stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
சரியான முடிவாகவே படுகிறது. பிரித்தானிய பணமுறிகளில் முதலீடு அதிகரிக்க காரணம் அமெரிக்க முறிகளில் இருந்து பல முதலீட்டாளர் வெளியேறுவது என ஒருவர் சொன்னார். டுபாயை மையமாக கொண்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்க பணமுறிகளில் இருந்து வெளியே வருமாறு இல்லை என்றால் உங்கள் நிறுவனங்களும் எமது இலக்கே என ஈரான் மிரட்டல் அனுப்பியதாக சொல்கிறார் ஒருவர். உண்மையா தெரியவில்லை. வழமைக்கு மாறாக யுத்தம், ரிசெர்சன் ஆபத்து இருந்தும் தங்கம் விலை விழுகிறது. அரபுநாடுகள் செலவுக்காக தங்கத்தை விற்பதாலாம். மத்தள போன்ற இடத்துக்கு செயல்பாட்டை மாற்றினாலே ஒழிய அரபு நாட்டு விமானசேவைகள் பல வங்குரோத்தாகும் நிலை வரக்கூடும். மத்தளவுக்கு மாற்றினாலும், எரிபொருள் கிடைப்பது சுலபம் அல்ல. விமான எரிபொருட் செலவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிமிடம் சண்டை நின்றாலும் கூட உலக எண்ணை, எரிவாயு விலையும், உஅலகன்பொருளாதாரமும் மீள 6 மாதமாவது செல்லும். உலக நாடுகள் அனைத்திலும் recession உறுதி என எண்ணுகிறேன். இப்போதை நிலை இன்னும் 1 மாதம் நீடித்தால் - depression கூட வரலாம்.
- Today
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்அண்ணையின் குணம் தெரியாமல் நல்லாத்தான் பாவம் பாக்கிறிய😃ள்
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்இதுதான் கடைசிப் பயனாக கதை.😀 இது டூ மச் .... வருகைக்கு நன்றி கமராவில பார்துப் பார்த்து தொட்டதுக்கும் போன் செய்தபடிதான் 😂 பின்ன இருக்காதா என்ன. நானும்தான் HAPPY.😃
-
இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்! - ஈரான் தூதுவர்
இருவரும் அரச பயங்கரவாதிகள் , இருவரும் அடிப்படைவாதிகள் இருவரும் கட்டிப்பிடித்து உறவு கொள்வீர்கள் என்பது தெரிந்த விடயம்... அமெரிக்காவுக்கும் உதவுவார்கள்.பின்கதவால்
-
இஸ்ரேல் அணுசக்தி தளத்தை நோக்கி இரான் ஏவுகணை வீச்சு - ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் கெடு
அமெரிக்காவின் காலக்கெடு - ஈரான் அரபு நாடுகளுக்கு கொடுத்த அதிர்ச்சி! Mar 23, 2026 - 12:33 PM அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய புரட்சிகர இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, வளைகுடா பிராந்திய அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு டெஹ்ரான் எடுக்கும் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது. திங்கட்கிழமை காலை ஈரானிய அரச தொலைக்காட்சியால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஈரானிய தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn2u7r5e000j356pog6c5n9d
-
இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்! - ஈரான் தூதுவர்
இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்! Mar 23, 2026 - 12:15 PM இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை எரிபொருள் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை வழங்க ஈரான் தயாராக உள்ளது என்றார். ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக மூடவில்லை என்பதையும் அவர் இங்கு வலியுறுத்தினார். இலங்கை இக்கட்டான நிலைக்கு உள்ளாவதை ஈரான் ஒருபோதும் விரும்பாது என்றும், ஈரான் தேசத்திற்கு இலங்கை மிகவும் மரியாதைக்குரிய நாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தது. இலங்கையின் அந்த உதவியை இச்சந்தர்ப்பத்தில் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இதேவேளை, ஈரானில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க ஈரான் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmn2tmsff000i356p2p8o596a
-
அணு தளங்கள் மீது தாக்குதல் : சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் - உலக சுகாதார அமைப்பு
அணு தளங்கள் மீது தாக்குதல் : சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் - உலக சுகாதார அமைப்பு 23 Mar, 2026 | 09:24 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் மோதல் மேலும் தீவிரமடைந்து, முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச கவலை அதிகரித்துள்ளது. ஈரான் நாட்டில் அமைந்துள்ள நடான்ஸ் அணு செறிவு வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, இஸ்ரேல் நாட்டின் திமோனா அணுசக்தி தளம் அமைந்த நகரம் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல்களின் பின்னணியில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணுசக்தி தளங்களுக்கு அருகில் இடம்பெறும் தாக்குதல்கள் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். ஈரான் பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரத்தில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினரும் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. ஈரான் மேற்கொண்டு வரும் பதிலடி தாக்குதல்களால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட பல நாடுகளின் இராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா பிராந்தியங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஆகாய மற்றும் கடல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார தாக்கங்களும் உருவாகத் தொடங்கியுள்ளன. ஹோர்மூஸ் நீரிணை மீது ஈரான் கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ள நிலையில், நட்பு நாடுகள் தவிர்த்து பிற நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயமும் உருவாகியுள்ளது. மேலும், ஈரான் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சாத்தியம் குறித்த அச்சமும் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு தளங்களைச் சுற்றியுள்ள தாக்குதல்கள் கதிர்வீச்சு அபாயங்களை உருவாக்கி, நீண்டகால சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அணு தளங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்குகின்றன. மேலும், அணு சம்பவங்கள் ஏற்படும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு, 13 நாடுகளில் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா. பணியாளர்களுக்கு அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அனைத்து தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளில் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டுமெனவும், அணு சம்பவங்களைத் தூண்டும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும். அமைதியே சிறந்த மருந்து, உலகத் தலைவர்கள் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் இந்த பதற்ற நிலை உலகளாவிய பாதுகாப்புக்கும் பொருளாதாரத்திற்கும் கடுமையான சவாலாக மாறியுள்ள நிலையில், சர்வதேச சமூகம் உடனடி தலையீடு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. https://www.virakesari.lk/article/241690
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல் Mar 23, 2026 - 09:22 AM ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் தெற்கு துறைமுக நகரில் அமைந்துள்ள குறித்த வானொலி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களில் 214 சிறுவர்களும் அடங்குவர் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmn2nczqq0009356puapjk599
-
இஸ்ரேல் அணுசக்தி தளத்தை நோக்கி இரான் ஏவுகணை வீச்சு - ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் கெடு
இரான் ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவியது எப்படி? அவசர விசாரணை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அராட் நகரில் இரான் ஏவுகணை நேரடியாகத் தாக்கிய இடத்தைப் பார்வையிடும் தீவிர மரபுவழி யூத குடியிருப்பாளர்கள் கட்டுரை தகவல் செபாஸ்டியன் அஷர், அராட், ஜரோஸ்லாவ் லுகிவ், மற்றும் பேட்ரிக் ஜேக்சன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இஸ்ரேலிய அணுசக்தி நிலையத்திற்கு அருகே இரு நகரங்களில் இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 180 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (மார்ச் 21) மாலை இரு நகரங்களின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில், அராட் நகரில் 116 பேரும், டிமோனா நகரில் 64 பேரும் காயமடைந்ததாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. டிமோனா நகருக்கு வெளியே சுமார் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அணு ஆராய்ச்சி நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது. முன்னதாக, சனிக்கிழமை இரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. ஞாயிற்றுக்கிழமை, டெல் அவிவ் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன. பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, தெஹ்ரான் இஸ்ரேல் மீது 400 ஏவுகணைகளை வீசியுள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் 92% ஏவுகணைகள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக அது மேலும் கூறியுள்ளது. அராட் நகரில், சனிக்கிழமை கேட்ட வெடிப்புச் சத்தங்கள் மிகவும் திகிலூட்டுவதாக இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஏவுகணைத் தாக்குதலால் பல கட்டடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. தரையில் ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டடத்திற்குள் பொருட்கள் விழுந்து நசுக்கியதில், "தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயமடைந்த பல குழந்தைகளை" தான் பார்த்ததாக அந்த ஊரைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் நரம் சையத் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார். "உடைந்த கண்ணாடிகளால் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில், தலையில் காயமடைந்த 10 வயது சிறுமியை நான் தேற்ற முயன்றேன்," என்று அவர் கூறினார். "அவளுடைய பெற்றோர் கட்டடத்திற்குள்ளேயே சிக்கி இருந்ததால், அவள் ஆம்புலன்ஸில் ஏற மறுத்துவிட்டாள். இடிந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவளது பெற்றோர் மீட்கப்படும் வரை நாங்கள் காத்திருந்து, பின்னர் அவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்." தாக்குதலின் வேகத்தில் இரண்டு குடியிருப்பு கட்டடங்களின் வெளிப்புறச் சுவர்கள் பெயர்ந்து போயிருந்தன. நெகேவ் பாலைவனத்தில் உள்ள இந்தத் தீவிர மரபுவழி யூதர்கள் வாழும் நகரில், கருப்பு நிற உடை அணிந்த ஆண்கள் கூட்டமாக நின்று அந்தச் சேதங்களை உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,தெற்கு இஸ்ரேலின் அராட் நகரில் இரான் வீசிய ஏவுகணை அடுக்குமாடி குடியிருப்புகளைத் தகர்த்தது டிமோனா நகரிலும் இதேபோன்ற ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு காயமடைந்த பலரில் 10 வயது சிறுவனும் ஒருவன். அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர். "டிமோனா மற்றும் அராட் ஆகிய இரு நகரங்களிலும், ஏவுகணைகளை இடைமறிக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகள் இலக்கைத் தவறவிட்டன. இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள வெடிபொருட்களை கொண்ட இரு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேரடியாகத் தாக்கின" என்று இஸ்ரேலிய தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். அஹ்மதியல் பென் யெஹுதா, டிமோனாவில் ஏவுகணை விழுந்த இடத்திலிருந்து இரண்டு நிமிட நடைப்பயணத் தொலைவில் வசிக்கிறார். தாக்குதல் நடந்தபோது, தான் பாதுகாப்பு அறைக்கு செல்லும் படிக்கட்டுகளில் இருந்ததாக அவர் கூறுகிறார். "எனது வீடு உட்பட பல வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன, ஜன்னல்கள் உடைந்து சிதறின." என்றார் அவர். ஏவுகணை விழுந்த வீதியைப் பார்வையிடச் சென்ற பென் யெஹுதா, "ஒரு மழலையர் பள்ளி உட்பட அந்தப் பகுதியே உருக்குலைந்து போயுள்ளது" என்றார். பலருடைய அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக அழிந்துவிட்டதை அவர் நேரில் பார்த்தார். "நான் பயங்கரமான அச்சத்தை உணர்ந்தேன். ஒரு ஏவுகணை கான்கிரீட் கட்டடங்களுக்கு இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அழிவைப் பார்ப்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது." இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெதன்யாகு அராட் நகரில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடுகிறார் இரான் இஸ்ரேலுக்குள் தொடர்ந்து இத்தகைய சேதங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டிருப்பது, இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை நினைவூட்டுகிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஏவுகணைகள் எவ்வாறு ஊடுருவின என்பதைக் கண்டறிய அவசர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெகேவ் பாலைவனத்தில் அமைந்துள்ள 'ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம்' பொதுவாக "டிமோனா அணு உலை" என்று அழைக்கப்படுகிறது. மத்திய கிழக்கின் ஒரே அணு ஆயுதக் கிடங்கு இருப்பதாக நம்பப்படும் ஒரு இடமாக அது உள்ளது. பட மூலாதாரம்,Maxar படக்குறிப்பு,2020-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக, இந்தத் தளம் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், கடந்த ஆறு தசாப்தங்களாக இஸ்ரேல் இங்கு அணு குண்டை உருவாக்கியது என்பது வெளிப்படையான ரகசியமாகும். இருப்பினும், அடுத்தடுத்து வந்த இஸ்ரேலிய அரசாங்கங்களும் இது குறித்து தெளிவற்ற நிலையையே பராமரித்து வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் அணு ஆயுத வல்லமை கொண்ட ஒரே நாடாக இஸ்ரேல் உள்ளது. எனவே, இந்த தளம் இலக்கு வைக்கப்படுவதற்கான எந்தவொரு அறிகுறியும் இஸ்ரேலால் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும், இரான் அணு குண்டை தயாரிப்பதற்கான எந்தவொரு சாத்தியமான திறனையும் அழிப்பதையே இந்தப் போரின் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளன. நடான்ஸ் மீதான தாக்குதலை அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று இரானின் அணுசக்தி அமைப்பு வர்ணித்துள்ளது. இருப்பினும், "கதிரியக்க கசிவு ஏதும் ஏற்படவில்லை" என்றும், "சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்றும் அது கூறியுள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரின் முதல் நாட்களிலும், கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின் போதும், அமெரிக்க - இஸ்ரேல் படைகளால் நடான்ஸ் குறிவைக்கப்பட்டது. சனிக்கிழமை நடான்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டபோது, அந்தப் பகுதியில் இத்தகைய தாக்குதல் நடந்ததாகத் தங்களுக்குத் தெரியாது என்று இஸ்ரேலிய மற்றும் சர்வதேச ஊடகங்களிடம் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. கூடுதல் தகவல்கள்: டாம் பென்னட் மற்றும் கேப்ரியலா பொமரோய். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gdxx1jnpgo
-
பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு விசேட வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்
பாடசாலை விளையாட்டு விழாக்களுக்கான விசேட வழிகாட்டல் 23 Mar, 2026 | 11:35 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக, பாடசாலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அது தொடர்பான பயிற்சிகளை முடிந்தவரை அதிகாலை வேளைகளில் மாத்திரம் முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ, நண்பகல் வேளையிலேயே சூரிய வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுவதால், இவ்வாறான வெளிப்புற நிகழ்வுகளை அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மாத்திரம் ஏற்பாடு செய்வது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது என சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, கடும் வெயில் நிலவும் மதிய நேரங்களில் மாணவர்களை நீண்ட நேரம் மைதானங்களில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறும், பயிற்சிகளைத் திட்டமிடும்போது காலநிலையைக் கருத்திற்கொண்டு செயல்படுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். இவ்வாறான உஷ்ணமான காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241705
-
உலகெங்கும் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை
உலகெங்கும் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை Mar 23, 2026 - 06:45 AM மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக, உலகெங்கிலும் குறிப்பாக மத்திய கிழக்கிலும் தங்கியுள்ள அமெரிக்கர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இராஜாங்கத் திணைக்களம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து அமெரிக்கர்களும் தமக்கு அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது தூதரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான எல்லைகள் அவ்வப்போது மூடப்படலாம் என்பதுடன், மத்திய கிழக்குக்கு வெளியேயுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இராஜதந்திர வசதிகள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் ஆதரவு குழுக்களினால் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நலன்கள் அல்லது அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்கள் இலக்கு வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் காரணங்களினால் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு கோரி, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு இந்த விசேட எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmn2hrbkf0001356pm7ytlnff
-
இரானுக்குள் தரைப்படை நடவடிக்கை?!
மத்திய தரைக்கடலில் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் இரகசியமாக நுழைந்த போர்க்கப்பல்! பேரழிவு ஏற்படலாமென எச்சரிக்கை அமெரிக்க மரைன் வீரர்களை (Marine soldiers) ஏற்றிச்செல்லும் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் டிரிபோலி, தற்போது மத்திய தரைக்கடலில் இரகசியமாக நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன யுஎஸ்எஸ் டிரிபோலி தற்போது எங்கு நங்கூரமிட்டுள்ளது என்பதும் இதுவரை வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தரைவழி போருக்கான எச்சரிக்கை யுஎஸ்எஸ் டிரிபோலி கப்பலில் 2,200-க்கும் மேற்பட்ட மரைன் வீரர்கள் இருப்பதாகவும், மேலும் அக்கப்பலில் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் வார்ஹாக் போர் விமானங்களும் இருப்பதாக கூறப்படுகின்றது. அமெரிக்க இராணுவத்தின் ஐந்தாவது மற்றும் ஏழாவது கடற்படைகளும் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ளன, மேலும் இந்த படைகளை சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை சுமார் 40,000 என்று கூறப்படுகின்றது. இருப்பினும், அமெரிக்கப் போர் துறை இவற்றில் எதையும் உறுதிப்படுத்தவில்லை. தரைவழிப் போருக்காக அமெரிக்கப் படைகளை ஈரானுக்குச் செல்லுமாறு ட்ரம்ப் உத்தரவிட்டால், அது ஒரு பேரழிவாக இருக்கும் என்று சில இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மலைகளால் சூழப்பட்ட ஈரானின் அமைவிடம், அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் பாதகமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். https://tamilwin.com/article/us-warships-secretly-entered-the-mediterranean-1774244471
-
அதிகரிக்கும் வெப்பநிலை: சிறுவர்களுக்கு தோல் பிரச்சினை மற்றும் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
அதிகரிக்கும் வெப்பநிலை ; சிறுவர்கள் அதிகளவில் நீரை பருகுவது அவசியம் - விசேட வைத்திய நிபுணர் Published By: Digital Desk 3 23 Mar, 2026 | 10:02 AM (இணையத்தள செய்திப் பிரிவு) நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையினால் சிறுவர்கள் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்ப பக்கவாதத்துக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெப்பமான காலநிலையில் சிறுவர்களின் உடலில் நீர்ச்சத்து விரைவாகக் குறையக்கூடும். எனவே, அவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை (இளநீர், பழச்சாறு) அடிக்கடி வழங்க வேண்டும். சிறுவர்களிடம் உடற்சோர்வு, பசியின்மை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் திரவ உணவுகளை வழங்க வேண்டும். தற்போது பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போதியளவு நீர் அருந்தாமல் விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள் வெப்ப வாதத்துக்குள்ளாகக்கூடும். வெப்பத்தாக்கத்தினால் இதயம் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படலாம். இது வலிப்பு, மயக்கம் மற்றும் தீவிர சந்தர்ப்பங்களில் மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும் என வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடும் வெப்பத்தினால் சிறுவர்களுக்கு வியர்க்குரு, தோல் அரிப்பு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சிறுவர்களை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு தடவைகள் குளிப்பாட்ட வேண்டும். அவர்கள் சுமார் 20 நிமிடங்கள் வரை நீரில் விளையாட அல்லது இருக்க அனுமதிப்பது உடல் வெப்பத்தைத் தணிக்கவும் தோல் நோய்களைத் தவிர்க்கவும் உதவும். வெப்பம் உச்சமாக இருக்கும் நேரங்களில் சிறுவர்களை நேரடியாகச் சூரிய ஒளியில் விளையாட அனுமதிப்பதைத் தவிர்க்குமாறும், விளையாட்டுப் போட்டிகளின் போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறுவர்கள் நீர் பருகுவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/241692
-
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருள்கள்! Published By: Vishnu 22 Mar, 2026 | 07:02 PM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருள்கள் ஞாயிற்றுக்கிழமை (22) மீட்கப்பட்டன. ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 4700 லீட்டர் டீசல், 800 லீட்டர் பெற்றோல் மற்றும் 400 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன யாழ். மாவட்ட குற்றதடுப்புபிரிவால் கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/241677
-
கருத்து படங்கள்
- இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு! நாட்டின் ஆங்கில ஊடகச் சேவை ஒன்று வெளியிட்ட தகவலின்படி, இலங்கையின் கடலோர பகுதிகளில் சுமார் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சலிய விக்ரமசூரியவை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட இந்த தகவலின்படி, நாட்டின் எல்லைக் கடல் பகுதி மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டல கடலடியில் “பல பில்லியன் பீப்பாய்கள்” மசகு எண்ணெய் இருப்பதற்கான சாத்தியக்கூறும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் இலங்கையின் கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இது இலங்கையின் கடல்சார் வளங்களின் சாத்தியங்களைப் பற்றிய புரிதலை மேலும் மேம்படுத்தியுள்ளது. எனினும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் மற்றும் ஆய்வு உரிமங்களை வழங்கும் செயல்முறை ஆரம்ப கட்டத்தில் இன்னும் இருப்பதால் வணிக ரீதியான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இன்போதைக்கு சாத்தியில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. இலங்கை கடல்சார் ஆய்வில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் முதலீட்டாளர் நம்பிக்கையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு, 2021 ஆம் ஆண்டின் பெற்றோலிய வளங்கள் சட்டம் உள்ளிட்ட ஒரு புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. “இலங்கையை ஆராயுங்கள்” திட்டத்தின் கீழ், சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் பரந்த பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், அதிகாரிகள் பாரம்பரிய ஏலச் சுற்றுகளிலிருந்து திறந்த உரிம முறைக்கு மாறி, கடலோரப் பகுதிகளைச் சிறிய தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பல உலகளாவிய நிறுவனங்கள் இலங்கையின் கடலோர வளங்களை ஆராய்வதில் ஏற்கனவே ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1469607- தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து! மோசமான வானிலை காரணமாக, திங்களன்று (23) அதிகாலை லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் ஒன்று தரையில் இருந்த வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நியூயோர்க்கின் விமானப் பயண கண்காணிப்புத் தரவுகள் மற்றும் உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் CRJ-900 விமானம், ஓடுபாதையில் இருந்த ஒரு தீயணைப்பு வாகனம் மீது மோதியதாக நியூயார்க் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ளது. இந்த விபத்தில் நான்கு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவசரகால மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், பயணிகள் விமானத்தின் மூக்குப் பகுதியிலும் முன்பகுதியிலும் ஏற்பட்ட சேதம் காணப்பட்டது. விபத்தின் போது, விமானத்தில் சுமார் 100 பயணிகள் இருந்ததாகவும், அவர்களின் உடல்நிலை மதிப்பிடப்பட்டு வருவதாகவும் நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2026/1469633- ஈரான் பலமாகவுள்ளது. ட்ரம்ப் கனவு காண்கிறார்!!!
ஈரான் பலமாகவுள்ளது. ட்ரம்ப் கனவு காண்கிறார்!!! --- --- அமெரிக்க ஈகோ படி இறங்காது என்கிறார் ஈரானிய ஆய்வாளர் --- --- ட்ரம்ப் நினைப்பது போன்று, 48 மணிநேர காலக்கெடு அர்த்தமற்றது என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளரும் பத்திரிகையாளருமான (Center for Middle East Strategic Studies and a journalist) அபாஸ் அஸ்லானி (Abas Aslani) கூறியுள்ளார். ஈரான் படைகளிடம் எந்த ஒரு பலவீனத்தையும் காண முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் தன் அடையாள உணர்வு (Consciousness of one's identity) மேலோங்கி நிற்பதால், தற்போதைக்கு போர் நிறுத்தத்தை எதிர்பார்க்க இயலாது, என்ற தொனி இவருடைய ஆய்வின் உள்ளடக்கத்தில் தெரிகிறது. ஹார்முஸ் நீரிணை பகுதியை முழுமையாக மீண்டும் திறக்க வேண்டும் என ட்ரம்ப், வழங்கிய 48 மணி நேர கால அவகாசம், தொடர்பாக ஈரான் பெரிதாக அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை எனவும் அபாஸ் அஸ்லானி விபரித்துள்ளார். நீண்டகாலப் பாதுகாப்பு நோக்கில், ஒரு மூலோபாயச் சமன்பாட்டை நிறுவக்கூடிய தருணம் வரை போராட்டத்தைத் தொடர, அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால் அது சாத்தியமில்லை. ஏனெனில், தற்போதைய போர்ச் சூழலில் இருந்து ஈரான் பின்வாங்குவதற்கான அறிகுறிகள் இல்லை என்கிறார். இருந்தாலும், அமெரிக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஈரான் அதிகளவு விலைகொடுக்க நேரிடும் எனவும் அபாஸ் அஸ்லானி எச்சரிக்கிறார். அபாஸ் அஸ்லானி ஒரு ஈரானிய பத்திரிகையாளர், ஈரான் வெளியுறவுக் கொள்கை பற்றி எழுதுகிறார். தற்போது தஸ்னிம் நியூஸ் ஏஜென்சியின் (Tasnim News Agency) உலக மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றுகிறார். முன்பு ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சியில் (Fars News Agency) இதே பதவியை வகித்தவர். ஈரான் அணுசக்தி விவகாரங்கள்பற்றிய விமர்சன கட்டுரைகளை எழுதிவரும் இவர், அமெரிக்கவும் ஈரானும் தற்போதைக்கு ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து சமதான முயற்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை என வாதிடுகிறார். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0QuivbZr5voxqbCQC4RBGnEw5kj9XBondxjwo8JE5Nb3EDVL2oLF78g11hrS8BSVhl&id=1457391262&mibextid=wwXIfr- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .- “ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க 10 வருட பணமுறி 13 மற்றும் 11 புள்ளிகளால் அதிகரித்துள்ளது என கூறுகிறார்கள், மூடி அறிக்கையில் அமெரிக்காவில் 2026 இல் ரிசெசன் வருவதற்கு 49% வாய்ப்புக்கள் உள்ளதாக கூறுகிறார்கள், மேலதிக கடனிற்குள் மாட்டுப்படுவது இந்த நேரத்தில் சரியாக இருக்காது என்பதாலும் (முக்கிய காரணம்) மின்சார கார் கடனுக்குள் நுழையவில்லை.- “ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
உக்கிரேன் போர் மேற்கின் புரொக்ஸி போர், ஈரானில் சீனா, இரஸ்சியா வெறும் உதவிகளே செய்கிறார்கள், ரஸ்சியாவுடனான போரிலும் மேற்கு தோற்கும், ஈரானுடனான போரில் அமெரிக்க இஸ்ரேல் கூட்டணி தோற்கும், இரண்டும் அடிப்படையில் சமச்சிரற்ற தேய்மான போராக இருந்தாலும் இரஸ்சிய போர் தாக்குதல் போர், ஈரானிய போர் தற்காப்பு போர்.- “ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
நியுசவுத் வேல் மானிலத்திலேயே உள்ளேன். போர் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே என்னுடன் வேலை செய்யும் ஒருவர் சிட்னிக்கு வெளியே பெரும் தொலைவிலிருந்து வருபவர் ( வேலை நாள்களில் சிட்னியில் சகோதரி வீட்டில் தங்கியிருப்பவர்) 79 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை, டீசல் முற்றாக இல்லை என கூறினார் அப்போது பெற்றோல் விலை 2.19 இல் இருந்தது. அவர் கூறிய இடம் அவருக்கு தொலைவில் இருப்பதாக கூறினார். மின்சார கார் வாங்குவதற்கான முன் பதிவினையும் இரத்து செய்து எனது வைப்புபணத்தினையும் மீழ கோரியுள்ளேன். வீட்டில் செய்தி பார்ப்பார்கள், நான் பார்ப்பதில்லை (அதனால் தெரியாமல் இருந்திருக்கலாம்), ஆனால் நகர்புறங்களில்தட்டுப்பாடு இருக்காது என்றே கருதுகிறேன். வீட்டில் கூறினார்கள் பெரிய கொள்கலனில் மக்கள் பெற்றோல் வாங்குகிறார்களென, கோவிட் காலத்தில் டொய்லட் பேப்பரினை பெரியளவில் வாங்கி குவித்து ஒரு செயற்கையான தட்டுப்பாடினை உருவாக்கினார்கள்.- என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
Full document:-
Indegenousla produced ied (2).jpg
-
Indegenousla produced ied (1).jpg
-
indegenous + international.jpg
-
Mo Ran Bong.jpg
-
Mo Ran Bong crew being brought to shore (2).jpg
-
Mo Ran Bong crew being brought to shore (1).jpg
-
Mo Ran Bong (2).jpg
-
Mison.jpg
-
mison after fire.jpg
-
Mison (4).jpg
-
Mison (3).jpg
-
digitally improved image by Nane Chozhan.jpg
-
First aircraft - but failed to fly, as per Time.jpg
-
time enna.jpg
-
The Nagapooshani Boat - 60.5.31.jpg
-
early flag of TE.jpg
-
lights and flags on top of the Wave Rider class vessels.jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (7).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (6).jpg
-
equipments from the Wave Rider class Inthumathi gunboat of ltte (5).jpg
- ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 இலட்சம் அமெரிக்க டொலர் அறவிடப்படும் - ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்
சும்மா இருந்த நாட்டை சீண்டி, அவர்கள் கையில் அதிகாரம் கொடுத்துள்ளார்கள். பத்து ஆண்டுகளுக்கு தமக்கு இரானால் அச்சுறுத்தல் இல்லை என்றார் நெத்தன்யாகு, இரான் அமெரிக்காவோடு ஒத்து உறவாட வேண்டும் என்றார் ட்ரம்ப், இப்போ அமெரிக்கா இஸ்ரேலோடு தொடர்புள்ளவர்களுக்கே பாதுகாப்பே இல்லை என்கிறது இரான், அரபு நாடுகள் அமெரிக்காவோடு சேர்ந்து இயங்குவது பற்றி ஆலோசிக்கின்றன. இரண்டு முட்டாள்கள் சேர்ந்து சாதித்தது இவைதான். அதிக தலைக்கனம் இப்படித்தான் தலைகுனிவை ஏற்படுத்தும். தலை தப்பியது தம்பிரான் புண்ணியமென நினைத்து ஒதுங்க வேண்டும் இவர்கள்.- படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக
எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து செய்பவர்கள் பெற்றோர். பிள்ளைகளோ; பெற்றோரை யோசியாமல், தங்கள் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்காமல், முடிவுகளை எடுத்து கடைசியில் அந்த முடிவால் பெற்றவர்களையே கொலைசெய்யுமளவுக்கு துணிகின்றனர், பின்னர் மீளாத துயரம், பழி, வாழ்க்கையில் இவர்களுக்கு கைகொடுக்க யார் வருவார்? தாய் வேண்டாமென ஓடிப்போன மகளை மீண்டும் கைகொடுத்து ஏற்றதே இந்த தாய் செய்த தவறு. - இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.