Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அணியும் உடை, ஓடும் வாகனம், பாவிக்கும் தொலைபேசி, இவற்றிலெல்லாம் மேற்கு நாடுகளைப் பின்பற்றும் தாயக மக்கள், ஒப்பந்தம் போடுவதில் மேற்கு நாடுகளைப் பின்பற்ற மாட்டார்களா? "இத்தனை நாட்களுக்குள் 50% வேலை முடிய வேண்டும், இன்ன காலத்திற்குள் மிகுதி வேலை முடிய வேண்டும், இல்லா விட்டால் ஒப்பந்தம் ரத்து, பணமும் செலுத்த முடியாது" என்று ஒரு பந்தி இல்லாமல் என்ன தான் ஒப்பந்தம் போடுகிறார்கள்? இத்தகைய பாதுகாப்புகள் இல்லாத வேலை ஒப்பந்தங்களால் என்ன பயன்?
  3. ஜனாதிபதி - ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் சந்திப்பு Mar 26, 2026 - 05:09 PM உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷ, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இன்று (26) மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான எரிசக்தி துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. குறிப்பாக, எரிபொருள் விநியோகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகாலக் கூட்டாண்மைக்கான புதிய வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. விமான நிலையத்தில் வரவேற்பு: இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்ய பிரதி அமைச்சரை, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan), வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே. லெனகல மற்றும் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன ஆகியோர் வரவேற்றனர். உலகளாவிய சந்தை நிலைமைகள் மாறிவரும் சூழலில், இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை, குறிப்பாக எரிசக்தி துறையில் மேம்படுத்துவதற்கான இரு நாடுகளினதும் முயற்சியை இந்த விஜயம் பிரதிபலிக்கிறது. https://adaderanatamil.lk/news/cmn7eb78n001r356ppx1bonpd
  4. கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை. அதனால்தான் வெளியில் இருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழர்களை ஆட்சி செய்கிறார்கள். இந்த நிலையை மாற்றி மற்றைய மாநிலங்களைப் போல தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்பது மட்டமான சிந்தனையாகும்.இது தொடக்கம்தான் காலப் போக்கில் இது நடந்துதான் தீரும்.அதனைக் குழப்ப காலத்திற்குக்காலம் நடிக்க கோமாளிகளை இறக்கி விட்டு திராவிடம் சூழ்ச்சி செய்வது தொடர்கதையானாலும். அந்த அரிதார வேடம் வெகு சீக்கிரமாகவே கலைந்து வெளிச்சத்துக்கு வருவதை கண்கூடாகவே பார்த்து வருகிறோம்.
  5. @alvayan அண்ணை, ஏன் ஆச்சி ஐபோன் பாவிக்கக் கூடாதே?! அங்கால ஒரு ஆச்சி ரம்பை கலாயச்சத பாக்கேலயே?! அட ஆச்சி உழைப்புக்குத் தான் கேக்கிறா!
  6. பள்ளிக்கூடத்தில் ரீச்சர் இவன் நுள்ளிப் போட்டான் என்று முறையிடுகிற மாதிரி இருக்கிறது. நடைபெறுவது போர். அதுவும் போரைத் தொடங்கியது இஸ்ரேலும் அமெரிக்காவும். எடுத்த எடுப்பிலேயே ஈரானில் பாடசாலையில் குண்டுகள் விழுந்து 150 பள்ளிக் குழந்தைகள் அநியாயமாக இறந்து போனார்கள். குண்டுகளுக்கு குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என்று வேறுபடுத்திப்பார்க்கத் தெரியாது.காசாவில், பாலஸ்தீனத்தில், லெபனாலில் எத்தனை குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதல்களில் இறந்து போயிருக்கிறார்கள்.அதற்கெல்லாம் யாரிடம் முறையிடுவது. போர் நடக்கின்றது. போரைத் தெடங்கியவர்கள்தான் போரை நிறுத்த வேண்டும். தோல்வியை ஒப்புக் கொண்டு போரை நிறுத்தினால் இருபக்கமும் அழிவுகளைத்தடுக்கலாம்.
  7. முதல் 20 போட்டிகளை விட்டுவிட்டு ஏப்ரல் 13 இலிருந்து கேள்விக்கொத்தில் போடலாம். எல்லாருக்கும் 40 புள்ளிகள் இனாமாகக் கொடுக்கலாம்😀
  8. இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இணக்கம் 26 Mar, 2026 | 07:40 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உட்பட ரஷ்ய தூதுக்குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைத் தந்துள்ள ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உட்பட தூதுக்குழுவினர் நேற்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, தொழில் அமைச்சர் அனில் ஜயந்த மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வலுசக்தி துறையின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும்இ இலங்கை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிற்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தல்இகுறிப்பாக எரிபொருள் விநியோகம் வலுசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகாலப் பங்காளித்துவத்துக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படப்பட்டது. இதற்கமைய இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உட்பட ரஸ்ய தூதுக்குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்த காரணத்தால் நாட்டுக்கு வருகைத்தரவிருந்த எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்ததால் கடந்த வாரங்களில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக ரஸ்யாவிடமிருந்து 'அரசாங்கம் -அரசாங்கம்| என்ற அடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.இதற்கமைவாகவே ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். https://www.virakesari.lk/article/242022
  9. சுந்தரரின் பாணியையும் எதிர்பார்க்கிறோம்.
  10. அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பாலின் கோலா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை இரான் நிராகரித்துள்ளது என அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியான பிரஸ் டிவி தெரிவித்துள்ளது. பெயர் குறிப்பிடாத ஒரு "மூத்த அரசியல்-பாதுகாப்பு அதிகாரி" ஒருவரை மேற்கோள் காட்டி, சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது உட்பட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரானின் ஐந்து நிபந்தனைகளை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுடன் இந்தப் போர் தொடங்கியது. அதன் பிறகு வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளைக் குறிவைத்து இரான் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 24) பேசிய டிரம்ப், பேச்சுவார்த்தைக்காக இரான் "ஏங்குவதாகவும்", இரானிய பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்காவிற்கு ஒரு "மிகவும் குறிப்பிடத்தக்க பரிசை" வழங்கியுள்ளதாகவும் கூறினார். அந்த "பரிசு" எண்ணெய், எரிவாயு மற்றும் ஹோர்மூஸ் நீரிணை தொடர்பானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் அவர் மேலதிக விவரங்களை வழங்கவில்லை. ஆனால் இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் பேச்சுவார்த்தை குறித்த எந்தவொரு கருத்தையும் முற்றிலும் நிராகரித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானிய அரசு நடத்தும் பிரஸ் டிவி தகவலின்படி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை இரான் நிராகரித்துள்ளது. டிரம்பின் திட்டத்தில் என்னென்ன அடங்கியுள்ளன? இஸ்ரேலின் சேனல் 12 செய்திகளின்படி, போர் முடிவுக்கு வர இரான் பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அமெரிக்க அதிகாரிகள் இந்தப் போரைத் தொடங்கியதற்குக் கூறிய முக்கியக் காரணங்களையே இந்தக் கோரிக்கைகள் மையமாகக் கொண்டுள்ளன. அதாவது இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுப்பது. இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை ஆதாரங்கள் இல்லை, அதேபோல் இரானும் இதனை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது. மேலும், அதன் ஏவுகணைத் திட்டத்தினால் ஏற்படும் அச்சுறுத்தலை அகற்றுவது போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகள், இரான் "ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும்", அணுசக்தி நிலையங்களை அகற்றுவதாக உறுதியளிக்க வேண்டும் மற்றும் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றன. இந்த முன்மொழிவுகளின்படி, இரான் தனது ஏவுகணைத் திட்டத்தின் வரம்பு மற்றும் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொள்ள வேண்டும். கூடுதலாக, லெபனானில் உள்ள ஹெஸ்பொலா, காஸாவில் உள்ள ஹமாஸ் மற்றும் ஏமனில் உள்ள ஹூத்திகள் போன்ற பிராந்திய ஆயுத குழுக்களுக்கு நிதி வழங்குவதை இரான் நிறுத்த வேண்டும். இரான் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதும் முன்மொழிவில் உள்ளது. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணையின் வழியாக செல்கிறது. இந்த நீரிணை மூடப்பட்டதால், எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மேலும் உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும், இரான் மீதான அனைத்து சர்வதேசத் தடைகளும் நீக்கப்படும் என்றும் அமெரிக்காவின் இந்த திட்டம் கூறுகிறது. பல அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து, இரான் தனது அணுசக்தி நிலையங்களின் ஆய்வுகளை நிறுத்தியதால், கடந்த நவம்பரில் மீண்டும் முழுமையான தடைகள் விதிக்கப்பட்டன. பட மூலாதாரம்,Getty Images இரானின் நிபந்தனைகள் என்ன கூறுகின்றன? பிரஸ் டிவி தகவலின்படி, போரை முடிவுக்குக் கொண்டுவர இரான் ஐந்து நிபந்தனைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதில் "எதிரியின் போர் மற்றும் படுகொலைகளை" முற்றிலும் நிறுத்துவதும் அடங்கும். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அதிகாரிகள் "ஆக்டோபஸின் தலையைத் துண்டிப்பதே" தங்களின் நோக்கம் என்று அடிக்கடி கூறி வந்துள்ளனர். போரின் முதல் நாளில் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதில் இருந்து, பல உயர்நிலை இரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இரானின் மற்ற நிபந்தனைகளில், "இஸ்லாமிய குடியரசின் மீது மீண்டும் போர் திணிக்கப்படாது என்பதை உறுதி செய்வதற்கான உறுதியான வழிமுறைகள்" என்பதும் அடங்கும். போர்ச் சேதங்களுக்கான இழப்பீடுகளையும், ஹோர்மூஸ் நீரிணையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உரிமையையும் இரான் கோருகிறது. முக்கியமாக, பிராந்தியத்தில் உள்ள இரானின் கூட்டாளிகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று இரான் விரும்புகிறது. ஹெஸ்பொலாவிற்கு எதிரான தனது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. போர் தொடங்குவதற்கு சற்று முன்பு பிப்ரவரி மாதம் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இரான் முன்வைத்த கோரிக்கைகளுடன் இவை கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று பெயர் குறிப்பிடப்படாத ஓர் அதிகாரி கூறியதாக பிரஸ் டிவி தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images போரின் முடிவு தென்படுகிறதா? இறுதியில் பேச்சுவார்த்தைகள் நடந்தால், டிரம்பின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் (டிரம்பின் மருமகன்) ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அமைதி முன்மொழிவுகள், காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தத் தூதர்கள் பின்பற்றிய மாதிரியைப் போலவே இருப்பதாகத் தெரிகிறது. அதே நடைமுறை இங்கும் பின்பற்றப்பட வேண்டுமானால், அமெரிக்கா முன்மொழிந்துள்ள திட்டத்தின் அம்சங்களை பேச்சுவார்த்தையாளர்கள் இறுதி செய்வதற்கு ஏதுவாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் இரான் மீதான தங்கள் தாக்குதல்களை நிறுத்துவதில் இஸ்ரேலியத் தலைவர்கள் அதிக மகிழ்ச்சியடைய மாட்டார்கள் என்று இஸ்ரேலின் சேனல் 12 தெரிவித்துள்ளது. காஸா பேச்சுவார்த்தைகளின் போது போர் நிறுத்தம் குறித்து நெதன்யாகு இதேபோன்ற தயக்கங்களைக் கொண்டிருந்தார். இரான் டிரம்பின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என்று இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் நிர் பர்கட் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்த சுற்றின் முடிவில், ஒப்பந்தம் ஏற்பட்டாலும் சரி, ஏற்படாவிட்டாலும் சரி, நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம் என்று நான் நம்புகிறேன்" என்று பர்கட் கூறினார். பட மூலாதாரம்,Getty Images இரான் தரப்பில் யார் இதில் ஈடுபடுவார்கள் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்காவுடன் யார் பேசுகிறார்கள் என்பதை டிரம்ப் கூறவில்லை. "நாங்கள் சரியான நபர்களுடன் பேசி வருகிறோம்" என்று மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 28 அன்று தனது தந்தை கொல்லப்பட்ட அதே தாக்குதலில் காயமடைந்த பிறகு இதுவரை வெளியே காணப்படாத இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி இதில் இடம்பெறவில்லை என்று நம்பப்படுகிறது. சமீபத்திய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இரானின் வெளியுறவு அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல, தற்போதைய இரானிய தலைமை அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கையாக உள்ளது. பட மூலாதாரம்,Getty Images ஏனென்றால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளையில்தான் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. அந்தப் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள் இரானை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் அமைதிக்கான இந்த முன்மொழிவுகள் வந்துள்ளன. அவர்களின் நோக்கம் என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பதற்கோ அல்லது இரானின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதற்கோ பயன்படுத்தப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பிபிசி தமிழின் 'பிரச்னைகளைப் பேசுவோம்' உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா? இது தொடர்பாக உங்கள் கருத்துகள் மற்றும் அனுபவங்களை பிபிசியுடன் பகிருங்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czexne0p5jno
  11. இந்த அமைப்புகளைத் தானே இஸ்ரேல் கண்டு கொள்ளாமல் இருந்தது. இப்போது ஏன் அலறுது? அடி அமோகமோ?
  12. எதிர்கால சுகாதார தேவைக்கு வைத்தியசாலைகளில் படுக்கைகள் போதுமானதாக இல்லை – வைத்தியர்கள் எச்சரிக்கை 26 Mar, 2026 | 01:29 PM (இணையத்தள செய்திப் பிரிவு) நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தற்போது சுமார் 85,000 படுக்கைகள் இருந்தாலும், எதிர்கால சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இருக்காது என வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு 12% ஆக இருந்த வயோதிபர் தொகை, 2024 ஆம் ஆண்டில் சுமார் 18% ஆக அதிகரித்துள்ளதுடன், 2040 ஆம் ஆண்டளவில் அது 25% ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் மொத்த மக்கள் தொகை 2024 ஆம் ஆண்டில் 21,763,170 ஆக பதிவாகியுள்ளது. சனத்தொகை அதிகரிக்கும் வேகத்திற்கு ஏற்ப வைத்தியசாலைக் கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் சுகாதார அமைப்பு பாரிய நெருக்கடியைச் சந்திக்கும் என வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்கனவே சுகாதார அமைப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாள 10,000 நோயாளிகள் இதய அறுவை சிகிச்சைக்காகவும், மேலும் 10,000 பேர் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காகவும் காத்திருக்கின்றனர். அதேபோல், சுமார் 40,000 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் உள்ளது. இந்த தேவைகளை சமாளிக்க, தேசிய மருத்துவமனைகள், போதனா வைத்தியசாலைகள் மற்றும் முக்கிய அடிப்படை வைத்தியசாலைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/241968
  13. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 144 பகுதி: 144 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" [3] கர்மா மற்றும் மறுபிறவி [Karma and Reincarnation]: பௌத்தம் மற்றும் இந்து மதம் இரண்டும் கர்மா மற்றும் மறுபிறவி பற்றிய கருத்துக்களில் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த நம்பிக்கைகளின் படி, இந்த வாழ்க்கையில் ஒரு நபரின் செயல்கள் (கர்மா) அவர்களின் எதிர்கால இருப்பை (மறுபிறவி) தீர்மானிக்கின்றன. இருப்பினும், ஒவ்வொரு மரபிலும் இந்த கருத்துகளின் விளக்கம் மற்றும் புரிதலில் வேறுபாடுகள் உள்ளன. அதாவது, இந்துமதத்தில் கர்மா என்பது சாதி சார்ந்த தர்மத்தின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது. புத்தமதத்தில், அது தனிப்பட்ட செயல் மற்றும் மனநிலையைக் கொண்டு தான் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு இந்துவின் நம்பிக்கையில், தன் தர்மத்தைச் சரியாகச் செய்தால் நல்ல கர்மா கிடைக்கும். ஒரு புத்தன் நம்பிக்கையில், நல்ல எண்ணங்களும் செயல்களும் நல்ல மறுபிறவிக்கு வழிவகுக்கும். [4] விடுதலைக்கான பாதை [Path to Liberation]: இந்து மதம் விடுதலையை (மோட்சம்) அடைவதற்கு அறிவு (ஞானம்), பக்தி (பக்தி) மற்றும் செயல் (கர்மா) உள்ளிட்ட பல பாதைகளை (யோகங்கள்) வழங்குகிறது. பௌத்தம், குறிப்பாக தேரவாத பாரம்பரியம், உன்னதமான எட்டு மடங்கு பாதையை வலியுறுத்துகிறது, இதில் சரியான புரிதல், சரியான சிந்தனை, சரியான பேச்சு, சரியான செயல் போன்ற கொள்கைகள் அடங்கும். பௌத்தத்தின் குறிக்கோள் ஞானம் (நிர்வாணம்) அடைவதும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியை உடைப்பதும் ஆகும். இங்கு நிர்வாணம் (nirvāṇa;) (சமசுகிருதம்: निर्वाण,; பாளி: nibbāna) என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துன்பங்களை "வெளியேற்றுவது" அல்லது "தணிப்பது" என்பதாகும். அதாவது, இரண்டிலும் பிறவி சுழற்சியில் இருந்து விடுதலை பெறுவது முக்கிய இலக்காகும். இந்துமதத்தில் வீடுபேறு, அல்லது மோட்சம் (Moksha; சமஸ்கிருதம்: मोक्ष) என்பது ஆத்மாவுடன் ஒன்றாதல் அல்லது பரம்பொருளை அடைதல் என விளக்கப்படுகிறது. புத்தமதத்தில் நிர்வாணம் என்பது, நித்திய ஆன்மா அல்லது அல்லது கடவுளையோ குறிப்பிடாமல், ஆசை, அறியாமை, துக்கம் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடைவது ஆகும் [cessation of craving, ignorance, and suffering, without reference to an eternal self or god]. இங்கே நித்திய ஆன்மா [இந்து மதத்தில்] என்பது ஒரு தனிநபரின் மாறாத சாரத்தைக் குறிக்கிறது, இது உடல் வடிவங்களிலிருந்து வேறுபட்டது, உண்மையான அறிவு மற்றும் துன்பத்திலிருந்து விடுதலையை உள்ளடக்கியது. இது உலக அனுபவங்களைக் கடந்து, இறுதி யதார்த்தமான பிரம்மத்துடன் ஒத்துப்போகிறது. [5] சடங்குகள் மற்றும் வழிபாடு [Rituals and Worship]: இந்து மதம் கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ செய்யப்படும் சடங்குகள், கொண்டாட்டங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளின் [has a rich tradition of rituals, ceremonies, and worship practices] வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக, பௌத்தம் விரிவான சடங்குகள் அல்லது தெய்வ வழிபாட்டை வலியுறுத்துவதில்லை. இருப்பினும், சில புத்த மரபுகள் இன்று வேறுபடுகின்றன. அவை, பக்தி நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு கோயில்களைக் கட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுவது மட்டும் அல்ல, அத்துமீறியும் கட்டுகிறார்கள். அத்துமீறியும் வன்செயல்களில் ஈடுபடுகிறார்கள்! அதாவது, இந்துமதம் யாகங்கள், பூஜைகள், கோவில் வழிபாடுகள் போன்ற சடங்குகளை முக்கியமாகக் கொண்டுள்ளது. ஆனால் புத்தமதம், குறிப்பாக அதன் தொடக்ககாலத்தில், சடங்குகளை குறைத்து, தியானம், ஒழுக்கம் மற்றும் மனகவனம் [meditation, ethical living, and mindfulness] என்பவற்றை முக்கியமாக எடுத்துரைத்தது. உதாரணமாக, கலாம சூத்திரத்தில் புத்தர் குருட்டு சடங்குகளை வெளிப்படையாக நிராகரித்ததுடன் அனுபவத்தின் மூலம் உண்மை எதென்று கண்டறிய வேண்டுமென வலியுறுத்துகிறார் என்பதைக் கவனிக்க [The Buddha explicitly discouraged blind ritualism in the Kalama Sutta, advising seekers to test teachings through experience.]. இதைத் தான் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்! மேலே சுட்டிக்காட்டிய வாறு வேறுபாடுகள் இருந்தபோதிலும், கௌதம புத்தருக்கும் இந்து மதத்திற்கும் இடையே பரஸ்பர செல்வாக்கும் மற்றும் தொடர்புக்கான நிகழ்வுகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. அது என்ன தொடர்பு என்று யோசிக்க முடியாமல் தவிக்கிறார்கள், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் சமூகம்! Part: 144 / APPENDIX – "The Buddha and His teachings" Karma and Reincarnation: Both Buddhism and Hinduism share a belief in the concepts of karma and reincarnation. According to these beliefs, a person's actions (karma) in this life determine their future existence (reincarnation). However, there are differences in the interpretation and understanding of these concepts within each tradition. Path to Liberation: Hinduism offers multiple paths (yogas) for attaining liberation (moksha), including the paths of knowledge (jnana), devotion (bhakti), and action (karma). Buddhism, particularly the Theravada tradition, emphasizes the Noble Eightfold Path, which includes principles such as right understanding, right thought, right speech, right action, and so on. The goal in Buddhism is to attain enlightenment (nirvana) and break the cycle of birth and death. Rituals and Worship: Hinduism has a rich tradition of rituals, ceremonies, and worship practices performed in temples or homes. Buddhism, in general, does not emphasize elaborate rituals or deity worship. However, Buddhist traditions vary, and some sects have adopted devotional practices and built temples. Despite these differences, there are also instances of mutual influence and interaction between Gautama Buddha and Hinduism. The historical and cultural context of ancient India facilitated the exchange of ideas and practices between these traditions. Concepts such as meditation, renunciation, and ethical principles found in Buddhism have similarities with Hinduism's spiritual traditions. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 145 தொடரும் / Will follow துளி/DROP: 2116 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 144 https://www.facebook.com/groups/978753388866632/posts/34526384683676738/?
  14. சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 3 [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] பொதுவாக ஒரு திருமணம் என்றால் அங்கே மேள தாளங்கள் அதிரும், உறவினர்களின் சிரிப்பு சத்தம் கேட்கும், எங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ஆனால், கலினியின் திருமணம் இதற்கு நேர்மாறாக இருந்தது. அங்கே கொண்டாட்டங்கள் ஏதுமில்லை; மௌனம் மட்டுமே அந்த அறையை ஆக்கிரமித்திருந்தது. அவள் கட்டியிருந்த பட்டுப்புடவையின் சலசலப்பு சத்தம் மட்டுமே அந்த அமைதியைக் கலைத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த சாட்சிகளின் பார்வையில் மகிழ்ச்சிக்கு பதிலாக ஒருவித பாரமும், தயக்கமும் மட்டுமே தெரிந்தது. அங்கு திரண்டிருந்த சாட்சிகள் வெறும் வேடிக்கை பார்க்க வந்த சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் சமூகத்தின் எழுதப்படாத சட்டங்களாகவும், மதத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளாகவும், அரசின் அதிகாரமாகவும் அங்கே நின்றார்கள். அது ஒரு குடும்பம் எடுத்த முடிவிற்கு ஒட்டுமொத்த சமூகமும் வழங்கிய அங்கீகாரம். அதனால்தான் அந்தத் திருமணச் சூழல் ஒரு திருவிழாவைப் போல இல்லாமல், தண்டனை வழங்கும் ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பைப் போல கனமாக இருந்தது. கலினி அங்கே ஒரு சிலையைப் போல அமைதியாக அமர்ந்திருந்தாள். மங்கலத்தின் அடையாளமான மஞ்சள் அவளுடைய கைகளில் பூசப்பட்டிருந்தது, ஆனால் அவள் முகத்தில் அந்த மங்கலம் இல்லை. அவள் கண்கள் நிமிர்ந்து யாரையும் பார்க்கத் துணியாமல், தரையையே வெறித்துக் கொண்டிருந்தன. அது அவளது அடக்கத்தைக் காட்டவில்லை; மாறாக அவள் அனுபவித்துக் கொண்டிருந்த தனிமையைக் காட்டியது. அவளுக்கு அருகில் 'மித்த' நின்றிருந்தான். அவன் வெறும் மணமகன் மட்டுமல்ல; படித்தவன், மதக் கோட்பாடுகளைத் தீவிரமாகப் பின்பற்றுபவன் மற்றும் அரசின் நம்பிக்கையைப் பெற்றவன். சுருக்கமாகச் சொன்னால், இந்தச் சமூகம் எதை 'உயர்ந்தது' என்று கருதுகிறதோ, அதன் ஒட்டுமொத்த உருவமாக அவன் இருந்தான். அங்கிருந்த பெரியவர், 'இந்தத் திருமணத்திற்குச் சம்மதமா?' என்பது போல, 'நீங்கள் இவரை ஏற்றுக்கொள்கிறீர்களா?' என்று வழக்கமான கேள்வியைக் கேட்டார். ஆனால், அந்தக் கேள்விக்கு 'இல்லை' என்று சொல்லும் அதிகாரம் அங்கு எவருக்கும் இல்லை; பதில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. 'ஏற்றுக்கொள்கிறேன்,' என்று கலினி பதில் சொன்னாள். அவள் குரலில் நடுக்கம் ஏதுமில்லை. அந்தத் தெளிவு தைரியத்தால் வந்ததல்ல, அல்லது மகிழ்ச்சியால் வந்ததல்ல. தனக்குப் பிடித்தமான ஏதோ ஒன்று தனக்குள் உடைந்து போன பிறகு, எஞ்சியிருக்கும் ஒருவித உணர்ச்சியற்ற நிலையில் இருந்து வந்த குரல் அது. தென்னை மரங்களின் மறைவிலிருந்து சிவா அந்தத் திருமணத்தைப் பார்த்தான். அவன் காதலித்த கலினி, இப்போது 'மித்த' என்பவனுக்கு மனைவியாகிவிட்டாள். கலினி நாகர் இனத்தைச் சேர்ந்தவள்; அவர்கள் ஏற்கனவே தமிழர்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள். கடலோரப் பகுதியில் வசிக்கும் ஒரு சாதாரணத் தமிழ் இளைஞனான சிவாவிற்கு, அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த வலிமை இல்லை. அவன் அவளைச் சபிக்கவில்லை, அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அந்த இடத்தை விட்டு மெதுவாக விலகி நடந்தான். அவன் பாதம் வைத்த நிலமே அவனைப் பிடித்துத் தள்ளுவது போல ஒரு உணர்வு—அதாவது அந்த மண்ணில் அவனுக்கான இடம் பறிக்கப்பட்டுவிட்டது என்பதை அவன் உணர்ந்தான். சில நாட்களில் சூழல் இன்னும் மோசமானது. அனுராதபுரம் அருகே தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பழங்காலக் குளம் இருந்தது. அங்கிருந்த தமிழ் மக்களின் மூதாதையர்கள் கைகளால் தோண்டிய குளம் அது. ஆனால், அங்கு புதிதாகக் குடியேறியவர்கள் வந்தனர். “இந்தக் குளம் இனி ‘சங்கத்தின்’ (மத அமைப்பின்) பாதுகாப்பில் இருக்கும்; யாரும் உரிமை கோர முடியாது,” என்றனர். ஒரு மூதாட்டி ஆக்ரோஷமாக, “இது என் பாட்டி தோண்டியது!” என்று வாதிட்டாள். இந்த வாக்குவாதம் வன்முறையாக மாறியது. தள்ளுமுள்ளு, கல்லெறிதல் எனத் தொடங்கி கடைசியில் ஒரு மரண அலறலில் முடிந்தது. அமைதியாக இருந்த அந்த மண் அன்று இரவு ரத்தத்தால் நனைந்தது. இரண்டு குடிசைகள் எரிக்கப்பட்டன. மறுநாள் காலை, ஒரு மனித உடல் அடையாளம் காண முடியாத அளவுக்குக் கருகிக் கிடந்தது. அவனது பெயரோ, வரலாறோ எங்கும் பதியப்படவில்லை. ஆனால், பல ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட வரலாற்று ஏடுகளில், அந்த உயிர் பலியும், நில அபகரிப்பும் ஒரு “சிறிய குழப்பம்” (Minor Disturbance) என்று மிகச் சாதாரணமாகக் குறிப்பிடப்பட்டது. சிவா அந்தச் சாம்பல் அருகே மண்டியிட்டு அமர்ந்தான். “ஆயுதங்களால் அமைதியை ஏற்படுத்திவிட்டு, இதோ அமைதி வந்துவிட்டது என்று அவர்கள் பெருமை பேசுவார்கள்,” என்று கசப்புடன் நினைத்துக் கொண்டான். ஒரு மலையடிவாரக் குகையில் இருந்த பழங்காலக் கல்வெட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. முன்பு அங்கே “ஊரார் வழங்கிய தானம்” என்று செதுக்கப்பட்டிருந்தது. அதாவது மக்கள் தாங்களாகவே முன்வந்து கொடுத்த நிலம் அது. ஆனால், ஒரு புத்த துறவியின் மேற்பார்வையில் அந்த எழுத்துகள் மாற்றப்பட்டன. இப்போது அது “அரசரின் அருளால் சங்கத்திற்கு வழங்கப்பட்ட தானம்” என்று மாறியது. அதாவது, மக்களின் உரிமை என்பது மறைக்கப்பட்டு, அது அரசின் அதிகாரத்தால் கொடுக்கப்பட்ட பிச்சை போல மாற்றப்பட்டது. இதைப் பார்த்த சிவா அந்தத் துறவியிடம் கேட்டான்: “இது வரலாற்றைத் தெளிவுபடுத்துவதா? அல்லது அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்பச் செய்யும் மாற்றமா?” அதற்குத் துறவி புன்னகைத்துக் கொண்டே சொன்னார், “உண்மை என்பது காலத்திற்கு ஏற்ப வளரக்கூடியது. எனவே பழைய பதிவுகளைத் திருத்த வேண்டியது அவசியம்.” அப்போது சிவா ஒரு கசப்பான உண்மையை உணர்ந்தான்: எழுத்துகள் அப்படியேதான் இருக்கின்றன, ஆனால் அவற்றின் பின்னால் இருந்த மக்களின் உரிமை மறைந்து, அதிகாரத்தின் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அந்தக் கல் இனி உண்மையைச் சொல்லாது; அது யார் வலிமையானவர்களோ, அவர்களின் பக்கமே நிற்கும். திருமணத்திற்குப் பிறகு கலினி அந்தப் புதிய வீட்டிற்குள் நுழைந்தாள். அங்கு எல்லாம் துல்லியமாக இருந்தது—சுத்தம், ஒழுங்கு, ஒருவிதமான கனத்த அமைதி. மித்த அவளைத் துன்புறுத்தவில்லை; உடல் ரீதியாகவோ அல்லது சொல் ரீதியாகவோ அவன் வன்முறையை ஏவவில்லை. அவளிடம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொண்டான். ஆனால், அந்த மிகையான மரியாதையே அவளுக்குப் பெரும் வலியாக இருந்தது. அவனது அன்பு இயந்திரத்தனமானது; அது இதயத்திலிருந்து வராமல், 'கடமை' என்ற விதியிலிருந்து பிறந்தது. அவன் தனது மதத்தின் மொழியில் பேசினான்: “இந்த இணைப்பு தர்மமானது; இது புண்ணியம் தரும்,” என்றான். அவன் பழமைவாத சட்டங்களைப் பேசினானே தவிர, அவளது இழப்பைப் பற்றியோ, அவள் உள்ளுக்குள் புதைத்து வைத்திருக்கும் காதலைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. “நீ அதிர்ஷ்டசாலி,” என்று அவன் சொன்னபோது, அது அவனது குரலாக மட்டும் ஒலிக்கவில்லை; மதத்தின் ஆசீர்வாதமாகவும், அரசின் ஆதரவாகவும், சமூகத்தின் அங்கீகாரமாகவும் ஒலித்தது. அனைவரும் இந்தத் திருமணத்தைச் சரியென்று ஒப்புக்கொண்டனர். ஆனால் கலினியின் இதயம் மட்டும் இந்த 'சரியான' வாழ்க்கையை ஓர் அறமற்றச் செயலாகக் கருதி மௌனமாக எதிர்த்தது. அன்று இரவு அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அவள் ஒரு ஆற்றைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். ஆறு என்பது சுதந்திரமானது; அது யாரிடமும் அனுமதி கேட்காமல் தனது பாதையைத் தானே செதுக்கிக்கொண்டு ஓடும். அதுதான் அவள் விரும்பிய காதல். ஆனால் இப்போது அவள் வாழ்க்கை ஒரு கால்வாயைப் போல மாறிவிட்டது. கால்வாய் பயனுள்ளதுதான், ஆனால் அதன் பாதையை மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள். அடுத்தவர்கள் வெட்டிய பாதையில், அவர்கள் இட்ட கட்டளைப்படி அமைதியாக ஓட வேண்டிய ஒரு கட்டுப் படுத்தப்பட்ட வாழ்க்கையாக அவள் எதிர்காலம் மாறியிருந்தது. ஒருநாள் சிவாவும் மித்தவும் சந்தித்துக் கொண்டபோது, உண்மைக்கும் அதிகாரத்திற்குமான போர் வெளிப்படையாகத் தெரிந்தது. “நீ அவளைக் காதலித்துத் திருமணம் செய்யவில்லை,” என்றான் சிவா. “நீ பாதுகாப்பையும் சமூகத்தின் ஒப்புதலையும் மட்டுமே தேடினாய்.” மித்த மிகவும் நிதானமாகப் பதிலளித்தான்: “அவளுக்குப் பாதுகாப்பு தேவை. உலகம் மாறிக்கொண்டிருக்கிறது.” “அந்த மாற்றத்தை யார் தீர்மானிக்கிறார்கள்?” என்று சிவா கேட்டபோது, மித்த அந்த மடாலயத்தைச் சுட்டிக்காட்டினான். “எழுதுபவர்கள். வரலாற்றைப் பதிவு செய்பவர்கள். யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அவர்களே மாற்றத்தைத் தீர்மானிக்கிறார்கள்,” என்றான் மித்த. அப்போதுதான் சிவாவுக்குப் புரிந்தது—அன்பை விட அதிகாரமே மனித வாழ்க்கையை வடிவமைக்கிறது. 'உண்மை' என்பது கூடச் சுதந்திரமானது அல்ல; அது அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் எழுதும் ஒரு காகிதம்தான். அந்தத் தீவில் நிலவிய பதற்றம் ஒரு திட்டமிடப்பட்ட சக்தியாக உருவெடுத்தது. எல்லைகள் புதிதாக வரையப்பட்டன. பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. இயற்கையாகத் தோன்றிய குகைகள் கூட ஏதோ ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் சின்னங்களாக முத்திரை குத்தப்பட்டன. புதிய தலைமுறை குழந்தைகளுக்குப் புதிய கதைகள் கற்பிக்கப்பட்டன. “வெளியிலிருந்து வந்தவர்கள்” இப்போது “மண்ணின் மைந்தர்கள்” என்று வரலாற்றில் திருத்தம் செய்யப்பட்டனர். பழைய நினைவுகள் அழிக்கப்பட்டு, அதிகாரத்திற்குச் சாதகமான ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது. இந்த அநீதிகள் அனைத்தையும் அந்தத் தீவு மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. மனித இனத்தை விடப் பழமையான அந்த நிலத்திற்கு உண்மை தெரியும். மனிதர்களின் காலடிகள் இப்போது அந்த நிலத்தின் மீது கனமாகப் பதிந்தன. மனிதர்கள் தங்களுக்குச் சாதகமான வரிகளை மட்டும் உரக்க வாசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அங்குள்ள கற்கள் நடந்த எதையும் மறக்கவில்லை; அவை மௌன சாட்சிகளாக உண்மையைச் சுமந்து நின்றன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 4 தொடரும் துளி/DROP: 2115 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 3 https://www.facebook.com/groups/978753388866632/posts/34526319740349899/?
  15. அத தெரண தமிழ் கருத்துப் படங்கள்.
  16. Axis of Evasion : ஈரானுடன் சீனா, ரஷ்யா இரகசிய கூட்டு! 26 Mar, 2026 | 05:21 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) நீண்டகாலமாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தடுக்க, சீனா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் ஈரானுடன் இரகசியமாக கைகோர்த்து Axis of Evasion என்ற கூட்டணியை அமைத்துச் செயற்படுவதாக சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் தொடங்கியதிலிருந்து சீனாவும் ரஷ்யாவும் மாறி மாறி கண்டனம் தெரிவித்து வருகிறது. எனினும், அந்த நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கவில்லை என்பதை வெவ்வேறு தரப்புகள் அவதானித்து வந்தன. ஈரானுக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கக்கூடிய சீனா, ரஷ்யா போர் நடவடிக்கையில் உதவிக்கு வராதது குறித்து பல்வேறு தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன. போர்க்காலச் சூழலில் ஈரான் விடயத்தில் சீனாவும் ரஷ்யாவும் ஒதுங்கியிருப்பது போல் வெளியே காட்டிக்கொண்டாலும், பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் மறைமுகமாக இரு நாடுகளும் ஈரானுக்கு வழங்கி வருவது தெரியவந்துள்ளது. Axis of Evasion கூட்டணியின் மறைமுக செயற்பாடுகள் எண்ணெய் வர்த்தகம் : ஈரான் மற்றும் ரஷ்யாவின் தடையில் உள்ள மசகு எண்ணெயை சீனா இறக்குமதி செய்கிறது. நிழல் கப்பற்படை : தடைகளை மீறி எண்ணெயைக் கடத்த இரகசியக் கப்பல் போக்குவரத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மாற்றுப் பணப்பரிவர்த்தனை: மேற்கத்திய நிதி அமைப்புகளுக்கு வெளியே, பண்டமாற்று முறை மற்றும் பிற இரகசிய பணப்பரிமாற்ற வழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பம் : சிவில் மற்றும் இராணுவத் தேவைகள் என இரண்டுக்கும் பயன்படக்கூடிய தொழில்நுட்பங்களைச் சீனா ஈரானுக்கு வழங்குகிறது. போருக்கு பின்னால் ஈரான் - சீனா - ரஷ்யா கூட்டு ஈரான் மீது அமெரிக்கா தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும், அதையும் மீறி, ஈரானிடமிருந்து மசகு எண்ணெய்யை சீனா இறக்குமதி செய்து வருகிறது. அதற்கு பதிலாக, நவீன தொழில்நுட்பங்கள், மின்னணு உதிரிப்பாகங்களை ஈரானுக்கு சீனா ஏற்றுமதி செய்கிறது. மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் சிவிலியன் பயன்பாட்டு உதிரிப்பாகங்கள், சீன விநியோகத்தர்கள் வழியாக ஈரான் இராணுவத் தொழிற்சாலைகளுக்குச் செல்கின்றன. அதேபோன்று ரஷ்யாவானது ஈரானின் ஷாஹெத் ரக ட்ரோன்களை உக்ரைனுடனான போருக்கு பயன்படுத்தி வருகிறது. ஈரான் தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் தொழிற்சாலைகள் ரஷ்யாவில் இயங்கி வருகின்றன. ரஷ்யாவின் Garpiya-3 போன்ற நவீன ட்ரொன்களை உருவாக்க சீன நிபுணர்கள் உதவி செய்து வருகின்றனர். ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்கதல்களை நடத்துகிறபோதெல்லாம் அந்த ஏவுகணைகள், ட்ரோன்கள் அவற்றின் இலக்கை எட்ட, சீனாவின் BeiDou செயற்கைக்கோள் அமைப்பு வழிகாட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய ஏவுகணைகளுக்கான திட எரிபொருள், வெடிமருந்துகள் தயாரிப்பதற்கு தேவைப்படும் வேதிப்பொருட்கள் கூட சீனாவிலருந்தே ஈரானுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கு ஈரான் நாடானது ரஷ்யா தயாரித்த ட்ரோன்களையே பயன்படுத்துவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆக, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்தும் தாக்குதல்களுக்கு சீன - ரஷ்ய கூட்டணியான Axis of Evasion மறைமுகமாக பெரிதும் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/242006
  17. Today
  18. ஆரம்ப சுற்று 70 போட்டிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது. @கிருபன் நீங்கள் போட்டிகளை தயார்படுத்தலாம். நாட்கள் குறைவு என்பதால் அதிக போட்டியாளர்கள் விடை எழுத கட்டாயம் முதல் போட்டியில் இருந்து நீங்கள் ஆரம்பிக்க தேவையில்லை. ஒருவாரம் முடிய அல்லது சிலநாட்களின் பிறகு நடக்கும் போட்டிகளில் இருந்து ஆரம்பிக்கலாம். The Times of IndiaIPL 2026 Schedule: BCCI reveals full second phase fixture...Cricket News: The BCCI has officially unveiled the schedule for the second phase of the Indian Premier League 2026, confirming fixtures from April 13 to May 24.The .
  19. யாழ் - கிளிநொச்சியின் 'ஆட்டக்காரி' நெல்லினத்திற்கு அரச அங்கீகாரம்: பிராந்திய ரகமாகப் பரிந்துரை! 26 Mar, 2026 | 01:26 PM யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்தை 'பிராந்திய நெல்லினமாக' உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலின் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்துக்கு விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பரிந்துரை இதுவரை இல்லாத காரணத்தால், அதற்கான நியாயமான நிர்ணய விலையைத் தீர்மானிப்பதிலும், விவசாயக் காப்புறுதியைப் பெற்றுக்கொள்வதிலும் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஆட்டக்காரியை ஒரு 'பிராந்திய நெல்லினமாக' உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாகப் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார். அதேநேரம் வடக்கு மாகாணத்தின் ஊடான ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கும், நோய்த்தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை மையப்படுத்திய 'தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்தை' முழுமையாக இயங்கச் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து (குறிப்பாக இந்தியாவிலிருந்து) கொண்டுவரப்படும் வாழைக் கன்றுகள் ஊடாக 'பனாமா' போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், சுங்க அதிகாரிகளுடன் இணைந்து கடுமையான கண்காணிப்புகளை மேற்கொள்ளவும், ஏற்றுமதியாளர்களுக்கு இலகுவாகச் சான்றிதழ்களை வழங்குவதற்குமான வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் , விதைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக வடக்கிலிருந்து தெற்குக்கு விதைகளை அனுப்பிவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலையை மாற்றுவதற்காக, வடக்கு மாகாணத்துக்குள்ளேயே 'விதைப் பரிசோதனைச் சிறிய ஆய்வுகூடங்களை' விரைவாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், விவசாயத்தில் இளைஞர்களை ஈர்ப்பதற்காகப் பரந்தன் மற்றும் வவுனியா விவசாயக் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களுக்கான 4 சதவீத குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களை இலகுபடுத்துதல் மற்றும் பயன்படுத்தப்படாத அரச காணிகளை இளைஞர்களின் விவசாய முயற்சிகளுக்கு வழங்குதல் தொடர்பிலும் கொள்கை ரீதியாக ஆராயப்பட்டது. அத்துடன், அனுமதியற்ற மற்றும் காலாவதியான விவசாய இரசாயனங்கள் சந்தையில் விற்கப்படுவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தவும், அவ்வாறு ஈடுபடும் வர்த்தக நிலையங்களின் பதிவுகளை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/241967

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.