stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
பேரன் 'இசை'யின் இனிய பிறந்தநாள் வாழ்த்து / A Blessing for Grandson 'Isai' (மார்ச் 13, 2026 / March 13th, 2026)
பேரன் 'இசை'யின் இனிய பிறந்தநாள் வாழ்த்து / A Blessing for Grandson 'Isai' (மார்ச் 13, 2026 / March 13th, 2026) கனடா நாட்டுப் பனிவெளியில் - மார்ச் பதின்மூன்றில் பிறந்த இசை பாப்பா! மதுரா ஹரிப்பிரசாந்த் தம்பதியர்க்கு - நீ மூன்றாவது செல்லப் பிள்ளையப்பா! ஜெயா அக்கா, கலை அண்ணன் - என உற்றார் சூழப் பிறந்தாயே! ஏழாவது பேரப்பிள்ளை நீயென - தாத்தா உன்னை அணைத்துக் கொண்டாரே! அகிலம் போற்றும் யாழ்ப்பாணத்து - நம் அத்தியடி மண்ணின் வேரப்பா! அந்நிய நாட்டில் பிறந்தாலும் - நீ அழகிய தமிழின் பரம்பரையப்பா! பெற்றோர் கூட்டிச் சென்றானரே - நம் தாயக மண்ணை முத்தமிட! பதினான்கு ஆகஸ்ட், 2025 - நீ யாழ்ப்பாண மண்ணைக் கண்டாயே! மறைந்தும் எம்மைக் காக்கின்ற - உன் அம்மம்மா ஜெயகுமாரியின் ஆசியப்பா! பிறக்கும் முன்னே பிரிந்தாலும் - அவர் தெய்வமாய் உன்னை வாழ்த்துவாரே! படிப்பினில் உயர்ந்து பாரினிலே - நீ உயர்ந்ததோர் நிலைமை அடையணும்! பெற்றோர் பெருமை போற்றிடவே - பெரும் சாதனை பலவும் புரியணும்! கனடா நாட்டின் நல்லதொரு - நற்பிரஜையாய் வளர்ந்து நீ ஜொலிக்கணும்! தமிழர் பண்பாடு கலாச்சாரம் - எந்நாளும் தவறாது நீயும் காக்கணும்! யாழ்ப்பாணத்து நேர்மையுடன் - நீ ஆயிரம் புகழைக் குவிக்கணும்! தாத்தாவின் ஆசை இதுவேயென - என் இசையை என்றும் வாழ்த்துவனே! In the winter’s hold of Ottawa, where the maple leaves rest, Was born a boy named Isai, the fifth grandson, our best! Third child of Mathura and Hariprasanth’s loving care, The baby brother to Jeya and Kalai, a bond beyond compare. Though born in the North, your roots are deep in Jaffna’s gold, The spirit of Athiady in your young heart is bold. In August’s warmth, you walked the soil of our motherland, Guided by your Granddad’s love and his steady hand. From the heavens above, a silent blessing softly flows, Where your Grandma Jeyakumary’s eternal spirit glows. She left us long ago, before your mother’s wedding day, But her prayers are the stars that guide you on your way. Study hard, dear Isai, reach the peaks of height and fame, Bring pride to your parents and to our family name. Be a noble citizen of Canada, loyal, true, and bright, But keep the Tamil flame within, a never-dying light. May the integrity of our ancestors be your guiding star, Whether you stay in Ottawa or travel very far! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம். [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] இன்று, எங்கள் அன்பான பேரன் 'இசை பத்மநாதனின்' 3வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்! மார்ச் மாதம் தொடங்கும் போது, எங்கள் இதயங்கள் நன்றியுணர்வால் நிறைந்துள்ளன. ஒட்டாவாவில் பிறந்தாலும், யாழ்ப்பாணத்தின் பெருமையில் வேரூன்றிய இசை, நமது பாரம்பரியத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் இடையிலான பாலத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். குறிப்பாக அவரது மறைந்த அம்மம்மா திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கத்தின் ஆசீர்வாதங்கள் எப்போதும் அவருடன் இருக்கும். வலுவாக வளருங்கள், நன்றாகப் படியுங்கள், உங்கள் முன்னோர்களின் அறத்தை (நேர்மை) எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், அதே நேரத்தில் கனடாவில் ஒரு நல்ல குடிமகனின் பிரகாசமான எடுத்துக்காட்டாக இருங்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள், குட்டி 'இசை'! Today, we celebrate the 3rd birthday of our dear Isai Pathmanathan! As his month of March begins, our hearts are full of gratitude. Born in Ottawa but rooted in the pride of Jaffna, Isai represents the bridge between our heritage and our future. We especially feel the presence of his late Grandmother, Mrs Jeyakumary Thillaivinayagalingam, whose blessings are always with him. Grow strong, study well, and always remember the Aram (Integrity) of your ancestors, while being a shining example of a good citizen in Canada. Happy Birthday, Master Isai! பேரன் 'இசை'யின் இனிய பிறந்தநாள் வாழ்த்து / A Blessing for Grandson 'Isai' (மார்ச் 13, 2026 / March 13th, 2026) https://www.facebook.com/groups/978753388866632/posts/34265939603054582/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 131 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 131 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" மகாவம்சம் 36 – 133 ,'அரசுரிமை, பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்வதற்கு ஆதாரமாக' இருப்பதுபோலவே பல அநீதிகளுக்கும் காரணமாக இருக்கிறது. இதை உணர்ந்து நடக்கும் பக்திமான்கள் அரச போகம் குறித்து ஆனந்தம் கொள்ள மாட் டார்கள். நஞ்சுடன் [விசத்துடன்] கலந்த இனிய உணவாகக் கருதியே நடப்பார்கள் எனக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில், வஞ்சிகாண்டம் – காட்சிக் காதை (Canto 25), 93 முதல் 106 வரையிலான வரிகள், அரச வாழ்க்கை சோகத்தால் நிறைந்தது [full of tragedy] என்று இதே போன்ற உணர்வுகளைக் கூறுகின்றன. "தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்: ‘எம்மோரன்ன வேந்தற்கு’ உற்ற செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன், ‘உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு’ என, வல் வினை வளைத்த கோலை மன்னவன் செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது: மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்; பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்; குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி, மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல் துன்பம் அல்லது, தொழுதகவு இல்’ என, துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து-" [வஞ்சிக் காண்டம் / 2. காட்சிக் காதை] அதாவது, பாண்டியனுக்கு நேர்ந்த தீங்கினைக் கேட்ட சேரன் வருந்திக் கூறலானான். பாண்டியன் செங்கோல் தவறியது என் போன்ற மன்னர் செவிக்கு எட்டுவதற்கு முன்னர் பாண்டியன் உயிர் சென்றுவிட்டது. அந்த உயிர் அவனது வளைந்த கோலை நிமிர்த்தி நிறுத்திச் செங்கோலாக மாற்றிவிட்டது. மழை பொழியாவிட்டால் அச்சம். மக்களுக்குத் துன்பம் நேர்ந்தால் அச்சம். இப்படி அஞ்சிக்கொண்டு மக்களைக் காக்கும் பொறுப்புள்ள அரசர் குடியில் பிறத்தலானது, துன்பமே அல்லாமல் தொழும் தகைமை உடையது அன்று - என்று சாத்தனாரிடம் சேரன் கூறினான். மேற்கூறியது மிகச் சில சிறந்த தமிழ் மன்னர்களில் ஒருவரின் கருத்து ஆகும். அதன் கடைசி பகுதி மகாவம்சம் 36 – 133 உடன் தெளிவாக எதிரொலிக்கிறது. மேலும் சிலப்பதிகாரத்தில், 11 ஆம் காண்டத்தின் [காடுகாண் காதையில்] 18 முதல் 20 வரையிலான கீழ்க்காணும் வரிகள் உள்ளன. "வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள," அதாவது, ' பாண்டிய மன்னனானவன் தனது வடிவேலைக் [ஈட்டியை] கடல்மீது எறிந்திட, அந்தப் பெரிய பகையினைப் பொறுக்கமாட்டாமல், அது பழிவாங்கும் நோக்கத்தில், கடலானது பொங்கி எழுந்து, பஃறுளி ஆற்றுடன் குமரி மலை அடுக்குகளையும் தன்னுள் விழுங்கியது' என்கிறது. மேலே உள்ளவை பண்டைய பஃறுளி நதி மற்றும் மலைகள் கொண்ட குமரி நிலத்தைப் பற்றிய ஒரு குறிப்பு. இந்தக் கடல் வெள்ளம் அல்லது சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை, தமிழின் பிற இலக்கியப் படைப்புகளிலும் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. Part: 131 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" The Mahavamsa 36 – 133 says ‘Thus, reflecting that sovereignty, being the source of manifold works of merit, is at the same time the source of many an injustice, a man of pious heart will never enjoy it as it were sweet food mixed with poison’. In Silappathikaram, Vanjikaandam – Kaadchik Kaathai (Canto 25), verses 93 to 106, says similar sentiments that the royal life is full of tragedy. The Tamil verses are not given but the English abstract of these verses are: Quote: ‘When he heard the cruel deed of the king of the Pandiyan country, the Cera, the king of kings, was anguished and said: ‘Before these words, which well deserve condemnation from any monarch of our status, reached our ears, it is good that the Pandiyan laid down his life. For it is the departing soul of the king that has straightened the sceptre, which was bent by this irrestible act of destiny. ‘If rains fail, great havoc is caused (to the country). If living beings suffer unrighteousness, widespread fear is caused. Paying due regards to the welfare of his subjects, wary of tyrannical rule, a protecting king born of a noble line occupies a position which is suffering and is not to be sought after’. Unquote The above is the opinion from one of the very few great Tamil kings. The last portion clearly resonates with the Mahavamsa 36 – 133. The following verses in Tamil also from the Tamil Epic Silappathikaram. The English translation of these verses 18 to 20 of Canto 11 is given below and it is from the Reference 28. வடி வேல் எறிந்த வான் பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள ‘by standing on the shore of the sea and throwing his spear upon the fierce waters which, in a sprit of revenge, consumed the river Pahruli and the Kumari with their adjoining group of hills’. The above is a reference to an ancient River Pahruli and the Kumari Land with hills. This sea deluge is very often mentioned in other literary works in Tamil. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 132 தொடரும் / Will follow துளி/DROP: 2090 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 131 https://www.facebook.com/groups/978753388866632/posts/34269844655997410/?
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்! சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பி.காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலின்போது அவரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். அவருடன் திமுக, அதிமுக, தவெக என அனைத்துக் கட்சிகளுமே பேச்சுவார்த்தையில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று காலை அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று நான் இன்று அதிமுகவில் இணைந்துள்ளேன்” என்றார். நாகையைச் சேர்ந்த காளியம்மாள் தனது ஆரம்ப காலத்தில் கடலோரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தக் கட்சிக்கும் பிடி கொடுக்காமல் இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. காளியம்மாள் மேடைப் பேச்சுத் திறன் கொண்டவர். நாதகவில் இருந்தபோதே அவரது பேச்சால் அக்கட்சியின் தொண்டர்களைக் கட்டிப் போட்டதிலும், பெண்களை ஈர்த்ததிலும் அவருக்கு பங்கு இருந்தது. அதனாலேயே கட்சிக்குள் சீமான் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க, பின்னாளில் அந்த முக்கியத்துவமே உரசலுக்கும் வித்திட்டது. பின்னர் நாதகவில் இருந்தே விலகினார். இப்போது அவர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இது, அவரது ஆதரவாளர்களையும், நாதக அதிருப்தியாளர்களையும் ஈர்த்திட துணைபுரியும் என்பது அதிமுகவின் நம்பிக்கை. அத்துடன், அதிமுகவில் பெண் முகத்துக்கு பற்றாக்குறை என்பதைவிட துடிப்பான இளம் பெண்ணாக காளியம்மாள் இருப்பது மகளிரணிக்கு பெரும் பூஸ்டாக இருக்கும் என்று கட்சி கணித்துள்ளது.மகளிர் வாக்குகளைக் கவர, காளியம்மாளின் பேச்சு மிக முக்கிய அஸ்திரம் என்பதாலே அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வரை கொடுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. https://www.hindutamil.in/news/tamilnadu/ntk-former-cadre-kaliammal-joins-admk
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
இவரது மரண அறிவித்தல் லங்காசிறியிலும் குடும்பத்தினரால் பகிரப்பட்டுள்து. சாதரணமாக நடந்த ஏதோ விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தேன்.ஆழ்ந்த இரங்கல்கள்.🙏
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
- Today
- இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
நான் அறிந்தது, இரு விமானங்கள் தரை இறங்கியதாக. ஓன்று தாக்குதல் ஏவுகணையில் இருந்து விலத்த, மற்ற்றத்தை எகனை தாக்கியது என்று. அதை விட , இன்னோர் நாட்டின் அமெரிக்கா விமான தளத்தில் நின்று இருந்த இப்படியான சில விமானங்களும் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக. என்றாலும், எந்த உறுத்திப்படுத்தலும் இல்லை.- இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்! தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போது, இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் ஊற்று ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நீர் ஆதாரம் மடு பகுதியில் அமைந்திருந்தது. அதன் நீர்வரத்து ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றராகக் காணப்பட்டது. பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அந்த அடுக்குகளுக்கு இடையிலான இடைவெளிகள் ஊடாக நிலத்தடி நீர் இருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் இனங்கண்ட பின்னரே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர்த்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்காலத்தில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1468315- புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உதவியலாளரான வி.கே. சசிகலா இன்று (13) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி புதிதாக கட்சியை தொடங்கி உள்ளதாக சசிகலா அறிவித்தார். இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, கட்சியின் பெயரை அறிவித்தார். அதன்படி, தனது கட்சியின் பெயர் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (All India Puratchi Thalaivar Makkal Munetra Kazhagam) என்று தெரிவித்ததுடன், தனது கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்றும் அறிவித்தார். தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் போது அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்தார். மக்களுக்கு சேவை செய்வதற்கும், திமுகவை எதிர்த்து நிற்பதற்கும் எம்.ஜி.ஆர். கட்சியை நிறுவினார் என்றும், ஏழைகளின் நலனுக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் நிறுவப்பட்ட கட்சி அது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராகவும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1468304- யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம்
சும் "லவ்வர்ஸ்" மனக்குரல்: "இப்ப நாங்க பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா, அல்லது மௌனமாக மொள்ளக் கடந்து போவதா🤔?- இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
மிக அண்மையில் மகளின் குழு ஆளில்லாத எரிபொருள் நிரப்பும் விமானத்தை வெற்றிகரமாக இயக்கினார்கள். அதன் காணொளியைத் தேடினேன் காணவில்லை.- இரசித்த.... புகைப்படங்கள்.
- நாம் தமிழரில் எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சீட்? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு ஜாக்பாட்
சீமானால் பிசிறு என்று அழைக்க பட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சாமானிய தமிழரும் தலைவராகும் ஜனநாயகம் திராவிட கட்சியான அதிமுகவில் தான் உள்ளது என்று அதிமுகவில் இணைந்துள்ளார்.- இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு விமானம் விபத்து : தாக்குதல் காரணமல்ல என அறிவிப்பு Published By: Priyatharshan 13 Mar, 2026 | 09:58 AM அமெரிக்காவின் United States Central Command (USCENTCOM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவின் Boeing KC-135 Stratotanker எரிபொருள் நிரப்பு விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. USCENTCOM வெளியிட்ட செய்திக்குறிப்பில், “Operation Epic Fury” என்ற நடவடிக்கையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றான KC-135 விமானம் மேற்கு ஈராக் பகுதியில் விழுந்ததாகவும், மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் எதிரி தாக்குதல் அல்லது நட்பு படையினரின் தவறான தாக்குதல் காரணமாக ஏற்பட்டதல்ல எனவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் தெளிவுபடுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தைச் சேர்ந்த பணியாளர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், சம்பவத்தின் முழுமையான விவரங்களைத் திரட்டுவதற்கு அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்குமாறு USCENTCOM பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து சேவையாற்றும் இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தெளிவான தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/240856- யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை!
யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை! 13 Mar, 2026 | 10:32 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்து வந்த பல வணிக நிலையங்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன், பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று வியாழக்கிழமை (12) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் அனுமதியின்றி இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் யாழ்ப்பாண பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இலங்கைக்குள் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளைப் பார்ப்பதோ அல்லது அதற்காகப் பணம் செலுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, சன் டைரக்ட்,வீடியோகான்,டாடா பிளே,டிஷ் டிவி போன்ற சேவைகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோதச் சேவைகள் ஊடாக, இலங்கையிலிருந்து மில்லியன் கணக்கான ரூபா பணம் உத்தியோகபூர்வமற்ற வழிகளில் இந்தியாவிற்குப் பரிமாறப்படுவதாகவும், இதனால் நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தச் சேவைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை மாத்திரமன்றி, அவற்றை வீடுகளில் பயன்படுத்தும் நபர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு பொலிஸாருக்குப் பணித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/240858- வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
மாமியார் படுகொலை வழக்கு: மகனுக்கு உதவியதாக தந்தையும் கைது – இருவரும் விளக்கமறியலில் adminMarch 13, 2026 மாமியாரை படுகொலை செய்து, மாமனாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய தனது மகனுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தந்தையும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த புதன்கிழமை தனது மனைவியின் தாயாரை வாளால் வெட்டி படுகொலை செய்ததுடன், மனைவியின் தந்தையையும் படுகொலை செய்யும் நோக்கில் தாக்கி கடும் காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தராக பணியாற்றும் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாளை மறைத்து வைக்க உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அந்த நபரின் தந்தையாரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், அவர்களை நேற்று (வியாழக்கிழமை) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். விசாரணையைத் தொடர்ந்து, இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230414/- யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம்
யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம் adminMarch 13, 2026 யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிக்க மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த உத்தரவை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் முதலில் இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்தது. ஆனால், அந்த இரண்டு வார காலம் நிறைவடைந்த பின்னர், இடைக்காலத் தடை உத்தரவை நீடிக்காமல் நீதிமன்றம் கட்டளை வழங்கியது. இதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடும் மீளாய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்து வாதாடியிருந்தார். இந்த நிலையில், மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானத்திற்கு எதிரான இடைக்காலத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மீளாய்வு மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு, வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேன்முறையீட்டு மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. https://globaltamilnews.net/2026/230417/- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
- வீதியோரம்.
வீதியோரம். மலர் . ........ 5. அப்போது ஒரு ஜீப் வண்டி வேகமாய் வந்து பிரேக் அடித்து நிக்கிறது. அதை கண்டு இவர்கள் அவளை விட்டுட்டு வெளியே ஓடி வருகிறார்கள். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இவன் தன் காலடியில் கிடந்த தண்ணிபோத்தலை கால்களால் அவளருகில் தள்ளிவிட அவளும் அதை எடுத்து மட மடவென்று குடிக்கிறாள். ஜீப்பில் இருந்து இறங்கியவன் இவர்களிடம் சத்தம் போட்டு எதோ சொல்லி தூசணங்களால் பேசுகிறான். உடனே இவர்கள் அறைக்குள் வேகமாய் ஓடிவந்து இவனது கட்டுகளையும் அறுத்து விட்டு இவனோடு அவளையும் தூக்கிவந்து ஜீப்புக்குள் எறிந்து விட்டு அவர்களும் ஏறிக்கொள்ள ஜீப்பும் வீதியில் ஏறி வேகமாய் செல்கிறது. அப்பொழுதுதான் அவனும் அவளும் ஜீப்பினுள் பார்த்த பொழுது அதற்குள் ஏற்கனவே இரு சிறுவர்கள் குற்றுயிராய் அங்கே கிடக்கிறார்கள். மேகலை : என்னடா அப்படிப் பார்க்கிறாய், அவளது கேள்வியில் அவன் சுயநினைவுக்கு வருகிறான். — ஒன்றுமில்லை மேகலை. — இல்லை இன்று உன் பார்வை ஒரு மாதிரியாய் எனக்குத் தெரிகிறது. ஆனால் அதில் தப்பாக ஏதும் இல்லை என்றும் புரிகிறது. என்ன சொல்லு. — ஏன் மேகலை நீ உன் குடும்பத்தை எங்கு என்று தேடிப்பார்த்து சேர்ந்து கொள்ளக் கூடாது. — இதுவா இவ்வளவு நேரமாய் யோசிச்சனி. அன்று என்னை அந்த நிலைமையில் நீ பாத்தனிதானே. அதற்கு முன் எத்தனை மிருகங்கள். ம் …. குடும்பமாய் வாழ்ந்த அந்த வாழ்க்கை இனி எங்கையடா கிடைக்கப் போகுது. இனி அங்கு போவதற்கும் நான் தயாரில்லை. அதெல்லாம் கனவாகிப் போய் நெடுங்காலமாச்சுது. இனி இப்படியே மிச்ச காலத்தைப் போக்க வேண்டியதுதான். — உன்னைப் போன்ற நிலைமையில்தான் நானும் அவங்களிடம் பிடிபட்டு இருந்தேன் மேகலை. என்னையும் எத்தனை மிருகங்கள் அசிங்கப்படுத்தினதுகள் என்று கணக்கே இல்லை. அது கிடக்கட்டும் விடு….. இனிமேலும் நாங்கள் இப்படியே இருந்திடுவோமா….. — நீ இப்ப என்ன சொல்ல வருகிறாய்…… — ம்…. வந்து …. தயங்குகிறான் — எதுவென்றாலும் பயப்படாமல் சொல்லு….நானும் எதிர்காலம் பற்றி நிறைய யோசிக்கிறதுண்டு. இந்தப் பிள்ளைகளும் இப்ப வளர்ந்து விட்டார்கள்…… — ஏன் மேகலை நாங்கள் சேர்ந்து வாழக் கூடாது. இனி நாங்கள் யாருக்காக எங்களுடைய மிச்ச வாழ்க்கையை வீணாக்க வேண்டும்…….. பின்னடிக் காலத்தில் ஒரு பேச்சுத்துணைக்காகவாவது உரிமையுள்ள ஒரு துணை வேண்டாமா…… — ம்….. எதோ ஒரு காரணத்தோடுதான் நாங்கள் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் விநோ….இல்லையென்றால் அன்றே அவங்கள் எங்கள் நாலுபேரையும் சுட்டு காட்டுக்குள் வீசிவிட்டுப் போயிருக்கலாம். அல்லது நாங்கள் கூட தற்கொலை செய்திருக்கலாம். இல்லையே இப்ப நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதுதானே நிஜம். பொதுவாய் பார்த்தால் இனி நாங்கள் குடும்பத்துடன் போய் சேர்ந்து வாழப் போவதில்லை. இந்தப் பிள்ளைகளுக்காவது நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். — மேகலை, நீ சொல்வதையும் நான் யோசிப்பதுண்டு. — அதுமட்டுமில்லை விநோ இப்பவே இங்கிருக்கும் தொழில் செய்யும் பெண்களும் சரி வேறு சிலரும் சரி எங்களைப் பற்றி தப்பாகத்தான் நினைக்கிறார்கள்…..முகத்துக்கு முன் சிரிப்பதும் அங்காலை போய் கேலி செய்வதையும் நான் கவனித்துக் கொண்டுதான் வாறன். “உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூடேலாது தானே” — விநோ கோபத்துடன் யார் யாரெல்லாம் அப்படி தப்பு தப்பாய் பேசுவது…..சொல்லு இப்பவே போய் அவர்களை இங்கிருந்து விரட்டி விட்டு வருகிறேன். என்று வேகமாக எழும்புகின்றான் . அப்படி எழுந்தவனை கொஞ்சம் பொறு விநோ அவசரப்படாதை என்று அவள் இழுக்க அவனும் எதிர்பாராமல் அப்படியே அவள்மீது சரிகிறான். “எதிர்பாராது வந்த துணையே வந்து என்னை அணையே” என்று அவள் உடலும் அவனை அலுங்காமல் ஏற்றுக் கொள்கிறது “ஆலங்கட்டி மழை அல்லிப்பூவில் விழும்போது அதன் மகரந்தம் சிலிர்த்து சிதறுகின்றது போல்” அந்த அணைப்பினில் அன்பும் பரிவும் மேலோங்க இதுவரை அவர்கள் மனதினில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி இனி ஒரு புது வாழ்வு துவங்க இன்பம் மலர்கின்றது. அன்று கயவர்களால் ஏற்பட்ட காயங்களும் தழும்புகளும் கூட இன்று இந்த இஷ்டப்பட்ட இவன் தொடும் ஸ்பரிசத்தில் வீணையின் தந்திகளாகி நாடிநரம்புகளுக்குள் ஊடுருவி ஹிந்தோளராகத்தில் “ஆனந்த தேன் காற்றாய்” தாலாட்டுகின்றது. நவதுவாரங்களையும் விரல்கள் மீட்டி வருகையில் முகத்தில் நவரசங்களும் கொப்பளிக்கின்றன. சந்தத்தின் மீது தவழ்ந்து செல்லும் சங்கீதம் போல் சந்தமாய் அவன் இருக்க சங்கீதமாய் தாவித் தழுவிக்கொள்கிறாள் . “முழுதாய் ஒரு நுங்கு எடுத்து மூழ் விலக்கி முன்னால் அரிந்து முக்கண்ணை மோந்து ஒரு விரலால் அழுத்தி அடுத்தொரு விரலால் அள்ளியெடுத்து அருந்தியபடி மூச்சுவாங்க ……..”இருவரும் பரவச நிலையினின்றும் மீள்கின்றனர். அவர்களின் கைகள் அனிச்சையாக ஆங்காங்கே கிடக்கும் ஆடைகளை துழாவி எடுத்து அணிந்து கொள்கின்றன. சற்று நேரம் அமைதி ……… அவள் இனம் புரியாத மகிழ்ச்சியில் அவனிடம் சொல்கிறாள் , வாழ்நாள் எல்லாம் விரக்தியிலேயே போய்விடும் என்றுதான் எண்ணியிருந்தேன் இதுவரை, இந்நாள் முதல் உன்னால்தான் இனியெல்லாம் திருநாளாய் ஆகும் என்னும் நம்பிக்கையைத் தருகின்றது . ....... அப்புறம் அவன் சொல்கிறான் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவாவது நாம் திருமணம் செய்தாக வேண்டும் மேகலை. — ஓம் …… ஆனால் எனக்கு இன்னொரு தாலி கட்டுவதில் இஷ்டமில்லை விநோ . — சரி, அப்படியென்றால் இங்கொரு பாதிரியார் வருவாரே அவர் முன்னிலையில் மோதிரம் மாற்றலாமா ….. — மணிமேகலை கொஞ்சம் யோசித்து விட்டு சொல்கிறாள்….தற்போது எங்களுக்கு மறுவாழ்வும் வாழ்க்கைக்கு வழி காட்டியதும் இந்த சாதுக்கள்தான் அதனால் அவர்களின் முன்னிலையில் இங்கிருக்கும் நண்பர்களுடன் மாலை மாற்றினால் போதும். ஆடம்பரம் எல்லாம் அவசியமில்லை. அவனுக்கும் அதுவே சரியென்று படுகின்றது. அவளிடம் அப்படியே செய்யலாம் , நீயும் நேரமிருக்கும்போது தலைமை பிக்குவானவரிடம் கேட்டுப்பார் என்கிறான். ம்…..என்று மெதுவாக எழுந்தவள் மென்மையாய் அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டு கடைக்குப் பின்னால் இருந்த வீட்டுக்குப் போகிறாள். நிலவின் ஒளியில் தேவதைபோல் நடந்து செல்லும் அவளழகை இவள் என்னவள் என்னும் நினைப்பில் எதுவித லஜ்ஜையுமின்றி ரசிக்கிறான்……..! மலர் . ........... 🌺 5.- கருத்து படங்கள்
- செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்!
செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்! செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று (12) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன்போது, புதைகுழியை சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டுள்ளது. அத்துடன் புதைகுழி பகுதியில் அகழ்வு பணிகளில் ஈடுபடுவர்களுக்காக மற்றும் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் டித்வா புயல், அதனை தொடர்ந்து யாழில் பெய்த பருவ மழை காரணமாக சேதமடைந்துள்ளன. அவற்றினை அங்கிருந்து அகற்றி, புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வு பணிகளுக்கான தளபாடங்களை கடந்த அகழ்வு பணிகளுக்கு ஏற்பாடு செய்தது போன்று நல்லூர் பிரதேச சபை இம்முறையும் தளபாட வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய மன்று கட்டளையிட்டது. புதைக்குழி பகுதிக்கு நேரில் சென்று கள தரிசிப்பை மேற்கொள்வது என்றும் மன்றில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய நீதவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ரணித்தா, நல்லூர் பிரதே சபை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று புதைகுழியை பார்வையிட்டனர். அதன்போது புதைகுழிக்குள் தற்போதும் நீர் தேங்கி நிற்பதனால் எதிர்வரும் 28 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும், ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றில் எடுக்கப்படும் எனவும், ஏப்ரல் 20 ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது எனவும் திகதிகள் இடப்பட்டன. https://athavannews.com/2026/1468255- “Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு!
“Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு! மத்திய கிழக்கு மோதல்களால் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டாலும், தற்போது நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்வது (Working from home) அவசியமில்லை என்று வர்த்தக, வணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (12) தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை மோசமடைந்தால், பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த மோதல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, கப்பல் செலவுகளை அதிகரித்து, சர்வதேச சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. குறிப்பாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் இதனால் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எரிபொருள் விலைகள் ஏற்கனவே உள்ளூரில் சரிசெய்யப்பட்டிருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்குள் புதிய ஏற்றுமதிகள் அதிக விலையில் வரும்போது மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். சில தனியார் எரிவாயு விநியோகஸ்தர்கள் விலைகளை அதிகரிக்க முயற்சித்ததாகவும், ஆனால் அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து விலை நிலைத்தன்மையைப் பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். உலகளாவிய மோதல்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தவுடன் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் பெரும்பாலும் உருவாகின்றன என்பதைக் குறிப்பிட்டு, பீதியடைந்து வாங்குவதைத் தவிர்க்கவும், வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தவும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். https://athavannews.com/2026/1468239- இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!
இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்! இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 478 கிலோ கிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் 176 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட மொத்தம் 654 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகள் நேற்று (12) டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு இழுவைப் படகுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி ரூ. 10 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நேற்று உறுதிப்படுத்தினார். இதற்கிடையில், இரண்டு படகுகளிலும் இருந்த மொத்தம் 10 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் நீண்ட தூர கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இழுவைப் படகுகள் அடையாளம் காணப்பட்டன. ஒரு இழுவைப் படகைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 600 கிலோ கிராம்களுக்கு மேல் எடையுள்ள போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஏராளமான சாக்குப்பைகளை கடற்படை வீரர்கள் கண்டுபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதே கப்பலில் இருந்து எட்டு கைத்துப்பாக்கிகள், மெகசின்கள், இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி ஆகியவற்றை கடற்படை மீட்டது. M16 துப்பாக்கி என்பது பொதுவாக பாதுகாப்புப் படைகளின் சிறப்பு உறுப்பினர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இரண்டாவது பல நாள் மீன்பிடி இழுவைப் படகு, ஏனைய படகிற்கு கண்காணிப்பு மற்றும் உதவியை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு மீன்பிடி படகுகளும் சந்தேக நபர்களும் நேற்று டிக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இதுவென்று இலங்கை கடற்படை கூறியுள்ளது. https://athavannews.com/2026/1468249- ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்க அனுமதி
ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான ட்ரம்பின் அனுமதியுடன் எண்ணெய் விலை சரிவு! ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாக, கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்கா நாடுகளுக்கு 30 நாள் உரிமத்தை வழங்கியது. இது ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாகும் என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார். ஈரான் மோதலினால் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதைத் தடுக்கும் முயற்சியாக, மூலோபாய பெற்றோலிய இருப்பில் இருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை அமெரிக்கா வெளியிடும் என்று அமெரிக்க எரிசக்தித் துறை கூறிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. அந்த வெளியீடு 32 நாடுகளைக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வெளியிடுவதற்கான பரந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். 2026 மார்ச் 12 ஆம் திகதி நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அங்கீகாரம் அளிக்கும் இந்த உரிமம் 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி நள்ளிரவு வொஷிங்டன் நேரம் வரை செல்லுபடியாகும் என்று திறைசேரித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட உரிமத்தின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை (13) காலை எண்ணெய் விலைகள் குறைந்ததுடன், இது விநியோக கவலைகளையும் தணித்தது. GMT நேரப்படி 01.23 மணியளவில் பிரெண்ட் ஃபியூச்சர்ஸ் மசகு எண்ணெய் 71 சென்ட்கள் அல்லது 0.71% குறைந்து ஒரு பீப்பாய்க்கு $99.75 ஆகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் 88 சென்ட்கள் அல்லது 0.92% குறைந்து $94.85 ஆகவும் இருந்தது. முன்னதாக மார்ச் 5 அன்று அமெரிக்க திறைசேரி இந்தியாவிற்கு 30 நாள் விலக்கு அளித்தது, இதன் மூலம் கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய எண்ணெயை புது டெல்லி வாங்க அனுமதித்தது. எரிசக்தி விலைகளைக் கட்டுப்படுத்தும் ஏனைய நடவடிக்கைகளுடன், வளைகுடாவில் கடல்சார் வர்த்தகத்திற்கான அரசியல் ஆபத்து காப்பீடு மற்றும் நிதி உத்தரவாதங்களை வழங்குமாறு ட்ரம்ப் ஏற்கனவே அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அமெரிக்க கடற்படை அப்பகுதியில் கப்பல்களைப் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார். விலைகளைக் கட்டுப்படுத்தும் மற்றொரு முயற்சியாக, எரிசக்தி மற்றும் விவசாயப் பொருட்கள் அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையில் சுதந்திரமாகச் செல்வதை உறுதி செய்வதற்காக, ஜோன்ஸ் சட்டம் எனப்படும் கப்பல் விதியை தற்காலிகமாகத் தள்ளுபடி செய்வது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த விதியை விலக்குவது வெளிநாட்டு கப்பல்கள் அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையில் எரிபொருளை எடுத்துச் செல்ல அனுமதிக்கும், இது செலவுகளைக் குறைக்கும் மற்றும் விநியோகங்களை விரைவுபடுத்தும். வியாழக்கிழமை (12) நிலவரப்படி உலகளவில் 30 வெவ்வேறு இடங்களில் சுமார் 124 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் கடலில் இருப்பதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1468242- ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குங்கள் - இந்திய அரசிடம் சுமந்திரன் வலியுறுத்தல்
இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அதனை வழங்குங்கள்; நாடு திரும்புவோர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அரசுக்கு அழுத்தம் வழங்குங்கள் - இந்திய அரசிடம் சுமந்திரன் வலியுறுத்தல் Published By: Vishnu 13 Mar, 2026 | 05:50 AM (நா.தனுஜா) இந்தியாவிலேயே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து, அங்கேயே குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின்பேரில் கடந்த வார இறுதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் இந்தியா சென்ற குழுவில் அங்கம் வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அங்கு வேறு பல சந்திப்புக்களிலும் பங்கேற்றார். அதன்படி புதுடில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நிறுவனத்தின் நாளந்தா மண்டபத்தில் புதன்கிழமை (11) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென ஆர்.கே.ராதாகிருஷ்ணனால் இயக்கப்பட்ட 'முகமில்லா மனிதர்கள்: இந்தியாவில் தமிழ் அகதிகளின் பயணம்' எனும் தலைப்பில் ஆவணத்திரைப்படமொன்று திரையிடப்பட்டது. அத்திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த எமது ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பதும், தாயகத்தை வலுப்படுத்தவேண்டும் என்பதுமே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இந்தியாவில் வாழும் எமது உறவுகளும், இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் அடுத்த தலைமுறையினரும் அந்த மண்ணிலேயே குடியுரிமை பெற்று கௌரவமாக வாழவேண்டும் என்று விரும்பினால், அதனை எம்மால் மறுதலிக்கமுடியாது. மாறாக அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதுதான் முறையானதாகும். ஆகவே அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப இந்த விடயத்தில் தாயகம் திரும்பவும் அல்லது இந்திய மண்ணிலேயே குடியுரிமை பெறுவதற்கும் அவர்களுக்கு அவசியமான வசதிகளைச் செய்துகொடுப்பது தான் நியாயமானதாகும். அதேவேளை பலர் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு நாட்டம் கொண்டிருக்கின்றனர். எனினும் அவர்கள் தாயகம் திரும்பும்போது, முன்னர் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறினர் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, அவர்கள் தாயகம் திரும்புகையில் அவ்வப்போது கைதுசெய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அவ்வாறு மீண்டும் நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். இருப்பினும் அதனைச் செய்யாமல் இலங்கை அரசாங்கம் இழுத்தடிப்பதனால், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகமும் ஈழத்தமிழ் அகதிகளைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைத்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/240839
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.