Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. Enter a Team என்றால் நீங்கள்தான் ரைப் பண்ணவேண்டும்😀
  3. கச்சத்தீவில் அரசியல் வேண்டாம் - வட மாகாண மீனவர் சங்கம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வட மாகாண கடற்றொழில் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான அன்னலிங்கம் அன்னராசா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். கச்சத்தீவு வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக கச்சத்தீவு வரும் இந்திய மீனவர்கள், அங்கு இலங்கை - இந்திய மீனவ விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் அதனை யாத்திரைத் தளமாக மாத்திரம் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய சட்ட சபைத் தேர்தல் அண்மையில் வரவுள்ளதால் நீண்ட காலமாக நிலவி வரும் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையும் தேர்தலின் பேசுபொருளாக மாறியுள்ளது. எனவே அதனடிப்படையில் இங்கு நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசாங்கம் மற்றும் மீனவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cml4synui04qio29nxfwe2i56
  4. திருகோணமலை சம்பவம் - கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது. எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (2) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cml4otgnp04q4o29nwq0aiiuy
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  6. Today
  7. CAN,52. SCOT,67. WI and 73. PAK உங்கடை கூகிள் சீற் தான் சொதப்பிப்போட்டுது
  8. ‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு Published By: Vishnu 02 Feb, 2026 | 04:41 AM கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் அமைகிறது. நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (01) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் கிழக்கு மாகாண ஓய்வு பெற்ற முன்னாள் காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் வளவாளராக கலந்துகொண்டதுடன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டதோடு, வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர், வவுனியா வடக்கு, கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் கிவுல் ஓயா திட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வு முடிவடைந்த நிலையில்,வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வின் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதி மொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், 'நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம்,மேற்கூறிய உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்க வேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும். இருப்பினும், அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், இம்மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைத்து, அவர்களின் வாழ்வாதார நிலைகளை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அரசாங்கம், அதனை விடுத்து வெளி பிரதேசங்களில் இருந்து மக்களை கொண்டு வந்து இப்பிரதேசங்களில் குடியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாக உள்ளது. இவ்வாறான குடியேற்றங்கள் தேவையற்ற அரசியல், கலாச்சார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின் படி, 'கிவுல் ஓயா' நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், தமிழர்களின் பூர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக, வடகிழக்கு திசையில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 37 மீற்றர் (121.37 அடிகள்) உயரமுடைய அணையின் மூலம் உருவாக்கப் படவுள்ள இந்த நீர்த்தேக்கம், பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த நீர் தேக்கத்திற்கான எல்லைகள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெடிவைத்த மகாவலி அதிகார சபையினால் எல்லைக்கல்லிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன. இதன்விளைவாக, கல்லு,ஈச்சங்குளம்,கூழாங்குளம்,காட்டு பூவரசங்குளம்,காஞ்சூர மோட்டை உள்ளிட்ட பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும்குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. பெரியமேலும், 1921 ஆம் ஆண்டு வர்த்தமான அறிவித்தலின் மூலம் 'ஒதுக்குக் காடாக' அறிவிக்கப்பட்ட கட்டிக்குளம் ஒதுக்குக்காடு, சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியும், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் முழுமையாக அமிழ்ந்து போகும் நிலை உருவாகியுள்ளமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்கள், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் நீரில் மூழ்க போவதாக மகாவலி அதிகார சபையின் சொந்த திட்ட ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது. இது, நாட்டின் மரபுரிமை மற்றும் தொல்லியல் பாதுகாப்பு கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இத்தகைய பின்னணியில்,இந்த நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை பிரதேசத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப் படுவதை 'தொல்லியல் பாதுகாப்பு' என்ற பெயரில் கட்டுப்படுத்தும் நிலையில், அதே சமயம் பல தொல்லியல் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைய அனுமதிக்கப்படுவது தொடர்பில் தெளிவான, வெளிப்படையான விளக்கங்கள் அரச நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவு களுக்குரிய ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ளமை பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன், கொக்குத்தொடுவாய் சூரிய நாற்றுப் பகுதியில், தமிழ் மக்களுக்கு மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1,990 ஏக்கர் காணிகள், தற்போது கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இது, இப்பிரதேசங்களில் இனப்பரம்பல் அமைப்பையும், சமூகச் சமநிலையையும் மாற்றக்கூடிய ஒரு நவீன காலனித்துவ செயல்முறையாக பார்க்கப்படுகிறது. எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு தாக்கங்களை மீளாய்வு செய்யவும், உள்ளூர், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமை உடன் இணைக்கவும், வெளிப்பிரதேச குடியேற்றங்களை தவிர்க்கவும், உள்ளூர் சமூகங்களின் காணி, வாழ்வாதாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாக்கவும் தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இலங்கையில் நிலையான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால், அது உள்ளூர் மக்களின் உரிமைகள், மரியாதை மற்றும் வரலாற்றுப் பிணைப்புகளை மதிக்கும் அணுகுமுறையின் மூலம் சாத்தியமாகும் என்பதை அரசிற்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறோம் .என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237583
  9. சர்வதேச கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்; 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி Published By: Vishnu 02 Feb, 2026 | 04:46 AM ( செ.சுபதர்ஷனி) சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 12 மீனவர்களில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினிதி துவ உள்ளிட்ட இரு ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் 12 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி அவர்கள் மீன்பிடிப் பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் வென்னப்புவ நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரின் கப்பலொன்று இவர்களை வழிமறித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீன்பிடி படகிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அதிகாரிகள், மீனவர்களிடம் போதைப்பொருள் மற்றும் செய்மதித் தொலைபேசிகள் உள்ளனவா எனக் கேட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், இந்திய கடற்படையினர் மீனவர்களை விலங்குகளைப் போலக் கீழே தள்ளி மிதித்தும், ஐஸ் கட்டிகள் மீது படுக்க வைத்தும் முதுகுப் பகுதியில் கடுமையாகத் தாக்கியதாகக் குறிப்பிட்டனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகச் சந்தேகம் எழுப்பி, படகிலிருந்த உபகரணங்கள் மற்றும் உடமைகளைச் சேதப்படுத்தியதோடு, மீனவர்களுக்குக் கடும் உடல் ரீதியான சித்திரவதைகளை இந்திய அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இலங்கை எல்லைக்கு மிக அண்மித்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். காயமடைந்த மீனவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு இன்று அதிகாலை கரைக்கு அழைத்து வரப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் இருவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய மீனவர்கள் படகுகளுடன் கரைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கையாள்வதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இலங்கை கடற்படைக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உறவினர்களால் வைத்தியசாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/237584
  10. சுமந்திரன், சங்கு கூட்டணி.... உதயம். 😂 🤣 சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... மாகாண சபைத் தேர்தலில், சங்கு ஊத சபதம். ஊ..... ஊ..... ஊ..... ஊ.....
  11. மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா! மியன்மாரில் மோசடி மையங்களை நடத்திய பிரபல பாய் (Bai) குடும்ப குற்றக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை சீனா தூக்கிலிட்டுள்ளதாக பெய்ஜிங்கின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தால் மோசடி, கொலை, காயம் மற்றும் பிற குற்றங்களுக்காக தண்டனை பெற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பங்காளிகள் 21 பேரில் இந்த நான்கு பேரும் அடங்குவர். பாய் குடும்பத்தின் குற்றச் செயல்கள் ஆறு சீன குடிமக்களின் மரணத்திற்கும், ஒருவர் தற்கொலைக்கும், பலருக்கு காயங்களுக்கும் வழிவகுத்தன என்று தண்டனையை அறிவித்த நீதிமன்றம் கூறியது. கடந்த நவம்பரில் நீதிமன்றம் 21 பேரில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதில் குலத்தின் மூதாதையர் பாய் சூசெங், தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் உடல்நலக்குறைவால் இறந்தார் என்று அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் ஆயிரக்கணக்கான சீனர்களை சிக்க வைத்துள்ள மோசடி நடவடிக்கைகளை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் சீனா மிங் குடும்ப மாஃபியாவைச் சேர்ந்த 11 பேரை தூக்கிலிட்டது. பல ஆண்டுகளாக, பைஸ், மிங்ஸ் மற்றும் பல குடும்பங்கள் மியான்மரின் எல்லை நகரமான லாக்கீங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அங்கு அவர்கள் கேசினோக்கள், சிவப்பு விளக்கு மாவட்டங்கள் மற்றும் சைபர் குற்ற நடவடிக்கைகளை நடத்தினர். https://athavannews.com/2026/1462608
  12. சுமந்திரன், சங்கு கூட்டணி.... உதயம். 😂 🤣 சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... மாகாண சபைத் தேர்தலில், சங்கு ஊத சபதம். ஊ..... ஊ..... ஊ..... ஊ.....
  13. அரையிறுதிப் போட்டிகளின் scenarios எல்லாம் தெளிவாக இல்லை. எனினும் இப்போதுள்ள புரிதல்களின்படி தெரிவுகளை மேற்கொண்டால் போதும். மைதானங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் புள்ளிகளை இழக்கவேண்டி வராது🙂
  14. இரன்டாம் உலக யுத்தத்தின் முடிவின் பின்னர், ஜேர்மனி மற்றும் ஜப்பான் இரண்டினையும் அதன் சொந்த இராணுவத்தினை பேண கூடாது எனும் கட்டுப்பாட்டிலேயே இவ்வாறான உடன்பாட்டிற்கு வந்ததாக நினைவுள்ளது. இரண்டு நாடுகளும் போர் இழப்பின் பின்னர் போர் வெற்றி, வீரம் என பேசி காலம் கடத்தாமல் அவர்களுக்கிருந்த கட்டுப்பாடுகளுக்குள்ளாகவே பொருளாதார ரீதியாக தம்மை கட்டமைத்தார்கள். எங்கோ இருக்கும் அவுஸ்ரேலியா தனது வழஙகளில் குறிப்பிட்ட பகுதியளவு உரிமை எடுக்க முற்பட்டாலே ஆட்சி கவிழ்ப்பு நிகழுகின்ற நிலை காணப்படுகிறது. அவுஸ்ரேலியாவில் வர்த்தக வரி 28% என நினைக்கிறேன், ஒரு அதிபர் மிக பெரும் இலாபம் பெறும் சுற்றுசூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் சுரங்க அகழ்வு வர்த்தகத்திற்கு 40% வரி விதிக்கப்போவதாக கூறினார் (அதிகரித்து வரும் வயோதிகர்களின் எண்ணிக்கையினை சமாளிப்பதற்கான பணத்தினை பெறும் முயற்சி), அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதற்கு முன்னரும் பிரச்சினை ஏற்படுத்தும் அதிபர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
  15. மோகன் அண்ணா மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாருக்கு கண்ணீரஞ்சலி.
  16. இந்தியா, இலங்கை எல்லாம் வெறும் லேபிள்தான், உரிமைகள்தான் முக்கியம். பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருபதனை விட ட்ரம்பிடம் காசு வாங்கிக்கொண்டு அமெரிக்காவுடன் சேர்ந்தால் (கிறீன்லாந்து பேரம்) நல்ல தனிமனித உரிமை, பொருளாதார சுதந்திரம் எல்லாம் இருக்கும் (இந்தியா என லோக்கலா சிந்திக்காமல் இன்ரனெசனாலா போகலாமே), பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் இருக்கிறதையும் பிடுங்கி விடுவார்கள்🤣. 20. இந்தியாவின் அரசியல், பொருளாதார பங்களிப்புகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன? இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது. இந்தியா என்றைக்குமே உலக வல்லரசாக முடியாது என்பதே தற்போதய யதார்த்தம் .
  17. யூடியூப் பேஸ்புக் இரண்டுமே பின் தொடர்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பகிர்பவர்களுக்கும் அலையும் கோஷ்தான், அடுத்தவனின் தனிப்பட்ட விஷயங்களில் நுழைந்து விமர்சனம், ஆய்வு வாய்வு செய்யும் அசிங்கம் பேஸ்புக்கிலேயே அதிகம். அதனால் பக்கங்கள் முடக்கப்படுவதும் பேஸ்புக்கில்தான் அதிகம். இந்த செய்தியை பகிர்ந்த பேஸ்புக்காரர் சமுதாயத்துக்கு ஆற்றிய அறிவுபூர்வமான தொண்டுதான் என்ன? ஒவ்வொருவரும் உங்கள் ஆதாயத்திற்காக ஏதோஒன்று பண்ணுகிறீர்கள் , உங்களின் அதே தொழிலை செய்யும் இன்னொருவரை விமர்சிக்க அதிகாரம் எங்கிருந்து பெற்றீர்கள்? பேஸ்புக் காரருக்கும் யூடியூப் காரருக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம் பேஸ்புக் காரர் அதனையே முழுநேர தொழிலாக செய்வதில்லை, யூடியூப் காரர் அதுவே தொழிலாக வைத்திருக்கிறார்கள், அது வருத்ததுக்குரிய விஷயம் மட்டுமல்ல எதிர்காலம் குறித்த அச்சம் தரும் தொழிலும்தான்.
  18. கற்கால மனிதன் காட்டினில் வாழ்ந்த காலத்தில் இருந்த சுய பாதுகாப்பு பொறிமுறை முழுவதும் பல தலைமுறையாக இக்கால மனிதனுக்கும் கடத்தப்படுகிறது. இருளை கண்டால் இயல்பாக ஏற்படும் பயம், எமது புலன் மட்டுப்படுத்தப்படும் போது அதன் பின்னால் இருக்கும் ஆபத்திலிருந்து காக்க சுய பாதுகாப்பு பொறிமுறை பயத்தினை தூண்டிவிடுகிறது. இவ்வாறான பயமான சூழலில் விரைவாக செயற்படுவதற்காக மூளை குறுக்கு வழிகளை தேடுகின்றது. நவீன காலத்திற்கு இந்த விதமாக வேகமாக சிந்திப்பது பாதகமானது, ஆனால் மிருகங்கள் போல மனிதனும் சுய பாதுகாப்பு பொறிமுறையால் தூண்டப்படுகின்ற நிலை தொடர்ந்து காணப்படுகிறது. இந்த ஒலி ஆயுதம் தொடர்பாக கூறும் ஒரு தமிழ் யுரியூப் காணொளியாளர் மிகையான ஒலி அலைகளை பயன்பாடுபற்றி கூறியவர் பின்னர் இறந்த கியூப பாதுகாப்பாளர்கள் உடலங்கள் சிறிய பெட்டியில் கொண்டு செல்லப்பட்டதாக இரண்டையும் தொடுக்குக்கின்றார். ஆதிகாலத்தில் இடி மின்னல் போன்ற இயற்கை விளைவுகள் ஏற்படும் போது மனிதன் அதன் காரண காரியத்தினை விளங்கிக்கொள்ளமுடியாத நிலையில், அந்த இயற்கை விளைவுகலை தமக்கான ஆபத்தாக பார்த்து அதிலிருந்து தப்ப முதன் முதலில் உருவாக்கப்பட்டதுதான் இயற்கை தெய்வ வழிபாடு (எமது இந்து மதத்தில் அதன் தொடர்ச்சி இன்னமும் காணப்படுகிறது). பனிப்போர் காலத்தில் இரஸ்சியா "மொஸ்கோ சிக்னல்" (அதிக ஒலி அதிர்வுகள்) மூலம் வெளிநாட்டு தூதுவர்களது உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவ்வாறான விடயங்கள் எமது புரிதலுக்கு அப்பாற்பட்டிருக்கும் போது ஏற்படும் மிகைப்படுத்தப்பட்ட பயம் தூண்டப்படும், அதே நேரம் பயத்தில் இருக்கும் போது எமது புரிதல்கள் மட்டுப்படுத்தப்படும் (இரு வழிகளிலும் நிகழும்). இது ஒரு அமெரிக்க உளவியல் யுத்த பிரச்சாரம், இது போல எதிர்த்தரப்பினை பலவீனப்படுத்த பல யுத்திகள் அமெரிக்காவினால் கடந்த காலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்ல சொந்த மக்களுக்கெதிராகவும் உதாரணமாக ஒரு எதிர்த்தரப்பு மிக பயங்கரமான கொடிய ஆயுதம் வைத்துள்ளது என கூறி மக்களை பீதிக்குள்ளாக்கி தனது நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பது போன்ற செயல்கள். இவ்வாறான ஆயுதங்களின் பயன்பாடு மிக மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு கொண்டதாகவே உண்மையில் இருக்கும் ஆனால் அவை மிகைப்படுத்தப்படுவதற்காக அது பற்றிய குறிப்புகளை கூறாமல் விடுவதன் மூலம் மக்களின் இயல்பான சுய பாதுகாப்பு பொறிமுறையினை தூண்டிவிட்டு அதனை மிகைப்படுத்துகிறார்கள் (வெனிசுலா இராணுவத்தினர் தாம் இராணுவ சட்டத்தினை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவின் பரப்புரையினை பயன்படுத்தியிருக்கலாம்). போரில் இந்த உளவியல் யுத்தம் மிக காத்திரமானது.
  19. ஏதோ நமக்கு நல்லாய் பொழுதுபோகுது. பல விடயங்களையும் அறியக்கூடியதாய் உள்ளது. அதற்கொரு பெரிய நன்றி இலங்கை யூரியூப்பர்களுக்கு சொல்லத்தான் வேண்டும்.
  20. என்னய்யா, எங்கள் அரசியல் பனங்காய்கள் கடைசியில் புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் நாங்கள் இலங்கையில் இருந்து பிரிந்து உலக வல்லரசு இந்தியாவுடன் இணைந்திடலாம் என கதையை முடித்து வைக்க போகின்றார்களோ? எதற்கும் முப்பது நாட்களில் கிரமமாக கிந்தியில் கதைப்பது எப்படி என்கிற புத்தகத்திற்கு ஒரு ஓடர் கொடுப்போம்.
  21. ஆதாரம் இருக்கா அல்லது புலவர் எழுதினாலே அது ஆதாரம்தான் என்கிறீர்களா? 😂 ஆனால் இவை எல்லாம் புலிகள் மீது நான் உட்பட பலரும் முன்வைத்த விமர்சனங்கள்தான். ஆனால் இதை வைத்து புலிகளை அழித்தமைக்கு மகிந்தவுக்கு நன்றி சொன்னார் என்றோ அல்லது மேற்கு நாடு தன்னிடம் புலிகளை அழித்த பின் தீர்வு தருவதாக சொன்னார்கள் என சொன்னார் என்றோ நிறுவ முடியாது. 2008, 2009 நேரம் சம்பந்தரிடம் மட்டும் அல்ல, போரை நிறுத்த சொல்லி இலண்டன் உட்பட வெளிநாட்டில் சந்தித்த இடங்களில் கூட,…. போரை நிறுத்த முயல்கிறோம், இல்லை எனில் போரின் பின் தக்க தீர்வை கொடுக்க வலியுறுத்துவோம் என பலரிடம் கூறினார்கள். மன்மோகன் சிங் நேரடியாகவே இலங்கை விஜயத்தில் 13+ கொடுப்பதாக சொன்னீர்களே என வலியுறுத்தினார் என வாசித்த நியாபகம். அதைத்தான் சம்பந்தர் சொல்லியுள்ளார்.
  22. விடுதலைபுலிகள் அழிவதற்கு வெளிநாடுகளுக்கும், மேற்குக்கும், இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறுவேற்றி, அதன் மூலம் 13 பிளஸ் தமிழருக்கு கொடுக்கபடின், அவர்களின் அழிவை ஒரு நல்ல விடயம் என கருதலாம் என சம்பந்தர் மேலே கூறி உள்ளார். இதில் எமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம் - ஆனால்…. புலிகளை அழித்தமைக்காகக சம்பந்தர் மகிந்தவுக்கு நன்றி கூறினார் என்பதற்கு இது ஆதாரம் அல்ல. அதற்கான ஆதாரம் உங்களிடம் கட்டாயம் இருக்கும் - போட்டு விடுங்கள். இல்லை… இதுவும் நான் மேலே சொன்னது போல் கஜன் கட்சி தீவிர ஆதரவாளர் (யாழ்கள பிரச்சார பீரங்கி) புலவர், சம்பந்தன் கூறியதன் சூழமைவை தவிர்த்து விட்டு, அதற்கு கை, கால் எல்லாம் வைத்து உருட்டும், உருட்டே. மகிந்த அவர்களே, புலிகளை அடித்து விட்டீர்கள் நன்றி. என சம்பந்தர் கூறியதாக எனக்கு நினைவில்லை.
  23. முட்டாள்தனமாக ஆதவன் செய்திக்கு தலையங்கம் கொடுத்துள்ளது. தலையங்கத்தை மட்டும் மேய்ந்து விட்டு கச்சேரி வேறு களை கட்டுகிறது😂. இதுதான் செய்தி. இதை ஏலவே எக்ஸ் செய்கிறது. எக்ஸுக்கு சந்தா கட்டினால் சில சலுகைகள், ஏ ஐ கருவியான கொரொக்கின் முழு பாவிப்பு கிடைக்கும். இல்லை எண்டால் அடிப்படை சேவை இலவசம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.