Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அப்ப பலர் சொன்னது போல, சுமந்திரன் பின் கதவால் வர ரணில் காரணம் இல்லையா? மகிந்த ரீம் தான் காரணமா? என்ன 15 வருடங்கள் முன்னர் நடந்தவற்றையே திரிக்கு ஒன்றாக மாற்றிச் சொல்கிறீர்கள்? இந்த இலட்ணத்தில் உங்களுக்கு சுமந்திரனின் தாத்தாவைப் பற்றிய அறிமுகம் எப்படித் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்😇??
  3. "ஒழுங்கா" மகிழ்ச்சியோ இன்பமோ ஒழுங்கா என்பதில் ஒருபோதும் இல்லை. அதை எப்போது மீறுகிறோமோ அங்கேதான் இன்பம் துளிர்க்கும். அப்படி இல்லையெனில் எப்படி ரோலர்கோஸ்ட்டர் பாரக்குகள் பணம் பார்க்க முடியும்? ஒரு திரில் எப்படி வரும். கள்ள காதலாகவே இருந்தாலும் ஓடு கழட்டி அதை கோவில் கர்ப்பகிரகத்திற்கும் அரேங்கேற்றும்போதுதான் சிவன் - பார்வதியின் ஆசிர்வாதத்துடன் முழுமை அடையும். சிவனுக்கும் பார்வதிக்கும் அவர்கள் படைத்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் சம்மத்துடன் இன்பம் ஈர்க்கிறார்கள் அதில் அவர்கள் படைப்பின் உன்னதம் மட்டுமே தெரியும். மனிதர்களுக்கு அவர்களே எழுதாத அவர்களுக்கே புரியாத ஒரு ஆயிரம் வருடம் முன்பு யாரோ யாருக்கோ எதுக்காகவோ எழுதிய வரைமுறைகளை வழக்குகளும் வரையறைகளும் குறுக்கே நிற்கும். புத்தானே பல ஆயிரம் வருடங்கள் முன்பு சொல்லி இருக்கிறான் ....... "நீ பயத்தை எப்போது விடுகிறாயோ அந்த நொடியில் இருந்து வாழ தொடங்குகிறாய்" என்று அவர்கள் வாழ்ந்து இறந்து இருக்கிறார்கள் ........ நாங்கள் சாப்பிட்டுவிட்டு சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம்
  4. யாழ்நகரமே தப்பாகத்தான் இருக்கிறது ...... அதுக்காக இப்போ யாழ்நகரை அழிக்க வேண்டுமா? யாழ் நகரில் இருந்து வெறும் 4-5 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே காணிகள் புல்லும் புதருமாக இருக்கிறது ஏன் மீண்டும் மீண்டும் அங்கேயே எல்லாவற்றையும் கொண்டு சென்று செருகுகிறார்கள் என்று புரியவில்லை. யாழ் வைத்தியசாலை சுற்று சூழல் ஒரு சாதாரண ஆஸ்பத்திரிக்கு உகந்த இடமாக கூட இல்லாமல் ஆக்கிக்கொண்டு இருகிறார்கள். ஆரிய குளத்தில் இருந்து வெறும் 2௦௦ மீட்டர் தூரத்தில் வைத்தியசாலை பின்புற வாசலுடன் ஓர் நீர்த்தேக்கம் தேங்கி நிற்கிறது அதன் துர்நாற்றம் அதை கடக்கும்போது தாங்க முடியவில்லை. ஆனா அருகிலேயே ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணி நடக்கிறது. இவாறானா செயல்கள் இவற்றையெல்லாம் துப்பரவு செய்யவேண்டிய கட்டாயம் இருந்தும் செய்யாமல் ஏன் இவாறான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இது யாழில் மட்டுமல்ல கொழும்பிலும் இதே நிலை இருக்கிறது கொம்பனித்தெரு அருகில் இப்படி இருக்கிறது. ஒரு தூர நோக்கு திடடம் இடல் என்பது அங்கே அறவே இல்லை. மிக நெரிசலான போக்குவரத்தை உருவாக்கியபின் அதுக்கு தீர்வு பல கோடி ரூபா அழிவாகத்தான் இருக்கும் ........ அதை கருத்தில் எடுத்தால் இப்போ எந்த செலவும் இல்லாமல் அதை சீர் செய்து கொள்ளலாம். பழைய பூங்கா மரங்கள் பற்றி அதை பற்றிய அறிவு உள்ளவர்கள்தான் சரியான முடிவை எடுக்க வேண்டும் அவை என்ன மரங்கள்? எவ்வளவு வருடங்கள் வாழ்கின்றன? இன்னமும் எவ்வளவு வருடம் வாழும்? போன்ற எந்த அறிவும் இல்லாமல் ஏகாந்தம்தாம் தான் எழுத முடியும். வெறும் உணர்ச்சியால் பிரியோசனமானதை எழுத முடியாது. எனக்கு தனிப்பட ஒவ்வரு மரத்துடனும் ஒரு கதை இருக்கிறது நான் அந்த மரங்களுக்கு கீழே வாழ்ந்திருக்கிறேன் தூங்கி இருக்கிறேன் அது என்னுடைய தனிப்படட உணர்வு மட்டுமே. மேலே ஒரு ஐயா சுமந்திரன் தமிழ் ஈழம் தந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள் என்று ஒரு கருத்தோவியம் வரைந்து உள்ளார் அது உண்மைதான். ஆறுஅறிவும் சரியாக வேலை செய்யும் ஒவ்வரு தமிழனும் அதை அப்படிதான் சொல்வான். ஏனென்னில் சுமந்திரன் தமிழ் ஈழம் கொண்டுவந்தால் அதுக்கு கீழே எல்லா தமிழனுக்கும் அழிவு இருக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். இங்கு பலருக்கு சம்மந்தன் ஐயா தனது பதவியையும் கொழும்பில் உள்ள சொத்துக்களையும் கொத்தவிடம் இருந்து காப்பாற்ற பின்கதவால் கொண்டுவந்த பின்புதான் சுமந்திரனை தெரியும். எங்களுக்கு சுமந்திரனின் தாத்தாவையே தெரியும். எனவே நீங்கள் வர்ண வர்ண படங்கள் கீறியோ ........ அடுக்குமொழி வார்த்தைஜாலம் எழுதியோ நாங்கள் சுமந்திரனை பற்றி அறிந்துகொள்ள எதுவுமே இல்லை.
  5. சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தோனேசிய வீரர் ஜீட் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:38 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் வரலாற்றில் ஓரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற அரிய சாதனையை இந்தோனேசிய வீரர் ஜீட் ப்ரியந்தனா நிலைநாட்டியுள்ளார். கம்போடியாவுக்கு எதிராக பாலி உதயனா கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலேயே இந்த வரலாற்றுச் சாதனையை ஜீட் ப்ரியந்தனா படைத்தார். கம்போடியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் 16ஆவது ஓவரை வீச அழைக்கப்பட்ட ஜீட் ப்ரியந்தனா முதல் 3 பந்துகளில் ஹெட்-ட்ரிக்கைப் பதிவு செய்ததுடன் அதே ஓவரில் கடைசி 2 பந்துகளிலும் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரரானார். கம்போடியாவின் ஆரம்ப வீரர் ஷா அப்ரார் ஹுசெய்ன் 6 பந்துவிச்சாளர்களை சமாளித்து 37 ஓட்டங்களுடன் திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார். ஆனால், 7ஆவது பந்துவீச்சாளராக பந்துவீச அழைக்கப்பட்ட ஜீட் ப்ரியந்தனா தனது முதல் பந்திலேயே ஷா அப்ரார் ஹுசெய்னை ஆட்டம் இழக்கச் செய்தார். அடுத்த இரண்டு பந்துகளில் நிர்மல்ஜித் சிங், சந்தோயுன் ரதனாக் ஆகியோரையும் கடைசி இரண்டு பந்துகளில் மொங்தாரா சொக், பெல் வன்னாக் ஆகியோரையும் ஜீட் ப்ரியந்தனா ஆட்டம் இழக்கச் செய்து அரிய சாதனையை நிகழ்த்தினார். அப் போட்டியில் இந்தோனேசியா 60 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தோனேசியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் தர்மா கேசுமா 68 பந்துகளில் 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 110 ஓட்டங்களைக் குவித்து பின்னர் ஆட்டநாயகனாகத் தெரிவானார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கம்போடியா 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. ஜீட் ப்ரியந்தனா ஒரு ஓவரை வீசி ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதே தினத்தன்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கம்போடியாவின் சவாலை முறிடியத்து 3 ஓட்டங்களால் இந்தோனேசியா வெற்றிபெற்றது. இந்தோனேசியா 20 ஓவர்களில் 141 - 5 விக்., கம்போடியா 20 ஓவர்களில் 138 - 7 விக். ஜீட் ப்ரியந்தனா ஒரு ஓவர் வீசி 14 ஓட்டங்களைக் கொடுத்தார். இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்ந்தன. ஆனால் அவற்றில் இரண்டு ரன் அவுட்கள் அடங்கு இருந்தன. இங்கிலாந்தில் 2010இல் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மொஹமத் ஆமிர் வீசிய கடைசி (20ஆவது) ஒவரில் ப்றட் ஹெடின், மிச்செல் ஜோன்சன் ஆகியோரை முதல் இரண்டு பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்தார். அடுத்த இரண்டு பந்துகளில் மைக்கல் ஹசி, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் ரன் அவுட் ஆனார்கள். மொஹமத் ஆமிரின் கடைசிப் பந்தில் ஷோன் டெய்ட் ஆட்டம் இழந்தார். இது இவ்வாறிருக்க, அயர்லாந்தில் இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான ரி20 போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட அயர்லாந்து வீரர் கேர்ட்டிஸ் கெம்ஃபர் 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். நோர்த் வெஸ்ட் வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முன்ஸ்டர் ரெட்ஸ் அணியின் தலைவராக விளையாடிய கேர்ட்டிஸ் கெம்ஃபர், 12ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளிலும் 14ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளிலும் விக்கெட்களைக் கைப்பற்றி இந்த சாதனையை நிலைநாட்டி இருந்தார். https://www.virakesari.lk/article/234245
  6. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Damro 50 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 23 Dec, 2025 | 08:19 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகம், அமைப்புகள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து நாளாந்தம் நிதி நன்கொடைகள் கிடைத்து வருகிறது. அதன்படி, Damro நிறுவனத்தினால் திங்கட்கிழமை (22) 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை Damro நிறுவனத்தின் பணிப்பாளர் பிரசன்ன கொடிப்பிலி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் நாலக குணதிலக்க ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர். https://www.virakesari.lk/article/234251
  7. ‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:59 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியது. Prime Land குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராஹ்மனகே மற்றும் இணைத் தலைவர் சந்தமினி பெரேரா ஆகியோர் இந்த நிதி நன்கொடைக்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் திங்கட்கிழமை (22) கையளித்தனர். Prime Land குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய மற்றும் பணிப்பாளர் அநுர பத்திரகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234249 ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Cargills (Ceylon) PLC 100 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியது Published By: Vishnu 23 Dec, 2025 | 08:01 PM ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Cargills (Ceylon) PLC நிறுவனத்தினால்100 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது. Cargills (Ceylon) PLC நிறுவனத்தின் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் இம்தியாஸ் அப்துல் வாஹித் (Imitiaz Abdul Wahid- Group Managing Director) திங்கட்கிழமை (22) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அதற்கான காசோலையை கையளித்தார். Cargills (Ceylon) PLC நிறுவனத்தின் திலந்த ஜயவர்தன மற்றும் சந்தன கெலேகம ஆகியோரும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234250
  8. Today
  9. Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு மேலும் 14.1 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:53 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ITOCHU Corporation, S & D Chemicals (Pvt) Ltd, Irrigation Engineering Diplomates Association, Sciences & information Technology City Campus இனால் சுமார் 14.1 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது. அதில், ITOCHU Corporation இன் பொது முகாமையாளர் Mikinga Hotta 02 மில்லியன் ரூபாவும், S & D Chemicals (Pvt) Ltd இன் G.G.A. Dayantha De Silva 10 மில்லியன் ரூபாவும், Irrigation Engineering Diplomates Association இன் W.J. Priyantha 1.1 மில்லியன் ரூபாவும், Sciences & information Technology City Campus இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Cader Rahmathulla ஒரு மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டதுடன் அதற்கான காசோலைகள், நேற்று (22) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/234247 ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு NDB Finance Limited 50 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:56 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’, நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது. அதன்படி, NDB நிதி நிறுவனம் திங்கட்கிழமை (22) 50 மில்லியன் ரூபா நிதி நன்கொடையை வழங்கியது. NDB நிதி நிறுவனத்தின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி K.V. Vinoj, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் நன்கொடைக்கான காசோலையை கையளித்தார். NDB நிதி நிறுவனத்தின் Sanjaya Perera, C.L.B. Dasanayaka ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234248
  10. இது தடுக்கப்பட வேண்டும். வழக்கு போடும் தரப்பின் சட்ட / வழக்கு வியூகம் பற்றி தெரியாமல் கதைக்க ம்முடியாது சில வழக்குகள் தோற்கும் என்று தெரிந்தே போடுவது. ஏனெனில், இந்த வழக்கின் வழியாக பொது அமைப்புகள், வேறு அரச நிர்வாகங்கள் இதை கையில் எடுக்கும் கதவுகளை திறந்த்து விட்டு உள்ளது. வேறு நோக்கங்களும் இருக்கலாம். (சுமந்திரனுக்கு தெரிந்து இருக்கலாம் சட்ட அடிப்படையில் தடுக்க முடியாது அல்லது கடினம் என்று. ஏனெனில் சட்டமா அதிபரின் ஒப்புதல் முறையின்படி (procedural) தேவை என்கிறர் நீதிபதி. ஏன் சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்க வேண்டும் , அரசதரப்பு விளையாட்டு அரங்கை கட்ட முயலும் போது. இது சுமந்திரனுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இது பொதுவான நிலையா, அதாவது வழக்கு போடும் தரப்பு பொது அமைப்பாக இருந்தாலும், அதாவது அரசு மீது வழக்கு போடும் போது, சட்டமா அதிபரின் ஒப்புதல் தேவை என்பது தெரியாது.) வழக்கின் நோக்கம், 2 ஆக இருக்கலாம். வென்றால் தடுக்கப்படும். தோற்றால் எதிர்க்கும் தரப்புகள் கூடும். எதுவும் இறுதி நோக்கத்துக்காக பூக்களில் விளையாட்டு அரங்கை தடுப்பதற்கு, அரசியலையும் சேர்த்து. இதில் பிரச்னை எதிர் தரப்புக சட்டத்தரணி கட்டணத்தை எவர் பொறுப்பேற்பது என்பது. இப்படியான தோற்கும் கணிசமான வியூக வழக்குகளை நேரடியாக இங்கே uk இல் கண்டு இருக்கிறேன்.
  11. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Commercial Bank இனால் 110 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:45 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பரோபகாரர்களிடமிருந்து நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது. அதன்படி,Commercial Bank இனால் 110 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. Commercial Bank இன் தலைவர் Sharhan Muhseen , இந்த நிதி நன்கொடைக்கான காசோலையை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் திங்கட்கிழமை (22) ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார். Commercial Bank சார்பாக, அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் S.C.U. Manathunga, பிரதான செயல்திட்ட அதிகாரி S.Prabagar, மேலதிக பொது முகாமையாளர் Ashani Senevirathane ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/234246
  12. வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் Published By: Vishnu 23 Dec, 2025 | 07:16 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. “டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது. அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார். குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், டித்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான உடனடி நிவாரணம் முதல் நீண்டகால புனர்வாழ்வு வரை இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். அத்துடன், அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்கு மிக அவசியமானது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/234241
  13. ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள சீனா தயாராக உள்ளது Published By: Vishnu 23 Dec, 2025 | 06:31 PM அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் எனவும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான Wang Junzheng தெரிவித்தார். சீனத் தூதுக் குழுவுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள Wang Junzheng, செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். அனர்த்த நிலைமையில் இலங்கைக்கு சீனா வழங்கிய அவசர மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இதன் போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவையும் அவர் பாராட்டினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் தொடங்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ திட்டம் குறித்து சீனக் குழுவிற்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தி, சீனா இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்த Wang Junzheng, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், புதிய திட்டங்களைத் ஆரம்பிக்கவும் சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று குறிப்பிட்டார். கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புத் திட்டம் போன்ற அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களுக்கு சீனா ஆதரவளிக்கும் என்றும், குறிப்பாக கிராமிய வறுமையை ஒழிப்பதில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் சர்வதேச திணைக்கள தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பணிப்பாளர் நாயகம் Peng Xiubin பிராந்திய வெளியுறவு அலுவலக பணிப்பாளர் நாயகம் Bao Ting, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பிரதிப் பணிப்பாளர் Wang Siqi மற்றும் இலங்கை அரசாங்கம் சார்பில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதிஅனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234237
  14. விளக்கேற்றி வைக்கிறேன்.. படம்: சூதாட்டம்(1971) பாடியோர்: சுசீலா
  15. பாடசாலை விடுமுறை தினங்களில் மாற்றம் - கல்வி அமைச்சு அறிவிப்பு 23 Dec, 2025 | 06:39 PM (எம்.மனோசித்ரா) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2025 கல்வி ஆண்டின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை நிறைவு செய்யும் தினங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை (23) புதிய சுற்று நிரூபமொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசம்பர் 22ஆம் திகதி திங்கட்கிழமையுடன் நிறைவடைந்தன. அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றன. அதற்கமைய சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27 முதல் 2026.01.04 வரையும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 கல்வியாண்டின் முதலாம் தவணையின் முதலாம் கட்டத்துக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் 2026 ஜனவரி 5 திங்கட்கிழமை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், 2026 கல்வியாண்டின் முதலாம் தவணை 2025.12.09 கடிதத்துக்கமைய நடைமுறைப்படுத்தப்படும். அத்தோடு 2026 ஆண்டுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் 2025.09.11 திகதியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கமைய நடைமுறைப்படுத்தப்படுவதுடன், பரீட்சை திணைக்களத்தால் 2026 சுற்று நிரூபத்துக்கமைய பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பரீட்சை நடாத்தப்படும் தினங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234232
  16. ஏன் கொழும்பில் போய் தேடுவான்? ஐங்கரநேசனின் "தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்" பரிஸ்ரர் பட்டம் பெற்ற கஜேந்திரகுமார் பா.உ வின் கூட்டில் தான் இருக்கிறது. புலவரும், வாத்தியாரும் குத்தி முறிந்து இங்கே செய்ய முயல்வது "Don't Look Up" என்ற திரைப் படத்தில் சித்திரித்த மடை மாற்றும் வேலையை மட்டும் தான்😎! இவர்களுக்கு பழைய பூங்காவின் பாதுகாப்பிலும் அக்கறை இல்லை, சூழல் பாதுகாப்பிலும் துளி ஆர்வம் இல்லை!
  17. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் சென்றவரின் தருணங்கள்..
  18. மூளைச்சாவும் உடல் அவயவங்களின் தானமும் நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 16, 2025 1 Minute கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட சீறுநீரகங்கள் வேறு தேவையான நபர்களுக்கு பொறுத்தப்படவுள்ளன. இந்நிலையில் மனிதனில் இறப்பு என்றால் என்ன, அதன் வகைகள் என்ன, மூளைச்சாவு என்றால் என்ன, மூளைச்சாவு – சட்ட ரீதியான வலு என்ன மற்றும் மூளைச்சாவின் பொழுது உறவினர்கள் உடல் அங்க தானங்களுக்கு பின்னிற்க மத ரீதியான காரணங்கள் என்ன போன்ற பல்வேறு விடயங்களை இப்பதிவு அலசுகின்றது. மருத்துவத் துறையில் இறப்பு என்றால் எமது இருதயம் நுரையீரல் ஆகியவற்றின் செயற்பாடுகள் அதாவது சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியன முற்றாக நிறுத்தப்படுவதினை தொடர்ந்து மூளையின் செயற்பாடு நிறுத்தப்படல் இறப்பு ஆகும். சில சந்தர்ப்பங்களில் மூளையின் செயற்பாடு முதலில் நிறுத்தப்படுவதினை தொடர்ந்து இருதய மற்றும் சுவாச செயற்பாடுகள் நிறுத்தப்படும் உதாரணம் தலையில் நிகழும் துப்பாக்கி சூடு. மருத்துவத் துறையில் மனிதனின் இறப்பை பின்வரும் 03 வகைகளாக பிரிக்கலாம். 1. உடலியல்/மருத்துவ மரணம் (Somatic/Clinical Death): இரத்த ஓட்டம், சுவாசம் மற்றும் மூளை செயல்பாடு ஆகியவற்றின் முழுமையான, மீளமுடியாத நிறுத்தம். மரணித்த நேரம் என்பது உயிர்ப்பித்தல் சாத்தியமற்றதாக மாறும் புள்ளியைக் குறிக்கிறது. 2. மூளை மரணம் அல்லது மூளைச்சாவு (Brain Death) : பல்வேறு காரணங்களினால் மூளை அதனுடன் இணைந்த மூளைத்தண்டு இறத்தல். இதயம் இயந்திரங்களால் தொடர்ந்து துடித்தாலும், மூளைத் தண்டு உட்பட அனைத்து மூளை செயல்பாடுகளின் நிரந்தர இழப்பு மீளமுடியாததாகக் கருதப்படுகிறது. 3. கல/மூலக்கூற்று மரணம்( Cellular/Molecular Death): ஆக்ஸிஜன் குறைந்து உடலியல் இறப்புக்குப் பிறகு சில மணிநேரங்களுக்குப் பிறகு ஏற்படும் தனிப்பட்ட செல்கள் மற்றும் திசுக்களின் மரணம். இரத்த ஓட்டம் முற்றாக தடைப்படும் இடத்து அதாவது ஓட்ஸிசன் இல்லாதவிடத்து மனித மூளையின் கலங்கள் 3 தொடக்கம் 7 நிமிடங்கள் முற்றாக இறந்து விடும், இருதய கலங்கள் 3 தொடக்கம் 5 நிமிடங்களில் இறந்துவிடும் அவ்வாறே தசைகளில் உள்ள கலங்கள் பல மணித்தியாலங்களில் இறக்கும். பல சந்தர்ப்பங்களில் உடற்கூராய்வு பரிசோதனைக்கு வரும் இறந்தவர்களின் உறவினர்கள் என்னிடம் வினவும் முக்கிய கேள்வி யாதெனில் தூக்கு மாட்டி 5 நிமிடத்தில் நாம் தூக்கு கயிற்றினை வெட்டி அகற்றி விட்டொம், நீரில் வீழ்ந்து சில நிமிடங்களில் தூக்கி விட்டொம் ஏன் இறந்து விட்டார் என்பதே ஆகும். அதற்பொழுது உங்களுக்கு விளங்கும் உடலில் முக்கிய அவயவங்களான மூளை மற்றும் இருதயம் போன்றவற்கு 5 நிமிடங்கள் இரத்தம் அல்லது ஓட்ஸிசன் முற்றாக தடைப்பட்டால் இறப்பு நிகழும் என்பது. மூளைச்சாவு, இச்செயற்பாட்டின்பொழுது சில சந்தர்ப்பத்தில் மூளையின் தண்டுவடம் (brainstem) உயிர்ப்பான நிலையில் இருக்கும் அதன் காரணமாக மூளை தண்டு வடத்தில் காணப்படும் சுவாச, இருதயத்தினை கட்டுப்படுத்தும் பகுதிகள் வேலை செய்யும் இதன் காரணமாக குறித்த நபரின் இருதயம் துடித்துக் கொண்டிருக்கும் நுரையீரல் சுருங்கி விரிந்து சுவாசத்தினை மேற்கொண்டு கொண்டிருக்கும். ஆனால் மூளை மீள இயங்க முடியாதவகையில் இறந்திருக்கும். சில சந்தர்ப்பத்தில் மூளை தண்டுவடம் இறந்தால் சுவாச மற்றும் இருதய செயற்பாடுகளை நாம் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளலாம் சட்ட ரீதியாக (Transplantation Of Human Tissues Act (No. 48 of 1987)ஒருவரின் மூளை இறந்து விட்டால் அவர் சாவடைந்தவராகவே கருதப்படுவார். எனவே தான் மூளைச்சாவடைந்தவர்களிடம் இருந்து சிறுநீரகம் போன்ற அவயவங்கள் பெறப்பட்டு மற்றவர்களுக்கு மாற்றீடு செய்யப்படுகின்றன. எனவே மேற்படி செயற்பாட்டினை நாம் சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்த முடியாது. இவ்வாறு மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களிடம் இருந்து பல்வேறுபட்ட உடல் அவயவங்கள் பெறப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யப்படும். தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள மக்கள் இவ்வாறு உடல் உறுப்புக்களை தானம் செய்யவதில் முன்னிலை வகிக்கின்றனர். இதன் காரணமாகவே இலங்கை கண் (விழிவெண்படலம்) வழங்குவதில் முன்னிலை நாடாக திகழ்கின்றது. குறிப்பாக பௌத்த மதம் இவ்வாறான உடல் உறுப்பு தானங்களை ஊக்குவிக்கின்றது. சைவ மற்றும் ஏனைய மதங்களில் அவ்வாறான ஊக்குவிப்புக்கள் இல்லை. இதன் காரணமாக மேற்குறித்த மதத்தினரின் மூலம் உடல் உறுப்பு தானங்கள் மற்றும் இரத்த தானம் உட்பட குறைவாகவே நடைபெறுகின்றது. சைவசித்தாந்த கோட்பாடுகளும் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து உடல் உறுப்பு தானமும் சைவ சித்தாந்த தத்துவத்தில் முக்கிய இடம் பெறுவது முப்பொருள்கள் ஆகும். அவையாவன பதி, பசு, பாசம் என்பனவே ஆகும். அந்த வகையில் பதியை அடுத்துள்ள நிலையில் உள்ளது பசுவாகும். பசுவானது ஆன்மா, ஆத்மா, உயிர், அனேகன், ஜீவன், ஜீவாத்மா மற்றும் சதசத்து என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. உடலை இயக்கக்கூடிய கண்ணிற்குத்தெரியாதொரு சூக்குமப்பொருளே ஆன்மாவாகும். சித்தாந்திகளிக் கருத்துப்படி உடலை இயக்கும் சக்தியே ஆன்மாவாகும். சைவ சமயத்தின்படி, உடல் என்பது நிலையற்ற, அழிவுக்குட்பட்ட பொருள், அது ஆன்மாவைத் தாங்கும் ஒரு வாகனம். மாறாக, ஆன்மா என்பது நிலையான, அழிவற்ற, அழிந்துபோகாத ஒரு சாராம்சம். இது உடலை இயக்கும் சக்தி, அறிவின் இருப்பிடம், மற்றும் வாழ்வின் ஆதாரமாகும். எனவே மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து சிறுநீரகம், ஈரல் … போன்ற உடல் அங்கங்களை அகற்றுவதினால் அவரின் ஆன்மாவினை நாம் அழிக்க முடியாது மாறாக உடல் அவயவங்களை அதாவது உடலை இயக்கும் சூக்கும சக்தியான ஆன்மாவினை நாம் வேறு உடலுக்கு மாற்றுவதன் மூலம் குறித்த நபரினை சில காலம் பூமியில் வாழ வழிசெய்யலாம் அதாவது இறந்தவரின் ஆத்மாவினை இன்னொருவரின் உடலில் வாழ வழிசெய்யலாம். உணர்ச்சி பூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வாமாக சிந்திப்போம். நன்றி https://tinyurl.com/c82yh7rb
  19. தொல்லை இல்லை இரண்டு ஊர்லையும் ஓட்டலாம்..
  20. எங்களுக்கு பார்க்க அவருக்கு ஏதோ மண்டை பிரச்சனை போல உள்ளது. ஆனால், அவர் தெரிந்துகொண்டே பல விடயங்களை செய்கின்றார் என நண்பர் ஒருவர் கூறினார். முக்கியமாக சனங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் கருத்துக்களை இடக்கு முடக்காக சொல்கின்றாராம். இவர் யூரியூப்பில் காணொளி காண்பித்தால் அதை விரும்புவதற்கும், பாராட்டுவதற்கும் பலர் உள்ளார்கள். அர்ச்சுனாவை சுற்றியுள்ள தமிழ், சிங்கள அரசியல்வாதிகளுக்கு அர்ச்சுனா அளவுக்கு பொது அறிவு, சோசல் மீடியாவில் புகுந்து விளையாடக்கூடிய அறிவு, பரீட்சயம் இல்லாமையால் மற்றவர்களை முக்கியமாக இதர தமிழ் அரசியல்வாதிகளை அர்ச்சுனாவால் நல்லாய் வறுத்து எடுக்க முடிகின்றது. நேற்று ஒரு நண்பனுடன் நாட்டு விடயங்களை பற்றி கதைத்தபோது அர்ச்சுனா பற்றி குறிப்பிட்டு அவருடன் அழைப்பு எடுத்து கதைக்கலாமே என்று பகிடியாக சொன்னேன். ஐயையோ இவனுடன் கதைக்கபோனால் அவன் எனது போன் நம்பரை எடுத்து எல்லாரும் பார்க்கும்படி யூரியூப்பில் போட்டு விடுவான் என நண்பன் சொன்னான்.
  21. இந்திய வெளிவிவகார அமைச்சர் - இலங்கை வெளிவிவகார அமைச்சர் இடையில் சந்திப்பு! 23 Dec, 2025 | 04:19 PM இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் செவ்வாய்க்கிழமை (22) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக, இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது, 'திட்வா' சூறாவளியால் இலங்கை பாதிப்பட்ட போது முதல் நாடாக விரைந்து வந்து இந்தியா வழங்கிய உதவிகளையும், 'சாகர் பந்து' நடவடிக்கையையும் பாராட்டி, மீட்பு பணிகளின் அடுத்த கட்டத்திலும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/234210

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.