கலாம், பாசி மணி விக்கலாம், சீப்பு விக்கலாம் ….. நமது நசநசப்பு தாங்காமல் பாதியிலேயே கற்றுக்கொள்வதை விட்டு விட்டார்கள் எனில், உடனடியாகவோ சில வருடங்கள் கழித்தோ “ஒழுங்கா அன்னைக்கு விடாம வண்டி ஓட்டிருக்கலாம். இன்னைக்கு எவ்வளவு உபயோகமா இருந்துருக்கும்? ப்ச்… கொஞ்சம் பொறுமையா படிச்சுருக்கலாம்” என்று அறச்சீற்றம் கொள்ளலாம். ‘பொறுமையா சொல்லித் தந்திருக்கலாம்’ என்ற மடந்தைகளின் எதிர் வாதம் மடத்தனமானதாகவே பார்க்கப்பட வேண்டும்! தாம் வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ளாதது மட்டுமே மாதுக்களுக்கு நினைவில் இருக்கும். ஏன் கற்றுக் கொள்ள மறுத்தோம் என்பதெல்லாம் மறந்து விடும். மறக்கடித்தே ஆக வேண்டும். ‘சாலை விபத்துகளிலும் அபாயகரமாக ஓட்டுவதிலும் பெண்களை விட ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர்’ எனக் கூறும் புள்ளி விவரங்கள்; ஒரு நடிகரின் வண்டிக்கு அருகில் காட்டுத்தனமாக வண்டியை ஓட்டி வலுக்கட்டாயமாக விழுப்புண் வாங்குவது; சும்மா சாலையில் செல்லும் போதே முன் சக்கரத்தைத் தூக்கியவாறே பொறி பறக்கச் செல்வது; வேண்டுமென்றே வளைந்து நெளிந்து சென்று அனைவரையும் தடுமாறச் செய்வது…. இவ்வாறாகப் பலதரப்பட்ட அருமை பெருமைகள் அடங்கிய சில பல ஆடவர்களின் வரலாற்றை ஒரு புறமாக ஒளித்து வைத்து விட்டு, வண்டியைக் கொண்டு போய்ச் சில பல பெண்கள் எங்காவது முட்டி விழும் காணொளிகளைத் தூக்கிக் கொண்டு வந்து சில்லறைகளைச் சிதற விட்டுச் சிரிப்பாய்ச் சிரித்து வைக்கலாம். ************************ எல்லா பெண்களும் சரியாக ஓட்டுவதில்லைதான். ஆனால் கற்றுத் தரும் ‘பெரும்பாலான’ ஆண்களிடம் இதை ஓங்கிச் சொல்லலாம் - ஓயாமல் ‘உன்னால் முடியாது’ என்ற சமிக்ஞைகளைத் தராமல் கற்றுத் தர உங்களால் முடியவே முடியாது. தெரியவும் தெரியாது. ஆண் ஒருவர் கற்றுக் கொடுப்பதைப் போலவே பெண் ஒருவர், (அதுவும் immediate family member) ஆணுக்கு அதே ‘வாஞ்சை’யுடனும்(!) அதே ‘ஊக்கமளிக்கும்’(!) தொனியுடனும் கற்றுக் கொடுத்தால் தாம் போதிக்கும் அதே பொறுமையை ஆண்கள் கடைபிடிப்பார்களா என்று சோதனை செய்து பார்க்கும் ஆவல் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன் என்கிறது. முடிவுதான் தெரியுமே! பயிற்சி காலத்தின் போது ரொம்பவே கைகொடுக்கும் பொன்மொழி – SILENCE IS GOLDEN! (AND DUCT TAPE IS SILVER!!!) வண்டி ஓட்டிப் பழகிக் கொண்டிருந்த காலத்திலும் அதன் பிறகும் ஆண்களைக் குட்டிக் கொண்டே இருக்க யாரும் இருந்ததே இல்லை! And that ….. that alone makes a (freaking) hell lot of difference! ************************ நியூ யார்க்கின் ஒரு நீளமான தீவில்தான் தற்போது வாசம். என்னவன் பொருள்வயின் பிரிதல் படலத்தால் இரண்டு நாட்கள் வெளியூர் சென்று விட, கடும் குளிரில் அருகில் இருக்கும் பள்ளியில் குழந்தையை நடத்தியே அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம். பத்து நிமிட நடைதான் என்றாலும் எலும்பைத் துளைக்கும் குளிரிடம் தோற்றே ஆக வேண்டும். பள்ளியில் இருந்து ஒரு குறிப்பிட்ட பரப்பளவுக்குள் இருப்பவர்களுக்குப் பள்ளி வாகனம் கிடையாது. இந்தச் சின்ன தொலைவுக்கு Uberம் வராது. இவ்வளவிற்கும் எனக்கு வண்டி ஓட்டத் தெரியாமல் இல்லை. விறைத்தபடியே வீட்டினுள் நுழைந்தும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்த கவலையும் கண் மண் தெரியாத கடுங்கோபமும் ஒன்று சேர இப்பிரச்சனையின் வேரைக் கண்டறிந்து இரண்டு பத்திகள் மேல் வரை எழுதி முடித்துவிட்டு என்னவன் திரும்பி வந்ததும் இக்கட்டுரையைப் பற்றிக் கூறினேன். சிரித்துக் கொண்டே “ஒரு நாள் ஒன்ன தனியா விட்டுட்டுப் போக முடியுதா? சரி, இன்னைக்கு நீயே வண்டி ஓட்டு. ரொம்ப பக்கத்துலதான? வா பழகிக்கோ” எனப் பரிவுடன் கூறியதைக் கேட்டு ‘மீண்டும் ஒரு முறை’ புத்தி கெட்டுப் போய் ஒப்புக் கொண்டேன். நெடு நாட்களுக்குப் பிறகு வண்டியை எடுக்கிறேன் ஆதலால் ரொம்ப மெதுவாகவே ஓட்டிக் கொண்டிருந்தேன். வண்டியை எடுத்த நொடியிலிருந்து அருகில் அமர்ந்திருந்த என்னவன் என்னும் ஜீவனின் வாய் ஒட்டே கிடக்கவில்லை. “வேகமா அழுத்து….” எனத் துவங்கி “ஏன் ஓரமா போற? அந்தக் கல்லு மேல ஏத்தப் போறியா?”, “போ ... போ… நிப்பாட்டு… brake புடி… ஏன் நிக்குற? நீதான் முதல்ல இந்த crossingக்கு வந்த… போ” (இவ்வார்த்தைகள் அனைத்தும் ஒரே வாக்கியத்தில் வர முடியும் எனப் புதிதாகக் கற்றுக் கொண்ட நாள் அது!)……. இப்படியாகப் பட்டியலில் உள்ள சில விதிமுறைகளைக் கனக்கச்சிதமாக என்னிடம் செயல்படுத்த, இம்முறை நான் “கொஞ்ச நேரம் பேசாம வாங்கப்பா… நான் பாத்துக்குறேன். Stop getting on my nerves” என்று சொல்வதை முழுதாகக் கூட முடிக்க விடாமல் “பேசீட்டே இருக்காத…. பேச்ச நிப்பாட்டீட்டு ஒழுங்கா ஓட்டு” என்ற ஜீவனிடம் “கண்ணாடி ப்பா அது!” எனச் சொல்ல நினைத்து வேறொன்றைச் சொன்னேன். “நான்கூட இதை எழுதி முடிச்சதும் கொஞ்சம் அதிகப்படியாதான் எழுதீட்டோமோன்னு நினைச்சுட்டு இருந்தேன். இல்லவே இல்லைன்னு என் மண்டையில் ஆணி அடிச்சாப்புல புரிய வச்சு, உடனே பிரசுரிக்க வேண்டிய அவசரத்தை உணர்த்தி உற்சாகமளித்ததற்கு நன்றி!” என்று நான் சொல்லவும் “இதையும் எழுதித் தொலைச்சுராத என் தெய்வமே!” என்று என்னவன் என்னிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டதால் நீங்கள் இந்தப் பகுதியை மட்டும் அம்னீசியாவுக்கு ஒப்புக் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்! ************************************ என்னைச் சுற்றியுள்ள ஆண்களிடம் அவர்கள் எப்படி ஓட்டக் கற்றுக் கொண்டார்கள் என்று கேட்டேன். அனைவரிடமும் கிட்டத்தட்ட ஒரே பதில்தான் – “முதலில் ஓட்டுநர் பள்ளியில் 3 மாதங்கள் கற்றேன். பின்னர் அப்பாவின்/நண்பரின்/உறவினரின்/எனது வண்டியை எடுத்துக் கொண்டு தனியாக நானாகப் பழகிக் கொண்டேன்”. ‘தனியாக நானாக’! ஹ்ம்ம்ம். மேலே இருக்கும் இந்தப் பத்தியை வாசித்து விட்டு என்னவன், “நான் எங்க சித்தப்பா வண்டியை எடுத்துட்டுப் போகும் போது அவங்களும்தான் கூட வருவாங்க. வண்டியைப் பின்னால் எடுக்கும் போது ‘தலையை வெளிய விட்டுப் பாரு’ன்னு அப்படியே கழுத்தோட பிடிச்சு வெளிய தள்ளுவாங்க, தெரியுமா? நாங்களும் திட்டெல்லாம் வாங்கியிருக்கோம்” என்று ஏதோ மெடல் வாங்கியதைப் போல் கூற, “ஆங்! அப்போல்லாம் இனிச்சுதா?” என்ற எனது கேள்விக்குப் பதிலே இல்லை. “சொல்லுங்கோள்” என்று என் தலையைச் சரித்து, குனிந்து கிடந்த என்னவனின் முகத்தைப் பார்க்கவும் “இதுக்கு மேல வாய தொறக்காம இருக்குறதுதான் என் கிட்னிக்கு நல்லதுன்னு நினைக்குறேன். போதும். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிச்சுக்கலாம்” என்று கெஞ்சிய என்னவனின் பேரன்புக்கு மதிப்பு கொடுப்பது என்னும் முடிவுக்கு வந்து விட்டேன். Not knowing how to drive is definitely a handicap! நான் Car ஓட்டிப் படிக்க வேண்டும். நான் நளினமாக வண்டி ஓட்ட, தாம் ஓய்வாக அதைக் கண்டு பெருமிதத்துடன் ரசித்தபடியே வர வேண்டும் என்ற ஆசை என் அப்பாவுக்கும் என்னவனுக்கும் உண்டு. But what to do? எல்லா விஷயங்களிலும் பக்குவமாக இருக்கும் அப்பாவே என்னவனைப் போல் இவ்விஷயத்தில் பரபரவென்று நிற்பது சற்றே ஆச்சர்யமளிக்கும். அதீத பொறுப்புணர்வில் இவ்வாறு தாமும் படபடத்து நமக்கும் அதைக் கடத்துவது…. ஒருவேளை Y chromosomeகளுக்கே உரித்தான பண்பாக இருக்குமோ? கடைசி வரியையும் வாசித்து விட்டு, “அடேய்! நீ தப்பு தப்பா ஓட்டுனேன்னு அதையும் சேர்த்து எழுது” என்று என்னவன் விண்ணப்பம் வைக்க ‘அப்படியே ஆகட்டும்!’ என்று அந்தப் பொய்யையும் சேர்த்துவிட்டேன். Anything for you my man! முழுதாக வாசித்துவிட்டு என் அப்பா வேறு தம் பங்குக்கு, “நல்லா எழுதியிருக்க. அதுக்காகவெல்லாம் ஒண்ணும் சொல்லாம இருக்க முடியது. மறுபடியும் சொல்லி குடுக்கும் போது திருத்தம் போட்டுட்டுதான் இருப்போம்” என்று என்னிடமும், “அவ பாட்டுக்கு எழுதிட்டு போறா, மாப்பிள்ளை! அதுக்காக நாம அப்பிடியே விட்டுற முடியுமா? அவளுக்கு நல்லா எழுத வருது. நமக்கு நல்லா வண்டி ஓட்ட வருது. அவளுக்கு எழுத்து உயிரா இருக்கலாம்.(“நமக்கு அது ***’ என்று அவர்கள் கூறியதை எழுத்து நாகரிகம் கருதி விட்டு விடுகிறேன்!) நமக்கு உயிருதான் உயிரு” என்று என்னவனிடமும் அடுக்கிக் கொண்டே செல்ல “ஏ மக்களே! காரை இனிமேல் நான் தலையில தூக்கி வச்சுகிட்டு போய்க்கிறேன்” என்று முடித்தேன். படச்சோனே! என்டெ கர்த்தாவே! ஒன்று கூடி விட்டார்களய்யா! என்னை இரட்சியும் ஆண்டவரே!
-
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
ஈரான்காரன் எண்ணை பைப்பை இறுக்கி மூட மேலை நாட்டுக்காரன் மூளை குழம்பி போனாங்கள்....இதில நம்ம சிங்கம்....கொடுப்புக்குள் மெல்லிய சிரிப்பு....🤣 மேற்குலகு ரஷ்யாவை அனுசரித்து/அரவணைத்து போயிருந்தால் சர்வதேசத்திற்கு இவ்வளவு செயற்கை அனர்த்தங்கள் வந்திருக்காது.சோவியத் ஒன்றியத்தை உடைத்தது மட்டும் தமது வெற்றி என நினைத்ததால் வந்த வினைகள் தான் இவை.😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை இன்று தீர்ப்பாக கூற முடியாது. அதை அவனது இறுதி ஊர்வலம் தெரிவிக்கும். அந்த இறுதி ஊர்வலத்திற்கு முன் எதுவும் நடக்கலாம். எதுவும் மாறலாம். அவன் தன் பக்கங்களை மாற்றியமைக்கலாம். அன்றைய பயங்கரவாதி.👇 இன்று நாட்டின் மதிப்பிற்குரிய தலைவர்.👇
-
நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
நீருக்கு அடியில்… கசிப்புக் காய்ச்சும் காத்தான் குடிகாரருக்கு ஒரு சல்யூட். 🫡 👏🏻 😂
-
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
மத்திய கிழக்குப் போரால்… அதிகம் பாதிக்கப் பட்ட ஆள் என்றால், உக்ரைன் செலென்ஸ்கிதான். தம்பர் கூட… தமக்கு உக்ரைனை விட, ஈரான்தான் முக்கியம் என்று சொன்னதால்… செலென்ஸ்கி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். அங்காலை ரஷ்யன்காரன் ஊமைக்குத்தாக குத்திக் கொண்டு இருக்கிறான் போலுள்ளது. 😂
- Yesterday
-
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
சரியான கணிப்பு😂
-
பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்
முன்னைய காலத்தை போல் தனித்துவ அரசியலுக்காக பாரிய விலை கொடுக்க இன்றய சமூகம் தயாரில்லை என நினைக்கின்றேன். மேற்குலகு மக்கள் மாற்று அரசியல்வாதிகளுக்கு அதிக வரவேற்பு கொடுக்கின்றார்கள்.அமெரிக்காவில் சிவப்பு கொடியும் தூக்கப்படுகினது. அன்று போல் இன்றில்லை.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
வழமை போலவே விஜய் தான் மாட்டுப்பட்டிருக்கின்றார். தொழில்முறை அரசியல்வாதிகள் எல்லோரும், ஸ்டாலின் & சீமான் உட்பட, வாலை மட்டுமே வெளியே காட்ட, விஜய் தலையை காட்ட வேண்டிய நிலை. ஒரு படத்துக்கு இவ்வளவு கோடிகள் வாங்குகின்றேன், அதை எல்லாம் அப்படியே விட்டு விட்டு தமிழ் மக்களை காப்பாற்ற அரசியலுக்கு வந்து இருக்கின்றேன் என்று சொல்லி விட்டு, சொத்து மதிப்பாக 400 அல்லது 500 கோடிகள் கூட காட்டாமல் இருக்க முடியாது தானே. அம்மாவுக்கு கடன்/முன் பணம் கொடுத்தேன் , அப்பாவுக்கு கடன்/முன் பணம் கொடுத்தேன், சங்கீதாவுக்கு கொடுத்தேன், பிள்ளைகளுக்கு கொடுத்தேன்................... இந்தளவு விளக்கமாக இதுவரை பொதுவெளியியில் பேசிக் கொண்டிருந்தது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமே......................🤣.
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
நான் சொல்ல வந்ததை நீங்கள் சிக் என பிடித்து விட்டீர்கள். மோரல் ஒவ் த ஸ்டோரி: நாம் கேட்க்கும் விதத்தில் தங்கி உள்ளது ஏ ஐ யின் பதில். பின்வரும் prompt ஐ மேட்டாவிடம் கொடுத்து பாருங்கள் என்ன விடை சொல்கிறது என. Your statements above are wholly based on speculation. Other than hearsay and third party allegations, there is no evidence to show that the UK knowingly supplied SL with cluster munitions. The UK has well established defense export protocols and they specifically ban selling of such weapons to countries with dubious human rights records. There is no credible evidence to show that there exists a loophole in this rigid export control regime. The UK cannot be blamed for UK based individuals or companies like Keenie Meeni supplying, and or assisting SL’s war effort. கேட்பதை கொடுப்பவனே…ஏ ஐ…ஏ ஐ… கேள்வியின் நாயகனே😂
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
AI இல் இருக்கும் தகவலே வரும். எதுவாயினும், சிங்களத்துக்கு cluster bomb ஐ பாவிக்கும் படி ஆலோசனை கொடுத்த்தது அமெரிக்கா. இரானுக்கு cluster குண்டு (bomb) தொழிற்நுட்பத்தில் உற்பத்தியில் அக்கறை இல்லை. ஏனெனில். அதுக்கு பாவிக்க விமான தொழில் நுட்பம் இல்லை. மற்றும் அதன் அரசு சாரா குழுக்களுக்கும். அனால் தரகு வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கலாம். ஆனால், இரான் சிங்களத்துடன் எந்த ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தாலும், அமெரிக்கா அனுமதித்து us dollar clearance செய்யாது ஈரான் ஈடுபட்டு இருக்க முடியாது. ஆகவே, ஈழ தமிழர்களின் இன அழிப்பில், அமெரிக்கா இரானிடம் கொண்டுள்ள வன்ம பகையை ஒத்திவைத்து விட்டு, ஈரான் சிங்களத்து ஆயுதம் விற்க பின்னின்று வசதி படுத்தி உள்ளது. இதில், ஏன் இரானை பிழை சொல்ல வேண்டும்? ஏவியது, கொடுக்க வாசகிப்படுத்தியது ... எல்லாம் அமெரிக்கா.
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
உண்மையைச்சொல்லப்போனால்; உலகமகா பெரிய திருடன், தன் திருட்டுக்குக்கு, ஜனநாயகம் பேசியதும் அணுஆயுத தயாரிப்பு குற்றம் சாட்டியதும் தன்னைத்தானே ஏமாற்றிய செயல் ஆனால், உலகத்திற்கு தெரியும் இவரின் உண்மையான உள்நோக்கம். வீட்டுக்காரனை கொலைசெய்து, காயப்படுத்தி, கட்டிப்போட்டு திருட வேண்டுமாம். இப்போ தன் வாயாலேயே கக்கிவிட்டார். பேச்சுவார்த்தை நடக்கும்போது, உங்கள் ஆட்களை அனுப்பி ஆராய்ந்து உண்மையை விளங்கிக்கொள்ளுங்கள், நாங்கள் அணுஆயுத உற்பத்தியை நிறுத்திவிட்டோம் என்று கூறும்போதே, அவசரமாக ஏன் தாக்குதல் நடத்த வேண்டும்? இத்தனை அழிவுகளை சந்தித்தும் ஈரான் ஏன் அணு ஆயுதங்களை பாவிக்கவில்லை? இல்லாத ஆயுதத்தை அதனால் எப்படி பாவிக்க முடியும்? இன்னொருவன் நாட்டுக்குள் புகுந்து, அவர்களுக்கு இயற்கை வழங்கிய வளங்களை அழிக்க இவர் யார்? இரான் உயிரே அழிந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டாது, கொடுக்கவும் கூடாது. ஒருவேளை அந்த நிலை வந்தால்; அதற்காக அமெரிக்கா முழுவதும் வருந்தும் நிலை ஏற்படும். இது, எத்தனை மூடத்தனமான பேச்சு என விளங்கிக்கொள்ள அவருக்கே சுய அறிவு இல்லை. அவர்களிடம் எந்த வசதியும் இல்லை என்றால்; எப்படி இத்தனை வாரங்களாக போர் நடக்கிறது? ஏன் மேலதிக படைகளை அமெரிக்கா அனுப்ப வேண்டும்? நட்பு நாடுகளை அழைக்க வேண்டும்? நட்பு நாடுகள் மட்டுமல்ல சொந்த மக்களே இவரை கைவிட்டு இவரை வீட்டுக்கு போகும்படி போராடுகிறார்கள். அதையும் புரிந்து கொள்ளும் திறன் இவரிடம் இல்லை. "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது." இவரின் நாட்டுக்குள் யாரும் உள்நுழைந்து அவரது வளங்களை திருட ட்ரம்ப் அனுமதிப்பாரா அல்லது உலகம் அனுமதிக்குமா? நெதன்யாகு என்கிற விஷப்பாம்பின் அறிவுரையை கேட்டு மாட்டிக்கொண்டார் ட்ரம்ப். இப்போ இருவரும் முழிக்கிறார்கள். ஈரானை அழிக்க நினைத்து இஸ்ரேலும் சேர்ந்து அழிகிறது.
-
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
அமெரிக்க இஸ்ரேல் மமதைக்காக இந்த உலகம் பலிக்கடா ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.😡 உக்ரேனுக்காக போராடிய நம்மவர்கள் பலர் பாரசீக போரின் பின்னர் காணாமல் போய் விட்டார்கள். இதை ஜெலன்ஸ்கி கூட ஈரான் போரால் தாங்கள் காணாமல் போய் விடுவமோ என ஆதங்கப்பட்ட செய்திகள் பல உண்டு.😂
-
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
இந்த உலகம் போற போக்கை பாத்தால் எல்லா நாடுகளும் அணு மின்சக்தியை உருவாக்கினால் நல்லது போல கிடக்குது....அதன் மூலம் மின்சார வாகன பாவனை.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தன்னை நோக்கி கேள்வி கேட்டவரை தொடர்ந்து உரையாடும் படிதான் வேண்டுகோள் வைக்கின்றார் சீமான். அந்த நிலையில் பாதுகாவலர்கள்(உங்கள் பாசையில் குண்டர்) சம்பந்தப்பட்டவரை அப்புறுத்தப்பட வேண்டிய கட்டாயம் அந்த பாதுகாவலர்களுக்கு உண்டு. கேள்வி கேட்ட அந்த நபர் ஏதாவது அசம்பாவிதம் செய்தால் பொறுப்பு கூற வேண்டியவர்கள் அந்த பாதுகாப்பாளர்கள் மட்டுமே.அந்த இடத்தில் ஏதாவது நடந்தால் நீதி நியாயம் என பறை தட்டக்கூடியவர்தான் தாங்கள்😜 உங்கள் போன்ற மதில் மேல் பூனை கருத்தாளர்களுக்கு எங்கும் எந்த திரியிலும் பொன் வசந்தமே.🧐 நான்/நாம் அப்படியல்ல. எமக்கு என நாம் எம் இனம் என தனிப்பாதையுடன் பயணிக்கின்றோம்.😎 அவ்வளவே....பதில் கருத்து எதிர்பார்க்கவில்லை. நன்றி🙏
-
அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல்
👍 அது ஒரு நாறல் கிளி என பலருக்கும் தெரியும். ஆனால் அது ஒரு மெழுகு பூசிய கிளி என பலருக்கு தெரிவதில்லை. உள் ஊத்தைகள் வெளியே தெரிய வாய்ப்பில்லை என நினைக்கின்றது.😂...🤣
-
வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு
ஹா ஹா ..... இவையெல்லாம் திடீரென முளைத்தவை போல் இவர் கதை விடுகிறார். இவர்களின் காலத்தில் தனிப்பட்ட பழிவாங்கல் கொலை, கடத்திக்கொலை, ஆட்கடத்தல், மணற்கொள்ளை இவற்றை மூடி மறைக்க இவற்றை பயன்படுத்துகிறாரா பன்னீர்ச்செல்வம் ஸ்ரீகாந்த்? அதைவிட மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்தாமை, பொதுமக்களின் கட்டிடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தல் இவையெல்லாம் சட்டத்திற்கு உடபட்டவையா? சரி இத்தனை மக்களுக்கு சேவை செய்யும் சேவையாளனை மக்கள் ஏன் தொடர்ந்து நிராகரிக்கிறார்கள்?
-
நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
கா.குடி பெயரை....பாவிப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் ....அவ்வூரவர் ஈரானுக்கு இந்த பங்கர் அமைப்பு முறையை பரீட்ட்சித்துப் பார்க்க செய்த இடத்தில்...யாரோ விசமிகள் இதில் புகுந்து கசிப்பை செய்திருக்கிறார்கள்...என்று புல்லாவோ ..கக்கிமோ அறிக்கை விடலாம் ...எனவே மற்ற இனம் அடக்கி வாசிக்கவும்
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
Is it possible that United Kingdom had some involvement in Sri Lanka getting cluster bombs? Meta AI: There are allegations that the UK was involved in supplying cluster bombs to Sri Lanka, but the nature of this involvement is disputed. Some reports suggest British arms dealers used loopholes in UK law to sell weapons, including cluster bombs, to Sri Lanka via offshore companies. In 2012, the UK government acknowledged that UK-based companies might have exported cluster munitions to Sri Lanka between 2007-2009, but stated they hadn't found evidence of direct exports. The UK has since signed the Convention on Cluster Munitions, banning the use, production, and transfer of cluster bombs [1][2]. Would you like more details on international efforts to regulate cluster bombs? Other than Russia & United Kingdom what are the other countries suspicious of provided Cluster Bombs to Sri Lanka? Other countries suspected of providing cluster bombs to Sri Lanka include: - China: Provided significant military aid, including fighter jets and artillery, worth over $1 billion. - United States: Provided military aid, including training and equipment, worth over $500 million, and possibly cluster bombs via arms dealers. - Israel: Supplied military equipment, including Kfir jets and drones, and offered strategic military advice. - Pakistan: Supplied military equipment, including Al-Khalid tanks and artillery. - Iran: Supplied military equipment, including rockets and rocket launchers, worth over $140 million. These countries have been linked to the supply of cluster bombs or military equipment to Sri Lanka during the civil war ¹ ². Would you like to know more about the impact of cluster bombs in Sri Lanka or international regulations surrounding these weapons?
-
'உணவு, மருந்துகள், ஸ்மார்ட் ஃபோன்கள்' - ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் எதெல்லாம் விலை உயரும்?
மத மூட நம்பிக்கை/சாத்திர நம்பிக்கை உள்ளவர்களை விட.... படித்தவர்கள்,விஞ்ஞானிகள், அறிவாளிகள்,நாகரீக நாடுகள்,எல்லாம் தெரிந்தவர்கள்,நான்கு பக்கமும் சிந்திப்பவர்கள் தான் இந்த உலகின் பெரிய மூடர்களாக இருக்கின்றார்கள்.👈 😛 போர்... புதிய நோய்க்களை உருவாக்குதல் என....அதன் மூலம் வரும் அழிவுகள்....அதன் மூலம் வரும் பசி பட்னி,இடம் பெயர்வுகள்,அகதிகள் இதையெல்லாம் யார் உருவாக்கினார்கள்?👇 மதமா இல்லையேல் அறப்படித்தவர்களா?👆 மதமும் அரசியலும் மனிதனுக்கு முக்கிய வழிகாட்டிகள். அது தவறான கைகளுக்கு போன பின் அந்த இரண்டும் தவறென தெரிகிறது. நிலமை இப்படியிருக்க அறிவியல் தன் போர்க்குணத்தை விரிவாக்கிக்கொண்டே போகின்றது.