Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அண்மையில் தமிழ் தேசிய முன்னணியில் நல்லார் சபை உறுப்பினரின் மகன் ஒருவரும் கஞ்சா பொதியுடன் பிடிபட்டார் இதையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.
  3. கோசான் யாருடைய குறூப் என்பதைவிட ஏன் இப்படிப்பட்டவர்கள் உள்வாங்கப்பட்டார்கள்? கடந்த தேர்தலிலும் கட்சிக்காக வேலை செய்தவர்கள் கட்சி விசுவாசிகளை புறம்தள்ளி தமது சொல் கேட்கக் கூடியவர்களை தராதரம் பார்க்காது போட்டியில் நிறுத்தியதை அவதானித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். போதாக்குறைக்கு டக்ளஸ் கைது என்றவுடன் சிறீதர் படமாளிகையில் கட்டியணைத்து முத்தம் கொடுத்த சிவிகே சிவஞானம் எங்கே என்று கேட்கத் தொடங்கிவிட்டனர். ரணில் கைது செய்யப்பட்டவுடன் குரல் கொடுத்த சுமந்திரன் தமிழரசுக் கட்சியை காப்பாற்றிய டக்ளஸ் கைதின் போது ஏன் மெளனமாக இருக்கிறார் என்றும் எழுதுகிறார்கள்.
  4. சிறி இதிலே போதையில் விழுந்து கிடப்பவர் இப்போது ஒரு பிரச்சனையை முகநுhலில் கிழப்பியுள்ளார். “யாழ் மையவாதத்தை உடைக்க வேண்டும்” இது நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது அடிக்கடி தமிழர்களால் பாவிக்கப்பட்ட சொல். நீண்ட காலத்தின் பின் மீண்டும் கேள்விப்படுகிறேன். ஆனாலும் இதுபற்றி சரியான வரவிலக்கணம் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே எப்போதும் முதலாளியாக இருக்க விரும்புகிறார்கள் என்பதே “யாழ் மையவாதம்” என எண்ணுகிறேன். யாராவது இதுபற்றி விளக்கம் இருந்தால் எழுதுங்கள். @goshan_che இதுபற்றி கேள்விப்பட்டீர்களோ?
  5. தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்! ஜனவரி மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற மைதானத்திற்குள் அதிகவான தண்ணீர் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளது. யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது. ஆனால் டித்வா சூறாவளி காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் தற்போது மைதானத்திற்குள் அதிகளவான தண்ணீர் தேங்கியுள்ளது. டித்வா சூறாவளி தாக்கத்திற்கு முன்னர் சில பரீட்சாத்த போட்டிகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதி நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்தப் போட்டி தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1457913
  6. கிரிபாட்டி தீவில் முதலாவதாக மலர்ந்தது 2026 புத்தாண்டு! உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிட்டிமாட்டி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் உள்ளதால், உலகிலேயே முதன் முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு பிறந்தது. ‘கிறிஸ்மஸ் தீவு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தீவில் வசிக்கும் மக்கள், வாணவேடிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் 2026 ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர். https://athavannews.com/2025/1457928
  7. 📌 What Happened on 21 October 1987? On 21 October 1987, during Operation Pawan — the military campaign by the Indian Peace Keeping Force (IPKF) in Sri Lanka — a special operation was carried out against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) base at Gurunagar, in the Jaffna Peninsula. Wikipedia+1 ⚓ Attack by Indian Navy MARCOS The Indian Navy’s Marine Commandos (MARCOS — then known as Indian Marine Special Forces) were tasked with neutralizing LTTE’s small naval/boat assets and disrupting their supply routes to Jaffna. Wikipedia A team of about 18 commandos led by Lt. Arvind Singh conducted an amphibious raid on LTTE positions at Gurunagar. They swam long distances and used small assault craft and floating rafts laden with explosives to approach their targets stealthily. Daily News Archives+1 The commandos rigged explosives on the jetty and on LTTE speedboats moored there and detonated them. They then disengaged and returned under fire without suffering casualties among their own team. Daily News Archives 📌 Important Clarification: This was not a large-scale strike on a “major port infrastructure” — Gurunagar did not have a formal harbour with large concrete port buildings or shipping docks comparable to Colombo or Trincomalee. It was essentially a fishing and small-boat landing area/jetty used by LTTE marine elements and local fishermen, not a fully developed commercial port. Daily News Archives 📌 Were Ships or Civilian Boats Hit? The primary targets were LTTE speedboats and small craft which were being used for logistic movement and potentially for attacks. These were destroyed as part of the demolition charges placed by the commandos. Daily News Archives ✔ No evidence exists in reliable military histories that large freight ships, civilian passenger vessels, or commercial port facilities were attacked in this operation. ✔ The operation was a military raid on LTTE assets, not a naval bombardment of port infrastructure. 📌 Casualties & Damage Indian MARCOS — according to mainstream military histories — did not suffer casualties during this specific operation because the team withdrew successfully after detonating their charges. Wikipedia There are no credible official records confirming that hundreds of Indian troops were killed in this particular strike — such figures (e.g., “600 killed”) appear only in unverified online sources and should not be treated as factual. The LTTE’s naval assets at the beach/jetty were destroyed (speedboats and small craft), and the jetty structures sustained explosive damage. 📌 Context: Operation Pawan This raid was part of a larger phase of fighting between IPKF and the LTTE: 📌 Operation Pawan (11–25 October 1987) was the Indian Peace Keeping Force’s campaign to seize and control the Jaffna Peninsula from LTTE control as part of the Indo-Sri Lanka Accord of 1987. Wikipedia Who was involved overall: Indian Army units (various infantry brigades, paratroopers) Indian Navy and Coast Guard blockading coastal supply routes Indian Air Force providing air support LTTE fighters (Sea Tigers, ground forces) Casualties in Operation Pawan (overall, not just Gurunagar): Indian losses: over 200 killed, hundreds wounded in fighting around Jaffna. Wikipedia LTTE losses: estimated thousands overall in the broader Jaffna campaign. Wikipedia This reflects intense urban and jungle warfare over several weeks — not solely the commandos’ beach raid. 📌 Was There a “Port” at Gurunagar? 📍 Gurunagar (Jaffna) was historically a fishing and small-boat landing zone, not a major commercial harbour. Footpaths and basic jetties existed for fishing and small craft — not large ships or cranes — especially during the war period when movement of large vessels was restricted. Daily News Archives ✔ So calling it a “thuramukam” (port) in the sense of a major harbour is inaccurate; it was a jetty/small coastal landing used locally and militarily by the LTTE Sea Tigers. 📌 Aftermath & Impact Short-term Impacts: LTTE speedboats and jetty facilities at Gurunagar were destroyed, disrupting some of the group’s coastal logistics. Daily News Archives The IPKF was able to restrict LTTE maritime movement, contributing to the larger campaign to push rebels out of Jaffna’s urban areas. Wikipedia Longer-term Consequences: Operation Pawan as a whole was strategically costly for India — heavy casualties, political controversy, and eventual Indian withdrawal in 1990. Wikipedia The war further deepened mistrust between the LTTE and IPKF, eventually leading to the assassination of Indian Prime Minister Rajiv Gandhi in 1991, claimed by the LTTE. Wikipedia Civilian consequences: The broader Jaffna operations were part of intense urban warfare affecting civilians in and around Jaffna — shelling, displacement, and casualties — but these were not limited to the Gurunagar raid itself and reflected the larger conflict. Wikipedia 📌 Summary Aspect What Really Happened Target on Oct 21, 1987 MARCOS raid on LTTE boats and jetty at Gurunagar, Jaffna. Daily News Archives Type of place Small jetty/landing area, not a large port. Daily News Archives Ships attacked? LTTE small speedboats and jetty facilities, not big naval or civilian ships. Daily News Archives Casualties (MARCOS) No reported commandos killed in that specific raid. Wikipedia Casualties in campaign IPKF losses in Jaffna operations numbered in the hundreds overall. Wikipedia Aftereffects Disruption of LTTE coastal logistics; part of wider conflict that shaped Sri Lanka’s civil war and India-Sri Lanka relations. Wikipedia
  8. Today
  9. கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 கிறிஸ்துமஸ் ஈவ் [christmas eve] சந்திப்பு டிசம்பர் 24 அன்று, யாழ்ப்பாணத்தின் அன்றைய மாலை மெதுவாக மங்கிக் கொண்டிருந்தது. நாட்காட்டியில் [காலண்டரில்] அது கிறிஸ்மஸ் ஈவ் [இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள்] என்று எழுதப்பட்டிருந்தாலும், யாழின் வானம் அதை எந்த மத நாளாகவும் கருதவில்லை. அது பைபிளில் காணப்படும் தேதி அல்ல. கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததாக ஒருபோதும் பைபிளில் கூறப்படவில்லை. அது ஒரு முன்மொழிவு மட்டுமே. அதுவும் கிறிஸ்து இறந்து 340 ஆண்டுகளின் பின்பே. அதனாலோ என்னவோ அது எப்போதும் போலவே — காற்றோடு, உப்புக் காற்றின் சுவையோடு, மண்ணின் நினைவோடு இருந்தது. ஆனாலும் மக்கள் பெரும் திரளாக வந்தார்கள். வரலாற்றுக்காக அல்ல, நம்பிக்கைக்காக வந்தார்கள். கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, யாழ்ப்பாண தேவாலயத்திற்குள் காலண்டரில் நம்பிக்கை கொண்டவராக அல்ல, மாறாக மக்களை, இயேசுவை நம்புபவராக, பகுத்தறிவில் என்றும் தன்னை ஒரு மாணவனாகக் கருதும் அடைக்கலம் நுழைந்தான். அவன் ஒரு இளம் வழக்கறிஞர். வடக்கு – கிழக்கில் உண்மைக்காக வழக்காடும் ஒருவன். போலீஸ் நிலையங்களில் அவன் பெயர் நன்கு அறியப்பட்டது. அதிகாரிகளுக்குப் பிடிக்காத பெயர். ஆனால் மக்களுக்கு நன்கு அறியப்பட்ட , விரும்பப்பட்ட பெயர். இவன் அடிக்கடி, தூசி நிறைந்த மாஜிஸ்திரேட் (நீதிபதி / Magistrate) நீதிமன்றங்களிலும் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட காவல் நிலையங்களிலும் தோன்றினான். - தங்கள் சொந்த நிலம், பலவந்தமாக பறிபோவதை பாதுகாத்ததற்காக கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளுக்காகவும், நில உரிமையாளர்களுக்காகவும் , இந்தியா மீனவர்களின் அத்துமீறலுக்கு - அரசின், கடற்படையின் தீவீர கண்காணிப்பு வேண்டி எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்காகவும், தங்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுத்தான். அவனுக்கும் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் என்பது பிறந்தநாள் அல்ல, அது வேறு ஒரு நோக்கத்திற்காக, அதாவது அவர் இறந்து நீண்ட காலத்திற்குப் பிறகு - அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது, அப்போது ரோம் நகருக்கு எளிதான மதமாற்றம் தேவைப்பட்டது, கிறிஸ்துவின் பிறப்பை ஐரோப்பா ஏற்கனவே விரும்பிய சாட்டர்னேலியா மற்றும் சூரிய விழாக்களுடன் இணைக்க அந்த நாள் தேர்ந்து எடுக்கப்பட்டது என்பது வரலாறாகும். ஆனால் உலகத்திற்கு வழிகாட்டிய இயேசுவில் நம்பிக்கை உண்டு. தேதிகளை மட்டும் தான் அவன் நம்பவில்லை. அதனால்த்தான் அவன் அங்கு வந்தான். ஒரு சைவ தமிழ், இசை மற்றும் நடன ஆசிரியை, அவர் மதம் மாறுவதற்காக அல்ல, பாடகர் குழுவிற்கு ஒரு பயிற்சி அளிக்க அங்கு அழைக்கப்பட்டு இருந்தாள். அவளின் பெயர் ஆராதனா. சங்கீதத்தை இறைவனுக்காக அல்ல — மனிதனுக்காகப் பாடுவாள். எல்லாவற்றிற்கும் மேலாக, பண்டிகை கீதங்கள் (கரோல் கீதங்கள் / Christmas Carols) முதலில் கிறிஸ்துமஸுக்கு மட்டுமே பிரத்தியேகமானவை அல்ல. அவை ஒருகாலத்தில், வசந்தத்திற்கும், அறுவடைக்கும், சில நேரம் கிண்டலுக்கும் கூட பாடப்பட்ட பாடல் ஆகும். [They were sung in May fields, during harvests, even as satire]. அதனால் அவள் அதில் தேர்ச்சி பெற்ற பாடகியாகவும் இருந்தாள். ஆராதனா, பலிபீடத்தின் அருகே வெறுங்காலுடன் நின்று, சுருதியை சரிசெய்து, தாளத்தைக் கற்றுக் கொடுத்தாள். அது மட்டும் அல்ல, மகிழ்ச்சி ஒரு கடவுளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல [how joy does not belong to one god alone.] என்பதையும் கற்றுக் கொடுத்தாள். ஒரு மரப் பலகையில் தாளம் போட்டு, ஒரு சிறுவனை மெதுவாகத் திருத்துவதை அடைக்கலம் ஓரளவு அருகில் நின்று கவனித்தான். அவள், அவர்களுக்கு குரல் பயிற்சிக்காக பாடிய போது, தேவாலயம் ரோமன், புராட்டஸ்டன்ட் அல்லது ஆங்கிலிகன் மதத்தை உணரவில்லை - அது தமிழை உணர்ந்தது [When she sang, the church did not feel Roman, Protestant, or Anglican—it felt Tamil.]. நள்ளிரவு சேவைக்குப் பிறகு, அடைக்கலமும் ஆராதனாவும், அலங்கரிக்கப்படட காகித நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்து ஒருவருடன் ஒருவர் சமயங்களின் வரலாறு பற்றியும், இன்றைய இலங்கை வாழ் தமிழரின் நிலைகள் பற்றியும் பேசினர் . அப்பொழுது, "உனக்குத் தெரியுமா? ," அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள், "புத்தாண்டும் வரப்போகிறது. இன்னொரு கடன் வாங்கிய கொண்டாட்டம்." அவன் தலையசைத்தான். "ஜனவரி 1 ஆம் தேதி பிரபஞ்சம் சார்ந்தது அல்ல. அது நிர்வாக ரீதியானது. ஜூலியஸ் சீசரின் நாட்காட்டி. பேரரசால் எழுதப்பட்ட காலம்." "மகாவம்சம் கூட புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்று கூறுகிறதே ?, அதை நம்புகிறீர்களா? என்று ஆராதனா இலங்கை அரசியல் பக்கம் திரும்பினாள். அடைக்கலம் ஒரு சிரிப்புடன் கூறினான், எல்லா புராணங்களும் கூறும் புரளிகள் தான் இவை, என்றாலும் மகாவம்சத்தை உண்மையான வரலாறாக இன்னும் நம்புகிறார்கள். அது தான் தமிழர் பூமியில் நிகழும் அட்டூழியம்" என்றான். “நம்பிக்கை கேள்வி கேட்காத போது தான் ஆபத்தாகிறது,” அவன் தொடர்ந்தான். அவள் மெதுவாகச் சொன்னாள்: “ஆமாம் கேள்வி கேட்கத் தெரிந்த ஒரு மனிதனால் மட்டுமே நம்பிக்கையையும் காதலையும் உண்மையாகப் பாதுகாக்க முடியும். [Only a man who knows how to ask questions can truly protect belief and love.]” அந்த இரவு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் இருவரையும் சமமாகப் பார்த்தது. அந்த உரையாடல் அவர்களை கொஞ்ச நேரம் ஆறுதலாக கதைக்க வழிவகுத்தது. ஆனால், அந்த உரையாடலின் போது, அவன் கண்களுக்கு ஒரு ஓய்வும் கிடைக்கவில்லை. அது அவளை அளந்து அளந்து அவன் மனதுக்கு சொல்லிக் கொண்டே இருந்தது. கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால் ஒப்புமையில் கடலினையும், மீனையும், அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந் தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை தன்னகத்தே கொண்ட ஆராதனா, அடைக்கலத்தின் மனதில் புகுந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. கிறிஸ்மஸ் – புத்தாண்டு இடைப்பட்ட நாட்கள், விடுதலைகளாக இருந்ததாலும், கொண்டாட்ட நாட்களாக இருந்ததாலும் அவர்கள் உரையாடல்களை தொலைபேசி மூலமும் சிலவேளை நேரடியாகவும் சந்தித்து தொடர்ந்தனர். யாழ்ப்பாண சுப்பிரமணிய பூந்தோட்டத்தின் பழைய மரங்களுக்குக் கீழும், யாழ் பொது நூலத்திலும் அவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலங்களை மெல்ல எழுதிக் கொண்டு இருந்தனர். ஆனால் அந்த பழைய மரங்கள் மகிழ்வாகக் காணப்படவில்லை. அதை வெட்டி அகற்றி, உட்புற அரங்கம்அமைப்பதில் சிலர் ஈடுபடுவது அதன் காதில் விழுந்ததோ என்னவோ? அடைக்கலத்தின் கண்களில் கேள்விகள் அதிகம். பதில் கொடுக்காத உலகத்திற்கான வழக்குத் தயாரிப்பே அவன் வாழ்வு. அதேபோல, ஆராதனாவுக்கு நடனமும் இசையும் அவளுக்குப் பக்தியின் மொழி. கேள்வி கேட்காமல் நம்புவதில் அவளுக்கு ஒரு அமைதி இருந்தது. ஆனால் அப்போது அவர்களுக்கு, குறிப்பாக ஆராதனாவுக்கு காதல் பிறக்கவில்லை. ஆனால் இரண்டு உலகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தன. "இறப்பவே தீய செயினும் தம் நட்டார் பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட! ஒருவர் பொறை இருவர் நட்பு" என்பது போல, இந்த அடி வாயிலாகப் பொறுமை குணமுடையோராக நண்பர்கள் இருக்க வேண்டுமென நாலடியார் பாடல் உரைக்கின்ற படி, அவர்களின் சந்திப்பு பொறுமையுடனும், ”ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று” என்பதற்கு இணங்க, பிற உயிர்களுக்குக் கருணை பண்பு காட்டும் குணமில்லாதவரின் உள்ளத்தில் நட்பும் உறவும் தோன்றுவதில்லை என்பதை உணர்ந்து அது அமைதியாகத் அவர்களுக்கு இடையில் தொடங்கியது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் துளி/DROP: 1965 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/33069006056081282/?
  10. @நிழலி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny யாருக்கேனும் சிறு துரும்பு தெரிந்தாலும் கூறுங்கள்.
  11. தகவலுக்கு மிக்க நன்றி. நான் தேடிப்பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி
  12. தகவலுக்கு நன்றி. அந்த காலத்தில் தீபம் என்ற அமைப்பு ஒன்று யாழில் வரும் செய்திதாள்களில் உள்ள முக்கிய செய்திகளை வெட்டி பெரிய ஆவண காப்பு புதங்களில் ஒட்டும் வேலையை செய்து வந்தது. ஒவ்வொரு நாளின் செய்தியும் பெரிய பெரிய புத்தகங்களில் வெட்டி ஒட்டப்படும். இவை பின் தேதிவாரியாக பேணப்பட்டன. 1986-1990 வரை இயங்கியது தெரியும். அதன் பின் என்னவானதோ அறியேன். பூர்ணலிங்கம் என்பவர் இதை நடத்தினார். புலம் பெயர் முயற்சி என நினைக்கிறேன். இவை கிடைத்தால் உங்களுக்கு பொக்கிசம் போல இருக்கும். பிகு மன்னார் சம்பவம் பற்றி லேசாக நினைவு உள்ளது. அப்போ மக்கள் கொஞ்சம் அதிகமாகவே கம்பிகளுக்கு அப்பால் நிண்ட இந்திய படைகளை சீண்டினார்கள். சிப்பாய் ஒருவர் சினமேறி இதை செய்தார் என கேள்விபட்ட, வாசித்த நினைவு.
  13. இதனை பின்ட் செய்து விட்டால் இலகுவாக இருக்கும்..அவ்வப்போது வந்து பார்த்து சந்தர்ப்பம் ஏற்படும் போது விருப்பப்படுபவர்கள் தங்களால் முடிந்ததை செய்ய முடியும்.
  14. அண்ணை சம்பந்தமில்லாதை எல்லாம் கலர் கலரா எழுதுவதை பார்த்தால்… போதை பொருளுடன் மாட்டுப்பட்டவர் பார் சிறி குருப் எண்ட சந்தேகம் வலுக்கிறது😂
  15. நன்றி தம்பி. குசா அண்ணை, வாத்தியார் அண்ணை, நீங்கள், நான் ஒரு குழுவாக செயல்படுவோம். அனைத்து தகவல்களையும் இதே திரியில் பகிர்வோம். முடியுமானளவு. முதல் இலக்கு - காரைநகரில் 5, மூளாய், பொன்னாலை, சுழிபுரம் பகுதியில் 5 என 10 பயனாளர்களை இனம் காணல்.
  16. கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது Dec 31, 2025 - 04:11 PM உலகமே 2026ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3:30 மணிக்கு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. 2026 புத்தாண்டு பிறந்ததையொட்டி, அந்நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாமாக வரவேற்றனர். பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி, 32 தீவுகளையும் ஒரு சிறிய பவளத் தீவையும் கொண்டுள்ளது. நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கிறது. அவுஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இலங்கைக்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை கொண்டாட உள்ளன. https://adaderanatamil.lk/news/cmjtvzin303cgo29n86esvuya
  17. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தேடும் பொலிஸார்! 31 Dec, 2025 | 11:54 AM லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எவ்வாறிருப்பினும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தங்கியுள்ள இடம் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கண்டுபிடித்து கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (30) கைதுசெய்யப்பட்டிருந்தார். கைதுசெய்யப்பட்ட ஜொஹான் பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/234824
  18. உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை Dec 31, 2025 - 01:30 PM 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப் பட்டியலின் படி, அவர் உலகின் முதல் நிலை இடத்தைப் பெற்றுள்ளார். மிகச் சிறு வயதிலேயே உலகத் தரவரிசையில் உச்சத்தைத் தொட்டுள்ள தாவி சமரவீர, இலங்கைக்கு சர்வதேச அளவில் பெரும் புகழைத் தேடித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjtq7vgx03c4o29njm0t4hqo
  19. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது - ஜனாதிபதி 31 Dec, 2025 | 10:45 AM அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் மதுவரித் திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் குறித்து மீளாய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் அதன் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மதுவரித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்கான 227.4 பில்லியன் ரூபாவைத் தாண்டி 231.3 பில்லியன் ரூபா வருமான இலக்கை மதுவரித் திணைக்களம் எட்டவுள்ளதுடன், இது வரலாற்றில் முதல் முறையாக 102% வருமான இலக்காக அமைகின்றது. அரச வருமானம் எவ்வளவு ஈட்டப்படுகிறது என்பதிலே நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச வருமானம் குறைந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், 2020-2021 ஆம் ஆண்டில் அரச வருமானம் பெருமளவில் குறைந்ததன் விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டார். வாகனங்கள் மற்றும் கட்டிட வசதிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், குறிப்பாக நிறைவேற்றுப் பதவிகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை உள்ளக இணக்கப்பாட்டுடன், விரைவாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், மதுவரி கட்டளைச் சட்டத்தின் திருத்தம் மற்றும் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் சோதனைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆகியவை பற்றியும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன. தொழில் அமைச்சர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.பீ.என்.ஏ. பேமரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பணிக்குழாமினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234814
  20. அத தெரண கருத்துப்படங்கள்.
  21. உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா Dec 31, 2025 - 11:10 AM இந்திய அரசாங்கத்தின் ஆண்டிறுதிப் பொருளாதார மீளாய்வுக் கணக்கீடுகளின்படி, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது 4.18 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளதுடன், 2030 ஆம் ஆண்டளவில் அது 7.3 டிரில்லியன் டொலராக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தற்போதைய பொருளாதார வளர்ச்சிப் போக்குகளின்படி, இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரதான பொருளாதார நாடாகவும் இந்தியா கணிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2023 ஆம் ஆண்டில் அண்டை நாடான சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடாகவும் இந்தியா மாறியமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjtl7y7t03bqo29njt778hz5
  22. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  23. திருத்தணி: மருத்துவமனையில் இருந்து ஒடிசா இளைஞர் வெளியேறியது ஏன்? - நடந்தது என்ன? படக்குறிப்பு,'வட இந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 30 டிசம்பர் 2025 "அந்த நான்கு பேரும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். யாரும் படிக்கச் செல்லவில்லை. வீட்டில் தாய் அல்லது தந்தை என யாரோ ஒருவர் இல்லாத சூழலில் வளர்கின்றனர். ஒருவரைத் தாக்கிவிட்டோம் என்ற உணர்வு கூட அவர்களிடம் இல்லை" என்கிறார், திருத்தணி காவல்நிலைய ஆய்வாளர் மதியரசன். திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் ஒருவரை சில சிறுவர்கள், ஆயுதங்களால் தாக்கி ரீல்ஸ் பதிவிட்ட சம்பவம் குறித்து இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கைதான சிறுவர்களை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவல்துறை அடைத்துள்ளது. ஒரு சிறுவனுக்கு சிறார் நீதிக்குழுமம் பிணை வழங்கியுள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் காவல்துறை அளித்த தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே டிசம்பர் 27 ஆம் தேதியன்று இளைஞர் ஒருவர் ரத்த காயத்துடன் விழுந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைக்கு கலரிங் அடித்த சில சிறுவர்கள் தன்னை ஆயுதங்களால் தாக்கியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார் என்கிறது காவல்துறை. அதேநாளில் ரயிலில் பயணிக்கும் இளைஞர் ஒருவரை அரிவாளால் சில சிறுவர்கள் மிரட்டுவது போன்ற ரீல் ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தென்பட்ட நபரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒடிசா இளைஞரும் ஒன்று எனத் தெரியவந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் முகவரியில் ரீல்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் தேடி வந்தனர். மறுநாள் (டிசம்பர் 28) திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் வசிக்கும் ஒரு சிறுவனை கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின்படி மேலும் மூன்று பேரை திருத்தணி போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை கூறுவது என்ன? தாக்குதலுக்கு ஆளான சூரஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன் நான்கு சிறார்கள் இந்தக் குற்றத்தைச் செய்திருப்பது தெரியவந்துள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் 30 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "வடஇந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒடிசா இளைஞர் அளித்துள்ள புகாரில், 'எங்களை முறைத்துப் பார்க்கிறாயா?' எனக் கேட்டு அடித்துள்ளதாகக் கூறியுள்ளார்" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு பட்டா கத்தியை சிறுவர்கள் வைத்திருந்தனர். சிலருடன் முன்விரோதம் உள்ளதால் வைத்திருந்ததாகக் கூறினர். இவர்கள் மீது சிறிய புகார் தவிர வேறு புகார்கள் எதுவும் வரவில்லை. அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகளும் இரண்டு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" எனக் கூறினார். வழக்கில் பிடிபட்ட நான்கு சிறார்களும் சிறார் நீதிக்குழுமம் முன்பு டிசம்பர் 28 அன்று ஆஜர்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ள காவல்துறை, 'அதில் மூன்று பேர் செங்கல்பட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு சிறாருக்கு சிறார் நீதிக்குழுமத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளது. பட மூலாதாரம்,Facebook படக்குறிப்பு,திருத்தணி ரயில் நிலையம் சிறுவர்கள் போதையில் இருந்தார்களா? இந்தநிலையில், போதை காரணமாக இதுபோன்ற சம்பவங்களில் சிறுவர்கள் ஈடுபடுவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், 'தாக்குதல் தொடர்பான காணொளி காட்சியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது' எனக் கூறியுள்ளார். 'கைதான சிறுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தையும் அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்' எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். "நான்கு பேரும் போதையில் இருந்துள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர். அவர்களைத் தாமதமாக கைது செய்தோம். அதனால் அவர்கள் போதையில் இருந்தார்களா என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை" என்கிறார் திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் மதியரசன். இதே தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "அவர்கள் போதையில் இருந்தார்களா என்பது குறித்து தற்போதைய நிலையில் கூற முடியாது. அது விசாரணையில் உள்ளது" எனக் கூறினார். ஒடிசா இளைஞரின் பின்னணி என்ன? சிறுவர்களால் தாக்கப்பட்ட இளைஞர் குறித்துக் கேட்டபோது, "அவர் எங்கும் வேலை பார்க்கவில்லை. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சகோதரர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் கோபித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்" என்கிறார் மதியரசன். "இளைஞருக்கு தங்குவதற்கு வீடு என எதுவும் இல்லை. இரவு நேரங்களில் புறநகர் ரயில்கள் கடைசி நிறுத்தத்தில் நிறுத்தப்படும். அதில் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். ரயில் பயணிகளிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்" எனவும் காவல் ஆய்வாளர் மதியரசன் தெரிவித்தார். "இந்த வழக்கில் கைதான நான்கு பேரும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி" எனவும் அவர் குறிப்பிட்டார். 'கண்காணிப்பு இல்லாத சிறுவர்கள்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் "கைதான சிறார்கள் யாரும் படிப்பதற்கு செல்லவில்லை. வெறுமனே ஊர் சுற்றி வந்துள்ளனர். பெற்றோரின் கண்காணிப்பு என்பதே இல்லாத நிலையில் வளர்கின்றனர்" என்கிறார் மதியரசன் . "அடிதடி காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு தன்னை கதாநாயகனைப் போல பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் சிறுவர்கள் இறங்குகின்றனர். இது பெரியவர்களிடம் இருந்து தான் அவர்களுக்கு வருகிறது" என்கிறார் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு. இதே கருத்தை முன்வைக்கும் கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் மலையப்பன், "கதாநாயகன் ஆக வேண்டும் என்ற எண்ணம் சில சிறுவர்கள் மனதில் இருக்கும். அதை உள்வாங்கிக் கொண்டு இதுபோன்று ரீல்ஸ் வெளியிடுவதாகவே பார்க்க வேண்டும்" என்கிறார். "சினிமாவில் கதாநாயகனாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளார்களோ, அதை அப்படியே பெரும்பாலான சிறுவர்களும் கடைபிடிக்கின்றனர். இதை சமூகத்தின் குறையாகவே பார்க்க வேண்டும்" எனக் கூறுகிறார், மருத்துவர் மலையப்பன். 'ஒடிசா இளைஞர் எங்கே?' இதற்கிடையில், இந்த தாக்குதலை கண்டித்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். பிற மாநில நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகள், பணியாற்றும் இடங்களில் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கூறியுள்ளது. 'தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது' எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒடிசா இளைஞர் தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவின. இதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "மருத்துவரிடம் கூறிவிட்டு சொந்த மாநிலம் சென்றுவிட்டார். அதனை கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார். அரசுத் தரப்பில் முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன" எனக் கூறினார். 'சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் சாந்தாராமனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஒடிசா இளைஞருக்கு ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்" என்கிறார் அவர். தொடர்ந்து பேசிய மருத்துவர் சாந்தாராமன், "திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவருடைய காயத்துக்கு கட்டு போடப்பட்டுள்ளது. அதைப் பிரிப்பதற்கு கூட முதலில் அவர் எங்களை அனுமதிக்கவில்லை" என்கிறார். "ஒருகட்டத்தில், அவரது காயங்களை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு மீண்டும் கட்டு போட்டுவிட்டனர். அவர் பிடிவாதமாக இருந்ததால் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறினோம். 'அவரும் சிகிச்சை பெறுவதற்கு விருப்பமில்லை' என எழுதிக் கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்" என மருத்துவர் சாந்தாராமன் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20k0x443x1o
  24. தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி தான் உள்ளது என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. முடிந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை நிரூபிக்கட்டும் என தையிட்டி காணி உரிமையாளர்கள் சவால் விடுத்துள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ச்சுனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்களுக்காக தமிழ் மக்களின் காணிகளை அர்ச்சுனா பெற்றுக் கொடுக்க வேண்டாம். நீங்கள் எதிர்காலத்தில் இங்கு போட்டியிட்டும் வெல்லப் போவதில்லை. நீங்கள் தென் இலங்கையை நோக்கி நகரப் போகிறீர்கள். தையிட்டி மக்களின் காணிகள் பற்றி தேவையில்லாத கதைகளை சொல்ல வேண்டாம். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி பிரச்சினையை அலசி ஆராய வேண்டும். எத்தனை பரப்பு ஒரு ஏக்கர் என்று தெரியாத ஒரு வழக்கறிஞரும், எல்லோரையும் எத்தனையாம் தரம் படித்தார்கள் என்று கேட்கிற நாடாளுமன்ற உறுப்பினரும் தையிட்டிக்கு வந்து ஆராய்ச்சி செய்கிறார்கள். அர்ச்சுனா இராமநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. செயலாளர் என்ற பெண்ணை தொடர்பு கொண்டு விளங்கப்படுத்தினேன். போராட்டத்தின் நிமித்தம் பிக்கு இறங்கி வந்திருக்கிறார். கொஞ்சம் காணியை விட்டு ஏமாற்றி விட நிற்கிறார்கள் இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அங்கு போய் பேசுகிறார். ஆதாரங்களை கொண்டு வழக்கை போடுங்கள் 24 மணி நேரமும் நேரலை போட்டு செல்கிறார்கள். நாம் எந்த அலுவலகத்திற்கு சென்று அவர்களை சந்திப்பது? நாங்கள் போராடுவதாகவும் கத்துவதாகவும் அர்ச்சுனா தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் போராடியே அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். வைத்தியர் கேதீஸ்வரனுக்கும் வைத்தியர் பிரணவனுக்கும் வைத்தியர் சத்தியமூர்த்திக்கும் எதிராக ஆதாரங்கள் இருக்கிறது என்று சொல்லி பல விடயங்களை சொன்னார். அந்த ஆதாரங்களை கொண்டு முதலில் வழக்கை போடட்டும். அந்த வழக்கை நடத்தி விட்டு இங்கு வாருங்கள். நேரம் ஒரு நேரம் உளறாமல் செயல்படுங்கள். நீங்கள் தகுந்த வைத்தியராக இருந்தால் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு போகவில்லை என்று சொன்னால் எங்கள் பிரச்சினையில் இருந்து விலகுங்கள். கதைக்கும் போது நிதானமாக கதைக்க வேண்டும். உங்கள் வார்த்தை தடுமாறுகிறது. தமிழர் மரபை மீறி கதைக்கின்றீர்கள். கலாசாரத்தை மீறி கதைக்கின்றீர்கள். தேசிய தலைவரை பற்றி பேசுகிறீர்கள். அனைவரையும் எத்தனையாம் வகுப்பு படித்தது என கூறுகிறீர்கள். முன்னர் இந்த மண்ணை ஆண்டவர்கள் எத்தனையாம் தரம் படித்திருந்தார்கள் என்பதை தெரிந்திருந்தால் அது பற்றி கேட்க மாட்டீர்கள். வாகனத்துடன் கதைத்துக் கொண்டு நேரலை போட்டால் பொலிஸ் என்ன தண்டம் கொடுக்கும் என்று உங்கள் சகோதரை கேளுங்கள். ஆட்களை தனிப்பட்ட ரீதியாக தாக்க வேண்டாம். உங்கள் மீது மதிப்பு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் கத்துவதற்கு ஆள் தேவை. சரியான விடயத்திற்கு அதை செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். https://tamilwin.com/
  25. சுத்து மாத்து சுமந்திரனின்... வளர்ப்பு எப்பிடி இருக்கு என்று பாருங்கோவன். தமிழரசு கட்சியை... சல்லியாய் நொருக்க, ஆபிரகாம் சுமந்திரன் படுகிறபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. சுத்துமாத்து சுமந்திரன் ஏற்கெனவே... நொருக்கி, பாடையில் ஏத்தி வைத்திருக்கிறதை, இந்த வருஷ கடைசி "டார்கெட்" ஆக "4 கிலோ கஞ்சா அசைன்மென்ட்" கொடுத்துள்ளார் சுத்துமாத்து. சென்ற கிழமை சுமந்திரனின் "அல்லக்கை" ஒன்று... கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு இருந்த நிலையில்.. அது, ஆளும் கட்சி ஊத்திக் கொடுத்த சாராயத்தில் "நிறை வெறியில்" குப்புற கவுண்டு, ஆளும் கட்சிக்கு வாக்களித்த கேவலத்த்தால், தமிழரசு கட்சி தனது தவிசாளர் பதவியை ஆளும் கட்சியிடம் இழந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. இப்போ.... கஞ்சா கேசில், சுமந்திரனின் இன்னுமொரு தமிழரசு கட்சி அல்லக்கை உறுப்பினர் கைது. சுமந்திரன்... தொட்டதெல்லாம், சர்வகுலநாசம். சிங்களத்துக்கு செம்பு அடிக்கத்தத்தான் சுமந்திரன் லாயக்கு. வக்கீல் தொழிலும் தெரியாது, அரசியலும் தெரியாது.... என்ன இழவுக்கு கோட்டு, சூட்டுடன்... தான் ஒரு ஆள் என்று திரியுது தெரியவில்லை. இதற்குள் மாகாண சபை முதல்வர் கனவு வேறை.
  26. இவர்களில் தவறு இல்லையென்றால் ஏன் ஓடி ஒளிகிறார்கள்?
  27. புடுங்கவேண்டிய ஆணிகளைவிட்டுப் புதிய ஆணிகளைத் தாமாகத் தேடிப்பித்து தமது தலையிலேயே அடித்துக்கொள்வதில் எங்கள் அரசியல்வியாதிகளை மிஞ்சிவிட இந்த உலகில் யாருமிலர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.