stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
இலங்கையை உலுக்கியுள்ள நாமலில் ஒடிசா பயணம் – அரசாங்கத்துக்கு இராஜதந்திர எச்சரிக்கையா? Nishanthan SubramaniyamJanuary 30, 2026 10:26 am 0 இலங்கை அரசியலில் இந்தியா எப்போதுமே ஒரு மையப்புள்ளியாகவே இருந்து வருகிறது. தென்னிலங்கை அரசியலை புரட்டிபோடும் பல்வேறு அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் தேசியப் புலனாய்வு பிரிவான ‘ரோ’ கடந்த காலங்களில் ஈடுபட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது. அத்தகையதொரு நகர்வை மீண்டும் புதுடில்லி எடுக்கும் ஆலோசனைகளை விரைவில் மேற்கொள்ளலாம் என புதுடில்லியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மிகப் பெரிய மக்கள் எழுச்சிக்கு மத்தியில் இலங்கையில் 2024ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இந்தப் பின்புலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துடன், இணக்கமான போக்கையே இந்தியா விரும்புகிறது. அதன் பிரகாரமே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட ஒருவருடத்துக்கு முன்பே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பையும் இந்திய அளித்தது. ஆட்சிமாற்றம் ஏற்பட்டு முதல் இராஜதந்திர பயணத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியாவுக்கே மேற்கொண்டிருந்தார். இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றி 80களில் பேசிய ஜே.வி.பியும் அதன் தலைமைகளும் பூகோள அரசியல் போக்கை உணர்ந்துள்ளதன் காரணமாகவே இந்தியாவுடனான உறவை மீள புதுப்பித்துள்ளனர். இந்தியாவுக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான உறவு புதுபிக்கப்பட்டுள்ள போதிலும், அது ஓர் இணக்கப்பாட்டான சூழலுக்கு இன்னும் வரவில்லை என புதுடில்லி கருதுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டு ஒரு வருடத்தை கடந்துள்ள சூழலில் அந்தப் பயணத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தும் தீர்மானங்கள் எதுவும் இன்னமும் இலங்கையில் எடுக்கப்படவில்லை. குறிப்பாக இருநாட்டுகளுக்கு இடையிலான கேபிள் குழாய் அமைப்பு, திகோணமலை எண்ணெய் குதங்கள் விவகாரத்தில் விரைவான தீர்மானங்கள் எடுக்கப்படமை உட்பட பல்வேறு வாக்குறுதிகள் குறித்த நகர்வுகள் ஆக்கப்பூர்வமானதாக இல்லை என்பதால் இந்தியா இலங்கைமீது சற்று அதிருப்தியில் உள்ளது. இணக்கப்பாட்டான சூழலை அரசாங்கத்துடன், விரும்புவதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே டித்வா புயல் ஏற்பட்ட தருணத்தில் பல்வேறு உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியது. என்றாலும், இலங்கையில் நகர்வுகள் குறித்து ஓரளவு அதிருத்தியில் மோடி அரசாங்கம் இருப்பதால்தான் ஒடிசாவில் நடைபெற்ற குடியரசு தினத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு பிரமாண்டமான வரவேற்பை புதுடில்லி அளித்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாமல் ராஜபக்சவுக்கான வரவேற்பை சமகால அரசாங்கம் ஓர் எச்சரிக்கை மணியாக எடுக்க வேண்டும் என்பதே நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பின் இராஜதந்திர செய்தியாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாமல் ராஜபக்சவுக்கு ஒடிசாவில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு குறித்து அரசாங்கம் பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. https://oruvan.com/namals-odisha-visit-has-shaken-sri-lanka-is-it-a-diplomatic-warning-to-the-government/
-
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்! Mano ShangarJanuary 30, 2026 1:15 pm 0 இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன. பெப்ரவரி நான்காம் திகதி உலக புற்றுநோய் தினத்தைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த புள்ளிவிவரங்கள் 2022 தேசிய புற்றுநோய் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டில் 35,855 புதிய புற்றுநோயாளர்கள் பதிவாகியிருந்தனர். அதே நேரத்தில் 2021 ஆம் ஆண்டில் 14,986 புற்றுநோய் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய தரவுகளின்படி, 19,500 பெண்கள் மற்றும் 16,400 ஆண்கள் புற்றுநோயாள் பாதிக்கப்பட்டுள்ளனர். தரவுகளின்படி, ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய் வாய்வழி புற்றுநோய் ஆகும். அதே நேரத்தில் மார்பக புற்றுநோய் பெண்களிடையே மிகவும் பொதுவானது. அடுத்ததாக மிகவும் பொதுவானது தைராய்டு புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகும். உலக சுகாதார நிறுவனம் 30-50% புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியவை என்று மதிப்பிட்டுள்ளதாக வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். வயது, பாலினம், குடும்ப வரலாறு மற்றும் மரபியல் ஆகியவை புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளாகும். அதிகரித்த மரபணு மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளுக்கு நீண்டகாலமாக வெளிப்படுதல் காரணமாக இலங்கையில் புற்றுநோய் விகிதம் அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார். https://oruvan.com/40-people-die-of-cancer-every-day-in-sri-lanka/
-
முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களை இடையூறுகளின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை
முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களை இடையூறுகளின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை January 30, 2026 நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக, முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அச்சட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் சட்ட மாஅதிபரின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்ட மாஅதிபரின் பரிந்துரைகளுக்கு அமைய, உரிய சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி, அவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். இந்த நிலையில், சட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தாயகம் திரும்பும் இலங்கையர்களை எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், நாடு திரும்புவோர், போர்க்காலச் சூழலில் நாட்டிலிருந்து சென்று, தாம் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் வசித்தமைக்கான சான்றுப்பத்திரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில், அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக, தாயகம் திரும்ப விரும்புவோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக, இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய சிலர், வானூர்தி நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலைப்பாட்டை ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பான UNHCR உம் ஆட்சேபித்திருந்தது. இந்த பின்னணியிலேயே, குடிவரவு, குடியகல்வு சட்டத்திலுள்ள நிபந்தனைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார். https://www.ilakku.org/steps-to-allow-those-who-have-illegally-traveled-abroad-to-enter-the-country-without-hindrance/
-
வெனிசுவேலாவுக்கு மீண்டும் விமான சேவை : அமெரிக்கா அதிரடி
வெனிசுவேலாவுக்கு மீண்டும் விமான சேவை : அமெரிக்கா அதிரடி 30 Jan, 2026 | 12:07 PM அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையே சுமார் ஆறு ஆண்டுகளாகத் தடைப்பட்டிருந்த நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) நிறுவனம் வியாழக்கிழமை (ஜன 29 ) அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்கப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஷான் டஃபி, 2019 முதல் நடைமுறையில் இருந்த விமானத் தடையை உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளார். வெனிசுவேலலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் (Delcy Rodríguez) நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "அமெரிக்க குடிமக்கள் மிக விரைவில் வெனிசுவேலாவுக்குச் செல்ல முடியும், அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என அவர் உறுதியளித்துள்ளார். 1987 முதல் வெனிசுவேலாவில் இயங்கி வந்த இந்த நிறுவனம், அரசு ஒப்புதல்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்குப் பின்னர் தினசரி விமான சேவைகளை ஆரம்பிக்கும். இது வணிகம், சுற்றுலா மற்றும் மனிதாபிமானப் பயணங்களுக்கு உதவும். இந்த மாத தொடக்கத்தில் (ஜன 03), அமெரிக்க இராணுவம் நடத்திய 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' (Operation Absolute Resolve) என்ற அதிரடித் தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வெனிசுவேலாவின் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் உடனடியாகத் தொடங்காது. எஃப்.ஏ.ஏ (FAA) மற்றும் டி.எஸ்.ஏ (TSA) ஆகிய அமைப்புகள் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே விமானங்கள் இயக்கப்படும். இதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளின் வான்பரப்பில் பறக்க விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகளையும் அமெரிக்கா தற்போது விலக்கியுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தனது திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், யுனைடெட் ஏர்லைன்ஸ் இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. https://www.virakesari.lk/article/237395
-
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு!
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு! 30 Jan, 2026 | 11:53 AM யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து வினவியவேளை அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் நாட்டினுடைய அபிவிருத்தியை எந்த தடைகளும் இல்லாமல் மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் காத்திருப்பு பகுதி வேலைகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த அரசாங்கத்தில் குறித்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும் முழுமையான விமான நிலையமாக மாற்றம் பெறாத நிலையில் எமது அரசாங்கம் அதனை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. யாழ்ப்பாண விமான நிலையத்தின் விமான சேவைகளை விரிவு படுத்துவது தொடர்பில் விமான சேவைகள் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்ற நிலையில் சேவைகளை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும். அதே போல் காங்கேசன் துறைமுக அபிவிருத்தி பணிகளை விரிவு படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வரும் அதே வேளை மயிலிட்டி துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக சுமார் 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டாலும் அதனுடைய அபிவிருத்தி பணிகளில் இடை நடுவில் விடப்பட்ட நிலையில் நாட்டினுடைய ஜனாதிபதியே அனுரகுமார திசாநாயக்க அதனை மேற்கொள்வதற்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கி உள்ளார். அதேபோல யாழ் கொழும்புத் துறை இறங்கு துறை மற்றும் குறிக்காட்டுவான் துறை அபிவிருத்திகள் இந்த வருட இறுதிக்குள் முடிவுறுத்தப்படும். எது அரசாங்கம் நாட்டில் வாழுகின்ற சகல இன மத மக்களை இணைத்துக் கொண்டு புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு அரசாங்கமாக ஆட்சிக்கு வந்தது யாவரும் அறிந்த விடயம். எமது அரசாங்கத்தின் பயணத்தை தடுத்த நிறுத்தலாம் என சிலர் நினைக்கிறார்கள் காரணம் கடந்த காலங்களைப் போல திருடர் யுகம் ஒன்றை மீண்டும் கொண்டு வருவதற்காக துடிக்கிறார்கள். இந்த நாட்டை மீண்டும் ஒரு அழிவு பாதை இட்டுச் செல்வதற்கு இன்னும் சிலர் இனவாதத்தை கையில் எடுக்கிறார்கள் அது அவர்களின் அரசியல் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் இழந்து போன அரசியலை மீண்டும் புத்துயிர் படுத்துவதற்கே. ஆகவே வடக்கு மக்களுக்கு தெளிவாக ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் எமது அரசாங்கம் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் ஒரு அரசாங்கமாக செயல்படும் அதேவேளை அபிவிருத்தி பணிகளையும் தொடர்சியாக முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/237396
-
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் ரிட் மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் ரிட் மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பு 30 January 2026 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த போதிலும், தீர்ப்புரை இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அறிவித்தார். இதற்கமைய, தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அதற்கு முன்னதாக தீர்ப்பு தயாராகும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (பெப்ரவரி 02) அதனை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக நீதியரசர் தெரிவித்தார். திருகோணமலையில் புத்தர் சிலை ஒன்றை நிறுவியது தொடர்பான சர்ச்சையையடுத்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில் இந்தத் தேரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/443569/trincomalee-buddha-statue-issue-verdict-on-the-writ-petition-of-the-theras-postponed-until-next-month
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Siva Raj pnSsderoot3h:0863tfl11,76772ej74 c7gaac0u3vniu0 0f3rfhu2l72i · உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு டென்மார்க்...கார் விலை மிக அதிகம். அதனால் மக்களில் பெரும்பாலும் பேருந்து & மிதிவண்டியில் தான் பயணிப்பார்கள். உணவகங்களில் கட்டுபடி ஆகாத விலை. அதனால் தினமும் வீட்டு சமையல்தான். பள்ளியை பொறுத்தவரை மிக தாமதமாகத்தான் படிக்க துவங்குவார்கள். ஆறு வயதில் தான் பள்ளிக்கு போவார்கள். மிக தாமதமாக 30 வயதில் தான் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். நம் ஊரில் மூன்று வருடத்தில் படிக்கும் இளங்கலை பட்டத்தை டென்மார்க்கில் ஆறரை வருடம் படிப்பார்கள். படிக்கையில் நடுவே உலக அனுபவம் பெற சுற்றுப்பயணம் போவார்கள். எதாவது திட்டத்தை (project) எடுத்து செய்வார்கள். கல்லூரி கட்டணம் முழுக்க இலவசம் என்பதுடன் அரசு படிக்கும் மாணவர்களுக்கு மாத சம்பளமாக $900 கூட கொடுக்கும். அதனால் 30 வயதில் படித்து முடித்துவிட்டு வருகையில் நல்ல உலக அனுபவத்துடன் வெளியே வருவார்கள். 68% வரி. பெயிண்ட் அடிக்கும் வேலைக்கும் இருதய மருத்துவ நிபுணர் வேலைக்கும் சம்பளம் ஒன்றுதான். அதனால் விருப்பப்ட்ட வேலைக்கு போகலாம். மருத்துவர்கள் ஆக விரும்பாதவர்கள் சம்பளத்துக்காக மருத்துவர்களாக ஆகவேண்டியது இல்லை. வாரத்துக்கு 35 மணிநேர வேலைதான். வெள்ளிக்கிழமை மதியம் வீட்டுக்கு வந்துவிடலாம். மதிய உணவை கம்பனிகளில் தனியாக உண்ணமாட்டார்கள். அலுவலகத்தில் முதலாளி முதல் கடைசிகட்ட தொழிலாளி வரை அனைவரும் ஒன்றாக கூடி ஒரே அறையில் உண்ணுவார்கள். பாராளுமன்றத்தில் பிரதமர், எதிர்கட்சி தலைவர் அனைத்து கட்சி எம்பிக்கள் என அனைவரும் இப்படித்தான் ஒன்றாக கூடி உணவை உண்ணுவார்கள். மக்களிடையே சகோதரத்துவம் வளரவேண்டும் என்பதால் அரசு பல கிளப்புகளை ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளன.. மாலைகளில் சதுரங்கம் பொம்மை செய்வது இப்படி பல கிளப்களில் சேர்ந்து கலைகளை கற்றுக் கொள்ளலாம்/கூடி பேசலாம். அரசு பல கூட்டுறவு வீடுகளை ஒன்றாக கட்டியுள்ளது. Bofaellesskap என பெயர். 30 குடும்பங்களை குடியமர்த்துவார்கள். இங்கே விதியே எல்லாரும் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்பதுதான். குழந்தைகள் எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்து ஓடிவருவார்கள். நீங்களும் மற்றவர் வீடுகளுக்கு தயக்கமில்லாமல் போகலாம். வீடுகளில் கூட்டுறவு சமையல். மாதத்தில் ஒரு நாள் ஒரு வீடு 30 குடும்பங்களுக்கு சமைக்கும். மற்ற 29 நாட்கள் அதன்பின் சமைக்க வேண்டியது இல்லை. இந்த 30 குடும்பங்களும் அதன்பின் வாழ்நாள் முழுக்க நல்ல நண்பர்களாக இருப்பார்கள். பணம் ஆடம்பரம் ஆகியவற்றை சுத்தமாக பொருட்படுத்தாத நாடு டென்மார்க். பி.எம்.டபிள்.யூவில் போகிறவனை விட சைக்கிளில் போகிறவனை கூடுதலாக மதிக்கும் நாடு. அதனால் பணக்காரன் என சொல்லிக்க கொள்ளவே பலரும் கூச்சபடுவார்கள். தன் வளமையை பொருட்களை வாங்கி காட்டமாட்டார்கள். காட்டினால் மக்கள் தன்னை வெறுத்து விடுவார்கள் என்ற எண்ணம் தான் இங்கே அதிகம்... ஆனால் இந்தியாவின் பார்வையோ எதை நோக்கி.♥️"
-
41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைப் பெண் சபீனா யூசப்!
திருமதி அழகிப் போட்டியில் இலங்கை அழகிக்கு வெற்றி அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார். இப்போட்டி இலங்கை நேரப்படி வௌ்ளிக்கிழமை (30) காலை நிறைவடைந்தது. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானதுடன், அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. இப்போட்டியில் உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். https://www.tamilmirror.lk/செய்திகள்/திருமதி-அழகிப்-போட்டியில்-இலங்கை-அழகிக்கு-வெற்றி/175-371771
-
⚖️ கெஹெலிய பணமோசடி வழக்கு – தொழிலதிபருக்கு விளக்கமறியல்!
⚖️ கெஹெலிய பணமோசடி வழக்கு – தொழிலதிபருக்கு விளக்கமறியல்! adminJanuary 30, 2026 இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குத் தொடர்புடைய 30 மில்லியன் ரூபாய் பணமோசடி வழக்கில், பிரபல தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிரடி விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் ஜி.எம். நிஹால் சிசிர குமார எனப்படும் தொழிலதிபர் ஆவாா். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 30 மில்லியன் ரூபாயை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ கையாண்டு, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மாற்றியதாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 (1) (b) இன் கீழ் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக இவா் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் பெப்ரவரி 10-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஏற்கனவே தரமற்ற மருந்துகளைக் கொள்வனவு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த நிதி மோசடி விவகாரமும் அவர் மீதான பிடியை முறுக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) மருந்துகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நிஹால் சிசிர குமார ஊடாக முன்னெடுக்கப்பட்ட 30 மில்லியன் ரூபாய் பரிமாற்றம் ஒரு ஆரம்பப்புள்ளி மட்டுமே என லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) கருதுகிறது. இது போன்ற இன்னும் பல ‘நிழல்’ பரிமாற்றங்கள் அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளதா என விசாரணை தீவிரமடைந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட பணம் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சர்வதேச காவல்துறையினாின் (Interpol) உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிரான ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த கால அமைச்சர்களின் பல நிதி விவகாரங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. https://globaltamilnews.net/2026/227935/
- Today
-
கருத்து படங்கள்
- காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்.
காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம். தமிழகத்தை உலகளாவிய காலணி உற்பத்தியின் மிக முக்கிய மையமாக மாற்றும் நோக்கில், இத்தாலி பல்கலைக்கழகத்துடன் கோத்தாரி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. காலணி உற்பத்தியில் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இத்தாலியின் புகழ்பெற்ற ‘இத்தாலியன் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ட் அண்ட் டிசைன்’ பல்கலைக்கழகத்துடன், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரஃபீக் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும். இதன்மூலம் தோல் அல்லாத காலணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 17 சதவீத வரி தற்போது பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, கடந்த 6 மாதங்களில் அமெரிக்க வரி விதிப்புக்கு பின் இந்தியாவுக்கு வரவேண்டிய ஏராளமான முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இந்தோனேஷியாவுக்கு சென்றுவிட்டன. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தால் மீண்டும் பிரபல நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. தற்போது கோத்தாரி நிறுவனம் பெரம்பலூரில் ‘கிராக்ஸ்’ பிராண்டு காலணிகளை தயாரித்து வரும் நிலையில், கரூரில் ‘அடிடாஸ்’ பிராண்டுக்கான பிரம்மாண்ட உற்பத்தி ஆலையை கட்டி வருகிறது. மேலும், கோவையைச் சேர்ந்த ‘ஜோடிஸ்’ மற்றும் ‘சீட்லோ’ பிராண்டுகளை கையகப்படுத்தியுள்ள கோத்தாரி நிறுவனம், அடுத்தகட்டமாக 70 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள சர்வதேச பிராண்டான ‘கிக்கர்ஸ்’ நிறுவனத்தையும் கையகப்படுத்தவுள்ளது.ஒரு இந்திய நிறுவனம் சர்வதேச பிராண்டின் உரிமையை மட்டும் பெறாமல், அந்த நிறுவனத்தையே உரிமையாளராக முழுமையாக கையகப்படுத்துவது இதுவே முதல் முறை. மேலும், காலணி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை தயாரிப்பதற்காக உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து பெரம்பலூரில் ஒரு பிரத்யேக மூலப்பொருள் பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் உள்ள 2,500 விற்பனை நிலையங்களை 6 ஆயிரமாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இப்பணிகளின் மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகம் உலக அளவில் காலணி உற்பத்திக்கான பெரிய இடமாக மாறியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் கோத்தாரி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.முத்துமோகன் உடனிருந்தார். https://athavannews.com/2026/1462271- கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை! கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (29) அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதன் மூலம் கம்யூனிஸ்ட்களால் நடத்தப்படும் நாடுகளுக்கு எதிரான தனது அழுத்தப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். தேசிய அவசரகால பிரகடனத்தின் கீழ் நிர்வாக உத்தரவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, எந்தவொரு கட்டண விகிதங்களையும் குறிப்பிடவில்லை. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க இராணுவம் பதவி நீக்கம் செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஒரு கொடிய தாக்குதலுடன் கைது செய்தது. இந்த துணிச்சலுடன் ட்ரம்ப், கியூபாவிற்கு எதிராக செயல்படுவது மற்றும் அதன் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து பலமுறை பேசியுள்ளார். கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் தீவு அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, கியூபா மீது ஒரு ஒப்பந்தத்தை கட்டாயப்படுத்த வொஷிங்டனுக்கு எந்த தார்மீக அதிகாரமும் இல்லை என்று கியூபாவின் ஜனாதிபதி இந்த மாதம் கூறினார். ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் வெளியுறவுக் கொள்கை கருவியாக வரி அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1462256- பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு!
பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா! இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், பிரிட்டிஷ் குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் விதிகளை தளர்த்த சீனா ஒப்புக்கொண்டது. இது லண்டன் தனது சேவைத் துறையை விரிவுபடுத்த உதவும் என்று நம்பும் ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். பிரிட்டிஷ் குடிமக்கள் 30 நாட்களுக்குள் பயணம் செய்தால் விசா இல்லாமல் சீனாவிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஸ்டார்மர் கூறினார். இது வணிகத்திற்கு கிடைத்த வெற்றியாக அவர் வர்ணித்தார். விசா ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வரும் என்பதற்கான திகதி எதுவும் உறுதியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் இது விரைவில் நடக்கும் என்று இங்கிலாந்து அரசாங்கம் நம்புகிறது. தேசிய புள்ளிவிவர அலுவலக தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில் சுமார் 620,000 பேர் சீனாவுக்குப் பயணம் செய்துள்ளதால், இலட்சக்கணக்கான பிரிட்டிஷ் மக்கள் இந்த மாற்றத்தால் பயனடையக்கூடும். இதேவேளை, பிரதமர் ஸ்டார்மரின் இந்தப் பயணத்தின் போது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பெய்ஜிங்குடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால், இங்கிலாந்து விஸ்கி மீதான இறக்குமதி வரிகளை 10% இலிருந்து 5% ஆகக் குறைப்பதற்கான ஒப்பந்தமும் ஏற்பட்டது. எவ்வாறெனினும், தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் மனித உரிமைகள் பதிவுக்கு ஆபத்து இருப்பதால், சீனாவுடன் இங்கிலாந்து மிகவும் எச்சரிக்கையான உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் வாதிட்டனர். https://athavannews.com/2026/1462249- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
அன்னாருக்கு அஞ்சலிகள் , உறவை பிரிந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இலச்சினை,அடையாளங்கள் ஏதுமில்லாமல் பணிகளை தொடரலாம் என்பது என் கருத்து.விளம்பரங்கள் இப்போதைக்கு தேவையுமில்லை.காலம் இருக்கிறது. அனுபவங்கள் வரும். அதன் பின் அத்திவாரங்களை போடலாம். எனக்கு ஏராளன் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்தான் என் அத்திவாரம். மிகுதியை காலம் போக போக பார்க்கலாம்.- கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு
அந்தந்த நாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஈ-கேட் பாவிக்கலாம் என நினைக்கின்றேன். அதே போல் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு வட்டத்திற்குள் உள்ளவர்களும் இதே முறையை தங்கள் ஒன்றிய நாடுகளுக்குள் பாவிக்கலாம்.- சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
இலங்கை தமிழ் பகுதிகளில் சிங்கள கட்சிகளுக்கும் இன்றைய ஜனாதிபதி அனுரவிற்கும் ஏகோபித்த ஆதரவு இருக்கின்றது. எனவே.....? 😎- Yesterday
- இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!
இன்று உலகில் நடக்கும் மூன்றில் இரண்டு பங்கு போர்களுக்கு இங்கிலாந்தின் அன்றைய நரிக்குணங்களே காரணம்.அந்த போர்,வறுமை காரணங்களால் மூன்றாம் உலக நாட்டு மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதி எனும் பெயரில் படை எடுக்கின்றார்கள்.. "தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்"- ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,சிரியா மீதான அதிரடி இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஈரான் நல்ல பாடமும் அனுபவமும் பெற்றிருக்கும் என நினைக்கிறேன்.- ஐரோப்பிய ஆணைய ஆவணம் 2027 ஆம் ஆண்டுக்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஓர்பன் கூறுகிறார்.
கம்யூனிசமே தளர்ந்து மேலைத்தேய கொள்கைகளை கடைப்பிடிக்கும் நிலைக்கு வந்து கொண்டிருக்கும் போது....... ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தமது அரசியல் கொள்கைக்காக பல பிரச்சனைகளை நனைச்சு சுமக்கின்றார்கள். உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிக்கின்றது என கதறினார்கள். வெனிசுலாவை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போது மௌனமானார்கள்.கிரீன்லாந்தை அமெரிக்கா அபகரிக்க திட்டமிடும் போது குய்யோ முய்யோ என வெளியே சத்தம் வராத அளவிற்கு முனகுகின்றார்கள்.- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளை நம்பி வாக்களித்தார்கள். தமிழர் கட்சிகளை நம்பி வாக்களித்தார்கள்.ஒவ்வொரு விடுதலை இயக்கங்களையும் நம்பி அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். இன உரிமை விடுதலைக்காக கழுத்தில் இருந்த பொன்னையும் கழட்டி கொடுத்தார்கள்.பலர் சொந்த மண்ணையும் கொடுத்தார்கள். எல்லாம் தாம் தம் சுதந்திர பூமியில்.....சுதந்திரமாக ஏனைய மனித இனங்களைப்போல் வாழ வேண்டும் என்பதற்காக.... இறுதியில் ஒற்றை இயக்கமாக நின்று தனி மண்ணை தம்மால் ஆள முடியும் நிர்வகிக்க முடியும் என சாதித்து காட்டியவர்களுக்காக ஈழ மக்கள் தம்மையும் இழந்தனர். எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியான ஈழத்தமிழ் மக்களுக்கு மீண்டும் பதவி எனும் அகோரப்பசி கொண்ட தமிழ் கட்சிகள் இதுவரைக்கும் எதை செய்து கிழித்தார்கள் என்பதை உங்களால் விபரித்து சொல்ல முடியுமா? அனுர கட்சி புதிய கோணத்தில் ஆட்சி செய்யப்போவதாக ஈழத்தமிழ் மக்களுக்கு உறுதியளித்தார்க. மக்களும் புதியவர் என்பதால் நம்பினார்கள். இன்றும் நம்புகிறார்கள். நம்ம தம்பி......பெயர் வருகுதில்லை.....அதுதான் சாவச்சேரி டாக்குத்தர் தம்பி. அவரையும் புது ஆள் எண்டு போட்டு கொழும்புக்கு அனுப்பினால்......?😭 இனவாத சிங்களம் மதத்தை வைத்து மட்டுமே தன் இனத்தை வளர்த்தெடுக்கின்றது. அதே போல் ஈழத்தமிழனும்......👈- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
நான் இப்ப கொழும்பிலை தான் நிக்கிறன் சிறித்தம்பி.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
உண்மையில் இன்னும் நான் அதை நேரடியாக ஆரம்பிக்கவில்லை. வேலையிடத்தில் எதிர்பாராத ஒரு இழப்பு ஏற்பட்டதால் அனேகமான வேலைச்சுமைகள் என் தலையில் வீழ்ந்து விட்டது. மீண்டு வர பல நாட்கள் எடுக்கலாம் என நினைக்கின்றேன். சுடுது மடியை பிடி என அவசரப்படாமல் ஆறுதலாக சென்றால் நினைத்த இலக்கை அடையலாம் என்பது என் கருத்து. இது பற்றி உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.- யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
பலாலி முகாம் ஆட்லறி செல்களை இயக்கம் மண்டதீவை தாக்கியபோது மட்டுமே யாழ்நகர் பக்கம் ஏவியது நினைவில் உள்ளது. ஆனால் தென்மாராட்சி பக்கம் அடிக்கடி ஆட்லறி அனுப்பி உயிர்ச்சேதம் ஏற்பட்டது. - காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.