Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. வோட்டை மக்கள் தராது விடினும் … ஆமை ஓட்டை வைத்தே ஆட்சியை பிடிப்பேன்…. புஹா…ஹ.ஹா😂
  3. நல்லது யாழ் களத்தில் அனுரவின் முகத்தை பலர் கிழிக்க தொடங்கி உள்ளனர். காவடிகள் மூவர் சுழண்டு ஆடியும்…
  4. Today
  5. நன்றி நிழலி பகிர்தலுக்கு... இதை பார்த்தவுடன் பக்கத்தில் இருந்த மகளிடம் (மருத்துவம் கடைசி வருடம்) என்னையும் மனைவியையும் உடனே பதியும்படி சொன்னேன். தமிழர்கள் செய்வது அரிது. உடனே தன்னையும் சேர்த்து செய்வதாக சொன்னார்.
  6. அட்லாண்டா (WANF/கிரே நியூஸ்) - வால்மார்ட் கடையில் ஒரு குழந்தையைக் கடத்த முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தனது வாழ்க்கை தலைகீழாக மாறியதாகக் கூறி, ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒருவர் அக்வொர்த் நகராட்சி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் கழித்தார், மேலும் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படுவதற்கு முன்பு மிரட்டல்களையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. செப்டம்பரில் நகராட்சிக்கு அனுப்பப்பட்ட ஒரு முன் அறிவிப்பின்படி, மகேந்திர படேல் அவதூறு, மானநஷ்டம், கவனக்குறைவு, தவறான சிறைவைப்பு, மன உளைச்சல் மற்றும் பல காரணங்களுக்காக அக்வொர்த் நகராட்சியிடம் இருந்து 25 மில்லியன் டாலர் இழப்பீடு கோருகிறார். மார்ச் மாதம் வால்மார்ட் கடையில் ஒரு குழந்தையைக் கடத்த முயன்றதாக படேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு எதிரான அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளும் ஆகஸ்ட் மாதம் கைவிடப்பட்டன. படேலின் வழக்கறிஞர் ஆஷ்லே மெர்ச்சன்ட், இந்த முழு சம்பவத்தையும் ஒரு தவறான புரிதல் என்று கூறினார். தனது கட்சிக்காரர், கைகளில் நிறைய பொருட்களை வைத்திருந்த ஒரு தாய்க்கு உதவ மட்டுமே முயன்றார் என்றும் அவர் தெரிவித்தார். படேல் தனது வயதான தாய்க்கு டைலெனால் மருந்து வாங்குவதற்காக கரோலின் மில்லர் என்ற வால்மார்ட் வாடிக்கையாளரிடம் உதவி கேட்டபோது இந்தச் சம்பவம் தொடங்கியதாக மெர்ச்சன்ட் கூறுகிறார். கண்காணிப்பு வீடியோவில், மில்லர் தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் ஒரு மொபிலிட்டி ஸ்கூட்டரில் பயணிப்பது தெரிகிறது. https://www.kbtx.comMan accused of trying to kidnap toddler from Walmart sues...The man's lawyer called the whole thing a misunderstanding, saying her client was merely trying to help a mother who had her hands full.
  7. @Eppothum Thamizhan தலைவா நீங்கள் இல்லாமலா? கடைசி ஆளாக குதிப்பது நீங்கள் தான். இம்முறை கிருபனுக்கு வேலை கூடுதலாக இருப்பதால் நேரத்தோடு பதிந்தால் அவருக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும்.
  8. போட்டியில் கலந்து கொண்டவர்களில் கீழே உள்ளவர்களின் பதில்கள் இதுவரை தரவேற்றப்பட்டுள்ளது. 1 செம்பாட்டான் 2 ஏராளன் 3 வசீ @புலவர் ஐயா, பல கேள்விகளுக்குப் பதில்கள் சரியாக இல்லை! உங்கள் பதில்களை திரும்பச் சரிபார்த்து புதிய பதிவாக பதில்களைப் போட்டால் ஏற்றுக்கொள்ளப்படும்.
  9. சிறப்பு. பார்ப்போம் எவ்வாறு நடக்கப் போகின்றது என்று. மக்களே உங்கள் உதவி கிருபனுக்குத் தேவை. சிரத்தை எடுத்துப் பதியுங்கள். எல்லோரும் கலந்து கொள்ளுங்கள்.
  10. இறுக்கமான validation செய்து, தவறான பதிலுக்குப் "பிழை" காட்டச் செய்யலாம். ஆனால் கூகிள் ஷீற்றைப் பாவிக்காமல் நேரடியான பதில்களைத் தரக்கூடும். அது எனக்கு இன்னமும் அதிகவேலையைக் கொடுக்கும். இப்போது கூகிள் ஷீற்றில் சிவப்பு வர்ணத்தில் மேலதிக விளக்கம் கொடுத்துள்ளேன். வாசித்தால் விளங்கும் என்று நினைக்கின்றேன்!
  11. உங்களுக்கு எப்பிடி உதவி செய்யலாம் என்று யோசிக்கின்றேன். இவ்வாறு நடக்கப் போகின்றது என்று எதிர்பார்த்தேன்.
  12. @ஏராளன் , உங்கள் தெரிவுகளின்படி WI சுப்பர்8 இல் இல்லை! எனவே இக்கேள்விக்கு BAN அல்லது SA ஐ தெரிவு செய்யலாம், அல்லது அப்படியேயும் விடலாம்! உங்கள் தெரிவுகளின்படி இவை மாறிவரும். ஏனெனில் உங்கள் தெரிவின்படி பாகிஸ்தான் குழு 2 இல் முதலாவதாக வந்தால் PAK - IND போட்டி கொழும்பில் நடைபெறும். மாற்றவேண்டும் என்றால் சொல்லுங்கள். இக்கேள்விக்கு வீரர் ஒருவரின் பெயரைத் தரவேண்டும்
  13. டக்ளஸ் துப்பாக்கி விவகாரத்தின் திடுக்கிடும் பின்னணி! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 2019-ல் வெலிவேரிய காட்டில் மீட்கப்பட்ட பாதாள உலகத் தாதா மாகதுர மதுஷின் துப்பாக்கிக்கும் டக்ளஸுக்கும் என்ன தொடர்பு? எழுத்தும் தேடலும்: Zafar Ahamed
  14. நியூ யார்க் நகரில் உறைபனி - தாக்கத்தை உணர்த்தும் புகைப்படங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ப்ரூக்ளினில் குவிந்திருக்கும் பனியில் குழந்தைகள் சறுக்கி விளையாடுகின்றனர். கட்டுரை தகவல் குவாசி ஜியாம்ஃபி அசிடூ 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணம் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவைச் சந்தித்துள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,சென்ட்ரல் பார்கில் குவிந்திருக்கும் பனியில் ஒருவர் சறுக்கி விளையாடுகிறார். நியூ யார்க் நகரின் சென்ட்ரல் பார்கில், 11 செமீ அளவு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,நியூ யார்க் நகரின் ப்ரூக்ளினில் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாகாணத்தின் மற்ற இடங்களில் 19 செமீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை துறை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Kena Betancur/Getty Images படக்குறிப்பு,சாலைகளில் உறைந்து கிடக்கும் பனியில் ஆர்வத்துடன் சறுக்கி விளையாடச் செல்லும் குழந்தைகள் பனிப்புயல் காரணமாக மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட கவுன்டிகளில் நியூ யார்க் ஆளுநர் கேத்தி ஹோசுல் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பனியில் விளையாடிய மக்கள் பனி மனிதன் உருவத்தை உருவாக்கியுள்ளனர். சனிக்கிழமை, நியூ யார்க் பகுதியில் 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,Spencer Platt/Getty Images படக்குறிப்பு,பாதையில் குவிந்திருக்கும் பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விமானங்களை கண்காணிக்கும் இணையதளமான ஃப்ளைட் அவேரின்படி, நாடு முழுவதும் 8000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. பட மூலாதாரம்,Spencer Platt/Getty Images படக்குறிப்பு,சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை மூடியுள்ள பனிப்பொழிவு சனிக்கிழமை அன்று நியூ யார்கின் மத்தியப் பகுதியான சிராக்யூஸிலிருந்து தென் கிழக்கு பகுதியான லாங் ஐலான்ட் வரை 15 செமீ முதல் 25 செமீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பட மூலாதாரம்,Spencer Platt/Getty Images படக்குறிப்பு,உறைந்திருக்கும் பனியில் சறுக்கி விளையாடும் குழந்தைகள் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நியூ ஜெர்சியிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,TIMOTHY A. CLARY / AFP via Getty Images படக்குறிப்பு,நியூ யார்கின் சென்ட்ரல் பார்க்கில் பனியால் சூழப்பட்ட குட்டையில் பறவைகள் கனெக்டிகட்டில் உள்ள ஃபேர்ஃபீல்ட் கவுன்டியில் 22 செமீ பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பனிப்போர்வை போர்த்தியிருக்கும் நியூ யார்கின் சென்ட்ரல் பார்க் பனிப்புயல் தற்போது குறைந்திருந்தாலும் வெப்ப நிலை உறைய வைக்கும் நிலையிலும் சாலைகள் ஆபத்தான நிலையிலும் உள்ளன. பட மூலாதாரம்,TIMOTHY A. CLARY / AFP via Getty Images படக்குறிப்பு,பனியால் சூழப்பட்ட சென்ட்ரல் பூங்காவில் செல்லப்பிராணியுடன் நடைபயிற்சி வீடற்றவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவதற்கான கோட் ப்ளூ நியூ யார்க் செயல்படுத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பனி போர்த்திய சாலையில் நடந்து செல்லும் மக்கள். பட மூலாதாரம்,Getty Images இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62vp1g5ky3o
  15. சம்பூர் கடற்பரப்பில் இந்தியாவுக்குச் சொந்தமான ரொக்கட்டின் பாகம் கரை ஒதுங்கியுள்ளது Published By: Vishnu 28 Dec, 2025 | 10:07 PM சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் மாலையளவில் சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளதாகவும் குறித்த பகுதியில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ரொக்கட்டின் பாகங்களாக இருக்கலாமா எனவும் ரொக்கட் மேலெழுந்து செல்கின்றபோது கழன்று விழுகின்ற பாகங்களாக இவை இருக்கலாமா என்று சந்தேகம் வெளியிடப்படுகின்றன. https://www.virakesari.lk/article/234614
  16. 'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சோமாலியர்கள் சோமாலிலாந்து என்ற தனி நாட்டை உருவாக்கக் கோரிப் போராடியபோது எடுக்கப்பட்டது. 28 டிசம்பர் 2025, 07:51 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமாலிலாந்தை (Somaliland), தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் உருவெடுத்துள்ளது. விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சோமாலிலாந்துடன் ஒத்துழைப்பை உடனடியாக விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையை ஒரு 'வரலாற்றுத் தருணம்' என்று சோமாலிலாந்து அதிபர் அப்துர்ரஹ்மான் முகமது அப்துல்லாஹி கூறியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு காணொளியில், ஆபிரகாம் உடன்படிக்கையில் (Abraham Accords) இணைய சோமாலிலாந்து கொண்டுள்ள விருப்பம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் தெரிவிக்கப் போவதாக நெதன்யாகு கூறினார். 2020-ஆம் ஆண்டில், டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தின் போது கையெழுத்தான ஆபிரகாம் உடன்படிக்கையின் படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தின. இதில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்தார். சோமாலிலாந்தும் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணையத் தயாராக இருப்பதாக அப்துல்லாஹி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். எனினும், இந்தத் தகவல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, சோமாலிலாந்தை அங்கீகரிக்கும் முடிவை தாம் பின்பற்றப் போவதில்லை என்றும், ஆனால் இந்த விவகாரத்தைப் பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார். நியூயார்க் போஸ்ட் (New York Post) டிரம்பிடம் சோமாலிலாந்தை அங்கீகரிப்பீர்களா என்று கேட்டபோது, முதலில் "இல்லை, இன்னும் இல்லை" என்று கூறினார். ஆனால், பின்னர் தனது பதிலை "இல்லை" என்று மாற்றிக்கொண்டார். 'உண்மையில் சோமாலிலாந்து எங்குள்ளது என்று யாருக்காவது தெரியுமா?' என்றும் டிரம்ப் கேள்வி எழுப்பினார். சோமாலியாவிலிருந்து பிரிந்த அந்த நாட்டில் அமெரிக்க ராணுவத் தளம் அமையுமா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "அது ஒன்றும் பெரிய விஷயமல்ல" என்று அவர் பதிலளித்தார். "எல்லாம் கவனிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் இதை ஆராய்வோம். நான் பலவற்றை கவனித்து எப்போதும் சிறந்த முடிவுகளை எடுக்கிறேன், அவை சரியானதாகவே முடிகின்றன," என்று டிரம்ப் கூறினார். பட மூலாதாரம்,X/@netanyahu படக்குறிப்பு,சோமாலிலாந்து அதிபருடன் காணொளி அழைப்பு மூலம் நெதன்யாகு உரையாடுகிறார். சோமாலிலாந்து உருவானது எப்போது? சோமாலிலாந்து என்பது சோமாலியாவிலிருந்து பிரிந்து 1991 முதல் ஒரு தனி நாடாகச் செயல்பட்டு வரும் பிராந்தியமாகும். இஸ்ரேலின் இந்த அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க சோமாலியா, துருக்கி மற்றும் ஜிபூட்டி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் எகிப்து வெளியுறவு அமைச்சர் தனித்தனியாக தொலைபேசி மூலம் உரையாடினார். எகிப்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நான்கு நாடுகளும் சோமாலியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான தங்களின் ஆதரவை உறுதிப்படுத்தியதோடு, ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரித்துள்ளன. இறையாண்மை கொண்ட நாடுகளின் சில பகுதிகளைத் தனி நாடுகளாக அங்கீகரிப்பது சர்வதேசச் சட்டம் மற்றும் ஐநா சாசனத்தின் கீழ் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பல ஆண்டுகளாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஆனால் காஸா போர் மற்றும் இரானுக்கு எதிரான மோதல் உள்ளிட்ட சமீபத்திய போர்கள் அதன் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளன. சோமாலிலாந்து, ஏடன் வளைகுடாவில் ஒரு மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அது தனக்கென சொந்த நாணயம், பாஸ்போர்ட் மற்றும் காவல் படைகளைக் கொண்டுள்ளது. 1991-இல் முன்னாள் சர்வாதிகார ஜெனரல் சியாத் பாரேவுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு உருவான சோமாலிலாந்து, அன்றிலிருந்து பல தசாப்தங்களாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 60 லட்சம் பேர் வசிக்கும் இந்தச் சுய-பிரகடன குடியரசு, சமீபத்திய ஆண்டுகளில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து தொடர்பான பல பிராந்திய மோதல்களிலும் ஈடுபட்டுள்ளது. நான்கு புறமும் நிலப்பரப்பால் சூழப்பட்ட எத்தியோப்பியா, சோமாலிலாந்துடன் கடந்த ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி எத்தியோப்பியா துறைமுகம் மற்றும் ராணுவத் தளத்திற்காக சோமாலிலாந்தின் கடற்கரையின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுக்க இருந்தது. இது சோமாலியாவை ஆத்திரமடையச் செய்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'உண்மையில் சோமாலிலாந்து எங்குள்ளது என்று யாருக்காவது தெரியுமா?' என்றும் டிரம்ப் கேள்வி எழுப்பினார். இஸ்ரேலின் இந்த முடிவு ஏன் முக்கியமானது? இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் வெள்ளிக்கிழமை அப்துல்லாஹியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து தொலைபேசியில் உரையாடினார். இதற்கிடையில், சோமாலியாவின் வெளியுறவு அமைச்சகம் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்துள்ளது. இது தனது இறையாண்மை மீதான "திட்டமிட்ட தாக்குதல்" என்றும், "இஸ்ரேலால் எடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை" என்றும் அது கூறியுள்ளது. சோமாலியா தவிர, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), துருக்கி, சௌதி அரேபியா, எகிப்து, உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இருப்பினும், சோமாலிலாந்து துருக்கியின் விமர்சனத்தை நிராகரித்துள்ளது. "துருக்கியின் எதிர்ப்பு கள யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. 34 ஆண்டுகளாக சோமாலியாவின் ஒரு பகுதியாக இல்லாத சோமாலிலாந்து குடியரசை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. சோமாலிலாந்து அதிபர் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், முக்கிய நகரங்களில் நடக்கும் கொண்டாட்டங்கள் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றன. சோமாலிலாந்து மக்களுக்கு மதிப்பளிக்குமாறு துருக்கியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அது கூறியுள்ளது. சோமாலிலாந்து பல ஆண்டுகளாகத் தூதரக அங்கீகாரத்தைப் பெற முயற்சி செய்து வருகிறது. கடந்த அக்டோபரில் அப்துல்லாஹி எத்தியோப்பியா சென்றது உள்பட, சமீபகாலமாக அதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) நிலவரப்படி சோமாலிலாந்து எந்த நாட்டிலிருந்தும் முழு அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றாலும், எத்தியோப்பியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் தூதரகத் தொடர்புகளைப் பேணி வருகிறது மற்றும் அந்த நாடுகளின் அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகிறது. முன்னணி அரபு ஊடகமான 'அல்-மானிட்டர்' (Al-Monitor) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆப்பிரிக்கப் படைப் பிரிவின் (US AFRICOM) தலைவர் ஜெனரல் டாக்வின் ஆண்டர்சன் சோமாலிலாந்துக்குச் சென்று அப்துல்லாஹியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடந்த உச்சிமாநாட்டில் சோமாலிலாந்து அதிகாரிகள் பங்கேற்றதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தினர் என்று சோமாலிலாந்து வெளியுறவு அமைச்சகம் அப்போது அறிவித்திருந்தது. சோமாலிலாந்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு ராணுவத் தளம் இருப்பதாகத் தகவல்கள் உள்ளன. இருப்பினும், இதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டிபி வேர்ல்ட் நிறுவனத்திற்கு சோமாலிலாந்தின் பெர்பெரா நகரில் ஒரு துறைமுகம் இருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு தொடர்பு உள்ளதா? இஸ்ரேல் திடீரென சோமாலிலாந்தை அங்கீகரித்ததற்குப் பின்னால் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஆப்பிரிக்க விவகாரங்கள் நிபுணரும் ஆய்வாளருமான கேமரூன் ஹட்சன் எக்ஸ் தளத்தில், "பொதுவாக ரகசியமாகச் சொல்லப்படுவதை பிபி (நெதன்யாகு) வெளிப்படையாகக் கூறியுள்ளார். சோமாலிலாந்து அங்கீகாரத்தை ஆபிரகாம் உடன்படிக்கையுடன் இணைப்பதன் மூலம், சமீபத்திய ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் ஹார்ன் (சோமாலியா தீபகற்பம் என்றும் அழைக்கப்படுகிறது) பகுதியை மறுசீரமைப்பதில் முக்கிய பங்கு வகித்த நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செல்வாக்கையும் ஆதரவையும் இஸ்ரேல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது," என்று பதிவிட்டுள்ளார். 2020-ஆம் ஆண்டில் இஸ்ரேலுடன் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைந்த முதல் நாடுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகும். செங்கடல் மற்றும் பாப்-எல்-மண்டேப் (Bab-el-Mandeb) ஜலசந்திக்கு அருகில் இருப்பதால், 'ஆப்பிரிக்காவின் ஹார்ன்' பிராந்தியம் மூலோபாய ரீதியாக முக்கியமாகக் கருதப்படுகிறது. சப்-சஹாரா (சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகள்) ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை மேம்படுத்த இஸ்ரேல் முனைப்பு காட்டுகிறது. இது 2021-இல் ஆப்பிரிக்க ஒன்றியத்தில் (African Union) பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது. ஆனால் பல உறுப்பு நாடுகளின் எதிர்ப்பு காரணமாக 2023-இல் இந்த அந்தஸ்து இடைநீக்கம் செய்யப்பட்டது. அரபு லீக்கில் உறுப்பினராக இருப்பதால், சோமாலியாவுக்கு இஸ்ரேலுடன் தூதரக உறவுகள் இல்லை. ஆனால் துருக்கிக்கு சோமாலிலாந்தின் தலைநகரான ஹர்கீசாவில் ஒரு தூதரகம் உள்ளது. இஸ்ரேலின் வியூகம் பட மூலாதாரம்,X/@netanyahu சோமாலிலாந்தை அங்கீகரிப்பதன் பின்னணியில் மூலோபாயக் காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தனது எதிர்கால நடவடிக்கை உள்ளிட்ட பல மூலோபாய காரணங்களுக்காக செங்கடல் பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கு கூட்டாளிகள் தேவை" என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கருத்து ஏமனில் உள்ள இரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டது. அதே அறிக்கையில், "அத்தகைய ஒத்துழைப்புக்கு சோமாலிலாந்து ஒரு சிறந்த நாடாகும், ஏனெனில் அது மோதல் மண்டலத்திற்கு அருகிலுள்ள ஒரு செயல்பாட்டுப் பகுதிக்கான அணுகலை இஸ்ரேலுக்கு வழங்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் பொருளாதாரக் காரணங்களும் இருப்பதாக அந்த அறிக்கை கூறியது. அதே நேரத்தில், சோமாலிலாந்துக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லாதது வெளிநாட்டுக் கடன்கள், உதவிகள் மற்றும் முதலீடுகளைப் பெறுவதற்குத் தடையாக உள்ளது. இதனால் அந்தப் பிராந்தியம் வறுமையில் சிக்கியுள்ளது. "சோமாலிலாந்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இஸ்ரேல் அங்கீகரித்திருப்பது ஒரு முக்கிய மூலோபாயப் பகுதிக்கு கதவைத் திறக்கிறது: பெர்பெரா துறைமுகத்திற்கு நேரடி அணுகல் கிடைப்பது, ஹூத்தி அச்சுறுத்தலுக்கு மத்தியில் செங்கடல் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் இரான் செல்வாக்கை எதிர்கொள்வது," என்று புவிசார் அரசியல் எழுத்தாளர் வாலினா சக்ரோவா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெர்பெரா நகரில் பெரும் முதலீடு மற்றும் ராணுவ இருப்பைக் கொண்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் டிரம்பின் நிர்வாகம் இதற்கு ஆதரவு அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2023இல் துருக்கிய அதிபராக எர்துவான் மீண்டும் தேர்வானதை சோமாலியா மக்கள் கொண்டாடியதை இந்தப் புகைப்படம் காட்டுகிறது. இந்த அங்கீகாரம் துருக்கி, சௌதி அரேபியா, எகிப்து, ஓமன், ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலிய முன்னாள் அதிபர் முகமது ஃபர்மாஜோ கூறுகையில், "சர்வதேசச் சட்டத்தின்படி, சோமாலியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் இஸ்ரேல் மதிக்க வேண்டும். சோமாலியாவின் எந்தப் பகுதியையும் தனிநாடாக அங்கீகரிப்பது இந்தச் சட்டத்தை முழுமையாக மீறுவதாகும். சோமாலிலாந்து சோமாலியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி. இறையாண்மையைப் பாதுகாப்பதில் எங்கள் மக்கள் உறுதியுடன் இணைந்துள்ளனர்," என்றார். சோமாலியாவை உறுப்பினராக கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் சோமாலிலாந்துக்கான எந்தவொரு அங்கீகாரத்தையும் நிராகரித்துள்ளது. "சோமாலியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தவொரு முயற்சியும் கண்டம் முழுவதிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் இது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும்," என்று அதன் தலைவர் மஹ்மூத் அலி யூசுப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், துருக்கி நாடாளுமன்றத்தின் சர்வதேச விவகாரங்கள் குழுவின் துணைத் தலைவரும், துருக்கிய எம்.பி.யுமான சி கானி டோருன், சோமாலிலாந்துக்கான தனி நாடு அங்கீகாரம் துருக்கிக்கு விழுந்த பெரிய அடி என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சோமாலிலாந்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருப்பது கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு மட்டுமல்ல, துருக்கிக்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இஸ்ரேலின் நடவடிக்கைகள் செங்கடல், ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா பிராந்தியம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு மோதல்களையும் தூண்டும்," என்று பதிவிட்டுள்ளார். "துருக்கி 2011-ஆம் ஆண்டு முதல் சோமாலியாவில் முதலீடு செய்து வருகிறது," என்று டோருன் கூறியுள்ளார். "துருக்கி, சோமாலியாவின் வலுவான பொருளாதார மற்றும் ராணுவ கூட்டாளியாகும். நான் தூதராக இருந்த காலத்தில் 2013-இல் தொடங்கப்பட்ட சோமாலியா-சோமாலிலாந்து பேச்சுவார்த்தைகள் ஒருங்கிணைப்பை நோக்கிய நடவடிக்கைகளை வலுப்படுத்தின." "இந்த முடிவு பிராந்திய சமநிலையை மாற்றும். துரதிர்ஷ்டவசமாக பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிக்கும். மற்ற நாடுகள் இந்த முடிவை அங்கீகரிப்பதைத் தடுக்க பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுடன் இணைந்து செயல்படக் கூடிய வகையிலான கொள்கையை துருக்கி அவசரமாகப் பின்பற்ற வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சோமாலியாவின் இறையாண்மைக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், இஸ்ரேலின் நடவடிக்கையை சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல் என்று கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1991 முதல் சோமாலிலாந்து ஒரு தனி பிரதேசமாக இருந்து வருகிறது, இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (OIC), இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஓஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சோமாலிலாந்தை ஒரு தனி நாடாக அங்கீகரிப்பதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம் மற்றும் நிராகரிக்கிறோம். இது சோமாலியாவின் இறையாண்மை, தேசிய ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுகிறது. சோமாலியாவின் இறையாண்மையை நாங்கள் ஆதரிக்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலும் (GCC) தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஜிசிசி பொதுச் செயலாளர் ஜாசிம் முகமது அல்-புடாவி, இஸ்ரேலின் முடிவை சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல் என்று கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜிசிசி பொதுச் செயலாளர் கூறுகையில், "இந்த அங்கீகாரம் ஆப்பிரிக்காவின் ஹார்ன் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இது பதற்றங்களையும் புதிய மோதல்களையும் தூண்டும். இது பிராந்தியத்தில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச முயற்சிகளுக்கு எதிரானது," என்றார். ஜிசிசியில் மொத்தம் ஆறு நாடுகள் உள்ளன - பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62dpx882vno
  17. காலநிலை முன்னறிவிப்பில் முரண்பாடு: அனர்த்த முகாமைத்துவமும் வானிலை திணைக்களமும் வேறுபட்ட கருத்து – நளின் பண்டார Published By: Vishnu 28 Dec, 2025 | 09:26 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் நாளையும் (29), நாளை மறுதினமும் (30) மிகமோசமான காலநிலை நிலவும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஆனால் பாரிய அச்சுறுத்தலான நிலை இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது. காலநிலை தொடர்பில் இவ்விரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலை அரசாங்கம் அலட்சியப்படுத்தியதன் விளைவை நாட்டு மக்கள் எதிர்கொண்டார்கள். அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் தித்வா சூறாவளி தாக்கத்தால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது. நாட்டில் நாளை (திங்கட்கிழமை), நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) அசாதாரண காலநிலை நிலவும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவ்வாறு பாரிய அச்சுறுத்தல் ஏதும் கிடையாது. மழையுடனான காலநிலை மாத்திரமே நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுவது உண்மையா அல்லது வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுவது உண்மையா, இது அரச நிறுவனங்களுக்கிடையிலான முரண்பாட்டையும், பரஸ்பர வேறுபாட்டையுமே வெளிப்படுத்துகிறது என்றார். https://www.virakesari.lk/article/234613
  18. டக்கிலசாரின் வரலாற்றை விக்கி கலைக்களஞ்சியத்தில் வாசித்தேன். தலை சுற்றுதய்யா! தாயார் யாழ் மத்திய கல்லூரி ஆசிரியையாம். இவருக்கு ஆறு வயதிலேயே மறைந்துவிட்டார். டக்லசாரின் வாழ்க்கை திசைமாறி பயணிக்க இதுவே ஆரம்பம் போல் உள்ளது.
  19. போட்டியில் நானும் கலந்துகொள்கின்றேன் ஈழப்பிரியன். இவ்வளவு கேட்டாப்பிறகும் கலந்துகொள்ளாவிட்டால் இவ்வளவு காலமும் நான் எழுதிய சோதனைகளுக்கு மரியாதை இல்லாமல் போயிடும். 😁 எத்தனை சோதனைகள் படிக்காமல் போய் எழுதினோம். எத்தனை சோதனைகள் கேள்விகள் விளங்காமல் பதில் எழுதினோம். எத்தனை சோதனைகள் கேள்விகளை வாசிக்காமலே பதில் எழுதினோம். இதை செய்யமாட்டேனா என்ன!!
  20. உண்மை, அனுர அரசுக்கும் முன்னைய அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. பெயர்களும் நிறங்களுமே வேறு. சிலர் கோத்தாபோல் கடுமையாக இல்லை என்பர். மக்களுக்கு ஆட்சியை வழங்க வேண்டுமேயொழியக் கடுமையாக இருக்க வேண்டியதில்லை. நியாயமான சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் சமனாக வழங்கமுடியாதவராகவே இந்தத் தலைவரும் உள்ளார். திருகோணமலை புத்தர் சிலைவிவகாரத்தையே துணிவோடு கையாள முடியாத அரசு.அரசியலமைப்பென்று இதற்கும் விளத்தம் கொடுப்போரும் உளர். பெரும்பான்மையைக் கொண்ட அரசு ஏன் சரியானதொரு உலக நடைமுறைகளை உள்வாங்கி இன சமத்துவத்தைப் பேணக்கூடிய அரசியலமைப்பொன்றை முன்வைத்து நாட்டை சனநாயக நாடாக மாற்றலாமே. இவர்கள் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டார்கள். அப்படிச்செய்தால் இவர்களது கட்சியில் உள்ளோரும் நீதியின் முன் நிற்கவேண்டி வரலாம். இதைக் கூறியவரை எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இதைக் கூறியவரை (சு.பொன்னையாவை) எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  21. இலங்கைக்கு கஞ்சா கடத்தல் ; இந்தியாவில் 08 பேர் கைது Published By: Digital Desk 3 28 Dec, 2025 | 02:50 PM இந்தியாவின், ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அனகாப்பள்ளி மாவட்டம் நாதாவரம் பொலிஸார், உயர்தர சீலாவதி வகை கஞ்சாவை நர்சிபட்டினம் பகுதியில் இருந்து தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு கடத்தி வந்த கும்பலைச் சேர்ந்த 08 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும் அடங்குவார். ஆந்திர–ஒடிசா எல்லைப் பகுதிகளில் விளையும் கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட முதல் சம்பவம் இதுவாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய நபராக 28 வயதுடைய காடே ரேணுகா என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாகப்பட்டினம் மாவட்டம் சாந்தகாவிட்டி பகுதியைச் சேர்ந்த ரேணுகா, பயக்கராபேட்டை, நர்சிபட்டினம், சலூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததால், ‘லேடி டான்’ என அழைக்கப்பட்டுள்ளார். ரேணுகா மற்றும் அவரது நண்பரான சூர்யா கலிதாஸ், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு அனுப்புவதற்காக நர்சிபட்டினத்தில் வாடகை வீட்டில் தங்கி செயல்பட்டு வந்துள்ளனர். இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் ஸ்ருகாவரம் கிராமம் அருகே கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 74 கிலோ உலர் கஞ்சா, ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் விசாரணையில், ரேணுகா பெங்களூர் மற்றும் கோயம்புத்தூரில் வாடகை வீடுகளை எடுத்து தனது கடத்தல் வலையமைப்பை விரிவுபடுத்தியிருந்தது தெரியவந்துள்ளது. அடூரி பிரசாத் என்பவரின் உதவியுடன், ஒடிசாவின் பாலிமேலா மற்றும் சித்ரகொண்டா பகுதிகளில் உள்ள பழங்குடியினரிடமிருந்து கிலோக்கு இந்திய மதிப்பில் ரூ.5,000 வீதம் கஞ்சா வாங்கி வந்துள்ளார். சாரதிகளான மதன் குமார் மற்றும் நாக முத்து, கஞ்சா பொதிகளை ராஜாநகரம் நெடுஞ்சாலை சந்திப்புக்கு கொண்டு வந்து, அங்கிருந்து தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட கும்மபல் தமிழ்நாட்டில் சிறு பொட்டலங்களாகவும் கஞ்சா விற்பனை செய்துள்ளதோடு, மாநில அளவிலான கடத்தல்காரர்களுடன் உள்ள தொடர்புகளை பயன்படுத்தி இலங்கைக்கு கடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/234586
  22. அப்படியானால் போன வாரம் சுமந்திரனைப் போட்டுத் தாக்க இங்கே கூட்டம் கூடிய கீழ் திரியில் இருப்பது போலிச் செய்தியா? "தடையுத்தரவு நீங்கியதால் நிர்மாணப் பணிகள் துரித கதியில்" என்கிறது கீழே இருக்கும் செய்தி. "நிதியை மாற்றி விட்டோம்" என்கிறார் அரச அதிபர். அங்கே சதிக்கதைகள் பின்னிய @வாத்தியார், புலவர், எங்கள் "சொல்லின் செல்வர்"😎 மருதங்கேணி ஆகியோர் இங்கே எதுவும் எழுத மாட்டார்கள் போல!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.