stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
தம்பர் விழுந்தும் மண்படவில்லை என்று எஸ்கேப் ஆகப்பார்க்கிறார்.
-
எரிபொருள் விலை உயர்வு தாக்கம்: பேருந்து கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள் விலை உயர்வு தாக்கம்: பேருந்து கட்டணம் அதிகரிப்பு Published By: Vishnu 23 Mar, 2026 | 07:06 PM பேருந்துக் கட்டணங்களை இன்று திங்கட்கிழமை (23) நள்ளிரவு முதல் 12.19 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதித்த தெரிவித்தார். இதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 27 இலிருந்து ரூ. 30 ஆக உயர்கிறது. மேலும், மேற்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து ஆணையம் முச்சக்கர வண்டி கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து சில தனியார் பேருந்துகள் சேவையை நிறுத்தியதால், பயணிகள் கடும் சிரமத்தையும் நெரிசலையும் எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241771
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
புரிகிறது. கொள்கையளவில் ஈரானின் அடிப்படை வாதிகள் வெல்லக் கூடாது. ஆனால், இந்த 3 வாரங்களில் என்னிடம் உருவான ஒரு கேள்வி, பெரும்பாலான ஈரானியர்களே இந்த அடிப்படை வாதத்தைச் சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கும் போது வெளியார் என்ன செய்ய முடியும் என்பது தான்! அவர்கள் அடிப்படை வாதத்தை ஆதரிக்கவில்லை, ஆனால் அதோடு வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று நினைத்திருக்கிறார்கள் என நம்புகிறேன். அந்த சகிப்புத் தன்மை இருக்கும் வரை தலைமையைக் கொன்று ஒன்றும் மாறப் போவதில்லை என நினைக்கிறேன். தென்னமெரிக்க நாடுகளில் ஒரு போதை வஸ்துக் கும்பல் தலைவரைக் கொன்றால் உடனேயே அடுத்தவர் பதவிக்கு வருவது போல, ஈரானிலும் இருப்பார்கள். கடைசியில் "பாலாவி" (Pahlavi) தான் பாவம்😂!
-
வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ஜனாதிபதி
வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ஜனாதிபதி Published By: Vishnu 23 Mar, 2026 | 06:44 PM நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கியுள்ள வலுசக்தி விநியோகத்திலான சவால்களுக்கு மத்தியில், வலுசக்தியைச் சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்தி நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது, நிறுவன ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் தற்போது அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு திங்கட்கிழமை (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் நடைமுறைச் சாத்தியமான நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், குறிப்பாக அரச சேவைக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டல்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. அதேபோல், உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி நுகர்வை முறையான முகாமைத்துவத்திற்கு உட்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரப் பெயர்ப்பலகைகள் மற்றும் ஏனைய அலங்கார மின் கட்டமைப்புகளுக்கு அதிகளவிலான மின்சாரம் செலவிடப்படுவதாகவும், அதனைக் மட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் மின்சார நுகர்வில் குறிப்பிடத்தக்க அளவைச் சேமிக்க முடியும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டது. நகர்ப்புறங்களில் அவசியமற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்திற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாகப் பின்பற்றக்கூடிய மாற்று வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து கலந்துரையாடி, விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/241769
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அமெரிக்காவில் தற்போது வித்தியாசம் இல்லை என்பது என் அனுபவம் (ஐரோப்பா, கனடா நிலை எனக்குத் தெரியவில்லை). கடைசியாக நான் ஏஜென்சி மூலம் இலங்கைக்கு ரிக்கற் வாங்கியது 2012 இல். அதுவும் வாழ்ந்த நகரத்தில் எனக்கு அறிமுகமான ஒரு இந்தியர் ஏஜென்சி வைத்திருந்ததால் அவருக்கு போனைப் போட்டு வாங்கியிருக்கிறேன். அதன் பிறகு குடும்பத்தில் இருப்பவர்களின் பல பயணங்கள், எல்லாம் நேரடியாக இணையத் தளத்தில் தான். இதில் பல சௌகரியங்கள் உண்டு. தற்போது போன் app கள் இருக்கின்றன. பெரும்பாலான விமான சேவைகளுக்கு app மூலமே check-in செய்து கொள்ளலாம். விமான நிலையத்தில், ஆவணத்தைக் காட்டி பயணப் பைகளை நிறுத்து அவர்களிடம் கொடுத்து விட்டுப் போக வேண்டியது தான். பயண முகவர்கள் மூலம் பயணச் சீட்டு வாங்கினாலும், இறுதியில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமெனின் பயணி விமான நிறுவனத்திடம் தான் நேரில் செல்ல வேண்டும், மேலே சுமே சென்றது போல. எனவே, என்ன வகையான பயன் பயண முகவர்களிடம் வாங்குவதால் கிடைக்கிறதெனத் தெரியவில்லை. ஐரோப்பாவில் அப்படியான ஏதும் பயன்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
கொமேனியின் மறைவை போல ஒரு நல்ல விடயமாகவே பி பி யின் தம்பரின் அகற்றமும், அடக்கமும் இருக்கும், என்னை பொறுத்தமட்டில். ஆனால் ஈரானிய அடிப்படைவாதிகள் இவ்வாறு வெல்வது, நிச்சயம் அரபு முஸ்லிம் நாடுகளுக்கோ எனைய தனி மனித சுதந்திரங்களை அனுசரித்து போகும் இஸ்லாமிய நாடுகளுக்கோ, நல்ல சகுனமாக இராது. அமெரிக்காவின் அடிவருடிகள் என நாம் மிக சுலபமாக அரபுநாடுகளை கடந்து போகலாம். ஆனால் உண்மையில் அடிப்படைவாதத்துக்கு எதிரான மிக் முக்கிய பங்கை ஆற்றுவது யு ஏ ஈ. சல்மான் வந்த பின் சவுதியில் கூட மிக நல்ல மாற்றங்கள் வந்தன. சில மத விதிகளை, சில ஹதீசுகளை நடைமுறை படுத்தவே தேவையில்லை என அண்மையில் அறிவித்தார். ஈரான் இந்த போரில் படுதோல்வி அடையாமல், சரணாகதி ஆகாமல், ஒரு போர்நிறுத்தம் வரும் எனில் - அது ஈரானின் வெற்றியே. தம்பர், செத்த கிளி, பிபி எல்லாரும் தற்காலிகமானவர்கள். ஆனால் ஈரானின் இந்த வெற்றி, அந்த பிராந்தியத்துக்கும், உலகுக்கும், ஷியா அடிப்படைவாதத்தில் நம்பிக்கை இல்லாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் ஒரு பெரும் தலையிடியாக அமையும். யாழ்களத்தில் ஸ்கோர் கேட்கும் மனநிலையில், அமெரிக்காவுக்கு அடி போட்டால் காணும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது உறைக்கும் போது காலம் கடந்து விட்டிருக்கும். இதே ஆட்கள்தான் பொதுபல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்பை ஆதரித்து, முஸ்லிம்களை ஆதரித்து எழுதிய எம்போன்றோரை திட்டினார்கள் என்பது அடுத்த லெவல் முரண்நகை. ஆனால் உங்கள் போன்ற கருத்தாளர்களுக்கு நான் சொல்வது புரியும் என நினைக்கிறேன்.
-
இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு
கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் : இதுவரை ஐவர் கைது! 23 Mar, 2026 | 07:51 PM கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதோடு, அதே கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னதாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (22) மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைதாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரும் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பின்னணி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டதோடு, அன்றைய தினம் அதே கிணற்றில் மற்றுமொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண், சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து, ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், இச்சம்பவத்தில் கடத்தல், கொள்ளை மற்றும் மனிதப் படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 3 சந்தேக நபர்கள் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள் 22 மற்றும் 34 வயதுடைய நாவற்காடு மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், பெண் சந்தேக நபர் காஞ்சனகுடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர்கள் குறித்த இரு பெண்களையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். வழியில் அவர்களுக்கு போதைப்பொருள் கலந்த பானத்தை அருந்தக் கொடுத்துள்ளனர். அவர்கள் மயக்கமடைந்ததும், அவர்களிடம் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அவர்களை நீர் நிறைந்த குறித்த கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர். இவர் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வெல்லாவெளி பகுதியிலிருந்து களுவாஞ்சிக்குடி பளுவாமம் அரச வைத்தியசாலை மற்றும் வங்கிக்குச் சென்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தபோது, சந்தேக நபர்கள் இவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று மேற்கூறியவாறு போதைப்பொருள் கலந்த பானத்தைக் கொடுத்து நகைகளைக் கொள்ளையடித்து கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர். கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை தனது மூன்று வயது குழந்தையுடன் வவுணதீவு பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்வதற்காகப் பேருந்திற்குக் காத்திருந்தபோது, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரும் அவரது மனைவியும் முச்சக்கரவண்டியில் வந்து தாங்களும் மட்டக்களப்பு செல்வதாகக் கூறி அவர்களை ஏற்றியுள்ளனர். குறித்த பெண் தனது தேவைகளை முடித்துவிட்டு மட்டக்களப்பு நகரிலிருந்து திரும்பும்போது சந்தேக நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் போதைப்பொருள் கலந்த பானத்தை குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு கொடுத்துள்ளனர். அவர் மயக்கமடைந்த பிறகு நகைகளைக் கொள்ளையிட்டு அவரை கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர். இந்நிலையில் அவரது குழந்தை வவுணதீவு பாலக்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் முதலில் 3 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றை விற்பனை செய்தமை தொடர்பில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 49 வயதுடைய இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241768
-
சிறையில் இருந்து வெளிவர உதவிய நாடகம்; வாழ்க்கையை மாற்றிய 'காதல்' - அந்தியூர் அன்புராஜின் காதல் கதை
ஒரு காதல் என்ன செய்துவிட முடியும்? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அன்புராஜுக்கோ அது வாழ்க்கைக்கான நம்பிக்கை ஒளி. வீரப்பன் குழுவில் சேர்ந்து அதன் தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் தண்டனைக்கு உள்ளானவர் அன்புராஜ். சிறையில் நாடக கலை அவரது வாழ்க்கையை மாற்ற, அதனூடாக கிடைத்த காதல் ‘தனது எதிர்காலத்தையே மாற்றியதாக’ அன்புராஜ் கூறுகிறார். அது எப்படி? இந்த காணொளியில் பார்க்கலாம். Producer: Murugesh Maadakannu Shoot & Edit : Sam Daniel #Valentinesday #AnthiyurAnburaj #Love இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
பதுளை வைத்தியசாலையில் மற்றொரு அதிசய அறுவை சிகிச்சை
பதுளை வைத்தியசாலையில் மற்றொரு அதிசய அறுவை சிகிச்சை Mar 23, 2026 - 08:50 PM வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக இரும்புக்கம்பி வெளியே வந்த நிலையில், மிக மோசமான விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரைப் பதுளை வைத்தியசாலை வைத்தியக் குழுவினர் வெற்றிகரமாகக் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 37 வயதுடைய ஒருவராவார். விபத்துக்குள்ளான நபர் பதுளை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ உள்ளிட்ட வைத்தியக் குழுவினர், அந்த இரும்புக் கம்பியின் ஒரு பகுதியை வெட்டி அகற்றிவிட்டு, காயமடைந்தவரை அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், வைத்தியர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டபோது, உடலினுள் இருந்த இரும்புப் பகுதிகளை முழுமையாக அகற்றியுள்ளனர். முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்கச் சென்றபோது கிளை முறிந்ததால், இந்த நபர் அங்கிருந்த கொன்க்ரீட் மதில் ஒன்றின் மீது விழுந்துள்ளார். இதன்போது மதிலில் இருந்த இரும்புக் கம்பி ஒன்று அவரது உடலைப் துளைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn3byuhm0001356pz39zmej7
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அண்ணை, நேரடியாக இணையத்தளத்தில் வாங்குவதற்கும் முகவர்களிடம் வாங்குவதற்கும் இடையில் விலை வித்தியாசம் உண்டா? அக்கா, மறுபடியுமா?!
- Today
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
ட்ரம்ப்பின் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச சந்தையில் சரிந்த கச்சா எண்ணெய் விலை! Mar 23, 2026 - 06:20 PM ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 15% சரிந்து, ஒரு பீப்பாய் 96 டொலராகக் குறைந்தது. அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 13.5% சரிந்து, ஒரு பீப்பாய் 85.28 டொலராக வீழ்ச்சியடைந்தது. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா முன்னதாக எச்சரித்திருந்தது. இதனால் போர் பதற்றம் அதிகரித்து எண்ணெய் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில், ஈரானுடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் "ஆக்கபூர்வமாக" இருந்ததாகத் தெரிவித்த ட்ரம்ப், அடுத்த 5 நாட்களுக்கு ஈரான் மீதான எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் நடத்த வேண்டாம் எனத் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn36ojxf0008356p1ebftg8g
-
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 இலட்சம் அமெரிக்க டொலர் அறவிடப்படும் - ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்
ஹோர்முஸ் நீரிணையை சர்வதேசக் கப்பல்கள் பயன்படுத்துவது தொடர்பில் ஈரானின் பாதுகாப்பு சபையின் நிபந்தனை Published By: Digital Desk 3 23 Mar, 2026 | 03:51 PM ஹோர்முஸ் நீரிணையை சர்வதேசக் கப்பல்கள் பயன்படுத்துவது தொடர்பிர் ஈரானின் பாதுகாப்பு சபை நிபந்தனைகளை விதித்துள்ளது. ஈரானுடன் குரோதமற்ற நாடுகள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல ஈரானுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதுதான் ஒரே வழி என ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான பாதுகாப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ஈரானின் கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடாவிலுள்ள அனைத்துப் போக்குவரத்துப் பாதைகளும் பல்வேறு வகையான கடற்படை கண்ணிவெடிகள் மூலம் முடக்கப்படும். கடற்கரையிலிருந்து ஏவப்படக்கூடிய மற்றும் கடலில் மிதந்து செல்லக்கூடிய கண்ணிவெடிகள் இதற்காகப் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய தாக்குதல் நிகழ்ந்தால், ஹோர்முஸ் நீரிணை மட்டுமல்லாமல் முழு பாரசீக வளைகுடாவும் நடைமுறையில் முடக்கப்படும் எனவும், அதன் பொறுப்பு தாக்குதல் நடத்திய தரப்பினருக்கே சேரும் எனவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது. https://www.virakesari.lk/article/241735
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படம்.
-
யாழ்.ஒட்டகப்புலத்தில் 02 ஏக்கர் காணி விடுவிப்பு
யாழ்.ஒட்டகப்புலத்தில் 02 ஏக்கர் காணி விடுவிப்பு Published By: Digital Desk 3 23 Mar, 2026 | 04:33 PM யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி இன்று திங்கட்கிழமை (23) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியிலுள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவ பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டள்ள காணிகளில் 02 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் 234.8 ஏக்கர் காணி கடந்த 2024ஆம் ஆண்டு மே மாத கால பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், விடுவிக்கப்பட்டது. ஏனைய காணிகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என அப்போது உறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், சுமார் 22 மாதங்களின் பின்னர் 02 ஏக்கர் காணி தற்போது விடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணிகள் சில இராணுவ கட்டுப்பாட்டினுள் காணப்படுகின்றன. அவற்றினையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/241741
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
தற்காலத்திலும் ஏஜென்சி வழியாகத் தான் விமானச் சீட்டு வாங்குகிறார்களா மக்கள்? எல்லா விமான நிறுவனங்களிலும் இணையத் தளத்தில் நேரடியாக விற்பனை செய்கிறார்களே?
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
இரான் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக டிரம்ப் அறிவிப்பு - இரான் கூறுவது என்ன? பட மூலாதாரம்,Getty Images 23 மார்ச் 2026, 11:52 GMT புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு "முழுமையான தீர்வு" காண்பது குறித்து இரானுடன் "பயனுள்ள பேச்சுவார்த்தை" நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில், வெளியிட்ட ஒரு பதிவில், "அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு முழுமையான தீர்வு காண்பது குறித்து, மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடைபெற்றுள்ளன" என்று கூறியுள்ளார் டிரம்ப் . மேலும் "இந்த வாரம் முழுவதும் தொடரவுள்ள, ஆழமான, விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான இந்த உரையாடல்களின் போக்கு மற்றும் தொனியின் அடிப்படையில், இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படக்கூடிய எந்தவொரு ராணுவத் தாக்குதலையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் போர் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த உத்தரவு, தற்போது நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களின் வெற்றியின் அடிப்படையில் அமையும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார். பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி இரான் வெளியுறவு அமைச்சகம், ''அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கூற்றை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. ''போர் தொடர்பான இரானின் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னரே எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறும் என்ற எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்'' எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 'டிரம்புடன் தொடர்பு இல்லை' முன்னதாக டிரம்புடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் பெயர் குறிப்பிடாத ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. ''மத்திய கிழக்கில் உள்ள அனைத்து மின்நிலையங்களையும் எங்கள் இலக்காக எடுத்துக்கொள்வோம் என்று எச்சரிக்கை கொடுத்தபின் டிரம்ப் பின்வாங்கினார்'' என அந்த வட்டாரம் கூறியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் தாக்குதல் நடத்தப்படும் காட்சி 'முக்கிய விஷயங்கள் தெளிவாக இல்லை' பெர்ண்ட் டெபுஸ்மேன் ஜூனியர். பிபிசி ''டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட இந்த செய்தி அமெரிக்காவின் போர் நடவடிக்கை தொடங்கியதிலிருந்து அவர் அளித்த மிக சமரச கருத்தாக இருக்கலாம். ஆனால் அதிலும் பல முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காமல் உள்ளன. இரானுடன் "மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள" பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அவர் கூறியிருந்தாலும், அதனை இரான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. மேலும் இந்த செய்தி, வார இறுதியில் இரு தரப்பும் எடுத்த கடுமையான நிலைப்பாட்டுடன் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் எதை பற்றியது என்பது தெளிவாக இல்லை. அது இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் அல்லது அணு செறிவூட்டல் பற்றியதாக இருக்கலாம். அல்லது போர்நிறுத்தம் பற்றியதாக இருக்கலாம் . ஆனால் வெள்ளிக்கிழமை டிரம்ப் போர் நிறுத்தத்தை குறைத்து மதிப்பிட்டிருந்தார். இது ஹோர்மூஸ் நீரிணை பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால் இரான் இதுவரை வெளிப்படையாக எந்த உறுதியும் அளிக்கவில்லை. பல நிபுணர்கள் இதை சாத்தியமற்றதாகவே கருதுகின்றனர், ஏனெனில் ஹோர்மூஸ் மீது இரானின் கட்டுப்பாடு இந்த போரில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆதிக்கமாக உள்ளது. ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகள், இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வரும் புதிய தகவல்களை மற்றும் அதன் எதிர்கால தாக்கங்களை ஆவலுடன் கவனித்து வருகின்றன.'' பட மூலாதாரம்,Reuters 3 முக்கிய விஷயங்கள் பால் ஆடம்ஸ், பிபிசி ராஜீய செய்தியாளர் ''டிரம்பின் அறிவிப்பு பார்ப்பதற்குப் பல விஷயங்களை உள்ளடக்கியது போலத் தோன்றினாலும், நாம் தற்போது இருக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ள பல சிக்கல்களுக்கு இது தீர்வுகாண வேண்டியிருக்கும். மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து எழுந்துள்ள கேள்விகளைத் தவிர (முக்கியமாக ஹோர்மூஸ் நீரிணையை இரான் திறம்பட மூடியது மற்றும் உலகப் பொருளாதாரத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள பிற நடவடிக்கைகள்) இன்னும் பல முக்கியப் பகுதிகள் உள்ளன. அவற்றில் சில, போருக்குச் சற்று முன்னதாக ஜெனீவாவில் அமெரிக்க மற்றும் இரானிய பேச்சுவார்த்தையாளர்கள் கடைசியாகச் சந்தித்துப் பேசியபோது ஆலோசனையில் இருந்தவை. இரானின் யுரேனியம் செறிவூட்டல்: யுரேனியம் செறிவூட்டலில் கடுமையான வரம்புகளுக்குத் இரான் ஒப்புக்கொள்ளுமா மற்றும் இன்னும் தன் வசம் வைத்திருக்கும் 440 கிலோ அதிகச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்குமா? ஏவுகணைகள்: இரானின் ஏவுகணைத் திறன்களைப் பற்றி கடந்த மூன்று வாரங்கள் நமக்கு நிறையத் தெரிவித்துள்ளன. இதிலும் வரம்புகளுக்கு இரான் ஒப்புக்கொள்ளுமா? பிராந்திய நடவடிக்கைகள்: மத்திய கிழக்கில் உள்ள ஆயுத குழுக்களுக்கு இரான் வழங்கும் ஆதரவு இப்பிராந்தியத்தின் நிலையற்ற தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எந்தவொரு விரிவான ஒப்பந்தமும் ஹெஸ்பொலா, ஹமாஸ், ஹூத்தி மற்றும் இராக்கில் உள்ள ஷியா குழுக்களுக்கு இரான் வழங்கும் ஆதரவு குறித்துப் பேச வேண்டியிருக்கும். இவை அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னேற்றத்தைக் காண விரும்பும் விஷயங்களாக இருந்தால், இரானும் பதிலுக்கு சில சலுகைகளை கோரலாம். அவற்றைக் கோரும் அளவுக்கு தான் இன்னும் வலுவாக இருப்பதாக இரான் உணரலாம். தன் தடைகள் நீக்கம் என்பது இரானின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும், அதே போல் ஆட்சி மாற்றத்தைப் பற்றிய அனைத்துப் பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதையும் அது விரும்பும்.'' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் '48 மணி நேர கெடு' கடந்த சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு கெடு ஒன்றை விதித்தார். 48 மணி நேரத்திற்குள் ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் இரானின் மின் நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார். டிரம்ப் தனது மிரட்டலை செயல்படுத்தினால், இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்குவோம் என இரானும் பகிரங்கமாக எச்சரித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானுடன் நடத்தி வரும் போர் நான்காவது வாரத்தை எட்டியிருக்கிறது. தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மட்டுமன்றி மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் மீதும் இரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கிருக்கும் அமெரிக்க தளங்களை குறிவைப்பதாக இரான் கூறுகிறது. ஆனால், பொதுமக்கள் இலக்குகளும் குறிவைக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட நாடுகள் கூறுகின்றன. பிரச்னையின் மையமான ஹோர்மூஸ் நீரிணை உலகின் கடல்வழிப்போக்குவரத்தின் முக்கிய வழித்தடமாக உள்ள ஹோர்மூஸ் நீரிணையையும் இரான் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் கப்பல் போக்குவரத்து தடைபட்டு கச்சா எண்ணெய் முதல் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த நிலையில், ஹோர்மூஸ் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு இந்த கெடுவை விதித்திருக்கிறார். ஆனால், இரானோ தங்கள் எதிரிகளுக்கு மட்டுமே ஹோர்மூஸ் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறது. ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பில் (IMO) உள்ள இரானின் பிரதிநிதி, இரான் எதிரிகளுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது என கூறியதாக இரான் அரசுடன் தொடர்புடைய செய்தி முகமை கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலில் இரான் தாக்கிய இடத்தின் படம் டிரம்புக்கு இரான் அளித்த பதில் என்ன? இரானிய ஊடக செய்திகளின்படி, அமெரிக்கா இரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்றும், அழிக்கப்பட்ட மின் நிலையங்கள் மீண்டும் கட்டி முடிக்கப்படும் வரை ஹோர்மூஸ் திறக்கப்படாது என்றும் இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை எச்சரித்திருக்கிறது. ''எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் இரானுடன் ஒருங்கிணைந்தால், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான பயணம் கிடைக்கும்'' என்றும் இரான் கூறியுள்ளது. இந்த கருத்தை இரான் தொடர்ந்து கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. முக்கிய கடல் வழித்தடமான ஹோர்மூஸை பொருத்தவரை, இயல்பான சமயங்களில் ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் செல்லும். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. மார்ச் 18 அன்று ஏ.எஃப்.பி. செய்தி முகமை வெளியிட்ட கணக்கீட்டின்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 21 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன, தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டுள்ளன அல்லது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj37mr8mp3xo
-
உலகெங்கும் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை
ஒரு காலம் இருந்தது, நீல வர்ண அமெரிக்க கடவுச் சீட்டை வைத்திருந்தால் பல நாடுகளில் பாதுகாப்பு சற்று அதிகம்! இனி ஊரில் அப்பியாசக் கொப்பிக்குப் போடுவது போல, அமெரிக்க பாஸ்போட்டுக்கு "மாட்டுத் தாள்" பேப்பரில் உறை போட்டுக் கொண்டு தான் வெளியிலே இறங்க வேண்டும்😂!
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
இப்படி ஆனால், அதில் ஒரு silver line இருப்பதாகவே எனக்குப் படுகிறது. சகல வழிகளிலும் பலம் கொண்ட ஒரு தரப்பு, தன் பலத்தை ஒட்டு மொத்த நன்மைக்குப் பாவிக்காமல் (பிபி டரம்பிற்குச் செய்தது போல) " தன் பின் பக்கத்தை முத்தமிடும் ஒருவருக்காக மட்டும்" பாவித்தால் இப்படியான நிலை வரும் என்பது நிரூபிக்கப் பட வேண்டும்! அடுத்த 3 ஆண்டுகளுக்கு மட்டுமாவது பல்லைப் பிடுங்கி விட்டால், அடுத்து வரும் நிர்வாகம் கொஞ்சம் நிவர்த்திக்க இடம் கிடைக்கும். இது நடந்தால், பிபி யும் இத்தோடு அரங்கில் இருந்து அகன்று விட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. தீய சக்திகளுக்கு பலம் நிலைத்திருக்கக் கூடாது, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி!
-
கிழக்கில் ஒரு இலட்சம் ஏக்கர் நிலம் அபகரிப்பு: நில மீட்பு வலையமைப்பு திடுக்கிடும் தகவல்!
கிழக்கில் ஒரு இலட்சம் ஏக்கர் நிலம் அபகரிப்பு: நில மீட்பு வலையமைப்பு திடுக்கிடும் தகவல்! 23 Mar, 2026 | 03:32 PM (துரைநாயகம் சஞ்சீவன்) கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அரசின் ஏழு வகையான பொறிமுறையின் ஊடாக அபகரிக்கப்பட்டு சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண நில மீட்பிற்கான வலையமைப்பினர் தெரிவிக்கின்றனர். 2026ஆம் ஆண்டிற்கான காணி வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை விடுதி ஒன்றில் இன்றையதினம் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கிழக்கு மாகாண நில மீட்பிற்கான திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர்கள் இதனை தெரிவித்தனர். யுத்தம் நிறைவுக்கு வந்த சூழ்நிலையிலும் இன்று வரை குறிப்பிட்டளவு மக்கள் தங்களது நிலங்களுக்கான முறையான காணி ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருப்பதுடன் அரசு வேற்று இனத்தினர் மற்றும் முதலாளிகளால் திட்டமிட்ட வகையில் மக்களின் குடியிருப்பு மற்றும் ஜீவனோபாயத்திற்குரிய தொழில் இடங்கள் மற்றும் மத கலாச்சார இடங்கள் சட்ட ரீதியாகவும் சட்ட முறையற்றும் அபகரிக்கப்படுவதுடன் சுபீகரிக்கப்பட்டும் வருகின்றது. குறிப்பாக எமது கிழக்கு மாகாணத்தில் சுமாராக ஒரு லட்சத்து இருபதாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அரசின் 07 வகையான பொறிமுறைகள் ஊடாக அபகரிக்கப்பட்டும் சுபீகரிக்கப்பட்டும் வருகிறது. குறிப்பாக தொல்லியல் இடம் எனவும் பாதுகாப்பு பகுதி எனவும் வன வளப்பகுதி என்றும் பூஜா பூமி இடம் எனவும் வன விலங்கு பகுதி எனவும் அபிவிருத்தி இடம் எனவும் சுற்றுலா பிரதேசம் எனவும் அடையாளப்படுத்தி பல தேவைகளுக்கு பயன்படுத்தி வருதாகவும் குறிப்பிட்டனர். அந்தவகையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1958 சிங்கள குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் அங்கு 32 விகாரைகளும் அதனுடன் இணைந்த இடங்களுமாக பிரகடனப்படுத்தப்பட்டு தமிழ் முஸ்லீம் மக்களுடைய பூர்வீக இடங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த வழிபாட்டு இடங்கள் அபகரிக்கப்பட்டு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளதோடு எங்களுடைய ஆலயங்களை வழிபடுவதற்கு அங்கு இருக்கின்ற பௌத்த மதகுருமாரின் அனுமதியைப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதாகவும் திரியாய் பகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் டனுசன் குறிப்பிட்டார். அதேபோன்று முத்துநகர் பகுதி விவசாயிகள் 53 வருடங்களுக்கு மேலாக விவசாயம் மேற்கொண்டு வந்த 1200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் சோலார் மின் திட்டத்திற்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தையும், ஜீவனோபாயத்தையும் இழந்துள்ளனர். இதனால் 352 விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் இதற்கான நீதியைக் கோரி 70 நாட்களுக்கு மேலாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும் இதுவரை எவ்வித தீர்வும் ஆரசால் வழங்கப்படவில்லை எனவும் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த சகிலா சபருல்லா என்ற செயற்பாட்டாரள் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241731
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
நல்லதொரு முயற்சி, கிருபன்.................❤️. செயற்கை நுண்ணறிவு பரவலாக அறியப்படாத காலத்திலேயே மதன் கார்க்கி தான் பாட்டுகளை எப்படி கணனி மூலம் எழுதுகின்றேன் என்று சொல்லியிருந்தார். அந்த வீட்டில் இருந்து அவராவது உண்மையைச் சொல்லுகின்றார்..............🤣. இரண்டு வருடங்களின் முன் ஒரு நிகழ்வில் என்று நினைக்கின்றேன், யுவன் சங்கர் ராஜா இனிமேல் தங்களுக்கு வேலை கிடையாது என்றும் சொல்லியிருந்தார். பதிப்புரிமை, காப்புரிமை போன்றன இருந்துமே பெரும்பாலான படைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கு, வாழ்வுக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. அடுத்த கட்டம் இப்பொழுது ஆரம்பித்துள்ளது............. கிட்டத்தட்ட எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் என்னும் செயற்கை நுண்ணறிவுக் காலம்.............
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ம்ம்ம்…உங்களால் புலிகளின் பின்னால் ஒழிந்து கொள்ளாமல் ஒரு கருத்து கூட எழுத முடியாதா? யார் தூசண துரை, தலைவர் படத்தின் முன் வைத்து வல்லுறவில் ஈடுபட்ட தம்பி, ஹிம்லர் என பெயரை சூட்டி கொள்ளும் தம்பி, பெண் ஒருவர் வீடியோவில் புகார் சொல்லும் இடும்பாவனம் இவர்களின் க.க.க வையா சொல்கிறீர்கள்😂. இலண்டனில் புத்தக கடையில் கண்டோமே இவர்களின் கண்ணியத்தை😂. நாதகவில் கண்ணியமானவர் இருந்த காலம் உண்டு. கிட்டதட்ட அனைவரும் விலகி விட்டனர். டெலோ, புளொட்டிலும், நல்லவர்கள் சேர்ந்தார்கள் ஆனால் தலைமை கேடு கெட்டது என்பதால் ஒட்டுமொத்த இயகமுமே நாசமாய் போனது. நாதகவும் அப்படியே. சீமான், பாக்கியராசன், இடும்பா, தூசணதுரை என இப்போ அங்கே இருப்போர் அனைவரும் அயோக்கியர்கள்.
-
பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் பாண் விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு Published By: Digital Desk 1 23 Mar, 2026 | 03:10 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் புதிய விற்பனை விலை 130 ரூபாவாக அமையும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது. பாண் மாத்திரமன்றி, ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/241730
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இயக்கம் சைக்கிள் ஓடுது கார் ஓடுது வீடு மிக்சர் சாப்பிடுது இதெல்லாம் எண்பதுகளிலேயே நான் கண்டது கடந்தது. இதில் குறை பிடிப்பது தப்பிக்கவே அன்றி நல்ல நோக்கத்திலன்று என்பது அனுபவ படிப்பு. அவருடன் சேரும் கூட்டம் எப்படி ஒழுங்கமைக்கப்படுகிறது? நாட்டின் மீதும் மக்கள் மீதும் எவ்வளவு பற்று வைக்கிறது? கடமை கண்ணியம் கட்டுப்பாடு எவ்வாறு பேணப்படுகிறது என்பதை பார்க்கும்போது இருப்பதில் தேறுவதே தற்போதைக்கு அவர்கள் தான். இதை தமிழகத்தில் உள்ள அவர்களின் அரசியல் எதிரிகளே ஒத்துக் கொள்கிறார்கள்.
-
தந்தை-மகன் கொலை: காவல் நிலைய சித்ரவதைக்கு பிறகு சிறையில் 3 நாட்களை கழித்தது எப்படி?
'அனைவரும் குற்றவாளிகள்' - சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன? படக்குறிப்பு,ஜெயராஜ், பென்னிக்ஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் தந்தையும் மகனும் காவல்துறையால் தாக்கப்பட்டு பிறகு உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில், இந்த சம்பவம் "கொலை" என தீர்மானிக்கப்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு நகல் இன்னும் வெளியிடப்படாத சூழலில், நீதிபதி முத்துக்குமரன் தமது தீர்ப்பை வாசிக்கும் போது, தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் கொலை என தீர்மானிக்கப்படுவதாகக் கூறினார். உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறிய நீதிபதி, வழக்கினுடைய அனைத்து தரப்பு விசாரணைகளின் அடிப்படையில், "குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்" என தீர்ப்பளிப்பதாக கூறினார். "குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது" என்று நீதிபதி கூறினார். மார்ச் 30-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார். படக்குறிப்பு,ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ் வழக்கின் பின்னணி தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் 58 வயதான ஜெயராஜும் 31 வயதான அவரது மகன் பென்னிக்சும் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தனர். பொது முடக்கத்தின் காரணமாக கடைகள் திறப்பதற்கு நேர வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடுவது தொடர்பாக பென்னிக்சுக்கும் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர். இதற்குப் பிறகு, ஜெயராஜை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரைத் தேடி அவரது மகன் பென்னிக்சும் அங்கே சென்றார். அவரும் அங்கே அடைக்கப்பட்டார். இதற்குப் பிறகு இவர்கள் இருவரையும் ஜூன் 21ஆம் தேதி கோவில்பட்டி துணைச் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், திங்கட்கிழமை இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர். "ஜூன் 22ஆம் தேதி, திங்கள்கிழமை மாலை நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பென்னிக்சை பணியில் இருந்த வார்டன்கள் மீட்டு துணைச் சிறையின் கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், இரவு 9 மணியளவில் அவர் இறந்துவிட்டார். அதற்கு சிறிது நேரத்திலேயே பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார்" என சிறை அதிகாரிகள் அந்தத் தருணத்தில் தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாத்தான்குளத்தில் போராட்டத்தில் இறங்கினர். இவர்களுக்கு ஆதரவாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இருவர் உயிரிழப்புக்கு காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெயராஸ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பாதிரியார் ஆறுதல் கூறிய போது எடுக்கப்பட்ட படம் (ஜூன் 20, 2020) இந்த விவகாரம் மாநிலம் தழுவிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு துணை ஆய்வாளர்களும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டார். காவல்நிலையத்தில் பணியாற்றிய அனைவருமே முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தானாகக் கையில் எடுத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது. காவல்துறையினரால் தாக்கப்படுவது கொரோனா பெருந்தொற்றைப் போல பரவியிருக்கிறது என்றும் இந்த விவகாரத்தை தாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்கச் சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசனுக்கு அங்கிருந்த காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்பதோடு, ஒரு காவலர் அவரிடம் மிக மோசமாகப் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. நீதித் துறை நடுவர் பாரதிதாசன் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார். பிறகு சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஆதாரங்களை பாதுகாக்கவும், போலீஸ் தலையீட்டைத் தடுக்கவும், வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். பிறகு இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் இடம்பெற்றார். உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் இரு கட்டங்களாக 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்தது. மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgx7ng4587o
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் நேர்காணலில் கலந்துகொண்டேன். இதுவரை உங்கள் தொகுதிக்கு என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். செய்தவற்றை கூறினேன். ‘யோசித்து சொல்லுகிறோம், போய்வாருங்கள்’ என்று அனுப்பி வைத்தார்கள்." - உதயநிதி ஸ்டாலின்.-