stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இரஸ்சிய ஆக்கிரமிப்பினை பலர் ஏற்றுக்கொள்ளும் நிலை உள்ளது, ஆனால் இதனை அமெரிக்க ஆக்கிரமிப்பின் தொடர்ச்சியாகவே இது இருகின்றது என நியாயப்படுத்தும் நிலை உள்ளது, மறுவளமாக அமெரிக்க ஆக்கிரமிப்பினை ஒரு ஆக்கிரமிப்பாகவே பார்க்கும் நிலை இல்லாமல் இருக்கின்றது அதற்கு காரணமாக கூறப்படும் இந்த rule based world order மாறினால் ஒரு பலமான ஐ நா போன்ற அமைப்பு அல்லது உலக ஒப்பந்தம் மூலம் இதற்கு முடிவு எட்டலாம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னங்கடா எல்லாரும் இப்படி இறங்கிட்டியள்..?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனில் மக்கள்தொகை நெருக்கடி: அளவு, காரணங்கள் மற்றும் முன்னறிவிப்புகள். 06.12.2025 பகிர்: பொருளடக்கம்: 1. உக்ரைனின் மக்கள் தொகை: மெதுவான சரிவிலிருந்து கூர்மையான வீழ்ச்சி வரை 2. மக்கள்தொகை குறைப்புக்கான மூன்று முக்கிய காரணிகள் 3. மக்கள்தொகை முதுமை: ஒரு நேர வெடிகுண்டு 4. நிலைமையை என்ன மாற்ற முடியும்? 5. அடுத்து என்ன நடக்கும்: மூன்று காட்சிகள் 6. முடிவுரை உக்ரைன் அதன் நவீன வரலாற்றில் மிக முக்கியமான மக்கள்தொகை நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் செயல்முறைகளை - விரைவான மக்கள்தொகை சரிவு, பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சி, பெருமளவிலான இடம்பெயர்வு மற்றும் நாட்டின் வயதானது - இந்தப் போர் துரிதப்படுத்தியுள்ளது. இந்தப் போக்கு நிறுத்தப்படாவிட்டால், வரும் பல தசாப்தங்களுக்கு நாடு அதன் வளர்ச்சித் திறனை இழக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைனின் மக்கள் தொகை: மெதுவான சரிவிலிருந்து கூர்மையான வீழ்ச்சி வரை 2022 ஆம் ஆண்டு வாக்கில், உக்ரைனின் மக்கள் தொகை சுமார் 41-42 மில்லியனாக இருந்தது. பல்வேறு மதிப்பீடுகளின்படி, இன்று அந்த எண்ணிக்கை 35-36 மில்லியனாகக் குறைந்துள்ளது. 1990களின் மிகவும் கடினமான காலங்களில் கூட, அத்தகைய சரிவு ஏற்படவில்லை. பொருளாதார வல்லுநரும் மக்கள்தொகை ஆய்வாளருமான எல்லா லிபனோவா, போருக்கு முன்பே சரிவு நடந்து கொண்டிருந்தது என்பதை வலியுறுத்துகிறார், ஆனால் முழு அளவிலான படையெடுப்பு அதை வியத்தகு முறையில் ஆக்கியது: மக்கள்தொகை ஆய்வாளர் எல்லா லிபனோவா / நஸாரி மசிலுக் மக்கள்தொகை ஆய்வாளர்களின் மதிப்பீடுகளின்படி, 2050 வாக்கில் மக்கள் தொகை 27-29 மில்லியனாகக் குறையக்கூடும், மேலும் அவநம்பிக்கையான சூழ்நிலையில் - 25 மில்லியனாகக் கூட சுருங்கக்கூடும். மக்கள்தொகை குறைப்புக்கு மூன்று முக்கிய காரணிகள் இடம்பெயர்வு: வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள். போர் தொடங்கியதிலிருந்து, 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். சிலர் திரும்பி வருகின்றனர், ஆனால் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாடுகளில் ஒன்றிணைந்து, வேலை தேடி, தங்கள் குழந்தைகளை உள்ளூர் பள்ளிகளில் சேர்க்கின்றனர். போரினால், உக்ரைனில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது / TSN.ua மக்கள்தொகை ஆய்வாளர் ஒலெக்சாண்டர் கிளாடுன் விளக்குகிறார்: பல உக்ரேனியர்கள், குறிப்பாக குழந்தைகளைக் கொண்ட இளம் பெண்கள், நிரந்தரமாக வெளிநாட்டில் தங்கக்கூடும் என்பதை EU ஏற்கனவே அங்கீகரித்துள்ளது. ஒலெக்சாண்டர் கிளாடுன் / ஆர்பிசி-உக்ரைன் / விட்டலி நோசாச் பதிவு செய்யப்படாத குறைந்த பிறப்பு விகிதம் போருக்கு முன்பு, உக்ரைனில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 270,000-300,000 குழந்தைகள் பிறந்தன. 2023-2024 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை வரலாற்று ரீதியாக மிகக் குறைந்த அளவாக சுமார் 180,000 ஆகக் குறைந்தது. இது இரண்டாம் உலகப் போரின் போது உக்ரைன் பெற்றதை விடக் குறைவு. இன்று ஐரோப்பாவிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் உக்ரைனும் ஒன்றாகும். நிச்சயமற்ற தன்மை, பொருளாதார உறுதியற்ற தன்மை மற்றும் போர் அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் குழந்தைகளைப் பெறத் திட்டமிடுவதில்லை. அதே நேரத்தில், COVID-19 முடிவுக்கு வந்து, சமீபத்திய ஆண்டுகளில் ஆயுட்காலம் பொதுவாக அதிகரித்த போதிலும், இறப்பு விகிதம் பிறப்பு விகிதத்தை விட 2-3 மடங்கு அதிகமாக உள்ளது. உக்ரைனின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பிறப்புகளை விட அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன / ராய்ட்டர்ஸ் இராணுவ இழப்புகள் மற்றும் பாலின அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்தப் போர் மற்றொரு முக்கியமான மக்கள்தொகைப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது: இனப்பெருக்க வயதுடைய ஆண்களின் பற்றாக்குறை. அணிதிரட்டல், இழப்புகள், காயங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆண்கள் இடம்பெயர்தல் - இந்த காரணிகள் அனைத்தும் வரும் ஆண்டுகளில் குழந்தைகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூகக் கொள்கை நிபுணரும் பொருளாதார மருத்துவருமான ஆண்ட்ரி ரெவென்கோ குறிப்பிடுகிறார்: ஆண்ட்ரி ரெவென்கோ / ZN.UA மக்கள்தொகை முதுமை: ஒரு நேர வெடிகுண்டு உக்ரேனியர்களின் சராசரி வயது ஏற்கனவே 41 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. 2050 வாக்கில், இது 46-47 ஆண்டுகளாக உயரக்கூடும். இதன் பொருள்: - சுகாதார அமைப்பில் அதிகரித்த அழுத்தம்; - ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு; - தொழிலாளர் பற்றாக்குறை; - பொருளாதார நடவடிக்கைகளில் சரிவு. பொருளாதார உத்தி மையத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் மரியா ரெப்கோ விளக்குகிறார்: மரியா ரெப்கோ / செர்ஹி நுஷ்னென்கோ நிலைமையை என்ன மாற்ற முடியும்? ஆய்வாளர்கள் பல மூலோபாய திசைகளை அடையாளம் காண்கின்றனர். உக்ரேனியர்கள் திரும்பி வர ஊக்குவித்தல் புலம்பெயர்ந்தோருக்கான திட்டங்கள், உக்ரேனிய நிறுவனங்களுக்கு தொலைதூர வேலை வாய்ப்பு, முதலீட்டு ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகள் - இவை அனைத்தும் சில குடிமக்களை மீண்டும் கொண்டு வரக்கூடும். பிறப்பு விகிதத்தை ஆதரித்தல் பணம் மட்டுமே மக்களை குழந்தைகளைப் பெற ஊக்குவிக்காது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். தேவைப்படுவது: - மலிவு விலை வீடுகள், - உயர்தர மழலையர் பள்ளிகள், - வேலை செய்யும் பெற்றோருக்கு உதவி, - பாதுகாப்பு உத்தரவாதங்கள். எல்லா லிபனோவா மேலும் கூறுகிறார்: எல்லா லிபனோவா / ஆண்ட்ரி டுப்சாக் / RadioSvoboda.org (RFE/RL) இடம்பெயர்வு குறித்து கவனம் செலுத்துதல் சில உக்ரேனியர்கள் திரும்பி வர விரும்புகிறார்கள் - ஆனால் பாதுகாப்பு, வேலைகள், அரசாங்க சீர்திருத்தம் மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு இருந்தால் மட்டுமே. அடுத்து என்ன நடக்கும்: மூன்று காட்சிகள் நம்பிக்கையான வெளிநாடுகளில் உள்ள உக்ரேனியர்களில் பாதி பேர் திரும்பி வருகிறார்கள், பிறப்பு விகிதம் அதிகரிக்கிறது, போர் முடிவடைகிறது. 2050 வாக்கில், மக்கள் தொகை 33-35 மில்லியனாக நிலைபெறுகிறது. யதார்த்தமானது 20-25% திரும்பப் பெறுதல், பிறப்பு விகிதம் சற்று அதிகரிக்கிறது. 2050 வாக்கில் - 28-30 மில்லியன். அவநம்பிக்கை போர் நீண்ட காலமாக தொடர்கிறது, இடம்பெயர்வு அதிகரிக்கிறது, பிறப்பு விகிதம் குறைகிறது. 2050 வாக்கில் - 24-26 மில்லியன். முடிவுரை மக்கள்தொகை நெருக்கடி என்பது வெறும் புள்ளிவிவரங்களின் விஷயம் மட்டுமல்ல, உக்ரைனின் எதிர்காலத்திற்கு ஒரு அடிப்படை அச்சுறுத்தலாகும். பல ஆண்டுகளாக உருவாகி வரும் போக்குகளைப் போர் அம்பலப்படுத்தியுள்ளது மற்றும் துரிதப்படுத்தியுள்ளது. இருப்பினும், சரியான அரசாங்கக் கொள்கை, புலம்பெயர்ந்தோரின் திரும்புதல், இளம் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுடன், நாடு இந்தப் போக்கை மாற்றியமைக்கும் திறன் கொண்டது என்று நிபுணர்கள் உறுதியாக நம்புகிறார்கள். The Ukrainian ReviewDemographic crisis in Ukraine: scale, causes, and forecastsUkraine is experiencing the most significant demographic crisis in its modern history. The war has only accelerated processes that have been developing for yearhttps://global.espreso.tv/ukraine-faces-population-crisis-as-numbers-could-drop-to-25-million-by-2050#:~:text=Opposition%20lawmaker%20Mykola%20Kniazhytskyi%20argues,for%20soldiers%20and%20their%20families.&text=Prime%20Minister%20Denys%20Shmyhal%20has,thirties%20are%20in%20short%20supply. EUobserverBorn into war: How Ukraine's demographic crisis became a...Ukraine had a demographic problem even before Russia's full-scale invasion — but the war is turning a crisis into a catastrophe.. . மேற்குறித்த கட்டுரையின் கீழ் மேலும் இரண்டு இணைப்பு உள்ளது, இது உக்கிரேன் தரப்பு செய்திகள்தான் ஆனால் பெருமளவில் மேற்கு நாடுகளின் ஊடகங்களில் வராமையால் இந்த பிரச்சினை வெளித்தோன்றாமல் இருக்கலாம். போரில் ஏற்படும் இழப்புக்கள் சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களுக்கு மட்டுமே, மற்றவர்களுக்கு அதனால் வரும் இலாபங்களிலேயே கவனம் இருப்பதால் அதனை பற்றி பேச விரும்பமாட்டார்கள்.- “பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
இலங்கையை எடுத்துக்கொண்டால் அது பெளத்தர்களின் நாடாக ஆட்சியாளர்களினால் அடையாளப்படுத்தப்படுகின்றது. மதம், இனவாரியாக இலங்கையை அடையாளப்படுத்தாதவிடத்து இலங்கையில் உள்நாட்டுப்போர், பிரிவினைவாதம் இவற்றுக்கான வாய்ப்புக்கள் ஏற்படுமா?- புது வருட சிரிப்புகள்.
2026..?- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
- பொங்கல் சிரிப்புகள்.
- சிரிக்கலாம் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- Today
- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்கு கிழக்கில் வேலையில்லாத்திண்டாட்டம். சிகை அலங்காரம் முதல் பெரிய வியாபாரதலம், கடற்தொழில் சிங்களம் செய்கிறது. இந்தியா சூறையாடுகிறது. அயலவனை தன் காணி வீடு சுத்தமாகும் வரை குடியிருக்க விடுவார்கள் புலம்பெயர்ந்தோர், பின் அவர்கள் தங்கள் நிலத்தை, காணியை உரிமையாக்கி விடுவார்கள் என்று பலாத்காரமாக வெளியேற்றுவார்கள். மொத்தத்தில் தம் காணி துப்பரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வரை பேச்சு பெரிய வள்ளல்கள் போலிருக்கும், அவர்கள் வெளிநாடுகளில் உழைப்பு, கொலிடே வீடு இங்கே சுகமாக கழிப்பதற்கு. இதற்குத்தான் மிகையாக மக்கள் மேல் முதலைக்கண்ணீர். அவர்களையும் வெளிநாடுகளுக்கு எடுத்து வாழ வழி காட்டுங்கள், அல்லது ஓரிரண்டு குடும்பத்தை பொறுப்பெடுத்து கல்வி வசதி தொழில் வசதியை ஏற்படுத்தி முன்னுதாரணமாக செய்து காட்டுங்கள். அதன் பின் மற்றையோர் தொடர்வர். வடக்கிலேயே எத்தனையோ குடும்பங்கள் அயலில் ஏழ்மையிலும் குடிலிலும் வெள்ளத்திலும் வாழ்கிறார்கள், அவர்களை கவனிக்க யாருமில்லை. சுமந்திரன் ஏதோ உணர்ச்சியை வைத்து அரசியல் செய்ய உளறியவுடன் அவரின் அபிமானிகள் வந்து விடுவர். அவர் சொல்வது சரியாயின் நீங்கள் அதை செயற்படுத்தி காட்டலாமே? மற்றவரை குறை சொல்லிக்கொண்டு. மலையக மக்களின் வாக்குகளிலேயே சுகபோகம் அனுபவிப்பவர்கள் அந்த மக்களின் வாழ்க்கையை மாற்ற என்ன செய்தார்கள்? இப்போ வடக்கு கிழக்கில் குடியேற்றப்போகிறார்களாம். அதை சொல்வதற்கு இவர்கள் தேவையா? இதற்கா அவர்கள் இவரை தமது பிரதிநிதியாக தெரிந்தெடுத்தார்கள்? யார் அதை செய்வது? அவர்களே வந்து குடியேறுவதா? அதற்கான ஆயத்தங்களை செய்தபின் அவர்களை அழைக்கவேண்டும் இல்லையேல் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும். இல்லை, கிழக்கில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாலதி படையணியால் நிர்வகிக்கப்பட்ட ஓர் மாவீரர் நினைவாலயம் 2007>- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம் 2002<- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம் ஒன்றின் உட்புறம் 2006<- உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 16 21.11.1990 கேள்வி பதில் வடிவில் எமது உரையாடல் தொடர்ந்தது. ஐயா இந்த இடத்துக்கு நீங்கள் வந்து எவ்வளவு காலம் ? மூன்று மாதகாலமாகிறது. கும்புறுமூலை அடியோட வெட்டைக்கிறங்கினது தான், மறுகா ஊர் போகயில்லை இந்த இடத்தில் இருக்கிறீர்களே சாப்பாடு வசதிகள் எப்பிடி? கஷ்டம்தான், என்ன செய்யிற? இந்த இடத்துக்கு யாராவது வந்து உதவி செய்தார்களா? ஒருத்தரும் வரயில்ல மகன். இவ்வளவு மக்கள் இருக்கிறார் களே நோய் வந்தால் மருந்துக்கு என்ன செய்வீர்கள்? ஒரு மருந்தும் இல்லை. என்ட மகள் புள்ளைப் பெத்து அஞ்சு நாள் இண்டை வரை ஒரு குளிசையோ ஊசியோ இல்லை. இந்தப் பாலத்தடியில தான் கிடக்கிறாள். (இதைக் கூறும் போது கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது) நீங்கள் உங்கள் இடத்துக்குத் திரும்பிப் போக முடியாதா? எப்படி மகன் போறது. கிணத்தில் ஆக்களை வெட்டிப் போட்டிருக்கிறாங்கள். அதைப் பாத்தவங்க வந்து சொல்லுகிற போது என்னெண்டு மகன் போக மனம் வரும். இந்தப் பகுதியில் எவ்வளவு குடும்பங்கள் உள்ளன? இந்த இடமெல்லாம் ஆக்கள் தான். ஐநூறு குடும்பம் வரும். உங்கள் சொத்த இடம் எது? சித்தாண்டி, ஒவ்வொரு கேள்விக்கும் கடகடவெனப் பதில் வந்தது. அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்தேன் . இது ஆற்றுப் பகுதியாதலால் சனக்கூட்டம் இலையான் மாதிரி மொய்த்துக் காணப்பட்டது. முழங்காலளவு தண்ணீர் உள்ள இந்த ஆற்றையே குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பாவிக்கின்றனர். இந்தத் தண்ணீருக்கு சொந்தம்கொண்டாடியபடி இருநூறு மாடுகள் ஆற்றில் இறங்கின. மாடுகளும் மனிதர்களும் சமத்துவமாக இருந்த இந்த ஆற் றைக் கடந்து செல்கையில் துர்நாற்றம் மூக்கைத் துளைத்தது. அருகில் உள்ள சிறு காட்டில் உள்ளப் பற்றைகளையே அனைவரும் மல சலம் கழிக்கப் பயன்படுத்தும்வதால் அப்பகுதியில் செல்லும் போது மூக்கு மிகவும் சிரமப்பட்டது. அங்குள்ள மக்கள் பலர் புல்லினால் வேய்ந்த சிறு குடிசைகளில் இருந்தனர். அது ஒரு கோழிக் கூட்டைத்தான் ஞபாகப்படுத்தும். எனவே கரி காலனிடம் “இந்தப் புல்லின் பெயர் என்ன?" என்று கேட்டேன். “இலுக்கு என்பார் இலக்கணப்படி இணுக்கு என்பதே சரியான பெயர்” என்கிறார்கள். இப்புல்லை வெட்டி ஏழுநாள் வெயிலில் காயவைத்தபின் வேய்ந்தால் ஏழு வருடங்கள் பாவிக்கலாம் என்று கூறுவார்கள்” என்றார். சின்னச் சின்ன முள்ளுச்செடி களால் வேயப்பட்டுக்கொண் டிருந்த குடிசைகளையும் கண் டோம். வழியில் இன்னொருவரைக் கண்டோம். நகரிலிருந்து வெளியேறி வந்தவர். அவரும் வயதுவந்த பெண்பிள்ளைகள் இருவரும் இருந்தனர். அவரை விசாரித்தேன். ஐயா ஏன் இந்தப் பகுதிக்கு வந்தீர்கள்? கொக்கட்டிச்சோலைப் பகுதி உங்களுக்குக் கிட்டத்தானே? இங்கே எனது சகோதரி வீட்டிற்கு வந்தேன். கலவரம் தொடங்கியபடியால் இங்கேயே தங்கிவிட்டேன். மட்டக்களப்பு நகரில் சிலர் வீடுகளில் தங்கியிருக்கி றார்கள்தானே? நீங்கள் ஏன் போக முயற்சிக்கவில்லை? பெண் பிள்ளைகள் உள்ள நாங்கள் அங்கே போகமுடியாது. இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையும் வாழ்க்கையில் தாங்கள் பெண்களையே காணாதவர்கள் மாதிரி வெறித்தனத்துடன் நடந்து கொள்கின்றார்கள். கற்பழிக்கப்படும் பெண்களை கொன்று விடுகிறார்கள். இப்படி பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் ஏதாவது அறிந்தீர்களா? என்று கேட்டதும் பெருமூச்செறிந்தார். இராணுவம் நகருக்குள்வந்து சில நாள் செல்ல வீட்டில் இருக்கும் சாப்பாட்டுச் சாமான்களை எடுப்பதற்கு நான் மட்டும் தனியே நகருகுள் போனேன். அன்று ஒரு சம்பவம் நடந்தது. மட்டக்களப்பு நகரிலிருந்து கல்லடிப் பாலம் வழியாக சைக்கிளில் ஒரு தந்தையும் மகளும் செல்ல முயன்றனர். பெரும்பாலும் மஞ்சத் தொடுவாய்ப் பக்கமாகத்தான் போகப்புறப்பட்டிருப்பார்கள். ஏனென்றால் காத்தான்குடியைத் தாண்டிப் போக முடியாது. தந்தைக்கு 50 வயதிருக்கும். மகளுக்கு 20 வயதிருக்கும். கல்லடிப்பாலத்தை நெருங்கியதும் இராணுவத்தினர் இவர்களைத் தடுத்து நிறுத்தினர். கொண்டுபோன பொருள்களை சோதித்ததும் மகளைக் கொண்டுபோய்ச் சோதிக்க வேண்டும் என்றனர்: தகப்பனோ மகளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார். கதறினார். அவரது கெஞ்சலையோ. கதறலையோ அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. கல்லடிப்பாலத்தடியில் தாங்கள் தங்கியிருந்த இடத்துக்குக் கொண்டுபோனார்கள். தகப்பனோ கதறிக்கொண்டேயிருந்தார். இவர் கதறும்போது இடையிடையே இவருக்கு அடியும் விழுந்தது. இவரோ தொடர்ந்து கதறிக்கொண்டிருந்தார். கடைசியில், ஒரு மணித்தியாலம் செல்ல மகளைக் காட்டுகிறோம் என்று கூட்டிக் கொண்டு போனார்கள். மகளின் நிலையைக் கண்டார் தந்தை. “என்ட மகளே” என்று கதறியபடியே கையை உயர்த்திக் கொண்டு திரும்பி வேகமாக ஓடி வந்தார். கல்லடிப்பாலத்தில் இராணுவத்தினர் மறித்தனர். அவர்களை விலக்கிவிட்டு ஆற்றில் குதித்தார். இதைத்தான் நாங்கள் கண்டோம். அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்ட இவரது உடலும், கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட, அலங்கோலமான நிலையிலிருந்த அவரது மகளின் சடலமும் ஆற்றங்கரையில் கரை ஒதுங்கினது என்றார். கல்லடிப் பாலத்தடியில் நின்று வாவியில் உள்ள மீன்களின் இனிமையான இசையைப் பலரும் செவிமடுப்பதுண்டு நிச்சயக்கமாக அன்றைய தினம் அந்த மீன்கள் ஆனந்த கீதம் இசைத்திருக்க மாட்டா. (தொடரும்)- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
நவம்பர் 26, 2005 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்கிலுள்ள சாக்கோட்டையில் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 51வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது.... 'தலைவர் புகழுரை ஆற்றும் தேசப்பற்றுள்ள ஐயா' ''மாவீரர் நினைவாலயத்தினுள் இருந்த திருவுருவப் படங்களுக்கு மலர்வணக்கம் செய்யும் பொதுமகன்'' 'ஒரு பெண்ணுக்கு ஆதரவாளர் ஒருவர் குதப்பித் துண்டு வழங்குகிறார்.' 'மாவீரர் நினைவாலயத்தினுள் இருந்த திருவுருவப் படங்களுக்கு மலர்வணக்கம் செய்யும் பொதுமக்கள்'- உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 15 18.11.1990 திரு. கருணா அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியற் பொறுப்பாளர் திரு கரிகாலன் அவர்கள் வந்து சேர்ந்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் திரு. மாத்தயாவுடன் மட்டக்களப்பு நிலைமைகள் பற்றிக் கலந்துரையாடினர். பல்வேறு முக்கியஸ்தர்களும் வந்து மாத்தயாவைச் சந்தித்தனர் அகதிகள் பற்றிய விடயங்களைக் கேள்வியுற்ற திரு. மாத்தயா இந்த விடயங்களை திரு. கிட்டு அவர்களுக்கு தெரியப்படுத்தி, அவர் மூலமாக இந்த விடயங்களை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டார். அத்துடன் அகதிகளின் நிலைமையை வீடியோவினாலும், புகைப்படக் கமராவினாலும் படமெடுத்து அவர்களின் அவலத்தை ஏனைய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறினார். மாத்தயாவின் வேண்டுகோளின்படி 2-10-90 அன்று பிற்பகல் 4 மணியளவில் அகதிகளின் நிலையைப் படமாக்கவும், அவர்களைப் பேட்டி கண்டு நிலைமைகளை அறியவும் ஒரு குழு புறப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசியற் பொறுப்பாளர் திரு. கரிகாலன் அவர்கள் இக்குழு வுக்குத் தலைமை தாங்கினார். லான்ட் குறோசரில் புறப்பட்ட இக்குழுவுடன் நானும் தொற்றிக் கொண்டேன். முதலில் வந்தாறு மூலையிலிருந்து ஐந்து மைல் தொலைவிலுள்ள பொத்தானை வடிச்சல் என்னும் பகுதியை அடைந்தோம். பொத்தானை என்னும் பகுதியில் உயரமான பகுதி பொத்தானைத்திடல் என்றும் அங்கிருந்து மழைநீர் வடிந்து ஆற்றுடன் சேரும் இந்தப் பகுதி பொத்தானை வடிச்சல் என்றும் அழைக்கப்படும் என அறிந்துகொண்டோம், அங்கே புதிதாகக் குடிசைகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பலர் காட்டை வெட்டி துப்பரவு செய்து கொண்டிருந்தனர். அகதிகளாக வருவோர் தண்ணீர் வசதியைக் கருத்திற்கொண்டு ஆற்றங்கரைகளை அண்டிய பகுதிகளாக தமது குடியிருப்புக்களை அமைத்துக்கொள் கிறார்கள் என்பதை உணர முடிந்தது. ஒரு வெட்டவெளியில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. முடி நரைத்து மூகம் காய்ந்த, ஒரு வயோதிபர் அங்கே காணப்பட்டார். மரநிழலில் ஒரு குழந்தை நிர்வாண நிலையில் படுத்திருந்தது. குழந்தை படுத்திருந்த சூழலை அவதானித்தேன். சாப்பாட்டில் ஈக்கள் மொய்த்துக் காணப்பட்டன. வயோதிபரிடம் "நீங்கள் எந்த ஊர் என்று கேட்டேன்." குடிசை அமைக்கும் வேலையைத் தொடர்ந்தவாறே 'வந்தாறு மூலை” என்றார். அவர்களின் நிலையைப் பார்த்த நான் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அங்கிருந்த ஒரு இளைஞரிடம் இங்கு எத்தனை குடும்பங்கள் உண்டு? என்றேன். "பதினைத்து என்றார். காடும் பற்றைகளும், ஆறும் சேர்ந்த இந்த இடம் நுளம்புகளின் உற்பத்தி ஸ்தாபனம் ஆக விளங்கும். இங்கு எப்படித் தான் இருக்கிறார்களோ? என்று நினைத்தபடியே புறப்பட்டேன். அப்போது எனக்குத் தெரிய வில்லை இது சாதாரண காட்சி. இனிக் காணப் போகும் காட்சிகள் இதைவிட அவலமான காட்சிகள் என்று' சாரதியின் ஆசனத்தில் இருந்த கரிகாலனிடம் சென்றேன். இந்த இடத்தில் இப்படி இருக்கின்றார்களே இங்கு மலேரியா போன்ற நோய்கள் தொற்ற வாய்ப்பு உண்டல்லவா? என்று கேட்டேன். “இந்த நிலையைப் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இனிவரும் காலம் மழைக்காலமாகும் அந்தக் காலத்தில் இந்த மக்கள் இன்னும் துயரத்தைச் சந்திக்கப் போகிறார்கள்” என்று வேதனையுடன் கூறியவாறே லாண்ட்குறோசரை செலுத் தொடங்கினார். மைலவட்டவான் என்ற பகுதியை அடைந்தோம். தூரத்தில் இருந்து பார்த்த போது திருவிழாக் கூட்டம் போல் தெரிந்தது. எனக்கு புதினமாக இருந்தது. ஏனென்றால் நான் ஏற்கனவே இந்த வீதிகளால் பயணம் செய்தவன். வயல்வேலைகள் நடைபெறும் காலம் தவிர ஏனைய காலங்களில் இந்த வீதியில் சனநடமாட்டத்தைக் காணமுடியாது. எப்போதாவது ஓரிரு சைக்கிள்கள் வரும். அப்படியான இந்தப் பகுதி சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதுதான் மைலவட்டவான் வேல்ட் மாக்கற் (உலகச்சந்தை) என்றார் கரிகாலன். பிரபலமான ஆலயத் திருவிழாவின்போது கடைகள் எவ்வாறு காணப்படுமோ அப்படியிருந்தது. வீதியின் இருமருங்கும் எண்ணற்ற கடைகள் முளைத்திருந்தன. சைக்கிள் கடைகள், ரொட்டிக் கடைகள், சலூன், மீன்- கருவாட்டுக் கடைகள், மரக்கறிக்கடைகள், பலசரக்குக்கடைகள் என பல கடைகளும் காணப்பட்டன. இந்தப் புதிய சந்தையை அண்டிய ஒரு குடிசையை நோக்கிப் போனோம். ஒருமாமரத்தின் கீழ் சிலர் இருந்தார்கள். அவர்களை நெருங்கினோம். கையில் கைக் குழந்தையுடன் இளம் ஒரு பெண் இருந்தார். வெறித்த பார்வை. 'அக்கா உங்கள் கணவர் எங்கே?'' என்றேன். நிமிர்ந்து பார்த்தார். கண்ணீர் பொலபொலவெனக் கொட் டியது. 'கொள்ளையிலபோவானுகள் கொண்டு போயிட்டானுகளே" என்று அருகில் இருந்த ஒரு கிழவி ஓலமிட் டாள். இவர்கள் ஏதோ விதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உடன் புரிந்து கொண்டேன். அந்தக் கைக்குழந்தையை கவனித்தேன். அதிர்ச் சியாக இருந்தது எனக்கு. பல சர்வதேச சஞ்சிகைகளில் பார்த்த அவலத்துக்கு எடுத்துக்காட்டான குழந்தைகளை ஒத்த அந்தக் குழந்தையின் தோற்றம். மெலிந்து, கறுத்து பார்க்கப்பயங்கரமான, தலைக்கேற்ற உடல் அமையாத... அதை வார்த்தையில் வர்ணிப்பது கஷ்டம். எதியோப்பியா அல்லது பயாவ் றாவில் தான் நிற்கிறோமோ என்று கூட எண்ணினேன். கிழக்கின் முழு அவலத்துக்கும் இந்தக் குழந்தையின் உருவம் ஒன்றே போதும் நானும் ஒரு குழந்தையின் தந்தை என்பதால்தானோ என்னவோ இந்தக்காட்சி என்னை மிகவும் பாதித்தது. அன்றிரவு முழுக்க அந்தக் குழந்தையின் தோற்றம் நெஞ்சைப் பிசைந்தது. (தொடரும்)- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம் கிளிநொச்சி காலம்: 2002-2006- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
1970 களில் யாழ் மாவட்டத்தோடு, ஏனைய தமிழ் மாவட்ட கல்வி நிலை, 2025 இன் நிலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்த கருத்து பிழை என்பது புரியும். மலையகத்தில் 16 வயதுக்கு பின் கொழுந்து பறிக்க அல்லது கொழும்பு போய், ஆட்டோ ஓட்ட அல்லது கடையில் நிற்க என “தயாரிக்கபடும்” கல்வியை விட யாழ்பாணத்தில் ஹொஸ்டலில் தங்கி, நல்ல ஆசிரியர்களிடம் கற்கும் போது அதே மாணவன் ஒரு டாக்டர் ஆகாவிடினும் கம்பெளண்டர் ஆவது ஆகலாம். அந்த கம்பெளண்டரின் மகன் நாளை டாக்டர் ஆகலாம். இதைதான் social mobility என்பார்கள். இதுவும் புலம்பெயர் தேசத்தில் நாம் அடைந்ததுதான். இது பிரதேசவாதம் இல்லை… நிலப்பரப்பின் பால்பட்டு ஒரு குறித்த மக்கட் தொகையினரின் சக்கு பிடித்த சிந்தனையை உள்ளது உள்ளபடியே சொல்வது. நிழல் அரசு - அது ஒரு இந்த சக்கு பிடித்த சிந்தனை துளியும் இல்லாத, அதை வெறுத்த ஒரு அற்புதமான தலைவரினதும், அவர் பின்னால் திரண்ட அதிசயபிறவிகளினதும் பெறுபேறு. அவர்கள் காலத்தில் இந்த சக்குபிடித்த்ஃ சிந்தனை கொஞ்சம் முகிழ்த்திருந்தது. அவர்களுக்கு முன்பும், பின்பும் எழும்பி ஆடுகிறது.- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஓ…நீங்களும் காவடியை தூக்கி விட்டீர்கள்😂. என்ன செய்வது தர்க்கம் என்று வந்தால் எதையாவது ஒப்பிக்க வேண்டுமே. ஜேவிபி வட கிழக்கு தமிழர்களுக்கு அரசியல் உரிமை எதையும் தராது என்பது எவ்வளவு நிகரான அதே அளவு நிதர்சனம் மலையக மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்காது என்பதும். நீங்கள் ஏன் மனோ, சுமனில் தொங்குகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. இருவரும் சும்மா லுலுலுலா கதைதான் என்பதை நான் முதல் பதிவிலே சொல்லி விட்டேன். ஆனால் அவர்கள் சொன்ன விடயம்தான் முக்கியம். ஆட்களை விட்டு விட்டு, கொள்கையை அதன் சாதக பாதகங்களை அலசுங்கள். அது நாம் அவர்களை சுரண்டினால். வடக்கு தமிழர் சுரண்டல் போக்கிரிகள் என்கிறீர்களா? அப்படி இருக்க கூடாது என்பது என் வாதம்.- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அப்படி இல்லை, வன்னியில், கிழக்கிலங்கையில் எத்தனையோ ஏழைபட்ட மக்களுக்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. நான் மேலே சொன்ன விடயத்தை ஒரு பத்து ஊர் சங்கங்கள், பத்து பாடசாலை அமைப்புகள் ஒரு சம்மேளனமாக திரண்டு செய்ய முடியும். பதாகை வைத்து, தம்பட்டம் அடித்து செய்யாமல் - பேரினவாதிகள் கண்ணை குத்தாத வகையில் - பயணாளர் தெரிவில் கொஞ்சம் கெட்டிக்காரத்தனமாக இருந்தே இதை செய்யலாம். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை மிக சுலபமாக தனியார் நிறுவனக்கள் செய்யலாம். நாம் வேலைக்கு எடுக்கும் 2/10 பேர் மலையக ஆளாக இருக்க வேண்டும் என ஒரு எழுதா விதியை, பெரிய, மத்திய வடக்கு வியாபார அமைப்புகள் கடைப்பிடித்தாலே போதும். நினைவூட்டல்: இஸ்ரேல் தேசமாக முன்பே, உலகெங்கும் உள்ள யூதர்களை கிபுட்ஸ் பண்ணைகள் என நிலத்தை அரபிகளிடம் வாங்கி குடியேற்ற தொடங்கி விட்டான் யூதன். இந்த எண்ணிக்கை பலம் - பின்னாளில் இஸ்ரேஸ் அமைவதை இலகுவாக்கிய காரணிகளில் ஒன்று. இதை எழுதும் போது சிரிக்காமல்தான் எழுதினீர்களா? எந்த அரசு தமிழர் நலனை அதன் கடமையை சரிவர செய்யும் என்கிறீர்கள் ? இலங்கை அரசு? அவர்களின் அரசியல் கட்சிகள் - நவீன கங்காணிகள். இவர்கள் தோட்டத்தை விட்டு வெளிக்கிட்டால் அவர்கள் ஆட்டம் குளோஸ். ஆகவே தம் தலையில் அவர்கள் மண்ணை அள்ளி போடமாட்டர்கள். மனோவின் பேச்சுக்கு இதொகவில் இருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது.- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கிழக்கு மக்களுக்கு சுமந்திரன் யார்,எப்படிப்பட்டவர் என தெரியும்.அவர் சும்மா அலட்டுவதையெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டார்கள். சுமந்திரம் இப்போது எம்பியும் இல்லை,தும்பியும் இல்லை. அவரை தூக்கி பிடிப்பது உங்களைப்போன்றவர்கள் மட்டுமே. அங்கே கருணாவை கூட ஒதுக்கித்தான் வைத்துள்ளார்கள்.- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
எல்லாம் சரிதான். அவர்கள் சொல்வதும் சரிதான். அதே போல் நீங்கள் சொல்வதும் சரிதான். இதை யார் தலைமையில் முன்னெடுப்பது? எப்படியான சட்ட திட்டங்களில் இதை செய்ய முடியும் என்றாவது நீங்கள் சொல்ல வேண்டும். ஒரு நிதர்சனமான வழியை காட்டினால் மாற்றுக்கருத்துக்கள் வராது என நான் நினைக்கின்றேன். மலையக தமிழர்களின் வாழ்வை வைத்து பட்டிமன்றம் நிகழ்த்த தேவையில்லை என்பது என் கருத்து. மலையக தமிழர்களின் வாழ்வு செழிக்க வேண்டும் என்பது அனைவரின் நோக்கம் என்பது புரிகின்றது.அது அவர்களை வடக்கில் குடியேற்றுவதன் மூலம் நிவர்த்தி பெறுமா என்பது முக்கிய விடயம்.மற்றும் படி தமிழர் பெரும்பான்மை சரி. இப்போது கேள்வி என்னவென்றால் அனைவரும் தமிழர் பெரும்பான்மைக்கு சார்பாக இருப்பார்களா? இன்றைய அரசியல் நிலவரத்தின் படி பார்த்தாலும் இந்த யாழ்களத்தில் கூட அரசியல் ஒற்றுமை இல்லை.அப்படியிருக்க நாளைய ஈழ அரசியலை பற்றி நீங்கள் எப்படி எதிர்வு கூறமுடியும்?Important Information
By using this site, you agree to our Terms of Use.
- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.