stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 முதல் – ஜனாதிபதி
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்! 08 Jan, 2026 | 03:01 PM ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனய, சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதீகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. https://www.virakesari.lk/article/235515- காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்!
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி ஒருவர் பரப்பிய ஒரு படத்தைக் கூடச் சரி பார்க்காமல் அப்படியே இணையத்தில் இருந்து உருவிப் போட்டிருக்கிறது குளோபல் "ரொய்லெற்" ஊடகம்😂! பின்னணி: சிலியா மதுரோவின் முகத்தில் உராய்வுக் காயங்கள் (bruises) இருந்து உண்மை. கைதின் போது அவை ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் போலிப் படத்தில் இருப்பது போல அடி காயங்கள் இருக்கவில்லை. அவர் இவ்வாறு கோர்ட் சூட் அணிந்து நியூயோர்க் நீதிமன்றில் ஆஜராகவும் இல்லை! LatestLYDid Cilia Flores, Wife of Venezuela Leader Nicolas Maduro...A viral photo of Cilia Flores, the wife of Venezuela leader Nicolas Maduro, appearing in the New York court with bruises around her eye and a bandage on her forehead has surfaced on social media, spar- இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள்
இன்று மாலை 5.05 மணியளவில் உடுதும்பர பகுதியில் 2.2 ரிக்டர் அளவுகோலில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.. Rj.Chandru Report- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இதற்குப் பதிலாக என்ன வழங்கப்படும்? திருகோணமலை?- இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள்
- கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம்.
இதென்ன பேய்க்குப் பதிலாக பிசாசா?- இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?
இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன? பட மூலாதாரம்,MET.DEPARTMENT (SRI LANKA) கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 52 நிமிடங்களுக்கு முன்னர் திட்வா புயலின் பாதிப்புகளில் இருந்து இலங்கை மக்கள் இன்னமும் மீண்டு வராத நிலையில், நாட்டில் மீண்டுமொரு அனர்த்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாக வானிலை அவதானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இலங்கையை அண்மித்துள்ள வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாகவே இந்த அனர்த்த அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது. தாழமுக்க நிலைமையானது, பொத்துவில் பகுதியில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (ஜனவரி 08) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதைக் குறிப்பிட்டார். ''இலங்கையை அண்மித்து ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமையானது, தற்போது வலுவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த தாழமுக்கமானது, இலங்கையின் கிழக்கு கரையோர பகுதியான பொத்துவில் பிரதேசத்தில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையாக நிலைகொண்டுள்ளது'' என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க குறிப்பிடுகின்றார். இந்தத் தாழமுக்கமானது, படிப்படியாக கிழக்கு கரையோரத்தை நோக்கி நகர்ந்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறுகின்றார். ''இது தாழமுக்கமாகவே தற்போது வரை காணப்படுகின்றது. இன்று முதல் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என்பதை நாங்கள் ஏற்கெனவே கூறியிருக்கின்றோம். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலேயே அதிகளவான மழை வீழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானில் மேக மூட்டங்கள் காணப்படும். ஏனைய பகுதிகளில் 50 முதல் 75 மீல்லிமீட்டர் வரையான மழை வீழ்ச்சி இன்றைய தினத்தில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வானிலை நிலைமையால், நாட்டிற்குள் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும்'' என அவர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,MET.DEPARTMENT (SRI LANKA) இந்தத் தாழமுக்கமானது, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு திசையாகப் பயணித்து கிழக்கு கரையோரப் பகுதியை அண்மிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது, எதிர்வரும் 12 மணிநேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது. மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான காலி வரையான கரையோர பகுதிகளில் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்படுகின்றது. அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கரையோரப் பகுதிகளிலும் சில சந்தர்ப்பங்களில் இடைக்கிடை இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது. நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகமானது 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், நாட்டைச் சூழவுள்ள சில கரையோரப் பகுதிகளில் கடல் அலை 2 முதல் 3 மீட்டர் வரை உயர்ந்து, சற்று சீற்றத்துடன் காணப்படும் எனக் கூறப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் கடல்சார் தொழிலாளர்கள் கடல் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரித்து வீசுகின்றமையினால், மரங்களின் கிளைகள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், கூரை தகடுகள் காற்றில் அள்ளுண்டு செல்லும் அபாயமும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,DEPARTMENT OF INFORMATION படக்குறிப்பு,வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தாழமுக்கம் புயலாக மாறுமா? இலங்கையின் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமையானது, புயலாக மாறும் நிலைமை தற்போதைய சூழ்நிலையில் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார். ''இந்தத் தாழமுக்க நிலைமையானது, தற்போதுள்ள ஆய்வுகளின் ஊடாகப் பாரிய புயலாக மாறும் நிலைமை ஏற்படும் சாத்தியம் இல்லை எனத் தென்படுகின்றது. அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. எனினும், வலுவான தாழமுக்கமாக நாட்டின் நிலப் பரப்பிற்குள் நாளைய தினத்தில் இது பிரவேசிக்கும் பட்சத்தில், மழையுடனான வானிலையில் கடுமையான அதிகரிப்பு ஏற்படும்'' என அவர் கூறுகின்றார். கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் சுமார் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். இவ்வாறு கணிப்பிடப்பட்டுள்ள 150 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியானது, சில சந்தர்ப்பங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியாகப் பதிவாகக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார். நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மீல்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி நாளைய தினத்தில் பதிவாகும் என அவர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,Getty Images நாட்டின் நிலப்பரப்பிற்குள் இந்தத் தாழமுக்கம் பிரவேசித்ததை அடுத்து, நாளை மறுதினம் (ஜனவரி 10) முதல் மழை சற்று குறைவடைந்து பெய்யும் என அவர் கூறுகின்றார். எனினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை அன்றைய காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியும் என அவர் எதிர்வு கூறுகின்றார். இவ்வாறான நிலையில், எதிர்வரும் ஜனவரி 11ம் தேதிக்குப் பின்னர் இந்தத் தாழமுக்கம் முழுமையாக வலுவிழந்து, பாதிப்புகள் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார். வெள்ளப் பெருக்கு அபாயம் இலங்கையிலுள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில், 25 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் விஞ்ஞான மற்றும் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவிக்கின்றார். மத்திய தரத்திலுள்ள 24 நீர்த்தேக்கங்களிலுள்ள வான் கதவுகள் திறக்கப்பட்டு, நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார். ''மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதுருஓயா மற்றும் முந்தனியாறு நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. யாங்ஓயா மற்றும் பதவி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கப்பட்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, நீர் விடுவிக்கப்பட்டு வருகின்றன.'' என்கிறார் எல்.எஸ்.சூரியபண்டார. பட மூலாதாரம்,DEPARTMENT OF INFORMATION படக்குறிப்பு,நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் விஞ்ஞான மற்றும் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார ''குறிப்பாக பராக்கிரம சமுத்திரம், கவ்டுல்ல நீர்த்தேக்கங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருகின்றோம். வானிலை அவதானிப்புகளின் பிரகாரம், அதிகளவிலான மழை வீழ்ச்சி ஒரே சந்தர்ப்பத்தில் பதிவாகும் பட்சத்தில், நீர்மட்டம் சடுதியாக அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன" என எல்.எஸ்.சூரியபண்டார குறிப்பிடுகின்றார். அதனால், "அம்பாறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனால், குறித்த பகுதிகளில் நீர்நிலைகளை அண்மித்து தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. பட மூலாதாரம்,NBRO படக்குறிப்பு,தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர மண்சரிவு அபாய எச்சரிக்கை இலங்கையை அண்மித்து நிலைகொண்டுள்ள தாழமுக்க நிலைமையை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவிக்கின்றார். இதன்படி, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பகுதிக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தன்தாஹின்ன, வலபனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,DEPARTMENT OF INFORMATION படக்குறிப்பு,இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவசர அனர்த்தங்களின் போது என்ன செய்வது? திடீர் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், அது குறித்து உடனடியாக அறிவிப்பதற்காக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற தொலைபேசி இலக்கத்தை 24 மணிநேரமும் செயற்பாட்டில் வைத்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவிக்கின்றார். ''அவசர அனர்த்த மத்திய நிலையம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் 80 குழுக்களும், கடற்படையின் 16 மீட்புக் குழுக்களும், விமானப்படையின் 66 மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களில், அதில் பயணிக்கக்கூடிய வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. அவசர நிலைகளில் உதவிகளைச் செய்வதற்காக விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ளும் வகையில் தம்முடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்'' என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவிக்கின்றார். இலங்கையில் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cevnxerddy1o- புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை
சாதனை படைத்தது கொழும்பு பங்குச் சந்தை Jan 8, 2026 - 05:42 PM பங்குச் சந்தையின் இன்றைய (8) வர்த்தக நாளின் சந்தை மொத்த புரள்வானது 12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. அதற்கமைய கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 233.28 புள்ளிகள் அதிகரித்து 23,527.13 புள்ளிகளாக முடிவடைந்தது. இன்று S&P SL20 சுட்டெண் 94.18 புள்ளிகள் உயர்ந்து 6,458.03 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmk5eq6st03oxo29n4kke0bnj- Today
- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அவரால் இந்தியாவை எதிர்த்து, இந்தியா ஈழத்தமிழர்களுக்குச் செய்த அக்கிரமத்தைக் கூற முடியுமா? 1987 ஆம் ஆண்டிலிருந்து இந்திய சாத்தான்கள் 1990 இல் வெளியேறும்வரை மண்டையன் குழு எனும் கொலைப்படையினை நடத்தி, ஆயிரக்கணக்கான தமிழர்களின் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் எப்படி இந்தியாவைக் குறை கூறுவார். இந்தியாவிற்கு வெள்ளையடிப்பதே அவரது ஒரே பணி. இங்கு வசி இந்தியா செய்தவற்றை மறந்துவிட்டு, விட்டுக் கொடுத்துப் போங்கள் என்று சொல்லும்போது, இந்தியாவின் கொலைப்படையாக வலம்வந்த பிரேமச்சந்திரன் நிச்சயம் இந்தியா தமிழருக்கு எந்த அநியாயத்தையும் செய்யவில்லை என்று கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்வதில் வியப்பில்லை.- கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம்.
யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றப்பட்டது 08 Jan, 2026 | 02:24 PM யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில் , தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் "கந்தரோடை விகாரை" என திசை காட்டும் பெயர் பலகை நடாத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கந்தரோடை விகாரைகள் அமையப்பெற்றுள்ளதாக கூறப்படும் , புராதன இடத்தினை , " தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து வீதிகளில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றும் செயற்பாட்டை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சுன்னாகம் பகுதியில் நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. அதேவேளை , குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235509- இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி இலங்கை வருகிறார்
இந்திய இராணுவத் தளபதி - பாதுகாப்புப் பிரதியமைச்சர் சந்திப்பு Jan 8, 2026 - 12:56 PM இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று (06) நாட்டை வந்தடைந்திருந்தனர். பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதியை, பிரதியமைச்சர் அருண ஜயசேகர மிக அன்புடன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அயல் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும் வரலாற்று, கலாசார மற்றும் நாகரிக ரீதியிலான தொடர்புகளை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டனர். https://adaderanatamil.lk/news/cmk54iib803oko29n1gqb5a6t- “விஜய்யை எதிர்கொண்டு நிரூபியுங்கள்!” - ‘ஜனநாயகன்’ சர்ச்சையில் மோடிக்கு தமிழக காங்கிரஸ் சவால்
சென்னை: “நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு கூற்றை நிரூபியுங்கள்” என பிரதமர் மோடிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை குறி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்யின் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம். பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்றும், தணிக்கை வாரியத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தவெகவுடன் தமிழக காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் சூழலில், ‘ஜனநாயகன்’ தணிக்கை பிரச்சினையில் தமிழக் காங்கிரஸ் கட்சியினர் விஜய்க்கு அழுத்தமாக குரல் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது. “விஜய்யை எதிர்கொண்டு நிரூபியுங்கள்!” - ‘ஜனநாயகன்’ சர்ச்சையில் மோடிக்கு தமிழக காங்கிரஸ் சவால்- முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா
07 Jan, 2026 | 05:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் எனக்கு பக்கத்தில் வலது பக்கமாக அமர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள், இல்லையேல் தொடர்ந்தும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தன்னால் பொறுப்புக் கூற முடியாது. ஒழுக்கமற்ற வகையில் பேசும் அவருக்கு பக்கம் என்னால் அமரமுடியாது என யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவர் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் தகாத மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை செய்துள்ளமை தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பிப்பதாகவும், இதன்படி கடந்த டிசம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்கு தவறாக வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி ஒருமையில் மிகக் கேவலமாகவும், பொதுமக்களால் கேட்க முடியாதவாறு வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தி தன்னை இழிவாக பேசியதாகவும் சபையில் முறையிட்டார். முறைப்பாட்டை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னை கேவலமாக பேசினார். பாராளுமன்றத்தில் அவருக்கு அருகில் எனது ஆசனம் இருப்பது தொடர்பிலும் பேசினார். இது பாராளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்களிடையே தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் அமைந்துள்ளது . இதனால் இன்றில் இருந்து எனது ஆசனத்திற்கு வலது பக்கத்தில் அமைந்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். தொடர்ந்தும் இவர் தனது வலது பக்கத்தில் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்புக்கூற முடியாது. இதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான ஒழுக்காற்று குழுவில் அங்கம் வகிப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தகுதியற்றவர்.இதனால் அந்தக் குழுவில் இருந்தும் அவரை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா | Virakesari.lk- கவனிப்பாரற்றிருந்த நிலாவரை கிணறு துப்புரவு
நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதியில் துப்புரவுப் பணிகள்! 08 Jan, 2026 | 03:13 PM நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக சமூக வலைத்தளம், ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக துப்புரவுப் பணிகள் நடைபெற்றுள்ளன. காலாகாலமாக பிரதேச சபையினால் நிலாவரை கிணறு உள்ளிட்ட பகுதிகள் சபையின் சொத்தாக பராமரிக்கப்பட்டன. பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எல்லை மதில்கள் அமைக்கப்பட்டு ஆழமற்ற கிணற்றினைச் சுற்றி பாதுகாப்பு, உலோக வேலிகள், பிரதேசத்தினை அழகுபடுத்தும் மின்குமிழ்கள், பார்வையாளர் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு திறன்பட வலயம் முகாமை செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் தமிழ் மக்களின் வரலாறும் தொன்மையும் எடுத்தியம்பப்பட்டு வந்தது. 2021 ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று தடவைகள் பூசகமான முறையில் இராணுவத்தினருடன் இணைந்து தொல்லியல் திணைக்களம் அத்திவாரம் வெட்டியது. அம் முயற்சி பௌத்த சிங்கள பேரினவாத நோக்கில் விகாரை அமைக்கும் முயற்சியென குற்றஞ்சாட்டப்பட்டது. அந்நிலையில், அப்போதும் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஷ் அவற்றை தடுத்திருந்தார். இதனையடுத்து அவர் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு இடையூறு விளைவித்தாகத் குற்றச்சாட்டில் தவிசாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழக்கினை எதிர்கொண்டதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ் வழக்குகள் பின்னர் சட்டா அதிபரின் ஆலோசனைக்காக தற்போது அனுப்பப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உள்நுழைபவர்களுக்கான கட்டண அறவீடு தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தினால் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறான காரணங்களினால் சபை பதவியிழந்த பின்பு பிரதேச சபையினால் குறித்த பகுதியில் செயற்பட முடியவில்லை. அதனால் அப் பிரதேசம் கழிவுகளாலும் பற்றைகளினாலும் மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுக் காணப்பட்டது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் காட்டமான கண்டனங்கள் அண்மைய நாட்களாக வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , சபை உறுப்பினரும் குழுத்தலைவருமான அ.கமலறேகன், பணியாளர்கள், பிரதேச மக்கள் இணைந்து குறித்த பகுதியை நேற்று புதன்கிழமை (7) துப்புரவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சபையின் சொத்தாக உடைவடைந்த நிலையில் உள்ள இருக்கைகள், நுழைவாயில் கதவு போன்றன திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. பெயர்ப் பலகையிடப்பட்டுள்ளதுடன் பொலித்தீன் தடை மற்றும் சுத்தத்தினைப் பேணுவதற்கான விளம்பர பலகைகளும் பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ளன. நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதியில் துப்புரவுப் பணிகள்! | Virakesari.lk- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
08 Jan, 2026 | 04:58 PM அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 10 ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த 10 ஹெலிகொப்டர்களும் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான Bell 206 SEA RANGER ரக ஹெலிகொப்டர்களே இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது. திட்வா பேரிடரின் போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்கள் மிகவும் உதவியது. இந்த 10 ஹெலிகொப்டர்களும் இலங்கை விமானப்படையையும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும் எனவும் நம்பப்படுகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்! | Virakesari.lk- சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து
08 Jan, 2026 | 04:17 PM இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவருடைய பாரியார் திருமதி சுனிதா திவேதி இருவரும் சீதையம்மன் ஆலயத்திற்கு வியாழக்கிழமை (08) விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள இருந்த நிலையில் நுவரெலியாவில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டது. இந்திய இராணுவத் தளபதி உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா நகர சபை மைதானத்திற்கு வருகை தந்து அங்கிருந்து விசேட வாகனம் ஊடாக சீத்தாஎலிய செல்வதற்கான ஏற்பாடுகள்; செய்யப்பட்டீரந்த நிலையில் காலநிலை சீர்கேடு காரணமாகவும் குறிப்பாக முகில் கூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால் உலங்கு வானூர்தி தறை இறங்குவதற்கான அனுமதியை இலங்கையின் ஆகாயப்படை தரப்பினர் வழங்க மறுத்தமை காரணமாக இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டது. இந்திய இராணுவ தளபதி சார்பாக வருகை தந்திருந்து ஏ.வி.குருமூர்த்தி இந்த பூஜை வழிபாடுகளில் பங்கு பற்றியதுடன் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உட்சவ மூர்த்தி திருவுருவச் சிலையும் மற்றும் இந்தியாவின் அயோத்தி நகரின் சரயு நிதியில் பெறப்பட்ட புனித நீரும் ஆலய நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையிலான நிர்வாக சபையினரிடம் கொழும்பு இந்திய தூதவராலயத்தின் அதிகாரி ஏ.வி.குருமூர்த்தனால் கையளிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன். இந்திய இராணுவத்தளபதியின் வருகை காலநிலை காரணமாக சாத்தியப்படாமல் போய்விட்டது.ஆனாலும் நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தோம். அதேபோன்று இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை வழங்கி வருகின்ற ஒத்துழைப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் விசேட பேரிடரின் பின்பு இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக இலங்கைக்கு வருகை தந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாதைகளை மீள கட்டியெழுப்புவதற்கும் மேலும் நிவாரண பணிகளில் ஈடுபட்டமைக்கும் உயிரிழந்தவர்களை கண்டு பிடிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்து செய்த சேவைக்காகவும் யஎங்களுடைய நாட்டின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் எங்களுடைய நாட்டை கட்டியெழுப்புவதற்கு தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும்.விசேடமாக பாரிய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இரயில்வே பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்ய முடியுமாக இருந்தால் அதன் மூலமாக எங்களுடைய உல்லாச பயணத்துறை வளர்ச்சியடைவதன் மூலமாக எங்களுடைய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பு முடியும் எனவும் குறிப்பிட்டார். ஆலய நிர்வாக சபையினரால் இந்திய இராணுவ தளபதிக்கு அவருடைய வருகையை முன்னிட்டு வழங்கப்படவிருந்த விசேட நினைவுச் சின்னத்தை இந்திய தூதரக அதிகாரியிடம் கையளித்தனர். சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து | Virakesari.lk- இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள்
08 Jan, 2026 | 06:21 PM வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இது தொடர்ச்சியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.ஆரம்பத்தில் மாதிரிகளிடையே அதன் நகர்வுப் பாதை தொடர்பில் ஒருமித்த கருத்து காணப்பட்டது. ஆனால் தற்போது மாதிரிகள் இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வியாழக்கிழமை (8) மாலை 5.30 மணி எதிர்வுகூறியுள்ளதன்படி, வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இது தொடர்ச்சியாக மேற்கு, வடமேற்கு, திசை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் மாதிரிகளிடையே அதன் நகர்வுப் பாதை தொடர்பில் ஒருமித்த கருத்து காணப்பட்டது. ஆனால் தற்போது மாதிரிகள் இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டுகின்றது. நகர்வு 1. ஏற்கனவே இருந்தது போன்று இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து பின் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அதன் பின்னர் எதிர்வரும் 10.01.2026 அன்று மாலை மன்னார் வளைகுடா கடற்பகுதிக்குள் பிரவேசித்தல். நகர்வு 2. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கும் அம்பாந்தோட்டைக்கும் இடையில் நிலப்பகுதிக்குள் எதிர்வரும் 09.01.2026 அன்று இரவு அல்லது 10.01.2026 அன்று அதிகாலை பிரவேசித்தல். நகர்வு 1இன் ஊடாக பயணித்தால் வடக்கு மாகாணம் நான் முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 12.01.2026 வரை மிக மிக கனமழையைப் பெறும் (04 நாள் திரட்டிய மழை வீழ்ச்சி 600 மில்லிமீட்டரை விட அதிகம்). நகர்வு 2இன் ஊடாக பயணித்தால் வடக்கு மாகாணம் கனமான (200 மி.மீ. திரட்டிய மழை வீழ்ச்சியைப் பெறும்). ஆனால் கிழக்கு மாகாணம் எதிர்வரும் 13.01.2026 வரை ( 05 நாட்கள்) 350 மி.மீ.இனை விட கூடுதலான திரட்டிய மழைவீழ்ச்சியைப் பெறும். நகர்வு 2இன் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்தால் மத்திய மாகாணம் ஊவா மாகாணம் என்பன 300 மி.மீ. இனை விட கூடுதலாக திரட்டிய மழை வீழ்ச்சியைப் பெறும். ஆனால் நகர்வு 1ஐ விட நகர்வு 2 இலங்கைக்கு குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய சப்ரகமுவா, வட மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மீளவும் பாதிப்பை ஏற்படுத்தும். நகர்வு 2இன் மையப் பகுதியாக மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் அமையும் என்பதனால் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் குறிப்பாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களில் நிலச்சரிவு நிகழவுகளுக்கான அதிகூடிய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், இந்த நிகழ்வின் நகர்வு பற்றிய இறுதி முடிவை நாளை (09.01.2026) காலையே தீர்மானிக்க முடியும். நகர்வு 2 உறுதியானால் மீளவும் மலையகத்தின் பல பகுதிகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும். ஆகவே இது தொடர்பாக மிக மிக முன்னெச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பான விபரங்கள் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும் என நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள் | Virakesari.lk- பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்!
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கப்படும் - பிமல் ரத்நாயக்க. 08 Jan, 2026 | 04:55 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு,பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய முன்னுரிமை வழங்கப்படும் என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அடுத்த பாராளுமன்ற அமர்வு வார நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் இந்த வாரத்தில் நடத்தப்படாமல் இருப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) எதிர்க்கட்சி பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் இரண்டு முக்கிய சட்டமூலங்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்தால் அதனை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டும். இதனாலும் அதேபோன்று நீங்கள் இப்போது நம்பிக்கையில்லா பிரேரரணையொன்றுக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின்படி அதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது. இதனால் இந்த நேரத்தில் இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வு நடவடிக்கை தொடர்பான குழுக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழமையாக வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் இந்த கூட்டம் நடத்தப்படும். ஆனால் நான் குறிப்பிட்ட காரணங்களால் இந்த வாரத்தில் குறித்த கூட்டம் நடத்தப்படாது. எவ்வாறாயினும் அடுத்த அமர்வு வாரத்திற்கான விவாதங்களுக்குத் தயாராவதற்கு உறுப்பினர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில், பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான கூட்டம் விரைவில் திட்டமிடப்படும் என்றார். கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கப்படும் - பிமல் ரத்நாயக்க | Virakesari.lk- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அண்மையில் சுரேஸ் பிரேமசந்திரன் வழங்கிய ஒரு செவ்வியில் “இறுதி யுத்தத்திற்கும் இந்தியாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். தமிழர்களுக்கு சேவை செய்ய என்று இன்னமும் முன்னணியில் நிற்கும் இவர்களை எண்ணி மிகவும் வருத்தமாக இருந்தது. இறுதியில் அமெரிக்காவின் பங்கும் கூடுதலாக இருந்தது.- இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு!
யார் கொடுத்த சாபமோ வட இந்தியர்கள் போற உலக நாடெல்லாம் வாங்கி கட்டுகிறார்கள் .- முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏராளன் நிதியை கையாளும் விதம் மிகவும் சிறந்த முறை ஒரு உதவித்தட்டம் செயற்படுத்தும் வேளை அந்த வேலைத் திட்டத்தின் செயற்பாட்டைக் கண்காணித்து அந்த பிரதேசத்தின் பணிமனை யில் இருக்கும் அபிவிருத்தி தொடர்பான உத்தியோகத்தரின் அறிவுறுத்தலின்படியே நிதி ஏராளனால் விடுவிக்கப்படும் . இப்படியாக நிதி விடுவிக்கப்படும் நேரத்தில் பயனாளர் பக்கமும் உதவி செய்யும் எங்கள் பக்கமும் நிதியைக் கையாளும் ஏராளன் பக்கமும் உண்மைத் தன்மையும் வெளிப்படையான நிதி பரிமாற்றமும் தெரியவரும் சிறப்பான வழிமுறை ஆகவே இதற்கு இன்னுமொரு நிதிப் பொறுப்பாளர் தேவை இல்லை என்பது எனது கணிப்பு . முன்னோடி அடிப்படை வசதித் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் மொத்த நிதியும் சேரும் வரை காத்திருக்காமல் ஒருவருடைய தேவையை நிறைவேற்றத் தேவையான நிதி கிடைத்தவுடன் ஆரம்பித்து வைக்கலாம் என்பது எனது கணிப்பு 1.குமாரசாமி அண்ணா உதவி செய்யும் திட்டம் அது எதுவென அவர் விரும்பினால் இங்கே தெரியப்படுத்தலாம் 2.பொன்னாலை திட்டம் 3.சுழிபுரம் அல்லது காரைநகரில் ஒருவருடைய தேயைப் பூர்த்தி செய்தல் 4. இன்னுமொருவருடைய தேவையை பூர்த்தி செய்தல் இப்படி மாறி மாறி தேவையின் அடிப்படையில் வேலைகளைத் தொடங்கி இலகுவாகவும் விரைவாகவும் இந்தத் திட்டத்தை செய்து முடிக்கலாம்- முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏற்கிறேன் மிக சரியான அணுகுமுறையாக படுகிறது. அப்படியே செய்வோம்.- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மேலும் அமெரிக்காவில் உள்ள் மத்திய வங்கி ஏனைய நாடுகளில் உள்ளதை விட மிகவும் வேறுபட்டது. அது ஒரு ஒற்றை அமைப்பு அல்ல. அதில் தனியார் ஆதிக்கம் அதிகம். - அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 முதல் – ஜனாதிபதி
Important Information
By using this site, you agree to our Terms of Use.