stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இது வேற பிரச்ச்னை…. ஓம் ஆனால் பாருங்கள் இவர்களின் மாய உலகத்தில் எப்போதும் சர்வாதிகாரிகளு ம் கொடுங்கோலர்களுமே இவர்களுக்கு ஹீரோவாக இருப்பார்கள். ஆனால் அந்த மாய உலகத்தில் வாழும் போது கூட அவர்கள் சொந்த வாழ்கையில் மட்டும் புத்தி கூர்மை நன்றாக வேலை செய்யும் கொடுங்கோல் ஆட்சியாளர்களிடம் இருந்து விலகி சென்று கிலோ மீட்டர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் இடைவெளியை ஆவது பாதுகாப்பு கருதி கடைபிடித்து கொள்வார்கள்
- Today
-
குட்டிக் கதைகள்.
sSprtoneodmc14002thgcc7uf4c5l1 h1451cma8haa9ahcm091g1i7clihi · சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!'' என்றான் அவன். . சாமி இளமை தொலையாத முகத்துடன், கருமை மறையாத தாடியுடன், சாந்தம் தவழும் கண்களுடன் அவனை, 'சொல் குழந்தாய்!' என்பது போல் பார்த் தார். . ''என் பேரு கோபால். ஊர் மதுரைப் பக்கம் ஒரு கிராமம். ஊர்ல எங்க குடும்பமும் எங்க மாமன் குடும்பமும்தான் பெரிய குடும்பங்கள். எல்லாரும் ஒண்ணுமண்ணா இருப்போம்! . என் மாமனுக்கு வித்யா பொறந்தப்ப முதல்ல அந்தப் பேச்சு விளையாட்டாதான் ஆரம்பிச்சது. ஆனா, கொஞ்ச நாள்ல அதையே ரெண்டு குடும்பங்களும் தீர்மானமா எடுத்துக்கிட்டாங்க. கல்யாண வயசு வந்ததும் வித்யாவுக்கு என்னைக் கல்யாணம் கட்டி வெச்சுப்புடணும்னு முடிவு எடுத் தாங்க. அவங்க ஊட்டுன ஆசையில நான் சின்ன வயசுல இருந்தே 'வித்யா எனக்குத்தான்'கிற நினைப்போடவே வளர்ந்தேன். . வாலிப வயசுல வித்யா பைத்தியம் முத்தி என் உயிர், உலகம் எல்லாமே வித்யாதான் இருந்தா. ஆனா, ஒரு கை மட்டும் தட்டுனா ஓசை வருமா?வித்யா வுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதுல இருந்தே என்கிட்ட ஓர் இடைவெளியோடுதான்நடந்துக்கிட்டா. அது எனக்குப் புரியாத அளவுக்கு வெறித்தனமா அவளை நேசிச்சுட்டு இருந்தேன். நான் எங்கப்பா மாதிரி மை கறுப்பு இல்லேன்னாலும் கொஞ்சம் கறுப்புதான். வித்யாவோ அப்பதான் பூத்த செம்பருத்தி மொட்டு கணக்கா எளஞ்சிவப்பு. எங்க கிராமம் அதோட ஆயுசுக்கும் வித்யா மாதிரி ஒரு அழகியைச் சுமந்திருக்காது. . அழகு ஒரு காரணம்... ரெண்டாவது படிப்பு. நான் ஆறாம் கிளாஸ் ஃபெயில். வித்யா டவுன் காலேஜுக்கு எல்லாம் போய் படிச்சது. கல்யாணப் பேச்சு எடுத் தப்போ, வித்யா ஒரே வரியில் என்னைக் கல்யாணம் கட்டிக்க இஷ்டமில்லைன்னு சொல்லிருச்சு. . அதைக் கேட்டுக்கிட்டு நான் எப்படி உயிரோடு இருந்தேன்னு இப்ப வரைக்கும் தெரியலை. அவளுக்கு அவங்க வீட்டுல நல்லா படிச்ச, சிவப்பா, அழகா ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்களாம். . அவ கல்யாணம் அன்னிக்குக் கிளம்பி இலக்கில்லாம எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு, கடைசியா இந்த ஊர்ல செட்டில் ஆயிட்டேன். இத்தனை வருஷம் பொழைச்ச என்பொழைப்புக்கு ஏதாவது அர்த்தம் இருக்குதா சாமி?'' . சாமி நிதானமாகக் கேட்டார், ''அது கிடக் கட்டும்... மணியஞ்சோலை கிராமத்து ரங்கசாமி, பாக்கியம் தம்பதியோட மகன்தானே நீ?'' . சாமியின் ஞான தீர்க்கத்தை எண்ணி கோபால் புல்லரித்துவிட்டான். . ''சா... சாமி என் ஊரும் அப்பா, அம்மா பேரும் உங்களுக்கு எப்படி சாமி தெரியும்?'' . ''உன் மாமன் மகள் வித்யாவைக் கல்யா ணம் பண்ண அதிர்ஷ்டக்கட்டை நான்தான். அந்த ராங்கிக்காரிகூட மனுஷன் வாழ முடியாதுப்பா. அதான், நான் சாமியாராயிட்டேன்! நீயாவது நிம்மதியா இரு!'' என்று கூறிவிட்டு கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் 'சாமி'கள்.....!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெறும் நாட்களில் போட்டிகள் நடைபெறமாட்டாது. எப்போது தேர்தல் தினம் என்பதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் நாளை வரும் போட்டி விபரங்களில் முதல் 20 போட்டிகளின் விபரங்கள் மட்டுமே இருக்குமென்றும் தேர்தல் தேதிகள் தெரிந்த பின்பு மிகுதி விபரங்கள் வரும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. மிகுதி விபரங்கள் சிலவேளை ஏப்ரல் மாதத்தில் அதாவது முதலாவது போட்டி ஆரம்பித்தபின்பும் வரலாம்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சமூகப் பார்வை (பயம்)??¿
நல்ல விடயம் விசுகர் . ......ஆரோக்கியமாய் இருக்கும் பிள்ளைகளுக்கு அறிவுரை போதும் மாத்திரை வேண்டாமே ......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சேரன் செங்குட்டுவன் Cheran Senguttuvan | Sivaji,Rajasulochana,SSR | kalaignar Karunanithi.......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : பருவம் போன பாதையிலே என் பார்வையை ஓட விட்டேன் அவன் உருவம் கண்ட நாள் முதலாய் என் உள்ளத்தை ஆட விட்டேன் பெண் : காதல் என்றொரு நாடகத்தை என் கண் விழி மேடையில் நடித்ததில்லை அதை கற்றுத் தந்தவன் திரு முகத்தை கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை பெண் : இதழில் வைத்த ஒரு புன்னகையில் என் இதயத்தை அளந்து விட்டான் இரவில் வந்த பல கனவுகளில் என் இறைவன் வளர்ந்து விட்டான் பெண் : எனக்கு எனக்கென்று இருந்த இளமையை தனக்கென்று கேட்டு விட்டான் இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல் என்னைக் கொடுத்து விட்டேன் பெண் : கொடியின் இடையில் ஒரு பாரமில்லை என் வழியில் நடந்து வந்தேன் குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை என் காலம் கடந்து வந்தேன் பெண் : மாலைப் பொழுதில் இளம் தென்றல் தொடாத மலராய் நானிருந்தேன் மன்னன் வந்த அந்த வேளையிலே அவன் மடியில் ஏன் விழுந்தேன் ......! --- பருவம் போன பாதையிலே ---- உணவு செய்முறையை ரசிப்போம் !
காளான் மிளகு வறுவல் . ...... மாமிச கறி சுவையை அடிச்சு தூக்கிடும் .......! 😂- வீதியோரம்.
வீதியோரம். மலர் ...........2. அந்தப் பெண் கொஞ்சம் தெம்பு வந்து எழுந்து தன் நிலையைப் பார்க்கிறாள். நேற்று மாலை நடந்ததெல்லாம் மனதில் நிழலாடுகின்றது. கிழிந்த ஆடைகளோடு உடலெல்லாம் இரத்தம் வழிந்து உறைந்து இருக்கு. திரும்பி அந்த இளைஞனைப் பார்க்க அவனுக்கு நினைவுகள் வருவதும் போவதுமாய் புசத்திக் கொண்டு இருக்கிறான். அந்நேரம் ஏதோ ஸ்லோகங்கள் சொல்லியபடி காவியுடை தரித்து தலை மழித்த சாதுக்களும் சிறுவர்களும் அவ்வழியே நடந்து வருகின்றனர். அவர்கள் இவர்களின் நிலையைக் கண்டு விசாரித்து விட்டு இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதை உணர்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு வாகனத்தை மறித்து அவர்களை பன்சாலையில் சேர்க்கும்படி சொல்லி கொஞ்சம் பெரிய சிறுவர்களை அவர்களுடன் அனுப்பிவிட்டு தாங்களும் விகாரையை நோக்கி விரைந்து நடக்கின்றனர். பௌத்த விகாரையில் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பிக்குமாரும் ஓரிரு வயதான பிக்குணிகளுமாய் சிரத்தையுடன் செய்கிறார்கள்.அவர்களின் காயங்களைக் கழுவி நீராட்டி மூலிகை தைலங்களால் வலிகுறையும் பொருட்டு நன்றாகத் தேய்த்து அமைதியாகத் தூங்க வைத்து விடுகிறார்கள். அப்படி மாலை ஐந்து மணிவரை நன்றாக உறங்கியவர்கள் பின் ஒவ்வொருவராய் எழுந்து வெளியே வருகிறார்கள்.அவர்களை வராந்தாவில் இருந்த பிக்குமார் அங்கன வந்து அமரும்படி கூறுகிறார்கள். அப்போது அங்கு வந்த தலைமைப் பிட்சுவானவர் பொதுவாய் அவர்களின் நலன்களை விசாரித்துக் கொண்டே பெயர் விபரங்களையும் கேட்டுக் கொள்கிறார். அதில் அந்த வாலிபனின் பெயர் விநோதன் என்றும், பெண்ணின் பெயர் மணிமேகலை என்றும், சிறுவன் யுகேந்திரன்,மற்றும் சிறுமி சுஜிதா என்றும் தெரிந்து கொள்கிறார்கள். அதிலும் அவர்கள் முன்பின் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்திருக்கவில்லை.நேற்று அந்த ஜீப்பில் கிடந்து வந்து வீதியில் விழுந்ததுவரை எதுவும் தெரியாது. நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருந்து பிடித்து வரப்பட்டு வாரங்கள் மாதங்களாய் எங்கெங்கோ காம்புகளில் ஆளாளாய் கைமாறி சொல்லொனா சித்திரவதைகள் அனுபவித்துக் கொண்டு வந்த நிலையில் ஏதோ அவங்களுக்கு ஏற்பட்ட தவிர்க்கமுடியாத காரணத்தால் எல்லோரையும் கொண்டுவந்து வீதியில் வீசி விட்டுப் போய் விட்டார்கள்.இவர்களின் கதையைக் கேட்ட பிக்கு பிக்குணிகள் எல்லோரும் மிகவும் பச்சாதாபப்பட்டு வார்த்தைகளால் இவர்களை ஆறுதல் படுத்துகிறார்கள்.சிலநாளில் அவர்கள் அந்த வளாகங்களில் நடக்கவும் மடத்துக்கு தேவையான சில சில வேலைகள் செய்யவும் தயாராகி விடடார்கள். சில வாரங்களின்பின் சாதுக்களின் முறையான சிகிச்சையாலும் கவனிப்பாலும் உடல் தேறி நன்றாகக் குணமடைந்து விட்டனர். அன்று நல்ல பௌர்ணமி நாள். காலை நேரம் தலைமைப் பிக்குவானவரும் மற்றும் சிலரும் அவர்களைக் கூட்டிக் கொண்டு நடந்து வந்து அன்று எந்த வீதியோரத்தில் அவர்கள் விழுந்து கிடந்தார்களோ அங்கே வந்து சேர்ந்தார்கள். அங்கு கிடுகுகளால் ஒரு நீண்ட கொட்டில் போடப்பட்டு தரையில் பலதரப்பட்ட காய்கறிகள்,பழவகைகள், வாழைக்குலைகள் எல்லாம் ஓலைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பின்னால் ஒரு மூலையில் களிமண்ணால் பிடித்த அடுப்பும்,சில சமையல் பாத்திரங்களும், ரெண்டு வாளிகளும் இருக்கின்றன. அடுத்த மூலையில் சில பாய்கள், தலையணைகள், போர்வைகளுடன் அவரவர்களுக்கேற்ற ஆடைகள் துவாய்கள் என்று எல்லாம் இருக்கின்றன. பிக்குவானவர் அவர்களிடம் இப்போதைக்கு நாங்கள் உங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான சில பொருட்கள் தந்திருக்கின்றோம். பின்னாலே ஒரு பெரிய குளமும் இருக்கின்றது. அங்கு முதலைகளும் கபரகொய்யாக்களும் பெரிய பெரிய மீன்கள் பாம்புகள் இருப்பதால் பிள்ளைகளுடன் நீங்களும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் எடுக்கும் போதும், இரவுகளில் அவ்வழியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இங்கு யானைகளும் வந்து போகும். முக்கியமாய் பிள்ளைகள் கவனம். ஒருநாளும் தனியே விடவேண்டாம். நரி, ஓநாய்,பாம்புகள் போன்றவையும் நிறைய இருக்கின்றன. இந்த பொருட்கள் யாவும் உங்களுக்காக நாங்கள் மக்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டு வந்தவையே. நீங்கள் விகாரையில் தங்கியிருந்த நாட்களில் உங்களுக்குத் தெரிந்திருக்கும் நாங்களும் எங்களுக்குத் தேவையான அளவு மட்டுமான சொற்ப சாமான்களே வைத்திருக்கிறோம். நாளைக்கு என்று எதையும் நாங்கள் சேர்த்து சேமித்தோ வைத்திருப்பதில்லை.நாம் அணியும் ஆடைகள் கூட சனங்களிடம் யாசகமாய் பெற்று ஊசி நூல் கொண்டு கைகளால் தைத்து அணிகிறோம்.கூடியவரை பகவான் புத்தமுனி போதித்த நெறிகளில் இருந்து சிறிதும் வழுவாமல் வாழ்ந்து வருகின்றோம்.இனி நீங்கள் இவைகளைக் கொண்டு வீண் ஆடம்பரங்களை நாடாமல் உங்களின் தேவைகளை சுருக்கி வாழ்ந்து வரவும். பிள்ளைகளைப் பார்த்து நீங்கள் இருவரும் தினமும் காலையில் சிலமணி நேரம் பன்சாலைக்கு வந்து பாடங்கள், பாஷைகள், உடற்பயிற்சிகள், கலைகள், கைவினை வேலைகள் என்று கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றுக்காக அங்கு பாடசாலையும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.பின் மாலையில் நீங்கள் இங்கு வந்து இவர்களுக்கு உதவியாய் இருக்கலாம் என்று சொல்ல அவர்களும் அவர் பாதத்தில் விழுந்து வணங்கி அப்படியே செய்கிறோம் சாமி என்கிறார்கள். பின் சாதுக்களும் அவர்களை ஆசீர்வதித்து விட்டு தம் வழியே செல்கின்றார்கள்.....! மலர் . ........ 2. 🌼🌼- சமூகப் பார்வை (பயம்)??¿
இது எமது சமூகம் பெண் பிள்ளைகள் சார்ந்து இன்னமும் கொண்டிருக்கும் மூட நம்பிக்கை சார்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பதிவு மட்டுமே. யாழ் களத்தில் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். அவர்களே உங்கள் கேள்விக்கு சரியான பதில் தர முடியும் வேண்டும். நன்றி.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கோயில் நிலைய வித்துவான்களே 10 க்கு மேல் இருக்கும் நீங்கள் வேற .......! 😂- உலகம் முழுவதும் எரிவாயு, எரிபொருட்கள் தட்டுப்பாடா?!
வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை Mar 10, 2026 - 05:20 PM மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும், அதன் விலைகள் அதிகரித்துள்ளதாலும், எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் முடிந்தவரை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் அந்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக ஆரம்பித்துள்ள போர்ச் சூழலினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுள் வியட்நாமும் உள்ளடங்குகிறது. வியட்நாம் தனது எரிசக்தித் தேவைகளுக்காக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளிலேயே தங்கியிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வியட்நாமின் முன்னணி எரிபொருள் வர்த்தக நிறுவனமான பெட்ரோலிமெக்ஸ் (Petrolimex) தரவுகளின்படி, கடந்த மாத இறுதியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் எரிபொருள் விலைகள் பின்வருமாறு அதிகரித்துள்ளன: பெற்றோல் - 32% டீசல் - 56% மண்ணெண்ணெய் - 80% விலை அதிகரிப்பு மற்றும் விநியோகக் கட்டுப்பாடு காரணமாக தலைநகர் ஹனோயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் நீண்ட வரிசைகளை இன்று (10) காணக்கூடியதாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. https://adaderanatamil.lk/news/cmmkjqksd000y356pdr5e3tco- உலகம் முழுவதும் எரிவாயு, எரிபொருட்கள் தட்டுப்பாடா?!
இந்தியாவும் சீனாவும் எத்தனை நாட்களுக்குத் தேவையான எண்ணெயை சேமித்து வைத்துள்ளன? பட மூலாதாரம்,Getty Images 10 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரின் பொருளாதார தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிய தொடங்கியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையும், வளைகுடா எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களும் கச்சா எண்ணெய் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. சனிக்கிழமை இரவு இரானிய தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. எண்ணெய் விலையில் ஏற்படும் குறுகிய கால உயர்வு என்பது, உலக அமைதிக்கு செலுத்தப்பட வேண்டிய ஒரு சிறிய விலையே என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு 30 நாள் அனுமதியை டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் வழங்கியது. ஆனால் தீவிரமடைந்து வரும் மோதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் கட்டாயப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்கிறது. தாக்கம் என்ன? தற்போதைய சூழலில் எண்ணெய் விலை உயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என பிபிசி ஹிந்தியின் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள வெளிநாட்டு கொள்கை நிபுணர் ஹர்ஷ் வி. பந்த், உலகின் பெரிய பொருளாதாரங்களுக்குக் கூட சிரமங்கள் உருவாகும் எனவும் பலவீனமான பொருளாதாரங்கள் அதிக அழுத்தத்தை சந்திக்கும் எனவும் கூறுகிறார். "இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியை பல்வேறு நாடுகளிலிருந்து பெறும் வகையில் மாற்றியுள்ளது. யுக்ரேன் போர் தொடங்கியபோது இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கத் தொடங்கியது. மத்திய கிழக்கு உலக எண்ணெய் சந்தையின் முக்கிய மையமாக இருப்பதால் அங்கு ஏற்பட்ட மோதல்கள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என பந்த் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images இந்தியாவில் எவ்வளவு எண்ணெய் இருப்பு உள்ளது? தற்போது அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் அனுமதி அளித்திருந்தாலும், முன்னதாக அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக, இந்தியாவிற்கு வரும் ரஷ்ய எண்ணெய் வரத்து குறைந்தது. எரிசக்தி நிபுணர்கள் இந்தியாவின் எண்ணெய் இருப்பு குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர். ''ஹோர்முஸ் நீரிணை வழியாக தினமும் 137 கப்பல்கள் சென்ற நிலையில், கடந்த சில நாட்களில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மட்டுமே செல்ல முடிந்ததாக" பிபிசி நிகழ்ச்சியில் ஆற்றல் நிபுணர் நரேந்திர தனேஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தெற்காசிய நாடுகள் இந்தப் பகுதியில் இருந்து வரும் எண்ணெயை அதிகம் சார்ந்துள்ள நிலையில், தற்போது இங்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளதாக குறிப்பிடும் அவர், கடந்த ஓர் ஆண்டாக சீனா தினமும் சுமார் 10 லட்சம் பீப்பாய் எண்ணெயை இரானில் இருந்து வாங்கி தனது கையிருப்புகளில் சேமித்துள்ளதாக விவரிக்கிறார். "கடந்த 365 நாட்களில் அவர்கள் சேமித்துள்ள எண்ணெய், அடுத்த ஐந்து மாதங்களுக்கு அவர்களுக்கு கவலைப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தாது," என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images இந்தியாவின் எண்ணெய் கையிருப்பைப் பற்றி நரேந்திர தனேஜா கூறும் போது, இந்தியா உலகம் முழுவதும் 41 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும், தற்போது நிலத்தடியில் உள்ள இந்தியாவின் வியூக ரீதியான கையிருப்பு சுமார் 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என குறிப்பிடுகிறார். "இதற்கு மேலாக சேமிப்பு தொட்டிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வணிக கையிருப்புகளை சேர்த்தால் சுமார் 50 நாட்களுக்கு போதுமான எண்ணெய் இந்தியாவிடம் உள்ளது. ஆனால் அனைத்து தொட்டிகளையும் முழுவதுமாக காலி செய்ய முடியாததால், நடைமுறையில் சுமார் 40 நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் உள்ளது," என நரேந்திர தனேஜா கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images எதிர்கால விளைவு இப்போது பீதியடையத் தேவையில்லை என்று நரேந்திர தனேஜா கூறுகிறார். ''உண்மையில், நமது கவலை எண்ணெய் கிடைக்குமா என்பது அல்ல, மாறாக அதன் விலை என்னவாக இருக்கும் என்பதுதான். இரான் போர் தொடங்கியபோது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 65 டாலராக இருந்தது, ஆனால் இப்போது அது உயர்ந்துள்ளது.'' என்கிறார் அவர். ''இதுவரை அரசு எரிபொருள் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால் போர் நீண்ட காலம் தொடர்ந்தால், அரசு எப்போதும் விலைகளை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். ஒரு கட்டத்தில் அரசு மற்றும் நிறுவனங்கள் விலையை குறைவாக வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டால், 'இனி அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்', 'நுகர்வோருக்கு என்ன செய்தி வரும்' போன்ற கேள்விகள் எழும்'' என்கிறார் அவர் குண்டுகள் விழுவது நின்றுவிடலாம், ஆனால் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் வயல்களுக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய பல மாதங்கள் ஆகும் என்று சர்வதேச விவகார நிபுணர் பிரம்மா செல்லனி கூறியுள்ளார். "இரானில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மற்றும் பொது பகுதிகள் மீது குண்டுவீசித் தாக்குவதன் மூலம், அமெரிக்காவும் இஸ்ரேலும் அதேபோன்ற பதிலடியை தூண்டுகின்றன. மேலும் ஆழமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன," என்று பிரம்மா செல்லனி எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். மேலும், "வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்பு ஏற்கெனவே சேதமடைந்துள்ளது. இதில் ஏவுகணைகளைத் தடுக்கும் முயற்சிகளால் ஏற்பட்ட சேதங்களும் அடங்கும். உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகள், தளங்களுக்கு ஏற்படும் சேதம் மற்றும் விநியோக அமைப்புகளின் மீதான அழுத்தம் ஆகியவை குண்டுவீச்சு நின்ற பிறகும் பல மாதங்களுக்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விலைகள் உயர்வதற்கு வழிவகுக்கும்," என்றும் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8g1183n1go- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்கள் சிரமத்திற்கு நன்றி! கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்- யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!
இரத்ததானம் செய்வோர் உடனே உதவுங்கள். இளைஞர்களே, கனரக வாகன சாரதிகளே, தனியார் பொதுப்போக்குவரத்து சாரதிகளே வேகத்தை குறைத்தும், அவதானமாகவும் வாகனங்களை செலுத்தி தேவையற்ற விபத்துகளை தவிர்ப்பீர்.- கருத்து படங்கள்
- 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு! காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு நடமாடும் குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி தலைமை நீதிவான் சமீர தொடங்கொட இன்று (11) காலை காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். காலி துறைமுக பொலிஸார் காலி தலைமை நீதிவான் நீதிமன்றத்திற்கு விடுத்த கோரிக்கையை அடுத்து நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மார்ச் 4 அன்று இலங்கை கடல் எல்லைக்கு அருகே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீது தாக்குதல் நடத்திய அதை மூழ்கடித்தது. இந்தியா நடத்திய பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் இருந்து கப்பல் திரும்பிக் கொண்டிருந்தபோது, சர்வதேச கடல் பகுதியில் எச்சரிக்கை இல்லாமல் இந்தத் தாக்குதல் நடந்தது. மத்திய கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்த இந்தப் படுகொலை, ஈரானுக்கு எதிரான வொஷிங்டனின் தீவிரமடைந்து வரும் போரின் ஒரு பகுதியாகும். தாக்குதலின் பின்னர் மூழ்கத் தொடங்கிய ஈரானியக் கப்பலில் இருந்து அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி என இரண்டு அவசர அழைப்புகளுக்கு இலங்கை கடற்படை பதிலளித்து, உயிர் பிழைத்த 32 பேரை மீட்டனர், அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கடற்படை மூழ்கிய கப்பலில் இருந்து டஜன் கணக்கான மாலுமிகளின் உடல்களை மீட்டது. மார்ச் 4 ஆம் திகதி 208 பணியாளர்களைக் கொண்ட இரண்டாவது ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் புஷேர், கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரி இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு ஒரு செய்தியை அனுப்பியது. ஆரம்பத்தில் கோரிக்கையை நிராகரித்த பின்னர் பதட்டமடைந்த இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் மார்ச் 5 ஆம் திகதி கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதித்தது. அதன் பணியாளர்கள் இறக்கிவிடப்பட்டு, கப்பல் நாட்டின் மறுபக்கத்தில் உள்ள திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்படத்தக்கது. https://athavannews.com/2026/1467891- உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! இன்று (11) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பே இந்த தீர்மானத்துக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1467902- யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!
யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டும், ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 192 பைந்த் ஆகும். இது எமது இரத்த வங்கியைப் பொறுத்த வரையில் மிகவும் ஆபத்தான நிலையாகும், இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குருதி சேகரிக்கப்பட்டாலும் நாளாந்தம் விநியோகிக்கப்படும் குருதியின் அளவு அதிகரித்து செல்கின்றது, இரத்த வங்கியில் நேரடியாக வந்து இரத்தம் கொடுக்கும் குருதிக்கொடையாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக அழைப்புக்களை விடுத்தும் வருகின்ற கொடையாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றது. அத்துடன் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் தினமும் குருதியை பெற்றே நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்குகின்றோம். தற்போது அவர்களிடமும் குருதியின் இருப்பு குறைவடைந்துள்ளதினால் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் குருதியை பெற முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். ஆகவே சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகள், திணைக்களங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் தங்கள் தங்கள் இடங்களில் இரத்த தான முகாம்களை ஒழுங்கு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உங்கள் இடத்திற்கு வருகை தந்து குருதி சேகரிக்கும் பணியை நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். அத்துடன் தனி நபர்கள் எமது இரத்த வங்கிக்கு நேரடியாக காலை 8.00 மணியிலிருந்து பி.ப 7.00 மணிவரை சமூகம் கொடுத்து இரத்த தானம் செய்வதன் மூலம் குருதி தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யலாம். ஆகவே இவ் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு இளைஞர், யுவதிகள் இரத்த தானம் செய்வதற்கு முன்வந்து எமது உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு: 0212223063, 0772105375 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1467888- அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்களுக்கு சவால் தர இரான் பயன்படுத்தும் 'வியூகம்'
அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்களுக்கு சவால் தர இரான் பயன்படுத்தும் 'வியூகம்' பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-க்கும் அதிகமாகும். கட்டுரை தகவல் பிபிசி மானிட்டரிங் குழு 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானிய அதிகாரிகள் நீண்டகால மோதலுக்குத் தயாராக இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர். இரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி அமெரிக்க, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்துவதாகவும் பிராந்தியத்தில் அவர்களின் நிதி மற்றும் தளவாடச் செலவுகளை அதிகரிப்பதாகவும் தெரிகிறது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வழக்கமான ராணுவ மேலாதிக்கத்தை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட இரானின் நீண்டகால சமச்சீரற்ற போர் கோட்பாட்டைப் பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரானுக்குள்ளும் உலகளவிலும் இந்த மோதலின் விளைவாக ஏற்படும் பொருளாதார விளைவுகள், போர் எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கக்கூடும். இரானிய அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கூறுவது என்ன? இரானிய அதிகாரிகள் நாடு ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருப்பதாகத் தொடர்ந்து கூறிவருகின்றனர். இது நீண்ட போருக்கு ஏற்ற வகையில் தயார்நிலையில் இரான் இருக்கிறது என்ற செய்தியை வெளிப்படுத்துகிறது. உச்ச தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் அலி லாரிஜானி மார்ச் 2ஆம் தேதி இரானின் நீண்ட கால மோதலுக்கான தயார் நிலையை அறிவித்தார். அப்போது, "அமெரிக்காவை போலன்றி, இரான் ஒரு நீண்ட போருக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுள்ளது" என்று அவர் கூறினார். அதோடு, பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பையும் அவர் நிராகரித்தார். "ஆக்கிரமிப்புக்கு" இரானின் பதிலடி, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவால் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும், மோதல் பல மாதங்கள் அல்லது அதற்கு மேலும் தொடரக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறினர். "நாங்கள் நிச்சயமாக போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. ஆக்கிரமிப்பாளரை தண்டிக்க வேண்டும்," என்று நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கபிபாஃப் மார்ச் 8ஆம் தேதி கூறினார். இரான், இஸ்ரேலுடன் இருப்பை தக்க வைப்பதற்கான போரில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரெசா தலாய்-நிக், இரானால் "எதிரி எதிர்பார்ப்பதைவிட பல மடங்கு நீண்ட காலம் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பை" தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றார். இரான் தனது ஆயுதங்களைப் பயன்படுத்தும் விதத்தை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். தனது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உடனடியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் தனது மேம்பட்ட ஆயுதங்களில் சிலவற்றைப் போரின் பிந்தைய கட்டங்களுக்காகச் சேமித்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பஹ்ரைனில் இரானிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. இரான் பயன்படுத்தும் உத்தி என்ன? அட்ரிஷன் என்ற உத்தியை இரான் பயன்படுத்துவதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் பொருள் விரைவாக வெற்றி பெறுவதற்குப் பதிலாகக் காலப்போக்கில் எதிரியை மெதுவாகப் பலவீனப்படுத்த முயல்வதாகும். இஸ்ரேலிய இலக்குகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இரான் ஏவுகிறது. இந்தத் தாக்குதல்களில் பல இலக்குகள் குறிவைக்கப்படுகின்றன. முதலாவதாக, அவை அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி உள்ளே நுழையும் ஏவுகணைகளைத் தடுக்க கட்டாயப்படுத்துகின்றன. எம்.ஐ.எம்-104 பேட்ரியாட், தாட் போன்ற அமைப்புகள் மிகவும் மேம்பட்டவை. ஆனால், அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன. பெரும்பாலும், தாக்குதலை நிறுத்தப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், அவை அழிக்கும் ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளைவிட அதிக விலை கொண்டவை. இரண்டாவதாக, தொடர்ச்சியான தாக்குதல்கள் எதிரியின் ஆயுத விநியோகம், போக்குவரத்து அமைப்புகள், ராணுவ தயார்நிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மோதலின் முதல் வாரத்துக்குள் அமெரிக்க படைகள் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையிலான துல்லியமான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக தி வாஷிங்டன் போஸ்டின் செய்தி கூறுகிறது. பட மூலாதாரம்,U.S. Navy via Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் இரானிய அதிகாரிகள் தங்கள் ஆயுத விநியோகம் நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள். தற்போதைய விகிதத்தில் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தங்கள் ராணுவம் அதிக தீவிரம் கொண்ட போரைத் தொடர முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். இரானிய தளபதிகள் தங்கள் ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுப் பல உற்பத்தித் தளங்களில் அதிக எண்ணிக்கையில் சேமித்து வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார்கள். இதன் காரணமாக, இரான் காலப்போக்கில் அதன் தாக்குதல்களைப் பரவலாக்கி வருவதாகத் தெரிகிறது. இது அதன் எதிரிகளை ஒரேயொரு பெரிய தாக்குதலை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு கட்டாயப்படுத்துகிறது. இந்த உத்தி, இரான் பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் ராணுவ அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். இரான் - இராக் இடையிலான போருக்குப் பிறகு, இரான் சமச்சீரற்ற போருக்கு தயாராகும் வகையில் அதிகளவில் முதலீடு செய்தது. இந்த வகையான போர், பாரம்பரிய வழியில் போராடாமல் வலுவான ராணுவங்களுக்கு சவால் விடக்கூடிய முறைகளில் கவனம் செலுத்துகிறது. ஒரு வலுவான எதிரியை நேரடியாகத் தோற்கடிப்பது அவர்களின் இலக்கு அல்ல. மாறாக, போரை நீண்டதாகவும், செலவுமிக்கதாகவும், கடினமானதாகவும் அவர்களுக்கு மாற்றுவதே ஆகும். பொருளாதார பாதிப்புகள் எவை? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,துபையில் தாக்குதலுக்குப் பிறகு எழுந்த புகை ஒரு நீண்ட போர் இரானிலும் உலகெங்கிலும் கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். அதில் முக்கியக் கவலை எரிசக்தி விநியோகம். உலகின் எண்ணெயில் பெரும்பகுதி பொதுவாக ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. இது உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு. போர் ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியதில் இருந்து, இந்தக் குறுகிய பாதை வழியாகக் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இது உலகளவில் மக்கள் மற்றும் தொழில்களுக்கான எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகளை உயர்த்தக்கூடும். பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் மூடப்பட்ட வான்வெளியும் இந்தப் பகுதியில் வர்த்தகப் பாதைகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன. இரானுக்குள்ளும் பொருளாதார அழுத்தம் உள்ளது. பல ஆண்டுகளாக சர்வதேச தடைகளால் அந்த நாடு ஏற்கெனவே பலவீனமடைந்துள்ளது. அரசாங்கம் ராணுவத்துக்கு அதிக பணம் செலவிட வேண்டியிருப்பதாலும், தேசிய நாணயம் நிலையற்றதாக இருப்பதாலும், வர்த்தகம் மற்றும் சேவைகள் சீர்குலைவதாலும் போர் ஏற்கெனவே நிலவும் நிலைமையை மேலும் கடினமாக்குகிறது. போர் நீண்டகாலம் தொடர்ந்தால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும், நாட்டுக்குள் பொதுமக்களின் கோபம் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறும் நிபுணர்கள், இது நாட்டின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர். இரான் அரசாங்கம், குடிமக்களை போர் முயற்சிகளை ஆதரிக்க ஊக்குவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு உதவுவது ஒரு தேசிய கடமை எனக் கூறி, அரசுக்கு பொதுமக்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கிறது. அரசியல் சிக்கல்கள் போர் நீண்டகாலம் தொடர்வது, அனைத்து தரப்பினருக்கும் அரசியல் அபாயங்களைப் பெரிதாக அதிகரிக்கும். குறிப்பாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கவலை கொண்டுள்ளன. இரான் இந்தப் பகுதியில் "ஆக்கிரமிப்பாளர்களின் சொத்துகள் மற்றும் தளங்கள்" என்று தான் அழைப்பதைக் குறிவைத்து வருகிறது. இதன் காரணமாகப் பல வளைகுடா நாடுகள், இந்த மோதல் ஒரு பெரிய பிராந்திய போராக மாறி கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சுகின்றன. இந்த நாடுகளில் சில ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளன. அதே நேரத்தில், போர் பிராந்தியத்தில் அரசியல் உறவுகளை மாற்றக்கூடும். சில அண்டை நாடுகள் இரானின் எதிரிகளாக மாறக்கூடும். இரானை பொறுத்தவரை, போரைத் தொடர்வது என்பது அதன் ராணுவ திட்டங்களை அதன் பொருளாதாரத்தை நிலையானதாக வைத்திருப்பது மற்றும் உள்நாட்டில் ஆதரவைப் பேணுவது ஆகியவற்றுடன் சமநிலைப்படுத்த முயல்வதாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பொறுத்தவரை, சவால்கள் வேறுபட்டவை. அவர்கள் தங்கள் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர வேண்டும், அதே நேரத்தில் ஒரு நீண்ட போரின் நிதிச் சுமை, அரசியல் அழுத்தம், உலகளாவிய விளைவுகள் ஆகியவற்றையும் கையாள வேண்டும். பிபிசி தமிழுடன் பகிருங்கள் தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 'சாதிய பாகுபாடு' நிலையில் மாற்றம் உள்ளதா? உங்கள் அனுபவம் மற்றும் கருத்துகளை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20ly2pyv0do- தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்!
தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்! தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அரசுப் பாடசாலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, சில மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கினர் மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக முறைப்பாடு அளித்தனர். இதேபோன்ற அறிகுறிகள் இருப்பதாக அதிகமான மாணவர்கள் முறைப்பாடு அளித்ததால், அவர்கள் சிகிச்சைக்காக அரசு வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தமிழக அரசுப் பாடசாலை மாணவர்கள் மதிய உணவை சாப்பிட்ட பின்னர் நோய்வாய்ப்படுவது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் உணவு விஷம் அடைந்ததாக சந்தேகிக்கப்படும் 33 மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. Athavan Newsதமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்!தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. செவ்வா- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அண்ணை, கேள்விகளை குறைத்து நேரடி வெற்றி தோல்வி, தொடர்நாயகன், கூடுதல் ஓட்டம், கூட விக்கெற் எடுப்பவர் யார் யார் என போட்டியாளர்களுக்கு கடுமை இல்லாமல் இருந்தால் பங்குபற்றுவார்கள். வழங்கம்போல 10பேருக்கு மேல் பங்குபற்ற உறுதியளித்தால் போட்டியை தொடங்குங்கோ.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைதான் போட்டி விபரங்கள் வரும். 26 மார்ச் ஆரம்பிப்பார்கள். இதற்குள் கேள்விக்கொத்து தயாரித்தாலும் எத்தனை பேர் உடனடியாக பதில்கள் தருவார்கள்?- இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம் Veeragathy Thanabalasingham on March 10, 2026 Photo, REUTERS மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் போர் மத்திய கிழக்கைச் சூழ்ந்துகொண்டிருப்பது மாத்திரமல்ல, இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் விசாகபட்டினத்தில் சர்வதேச கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்று கடந்த வாரம் மத்திய கிழக்கில் இருந்து 2000 மைல்கள் தொலைவில் இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தென்கரையோரத்தில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு ஈரானியக் கப்பலை இலங்கை கடற்படை மனிதாபிமான அடிப்படையில் திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. அண்மைய தசாப்தங்களில் வெள்ளை மாளிகையில் பதவியில் இருந்த ஜனாதிபதிகளில் படுமோசமான போர்வெறியராக விளங்கும் டொனால்ட் ட்ரம்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் இனப்படுகொலைச் சந்தேகநபராக அறிவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதான்யாகுவும் ஈரானுக்கு எதிராக விரைவாகப் போரைத் தொடங்கியிருக்கலாம். ஆனால், அந்தப் போருக்கு விரைவான முடிவு கிட்டப்போவதில்லை. போர் தொடங்கிய முதல்நாளன்றே ஈரானின் அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா அலி காமெனி குண்டுவீச்சில் கொல்லப்பட்டது குறித்து கொண்டாடிக் கொண்டிருக்கும் ட்ரம்ப் ஈரானின் அடுத்த ஆன்மீகத் தலைவரைத் தெரிவு செய்வதில் தன்னை ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். புதிய ஆன்மீகத் தலைவராக கொலையுண்ட தலைவரின் மகன் மொஜ்ராபா காமெனி தெரிவாவதை அனுமதிக்க முடியாது என்பதே ட்ரம்பின் நிலைப்பாடாக இருக்கிறது. ஈரானில் அமையக்கூடிய அடுத்த அரசாங்கம் தனது பொம்மையாக இருப்பதை உறுதி செய்வதே அவரது நோக்கம். ஜனவரியில் வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் நியூயோர்க்கிற்கு கடத்திச் சென்றதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி டெல்சி றொட்ரிகஸைப் போன்று வாஷிங்டனின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய ஒருவரை ஈரானில் பதவியில் அமர்த்துவதே ட்ரம்பின் திட்டம். அயத்தொல்லா காமெனியின் கொள்கைகளைப் பின்பற்றும் புதிய ஈரானியத் தலைவரை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் அறிவித்திருக்கிறார். ஆனால், அத்தகைய ஒரு கையாளை இன்றைய ஈரானிய அரசாங்கத் தலைவர்கள் மத்தியில் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அயத்தொல்லா காமெனியின் மறைவையடுத்து ஈரானிய அரசு நிலை குலைந்து விடும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இதுவரையில் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. மிலேச்சத்தனமான குண்டுவீச்சுக்களை நடத்தி ஈரானில் அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ட்ரம்ப் அதேவேளை, அரசாங்கத்தைத் தூக்கியெறியுமாறு அந்த நாட்டு மக்களை கேட்கிறார். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்ட போதிலும் ஈரான், இஸ்ரேல் மீதும் அயல் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்கள், சொத்துக்கள் மற்றும் தூதரகங்கள் மீது தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆசியாவுக்கான வர்த்தகம் உட்பட உலகின் 20 சதவீதமான எண்ணெய் விநியோகத்துக்கு முக்கியமானதாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சில நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியான் கடந்த வெள்ளிக்கிழமை கூறிய அதேவேளை, ட்ரம்ப் ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என்று கூறினார். நிபந்தனையற்ற சரணாகதியைத் தவிர, ஈரானுடன் வேறு எந்த உடன்பாட்டுக்கும் இடமில்லை என்பது அவரது நிலைப்பாடு. பாரிய தாக்குதல்களை நடத்துவதற்கு ஈரான் தீட்டிக்கொண்டிருந்த திட்டத்தை முறியடிப்பதற்காக முன்னெச்சரிக்கையாகவே தாக்குதல்களை தொடங்கியதாகக் கூறும் அமெரிக்காவும் இஸ்ரேலும் அவற்றின் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவொரு சான்றையும் உலகின் முன்வைக்கவில்லை. கடந்த வருடம் ஜூனில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஈரானின் சகல அணுவசதிக் கட்டமைப்புக்களும் நிர்மூலம் செய்யப்பட்டு விட்டதாகவும் அதற்குப் பிறகு ஈரான் எந்த அணுத் திட்டத்தையும் கொண்டிருக்க முடியாது என்று கூறிய ட்ரம்ப், ஈரான் அணுவாயுதங்களை தயாரிப்பதை தடுக்கவே தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருந்ததாக குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரகாரம் எந்தவொரு நாடும் அதற்கெதிராக உடனடியாக மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தற்காப்புக்குப் படைபலத்தைப் பயன்படுத்துவது சட்டபூர்வமானது. அல்லாவிட்டால் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துடன் மாத்திரமே தாக்குதலை நடத்த முடியும். அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி போரைப் பிரகடனம் செய்வதற்கு காங்கிரஸின் அனுமதியைப் பெறவேண்டும். இந்த நிபந்தனைகளில் எந்தவொன்றையும் ட்ரம்ப் நிறைவேற்றவில்லை. ட்ரம்பின் போர் ஈரானை அழித்துக் கொண்டிருப்பது மாத்திரமல்ல இன்றைய பிரச்சினை. உலகின் உறுதிப்பாட்டுக்கு ஆதாரமாக இருக்கும் சட்ட முறைமைகள் சகலதையும் அவர் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார். வெனிசூலாவின் இறைமையை மீறி மதுரோவை கடத்திச் சென்றது குறித்து கண்டனங்கள் கிளம்பியபோது சர்வதேச சட்டங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும் இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு (ஐக்கிய நாடுகள்) அமெரிக்காவுக்கு அநாவசியமான சுமையாக இருக்கிறது என்றும் அவர் கூறியது கவனிக்கத்தக்கது. முன்னெச்சரிக்கையாக படைபலத்தைப் பயன்படுத்துவது என்பது வழமையானதாக்கப்பட்டுவிட்டால், எந்தவொரு அரசும் தனக்கு நீண்டகால நோக்கில் அச்சுறுத்தலாக அமையக் கூடியது என்று சந்தேகிக்கும் எந்தவொரு நாட்டின் மீதும் விரும்பிய நேரத்தில் படை பலத்தைப் பிரயோகிக்கக்கூடும். இது பேராபத்தான ஆயுதங்கள் புழக்கத்தில் இருக்கின்ற இன்றைய யுகத்தில் பயங்கரமான முன்னுதாரணமாகிவிடும். சட்டவிரோதமான போர்கள் சர்வசாதாரணமாகிவிடும். தற்போதைய உலகை பல்துருவமயப்பட்டது என்ற ஒரு மாயையில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதாவது, பல நாடுகள் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் ஒப்பீட்டளவில் பலம்பொருந்தியவையாக வளர்ந்துவிட்டதால் அமெரிக்கா போன்ற தனியொரு வல்லரசின் மேலாதிக்கத்தின் கீழானதாக உலக ஒழுங்கு இனிமேல் இருக்காது என்று நம்பினோம். எவ்வாறு, எந்த நேரத்தில் நடந்துகொள்வார் என்று முன்கூட்டியே கூறமுடியாத ட்ரம்பின் தலைமையின் கீழ் கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக சர்வதேச சட்டங்களை மதிக்காமல் அமெரிக்கா செய்துவருகின்ற அடாவடித்தனங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாதவையாக உலக நாடுகள் பரிதாபகரமான ஒரு நிலையில் இருக்கின்றன. இரு மாதகால இடைவெளியில் அமெரிக்கா சீனாவின் நெருங்கிய இரு நேசநாடுகளில் ஆக்கிரமிப்பைச் செய்திருக்கிறது. வெனிசூலாவில் இருந்து மதுரோ கடத்திச் செல்லப்பட்டதையும் கடந்தவாரம் குண்டு வீச்சுக்களில் ஈரானிய ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதையும் சர்வதேச சட்டமீறல் என்று கண்டனம் செய்யச் சீனாவினால் முடிந்ததே தவிர, வேறு எதையும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. ரஷ்யாவின் நிலையும் அதுவே. இரு நாடுகளும் ஈரானுக்கு ஆதரவாக இராணுவ ரீதியான தலையீடுகளைச் செய்ய முடியாதவையாக இருக்கின்றன. ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையிலும் கூட, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரானுக்கு எதிரான அமெரிக்க — இஸ்ரேலிய போரை கண்டனம் செய்ய முன்வரவில்லை. அயத்தொல்லா காமெனியின் மறைவுக்கு காலந்தாழ்த்தியே இந்தியா அனுதாபம் தெரிவித்திருக்கிறது. புதுடில்லியில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்குச் சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அனுதாபப் புத்தகத்தில் கைச்சாத்திட்டார். ஈரானியத் தூதரகங்களுக்குச் சென்று அனுதாபப் புத்தகங்களில் கைச்சாத்திட வேண்டாம் என்று உலக நாடுகள் பலவற்றின் தலைநகரங்களில் உள்ள இந்தியத் தூதுவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கின்ற அளவுக்கு அமெரிக்காவைப் புண்படுத்தக்கூடாது என்பதில் மோடி அரசாங்கம் கடுமையான கரிசனையுடன் இருக்கிறது. இலங்கையின் கரையோரத்துக்கு அப்பால் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் இந்து சமுத்திரத்தில் செல்வாக்கைச் செலுத்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் வல்லமை குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற ஈரானியப் போர்க்கப்பல் விசாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து அதை அமெரிக்க நீர்மூழ்கி கண்காணித்துக் கொண்டிருந்தது என்பது தெளிவானது. தனது செல்வாக்குப் பிராந்தியம் என்று இந்தியா உரிமை கோருகின்ற – கிரமமாக இந்தியக் கடற்படை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கடற்பிராந்தியத்தில் வெளிநாட்டு நீர்மூழ்கி ஒன்றின் பிரசன்னத்தை கண்டுபிடிக்கவும் தனது அழைப்பின் பேரில் பயிற்சிக்கு வந்த நேசநாடொன்றின் போர்க்கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியாவினால் இயலவில்லை என்பது கோடிப்புறத்தில் இந்தியாவின் அதிகாரம் தொடர்பில் அசௌகரியமான கேள்விகளைக் கிளப்புகிறது. இது இவ்வாறிருக்க, கிறீன்லாந்து தீவை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப் போவதாகவும் அதற்காக தேவையானால் படைபலத்தைப் பிரயோகிக்கவும் தயங்கப்போவதில்லை என்றும் ட்ரம்ப் அச்சுறுத்தியபோது அவர் சர்வதேச சட்டங்களை அவமதிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைவர்கள் ஈரான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்யவோ அல்லது ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. இன்றைய ‘நாஜி’களான ட்ரம்பும் நெதான்யாகுவும் செய்யும் சர்வதேச காடைத்தனத்துக்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் உலக நாடுகள் பரிதாபகரமாக கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் முற்றுமுழுதாக இஸ்ரேலின் நலன்களினால் வடிவமைக்கப்படக்கூடிய சூழ்நிலையை தற்போதைய போர் ஏற்படுத்தக்கூடிய பேராபத்து இருக்கிறது. அதேவேளை, ட்ரம்ப் ஏற்கெனவே அச்சுறுத்திவருவதைப் போன்று வளங்களைச் சூறையாடுவதற்காக பல நாடுகளில் இராணுவத் தலையீடுகளைச் செய்வதைத் தடுக்க முடியாமலும் போகலாம். உலக நாடுகள் ட்ரம்பின் போர்வெறிக்கு எதிராக அணிதிரள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனித குலத்தை அழிவை நோக்கி நகர்த்திச் செல்லும். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12620- யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை
யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை adminMarch 10, 2026 சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியேற்றியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பணித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணை அறிக்கையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணைகளின் அடிப்படையில் கறுப்பு கொடியேற்றிய சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக 2 மாணவிகள் உள்ளிட்ட 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் பல்கலைக்கழக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாத வரை இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல என்பதை வெளிப்படுத்தவே இந்தச்செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தினுள் தமது வாகனத்தில் சென்று துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். காவல்துறையினா் வாகனத்துடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்று , பல்கலைக்கழகத்தினுள் வைத்து துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேவேளை சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றும் போது எடுக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அந்நேரம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் , அடையாளம் காணப்பட்ட சில மாணவர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து , வாக்கு மூலங்களை பதிவு செய்ய குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/230304/ - சமூகப் பார்வை (பயம்)??¿
Important Information
By using this site, you agree to our Terms of Use.